தமிழகச் செய்திகள்

தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர்களுக்காக நிர்மாணிக்கப்பட்டுள்ள வீடுகள் கையளிப்பு!

2 months 1 week ago
home-700x375.jpg தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர்களுக்காக நிர்மாணிக்கப்பட்டுள்ள வீடுகள் கையளிப்பு!

தமிழ்நாட்டில் வெவ்வேறு பகுதிகளில் அகதிகளாகத் தஞ்சமடைந்துள்ள இலங்கைத் தமிழர்களுக்காக நிர்மாணிக்கப்பட்டுள்ள வீடுகள் நேற்று திறந்து வைக்கப்பட்டுள்ளன.

தமிழ் நாட்டில் அகதி முகாமில் உள்ள இலங்கை தமிழர்களுக்காக புதுக்கோட்டை – தேக்காட்டூர் பகுதியில் புதிதாக 58 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.

தமிழக சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி உள்ளிட்டோர் நேற்று அதனை திறந்து வைத்துள்ளனர்.

சுமார் 3.56 கோடி இந்திய ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் இந்த வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.

அதேநேரம் எட்டயபுரம் – குளத்துள்வாய்பட்டி பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 40 வீடுகளும் நேற்று திறந்து வைக்கப்பட்டுள்ளன.

2.03 கோடி இந்திய ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் இநட வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.

மேலும் சிவகாசி – ஆனைக்குட்டம் பகுதியிலும் இலங்கை தமிழர்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட வீடுகள் நேற்று திறந்து வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2024/1368732

சாலையோரத்தில் கல்லை நட்டு சுவாமி என கூறும் அளவுக்கு மூடநம்பிக்கை நிலவுகிறது: இந்திய உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் வேதனை

2 months 1 week ago
06 FEB, 2024 | 10:40 AM
image

சென்னை: சாலையோரத்தில் கல்லை நட்டு துணியைப் போர்த்தி பூஜைகள் செய்து சுவாமி சிலை எனக்கூறும் அளவுக்கு நாட்டில் மூட நம்பிக்கைகள் நிலவுவதாக உயர் நீதிமன்ற நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் வேதனை தெரிவித்துள்ளார்.

பல்லாவரத்தில் தனக்கு சொந்தமான நிலத்தின் அருகே வைக்கப்பட்டுள்ள கல்லை சிலர் துணியைச் சுற்றி சிலை எனக்கூறி வழிபாடு செய்து வருவதாகவும் எனவே அந்தக் கல்லை அகற்ற போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் கோரி சக்தி முருகன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அதில் இதுதொடர்பாக போலீஸில் புகார் அளித்தபோது இது உரிமையியல் சார்ந்த பிரச்சினை என்பதால் தலையிட முடியாது எனக்கூறி போலீஸார் மறுத்து விட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் பிறப்பித்த உத்தரவு: சாலையோரத்தில் கல்லை நட்டு துணியைப் போர்த்தி பூஜைகள் செய்து சுவாமி சிலை எனக்கூறும் அளவுக்கு நாட்டில் மூடநம்பிக்கைகள் நிலவுவது வேதனை அளிக்கிறது.

சாலையில் நடப்பட்டுள்ள அந்த கல் சிலையா இல்லையா என்பதை உரிமையியல் நீதிமன்றம் முடிவு எடுப்பது என்பது சாத்தியமற்றது. மேலும் இதற்காக இந்த வழக்கை தொடர்ந்து விசாரிப்பதுஎன்பது நீதிமன்ற நேரத்தை வீணடிக்கும் செயல்.

