தமிழகச் செய்திகள்

கலைஞர் நூற்றாண்டு விழா

2 months 3 weeks ago
கலைஞர் 100 விழாவில் ரஜினிகாந்த் கமல்ஹாசனை சீண்டினாரா? என்ன நடந்தது?
கலைஞர் 100 விழாவில் ரஜினிகாந்த் கமல்ஹாசனை சீண்டினாரா? என்ன நடந்தது?

பட மூலாதாரம்,DIPR

கட்டுரை தகவல்
  • எழுதியவர், சுபாஷ் சந்திர போஸ்
  • பதவி, பிபிசி தமிழ்
  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் தலைமையில் தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம், தென்னிந்திய நடிகர்கள் சங்கம், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை, தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் உட்பட 12 திரைப்பட அமைப்புகள் இணைந்து 'கலைஞர் 100' என்ற பெயரில் முன்னாள் முதல்வர் மு. கருணாநிதிக்கு நூற்றாண்டு விழாவை சென்னை கிண்டி ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நடத்தி முடித்துள்ளனர்.

இந்த நிகழ்வில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

மேலும், திரை பிரபலங்களான ரஜினி, கமல், சிவராஜ்குமார், சிவகுமார், கார்த்தி, சூர்யா, தனுஷ், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், ரோஹினி, பார்த்திபன், ஆர்.ஜே.பாலாஜி, கௌதமி, வடிவேலு, சோனியா அகர்வால், ராய் லட்சுமி, லட்சுமி மேனன், சாயிஷா, அதிதி சங்கர், இயக்குநர்கள் டி.ராஜேந்திரன், ஷங்கர், பா.ரஞ்சித், வெற்றிமாறன், லோகேஷ் கனகராஜ், தங்கர் பச்சான் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர். மேலும் இதில் ஆந்திர அமைச்சரும் முன்னாள் நடிகையுமான ரோஜாவும் கலந்து கொண்டார்.

சுமார் 4.30 மணியளவில் நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளோடு துவங்கிய கலை விழாவில் 100 குழந்தைகள் தமிழ்த்தாய் வாழ்த்து பாடிய நிகழ்வு நடைபெற்றது. பிறகு வேல்முருகன், ராஜலக்ஷ்மி, செந்தில், டிரம்ஸ் சிவமணி, லிடியன் நாதஸ்வரம் உள்ளிட்டோரின் இசை நிகழ்வுகள் நடைபெற்றது.

மேலும், இடையிடையே முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்த ஆவணப் படங்கள் மற்றும் கே.எஸ் ரவிக்குமார் இயக்கிய நாடகம் போடப்பட்டது. இந்நிகழ்விற்கு வந்திருந்த பல உச்ச நட்சத்திரங்களும் முன்னாள் முதல்வர் கருணாநிதியுடனான தங்களது அனுபங்கள் குறித்தும் பல்வேறு நிகழ்வுகளைப் பகிர்ந்து கொண்டனர்.

 
சூர்யா மற்றும் தனுஷ்
கலைஞர் நூற்றாண்டு விழாவில் தனுஷ்

பட மூலாதாரம்,LAVANA NARAYAN

இந்த விழாவில் முதலில் பேசிய நடிகர் சூர்யா, "சினிமா மூலம் சமூகத்தில் மாற்றம் கொண்டு வர முடியும் என்ற டிரெண்டை உருவாக்கியது கலைஞர்தான். அவர் ஒரு ட்ரெண்ட் செட்டர்," என்று பேசினார்.

“கடந்த 1952ஆம் ஆண்டு பராசக்தி படத்தில் கைரிச்ஷாவை ஒழிக்க வேண்டும் என்ற வசனம் எழுதியிருப்பார். அதை அப்படியே 17 ஆண்டுகள் கழித்து ஆட்சிக்கு வந்து உண்மையாக்கிக் காட்டினார் அவர்,” என்று முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சாதனைகள் குறித்து பாராட்டிப் பேசினார் நடிகர் சூர்யா.

அதைத் தொடர்ந்து பேசிய நடிகர் தனுஷ், "கலைஞர் ஐயாவின் அரசியல் அல்லது திரை வாழ்வு குறித்துப் பேச எனக்கு வயதோ அனுபவமோ இல்லை," என்று தொடங்கி முன்னாள் முதல்வர் கருணாநிதியுடனான தனது தனிப்பட்ட அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.

முதன்முதலில் ஒரு பட பூஜைக்காக முன்னாள் முதல்வர் கருணாநிதியை வரவேற்கச் சென்றிருந்தபோது “வாங்க மன்மத ராஜா” என்று அவரை வரவேற்று, வரவேற்பிதழைப் பார்த்துவிட்டு மொத்த கதையையும் சொல்லிவிட்டதாகக் கூறினார் தனுஷ்.

மேலும் எந்திரன் படத்தை அவரோடு அமர்ந்து பார்த்த அனுபவத்தைப் பகிர்ந்து, "அவர் ஒரு மாபெரும் கலைஞர் மட்டுமல்ல, சிறந்த ரசிகரும் கூட' , ஒரு சிலர் மறைந்துவிட்டாலும், அவர்கள் நம்மோடு இருப்பது போலவே இருக்கும், எனக்கு கலைஞரும் அப்படித்தான்," என்று தெரிவித்தார்.

மேலும், முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்துப் பேசிய அவர், இத்தகைய எளிய அணுகத்தக்க முதல்வர் கிடைத்ததில் மகிழ்ச்சி என்று கூறினார்.

 
தொகுப்பாளராக மாறிய கமல்ஹாசன்
கலைஞர் நூற்றாண்டு விழாவில் கமல் மற்றும் உதயநிதி ஸ்டாலின்

பட மூலாதாரம்,LAVANA NARAYAN

"உயிரே உறவே , தமிழே வணக்கம்" என்று தனது உரையைத் தொடங்கிய நடிகர் கமலஹாசன் மேடையில் ஓரமாக அமைக்கப்பட்டிருந்த தொகுப்பாளர் பகுதியில் சென்று பேசத் தொடங்கினார். அதற்குக் காரணமாக, "கலைஞரின் மேடைகளில் எப்போதும் நான் ஓரமாகவே நிற்பேன்," என்று கூறினார்.

முதலில் விஜயகாந்த் இறுதி நிகழ்வை நல்ல முறையில் நடத்திக் கொடுத்த தமிழக முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தார். பின்னர் “கலைஞரும் தமிழும், கலைஞரும் சினிமாவும், கலைஞரும் அரசியலும் பிரிக்க முடியாதவை" என்று பேசிய அவர் தன்னுடைய தமிழ் ஆசான்களில் முதன்மையானவர் "கலைஞர், அடுத்து சிவாஜி, எம்.ஜி.ஆர்,” என்று தெரிவித்தார்.

"பாடல்களின் பிடியில் சிக்கியிருந்த தமிழ் சினிமாவை வசனம் நோக்கித் திருப்பியவர் கலைஞர்தான்," என மேடையில் பதிவு செய்தார் கமலஹாசன்.

“எம்ஜிஆர், சிவாஜி ஆகிய ஆளுமைகளைத் தன்னுடைய எழுத்தால் உச்ச நட்சத்திரமாக்கியவர் அவர்” என்று கூறிய கமல்ஹாசன், "அவர் தமிழ் சினிமாவிற்கு மட்டும் சொந்தமில்லை என்பதற்கு உதாரணம் அமெரிக்க இயக்குநரான எல்லீஸ் ஆர். டங்கனுக்கு மிகவும் பிடித்தமானவர் கலைஞர் என்பதே," என்று தெரிவித்தார்.

"நேருவின் மகளே வருக துணிச்சலான ஆட்சி தருக” எனத் துணிச்சலாகச் சொல்லும் ஒரு தைரியமான தலைவர் அவராக மட்டுமே இருந்திருக்க முடியும் என்று கூறினார் நடிகர் கமல்ஹாசன்.

மேலும் அவருக்கும் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கும் உள்ள தனிப்பட்ட உறவு குறித்துப் பேசிய கமலஹாசன், “அவரைப் பார்க்கப் போனால் யாராவது இருந்தால் வாயா கமல் என்பார், தனியாகச் சென்றால் வா என்று அழைப்பார்,” அந்தளவு நெருக்கமானவர் எனக் கூறினார்.

"கலைஞர் எனக்கு அன்பாகச் சூட்டிய 'கலைஞானி' என்ற பட்டம் இன்னமும் என்னைத் தொடர்கிறது. தமிழ் சினிமாவில் நீள அகலம் எதுவானாலும், மக்களுடன் பேசும் ஒரு வாய்ப்பை அவர் விட்டதே இல்லை. இது அவரிடம் இருந்து நான் கற்ற பாடம். அதனால்தான், பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்களிடம் நான் பேசி கொண்டிருக்கிறேன்," என்று தெரிவித்தார் கமல்ஹாசன்.

 
ரஜினிகாந்த் கமல்ஹாசனை சீண்டினாரா?

கலைஞரின் பேச்சாற்றல் குறித்துப் பேசிய ரஜினிகாந்த், "சில பேர் பேசுவார்கள், அவர்களுடைய மொழி திறமை, பேச்சாற்றல், அவர்களுடைய அறிவு ஆகியவற்றைக் காட்டுவதற்காகவே பேசுவது போல் இருக்கும்.

அவர்கள் பேசத் தொடங்கினால் எப்போது முடிப்பார்கள் எனத் தோன்றும் (இந்த வசனத்தை ரஜினி மேடையில் பேசும்போதே கீழே இருந்த ரசிகர்கள் கமல்ஹாசனைதான் சொல்கிறார் என்று சிரிக்க சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது).

இதுவே, சிலர் பேசத் தொடங்கினால் ஐய்யோ இவர்கள் முடிக்கக் கூடாதே எனத் தோன்றும். கலைஞரின் பேச்சு அப்படி இருக்கும். அவரின் பேச்சில் தெனாலிராமனின் நகைச்சுவை இருக்கும், சாணக்கியரின் ராஜதந்திரம் இருக்கும், பாரதியாரின் கோபம் இருக்கும்.

பாமரர்கள் இருக்கும் சபையில் பாமரனுக்கே பாமரனைப் போல் பேசுவார். அறிஞர்கள் இருக்கும் சபையில் அறிஞர்களுக்கே அறிஞராகப் பேசுவார். கவிஞர்கள் இருக்கும் அவையில் கவிஞர்களுக்கே கவிஞராகப் பேசுவார்" என்று கூறினார் ரஜினிகாந்த்.

‘கலைஞர் எளிமையானவர்’
கலைஞர் நூற்றாண்டு விழா

பட மூலாதாரம்,LAVANA NARAYAN

அடுத்ததாக மேடையில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், “மு.க.ஸ்டாலினை எனக்கு 1974இல் இருந்தே தெரியும். அப்போதே ராயப்பேட்டை வீதிகளில் பொதுக் கூட்டங்களில் அவர் பேசுவதை இரவு முழுவதும் கேட்டிருக்கிறேன். அப்போது இருந்த அதே பேச்சு இப்போதும் அவரிடம் இருக்கிறது. கடினமாக உழைத்து தற்போது முதல்வராகியுள்ளார்," எனத் தெரிவித்தார்.

எஸ்.பி.முத்துரமான எப்போது முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்தே பேசிக்கொண்டிருப்பார் எனத் தெரிவித்த ரஜினிகாந்த், "அதன் மூலமாகத்தான் அவரை அதிகம் தெரிந்துகோள்ள முடிந்தது" எனவும் கூறினார்.

"கடந்த 1955இல் மலைக்கள்ளன் படத்திற்கு வசனம் எழுதிய பணத்தில் வாங்கிய வீடுதான் கோபாலபுரம் வீடு. அதில்தான் அவர் கடைசி வரை வாழ்ந்தார். அந்த வீட்டில் எதையுமே மாற்றவில்லை. மிகவும் எளிமையாக ஆடம்பரமே இல்லாது வாழ்ந்தார்," என்று குறிப்பிட்டார்.

இதுமட்டுமின்றி, கருணாநிதி மட்டும் சினிமா துறையிலேயே இருந்திருந்தால் இன்னும் எத்தனையோ எம்.ஜி.ஆர், சிவாஜிகளை உருவாக்கியிருப்பார் என்றும் ஆனால் அவரை அரசியல் எடுத்துக்கொண்டது என்றும் வியந்தார் ரஜினிகாந்த்.

கருணாநிதியின் திறமை குறித்து வியந்து பேசிய ரஜினிகாந்த்
கலைஞர் நூற்றாண்டு விழாவில் நயன்தாரா

பட மூலாதாரம்,LAVANA NARAYAN

எப்போதும் ஒருவருக்கு எழுத்தாற்றல் இருந்தால் பேச்சாற்றல் இருக்காது. ஆனால், கருணாநிதிக்கு இரண்டுமே கைகூடியிருந்தது என்று ரஜினிகாந்த் குறிப்பிட்டார்.

"எழுத்து இல்லை என்று சொன்னால் மதங்கள், புராணங்கள், சரித்திரம், வரலாறு, அறிவியல், விஞ்ஞானம், வர்த்தகம், கதை, கவிதை, அரசாணை, அரசன் எதுவுமே இல்லை.

எழுத்து, ஓர் இயற்கை சக்தி, அது கலைஞருக்குக் கைகூடி இருந்தது. அவருடைய சில கடிதங்களைப் படித்தால் இன்னமும் கண்ணில் கண்ணீர் வரும்," என்று தெரிவித்தார் ரஜினிகாந்த்.

 
கலைஞர் நூற்றாண்டு விழா

பட மூலாதாரம்,LAVANA NARAYAN

கருணாநிதி - ரஜினிகாந்த் சந்திப்பு
கலைஞர் நூற்றாண்டு விழாவில் ரஜினி மற்றும் முதல்வர் முக ஸ்டாலின்

பட மூலாதாரம்,TNDIPR

முதல் முறையாக நேரடியாக முன்னாள் முதல்வரைச் சந்தித்த தருணம் மறக்கவே முடியாதது என்று குறிப்பிட்ட ரஜினிகாந்த் அந்த சந்திப்பு குறித்துப் பகிர்ந்து கொண்டார்.

“என் இத்தாலியன் பியட் காரை எடுத்துக்கொண்டு ஸ்டெல்லா மேரீஸ் காலேஜ் விடும் நேரடத்தில் கையில் சிகரெட்டை பிடித்தவாறு நின்றுகொண்டிருந்தேன். அப்போது பின்னாடி திடீரென சில கார்கள் வந்தன. நான் வழி விட்டேன். திடீரென அதில் ஒரு கார் மெதுவாக என் பக்கத்தில் வந்தது. அதன் கண்ணாடி இறங்கியது. யார் எனப் பார்த்தால் உள்ளே கலைஞர் இருந்தார். சிகரெட்டை தூக்கிப் போட்டுவிட்டு பார்த்தால், அவர் கையை அசைத்தவாறு புன்னகைத்தார். அது இன்னும் ஞாபகம் இருக்கு.”

“"அடுத்ததாக, நான் நடித்த ஒரு படத்தின் தயாரிப்பாளர் கலைஞரின் தீவிர ரசிகன். நல்ல நண்பரும்கூட. அவர் ஒருநாள் என்னிடம், நமது படம் சூப்பர் ஹிட் ஆகப் போகிறது. கலைஞர் வசனம் எழுதுகிறார் எனக் கூறினார். ஆனால், ஏதோ ஒரு மாதிரியாகத் தமிழ் பேசிக்கொண்டிருக்கிறேன். கலைஞருடைய வசனங்கள் கடினமாக இருக்குமே என அஞ்சினேன்.

பின்னர் இருவரும் கோபாலபுரம் சென்று கலைஞரைப் பார்த்தோம். நானே அவரிடம், 'உங்கள் வசனத்தை என்னால் பேச முடியாது. கொஞ்சம் கடினமாக இருக்கும்' என்று கூறினேன். அதற்கு அவர் முதலில் எனக்கு ஏற்றவாறு எழுதிக்கலாம் எனச் சொன்னாலும் நான் அடம் பிடித்த காரணத்தால் தயாரிப்பாளரைக் கூப்பிட்டு படப்பிடிப்பு தேதியைக் குறிப்பிட்டு, அதற்குள் தர முடியாது என்பதால் வேறு ஒருவரை வைத்து எழுதிக்கொள்ளுமாறு சொல்லிவிட்டார். அப்படிச் சொல்லிவிட்டு என்னைப் பார்த்துப் புன்னகைத்தார் கலைஞர்," என்று தன்னுடைய அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார் ரஜினிகாந்த்.

மேலும் பேசிய அவர், “மேலும் பேசிய அவர், "வழக்கமாக கலைஞர் ஒரு நடிகருடன் படம் பார்ப்பார். அது தேர்தல் நேரம். அப்போது அந்த நடிகர் ஓட்டு போட்டுவிட்டு வெளியே வந்தபோது செய்தியாளர்கள் அவரை யாருக்கு ஓட்டு போட்டீர்கள் எனக் கேட்க அவர் இரட்டை இலை எனச் சொல்லிவிட்டார். அது டிரெண்டானது.

அன்று மாலை படம்‌ பார்க்கப் போக வேண்டும். ஆனால் எப்படிப் போவது என்று தெரியாமல் குளிர்க் காய்ச்சல் என்று கூறிவிட்டார் அந்த நடிகர். ஆனால் அவர் எப்படியாவது வர வேண்டும் என்று கலைஞர் கூறிவிட்டார். அதற்குப் பிறகு அந்த தியேட்டருக்கு சென்றபோது 'வாங்க காய்ச்சல் என்று சொன்னீர்களாமே, வாங்க வந்து சூரியன் பக்கத்துல உக்காருங்க' என்று கூறினார் கலைஞர். அந்த நடிகர் நான்தான்,” என்று கூட்டத்தில் போட்டு உடைத்தார் ரஜினிகாந்த்.

இப்படி முன்னாள் முதல்வர் கருணாநிதியுடனான தனது நினைவுகளைப் பகிர்ந்து கொண்ட ரஜினிகாந்த் பிறகு முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தினருடன் சேர்ந்து 'கலைஞர் சிறப்புக் கலை மலரை' வெளியிட்டார். இதை தயாரிப்பாளர் சுபாஷ்கரன் மற்றும் கன்னட நடிகர் சிவ்ராஜ்குமார் பெற்றுக்கொண்டனர்.

 
நன்றியுரை கூறிய முதலமைச்சர்
கலைஞர் நூற்றாண்டு விழாவில் முதல்வர் முக ஸ்டாலின்

பட மூலாதாரம்,DIPR

பிரபலங்கள் உரைக்குப் பின்னால் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், நான் உரையாற்ற வரவில்லை, நன்றி கூற வந்திருக்கிறேன் என்றார்.

மு.க.ஸ்டாலின் அனைவருக்கும் நன்றி என்று கூறி தனது உரையைத் தொடங்கினார். இங்கு முதல்வர் அல்லது திமுக தலைவராக அல்ல, கலைஞரின் மகனாக நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர் திரைத் துறையினருக்கு சிறப்பு அறிவிப்புகளையும் வெளியிட்டார்.

அதில், நான்கு படப்பிடிப்பு தளங்களோடு எம்ஜிஆர் ஃபிலிம் சிட்டி 25 கோடி செலவில் அமைக்கப்படும் என்று தெரிவித்த அவர், மேலும் பூந்தமல்லியில் 140 ஏக்கர் பரப்பளவில் 500 கோடி செலவில் திரைப்பட நகரம் அமைக்கப்பட உள்ளதாக அறிவித்தார்.

அதில் எல்இடி வால், அனிமேஷன், விஎப்எக்ஸ், போஸ்ட் மற்றும் ப்ரீ ப்ரொடக்ஷன் வசதிகள், 5 ஸ்டார் ஓட்டல்கள் வசதி ஆகியவை இடம்பெறும் என்றும் தெரிவித்துள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

https://www.bbc.com/tamil/articles/cyr3j3ykpxvo

மேலவளவு 7 பேர் படுகொலை: இந்தியாவையே உலுக்கிய சாதிவெறியின் உச்சம்

2 months 3 weeks ago
மேலவளவு முருகேசன் படுகொலை
படக்குறிப்பு,

முருகேசனின் சகோதரர் காஞ்சிவனம்

கட்டுரை தகவல்
  • எழுதியவர், பிரபாகர் தமிழரசு
  • பதவி, பிபிசி தமிழ்
  • 6 ஜனவரி 2024, 06:27 GMT

பிப்ரவரி 1997.

அதுவரையிலும் ஊர் பஞ்சாயத்து அலுவலகத்திற்குள் அனுமதிக்கப்படாத முருகேசன், முதல் முறையாக, அந்த பஞ்சாயத்தின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, ஊருக்குள் இருக்கும் பஞ்சாயத்து அலுவலகத்திற்குச் சென்றார்.

அது மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள மேலவளவு கிராம ஊராட்சி அலுவலகம். பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின்படி, சுழற்சி முறையில், மேலவளவு கிராம ஊராட்சிக்கான தலைவர் மற்றும் இதர பதவிகள் பட்டியல் இனத்தவருக்காக ஒதுக்கப்பட்டது.

அப்போது அந்த கிராம ஊராட்சியில், பிற்படுத்தப்பட்ட சாதியினரின் அச்சுறுத்தல் மற்றும் இடையூறுகளால், பட்டியல் சமூகத்தில் இருந்து யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. பல முறை அந்த கிராம ஊராட்சித் தலைவர் உள்ளிட்ட பொறுப்புகளுக்கான தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது.

பின்னர், 1996ஆம் ஆண்டில் செப்டம்பர் மாதம் வெளியிடப்பட்ட அறிவிப்பைத் தொடர்ந்து, மேலவளவு கிராமத்தில் அப்போதைய காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த விவசாயக் கூலிகளான முருகேசனும், அவரது தம்பி ராஜா உட்படப் பலர் கிராம ஊராட்சியில் உள்ள தலைவர், துணைத் தலைவர் உள்ளிட்ட பொறுப்புகளுக்குப் போட்டியிட்டு வெற்றி பெற்றனர்.

“எங்கள் தலைமுறையிலேயே பஞ்சாயத்து அலுவலகத்திற்குள் செல்லும் முதல் நபர் நான் தான். இதுவே முதல்முறை. இனி, எல்லாம் நன்றாக நடக்க வேண்டும்.” இப்படித்தான் ஊராட்சி தலைவர் பொறுப்பெற்றது குறித்துத் தன் மனைவி மணிமேகலையிடம் பகிர்ந்துள்ளார் முருகேசன்.

“ஆனால், இந்த ஊருதான் என்னையும், என் தங்கச்சியையும் வாழ விடலையே. ஒருத்தர், இரண்டு பேரு இல்ல. அன்னைக்கு அவங்களுக்கு இருந்த சாதி வெறியில், ஏழு பேர கொன்னுட்டாங்க,” என தன் கணவன் கொலை செய்யப்பட்டது குறித்துக் கூறினார் முருகேசனின் மனைவி மணிமேகலை.

ஆம், கிராம ஊராட்சியின் பொறுப்புகளுக்குத் தேர்வாகியிருந்த முருகேசன், அவரது தம்பி ராஜா உட்பட ஏழு பேர், 1997ஆம் ஆண்டு ஜூலை 30ஆம் தேதி, கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்டனர்.

 
என்ன நடந்தது?
மேலவளவு முருகேசன் படுகொலை

ஜூலை 30, 1997.

தலைவர், துணைத் தலைவர் உள்ளிட்ட பொறுப்புகளுக்கு பட்டியல் சமூகத்தினர் தேர்வாகி ஆறு மாதங்கள் ஆகியிருந்தது. ஆனால், பொறுப்பேற்ற பிறகு, பஞ்சாயத்து அலுவலகத்திற்குச் செல்வதில் தொடங்கி, அன்றாடப் பணிகள் வரை அனைத்திலும் பிற்படுத்தப்பட்ட சாதியினரின் இடையூறும், அச்சுறுத்தலும் இருப்பதால், முருகேசனும், மற்ற உறுப்பினர்களும் மாவட்ட ஆட்சியரைச் சந்திக்க முடிவு செய்தனர்.

