தமிழகச் செய்திகள்

80 ஆண்டுகளுக்குப் பிறகு கோவிலுக்குள் சென்ற பட்டியலினத்தவர்; புதிய கோவிலை கட்டும் பிற சமூகத்தினர்

1 month 4 weeks ago
  • மாயகிருஷ்ணன் க
  • பதவி,பிபிசி தமிழுக்காக
  • 9 மணி நேரங்களுக்கு முன்னர்

திருவண்ணாமலை அருகே அம்மன் கோவிலுக்குள் வந்து பட்டியலின மக்கள் வழிபாடு செய்ய தொடங்கியதால் மற்ற சமூக மக்கள் ஒன்று சேர்ந்து தங்களுக்கென புதிய கோவில் கட்ட தொடங்கியுள்ளனர்.

தண்டராம்பட்டு அடுத்த தென்முடியனூர் கிராமத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இந்த முத்து மாரியம்மன் ஆலயத்திற்குள் கடந்த 80 ஆண்டுகளாக பட்டியலின மக்கள் அனுமதிக்கப்படவில்லை.

80 ஆண்டு போராட்டத்துக்குப் பிறகு கடந்த ஆண்டில்தான் பட்டியலின மக்கள் கோவிலுக்குள் சென்று வழிபட அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த நிலையில், பட்டியலின மக்கள் கோவிலுக்குள் நுழைந்ததால் மற்ற பிரிவு மக்கள் தங்களுக்கென வேறொரு கோவிலை கட்டத் தொடங்கியிருப்பது புதிய சர்ச்சையை உருவாக்கி இருக்கிறது.

அம்மன் கோவிலில் பட்டியலின மக்கள் வழிபட மற்ற பிரிவினர் எதிர்ப்பு

கடந்த ஆண்டு பொங்கல் தினத்தன்று முத்து மாரியம்மன் கோவிலில் 12 நாட்கள் திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவில் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் எங்களையும் திருவிழா நடத்த ஒரு நாள் அனுமதிக்க வேண்டும் மற்றும் கோவில் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

ஆனால் பிற சமூக மக்கள் இதற்கு அனுமதி அளிக்கவில்லை. இதையடுத்து பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த மக்கள் கோவிலின் உள்ளே செல்ல தங்களை அனுமதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருவண்ணாமலை இந்து சமய அறநிலைத்துறை அலுவலகத்தில் மனு அளித்தனர்.

இந்த மனுவின் அடிப்படையில் இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் இப்பகுதியில் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் கடந்த 80 ஆண்டுகளாக பட்டியலின மக்கள் கோவிலுக்குள் அனுமதிக்க படவில்லை என தெரியவந்தது.

கோயில் வழிபாடு- சாதி பிரச்னை
படக்குறிப்பு,

பட்டியலினத்தவர்கள் கோவிலுக்குள் சென்றதற்கு பிற சமூகத்தினர் தனியாக ஒரு கோவிலைக் கட்ட முடிவெடுத்துள்ளனர்.

அதன் அடிப்படையில் பட்டியலின மக்கள் கோவிலுக்கு உள்ளே செல்லலாம் என்றும் கோவில் சாதி, மதத்திற்கு அப்பாற்பட்டது என்றும் கடந்த ஆண்டு ஜனவரி 30 ஆம் தேதி இந்து சமய அறநிலைத்துறை துறையினர் கூறினர்.

பிற சமூக மக்களால் எந்தவித அசம்பாவிதமும் நடைபெறாமல் இருக்க இந்த கிராமத்தை காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தலைமையில் காவல்துறையினர் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தனர்.

பட்டியலின மக்களை கோவிலுக்கு உள்ளே அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதை அறிந்த ஊர்பொதுமக்கள் கோவிலுக்கு உள்ளே அவர்களை அனுமதிக்க கூடாது, இந்த கோவில் எங்களுக்கு சொந்தமான கோவில் எனக்கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இருப்பினும் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் அதிகாரிகள் முன்னிலையில் முத்துமாரியம்மன் கோவில் கதவை திறந்து 80 ஆண்டுகளுக்குப் பிறகு கோவிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்தனர்.

கோயில் வழிபாடு- சாதி பிரச்னை
படக்குறிப்பு,

பட்டியலினத்தவர்கள் முத்துமாரியம்மன் கோவிலுக்குள் சென்றதையடுத்து, அந்த கோவிலில் வழிபாடு செய்வதைக் கைவிட்டனர்.

"பட்டியலினத்தவர் நுழைந்த கோவில் எங்களுக்கு வேண்டாம்"

இந்நிலையில் பல மாதங்களாக பிற சமூகத்தைச் சேர்ந்த மக்கள் முத்து மாரியம்மன் கோவிலில் வழிபாடு செய்வதை கைவிட்டனர். மேலும் அவர்கள் ஒன்று கூடி பேசி அந்த கோவில் நமக்கு வேண்டாம் என்றும் புதிதாக ஒரு கோவிலை கட்டி வழிபாடு செய்வோம் என்றும் முடிவெடுத்தனர். இது தொடர்பாக பெயர் கூற விரும்பாத, பிற சமூகத்தைச் சேர்ந்த நபர் பிபிசி தமிழிடம் தொலைபேசியில் பேசினார்.

“எங்கள் கிராமத்தில் பலதரப்பட்ட சமூகங்களை சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றோம். எங்களுக்குள் எந்த பிரச்னையும் இல்லை. நாங்களும் பிரச்னை செய்ய போவதில்லை. தேவையில்லாமல் எங்களுக்கு கோவில் சார்ந்த பிரச்னை ஏற்பட்டது. நாங்கள் பட்டியிலினத்தவர் என்று தனியாக இடம் ஒதுக்கி கோவில் கட்டித் தந்தோம். அதில் அவர்கள் தொடர்ந்து வழிபாடும் நடத்தி வந்தனர்."

"அப்படி இருக்கும் போது, தேவையில்லாமல் எங்கள் பகுதியில் இருக்கும் கோவிலுக்கு வழிபட வந்தது வருத்தத்தை அளித்தது. எனவே பிரச்னைக்குரிய அந்த கோவில் வேண்டாம் என்று முடிவு எடுத்து விட்டோம். அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளதால் அந்த கோவிலை அனைவரும் சொந்தம் கொண்டாடுகின்றனர்," என்று தன் கருத்தை வெளிப்படுத்தினார்.

இந்நிலையில், பிற சமூகத்தினர் இணைந்து தங்கள் சொந்த பணத்தை வைத்து இரண்டு சென்ட் நிலத்தை வாங்கி அதில் கோவில் கட்டவுள்ளனர்.

கோயில் வழிபாடு- சாதி பிரச்னை

இதுகுறித்து பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த நபர், பட்டியலினத்தவர்கள் அந்த கோவிலுக்குள் சென்று வழிபாடு செய்ததால் ஊர் பொதுமக்கள் யாரும் பட்டியலினத்தவர்களிடம் பேசுவதில்லை என்று தெரிவித்தார்.

பெயர் குறிப்பிட விரும்பாத அவர் பிபிசி தமிழிடம் பேசிய போது, "சாமி எல்லாவற்றுக்கும் பொதுவானது தானே? நாங்கள் அப்படித்தான் நினைத்து கும்பிட்டோம். இந்நிலையில் அவர்கள் தனியாக கோவில் கட்ட முடிவெடுத்தது அவர்கள் விருப்பம். இதில் நான் என்ன சொல்ல முடியும்” என்று கேள்வி எழுப்பினார்.

வழக்கறிஞரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருவண்ணாமலை மாவட்ட நிர்வாக குழு உறுப்பினருமான முத்தையன், ராமர் கோயிலுக்கு அனைத்து சமூகத்தினரும் செல்லும் போது ஏன் முத்துமாரியம்மன் கோயிலுக்குள் அனைவரும் செல்லக் கூடாது என்று கேள்வி எழுப்பினார்.

"தனியாக இடம் வாங்கி அதில் புதிதாக கோவில் கட்டினால் அதில் தவறு ஒன்றும் இல்லை. ஆனால் ஏற்கனவே வழிபாடு செய்து கொண்டிருந்த கோவிலை தவிர்த்து அது வேண்டாம் என்று கூறி ஒதுங்கி வேறு ஒரு கோவிலை கட்டுவது என்பது ஏற்றுக்கொள்ள இயலாது," என்று கூறிய அவர், இதை “இடதுசாரி இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் எதிர்க்கிறோம்,” என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், "தற்பொழுது கூட அயோத்தியில் நடைபெற்ற ராமர் கோவில் விசேஷத்திற்கு அனைத்து சமூக மக்களுமே சென்றார்கள். இது எல்லோருக்குமே தெரியும். இங்கு எல்லோரும் இணக்கத்துடன் வாழ வேண்டும். இது போன்ற நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெறாமல் இருக்க அரசு போதுமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். மேலும், சமூக நல்லிணக்கத்துடன் அனைவரும் வாழ, சமாதான பேச்சுவார்த்தை நடத்தி மக்களுக்கு புரிதலை ஏற்படுத்த வேண்டும்," என்றார்.

கோயில் வழிபாடு- சாதி பிரச்னை
படக்குறிப்பு,

சிபிஐஎம் கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் முத்தையன், ராமர் கோயிலுக்குள் அனைத்து சமூகத்தினரும் அனுமதிக்கப்படும் போது ஏன் முத்துமாரியம்மன் கோயிலுக்குள் அனைவரும் செல்லக் கூடாது என்று கேள்வி எழுப்பினார்.

மத்திய அரசு வழக்கறிஞர் சங்கர் கோயில் வழிபாடு குறித்த விதிகளை விளக்கினார். யார் ஒருவரும் தனியாக கோயில் கட்டிக் கொள்வதை சட்டம் அனுமதிக்கிறது என்றாலும், சாதி அடிப்படையில் பாகுபாடுகள் காட்டுவது சட்டப்படி குற்றம் என்று அவர் கூறினார்.

பிபிசி தமிழிடம் பேசிய அவர், "இந்து சமய அறநிலையத்துறை சட்டப்பட்டி இரண்டு வகை கோவில்கள் உள்ளன‌. ஒன்று பொது கோவில், மற்றொன்று தனிநபர் கோவில். இதில் இந்திய அரசியல் அமைப்புச் சட்டப்படி தனி நபர் அல்லது அவர் சார்ந்தவர்கள் இணைந்து தனியாக கோவில் கட்டி வழிபடுவதை யாரும் தடுக்க முடியாது. தனியார் கோவில்களான மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவில், ஸ்ரீபுரம் கோவில் உள்ளிட்ட பல கோவில்களிலும் பொதுஜன வழிபாடு தற்போது நடைபெற்று வருகிறது. இதற்கு அவர்கள் அனுமதி வழங்கி உள்ளனர்," என்று விளக்கினார்.

கோயில் வழிபாடு- சாதி பிரச்னை
படக்குறிப்பு,

சாதி, மொழி அடிப்படையில் யாரையும் விலக்கி வைப்பது தவறு என மத்திய அரசு வழக்கறிஞர் சங்கர் கூறினார்.

"பொதுக் கோவில்கள் எனப்படும் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களுக்கு அனைவரும் வந்து வழிபாடு செய்யலாம். அதாவது உண்டியல் வைத்து நிதி சேர்த்து அதை கோவில் புனரமைப்பு பணிகளுக்கு பயன்படுத்தினால் அது அனைவரும் வந்து வழிபடும் கோவில் என்று எளிதாக புரியும்படி கூறலாம்."

"ஆனால் உண்டியல் இல்லாமல் தனி நபர்கள் கட்டி அவர்களைச் சார்ந்தவர்கள் மட்டுமே வந்து வழிபாடு செய்யவும் சட்டத்தில் இடம் உள்ளது. எனினும், சாதி, மொழி அடிப்படையில் யாரையும் விலக்கி வைப்பது தவறு. ஆனால் எங்களுக்கான கோவிலை நாங்கள் வழிபாடு செய்வதற்காக மட்டும் கட்டிப் பராமரித்து வைத்துக்கொள்வோம் என்ற நிலைப்பாட்டில் ஒரு கோவிலைக் கட்டினாலும், அதை யாராலும் தடுக்க முடியாது." என்றார்.

திருவண்ணாமலை: 80 ஆண்டுகளுக்குப் பிறகு கோவிலுக்குள் சென்ற பட்டியலினத்தவர்; புதிய கோவிலை கட்டும் பிற சமூகத்தினர் - BBC News தமிழ்

சாந்தன் உள்ளிட்ட நால்வரையும் இலங்கைக்கு அனுப்ப வேண்டுகோள்

1 month 4 weeks ago
சாந்தனின் தாயாரின் கடிதத்தை மேற்கோள்காட்டி தமிழக முதல்வருக்கு சிறீதரன் கடிதம் - சாந்தன் உள்ளிட்ட நால்வரையும் இலங்கைக்கு அனுப்பிவைக்க வேண்டுகோள்

Published By: RAJEEBAN   29 JAN, 2024 | 08:55 PM

image
 

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ள இலங்கை தமிழர்களை விடுவிக்குமாறு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, சாந்தனின் தாயாரின் கோரிக்கைக் கடிதத்தை மேற்கோள்காட்டி நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்  கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளார்.

கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளதாவது

let.jpg

 

மறைந்த பாரதப்பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்டு 32 வருடங்கள் சிறைத்தண்டனையின் பின்னர் கடந்த 2022-11-11 அன்று இந்திய உச்சநீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட சாந்தன் அவர்களின் தாயாரால் எனக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள உருக்கம் நிறைந்த கோரிக்கை கடிதம் மீதான தங்களின் கரிசனையையும் கவனத்தையும் கோரிநிற்கின்றேன்.

32 வருடகால சிறைத்தண்டனையின் பின்னர் நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டு ஒருவருடம் கடந்துள்ள நிலையில்  அவ்வழக்கிலிருந்து விடுதலையான இலங்கை பிரஜைகளான சாந்தன் முருகன் ரொபேர்ட் பயஸ் ஜெயக்குமார் ஆகிய நால்வரையும் இலங்கைக்கு வரவழைப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட எந்த முயற்சிகளும் பலனளிக்காததால் இன்றுவரை அவர்கள் திருச்சி சிறப்புமுகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர் என்பதை கரிசனையோடு தெரிவித்துக்கொள்ளவிரும்புகின்றேன்.

இந்நிலையில் தனது இளமைக்காலம் முழுவதையும் சிறையில் கழித்து முதுமைக்காலம் முழுவதையும் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய சிறுநீரக கல்லீரல் பாதிப்பினால் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சாந்தன் தற்போது மருத்துவமனையில் தீவிரசிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 33 ஆண்டுகளாக தனது மகனை காணாது பரிதவித்திருக்கும் சாந்தனின் தாயார் தனது 77 வயதில் மகனை ஒருதடவையாவது நேரில் பார்வையிடவேண்டும் எனவும் அவரை இலங்கைக்கு வரவழைக்க ஆவண செய்யுமாறும் உருக்கமான வேண்டுகோளை விடுத்துள்ளார்.

lett1.jpg

தமிழக முதல்வராக பொறுப்பேற்றதிலிருந்து ஈழத்தமிழர்கள் விடயத்தில் அதிக கரிசனை கொண்டு செயற்பட்டுவரும் நீங்கள் இவ்விடயத்தை மனிதாபிமான அடிப்படையில் அணுகி நோய்வாய்பட்டிருக்கும் சாந்தனின் உடல்நிலை கருதியும் அவரது குடும்பத்தினரின் உணர்வுநிலைப்பட்ட எதிர்பார்ப்பை கருத்தில்கொண்டும் சாந்தன் உள்ளிட்ட நால்வரையும் இலங்கைக்குஅனுப்பிவைக்க ஆவண செய்யவேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன்.

https://www.virakesari.lk/article/175107

நான் முதல்வராக வந்தவுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில், தமிழர்கள் மட்டுமே விளையாடுவார்கள் - அவ்வணியில் நானும் விளையாடுவேன்

1 month 4 weeks ago

தமிழகத்தில் நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில், தமிழர்கள் மட்டுமே விளையாடுவார்கள் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பார் சீமான் பேசியுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடைபெற்ற வீரவணக்க பொதுக்கூட்டத்தில், அவர் இவ்வாறு பேசியுள்ளார்.

 

பொதுக்கூட்டத்தில் பேசிய சீமான், ''கட்சி தொடங்கிய காலத்தில் இருந்து, எவரோடும் சமரசம் இல்லை, எவரோடும் கூட்டணியும் இல்லை. நோட்டுக்கும், சீட்டுக்கும் எவரோடும் பேரமில்லை. சாவோ, வாழ்வோ தனித்துதான். வெற்றியோ, தோல்வியோ தனித்துதான். ஒத்தையடி பாதையில்தான் செல்வேன்.

