உலக நடப்பு

அமெரிக்காவில் மோதிய கப்பலில் இலங்கைக்கு எடுத்து வரப்பட இருந்தவை ஆபத்தான கழிவுப் பொருட்கள்

2 weeks 4 days ago

போன வாரம்  அமெரிக்கவின் பால்டிமோர் துறைமுகத்தில் அங்கிருக்கும் பாலத்துடன் மோதி பெரும் சேதத்தை உண்டாக்கிய கப்பலில் இலங்கைக்கு எடுத்து வரப்பட்டுக் கொண்டிருந்த பொருட்கள் மிகவும் ஆபத்தான மற்றும் நச்சுத்தன்மையான கழிவுப் பொருட்கள் என்று அமெரிக்காவில் நடைபெற்ற முதலாவது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

56 கொள்கலன்களில் 764 டன்கள் எடையுள்ள கழிவுப் பொருட்கள் - லித்தியம் -இரும்பு மின்கலங்கள் மற்றும் வெடிக்கக் கூடிய கழிவுகள் உட்பட - இலங்கைக்கு எடுத்து வரப்பட இருந்தன. இன்னமும் மிகுதியாக இருக்கும் அந்தக் கப்பலின் 4644 கொள்கலன்களில் என்ன பொருட்கள் இருக்கின்றன என்ற விபரங்கள் இப்பொழுது விசாரிக்கப்படுகின்றது.

https://www.dailymirror.lk/breaking-news/Ship-was-carrying-US-toxic-waste-to-Sri-Lanka-Report/108-279925

 

ஆப்கானில் கண்ணிவெடியில் சிக்கி 9 சிறார்கள் பலி

2 weeks 4 days ago

Published By: SETHU    01 APR, 2024 | 01:15 PM

image
 

ஆப்கானிஸ்தானில் கண்ணிவெடியொன்றில் சிக்கி 9 சிறார்கள் உயிரிழந்துள்ளனர் என அதிகாரி ஒருவர் இன்று தெரிவித்துள்ளார். 

கஸ்னி மாகாணத்தின் கேரு மாவட்டத்தில் நேற்று இச்சம்பவம் இடம்பெற்றதாக அவர் கூறியுள்ளார். 

சிறுவர்களும் சிறுமிகளும் விளையாடிக் கொண்டிருந்தபோது இக்கண்ணிவெடி வெடித்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் ரஷ்ய படையெடுப்பு காலத்தில் புதைக்கப்பட்டிருந்த கண்ணிவெடியொன்றே வெடித்துள்ளதாக அம்மாகாண அதிகாரி தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/180130

தென்லெபனானை இலக்குவைத்து எறிகணை வீச்சு - ஐநாவின் கண்காணிப்பாளர்கள் காயம்.

2 weeks 5 days ago
31 MAR, 2024 | 10:28 AM
image
 

லெபனானின் தென்பகுதியில் இடம்பெற்ற எறிகணை தாக்குதலில் ஐநாவின் மூன்று கண்காணிப்பாளர்களும் மொழிபெயர்ப்பாளர் ஒருவரும் காயமடைந்துள்ளதாக ஐநாவின் அமைதிக்காக்கும் பிரிவு  தெரிவித்துள்ளது.

இஸ்ரேலின் ஆளில்லா விமானதாக்குதலே இதற்கு காரணம் என லெபானான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. எனினும் இஸ்ரேல் இதனை நிராகரித்துள்ளது.

காயமடைந்தவர்கள் சிகிச்சை பெற்றுவருகின்றனர் தாக்குதல் குறித்து விசாரணைகள் இடம்பெறுகின்றன என ஐநா தெரிவித்துள்ளது.

இஸ்ரேலில் இருந்து தென்லெபானனை பிரிக்கும் ஐநாவால் வரையறுக்கப்பட்ட நீலக்கோடு வழியாக ரோந்துபணியில் ஈடுபட்டிருந்த குழுவினருக்கு அருகில்  எறிகணை வீழ்ந்து வெடித்தது என ஐநா தெரிவித்துள்ளது.

அமைதிப்படையினரை இலக்குவைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என ஐநா தெரிவித்துள்ளது.

லெபானின் உட்பகுதிகள் தாக்குதலிற்காக தெரிவுசெய்யப்படுகின்றன இதன் காரணமாக பெரும்மோதல் வெடிக்கலாம் என ஐநா பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/180049

இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகுவுக்கு எதிராக மக்கள் போராட்டம்- ‘உடனே பதவி விலக வேண்டும்’

2 weeks 5 days ago
இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகுவுக்கு எதிராக மக்கள் போராட்டம்- ‘உடனே பதவி விலக வேண்டும்’ 13-24.jpg

பாலஸ்தீனத்தின் காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீதான இஸ்ரேலின் போர் 6-வது மாதத்தை நெருங்கியுள்ளது. இதில் காசாவில் குழந்தைகள், பெண்கள் உள்பட 32 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

இதற்கிடையே ஹமாஸ் அமைப்பினரிடம் உள்ள இஸ்ரேல் பிணைக் கைதிகளை மீட்டு கொண்டு வரக்கோரி இஸ்ரேலில் பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இந்நிலையில் இஸ்ரேலில் நேற்று பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராக பெரும் போராட்டம் நடந்தது.

