தமிழகச் செய்திகள்

எனக்கு இன்னும் சம்பள பாக்கி உள்ளது: கமல்ஹாசன் மீது நடிகை கவுதமி புகார்!

Sun, 25/02/2018 - 16:03
எனக்கு இன்னும் சம்பள பாக்கி உள்ளது: கமல்ஹாசன் மீது நடிகை கவுதமி புகார்! 

 

 
kaml+gautami

 

சென்னை: திரைப்படங்களில் பணியாற்றிய வகையில் கமலஹாசனிடம் இருந்து எனக்கு இன்னும் சம்பள பாக்கி உள்ளது என்று நடிகை கவுதமி புகார் தெரிவித்துள்ளார்.

தனது கணவரைப் பிரிந்தவுடன் நடிகை கவுதமி நடிகர் கமலுடன் கடந்த 10 ஆண்டுகளாக ஒரே வீட்டில் வாழ்ந்து வந்தார். இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக 2016 அக்டோபர் மாதம் அவர் கமலை விட்டு பிரிந்து விட்டார்.

இப்போது கமலும் கவுதமியும் மீண்டும் சேர்ந்து வாழ இருப்பதாக தகவல்கள் சில ஊடங்கங்களில் வெளியாகின. இதனை நடிகை கவுதமி மறுத்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது வலைப்பூவில் எழுதிய செய்தி குறித்து, டிவிட்டரில் தகவல் பகிந்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது: .

நாங்கள் இருவரும் மீண்டும் சேர்ந்து வாழப்போவதாக வந்த செய்தி முற்றிலும் தவறானது. 2016-ம் ஆண்டில் பிரிந்து வந்த பிறகு நான் அவருடன் எந்த தொடர்பும் வைத்து கொள்ளவில்லை.

அதேபோல நானும், கமலும் பிரிந்ததற்கு அவருடைய மகள்கள் சுருதி, அக்ஷரா ஆகியோர் காரணம் என்று கூறப்படுவது தவறானது. இதில் அவர்களுக்கு எந்த சம்பந்தமும் இல்லை. .

கமலை விட்டு வெளி வந்ததை தொடர்ந்து நானும் எனது மகளும் பாதுகாப்பான வாழ்க்கையை வாழ வேண்டும் என்ற முயற்சியில் இறங்கி இருக்கிறேன். இப்போது எங்களுக்கு ஒரு நிலையான வருமானம் வேண்டும். எனது குழந்தைக்கு பொருளாதார ரீதியாக ஒரு வலுவான தன்மையை ஏற்படுத்த வேண்டும் என்று நான் தேவையான பணிகளை தொடர்ந்து செய்து வருகிறேன்.

கமல்ஹாசனுடன் சேர்ந்து வாழ்ந்த காலத்தில் கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரித்த விஸ்வரூபம், தசாவதாரம் உள்ளிட்ட படங்களில் உடை அலங்கார நிபுணராக பணியாற்றினேன். ஆனால், அதற்கு தர வேண்டிய சம்பளம் இன்னும் முழுமையாக தரப்படவில்லை.

இது சம்பந்தமாக நான் பல தடவை நினைவுபடுத்தி தகவல் அனுப்பி இருக்கிறேன். ஆனாலும், எனக்கு தர வேண்டிய பணத்தை எனக்கு செட்டில் செய்யவில்லை. இதனால் சம்பள பாக்கி தராததால் பொருளாதார ரீதியாக எனக்கு பாதிப்பு ஏற்படுகிறது.

இவ்வாறு நடிகை கவுதமி அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.

http://www.dinamani.com/cinema/cinema-news/2018/feb/25/எனக்கு-இன்னும்-சம்பள-பாக்கி-உள்ளது-கமல்ஹாசன்-மீது-நடிகை-கவுதமி-புகார்-2870061.html

Categories: Tamilnadu-news

அரிதாரம் பூசி வண்ணமயமாய் பறக்கும் பலூன்கள் விரைவில் வெடித்துச் சிதறும்: கமல், ரஜினி மீது ஓபிஎஸ் தாக்கு

Sat, 24/02/2018 - 12:04
அரிதாரம் பூசி வண்ணமயமாய் பறக்கும் பலூன்கள் விரைவில் வெடித்துச் சிதறும்: கமல், ரஜினி மீது ஓபிஎஸ் தாக்கு

 

 
Rajnath320171002350630

ஒபிஎஸ், ரஜினி, ஜெயக்குமார், கமல் - கோப்புப் படம்

அரசியலில் புதிதாக அரிதாரம் பூசி சில வண்ண பலூன்கள் பறக்கின்றன. விரைவில் அவை உடைந்து சிதறிவிடும் என துணை முதல்ர் ஓபிஎஸ், கமல்- ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து விமர்சித்தார்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை ஒட்டி அவரது உருவச்சிலையை சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓபிஎஸ் கூட்டாக திறந்து வைத்தனர்.

இந்தக் கூட்டத்தில் துணை முதல்வர் ஓபிஎஸ் பேசும்போது டிடிவி தினகரன், கமல், ரஜினியை விமர்சித்தார். டிடிவி தினகரனை விமர்சிப்பது வழக்கமான ஒன்று என்றாலும் கமல் ரஜினியை அதிமுக மேடையில் விமர்சித்திருப்பதன் மூலம் புதிய சர்ச்சையை ஓபிஎஸ் கிளப்பி உள்ளார்.

இந்தக் கூட்டத்தில் ஓபிஎஸ் பேசியதாவது:

''இப்போது சிலர் மக்களை காப்பாற்றப் போகும் ரட்சகர்கள் தாங்கள் தான் என்று வீர வசனம் பேசிக்கொண்டிருக்கிறார்கள். புதிதாக அரசியல் அவதாரம் எடுத்திருக்கும் இவர்கள் பேசும் ஆரவார வசனங்கள் எல்லாம் வெறும் புஸ்வாணமாக மாறி ஆரவாரம் இல்லாமல் அடங்கி போய்விடும்.

நல்லவர்களைப் போல அவர்கள்போடும் வேஷம் வெகு விரைவில் கலைந்து போய் விடும், அவர்கள் குழுக்களும் கலகலத்துப் போய்விடும். ஏற்கெனவே தமிழகத்தில் நம்மை வெல்ல நினைத்த அரசியல் கட்சிகள் எல்லாமே, காற்று போன பலூன்களாய் சுருங்கிப்போய் கிடக்கின்றன.

அரசியல் வானில் புதிது புதிதாக சில காற்றடைத்த பலூன்கள் பறக்கத் தொடங்கி உள்ளன. அரிதாரம் பூசிய அந்த வண்ண பலூன்கள் பார்ப்பதற்கு அழகாய்த்தான் தெரியும். அந்த பலூன்கள் வெகு விரைவில் வெடித்துச் சிதறி ஒன்றுமில்லாமல் போவதை நாடு பார்க்கத்தான் போகிறது. நாமும் பார்க்கத்தான் போகிறோம்.''

இவ்வாறு ஓபிஎஸ் பேசினார்.

http://tamil.thehindu.com/tamilnadu/article22844331.ece?homepage=true

Categories: Tamilnadu-news

“முதல்வர் பதவியைக் கொடுங்கள்!” - எடப்பாடிக்கு பன்னீர் கெடு

Sat, 24/02/2018 - 09:56
மிஸ்டர் கழுகு: “முதல்வர் பதவியைக் கொடுங்கள்!” - எடப்பாடிக்கு பன்னீர் கெடு
 

மோடி சமாதான விசிட்!

 

p42a_1519403190.jpg‘‘இது காமெடி அல்ல... நிஜம்’’ என்றபடி வந்து அமர்ந்தார் கழுகார்.

‘‘சொல்லும்’’ என்றோம்.

‘‘அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் ஓர் ஆலோசனைக் கூட்டம். முடித்துவிட்டு விடுவிடுவென கீழே இறங்கி வருகிறார் ஓ.பன்னீர்செல்வம். ஏதோ சிந்தனைகளோடு அவசரமாகக் காரில் ஏறப்போகிறார். பின்னால் ஓடிவந்த செக்யூரிட்டி அதிகாரி, ‘சார்... இது முதல்வரின் கார்’ என்று நினைவுபடுத்த, சட்டென சுதாரித்துக்கொண்டு, சற்று முன்னால் இருந்த தன்னுடைய காரில் ஏறினார். ‘இந்தக் காட்சி தற்செயலானது அல்ல. பன்னீரின் அடிமனதில் முதல்வர் பதவி நினைப்பு கிடந்து அல்லாடுகிறது. அதன் வெளிப்பாடுதான் இது’ என்கிறார் எடப்பாடி அணியைச் சேர்ந்த அமைச்சர் ஒருவர்’’ என்ற கழுகாரை இடைமறித்தோம்.

‘‘தனிக்கட்சி ஐடியாவில் ஓ.பி.எஸ் இருப்பதாகக் கடந்த இதழில் சொல்லியிருந்தீர்கள். அதன் தொடர்ச்சியாக நிறைய காட்சிகள் அ.தி.மு.க-வில் அரங்கேறி வருகின்றனவே?’’ என்று கேட்டோம். 

‘‘அவர் என்ன மூடில் இருக்கிறார் என்பதே சஸ்பென்ஸாக இருக்கிறது. இப்போதெல்லாம் அதிகம் சென்னையில் இருப்பதில்லை. பணிவின் அடையாளமாகக் கருதப்பட்டவரின் பேச்சில் கனல் தெறிக்கிறது. பி.ஜே.பி-யினரையும் விமர்சிக்கிறார். ‘கொஞ்ச நாளைக்கு முன்பு வரை அவர் இப்படி இல்லை. இப்போது திடீரென ஏன் இப்படிப் பேசுகிறார்? இது அவருடைய தனிப்பட்ட கருத்தா அல்லது கட்சியின் கருத்தா?’ என்று புரியாமல் கட்சியின் சீனியர் தலைவர்களே குழம்பிப் போயிருக்கிறார்கள். கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி மௌனம் காக்கிறார். இருவருக்கும் பனிப்போர் உச்சத்தில் இருப்பது வெளிப்படையாகத் தெரிகிறது.’’

p42_1519403134.jpg

‘‘என்னதான் இருவருக்குள் பிரச்னை?’’

‘‘இருவருக்கும் கட்சியின் தலைமைப் பதவி, முதல்வர் இருக்கை... இரண்டையும் குறிவைத்து மனஸ்தாபம். முதலில் முதல்வர் இருக்கையைப் பற்றிச் சொல்கிறேன். ஆட்சியின் முக்கிய விவகாரங்கள் பற்றி பன்னீரை ஆலோசிப்பதில்லை எடப்பாடி. காவிரி பிரச்னையில் ஆரம்பித்து எதுவானாலும் முதல்வரே தன்னிச்சையாக முடிவெடுக்கிறார். எடப்பாடி முதல்வராகப் பதவியேற்று, பிப்ரவரி 15-ம் தேதியோடு ஓராண்டு முடிந்தது. இதைச் சுட்டிக் காட்டிய பன்னீர், ‘ஒரு வருடம் நீங்கள்... அடுத்த வருடம் நான்... இப்படித்தான் பிரதமர் மோடி சொன்னார். அந்தவகையில் நான் முதல்வர் பதவியில் அமர வேண்டிய நேரம் இது’ என்று சொல்லியிருக்கிறார். அணிகள் இணைப்பு நேரத்தில் பேசப்பட்ட இந்த ரகசியத்தை இப்போதுதான் பன்னீர் தரப்பு வெளியில் கசிய விடுகிறது.’’

‘‘ஆச்சர்யமாக இருக்கிறதே... இதற்கு எடப்பாடி என்ன சொன்னாராம்?’’

‘‘எடப்பாடி பளிச்சென, ‘உங்கள் பின்னால் 11 எம்.எல்.ஏ-க்கள் இருந்தார்கள். இப்போது அவர்கள் உங்கள் விசுவாசிகளா? என் பின்னால் மெஜாரிட்டியான எம்.எல்.ஏ-க்கள் இருக்கிறார்கள். அனைவரும் என்னைத்தான் முதல்வராகத் தொடரச் சொல்கிறார்கள். பதவியை உங்களுக்குக் கொடுப்பதற்கு நாம் என்ன ஒப்பந்தமா போட்டோம்’ என்று கேட்டாராம். இதைக் கேட்ட பன்னீர்செல்வம் ஷாக் ஆகிவிட்டாராம்.’’

‘‘அடடா!’’

‘‘கட்சியில் தனக்கு இருக்கும் ஒருங்கிணைப்பாளர் என்ற அதிகாரத்தை வைத்து எடப்பாடிக்கு நெருக்கடி கொடுக்கலாம் என்று பார்த்தால், அங்கும் எடப்பாடியின் ஆதிக்கம்தான் அதிகமாக இருக்கிறது. கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளராக இருக்கும் எடப்பாடி, தமிழகம் முழுவதும் தினகரன் ஆதரவாளர்கள் சுமார் 600 பேரைக் கட்சியை விட்டு நீக்கும் விஷயத்தில் முட்டுக்கட்டை போடுகிறாராம். ஏற்கெனவே காலியான இடங்களுக்கும்  புதியவர்களை இதுவரையிலும் நியமிக்கவில்லை. இதுவே பன்னீருக்கு வைக்கப்பட்ட ‘செக்’ என்கிறார்கள். பன்னீர் மோதலில் இறங்கினால், அவருக்குக் கும்பிடு போட்டுவிட்டு, தினகரன் அணியுடன் கைகுலுக்கும் ஐடியாவில் எடப்பாடி இருக்கிறாராம். அப்படி ஒரு சூழல் வந்தால், இப்போது நீக்கப்பட்ட தினகரன் ஆதரவாளர்களுக்கு மீண்டும் பதவிகளைத் தரவேண்டி வரலாம். இடையில், புதியவர்களை நியமித்தால் அவர்களை நீக்கி எதிர்ப்பைச் சம்பாதிக்க வேண்டியிருக்கும். இதை மனதில் வைத்தே, புதியவர்கள் நியமனத்தை எடப்பாடி தள்ளிப்போடுவதாகப் பன்னீர் நினைக்கிறாராம்.’’
 
‘‘ஓஹோ... கதை இப்படிப் போகிறதா?’’

p42b_1519403172.jpg

‘‘பன்னீரின் பின்னால் இருந்த எம்.எல்.ஏ-க்கள், எம்.பி-க்களுக்கு வேண்டியதைச் செய்துகொடுத்து வளைத்துவிட்டார் எடப்பாடி. அதனால் அவர்கள் எடப்பாடியின் விசுவாசிகளாக மாறிவிட்டார்கள். பெயரளவில் பன்னீர் பின்னால் இருக்கிறார்கள். அதனால்தான் எடப்பாடி துணிச்சலாகப் பன்னீரை ஒதுக்க நினைக்கிறார். அவராகவே விலகிப்போகட்டும் என்பது எடப்பாடியின் எதிர்பார்ப்பு.’’

‘‘பன்னீர் விலகுவாரா?’’

‘‘எப்படி விலகுவார்? ‘முதலில் கட்சி நம் கட்டுப்பாட்டில் வர வேண்டும், அடுத்ததாக முதல்வர் பதவி. இல்லாவிட்டால் தனிக்கட்சி. தேர்தல் ஆணையத்தில் மனு கொடுத்து இரட்டை இலையை முடக்கி, நாம் யாரென்று காட்டுவோம்’ என ஆதரவாளர்கள் பன்னீரை நெருக்குகிறார்கள். ‘இரண்டும் சரிப்பட்டு வரவில்லை என்றால், பி.ஜே.பி-யில் சேருங்கள்’ என டெல்லியிலிருந்து இன்னொரு பக்கம் பிரஷர் வருகிறது. சமீபத்தில் மதுரை போயிருந்தார் பன்னீர். அப்போது திடீரென மதுரை எம்.பி-யான கோபாலகிருஷ்ணனின் அலுவலகத்துக்குக் காரைத் திருப்பச் சொன்னார். அவருடன் காரில் இருந்த புறநகர் மாவட்டச் செயலாளர் ராஜன் செல்லப்பாவைப் பாதி வழியில் இறக்கிவிட்டுவிட்டார். தனி அறையில் முக்கால் மணி நேரம் கோபாலகிருஷ்ணனுடன் ஆலோசனை நடத்தினார். டெல்லியில் அரசியல் தலைவர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் லெவலில் கோபாலகிருஷ்ணன், தனக்கென ஒரு லாபி வைத்திருக்கிறார். கோபாலகிருஷ்ணனிடம் ஒரு கடிதத்தைக் கொடுத்து, உடனே டெல்லிக்குக் கிளப்பிப்போகச் சொன்னாராம். கோபாலகிருஷ்ணனை எதிர்பார்த்து, டெல்லியில் மைத்ரேயன் காத்திருந்தாராம். இருவரும் கூட்டாக பி.ஜே.பி-யின் முக்கியத் தலைவர் ஒருவரைச் சந்தித்தார்களாம். ‘என்ன பேசினார்கள், என்ன கடிதம் அது?’ என்பது தெரியவில்லை. ஆனால், ஒன்று மட்டும் தெரிந்தது. தமிழக அரசின் முறைப்படியான அழைப்பிதழ் இல்லாமலே பிரதமர் மோடி, சென்னையில் இருசக்கர வாகனம் தரும் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதாக அறிவிப்பு வெளியானது.’’