திட்டமிட்டபடியே, முருகேசனும் மற்றவர்களும் மேலவளவில் இருந்து சுமார் 35 கிலோமீட்டரில் உள்ள மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குச் சென்றனர். மனுவைத் தயார் செய்து மாவட்ட ஆட்சியரை மதியம் மூன்று மணிக்கு மேல் சந்தித்த அவர்கள், அதைத் தொடர்ந்து செய்தியாளர்களையும் சந்தித்தனர்.

பிறகு, ஆறு மணிக்கு மேல், மதுரையில் இருந்து மேலூர் சென்று, ஏழு மணிக்கு மேல் மேலூர் பேருந்து நிலையத்தில் இருந்து மேலவளவு சென்றுகொண்டிருந்தனர். அப்போது, மேலவளவு செல்வதற்கு சில கிலோமீட்டருக்கு முன், சென்னகரம்பட்டி பகுதியில் பேருந்து மறிக்கப்பட, என்ன நடக்கிறது என முருகேசன் உள்ளிட்டோர் எட்டிப் பார்த்துள்ளனர்.

அப்போது, சாலையில் இருந்து பேருந்துக்குள் ஏறிய நபர்கள், முருகேசன், ராஜா உள்ளிட்டோரை அரிவாளால் கொடூரமாகத் தாக்கியுள்ளனர். இதில், ஏழு பேரும் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார்கள்.

தகவல் தெரிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், இறந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அதில், கொலை செய்யப்பட்ட முருகேசனின் தலையை மட்டும் அப்போது காணவில்லை. பின்னர், மேலவளவின் ஊர் எல்லையில் உள்ள ஏரிக்கு அருகில் கண்டெடுத்தனர்.

“அப்போதெல்லாம் செல்போன் வசதி இல்லை. பேருந்தில் வந்தவர்கள் ஓடி வந்து ஊரில் தகவல் சொல்லவே, நாங்கள் அனைவரும் சம்பவ இடத்திற்கு ஓடிச் சென்றோம். நாங்கள் அங்கு செல்வதற்குள்ளேயே குற்றவாளிகள் தப்பிவிட்டனர். முருகேசன் உட்பட ஏழு பேரும் இறந்துவிட்டனர்,” என அன்று நடந்ததைப் பகிர்ந்தார் முருகேசனின் மற்றொரு தம்பி காஞ்சிவனம்.

“அன்று நானும் அவர்களுடன்தான் சென்றிருக்க வேண்டும். ஆனால், மாவட்ட ஆட்சியரைச் சந்திப்பதால், நிர்வாகிகள் மட்டும் சென்றால் போதும் எனக் கூறினார்கள். மேலும், அன்று வயல் வேலையும் இருந்தது. அன்றைய காலக்கட்டத்தில், அன்றாடம் வயலில் வேலை செய்தால் தான், உணவு கிடைக்கும்,” என்றார் காஞ்சிவனம்.

 
மதுரையில் தங்கியிருந்தால்....
மேலவளவு முருகேசன் படுகொலை
படக்குறிப்பு,

மேலூர் பேருந்து நிலையம்

ஏழு பேர் கொலை செய்யப்பட்ட அன்று அவர்கள் அனைவரும் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துவிட்டு, மதுரையிலேயே தங்கிவிட்டு, மறுநாள்தான் ஊருக்குச் செல்ல திட்டமிட்டிருந்ததாகக் கூறினார் மூத்த பத்திரிகையாளர் இளங்கோவன் ராஜசேகரன்.

கடந்த 1997ஆம் ஆண்டு மதுரையில் பணியாற்றிய இளங்கோவன், முருகேசன் உள்ளிட்டோரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சந்தித்திருக்கிறார். “அன்று அவர்கள் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்துவிட்டு மாலை 4 மணிக்கு மேல்தான் வெளியே வந்தார்கள். அவர்களிடம் மனு நகலைப் பெற்றேன். மாவட்ட ஆட்சியர் பாதுகாப்பு அளிக்க உறுதியளித்ததாகக் கூறினார்கள்.

நான் அவர்களிடம் மறுநாள் ஊருக்கு நேரில் வந்து, விசாரித்து, மக்களிடம் பேசிவிட்டு, செய்தியாக்குவதாகக் கூறியிருந்தேன். ஆனால், இப்படி நடந்த பிறகு அவர்களைப் பார்ப்பேன் என நினைக்கவில்லை,” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “அவர்கள் அங்கிருந்து கிளம்பும்போதே பொழுது இருட்டியிருந்தது. பாதுகாப்பு கருதி மறுநாள் அதிகாலைதான் ஊருக்குச் செல்வதாகக் கூறினர். ஆனால், ஏன் இரவே சென்றார்கள் எனத் தெரியவில்லை,” என்றார்.

மேலும், சம்பவம் தொடர்பாக இரவு 9 மணிக்குத் தகவல் கிடைத்ததாகக் கூறிய இளங்கோவன், மறுநாள் காலையில் ஊருக்குச் சென்றதாகக் கூறினார். “அங்கு மக்கள் நீண்ட காலமாகப் பிற்படுத்தப்பட்ட சாதியினரின் வயல்களிலும், வீடுகளிலும் வேலை பார்த்துள்ளனர். அவர்கள் இந்த மக்கள் பொறுப்புகளுக்கு வருவதை அச்சுறுத்தலாகப் பார்த்துள்ளனர்.

அரசியல் ரீதியாக, மேலவளவில் தொடங்கிய பிரச்னைதான், பாப்பாப்பட்டி, கீரிப்பட்டி போன்ற கிராமங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதற்கான காரணங்களாக அமைந்தன,” என்றார்.

அன்றைய காலத்தில் இதுபோன்ற கொடூர சாதிக் கொலைகள் தொடர்ச்சியாக நடந்து வந்ததாகக் கூறிய இளங்கோவன், “முருகேசன் கொலைதான் அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைத்தது. இந்திய அளவில் மட்டுமல்லாமல், சர்வதேச அளவில் இந்தக் கொலைகள் பேசப்பட்டன.

இந்தக் கொலையில் ஈடுபட்டவர்கள் உச்சநீதிமன்றம் வரை சென்றும் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டதால், இதுபோன்ற சம்பவங்கள் 2000க்கு பிறகு பெரிதாக நடக்கவில்லை,” என்றார் அவர்.

 
வழக்கு என்ன ஆனது?
மேலவளவு முருகேசன் படுகொலை
படக்குறிப்பு,

படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவிடம், மேலவளவு

அந்தக் கொலை வழக்கில், மேலவளவு கிராமத்தைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் 40க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களில் 44 பேர் மீது குற்றப் பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது. அதில், 17 பேரை குற்றவாளி என 2001ஆம் ஆண்டு ஜூன் 26ஆம் தேதி மதுரை மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும், அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட சின்ன ஓடுங்கன், செல்வம், மனோகரன், மணிகண்டன், அழகு, சொக்கநாதன், சேகர், பொன்னையா, ராஜேந்திரன், ரெங்கநாதன், ராமர், சர்க்கரை மூர்த்தி, ஆண்டிசாமி உள்ளிட்டோர் மதுரை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். ஆனால், 2008ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் தேதி, உயர்நீதிமன்றமும் அவர்களுக்கு விதிக்கப்பட்ட தீர்ப்பை உறுதி செய்தது.

ஆனால், 17 பேரில், மூவருக்கு மட்டும் தண்டனையைக் குறைத்தது. அவர்கள் அந்த ஆண்டே தண்டனைக் காலம் முடிந்து, சிறையிலிருந்து வெளியே வந்தனர். பின், மீதமுள்ள 17 பேரும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். அவர்களில் ஒருவர், உடல்நலம் காரணமாக உயிரிழந்தார். கடந்த 2009ஆம் ஆண்டு உச்சநீதிமன்றமும் அவர்களைக் குற்றவாளி என உறுதி செய்தது.

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்குப் பிறகு, கடந்த 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 9ஆம் தேதி, எம்ஜிஆர் நூற்றாண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, நன்னடத்தையின் அடிப்படையில், இந்த வழக்கில் சிறையில் இருந்த 13 பேரும் விடுவிக்கப்பட்டனர்.

அவர்களது விடுதலையை எதிர்த்து, முருகேசனின் மனைவி மணிமேகலை உட்பட இறந்தவர்களின் குடும்பத்தினர் மதுரை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்தனர்.

ஆனால், வழக்கை விசாரித்த உயர்நீதின்றம், “சிறையில் இருந்து வெளியே வந்துள்ள 13 பேரும், பரோலில் வெளியே வந்தபோது எந்தவித சட்டம் ஒழுங்கு பிரச்னையும் ஏற்படவில்லை. அதேபோல, முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டபோதும், கிராமத்தில் எந்த சட்டம் ஒழுங்கு பிரச்னையும் ஏற்படவில்லை.

எனவே, 13 பேரின் முன்விடுதலை குறித்து உத்தரவு பிறப்பிப்பதற்கு முன்பு அனைத்து தரப்புச் சூழலையும் பரிசீலனை செய்த பிறகே தமிழக அரசு அரசாணையைப் பிறப்பித்துள்ளது. ஆகையால், இதில் தலையிட விரும்பவில்லை. மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன,” என உத்தரவிட்டது.

 
‘எல்லாரும் நல்லாத்தான் இருக்காங்க, ஆனால், நாங்க தான்…’
மேலவளவு முருகேசன் படுகொலை

தற்போது ஊரில் உள்ள நிலைமை குறித்துப் பேசிய முருகேசனின் மனைவி மணிமேகலை, “அவர் இறந்ததற்குப் பிறகு, எனக்கு வேறு வழியில்லை. அரசாங்கம் அப்போது கொடுத்த பணத்தில், நிலுவையில் இருந்த கடனை கட்டினேன்.

பின், பஞ்சாயத்தில் வேலை கொடுத்தார்கள். கொஞ்ச காலம் அதைச் செய்து, எனது மூன்று மகள்களையும், கடைசி மகனையும் படிக்க வைத்து, திருமணம் செய்து வைத்தேன். என் குழந்தைகள்தான் தற்போது வேலையில்லாமல் கஷ்டப்படுகிறார்கள்,” என்றார்.

ஏழு பேர் படுகொலைக்குப் பிறகு, பட்டியல் சமூகத்தினரும், பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரும் சுமூகமாக இருப்பதாகக் கூறும் மணிமேகலை, தங்களால்தான் யாரிடமும் போய் வேலை பார்க்க முடியவில்லை என்றார்.

“எங்கள் உறவினர்களே சிலர் தற்போது பிற்படுத்தப்பட்ட சாதிக்காரர்களின் வயல்களில் வேலை செய்கிறார்கள், சிலர் நிலம் வாங்கியிருக்கிறார்கள்.

அவர்களுக்கு அது எல்லாம் சரியாக இருக்கும். என் வாழ்க்கையையும், என் குழந்தைகள் வாழ்க்கையையும் இப்படிச் செய்தவர்களிடம் நானோ எனது குழந்தைகளோ ஒரு நாளும் வேலை செய்ய முடியாது,” என்றார்.

https://www.bbc.com/tamil/articles/c72yvy85789o

தமிழ் எழுத்துக்களால் வடிவமைக்கப்பட்ட பிரமாண்ட திருவள்ளுவர் சிலையை திறந்து வைத்தார் முதலமைச்சர்!

2 months 3 weeks ago
20.jpg

இந்தியாவின் கோயம்புத்தூரில் தமிழ் எழுத்துக்களால் உருவாக்கப்பட்ட 20 அடி உயரம் கொண்ட திருவள்ளுவர் சிலையை தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைக்காணொளி தொழில்நுட்பத்தின் மூலம் இன்று திறந்து வைக்கவுள்ளார்.

தமிழ் எழுத்துகளைக் கொண்டு சுமார் 2.5 டன் எடை கொண்டதாகவும் 20 அடி உயரம் கொண்டதாகவும் குறித்த திருவள்ளுவர் சிலை உருவாக்கப்பட்டுள்ளது.

அத்துடன், சிலையின் முன்பு திருக்குறளின் முதற்குரலான ‘அகர முதல எழுத்தெல்லாம் ஆதிபகவன் முதற்றே உலகு’ என்ற குரல் பொறிக்கப்பட்டுள்ளது.

விசேடமாக, இந்த சிலை முழுவதுமாக தமிழ் எழுத்துக்களால் அமைக்கப்பட்டு நெற்றியில் அறம் என்ற சொல் பொறிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் கோவை மாவட்டத்தின் பொள்ளாச்சி வீதியின் குறிச்சிக்குளம் பகுதியில் இந்த திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

மாலை வேளைகளில் மின் விளக்குகளால் ஔிரும் வகையில் இச்சிலை வடிவமைக்கப்பட்டுள்ளதுடன் சிலை முழுவதும் உருக்கு இரும்பினால் (Steel) உருவாக்கப்பட்டுள்ளது.

52 கோடி இந்திய ரூபாய் செலவில் உருவாக்கப்படும் ‘Smart City’ திட்டத்தின் கீழ் இந்த சிலை உருவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://thinakkural.lk/article/287142

ரூ.1 கோடி காப்பீட்டு தொகைக்காக நண்பரை கொன்ற ஜிம் மாஸ்டரை சிக்க வைத்த செல்போன்

2 months 3 weeks ago
ரூ.1 கோடி காப்பீடு தொகைக்காக நண்பரை எரித்துக் கொன்ற ஜிம் மாஸ்டர் சிக்கியது எப்படி?
4 மணி நேரங்களுக்கு முன்னர்

கடந்த செப்டம்பர் மாதம், சென்னை அயனாவரம் பகுதியைச் சேர்ந்த ஜிம் மாஸ்டரான சுரேஷ்குமார்(38) செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் அருகிலுள்ள ஒரு குடிசைப் பகுதியில் உடல் முழுவதும் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

அந்தக் காலகட்டத்தில் அவருடைய நண்பரும் எண்ணூரைச் சேர்ந்த லாரி ஓட்டுநருமான டெல்லி பாபு(39) என்பவரும் காணாமல் போனார். கடந்த செப்டம்பர் 16ஆம் தேதியன்று வீட்டிலிருந்து புறப்பட்ட டெல்லி பாபு வீடு திரும்பவில்லை.

இதனால் டெல்லி பாபுவை கண்டுபிடித்துத் தர வேண்டும் என்று கோரி அவரது தாயார் லீலாவதி செப்டம்பர் 23ஆம் தேதியன்று எண்ணூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதற்கிடையே மகனின் நண்பர் என்ற முறையில், இறந்துபோன சுரேஷின் உடலுக்கு டெல்லி பாபுவின் தாயார் லீலாவதி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

இந்த இருவேறு சம்பவங்களுக்கு இடையே என்ன தொடர்பு? எரிந்த நிலையில் சுரேஷ்குமார் சடலமாக மீட்கப்பட்டதற்கும் செப்டம்பர் 16ஆம் தேதியன்று டெல்லி பாபு காணாமல் போனதற்கும் என்ன தொடர்பு?

 
உயிருடன் திரும்பிய சுரேஷ்
ரூ.1 கோடி காப்பீடு தொகைக்காக நண்பரை எரித்துக் கொன்ற ஜிம் மாஸ்டர் சிக்கியது எப்படி?
படக்குறிப்பு,

காணாமல் போனதாக நம்பப்பட்ட டெல்லி பாபு

தனது மகனைக் காணவில்லை என்று அளித்த புகாரில் எந்த முன்னேற்றமும் இல்லாத நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் டெல்லி பாபுவின் தாயார் லீலாவதி ஆட்கொணர்வு மனு ஒன்றை நவம்பர் மாதம் தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், டெல்லி பாபுவைக் கண்டுபிடித்து ஒப்படைக்க உத்தரவிட்டது. இதற்குப் பிறகு காவல்துறையின் விசாரணை தீவிரமடைந்தது. காணாமல்போன டெல்லி பாபுவின் நணபர்களிடம் காவல்துறை விசாரணை மேற்கொண்டது.

அப்போது, அதே காலகட்டத்தில் டெல்லி பாபுவின் நண்பரான சுரேஷ் என்பவர் அச்சரப்பாக்கத்திற்கு அருகில் உள்ள அல்லானூர் பகுதியில் இருந்த குடிசையில் உடல் முழுதும் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டது தெரிய வந்தது. இதை அந்த நேரடத்தில் தற்கொலை வழக்காக போலீசார் பதிவு செய்திருந்தனர்.

டெல்லி பாபு வழக்கை விசாரிக்கும்போது, அதே காலகட்டத்தில் சுரேஷும் இறந்து போயிருந்ததால், அவரது செல்போன் எண்ணை போலீசார்ர் ஆய்வு செய்தனர். அப்போது அந்த செல்போன் அரக்கோணம் பகுதியில் செயல்பாட்டில் இருந்தது. இதனால் சந்தேகமடைந்த போலீசார்ர், அரக்கோணம் சென்றனர்.

அங்கு ஓரிடத்தில், சுரேஷ் தனது நண்பர்கள் ஹரி கிருஷ்ணன், கிரி ராஜன் ஆகியோருடன் தங்கியிருப்பது தெரிய வந்தது. ஏற்கெனவே இறந்து போனதாகக் கருதப்பட்ட சுரேஷ் உயிருடன் இருந்ததால், அதிர்ச்சி அடைந்த போலீசார் அவரையும் அவருடைய நண்பர்களையும் சென்னைக்கு அழைத்து வந்து விசாரித்தனர்.

இந்த விசாரணையில்தான் காப்பீட்டுப் பணத்தைப் பெறுவதற்காக தன் நண்பர்களுடன் இணைந்து டெல்லி பாபுவை சுரேஷ் கொலை செய்தது தெரிய வந்தது.

இந்த வழக்கை விசாரணை செய்த காவல்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, இந்தக் கொலையை சுரேஷ் எப்படி திட்டமிட்டு மேற்கொண்டார் என்பதை விவரித்தனர்.

 
உருவ ஒற்றுமை கொண்ட நபருக்கான தேடுதல் வேட்டை
ரூ.1 கோடி காப்பீடு தொகைக்காக நண்பரை எரித்துக் கொன்ற ஜிம் மாஸ்டர் சிக்கியது எப்படி?
படக்குறிப்பு,

சுரேஷின் நண்பர் ஹரி கிருஷ்ணன் அவருடன் சேர்ந்து காப்பீட்டுத் தொகைக்காக திட்டமிட்டார்.

இந்த விசாரணையில்தான் சுரேஷ் ஒரு கோடி ரூபாய் காப்பீட்டுப் பணத்திற்காக தனது நண்பர்களுடன் இணைந்து டெல்லி பாபுவைக் கொலை செய்தது தெரிய வந்தது. இந்த வழக்கை விசாரித்த காவல்துறை அதிகாரிகளிடம் பேசியபோது, அவர்கள் சுரேஷ் எப்படி இதைத் திட்டமிட்டுச் செயல்படுத்தினார் என்பது குறித்து விசாரணையில் கிடைத்த தகவல்களை விவரித்தனர்.

ஜிம் மாஸ்டரான சுரேஷ் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு தனியார் காப்பீட்டு நிறுவனத்தில் ஒரு கோடி ரூபாய்க்கு விபத்துக் காப்பீடு செய்திருந்தார். இந்நிலையில், அந்தப் பணத்தைக் குறுக்கு வழியில் பெறுவதற்காக சுரேஷ் தனது நண்பர்களான கீர்த்தி ராஜன், ஹரி கிருஷ்ணன் ஆகியோருடன் இணைந்து திட்டமிட்டதாக இந்த வழக்கின் விசாரணை அதிகாரி தெரிவித்தார்.

அந்தக் காப்பீட்டு பணத்தைப் பெறுவதற்காக சுரேஷை போலவே இருக்கும் ஒருவரைக் கொலை செய்துவிட்டு, சுரேஷ்தான் இறந்துவிட்டதாகச் சொன்னால் காப்பீட்டுப் பணம் கிடைக்கும் என அவர்கள் திட்டமிட்டனர்.

இதற்காக ஜிம் மாஸ்டர் சுரேஷ் போலவே தோற்றமளிக்கும் ஒருவரை அவர்கள் தேடினர். அப்போதுதான் 20 ஆண்டுகளுக்கு முன்பு சுரேஷின் வீட்டில் வாடகைக்குக் குடியிருந்த டெல்லி பாபுவின் நினைவு அவருக்கு வந்துள்ளது. அவர் எண்ணூரில் வசிக்கும் தகவல் தெரிய வரவே, அவரைத் தேடிக் கண்டுபிடித்தனர்.

 
காப்பீட்டு பணத்திற்காக நடந்த கொலை
ரூ.1 கோடி காப்பீடு தொகைக்காக நண்பரை எரித்துக் கொன்ற ஜிம் மாஸ்டர் சிக்கியது எப்படி?
படக்குறிப்பு,

சுரேஷ்

அவரைத் தேடிக் கண்டுபிடித்து நண்பரான பிறகு, டெல்லி பாபுவை அழைத்துக்கொண்டு சுரேஷும் அவரது நண்பர்களும் புதுச்சேரி சென்றனர். அங்கிருந்து பிறகு முன்பே திட்டமிட்டிருந்த குடிசை வீட்டுக்கு அவரை அழைத்துக்கொண்டு அனைவரும் சென்றதாக விவரித்தார் விசாரணை அதிகாரி.

அந்தக் குடிசையில் வைத்துதான் சுரேஷ் மற்றும் அவரது நண்பர்கள் டெல்லி பாபுவை கழுத்தை நெறித்துக் கொலை செய்ததாகவும் விசாரணையில் தெரிய வந்ததாக காவல்துறை அதிகாரி குறிப்பிட்டார்.

இதற்குப் பிறகு உடலை எரித்துவிட்டு, சுரேஷ் தலைமறைவனார். டெல்லி பாபுவின் உடலைக் காட்டி அவர் சுரேஷ் இறந்துவிட்டதாக செய்தி பரப்பப்பட்டது.

இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, “சுரேஷ் தனது நண்பர்களின் மூலமாக தனியார் காப்பீட்டு நிறுவனத்தை அணுகி பணத்தைப் பெற முயன்றார். அப்போது சுரேஷின் மரணம் இந்திய தண்டனைச் சட்டத்தின்கீழ் தற்கொலை எனப் பதிவு செய்யப்பட்டிருப்பதால் காப்பீட்டுப் பணத்தைத் தர முடியாது என காப்பீட்டு நிறுவனம் தெரிவித்துவிட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த அடுத்து என்ன செய்வதென்ற குழப்பத்தால் சுரேஷும் அவரது நண்பர்களும் அரக்கோணம் பகுதிக்குச் சென்று பதுங்கியிருந்தார்கள். அங்குதான் அவர்கள் போலீசாரிடம் பிடிபட்டனர்,” என்று கூறினார் காவல்துறையைச் சேர்ந்த இந்த வழக்கின் விசாரணை அதிகாரி.

 
மகன் உடல் எனத் தெரியாமல் அஞ்சலி செலுத்திய தாயின் வேதனை
ரூ.1 கோடி காப்பீடு தொகைக்காக நண்பரை எரித்துக் கொன்ற ஜிம் மாஸ்டர் சிக்கியது எப்படி?
படக்குறிப்பு,

டெல்லி பாபு கொலை செய்யப்பட்ட குடிசைப் பகுதி

சுரேஷ் தற்கொலை செய்துகொண்டதாகத் தகவல் பரவியதும், டெல்லி பாபுவின் சகோதரரும் அவரது தாயும் நேரில் சென்று இறுதிச் சடங்கில் பங்கேற்றுள்ளனர்.