எனவே மனுதாரரின் புகாரின் அடிப்படையில் அவருடைய நிலத்துக்கு அருகில் சாலையோரத்தில் நடப்பட்டுள்ள கல்லை போலீஸார் ஒரு வாரத்தில் அகற்ற வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

https://www.virakesari.lk/article/175684

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்படுவது தொடர்வது ஏன்? - மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி

2 months 2 weeks ago
05 FEB, 2024 | 05:35 PM
image

சென்னை: கச்சத்தீவு அருகில் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வது தொடர் நிகழ்வாக இருப்பதைத் தடுக்க ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் ஏன் எடுக்கப்படவில்லை என மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் மீனவர் பாதுகாப்பு அமைப்பின் தலைவர் பீட்டர் ராயன் தாக்கல் செய்த மனுவில் ‘கச்சத்தீவு பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த 6 மீனவர்களை இலங்கை கடற்படையினர் ஜனவரி 22-ம் தேதி கைது செய்துள்ளனர். எனவே இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க மத்திய - மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய் கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மவுரியா "கச்சத்தீவு ஒப்பந்தத்தை மீறி இலங்கை அரசு செயல்படுகிறது. கைது செய்யப்பட்ட மீனவர்களை மீட்க தூதரக அளவில் நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும். இன்றும் 23 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த பிரச்சினை குறித்து தீர்வு காண மத்திய - மாநில அரசுகள் இணைந்த கூட்டுக்குழுவை அமைக்க வேண்டும்" என வாதிட்டார்.

தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் "கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் கடிதம் அனுப்பியிருக்கிறார். கைது செய்யப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினருக்கு ஒரு நாளைக்கு 250 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுகிறது" என்று தெரிவித்தார்.

மத்திய அரசுத் தரப்பில் ஆஜரான உதவி சொலிசிட்டர் ஜெனரல் ராஜேஷ் விவேகானந்தன் “இந்த விவகாரத்தில் தூதரக அளவில் நடவடிக்கை எடுத்து வருகிறது. எனவே இந்த வழக்கு தொடர்பாக விளக்கமளிக்க கால அவகாசம் வேண்டும்” என கோரினார்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள் “மீனவர்கள் கைது நடவடிக்கை என்பது தொடர் நிகழ்வாக இருக்கிறது. இதை தடுக்க ஏன் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை? ஏன் இந்த நிகழ்வுகள் தொடர்ந்து நிகழ்கிறது?” என கேள்வி எழுப்பினர். பின்னர்இ இந்த வழக்கு தொடர்பாக மத்திய - மாநில அரசுகள் விளக்கமளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள்இ விசாரணையை மார்ச் 11-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

https://www.virakesari.lk/article/175649

தமிழ்நாட்டு வளர்ச்சியின் மந்திரம் என்ன? சர்வதேச ஊடகங்கள் புகழ்வது ஏன்?

2 months 2 weeks ago
திருவள்ளுவர் சிலை

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், சுபாஷ் சந்திர போஸ்
  • பதவி, பிபிசி தமிழ்
  • 5 பிப்ரவரி 2024, 03:01 GMT

தமிழ்நாட்டின் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் ஐபோன் உற்பத்தி ஆலையான பாக்ஸ்கான் அமைந்துள்ளதை மையமாக வைத்து தி நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை சமீபத்தில் வெளியிட்டிருந்த கட்டுரை ஒன்றில் தமிழகத்தின் தொழில்வளர்ச்சி குறித்து புகழாரம் சூட்டியுள்ளது.

தமிழ்நாடு தொழில்துறையில் வெற்றியாளராக பயணித்து வருவதாகவும், நாட்டிலேயே அதிக பெண் தொழிலாளர்களை கொண்ட மாநிலமாக திகழ்வதாகவும் அந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதே போல் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் செயல்பட்டு வரும் ஒவ்வொரு விதமான தொழில்களையும் குறிப்பிட்டு தமிழக தொழில்துறையை பாராட்டியுள்ளது அந்த பத்திரிகை.