 

CSK னு ஒரு கிரிக்கெட் அணி இருக்குல. அதுல, ஒருத்தர் கூட தமிழர் கிடையாது. நாம் ஆட்சிக்கு வந்தால், 11 வீரர்களும் தமிழனாகதான் இருப்பான், உங்க அண்ணனும் வந்து விளையாடுவேன்'' எனக் கூறினார்.

 

சீமானின் இந்த பேச்சு, தற்போது தமிழகத்தில் நெட்டிசன்களின் பேசுபொருளாக மாறியுள்ளது

https://www.madawalaenews.com/2024/01/i_858.html

சிறப்பு முகாம் எனும் சித்ரவதைக்கூடத்தில் வைத்து இன்னும் எத்தனை பேரைக் கொல்லப்போகிறீர்கள் முதல்வரே? – சீமான் கேள்வி

2 months ago
சிறப்பு முகாம் எனும் சித்ரவதைக்கூடத்தில் வைத்து இன்னும் எத்தனை பேரைக் கொல்லப்போகிறீர்கள் முதல்வரே? – சீமான் கேள்வி Screenshot-2024-01-28-at-1.36.19%E2%80%A

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, திருச்சி, சிறப்பு முகாமில் நான்கு ஆண்டுகளுக்கு மேல் இருந்த ஈழ உறவான ஐயா கிருஷ்ணமூர்த்தி அவர்கள் மாரடைப்பால் மறைவெய்திய செய்தி பெரும் அதிர்ச்சியையும், ஆழ்ந்த மனத்துயரத்தையும் அளிக்கிறது. சிறப்பு முகாம் எனும் பெயரில் சித்ரவதைக் கூடங்களில் அடைத்து வைத்திருப்பதன் விளைவினால், அங்குள்ள சொந்தங்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்படுகிறது.

ஐயா கிருஷ்ணமூர்த்தி அவர்கள் இதய நோயினால் பாதிக்கப்பட்டு, மருந்துகளை எடுத்து வந்த நிலையில் அவை தீர்ந்துபோய் அதிகாரிகளிடம் முறையிட்டும் அவை கிடைக்கப் பெறவில்லை. இந்நிலையிலேயே, மாரடைப்பு ஏற்பட்டு இன்று காலை அவர் உயிரிழந்திருக்கிறார். அதிகாரிகளின் அலட்சியமும், அரசின் மெத்தனப்போக்குமே அவரது உயிரைப் போக்கியிருக்கிறது என்பது மறுக்கவியலா உண்மையாகும்.

ஏற்கனவே, தம்பி சாந்தன் அவர்கள் பெரும் உடல்நலக்குறைபாடு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் நிலையில், தம்பி ராபர்ட் பயசும், அண்ணன் ஜெயக்குமாரும் உடல் நலிவுக்கு ஆட்பட்டு நாளும் அவதிப்பட்டு வரும் நிலையில் ஐயா கிருஷ்ணமூர்த்தி அவர்களது இறப்புச்செய்தி சிறப்பு முகாமிலுள்ள உறவுகள் குறித்து பெரும் கவலையை ஏற்படுத்துகிறது.

ஈழத்தமிழர் எங்கள் ரத்தமென சட்டமன்றத்தேர்தலுக்கு முன்பு முழக்கமிட்ட முதல்வர் ஸ்டாலின் அவர்களே! சிறப்பு முகாம் எனும் பெயரில் சித்ரவதைக்கூடத்தில் அடைத்து வைத்து இன்னும் எத்தனை உயிர்களைக் கொல்லப் போகிறீர்கள்?. இன்றைக்கு ஐயா கிருஷ்ணமூர்த்தி! நாளைக்கு யார்?. ஈழத்தமிழர்களுக்குக் குடியுரிமை வேண்டுமென ஒருபுறம் கூறிக்கொண்டே, மறுபுறம் அவர்களை மனித உரிமைகள் அற்ற நிலையில் அடைத்து வைத்துக் கொடுமைப்படுத்துவது எந்தவிதத்தில் நியாயம்? இதுதான் நீங்கள் தருவதாகக் கூறிய விடியல் ஆட்சியா? வெட்கக்கேடு! பேரவலம்! ஆகவே, தம்பிகள் சாந்தன், இராபர்ட் பயஸ், முருகன் மற்றும் அண்ணன் ஜெயக்குமார் ஆகியோரை சிறப்பு முகாமிலிருந்து உடனடியாக விடுவித்து, மாற்றிடத்தில் தங்க வைக்க வேண்டுமெனவும், விரும்பிய நாட்டுக்கு அவர்களை அனுப்பி வைக்கத் தேவையான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டுமெனவும், வழக்கு முடிந்தும் சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள மற்ற ஈழச்சொந்தங்களையும் அவர்கள் விரும்பும் நாட்டுக்கு அனுப்ப தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது

 

https://akkinikkunchu.com/?p=266964

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்கள் : இந்திய வெளிவிவகார அமைச்சருக்கு தமிழக முதல்வர் கடிதம்

2 months ago
25 JAN, 2024 | 11:03 AM
image

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை விடுவித்திடவிரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இந்திய வெளிவிவகார அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

அக்கடிதத்தில் இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஆறு மீனவர்கள் மீன்பிடிப் படகுகளுடன் மீன்பிடிக்கச் சென்றிருந்த நிலையில் 22-1-2024 அன்று இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

சமீப காலமாக தமிழ்நாடு மீனவர்கள் தொடர்ந்து இதுபோன்று இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்படுவது கவலையளிப்பதாக உள்ளது என்றும் இத்தகைய போக்கு பதட்டமான சூழ்நிலையை உருவாக்கும் என்பதால் இதில் ஒன்றிய அரசு உடனடி கவனம் செலுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர்  தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இத்தகைய தொடர் கைது நடவடிக்கைகள் தமிழ்ச் சமூகத்தின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளைப் பறிப்பதோடு மீனவ மக்களிடையே அச்சத்தையும் நிச்சயமற்ற சூழலையும் உருவாக்கியுள்ளதாகவும் தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவச் சமூகங்களின் கலாச்சார மற்றும் பொருளாதாரக் கட்டமைப்பை அச்சுறுத்தும் வகையில் உள்ளதாகவும்  முதலமைச்சர் அவர்கள் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண உரிய தூதரக வழிமுறைகளைப் பின்பற்றி தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ள  முதலமைச்சர் அவர்கள் மீனவர்கள் தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண இந்தியா-இலங்கை நாடுகளுக்கிடையேயான கூட்டு நடவடிக்கைக் குழுவினை அமைப்பதன் மூலம் இது சாத்தியமாகும் என்றும் தெரிவித்துள்ளார்.

அப்பாவி மீனவர்கள் தொடர்ந்து இதுபோன்று கைது செய்யப்படுவதைத் தவிர்க்கவும் இந்திய மீனவர்களுக்கும் இலங்கைக் கடற்படையினருக்கும் இடையே நீண்டகாலமாக நிலுவையில் உள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு ஏதுவாகவும் உரிய தூதரக வழிமுறைகளை மேற்கொண்டு கூட்டு நடவடிக்கைக் குழுவினை கூட்டுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  வெளியுறவுத் துறை அமைச்சர் அவர்களைக் கேட்டுக் கொண்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இலங்கைக் காவலில் உள்ள தமிழ்நாடு மீனவர்களையும் அவர்களது படகுகளையும் விரைந்து விடுவித்திட நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

https://www.virakesari.lk/article/174763

தமிழ்நாடு ராவணனை கொண்டாட தொடங்கியது எப்போது தெரியுமா?

2 months ago
ராவணன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

கம்பரால் ராமாயணம் இயற்றப்படுவதற்கு முன்பே தமிழில் ராமாயணக் கதை நிலவிவந்தது என்கிறார்கள் தமிழறிஞர்கள்.

கட்டுரை தகவல்
  • எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
  • பதவி, பிபிசி தமிழ்
  • 24 ஜனவரி 2024
    புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர்

தமிழ்நாட்டில் ராமர் பக்தியோடு வணங்கப்படுவதைப் போலவே, ராவணனை அங்கீகரிக்கும் போக்கும் இருக்கிறது. இது எவ்வளவு காலமாக இருக்கிறது? இதற்குக் காரணம் என்ன?

ஜனவரி 22ஆம் தேதியன்று அயோத்தியில் ராமர் கோவில் திறக்கப்பட்ட தினத்தன்று நாடு முழுவதும் ராமர் குறித்தும், ராமர் கோவில் குறித்தும் உற்சாகமாக சமூக வலைதளங்களில் பதிவுகள் வெளியாகின. ஆனால், நாட்டின் தென் பகுதியான தமிழகத்தில், #ராவணன் என்ற ஹாஷ்டாகின் கீழ் பதிவுகள் வெளியாகின. அதில் ராவணனை முன்னிறுத்தி பலர் பதிவுகளை வெளியிட்டனர்.

ராமாயணத்தின் பிரதான எதிர் கதாபாத்திரமான ராவணன் போற்றப்படுவது இந்தியாவுக்கு புதிதல்ல. இந்தியாவின் பல கோவில்களில் ராவணனின் உருவம் வணங்கப்படுகிறது. அதற்குக் காரணம், மிகப் புனிதமான ஒரு இதிகாசத்தின் அங்கமாக ராவணன் இருப்பதுதான்.

ஆனால், தமிழ்நாட்டில் ராவணன் போற்றப்படுவதற்கான காரணங்கள் முற்றிலும் மாறானவையாக இருக்கின்றன.

ராவணன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

இந்தியாவின் பல கோவில்களில் ராவணனின் உருவம் வணங்கப்படுகிறது

ராமாயணம் தமிழ்நாட்டில் தாக்கம் செலுத்தத் தொடங்கியது எப்போது?

தமிழில் வால்மீகியின் ராமாயணத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட காப்பியங்களில் கம்பரின் ராமாயணம் மிக முக்கியமானது. ஒன்பதாம் நூற்றாண்டில் இருந்து 12ஆம் நூற்றாண்டிற்குள் இயற்றப்பட்டதாகக் கருதப்படும் கம்ப ராமாயணம், இயற்றப்பட்ட காலத்திலிருந்து தமிழில் பெரும் செல்வாக்கைச் செலுத்திவரும் இதிகாசமாக இருக்கிறது.

ஆனால், கம்பரால் ராமாயணம் இயற்றப்படுவதற்கு முன்பே தமிழில் ராமாயணக் கதை நிலவிவந்தது என்கிறார்கள் தமிழறிஞர்கள். சிலப்பதிகாரத்தில் வரும்

"அருந்திறல் பிரிந்த அயோத்தி போலப்/

பெரும்பெயர் மூதூர்பெரும்பே துற்றதும்"

என்ற வரிகளைச் சுட்டிக்காட்டி, சிலப்பதிகார காலத்திலேயே ராமாயணக் கதை தாக்கம் செலுத்தியது என தனது தமிழர் பண்பாடு நூலில் குறிப்பிடுகிறார் எஸ். வையாபுரிப்பிள்ளை.

இது தவிர, புறநானூறு, அகநானூறு, மதுரைக் காஞ்சி, பரிபாடல் ஆகியவற்றிலும்கூட ராமாயண பாத்திரங்களை, சம்பவங்களை உவமானமாகக் காட்டும் போக்கையும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.

திருஞானசம்பந்தரின் திருநீற்றுப் பதிகத்திலும் "இராவணன் மேலது நீறு" என குறிப்பிடப்பட்டு, அவர் சைவ சமயத்தைச் சேர்ந்தவராகச் சுட்டிக்காட்டப்படுகிறார்.

 
ராவணன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

அயோத்தி தாசரின் எழுத்துகளிலும் ராவணன் பற்றிய நேர்மறையான குறிப்புகள் தென்படுகின்றன

தமிழ்நாடு ராவணனை கொண்டாட தொடங்கியது எப்போது?

19ஆம் நூற்றாண்டில்தான் ராவணனை மிக முக்கியமான அடையாளமாக தூக்கிப்பிடிக்கும் போக்கு துவங்கியது என்கிறார் ஆய்வாளர் ஸ்டாலின் ராஜாங்கம். "19ஆம் நூற்றாண்டில் வெளிவந்த தத்துவவிவேசினி இதழில் மாசிலாமணி முதலியார் சில இடங்களில் ராவணனை உயர்த்திச் சொல்கிறார். அதேபோல அயோத்தி தாசரின் எழுத்துகளிலும் ராவணன் பற்றிய நேர்மறையான குறிப்புகள் தென்படுகின்றன. இதற்குப் பிறகு 20ஆம் நூற்றாண்டில் திராவிட இயக்கத்தினர் ராவணனை மிகுந்த நேர்மறைத் தன்மை கொண்டவராக சித்தரிக்க ஆரம்பித்தனர்" என்கிறார் அவர்.

திராவிட இயக்கக் கவிஞரான பாரதிதாசன் எழுதிய "தென்றிசையைப் பார்க்கின்றேன்" என்று துவங்கும் பாடல் முழுக்க முழுக்க ராவணனைப் புகழ்ந்து எழுதப்பட்டிருந்தது.

"குள்ளநரிச்

செயல்செய்யும் கூட்டத்தின் கூற்றம்!

என்தமிழர் மூதாதை!

என்தமிழர் பெருமான் இராவணன்காண்!" என அந்தப் பாடலில் குறிப்பிடுகிறார் பாரதிதாசன்.,

இதற்குப் பிறகு, திராவிட இயக்கத்தின் மிக முக்கியத் தலைவரான அண்ணாவின் காலத்தில் ராவணனின் அடையாளம் மிக நேர்மறையான ஒன்றாக, ராமனுக்கு மாற்றாக முன்வைக்கப்பட ஆரம்பித்தது என்கிறார் ஸ்டாலின் ராஜாங்கம்.

"ஆரம்ப காலத்தில் மையநீரோட்ட மரபுகளோடு தொடர்புபடுத்தப்படாமல், மாறுபட்ட சித்தாந்தங்களோடுதான் ராவணன் தொடர்புபடுத்தப்பட்டார். ஆனால், இருபதாம் நூற்றாண்டில் நடந்த தமிழ் மறுமலர்சிக்குப் பிறகு, ராவணன் திராவிட - தமிழ் மரபைச் சேர்ந்தவராக முன்னிறுத்தப்பட ஆரம்பித்தார்" என்கிறார் அவர்.

ஆனால், தமிழ் இலக்கிய மரபைப் பொறுத்தவரை ராவணனைத் தூக்கிப் பிடிக்கும் மரபு கிடையாது என்கிறார் ஆய்வாளர் பொ. வேல்சாமி. இருபதாம் நூற்றாண்டில்தான் இந்தப் போக்கு துவங்கியது என்பதை அவரும் வலியுறுத்துகிறார்.

"தமிழ்நாட்டில் பிராமணரல்லாதார் இயக்கம் வலுப்பெற்றபோது, தமிழ்நாட்டில் கம்ப ராமாயணம் மிகுந்த செல்வாக்குடன் இருந்தது. ராமன் ஒரு முக்கிய அடையாளமாக முன்வைக்கப்பட்டார். ஆகவே, அதனை எதிர்கொள்ள திராவிட இயக்கம் ராவணனை முக்கிய அடையாளமாக முன்வைத்தது. ராமனை எதிர்மறைக் கதாபாத்திரமாக்கி, அதனைத் தாக்க ஆரம்பித்தார்கள்" என்கிறார் பொ. வேல்சாமி.

 
ராவணன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

அவ்வப்போது ராவண லீலாவை பெரியார் இயக்கங்கள் ஆங்காங்கே நடத்தி வருகின்றன.

1950களின் துவக்கத்தில் திராவிட நாடு இதழில், ராம லீலாவுக்குப் பதில் ராவண லீலா நடத்தி, ராமன் உருவத்தைக் கொளுத்தினால் என்ன செய்ய முடியும் என ஒரு கட்டுரையில் கேள்வி எழுப்பினார் சி.என். அண்ணாதுரை. இதற்குப் பிறகு தென்னாட்டில் ராவண லீலா நடத்தும் காலம் வந்தே தீரும் எனக் குறிப்பிட்டார் மு. கருணாநிதி. அதற்கு முன்பே அண்ணா எழுதிய 'கம்ப ரசம்' நூல், ராமாயணத்திற்கு எதிரான திராவிட இயக்க உணர்வை வெளிப்படுத்துவதாக இருந்தது.