‘‘அப்படியானால், பன்னீருக்கு டெல்லியில் செல்வாக்கு இருக்கிறதா?’’

‘‘அப்படித்தான் தெரிகிறது. எடப்பாடியும் வெவ்வேறு வழிகளில் டெல்லியின் குட்புக்ஸில் இருக்கிறார். இருந்தாலும், தினகரனை பி.ஜே.பி அடியோடு வெறுக்கிறது. எடப்பாடி தரப்பினர் தினகரனுடன் ரகசிய பேரம் நடத்தி வருவதாக மத்திய உளவுத்துறை மூலம் டெல்லிக்குத் தகவல் போயிருக்கிறது.’’

‘‘இது நிஜமா?’’

‘‘பெங்களூரில் தினகரன் பேச்சைக் கவனித்தீரா? முதலில் ‘ஊழல் அமைச்சர்கள் அனைவரையும் நீக்கவேண்டும்’ என்றார். அந்த எண்ணிக்கையைக் குறைத்துக்கொண்டே வந்தார். இப்போது மேலும் ஒரு படி இறங்கி, ‘மூன்று அமைச்சர்களை நீக்கினால் போதும். நாங்கள் எடப்பாடி அரசுடன் இணைந்துவிடுவோம்’ என்கிறார். தங்கமணி, வேலுமணி மற்றும் ஜெயக்குமார் ஆகிய மூவர் மீதும் தினகரன் கோபத்தில் இருக்கிறார். எடப்பாடி தரப்பில், ‘இந்த மூவரையும் நீக்கமுடியாது. வேண்டுமானால், இப்போது அவர்கள் வகிக்கும் பவர்ஃபுல் பதவிகளிலிருந்து விலக்கி டம்மி துறைகளை ஒதுக்கித்தருகிறோம்’ என்று சொன்னதாகத் தகவல். தினகரன், இந்த  விஷயத்தில் தீவிர ஆலோசனையில் இருக்கிறாராம். ‘இப்படி ஒரு சூழ்நிலை வந்தால், அரசியலை விட்டுப் போய்விடுவேன்’ என்று தங்கமணி கூறி வருவதாகத் தகவல். வேலுமணியும், ஜெயக்குமாரும் கொஞ்சம் பீதியில் இருக்கிறார்கள்.’’

‘‘ஆனால், பிப்ரவரி 21-ம் தேதியன்று நடந்த ஆலோசனைக் கூட்டத்திலும், காவிரிப் பிரச்னை தொடர்பான அனைத்துக்கட்சிக் கூட்டத்திலும் பன்னீரும் எடப்பாடியும் ஒன்றாகக் கலந்துகொண்டார்களே?’’

‘‘கத்திரிக்காய் முற்றினால், கடைக்கு வந்துவிடப்போகிறது! அதுவரை இந்த மாதிரியான ‘போஸ்’கள் தொடரத்தான் செய்யும். ‘பிரதமர் மோடி சென்னை வந்து ராஜ்பவனில் தங்கியிருக்கும்போது, இருவருக்கும் இடையே நடக்கும் பனிப்போரை நிறுத்துவதற்கான யோசனைகளைச் சொல்வார்’ என்று அ.தி.மு.க-வின் சீனியர் தலைவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.’’

‘‘அதாவது, பஞ்சாயத்துச் செய்து வைக்கப்போகிறாரா?’’

‘‘அதை ஏன் அப்படிச் சொல்கிறீர்? ‘கட்சியிலும் ஆட்சியிலும் அதிகாரப்பகிர்வு பற்றிப் பேசக்கூடும்’ என்று சொல்லும். ஜெயலலிதா படத்திறப்புக்கோ, எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்கோ வரத் தேதி கொடுக்காத பிரதமர் மோடி, திடீரென வருகிறார் என்றால், அதில் அர்த்தம் இருக்கும் அல்லவா? இதற்காகப் புதுச்சேரி நிகழ்ச்சியையும் ஒருநாள் தள்ளி வைத்திருக்கிறார்கள். மோடி சொல்வதை எடப்பாடி எப்படி ஏற்றுக்கொள்வார் என்று தெரியவில்லை.பன்னீர் இதற்காகத்தான் காத்திருக்கிறார். மோடி டெல்லி திரும்பியபிறகு அ.தி.மு.க-வில் முக்கிய மாற்றங்கள் நடக்கலாம்.’’

p42aa_1519403350.jpg

‘‘காவிரி விவகாரத்துக்கான அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் என்ன நடந்தது?’’

‘‘கருணாநிதி முதல்வராக இருந்தபோது இதே காவிரிப் பிரச்னைக்காக அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. அதன்பிறகு அதே பிரச்னைக்காக இப்போது கூட்டம் நடைபெற்றுள்ளது. அழைக்கப்பட்டவர்களில் பகுஜன் சமாஜ் கட்சியினரைத் தவிர அனைவரும் வந்திருந்தனர். கட்சிகள் சார்பில் இரண்டு பிரதிநிதிகளும், அமைப்புகள் சார்பில் ஒருவரும் பங்கேற்க அனுமதி உண்டு. இருக்கைகளில் சிக்கல் வந்துவிடக்கூடாது என்பதற்காக, எந்தக் கட்சிக்கு எந்த இருக்கை என்பதை முன்கூட்டியே திட்டமிட்டு அதன்படி அமர வைத்தனர். பத்தரை மணிக்குக் கூட்டம் தொடங்கியது. பத்தே காலுக்கு ஓ.பி.எஸ் வர, அடுத்த சில நிமிடங்களில் முதல்வர் எடப்பாடி வந்துவிட்டார். அதன்பிறகுதான் எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின், துரைமுருகனோடு வந்து சேர்ந்தார்.’’

‘‘கூட்டத்தில் சலசலப்பு ஏதும் ஏற்பட்டதா?’’

‘‘அப்படி எதுவும் ஏற்படவில்லை. ஸ்டாலின் தனது பேச்சில், ‘அனைத்துக் கட்சியினரையும் அழைத்துச் சென்று பிரதமரைச் சந்திக்க வேண்டும்’ என்றார். காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், பி.ஜே.பி-யைக் குறை கூறுவது போன்று பேசியதும் ஓ.பி.எஸ் குறுக்கிட்டு, ‘இங்கு அனைத்துக் கட்சியினரும் இருக்கிறார்கள். யாரும் யாரையும் குறைகூற வேண்டாம்’ என்று வேண்டுகோள் விடுத்தார். திருமாவளவன் பேச்சோடு பேச்சாக,‘மத்திய அரசு ஒத்துவரவில்லை என்றால் அனைத்து எம்.பி-க்களும் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்’ என்று சொன்னதும்,முதல்வர் உள்பட ஆளும்கட்சியினர் பதறிவிட்டனர்.’’

‘‘கூட்டம் நீண்ட நேரம் நடந்ததே?’’

‘‘கலந்து கொண்ட அனைவருக்கும் பேச வாய்ப்புத் தரப்படும் என்று ஆரம்பத்திலேயே சொல்லிவிட்டதால், மதியத்துக்கு மேலும் கூட்டம் தொடர்ந்தது. அதனால், அனைவருக்கும் தமிழ்நாடு ஹோட்டலிலிருந்து மதிய உணவு கொண்டுவரப்பட்டது. சிலர் சொந்த வேலை காரணமாக மதியத்தோடு கிளம்பிவிட்டார்கள். யாரும் போனில் தகவல் சொல்லக்கூடாது என்பதால், கூட்ட அரங்கில் ஜாமர் கருவியைப் பொருத்தியிருந்தனர்.இதனால், உள்ளே இருந்தவர்கள் தவித்துப் போனார்கள்’’ என்ற கழுகார் பறந்தார்.

அட்டை ஓவியம்: பிரேம் டாவின்ஸி
படங்கள்: வி.கே.ரமேஷ், கே.ஜெரோம்

p42d_1519403089.jpg

யாரை அழிக்க யாகம்?

சிகலாவின் பி.ஏ-வாக பல ஆண்டுகள் போயஸ் கார்டனில் வலம் வந்தவர் சிவா. ‘கார்டன்’ சிவா என அ.தி.மு.க வட்டாரங்களில் பிரபலமானவர். இவர், சிவராத்திரிக்கு முதல் நாள் பிரத்தியங்கரா தேவிக்கு மஹா சண்டி யாகத்தை யாருக்கும் தெரியாமல் மிக ரகசியமாக நடத்தியுள்ளார். பட்டுக்கோட்டையை அடுத்த கருக்கா வயல் என்னும் சிற்றூரில் உள்ள சிவசக்தி அம்மன் கோயில் சாமியாரை வைத்து, இந்த யாகம் நடந்தது. 20 அடி ஆழம், 10 அடி அகலத்தில் பள்ளம் தோண்டி, பிரமாண்டமாக இந்த யாகம் நடத்தப்பட்டுள்ளது. எதிரிகளை அழிப்பதற்காக நடத்தப்படுவதுதான் இந்த யாகம். சசிகலாவுக்கும், இளவரசியின் மகன் விவேக்குக்கும் நெருக்கமானவர் கார்டன் சிவா. 25 லட்ச ரூபாய் செலவில் சசிகலாவுக்காக நடத்தப்பட்ட இந்த யாகத்தை யாருக்கு எதிராக சிவா நடத்தினார் என்பதுதான் தஞ்சை வட்டாரத்தில் இப்போது பரபரப்பு விவாதமாக உள்ளது.

p42c_1519403105.jpg

வருமானவரித் துறையின் ‘ஃபீனிக்ஸ் பறவை’ என்று உயர் அதிகாரி ஒருவரைச் சுட்டிக்காட்டுகிறார்கள். மாதச் சம்பளத்தைவிட அதிக மாத வாடகை கொடுத்துக் குடியிருக்கும் இவரை, இருப்பதிலேயே டம்மியான பதவியில் போட்டார்களாம். ஓரிரு மாதங்களிலேயே அங்கிருந்து எகிறி, நல்ல பதவியில் உட்கார்ந்துவிட்டார். இவரின் ஃபேமஸ் டயலாக், ‘‘எனக்குப் பத்து விரல் இருக்கு’’ என்பதுதான். எதிரில் இருப்பவர் ‘பத்து லகரம் தர வேண்டும்’ என்று அர்த்தம். 

தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரிப் பதவியில் இருக்கும் ராஜேஷ் லக்கானி, ‘இந்தப் பதவி போதும்’ என்கிற மூடுக்கு வந்துவிட்டாராம். இரண்டு ஆண்டுகளுக்குமேல் அந்தப் பதவியில் இருந்துவிட்டார். அவரின் இடத்துக்கு முதல்வர் அலுவலகச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, கார்த்திக் மற்றும் சத்யபிரத சாகு ஆகிய மூவரின் பெயர்கள் டெல்லிக்கு அனுப்பப்பட்டதாம். இவர்களில், சத்யபிரத சாகு பெயர் டிக் ஆகியுள்ளது.

முதல்வர் அலுவலக ஐ.ஏ.எஸ்-களில் பவர்ஃபுல்லாக இருக்கும் ஒருவர்மீது, ஒரு குரூப் ஐ.ஏ.எஸ்-கள் கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள். அவரின் வேகத்துக்கு மற்றவர்களால் ஈடுகொடுக்கமுடியவில்லையாம். அதனால், ‘‘எங்களை அவர் வேண்டுமென்றே புறக்கணிக்கிறார்’’ என்று முதல்வர் காதுக்குச் செல்லும்படியாகத் தகவலைக் கசியவிடுகிறார்கள். 

வடக்கு மண்டல உயர் போலீஸ் அதிகாரிகள் இருவர், விசிட் போன இடத்தில் இருந்த பட்டு ஜவுளிக் கடைக்குப் போய் இரண்டு லட்ச ரூபாய்க்குச் சேலை வாங்கினார்களாம். உடன் வந்த உள்ளூர் அதிகாரி ஒருவரின் கையில் பில்லைக் கொடுத்துவிட்டார்களாம். தலையில் கைவைத்தபடி புலம்பிக்கொண்டிருக்கிறார் அந்த உள்ளூர் அதிகாரி.

அ.தி.மு.க உறுப்பினர் சேர்க்கை மற்றும் பழைய உறுப்பினர் பதிவைப் புதுப்பிக்கும் பணியை பிப்ரவரி 2-ம் தேதி எடப்பாடியும் பன்னீரும் தொடங்கி வைத்தனர். ‘‘ஜெயலலிதா காலத்தில் ஒன்றரைக் கோடி தொண்டர்கள் இருந்தார்கள். இப்போது ஒன்றே முக்கால் கோடி உறுப்பினர்களாக அதை உயர்த்தவேண்டும்’’ என்று சொல்லி, ஏழு லட்சம் படிவங்களைத் தமிழகம் முழுக்க அனுப்பி வைத்தார்கள். ஆனால், எதிர்பார்த்தபடி உறுப்பினர்களைச் சேர்த்து படிவங்கள் எதுவும் திரும்பி வரவில்லையாம்.

தமிழக அமைச்சர்களில் குறிப்பிட்ட ஐந்து பேரை, மத்திய உளவுத்துறைத் தீவிரமாகக் கண்காணிக்கிறதாம். அரசு நியமித்த உதவியாளர்களைத் தவிர்த்து, வசூல் செய்து தருவதற்கு என்றே இவர்கள் தனியாக ஆட்களை நியமித்துள்ளார்களாம். இவர்கள் பணம் எண்ணும் எந்திரம் வைத்துக்கொண்டு செய்யும் டீலிங்குகள் பற்றிய விவரங்களை உளவுத்துறை அதிகாரிகள் மோப்பம் பிடிக்கிறார்கள். வருமான வரித்துறை நடவடிக்கை எப்போது பாயப்போகிறதோ?

https://www.vikatan.com

Categories: Tamilnadu-news

முதியோர் இல்லத்தில்... உள்ளவர்களை கொன்று, எலும்புக் கூடுகள் ஏற்றுமதி.

Fri, 23/02/2018 - 17:22

இறப்பு பதிவு செய்யப்படவில்லை

பூதாகரமாகும்.... காஞ்சிபுரம் கருணை இல்லம் விவகாரம்.. மத்திய உளவுத்துறை அதிரடி ஆய்வு!

காஞ்சிபுரம்: சர்ச்சைக்குள்ளான செயின்ட் ஜோசப் கருணை இல்லத்தில் மத்திய உளவுத்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் பாலேஸ்வரத்தில் உள்ள செயின்ட் ஜோசப் என்ற பெயரில் கருணை இல்லம் ஒன்று செயல்பட்டு வருகிறது.

இங்கு ஏராளமான ஆதரவற்ற முதியோர் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் இங்கு நாள்தோறும் முதியவர்கள் உயிரிழப்பதாகவும் அவர்களின் எலும்புக்கூடுகள் வெளிநாட்டிற்கு கடத்தப்படுவதாகவும் தகவல் வெளியானது.

கூச்சலிட்ட மூதாட்டி

கூச்சலிட்ட மூதாட்டி: அண்மையில் கருணை இல்லத்துக்கு சொந்தமான போலி ஆம்புலன்ஸில் கடத்தப்பட்ட மூதாட்டி ஒருவர் வாகனத்தில் பிணம் ஒன்று இருப்பதைக் கண்டு காப்பாற்றுமாறு கூச்சலிட்டார்.

முதியவரும் கடத்தல்:  இதையடுத்து வாகனத்தை மடக்கிப்பிடித்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீசாரர் காய்கறி மூட்டைகளுடன் கடத்தப்பட்ட உடலை கைப்பற்றியதோடு உயிருடன் இருந்த மேலும் ஒரு முதியவரையும் காப்பாற்றினர்.

சுவர்களில் கல்லறை:  இதுகுறித்து பேசிய அப்பகுதி மக்கள் கடந்த 3 மாதங்களில் மட்டும் 300க்கும் மேற்பட்டோர் மர்மமான முறையில் உயிரிழந்திருப்பதாக தெரிவித்தனர். அவர்களின் உடல்கள் அடக்கம் செய்யப்படாமல் அங்குள்ள சுவற்றில் உள்ள அறைகளில் வைத்து பதப் படுத்தப் படுவதாகவும் தெரிவித்தனர்.

ஊடகங்களில் பரவியது:  மேலும் உயிரிப்பவர்களின் எலும்புக்கூடுகள் வெளிநாடுகளுக்கு கடத்தப் படுவதகாவும் குற்றம்சாட்டினர். இந்த விவகாரம் அனைத்து ஊடகங்களிலும் வெளியானது.

இறப்பு பதிவு செய்யப்படவில்லை:  இதையடுத்து நடைபெற்ற கருணை இல்ல நிர்வாகி தாமஸிடம் நடத்தப்பட்ட விசாரணையில் நாள்தோறும் 2 பேர் சராசரியாக உயிரிழப்பதாக தெரிவித்தார். ஆனால் அங்குள்ள விஏஓவிடம் உயிரிழந்தவர்கள் குறித்து கருணை இல்லம் பதிவு செய்யவில்லை என தெரியவந்தது.