டெல்அவில், ஜெருச லேம், சிசேரியா ரானானா, ஹெர்ஸ்லியா ஆகிய நகரங்களில் ஆயிரக்கணக்கானோர் சாலைகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காசாவில் உள்ள அனைத்து பிணைக் கைதிகளை மீட்டு கொண்டு வர கோரியும், பிரதமர் நெதன்யாகு பதவி விலக கோரியும் கோஷங்களை எழுப்பினார்கள். பொதுத் தேர்தலை உடனே நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பேரணியாக சென்றனர். அவர்கள் அரசு அலுவலகங்களை முற்றுகையிட முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

ஜெருசலேமில், பிரதமர் நெதன்யாகு வீடு முன்பு ஏராளமானோர் திரண்டு போராட்டம் நடத்தினர். அப்போது பிணைக் கைதிகளை மீட்க தவறிவிட்டதாக குற்றம் சாட்டினர். சில இடங்களில் போராட்டக்காரர்கள், போலீசார் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

சாலையில் பொருட்களை போட்டு தீ வைத்து போராட்டக்காரர்கள் கொளுத்தினர். இந்த போராட்டங்கள் காரணமாக இஸ்ரேலில் நேற்று இரவு பரபரப்பு நிலவியது.

டெல்அவிலில் இன்று அதிகாலை போராட்டம் முடிவுக்கு வந்ததாகவும், 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர். இதற்கிடையே இஸ்ரேல்-ஹமாஸ் அமைப்பினர் இடையே இன்று மீண்டும் போர் நிறுத்தத்திற்கான பேச்சு வார்த்தை எகிப்தில் தொடங்குகிறது.

 

https://akkinikkunchu.com/?p=272568

 

ரஷியாவை பாதுகாக்கவே உக்ரைனுடன் போர் – அதிபர் புதின்

2 weeks 6 days ago

நேட்டோ கூட்டணியில் இணைய முயன்றதற்காக உக்ரைன் மீது ரஷியா 2022-ம் ஆண்டு போர் தொடுத்தது. 3-வது ஆண்டை எட்டிய இந்த போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இது உலக பொருளாதாரத்திலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. எனவே இந்த போரை நிறுத்தும்படி ஐ.நா. மற்றும் உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.

இந்தநிலையில் டோர்ஷோக் நகரில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அதிபர் புதின் ராணுவ வீரர்களை சந்தித்து உரையாடினார். அப்போது அவர் கூறுகையில், `நேட்டோ கூட்டமைப்பு நாடுகளின் எல்லையை நோக்கி ரஷியா நகரவில்லை. மாறாக, அவர்கள் தான் நம்மை நெருங்கி வருகிறார்கள். எனவே மக்களை பாதுகாப்பதற்காகவே ரஷியா இந்த சிறப்பு ராணுவ நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது’ என பேசினார்.

மேலும் அவர் கூறுகையில், “உக்ரைன் தனது மேற்கத்திய நாடுகளிடம் இருந்து ரஷியா மீது ராணுவ அழுத்தத்தை அதிகரிக்கும் F-16 களின் விநியோகத்திற்காக காத்திருக்கிறது. உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, கடந்த ஆண்டு 42 எப்-16 விமானங்கள் உறுதி செய்யப்பட்டதாகக் கூறினார். போர் விமானங்களை எப்படி ஓட்டுவது என்பது குறித்து உக்ரைன் விமானிகள் பல மாதங்களாக மேற்கு நாடுகளில் பயிற்சி பெற்று வருகின்றனர்.

F-16 விமானங்கள் தரையில் இருக்கும் போது குண்டுவீச்சு தாக்குதல்களில் இருந்து பாதுகாக்க உயர்தர ஓடுபாதைகள் மற்றும் வலுவூட்டப்பட்ட ஹேங்கர்கள் தேவை. எத்தனை உக்ரேனிய விமானத் தளங்கள் அந்தத் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியும் என்பது தெளிவாகத் தெரியவில்லை, மேலும் ஜெட் விமானங்கள் வந்தவுடன் அவர்களுக்கு இடமளிக்கக்கூடிய சிலவற்றை ரஷியா விரைவில் குறிவைக்கும்” என்று அவர் கூறினார்.

https://thinakkural.lk/article/297559

அமெரிக்கா ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை ஆதரிக்க வேண்டும் : இலங்கையில் ஐ.நா.வின் நல்லிணக்க முயற்சிகள் தோல்வியடைந்துவிட்டன - அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் அன்டனி பிளிங்கெனிற்கு கடிதம்

2 weeks 6 days ago

Published By: RAJEEBAN   30 MAR, 2024 | 06:22 AM

image
 

இலங்கையில் ஐநாவின் உண்மை மற்றும் நல்லிணக்க முயற்சிகள் தோல்வியில் முடிவடைந்துள்ளன  என தெரிவித்துள்ள அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் அமெரிக்கா ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை ஆதரிக்கவேண்டும் ஆதரித்து என வேண்டுகோள் விடுத்துள்ளனர்

அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்டனி பிளிங்கெனிற்கு எழுதியுள்ள கடிதத்தில் அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் டொனால்ட் ஜி டேவிஸ் வைலிநிக்கலஸ் ஜோன்கொதைமர் ஜெப்ஜக்சன் சமர்லீ டானி கே டேவிஸ் சூசன் வைல்ட் ராஜாகிருஸ்ணமூர்த்தி ஜமால்போமன் கேப்வாஸ்குவாஸ் ஆகியோர்  இந்த வேண்டுகோளை விடுத்துள்ளனர்

அவர்கள் தங்கள் கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ளதாவது.