ஆனால், ராமன் என்ற அடையாளத்தைக் கடுமையாக எதிர்த்த பெரியார் அதற்கு மாறாக ராவணன் என்ற அடையாளத்தை தொடர்ந்து உயர்த்திப் பிடிக்கவில்லை என்பதையும் ஸ்டாலின் ராஜாங்கம் சுட்டிக்காட்டுகிறார்.

பெரியாரின் மறைவுக்குப் பிறகு, அவரது முதலாம் ஆண்டு நினைவு தினத்தில் மணியம்மையார் தலைமையிலான திராவிடர் கழகம் ராவண லீலாவை நடத்தப்போவதாக அறிவித்தது. இதற்கு கடுமையான எதிர்ப்பு எழுந்த நிலையிலும் சென்னையில் உள்ள பெரியார் திடலில் ராவண லீலா நடத்தப்பட்டது. அதற்குப் பிறகும் அவ்வப்போது ராவண லீலாவை பெரியார் இயக்கங்கள் ஆங்காங்கே நடத்தி வருகின்றன.

இதற்கு நடுவில் திராவிட இயக்கப் பேராசிரியரான புலவர் குழந்தை எழுதிய 'ராவண காவியம்' 1946ல் வெளியானது. இது ராவணனை நேர்மறைப் பாத்திரமாகவும் ராமன், லக்ஷ்மணன் ஆகியோரை எதிர்மறைப் பாத்திரங்களாகவும் சித்தரித்தது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இந்த நூல் 1948ஆம் ஆண்டு ஜூன் இரண்டாம் தேதி தமிழ்நாடு அரசால் தடைசெய்யப்பட்டது. 1972ஆம் ஆண்டில்தான் இந்தத் தடை நீக்கப்பட்டது. ராவணன் மிக நல்ல குணங்களை உடையவாரகவும், போற்றத்தக்கவராகவும் ஒரு கருத்தை உருவாக்கியதில் இந்த புத்தகத்திற்கு முக்கியப் பங்கு இருக்கிறது.

 
ராவணன்

பட மூலாதாரம்,RAMAYAN

படக்குறிப்பு,

ராவணன் திரைப்படம், ராவணனை நல்ல பண்புகளை உடையவனாகக் காட்டியது.

2010ஆம் ஆண்டில் ராமாயணக் கதையைத் தழுவி மணிரத்னத்தின் இயக்கத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராய் நடித்து வெளியான ராவணன் திரைப்படம், ராவணனை நல்ல பண்புகளை உடையவனாகக் காட்டியது.

"ஆனால், சாதாரண மக்கள் இதையெல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. அவர்கள் வழக்கம் போலவே ராமாயணத்தை அணுகினார்கள்" என்கிறார் பொ. வேல்சாமி.

1980களின் பிற்பகுதியில் உருவான பா.ஜ.கவின் எழுச்சி, புதிய பொருளாதாரக் கொள்கை, நாட்டின் பல்வேறு பகுதிகளில் விளிம்பு நிலை மக்களின் போராட்டங்கள், மண்டல் கமிஷன் பரிந்துரைகளின் அமலாக்கம் ஆகியவற்றிற்கு மத்தியில் ராவணனை மாற்று அடையாளமாக முன்னிறுத்துவதற்கு பெரிய முக்கியத்துவம் கிடைக்கவில்லை. இப்போது ராமர் கோவில் திறக்கப்பட்டதை ஒட்டி, மீண்டும் ராவணனின் அடையாளம் கவனத்திற்கு வந்திருக்கிறது.

https://www.bbc.com/tamil/articles/crg94q6m7vgo

எம்எல்ஏவின் மகன் வீட்டில் பணியாற்றிய 18 வயது பட்டியல் சாதிப் பெண் - பிபிசியிடம் கூறிய அதிர்ச்சி சம்பவங்கள்

2 months ago
திமுக எம்எல்ஏவின் மகன், மருமகள் வீட்டில் பணியாற்றிய பெண் பிபிசியிடம் கூறிய அதிர்ச்சி சம்பவங்கள்
துன்புறுத்தப்பட்ட சிறுமி

பட மூலாதாரம்,GETTY IMAGES

24 ஜனவரி 2024, 02:21 GMT
புதுப்பிக்கப்பட்டது 24 ஜனவரி 2024, 02:50 GMT

எச்சரிக்கை: இந்த கட்டுரையின் உள்ளடக்கம் உங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தக்கூடும்.

“ஒரு நாள் நான் விரைவாக எனது பணியை முடிக்கவில்லை என்பதற்காக காலை 10 முதல் இரவு 11 மணி வரை கரண்டியால் என்னை அடித்தார். நான் எவ்வளவு கெஞ்சியும் நிறுத்தாமல், என் முகத்தை கழுவிவிட்டு வரச் சொல்லி என்னை அடித்தார்கள்”

இப்படித்தான் தான் அனுபவித்த சித்திரவதையை விவரிக்கிறார் கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 18 வயது பட்டியல் சாதிப் பெண்.

இந்தப் பெண், பல்லாவரம் திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் ஆண்ட்ரோ மதிவாணன் வீட்டில் வேலை பார்த்த போது, ஆண்ட்ரோவும், அவரது மனைவி மெர்லினும் தன் உடலில் சூடு வைத்தும், அடித்தும் சித்திரவதை செய்ததாக ஜனவரி 16 ஆம் தேதி புகார் அளித்தார்.

புகாரின் பேரில் ஜனவரி 18 ஆம் தேதி வழக்குப்பதிவு செய்த திருவான்மியூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த குற்றச்சாட்டு குறித்து கேட்க மதிவாணன் மற்றும் மெர்லினை தொடர்புகொள்ள முடியவில்லை. பல்லாவரம் திமுக எம்எல்ஏ கருணாநிதியிடம் கேட்டபோது, தனது மகன் வீட்டில் என்ன நடந்தது எனத் தனக்குத் தெரியாது எனக் கூறினார்.

 
துன்புறுத்தப்பட்ட சிறுமி

பட மூலாதாரம்,GETTY IMAGES

என்ன நடந்தது?

இச்சம்பவம் தொடர்பாக பிபிசி தமிழ் சார்பில் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் பேசினோம். அப்போது அவர், பன்னிரண்டாம் வகுப்பு முடித்துவிட்டு, மேற்படிப்பிற்காக பணம் சேர்ப்பதற்காக வேலையில் சேர்ந்ததாகக் கூறினார்.

“நான் கடந்த ஆண்டு பன்னிரெண்டாம் வகுப்பு முடித்த பிறகு, எங்காவது வேலைக்கு சேரலாம் என இருந்தேன். என் அம்மா அப்போது கேளம்பாக்கத்தில் ஒரு வீட்டில் வேலை பார்த்து வந்தார். அப்போது ஒரு ஏஜென்சி மூலமாக திருவான்மியூரில் உள்ள எம்எல்ஏ கருணாநிதியின் மகன் ஆண்ட்ரோ மதிவாணன் வீட்டில் துடைப்பதற்கும், அவர்களுக்கு உதவியாக இருப்பதற்கும் வேலைக்கு சேர்ந்தேன்,” என தான் எப்படி வேலைக்குச் சேர்ந்தார் என பிபிசியிடம் பகிர்ந்தார்.

ஆனால், வேலைக்கு சேர்ந்த இரண்டே நாட்களில், வேலை பிடிக்காததால், வேலையை விட்டு செல்ல முயன்றதாகவும், அப்போது கருணாநிதியின் மகன் ஆண்ட்ரோ தன் அம்மாவை போலீசில் சிக்க வைத்துவிடுவேன் என மிரட்டியதால், அந்த வேலையைத் தொடர்ந்ததாகவும் அவர் கூறினார்.

“இரண்டு நாட்களிலேயே எனக்கு கடுமையான வேலைகள் கொடுத்தனர். என்னால் செய்ய முடியாது என என் அம்மாவிடம் தொலைபேசியில் சொன்னேன். ஆனால், அப்போதே என் அம்மாவை எதாவது செய்துவிடுவோம் என மிரட்டியதால், நான் அதற்குப் பிறகு எதுவும் சொல்லவில்லை. வேலைக்கு சேர்ந்து எட்டு நாட்களுக்கு பின் என் அம்மா வந்தார்."

"அப்போதுதான் ஒப்பந்தம் போட்டனர். அதில், மாதம் ரூ 16,000 சம்பளம் என்று கூறியிருந்தனர். அப்போதே நான் என் அம்மாவிடம் கூறியிருக்க வேண்டும். ஆனால், பயத்தால் என்னால் சொல்ல முடியவில்லை. அன்றே எனது தொலைபேசியை என் அம்மாவிடம் கொடுத்து அனுப்பிவிட்டனர்,” என்றார் அந்த 18 வயது பெண்.

 
துன்புறுத்தப்பட்ட சிறுமி

பட மூலாதாரம்,GETTY IMAGES

‘காலால் முகத்தில் உதைத்தனர்’

கடந்த எட்டு மாதங்களாக திருவான்மியூரில் உள்ள ஆண்ட்ரோவின் வீட்டில் பணியாற்றி வந்த இவர், தினமும் தான் எதாவது ஒரு காரணத்திற்காக துன்புறுத்தப்பட்டதாகக் கூறினார்.

“ஒரு நாள் அவர்கள் மும்பைக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தனர். அன்று இரவு 2 மணி வரை அனைத்தையும் எடுத்து வைத்துவிட்டு, பிறகு தான் தூங்கினேன். காலையில் உணவும் தயார் செய்ய வேண்டும் எனக் கூறியிருந்தனர். ஆனால், என்னால், 7 மணிக்குத் தான் எழுந்திருக்க முடிந்தது. அதற்கு மெர்லின் என்னை கடுமையாகத் தாக்கி, அசிங்கமாகத் திட்டினார்” என்றார்.

இதேபோல, கடந்த ஜனவரி 1 ஆம் தேதி துணி துவைக்கத் தெரியாது என்று கூறியதற்காக, மிளகாயைச் சாப்பிடச் சொல்லி கொடுமைப்படுத்தியதாக அந்தப் பெண் கூறினார்.

“எதாவது வேலை எனக்குத் தெரியாது எனச் சொன்னால், மெர்லின் மிளகாயைச் சாப்பிடச் சொல்லி கட்டாயப்படுத்தி கொடுமைப் படுத்துவார்கள். கடந்த ஜனவரி 1 ஆம் தேதி, அப்படி துணி துவைக்கத் தெரியாது என்று கூறியதற்கு 10 மிளகாயை சாப்பிட வைத்தனர். குடிக்கத் தண்ணீரும் கொடுக்கவில்லை,” என்றார்.

மேலும், தன்னுடைய முகமே மாறிவிட்டதாக அந்தப் பெண் மிகவும் வேதனை தெரிவித்தார். "அவர்கள் என்னை கீழே தள்ளி முகத்தின் மீது மிதிப்பார்கள், காலால் உதைப்பார்கள். அவர்கள் துன்புறுத்தியதில், என் முகமே மாறிவிட்டது. எவ்வளவு காயமானாலும், சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கூட அழைத்துச் செல்ல மாட்டார்கள்," என்றார் அவர்.

இதுகுறித்து கருத்துகேட்க ஆண்ட்ரோவையும், அவரது மனைவி மெர்லினையும் தொடர்பு கொள்ள முயன்றோம். ஆனால், அவர்களை தொடர்புகொள்ள முடியவில்லை.

 
துன்புறுத்தப்பட்ட சிறுமி

பட மூலாதாரம்,GETTY IMAGES

காவல்துறைக்கு எப்படித் தெரிந்தது?

பாதிக்கப்பட்ட பெண் பொங்கல் விடுமுறைக்காக வீட்டிற்கு செல்ல வேண்டும் எனக் கூறியுள்ளார். அப்போதுதான் வீட்டிற்குச் செல்ல அனுமதித்தாக அவர் கூறினார்.

“என் அம்மா என்னிடம் எப்போதாவது தான் பேசுவார். அவர் எப்போது பேசினாலும், அவர்கள் சொல்வதைத் தாண்டி நான் எதுவும் பேசக்கூடாது. மீறி பேச முயன்றால், என்னை அடிப்பார்கள். பொங்கலுக்காக வீட்டிற்கு செல்ல வேண்டும் எனக் கூறியபோதும், அவர்கள் வீட்டில் நடந்ததை யாருக்கும் சொல்லக் கூடாது என மிரட்டித்தான் என்னை அனுப்பினர். நானும் அவர்களுக்கு பயந்து யாரிடமும் சொல்லவில்லை. ஆனால், மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றதால்தான் இது வெளியே வந்தது,” என்றார் அந்தப் பெண்.

ஜனவரி 16 ஆம் தேதி, பாதிக்கப்பட்ட பெண், கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர் பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றார்.

அப்போது, அவரது முகம், கை, கால், தலை மற்றும் பிற இடங்களில் ஏற்பட்டுள்ள காயத்தை பார்த்த மருத்துவர்கள், அது தொடர்பாக உளுந்தூர்பேட்டை காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

தகவலின்பேரில் மருத்துவமனைக்கு விரைந்த போலீசார், பாதிக்கப்பட்ட பெண்ணின் குற்றச்சாட்டுகளை கேட்டுவிட்டு, சென்னை அடையார் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அந்த பெண் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில், அடையார் போலீஸ் மாவட்ட சரகத்திற்கு உட்பட நீலாங்கரை மகளிர் போலீசார், வன்கொடுமை தடுப்புச் சட்டம் உட்பட ஆறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து பல்லாவரம் எம்எல்ஏ கருணாநிதியிடம் கேட்டபோது, “என் மகன் வீட்டில் என்ன நடந்தது என எனக்குத் தெரியாது. ஆனால், எங்கள் வீட்டில் பணியாற்றும் நபர்களை எங்கள் குடும்பத்தில் ஒருவராகத் தான் பார்க்கிறோம்,”என்றார் அவர்.

 
காவல்துறையினர் என்ன சொல்கிறார்கள்?

இந்த வழக்கு குறித்து அடையார் சரகத்தில் உள்ள ஒரு மூத்த அதிகாரி பிபிசியிடம் பேசினார். அப்போது அவர், “இந்த வழக்கில், எந்த தாமதமும் இல்லை. புகார் பெற்ற உடனேயே வழக்குப்பதிவு செய்துள்ளோம். குற்றம் சாட்டப்பட்ட ஆண்ட்ரோ மற்றும் மெர்லினை கைது செய்ய மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இருவரும் விரைவில் கைது செய்யப்படுவார்கள்,” என்றார்.

மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணிடம் புகார் பெற்ற பிறகு அவரிடம் தொடர் விசாரணை செய்யவில்லை என்றும் கூறினார். “பாதிக்கப்பட்ட பெண்ணிடமும் நாங்கள் மீண்டும் ஒரு முறை விசாரணை நடத்தி, அவரின் வாக்குமூலத்தை முழுமையாக பதிவு செய்ய வேண்டியுள்ளது. அதுவும் விரைவில் செய்யப்படும்,” என்றார்.

இதற்கிடையில், இந்த வழக்கை கையில் எடுத்திருக்கும் தமிழ்நாடு மகளிர் ஆணையம், ஜனவரி 29 தேதி, பாதிக்கப்பட்ட பெண்ணிடம் விசாரிக்க உள்ளனர்.

https://www.bbc.com/tamil/articles/cz7kgyz42jdo

உயிருக்கு ஆபத்தான நிலையில் சாந்தன்- சிறுநீரகம் கல்லீரல் பாதிப்பு - சிறைக்கைதிகள் உரிமை அமைப்பு ஸ்டாலினிற்கு கடிதம்

2 months ago

Published By: RAJEEBAN   24 JAN, 2024 | 05:11 PM

image

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று பல வருடங்களின் பின்னர் பொதுமன்னிப்பின் கீழ் விடுதலையாகி தற்போது திருச்சி சிறைமுகாமில் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் சாந்தனின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக சிறைக்கைதிகள் உரிமை மையம் என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.

சாந்தனிற்கு கல்லீரல், சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சிறைக்கைதிகள் உரிமை மையம் தெரிவித்துள்ளது.