மத்திய உளவுத்துறை அதிகாரிகள்:  இதையடுத்து அங்கு ஏதோ சட்டவிரோதமாக நடக்கிறது உறுதி செய்யப்பட்ட நிலையில் மத்திய உளவுத்துறை அதிகாரிகள் அங்கு அதிரடி ஆய்வு நடத்தி வருகின்றனர். கருணை இல்லத்தின் நிர்வாகி தாமஸிடமும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read more at: https://tamil.oneindia.com/news/tamilnadu/central-intelligence-officials-examined-the-kancheepuram-st-joseph-old-age-home-312366.html

Categories: Tamilnadu-news

தி.மு.கவைத் துவக்கிய நாளில் அண்ணா பேசியது என்ன?

Fri, 23/02/2018 - 09:40
தி.மு.கவைத் துவக்கிய நாளில் அண்ணா பேசியது என்ன?
 

புதிதாக கட்சியைத் துவங்கியிருக்கும் கமல்ஹாசன், புதன்கிழமையன்று மதுரையில், தம்முடைய கட்சி துவங்கப்பட்டதற்கான நோக்கத்தை விவரித்து உரையாற்றினார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அந்த உரை குறித்து சமூக வலைதளங்களில் விவாதங்கள் தீவிரமாக நடந்து வருகின்றன.

அண்ணா பெரியார்படத்தின் காப்புரிமைARUNKUMARSUBASUNDARAM

பொதுவாக ஒரு கட்சி துவங்கப்படும்போது, அக்கட்சியின் தலைவர் ஆற்றும் உரை மிகவும் முக்கியமானதாக, அந்தக் கட்சி துவக்கப்பட்டதற்கான நோக்கத்தைச் சொல்வதாக, அதன் எதிர்காலப் பாதையையும், கொள்கைகளையும் சொல்வதாக அமையும்.

திராவிடர் கழகத் தலைவர் பெரியார், மணியம்மையைத் திருமணம் செய்துகொண்டதால் ஏற்பட்ட கருத்துவேறுபாட்டின் காரணமாக சி.என். அண்ணாதுரை உள்ளிட்ட திராவிடர் கழகத் தலைவர்கள் அந்தக் கட்சியில் இருந்து பிரிந்து 1949 செப்டம்பர் 17ஆம் தேதி திராவிட முன்னேற்றக் கழகம் என்ற கட்சியை உருவாக்கினர்.

அந்தக் கட்சியின் நோக்கத்தையும் கொள்கைகளையும் விளக்கும் வகையில் அடுத்த நாள், அதாவது செப்டம்பர் 18ஆம் தேதி சென்னை ராயபுரத்தில் உள்ள ராபின்சன் பூங்காவில் (தற்போது அண்ணா பூங்கா) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டத்தில் சி.என் அண்ணாதுரை உரையாற்றினார்.

திராவிட முன்னேற்றக்கழகம் தோன்றியதற்கான காரணத்தை சுமார் ஒன்றரை மணி நேரம் அவர் விவரித்தார். அண்ணா பேசிக்கொண்டிருந்தபோது கடும் மழையும் பெய்துகொண்டிருந்தது. பெரியார், மணியம்மையைத் திருமணம் செய்வதுதான் விலகியதற்கான முக்கிய காரணம் என்று கூறிய அண்ணா, தமது புதிய கட்சியின் கொள்கைகளையும் தெளிவாக விளக்கினார்.

அவரது உரையின் சில பகுதிகள் இங்கே:

"மழை பலமாகப் பெய்துகொண்டிருக்கிறது. பலர் பேச வேண்டும். சங்கடமான நிலைதான். விடாது மழை பெய்கிறது. அளவற்ற கூட்டம். தாய்மார்கள் தவிக்கின்றனர். மழையில் நின்றுகொண்டே இருக்கிறீர்கள். சங்கடம்தான்; ஆனாலும் சமாளிக்கிறீர்கள். இது போன்ற நிலையில்தான் நாட்டிலே சில காலம் கழகத்தின் வேலைகள் செயலற்றுக் கிடந்தன. சங்கடமான நிலை ஏற்பட்டது. சரி செய்தோம்.

பெரியார் திருமணம் என்ற செய்தி கேட்டதும் அழுதவன் நான். ஆயாசங் கொண்டவன் நான். அதுமட்டுமல்ல, நான் ஒதுங்கிவிடுகிறேன் என்ற எண்ணத்தை, நான் கொண்ட கருத்தைத் தெரிவித்தவன் நான். என் போன்ற பல தோழர்கள் பெரியாரை, பெரியார் போக்கை, அவர் திருமண ஏற்பாட்டை ஏற்கவில்லை என்பதை மட்டுமல்ல, கண்டித்தனர். கதறினர். வேண்டாம் என்றனர் வேதனை உள்ளத்தோடு.

அவரோடு சேர்ந்து பணிபுரிய முடியாத பெரும்பான்மையினர், கழக முக்கியஸ்தர்கள் கூடிப் பேசி ஒரு முடிவுசெய்தனர். அந்த முடிவுதான் திராவிட முன்னேற்றக் கழகத் தோற்றம். இது போட்டி கழகமல்ல.

திராவிட முன்னேற்றக் கழகம் தோன்றிவிட்டது. திராவிடக் கழகத்திற்குப் போட்டியாக அல்ல. அதே கொள்கைப் பாதையில்தான், திராவிடர் கழகத்தின் அடிப்படைக் கொள்கைகளின் மீதுதான் திராவிட முன்னேற்றக் கழகம் அமைக்கப்பட்டுள்ளது.

அடிப்படைக் கொள்கைகளில், கருத்துகளில் மாறுதல், மோதல் எதுவும் கிடையாது. சமுதாயத் துறையிலே சீர்திருத்தம், பொருளாதாரத் துறையிலே சமதர்மக் கொள்கை, அரசியலில் வடநாட்டு ஏகாதிபத்தியத்தினின்று விடுதலை ஆகிய கொள்கைகள்தான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கோட்பாடுகளாகும்.

நம்மை மதியாத, இகழ்ந்த, தூற்றலுடன் துச்சமென மதித்த தலைவரின் தலைமையைவிட்டு வெளியேறித் தனிக்குடித்தனம், தனி முகாம், தனிக் கட்சி, திராவிட முன்னேற்றக் கழகம் அமைத்திருக்கிறோம். நாம் உழைத்து உருவாக்குவோம் இந்தக் கழகத்தை.

அண்ணாதுரைபடத்தின் காப்புரிமைGNANAN

இத்தனை ஆண்டுகளிலும் நான் அறிந்த தலைவர், தெரிந்த தலைவர், பார்த்த தலைவர், இவர் ஒருவர்தான். வேறு தலைவரின் தலைமையில் நான் வேலை செய்தது கிடையாது. செய்யவும் மனம் வந்ததில்லை. அதே காரணத்தால்தான் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு தலைவரை ஏற்படுத்தவில்லை. அவசியம் என்றும் கருதவில்லை.

இதயபூர்வமான தலைவர், இதயத்திலே குடியேறிய தலைவர், நமக்கெல்லாம் அவ்வப்போது நல்வழி காட்டிய பெரியார் அமர்ந்த பீடத்தை, தலைவர் பதவியை, நாற்காலியை காலியாகவே வைத்திருக்கிறோம். அந்த பீடத்திலே, நாற்காலியிலே வேறு ஆட்களை அமர்த்தவோ அல்லது நாங்களே அல்லது நானோ அமரவோ விரும்பவில்லை.

திராவிடர் கழகமாகட்டும், திராவிட முன்னேற்றக் கழகமாகட்டும் படைவரிசை வேறு என்றாலும் கொள்கை ஒன்றுதான். கோட்பாடு ஒன்றுதான். திட்டமும் வேறு அல்ல என்ற நிலை இருந்தே தீரும். படைவரிசை இரண்டுபட்டுவிட்டது என்று எக்காளமிடும் வைதீகபுரிக்கும், வடநாட்டு ஏகாதிபத்யத்துக்கும் சம்மட்டியாக விளங்க வேண்டும்.

இரு கழகங்களும் இரு திக்குகளிலிருந்தும் வட நாட்டு ஏகாதிபத்தியத்தை ஒழித்து, வைதீகக் காட்டை அழித்துச் சமதர்மப் பூங்காவை திராவிடத்தைச் செழிக்கச் செய்தல் வேண்டும். அதிலே எந்தக் கழகம் பூங்காவை அமைத்தாலும் அதில் பூக்கும் பூக்கள், காய்கள், கனிகள் திராவிடத்தின் எழுச்சியை, மலர்ச்சியைத்தான் குறிக்கும்.

இரு பூங்காக்களும் தேவை. ஒன்றோடொன்று பகைக்க தேவையில்லை. அவசியமும் இல்லை. எது புஷ்பித்தாலும் மாலையாகப் போவது திராவிடத்திற்குத்தான் என்ற எண்ணம் வேண்டும்.

மழை பெய்து நின்று, கறுத்த வானம் வெளுத்திருப்பதைப் போல இன்று புதுக் கழகம் அமைத்து முன்னேற்ற வேகத்துடன் மோதல் இன்றிப் பணியாற்ற புறப்பட்டுவிட்டனர். கொள்கை பரப்புவதே நமது முதல் பணி. பகைமை உணர்ச்சியை அடியோடு விட்டொழிக்க வேண்டும்.

நான் கேட்கிறேன் தோழர்களே, எது முக்கியம் நமக்கு? லட்சியமா, பெரியாரா? லட்சியம் தேவை, பெரியாரல்ல என்று முடிவுசெய்தோம். பிரச்சனை முடிந்தது அத்தோடு. இதோ நம் கண் முன் வடநாட்டு ஏகாதிபத்தியம், மக்களைப் பாழ்படுத்தும் பாசிசம், பதுங்கிப் பாய நினைக்கும் பழமை இவைதான் ஒழிய வேண்டும்.

பழமையும், பாசிசமும் முறியடிக்கப்படும்வரை ஓயமாட்டோம். உழைப்போம். உருவான பலனைக் காண்போம். அப்போது பெரியார், "பயல்கள் பரவாயில்லை. உருவான வேலைதான் செய்கிறார்கள் " என்று உள்ளம் மகிழும் நிலை வரத்தான் போகிறது.

முதல் வேலையாக எழுத்துரிமை, பேச்சுரிமை, எதையும் அடக்கும் சர்க்கார் போக்கை எதிர்த்துப் போரிட திராவிட முன்னேற்றக் கழக முன்னணிப்படை அமைய வேண்டும். அதில் பங்குகொள்ள சமதர்ம தோழர்களை வாருங்கள் என்று வரவேற்கிறேன். கம்யூனிஸ்டுகளை ஒத்துழையுங்கள் என்று கூப்பிடுகிறேன்.

கமல்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

பேச்சுரிமையைப் பறிக்காதே, எழுத்துரிமையைத் தடுக்காதே, புத்தகங்களைப் பறிமுதல் செய்யாதே என்று போரிடுவோம்!

பெரியாரே.... நீரளித்த பயிற்சி, பக்குவம் பெற்ற நாங்கள் உம் வழியே சர்க்காரை எதிர்த்து சிறைச்சாலை செல்லத்தான் வேண்டுகோள் விடுக்கிறோம். துவக்க நாளாகிய இன்றே!" என்று சி.என். அண்ணாதுரை தன் உரையை முடித்தார்.

http://www.bbc.com/tamil/india-43161895

Categories: Tamilnadu-news

மற்றவர்கள் சத்தம் போடட்டும் நாம் வேலையைப் பார்ப்போம்; என் ரசிகர்களுக்கு அரசியல் கற்றுத்தரவேண்டாம்: ரஜினி ஆவேசம்

Fri, 23/02/2018 - 09:18
மற்றவர்கள் சத்தம் போடட்டும் நாம் வேலையைப் பார்ப்போம்; என் ரசிகர்களுக்கு அரசியல் கற்றுத்தரவேண்டாம்: ரஜினி ஆவேசம்

 

 
iu

நடிகர் ரஜினிகாந்த் இன்று ரசிகர்களிடையே திடீரென பேசினார். அப்போது தனது ரசிகர்களுக்கு யாரும் அரசியல் கற்றுத்தரவேண்டாம் என்றும் மற்றவர்கள் சத்தம் போடட்டும் நாம் வேலையை பார்ப்போம் என்றும் கூறினார்.

ஜெயலலிதா மறைவு, கருணாநிதியின் ஓய்வுக்கு பின் தமிழக அரசியலில் இறங்க பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். ரஜினிகாந்த் நீண்ட வருடங்களுக்குப் பின் கடந்த டிச.31 அன்று தனது அரசியல் அறிவிப்பை வெளியிட்டார். கட்சி தொடங்குவதற்கான அனைத்து வேலைகளையும் செய்து வருகிறார்.

நடிகர் கமல்ஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் அரசியல் பேச ஆரம்பிக்க அது விவாதமாக மாற அவரும் அரசியலில் இறங்குவேன் என்று அறிவித்தார். நடிகர் விஷாலும் அரசியலில் குதிப்பேன் என்று தெரிவித்தார்.

ரஜினிகாந்த ரஜினி மக்கள் மன்றம் என்று ஆரம்பித்து அதற்கு நிர்வாகிகளை நியமித்து மாவட்டவாரியாக ரசிகர்களை சந்தித்து வருகிறார். ஆனால் அதற்குள் நடிகர் கமல் தனது கட்சியின் பெயர், நிர்வாகிகளை அறிவித்து தனது அரசியல் கட்சியையும் தொடங்கிவிட்டார்.

முதலில் கட்சி ஆரம்பிப்பேன் என்று அறிவித்திருந்த ரஜினிகாந்த் இன்று தனது நிலையை  திடீரென அறிவித்துள்ளார். இதுவரை வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் தனது ரசிகர்களுடன் வீட்டிலிருந்தே பேசிவந்த நடிகர் ரஜினிகாந்த் இன்று திடீரென ராகவேந்திரா மண்டபத்திற்கு வந்தார்.

இன்று நெல்லை மாவட்ட ரசிகர்களை சந்திப்பதாக இருந்தது. ரஜினியே நேரில் வந்ததால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். பின்னர் ரஜினிகாந்த் ரசிகர்களுடன் பேசினார். அவரது பேச்சில் கமல்ஹாசன் கட்சி ஆரம்பித்ததும், ரஜினி ரசிகர்கள் அரசியல் அறியாதவர்கள் என்ற கருத்துக்கும் பதில் சொல்வதாக அமைந்திருந்தது.

'கட்டமைப்புதான் முக்கியம்'

ரஜினி பேசும்போது, "ரொம்ப சந்தோஷம். நீண்ட பயணம் இது. நாம் அனைவரும் சேர்ந்துதான் பயணம் செய்யப் போகிறோம். உங்கள் சந்தோஷம்தான் எனக்கு மகிழ்ச்சி. உங்களை சந்தித்து நீண்ட நாட்கள் ஆகிறது கட்சியின் கட்டமைப்பு வலுவாக இருக்கவேண்டும். 32 மாடி கட்டிடத்தை கட்டி வருகிறேன். அதன் அடித்தளம் பலமாக இருக்க வேண்டும். கட்டமைப்பு சரியாக இருந்தால் தான் தேர்தலில் தோற்றாலும் கட்சி நீடிக்கும்.

எனது ரசிகர்களுக்கு யாரும் அரசியல் பாடம் நடத்த வேண்டாம். மற்றவர்கள் சத்தம் போட்டால் போடட்டும் நாம் அமைதியாக இருந்து நமது வேலையைப் பார்ப்போம். விரைவில் ஒவ்வொரு மாவட்டமாக வந்து ரசிகர்களை சந்திப்பேன்" என்றார்.

அதன் பின்னர் வெளியே வந்த ரஜினிகாந்திடம் செய்தியாளர்கள் காவிரி பிரச்சனைப்பற்றி கேட்டபோது சிரித்தப்படியே பதில் சொல்லாமல் சென்றார்.

http://tamil.thehindu.com/tamilnadu/article22833861.ece?homepage=true

Categories: Tamilnadu-news

தென்னிந்திய தலைவராக முயல்கிறாரா கமல்?

Thu, 22/02/2018 - 14:03
தென்னிந்திய தலைவராக முயல்கிறாரா கமல்?

நீண்ட எதிர்பார்ப்பிற்கு பிறகு தனது அரசியல் கட்சியின் விவரத்தை நேற்று வெளியிட்டார் கமல் ஹாசன்ஆறு கைகள் ஒன்றோடொன்று பிடித்துக் கொண்டிருப்பது போலவும் அதன் நடுவில் நட்சத்திரம் ஒன்று இருப்பது போலவும் உள்ள கொடியை தனது கட்சிக் கொடியாக அறிமுகம் செய்தார்கமல்.

தமிழகத்தை தாண்டி காலூன்ற நினைக்கிறாரா கமல்?

கட்சியின் கொடி மற்றும் பெயர் காரண விளக்கமளித்த கமல் ஹாசன், ஆறு கைகள் தென் இந்தியாவின் ஆறு மாநிலங்களை குறிக்கும் என்றும், நடுவில் உள்ள நட்சத்திரம் மக்களை குறிக்கும் என்றும் கூறினார்.

இதன் மூலம் என்ன சொல்ல வருகிறார் கமல்?