அப்போது சுரேஷின் உடல் எனத் தாங்கள் அஞ்சலி செலுத்தியது, தமது மகன் டெல்லி பாபுவுக்கு என்பது தெரிய வந்ததும் அவரது தாயார் டெல்லி பாபு நொறுங்கிப் போய்விட்டார்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால், இந்த விவகாரம் பற்றிப் பேசுவதற்கு டெல்லி பாபுவின் குடும்பத்தினர் மறுத்துவிட்டனர். ஆனால், சுரேஷின் தாயார் மேரியையும் இந்த வழக்கில் விசாரிக்க வேண்டும் என்று டெல்லி பாபுவின் உறவினர்கள் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.

https://www.bbc.com/tamil/articles/cnkd2d878w3o

300 யானைகளில் தொலைந்த குட்டியின் தாயை வனத்துறை சரியாகக் கண்டுபிடித்தது எப்படி? - ஓர் உணர்ச்சிப்பூர்வமான கதை

2 months 3 weeks ago
தாயிடம் சேர்க்கப்பட்ட குட்டியானை

பட மூலாதாரம்,SUPRIYASAHUIAS

கட்டுரை தகவல்

  • எழுதியவர், சிராஜ்
  • பதவி,பிபிசி தமிழ்
  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

"இன்னும் இரண்டு நாட்கள் தாமதமாகியிருந்தால், குட்டியை விட்டு யானைக் கூட்டம் வெகு தூரம் சென்றிருக்கும். கடைசி வரை அந்த குட்டியால் தாயை பார்த்திருக்க முடியாது, தாய்ப்பால் இல்லாமல் குட்டி உயிர் பிழைப்பதும் கடினமாகியிருக்கும். நல்லவேளையாக தாயிடம் சேர்த்து விட்டோம்", என புன்னகையுடன் கூறுகிறார் வனத்துறை ரேஞ்சர் மணிகண்டன்.

கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ளது, பன்னிமேடு தேயிலை எஸ்டேட். டிசம்பர் 29 அன்று இந்தப் பகுதியில் தாயைப் பிரிந்து, கூட்டத்திலிருந்து விலகிய ஒரு குட்டியானை சுற்றிக் கொண்டிருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

உடனே அங்கு விரைந்த வனத்துறையினர், சில மணிநேரங்களில் எந்த யானைக் கூட்டத்திலிருந்து குட்டி பிரிந்தது என்பதைக் கண்டறிந்து அதனை தாய் யானையுடன் சேர்த்துள்ளனர்.

கடந்த 5 நாட்களாக யானைக்குட்டி மற்றும் அதன் கூட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வந்தது வனத்துறை. இந்நிலையில் நேற்று, தாயின் அருகே அந்த குட்டியானை அமைதியாக படுத்து உறங்கும் காணொளியை வெளியிட்டது வனத்துறை.

இணையத்தில் பலரால் பகிரப்பட்ட அந்த காணொளி குறித்தும், 300க்கும் மேற்பட்ட யானைகள் முகாமிட்டு இருக்கும் வால்பாறை பகுதியில், ஒரே நாளில் எவ்வாறு குட்டியானை தாயிடம் சேர்க்கப்பட்டது என்பது குறித்தும் வனத்துறை அதிகாரிகளிடம் பேசினோம்.

 
தாயிடம் சேர்க்கப்பட்ட குட்டியானை

பட மூலாதாரம்,FOREST DEPARTMENT

"மனித வாடை இருந்தால் குட்டியை தாய் விரட்டிவிடும்"

"அன்று காலை தகவல் கிடைத்தவுடன் பன்னிமேடு எஸ்டேட் பகுதிக்கு சென்றுவிட்டோம். அங்கு 5 முதல் 6 மாதங்களே ஆன ஒரு குட்டி யானை சுற்றித் திரிந்தது. குட்டி யானை தன் தாயிடமிருந்து பிரிந்து விட்டால், அதை உடனடியாக அதன் தாயிடமோ அல்லது கூட்டத்திடமோ சேர்க்க வேண்டும்."

"மனித வாடை அதன் உடலில் பட்டுவிட்டால் யானைக் கூட்டம் அதை சேர்த்துக் கொள்ளாது, தாய் அதனை விரட்டிவிடும்" என்று நம்மிடம் பேசத் தொடங்கினார் வனத்துறை ரேஞ்சர் மணிகண்டன்.

"யானைகள் எப்போதும் கூட்டம் கூட்டமாக வால்பாறை பகுதியில் முகாமிடுவதால், புதிதாக ஏதும் யானைக் கூட்டம் இங்கு வந்தால் எங்களுக்கு தெரிந்துவிடும். டிரோன் மூலமாகவும், கண்காணிப்பு குழுக்கள் மூலமாகவும் யானைகள் எங்கே செல்கின்றன என்பதை நாங்கள் பார்ப்போம்."

"எந்த யானைக் கூட்டம் ரேஷன் கடைகளைத் தாக்குகின்றன, எவை மக்களின் குடியிருப்புகளுக்குள் செல்கின்றன, தேயிலைத் தோட்டத்தில் முகாமிட்டுள்ள யானைகள் எவை என அனைத்து தரவுகளும் எங்களிடம் இருக்கும்" என்றார் மணிகண்டன்.

தொடர்ந்து பேசிய அவர், "ஒவ்வொரு நாளும் மாலை 5 மணிக்கு மீண்டும் ஒருமுறை டிரோன் மூலம் கண்காணித்து, அதை உறுதிபடுத்திக்கொள்வோம். அப்படி இருக்கையில் அன்று அதிகாலை பன்னிமேடு பகுதிக்கு சென்று குட்டியை மீட்டுவிட்டு, அதன் யானைக் கூட்டத்தை தேடத் தொடங்கினோம்." என்றார்.

தாயிடம் சேர்க்கப்பட்ட குட்டியானை

பட மூலாதாரம்,FOREST DEPARTMENT

11 யானைகள் கொண்ட கூட்டம்

மேலும் அவர் கூறியது, "காலை 8.30 மணிக்கு எங்களுக்கு யானைக்குட்டி பற்றி தகவல் வந்தது, சரியாக மதியம் 1.30 மணிக்கு நாங்கள் அதை தாயிடம் சேர்த்துவிட்டோம். இவ்வளவு துரிதமாக செயல்பட்டதற்கு காரணம் ஒரு நாளுக்கு மேல் ஆகிவிட்டால், யானைக்கூட்டம் வேறு பகுதிக்கு நகர்ந்து விடும். பிறகு குட்டியை கூட்டத்தில் சேர்ப்பது கடினம்."

"யானைக்குட்டி மிகவும் ஆரோக்கியமாக இருந்தது. காரணம் முழுக்க முழுக்க அது தாய்ப்பாலை மட்டும் குடித்து வளர்ந்தது. புல்லைக் கூட உண்ணாது. எனவே நாங்கள் வேறு ஏதாவது உணவு அல்லது லாக்டோ பானம் கொடுத்து அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை என்றால், உடல்நிலை சரியில்லாமல் போய் மேலும் தாமதமாகிவிடும்."

"இன்னொரு சிக்கல், யானைக்குட்டி நம்மிடம் பழகிவிட்டால் நம்மை விட்டு போகாது. அது குட்டிக்கு தான் ஆபத்து. இப்படி பல சிக்கல்கள் இருந்ததால், பல குழுக்களாக பிரிந்து தேடுதலில் ஈடுபட்டோம். தேயிலைத் தோட்ட தொழிலார்கள் கூறியது மற்றும் எங்களிடமிருந்த தரவுகள் மூலமாக மூன்று யானைக்கூட்டங்களை பின்தொடர்ந்தோம்."

"அதில் பதினோரு யானைகள் கொண்ட கூட்டத்தில் தான், ஒரு குட்டியை காணவில்லை என்பதை உறுதிபடுத்திக்கொண்டோம். பின்னர் டிரோனைப் பறக்க விட்டு அந்த குறிப்பிட்ட யானைக்கூட்டத்தைப் பின்தொடர்ந்தோம். ஆனால் இப்போது தான் இரண்டு பெரிய சிக்கல்கள் உருவானது" என்கிறார் மணிகண்டன்.

 
தாயிடம் சேர்க்கப்பட்ட குட்டியானை

பட மூலாதாரம்,FOREST DEPARTMENT

ஆக்ரோஷமான யானைகள்

தொடர்ந்து பேசிய அவர், "யானைகள் கூட்டத்தை நோக்கி செல்லும்போது, குட்டி சோர்வடைய ஆரம்பித்தது. அதற்கு குடிக்க ஆற்றுத் தண்ணீரை மட்டுமே கொடுத்தோம். அது எங்களுடன் சற்று நெருக்கமாகத் தொடங்கியது. இப்போது எங்களுக்கு பயம் வந்துவிட்டது, நன்றாகப் பழகி விட்டால் அதை கூட்டத்திடம் சேர்ப்பது சிக்கல்."

"இன்னொரு சிக்கல், யானைக் கூட்டம் மிகவும் ஆக்ரோஷமாக இருந்தது. அருகில் சென்று குட்டியை விட முடியாது. அது எங்களை தாக்க வாய்ப்புகள் அதிகம். தேயிலைத் தோட்டம் என்பதால் யானைகளிடமிருந்து தப்பிப்பது இன்னும் கடினம்.

எனவே மீண்டும் டிரோன் மூலம் கூட்டத்தின் இருப்பிடத்தை உறுதி செய்துவிட்டு, யானையை நன்றாக குளிப்பாட்டி சேற்று மணலை பூசினோம். மனித வாடை இருக்கக்கூடாது அல்லவா." என்று சிரிக்கிறார் மணிகண்டன்.

"பின்னர் அதை முன்னே செல்ல விட்டோம். கூட்டத்தின் சத்தத்தைக் கேட்ட குட்டி யானை பிளிறியது. உடனே இரண்டு யானைகள் முன்னே குட்டியை அழைத்துக் கொண்டன. அப்போது தான் நாங்கள் நிம்மதி அடைந்தோம். ஏனென்றால் இவ்வளவு சிறிய குட்டி தாயைப் பிரிந்தால் அதிக நாட்கள் தாக்குப் பிடிக்காது." என்று கூறினார்.

வைரலான காணொளி குறித்து பேசும்போது, "அது இரண்டு நாட்களுக்கு முன்பாக எடுக்கப்பட்ட காணொளி, டிரோன் மூலம் தான் எடுத்தோம். எங்களுக்கு இருந்த சந்தேகம் தாய் அந்தக் குட்டியை எவ்வாறு அணுகும் என்பது தான். ஆனால் டிரோன் மூலம் அந்தக் காட்சியை பார்த்தபோது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது" என்றார் வனத்துறை ரேஞ்சர் மணிகண்டன்.

 
தாயிடம் சேர்க்கப்பட்ட குட்டியானை

பட மூலாதாரம்,FOREST DEPARTMENT

வால்பாறையில் 300-க்கும் மேற்பட்ட யானைகள்

இது தொடர்பாக ஆனைமலை புலிகள் காப்பக இயக்குநர் ராமசுப்ரமணியனிடம் (ஐஎப்எஸ்) பேசியபோது, "கேரளாவில் சபரிமலை சீசன் என்பதால் அங்கிருந்து வெளியேறிய முன்னூறுக்கும் மேற்பட்ட யானைகள் வால்பாறையில் முகாமிட்டுள்ளன."

"அவை தங்களுடைய உணவுக்காக மக்கள் இருக்கும் பகுதிகளுக்கு செல்லும். எனவே எத்தனை யானைகள் வருகின்றன போகின்றன என்பது குறித்த தரவுகள் எங்களிடம் எப்போதும் இருக்கும்."

"இப்போது அந்த குட்டி யானையும் அதன் கூட்டமும் மீண்டும் கேரளாவுக்குள் சென்றுவிட்டது. நாங்கள் இறுதியாக கண்காணித்தவரை குட்டி மிகவும் ஆரோக்கியமாக இருந்தது."

"சில மணிநேரங்களில் அனைத்தும் நடந்ததற்கு எப்படியாவது தாயுடன் குட்டியை சேர்த்துவிட வேண்டுமென்ற குழுவின் எண்ணம் தான் காரணம். ஒருவேளை மீண்டும் அந்த யானைக்கூட்டம் வால்பாறைக்குள் வந்தால் கண்காணிக்கப்படும்" என்றார்.

காணொளிக் குறிப்பு,

வால்பாறையில் கூட்டத்திலிருந்து விலகிய குட்டியானையை மீட்டு தாயிடம் சேர்த்த வனத்துறை

அழிக்கப்படும் யானையின் வாழ்விடங்கள்

யானைகளைப் பற்றி ஆராய்ச்சிகள் செய்துவரும் ஆற்றல் பிரவீன்குமார் தனது பேஸ்புக் பக்கத்தில், "தாயை பிரிந்த யானையின் கன்று ஒன்று மீண்டும் தனது தாயுடன் சேர்ந்த அழகிய தருணங்கள், தாயின் மடியில் பத்திரமாக இருப்பதாய் குட்டி உணர்கிறது. பெரும் முயற்சிக்குப் பிறகு தமிழ்நாடு வனத்துறை இந்த குட்டியை தாயுடன் சேர்த்து வைத்துள்ளனர்."

"தமிழ்நாடு வனத்துறையை சேர்ந்த இக்குழுவினருக்கு எம்முடைய வாழ்த்துக்கள். ஆஸ்கர் விருது வாங்கிய தி எலிபெண்ட் விசுபெரர்ஸ் ஆவணப்படத்தில் தோன்றிய அம்மு குட்டி என்னும் யானைக் குட்டி ஒன்று இன்று வரை தன் கூட்டத்துடன் சேர முடியாமல் அனாதையாகவே உள்ளது. தாயை பிரிந்த வேதனை அதற்கு மட்டும் தான் தெரியும்" என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் அந்த பதிவில், "பல ஆறுகளின் மூலமாக இருக்கும் மழைக்காடுகளை துண்டுச் சோலைகளாக மாற்றி விட்டு நாம் தினமும் குடிக்கும் தேயிலைக்காக இங்கு பயிர் செய்து வருகிறார்கள். இழந்துவிட்ட தனது வாழிடத்தை தேடி வரும் யானைகள் இதனால் பெரும் சிரமத்துக்கு ஆளாகின்றன" என்று கூறியுள்ளார்.

https://www.bbc.com/tamil/articles/c802d2eggeno

தமிழ்நாடு: சோஃபா சிறுவன் முதல் டிடிஎஃப் வாசனின் மஞ்சள் வீரன் வரை - 2023 வைரல் சம்பவங்கள்

2 months 4 weeks ago
தமிழ்நாடு: சோஃபா சிறுவன் முதல் டிடிஎஃப் வாசனின் மஞ்சள் வீரன் வரை - 2023 வைரல் சம்பவங்கள்

பட மூலாதாரம்,NIFYAFURNITURE/INSTAGRAM

3 மணி நேரங்களுக்கு முன்னர்

ஒவ்வோர் ஆண்டும் பல விஷயங்கள் வைரலாகி சமூக ஊடகங்களை ஆக்கிரமிக்கும். இந்த வைரல் சம்பவங்களில் பிரபலங்கள் மட்டும் அல்லாமல் சாமானியர்களும் இடம் பெறுவார்கள்.

அப்படி, தமிழ்நாட்டில் 2023ஆம் ஆண்டில் நூற்றுக்கணக்கான வைரல் சம்பவங்கள் நிகழ்ந்திருக்கின்றன. முக்கியமான, சுவாரஸ்யமான 10 வைரல் நிகழ்வுகளை மீண்டும் திரும்பிப் பார்ப்போம்.

600 மதிப்பெண்கள் எடுத்த நந்தினி
மு.க.ஸ்டாலின்

பட மூலாதாரம்,MK STALIN/X

கடந்த மே மாதம், 2022-2023 கல்வியாண்டுக்கான பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. இதில், இதற்கு முன்பு நடக்காத முன்மாதிரியாக, திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த நந்தினி என்ற மாணவி 600க்கு 600 என முழு மதிப்பெண்களையும் பெற்றார். அவருக்கு சமூக ஊடகங்களிலும் நேரிலும் வாழ்த்துகள் குவிந்தன.

அரசு உதவிபெறும் பள்ளியில் படித்த அந்த மாணவி, ‘படிப்புதான் சொத்து’ என்பதை உணர்ந்து கவனத்துடன் படித்ததாக ஊடக பேட்டிகளில் தெரிவித்தார். அவரை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் நேரில் அழைத்துப் பாராட்டினார்.

தச்சு தொழிலாளியின் மகளான நந்தினி, ’பாடங்களை மனப்பாடம் செய்யாமல், அவற்றைப் புரிந்து படித்ததே’ தன்னுடைய சாதனைக்குக் காரணம் என்றும் தெரிவித்திருந்தார். முழு மதிப்பெண்கள் பெற்றதன் மூலம் சமூக ஊடகங்களில் மிகுந்த கவனத்தைக் குறுகிய காலத்திலேயே பெற்றார் நந்தினி.

 
பேரிடரில் வெளிப்பட்ட அன்பு
மிக்ஜாம் புயல்

பட மூலாதாரம்,@CHENNAIPOLICE_/X

டிசம்பர் மாதத் தொடக்கத்தில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக சென்னையில் கனமழை-வெள்ளம் சென்னை மாநகரையே புரட்டிப்போட்டது. இதனால், தாழ்வான பகுதிகளைச் சேர்ந்த மக்களும் வேளச்சேரி, பள்ளிக்கரணை போன்ற நீர்நிலைகளுக்கு அருகில் அமைந்த குடியிருப்புகளும் வெகுவாகப் பாதிக்கப்பட்டன.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை மீட்பது, வெள்ளநீரை அகற்றுவது உள்ளிட்ட மீட்புப் பணிகளுக்கு மத்தியிலும் சில சுவாரஸ்யமான சம்பவங்கள் நடந்தன. அதில், துரைப்பாக்கம் காவல் நிலையத்தின் தலைமைக் காவலர் தயாளன் என்பவர், வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்கும்போது, குழந்தை ஒருவரை அவரே தூக்கிக்கொண்டு சிரித்த முகத்துடன் நடந்து வந்த காட்சிகளும் புகைப்படங்களும் உடனே வைரலாகின.

குழந்தையைப் பத்திரமாக மீட்க வேண்டும் என்பதால் தாமே தூக்கிக்கொண்டு வந்ததாக தயாளன் ஊடக பேட்டிகளில் தெரிவித்தார். ‘குழந்தையைப் பார்த்தவுடன் களைப்பு பறந்து போய்விட்டது’ எனவும் தன் எண்ணத்தைப் பகிர்ந்துகொண்டார்.

இதுதவிர, பெருங்களத்தூரில் சாலையொன்றில் ‘சாதாரணமாக’ கடந்து சென்ற முதலையும் கவனம் பெற்றது. மேலும், வெள்ளம் காரணமாக புளியந்தோப்பில் வீட்டிலேயே பிரசவித்த பெண் ஒருவருக்கு குழந்தை இறந்தே பிறந்தது. அப்பெண் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, குழந்தையை அட்டைப்பெட்டியில் வைத்து குழந்தையின் தந்தையிடம் மருத்துவமனை நிர்வாகம் தந்ததாக எழுந்த சர்ச்சையும் கவனம் பெற்றது.

 
‘பிறந்து 9 நாளில் நடந்தேன்’
ஜோயல் இமானுவேல்

பட மூலாதாரம்,INSTAGRAM

படக்குறிப்பு,

ஜோயல் இமானுவேல்

சென்னையைச் சேர்ந்த ஜோயல் இமானுவேல் என்ற 14 வயது சிறுவன், கிறிஸ்தவ நம்பிக்கையைப் பரப்பும் ஊழியம் செய்து வருகிறார்.

அதுகுறித்த காணொளியில், “நான் 5 கிலோ எடையில் பிறந்தேன், பிறந்து 9 நாட்களிலேயே நடந்தேன், நானாகவே எல்லா வேலைகளையும் செய்வேன்’ எனப் பேசியது சமூக ஊடகங்களில் வைரலானது.

அந்தச் சிறுவனின் காணொளியைப் பகிர்ந்த பலரும் அவரை கேலி செய்து பதிவிட்டனர். மேலும் அச்சிறுவன் பேசியது கடும் விவாதங்களையும் எழுப்பியது.

இதையடுத்து, ‘நான் தவறாகப் பேசிவிட்டேன், நான் 9 நாட்களில் நடக்கவில்லை. 9 மாதங்களில் நடந்தேன் என்பதை 9 நாட்கள் எனக் கூறிவிட்டேன்’ என விளக்கம் தெரிவித்து மன்னிப்பு கேட்டார்.

ரஞ்சனா நாச்சியார்
ரஞ்சனா நாச்சியார்

பட மூலாதாரம்,RANJANA_NACHIYAAR

படக்குறிப்பு,

ரஞ்சனா நாச்சியார்

பேருந்தில் படிக்கட்டுகளில் பயணித்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை அடித்து, அவதூறாகப் பேசியதாக துணை நடிகை ரஞ்சனா நாச்சியார் மீது புகார் எழுந்த சம்பவம் வைரலானது. இவருடைய நடவடிக்கைக்கு சமூக ஊடகங்களில் கடும் எதிர்ப்புகள் எழத் தொடங்கின.

அந்த மாணவர்களைத் தன் குழந்தைகளாகப் பாவித்து, அவர்களின் நலனுக்காகவே தாம் அப்படிச் செய்ததாக அவர் விளக்கம் அளித்திருந்தார். இதுதொடர்பாக அவர் மீது வழக்குப் பதிவும் செய்யப்பட்டது. பின்னர் அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது.

 
வைரலான சோஃபா சிறுவன்
வைரல் சோஃபா சிறுவன்

பட மூலாதாரம்,NIFYAFURNITURE/INSTAGRAM

சென்னையில் சோஃபா கடை ஒன்றில் முகமது என்ற 13 வயது சிறுவன் ஒருவன் ‘படபட’வென மூச்சுவிடாமல் பேசி வியாபாரம் செய்யும் காணொளிகள் இன்ஸ்டாகிராமில் வைரலாகின.

அதுதொடர்பான வீடியோக்களை அவரே தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து வருகிறார். தன் தந்தையின் கடையைப் பிரபலப்படுத்தும் நோக்கில் அவர் இந்தக் காணொளிகளைப் பதிவிட்டு வருகிறார்.

இந்த வயதிலேயே சோஃபாக்களை விற்பதில் உள்ள வியாபார உத்தி, அதுகுறித்த அறிவு உள்ளிட்டவற்றைக் குறிப்பிட்டு பலரும் பாராட்டினாலும் அந்தச் சிறுவனை விமர்சிப்பவர்களும் உண்டு.

அதற்குப் பதிலளித்த அந்தச் சிறுவன் 8ஆம் வகுப்பு படிக்கும் தான் நள்ளிரவில் படித்துவிட்டு அதிகாலையில் தன் தந்தையின் கடைக்கு வந்து வேலைகளைச் செய்வதாகத் தெரிவித்தார். இதன்மூலம், அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தைப் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கையும் அதிகமானது.

டி.டி.எஃப் வாசனின் ‘மஞ்சள் வீரன்’
டி.டி.எஃப் வாசன்

நெடுஞ்சாலைகளில்கூட அதிவேகமாக பைக் ஓட்டுவது, சாகசங்களை செய்வது எனத் தன்னுடைய காணொளிகள் மூலம் யூடியூபராக பிரபலமானவர் டி.டி.எஃப் வாசன்.

இவர் செந்தில் செல்.அம் என்பவரின் இயக்கத்தில் ‘மஞ்சள் வீரன்’ என்ற படத்தில் நடிப்பதாகவும் 2024ஆம் ஆண்டு அந்தப் படம் வெளியாகும் எனவும் செய்திகள் வெளியாகி மேலும் பிரபலம் அடைந்தார் வாசன்.

ஆனால், செப்டம்பர் மாதம் காஞ்சிபுரத்தில் இருசக்கர வாகனத்தில் வேகமாகச் சென்றபோது வாசன் விபத்துக்குள்ளானார். இதுதொடர்பான வழக்கில் அவர் புழல் சிறையிலும் அடைக்கப்பட்டார். மேலும், அவரது ஓட்டுநர் உரிமம் 10 ஆண்டுகள் ரத்து செய்தும் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

பைக் சாகசங்கள் தொடர்பான படம் என்றே ‘மஞ்சள் வீரன்’ போஸ்டர் உணர்த்திய நிலையில், உரிமம் இல்லாத நிலையில் அப்பட வேலைகள் தொடருமா என்ற கேள்வியும் எழுந்தது.