 

இலங்கையில் ஐநாவின் உண்மை மற்றும் நல்லிணக்க முயற்சிகள் தோல்வியில் முடிவடைந்துள்ளன  என தெரிவித்துள்ள அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் அமெரிக்கா ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை ஆதரிக்கவேண்டும் ஆதரித்து என வேண்டுகோள் விடுத்துள்ளனர்

அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்டனி பிளிங்கெனிற்கு எழுதியுள்ள கடிதத்தில் அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் டொனால்ட் ஜி டேவிஸ் வைலிநிக்கலஸ் ஜோன்கொதைமர் ஜெப்ஜக்சன் சமர்லீ டானி கே டேவிஸ் சூசன் வைல்ட் ராஜாகிருஸ்ணமூர்த்தி ஜமால்போமன் கேப்வாஸ்குவாஸ் ஆகியோர்  இந்த வேண்டுகோளை விடுத்துள்ளனர்

அவர்கள் தங்கள் கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ளதாவது.

1. ஈழத் தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை ஆதரித்து, மற்றும் சர்வதேச சட்டங்களின்படி அவர்களுக்குள்ள உரிமைகளின் அடிப்படையில், பிரச்சினையைத் தீர்ப்பதற்கு, உலகளாவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஜனநாயக வழிமுறையான பொதுவாக்கெடுப்புமுறையை (Referendum) ஆதரிக்கவும். 

 

2. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகரின் பரிந்துரைகளைப் பின்பற்றி, போரின் போது பொதுமக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு விரிவான சர்வதேச விசாரணைகள் மற்றும் பொறுப்புக்கூறலை ஆதரிக்கவும். அத்தகைய விசாரணையில் இனப்படுகொலை (Genocide) செய்யப்பட்டதா என்பது பற்றிய ஆராய்வதும் அடங்கும். 

 

3. சுயாதீனமான நீதித்துறை நடவடிக்கைகளை ஊக்குவிக்கவும், சாத்தியமான குற்றச்சாட்டுகளை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு (International Criminal Court) விசாரணைகளுக்காகப் பரிந்துரைக்கவும் அமெரிக்காவிற்கு ஐக்கிய நாடுகள் சபையில் - பொதுச் சபை (General Assembly), பாதுகாப்பு கவுன்சில் (Security Council) மற்றும் மனித உரிமைகள் கவுன்சில் (UNHRC) உட்பட- உள்ள தலைமைப் பாத்திரத்தை வாய்ப்பாகப் பயன்படுத்தவும்.

https://www.virakesari.lk/article/179996

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று: தாய்லாந்திலும் எச்சரிக்கை

3 weeks ago

Published By: SETHU   28 MAR, 2024 | 04:11 PM

image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று ஏற்பட்டுள்ளதால், அயல்நாடான தாய்லாந்தில் இது தொடர்பாக உயர் விழிப்பு நிலையில் இருக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

கால்நடைகளில் வேகமாக பரவக்கூடிய அந்த்ராக்ஸ் நோயானது மனிதர்களுக்கும் தொற்றக்கூடியதாகும். இதனால் சிலவேளை மரணங்களும் ஏற்படலாம்.

இந்நிலையில், லாவோஸில் இம்மாதம் அந்த்ராக்ஸினால் பல மாடுகள் உயிரிழந்ததுடன், குறைந்தபட்சம் 54 மனிதர்களுக்கும் அந்த்ராக்ஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. 

இந்நோய் லாவோஸின் அயல்நாடான தாய்லாந்திலும் பரவுவதை தடுப்பதற்கான முயற்சிகளில் அந்நாட்டு அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.

நிலைமையை உன்னிப்பாக கண்காணிக்குமாறும், குறிப்பாக லாவோஸுடனான எல்லைப்பிரதேசங்களில் தடுப்பு நடவடிக்கைகளை அதிகரிக்குமாறும் தாய்லாந்து சுகாதார அமைச்சருக்கு பிரதமர் ஸ்ரேத்தா தவசின் பணிப்புரை விடுத்துள்ளார். 

அசாதாரணமான முறையில் மாடுகள், எருமைகள் போன்ற விலங்குகள் உயிரிந்தால் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும், இவ்வாறு இறந்த  மிருகங்களின் உடல்களை தொட வேண்டாம் என மக்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

தாய்லாந்தில் 2001 ஆம் ஆண்டின் பின்னர் மனிதர்களுக்கு அந்த்ராக்ஸ் தொற்று ஏற்பட்டதாக அறிவிக்கப்படவில்லை.

https://www.virakesari.lk/article/179907

ஆற்றுக்குள் கவிழ்ந்த பேருந்து : 45 பேர் பலி! 8 வயது சிறுமி மாத்திரம் உயிருடன் மீட்பு!

3 weeks ago
cf-images.ap-southeast-2.prod.boltdns.net/v1/stati...

தென்னாபிரிக்காவில் பேருந்து ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 45 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதிவேகமாக சென்ற அந்த பேருந்து செல்லும் வழியில் மாமட்லகலா என்ற இடத்தில் வேகத்தக் கட்டுப்படுத்த முடியாமல் அங்குள்ள பாலத்தில் மோதி தடுப்புச் சுவரை உடைத்துக் கொண்டு இருந்து 165 அடி பள்ளத்தில் விழுந்தது. அங்குள்ள பாறையில் விழுந்த வேகத்தில் பேருந்து தீப்பிடித்து எரிந்துள்ளது.