பிற மாநிலங்களில் அரசியல் தடம் பதிக்க முயல்கிறாரா கமல்? அல்லது திராவிட நாடு என்ற கொள்கையை முன் வைக்கிறாரா என பத்திரிக்கையாளர்கள் மற்றும் ஆர்வலர்கள் சிலரிடம் கேட்டோம்.

"சி்றுபிள்ளைத்தனமான செயல்"

"இது வழக்கம்போல் குழப்பமானதாகவே உள்ளது. திராவிட கொள்கையை மீண்டும் உயிர்பிப்பது சாத்தியமற்றது. திராவிடம் என்று பேசுவது தமிழ்நாட்டில் முடிந்து போன ஒரு விஷயம். கேரளா, கர்நாடகா போன்ற பிற மாநிலங்கள் சென்னை மாகாண காலத்திலேயே திராவிடம் என்ற கருத்தை ஏற்றுக் கொண்டதில்லை. ஆகவே, இன்று திராவிடம் என்ற அடையாளத்தின் மூலம் அதை ஒன்று சேர்ப்பது ஒருவித சுய ஏமாற்றுதனமாகத்தான் இருக்கும்" என தெரிவிக்கிறார் செயற்பாட்டாளர் ஆழி செந்தில்நாதன்.

தமிழகத்தை தாண்டி கட்சியை நடத்த வேண்டும் என்றால் அனைத்துக்கு பொதுவாக கட்சியின் பெயரையும் வைத்திருக்க வேண்டும். பொதுவாகவே அவர் குழப்பவாதியாக இருக்கிறார் என்பதன் அடையாளமாகதான் இது உள்ளது என்கிறார் செந்தில்நாதன்.

தமிழகத்தை தாண்டி காலூன்ற நினைக்கிறாரா கமல்?

"ஒரு கட்சியை அகில இந்திய அளவில் தொடங்குவதில் தவறில்லை ஆனால், ஒரு கொடியில் உள்ள சின்னம் ஆறு மாநிலங்களையும் குறிக்கும் என கமல் கூறியது சிறுபிள்ளைத்தனமான செயலாகத் தான் தோன்றுகிறது"என்கிறார் செந்தில்நாதன். மேலும் இது ஒரு அரசியல் முதிர்ச்சியற்றதன்மையை காட்டுகிறது" என்றும் தெரிவித்தார்.

கொடியை பொறுத்தவரையில் ஒவ்வொரு நிறத்திற்கும் ஒரு அடையாளம் உள்ளது அவ்வகையில் திராவிடத்தை உணர்த்தும் விதமாக கருப்பு மற்றும் சிவப்பு நிறத்தை பயன்படுத்தியது புரிந்துக் கொள்ள முடிகிறது ஆனால் கொடியில் கைகளை பயன்படுத்தியது ஒரு குழப்பத்தின் வடிவமாகவே பார்க்க முடிகிறது என்கிறார் செந்தில்நாதன்.

"அவகாசம் தர வேண்டும்"

எந்த ஒரு கட்சியும் தங்கள் மாநிலம், மாநிலத்தின் பிரச்சனை குறித்தே பேசுவார்கள், பிற மாநிலங்களை சேர்த்து இதுவரை யாரும் பேசியதில்லை என்கிறார் மூத்த பத்திரிக்கையாளர் ஆர்.மணி.

மொழி பிரச்சனைக்காக அந்த அந்த மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்ததே, தவிர யாரும் ஆறு மாநிலங்களையும் இணைத்து குரல் கொடுத்தது இல்லை என்கிறார் அவர்.

 

ஆறு மாநிலங்களை இணைத்து பேசினால் அதிக உரிமை கோர கூடும் என்ற தொனி கமலின் பேச்சில் தென்பட்டது என்று கூறும் மணி, நதிகளை இணைக்க வேண்டும் என்று தமிழகத்தை தவிர பிற மாநிலங்கள் கோருவதாக தனக்கு தெரியவில்லை என்றும் தெரிவித்தார்.

இருப்பினும் கமலுக்கு சிறிது நேரத்தை வழங்க வேண்டும். பின்பே, அவரின் அரசியல் பாதையை கணிக்க முடியும் என்கிறார் மூத்த பத்திரிக்கையாளர் மணி.

காவிரி சிக்கலை தீர்ப்பதற்கான வழி என்ன?

தமிழக மக்களின் பிரச்சனைகள், மத்திய அரசுடனான பிரச்சனைகள் ஆகியவற்றைக் காட்டிலும் மாநில ஊழலை மையப்படுத்திதான் அவரின் பேச்சுகள் இருந்தன எனவே, மாநில அரசுக்கு எதிரான ஒரு நிலைப்பாடகவே அது தெரிகிறது எனவே கட்சிக் கொடி ஆறு மாநிலங்களை குறிப்பதாக கூறுவது குழப்பமான நிலைப்பாட்டையே காட்டுவதாக தெரிவிக்கிறார் எழுத்தாளர் தியாகு.

"இந்திய தேசிய கட்சிகள் என்று கூறும் கட்சிகள் அந்தந்த மாநிலத்தில் மாநிலக் கட்சிகளாகத்தான் தங்களின் முடிவுகளை எடுக்கின்றன."

http://www.bbc.com/tamil/india-43151089

Categories: Tamilnadu-news

தமிழகத்தில் அடிப்படை வசதிகள் இல்லாத 8 கிராமங்களை கமல்ஹாசன் தத்தெடுக்கிறார்..

Thu, 22/02/2018 - 08:26
தமிழகத்தில் அடிப்படை வசதிகள் இல்லாத 8 கிராமங்களை கமல்ஹாசன் தத்தெடுக்கிறார்..

kamal5656.jpg?resize=600%2C450

தமிழகத்தில் அடிப்படை வசதிகள் இல்லாத 8 கிராமங்களை தத்தெடுக்க நடிகர் கமல்ஹாசன் முடிவு செய்துள்ளார். இன்றைய தினம் கமல் சென்னை திரும்பியதும் இதற்கான ஆரம்ப கட்டபணிகள் ஆரம்பிக்க்பபட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இளைஞர்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள் எனவும் அவர்கள் தன்னுடன் கைகோர்ப்பார்கள் எனவும் தெரிவித்துள்ள அவர் தனது அரசியல் பயணம் நற்பணிகள் மூலமாகவே மக்களை எளிதாக சென்றடைய முடியும் எனத் தெரிவித்துள்ளார்.

இதற்கமையவே முதல் கட்டமாக தமிழகத்தில் அடிப்படை வசதிகள் இல்லாத 8 கிராமங்களை தத்தெடுக்க் முடிவு செய்துள்ளா அவர் இது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

தமிழகம் முழுவதும் உள்ள தனது கட்சியின் நிர்வாகிகள் மற்றும் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 16 உயர் மட்ட குழு உறுப்பினர்களுடன் கலந்து ஆலோசித்த பின்னர் இந்த 8 கிராமங்களும் தேர்வு செய்யப்பட உள்ள.  இந்த கிராமங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை தனது கட்சி சார்பில் முழுமையாக செய்து கொடுக்கவும் கமல் திட்டமிட்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுரையில் இருந்து இன்று சென்னை திரும்பும் கமல் ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது வீட்டில் வைத்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் பற்றி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி முக்கிய முடிவுகளை எடுக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

http://globaltamilnews.net/2018/67927/

Categories: Tamilnadu-news

மக்கள் நீதி மய்யம்: மதுரையில் உலாவிய போயஸ் உளவாளிகள்

Thu, 22/02/2018 - 06:03
மக்கள் நீதி மய்யம்: மதுரையில் உலாவிய போயஸ் உளவாளிகள் #VikatanExclusive
 
 


“மக்கள் நீதி மய்யம்” கட்சியை  மதுரையில் கோலகலமாகத் துவக்கிவிட்டார் கமல்ஹாசன்.பிரமாண்ட மேடை, புதுமையான வடிவில் கொடி, வித்தியாசமான  பெயர் என ஒவ்வொரு  விஷயமும் வித்தியாசத்தை ஏற்படுத்தியது. மதுரையில் நடைபெற்ற இந்த பிரமாண்ட பொதுக்கூட்டத்தை உளவு பார்ப்பதற்காக சென்னையில் இருந்து ஒரு டீம் மதுரையில் தங்கியிருந்து முழு நிகழ்வையும் சென்னைக்கு அனுப்பியதுதான் சுவாரசியம்.

மக்கள் நீதி மய்யம்

 

தமிழக அரசியல் களம் இதுவரை இல்லாத அளவுக்கு சூடு பிடித்துள்ளது. தமிழ்நாட்டுக்  கலைத்துறையின்  ஆளுமை சக்திகளாக விளங்கிய ரஜினி, கமல் இருவரும் அரசியல் அரிதாரத்தைக் கையில் எடுத்திருக்கிறார்கள்.இருவரும்  அரசியலில்  என்ட்ரி என அறிவித்தபோதே, தமிழகத்தில் இருக்கும் பிற கட்சிகளிடம் இருந்து விமர்சனங்களும்  வரத்துவங்கிவிட்டன. குறிப்பாக ரஜினிகாந்தின் அரசியல் என்ட்ரிக்கு கூடுதலாகவே எதிர்ப்புகள் கிளம்பின.ஆனால், இதை எல்லாம் புறம் தள்ளிவிட்டு இருவரும் கட்சி ஆரம்பிக்கும் முடிவில் உறுதியாக இருந்தனர். இதில் ரஜினியை முந்திக்கொண்டு கமல் கட்சி துவங்கும் நாளும் இடத்தையும் முதலிலே அறிவித்துவிட்டார். ஆனால்,அரசியல் களத்தில் இறங்குவதாக அறிவித்த  ரஜினி சட்டசபை தேர்தலுக்கு முன்தான் கட்சியைத் துவங்குவேன் என்றும் அதுவரை உறுப்பினர் சேரக்கை மன்றத்தின் செயல்பாடுகளை வலுப்படுத்தும் வேலைகளில் ஈடுபடப்போவதாக அறிவித்திருந்தார். 

கமல் ஒருபுறம் கட்சி துவக்க விழாவிற்கான வேலைகளை தீவிரப்படுத்தி வந்த நேரத்தில் ரஜினி  மாவட்ட வாரியாக ரசிகர் மன்ற பொறுப்பாளர்களைச் சந்தித்து ஆலோசனை நடத்திவந்தார்.மேலும் ஆன்லைன் மூலம் உறுப்பினர் சேர்க்கையும் நடத்தப்பட்டது. கமலோ, கட்சி துவங்குவதற்கான  அனைத்து வேலைகளையும் விறுவிறுப்பாகச் செய்து கட்சியின் பெயர், கொடி என அனைத்தையும் வடிவமைத்தார். அதே நேரம் ரஜினியின் செயல்பாடு மிதமாகவே இருந்துவந்தது.  ரஜினி தனது மன்றத்தின்  நிர்வாகிகளை வரிசையாக அறிவிக்க ஆரம்பித்தார்.அதே நேரத்தில் கமல்ஹாசனின் ஒவ்வொரு நிகழ்வையும் ரஜினியின் தரப்பு உன்னிப்பாகக் கவனித்து வந்தது. ரஜினிகாந்தை மரியாதை நிமித்தமாக கமல்ஹாசன் சந்தித்தபோது “தமிழகத்திற்கு நல்லது செய்யவும், மக்களுக்கு நல்லது செய்யவும் வந்துள்ளார். கமலுக்கு எல்லா ஆசிர்வாதம் கிடைக்க வேண்டும் என ஆண்டவனை வேண்டிக்கொள்கிறேன். அவர் அனைத்துப் பயணத்திலும் வெற்றி பெற வாழ்த்துகிறேன். எனது மனமார்ந்த வாழ்த்துத் தெரிவித்தேன்.சினிமாவில் எனது பாணி வேறு அவரது பாணி வேறு. அதேபோல் அரசியலிலும் வேறு வேறாக இருக்கும். ஆனால், மக்களுக்கு நல்லது செய்வதே நோக்கம்” என்று என்னுடைய பாதை வேறு, அவருடைய பாதை வேறு என்பதை அப்போதே சொல்லிவிட்டார் ரஜினி்.

ரஜினி - கமல்

கமல்ஹாசனின் அரசியல் என்ட்ரிக்கு ஒருபுறம் ரஜினி வாழ்த்துத் தெரிவித்தாலும், மறுபுறம் கொஞ்சம் வருத்தத்தில் இருக்கிறார் என்கிறார்கள். குறிப்பாக இத்தனை ஆண்டுகள் நட்பாகப் பழகியவர் கட்சி துவங்கும் நேரத்தில் தானும் கட்சி துவங்கி இருவரும் எதிர் எதிர் அணியில் நிற்கின்ற சூழ்நிலை வந்துவிடப்போகிறது என்று ரஜினி வருத்தப்பட்டுள்ளார். இருந்தாலும், கமலின் அரசியல் என்ட்ரியைவிட தனது அரசியல் என்ட்ரி மாஸாக இருக்க வேண்டும் என்று ரஜினிக்கு நெருக்கமானவர்கள் அவரிடம் ஆலோசனை சொல்லியுள்ளார்கள். முதல் கூட்டத்திலே நமது பலத்தைக் காட்டிவிட வேண்டும் என்று சொல்லியுள்ளார்கள். இதுகுறித்து ரஜினிக்கு நெருக்கமானவர்கள் “ ஒரு கோடி உறுப்பினர்கள் இணைந்தபிறகுதான் கட்சி துவங்க வேண்டும் என்று முடிவில் ஆரம்பத்தில் இருந்தார் ரஜினி. ஆனால், தமிழகத்தின் அரசியல் சூழ்நிலை கமலின் அரசியல் என்ட்ரி இரண்டையும் மனதில் வைத்து விரைவிலே கட்சியை முறைப்படி துவங்கும் முடிவுக்கு வந்துவிட்டார் ரஜினி்.முதலில் ரஜினி கட்சி துவங்குவதற்கு தேர்ந்தெடுத்த இடம் மதுரைதான். ஆனால், கமல் கட்சித் துவக்க விழா அழைப்பை ரஜினியிடம் கொடுக்க வரும்போது மதுரையில் தனது கட்சித் துவக்க விழா பொதுக்கூட்டம் நடக்க இருப்பதைச் சொன்னதும் ரஜினி தனது முடிவை மாற்றிக்கொண்டுள்ளார். 

மதுரையில் கமல் துவங்கட்டும், திருச்சியில் நமது கட்சித் துவக்கவிழாவை நடத்தலாம் என்று முடிவுக்கு அவர் வந்துள்ளார். மேலும், கமலின் ஒவ்வொரு நிகழ்வினையும் ரஜினிக்கு நெருக்கமானவர்கள் பார்த்து வருகிறார்கள். மதுரையில் கமல்ஹாசனின் பொதுக்கூட்டத்தை ஆய்வு செய்வதற்கே, சென்னையில் இருந்து ஒரு டீம் மதுரையில் முகாமிட்டிருந்தது. கமல் ரசிகர்களின் செயல்பாடுகள், பொதுக்கூட்டத்தில் கூடிய கூட்டம், பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடுகள் என அனைத்தையும் இந்த உளவுக் குழு குறிப்பெடுத்துள்ளது.இதற்கு மாற்றாகவே ரஜினியின் அரசியல் கட்சித் துவக்க விழா அமைய வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறார்கள். மேலும் ஜெயலலிதாவின் பிறந்த நாள் அன்று மதுராந்தகத்தில் உள்ள கல்லுாரி ஒன்றில் எம்.ஜி.ஆர் சிலையை ரஜினிகாந்த் திறந்து வைக்க உள்ளார். அன்று சில அதிரடி அறிவிப்புகளை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கலாம்” என்கிறார் அவர். 

இராமேஸ்வரம் முதல் மதுரை வரை கமலின் அனைத்து நிகழ்வுகளையும் ரஜினிக்கு நெருக்கமானவர்களிடம் ஒரு டீம் தகவல் கொடுத்துக் கொண்டே இருந்தது. இந்த அப்டேப்களை  ரஜினியும் அவ்வப்போது கேட்டுத் தெரிந்துகொண்டுள்ளார் ரஜினி. தமிழகத்தின் மூன்றாவது அரசியல் சக்தியாக யார் வரப்போகிறார்கள் என்று கமல், ரஜினி இடையே பனிப்போர் ஆரம்பமாகிவிட்டது. 

https://www.vikatan.com/news/tamilnadu/117154-poes-spies-all-over-madurai-during-kamals-party-launch.html

Categories: Tamilnadu-news

தனிக்கட்சி ஐடியாவில் ஓ.பி.எஸ்?

Wed, 21/02/2018 - 06:15
மிஸ்டர் கழுகு: தனிக்கட்சி ஐடியாவில் ஓ.பி.எஸ்?

 

p5c_1519125032.jpg

‘‘சிங்கம் ஒன்று புறப்பட்டதே...’’ எனப் பாடியபடி வந்தார் கழுகார்.

‘‘யாரைச் சிங்கம் என்கிறீர்?’’ என்றோம்.

‘‘துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தைச் சொல்கிறேன். பூ ஒன்று புயலாகி வருவதாகத் தகவல்கள் சொல்கின்றன’’ என்றபடி ஆரம்பித்தார் கழுகார்.