 
அரசியல் வைரல்
செந்தில் பாலாஜி

பட மூலாதாரம்,ANI

தமிழக அரசியலில் பல வைரல் நிகழ்வுகள் நடந்திருந்தாலும் குறிப்பாக, மின்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, சட்ட விரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையால் கடந்த ஜூன் மாதம் கைது செய்யப்பட்டது தமிழக அரசியலில் பேசுபொருளானது.

அமலாக்கத்துறை அதிகாரிகள் நீண்ட நேர விசாரணைக்குப் பிறகு செந்தில் பாலாஜியை அலுவலகத்திற்கு அழைத்துச் செல்ல முற்பட்டபோது, காரில் ஏறி அமர்ந்த செந்தில் பாலாஜி, திடீரென நெஞ்சு வலிப்பதாகக் கூறி இருக்கையில் படுத்தபடியே துடித்தார். இந்த காணொளி காட்சிகள் அன்றைய நாளில் தேசிய அளவில் கவனம் பெற்றது. சமூக ஊடகங்களிலும் டிரெண்ட் ஆனது.

இதுதவிர, விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதியின் ‘சனாதன ஒழிப்பு’ குறித்த சர்ச்சைப் பேச்சு, ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட விவகாரம், சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் வளைவின் முன் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு சிலை எழுப்ப தமிழக அரசு முயல்வதாக அதன் உரிமையாளர் எழுப்பிய குற்றச்சாட்டு, தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவு போன்ற பல சம்பவங்கள் தமிழக அரசியல் களத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தின.

’பருத்தி வீரன்’ சர்ச்சை
இயக்குனர் அமீர்

பட மூலாதாரம்,HUW EVANS PICTURE AGENCY

படக்குறிப்பு,

இயக்குனர் அமீர்

கடந்த 2005ஆம் ஆண்டு வெளியான ‘பருத்தி வீரன்’ திரைப்படம் தொடர்பாக இயக்குநர் அமீர் மீது தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா எழுப்பிய குற்றச்சாட்டு சினிமா உலகில் பல சர்ச்சைகளைக் கிளப்பி, விவாதங்களை எழுப்பியது.

“படத்திற்கு சொன்ன கணக்கைவிட அதிகமாகச் செலவு செய்து பணத்தைத் திருடிவிட்டார். பணத்தை உழைத்து சம்பாதிக்காமல் திருடிச் சம்பாதிக்கிறார்” என, ஞானவேல் ராஜா யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டிதான் சர்ச்சைகளுக்கு ஆரம்பப்புள்ளி.

"என்னுடைய நற்பெயரைக் கெடுக்கும் வகையில் அவர் என்னைப் பற்றிப் பேசி இருக்கிறார்” என அமீர் தன் தரப்பை முன்வைத்தார். இதைத் தொடர்ந்து இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரகனி, சேரன் எனப் பல இயக்குநர்களும் அத்திரைப்படத்தில் நடித்த பலரும் அமீருக்கு ஆதரவு தெரிவித்து அறிக்கைகளை வெளியிட்டனர்.

ஆனால், படத்தில் நடித்த கார்த்திக், தயாரிப்பு விஷயத்தில் தலையிட்டதாகக் கூறப்படும் சூர்யா, சிவகுமார் போன்றோர் இதுகுறித்து எந்தக் கருத்துகளையும் தெரிவிக்காமலேயே இந்த சர்ச்சை அடங்கிப் போனது.

இதுதவிர, மன்சூர் அலிகான், நடிகை த்ரிஷா குறித்து ‘இழிவாக’ பேசியதும் அதைத் தொடர்ந்து எழுந்த கண்டனங்களும் வைரலாகின.

மேலும், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த லியோ திரைப்படத்தில் கூறப்பட்ட ‘பிளாஷ்பேக்’ போலியானது என லோகேஷ் கூறியதும், அதற்கு ரசிகர்கள் தங்கள் கற்பனையில் ‘உண்மையான’ பிளாஷ்பேக் எனப் பல கதைகளை சமூக ஊடகங்களில் எழுதியதும் கவனம் பெற்றது.

 
’இந்தாம்மா ஏய்’
நடிகர் மாரிமுத்து

பட மூலாதாரம்,MARIMUTHU

படக்குறிப்பு,

நடிகர் மாரிமுத்து

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘எதிர் நீச்சல்’ தொடரில், ’ஆதி குணசேகரன்’ கதாபாத்திரத்தில் நடிகர் மாரிமுத்து பேசிய எதார்த்தமான வசனங்கள் ரசிகர்களிடையே இந்த ஆண்டு மிகுந்த கவனம் பெற்றன.

அதில், தன் வீட்டுப் பெண்களை ‘இந்தாம்மா ஏய்’ என அழைப்பது எதிர்மறை விமர்சனங்களைக் கிளப்பினாலும் அவருடைய உடல் மொழியும் வசனங்களை வெளிப்படுத்தும் தனி பானியும் அவருக்கு பாராட்டுகளைப் பெற்றுத் தந்தன.

‘பரியேறும் பெருமாள்’ திரைப்படம் மூலம் கவனம் பெற்ற மாரிமுத்து, இந்தத் தொடர் மூலம் தனக்கெனப் பெரும் ரசிகர் பட்டாளத்தை சமூக ஊடகங்கள் மூலம் பெற்றிருந்தார். அவருடைய ரசிகர்களுக்குப் பெரும் அதிர்ச்சியாக செப்டம்பர் மாதம் மாரடைப்பு ஏற்பட்டு மாரிமுத்து காலமானார்.

’மறக்குமா நெஞ்சம்’
ஏ.ஆர். ரகுமான்

பட மூலாதாரம்,GETTY IMAGES

செப்டம்பர் மாதம் நிகழ்ந்த ஏ.ஆர்.ரகுமானின் ‘மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சியில் தவறான நிர்வாகம் காரணமாகக் கூட்ட நெரிசல், டிக்கெட் வாங்கியவர்களுக்கு அனுமதி இல்லாதது, இடம் கிடைக்காதது, கூட்ட நெரிசலில் பெண்களுக்குப் பாலியல் அத்துமீறல் உள்ளிட்ட நிகழ்வுகள் நிகழ்ந்ததாகப் புகார் எழுந்தது. இதற்கு தாம் பொறுப்பு ஏற்பதாக ஏ.ஆர். ரகுமான் விளக்கம் அளித்தார்.

அதுகுறித்து மின்னஞ்சலுக்கு புகார் அளித்தால் டிக்கெட்டுக்கான பணம் திருப்பி அனுப்பப்படும் என்றும் தெரிவித்தார். ஆனாலும், தங்களுக்கு அந்தப் பணம் திரும்பி வரவில்லை எனப் பலரும் சமூக ஊடகங்களில் புகார் தெரிவித்திருந்தனர்.

https://www.bbc.com/tamil/articles/cn497ldnzryo

திருப்பூர்: 'சாமி பயம் காட்டி' பட்டியலின மக்கள் செருப்பு அணிவதை தடுத்த ஆதிக்க சாதியினர்

2 months 4 weeks ago
திருப்பூரில் சாதி தீண்டாமை
கட்டுரை தகவல்
  • எழுதியவர், ச.பிரசாந்த்
  • பதவி, பிபிசி தமிழுக்காக
  • 29 டிசம்பர் 2023

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையை அடுத்த கொண்டவநாயக்கன்பட்டி கிராமத்தில், ஆன்மிகத்தின் பெயரால் இன்னமும் தீண்டாமை பின்பற்றப்படுவதால், பட்டியலின மக்கள் ஆதிக்க சாதியினர் வீதியில் செருப்பு அணியாமல் நடக்கின்றனர்.

அதுமட்டுமின்றி, இந்து சமய அறநிலையத்துறைக்குச் சொந்தமான கோவிலுக்குள்ளேயே செல்ல முடியாத நிலையில் வாழ்ந்து வருகின்றனர்.

சாதி தீண்டாமை நடைபெறுவதாகப் புகார் கிடைத்ததால், கிராமத்தில் ஆய்வு செய்த மாவட்ட நிர்வாகத்தினர் பட்டியலின மக்களை செருப்பு அணிய வைத்தும், கோயிலுக்குள் கூட்டியும் சென்றுள்ளனர்.

என்ன நடக்கிறது கிராமத்தில்?

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையை அடுத்து அமைந்துள்ளது கொண்டவநாயக்கன்பட்டி கிராமம். அங்கு இன்னமும் தீண்டாமை பின்பற்றப்படுகிறது, பட்டியலின மக்கள் ஆதிக்க சாதியினர் வசிக்கும் பொதுவான வீதியில் செருப்பு அணிந்து நடக்க முடியவில்லை, அறநிலையத் துறைக்குச் சொந்தமான கோவிலுக்குள் நுழைய முடியவில்லை எனக் கூறி, திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தில் சமூக செயற்பாட்டாளர்கள் புகார் தெரிவித்திருந்தனர்.

இதைத் தொடர்ந்து டிசம்பர் 23ஆம் தேதி, திருப்பூர் மாவட்ட நிர்வாகம் பட்டியலின மக்களை, ஆதிக்க சாதி வீதியில் நடக்க வைத்தும், கோவிலுக்குள் அழைத்துச் சென்றும் வழிபட வைத்துள்ளனர்.

இப்படியான நிலையில், டிசம்பர் 27ஆம் தேதி, தேசிய ஆதிதிராவிடர் ஆணையத்தின் இயக்குநர் ரவிவர்மன் இந்தக் கிராமத்துக்கு வந்து, தீண்டாமை பின்பற்றப்படும் கோவில் மற்றும் ஆதிக்க சாதியினரின் வீதியைப் பார்வையிட்டு, மக்களிடம் விசாரணை நடத்தினார்.

 
திருப்பூரில் சாதி தீண்டாமை

உண்மையில் இந்தக் கிராமத்தில் என்ன நடக்கிறது என்பதைக் கண்டறிய பிபிசி தமிழ் கொண்டவநாயக்கன்பட்டி கிராமத்தில் கள ஆய்வு மேற்கொண்டது.

உடுமலை நகரில் இருந்து 6 கி.மீ. தொலைவு பயணித்து, சுற்றிலும் தென்னை மரங்கள், சோளம் சாகுபடியென இருந்த விளைநிலங்களுக்கு மத்தியில் அமைந்திருந்த கொண்டவநாயக்கன்பட்டி என்ற ராஜவூரை அடைந்தோம். அங்கு ஆதிக்க சாதியினர் 90 குடும்பங்களும், பட்டியலின மக்கள் 60 குடும்பங்களும் வசித்து வருகின்றனர்.

ஆதிக்க சாதி மக்களின் விவசாய நிலங்களில் விவசாயத் தொழிலாளர்களாக வேலைகளுக்குச் சென்று பட்டியலின மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

கிராமத்தின் நுழைவுப்பகுதியில் இருந்து 700 மீட்டர் தொலைவில் அமைந்திருந்தது தீண்டாமை பின்பற்றப்படும் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ராஜகாளியம்மன் கோவில்.

தீண்டாமை பின்பற்றப்படும் கம்பள நாயக்கர் வீதி கிராமத்தின் மையப் பகுதியில் வெறும் எட்டு அடி அகலத்தில் அமைந்திருந்தது. கோவிலையும் வீதியையும் பிபிசி தமிழ் பார்வையிட்டது. அங்குள்ள பட்டியலின மக்களிடம், ‘ஏன் நீங்கள் கோவிலுக்குள் செல்வதில்லை? கம்பள நாயக்கர் வீதியில் செருப்புடன் நடப்பதில்லை, காரணம் என்ன?’ என விசாரித்தோம்.

 
'பல ஆண்டுகளாக இப்படித்தான் இருக்கிறோம்'
திருப்பூரில் சாதி தீண்டாமை

பட்டியலின மக்களுக்காக பிபிசி தமிழிடம் பேசிய முத்துலட்சுமி, ‘எங்கள் ஊரில் நடந்த குடும்பப் பிரச்னையை சாதிப் பிரச்னையாக மாற்றிவிட்டார்கள். நாங்கள் எப்போதும் போல சாதிப் பாகுபாடு இல்லாமல் ஒற்றுமையாகத்தான் வாழ்கிறோம்,’’ என்றார்.

‘ஒற்றுமை எனச் சொல்கிறீர்கள். ஆனால் ஏன் அந்த வீதியில் செருப்பு அணிவதில்லை, கோவிலுக்குள் பட்டியலின மக்கள் நுழைவதில்லை? யாராவது மிரட்டுகிறார்களா?' என்று கேட்டோம்.

அதற்குப் பதிலளித்த முத்துலட்சுமி, ‘‘செருப்பு போட வேண்டாம், கோவிலுக்குள் வர வேண்டாம் என ஆதிக்க சாதியைச் சேர்ந்த யாரும் சொல்வதில்லை. ஆனால், எங்கள் அப்பா, தாத்தா காலத்தில் இருந்தே நாங்கள் பரம்பரையாக செருப்பு அணியாமல்தான் கம்பள நாய்க்கர் வீதியில் நடக்கிறோம்.

கோவிலுக்கு வெளியில் இருந்துதான் சாமி கும்பிடுகிறோம். பல ஆண்டுகளாக இப்படித்தான் இருக்கிறோம். இது பாரம்பரியமாகத் தொடர்வதால் எங்களுக்கு அதை மீறுவதில் விருப்பமில்லை, இனியும் இப்படித்தான் இருப்போம்," என்றார் அவர்.

 
'சாமிக்கு பயந்துதான் போவதில்லை'
திருப்பூரில் சாதி தீண்டாமை

பிபிசி தமிழிடம் பேசிய காளியம்மாள், ‘‘எனக்கு 60 வயதாகிறது. எனக்குத் தெரிந்த வரையில் நாங்கள் பல ஆண்டுகளாக ராஜகாளியம்மன் கோவிலுக்கு வெளியில் நின்றுதான் வழிபடுகிறோம்.

ஆண்டுதோறும் இந்தக் கோவிலின் பண்டிகையின்போது கம்பள நாயக்கர் வீதி வழியாகத்தான் அம்மன் சிலை எடுத்து வரப்படும்.

இந்த வீதியில் நாங்கள் செருப்பு அணியாமல்தான் சென்று வருகிறோம். அது பல ஆண்டுகளாக இருக்கும் கட்டுப்பாடு. நாங்கள் சாமிக்குப் பயந்து அதை மீறுவதில்லை, கோவிலுக்கு உள்ளேயும் போவதில்லை,’’ என்பதுடன் முடித்துக்கொண்டார்.

 
ஆன்மிகத்தின் பெயரால் மிரட்டல்!
திருப்பூரில் சாதி தீண்டாமை

நம்மிடம் பேசிய பெயர் தெரிவிக்க விரும்பாத பட்டியலின இளைஞர்கள் சிலர், அங்கு தீண்டாமை நிலவுவதாகக் கூறினர்.

‘‘நாங்கள் இந்தத் தீண்டாமையைத் தகர்த்து கோவிலுக்குள் சென்று வழிபடவும், செருப்பு அணிந்து பொதுவான அந்த வீதியில் நடக்கவும் முயன்றாலும், எங்கள் பெற்றோரே ஆதிக்க சாதியினருக்குப் பயந்து எங்களைத் தடுக்கின்றனர்.

அந்த அளவுக்கு இங்குள்ள பட்டியலின மக்கள் மனதில் தீண்டாமை கட்டமைக்கப்பட்டுள்ளது. இவற்றையும் மீறி தீண்டாமையை நாங்கள் தகர்க்க நினைத்தால், ஆதிக்க சாதியினர் பில்லி சூனியம் நடக்கும், காளியம்மாள் தண்டிப்பாள் என ஆன்மிகத்தின் பெயரிலும், தோட்ட வேலை தரமாட்டோம் எனவும் மிரட்டுவதாக,’’ அவர்கள் வருத்தத்துடன் கூறினார்கள்.

‘பாரம்பரியத்தை அனைவரும் பின்பற்றுகின்றனர்’

ஆதிக்க சாதியினர் சார்பாக பிபிசி தமிழிடம் பேசிய கிருஷ்ண குமார், ‘‘நாங்கள் பட்டியலின மக்களிடம் செருப்பு அணிய வேண்டாம், கோவிலுக்குள் நுழைய வேண்டாம் என யாரும் தெரிவிப்பதில்லை.

எங்கள் ஊருக்குள் காலம் காலமாகப் பழைய நடைமுறை, பாரம்பரியம் எப்படி இருக்கிறதோ அதை அனைவரும் பின்பற்றுகின்றனர். அதனால், பட்டியலின மக்கள் அவர்களாக செருப்பு அணிவதில்லை, கோவிலுக்குள் வருவதில்லை,’’ என்றார்.

 
ஆன்மிகத்தின் பெயரில் மறைமுக ஆதரவு?
திருப்பூரில் சாதி தீண்டாமை

பிபிசி தமிழிடம் பேசிய அந்தக் கிராமத்தைச் சேர்ந்த ராஜலட்சுமி, ‘‘கம்பள நாயக்கர் வீதியில்தான் காளியம்மன் திருக்கல்யாணம் நடக்கிறது. கடவுளுக்குப் பயந்துதான் பட்டியலின மக்கள் வீதியில் செருப்பு அணிய மாட்டார்கள்; காளியம்மன் கோவிலுக்குள் வரமாட்டார்கள். நாங்கள் யாரும் அவர்களை கோவிலுக்குள் நுழைய வேண்டாம், செருப்பு அணிய வேண்டாம் எனக் கூறுவதில்லை,’’ என்றார்.

ராஜலட்சுமி நம்மிடம் பேசிக்கொண்டருந்த போதே கோபத்தில் திடீரென, ‘‘அசலூர்காரங்க சொல்லிக் கொடுத்துதான் இப்படியெல்லாம் பிரச்னை நடக்குது. இங்க அவுங்க (பட்டியலின மக்கள்) செருப்பு போட்டுட்டு வரமாட்டாங்க, அதையும் மீறி வந்தா அவுங்கள (பட்டியலின மக்கள்) காளியாத்தா பாத்துக்கும், அப்றம் அனுபவிப்பாங்க,’’ என மிரட்டும் தொனியில் பேசினார்.

ஆதிக்க சாதியைச் சேர்ந்த பலரிடம் பிபிசி தமிழ் பேசியதில் பெரும்பாலானவர்கள், ‘பட்டியலின மக்கள் செருப்பு அணிந்து வந்தாலோ, கோவிலுக்குள் வந்தாலோ ராஜகாளியம்மாள் தண்டிப்பார், அவர்கள் எப்போதும் ஊர் கட்டுப்பாட்டை மீற மாட்டார்கள்,’ என, ஆன்மிகத்தின் பெயரால் தீண்டாமையை மறைமுகமாக ஆதரிக்கும் மனநிலையில்தான் இருந்தனர்.

 
மாவட்ட நிர்வாகம் சொல்வது என்ன?
திருப்பூரில் சாதி தீண்டாமை

இந்த விவகாரம் தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய உடுமலைப்பேட்டை வருவாய் கோட்டாட்சியர் ஜஸ்வந்த் கண்ணன், ‘‘ஒரு குடும்ப பிரச்னை தொடர்பான வழக்கின் போதுதான், இந்தக் கிராமத்தில் தீண்டாமை நடப்பதாகப் புகார் வந்தது.

விசாரித்தபோது, 30 ஆண்டுகளுக்கு முன்பு ஆதிக்க சாதியைச் சேர்ந்த சிலர் பட்டியலின மக்கள் கோவிலுக்குள் வரக்கூடாது, செருப்பு அணியக்கூடாது என கட்டுப்பாடுகள் விதித்திருந்தனர் என்பது தெரிய வந்தது. ஆனால், அவர்கள் யாரும் தற்போது உயிருடன் இல்லை.

இப்போது யாரும் கட்டுப்பாடுகள் விதிப்பதும் இல்லை. ஆனால், பல ஆண்டுகளாக தீண்டாமையைப் பின்பற்றிய பட்டியலின மக்கள் இன்னமும் அதைப் பின்பற்றுகின்றனர்,’’ என்கிறார் அவர்.

மேலும், ‘‘தீண்டாமை தொடர்பான புகாரைப் பெற்ற பின் டிசம்பர் 23ஆம் தேதி மாவட்ட நிர்வாகம் சார்பில் நாங்கள் பட்டியலின மக்களை கோவிலுக்குள் அழைத்துச் சென்றும், கம்பள நாயக்கர் வீதியில் செருப்பு அணிய வைத்து நடந்து அழைத்துச் சென்றும் தீண்டாமையைத் தகர்க்க நடவடிக்கை எடுத்துள்ளோம். அந்தக் கிராமத்தைக் கண்காணித்து வருகிறோம், தீண்டாமையை யார் கட்டவிழ்த்தாலும் நடவடிக்கை எடுப்போம்,’’ என்றார் ஜஸ்வந்த் கண்ணன்.

 
‘மிரட்டினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்’
திருப்பூரில் சாதி தீண்டாமை

தீண்டாமை நடந்ததாகக் கூறப்பட்ட கோவில் மற்றும் வீதியில் ஆய்வு செய்த, தேசிய ஆதிதிராவிடர் ஆணையத்தின் இயக்குநர் ரவிவர்மன் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘‘கொண்டவநாயக்கன்பட்டி கிராமத்தில் தீண்டாமை பின்பற்றப்படுவதாக புகார் எழுந்ததால் ஆய்வு செய்துள்ளோம்.

நாங்கள் பார்த்த வரையில் பட்டியலின மக்கள் கோவிலுக்குள் நுழைய முடிகிறது. செருப்பு அணிந்து நடக்க முடிகிறது, இதில் மற்ற சாதியினரால் எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால், பட்டியலின மக்களாக முன்வந்துதான் இதைப் பழக்கத்தில் கொண்டு வர வேண்டும்,’’ என்றார்.

பேட்டியின்போது, ‘கோவில் நுழைவு, செருப்பு அணிந்து நடக்க பட்டியலின மக்கள் முயன்றால், வேலையைக் காரணம் காட்டி ஆதிக்க சாதியினர் மிரட்டுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு நிலவுகிறது’ என்ற கேள்வியை இயக்குநர் ரவிவர்மனிடம் முன்வைத்தோம்.

அதற்கு விளக்கமளித்த ஆதிதிராவிடர் ஆணையத்தின் இயக்குநர் ரவிவர்மன், ‘‘போலீஸார், மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்துதான் இந்தக் கிராமத்தில் ஆய்வு செய்துள்ளோம். அப்படி யாரேனும் மிரட்டினால், பட்டியலின மக்கள் எங்களிடம் புகாரளிக்கலாம். மிரட்டுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்,’’ என்றார் அவர்.

 
சுதந்திரமாக உணர்ந்தேன்!
திருப்பூரில் சாதி தீண்டாமை

அரசு அதிகாரிகளுடன் சேர்ந்து வீதியில் செருப்புடன் நடந்து தீண்டாமையைத் தகர்த்த பட்டியல் இனத்தைச் சேர்ந்த ஒருவர், தனது அனுபவத்தை பிபிசி தமிழுடன் பகிர்ந்துள்ளார்.

பிபிசி தமிழிடம் பேசிய அவர், "எனக்கு 40 வயசாகுது. இத்தனை ஆண்டுகளாக நான் கம்பள நாயக்கர் வீதியுடைய நுழைவுப் பகுதியிலேயே செருப்பை விட்டுவிட்டு வெறும் காலில்தான் அந்த வீதிக்குள் போய் வருவேன்.

அந்த வீதியில் ஒரு கடை இருக்கிறது. அங்கு பொருட்களை வாங்கக்கூட செருப்பைக் கழற்றிவிட்டுத்தான் செல்வேன். ராஜகாளியம்மன் கோவிலுக்குச் சென்றால் குடும்பத்துடன் கோவிலுக்கு வெளியில் நின்றுதான் சாமி கும்பிடுவேன்.