இதில் பேருந்தில் பயணித்த 45 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். அதிலிருந்தவர்களில் நல்வாய்ப்பாக 8 வயது சிறுமி மட்டும் படுகாயங்களுடன் உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்தில் பேருந்து முற்றிலும் எரிந்து நாசமானதில், அதில் இருந்த பலரது உடல்கள் அடையாளம் காண முடியாத அளவிற்கு கருகிப்போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பலரது உடல்கள் பேருந்தின் அடிப்புறத்தில் சிக்கியுள்ளன. அவற்றை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தென்னாபிரிக்காவை உலுக்கியுள்ள இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அந்நாட்டின் ஜனாதிபதி சிரில் ரமபோசா இரங்கல் தெரிவித்துள்ளார்.

South Africa bus crash leaves at least 45 dead after vehicle plunges off bridge and catches fire - ABC News

Bus plunges off a bridge in South Africa, killing 45 people – an 8-year-old is only survivor - The Columbian

https://thinakkural.lk/article/297513

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும் அனுப்புங்கள் - இஸ்ரேலிற்கு சர்வதேச நீதிமன்றம் உத்தரவு

3 weeks ago
29 MAR, 2024 | 10:23 AM
image
 

காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது.

மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.

 

காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது.

மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.

https://www.virakesari.lk/article/179954

பூமியின் நேரத்தில் ஏற்படப்போகும் மாற்றம்!

3 weeks ago
03-17.jpg

புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன.

திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர்

ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

https://thinakkural.lk/article/297441

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி - 22 வயது இளைஞர் வெறிச்செயல்

3 weeks 1 day ago
28 MAR, 2024 | 12:32 PM
image
 

அமெரிக்காவின் இல்லினோய்சில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் நால்வர் கொல்லப்பட்டுள்ளதுடன் ஏழு பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்த ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளார் சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

முதலில் மருத்துவ உதவியை கோரி அழைப்புகள் வந்தன. பின்னர் காவல்துறையினரும் துணை மருத்துவபிரிவினரும் அழைக்கப்பட்டனர். அந்த பகுதிக்கு காவல்துறையினர் சென்றவேளை மூவர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டனர். காயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் உயிரிழந்தார் என காவல்துறை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

வேறு சந்தேகநபர் இருப்பதாக நாங்கள் கருதவில்லை இந்த படுகொலைக்கு என்ன காரணம் என்பதும் இதுவரை தெளிவாக தெரியவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த தாக்குதல் தொடர்பில் தகவல் ஏதாவது கிடைக்கின்றதா என அந்த பகுதி மக்கள் தங்கள் வீடுகளின் சிசிடிவி கமராக்களை ஆராயவேண்டும் என காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

22 வயது நபர் வீட்டிற்குள் புகுந்து தாக்குதலில் ஈடுபட்டவேளை  இளம் பெண் ஒருவர் அங்கிருந்து தப்பியோடினார். அந்த பெண்ணின் கையிலும் முகத்திலும் கத்திக்குத்து காயங்கள் காணப்பட்டன அவர் ஆபத்தான நிலையில் காணப்பட்டார். அந்த வழியால் வந்த ஒருவர் அந்த பெண்ணிற்கு உதவினார் என ஷெரீவ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/179892

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம் கோர முயற்சி

3 weeks 1 day ago

Published By: SETHU    28 MAR, 2024 | 02:08 PM

image
 

சுவீடனில் புனித குர்ஆனை எரித்து சர்ச்சை ஏற்படுத்திய நபர், ஈராக்குக்கு நாடு கடத்தப்படவுள்ள நிலையில் நோர்வேயில் புகலிடம் கோருவதற்கு முயற்சிக்கிறார்.

ஈராக்கியரான சல்வான் மோமிகா எனும் இந்நபர், 2021 ஆம் ஆண்டில் சுவீடனில் வதிவிட உரிமை பெற்றவர். 

கடந்த பல வருடங்களில் அவர் பல தடவைகள் குர்ஆனை எரித்து சர்ச்சை ஏற்படுத்தினார். 

இச்சம்பவங்களுக்கு எதிராக பல நாடுகளில் ஆர்ப்பாட்டங்களும் வன்முறைகளும் இடம்பெற்றன. 

கடந்த ஒக்டோபர் மாதம் அவரின் வதிவிட அனுமதி இரத்துச் செய்யப்பட்டது. வதிவிட அனுமதி கோரிக்கைக்கான விண்ணப்பத்தில் தவறான தகவல்களை அளித்திருந்தமை இதற்கு காரணம் என சுவீடன் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். 

அவரை ஈராக்குக்கு நாடு கடத்த சுவீடன் நீதிமன்றம் அனுமதி அளித்தது.

எனினும், ஈராக்கில் தனது உயிருக்கு ஆபத்துள்ளதாக மோமிகா தெரிவித்ததையடுத்து நாடு கடத்தல் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.

அவருக்கு வழங்கப்பட்டிருந்த புதிய தற்காலிக அனுமதிப்பத்திரம் எதிர்வரும் ஏப்ரல் 16 ஆம் திகதியுடன் காலவாதியாகிறது.

இந்நிலையில், தான் நோர்வேயில் புகலிடம் கோரவுள்ளதாக சுவீடன் ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியில் மோமிகா தெரிவித்துள்ளார்.