‘‘2017 பிப்ரவரியில் அமைதியாக தியானப் புரட்சி செய்து, சசிகலாவுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கினார் ஓ.பி.எஸ். இப்போது தேனியில் செயல் வீரர்கள் கூட்டத்தில் சத்தமாகப் பேசியதன் மூலம், எடப்பாடிக்கு எதிராகத் திரியைக் கொளுத்தியுள்ளார் ஓ.பி.எஸ்.’’

‘‘அது ஏதோ தினகரனுக்கு எதிராகப் பேசியது போலத்தானே இருக்கிறது?’’

‘‘மேலோட்டமாகப் பார்த்தால் அப்படித்தான் தெரியும். ஆனால், இதை முதல்வர் - துணை முதல்வர் மோதலாகத்தான் சொல்கிறார்கள். எடப்பாடிக்கும் பன்னீருக்கும் செல்வாக்கையும், செல்வத்தையும் பகிர்ந்துகொள்வதில்தான் பிரச்னை. அடுத்தடுத்து சத்தமில்லாமல் எடப்பாடி செய்யும் உள்குத்து வேலைகளால் பன்னீர் உச்சகட்ட எரிச்சல் அடைந்துள்ளார்.

ஓ.பி.எஸ்ஸை வெறுப்பேற்ற கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த அமைச்சர்களைப் பயன்படுத்துகிறார் எடப்பாடி. அவர்களும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலைகளைக் கச்சிதமாகச் செய்து, அவ்வப்போது பன்னீர்செல்வத்துக்குக் கண்ணீர் வரவழைக்கிறார்கள்.”

‘‘ஓஹோ.’’

‘‘கடந்த வாரம் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, ‘தினகரன் அணியில் உள்ள தங்க தமிழ்ச்செல்வன் எங்கள் பக்கம் வந்தால், அவருக்கு அமைச்சர் பதவி கொடுப்பதாக உறுதி மொழி கொடுத்திருந்தோம்’ என்று குறிப்பிட்டார். அதுவரை உள்ளுக்குள் கசந்து கொண்டிருந்த பன்னீருக்கும் எரிச்சல் உச்சத்தில் ஏறியது. தேனி அரசியலில் பன்னீருக்கும், தங்க தமிழ்ச்செல்வனுக்கும் ஜென்மப் பகை. அவருக்கு அமைச்சர் பதவி கொடுத்திருப்போம் என்று பேசியதில் பன்னீர் கோபம் எல்லை கடந்தது. சமீபத்தில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் உள்ளாட்சித் துறை சம்பந்தமான ஒரு விஷயம் பேசப்பட்டுள்ளது. உள்ளாட்சித் துறையின் சார்பில்தான் அதிகமான வேலைகள் நடக்கின்றன. அது தொடர்பான ஆதாயங்கள் எதுவும் ஓ.பி.எஸ் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் பக்கம் வருவதில்லை. ஆர்.கே. நகர் தேர்தல் முடிவுக்குப் பிறகு சுமார் 2,000 நிர்வாகிகளை எடப்பாடியும் பன்னீரும் இணைந்து நீக்கியுள்ளனர். ‘இந்த இடங்களுக்குப் புதிய ஆட்களைப் போட மறுக்கீறீர்கள். எந்த நேரத்தில் வேண்டுமானாலும் தேர்தல் வரலாம் என்ற சூழலில் எல்லாரையும் நீக்கிக் கொண்டே இருந்தால், கட்சியை எப்படிக் காப்பாற்றுவது... தேர்தலை எப்படிச் சந்திப்பது’ என்று எடப்பாடியிடம் கேட்டுள்ளார் பன்னீர். இந்தப் பதவிகளை இருவரின் ஆதரவாளர்களுக்குள் பகிர்ந்துகொள்வதில் சிக்கலாம். அதில் வாக்குவாதமாகி, அந்தக் கூட்டத்திலிருந்து பாதியிலேயே வெளியேறும் மனநிலைக்கு வந்தார் ஓ.பி.எஸ். அதற்கு மறுநாள்தான் தேனியில் நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டத்தில் ஓ.பி.எஸ் அதிரடியாகப் பேசினார் என்கிறார்கள்.’’

p5d_1519125050.jpg

‘‘தேனியில் மோடி பெயரை இழுத்து ஓ.பி.எஸ் பேச என்ன காரணம்?”

‘‘பிரதமர் மோடியைப் பற்றி வேண்டுமென்றேதான் பன்னீர் குறிப்பிட்டார். ‘மோடி சொன்னதால்தான் எடப்பாடியுடன் இணைந்தேன்’ என்றார் அவர். இதன்மூலம், ‘தனக்கும் எடப்பாடிக்கும் நடக்கும் பஞ்சாயத்தை டெல்லிதான் தீர்த்து வைக்க வேண்டும்’ என்பதைச் சொல்லாமல் சொல்லியிருக்கிறார். ‘இல்லாவிட்டால், விலகிச்சென்று தனிக்கட்சி தொடங்கும் ஐடியாவில் இருக்கிறார்’ என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்..’’

‘‘சரி, எடப்பாடி என்ன திட்டத்தில் இருக்கிறார்?’’

‘‘எடப்பாடியோடு சசிகலாவின் தம்பி திவாகரன் நல்ல தொடர்பில் இருக்கிறார். ‘இந்த ஆட்சி கவிழ்ந்துவிட்டால், சசிகலா குடும்பம் கட்சியைக் கைப்பற்றிவிடும்’ என்ற கணிப்பு எடப்பாடிக்கு இருக்கிறது. அப்படி ஒரு சூழ்நிலை ஏற்பட்டால், தினகரனைச் சமாளிக்க திவாகரன் தேவை என்பதால், எடப்பாடி இதைச் செய்கிறார். அதோடு, தினகரனிடமும் மூத்த அமைச்சர் ஒருவரைத் தூது அனுப்பியுள்ளார். ‘ஒருவேளை சசிகலா குடும்பம் கட்சியில் மீண்டும் தலைதூக்கினால், ஓ.பி.எஸ்ஸைப் பலிகொடுத்துவிட்டு, நாம் அவர்களிடம் சரண்டராகிவிடுவோம்’ என்பது எடப்பாடியின் எண்ணமாக இருக்கிறது என்கின்றனர் அவருக்கு நெருக்கமானவர்கள்.’’

‘‘தினகரனின் தனிக் கட்சி ஆரம்பிக்கும் திட்டம் என்ன ஆனது?’’

‘‘அதை நோக்கித்தான் தினகரன் நகர்ந்து கொண்டிருக்கிறார். அதுதான் தனக்கு நல்லது என்றும் அவர் திட்டவட்டமாக நம்புகிறார். அதுபற்றி சசிகலாவிடம் பேசுவதற்குத்தான் பிப்ரவரி 19-ம் தேதி திங்கள்கிழமை பெங்களூரு பயணம். அதில், எடப்பாடி-ஓ.பி.எஸ் மோதல், திவாகரன் - எடப்பாடி கூட்டு, பி.ஜே.பி-யுடன் விவேக்கும் கிருஷ்ணப்பிரியாவும் வைத்துள்ள தொடர்புகள் என எல்லாவற்றைப் பற்றியும் விவாதித்திருக்கிறார். அதோடு ஜெயா டி.வி-யையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர நினைக்கிறார் தினகரன்.’’

‘‘ஜெயா டி.வி விவேக் கட்டுப்பாட்டில்தானே இருந்தது?’’

‘‘ஆம். ஆனால், அது தனக்குச் சாதகமாக இல்லை என்று தினகரன் கருதுகிறார். அந்தத் தொலைக்காட்சியைக் கையில் வைத்துக்கொண்டு விவேக் தனி லாபி செய்கிறார் என்பது தினகரனின் எண்ணம். அதனால், அதையும் தன் வசப்படுத்த நினைக்கிறார். ‘நிகழ்ச்சிகளின் பொறுப்பை விவேக் பார்த்துக்கொள்ளட்டும். செய்திகளை நான் பார்த்துக்கொள்கிறேன்’ என்று கேட்டுள்ளார் தினகரன். தினகரனின் இந்த மூவ்மென்ட்டைப் புரிந்துகொண்ட விவேக், ‘ஒரு நிறுவனத்துக்கு இரண்டு நிர்வாகிகள் இருக்கமுடியாது; மொத்தமாக நான் சேனலைப் பார்த்துக்கொள்வதென்றால் சரி. இல்லையென்றால், எனக்கு சேனலே தேவையில்லை’ என்று சசிகலாவுக்குச் செய்தி அனுப்பியுள்ளாராம். இந்தப் பஞ்சாயத்தால் விவேக் இரண்டு வாரங்களாக ஜெயா டி.வி அலுவலகத்துக்கு வரவில்லையாம்’’ என்ற கழுகார், கிளம்பும் நேரத்தில் ஒரு தகவலைச் சிதறவிட்டுவிட்டுப் போனார்.

‘‘அடுத்த வாரம் அகமதாபாத்தில் மிக முக்கியமான சந்திப்பு ஒன்றை டெல்லி பி.ஜே.பி நடத்த உள்ளது. அது நடந்தால், தமிழக அரசியலில் எல்லாம் தலைகீழாக மாறும்!”

படங்கள்: சொ.பாலசுப்ரமணியன், வி.ஸ்ரீனிவாசுலு

p5_1519125012.jpg

அச்சுறுத்தியவருக்கு அதிகபட்ச தண்டனை!

செ
ன்னை மாங்காட்டை அடுத்த மவுலிவாக்கத்தில், ஆறு வயது சிறுமி ஹாசினி பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக்கொல்லப்பட்ட வழக்கில், குற்றவாளி தஷ்வந்துக்கு செங்கல்பட்டு மகளிர் நீதிமன்ற நீதிபதி வேல்முருகன் மரணத் தண்டனை அளித்துள்ளார். 2017 பிப்ரவரி மாதம் நிகழ்ந்த இந்தக் கொடூரம், தமிழகத்தையே உலுக்கியது. ஐ.டி ஊழியரான 24 வயது தஷ்வந்தை அப்போது குண்டர் சட்டத்தில் கைது செய்தது போலீஸ். ஆனால், சில வாரங்களிலேயே அவரை ஜாமீனில் விடுவித்தது பெரும் சர்ச்சையானது. அந்த நேரத்தில் தன் அம்மா சரளாவைக் கொடூரமாகக் கொலை செய்துவிட்டு மும்பைக்கு ஓடினார் தஷ்வந்த். நீண்ட தேடுதல் வேட்டைக்குப் பிறகு அவர் பிடிபட்டார். ஹாசினி வழக்கில் இவ்வளவு சீக்கிரம், இவ்வளவு கடுமையான தண்டனை வழங்கப்படும் என்பதை ஹாசினியின் பெற்றோரே எதிர்பார்க்கவில்லை. வழக்கு நடக்கும்போதெல்லாம் ஹாசினியின் அப்பாவை அச்சுறுத்திக்கொண்டிருந்த தஷ்வந்த்துக்கு அதிகபட்ச தண்டனையை வழங்கியுள்ளார் நீதிபதி. உடுமலை சங்கர் ஆணவக்கொலை வழக்கில் சமீபத்தில் ஆறு பேருக்கு மரணத் தண்டனை வழங்கப்பட்டது. கடுமையான தண்டனைகள் வழங்கப்படுவது, கொடூரமான குற்றங்களைக் குறைக்க வேண்டும்.

விஜயகாந்திடம் கமல் சொன்ன பன்ச்!

ரசியல் கட்சி தொடங்குவதற்குமுன் தனக்கான ஆதர்ஷ மனிதர்களையும் நண்பர்களையும் கமல் சந்தித்தார். முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன், ‘கமல் நிச்சயம் நல்ல அரசியல் பண்ணுவான்’ என்று யாரிடமோ சொன்னாராம். அதைக் கேள்விப்பட்டு சேஷனைச் சந்தித்தார் கமல். சேஷன், ‘எந்தச் சந்தேகம் இருந்தாலும் எப்ப வேணுமானாலும் சந்திக்கலாம்’ என்றாராம்.

p5a_1519124996.jpg

இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணுவையும் கமல் சந்தித்தார். அப்போது, தான் எழுதிய ‘ஹே ராம்’ பட திரைக்கதைப் புத்தகத்தை நல்லகண்ணுவுக்குத் தந்தார். ‘உங்களின் கொள்கை, செயலைப் பொறுத்து உங்கள் அரசியல் பற்றிய என் கருத்தைச் சொல்கிறேன்’ என்றாராம் நல்லகண்ணு.

ரஜினியிடம், ‘‘உங்களைப் பார்க்க வருகிறேன்’’ என்று கமல் சொல்ல, ‘‘சாப்பிட்டுக்கிட்டு இருக்கேன், வந்துடுங்க” என்றாராம் ரஜினி. ரஜினி சாப்பிட்டு முடிப்பதற்குள் கமல் போய்விட்டாராம். வாழ்த்து பரிமாறிக்கொண்டவர்கள், ‘‘நாம் அரசியலில் எதிரெதிர் அணியில் நின்றாலும் இதே கண்ணியத்தைக் காக்க வேண்டும்’’ என்று பேசிக்கொண்டார்களாம். அன்று இரவே தி.மு.க தலைவர் கருணாநிதியைச் சந்தித்தார் கமல். ஸ்டாலின்தான் கமலை வரவேற்று அழைத்துச்சென்றார். கருணாநிதியிடம் தன் அரசியல் அறிவிப்பு குறித்து தெரிவித்திருக்கிறார் கமல். அதைப் புரிந்துகொண்ட கருணாநிதியும் ஏதோ பேச முற்பட்டிருக்கிறார்.

விஜயகாந்தை அவரின் கோயம்பேடு அலுவலகத்தில் சந்தித்தார் கமல். “நீங்கள்லாம் கண்டிப்பா வரணும் கமல்’’ என்று அவரை விஜயகாந்த் கட்டிப் பிடித்துக்கொண்டார். ‘‘நீங்க ‘அரசியலில் ரஜினி, கமலுக்கு நான்தான் சீனியர்’னு பேட்டி கொடுத்திருந்தீங்க. அது உண்மைதான். அந்த சீனியரிடம் வாழ்த்து பெறத்தான் வந்தேன்’’ என்றாராம் கமல். அதை ரசித்து சிரித்தாராம் விஜயகாந்த்.

p5b_1519124954.jpg

நடிகரும் முன்னாள் எம்.பி-யுமான ராமராஜனை அ.தி.மு.க-வில் யாரும் கண்டுகொள்ளவில்லையாம். உடல்நிலை மோசமானபோது, தொலைபேசியில்கூட அவரை யாரும் நலம் விசாரிக்கவில்லை. அதேசமயத்தில், தினகரன் பக்கம் இருந்து அவருக்கு அழைப்பு வந்தபடி உள்ளது. அதனால் அணிமாறலாமா என்ற யோசனையில் இருக்கிறார்.

தினகரன் தஞ்சாவூரில் நடத்திய சுற்றுப்பயணத்தில் வைக்கப்பட்ட பேனர்களில் சசிகலாவின் படம் அதிகம் இடம்பெறவில்லை. வைத்த சிலரும் ஸ்டாம்ப் சைஸுக்கு மட்டுமே படம் போட்டிருந்தனர். ஆனால், சசிகலாவின் உதவியாளராக ஒரு காலத்தில் இருந்த கார்டன் சிவா உள்ளிட்ட சிலர் சசிகலாவின் படத்தைப் பெரிதாகப் போட்டே பேனர்கள் வைத்திருந்தனர்.

வருமானவரித்துறையில் சுமார் 350 ஃபைல்களை முன்பிருந்த ஓர் உயர் அதிகாரி குளோஸ் பண்ணிவிட்டார். அவரின் நடவடிக்கைகளில் சந்தேகப்பட்டு, அவரை வேறு ஊருக்கு மாற்றிவிட்டார்கள். புதிதாக அந்தப் பதவியில் வந்து உட்கார்ந்தவர், அதில் 300 ஃபைல்களை மீண்டும் ஓப்பன் பண்ணிவிட்டாராம். அதில் சம்பந்தப்பட்ட வி.ஐ.பி-கள் மிரண்டு கிடக்கிறார்கள்.

தலைமைச் செயலகத்தில், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அலுவலகம் நாமக்கல் மாளிகையின் 7-வது மாடியில் உள்ளது. இங்குள்ளவர்களுக்கு உயர் அதிகாரி ஒருவர் மெமோ, தண்டனை என வாரி வழங்குகிறாராம். ‘‘அந்த அதிகாரி டார்ச்சர் தாங்கலை. ஒருநாள் 7-வது மாடியிலிருந்து யாராவது குதித்துவிடுவார்கள்’’ என்று தலைமைச் செயலக அலுவலர் சங்கத்தில் புகார் தெரிவித்திருக்கிறார்கள்.

விவசாயத்துறையின் செயலாளராக இருப்பவர் ககன் தீப் சிங் பேடி. இதே துறையின் அமைச்சர் துரைக்கண்ணுவின் மருமகன் வைப்பதுதான் எல்லாவற்றிலும் சட்டமாம். சின்னச்சின்ன விஷயங்களில்கூட துறையில் இவர் செய்யும் நெருக்கடிகளும் தலையீடும் செயலாளருக்குப் பிடிக்கவில்லையாம். பனிப்போர் நடக்கிறது.