அதிகாரிகள் சமூக செயற்பாட்டாளர்கள் முயற்சியால் செருப்பு அணிந்து அந்த வீதியில் முதல் முறையாக நடந்தேன். கோவிலுக்குள் சென்று வழிபட்டபோது, சுதந்திரமாக உணர்ந்தேன். எங்கள் கிராமத்தில் எப்போதும் நாங்கள் இதேபோல் சுதந்திரமாக இருந்தால் நன்றாக இருக்கும்," என்றார் மகிழ்ச்சியுடன்.

https://www.bbc.com/tamil/articles/cv2m84l79jdo

Vijayakanth: தேமுதிக தலைவர் விஜயகாந்த் காலமானார்

3 months ago
Live Update

நடிகரும், தே.மு.தி.க தலைவருமான விஜயகாந்த் உடல் நலக்குறைவு காரணமாக வீட்டிலேயே ஓய்வில் இருந்தார். அவ்வப்போது சிகிச்சைக்காக வெளிநாடுகளுக்கும், உள்ளூரில் இருக்கும் மருத்துவமனைகளுக்கும் செல்வது வழக்கம். இதனால் அவர் பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதைத் தவிர்த்து வந்தார். இதற்கிடையில், கடந்த மாதம் 18-ம் தேதி சென்னையில் இருக்கும் தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்ட விஜயகாந்த், நீண்ட நாள் சிகிச்சைக்குப் பின்னர் குணமடைந்து வீடு திரும்பினார்.

 
விஜயகாந்த்
 
விஜயகாந்த்

அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட பிறகு, தே.மு.தி.க தலைமை செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் குறித்த அறிவிப்பு வெளியானது. அதன்படி கடந்த 14-ம் தேதி நடந்த கட்சிப் பொதுக்குழுக் கூட்டத்தில், விஜயகாந்த் முன்னிலையில் பொதுச்செயலாளராக அறிவிக்கப்பட்டார், பிரேமலதா. பின்னர் விஜயகாந்தின் காலில் விழுந்து ஆசியும் பெற்றார். இந்த நிலையில், மீண்டும் உடல்நலக் குறைவால் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

 
42 mins ago

இது குறித்து தே.மு.தி.க வெளியிட்டிருக்கும் அறிக்கையில், "மருத்துவப் பரிசோதனையில் கேப்டனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதால், வென்டிலேட்டர் சிகிச்சையளிக்கப்படுகிறது" எனக் குறிப்பிட்டிருந்தது. மேலும் மருத்துவமனை பகுதியில் தீவிர போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இந்த நிலையில், நடிகர் விஜயகாந்த் சிகிச்சைக் குறித்து மருத்துவ நிர்வாகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில்,நேற்று உடல்நிலை சீரற்ற நிலையில், மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஜயகாந்துக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. ஏற்கெனவே நுறையீரல் தொற்று இருந்த நிலையில், அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருந்தது. அதனால் அவருக்கு வெண்டிலேட்டர் பொருத்தி தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்தார்" எனக் குறிப்பிட்டிருக்கிறது.

விஜயகாந்த் மரணம் தொடர்பான தகவல்கள் வெளியான நிலையில், தொண்டர்களும், அவரது ரசிகர்களும் பெரும் சோகத்தில் ஆழ்ந்திருக்கின்றனர். அவரது உடல், சாலிகிராமத்தில் இருக்கும் அவரது இல்லத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டிருக்கிறது. அவரது இல்லத்தில் தேமுதிக கட்சிக் கொடி, அறைக் கம்பத்தில் பறக்கவிடப்பட்டிருக்கிறது.

https://www.vikatan.com/government-and-politics/corona-dmdk-leader-actor-vijayakanth-passed-away?pfrom=home-main-row

 

சென்னை எண்ணூரில் நள்ளிரவில் ஏற்பட்ட அமோனியா வாயுக் கசிவு; மூச்சுத் திணறலால் தப்பியோடிய மக்கள் - என்ன நடந்தது?

3 months ago
எண்ணூர் அம்மோனியா கசிவு
படக்குறிப்பு,

நள்ளிரவில் திடீரென காற்றில் ஒருவித நெடி பரவத் தொடங்கியதால் அதிர்ச்சியடைந்த மக்கள் தங்கள் வாகனங்களில் அந்த பகுதியை விட்டு வெளியேறியுள்ளனர்.

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

சென்னை, எண்ணூரின் பெரியகுப்பம் பகுதியில் உள்ள கோரமண்டல் இன்டர்நேஷனல் லிமிடெட் எனும் ஒரு உர உற்பத்தி ஆலையில் அமோனியா வாயு கசிந்ததை மாசு கட்டுப்பாடு வாரியம் உறுதி செய்துள்ளது.

கோரமண்டல் ஆலை கடலில் அமைத்துள்ள திரவ அமோனியா வாயு எடுத்து வரும் குழாயிலிருந்து அமோனியா கசிந்ததுள்ளது.

எண்ணூர் பகுதியில் மிக்ஜாம் புயல் ஏற்படுத்திய வெள்ளத்தினால் எண்ணெய்க் கழிவுகள் வெள்ள நீரில் கலந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அப்பாதிப்பிலிருந்து எண்ணூர் பகுதி மக்கள் மீள்வதற்குள் இந்த சம்பவம் நடந்துள்ளது.

கோரமண்டல் ஆலைக்கான அமோனியா, எண்ணூர் துறைமுகம் வழியாக கப்பல்கள் மூலம் கொண்டு வரப்பட்டு அங்கிருந்து கடலுக்கு அடியில் போடப்பட்டுள்ள 2.5 கி.மீ நீளமுள்ள பைப்லைனைப் பயன்படுத்தி கரையில் உள்ள கோரமண்டல் ஆலைக்கு அனுப்பப்படுகிறது.

எண்ணூர் வாயுக் கசிவு

பட மூலாதாரம்,CCAG/X

படக்குறிப்பு,

மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் மக்கள்

நள்ளிரவில் கசிந்த அமோனியா

நேற்று இரவு 12.45 மணிக்கு அந்த குழாயிலிருந்து அமோனியா கசிவு ஏற்பட்டுள்ளது. கசிவு ஏற்படத் தொடங்கி இரண்டு மணிநேரம் கழித்து, கோரமண்டல் ஆலையைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் குழுவினர் அங்கு விரைந்து சென்று கசிவை சரி செய்துவிட்டதாக கோரமண்டல் ஆலை சார்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அமோனியா கசியத் தொடங்கியவுடன், பெரியகுப்பம், சின்னக்குப்பம் மற்றும் அருகே உள்ள கிராமங்களை சேர்ந்த மக்களுக்கு மூச்சுத் திணறல், கண் எரிச்சல் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. நள்ளிரவில் திடீரென காற்றில் ஒருவித நெடி பரவத் தொடங்கியதால் அதிர்ச்சியடைந்த மக்கள் தங்கள் வாகனங்களில் அந்த பகுதியை விட்டு வெளியேறியுள்ளனர்.

வாயுக்கசிவால் பாதிக்கப்பட்டவர்கள் காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் மூலம் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

கோரமண்டல் நிறுவனம் சார்பாக செய்யப்பட்ட சோதனையில், ஆலையின் வளாகத்தில் 400 மைக்ரோ கிராம் இருக்க வேண்டிய அமோனியா 2090 கிராமாக இருந்தது. அதாவது வழக்கத்தை விட ஐந்து மடங்கு அமோனியா காற்றில் பரவியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

கடல் நீரில் லிட்டருக்கு 5 மி.கி இருக்க வேண்டிய அமோனியா 49 மி.கி என இருந்துள்ளது. இதனால் தமிழ்நாடு கடல்சார் வாரியத்தின் ஒப்புதலோடு மட்டுமே இனி குழாயை பதிக்க வேண்டும் மாசு கட்டுப்பாடு வாரியம் உத்தரவிட்டுள்ளது.

எண்ணூர் வாயுக் கசிவு

பட மூலாதாரம்,CCAG/X

படக்குறிப்பு,

வீட்டை விட்டு வெளியேறிய மக்கள்

அன்புமணி ராமதாஸ் கூறியது என்ன?

இது குறித்து பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தனியார் தொழிற்சாலையின் அலட்சியம் மற்றும் பாதுகாப்புக் குறைபாடுகளால் ஏற்பட்டுள்ள இந்த பாதிப்பு அதிர்ச்சியளிக்கிறது.

எண்ணூர் துறைமுகத்தில் கப்பல்களில் இருந்து ஆலைக்கு அமோனியா வாயு கொண்டு வருவதற்காக குழாய் சேதமடைந்தது தான் வாயுக்கசிவுக்கு காரணம் ஆகும்.

எண்ணூர் பகுதியில் செயல்பட்டு வரும் பொதுத்துறை நிறுவனத்தில் இருந்து கச்சா எண்ணெய் கசிந்ததால் பொதுமக்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் ஏற்பட்ட பாதிப்பு இன்னும் முழுமையாக களையப்படாத நிலையில் அடுத்து வாயுக்கசிவு ஏற்பட்டிருக்கிறது.

எண்ணூர் பகுதியில் செயல்பட்டு வரும் தொழிற்சாலைகளில் போதிய அளவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவில்லை என்பதையே இந்த நிகழ்வு காட்டுகிறது.” என்று கூறினார்.

எண்ணூர் வாயுக் கசிவு

பட மூலாதாரம்,GETTY IMAGES

கோரமண்டல் ஆலை மீது நடவடிக்கை தேவை- பூவுலகின் நண்பர்கள்

பூவுலகின் நண்பர்கள் இயக்கத்தின் சார்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், "பெரிய குப்பம் மீனவர் கிராமத்தில் இரவு தூங்கிக் கொண்டிருந்த மீனவமக்கள் சுவாசிக்க முடியாமல், மூச்சுவிட முடியாமல், நெஞ்சு எரிச்சல் ஏற்பட்டு பலர் மயக்கமடைந்துள்ளனர்"

"ஆண்கள், பெண்கள் குழந்தைகள் என ஒட்டுமொத்த மக்களும் பயந்து நள்ளிரவில் ஊரை விட்டு வெளியேறி 8 முதல் 10 கி.மீ. தொலைவு தாண்டி சமுதாயக் கூடங்கள், கோயில்கள், தேவாலயங்கள், மருத்துவமனைகளில் தஞ்சமடைந்தனர். திருவொற்றியூர் முதல் எண்ணூர் தாழங்குப்பம் வரை உள்ள கிராம மக்கள் அனைவரும் தெருக்களில் மாஸ்க் அணிந்தவாறு அச்சத்துடன் கூட்டம் கூட்டமாக இருந்துள்ளனர்"

"30க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் மூலம் மக்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இன்று காலை நிலவரப்படி 30 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் 2 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள செய்தி வருத்தமளிக்கிறது. இதுமட்டுமின்றி எண்ணூரில் கடற்கரையோரம் மீன்கள், நண்டுகள், இறால்கள் ஏராளம் இறந்து கரை ஒதுங்கியுள்ளன. கடல் வெள்ளை நிறத்தில் காணப்படுகிறது" என்று கூறப்பட்டுள்ளது.

"கசிவால் பாதிப்படைந்த கிராமங்கள் ஒவ்வொன்றிலும் சுகாதாரத்துறை சிறப்பு முகாம்களை அமைக்க வேண்டும், பொதுமக்களுக்கு ஏற்பட்ட சுகாதார பாதிப்புகளுக்கான இழப்பீட்டை கோரமண்டல் நிறுவனமே வழங்க வேண்டும்" என்று அந்த இயக்கத்தின் சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

மேலும் கோரமண்டல் உள்ளிட்ட சிவப்பு வகை தொழிற்சாலைகளின் உற்பத்தி உடனடியாக நிறுத்தப்பட்டு ஆலைகளின் பாதுகாப்பு தொடர்பாக தமிழ்நாடு தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககமும், தமிழ் நாடு கொதிகலன்கள் இயக்குனரகம் மற்றும் மாசு கட்டுப்பாடு வாரியம் இணைந்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என பூவுலகின் நண்பர்கள் இயக்கம் தமிழ்நாட்டு அரசை வலியுறுத்தியுள்ளது.

https://www.bbc.com/tamil/articles/cyxvww5e67go

கோவை, திருப்பூரில் ரூ.500 கோடி மோசடி!

3 months ago
கோவை, திருப்பூரில் ரூ.500 கோடி மோசடி? மொபைல் செயலி, வாட்ஸ்ஆப் மூலம் ஆள் சேர்த்து ஏமாற்றியது எப்படி?
சைபர் க்ரைம்

பட மூலாதாரம்,SHANMUGA VELAYUTHAN

கட்டுரை தகவல்
  • எழுதியவர், ச.பிரசாந்த்
  • பதவி, பிபிசி தமிழுக்காக
  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்

தமிழ்நாட்டில் கோவை, திருப்பூர், நீலகிரி உள்பட பல்வேறு மாவட்ட மக்களை, எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜ் ஸ்டேஷன் மீது முதலீடு செய்ததால் அதிக வருமானம் கிடைக்கும் என்று கூறி, பேராசையைத் தூண்டி பல கோடி ரூபாயை நூதன முறையில் மோசடி செய்துள்ளது சைபர் க்ரைம் கொள்ளை கும்பல். மோசடி கும்பல் மக்களை ஏமாற்றியது எப்படி?

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் கடந்த வாரம், 20-க்கும் மேற்பட்டோர் தாங்கள் சைபர் க்ரைம் கொள்ளை கும்பலால் மோசடிக்கு உள்ளாகி பல லட்சம் ரூபாயை இழந்ததாக புகார் ஒன்றை கொடுத்தனர்.

ஓ.டி.பி பகிர்வு, பகுதி நேர வேலை (Task based work) என சாதாரணமாக பல்வேறு வகையான சைபர் க்ரைம் மோசடிகள் குறித்து புகார் வருவது வழக்கமான ஒன்று. ஆனால், இந்த 20 பேர் மோசடிக்கு உள்ளாகியதும், அவர்கள் கொடுத்த புகாரும் முற்றிலும் புதிய முறையாக உள்ளது. ஏனெனில், சைபர் க்ரைம் மோசடி கும்பல், அமெரிக்காவை சேர்ந்த பிரபலமான எலெக்ட்ரிக் சார்ஜ் நிறுவனத்தின் பெயரிலேயே மிக நூதனமாக மோசடியை அரங்கேற்றியுள்ளது.

அமெரிக்க நிறுவனம் பெயரில் மோசடி
சைபர் க்ரைம்

பட மூலாதாரம்,SHANMUGA VELAYUTHAN

மோசடி கும்பல் செயல்பட்டது எப்படி? நம்பகத்தன்மையை ஏற்படுத்தி எப்படி கோடிக்கணக்கில் ஏமாற்றியது? என பாதிக்கப்பட்டவர்களிடம் விசாரித்தது பிபிசி தமிழ். அவர்கள் பகிர்ந்த அனைத்துத் தகவலும் மிகவும் அதிர்ச்சிக்குரியதாக உள்ளது.

பிபிசி தமிழிடம் பேசிய கோவையை சேர்ந்த சண்முக வேலாயுதன், ‘‘எனது நண்பர்கள் சிலர், எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் ஸ்டேஷன் அமைத்து வரும் அமெரிக்காவை சேர்ந்த ஈவி கோ (EVgo) என்ற நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைப்பதாக தெரிவித்தனர். நானும் அதில் இணைய வேண்டுமென கேட்ட போது, அந்த நிறுவனத்தின் செயலி என்று கூறி ஒரு லிங்க் அனுப்பினர்.

அதில், சென்று கூகுள் பிளே ஸ்டோரில் இல்லாத (Third Party App) அந்த மொபையில் செயலியை பதிவிறக்கம் செய்து எனது விபரங்களை உள்ளீடு செய்து பதிவு செய்தேன். மொபைல் செயலியில் இருந்த அறிவுரைப்படி அவர்களின் டெலிகிராம் மற்றும் வாட்ஸ்ஆப் குழுவில் இணைந்து கொண்டேன். வாட்ஸ்ஆப்பில் தான் அவர்கள் முதலீடு தொடர்பான முழுத்தகவலை பகிர்ந்தனர், அதன்பின் தான் முதலீடு செய்தேன்,’’ என்றார் சண்முக வேலாயுதன்.

 
சைபர் க்ரைம்

பட மூலாதாரம்,SHANMUGA VELAYUTHAN

கவர்ச்சிகரமான முதலீட்டு திட்டங்கள்

மேலும் தொடர்ந்த அவர், ‘‘அந்த நிறுவனத்தின் வாட்ஸ்ஆப் குழுவில் இருந்த வைஷக் தேசாய் என்பவர் தான் அந்த நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவர் என அறிமுகமாகிவிட்டு, வெளிநாட்டில் உள்ள EVgo நிறுவனத்தின் சார்ஜிங் ஸ்டேஷன்கள் மீது பணம் முதலீடு செய்வதால் கிடைக்கும் வருமானத்தை எங்களுக்கு பகிர்ந்து கொடுப்பது தான் இந்தத் தொழில் என்றார்.

680 ரூபாய் முதலீடு செய்தால் நாளொன்றுக்கு 37 ரூபாய் வீதம் 35 நாட்களுக்கு, 1,295 ரூபாய் வருமானம், 6,000 ரூபாய் முதலீடு செய்தால் தினமும் 480 வீதம் 52 நாட்களுக்கு 24,960 ரூபாய் , 58,000 முதலீடு செய்தால் தினமும் 5,200 ரூபாய் வீதம் 1,52,000 ரூபாய் வருமானம் என பலவித கவர்ச்சிகர முதலீட்டு திட்டங்களை பகிர்ந்தார்.

ஏற்கனவே என் நண்பர்கள் சிலர் இது போன்று முதலீடு செய்து வருமானம் ஈட்டியுள்ளனர். அவர்களின் வாட்ஸ்ஆப், டெலிகிராம் குழுவிலும் சிலர் தினமும் பணம் பெற்றதாக ஸ்கிரீன் ஷாட்கள் பகிர்ந்துள்ளனர். இதனை நம்பி முதலில் 680 ரூபாய் முதலீடு செய்ததற்கு வருமானம் கிடைத்தது. பின் கொஞ்சம் கொஞ்சமாக முதலீட்டை அதிகரித்து இறுதியாக, 80 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்தேன்,’’ என்கிறார், சண்முக வேலாயுதன்.

 
சைபர் க்ரைம்

பட மூலாதாரம்,SHANMUGA VELAYUTHAN

எப்படி ஏமாற்றப்பட்டோம் என்பதை விளக்கினார் சண்முக வேலாயுதன்.

இது குறித்து விளக்கிய அவர், ‘‘முதலீடு செய்து வருமானம் வந்து கொண்டிருந்த நேரத்தில், திடீரென வருமானத்தை திரும்ப பெறும் (Withdrawal) முறையில் அமெரிக்காவில் புது நடைமுறை வந்துள்ளதால், பணத்தை எடுக்க குறிப்பிட்ட அளவு பணத்தை செலுத்தி ஏ.டி.எம். அட்டை ஒன்றை முதலீட்டாளர்கள் வாங்க வேண்டும், அதன்பின் பணத்தை எடுத்துக் கொள்ளலாம் என்று கூறினர்.

நான் உள்பட பலரும் பணம் செலுத்தி ஏ.டி.எம். அட்டை வாங்கிய பின் வருமானத்தை பெறக் காத்திருந்த போது திடீரென அந்த செயலி செயல்படவில்லை. வாட்ஸ்ஆப் மற்றும் டெலிகிராமில் இந்த நிறுவனம் சார்பில் அறிமுகமான வைஷக் தேசாய் என்பவரையும் தொடர்புகொள்ள முடியவில்லை. நாங்கள் EVgo நிறுவனத்தை மெயில் மூலம் தொடர்பு கொண்டு கேட்ட போது தான் இத்தனை நாட்கள் EVgo பெயரில் போலிச் செயலியை பயன்படுத்தி சிலர் எங்களிடம் மோசடி செய்தது தெரியவந்தது,’’ என்கிறார் சண்முக வேலாயுதன்.

 
சைபர் க்ரைம்

பட மூலாதாரம்,SHANMUGA VELAYUTHAN

நம்பிக்கையை ஏற்படுத்தி மோசடி

மோசடிக்கு உள்ளான கோவையைச் சேர்ந்த வீரா என்பவர், ‘‘என் நண்பர்கள் பகிர்ந்ததால் நானும் EVgo முதலீட்டு திட்டத்தில் இணைந்தேன். முதலீடு மட்டுமின்றி ஆட்களை சேர்த்து விட்டால் மாதம் 20 ஆயிரம் ரூபாய்க்கு மேல் வருமானம் கிடைப்பதாகவும் கூறியிருந்தனர்.

இந்தியாவில் 5 கோடி ஆட்கள் சேர்ந்துள்ளனர், 7 கோடி ஆட்கள் சேர்ந்துள்ளனர் என்று கூறி வாட்ஸ்ஆப் குழுவில் வட மாநிலங்களை சேர்ந்தவர்கள் EVgo நிறுவனம் சார்பில் கேக் வெட்டி கொண்டாடுவது, பார்ட்டி வைப்பது, பணியில் சேர்ந்தவர்கள் மற்றும் முதலீடு செய்தவர்களுக்கு அதற்கான ஆவணங்கள் வழங்குவது போன்ற படங்கள், வீடியோக்களை பகிர்ந்தனர்.

மிகவும் படித்த என் நெருங்கிய நண்பர் சொல்லியதால் நான் இந்த முதலீட்டில் சேர்ந்தேன். எனக்கும் முதலீடு செய்த தொகைக்கு ஏற்ப வருமானத்தை அவர்கள் கொடுத்து வந்ததால் EVgo நிறுவனத்தின் மீது அதீத நம்பிக்கை ஏற்பட்டது. இதனால், சேர்ந்த பத்து நாட்களில் முதலீட்டை சிறிது சிறிதாக அதிகரித்து இறுதியாக 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்திருந்தேன். திடீரென செயலி செயல்படாமல் போன பின்பு தான் மோசடிக்கு உள்ளானதை கண்டறிந்தேன்,’’ என்கிறார் வீரா.

‘குறைந்தபட்சம் ரூ.500 கோடி மோசடி’

மேலும் தொடர்ந்த வீரா, ‘‘எனக்கு தெரிந்து கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி என தமிழகம் முழுவதிலும் பலரும் முதலீடு செய்துள்ளனர். தவிர, கர்நாடகா, ஆந்திர மாநிலத்திலும் முதலீடு செய்துள்ளனர். நான் இருந்த வாட்ஸ்ஆப் குழுவிலேயே 180-க்கும் மேற்பட்டோர் இருந்தனர்.

இது போன்று பல குழுக்களை அவர்கள் நடத்தி வந்தனர். மோசடிக்குப்பின் குழுவில் இருந்து 50-க்கும் மேற்பட்டோரிடம் நான் பேசியுள்ளேன். ஒவ்வொருவரும் குறைந்தபட்சம் 50 ஆயிரம் – 7 லட்சம் வரையில் முதலீடு செய்ததாக கூறுகின்றனர். குறைந்தபட்சமாக 500 கோடி ரூபாய்க்கும் மேல் இந்த கும்பல் மோசடி செய்திருக்கும். தற்போது வேறு ஒரு பெயரில் மீண்டும் தங்கள் வேலையை துவங்கியுள்ளனர்.

இனிமேல் எங்களைப் போல யாரும் ஏமாற்றம் அடையக்கூடாது என்பது தான் எங்களின் நோக்கம். ஆனால், அரசும், தமிழக போலீஸாரும் இதை சாதாரண மோசடியாக பார்க்கின்றனர். பல கோடி ரூபாயை மோசடி செய்த இந்த கும்பலை கண்டறிய வேண்டும், மீண்டும் அவர்கள் மக்களை ஏமாற்றும் முன் தடுத்து நிறுத்த வேண்டும்,’’ என கோரிக்கையை முன்வைக்கிறார் வீரா.

 
சைபர் க்ரைம்

பட மூலாதாரம்,SHANMUGA VELAYUTHAN

காவல்துறையினர் சொல்வது என்ன?

இதுதொடர்பாக, கோவை சைபர் க்ரைம் காவல் ஆய்வாளர் அருணிடம் பேசியது பிபிசி தமிழ். அதற்குப் பதிலளித்த காவல் ஆய்வாளர் அருண், ‘‘இந்த வழக்கு தொடர்பாக புகார் பெற்று விசாரணை நடத்தி வருகிறோம். ஆன்லைனிலும் சிலர் இன்னமும் புகார்கள் தெரிவித்து வருகின்றனர். மோசடி குறித்த விசாரணையை பொருளாதார குற்றப்பிரிவுடன் இணைந்து நடத்த திட்டமிடப்பட்டுள்ளது,’’ என்றார்.