இது குறித்து நோர்வே அதிகாரிகள் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.

https://www.virakesari.lk/article/179895

நாடகங்கள், திரைப்படங்களில் நடிகர்கள் இடையே இடம்பெறும் திருமணம், உண்மையான திருமணமாக கருத்தப்படும் என பாகிஸ்தான் மத அறிஞர்கள் தெரிவிப்பு

3 weeks 1 day ago

1000178888.jpg

 

நாடகங்கள், திரைப்படங்களில் நடிகர்கள் இடையே இடம்பெறும் திருமணம், உண்மையான திருமணம் ஆகும் என்று மத அறிஞர்கள் பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
 
 
அவர்களின் இந்த அறிக்கை பல சமூக ஊடக பயனர்களிடம் பேசு பொருளாகிஉள்ளது , மேலும் இதுபோன்ற நாடக காட்சிகளில் அடிக்கடி பங்கேற்ற பிரபலங்கள் உட்பட, இப்போது அதன் தாக்கங்கள் குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர்.
 
 
வைரலான வீடியோ கிளிப் கடந்த ஆண்டு மார்ச் 29, 2023 தேதியிட்ட ரமலான் ஒலிபரப்பில் இருந்து எடுக்கப்பட்டது.
 
பாகிஸ்தான் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ரமழான் ஒளிபரப்பு நிகழ்ச்சியில் மார்க்க அறிஞர்கள் குழு பங்கேற்றுக்கொண்டிருந்தபோது, ஒரு அறிஞர் மற்றொருவரை கேள்வி எழுப்பினார்.
 
 
தொலைக்காட்சி நாடகங்களில் நடிகர்களுக்கு இடையே நடக்கும் நிக்காஹ் சடங்குகள் செல்லுபடியாகும் திருமணமாக கருதப்படுமா என்று விசாரித்தார்.
 
அதற்கு பதிலளித்த மதகுரு, "ஆம், நிச்சயமாக, இரண்டு சாட்சிகளுடன் ஒரு தொலைக்காட்சி நாடகக் காட்சியில் நிக்காஹ் நடத்தப்பட்டால், அது சரியான திருமணமாக கருதப்படும் என பதில் அளித்தார்.
 
அறிஞரின் கூற்றுப்படி, இரண்டு நடிகர்கள் ஒரு நாடகத்தில் நிக்காஹ் காட்சியை நடித்தால், அவர்களின் திருமணம் உண்மையில் செல்லுபடியாகும் என்று கருதப்படும்.
 
மத அறிஞரின் கூற்று பரவலான சர்ச்சையைக் கிளப்பியுள்ளது, பொழுதுபோக்கு துறையைச் சேர்ந்த தனிநபர்கள் மற்றும் சமூக ஊடக செல்வாக்கு செலுத்துபவர்கள் இந்த விஷயத்தை பேசி வருகின்றனர்.
 
 

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ் விபத்து : ஐவர் பலி

3 weeks 2 days ago

Published By: SETHU  27 MAR, 2024 | 06:06 PM

image
 

ஜேர்மனியில் இன்று இடம்பெற்ற பஸ் விபத்தில் குறைந்தபட்சம் ஐவர் பலியானதுடன் டசின் கணக்கானோர் காயமடைந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளரன். 

லீப்ஸிக் நகரில் இந்த பஸ் கவிழ்ந்தது. 

ஜேர்மனியின் பேர்லின் நகரிலிருந்து சுவிட்ஸர்லாந்தின் சூரிச் நகரை நோக்கி இந்த பஸ் சென்றுகொண்டிருந்ததாக பிளிக்ஸ்பஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேற்படி பஸ்ஸில் 53 பயணிகளும் இரு சாரதிகளும் இருந்தனர் எனவும் விபத்துக்கான காரணம் தெரியவில்லை எனவும் அந்நிறுவனம் அறிக்கையொன்றில் குறிப்பிட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/179843

நூறாண்டுக்கு முன் காணாமல் போன ஜெர்மனி நீர்மூழ்கி கப்பல் என்ன ஆனது?

3 weeks 2 days ago
ஜெர்மன் நீர்மூழ்கிக் கப்பல்

பட மூலாதாரம்,TOMAS TERMOTE

படக்குறிப்பு,

முதல் உலகப்போரில் UC கப்பல் மற்றும் அதன் குழு உறுப்பினர்கள்

27 மார்ச் 2024, 10:51 GMT
புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர்

நூறு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த போரின் போது காணாமல் போன ஜெர்மன் யு-படகு (நீர்மூழ்கிக் கப்பல்) இருக்கும் இடத்தை டைவர்ஸ் (ஆழ்கடல் நீச்சல் வீரர்கள்) கண்டுபிடித்துள்ளனர். இதன் மூலம் நீண்ட நாட்களாக நீடித்து வந்த அதன் மர்மம் விலகியுள்ளது.

1917 ஆம் ஆண்டில், ஆங்கிலக் கால்வாயில் ராயல் கடற்படையின் 'லேடி ஆலிவ்' கப்பலுக்கும், ஜெர்மன் நீர்மூழ்கிக் கப்பல் UC-18 க்கும் இடையில் நடைபெற்ற போரின் போது இந்த UC-18 நீர்மூழ்கி கப்பல் காணாமல் போனது.

அதோடு சேர்த்து இந்த மோதலில் லேடி ஆலிவ் கப்பலும் கடலுக்குள் மூழ்கிப்போனது. இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து பிபிசி ஆவணப்படம் ஒன்றை எடுத்துள்ளது.