ரஜினியின் ‘2.0’ படம் அநேகமாக வரும் ஆகஸ்டு 15-ம் தேதி ரிலீஸ் ஆகலாம். அதையொட்டி ரஜினியின் தமிழக சுற்றுப்பயணமும் இருக்கலாம்.

https://www.vikatan.com

Categories: Tamilnadu-news

`ரூ.8 கோடியை எப்போ கொடுப்பீங்க?' - லதா ரஜினிக்கு கெடு விதித்த உச்ச நீதிமன்றம்!

Tue, 20/02/2018 - 07:16
`ரூ.8 கோடியை எப்போ கொடுப்பீங்க?' - லதா ரஜினிக்கு கெடு விதித்த உச்ச நீதிமன்றம்!
 
 

கோச்சடையான் படத்துக்கான கடனை எப்போது அடைப்பீர்கள் என நடிகர் ரஜினிகாந்த் மனைவி லதாவுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. 

 

லதா ரஜினிகாந்த்

 

கடந்த 2014-ம் ஆண்டு நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் அவரது மகள் சௌந்தர்யா இயக்கத்தில் வெளியான படம் கோச்சடையான். ஏ.ஆர்.ரகுமான் இசையில், தீபிகா படுகோன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான இத்திரைப்படம் இந்தியாவின் முதல் மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்தில் வெளியான படம் என்ற பெருமையைப் பெற்றது. இந்த நிலையில் கோச்சடையான் படத்தைத் தயாரிப்பதற்காக ஆட்பீரோ நிறுவனத்திடம் ரூ.10 கோடியை ரஜினிகாந்த் மனைவி லதா வாங்கியிருந்ததாகப் புகார் தெரிவிக்கப்பட்டது. 

 

ஆனால், இதில் 1.5 கோடி ரூபாய் மட்டும் திருப்பி செலுத்தியதாகவும், மீதம் 8.5 கோடியைத் தரவில்லை என்றும் ஆட்பீரோ நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. இந்த வழக்கு விசாரணை இன்று நடந்த நிலையில், ரூ. 8.5 கோடி கடனை எப்போது திருப்பி அடைப்பீர்கள் என லதாவுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் எதற்காகக் கடனைத் திருப்பி செலுத்தாமல் இருக்கிறீர்கள் என்றும் இதுகுறித்து பகல் 12.30 மணிக்குள் பதிலளிக்க வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றம் கெடு விதித்துள்ளது. இது ரஜினிகாந்த் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

https://www.vikatan.com/news/india/116957-supreme-court-questions-to-actor-rajinikanth-wife-latha-about-kochadaiiyaan-movie-issue.html

Categories: Tamilnadu-news

`நாங்கதான் ஆளணும்' - ரஜினி குறித்த கேள்விக்கு கமல் முன்பு அதிர்ந்த சீமான்

Tue, 20/02/2018 - 05:54
`நாங்கதான் ஆளணும்' - ரஜினி குறித்த கேள்விக்கு கமல் முன்பு அதிர்ந்த சீமான்
 
 

seeman, kamal

 

 

 

சென்னை ஆழ்வார்பேட்டையில் நடிகர் கமல்ஹாசனை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் திடீரென சந்தித்துப் பேசினார்.  சந்திப்புக்குப் பின் கமல்ஹாசனுடன் இணைந்து சீமான் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய சீமான், ‘நான் சிறு வயதில் இருந்தே கமலில் திரைப்படங்களைப் பார்த்து ரசித்து வளர்ந்தவன். ஒரே ஊர். ஒரே மண்ணில் பிறந்தவர்கள். எங்கள் குடும்பங்களுக்கு கமலின் குடும்பம்தான் வழக்கறிஞராக இருந்து பல வழக்குகளை நடத்தியது. 

தமிழகத்தில் தற்போது மிக மோசமான அரசியல் சூழல் நிலவி வருகிறது. எப்படியாவது மாற்றம் வந்துவிடாதா என்றுதான் அனைவரும் எதிர்பார்கிறோம். இந்தச் சூழலில் மக்களால் அதிகம் நேசிக்கப்படும் கலைஞன் என் அண்ணன் கமல்ஹாசன் நாளை அரசியல் பயணத்தைத் தொடங்குகிறார். எனவே, அவரை சந்திக்க நான் வந்திருக்கிறேன். நான் நேற்று உருவான தலைவர். எனவே, அவர் வந்து என்னை சந்திப்பது சரியாக இருக்காது. அதனால்தான் நான் வந்து அவரைச்  சந்தித்தேன். அவரின் அரசியல் பயணம் வெற்றிபெற வாழ்த்துகிறேன். ராமேஸ்வரத்திலிருந்து தொடங்கும் அவரின் பயணம் புரட்சிகர, வெற்றிகர அரசியல் பயணமாக அமைய வாழ்த்துகிறேன்’ என்றார்.

சீமான் பேசிக்கொண்டிருந்தபோது இடைமறித்த செய்தியாளர், ‘கமலுக்கு ஆதரவு தெரிவிப்பீர்களா’ என்றார். சீமான் பதில் கூறுவதற்கு முன்னரே கமல், ‘நான் பதில் சொல்லலாமா’ என்று பேசத் தொடங்கினார்..

‘சீமானுக்கு என் அரசியல் கொள்கைகள் பற்றி தெரியாது. ஆனால், என்னை அவருக்குத் தெரியும். நான் நடிக்கும் சினிமா பற்றிதான் அவருக்குத் தெரியும். என் கொள்கை என்ன என்பது அரசல்புரசலாக நான் பேசும்போது தென்படும் வார்த்தைகளை வைத்து தெரிந்து கொண்டிருப்பார். முழுமையாகத் தெரிந்திருக்க வாய்பில்லை. நாளை தொடங்கப்போகும் என் பயணத்தைக் கவனித்துவிட்டு என் கொள்கை என்ன என்பதைத் தெரிந்துகொண்டு சீமான் அவரது முடிவை கூறட்டும்’ என்றார். 

சீமான் , கமல்
 

ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து சீமானிடம் செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். அதற்குப் பதிலளித்த சீமான், ``இது எங்க மண். உதாரணத்துக்கு பொள்ளாச்சி என்பதை புத்தகத்தில் படித்திருப்பார்கள். ஆனால், அங்கு நேரில் சென்று பார்க்க வேண்டும். நெசவாளர் பிரச்னை, உழவர் பிரச்னை என எல்லாமே நேரில் சென்று பார்த்தால்தான் உணர முடியும். மேலும், மீனவர் பிரச்னை என்ன, மாணவர் பிரச்னை என்ன என்பது நேரில் சென்று பார்த்தால்தானே தெரியும்’' என்றார். 

மேலும் பேசிய சீமான் ``தமிழ் வாழணும் என்றால், தமிழன் ஆளணும். அதை தவிர்க்க முடியாது. இது என் வீடு. என் வீட்டில் எங்கே குழாய் உடைந்திருக்கிறது என்று எனக்குதான் தெரியும். எங்கே தண்ணீர் கசிகிறது, எங்கே என்ன பிரச்னை என்று எனக்குதான் தெரியும். எங்கள் மண்ணை நாங்கள்தான் ஆள வேண்டும்'' என்றார். 

https://www.vikatan.com/news/tamilnadu/116947-kamal-and-seeman-meets-press-people-together.html

Categories: Tamilnadu-news

‘வா ராசா.. வா ராசா கமலஹாசா’:

Tue, 20/02/2018 - 05:40
‘வா ராசா.. வா ராசா கமலஹாசா’:

 

நடிகர் கமல்ஹாசன் நாளை அரசியல் பயணத்தை தொடங்கவுள்ள நிலையில், யூரியூபில் கமலின் அரசியல் பயணத்தை வரவேற்கும் வகையில், ‘வா ராசா.. வா ராசா கமலஹாசா’ என்ற பாடல் வெளியிடப்பட்டுள்ளது.

நடிகர் கமல்ஹாசன் நாளை தனது அரசியல் பயணத்தை துவக்குகிறார். ராமேசுவரத்தில் இருந்து தனது  பயணத்தைத் அவர் தொடங்குகிறார். பின்னர், மாலையில் மதுரையில் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். அங்கு கட்சியின் கொடியையும், பெயரையும் அவர் அறிமுகப்படுத்தவுள்ளார்.

முன்னதாக, தான் அரசியல் பயணத்தை துவக்குவதை முன்னிட்டு திமுக தலைவர் கருணாநிதி, இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு, முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி டி.என்.சேஷன், தேமுதிக தலைவர் விஜயகாந்த், நடிகர் ரஜினிகாந்த் ஆகியோரை நேரில் சந்தித்தார்.

நாளை அரசியல் பயணத்தை அவர் தொடங்கவுள்ள நிலையில், இணையத்தில் கமலின் அரசியல் பயணத்தை வரவேற்கும் வகையில், ‘வா ராசா.. வா ராசா கமலஹாசா… தமிழ்நாட்டை ஆளப் பொறந்தவரே மவராசா’ என்ற பாடல் வெளியிடப்பட்டுள்ளது.

கண்மணிராஜா என்பவர் இசையமைத்துள்ள இப்பாடலை திவ்யாநாயர் என்ற பெண் பாடியுள்ளார். செங்கதிர்வாணன் என்பவர் பாடலை எழுதியுள்ளார். இந்தப் பாடல் கமல்ஹாசன் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

http://globaltamilnews.net/2018/67590/

 

Categories: Tamilnadu-news

ராஜம்மாள்... ஜெயலலிதா மரணத்தின் மர்மத்தை உடைப்பாரா? #VikatanExclusive

Mon, 19/02/2018 - 19:25
ராஜம்மாள்... ஜெயலலிதா மரணத்தின் மர்மத்தை உடைப்பாரா? #VikatanExclusive
 

ஜெயலலிதா

 

ஜெயலலிதா மரணத்தின் சல்லி வேரை தேடிக்கொண்டிருக்கிறது ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி விசாரணைக் கமிஷன். டாக்டர்கள், அரசு அதிகாரிகள் ஆகியோரிடம் விசாரணை நடத்தி வந்த விசாரணைக் கமிஷன் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது. ஜெயலலிதா வீட்டில் பணி செய்யும் ஊழியர்களை விசாரணைக்கு அழைத்திருக்கிறது. போயஸ் கார்டன் வீட்டில் சமையல் செய்யும் ராஜம்மாளை நாளை விசாரணைக்கு அழைத்திருக்கிறார்கள். ஜெயலலிதாவின் கார் டிரைவர் ஐயப்பனை 23-ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. ஏற்கெனவே கார்டனில் வேலை பார்த்த சசிகலாவின் உதவியாளர் கார்த்திகேயனை விசாரணை செய்திருக்கிறார்கள். போயஸ் கார்டனில் வேலை பார்ப்பவர்களின் பட்டியலை ஜெயலலிதாவின் பி.ஜே பூங்குன்றன் விசாரணைக் கமிஷனிடம் முன்பே அளித்திருக்கிறார். அதன்படி ஒவ்வொருவராக விசாரணைக்கு அழைக்கப்பட்டு வருகிறார்கள்.

 

சமையல்காரர், வாட்ச்மேன், தோட்டக்காரர், அலுவலக உதவியாளர்கள், டிரைவர்கள், கம்ப்யூட்டர் ஆபரேட்டர் என வெளியே அதிகம் தெரியாத 15 பேர் போயஸ் கார்டன் வீட்டில் வசிக்கிறார்கள்; ஜெயலலிதா மறைந்து ஓராண்டு கடந்தும் தொடர்ந்து வசித்துவருகிறார்கள். இளவரசியின் மகன் விவேக், இவர்களுக்கு இப்போதும் மாதாமாதம் சம்பளம் கொடுத்துக்கொண்டிருக்கிறார். ஜெயலலிதாவின் நிழல்போல இருந்த, அவருடைய தனிப் பாதுகாப்பு அதிகாரி (பி.எஸ்.ஓ) பெருமாள்சாமி, பி.ஏ. பூங்குன்றன் ஆகியோர்கூட போயஸ் கார்டன் வீட்டில் வசிக்கவில்லை. ஆனால், சாதாரண வேலையாட்கள் அங்கேயே தங்க வைக்கப்பட்டனர். அவர்களுக்குத் தங்கள் முதலாளி ஜெயலலிதா மரணத்தின் மர்மம் தெரியும் என்பதால், அவர்களை விசாரிக்க முடிவு செய்திருக்கிறது நீதிபதி ஆறுமுகசாமி விசாரணைக் கமிஷன்.

ஜெயலலிதா உள்பட கார்டனில் வசித்த மற்றும் வசிக்கும் முக்கியமானவர்கள் அனைவருக்கும் சமைத்துப் போட்டவர் ராஜம்மாள். 74 வயதாகும் ராஜம்மாள், பல வருடங்களாக கார்டனிலேயே தங்கி சமையல் வேலை செய்துவருகிறார். கடந்த ஜூன் மாதம் போயஸ் கார்டன் வீட்டுக்குத் தீபா போனபோது, அங்கிருந்த ஊழியர்கள் மற்றும் சகோதரர் தீபக் ஆகியோருடன் தகராறு ஏற்பட்டது. அந்த நேரத்தில், ராஜம்மாள்தான் வெளியே வந்து தீபாவிடம் பேசியிருக்கிறார். ‘‘ஏன் இங்கே வந்த... உன்னை ஏதாவது செய்திடுவாங்க...’’ என ராஜம்மாள் தன்னிடம் சொன்னதாக தீபா சொல்லியிருந்தார். கமிஷன் முன்பு ராஜம்மாள் என்ன சொல்லப்போகிறார் எனத் தெரியவில்லை.

jayacase2_19389.jpg

 

மணி என்பவரின் மகள் லட்சுமி, ஜெயலலிதாவின் சுற்றுப்பயணங்களில் அவரின் உதவியாளராக உடன் சென்றவர். தேர்தல் பிரசாரம் மற்றும் வெளியூர் நிகழ்ச்சிகளுக்கு ஜெயலலிதா ஹெலிகாப்டரில் சென்றபோது, அவருடன் லட்சுமியும் பயணம் செய்தார். லட்சுமியைப்போல, நிறைய இளம் வயதுப் பெண்கள் கார்டனில் வேலை பார்த்தார்கள். பிறகு, அங்கிருந்து அவர்கள் சென்றுவிட்டார்கள். லட்சுமி, தொடர்ந்து அங்கேயே வேலை செய்துவருகிறார். வாட்ச்மேன் உள்பட வடமாநிலப் பணியாளர்கள் சிலரும் ஜெயலலிதா வீட்டிலேயே தங்கியுள்ளனர். வெளியே அறியப்படாத இவர்கள், ஜெயலலிதாவைப் பற்றி என்ன சொல்லப் போகிறார்கள் என்று தெரியவில்லை.

jayacase1_19009.jpg

இவர்கள் தவிர இன்னும் 14 பேர் விசாரணைக்கு அழைக்கப்படலாம். ஆறுமுகசாமி கமிஷனிடம் அளிக்கப்பட்ட பட்டியலில் உள்ள 15 பேரும், ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, அவர் வீட்டில் வேலை செய்தவர்கள்; இப்போதும் வேலையில் தொடர்பவர்கள். அதற்கு முன்பே அங்கே வேலை செய்த பலரும் வெளியேற்றப்பட்டனர். அவர்கள் விவரம்:

வீட்டில் வேலை பார்த்த அந்த முன்னாள் ஊழியர்கள்...

1. ராமசாமி த/பெ சின்னையா (வயது 64)

2. ஐயப்பன் த/பெ மாடசாமி (வயது 47)

3. கண்ணன் த/பெ சின்னசாமி (வயது 46)

4. பொன்னுசாமி த/பெ சின்னு (வயது 46)

5. பிரபாகரன் த/பெ ராஜகோபால் (வயது 43)

6. ஞானசேகர் த/பெ பழனிசாமி (வயது 42)

7. செல்வராஜ் த/பெ லோகநாதன் (வயது 40)

8. வனிதா க/பெ கண்ணன் (வயது 39)

9. தயா த/பெ சந்திரசேகர் (வயது 39)

10. ராஜி த/பெ பிஸ்பதி (வயது 35)

11. சிங்கமுத்து த/பெ சுப்பையா (வயது 33)

12. ராதா த/பெ தனேஷ் (வயது 28)

13. ராணி த/பெ தனவேல் (வயது 28)

14. ராஜேஸ்வரி த/பெ கந்தசாமி (வயது 27)

https://www.vikatan.com/news/coverstory/116901-will-rajammal-speak-out-about-jayalalithaas-mysterious-death.html

Categories: Tamilnadu-news

இடைவெளியில்லாத 14.30 மணிநேரம்... வெளியேறாத மக்கள் கூட்டம்... இது மே 17 ஸ்டைல்!

Mon, 19/02/2018 - 17:54
இடைவெளியில்லாத 14.30 மணிநேரம்... வெளியேறாத மக்கள் கூட்டம்... இது மே 17 ஸ்டைல்!
 