பிபிசி தமிழிடம் பேசிய தமிழக பொருளாதார குற்றப்பிரிவின் காவல் கண்காணிப்பாளர் (SP) ஜோஸ் தங்கையா, ‘‘குறிப்பிட்ட சில தொகைக்கு மேல் குற்றம் நடந்திருந்தால் தான் அந்த வழக்கு சைபர் க்ரைம் மற்றும் இதர போலீஸாரிடம் இருந்து பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றப்படும். கோவையில் EVgo மோசடி தொடர்பான வழக்கு இன்னமும் எங்களுக்கு வரவில்லை. இருந்தாலும் குற்றத்தின் பின்னணி, மோசடி செய்யப்பட்ட தொகை குறித்த விவரங்களை சேகரித்து விசாரணையை துவங்குவோம்,’’ என்றார் சுருக்கமாக.

”தனிப்பட்ட விவரங்களையும் திருடும் மோசடி கும்பல்”

EVgo போன்ற மூன்றாம் தரப்பு செயலிகளை பயன்படுத்துவதனால், மோசடி கும்பல் பயனர்களின் தகவல்களைத் திருடியும் விற்பனை செய்யக் கூடும் என்று எச்சரிக்கின்றனர் சைபர் க்ரைம் வல்லுநர்கள்.

இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய சைபர் க்ரைம் வல்லுநர் வினோத் ஆறுமுகம், ‘‘பாதிக்கப்பட்டவர்கள் EVgo செயலியை கூகுள் பிளே ஸ்டோர், ஆப்பிள் ஸ்டோரில் அல்லாமல் மூன்றாம் தரப்பு (Third party) செயலியாக, தனி இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துள்ளனர். பெரும்பாலும் நமது தகவல்களை சேகரித்து அதை விற்பனை செய்வோர் மற்றும் அதை தவறாக பயன்படுத்துவோர் தான் தனி இணையதளத்தில் மூன்றாம் தரப்பு செயலியாக வெளியிடுகின்றனர்.

இதை நாம் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தினால், அவர்கள் நிச்சயம் நம் மொபைலில் உள்ள ஒட்டுமொத்த தகவல்களையும் திருடுவார்கள். சில வழக்குகளில் சைபர் க்ரைம் மோசடி செய்தோர், பாதிக்கப்பட்டவரின் மொபைல், மெயிலை மீண்டும் தொடர்பு கொண்டு வேறு வகையான மோசடி செய்ய முயற்சித்துள்ளனர். தனி இணையதளத்தில் மூன்றாம் தரப்பு செயலி என்றாலே அது மோசடியாகத்தான் இருக்குமென்பதை மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும்,’’ என்கிறார் அவர்.

https://www.bbc.com/tamil/articles/c4ny7gmrnvyo

சென்னை: பெண் என்ஜினியர் உயிரோடு எரித்துக் கொலை, திருநம்பி கைது - என்ன நடந்தது?

3 months ago
சென்னை: பெண் என்ஜினியர் உயிரோடு எரித்துக் கொலை

பட மூலாதாரம்,HANDOUT

படக்குறிப்பு,

கொலையுண்ட நந்தினி

24 டிசம்பர் 2023
புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர்

சென்னை புறநகர் பகுதியில் சனிக்கிழமை இரவு பெண் மென்பொறியாளரை கை, கால்களைக் கட்டிப்போட்டு உயிருடன் எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தீயில் கருகி உயிருக்குப் போராடிய பெண்ணை, அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். போலீசாரின் விசாரணையில், ஒருதலையாக காதலித்து வந்த அந்தப் பெண்ணின் பள்ளிப்பருவ நண்பர் இந்தக் கொலையில் ஈடுபட்டது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

என்ன நடந்தது?
கொலை

பட மூலாதாரம்,GETTY IMAGES

சனிக்கிழமை இரவு சுமார் 7.30 மணியளவில், சிறுசேரியை அடுத்த பொன்மார் பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் இருந்து ஒரு பெண்ணின் குரல் கேட்டுள்ளது. அருகில் சென்று பார்த்தபோது, கை கால்கள் கட்டப்பட்டு, பாதி எரிந்த நிலையில், ஒரு பெண் உயிருக்குப் போராடியுள்ளார்.

அவரை மீட்ட அப்பகுதி மக்கள், அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அப்பெண் உயிரிழந்துள்ளார். இந்த தகவல் கிடைத்து சம்பவ இடத்திற்கு விரைந்த தாம்பரம் காவல் ஆணையரகத்திற்கு உட்பட தாழம்பூர் போலீசார் விசாரணை நடத்தினர்.

சம்பவ இடத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட செல்போனை வைத்து, இறந்த நபர் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த நந்தினி(24) எனத் தெரியவந்தது. “இவர் கடந்த எட்டு மாதங்களாக துரைப்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் மென்பொருள் நிறுவனத்தில் என்ஜினியராக பணியாற்றி வந்தார்,” என வழக்கை விசாரித்த போலீசார் தெரிவித்தனர்.

வெற்றிமாறன்

பட மூலாதாரம்,HANDOUT

 
கொலை செய்தது யார்?
சென்னை: பெண் என்ஜினியர் உயிரோடு எரித்துக் கொலை,

பட மூலாதாரம்,HANDOUT

படக்குறிப்பு,

கொலையுண்ட நந்தினி

நந்தினியை கொலை செய்தது யார் ? என்ன காரணத்திற்காக கொலை செய்யப்பட்டார்? இப்படி உயிருடன் எரித்துக் கொல்வதற்கான காரணம் என்ன என பல்வேறு கோணங்களில் விசாரண நடத்தினர்.

இந்த நிலையில், நந்தினியின் முன்னாள் காதலன் என்று கூறப்படும் வெற்றிமாறனை விசாரித்த போது, அவர் தான் நந்தினியை கொலை செய்துள்ளார் என்பது தெரியவந்ததாக போலீசார் கூறுகின்றனர்.

மேலும், வெற்றிமாறன் ஒரு திருநம்பி என்பதும், அவர் நந்தினியின் பள்ளிப் பருவ நண்பர் என்பதும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து இந்த வழக்கை விசாரித்த அதிகாரிகளில் ஒருவர் பிபிசியிடம் பேசுகையில்,“வெற்றிமாறன் தன் பள்ளிப்பருவத்தில் பாண்டி மகேஸ்வரி என்ற பெண்ணாக இருந்துள்ளார். அப்போதிலிருந்தே நந்தினியும், மகேஸ்வரியும் நண்பர்கள்.

பள்ளிப் பருவத்திற்கு பிறகு, பாண்டி மகேஸ்வரி தனது பாலினத்தை உணர்ந்து, வெற்றிமாறனாக மாறி திருநம்பியாகி உள்ளார்,”என்றார் அந்த அதிகாரி.

 
கொலை எப்படி நடந்தது?
பெண் எரித்துக் கொலை

பட மூலாதாரம்,GETTY IMAGES

கைது செய்யப்பட்டுள்ள வெற்றிமாறனின் வாக்குமூலத்தின்படி, வெற்றிமாறனும், நந்தினியும் காதலித்து வந்ததாக போலீசார் கூறுகின்றனர். ஆனால், கடந்த சில நாட்களாக நந்தினி வெற்றிமாறனிடம் பேசுவதை நிறுத்திவிட்டு வேறு சிலருடன் பழகியதால்தான், சந்தேகப்பட்டு கொலை செய்ய முடிவு செய்ததாக கைதான வெற்றிமாறன் போலீசாரிடம் கூறியுள்ளார்.

இறந்த நந்தினிக்கு பிறந்தநாள் என்பதால், பிறந்தநாள் சர்ப்ரைஸ் தருவதாக வெளியே அழைத்துச் சென்றுள்ளார் வெற்றி. நேற்று காலை கோயிலுக்குச் சென்று, பின் மதியம் ஹோட்டலில் உணவு சாப்பிட்டு, மாலை ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார் வெற்றிமாறன்.

“அங்கு தான் சர்ப்ரைஸ் கொடுப்பதாகக் கூறி, கண்களை முதலில் கட்டி, பின் கை கால்களையும் கட்டியுள்ளார். பிறகு தான், பிளேடால் கை, கால், மணிக்கட்டு, கழுத்து ஆகிய பகுதிகளில் அறுத்துள்ளார்.

இதில், அந்தப் பெண் வலி தாங்காமல் துடிக்கவே, அவர் பெட்ரோல் பங்க்கிற்கு சென்று, பெட்ரோல் வாங்கி வந்து, உயிருடன் நந்தினியை எரித்துவிட்டு, அங்கிருந்து தப்பியுள்ளார்,” என்றார் வழக்கை விசாரித்த அதிகாரிகளில் ஒருவர்.

சம்பவம் தொடர்பாக, போலீசார் கொலை வழக்குப் பதிவு செய்து குற்றம்சாட்டப்பட்ட வெற்றிமாறனை கைது செய்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 
பெண்களின் விருப்பத்தை மதிக்காததே வன்முறைக்கு காரணமா?
பெண்களுக்கு எதிரான வன்முறை

பட மூலாதாரம்,GETTY IMAGES

"என் விருப்பத்தை உன்னிடம் சொல்லும் போது ஓர் ஆண் மகனான என்னையே நீ வேண்டாமென மறுக்கிறாயா" என்ற மனப்பான்மையால், வன்முறையைக் கையில் எடுப்பதைப் போன்ற உச்சக்கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்கிறார்கள் என்று தான் கருதுவதாகக் கூறுகிறார் எழுத்தாளரும் பெண்ணிய ஆர்வலருமான நிவேதிதா லூயிஸ்.

இவற்றைக் கண்டு அஞ்சி, பின்வாங்கிக் கொண்டிருந்த பெண்கள், ஒரு கட்டத்தில் அத்தகைய செயல்பாடுகளைக் கண்டிப்பதும் எதிர்த்துச் செயல்படுவதும் அதிகரித்தது. அதற்கான எதிர்வினைகளாக சிலர் வன்முறையைக் கையில் எடுக்கத் தொடங்குவதாகக் கருதப்படுகிறது.

இன்றைய சமூகத்தில், "பொருளாதார சுதந்திரம் பெண்களுக்கு தங்கள் விருப்பங்களை, உரிமைகளை வெளிப்படையாகச் சொல்லக்கூடிய தைரியத்தை வழங்கியுள்ளது. ஆணாதிக்க உலகத்திற்கு இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

வீட்டிற்குள்ளேயே வாழும் பெண்கள் ஆணாதிக்க தன்மைக்கு உட்பட்டு, அதன் வரையறைக்குள் தங்கள் வாழ்க்கையைச் சுருக்கிக் கொண்டவர்கள். அவர்களையே பார்த்துப் பழகிய ஆண்கள், நவநாகரிக பெண்களைப் பார்க்கையில் தங்களுடைய ஆதிக்கத்தை இழப்பதாக அச்சம் கொள்கின்றனர். அதுவே இத்தகைய வன்முறைகளுக்குக் காரணம்" எனவும் கூறுகிறார் நிவேதிதா லூயிஸ்.

https://www.bbc.com/tamil/articles/cpv616422xxo

தமிழகத்தின் அக்பர் அலியும் இலங்கையைச் சேர்ந்த உதயகுமாரும் சென்னையில் கைதானது ஏன்?

3 months ago

Published By: VISHNU    24 DEC, 2023 | 12:42 PM

image
 

போதைப்பொருளை இலங்கைக்குக் கடத்த முயன்ற குற்றச்சாட்டின் பேரில் இலங்கை பிரஜை உட்பட இருவரை இந்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் சென்னை வலயப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

இவர்களிடமிருந்து 56 கிலோ போதைப்பொருளை பொலிஸார் கைப்ற்றியுள்ளனர்.  

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இலங்கையை சேர்ந்த உதயகுமார் மற்றும் பெரம்பூரை சேர்ந்த அக்பர் அலி எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சென்னையில் தங்கியிருந்த உதயகுமாரை கடந்த 10ஆம் திகதி, போதைப்பொருள் கடத்த முயன்ற சந்தேகத்தின் பேரில் பொலிஸார் கைது செய்து, அவரிடமிருந்த 2 கிலோ போதைப்பொருளையும் கைப்பற்றினர்.   

அதன் பின்னரான விசாரணைகளில் போதைப்பொருள் விநியோகத்தரான அக்பர் அலியை கைது செய்து அவரிடமிருந்து 54 கிலோ போதைப்பொருளை கைப்பற்றியுள்ளனர்.

https://www.virakesari.lk/article/172369

பெரியார் நினைவு நாள்: தலைவர்கள் மரியாதை!

3 months ago
பெரியார் நினைவு நாள்: தலைவர்கள் மரியாதை!
SelvamDec 24, 2023 11:51AM
Screenshot-2023-12-24-113536.jpg

தந்தை பெரியாரின் 50-ஆவது நினைவு தினம் இன்று (டிசம்பர் 24) அனுசரிக்கப்படுகிறது. இதை ஒட்டி சென்னை அண்ணாசாலை சிம்சன் அருகில் உள்ள பெரியார் சிலைக்கு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கி.வீரமணி, “பெரியாரின் கொள்கைகள் உலகம் முழுவதும் பயணம் செய்து கொண்டிருக்கிறது. பெரியார் என்பவர் ஓர் தனி மனிதர் அல்ல, அவர் ஓர் தத்துவம்.

பெரியாரை பார்க்காதவர்கள் அவரது கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு அதனை பேராயுதமாக பயன்படுத்துகிறார்கள். இந்த நேரத்திலும் பெரியார் பலருக்கு அச்சுறுத்தலாக இருக்கிறார். பெரியார் எனும் தத்துவம் சாதி பிணி நீக்கும் மருத்துவமாகும்.

Screenshot-2023-12-24-114139-768x435.jpg

சாதி வர்ண தர்மம் இந்தியாவில் தளைக்க வேண்டும் என்ற ஆர்.எஸ்.எஸ் கொள்கைகளுக்கு எதிராக பெரியார் தத்துவம் உள்ளது. எனவே இன்றைக்கும் பெரியார் பின்னால் நின்றாக வேண்டும். அனைவரும் சமம் என்ற சமூக நீதி இந்தியாவை உருவாக்குவோம். பேதம் வளர்க்கும் இந்துத்துவ இந்தியாவிற்கும், சமத்துவத்தை வலியுறுத்தும் திராவிட இந்தியாவிற்குமான போராட்டமாக தேர்தல் களம் இருக்கிறது” என்று தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து பெரியார் சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பெரியார் நினைவு தினமான இன்று ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “பண்பாட்டு ரீதியாக ஒடுக்கப்பட்டு, அடையாளங்கள் சிதைக்கப்பட்ட தமிழினத்தின் சுயமரியாதையைத் தட்டியெழுப்பி, சமத்துவ நெறியே தமிழர் நெறி எனப் பகுத்தறிவுப் பாதையில் நம்மையெல்லாம் நடைபோடச் செய்த தந்தை பெரியாரின் புகழைப் போற்றுவோம்.

“கணந்தோறும் இப்பெரிய தமிழ்நாடு எதிர்பார்க்கும் தலைவர் பெரியார்” என்று பாவேந்தர் பாடியதைக் காலந்தோறும் முழங்குவோம். வீறுகொண்டு எழுந்த நாம் ஒருபோதும் வீழமாட்டோம் எனச் சூளுரைத்து வீணர்களை வீழ்த்துவோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
 

https://minnambalam.com/political-news/periyar-memorial-day-ki-veeramani-stalin-respect/

உடுமலை சங்கர் கொலை: நீதிப் போராட்டத்தை திமுக அலட்சியப்படுத்துவதாக கௌசல்யா குற்றச்சாட்டு

3 months ago
சங்கரும் கெளசல்யாவும்

பட மூலாதாரம்,FACEBOOK

கட்டுரை தகவல்
  • எழுதியவர், பிரபாகர் தமிழரசு
  • பதவி, பிபிசி தமிழ்
  • 4 மணி நேரங்களுக்கு முன்னர்

காதல் திருமணம் செய்து புது வாழ்வைத் தொடங்க இருந்தார்கள் அந்த இரண்டு பொறியியல் கல்லூரி மாணவர்கள். திருமணமான புதிது என்பதால், ஒரு ஞாயிற்றுக்கிழமை நாளில் கடை வீதியில் உள்ள துணிக் கடைகளில் துணி வாங்கிவிட்டு வீடு திரும்பும்போது, மோட்டார் பைக்கில் வந்த மர்ம கும்பல் இருவரையும் வழிமறித்தது.

கண் இமைக்கும் நேரத்தில், இருவரையும் சரமாரியாக அரிவாளால் வெட்டிய அந்தக் கும்பல் மின்னல் வேகத்தில் சம்பவ இடத்திலிருந்து பறந்தனர். பட்டப் பகலில், பேருந்து நிலையத்திற்கு அருகில் ரத்த வெள்ளத்தில் கிடந்தார் அந்த இளைஞர், செய்வதறியாத தவித்து அந்த இளம்பெண் அழுகுரலில் அங்கிருந்தவர்களிடம் உதவி கேட்டுக் கொண்டிருந்தார்.

ஆம்புலன்ஸ் வருவதற்குள்ளே அந்த மாணவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். படுகாயமடைந்த அந்த இளம்பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர்கள்தான், திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த வேலுச்சாமியின் 22 வயது மகன் சங்கரும், திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்த சின்னச்சாமியின் மகள் கெளசல்யா.

சங்கர் கொலை வழக்கில், 2020ஆம் ஆண்டு உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து, தமிழ்நாடு அரசு, கெளசல்யா மற்றும் சங்கரின் சகோதரர்கள் என மூன்று தரப்பினர் மேல்முறையீடு செய்துள்ளனர். ஆனால், அந்த வழக்கு இன்று வரை உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்காக எடுக்கப்படவில்லை.

 
'சாதாரண வாழ்வை வாழ முடியவில்லை'
கெளசல்யா
படக்குறிப்பு,

மார்ச், 2016இல் நடந்த தாக்குதலின்போது, காயங்களுடன் கெளசல்யா உயிர் தப்பினார்.

பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த சங்கரும், மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதியைச் சேர்ந்த கெளசல்யாவும் தனியார் பொறியியல் கல்லூரியில் படிகு்கம்போது காதலித்து வந்துள்ளனர்.

இதற்கு கெளசல்யாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவிக்கவே, 2016இல் இருவரும் சாதி மறுப்பு திருமணம் செய்தனர். சாதி மறுப்பு திருமணம் செய்ததுதான் இந்தக் கொலைக்கு காரணம் எனக் கூறும் கெளசல்யா, சாதியின் குருதிவெறிக்குப் பலியான சங்கரின் இழப்பு இன்றும் தன்னை வாட்டுவதாகக் கூறினார்.

“இப்போது வரை என்னால் அந்த இழப்பைக் கடக்கவே முடியவில்லை. சிறைவாசிகள் காலையில் வெளியே வந்து, மாலையில் அறையில் அடைக்கப்படும்போது ஏற்படும் வெறுமையைப் போலத்தான் என் வாழ்வும் உள்ளது. சங்கரின் இழப்பு எனக்குத்தான். அவன் இல்லாத வெறுமையை வார்த்தைகளில் விவரிக்க முடியாது,” என்றார் கெளசல்யா.

சம்பவம் நடந்த இடத்திலேயே சங்கர் பலியான நிலையில், படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கெளசல்யா, அதே ஆண்டு மே மாதம் தற்கொலைக்கு முயன்றார். அவரை மீட்ட சங்கரின் குடும்பத்தினர், அவரை கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். சிகிச்சையில் உயிர் பிழைத்த கெளசல்யா, சங்கரின் கொலைக்கு நீதி பெறுவதில் உறுதியுடன் இருந்தார்.

“என்னால், ஒரு சாதாரண வாழ்வை வாழ முடியவில்லை. அந்தச் சம்பவம் இன்னும் என்னைத் துறத்திக்கொண்டே இருக்கிறது. சங்கருக்கு பிறகு, ஒவ்வொரு முறையும், யாரோ ஒருவர் சாதியின் பெயரால் கொல்லப்படும்போதும், நானே கொல்லப்படுவதாக உணர்கிறேன். சங்கருக்கு நீதி கிடைக்கும் வரை தொடர்ந்து போராடுவேன்,” என்றார் கெளசல்யா.

சங்கர் கொல்லப்பட்ட வழக்கில், கெளசல்யாவின் தந்தை சின்னச்சாமி, தாயார் அன்னலட்சுமி, தாய் மாமன் பாண்டித்துரை, மற்றும் கூலிப்படையைச் சேர்ந்த எம். மணிகண்டன், எம்.மைக்கேல், பி செல்வக்குமார், பி.ஜெகதீசன், தன்ராஜ், தமிழ் கலைவாணன், கல்லூரி மாணவர் பிரசன்ன குமார், மற்றொரு மணிகண்டன் என 11 பேரை உடுமலைப்பேட்டை போலீசார் கைது செய்தனர்.

 
வழக்கை எப்படி நிரூபித்தது போலீஸ்?
சங்கரும் கெளசல்யாவும்

பட மூலாதாரம்,KOUSALWAY/ FACEBOOK

சங்கரின் கொலை வழக்கில், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழும் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது. மேலும், குற்றம் சாட்டப்பட்டிருந்த 11 பேரில், 9 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

சம்பவம் பட்டப் பகலில் உடுமலைப்பேட்டை பேருந்து நிலையத்திற்கு அருகில் நடந்ததால், சம்பவம் முழுவதும் அங்கிருந்த கடைகளின் சிசிடிவி கேமராக்களில் பதிவாகியிருந்தது.

கேமராக்களில் பதிவாகியிருந்த காட்சிகள் மூலமாகவும், நேரடி சாட்சியான கெளசல்யாவின் வாக்குமூலத்தின் அடிப்படையிலும் கைது செய்யப்பட்டிருந்தவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றத்தை நிரூபித்ததாகக் கூறினார் அப்போது இந்த வழக்கை விசாரித்த அதிகாரிகளில் ஒருவர்.

“இந்த வழக்கில் சிசிடிவி கேமரா காட்சிகள் முக்கிய ஆதரமாக இருந்தன. இதற்காக, நவீன தொழில்நுட்பத்தின் மூலம் இதுவரை இல்லாத அளவில், சிசிடிவி காட்சிகளைத் துல்லியமாகப் பெரிதாக்கி, சம்பவத்தில் ஈடுபட்ட ஒவ்வொருவரையும் அடையாளம் காட்டி நிரூபித்தோம்.

அது தவிர, கெளசல்யாவின் தந்தை சம்பவ இடத்தில் இல்லாவிட்டாலும், இந்த சதித் திட்டத்திற்கு அவர் எப்படி மூளையாகச் செயல்பட்டார் என்பதை சம்பவத்தில் ஈடுபட்டவர்களின் உரையாடல்கள் மற்றும் பணப் பரிமாற்றத்தை வைத்து நிரூபித்தோம்,” என்றார் பெயர் குறிப்பிட விரும்பாத அந்த விசாரணை அதிகாரி.

மேலும், சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்காக கெளசல்யாவின் தந்தைதான் தலைமறைவாக இருக்க ஒரு தனியார் ஹோட்டலில் ரூம் போட்டுக் கொடுத்ததையும் உறுதி செய்ததாகக் கூறினார் அந்த விசாரணை அதிகாரி.

“சம்பவத்தில் ஈடுபட்டவர்களை அடையாளம் காண்பதற்கும், அதை நிரூபிப்பதற்கும் நேரடி சாட்சிகள் உள்ளன. ஆனால், இந்த நோக்கத்தையும், கூலிப் படையினருக்கு சின்னச்சாமி மூளையாக இருந்தார் என்பதையும் நிரூபிப்பதுதான் சற்று சவாலாக இருந்தது.

ஆனால், சின்னச்சாமி சம்பவத்தில் ஈடுபட்டவர்களிடம் தொடர்ந்து தொலைபேசி உரையாடலில் இருந்துள்ளார். சம்பவம் நடந்த சிறிது நேரத்திலேயே அவரது தொலைபேசிக்கு இந்தக் கூலிப்படையினர் அழைத்துள்ளனர். மேலும், பழனியில் அவர்கள் தங்கியிருந்த அறையை இவர்தான் புக் செய்துள்ளார்,” என்றார் அந்த அதிகாரி.