திருச்சி சிறப்பு முகாமில் சாந்தனிற்கு உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை, இதனால் அவரின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் சென்னை பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை வழங்கவேண்டும் என சிறைக்கைதிகள் உரிமை மையம்  தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளது.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று தற்போது விடுதலையான சாந்தன் இலங்கைக்கு செல்வதற்காக விசா போன்றவற்றை பெற்றுக்கொள்வதற்காக காத்திருக்கின்றார், திருச்சி முகாமில் அடைக்கப்பட்டுள்ள சாந்தனிற்கு சிறுநீரக பாதிப்பு எற்பட்டுள்ளதால் அவருக்கு உரிய சிகிச்சை வழங்குவதற்கான நடவடிக்கைகள் திருச்சி சிறப்பு முகாமில் எடுக்கப்படாததால் அவரின் உயிரை காப்பாற்றுவதற்காக  தமிழக முதல்வர் உரிய நடவடிக்களை எடுக்கவேண்டும் என சிறைக்கைதிகள் உரிமைகள் மையம் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளது.

சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் கால்கல் வீங்கியுள்ளன கல்லீரலும் பாதிக்கப்பட்டுள்ள து.  எனினும் இரண்டுமாதங்களாக உரிய சிகிச்சைகள் வழங்கப்படவில்லை. இதனால் அவர் உயிருக்கு போராடுகின்றார் என்பதால்  அவரை காப்பாற்றவேண்டும் என சிறைக்கைதிகள் மையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

https://www.virakesari.lk/article/174731

மதுரையில் பிரம்மாண்ட ஏறு தழுவுதல் அரங்கம் திறப்பு!

2 months ago
MK-sTALIN.webp?resize=750,375&ssl=1 மதுரையில் பிரம்மாண்ட ஏறு தழுவுதல் அரங்கம் திறப்பு!

மதுரை, அலங்காநல்லூர் அருகே அமைக்கப்பட்டுள்ள  ”கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம்” இன்று முதலமைச்சர்  மு.க ஸ்டாலினால் திறந்து வைக்கப்படவுள்ளது.

சுமார் 66.80 ஏக்கர் பரப்பளவில் உருவாக்கப்பட்டுள்ள குறித்த பிரம்மாண்ட அரங்கத்தில், பார்வையாளர்கள் கண்டுகளிப்பதற்கு 4,500 இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று இடம்பெறவுள்ள அரங்க திறப்பு விழாவைத் தொடர்ந்து, குறித்த அரங்கத்தில் ஏறு தழுவிதல் போட்டிகள் நடைபெறவுள்ளதோடு அதில்  500 காளைகள் மற்றும், 300 வீரர்கள் பங்கேற்கவுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://athavannews.com/2024/1366972

புதுச்சேரியில் கட்டி முடித்த ஒரே மாதத்தில் சீட்டுக்கட்டாக சரிந்த கட்டடம் - என்ன காரணம்?

2 months ago

22 ஜனவரி 2024
புதுச்சேரியில் மூன்று அடுக்கு மாடி கட்டடம் சரிந்து விழுந்தது. கட்டி ஒரு மாதமே ஆன நிலையில், புதுமனை புகுவிழா கூட நடைபெறவில்லை.

புதுச்சேரி ஆட்டுப்பட்டி அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் சாவித்திரி. கணவர் ரங்கநாதன் உயிரிழந்த நிலையில், இவர் தனது மகள் சித்ரா மற்றும் மருமகன் சுரேஷ் ஆகியோருடன் வசித்து வருகிறார். இவர்கள் அதே பகுதியில் அரசு இலவசமாக கொடுத்த பட்டா இடத்தில் மூன்று மாடி வீடு கட்டி வந்தனர். இந்த வீட்டின் கட்டுமான பணிகள் கடந்த மாதம் முடிந்த நிலையில், வருகின்ற 26 ஆம் தேதி வீட்டின் புதுமனை புகுவிழா நடத்த சாவித்திரி திட்டமிட்டிருந்தார்.

இதற்கிடையே அந்த வீட்டின் அருகே செல்லும் வாய்காலுக்கு சுவர் கட்டும் பணி கடந்த 7 மாதங்களாக நடைபெற்று வருகிறது. அதனால் கடந்த சில தினங்களுக்கு முன்பு சாவித்திரி வீட்டருகே வாய்கலுக்கு சுவர் கட்டுவதற்காக ஆழமாக பள்ளம் எடுக்கப்பட்டது. அப்போது புதிதாக கட்டப்பட்ட மூன்று மாடி வீடு லேசாக சாய்ந்து காணப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த சாவித்திரி இதுதொடர்பாக வாய்க்கால் சுவர் கட்டும் ஒப்பந்ததாரரிடம் முறையிட்டு வந்தார்.

இந்நிலையில் இன்று வீடு மிக மோசமாக சாய்ந்தவாறு காணப்பட்டதை தொடர்ந்து பொதுப்பணித்துறை பொறியாளர்கள் மற்றும் ஒப்பந்ததாரர், ஆகியோர் வீட்டின் தரத்தை ஆய்வு செய்ய வந்து பேசிகொண்டிருந்தபோது வீடு திடீரென முற்றிலுமாக சரிந்து விழுந்தது. அப்போது அங்கு இருந்தவர்கள் ஓட்டம் பிடித்ததால் யாருக்கும் உயிர் சேதமோ, காயங்களோ ஏற்படவில்லை.

தொடர்ந்து வீடு இடிந்து விழுந்தது தொடர்பாக அதிகாரிகள் ஆய்வு செய்து வருவதாகவவும், அதற்கு பின்னரே வீடு அதிக உயரத்தில் தரமன்றி கட்டப்பட்டதால் சரிந்து விழுந்ததா? அல்லது வாய்க்காலுக்கு பள்ளம் எடுத்ததால் விழுந்ததா என தெரியவரும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

https://www.bbc.com/tamil/articles/czvqlzee1jro

தமிழ்நாட்டில் பள்ளிவாசல் திறப்பு விழாவுக்கு சீர்வரிசையுடன் வந்த இந்துக்கள், கிறிஸ்தவர்கள்

2 months ago
பள்ளிவாசல் திறப்பு : சீர்வரிசையுடன் வந்த இந்துகள், கிறிஸ்தவர்கள்
கட்டுரை தகவல்
  • எழுதியவர், பிரபுராவ் ஆனந்தன்
  • பதவி, பிபிசி தமிழுக்காக
  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே உள்ள சாலைக்கிராமத்தில், ஞாயிற்றுகிழமை மஸ்ஜிதே இலாஹி- பள்ளிவாசல் திறப்பு விழா நடைபெற்றது.

இந்த விழா மத நல்லிணக்கத்தை போற்றும் வகையில் நடைபெற்றது.

அந்த கிராமத்தின் இந்துக்கள், கிறிஸ்தவர்கள் சீர்வரிசைகளுடன் சென்று, கலந்து கொண்டு திறப்பு விழாவை கொண்டாடினர்.

'இறையில்ல இல்ல திறப்பு விழா' என பெயர் சூட்டிய கிராம மக்கள்

கிராமம் முழுவதும் முக்கிய வீதிகள் மற்றும் பேருந்து நிலையங்களில் வரவேற்பு பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. அதில் மூன்று மதத்தவரும் திறப்பு விழாவுக்கு அழைப்பது போல வடிவமைக்கப்பட்டிருந்தது. பேனரின் ஓரத்தில் மஸ்ஜிதே இலாஹி என்று சிறிய எழுத்துகளில் எழுதப்பட்டிருந்த போதும், எந்த மத பெயரும் குறிப்பிடாமல், “இறையில்ல திறப்பு விழா” என்று விழாவுக்கு பெயர் சூட்டியிருந்தனர். இந்த பேனர்கள் ஊர் கவுன்சிலர், ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் போன்றவர்கள் சார்பாக ஊரின் பொது இடங்களில் வைக்கப்பட்டிருந்தது.

பள்ளிவாசல் திறப்பு : சீர்வரிசையுடன் வந்த இந்துகள், கிறிஸ்தவர்கள்
பள்ளிவாசல் திறப்பு : சீர்வரிசையுடன் வந்த இந்துகள், கிறிஸ்தவர்கள்

திறப்புவிழாவுக்கு இந்துக்களும் கிறிஸ்தவர்களும் ஊர்வலமாக சென்றனர். இந்துக்கள் தாம்பூலத்தில் நெல்மணிகள், மிளகாய், வெற்றிலை, பாக்கு ஆகியவற்றை சீர்வரிசையாக பள்ளிவாசலுக்கு எடுத்துச் சென்றனர். கிறிஸ்தவர்கள் பாதிரியார் ரமேஷ் தலைமையில் மெழுகுவர்த்தி, பழங்களை சீர்வரிசையாக கொண்டுச் சென்றனர்.

சீர்வரிசை கொண்டு வந்த இருமதத்தினரையும் சாலைக்கிராமம் பள்ளிவாசல் ஜமாத் தலைவர் நைனா முகம்மது தலைமையில், ஜமாத் உறுப்பினர்கள் மற்றும் அல்பத்ரு வாலிபர் முன்னேற்ற சங்க நண்பர்கள் ஆரத்தழுவி வரவேற்று பள்ளிவாசலுக்குள் அழைத்துச் சென்றனர்.

குளிர்பானங்கள், தண்ணீர் கொடுத்து தங்களது அன்பை வெளிப்படுத்தினர். பின்னர் 150 கிடா வெட்டி 7,000 பேருக்கு அசைவ பிரியாணி வழங்கப்பட்டது.

மத நல்லிணக்கத்தை போற்றும் வகையில் நடைபெற்ற இந்த விழா, அப்பகுதி மக்களிடையே மனநெகிழ்ச்சி மற்றும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

பள்ளிவாசல் திறப்பு : சீர்வரிசையுடன் வந்த இந்துகள், கிறிஸ்தவர்கள்
 
பள்ளிவாசலுக்கு உள்ளே அழைக்கப்பட்ட இந்துக்கள், கிறிஸ்தவர்கள்

பள்ளிவாசல் கட்டுமான பணிகள் தொடங்கும் போதே திறப்பு விழாவிற்கு அனைத்து சமுதாய மக்களையும் அழைக்க வேண்டும் என முடிவு செய்திருந்தோம் என்கிறார் சாலைகிராமத்தை சேர்ந்த நைனா முகமத்.

இது குறுத்து பிபிசி தமிழிடம் பேசிய அவர், “இந்த பள்ளிவாசல் கட்ட துவங்கும்போதே இதன் திறப்பு விழாவில் கிராமத்தில் உள்ள அனைத்து சமுதாய மக்களும் கலந்து கொள்ள வேண்டும் என எங்கள் ஜமாத் சார்பில் முடிவு செய்யப்பட்டது.

பல தலைமுறைகளாக இக்கிராமத்தில் மக்கள் மத நல்லிணக்கத்துடன் வாழ்ந்து வருகிறோம். எங்களுக்குள் எந்தவிதமான பாகுபாடும் இல்லை. நாங்கள் பல ஆண்டுகளாக முக்கிய நிகழ்வுகளுக்கு பள்ளிவாசலுக்குள் மாற்று சமுதாயத்தினரை அழைப்பதை வழக்கமாக கொண்டிருக்கின்றோம்.

எங்களுக்குள் எந்த பேதமும் கிடையாது. அதேபோல் கிறிஸ்தவ மற்றும் இந்துக்களின் பண்டிகைகள் மற்றும் முக்கிய திருவிழாக்களில் இஸ்லாமியர்கள் கலந்து கொள்வோம். பள்ளிவாசலில் இருந்து கிராமத்தில் உள்ள இந்து கோயில்கள் மற்றும் கிறிஸ்தவ தேவாயத்திற்கு உரிய மரியாதையை செய்து வருகிறோம்.

பள்ளிவாசல் சார்பாக திறப்பு விழாவின் அழைப்பை கிறிஸ்தவர்கள், இந்துக்கள் என பாகுபாடு இன்றி வழங்கினோம். அழைப்பிதழ் வழங்காவிட்டாலும் திறப்பு விழாவிற்கு அனைவரும் வந்திருப்பார்கள்." என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

 

பள்ளிவாசல் திறப்பு விழாவில் கலந்து கொண்டது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய மகேஸ்வரி, எங்கள் கிராமத்தில் பண்டிகையின் போது மட்டுமல்லாமல், தினசரி நடவடிக்கையிலும் ஒன்றாக இணைந்து தான் அனைத்து மதத்தவரும் வாழ்ந்து வருகிறோம் என்கிறார்.

"எங்கள் ஊரில் பிரதான தொழில் விவசாயம். விவசாய பணிகளுக்கு அனைத்து சமுதாயத்தினரும் வேலைக்கு வருவார்கள். அதே போல் 100 நாள் வேலைக்கும் நாங்கள் செல்லும்போது எங்களுடன் இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் என பலரும் வேலை செய்வார்கள்.

நாங்கள் அவர்களுக்கு உணவு கொடுப்பதும் அவர்களிடம் இருந்து உணவு வாங்கி சாப்பிடுவது என எந்த பேதமுமின்றி மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்து வருகிறோம்.

பள்ளிவாசல் திறப்பு விழாவுக்கு செல்லும் முன் மக்கள் அனைவரும் கோவிலில் ஒன்று கூடி சாமி கும்பிட்டு சீர்வரிசை பொருட்களை வைத்து பூஜை செய்து எடுத்துச் சென்றோம்.

எங்கள் ஊர் திருவிழா உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளிலும், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் கலந்து கொள்வார்கள்.

இந்துகளாகிய நாங்களும் இஸ்லாமிய, கிறிஸ்தவ விழாக்களில் கலந்து கொள்வோம். இது இன்று நேற்று அல்ல தலைமுறை தலைமுறையாகவே நடந்து வரும் ஒரு வழக்கம்" என்கிறார் மகேஸ்வரி.

பள்ளிவாசல் திறப்பு : சீர்வரிசையுடன் வந்த இந்துகள், கிறிஸ்தவர்கள்
பள்ளிவாசல் திறப்பு : சீர்வரிசையுடன் வந்த இந்துகள், கிறிஸ்தவர்கள்
 

பள்ளிவாசல் திறப்பில் கிறிஸ்தவர்கள் சார்பாக கலந்து கொண்ட ஸ்டீபன் பிபிசி தமிழிடம் பேசினார். மற்றவர்களுக்கு தான் இது புதிதான நிகழ்வு என்றும், தங்கள் ஊரில் காலங்காலமாக நடைபெறும் ஒன்று என்று அவர் தெரிவித்தார்.

"இன்று எங்கள் தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனை செய்து பாதிரியார் தலைமையில் இந்து மக்களுடன் இணைந்து பள்ளிவாசல் திறப்பு விழாவில் கலந்து கொண்டோம்.

எங்கள் கிராமத்தின் சிறப்பே பொங்கல் விழா தான். ஆண்டுதோறும் சமத்துவ பொங்கல் கொண்டாடி வருகிறோம். பொங்கல் மட்டுமல்லாமல் அனைத்து மதத்தவரின் பண்டிகைகளையும் நாங்கள் ஒன்று கூடி கொண்டாடுவோம். திறப்பு விழாவில் பங்கேற்றது மிகுந்த மன மகிழ்ச்சியை தந்தது" என்றார் ஸ்டீபன்.

https://www.bbc.com/tamil/articles/cw8jwj4np21o

திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலுக்கு விஜயம் செய்த முதல் இந்திய பிரதமர் மோடி

2 months 1 week ago

Published By: NANTHINI  20 JAN, 2024 | 03:10 PM

image

தமிழ்நாட்டுக்கு மூன்று நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று சனிக்கிழமை (20) திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கு விஜயம் செய்துள்ளார். 

அந்த வகையில், ஸ்ரீரங்கம் கோவிலுக்கு வருகை தந்து சுவாமி தரிசனம் செய்த முதல் இந்திய பிரதமர் என்கிற பெருமையை நரேந்திர மோடி பெற்றுள்ளார்.

1947ஆம் ஆண்டில் இந்தியா சுதந்திரம் பெற்ற பின்னர், ஜவஹர்லால் நேரு இந்திய நாட்டின் முதல் பிரதமரானார்.

நேரு முதல் தற்போதைய நரேந்திர மோடி வரை 15 பேர் இந்திய பிரதமராக பதவி வகித்துள்ள நிலையில், இதுவரை எந்த பிரதமரும் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு செல்லவில்லை. 

அந்த வகையில், பிரதமராக பதவி வகிக்கும் நரேந்திர மோடியே ஸ்ரீரங்கம் ஆலயத்துக்கு சென்று ரங்கநாதரை தரிசித்த முதல் பிரதமர் எனும் பெருமைக்குரியவர் என்பது குறிப்பிடத்தக்கது.  

மோடிக்கு மெளத் ஓர்கன் வாசித்துக் காட்டிய ஆண்டாள் யானை

 w.jpg

ஸ்ரீரங்கம் கோவிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக வருகை தந்த மோடி, 44 வயதான ஆண்டாள் எனும் கோவில் யானையிடமும் ஆசிர்வாதம் பெற்றார். 