 

மே 17

 

''இலங்கை இனப்பிரச்னை குறித்தான விவாதம் வருகிற மார்ச் மாதம் ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தில் நடைபெறவிருக்கிறது. இலங்கை அரசுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே நடைபெற்ற இறுதிக்கட்ட போரில், லட்சக்கணக்கிலான ஈழத் தமிழர்களை ராணுவம் கொன்றொழித்தது. இந்த இன அழிப்பு குறித்தான விவாதங்களை ஐ.நா மனித உரிமை ஆணையம் நடத்தி வருகிறது. ஆனால், இலங்கையில் இனஅழிப்பு நடத்தப்பட்டதையும், தமிழர்களுக்கான உரிமை பறிக்கப்பட்டு வருவதையும் ஐ.நா மனித உரிமை ஆணையம் இன்றுவரை ஏற்க மறுக்கிறது. அங்கு நடந்தது போர்க்குற்றம்கூட அல்ல என்று உலகநாடுகளை இந்தியா, அமெரிக்கா, சீனா, இலங்கை ஆகிய நாடுகள் நம்பவைத்து வருகின்றன. வருகிற மார்ச் மாதம் நடைபெறவிருக்கிற ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் இதுகுறித்த விவாதங்களை எழுப்பப் போகிறோம்'' என்கிறது மே-17 இயக்கம். இந்த விஷயத்தில் உலக தமிழர்கள் அனைவரும் ஒன்றுபட வேண்டும். இலங்கையில் தமிழீழம் மலர வேண்டும் என்றால், அது அனைத்துத் தமிழர்களும் சாதி, மதம் கடந்து ஒன்றிணைந்து குரல்கொடுத்தால் மட்டுமே சாத்தியம். இதற்காக தமிழர்களை ஒன்றிணைக்கும் முன்னோட்டமாக தமிழீழ விடுதலைக்கான எழுச்சி மாநாடு சென்னைச் சேப்பாக்கத்தில் உள்ள அண்ணா அரங்கத்தில் நடைபெற்றது. 18-02-2018 அன்று 'வெல்லும் தமிழீழம்' என்ற பெயரில் இந்த மாநாட்டை பிரமாண்டமாக நடத்தியது மே17 இயக்கம்.

 

வெல்லும் தமிழீழம்

நான்கு கட்ட அமர்வுகளாக மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டை மலேசியாவின் பினாங்கு மாநில துணை முதல்வர் ராமசாமி தொடங்கி வைத்தார். தமிழீழம் அமைய வேண்டி உயிர்த்தியாகம் செய்தவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தி மாநாடு தொடங்கப்பட்டது. ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன், கவிஞர் காசி ஆனந்தன், தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில துணைச் செயலாளர் வீரபாண்டியன், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன், மனித நேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, எஸ்.டி.பி.ஐ. கட்சித் தலைவர் தெஹலான் பாகவி, மனிதநேய ஜனநாயக கட்சித் தலைவர் தமிமுன் அன்சாரி, இயக்குநர் அமீர், தமிழக மக்கள் முன்னணியின் ஒருங்கிணைப்பாளர் பொழிலன், மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த சமூகச் செயற்பாட்டாளர்களும், சட்டப் பேராசிரியர்களுமான யொரெம்பே முடும் மற்றும் மாலேம் மங்கள் ஆகியோர் கலந்துகொண்டு தமிழீழ விடுதலைப் பற்றி உரையாற்றினார்கள்.

வெல்லும் தமிழீழம் மாநாடு

'தமிழீழம் பற்றிய கனவு ஒரு போதும் ஓயாது' என்பதை அப்பட்டமாகக் காட்டியது இந்த மாநாடு. காலை 9 மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட மாநாடு இரவு 9 மணிக்கு அதாவது 12 மணிநேரத்தில் முடிக்கப்பட வேண்டும். ஆனால், மாநாடு முடிய இரவு 11.30 மணியைத் தாண்டியது. சரியாகச் சொன்னால், 14.30 மணி நேரத்துக்கும் மேலாக இந்த மாநாடு நடைபெற்றது. அரசியல் கட்சிகள் நடத்தும் மாநாடுகளைவிட அதிகமாக, மக்கள் கூட்டம் அலைமோதியது. உண்மையைச் சொன்னால் மாநாடு நடந்த அந்த 14.30 மணி நேரமும் அரங்கத்தினுள் அமர இருக்கைகள் போதவில்லை. அதனால் அரங்கத்துக்கு உள்ளேயும், வெளியேயும் எண்ணற்றவர்கள் நின்றுகொண்டே மாநாட்டு உரைகளைக் கேட்டுக்கொண்டிருந்தனர். தற்போதைய காலகட்டத்தில் இப்படி ஒரு பிரமாண்டமான மாநாட்டை அரசியல் கட்சிகள்கூட நடத்தமுடியாது என்பதுதான் உண்மை.

வெல்லும் தமிழீழம்

தெற்காசியப் பிராந்தியத்தில், இந்தியாவின் விரிவாதிக்கக் கொள்கையும், தமிழீழ விடுதலையின் முக்கியத்துவமும். முற்போக்கு ஜனநாயக அரசியலை வென்றெடுத்த தமிழீழ அரசியல் சாசனம். தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் சமூகநீதியும், தமிழ்நாட்டின் எதிர்வினையும். தமிழீழ விடுதலைக்கான அரசியல் நகர்வுகளும், நம்  உடனடி கடமைகளும் என்பது போன்ற தலைப்புகளில் கருத்துகள் ஆலோசிக்கப்பட்டன. சமூக வலைதளங்களில் போராடுவதை விடுத்து உரிமையைக் காக்க வீதிக்கு வாருங்கள் என்று திருமுருகன் காந்தி மக்களுக்குக் கோரிக்கை விடுத்தார்.

காசி ஆனந்தன்

மாநாட்டில் பேசிய கவிஞர் காசி ஆனந்தன், "தமிழீழத்தை மீட்டெடுக்க வேண்டுமானால், உலகம் முழுவதும் இருக்கும் தமிழ் அமைப்புகள் ஒன்று சேர்ந்து போராட வேண்டும். ஜாதி, மதம் என்பதை மறந்து நாம் அனைவரும் ஒரே இனம் என்ற எண்ணத்தில் போராடினால் மட்டுமே தமிழீழம் சாத்தியமாகும்" என்றார்.

தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் பேசியபோது, "ஈழத்தில் நடந்தது இனப்படுகொலை என்று ஏற்க மறுப்பவர்களும், புலிகளுக்கு ஆதரவு அளிக்காதவர்களும் இந்த தமிழ் மண்ணில் நிலைத்து நிற்க முடியாது. எம்மினம் அழிந்தபோதும், எம்மினத்தை பிற மாநிலக்காரர்கள் தாக்கியபோதும் வாய் திறக்காதவர்கள் எல்லாம் இன்று எம்மினத்தை ஆள நினைக்கிறார்கள். அவர்களுக்கு என்ன தைரியம் இருக்கிறது? தமிழ் மாநில பிரச்னைகளுக்கு வாய் திறக்காதவனெல்லாம் இங்கு சூப்பர் ஸ்டார். வெட்கப்பட்டுக்கொள் தமிழினமே" என்றார்.

வேல்முருகன்

மாநாட்டில் பேசிய திருமுருகன் காந்தி " 'வெல்லும் தமிழீழம்' என்ற இந்த முழக்கத்தைச் சொல்லும்போது இந்திய அரசு அஞ்சுமேயானால், மீண்டும் மீண்டும் சொல்வோம் 'வெல்லும் தமிழீழம்' என்று. இன்னும் எத்தனை காலத்துக்குதான் இனப்படுகொலை நடந்துவிட்டது எனப் பேசப்போகிறோம். வெறும் சமூக வலைதளங்களில் படங்களைப் பகிர்வதோடு நம்முடைய கடமை நின்றுவிடக் கூடாது. அடுத்து என்ன செய்தால் தமிழீழம் மலரும் என்று சிந்தித்து அடுத்தகட்டத்துக்குச் செல்லவேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். எப்படி காஷ்மீர் பிரச்னை இந்தியாவின் விவாதப் பொருளாக மாறியதோ? அதுபோல தமிழீழமும் இந்தியாவின் விவாதப்பொருளாக மாற வேண்டும். அதற்கான முயற்சியை நாம்தான் எடுக்க வேண்டும். இந்தியாவிலுள்ள தேசிய இனத் தலைவர்கள், பல தேசிய இனமக்கள், இந்திய ஊடகம் என அனைத்துத் தரப்பினரும் தமிழீழத்தை விவாதப் பொருளாக எடுக்க வேண்டும். அப்போதுதான் இந்திய மக்களுக்கு இலங்கையில் நடந்த இனப்படுகொலை தெரியும். இந்தியா என்ற ஒரு நாடு இனத்துக்குச் செய்த மிகப்பெரிய துரோகத்தை இந்திய மக்கள் மட்டுமல்ல... தெற்காசிய நாடுகளில் உள்ள அனைத்து மக்களும் தெரிந்துகொள்ள வேண்டும். கடந்த 9 வருடங்களாக தமிழர்கள் குற்ற உணர்ச்சியில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். இந்தியா முழுவதும் தமிழீழத்தை விவாதப்பொருளாக மாற்ற முடியவில்லை. இது நடக்க வேண்டும். அப்போதுதான் இந்தியாவுக்கு எதிராக தமிழினத்துக்கு ஆதரவாகப் பல தேசிய இனங்கள், பல நாடுகள் ஒன்று சேரும். சேனல்- 4 எடுத்த ஆவணப்படத்தைத் தவிர நம்மிடம் என்ன ஆவணம் இருக்கிறது? நம்மிடம் திறமையான கலைஞர்கள் இல்லையா? ஆஸ்கர் வாங்கும் அளவுக்குத் திரைத்துறையில் சாதித்து இருக்கிறோம். ஆனால், நம்மினம் பற்றிய ஒரு ஆவணப்படம் இல்லை. வரலாற்றைத் தெரிந்துகொண்டும் நாம் அதனை ஆவணப்படுத்தவில்லை என்றால், எவனோ ஒருவன் அவன் விருப்பத்துக்குத் தமிழினத்துக்கு தலையங்கம் எழுதிவிடுவான். தமிழகமே எழுச்சி கொள். இல்லையென்றால் இன்று தமிழீழத்துக்கு நடந்தது, நாளை தமிழ் நாட்டுக்கும் நடக்கும்!" என்று முழங்கினார்.

திருமுருகன் காந்தி

பின்னர் பேசிய பழ.நெடுமாறன் "புலிகள் இருந்தவரை இந்துமாக் கடலை எந்த நாட்டாலும் கைப்பற்ற முடியவில்லை. இன்று நிலைமை அப்படியல்ல. இந்துமாக்கடல் சீனாவின் கட்டுக்குள் சென்றுவிட்டது. இந்தியாவில் டெல்லியில் இருக்கும் புத்திசாலிகளே தெரிந்துகொள்ளுங்கள். இந்தியா மிகப்பெரும் ஆபத்தில் இருக்கிறது. பாகிஸ்தான், நேபாளம், வங்காளம், இலங்கை போன்ற நாடுகள் ஏற்கெனவே சீனாவின் ஆதிக்கத்துக்குள் சென்றுவிட்டது. தற்போது இந்தியப் பெருங்கடலும் அவர்களின் ஆதிக்கத்துக்குள் செல்லவிருக்கிறது. இதுமட்டும் நடந்துவிட்டால் இந்தியாவுக்கு மட்டுமல்ல... தெற்காசிய நாடுகளுக்கே மிகப்பெரிய அச்சுறுத்தல். இந்தக் கடல் நம்மிடம் இருக்கும் வரைக்குமே இந்தியாவுக்குப் பாதுகாப்பு. அதற்கு தமிழீழம் அமைய வேண்டும். அப்போதுதான் அது சாத்தியம்." என்றார்.

 

மாநாட்டில் ஆலோசிக்கப்பட்டது போல தமிழீழம் அமையவேண்டுமானால், அதுபற்றிய விவாதம் இந்தியா முழுவதும் நடத்தப்பட வேண்டும். தமிழீழம் அமைவதென்பது இலங்கையில் இருக்கும் தமிழர்களுக்கு மட்டும் நன்மை பயக்காது; ஒட்டுமொத்த இந்தியாவின் நன்மைக்கே அது வழி வகுக்கும் என்பதுதான் நிதர்சனமான உண்மையும் கூட!

https://www.vikatan.com/news/tamilnadu/116903-highlights-of-vellum-thamizheezham-by-may-17-movement.html

Categories: Tamilnadu-news

போரூர் ஹாசினி கொலை வழக்கு: தஷ்வந்துக்கு மரண தண்டனை

Mon, 19/02/2018 - 13:00
போரூர் ஹாசினி கொலை வழக்கு: தஷ்வந்துக்கு மரண தண்டனை

 

 
download%205

குற்றவாளி தஷ்வந்த், தூக்குக்கயிறு   -  கோப்புப் படம்

போரூர் சிறுமி ஹாசினியை பலாத்காரம் செய்து, எரித்துக் கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட தஷ்வந்துக்கு தூக்கு தண்டனை விதித்து செங்கல்பட்டு மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சிறுமி ஹாசினி கொலை வழக்கில் கொடூர குற்றவாளியான தஷ்வந்த் மீதான தீர்ப்பு இன்று வழங்கப்படும் என செங்கல்பட்டு மகிளா நீதிமன்ற நீதிபதி வேல்முருகன் அறிவித்திருந்தார். தீர்ப்பு வெளியாவதை அடுத்து தஷ்வந்தை போலீஸார் பலத்த பாதுகாப்புடன் அழைத்து வந்தனர்.

கடந்த முறை பொதுமக்கள், மாதர் அமைப்பினர் தஷ்வந்தை தாக்கியதால் தீர்ப்பு வெளியாவதை அடுத்து நீதிமன்ற வளாகத்திற்குள் பொதுமக்கள், பத்திரிகையாளர்கள் யாரையும் போலீஸார் அனுமதிக்கவில்லை. இந்நிலையில் காலை 11 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் மதியம் 3 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என தெரிவித்தனர்.

ஹாசினியின் தந்தை உயர்ந்தப்பட்ச தண்டனையாக மரண தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்த நிலையில் 3 மணிக்கு தீர்ப்பை வாசித்த நீதிபதி வேல்முருகன் தனது தீர்ப்பில் தஷ்வந்த் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். அவரை குற்றவாளி என அறிவித்தார்.

பின்னர் தனது தீர்ப்பை வாசித்த நீதிபதி தஷ்வந்துக்கு அதிகபட்ச தண்டனையாக மரண தண்டனை வழங்குவதாக அறிவித்தார்.

முன்னதாக, சென்னையை அடுத்த போரூரில் வசித்த தஷ்வந்த், கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம், 7 வயது சிறுமி ஹாசினியை, கடத்திச் சென்று, பாலியல் பலாத்காரம் செய்து, எரித்துக் கொன்றார். சிறுமி உடலை மறைத்து வைத்துவிட்டு குழந்தையின் பெற்றோருடன் சேர்ந்து தானும் நல்லவன் போல் நடித்து தேடும் பணியில் ஈடுபட்டார்.

பின்னர் கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து அவரது நடத்தையில் சந்தேகமடைந்து போலீஸார் பிடித்து விசாரணை நடத்தியபோது தஷ்வந்த் கொலை செய்ததும், சிறுமி உடலை மறைக்க சாக்குமூட்டையில் கட்டி எடுத்துச்சென்று எரித்ததும் தெரியவந்தது. தஷ்வந்த் தனது கொடூரமான செயலால் இந்தியா முழுதும் பிரபலமானார்.

தஷ்வந்தை கைது செய்த போலீஸார், அவரை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர். ஆனால் 3 மாதங்களுக்குள் போலீஸார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாததால், தஷ்வந்த் மீதான குண்டர் தடுப்பு சட்டத்தை ரத்து செய்த நீதிமன்றம், அவரை ஜாமீனில் விடுவித்தது.

சிறுமியின் கொலைக்குப் பின்னர் அவமானம் அடைந்த தஷ்வந்தின் பெற்றோர் குன்றத்தூருக்கு தங்கள் வீட்டை மாற்றினர். அங்கு வசித்தபோதுதான் தன் தாயாரையே தஷ்வந்த் கொலை செய்தார்.

இந்நிலையில் இன்று ஹாசினி கொலை வழக்கில் மட்டுமே தற்போது தஷ்வந்துக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அவரது தாயை கொலை செய்த வழக்கில் விசாரணை நடைபெற்று வருவதால் அதன் தீர்ப்பு விசாரணை முடிந்து தனியாக வரும்

Categories: Tamilnadu-news

அதிமுக அரசை வீழ்த்த தயாராகிவிட்டதா பாஜக?- எதிர்க்கும் ஓபிஎஸ்.. வலுக்கும் மோதல்

Mon, 19/02/2018 - 08:56
அதிமுக அரசை வீழ்த்த தயாராகிவிட்டதா பாஜக?- எதிர்க்கும் ஓபிஎஸ்.. வலுக்கும் மோதல்

 

 
admkoffice

அதிமுக தலைமை அலுவலகம் | கோப்புப் படம்

அதிமுக அரசை வீழ்த்த பாஜக தயாராகிவிட்டதை தெரிந்து கொண்டுதான் அக்கட்சிக்கு எதிராக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசி வருவதாக கூறப்படுகிறது.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவிலும் ஆட்சி நிர்வாகத்திலும் பல மாற்றங்கள் நடந்து வருகின்றன. தலைமைச் செயலகத்தில் வருமானவரித் துறை சோதனை, சசிகலாவுக்கு எதிராக ஓபிஎஸ் போர்க்கொடி, இரட்டை இலை சின்னம் முடக்கம், தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக டிடிவி தினகரன் கைது, அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை, ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து, அதிமுக அணிகள் இணைப்பு, ஓபிஎஸ் துணை முதல்வரானது, முதல்வர் பழனிசாமி- ஓபிஎஸ் அணிக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கீடு என அடுத்தடுத்து நடந்துவரும் மாற்றங்களுக்கு பாஜகவே காரணம் என டிடிவி தினகரனும், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் குற்றம்சாட்டின.