 
கெளசல்யாவின் தந்தை உட்பட ஆறு பேருக்கு தூக்கு தண்டனை
கெளசல்யாவின் தந்தை உட்பட ஆறு பேருக்கு தூக்கு தண்டனை

பட மூலாதாரம்,HANDOUT

இந்த வழக்கின் விசாரணை மிகவும் துரிதமாக நடந்தது. சம்பவம் நடந்த மூன்று மாதங்களில், விசாரணையை முடித்து 1,500 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை காவல்துறையினர் தாக்கல் செய்தனர்.

கடந்த 2017 நவம்பர் 14 ஆம் தேதி வழக்கு விசாரணை முழுவதுமாக முடிவடைந்து, டிசம்பர் 12ஆம் தேதி தீர்ப்பளிக்கப்படும் என அப்போதைய திருப்பூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தின் நீதிபதி அலமேலு நடராஜன் அறிவித்திருந்தார். தமிழ்நாட்டையே உலுக்கிய ஒரு வழக்கில் தீர்ப்பு வருவதால், அனைத்து தரப்பினரும் தீர்ப்பை எதிர்நோக்கி இருந்தனர்.

அதேநேரத்தில், திருப்பூர் நீதிமன்ற வளாகத்திலும், நீதிமன்றத்திற்கு வெளியிலும் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். டிசம்பவர் 12ஆம் தேதி, 11 மணிக்கு திருப்பூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் தீர்ப்பு வாசிக்கப்பட்டது. அப்போது குற்றம்சாட்டப்பட்ட 11 பேரில், கெளசல்யாவின் தந்தை சின்னச்சாமி உட்பட எட்டு பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் அறிவித்தது.

கெளசல்யாவின் தாய் அன்னலட்சுமி, மாமா பாண்டித்துரை மற்றும் பிரசன்னா ஆகியோர் மீதான குற்றத்தை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கத் தவறியதால், அவர்கள் மூன்று பேரும் விடுவிக்கப்பட்டனர்.

குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட எட்டு பேரில், கெளசல்யாவின் தந்தை சின்னச்சாமி, கூலிப்படையைச் சேர்ந்த ஜெகதீஷ், மணிகண்டன், செல்வக்குமார், கலை தமிழ்வாணன், மைக்கேல், ஆகிய ஆறு பேருக்கு தூக்கு தண்டனையும், தன்ராஜ் என்பவருக்கு ஆயுள் தண்டனையும், கொலையாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்த மணிகண்டனுக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

நீதிமன்ற வளாகத்தில் திரண்டிருந்த சிலர், கெளசல்யாவின் தாய் அன்னலட்சுமி மற்றும் அவரது தாய் மாமா பாண்டித்துரை விடுதலையானதற்கு பட்டாசு வெடித்துக் கொண்டாடினர். நீதிமன்றத்திற்கு வெளியே காத்திருந்த சிலர், அவர்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி அழைத்துச் சென்றனர்.

“இது முழுக்க முழுக்க சாதி வன்மத்தில் நிகழ்த்தப்பட்ட கொலை. இதற்கு ஒரு கூட்டமே ஆதரவாக உள்ளது. இது மட்டும் இல்லை. அன்னலட்சுமியை சாதி சங்கத்தினர் ஒரு கூட்டத்திற்கு அழைத்து பாராட்டு விழா நடத்தி, வழக்கின் செலவிற்காகப் பணமும் கொடுத்துள்ளனர். இதையெல்லாம் யாரும் கருத்தில் கொள்வதே இல்லை. இப்படி இருக்கும் சூழலில் எப்படி என்னால் நிம்மதியாக வாழ முடியும்?” எனக் கேட்டார் கெளசல்யா.

 
உயர்நீதிமன்றத்தில் விடுவிக்கப்பட்ட சின்னச்சாமி
உயர்நீதிமன்றம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

அன்னலட்சுமி உள்ளிட்டோரின் விடுதலையை எதிர்த்து அரசுத் தரப்பும், தங்களுக்கு வழங்கப்பட்ட தண்டனையை எதிர்த்து குற்றவாளிகள் தரப்பும் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர்.

மூன்று ஆண்டுகள் நடைபெற்று வந்த வழக்கு விசாரணை, 2020இல் முடிவடைந்தது. இந்த வழக்கில், ஜூன் 22, 2020இல் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

அப்போது, வழக்கின் முதன்மைக் குற்றவாளியான சின்னச்சாமியை குற்றவாளியாகக் கருத போதிய ஆதாரங்கள் இல்லை என விடுவித்த நீதிமன்றம், மற்றவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த தூக்கு தண்டனையையும், ஆயுள் தண்டனையாகக் குறைத்தது.

மேலும், இந்த வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற தன்ராஜையும், ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற மணிகண்டனையும் உயர்நீதிமன்றம் விடுவித்தது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு முறையாக நடைபெறவில்லை எனக் குற்றம் சாட்டினார் கெளசல்யா.

“திருப்பூரில் வழக்கு விசாரணை நடைபெற்றபோது, ஒவ்வொரு முறையும் என்ன நடக்கிறது என்பதை எனக்குத் தெரியப்படுத்தினர். நானும் நீதிமன்றத்தில் ஆஜரானேன். ஆனால், உயர்நீதிமன்றத்தில் நடந்த விசாரணையின்போது, நான் ஒரு முறைகூட அழைக்கப்படவில்லை. தீர்ப்பு வரும்போதுதான் எனக்குத் தெரியும்,” என்றார் கெளசல்யா.

ஆண்டுகள் ஓடினாலும், சங்கரின் இழப்பை ஈடுசெய்ய முடியவில்லை எனக் கூறும் சங்கரின் சகோதரர் விக்னேஷ், அண்ணன் சாவுக்கு எப்படியாவது நீதியைப் பெற வேண்டும் என்றார்.

“அண்ணா சங்கர் இருந்திருந்தால் நாங்கள் இன்னும் மகிழ்ச்சியாக இருந்திருப்போம். அவன் இருக்கும் வரை, அவன் தான் எங்களைப் பார்த்துக்கொண்டான். இப்போது, அவனும் இல்லை, எங்கள் அப்பாவும் சமீபத்தில் உயிரிழந்தார். அவன் இறப்புக்குக் கிடைக்கும் நீதி மட்டுமே எங்களுக்கு உண்மையான ஆறுதலாக இருக்கும்,” என்றார் விக்னேஷ்.

 
மூன்று ஆண்டுகளாகியும் விசாரணைக்கு எடுக்கப்படாத வழக்கு
கெளசல்யா

பட மூலாதாரம்,NATHAN G

உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை மேல்முறையீடு செய்து தமிழ்நாடு அரசு சார்பிலும், கெளசல்யா சார்பிலும், சங்கரின் சகோதரர் சார்பிலும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆனால், மூன்று ஆண்டுகள் ஆகியும் இன்று வரை ஒரு முறைகூட அந்த வழக்கு விசாரிக்கப்படவில்லை.

இந்த வழக்கு தொடர்பாக பல்வேறு முயற்சிகள் எடுத்தும், இதுவரை எந்த முன்னேற்றமும் இல்லை என்கிறார் கெளசல்யா.

“இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வைப்பதற்கே பெரிய போராட்டம் நடத்த வேண்டியிருக்கிறது. இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு அதிகாரிகள் பலரிடம் கோரிக்கை வைத்துள்ளோம். இதுதொடர்பாக முதல்வரைச் சந்திக்க பலமுறை முயன்றும், இன்று வரை அவரைச் சந்திக்க நேரம் கிடைக்கவில்லை.

சிலர் மாவட்ட கட்சிப் பிரமுகர்கள் வழியாக முதல்வரைச் சந்திக்க நேரம் கேட்கச் சொல்கிறார்கள். இதற்கு எப்படி கட்சிப் பிரமுகர்களை அணுகுவது என்று தெரியவில்லை,” என்றார் கெளசல்யா.

மேலும், திமுக அரசு இந்த வழக்கில் மெத்தனம் காட்டுவதாக கெளசல்யா குற்றம் சாட்டினார்.

“ஆளுநர் தொடர்பான வழக்குகளுக்கு எல்லாம் அவசரம் காட்டும் திமுக அரசு, இந்த வழக்கு குறித்து இதுவரை எந்த முன்னெடுப்பும் எடுக்கவில்லை. இதுவொரு தனிநபர் கொலை வழக்கு மட்டுமல்ல. இந்த வழக்கின் தீர்ப்பு, இதுபோன்ற மற்ற சம்பவங்களுக்கு ஒரு முன்மாதிரியாக இருக்கும்.

எதிர்கட்சியாக இருந்தபோது, இந்த வழக்கில் எங்களுடன் துணை நிற்போம் எனக் கூறிய அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், தற்போது முதல்வர் ஆனதும் எங்களைக் கைவிட்டுவிட்டார்,” என்றார் கெளசல்யா.

இதுகுறித்து சட்டத்துறை அமைச்சர் ரகுபதியிடம் விளக்கம் கேட்க பிபிசி முயன்றது. ஆனால், அவர் பதிலளிக்கவில்லை. கெளசல்யாவின் தந்தை சின்னச்சாமி மற்றும் தயார் அன்னலட்சுமியிடமும் பிபிசி பேச முயன்றது. அப்போது அவர்கள், “எதுவாக இருந்தாலும் நீதிமன்றத்தில் சொல்லிக் கொள்கிறோம்,” என்றனர்.

 
'ஆணவக் கொலையில் திமுக அலட்சியம்'
எவிடன்ஸ் கதிர்

இந்த வழக்கில் கெளசல்யா சார்பாக மேல்முறையீடு செய்துள்ள எவிடன்ஸ் அமைப்பின் நிறுவனர் கதிர், திமுக அரசு ஆணவக்கொலை வழக்கில் மற்ற கட்சிகளைப் போலச் செயல்படுவதாகக் குற்றம் சாட்டினார்.

“மற்ற கட்சிகளைப் போல் அல்ல திமுக. சாதி மறுப்பு, சுயமரியாதை திருமணம் உள்ளிட்டவற்றை ஆதரித்த பாரம்பரியத்தில் இருந்து வந்த கட்சி, ஆணவக்கொலை வழக்குகளில் மெத்தனம் காட்டுவது கவலையாக உள்ளது.

எதிர்க்கட்சியாக இருந்தபோது, ஆணவக் கொலைக்கு எதிராக தனிச் சட்டம் இயற்றப்படும் எனக் கூறியிருந்தார். நாங்களும் அவரைச் சந்தித்து, அதற்கான சட்ட முன்வடிவத்தையும் கொடுத்து வந்தோம். ஆனால், இன்று வரை அதுதொடர்பாக எந்த நடவடிக்கையும் இல்லை,” என்றார் கதிர்.

https://www.bbc.com/tamil/articles/cjkgn33kgyzo

பொன்முடிக்கும் மனைவிக்கும் 3 ஆண்டுகள் சிறை

3 months 1 week ago
பொன்முடிக்கும் மனைவிக்கும் 3 ஆண்டுகள் சிறை

வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், தமிழக உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடிக்கும், அவரது மனைவி விசாலாட்சிக்கும் தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.50 லட்சம் அபராதமும் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

image_aaa4a2e40c.jpg

  வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.72 கோடி அளவுக்கு சொத்து குவித்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், தமிழக உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகிய இருவரும் குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று (டிச.21) தண்டனை விவரங்களை சென்னை உயர் நீதிமன்றம், அறிவித்துள்ளது.

தண்டனை விவரம்: அதன்படி, பொன்முடிக்கும் அவரது மனைவி விசாலட்சுமிக்கும் தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இருவருக்கும் தலா ரூ.50 லட்சம் அபராதமும் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதேவேளையில் மேல்முறையீடு செய்ய ஏதுவாக இருவருக்குமான தண்டனை 30 நாட்களுக்கு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, நீதிமன்றத்தில் இன்று பொன்முடி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, அமைச்சர் பொன்முடி அவரது மனைவி விசாலாட்சியின் வயது, மருத்துவ நிலையைக் கருத்தில் கொண்டு தண்டனையை அறிவிக்க வேண்டும் என்று கோரியதாகத் தகவல்.

தமிழகத்தின் தற்போதைய உயர்கல்வி துறை அமைச்சர் க.பொன்முடி கடந்த 2006-11 திராவிட முன்னேற்ற கழக (திமுக) ஆட்சி காலத்தில் உயர்கல்வி, கனிமவளத் துறை அமைச்சராக இருந்தார். அப்போது, வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.72 கோடி அளவுக்கு சொத்து குவித்ததாக பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகியோருக்கு எதிராக  அண்ணா திராவிட முன்னேற்ற கழக (அதிமுக) ஆட்சி காலத்தில் விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை போலீஸார் கடந்த 2011-ம் ஆண்டுஊழல் தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

விழுப்புரம் மாவட்ட தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்தது. பின்னர், விழுப்புரம்மாவட்ட ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்துக்கு வழக்கு கடந்த 2015-ம் ஆண்டுமாற்றப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி சுந்தரமூர்த்தி, இந்த வழக்கில்பொன்முடி, விசாலாட்சி மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என்றுகூறி இருவரையும் விடுதலை செய்து கடந்த 2016 ஏப்ரல் 18-ம் திகதி தீர்ப்பு அளித்தார்.
இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் இலஞ்ச ஒழிப்பு துறை சார்பில்கடந்த 2017-ம் ஆண்டு மேல்முறையீடு செய்யப்பட்டது. பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த இந்த வழக்கு விசாரணை, இறுதியாக நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு நடந்து வந்தது.

அப்போது, பொன்முடி தரப்பில், ‘மனைவி விசாலாட்சிக்கு சொந்தமாக பல ஏக்கரில் விவசாய நிலமும், தனியாகவணிகமும் நடந்து வருவதால், அதில்கிடைத்த வருமானத்தையும், என் வருமானத்துடன் ஒன்றாக சேர்த்துள்ளனர். புலன்விசாரணை அதிகாரி இதைகவனத்தில் கொள்ளவில்லை. எங்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு எந்த ஆதாரமும் இல்லை என்பதால்தான் கீழமை நீதிமன்றம் விடுதலை செய்து தீர்ப்பளித்தது’ என்று வாதிடப்பட்டது.

லஞ்ச ஒழிப்பு துறை தரப்பில், ‘பொன்முடி, விசாலாட்சிக்கு எதிரான வருமானவரி கணக்குகள், சொத்து விவரங்கள்,வங்கி கணக்கு விவரங்கள் ஆகியவற்றுடன், மொத்தம் 39 சாட்சிகளிடம் விசாரணை நடத்தி, குற்றப் பத்திரிகை தாக்கல்செய்யப்பட்டது. ஆனால், குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என்று கூறி இருவரையும் ஊழல் தடுப்பு நீதிமன்றம் விடுதலை செய்தது. எனவேஅந்த தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும்’ என வாதிடப்பட்டது.
இந்நிலையில் அவர்களுக்கான தண்டனை விவரம் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

 

https://www.tamilmirror.lk/செய்திகள்/பனமடககம-மனவககம-3-ஆணடகள-சற/175-330183

சட்டப் பிரிவு 370 தீர்ப்பு: தமிழகம் அல்லது சென்னையை யூனியன் பிரதேசமாக மத்திய அரசால் மாற்ற முடியுமா?

3 months 1 week ago
உச்ச நீதிமன்றம்

பட மூலாதாரம்,ANI

கட்டுரை தகவல்
  • எழுதியவர், உமாங் போட்டார்
  • பதவி, பிபிசி செய்தியாளர்
  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்

ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு ஒருமனதாக உறுதி செய்துள்ளது. 

 ஜம்மு காஷ்மீரில் அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குள் தேர்தல் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

மேலும், ஜம்மு காஷ்மீருக்கு விரைவில் முழு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. 

இந்நிலையில், குடியரசுத் தலைவர் ஆட்சியின் போது ஒரு மாநிலத்தை மத்திய அரசு இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்க முடியுமா என்பதுதான் உச்ச நீதிமன்றத்தின் முன் வைக்கப்பட்ட மிக முக்கியமான கேள்வி. 

இந்தக் கேள்வி எதிர்காலத்தில் மிக முக்கியமான விளைவுகளை ஏற்படுத்தப் போகிறது. ஏனென்றால் முதலில் குடியரசுத் தலைவர் ஆட்சியைத் திணிக்கவும், பின்னர் முழு மாநிலத்தையும் அல்லது அதன் ஒரு பகுதியையும் யூனியன் பிரதேசமாக மாற்றுவதற்கான ஆயுதத்தை மத்திய அரசின் கையில் கொடுத்துள்ளது. 

பல சட்ட வல்லுநர்கள் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் இந்த முடிவு மாநிலங்கள் மீதான மத்திய அரசின் கட்டுப்பாட்டை அதிகரிக்கிறது மற்றும் கூட்டாட்சி கட்டமைப்பை தளர்த்துகிறது என்று நம்புகிறார்கள். 

இந்தியாவில் கூட்டாட்சி அமைப்பு பிரச்னை மிகவும் சர்ச்சைக்குரியதாக உள்ளது. மத்திய அரசு தங்களின் அதிகாரத்தை பறிப்பதாக பல மாநிலங்கள் குற்றம்சாட்டி வருகின்றன. 

மத்திய அரசால் நியமிக்கப்பட்ட ஆளுநர்கள் மசோதாக்களை கிடப்பில் போடுவதாக பல மாநில அரசுகள் குற்றம்சாட்டி வருகின்றன.

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, நலத் திட்டங்களுக்கான உத்தரவாத நிதி மற்றும் ஜிஎஸ்டியில் ரூ.1.15 லட்சம் கோடியை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளதாகக் கூறுகிறார். 

மேலும், ஒரே நாடு-ஒரே தேர்தல் என்ற எண்ணம், நாட்டின் அரசியல் மையப்படுத்தப்படும் என்ற அச்சத்தை அதிகரித்துள்ளது.

 
370-வது சட்டப்பிரிவு

பட மூலாதாரம்,SCREENGRAB/SUPREME COURT OF INDIA

நீதிமன்றத்தின் முன் உள்ள முக்கிய கேள்விகள்

அரசியலமைப்பின் 3-வது பிரிவு புதிய மாநிலங்களை உருவாக்கும் செயல்முறையை குறிப்பிடுகிறது. 

இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களை இணைத்து அல்லது பிரித்து புதிய மாநிலங்களை நாடாளுமன்றம் உருவாக்கலாம் என்று கூறுகிறது. 

இதற்காக குடியரசுத் தலைவரின் பரிந்துரைகளின் அடிப்படையில் நாடாளுமன்றத்தில் ஒரு மசோதாவை அறிமுகப்படுத்தலாம். அதன் பிறகு அதை மாநிலங்களவையில் தாக்கல் செய்வது கட்டாயமாகும்.

2019-ஆம் ஆண்டில், குடியரசுத் தலைவர் ஆட்சியின் கீழ் ஜம்மு-காஷ்மீர் இருந்தபோது, ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கும் மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. 

இதன் கீழ், ஜம்மு-காஷ்மீரில் சட்டமன்றத்துடன் கூடிய யூனியன் பிரதேசங்களும், லடாக்கில் சட்டமன்றம் இல்லாத யூனியன் பிரதேசமும் உருவாக்கப்பட்டன. 

எனவே, ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய இரு யூனியன் பிரதேசங்கள் அமைக்கப்பட்டது செல்லுபடியாகுமா, இல்லையா என்பதுதான் உச்ச நீதிமன்றத்தின் முன் வைக்கப்பட்ட மிக முக்கியமான கேள்வி.

 
அபிஷேக் மனு சிங்வி

பட மூலாதாரம்,ANI

நீதிமன்றம் என்ன சொன்னது?

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசமாக அமைக்கப்பட்டது தொடர்பாக நீதிமன்றம் தனது கருத்தை தெரிவிக்கவில்லை. 

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் மாநில அந்தஸ்து மீட்டெடுக்கப்படும் என்று அரசாங்கம் உறுதியளித்துள்ளதால், ஒரு மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கலாமா என்பதை நீதிமன்றம் தீர்மானிக்க வேண்டிய அவசியமில்லை என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது. 

இருப்பினும், யூனியன் பிரதேசமாக லடாக் உருவாக்கப்பட்டதை நீதிமன்றம் நியாயப்படுத்தியது. குடியரசுத் தலைவர் ஆட்சியில் இருந்தாலும், எந்த ஒரு மாநிலத்திலிருந்தும் யூனியன் பிரதேசத்தை உருவாக்குவதற்கு 3-வது பிரிவின் கீழ் மத்திய அரசுக்கு உரிமை உண்டு என்று நீதிமன்றம் கூறியது.

குடியரசுத் தலைவர் ஆட்சியின்போது நாடாளுமன்றம் மற்றும் குடியரசுத் தலைவரின் நடவடிக்கைகளுக்கு வரம்புகள் இல்லை என்றும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

 
அசாதுதீன் ஓவைசி

பட மூலாதாரம்,GETTY IMAGES

எதிர்க்கட்சிகள் கூறுவது என்ன?

இந்த முடிவு கூட்டாட்சி அமைப்பை பலவீனப்படுத்துவதாக எதிர்க்கட்சித் தலைவர்கள் கூறுகின்றனர். 

ஒரு மாநிலம் முழுவதையும் யூனியன் பிரதேசமாக மாற்ற முடியுமா என்பது குறித்து நீதிமன்றம் எந்த முடிவையும் வழங்காதது ஏமாற்றம் அளிப்பதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

மூத்த வழக்குரைஞரும், காங்கிரஸ் தலைவருமான அபிஷேக் மனு சிங்வி கூறுகையில், அரசியலமைப்புச் சட்டத்தின்படி இதைச் செய்ய அரசுக்கு உரிமை இல்லை என்றார்.

இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ-எம்) கருத்துப்படி, இந்த முடிவு மாநிலங்களின் கட்டமைப்பை ஒருதரப்பாக தீர்மானித்து மாற்றுவதற்கான உரிமையை மத்திய அரசுக்கு நீதிமன்றம் வழங்கியுள்ளதாக தெரிவித்தார்.

இந்த முடிவால், 'சென்னை, கொல்கத்தா, ஹைதராபாத் அல்லது மும்பையை யூனியன் பிரதேசமாக்குவதில் மத்திய அரசுக்கு எந்தத் தடையும் இருக்காது' என்று எம்.பி. அசாதுதீன் ஒவைசி தெரிவித்தார்.

 
நரேந்திர மோதி

பட மூலாதாரம்,GETTY IMAGES

தமிழ்நாடு உள்பட எந்த மாநிலத்தையும் யூனியன் பிரதேசமாக்கலாம் - சட்ட நிபுணர்

அரசியலமைப்பு சட்ட நிபுணர் அனுஜ் புவானியா, “ஒரு மாநிலத்தை யூனியன் பிரதேசமாக பிரிக்கும் விவகாரத்தில் முடிவெடுக்காதது அப்பிரச்னையை முற்றிலும் மறுப்பதாகும்” என்றார். 

மாநில அந்தஸ்தை மீட்டெடுப்பதாக மத்திய அரசு உறுதியளித்துள்ளதால், மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கும் விவகாரத்தில் தீர்ப்பளிப்பதை நீதிமன்றம் மறுக்க முடியாது என்று அவர் கூறுகிறார். 

“புதிய மாநிலங்களை உருவாக்கவும், மாநில எல்லைகளை மாற்றவும் மத்திய அரசு ஒருதரப்பாக நடவடிக்கை எடுக்கும் வகையில், 3-வது பிரிவு எழுதப்பட்டிருப்பதால், அதை தவறாகப் பயன்படுத்தாத வகையில் நீதிமன்றம் விளக்கம் அளித்திருக்கலாம்” என்றார் அனுஜ் புவானியா.