அப்போது யானை பாகன், நவராத்திரி உற்சவ காலத்தில் ஆண்டாள் மெளத் ஒர்கன் என்கிற இசைக்கருவியை வாசிக்கும் என பிரதமர் மோடியிடம் கூறியுள்ளார். 

அதற்கு ஆண்டாளின் வாசிப்பை கேட்க விரும்புவதாக மோடி கூற, யானை பாகன் ஆண்டாளின் தும்பிக்கையில் மெளத் ஓர்கனை கொடுக்க, ஆண்டாள் அழகாக வாசித்துக் காட்டியுள்ளது. 

ஆண்டாள் மெளத் ஓர்கன் வாசிப்பதை ரசித்துக் கேட்ட மோடி, யானையை அன்போடு தடவிக் கொடுத்துள்ளார்.

இந்த ஆண்டாள் யானை, குட்டியாக இருந்தபோது ரஜினிகாந்த் நடித்த 'தம்பிக்கு எந்த ஊர்' படத்தின் ஒரு காட்சியில் ரஜினிக்கு ஆசிர்வாதம் செய்தமையும் குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/174389

இலங்கை குறித்து தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம்!

2 months 1 week ago
stalin.jpg?resize=597,375&ssl=1 இலங்கை குறித்து தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம்!

இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுகின்றமை குறித்து தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின்  கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக முதலமைச்சர் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது” இலங்கை கடற்படையினரால் தமிழ்நாடு மீனவர்களும் அவர்களது மீன்பிடிப் படகுகளும் தொடர்ந்து சிறைபிடிக்கப்படுவது கவலையளிக்கின்றது.

இத்தகைய கைது நடவடிக்கைகளால் மீன்பிடித்  தொழிலை மட்டுமே தங்கள் வாழ்வாதாரமாக நம்பியுள்ள மீனவர்களிடையே பாதுகாப்பற்ற சூழலை உருவாக்கியுள்ளது.

இலங்கை கடற்படையினரின் சிறைபிடிப்பு நடவடிக்கைகளில் எந்தத் தளர்வும் இருப்பதாகத் தெரியவில்லை. இத்தகைய தன்னிச்சையான கைது நடவடிக்கைகளை தடுத்திட இலங்கை அரசுக்கு வலியுறுத்திட வேண்டும். அத்துடன் இலங்கை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து படகுகளையும் விடுவிக்க தெளிவான காலக்கெடுவை நிர்ணயிக்க வேண்டும்” இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

https://athavannews.com/2024/1366361

தமிழ்நாடு ஏறுதழுவுதல் செய்திகள்

2 months 1 week ago
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு தொடங்கியது - இந்தாண்டு புதிய மாற்றங்கள் என்னென்ன தெரியுமா?
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், தங்கதுரை குமாரபாண்டியன்
  • பதவி, பிபிசி தமிழ்
  • 44 நிமிடங்களுக்கு முன்னர்

தைத்திருநாளான பொங்கல் விழாவை முன்னிட்டு தென் தமிழகத்தில் பெரும்பாலான கிராமங்களில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெறுவது வழக்கம். இதில், குறிப்பாக மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், பாலமேடி, அலங்காநல்லூர் ஆகிய 3 இடங்களில் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும்.

தைத்திருநாளான இன்று (ஜன. 15) அவனியாபுரத்திலும், நாளை (ஜன.16), பாலமேட்டிலும் நாளை மறுநாள் (ஜன. 17) உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு நடைபெறும். இந்த மூன்று நாளும் மதுரையே விழாக்கோலம் பூண்டிருக்கும்.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு தொடங்கியது

மதுரை அவனியாபுரத்தில் 3 ஆண்டுகளாகவே ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்தும் ஒருங்கிணைப்புக் குழுவில் அனைத்து சாதியினரும் இடம்பெறுவது தொடர்பான பிரச்னை நீதிமன்ற படியேற நேரிட்டது. இதில் தீர்வு எட்டப்படாததால், நீதிமன்ற உத்தரவுப்படி மாவட்ட நிர்வாகமே அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்தி வருகிறது.

அதற்கு இந்த ஆண்டும் விதிவிலக்கு இல்லை. அவனியாபுரத்தை சேர்ந்த கல்யாணசுந்தரம் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில், கடந்தாண்டைப் போல இந்தாண்டும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை மாவட்ட நிர்வாகமும் மாநகராட்சியும் இணைந்து நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. மாவட்ட நிர்வாகத்தால் அங்கீகரிக்கப்பட்ட குழுவில் இல்லாத நபர்கள் ஏதேனும் இடையூறுகள் ஏற்படுத்தினால் அவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கலாம் என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களின் பதிவு 2 நாட்களாக நடைபெற்றது. அதன் முடிவில், ஆயிரம் காளைகளும், 600 மாடுபிடி வீரர்களும் களமிறங்க டோக்கன்கள் வழங்கப்பட்டன.

அதன் தொடர்ச்சியாக, இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு அவனியாபுரத்தில் வெகு விமரிசையாக தொடங்கியுள்ளது. மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா தலைமையில் மாடுபிடி வீரர்கள் ஜல்லிகட்டு உறுதி மொழி ஏற்க, அமைச்சர் மூர்த்தி போட்டிகளை கொடியசைத்து போட்டி துவங்கி வைத்தார்..

தற்போது நடைபெறும் முதல் சுற்றில் 50 பேர் களத்தில் உள்ளனர்.

ஜல்லிக்கட்டு
படக்குறிப்பு,

சித்தரிப்புப்படம்

ஜல்லிக்கட்டு
படக்குறிப்பு,

சித்தரிப்புப்படம்

ஜல்லிக்கட்டு

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஜல்லிக்கட்டு விழா கமிட்டியினர் கூறும் விதிமுறைகள் என்ன?

ஜல்லிக்கட்டு போட்டிக்கு முன்பாக மாடுபிடி வீரர்கள் மற்றும் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு உடல் தகுதி பரிசோதனை செய்த பின்பே களத்திற்குள் இறங்க அனுமதிக்கப்படுவர்.

அரசு வழங்கிய டோக்கன்கள் உள்ள ஜல்லிக்கட்டு காளைகள் மட்டுமே களத்திற்குள் அவிழ்க்க அனுமதிக்கப்படும்.

அரசு அறிவித்துள்ள விதிமுறைகளின் படி ஜல்லிக்கட்டு காளைகளின் கொம்பையோ, வாலையோ பிடிக்கக்கூடாது. பிடித்தால் வீரருக்கு எச்சரிக்கை அளிக்கப்படும், அதனையும் மீறி அதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால் அந்த வீரர் போட்டியிலிருந்து வெளியேற்றப்படுவார்.

ஜல்லிக்கட்டு போட்டியில் காளை வெற்றி பெற்றதா அல்லது மாடுபிடி வீரர் வெற்றி பெற்றாரா என்பது குறித்து கமிட்டியினர் தான் முடிவு செய்வார்கள், அதேபோல், நீதிமன்றம் அறிவித்துள்ள சாதிப் பெயர்களை குறிப்பிடுவது கிடையாது என்கிறார், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு கமிட்டியைச் சேர்ந்த கோவிந்தராஜன்.

சாதி பெயர் குறிப்பிடப்படாது

மதுரையை சேர்ந்த செல்வகுமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவின் பேரில், ஜல்லிக்கட்டு போட்டியின் போது காளைகளை அதன் உரிமையாளரின் சாதி பெயரை குறிப்பிட்டு அவிழ்க்கக் கூடாது என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி எடுக்க வேண்டும் என்ற மனுதாரரின் கோரிக்கையை பரிசீலனை செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனை அமைச்சர் மூர்த்தியும் உறுதி செய்தார். அவனியாபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், "ஜல்லிக்கட்டு போட்டியில் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் சாதிப்பெயர் குறிப்பிடப்படாமல் காளையின் பெயர், ஊர் பெயர் மட்டுமே குறிப்பிடப்படும். ", என்று அவர் கூறினார்.

ஜல்லிக்கட்டு

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
ஜல்லிக்கட்டு

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
காவல்துறை அறிவிப்புகள் என்ன?
ஜல்லிக்கட்டு

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகள் மற்றும் உரிமையாளர்கள் மாவட்ட நிர்வாகம் அளித்த அனுமதிச் சீட்டுகளுடன் வந்தால் மட்டுமே அனுமதி.

காளைகளுடன் வரும் உரிமையாளரும் மற்றும் உதவியாளரும் மதுபோதையில் இருக்கக்கூடாது.

காளைகளின் உரிமையாளர்கள் மாட்டின் மூக்கணாங்கயிறை அறுப்பதற்காக கத்தியோ அல்லது கூர்மையான ஆயுதங்களோ கொண்டுவரக்கூடாது.

ஜல்லிக்கட்டில் பங்கேற்க மதுரை மாவட்ட நிர்வாகத்தால் அனுமதிக்கப்பட்ட மாடுபிடி வீரர்கள் புகைப்படம் உள்ள அனுமதி சீட்டு மற்றும் உரிய மருத்துவ தகுதிச்சான்றும் கொண்டு வரவேண்டும்.

ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்கள் எக்காரணத்தைக் கொண்டும் மதுபோதையில் இருக்கக் கூடாது. மீறுபவர்கள் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும்.

ஜல்லிக்கட்டு வாடிவாசல் முன்புறம் மற்றும் அருகில் குடியிருக்கும் வீட்டின் உரிமையாளர்கள் வீட்டில் குடியிருக்கும் குடும்ப உறுப்பினர்களை தவிர வேறு எந்த நபர்களையும் வீட்டில் இருந்தோ அல்லது மேல் மாடியில் இருந்தோ ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை பார்க்க அனுமதித்தால் சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் பட்சத்தில் வீட்டின் உரிமையாளர் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும்.

அனுமதி பெற்ற காளைகள் மற்றும் உரிமையாளர்கள் மற்றும் மாடுபிடி வீரர்கள் விதிமுறைகள் மற்றும் வழிமுறைகளையும் மீறினால் சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை அறிவித்து இருக்கிறது.

”காளையை களத்தில் சந்திக்க தயார்”

”கடந்தாண்டில் நடைபெற்ற பல்வேறு ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்றேன். இதில், அலங்காநல்லூர், சத்திரக்குடி ஜல்லிக்கட்டு போட்டியில் சிறந்த வீரராக தேர்ந்தெடுக்கப்பட்டு கார் மற்றும் இருசக்கர வாகனம் என பல்வேறு பரிசுபொருட்களை வென்றேன். இந்த ஆண்டும் அதேபோல ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்று சிறந்த வீரராக விளங்க வேண்டும் என்பதற்காக கடந்த ஒரு மாத காலத்திற்கு மேலாக தீவிரமாக பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றேன்” என்கிறார்.

தொடர்ந்து பேசிய அவர், "நான் சிவகங்கை மாவட்டம் ஏனாதி கிராமத்தைச் சேர்ந்தவன் எனது கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்களும் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க ஆர்வமாக இருக்கிறார்கள். அவர்களுக்கும் இந்த போட்டிகளில் பங்கேற்பதற்கான பயிற்சிகளை அளித்து வருகிறேன். அவர்களும் மதுரையில் நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்பதற்காக முன்பதிவு செய்து இருக்கிறார்கள். காளைகளை களத்தில் இறங்கி சந்திக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்", என்கிறார் அவர்.

”மாடுபிடி வீரர்களுக்கு சவால் விட காளைகள் தயார்”

பழனி நெய்க்காரப்பட்டி சேர்ந்த என்பவர் தனது இரண்டு காளைகளை அவனியாபுரம் மற்றும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்பதற்காக டோக்கன் முன்பதிவு செய்திருந்தார். அவருக்கான டோக்கன் முன்பதிவு உறுதி செய்யப்பட்டுள்ளது.

“எனது இரண்டு காளைகளையும் அவனியாபுரம் மற்றும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகளில் களம் இறக்குவதற்காக தயார் செய்து இருக்கிறேன்.

மாடுபிடி வீரர்களுக்கு எனது காளைகள் களத்தில் ஆட்டம் காட்டி வெற்றி பெறும் என்று நம்புகிறேன்", என கூறுகிறார்.

 
இளைஞர்கள் மத்தியில் ஆர்வம்
மதுரை ஜல்லிக்கட்டு

பட மூலாதாரம்,SPECIAL ARRANGEMENT

படக்குறிப்பு,

ஆய்வு செய்த அமைச்சர் மூர்த்தி

கடந்த 2017-ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு போராட்டம் நடத்தப்பட்டு அதன் மீதான தடை நீங்கிய பிறகு ஜல்லிக்கட்டு காளைகள் வளர்ப்பதிலும், ஜல்லிக்கட்டு போட்டியில் களம் இறங்கி விளையாடுவதில் இளைஞர்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்தது. இதனை முறைப்படுத்தும் வகையில் தமிழ்நாடு அரசின் சார்பில் பல்வேறு கட்டுப்பாடுகள், விதிமுறைகள் ஜல்லிக்கட்டு போட்டிகளில் கொண்டுவரப்பட்டன.

அதன்படி, ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க விரும்பும் மாடுபிடி வீரர்கள் ஜல்லிக்கட்டு காளைகள் அரசு அறிவித்த இணையதளத்திற்கு சென்று மாட்டின் உரிமையாளர், மாடுபிடிவீரர்கள் மருத்துவப் பரிசோதனை செய்து உடல் தகுதியை உறுதி செய்து அதற்கான சான்றிதழை பதிவேற்றம் செய்து முன்பதிவு செய்த வேண்டும். அரசு சார்பில் ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்டு ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க அனுமதி வழங்கப்படும்.

இந்தாண்டு ஜல்லிக்கட்டில் போட்டிகளில் பங்கேற்க காளையின் உரிமையாளர்கள், மாடுபிடி வீரர்கள் ஆர்வம் காட்டினர்.

 
எத்தனை பேர் பங்கேற்பார்கள்?
மதுரை ஜல்லிக்கட்டு

பட மூலாதாரம்,SPECIAL ARRANGEMENT

மதுரை மாவட்டத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்பதற்காக மதுரை நிர்வாகத்தின் சார்பில் இணையதளம் முன்பதிவு கடந்த 10-ம் தேதி நண்பகல் 12 மணிக்கு தொடங்கி 11-ஆம் தேதி நண்பகல் 12 மணிக்கு நிறைவடைந்தது. இதில், அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் பங்கேற்க 2,400 காளைகள், 1,318 காளையர்கள், பாலமேட்டில் 3,677 ஜல்லிக்கட்டு காளைகள், 1,412 மாடுபிடி வீரர்கள் பதிவு செய்து இருந்தனர்.

இந்த இரண்டு ஜல்லிக்கட்டு போட்டிகளை விட உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் 6,099 காளைகள், 1,784 மாடுபிடி வீரர்கள் என மொத்தமாக இந்த மூன்று ஜல்லிக்கட்டு போட்டிகளிலும் சேர்த்து பங்கேற்க 12,176 ஜல்லிக்கட்டு காளைகளும் அவற்றுடன் போட்டியிட 4,514 மாடுபிடி வீரர்களும் முன்பதிவு செய்து இருந்தனர்.

இந்த வீரர்கள், காளைகள் ஜல்லிக்கட்டு நாட்களுக்கு முன்பாக தேர்வு செய்யப்பட்டு ஜல்லிக்கட்டு களத்தில் 50 வீரர்கள் என்ற சுழற்சி முறையில் களமிறக்கப்படுவார்கள்.

ஜல்லிக்கட்டு மைதானத்தில் போட்டி எப்போது?

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள கீழக்கரை பகுதியில் 66 ஏக்கர் பரப்பளவில் 61.38 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட கலைஞர் நூற்றாண்டு ஏது தழுவுதல் அரங்கம் இந்த மாத இறுதியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்டு தொடர்ச்சியாக 5 நாட்கள் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் என்று அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

https://www.bbc.com/tamil/articles/c9x26l32pkjo

போகி பண்டிகையால் நிலைகுலைந்த சென்னை: காற்று மாசுபாடு ஏற்படுத்திய பாதிப்புகள்

2 months 2 weeks ago
போகி பண்டிகையால் திணறும் சென்னை: காற்று மாசு தீவிரமடைவது ஏன்? முழு விவரம்
கட்டுரை தகவல்
  • எழுதியவர், பிரபாகர் தமிழரசு
  • பதவி, பிபிசி தமிழ்
  • 3 மணி நேரங்களுக்கு முன்னர்

சென்னையில் போகி பண்டிகையை முன்னிட்டு மக்கள் பழைய பொருட்களை எரித்ததில், காற்று மாசு சராசரியைவிட இரண்டு மடங்கிற்கு மேல் அதிகரித்துள்ளது.