 

கடந்த டிசம்பர் 21-ம் தேதி நடைபெற்ற ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்தது. சுயேச்சையாகப் போட்டியிட்ட தினகரன் அமோக வெற்றி பெற்றார். அதன்பிறகு பிரதமர் மோடிக்கு நெருக்கமான பத்திரிகையாளர் எஸ்.குருமூர்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘முதல்வர் பழனிசாமியும், ஓபிஎஸ்ஸும் பலவீனமான தலைவர்கள். தங்கள் தலைவரின் பாதத்தை எப்படி தொட்டு வணங்குவது என்பதையும், அவர்களுக்காக எப்படி லஞ் சம் வசூலிப்பது என்பதையும் மட்டுமே இதுவரை அவர்கள் தெரிந்து வைத்திருந்தார்கள்’ என விமர்சனம் செய்தார். இதற்கு அமைச்சர் டி.ஜெயக்குமார் கடும் கண்டனம் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து பாஜக - அதிமுக உறவில் உரசல் ஏற்படத் தொடங்கியது.

அதிமுக அணிகள் இணைந்து 6 மாதங்கள் கடந்துள்ள நிலையில் விரிசல் பெரிதாகி மோதல் வெடிக்கத் தொடங்கியுள்ளது. கடந்த ஜனவரி 18-ம் தேதி பட்ஜெட் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக டெல்லி சென்ற ஓபிஎஸ், பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், எவ்வளவு முயன்றும் அவரால் மோடியை சந்திக்க முடியவில்லை. அணிகள் இணைப்புக்கு முன்பாக 5 முறை மோடியை ஓபிஎஸ் சந்தித்துப் பேசியது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தின் ஆளுநராகப் பதவியேற்ற பன்வாரிலால் புரோஹித் அரசுக்கு ஒத்துழைக்காமல் தன்னிச்சையாக செயல்பட்டு வருவதும் முதல்வர் பழனிசாமி, ஓபிஎஸ் இருவருக்கும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனாலும், இருவரும் எதையும் வெளிப்படையாகப் பேசாமல் அமைதியாக இருந்து வந்தனர்.

கடந்த 14-ம் தேதி கோவையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், ‘‘தமிழகம் அமைதிப்பூங்காவாக இல்லை. பயங்கரவாதிகளின் பயிற்சிக் களமாக மாறிவிட்டது’ என குற்றம்சாட்டினார். இதை மறுத்த ஓபிஎஸ், ‘‘பொன்.ராதாகிருஷ்ணன் கூறுவது ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்’’ என ஆவேசமாக பதிலளித்தார். கடந்த 16-ம் தேதி தேனியில் நடந்த அதிமுக செயல் வீரர்கள் கூட்டத்தில் பேசிய ஓபிஎஸ், ‘‘பிரதமர் மோடி கேட்டுக் கொண்டதாலேயே முதல்வர் பழனிசாமியுடன் இணைந்தேன். துணை முதல்வர் பதவியையும் ஏற்றுக்கொண்டேன்’’ என தெரி வித்திருந்தார்.

அதிமுகவில் நடக்கும் அனைத்து நிகழ்வுகளுக்கும் பிரதமர் மோடிதான் காரணம் என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இதை உறுதிப்படுத்தி ஓபிஎஸ் பேசியது அதிமுக, பாஜக கட்சியினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியது. கட்சியில் மோடியின் தலையீடு இருந்தது என்பதை வெளிப்படுத்தவே ஓபிஎஸ் அவ்வாறு பேசியதாக கூறப்படுகிறது. இதன்மூலம் பாஜக - ஓபிஎஸ் மோதல் பகிரங்கமாகியுள்ளது.

தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது தொடர்பான வழக்கில் விரைவில் தீர்ப்பு வரவுள்ளது. அதிமுக அரசு மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளும் வரத் தொடங்கியுள்ளன. எனவே, அதிமுக ஆட்சியை வீழ்த்த பாஜக தயாராகி விட்டதாகவும், இதை தெரிந்துகொண்டதாலேயே பாஜகவை விமர்சித்து ஓபிஎஸ் பேசத் தொடங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. பாஜக - ஓபிஎஸ் மோதல் தமிழக அரசியலில் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

http://tamil.thehindu.com/tamilnadu/article22794328.ece?homepage=true

Categories: Tamilnadu-news

அழிவை நோக்கி 40-க்கும் அதிகமான மொழிகள்: தமிழகத்திலும் 2 வட்டார மொழிகள் உள்ளன

Mon, 19/02/2018 - 08:46
அழிவை நோக்கி 40-க்கும் அதிகமான மொழிகள்: தமிழகத்திலும் 2 வட்டார மொழிகள் உள்ளன

 

 
language-dialect-newjpg

கோப்புப் படம்

நாட்டில் வட்டாரங்களில் பேசப்பட்டுவரும் 40-க்கும் மேற்பட்ட மொழிகள் அழிவை நோக்கி இருக்கின்றன என்று மத்திய புள்ளியியல் துறை தெரிவிக்கிறது. இந்த மொழிகள் குறிப்பிட்ட சில ஆயிரம் மக்களால் மட்டுமே பேசப்பட்டு வருகிறது

இது குறித்து மத்திய புள்ளியியல் துறை இயக்குநரகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:

நாட்டில் மொத்தம் 22 பட்டியலிடப்பட்ட மொழிகளும், பட்டியலிடப்படாமல் 100 மொழிகளும் உள்ளன. இந்த 100-க்கும் மேற்பட்ட மொழிகளை ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பேசி வருகின்றனர்.

இதில் 10 ஆயிரத்துக்கும் குறைவான மக்கள் மட்டும் 42 மொழிகளைப் பேசி வருகின்றனர். இந்த மொழிகள்தான் அழிவின் தருவாயிலும், அழிவை நோக்கியும் இருக்கிறது. சமீபத்தில் யுனெஸ்கோ அமைப்பு, அழியும் தருவாயில் இருக்கும் 42 மொழிகளை பட்டியலிட்டு அறிவித்துள்ளது.

அதில் அந்தமான் நிகோபர் தீவுகளில் மக்களால் பேசப்பட்டுவரும் 11 மொழிகள் அழிவின் தருவாயில் இருக்கின்றன. குறிப்பாக கிரேட் அந்தமானீஸ், ஜார்வா, லமோங்கிஸ், லூரோ, மோட், ஓங்கே, பு, சனேன்யு, சென்டிலிஸ், சோம்பென், தகாகன்லிலாங் ஆகியசமூகத்தினர் பேசும் மொழிகள் அழிவை நோக்கி இருக்கின்றன.

ஓடிசா மாநிலத்தில் மண்டா, பர்ஜி, பெங்கோ மொழிகள், கர்நாட மாநிலத்தில் கொராகா, குருபா மொழிகள், ஆந்திர பிரதேசத்தில் கடபா, நைக்கி, தமிழகத்தில் நீலகிரி மாவட்டத்தில் பழங்குடியின மக்களால் பேசப்பட்டுவரும் கோட்டா, தோடா மொழிகள் அழிவின் பிடியில் இருக்கின்றன. இவை சில ஆயிரம் மக்களால் மட்டுமே பேச்சு வழக்கில் இருந்துவருகிறது. எழுத்து வடிவம் இல்லை.

அருணாச்சலப்பிரதேசத்தில் மிரா, நா மொழிகள், அசாமில் தாய் நோரா, தாய் ராங், உத்தரகாண்டில் பங்கானி, ஜார்கண்டில் பிர்ஹோர், மஹாராஷ்டிராவில் நிஹாலி, மேகாலயாவில் ருகா மொழி, மேற்கு வங்காளத்தில் டோடோ மொழி ஆகியவை, அழிவின் அபாயத்தில் இருக்கின்றன.

மைசூரு நகரில் உள்ள இந்திய மொழிகளுக்கான மையம், 10 ஆயிரம் மக்களுக்கு குறைவாக பேசும் அழிவின் பிடியில் இருக்கும் இந்த மொழிகளை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகளையும், சிறப்புத் திட்டங்களையும் வகுத்துவருகிறது. இந்த மொழிகளை காக்க, எழுத்துவடிவில் கொண்டுவருதல், பாடல்களை சேகரித்தல், அகராதிகள் வெளியிடுதல் உள்ளிட்ட பலபணிகளை செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

http://tamil.thehindu.com/india/article22795608.ece?homepage=true

Categories: Tamilnadu-news

அரசியல் ஒரு சாக்கடை.. இதில் யார் வந்தால் என்ன?- அழகிரி கருத்து

Mon, 19/02/2018 - 06:04
அரசியல் ஒரு சாக்கடை.. இதில் யார் வந்தால் என்ன?- அழகிரி கருத்து

 

 
alagirijpg

திருமண விழாவில் அழகிரி

அரசியல் ஒரு சாக்கடை.. இதில் யார் வந்தால் என்னவென்று திமுக தலைவர் கருணாநிதியின் மகன் மு.க.அழகிரி கூறியுள்ளார்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அடுத்த தாயில்பட்டியில் திமுக பிரமுகர் இல்லத் திருமண விழாவில் அழகிரி இன்று (திங்கள்கிழமை) கலந்து கொண்டார்.

விழாவில் கலந்துகொண்டுவிட்டு அவர் காரில் ஏற முற்பட்டபோது செய்தியாளர்கள் அவரிடம் திமுக செயல்தலைவர் ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின் அரசியல் பிரவேசம் குறித்து கேள்வி எழுபினர்.

அதற்கு அழகிரி, "அரசியல் ஒரு சாக்கடை.. இதில் யார் வந்தால் என்ன" எனக் கூறினார். மேலும், சில கேள்விகளை செய்தியாளர்கள் முன்வைக்க அவற்றைப் புறக்கணித்துவிட்டு காரில் ஏறிச் சென்றுவிட்டார்.

திமுக செயல்தலைவர் ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின் கட்சியில் அண்மைக்காலமாக முன்னிலைப்படுத்தப்பட்டு வருகிறார். அண்மையில், நடந்த ஆர்ப்பாட்டம் ஒன்றில் கலந்து கொண்ட உதயநிதி "இனி என்னை அடிக்கடி பொது மேடைகளில் பார்க்கலாம்" என்று கூறினார்.

உதயநிதி ஸ்டாலினின் திடீர் அரசியல் பிரவேசம் கட்சியின் மூத்த நிர்வாகிகள் மத்தியில்கூட அதிருப்தியை ஏற்படுத்தியிருப்பதாக சலசலக்கப்படும் நிலையில் அழகிரியின் இந்தக் கருத்து முக்கியத்துவம் வாய்ந்ததாகவே கருதப்படுகிறது.

http://tamil.thehindu.com/tamilnadu/article22794784.ece?homepage=true

Categories: Tamilnadu-news

ஏரியில் மிதந்து வந்த 7 உடல்களால் பரபரப்பு !!!

Mon, 19/02/2018 - 06:02
ஏரியில் மிதந்து வந்த 7 உடல்களால் பரபரப்பு !!!

 

 

இந்தியா - திருப்பதி அருகே ஏரியில் 7 உடல்கள் நேற்று மிதந்து வந்ததைத் தொடர்ந்து உடல்களை மீட்ட பொலிஸார் தீவிர விசாரணைகளை நடாத்தி வருகின்றனர்.

இந்தியா - ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் ஒண்டிமிட்டா என்ற இடம் திருப்பதி மலைப்பகுதியையொட்டி உள்ளது. இங்குள்ள மலை அடிவாரத்தில் மிகப்பெரிய ஏரி உள்ளது.

நேற்று இந்த ஏரி வழியாக சென்றவர்கள் ஏரிக்குள் 7 உடல்கள் மிதப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

தகவலறிந்த  ஒண்டிமிட்டா பொலிஸாரும், தீயணைப்புத்துறையினரும் அந்த ஏரிக்கு விரைந்து சென்று ஏரியில் மிதந்து வந்த சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அருகிலுள்ள வைத்திய சாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

7_dead_bodys_found.jpg

சடலங்களாக மிதந்தவர்கள் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்கள்? என்ற விவரம் இது வரை கண்டறியப்படவில்லை

குறித்த  மலைப்பகுதியில் செம்மரங்கள் அதிகமாக உள்ளன. செம்மரங்கள் வெட்டப்படுவதை தடுக்க வனத்துறையினரின் ரோந்துப் பணிகள் தீவிரமாக உள்ளது. எனவே இரவு நேரத்தில் செம்மரக்கட்டைகளை கடத்த வந்த  கடத்தல் கும்பல் அங்கு வந்த வனத்துறையினரிடம் இருந்து தப்பிக்க முயன்று ஓடியபோது ஏரியில் விழுந்து இறந்திருக்கலாம் என வனத்துறையினர் கருத்து வெளியிட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

செம்மரக்கட்டை கடத்தும் கும்பலில் தமிழகத்தை சேர்ந்தவர்களே அதிகம் உள்ளனர். எனவே உயிரிழந்தவர்கள் தமிழ்நாட்டை சேர்ந்தவர்களாக இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

http://www.virakesari.lk/article/30777

      ஆந்திர ஏரியில் 5 தமிழர் சடலங்கள் மீட்பு: தொலைபேசி எண்கள் அறிவிப்பு

 

 
aplake

ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டத்தில் உள்ள ராமர் கோயில் ஏரியில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களாகக் கருதப்படும் 5 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டன. அவர்கள் குறித்த விவரம் அறிய ஆந்திர போலீஸார் தொலைபேசி எண்களை அறிவித்துள்ளனர்.

ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் ஒண்டிமிட்டாவில் பழைமையான ராமர் கோயில் உள்ளது. ஆந்திர அரசுக்கு சொந்தமான இந்த கோயில் சமீபத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்திடம் ஒப்படைக்கப்பட்டது. 

இதனை தற்போது திருமலை திருப்பதி தேவஸ்தானம் பராமரித்து வருகிறது. கோயிலுக்கு எதிரில் வனப் பகுதியை ஒட்டிய இடத்தில் பெரிய ஏரி உள்ளது. 

இந்நிலையில், இந்த ஏரியில் 5 பேரின் சடலங்கள் ஞாயிற்றுக்கிழமை காலை மிதிப்பதை கண்ட பொது மக்கள் அதுகுறித்து கடப்பா போலீஸாருக்கு தகவல் அளித்தனர். 

சம்பவ இடத்துக்கு சென்ற போலீஸார் சடலங்களை கைபற்றி பிரேதப் பரிசோதனைக்காக கடப்பா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஏரியில் மேலும் சடலங்கள் உள்ளதா என நீச்சல் வீரர்களின் உதவியுடன் அவற்றை தேடும் பணியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர். 

அந்த ஏரியின் கரையில் கிடந்த துணிப்பை ஒன்றில் சேலம் என குறிப்பிடப்பட்டிருந்தது. எனவே இவர்கள் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

சனிக்கிழமை இரவு வனப்பகுதியில் செம்மரம் வெட்ட சிலர் சென்றனர் என்றும் அவர்களைப் பிடிக்க போலீஸார் விரட்டி சென்றபோது தப்புவதற்காக ஏரியில் குதித்திருக்கலாம் என்றும் நீச்சல் தெரியாமல் அவர்கள் நீரில் மூழ்கி அவர்கள் இறந்திருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். 

மேலும் செம்மரம் வெட்டச் சென்றவர்களை பிடித்த ஆந்திர போலீஸார் விசாரணை என்ற பெயரில் அடித்து துன்புறுத்தியதில் அவர்கள் இறந்திருக்கலாம் என்றும், இதனை மறைக்க சடலங்களை போலீஸார் ஏரியில் வீசினார்களா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. 

இறந்தவர்கள் யார், யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்கள் என்பது குறித்த விவரங்கள் உடனடியாகத் தெரியவில்லை.

இந்நிலையில், கடப்பா ஒண்டிமிட்டா ஏரியில் சடலமாக மீட்கப்பட்ட 5 தமிழர்கள் குறித்த விவரம் அறிய, ஆந்திர போலீஸார் 9121100565, 9121100581, 9121100582 என்ற தொலைபேசி எண்களை அறிவித்துள்ளனர். 

http://www.dinamani.com/latest-news/2018/feb/19/ஆந்திர-ஏரியில்-5-தமிழர்-சடலங்கள்-மீட்பு-தொலைபேசி-எண்கள்-அறிவிப்பு-2866327.html

Categories: Tamilnadu-news