“நாடாளுமன்றம் என்ன திருத்தங்களைச் செய்யலாம் என்பதைத் தீர்மானிக்கும் இத்தகைய அடிப்படைக் கோட்பாட்டு கட்டமைப்பை நீதிமன்றம் வழங்கியிருப்பதை நாம் முன்பே பார்த்திருக்கிறோம். இந்த வழக்கிலும் இதே போன்ற விளக்கத்தை நீதிமன்றம் அளித்திருக்கலாம்” என அவர் தெரிவித்தார்."ஆனால், அவ்வாறு செய்ய வேண்டாம் என்று நீதிமன்றம் முடிவு செய்திருக்கிறது," என்று அவர் தெரிவித்தார். 

ஆங்கில செய்தித்தாள் ’தி இந்து’வில் இதுகுறித்து வெளியான கட்டுரையில், ”இந்த முடிவானது குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தவும், அரசியலமைப்புத் திருத்தங்களை அங்கீகரிப்பது அல்லது முக்கியமான வழக்குகளை திரும்பப் பெறுவது போன்ற பெரிய மாற்றங்களைச் செய்யவும் மத்திய அரசுக்கு உரிமை அளிக்கிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூத்த வழக்குரைஞரும், சட்ட நிபுணருமான ஃபாலி நாரிமன் அளித்த பேட்டியில், ”இந்த முடிவின் விளைவாக இந்தியா ஒரு நாடாக மையப்படுத்தப்பட்டு வருகிறது” என்றார்.

மற்றொரு சட்ட நிபுணர் அலோக் பிரசன்னா ’இந்தியன் எக்ஸ்பிரஸ்’-இல், “உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பின் நேரடி விளைவு என்னவென்றால், மத்திய அரசு விரும்பும் போதெல்லாம், எந்த காரணத்தையும் கூறி எந்த மாநிலத்தையும் யூனியன் பிரதேசமாக மாற்றலாம்” என எழுதியுள்ளார்.

https://www.bbc.com/tamil/articles/cldr2d07xlro

விமானியின் சாதுர்யத்தால் காப்பாற்றப்பட்ட 180 பயணிகள்!

3 months 1 week ago
flit.jpg

மலேசிய தலைநகர் கோலாலம்பூரிலிருந்து திருச்சி வரை பயணித்த மலிண்டோ ஏர்லைன்ஸ் விமானம் தரையிறங்குவதற்கு ஆயத்தமான நிலையில் விமானத்தின் ஒரு சில்லில் காற்று இல்லாமல் போனதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இது குறித்து உடனடியாக திருச்சி விமான நிலையத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்கு விமானிகள் தகவல் அனுப்பியுள்ளனர்.

இந்தநிலையில், உடனடியாக விமானம் தரை இறங்க தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள விமான நிலைய ஊழியர்களுக்கு அறிவுறுத்தினர்.

அத்துடன், தீயணைப்பு வாகனங்கள் உற்பட அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் உடனடியாக முன்னெடுக்கப்பட்டன.

இதனை தொடர்ந்து விமானிகளும் சாதுர்யமாக செயல்பட்டு, வேக கட்டுப்பாட்டுடன் விமானத்தை தரை இறக்கினர்.

இதனால் பாதுகாப்பான முறையில் விமானத்தில் பயணித்த 180 பயணிகளும் காப்பாற்றப்பட்டனர்.

https://thinakkural.lk/article/285351

மோடியை நேரில் சந்தித்த ஸ்டாலின் : முன்வைத்த மூன்று முக்கிய கோரிக்கைகள் என்னென்ன?

3 months 1 week ago
மோடியை நேரில் சந்தித்த ஸ்டாலின் : முன்வைத்த மூன்று முக்கிய கோரிக்கைகள் என்னென்ன?
christopherDec 20, 2023 00:11AM
Stalin met Modi in person

Stalin met Modi in person

பிரதமர் மோடியை நேரில் சந்தித்த முதல்வர் ஸ்டாலின் தமிழ்நாட்டில் அதிகனமழையால்‌ ஏற்பட்ட வெள்ள பாதிப்புகள் தொடர்பாக முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்துள்ளார்.

தலைநகர் டெல்லியில் நேற்று (டிசம்பர் 19) நடைபெற்ற இந்தியா கூட்டணியின் 4வது கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார்.

அதனைத்தொடர்ந்து இரவு 10.30 மணிக்கு பிரதமர் மோடியை நேரில் சந்தித்தார். அப்போது  மிக்ஜாம்‌ புயல்‌ மழையால்‌ ஏற்பட்ட பாதிப்புகள்‌ மற்றும்‌ தென்‌ மாவட்டங்களில்‌ அதிகனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பாதிப்புகள் குறித்து எடுத்துரைத்து பல்வேறு முக்கிய கோரிக்கைகளை முதல்வர் ஸ்டாலின் பிரதமரிடம் முன்வைத்துள்ளார்.

மிக்ஜாம் புயல் பாதிப்புகள்!

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “டெல்லியில் இன்று பிரதமர் மோடியை சந்தித்த முதல்வர் ஸ்டாலின், மிக்ஜாம்‌ புயல்‌ கனமழையால்‌ சென்னை, திருவள்ளூர்‌, செங்கல்பட்டு மற்றும்‌ காஞ்சிபுரம்‌ மாவட்டங்களில்‌ வெள்ளம்‌ சூழ்ந்து மக்களின்‌ வாழ்வாதாரம்‌ பாதிக்கப்பட்டது குறித்தும்‌, புயல்‌ மழையால்‌ சாலைகள்‌, பாலங்கள்‌, பள்ளிக்‌ கட்டடங்கள்‌, அரசு மருத்துவமனைகள்‌ போன்ற பொதுக்‌ கட்டமைப்புகளும்‌, மின்சார உட்கட்டமைப்புகளும்‌, உள்ளாட்சி அமைப்புகளில்‌ குடிநீர்‌ கட்டமைப்புகள்‌, கிராம சாலைகள்‌ போன்றவைகளுக்கு ஏற்பட்ட பாதிப்புகள்‌ குறித்தும்‌, தமிழ்நாடு அரசு மீட்பு மற்றும்‌ நிவாரண நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில்‌ மேற்கொண்டதால்‌ பாதிப்பிற்குள்ளான பகுதிகளில்‌ மிக விரைவாக இயல்பு நிலை திரும்பியது குறித்தும்‌ எடுத்துரைத்தார்‌.

மேலும்‌, ஒன்றிய பாதுகாப்புத் துறை அமைச்சர்‌ ராஜ்நாத்‌ சிங்‌  கடந்த டிசம்பர் 7ஆம் தேதி சென்னைக்கு வருகை தந்து, மிக்ஜாம்‌ புயல்‌ பெருமழையால்‌ ஏற்பட்ட பாதிப்புகளை நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தது குறித்தும்‌, ஒன்றிய அரசின்‌ பல்துறை ஆய்வுக்‌ குழு, டிசம்பர் 12, 13 ஆகிய நாட்களில்‌ மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்து, அக்குழு தன்னுடன்‌ ஆலோசனை மேற்கொண்டது குறித்தும்‌,  தமிழ்நாடு அரசு மீட்பு மற்றும்‌ நிவாரணப்‌ பணிகளை விரைந்து மேற்கொண்டதற்கு அக்குழு பாராட்டு தெரிவித்ததையும்‌ பிரதமரிடம் எடுத்துரைத்தார்.

விரைந்து நிவாரண நிதி வழங்க வேண்டும்!

தொடர்ந்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைப்பு மற்றும்‌ நிவாரணப்‌ பணிகளை மேற்கொள்வதற்காக தற்காலிக நிவாரணத்‌ தொகையாக 7,033 கோடி ரூபாயும்‌, கூடுதலாக நிரந்தர நிவாரணத்‌ தொகையாக 12,659 கோடி ரூபாயும்‌ கோரப்பட்டதை தெரிவித்து, அந்நிதியினை விரைந்து ஒதுக்கீடு செய்யுமாறு பிரதமரிடம் முதல்வர் கேட்டுக்‌ கொண்டார்‌.

மேலும்‌, திருநெல்வேலி, தூத்துக்குடி கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில்‌ கடந்த இரண்டு நாட்களாக (டிசம்பர்‌ 17 மற்றும்‌ 18) பெய்த கனமழை முதல்‌ அதிகனமழையால்‌ ஏற்பட்ட பாதிப்புகள்‌ குறித்து விளக்கி, அம்மாவட்டங்களில்‌ மேற்கொள்ளப்பட்டு வரும்‌ மீட்பு மற்றும்‌ நிவாரணப்‌ பணிகள்‌ குறித்தும்‌ எடுத்துரைத்தார்‌.

தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும்!

மிக்ஜாம்‌ புயல்‌ கனமழையால்‌ சென்னை மற்றும்‌ சுற்றுப்புற மாவட்டங்களில்‌ கடந்த 47 ஆண்டுகளாக இல்லாத கனமழையால்‌ ஏற்பட்ட வெள்ளப்‌ பாதிப்பையும்‌, தென்‌ மாவட்டங்களில்‌ தற்போது வரலாறு காணாத வகையில்‌ 100 ஆண்டுகள்‌ இல்லாத கனமழை பெய்ததால்‌ ஏற்பட்ட பாதிப்புகளையும்‌ கருத்தில்‌ கொண்டு, தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும்‌ என்று மாண்புமிகு இந்தியப்‌ பிரதமரிடம் முதல்வர் கேட்டுக்‌ கொண்டார்‌.

அவசர நிதியாக ரூ.2000 கோடி!

எனவே, பேரிடர்‌ நிவாரண நிதியிலிருந்து 2,000 கோடி ரூபாயை அவசர நிவாரண நிதியாக வாழ்வாதார உதவிக்காகவும்‌, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும்‌ தென்காசி மாவட்டங்களின்‌ தற்காலிக சீரமைப்புப்‌ பணிகளுக்காகவும்‌ வழங்கிட வேண்டும்‌ என்று பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை அளித்துள்ளார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

https://minnambalam.com/political-news/stalin-met-modi-in-person-what-were-the-three-main-demands/

ஊழல் வழக்கால் எம்.எல்.ஏ., பதவியை இழக்கிறாரா அமைச்சர் பொன்முடி? - திமுக என்ன செய்யும்?

3 months 1 week ago
பொன்முடி

பட மூலாதாரம்,PONMUDI

3 மணி நேரங்களுக்கு முன்னர்

திமுக அமைச்சர் பொன்முடி தனது வருமானத்திற்கு அதிகமாக ஒரு கோடியே 75 லட்சம் ரூபாய் சொத்து சேர்த்ததாக தொடரப்பட்டிருந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அவரை விடுதலை செய்த தீர்ப்பை ரத்து செய்து குற்றவாளி என அறிவித்துள்ளது.

இந்த வழக்கின் தண்டனை விபரங்களை அறிவிப்பதற்காக அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோரை வரும் 21 ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகும்படி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால், தற்போதுஎம்.எல்.ஏ.,வாக நீடிக்கும் தகுதியை பொன்முடி இழக்கலாம்.

ஆனால், சட்டப் பேரவைச் செயலாளரிடம் இருந்து தற்போது வரை அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் வரவில்லை. அமைச்சர் பொன்முடிக்கு தண்டனை அறிவிக்கப்பட்ட பின் என்ன நடக்க வாய்ப்பிருக்கிறது? அவர் அமைச்சராக தொடர முடியுமா?

 
வழக்கின் பின்னணி என்ன?

கடந்த 2006-11 ஆம் ஆண்டு காலத்தில், திமுக ஆட்சியில் உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்தார் பொன்முடி. அப்போது, அவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி மீது 2011 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு அரசின் கீழ் உள்ள விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், கடந்த 2016 ஆம் ஆண்டு, பொன்முடி மற்றும் அவரது மனைவியை விடுதலை செய்து தீர்ப்பளித்தது. இந்தத் திர்ப்பை எதிர்த்து, அதிமுக ஆட்சிக் காலத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் மேல் முறையீடு செய்தனர்.

மேல்முறையீடு செய்யப்பட்ட வழக்கு நிலுவையில் இருந்த நிலையில், நேற்று பொன்முறை மற்றும் விசாலாட்சி ஆகியோர் விடுதலை செய்யப்பட்டதை ரத்து செய்து, அவர்கள் குற்றவாளிகள் என உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயசந்திரன் தீர்ப்பளித்தார்.

இந்த வழக்கின் தண்டனை விபரம் நாளை அறிவிக்கப்படவுள்ளது. வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, ஊழல் தடுப்புச் சட்டத்தில் குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்துள்ளதால், அவர் தீர்ப்பு வந்ததில் இருந்தே மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் அடிப்படையில் எம்.எல்.ஏ.,விற்கான தகுதியை இழக்கிறார் என்கிறார் மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம்.

 
தமிழ்நாடு சட்டமன்றம்

பட மூலாதாரம்,TNDIPR

எம்.எல்.ஏ. தகுதியை இழந்தாரா பொன்முடி?

“ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் ஒரு மக்கள் பிரதிநிதி குற்றவாளி என அறிவிக்கப்பட்டாலே அவர் தகுதியை இழக்கிறார். தண்டனை அறிவிக்கும் வரை காத்திருக்கத் தேவையில்லை. ஆனால், இது நாள் வரை, தீர்ப்பும் தண்டனையும் ஒரே நாளில் வெளிவந்ததால், இதுவரை அது பேசு பொருளாகவில்லை,” என்றார் தராசு ஷ்யாம்.

மேலும், அவர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டதற்கு தடை பெற்றால் மட்டுமே எம்.எல்.ஏ.,வாக தமிழ்நாடு சட்டமன்றத்தில் தொடர முடியும் என்றும் கூறினார் ஷ்யாம்.

“நாளை வரவிருக்கும் தண்டனையை எதிர்த்து அவர் உச்சநீதிமன்றம் செல்லலாம். ஆனால், குற்றவாளி என அறிவிக்கப்பட்டதற்கு தடையாணை வாங்கினால் மட்டுமே அவரால் தொடர முடியும். மற்றவை, தண்டனை விபரங்களைப் பொறுத்தது,”என்றார்.

ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஒருவர் தண்டிக்ப்பட்டால், அவருக்கு அதிகபட்சமாக ஏழு ஆண்டுகள் வரை தண்டனை வழங்கலாம். ஆனால், குற்றத்தின் தன்மை உள்ளிட்டவையை கருத்தில் கொண்டு, ஏழு ஆண்களுக்குள்ளும் நீதிபதிகள் தண்டனை வழங்குவார்கள்.

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் பிரிவு 8(m)-யின் படி, ஊழல் தடுப்புச்சட்டத்தின் கீழ் ஒருவர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டாலே அவர் தகுதியிழக்கிறார்.

 
பொன்முடி

பட மூலாதாரம்,PTI

சிறை செல்வாரா பொன்முடி?

தண்டனை அறிவிக்கப்பட்ட பின் பின்பற்றப்படும் நடைமுறைகள் குறித்து மூத்த வழக்கறிஞர் சங்கர் சுப்புவிடம் பிபிசி தமிழ் பேசியது. அப்போது அவர், மூன்று ஆண்டுகளுக்கு மேல் தண்டனை விதிக்கப்பட்டால், சிறை செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகக் கூறினார்.

“எத்தனை ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டாலும், அவர் ஜாமின் கோரலாம். மூன்று ஆண்டுகள் அல்லது அதற்கும் குறைவாக தண்டனை விதிக்கப்பட்டால், உயர்நீதிமன்றத்திலேயே அவர் ஜாமின்கோரலாம். ஆனால், ஜாமின் வழங்க வேண்டுமா வேண்டாமா என்பது அந்த நீதிபதியின் தனிப்பட்ட முடிவு.

ஒரு வேளை, மூன்று ஆண்டுகளுக்கு மேல் தண்டனை விதிக்கப்பட்டால், அவர் உச்சநீதிமன்றத்தை நாடித்தான் ஜாமின் பெற வேண்டும்,” என்றார் சங்கர் சுப்பு.

ஆனால், சங்கர் சுப்பு தகுதியிழப்பு குறித்து பேசும்போது, “இரண்டு ஆண்டுகளுக்கு குறைவாக தண்டனை கொடுத்தால் அவர் தகுதியிழக்கமாட்டார். ஆனால், குற்றவாளி என்ற தீர்ப்பிற்கு மட்டும் அவர் தடையாணை பெற வேண்டும்,” என்றார்.

 
ஃபேஸ்புக்

பட மூலாதாரம்,PONMUDI

மறு விசாரணையில் மூன்று அமைச்சர்கள் மீதான வழக்குகள்

கடந்த ஆகஸ்ட் மாதம் சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன் வந்து மொத்தம் மூன்று அமைச்சர்களின் வழக்குகளை மறு விசாரணைக்கு எடுத்துள்ளது.

கடந்த 1996-2001ஆம் ஆண்டில் மறைந்த முன்னாள் திமுக தலைவர் கருணாநிதி தலைமையிலான ஆட்சிக்காலத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தார் பொன்முடி. அந்த ஆட்சிக்காலத்தில், வருமானத்திற்க அதிகமாக 1.36 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் 2002ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் வழக்குப்பதிவு செய்தனர்.

இருபது ஆண்டுகளாக விழுப்புரம் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு, இந்த ஆண்டு வேலூர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு கடந்த ஜூன் 28 ஆம் தேதி அமைச்சர் மற்றும் அவரது மனைவியை விடுவித்து தீர்ப்பளித்தது.

அமைச்சர் தங்கம் தென்னரசு

பட மூலாதாரம்,THANGAM THENNARASU/ FB

அதேபோல, 2006-11 ஆம் ஆண்ட நடந்த திமுக ஆட்சியில் கல்வித்துறை அமைச்சராக இருந்தார் தங்கம் தென்னரசு. அமைச்சராக இருந்த காலத்தில், வருமானத்திற்கு அதிகமாக 74.58 லட்சம் ரூபாய் சொத்து சேர்த்ததாக 2012 ஆம் ஆண்ட லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.

இந்த வழக்கில், கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தீர்பளித்த கீழமை நீதிமன்றம், அவரையும், அவரது மனைவியையும் விடுவித்தது. தற்போது, தங்கம் தென்னரசு நிதித் துறை அமைச்சராக உள்ளார். இந்த வழக்கையும் உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து மறு விசாரணைக்கு எடுத்துள்ளது.

அதேபோல, அமைச்சர் கே.கே.எஸ்.எஸ். ராமச்சந்திரன் 2006-2011 ஆட்சிக்காலத்தில், சுகாதாரத்துறை அமைச்சராகவும், பின் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராகவும் இருந்த காலத்தில், வருமானத்திற்கு அதிகமாக ரூ 44.59 லட்சம் சொத்து சேர்த்ததாக 2011 ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப்புதிவு செய்திருந்தனர்.

இந்த வழக்கிலும், கடந்த ஆண்டு கீழமை நீதிமன்றம் அவரை விடுவித்தது. இந்த வழக்கையும் உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து மறு விசாரணைக்கு எடுத்துள்ளது.

 
முதல்வர் முக ஸ்டாலின்

பட மூலாதாரம்,MK STALIN/FB

அரசியலில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்?

திமுக ஆட்சியில் அமைச்சராக இருக்கும்போது, ஊழல் வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு தண்டனை பெற்றால், அது ஆளும் கட்சிக்கும் ஆட்சிக்கும் நெருக்கடியை ஏற்படுத்தும் என்கிறார் தராசு ஷ்யாம்.

“அமைச்சராக இருக்கும் ஒருவர் ஊழல் வழக்கில் குற்றவாளியாகிறார் என்பது நிச்சயம் திமுக.வுக்கு ஒரு அழுத்தமாகத்தான் இருக்கும். மேலும், தற்போது அமைச்சரவையில் இருக்கும் அடுத்தடுத்த அமைச்சர்கள் மீது குற்றச்சாட்டுகளும், வழக்குகளும் வரும்போது, அவை அனைத்தும் கூடுதல் அழுத்தங்களாக திமுக அரசிற்கு இருக்கும்,”என்கிறார் ஷ்யாம்.

சிக்கலில் இருக்கும் அமைச்சர்களுக்கு கட்சிப் பொறுப்பு வழங்கி, புது முகங்களுக்கு அமைச்சர் பதவி வழங்கினால் மட்டுமே நெருக்கடிகள் குறையும் என்றார் ஷ்யாம்.

“அடுத்து மத்தியப்புலனாய்வு அமைப்பின் பார்வையில் இருக்கும் துரைமுருகன், ஏ.வ.வேலு போன்றோருக்கும் சிக்கல் வரலாம். இவை அனைத்தும் ஆளும் கட்சிக்கு கூடுதல் நெருக்கடியைத்தரும். அதற்கு அமைச்சர்களை மாற்றுவதுதான் ஒரே தீர்வு.

ஆனால், அதனை திமுக செய்யுமா என்பது தான் சந்தேகம். ஒருவேளை அதிமுகவில் இது நடந்திருந்தால், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்திருந்தால், அவர் இதனை தான் செய்திருப்பார்,” என்றார் ஷ்யாம்.

https://www.bbc.com/tamil/articles/ckr89g9257do

முருகனை லண்டனுக்கு அனுப்ப இந்திய அரசு மறுப்பு

3 months 1 week ago
முருகனை லண்டனுக்கு அனுப்ப இந்திய அரசு மறுப்பு 1-97.jpg

முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து விடுதலையான முருகனை லண்டனுக்கு அனுப்ப முடியாது என சென்னை உயா்நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்தது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனைக் கைதிகளாக இருந்த நளினி, முருகன், சாந்தன் உட்பட ஏழு பேரை விடுதலை செய்து, 2022-ஆம் ஆண்டு நவம்பா் மாதம் நீதிமன்றம் தீா்ப்பளித்தது. இதையடுத்து விடுதலை செய்யப்பட்ட இலங்கையைச் சோ்ந்த முருகன், சாந்தன் உள்ளிட்டோா் அகதிகள் முகாமில் அடைக்கப்பட்டிருக்கின்றனா்.

லண்டனில் வசிக்கும் மகளுடன் சோ்ந்து வாழ

இந்த நிலையில், லண்டனில் வசிக்கும் தன் மகளுடன் சோ்ந்து வாழ விரும்புவதால், கவுச்சீட்டு கேட்டு விண்ணப்பிப்பதற்காக திருச்சி சிறப்பு முகாமிலிருந்து சென்னையிலுள்ள இலங்கை தூதரகத்துக்குச் சென்று வருவதற்கு பாதுகாப்பு வழங்க, சென்னை காவல்துறைக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் முருகன் மனு தாக்கல் செய்தாா்.

இந்த மனு நீதிபதிகள் கிருஷ்ணகுமாா், தனபால் ஆகியோா் அடங்கிய அமா்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு தரப்பில் கூடுதல் சொலிசிடா் ஜெனரல் ஏ.ஆா்.எல்.சுந்தரேசன் முன்னிலையாகி, கொலை வழக்கில் குற்றவாளியான இலங்கையைச் சோ்ந்த முருகனை லண்டனுக்கு அனுப்ப முடியாது எனவும், இலங்கை நாட்டின் துணை தூதரகம் ஆவணங்களை வழங்கினால் மட்டுமே அந்த நாட்டுக்கும் திருப்பி அனுப்ப முடியும் என்றும் தெரிவித்தாா்.

இலங்கை தூதரகத்துக்கு அழைத்துவர காவல்துறை பாதுகாப்பு

தமிழக அரசு தரப்பில், திருச்சி சிறப்பு முகாமிலிருந்து சென்னையிலுள்ள இலங்கை தூதரகத்துக்கு முருகனை அழைத்துவர காவல்துறை பாதுகாப்பு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. இதனை பதிவுசெய்துகொண்ட நீதிபதிகள், முருகனுக்குப் பயண ஆவணம் வழங்குவதற்கான நோ்காணலுக்கு இலங்கை தூதரகம் அழைக்கும்போது, முருகனுக்குப் பாதுகாப்பு வழங்க உத்தரவிட்டு, வழக்கை முடித்துவைத்தனா்.
 

https://akkinikkunchu.com/?p=263551

Checked
Fri, 03/29/2024 - 04:26
தமிழகச் செய்திகள் Latest Topics
Subscribe to தமிழகச் செய்திகள் feed