அதற்கான படப்பிடிப்பு ஆழ்கடலுக்குள் நடந்து கொண்டிருக்கும் போது இந்த UC-18 நீர்மூழ்கிக் கப்பல் மற்றும் அதன் எஞ்சிய பகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இந்த கப்பலை கண்டுபிடிக்கவும், அதை அடையாளம் காணவும் டைவர்ஸ் (ஆழ்கடல் நீச்சல் வீரர்கள்) குழுவுக்கு நான்கு ஆண்டுகள் ஆகியுள்ளன.

ஆழ்கடல் திரைப்பட தயாரிப்பாளரான கார்ல் டெய்லர், தற்போது மிகவும் மகிழ்ச்சியில் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்த கப்பல்கள் குறித்து எடுக்கப்பட்டுள்ள 'The Hunt for Lady Olive and the German Submarine' என்ற பிபிசியின் ஆவணப்படம் ஜூன் மாதம் வெளியாக உள்ளது.

ஜெர்மன் நீர்மூழ்கிக் கப்பல்

பட மூலாதாரம்,THE HUNT FOR LADY OLIVE AND THE GERMAN SUBMARINE

படக்குறிப்பு,

கப்பல் தேடும் பணியில் நீச்சல் வீரர்கள்

230 அடி ஆழத்தில் நீர்மூழ்கிக் கப்பல்

UC-18 மற்றும் லேடி ஆலிவ் ஆகிய இரண்டு கப்பல்களுமே இந்த போரில் மூழ்கின. இதனால், UC-18 நீர்மூழ்கிக் கப்பலில் இருந்த 28 பணியாளர்கள் உயிரிழந்தனர்.

பிபிசி ஆவணப்படத்திற்கான படைப்பின்போது, UC-18 இன் எஞ்சிய பாகங்கள் இருக்கும் இடத்தை அடையாளம் கண்ட நீச்சல் வீரர்கள் குழு, லேடி ஆலிவ் மூழ்கிய இடத்தையும் அடையாளம் கண்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பேசிய கார்ல் டெய்லர், குறைந்த வெளிச்சத்தில் கடலின் அடித்தளத்தை ஆராய்வது சவால்கள் நிறைந்தது என்று கூறினார்.

தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள UC-18 நீர்மூழ்கிக் கப்பல் கடலுக்குள் 70 மீட்டர் (230 அடி) ஆழத்தில் நீச்சல் வீரர்களால் அடையாளம் காணப்பட்டது.

இந்த தேடுதல் பணியில் ஈடுபட்ட குழு, கடல் தொல்பொருள் ஆராய்ச்சியாளர் மற்றும் யு-படகு நிபுணரான தாமஸ் டெர்னாட்டுடன் இணைந்து பணியாற்றியது.

 
ஜெர்மன் நீர்மூழ்கிக் கப்பல்

பட மூலாதாரம்,THE HUNT FOR LADY OLIVE AND THE GERMAN SUBMARINE

படக்குறிப்பு,

"ஐரோப்பாவின் வரலாற்றில் மிகவும் கொந்தளிப்பான காலகட்டத்திற்குப் பின்னால் உள்ள தியாகங்களை மக்கள் புரிந்துகொள்ள இந்த ஆவணப்படம் உதவும்"

வரலாற்றுச் சான்றுகளின்படி, ஆங்கிலக் கால்வாயில் ஜெர்சி கடற்கரையிலிருந்து 13 கிமீ தொலைவில் இந்த கப்பல்களுக்கிடையில் போர் நடந்துள்ளது.

ஆனால், UC-18 மற்றும் லேடி ஆலிவ்ஸ் ஆகிய கப்பல்கள் மேற்கில் 64 கி.மீ. தொலைவில் காணப்பட்டதாக கார்ல் டெய்லர் கூறியுள்ளார்.

ஆழ்கடல் நீச்சல் குழுவினர் தங்கள் தேடுதலின் போது, இந்த மோதலில் மூழ்கிய இரண்டு நீர்மூழ்கிக் கப்பல்களின் எச்சங்களையும் கண்டுபிடித்தனர்.

இந்த குழுவின் கண்டுபிடிப்புகள் குறித்து பிரெஞ்சு அதிகாரிகள் மற்றும் ஜெர்மன் கடற்படைக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மேலும் பேசிய கார்ல் டெய்லர், “இந்தக் கப்பல்களுக்குப் பின்னால் இருந்த நீண்டகால மர்மம் விலகியுள்ளது போல் தெரிகிறது. ஐரோப்பாவின் வரலாற்றில் மிகவும் கொந்தளிப்பான காலகட்டத்திற்குப் பின்னால் உள்ள தியாகங்களை மக்கள் புரிந்துகொள்ள இந்த ஆவணப்படம் உதவும் என்று நம்புகிறோம்" என்று தெரிவித்துள்ளார்.

https://www.bbc.com/tamil/articles/c80k90w5ywzo

சுற்றுலா செல்வதில் சிக்கலை எதிர்கொண்டுள்ள பிரித்தானியர்கள்!

3 weeks 2 days ago
UK02-600x375.jpg சுற்றுலா செல்வதில் சிக்கலை எதிர்கொண்டுள்ள பிரித்தானியர்கள்!