தமிழ்நாடு மாசுக்கட்டுபாட்டு வாரிய தகவலின்படி, இன்று காலை 7 மணிக்கு சென்னையில் காற்றுத் தரக் குறியீட்டின் சராசரி அளவு 378 ஆக உயர்ந்தது. இதில், அதிகபட்சமாக சென்னை ராயபுரத்தில் காற்றுத் தரக் குறியீடு 770 ஆகவும், அரும்பாக்கத்தில் 501 ஆகவும் இருந்தது.

காற்று மாசு காரணமாக சென்னை விமான நிலையத்திற்கு வந்த சிங்கப்பூர் மற்றும் லண்டன் விமானங்கள் தரையிறங்க முடியாமல், ஹைதராபாத் விமான நிலையத்திற்குத் திருப்பி அனுப்பப்பட்டன.

அதேபோல, சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து டெல்லி, ஹைதராபத், பெங்களூர், கொல்கத்தா ஆகிய நகரங்களுக்குச் செல்லும் விமானங்களும் தாமதமாகப் புறப்பட்டன. காலை 9 மணிக்கு மேல் சென்னை விமான நிலையத்தில் விமான சேவை தொடங்கியது.

பனி மூட்டத்துடன் காற்று மாசுபாடும் அதிகரித்துள்ளதால் சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் மக்கள் எதிரே வரும் வாகனங்கள்கூடத் தெரியாமல் சிரமப்பட்டனர்.

 
சென்னையை ஸ்தம்பிக்க வைத்த காற்று மாசு
போகி பண்டிகையால் திணறும் சென்னை: காற்று மாசு தீவிரமடைவது ஏன்? முழு விவரம்

தமிழ்நாடு மாசுக்கட்டுபாட்டு வாரியம் சார்பாக சென்னையில் உள்ள ஒன்பது காற்று மாசு கண்காணிப்பு நிலையங்களில் பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில், இன்று காலை 8 மணிக்கு பெருங்குடியில் அதிகபட்சமாக காற்று மாசுக் குறியீடு 289 ஆக இருந்தது.

அதேபோல, மணலி பகுதியில் காற்று மாசுக் குறியீடு 272 ஆகவும், எண்ணூர் காந்தி நகர் பகுதியில் 232 ஆகவும், அரும்பாக்கத்தில் 216 ஆகவும், ராயபுரத்தில் 207 ஆகவும், கொடுங்கையூரில் 156 ஆகவும் இருந்தது.

ஆனால், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் மிகக் குறைந்த இடங்களிலேயே காற்றுமாசு கண்காணிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், அரசு கட்டடங்கள் இருக்கும் இடங்களில் எல்லாம் காற்று மாசுக் கண்காணிப்பு நிலையங்கள் அமைத்து கண்காணித்தால்தான் துல்லியமாக காற்று மாசுபாட்டைக் கண்டறிய முடியும் எனவும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

போகி பண்டிகையால் திணறும் சென்னை: காற்று மாசு தீவிரமடைவது ஏன்? முழு விவரம்

காற்று மாசைக் கண்காணிக்கும் தனியார் நிறுவனமான ஏ.க்யூ.ஐ(AQI) தரவுகளின்படி, ராயபுரத்தில் அதிகபட்சமாக காற்றுத்தரக் குறியீடு 770 ஆக இருந்தது. மேலும், பெருங்குடி பகுதியில் 609, பொத்தேரியில் 534, ஆலந்தூர் பகுதியில் 511, அரும்பாக்கத்தில் 501 என காற்றின் மாசுபாட்டு அளவு பதிவாகியுள்ளது.

காற்றுத்தரக் குறியீட்டின் அடிப்படையில் அவற்றின் தன்மையை மாசுக் கட்டுபாட்டு வாரியம் வகைப்படுத்தியுள்ளது. அதன்படி,

  • காற்றுத் தரக் குறியீடு 0-50 வரை இருந்தால் காற்றின் தரம் நன்றாக இருப்பதாக அர்த்தம்
  • 51-100 வரை இருந்தால், அது திருப்திகரமானது
  • 101 முதல் 200 வரை இருந்தால் காற்றின் தரம் மோசமாக உள்ளது
  • அதுவே 201-300 வரை இருந்தால், அது மிக மோசமான காற்றுத்தரத்தை குறிக்கும்.
  • காற்றின் தரம் 301-400 இருந்தால், காற்று மாசு மிகக் கடுமையாக மோசமாக உள்ளதாகக் குறிக்கும்
  • 401-500 வரை இருந்தால், காற்று மாசு அபாயகரமான நிலையில் இருப்பதைக் குறிக்கும்
 
கடந்த ஆண்டுகளைவிட பல மடங்கு அதிகரித்த காற்று மாசு
போகி பண்டிகையால் திணறும் சென்னை: காற்று மாசு தீவிரமடைவது ஏன்? முழு விவரம்

கடந்த 2023ஆம் ஆண்டு போகி பண்டிகையின்போது ஏற்பட்ட காற்று மாசைவிட இந்த ஆண்டு இரண்டு மடங்கிற்கு மேல் அதிகரித்துள்ளது.

கடந்த ஆண்டு போகி பண்டிகை அன்று சென்னையில் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் வைக்ப்பட்டுள்ள எட்டு காற்று மாசுக் கண்காணிப்பு நிலையங்களிலும், காற்றுத் தரக் குறியீடு 100இல் இருந்து 200க்குள் தான் பாதிவாகியிருந்தது.

கடந்த ஆண்டு அதிகபட்சமாக ஆலந்தூர் காற்று தரக் கண்காணிப்பு நிலையத்தில் காற்றுத் தரக் குறியீடு 197 ஆக பதிவாகியிருந்தது. தனியார் காற்று மாசுக் கண்காணிப்பு நிலையங்களின் தரவுகள்படி, அதிகபட்சமாக வளசரவாக்கத்தில் காற்றுத் தரக் குறியீடு 277 ஆகவும், அண்ணா நகரில் 135 ஆகவும் பதிவாகியிருந்தது.

ஆனால் இதுவே 2022இல், சென்னையில் உள்ள அனைத்துப் பகுதிகளிலுமே காற்று மாசுத் தரக்குறியீடு 50 முதல் 100க்குள் தான் இருந்துள்ளது. அதில், குறைந்தபட்சமாக தேனாம்பேட்டை பகுதியில் காற்றுத் தரக் குறியீடு 61 ஆகவும், அதிகபட்சமாக மாதவரம் பகுதியில் 91 ஆகவும் பதிவாகியிருந்தது.

போகி பண்டிகையால் திணறும் சென்னை: காற்று மாசு தீவிரமடைவது ஏன்? முழு விவரம்

காற்று மாசு காரணமாக கடந்த ஆண்டும் சென்னை விமான நிலையத்தில் 60 விமானங்கள் தாமதமாகத் தரையிறங்கின. இந்த ஆண்டு எத்தனை விமானங்கள் தாமதமாகத் தரையிறங்கின, தாமதமாகப் புறப்பட்டன என்ற தகவல்கள் முழுமையாக வெளியாகவில்லை.

பண்ணாட்டு விமானங்களான, சிங்கப்பூர், லண்டன் ஆகிய நாடுகளில் இருந்து வந்த விமானங்கள் ஹைதராபத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டு, 9 மணிக்கு மேல் சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க அனுமதிக்கப்பட்டன.

சென்னை விமான நிலையத்தில் இருந்து அதிகாலை முதல் எந்த விமானங்களும் புறப்படாமல், அனைத்து விமானங்களும் தாமதமாக காலை 9 மணிக்கு மேல் கிளம்பின.

போகி பண்டிகையால் திணறும் சென்னை: காற்று மாசு தீவிரமடைவது ஏன்? முழு விவரம்
காற்று மாசு எப்போது குறையும்?

பனிமூட்டத்துடன் காற்று மாசும் சேர்ந்துள்ளதால், இது மாசுத் துகள் அதிக நேரம் காற்றில் இருக்க வாய்ப்புள்ளதாகக் கூறுகிறார் பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் சுந்தர்ராஜன்.

"இந்த குளிர்ந்த தன்மை விலகி, வெயில் வரத் தொடங்கும்போது, காற்று மாசு குறையும். ஆனால், மக்கள் மீண்டும் பழைய பொருட்களை எரிக்கத் தொடங்கினால், காற்று மேலும் மாசடையும்,” என்றார் அவர்.

மேலும், போகி பண்டிகைகளுக்கு முன்பே மக்கள் எரிக்கக்கூடாது என்று எச்சரிக்கையாக மட்டும் இல்லாமல், அதை மீறி பழைய பொருட்களை எரிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

“நீங்கள் எச்சரிக்கை கொடுப்பதால், எந்தப் பயனும் இல்லை. செய்பவர்கள் செய்துகொண்டே தான் இருக்கிறார்கள். அவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இதைக் கட்டுப்படுத்த முடியும். மேலும், மக்கள் போகி கொண்டாடுவதற்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

ஆனால், ஒருவர் பழையப் பொருட்களை எரிப்பதால், அது அவர்களோடு முடிவதில்லை. மற்றவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. அதனால், அவர்கள் மீது சட்ட நடவடிக்கை கோருகிறோம்,” என்றார்.

 
போகி பண்டிகையால் திணறும் சென்னை: காற்று மாசு தீவிரமடைவது ஏன்? முழு விவரம்

போகி பண்டிகையின்போது ஏற்பட்ட காற்று மாசு எதிர்பார்க்காத ஒன்றுதான் என மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளும் தெரிவித்தனர்.

இதுகுறித்து பிபிசியிடம் பேசிய பெயர் குறிப்பிட விரும்பாத மாசுக் கட்டுபாட்டு வாரிய அதிகாரி ஒருவர், “கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் இந்த ஆண்டு காற்று மாசு அதிகமாக உள்ளது. இன்று காலை முதல் பதிவான காற்றுத் தரக் குறியீட்டை வைத்துப் பார்த்தாலே, இது கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பதிவாகியுள்ளது தெரிகிறது.

ஆனால், இதுவரை பதிவானதிலேயே இது அதிகமான அளவா என்பதை முழுமையான தரவுகளை ஆராய்ந்துதான் சொல்ல முடியும்,” என்றார்.

போகி பண்டிகையின்போது பழைய பொருட்களை எரிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர் சுந்தர்ராஜன் கூறியது குறித்து மாசுக்கட்டுப்பாடு வாரிய அதிகாரியிடம் கேட்டோம்.

ஆனால், இதுபோல் தனிநபர்கள் காற்றை மாசுபடுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதன் மீது நடவடிக்கை எடுக்க எந்தவித விதிகளும் இல்லையெனத் தெரிவித்தார்.

 
காற்று மாசுபாட்டால் என்ன உடல் உபாதைகள் ஏற்படும்?
போகி பண்டிகையால் திணறும் சென்னை: காற்று மாசு தீவிரமடைவது ஏன்? முழு விவரம்

காற்றின் தரம் மிகவும் மோசமாக உள்ள சூழலில் முன்னதாகவே சுவாசக் கோளாறு உள்ளவர்களும், இதய நோய் பாதிப்பில் உள்ளவர்களும் கூடுமானவரை வெளியே செல்வதைட்ப தவிர்க்க வேண்டும் என இதய அறுவை சிகிச்சை மருத்துவர் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

“பெரும்பாலும் கரும்புகையாக இருக்கும் மாசுபட்ட காற்றில் நுண் துகள்களின் அளவு அதிகமாக இருக்கும். அவை நாம் சுவாசிக்கும் மூக்கின் வழியாக உள்ளே செல்வதற்கான வாய்ப்புகள் குறைவு. ஆனால், மிகச் சிறிய அளவிலான நுண் துகள்கள் எளிமையாக நாம் சுவாசிக்கும் போதே உள்ளே சென்றுவிடும்.

நீண்ட நேரம் இப்படியான காற்று மாசுபட்டுள்ள சூழலில் இருந்தால், மூச்சுத் திணறல் மற்றும் நீண்டகால சுவாசப் பிரச்னைகள் ஏற்படலாம்,” என்றார்.

அதேபோல குழந்தைகளுக்கு கண் எரிச்சல் மற்றும் தோல்களில் எரிச்சல் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

“இந்தக் காற்று மாசு பெரும்பாலும் பிளாஸ்டிக் மற்றும் துணி உள்ளிட்டவையை எரித்ததால் ஏற்பட்டிருக்கும். இந்தப் புகையால், ஐந்து வயதிற்குக் குறைவான குழந்தைகளுக்கு கண் எரிச்சல் ஏற்படுவதற்கான வாய்ப்பகள் உள்ளது. அதேபோல, அவர்களின் தோல்கள் மிகவும் இலகுவாக இருப்பதால், தோல் எரிச்சல் ஏற்படுவதற்கும் வாய்ப்பு உண்டு,” என்றார்.

https://www.bbc.com/tamil/articles/cxwd7v9k3xeo

இந்திய விமானப்படையின் 2016-ல் மாயமான விமானம்: பாகங்கள் கண்டுபிடிப்பு

2 months 2 weeks ago
2016-ல் மாயமான விமானம்: சென்னை கடற்கரையில் இருந்து 310 கி.மீ தொலைவில் பாகங்கள் கண்டுபிடிப்பு
13 JAN, 2024 | 09:37 AM
image
 

கடந்த 2016-ம் ஆண்டு தமிழக தலைநகர் சென்னையில் இருந்து அந்தமான் தலைநகர் போர் பிளேர் சென்ற An-32 விமானம் வங்காள விரிகுடா மீது பறந்தபோது மாயமானது. அந்த விமானம் தாம்பரத்தில் இருந்து புறப்பட்ட 42 நிமிடங்களில் ரேடார் டிராக்கிங் பார்வையில் இருந்து மறைந்தது. இந்த சூழலில் தற்போது சென்னை கடற்கரையில் இருந்து சுமார் 310 கி.மீ தொலைவில் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை இந்திய விமானப்படை உறுதி செய்துள்ளது.

சென்னையில் இயங்கி வரும் தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவனம் ஆழ்கடல் பகுதியில் ‘சொனார்’ டெக்னிக் மூலம் An-32 விமானத்தின் பாகங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அதனை படம் பிடித்து புவி அறிவியல் அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. அங்கிருந்து விமானப்படைக்கு அந்த படங்கள் சென்றுள்ளன. அதன் பிறகு அது மாயமான An-32 விமானத்தின் பாகங்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவன இயக்குனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

சென்னை கடற்கரையில் இருந்து 140 கடல் நாட்டிக்கல் மைல் தொலைவில், கடலுக்கு அடியில் சுமார் 11,200 அடி ஆழத்தில் An-32 விமானத்தின் பாகங்கள் இருந்துள்ளன. கடந்த 2016, ஜூலை 22-ம் தேதி இந்த விமானம் மாயமானது. அதில் சுமார் 29 பேர் பயணம் செய்துள்ளனர். இதில் பயணித்த அனைவரும் உயிரிழந்ததாக அப்போது தெரிவிக்கப்பட்டது.

An-32 விமானம்: பல்வேறு உலக நாடுகள் தங்களது ராணுவ பயன்பாட்டுக்காக இந்த விமானத்தை பயன்படுத்தி வருகின்றனர். இதில் இந்தியாவும் அடங்கும். உக்ரைன் நாட்டை சேர்ந்த ஏவியன்ட் நிறுவனம் இதனை தயாரித்துள்ளது. கடந்த 1980 முதல் 2012 வரை இந்த விமானம் தயாரிக்கப்பட்டது. இரட்டை என்ஜின் கொண்ட இந்த விமானம் மோசமான வானிலையிலும் இயங்கக் கூடிய தன்மை கொண்டது என சொல்லப்படுகிறது.

https://www.virakesari.lk/article/173834

திருமணம் செய்த பெண்ணை தூக்கிட்டு கொலை செய்த பெற்றோர்

2 months 2 weeks ago
பட்டியல் சாதி இளைஞரை திருமணம் செய்த பெண்ணை புளியமரத்தில் தூக்கிட்டு கொலை செய்த பெற்றோர் - பிபிசி கள ஆய்வு
நவீன் - ஐஸ்வர்யா
படக்குறிப்பு,

பட்டியல் சாதியைச் சேர்ந்த நவீனும், பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஐஸ்வர்யாவும் கடந்த ஐந்து வருடங்களாக காதலித்து வந்தனர்

கட்டுரை தகவல்
  • எழுதியவர், பிரபாகர் தமிழரசு
  • பதவி, பிபிசி தமிழ்
  • 11 ஜனவரி 2024

(எச்சரிக்கை: இந்தக் கட்டுரையின் சில உள்ளடக்கங்கள் உங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தக் கூடும்)

பட்டியல் சாதியை சேர்ந்த இளைஞரை திருமணம் செய்ததற்காக மகளை கொலை செய்து யாருக்கும் தெரியாமல் எரித்த பெற்றோரை தஞ்சாவூர் மாவட்ட போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள பூவாளுர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாஸ்கர். அவரது மகன் நவீன். இவர் பட்டியல் சாதியைச் சேர்ந்தவர். இவர் கடந்த 7 ஆம் தேதி வாட்டத்திக்கோட்டை காவல்நிலையத்தில் ஒரு புகார் மனு அளித்தார்.