ஆனால், தமிழகம் மற்ற இந்திய மாநிலங்களை விட வளர்ச்சியில் தனித்து நிற்பது ஏன்? இதற்கான விதை எங்கு போடப்பட்டது? ஒட்டுமொத்த இந்தியாவே ஒரு பாதையில் செல்லும்போது தமிழகம் தனக்கான பாதையை அமைத்து முன்னேற தொடங்கியது எப்போது? அதன் பலன் என்ன? உண்மையில் தமிழகம் போதுமான வளர்ச்சி அடைந்திருக்கிறதா?

 
தொழிற்சாலை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

1960 களில் இருந்து தமிழ்நாட்டில் நடந்த கொள்கை மற்றும் அரசியல் மாற்றங்கள் வளர்ச்சிக்குக் காரணம் என்கிறார் பொருளாதார நிபுணர் ஜோதி சிவஞானம்.

தமிழ்நாட்டின் தனித்துவம்

ஒரு மாநிலத்தின் வளர்ச்சியை கணக்கிட சுகாதாரம், கல்வி, தனிநபர் வருமானம் ஆகிய கூறுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அந்த வகையில் இந்தியாவின் பிற மாநிலங்களை விட ஒப்பீட்டளவில் தமிழகம் முன்னிலையில் உள்ளது.

குறிப்பாக தமிழ்நாட்டின் சிசு மரண விகிதம் (IMR) 1000 பேருக்கு 8.2, தனிநபர் வருமானம் ரூ.1,66,727, உயர்கல்வி சேர்க்கை (GER) விகிதம் 47% என அனைத்திலும் இந்தியாவின் டாப் இடங்களை பிடித்துள்ளது தமிழ்நாடு. இந்த வளர்ச்சிக்கு காரணமாக 1960 களில் இருந்து தமிழ்நாட்டில் நடந்த கொள்கை மற்றும் அரசியல் மாற்றங்கள் கூறப்படுகின்றன.

இதுகுறித்து அறிந்து கொள்வதற்காக பேராசிரியர் மற்றும் பொருளாதார நிபுணர் ஜோதி சிவஞானம் அவர்களிடம் பேசினோம்.

 
தமிழ்நாட்டு வளர்ச்சி

பட மூலாதாரம்,LINKEDIN

படக்குறிப்பு,

பொருளாதார நிபுணர் ஜோதி சிவஞானம்

தமிழ்நாடு vs மத்திய அரசு

தமிழ்நாடு அரசின் வளர்ச்சியை, மற்றுமொரு மாடலோடு ஒப்பிட்டு பார்த்தால் சரியாக புரிந்து கொள்ள முடியும் என்று தொடங்கிய அவர் மத்திய அரசோடு ஒப்பிட்டு பேசினார்.

“மத்திய அரசு தங்களது வளர்ச்சி பாதையை 50, 60 களில் தான் முன்னெடுக்க தொடங்கினார்கள். அவர்கள் எடுத்த வளர்ச்சி பாதைக்கு நேர்மாறான பாதையை நாம் எடுத்ததின் விளைவு தான் தற்போது அடைந்துள்ள வளர்ச்சிக்கு காரணம்” என்று கூறுகிறார் ஜோதி சிவஞானம்.

இதற்கு உதாரணமாக “மத்திய அரசு வளர்ச்சி பகிர்வு(Growth With Distribution) என்ற பாதையை கையில் எடுத்தார்கள். அதன்படி முதலில் வளர்ச்சியடைதல், பின்னர் அதை பகிர்ந்து கொடுத்தல் என்ற வழியில் சென்றார்கள். முதலில் இந்த திட்டம் வளர்ச்சியை தந்தாலும், அது மக்களை சென்றடையவில்லை” என்கிறார்.

ஆனால், தமிழகமோ 1960களுக்கு பிறகு வேறு விதமான கொள்கையை பின்பற்ற தொடங்கியது. தமிழகத்தில் காங்கிரஸ் அரசு மாறி திமுக ஆட்சியை பிடித்த போது, சாமானிய மக்களுக்கு என்ன தேவையோ அதில் கவனம் செலுத்தினார்கள். யாசகர்கள் மறுவாழ்வு திட்டம், குடிசைமாற்று வாரியம், கிராமங்களுக்கு அரசு பேருந்து வசதி, சாலை திட்டம் என பல திட்டங்களை கொண்டு வந்தார்கள் என்று கூறுகிறார் ஜோதி சிவஞானம்.