புதிய Brexit கடவுச்சீட்டு விதி காரணமாக, இவ்வாண்டு சுமார் 1 இலட்சம் பிரித்தானியார்கள், ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுலா செல்வதை தவிர்க்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறிய பிறகு, 10 ஆண்டுகளுக்கு முன்பு வழங்கப்பட்ட பிரித்தானிய கடவுச்சீட்டுகள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது எனவும் கூறப்படுகிறது.

உள்விவகார அமைச்சகம் வெளியிட்டுள்ள தரவுகளின் அடிப்படையில்,

32 மில்லியன் கடவுச்சிட்டுகள் தற்போது 10 ஆண்டுகளுக்கு முன்னர் வழங்கப்பட்டதாக தெரிய வந்துள்ளது.

ஆகையால் பிரித்தானியர்கள் வழக்கமாக செல்லும் ஐரோப்பிய நாடுகளான Iceland, Norway, Lichtenstein மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளுக்கு செல்லும் முன்னர், தங்கள் கடவுச்சீட்டுகளை பரிசோதித்து உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

நீங்கள் நாடு திரும்பும் நாளில் இருந்து 3 மாதங்கள் வரையில் உங்கள் கடவுச்சீட்டு செல்லுபடியாகும் என்பதை உறுதி செய்ய வேண்டும்.

உங்கள் கடவுச்சீட்டானது செப்டம்பர் 2018க்கு முன்னர் விநியோகிக்கப்பட்டிருந்தால், அது 10 ஆண்டுகள் மற்றும் 9 மாதங்கள் செல்லுபடியாகும்.

இந்த 10 ஆண்டுகள் விதியானது, கண்டிப்பாக ஐரோப்பாவை விரும்பும் பிரித்தானிய பயணிகளுக்கு சிக்கலை ஏற்படுத்தக்கூடும் சில நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.

எனவே சுற்றுலாவுக்கு முன்பதிவு செய்யும் முன்னர் தங்களது கடவுடுச்சீட்டுகளை ஒருமுறை பரிசோதித்து உறுதி செய்யுமாறு பெரும்பாலானோர் அறிவுறுத்துகின்றனர்.

மேலும், இதுபோன்ற சிக்கலால் நாளும் நூற்றுக்கணக்கானோர் திருப்பி அனுப்பப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

புதிய கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்க பெரியவர்களுக்கு 88.50 பவுண்டுகள் வசூலிக்கப்படுவதுடன், 16 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு 57.50 பவுண்டுகள் வசூலிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2024/1375315

'மிஸ் யுனிவர்ஸ்’ அழகிப் போட்டியில் சவூதி அரேபியா முதன்முதலாக அதிகாரப்பூர்வமாக பங்கேற்கிறது.

3 weeks 2 days ago

1000178471.jpg

 

மிஸ் யுனிவர்ஸ்’ அழகிப் போட்டியில் சவூதி அரேபியா அதிகாரப்பூர்வமாக பங்கேற்கிறது.

அந்தவகையில் சவூதி சார்பில் போட்டியில் பங்கேற்கும் முதல் போட்டியாளராக ரூமி அல்கஹ்தானி (Rumy Alqahtani) தெரிவாகியுள்ளார்.

இதன்மூலம் அந்நாட்டின் பட்டத்து இளவரசர் முஹம்மது பின் சல்மான் அல் சவூதின் ஆட்சியின் கீழ் இடம்பெறும் மற்றுமொரு சர்ச்சைக்குறிய விடயத்தில் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது.

 

27 வயதான ரூமி அல்கஹ்தானி, மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் தான் பங்கேற்பது குறித்த தகவலை திங்கட்கிழமை (25) தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

 

“மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் சவூதி அரேபியாவின் முதல் பங்கேற்பு இது” என அவர் தெரிவித்துள்ளார். இதனை அந்த நாட்டின் செய்தி ஊடக நிறுவனமும் செய்தியாக வெளியிட்டுள்ளது.

https://www.madawalaenews.com/2024/03/i_922.html

அமெரிக்காவில் சரக்குக் கப்பல் மோதியதில் பாலம் இடிந்து விபத்து!

3 weeks 3 days ago
usa-750x375.webp அமெரிக்காவில் சரக்குக் கப்பல் மோதியதில் பாலம் இடிந்து விபத்து!

அமெரிக்காவின் பால்டிமோர் நகரில் இன்று அதிகாலை படாப்ஸ்கோ ஆற்றின் குறுக்கே உள்ள பாலத்தில் கப்பல் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன

இந்த கப்பல் இலங்கை நோக்கிச் சென்றதாகவும் டாலி என்ற கப்பல் மோதியதில் 1.6 மைல் நீளமுள்ள பாலம் முற்றிலும் இடிந்து விழுந்துள்ளது.

இந்த நிகழ்வின் காணொளிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

அத்துடன் பாலம் இடிந்து வீழ்ந்ததில் எவருக்கும் காயம் ஏற்பட்டதாக முதலில் தெரிவிக்கப்படாத போதிலும், விபத்தினால் 7 பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் பல வாகனங்கள் ஆற்றில் விழுந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது என்றும் மேலும் மீட்புக் குழுக்கள் சம்பவ இடத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://athavannews.com/2024/1375067

அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்படுவதற்கு எதிரான வழக்கு - ஜூலியன் அசஞ்சேயிற்கு சிறிய நிம்மதி

3 weeks 3 days ago
26 MAR, 2024 | 05:06 PM
image

அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்படுவதற்கு எதிராக விக்கிலீக்ஸ் ஸ்தாபகர் ஜூலியன் அசஞ்சே முன்னெடுத்துள்ள போராட்டத்தில் அவருக்கு சிறிய வெற்றி கிடைத்துள்ளது.