அதில், பக்கத்து கிராமமான நெய்வவிடுதியைச் சேர்ந்த ஐஸ்வர்யா(19) என்ற பெண்ணை தான் திருமணம் செய்திருந்த நிலையில், பெண்ணின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சேர்ந்து கொலை செய்துவிட்டு ஊருக்குள் யாருக்கும் தெரியாமல் சுடுகாட்டிற்கு கொண்டு சென்று எரித்துவிட்டதாக கூறியிருந்தார்.

அதன் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார், பெண்ணின் தந்தை பெருமாள் மற்றும் அவரது மனைவி ரோஜா ஆகியோர் இந்த கொலைச் சம்பவத்தில் ஈடுபட்டதை உறுதி செய்து, கைது செய்துள்ளனர். பெருமாளும், அவரது மனைவியும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.

இச்சம்பவம் தொடர்பாக என்ன நடந்தது என்பதைத் தெரிந்துகொள்ள பிபிசி சார்பில் ஐஸ்வர்யாவின் சொந்த கிராமமான நெய்வவிடுதிக்கும், நவீனின் சொந்த கிராமமான பூவாளுருக்கும் நேரடியாகச் சென்றிருந்தோம்.

ஐஸ்வர்யா கொலை செய்யப்பட்டது எப்படி? இரண்டு கிராமத்திலும் தற்போதைய நிலவரம் என்ன? காவல்துறையினர் என்ன சொல்கிறார்கள்?

 
பட்டுக்கோட்டையில் சாதி ஆணவக் கொலை
படக்குறிப்பு,

நவீன் கடந்த இரண்டு வருடங்களாக திருப்பூரில் உள்ள தனியார் பனியன் நிறுவனத்தில் பணியாற்றினார்.

என்ன நடந்தது?

கடந்த 7 ஆம் தேதி வாட்டத்திக்கோட்டை காவல்நிலையத்தில் நவீன் புகார் கொடுத்துள்ளார். அதன்படி, "பட்டியல் சாதியைச் சேர்ந்த நவீனும், பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஐஸ்வர்யாவும் கடந்த ஐந்து வருடங்களாக காதலித்து வந்தனர்.

நவீன் கடந்த இரண்டு வருடங்களாக திருப்பூரில் உள்ள தனியார் பனியன் நிறுவனத்தில் பணியாற்றினார். ஐஸ்வர்யா கடந்த ஒன்றரை வருடங்களாக திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியில் உள்ள ஒரு தறி மில்லில் பணியாற்றினார்.

இந்நிலையில், நவீன் பட்டியல் பிரிவைச் சேர்ந்தவர் என்பதால் ஐஸ்வர்யாவின் அப்பாவும், உறவினர்களும், அவர்கள் இருவரும் காதலிப்பதைத் தெரிந்துகொண்டு அவர்களை பிரிப்பதற்காக திருப்பூர் வருவதாகக் கேள்விப்பட்டு, கடந்த டிசம்பர் 31 ஆம் தேதி அவரப்பாளையத்தில் உள்ள விநாயகர் கோயிலில் வைத்து தாலி கட்டி திருமணம் செய்து கொண்டனர்" என்று அந்த புகார் மனுவில் நவீன் கூறியுள்ளார்.

 
பட்டுக்கோட்டையில் சாதி ஆணவக் கொலை
படக்குறிப்பு,

ஐஸ்வர்யாவை அவரது தந்தையான பெருமாள், புளியமரத்தடிக்கு இழுத்துச் சென்று தூக்கிட்டு கொலை செய்ததாக காவல்துறையினர் கூறுகின்றனர்.

ஐனவரி 2 ஆம் தேதி, ஐஸ்வர்யாவைத் தேடி பல்லடம் வந்த அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள், பல்லடம் போலீசில் புகார் அளித்துள்ளனர். வழக்குப்பதிவு செய்து விசாரித்த போலீசார், ஐஸ்வர்யாவை நவீனிடமிருந்து அழைத்துச் சென்று, அவரது பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர்.

“மதியம் 2 மணியளவில், ஐஸ்வர்யா, அவரது தந்தை மற்றும் அவரது உறவினர்கள் போலீஸ் ஸ்டேஷனுக்குள் சென்றனர். அரை மணிநேரம் கழித்து பல்லடம் போலீஸ் ஸ்டேஷனில் இருந்து ஐஸ்வர்யாவை அவரது தந்தையும், உறவினர்களும் அழைத்துக்கொண்டு, வெளியே நின்றுகொண்டிருந்த ஒரு காரில் ஏற்றிக்கொண்டு புறப்பட்டனர்,” என நவீன் தனது புகாரில் கூறியுள்ளார்.

நவீன் புகாரின் அடிப்படையில் பதியப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கையில், ஜனவரி 3 ஆம் தேதி அதிகாலையே ஐஸ்வர்யாவை கொலை செய்துவிட்டு, ஊருக்குள் யாருக்கும் தெரியாமல் சுடுகாட்டில் எரித்துவிட்டது தொடர்பாக தனக்கு தகவல் கிடைத்ததாகவும், அதனை உறுதிப்படுத்திய பின் பயந்துகொண்டு வீட்டை விட்டு வெளியே வராமல் இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பெருமாள், ரோஜா
படக்குறிப்பு,

ஐஸ்வர்யாவின் தந்தை பெருமாளும், அவரது மனைவி ரோஜாவும் கைது செய்யப்பட்ட பின், சம்பவ இடத்திற்கு அழைத்து வந்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர்

ஐஸ்வர்யாவுக்கு என்ன நடந்தது?

ஐஸ்வர்யாவின் கிராமமான நெய்வாவிடுதிக்குள் நுழையும்போதே, போலீசார் நடமாட்டத்தை பார்க்க முடிந்தது. தொடர்ந்து போலீசார் வந்து செல்வதால், அப்பகுதியில் உள்ள அனைவரது வீட்டின் கதவுகளும் அடைக்கப்பட்டு இருந்தன.

சம்பவம் நடந்ததாகக் கூறப்படும், நெய்வவிடுதி கிராமத்தின் மூலையில் இருந்த ஐஸ்வர்யாவின் வீட்டிற்கு சென்றோம். அங்கு பாதுகாப்பு பணிக்காக அமர்த்தப்பட்டிருந்த போலீசாரோ, யாரையும் சம்பவம் நடந்த இடத்திற்கு அருகில் அனுமதிக்கவில்லை.

நவீனின் புகாரை பெற்று வழக்குப்பதிவு செய்த காவல் துறை துணை ஆய்வாளர் நவீன்பிரசாத் கொலை நடந்ததாகக் கூறப்படும் இடத்தை ஆய்வு செய்து கொண்டிருந்தார்.

பிபிசி தமிழிடம் பேசிய அவர், ஐஸ்வர்யா தூக்கிலிடப்பட்டு கொலை செய்யப்பட்டதை உறுதி செய்தார். விசாரணை முடித்துவிட்டு கிளம்பிய அவரிடம், எங்கே வைத்து கொலை செய்தார்கள் எனக் கேட்க, “அதோ அங்க இருக்கே அந்த புளியமரம், அதில் தான் கயிற்றைப்போட்டு இழுத்திருக்கிறார்கள். தடயங்கள் உள்ளன. அருகில் செல்ல வேண்டாம்,”எனக் கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பினார் நவீன் பிரசாத்.

 
பட்டுக்கோட்டையில் சாதி ஆணவக் கொலை
படக்குறிப்பு,

பிபிசி தமிழிடம் பேசிய காவல் ஆய்வாளர் ஐஸ்வர்யா தூக்கிலிடப்பட்டு கொலை செய்யப்பட்டதை உறுதி செய்தார்.

தொடர்ந்து, அக்கம் பக்கத்தில் இருக்கும் மக்களிடம் பேச பிபிசி முயற்சித்தது.

ஐஸ்வர்யாவின் வீட்டிற்கு அருகில் சிலர், கொலையை பார்த்ததை ஒப்புக்கொள்ளவில்லை. ஆனால், ஐஸ்வர்யாவை அவரின் அப்பா இழுத்துச் சென்றதைப் பார்த்ததாகக் கூறினர்.

“தேதி ஞாபகம் இல்லை. அது ஒரு இரவு நேரம் தான். ஒரே கூச்சல். அந்த சத்தம் கேட்டுதான் வெளியே வந்து பார்த்தோம். அந்தப் பெண்ணை அப்படியே தரத்தரவென நேராக அந்த புளியமரத்துக்கிட்டத்தான் இழுத்துக்கிட்டு போனார். அதற்குள் என் கணவர் என்னை உள்ளே போகச் சொல்லிவிட்டார்,” என்றார் அந்த பெயர் குறிப்பிட விரும்பாத பெண்.

ஐஸ்வர்யா கொல்லப்பட்டது எப்படி?

இந்த கொலை வழக்கை விசாரித்து வரும் விசாரணை அதிகாரிகளில் ஒருவர் பிபிசி தமிழிடம் பேசினார். அவர், பெருமாளும், அவரது மனைவி ரோஜாவும் கைது செய்யப்பட்ட பின், சம்பவ இடத்திற்கு அழைத்து வந்து விசாரணை செய்தபோது, கொலை நடந்த நேரத்தில் இருவரும் என்ன செய்தார்கள் என்பதை செய்து காண்பித்ததாகக் கூறினார்.

“அவர் (பெருமாள்) அந்தப் பெண்ணை காரைவிட்டு கீழே இறங்கியதும் வீட்டிற்குள்கூட அழைத்துச் செல்லவில்லை. நேராக புளியமரத்தடிக்குத்தான் இழுத்துச் சென்றுள்ளார். அங்கு போகும்போதே, மனைவியை நாற்காலியும், கயிறும் எடுத்துவரச் சொல்லியுள்ளார். மனைவி கயிறைக்கொடுக்க, அந்த மரத்தின் கிளையில் கயிற்றைப்போட்டு தூக்கு போடுவதைப்போல சுருக்கு போட்டிருக்கார்,” என விசாரணையின்போது பார்த்ததைப் பகிர்ந்தார் அந்த அதிகாரி.

தொடர்ந்து பேசிய அவர், “அப்பாவை மன்னிச்சுருமா. எனக்கு வேற வழி தெரியல. நீயே மாட்டிக்கோமா என மிரட்டியுள்ளார். பின் அந்தப் பெண் கழுத்தில் மாட்டிக்கொள்ள, இவன் கயிற்றின் மறுமுனையைப் பிடித்து, இழுத்து மரத்தில் கட்டியுள்ளார். பின், அந்தப்பெண்ணின் பெரியம்மா ஒருவர் வந்து அந்தக்கயிறை அரிவாளால் வெட்டியுள்ளார்."

"அதில், ஐஸ்வர்யா கீழே விழுந்துள்ளார். விழுந்த பெண்ணிற்கு உயிர் இருப்பதை தெரிந்துகொண்டு கழுத்தை நெரித்துக்கொலை செய்துள்ளார். இவை அனைத்தையும் அவனே சம்பவம் நடந்த இடத்தில் செய்து காண்பித்தான். இதைத்தான் வாக்குமூலமாகவும் கொடுத்துள்ளார்,” என்றார் அந்த விசாரணை அதிகாரி.

 
பட்டுக்கோட்டையில் சாதி ஆணவக் கொலை

பிபிசியிடம் பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத்தும் அதனை உறுதிப்படுத்தினார்.

“பெண்ணின் தந்தை கொடுத்த வாக்குமூலத்தின்படி, அவர்கள் அந்தப் பெண்ணை தூக்கிலிட்டு, பின் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளனர். அவர் கூறிய வாக்குமூலத்தை, மற்றவர்களின் வாக்குமூலங்களோடு ஒப்பிட வேண்டும்.

இதில், வேறு யாரேனும் ஈடுபட்டுள்ளனரா, இது முன்னதாகவே திட்டமிடப்பட்டு நடந்ததா உள்ளிட்டவையை விசாரித்து வருகிறோம். இது திட்டமிடப்பட்டு இருந்தால், கூடுதலாக சில பிரிவுகளின் கீழ் வழக்கு மாற்றப்படும். ஆனால், அதனை தற்போதே முடிவு செய்ய முடியாது,” என்றார்.

பள்ளி காலம் முதலே சாதி சொல்லி விலக்கி வைத்த பெற்றோர்

இச்சம்பவத்தில், புகார்தாரராகவும், முக்கிய சாட்சியாகவும் உள்ள ஐஸ்வர்யாவின் கணவர் நவீனின் கிராமத்திற்குச் சென்றோம். கிராமத்தின் நுழைவாயிலேயே போலீசார் தடுத்து நிறுத்தினர். “உயர் அதிகாரிகளின் அனுமதியின்றி வெளியாட்கள் உள்ளே செல்லக் கூடாது,” என்றார் பாதுகாப்புக்காக இருந்த அந்த காவல்துறை அதிகாரி.

உரிய அனுமதிபெற்று நவீனின் பூவாளுர் கிராமத்திற்கள் நுழைந்தோம். நவீனின் வீட்டிற்கு அருகே சென்றதும் காவல்துறையினர் சுற்றிவளைத்து, காட்சிகள் பதிவு செய்வதற்கு அனுமதி மறுத்தனர். “தற்போது, இரண்டு கிராமங்களுக்கும் இடையே பதற்றமான சூழல் நிலவுவதால், யாரையும் அவர்களின் வீட்டிற்கு அருகே அனுமதிப்பதில்லை,” என்றார் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறை அதிகாரி.

தொடர்ந்து, காவல்துறையின் விசாரணையில் உள்ள நவீனின் தந்தை பாஸ்கரை வாட்டத்திக்கோட்டை காவல்நிலையத்தில் வைத்து சந்தித்தோம். அப்போது அவர், தன் மகனை ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போதே எச்சரித்ததாகக் கூறினார்.

 
பட்டுக்கோட்டையில் சாதி ஆணவக் கொலை
படக்குறிப்பு,

இந்தப் பிரச்னைக்கு காரணமே திருமணமானது ஊரில் உள்ள அனைவருக்கும் தெரிந்தது தான் என்றார் பூவாளுரைச் சேர்ந்த பெண்.

நவீனின் தந்தை பாஸ்கர், பிபிசி தமிழிடம் பேசும் போது, “அவர்கள் இருவரும் வேறு வேறு பள்ளியில்தான் படித்தார்கள். ஆனால், பள்ளிக்கு ஒரே அரசுப்பேருந்தில் செல்லும் போது தான் பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போதே இரு வீட்டாரும் எச்சரித்தோம். பின், எனக்கு பயமாகிவிட்டது. அதனால், அவனை நான் பத்தாம் பகுப்புக்கு மேல் பட்டுக்கோட்டையில் பள்ளிக்கு அனுப்பாமல், வேறு பகுதியில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் அனுமதித்தேன். ஆனால், கொரோனாவிற்கு பிறகு, அவன் கல்லூரி செல்வதை நிறுத்திவிட்டு, வேலைக்குச் செல்லத் தொடங்கிவிட்டான்,” என்றார்

இச்சம்பவத்திற்கு முன், நவீனின் தந்தை பாஸ்கரும், ஐஸ்வர்யாவின் தந்தை பெருமாளும் ஒருவருக்கு ஒருவர் தெரிந்தவர்களாகவே இருந்துள்ளனர்.

“இருவரும் நெருங்கிய நண்பர்கள் இல்லை என்றாலும், பக்கத்து பக்கத்து கிராமம் என்பதால் நல்ல பழக்கம்தான். இந்த சம்பவம் தெரிந்தபோது கூட, இரண்டு பேரும்போய் யாருக்கும் தெரியாமல் அழைத்து வந்துவிடுவோம் என்று என்னை அழைத்தான். ஆனால், அப்போது இவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை,” என்றார் பாஸ்கர்.

 
நவீன் - ஐஸ்வர்யா திருமணம் எப்படி ஊருக்கு தெரிந்தது?

இந்தப் பிரச்னைக்கு காரணமே திருமணமானது ஊரில் உள்ள அனைவருக்கும் தெரிந்தது தான் என்றார் பூவாளுரைச் சேர்ந்த தமிழ்ச்செல்வி.

“இதுபோன்று பட்டியல் சாதியினர், பிற்படுத்தப்பட்ட சாதியைச் சேர்ந்த பெண்களை இதற்கு முன்பும் கூட திருமணம் செய்துள்ளனர். அவர்கள் பெரும்பாலும் சில வருடங்களுக்கு ஊருக்குள் வர மாட்டார்கள். ஏன் அவர்கள் திருமணம் செய்தது கூட ஊருக்குள் யாருக்கும் தெரியாது. ஆனால், இவர்கள் விஷயத்தில், இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளும் வீடியோ வாட்ஸ் அப் மூலம் ஊரில் உள்ள அனைவருக்கும் பரவிவிட்டது. அதுதான் இவ்வளவு பெரிய சம்பவத்திற்கு காரணம்,” என்றார் தமிழ்ச்செல்வி.

 
பட்டுக்கோட்டையில் சாதி ஆணவக் கொலை
படக்குறிப்பு,

பல்லடம் காவல் நிலைய ஆய்வாளர் முருகையா பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்

பல்லடம் காவல் ஆய்வாளர் இடைநீக்கம்: நடந்தது என்ன?

பல்லடம் காவல்நிலையத்தில் இருந்து தான் ஐஸ்வர்யா அழைத்துச் செல்லப்பட்டதாகவும், தனக்கு கொலை மிரட்டல் இருப்பதாக போலீசார் கூறியதாகவும் நவீன் தனது புகார் மனுவில் கூறியிருந்தார்.

இது தொடர்பாக பிபிசியிடம் பேசிய பல்லடம் டிஎஸ்பி விஜயகுமார், " பெண்ணின் தந்தை பெருமாள் கொடுத்த புகாரின் பேரில் ஐஸ்வர்யா மற்றும் நவீனை விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்திருந்தோம். ஆனால், நவீன் விசாரணைக்கு ஆஜராகவில்லை. ஐஸ்வர்யாவிடம் நாங்கள் விசாரணை நடத்திய போது அவர் எங்களிடம், நான் என் பெற்றோருடன் ஊருக்கு செல்கிறேன். எங்கள் திருமணம் குறித்து பெற்றோரிடம் பேசி ஒப்புக்கொள்ள வைக்கிறேன் எனக்கூறினார். ஐஸ்வர்யாவின் சம்மதத்தின் பேரில் தான் அவரை பெற்றோருடன் அனுப்பி வைத்தோம். நாங்கள் சமாதானப்படுத்தி அனுப்பி வைக்கவில்லை," என்றார்.

'கொலை மிரட்டல் இருந்ததால் தான் நவீன் விசாரணைக்கு ஆஜராகவில்லையா?' என்ற கேள்வியை டிஎஸ்பி விஜயகுமாரிடம் நாம் முன்வைத்தோம்.

அதற்கு விளக்கமளித்த அவர், "நவீன் விசாரணைக்கு ஆஜராகியிருந்தால் தானே கொலை மிரட்டல் இருந்ததா இல்லையா என்பது தெரியவரும். அவர் விசாரணைக்கு ஆஜராகவும் இல்லை, கொலை மிரட்டல் இருந்ததாக எதுவும் தெரிவிக்கவில்லை," என்கிறார் அவர்.

இதற்கிடையில், பல்லடம் காவல் நிலைய ஆய்வாளர் முருகையா பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

https://www.bbc.com/tamil/articles/c3gy2425vg3o

தமிழகத்தில் அயலக தமிழர் விழா : செந்தில், மனோ, செல்வம், சாணக்கியன் பங்கேற்பு

2 months 2 weeks ago

Published By: VISHNU  10 JAN, 2024 | 07:36 PM

image
 

ஆர்.ராம்

தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில், சென்னையில் 11,12 ஆம் திகதிகளில் நடைபெறும் அயலக தமிழர் விழாவில், பங்கேற்பதற்காக இலங்கையிலிருந்து முக்கிய தமிழ் அரசியல்வாதிகள் பயணமாகியுள்ளனர்.

அதனடிப்படையில், கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மனோகணேசன், ரெலோ அமைப்பின் தலைவரும், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன், மற்றும் தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் ஆகியோர் சென்னை நோக்கி பயணமாகியுள்ளனர்.

இதேவேளை, கனடாவின் ஒன்றாரியோ மாகாண சபையின் மார்க்கம்- தோர்ன்ஹில் தொகுதி உறுப்பினருமான லோகன் கணபதியும் குறித்த நிகழ்வில் பங்பேற்பதற்காக வருகை தந்துள்ளார். 

மூன்றாவது தடவையாக முன்னெடுக்கப்படும் இவ்விழாவை தமிழக அரசானது, தமிழக எல்லையைத் தாண்டி, பரந்துபட்டு சர்வதேசங்களிலும் வசிக்கும் தமிழர்களை ஒன்று சேர்க்கும் வகையில் கொண்டாடிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/173656

தமிழ்நாட்டில் ஜனவரி மாதமும் தொடரும் கனமழை - 'லா நினோ' காரணமா?

2 months 2 weeks ago
கனமழை
படக்குறிப்பு,

புதுச்சேரி மழை பாதிப்புகள்

8 ஜனவரி 2024

தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை மீண்டும் தீவிரம் அடைந்துள்ளது. ஜனவரி முதல் வாரத்தைக் கடந்தும் தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்களிலும் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், வேலூர், விழுப்புரம், திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களிலும் கடந்த இரு தினங்களாகவே பரவலாக கனமழை பெய்துவருகிறது.

திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்துள்ளது. குறிப்பாக, சென்னையில் ஜன. 07 அன்று நாள் முழுவதும் மழை தொடர்ந்தது. புதுச்சேரியிலும் மழை பெய்துவருகிறது.

இன்று (ஜன. 08) மதியம் ஒரு மணி வரையிலான கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் 24 செ.மீ., கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் 23 செ.மீ., நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் 22 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கனமழை

பட மூலாதாரம்,TAMILNADU WEATHERMAN/X

வட தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் மழை பெய்வதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், ஜன. 9, 10 ஆகிய தேதிகளில் தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்யும் என்றும், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த 3-4 ஆண்டுகளாகவே ஜனவரி மாதத்தில் மழை பெய்வது வழக்கமாகியுள்ளது. இதுவொரு `புதிய இயல்பா?`, இதற்கு காலநிலை மாற்றமும் ஒரு காரணமா? விவசாயிகள், பொதுமக்கள் இதற்கேற்ப தங்களை தகவமைத்துக் கொள்ள வேண்டுமா என்ற கேள்விகள் இதையொட்டி எழுகின்றன.

தமிழகத்தில் கனமழை

பட மூலாதாரம்,TAMILNADU WEATHERMAN/X

லா நினோ காரணமா?

இதுதொடர்பாக, தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் `எக்ஸ்` (ட்விட்டர்) தளத்தில், "கடந்த 4 ஆண்டுகளாகவே ஜனவரி மாதத்தில் தமிழகத்தில் மழை பெய்வது வழக்கமாகிவிட்டது. தமிழ்நாட்டுக்கு அருகே கிழக்கு நோக்கி வீசும் காற்று, மேற்கு நோக்கி வீசும் காற்றுடன் தொடர்புகொள்வதால் இந்த மழை பெய்துவருகிறது" என பதிவிட்டிருந்தார்.

ஜனவரி மாதத்திலும் தமிழகத்தில் ஏன் மழை பெய்கிறது என்ற கேள்வியை தனியார் வானிலை ஆர்வலர் ஸ்ரீகாந்திடம் எழுப்பினோம்.

"கடந்த 2-3 ஆண்டுகளாக லா நினோ விளைவு இருந்தது. அப்படியிருந்தால் பருவமழை சிறிது தாமதமாகத்தான் முடிவுக்கு வரும். இப்போது ஜனவரி முதல் வாரம் தான். அதனால் இதனை டிசம்பர் கடைசி வாரம் என்றே எடுத்துக் கொள்ளலாம். மேலும் பருவமழை தாமதமாக தொடங்கியதும் ஜனவரி மாதமும் பெய்யும் இந்த மழைக்குக் காரணமாக இருக்கலாம்" என்றார்.

மேலும், 2022-ஆம் ஆண்டு ஜனவரி இரண்டாம் வாரத்திற்கு பிறகும் மழை தொடர்ந்தது என தெரிவித்த அவர், இந்தாண்டு அப்படியிருக்காது என்றும் கூறினார்.

1964-ஆம் ஆண்டில் தனுஷ்கோடியில் டிசம்பர் இறுதியில் ஏற்பட்ட புயல் மற்றும் 2011-ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் ஏற்பட்ட `தானே` போன்ற புயல்களை ஸ்ரீகாந்த் உதாரணமாக காட்டுகிறார். `தானே` புயலின் போது லா நினோ விளைவு இருந்ததாக கூறுகிறார். லா நினோ இருந்தால் டிசம்பர் இறுதி, ஜனவரி முதல் வாரத்தில் மழை தொடர்வதற்கான வாய்ப்புகள் அதிகம் என்கிறார் அவர்.

 
தமிழகத்தில் கனமழை

பட மூலாதாரம்,TAMILNADU WEATHERMAN/X

லா நினோ என்பது என்ன?

"லா நினோ என்பது இந்தியப் பெருங்கடல் பகுதியில் வெப்பநிலை குறைந்து, மழைக்கான சாத்தியக்கூறுகள் அதிகம் நிலவும் வானிலையாகும். வெப்ப மண்டல காற்றுக்கூறுகள் மெதுவாகத்தான் பூமத்திய ரேகைக்கு தெற்கே நகரும். பூமத்திய ரேகையை நெருங்கி சென்றால்தான் மழை குறையும். லா நினோ வானிலையின் போது இந்த செயல்முறை மெதுவாக நடக்கும். எனவே, மழை தொடரும்" என்றார்.

எனினும், இப்போது பெய்யும் மழை `லா நினோ` விளைவால் ஏற்பட்டதல்ல என்கிறார் ஸ்ரீகாந்த்.

ஜனவரி மழைக்கு என்ன காரணம்?

"வடகிழக்குப் பருவ மழை மற்றும் தென்மேற்கு பருவமழை காலத்திற்கு இடைப்பட்ட காலங்களில் மேற்கத்திய கலக்கம், மேடேன் ஜூலியன் ஒத்த அலைவு (MJO) மற்றும் வெப்ப மண்டல காற்று குவிதல் பகுதி (ITCZ) இவைகளின் நிலையே மழைக்கான முக்கிய காரணிகள். இந்த மூன்று காரணிகளில் ஏதேனும் ஒன்று சாதகமான சூழலில் இருந்தால் குளிர்கால / வெப்ப சலன மழை தென் இந்திய பகுதியில் ஏற்பட வாய்ப்பு அதிகரிக்கும்" என்பது ஸ்ரீகாந்த் போன்ற வானிலை ஆர்வலர்களின் விளக்கமாக இருக்கிறது.

இதில், மேற்கத்திய கலக்கம் (Western disturbance) என்ற வானிலை நிகழ்வு, மழையை ஏற்படுத்தி வெப்பநிலையை குறைப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

மேடன் -ஜூலியன் அலைவு ( MJO ) என்பது வெப்பமண்டல வளிமண்டலத்தில் உள்ள பருவகால மாறுபாட்டின் முக்கிய அங்கமாகும்.

தற்போது தமிழகத்தில் பெய்யும் மழைக்கு எம்.ஜே.ஓ, மேற்கத்திய கலக்கம் போன்ற இரு சூழல்களும் சாதகமாக இருப்பதே காரணம் என்கிறார் அவர்.

"இந்த சாத்தியக்கூறுகள் இல்லையென்றால் இம்மழை இருந்திருக்குமா என்பது சந்தேகம்தான். தென் தமிழகத்தில் மட்டும் ஒருவேளை மழை பெய்திருக்கலாம்" என்கிறார் ஸ்ரீகாந்த்.

கடல் வெப்பம் அதிகமானால் மழையின் தன்மையில் இத்தகைய மாறுதல்கள் ஏற்படலாம் என அவர் கூறுகிறார்.

இப்படி பருவமழை அல்லாத காலங்களில் பெய்யும் மழையை ஓரளவு கணிக்க முடியும் எனக்கூறும் அவர், எனினும் எந்த பகுதிகளில் அதிக மழை இருக்கும் என்பதை சொல்ல முடியாது என தெரிவித்தார்.

 
வானிலை

பட மூலாதாரம்,GETTY IMAGES

புதிய இயல்பா?

காலநிலை மாற்றம் இதற்கு காரணமா என `பூவுலகின் நண்பர்கள்` அமைப்பின் சுந்தர்ராஜனிடம் கேட்டபோது, "கடந்த நான்கு ஆண்டுகளாகவே தமிழகத்தில் ஜனவரி மாதமும் மழை பெய்துவருகிறது. இதுவொரு புதிய இயல்புதான். பருவமழை தன்மைகள் மாறுபடுவதே காலநிலை மாற்றத்தால்தான். வளைகுடா நீரோட்டம், எம்.ஜே.ஓ போன்றவை குறித்து ஆய்வு செய்ய வேண்டும்.

அரபி கடலிலும் வெப்பம் அதிகரித்து அங்கேயும் பல புயல்கள் உருவாகி வருகின்றன.

இந்த வானிலை மாறுதல்கள், இந்திய பருவமழையில் குறிப்பாக வடகிழக்குப் பருவமழையில் என்னென்ன தாக்கங்களை ஏற்படுத்தும் என்பதை ஆய்வு செய்ய வேண்டும்" என்றார்.

பாதிக்கப்படும் விவசாயிகள்

இப்படி பருவம் தப்பிய மழையால் விவசாயிகள் அதிகம் பாதிக்கப்படக் கூடியவர்களாக உள்ளனர். ஜனவரி மாதம் பெரும்பாலான பகுதிகளில் அறுவடை காலம்.மழை காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன.

கள்ளக்குறிச்சி அருகே மரூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பாண்டு கூறுகையில், "பருவம் தவறி பெய்த மழையால் தனது மூன்று ஏக்கர் நிலத்தில் விளைந்திருந்த நெல் முற்றிலும் நாசமாகி போனது. எப்போதும் `தை பிறந்தால் வழி பிறக்கும்` என்பதற்கு ஏற்ப தை மாத அறுவடைக்குத் தயாராக இருக்கும் இந்த நேரத்தில் பெய்த மழையானது முழுமையான சேதத்தைக் கொடுத்து விட்டது" என தெரிவித்தார்.

புதுச்சேரி பகுதி கருக்கலாம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சுப்பிரமணியன் கூறுகையில், "நெல் அறுவடை செய்ய வேண்டிய இந்த நேரத்தில் கதிர் முற்றி இருக்கும் இந்த காலகட்டத்தில் இந்த மழை எதிர்பார்க்காத ஒன்று. இதனால் செய்த செலவு கூட வராது அனைத்து பயிர்களும் தண்ணீரில் மூழ்கி விட்டன என்ன செய்வது என்று தெரியவில்லை. வரத்து வாய்க்காலை தூர்வாரி இருந்தால் நஷ்டத்தை சற்று குறைத்திருக்கலாம் அல்லது தடுத்திருக்கலாம்" என தெரிவித்தார்.

எங்கெல்லாம் பாதிப்புகள்?

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பகுதியில் இரண்டு நாட்களாக தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக வலங்கைமான் பேரூராட்சி 14-வது வார்டு கோவில்பத்து பகுதிகளில் குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்துள்ளதால் சுமார் 200-க்கும் மேற்பட்ட வீடுகளை மழைநீர் சூழ்ந்துள்ளது.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் உள்ள உப்பளங்கள் மழை வெள்ளத்தில் மூழ்கிவிட்டன.

விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட தாமரைக்குளம் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட வீடுகளை மழைநீர் சூழ்ந்துள்ளதால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் சிரமத்திற்கு ஆளாயினர்.

புதுச்சேரி கிருமாம்பாக்கம், ஏம்பலம், பாகூர் உள்ளிட்ட பகுதியில் 100 ஏக்கரில் பயிரிட்டு அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன.

https://www.bbc.com/tamil/articles/cz9qr4pwp75o

Checked
Fri, 03/29/2024 - 01:26
தமிழகச் செய்திகள் Latest Topics
Subscribe to தமிழகச் செய்திகள் feed