அமெரிக்காவும் பிரிட்டனும் உரிய உத்தரவாதங்களை வழங்காவிட்டால் அசஞ்சே தான் நாடு கடத்தப்படுவதற்கு எதிராக மேல்முறையீடு செய்யலாம் என பிரிட்டனின் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மேல்முறையீடு செய்வதற்கு அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தால் அடுத்த சில நாட்களில் அவர் அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்பட்டிருப்பார்.

வேவுபார்த்த குற்றச்சாட்டுகளிற்காக அவரை நாடு கடத்தவேண்டும் என அமெரிக்கா வேண்டுகோள் விடுத்துள்ளது.

இரண்டுநாட்கள் விசாரணையின் பின்னர் நீதிபதிகள் ஜூலியன் அசஞ்சேயின் வழக்கறிஞர்கள் அசஞ்சேயிடம் வாதிடக்கூடிய வழக்குள்ளதை என்பதை உறுதி செய்துள்ளனர் மேல்முறையீடு செய்வதற்கு அனுமதி வழங்கவேண்டும் என தீர்ப்பளித்துள்ளனர்.

எனினும் அமெரிக்காவும் பிரிட்டனும் உரிய உத்தரவாதங்களை வழங்கமுடியாவிட்டால் மாத்திரம் அவரின் மேல்முறையீடு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.

https://www.virakesari.lk/article/179770

அமெரிக்காவில் கப்பல் மோதியதில் பாலம் இடிந்தது - ஆற்றில் மூழ்கிய வாகனங்கள்

3 weeks 3 days ago
பாலம் இடிந்து விழுந்து விபத்து
26 மார்ச் 2024, 08:27 GMT
புதுப்பிக்கப்பட்டது 36 நிமிடங்களுக்கு முன்னர்

அமெரிக்காவின் பால்டிமோர் நகரில் உள்ள ஒரு பாலம், கன்டெய்னர் கப்பல் மோதியதில், படாப்ஸ்கோ ஆற்றில் முற்றிலுமாக இடிந்து விழுந்தது.

ஏழு பேர், பல வாகனங்கள் ஆற்றில் விழுந்ததாக தற்போது சம்பவ இடத்தில் இருக்கும் பால்டிமோர் நகர தீயணைப்புத் துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.

பாலம் முழுவதுமாக தண்ணீரில் இறங்குவதை சமூக ஊடகங்களில் காணொளிகளில் காண முடிகிறது.

மோதிய கப்பல் சிங்கப்பூர் கொடியுடன் வந்ததாகத் தெரியவந்துள்ளது.

300 மீட்டம் நீளம் கொண்ட இந்த கப்பல் இலங்கையின் கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்தது.

போலீஸ் ஹெலிகாப்டர்கள் அப்பகுதியில் பலமுறை சுற்றிவருவதை விமானப் போக்குவரத்து ராடார்கள் காட்டுகின்றன.

காணொளிக் குறிப்பு,

அமெரிக்காவில் கப்பல் மோதியதில் பாலம் இடிந்து ஆற்றில் விழுந்தது

கப்பலில் இருந்த ஊழியர்களுக்கு காயம் இல்லை

கப்பல் ஊழியர்களுக்கு காயங்கள் எதுவும் இல்லை என்று நிறுவனம் கூறுகிறது

சிங்கப்பூர் கொடியுடன் வந்த டாலி என்ற கன்டெய்னர் கப்பல் மோதியதை கப்பல் நிறுவனமான சினெர்ஜி மரைன் குழு உறுதிப்படுத்துகிறது.

"சம்பவத்தின் சரியான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை," என்று அது கூறுகிறது.

கப்பலில் இருந்த இரண்டு மாலுமிகள் உட்பட அனைத்து பணியாளர்களும் கணக்கிடப்பட்டுள்ளனர். மேலும் காயங்கள் எதுவும் இல்லை என்று அது மேலும் கூறுகிறது.

அமெரிக்க கப்பல்

பட மூலாதாரம்,REUTERS

பிபிசி செய்தியாளர் கூறுவது என்ன?

இது தெளிவாக ஒரு பெரிய சம்பவமாகும். மேலும் அவசர சேவைகள் மீட்புப் பணியில் இறங்கியுள்ளன.

உள்ளூர் நேரப்படி அதிகாலை 1:30 மணியளவில், ஒரு பெரிய கன்டெய்னர் கப்பல் இந்த பாலத்தில் மோதியது. பின்னர் என்ந நடந்தது என்பதை காட்சிகள் கூறுகின்றன.

இந்தகப் கப்பல் உண்மையில் சிங்கப்பூரில் கொடியுடன் வந்தது என்பது தெரியவருகிறது. பெரும்பாலும் கன்டெய்னர் கப்பல்களில் வெவ்வேறு நாடுகளின் கொடிகள் உள்ளன - அதாவது, அவை அந்த நாட்டைச் சேர்ந்தவை என்று அர்த்தமல்ல. அவை எங்கிருந்து கண்காணிக்கப்படுகின்றன என்பதை இதன் பொருளாகும்.

https://www.bbc.com/tamil/articles/cgxdgqjxj14o

 

 

 

Checked
Fri, 04/19/2024 - 23:41
உலக நடப்பு Latest Topics
Subscribe to உலக நடப்பு feed
texte-feed
svsv dfde fe