மேலும் பேசிய அவர், “திமுக வளர்ச்சியை பற்றி அதிகம் கவலைப்படாமல், மக்களுக்கு என்ன தேவை என்பதன் மீது அதிகம் கவனம் செலுத்தினார்கள். அதற்கு முன்பெல்லாம் அரசு செலவு செய்ததெல்லாம் அணை கட்டுவது போன்ற மூலதனம் சார்ந்ததாக இருந்தது. ஆனால், இவர்கள் தான் கல்வி, சுகாதாரம் என மக்கள் வளர்ச்சிக்கு தேவையான செலவுகளை செய்தார்கள்” என்று குறிப்பிடுகிறார்.

 
தமிழ்நாட்டு வளர்ச்சி

பட மூலாதாரம்,SALEM DHARANIDHARAN

படக்குறிப்பு,

திமுக செய்தி தொடர்பாளர் சேலம் தரணிதரன்

இதே கருத்தை முன்வைக்கிறார் திமுகவின் செய்தி தொடர்பாளர் சேலம் தரணிதரன், “1960களில் உத்தரபிரதேசத்தின் தனிநபர் வருமானமும், தமிழ்நாட்டின் தனிநபர் வருமானமும் ஒன்றுதான். ஆனால், 2011ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் தனிநபர் வருமானம் உத்தரப்பிரதேசத்தை விட மூன்று மடங்கு அதிகம். மேலும் தொழிற்துறை வளர்ச்சியிலும் கூட இந்தியாவில் தமிழ்நாடு முன்னணி மாநிலங்களில் ஒன்று..”

“அதற்கு முக்கிய காரணம் திமுக மக்கள் நல திட்டங்களில் கவனம் செலுத்தியது. இடஒதுக்கீடு, கல்விக்கான ஏராளமான திட்டங்கள், எஸ்சி எஸ்டி மாணவர்களுக்கு இலவச கல்வி, பெண்களுக்கான கல்வி ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. பொருளாதாரம் வளர மூலதனமும், மனிதவளமும் மிக அவசியம். மனிதவளத்தை வளர்க்க கல்வி மற்றும் வறுமை ஒழிப்பு மிக முக்கியமென கருதி பல நலத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டதாக” அவர் கூறுகிறார்.

தமிழ்நாடு தொழிற்சாலை

பட மூலாதாரம்,GETTY IMAGES

சேவைத்துறை மீது கவனம் செலுத்திய மத்திய அரசு

மத்திய அரசு சேவைத்துறை சார்ந்து முக்கியத்துவம் அளித்துக் கொண்டிருந்த காலத்தில், தமிழக அரசு வறுமை ஒழிப்பு, கல்வியை மேம்படுத்துதல் மற்றும் வேலைவாய்ப்பு சார்ந்த திட்டங்களுக்கு முக்கியத்துவம் வழங்கியதாக கூறுகிறார் ஜோதி சிவஞானம்.

வளர்ச்சியை மட்டுமே மையமாக வைத்திருந்ததால் ஒரு கட்டத்திற்கு மேல் மத்திய அரசு மக்களுக்கு வளர்ச்சியை பகிர்தல் மற்றும் வேலைவாய்ப்பை வழங்குதலில் தேக்கமடைந்து விட்டதாக குறிப்பிடுகிறார் அவர்.

ஆனால், மனிதவளத்தை மேம்படுத்துவதில் குறிக்கோளாக இருந்த தமிழக அரசு அதற்காக கல்வியை ஜனநாயக படுத்தியது, கிராமங்களில் இருந்த மக்களை நகரங்களை நோக்கி அழைத்து வந்தது, சாலை வசதி, பொதுப்போக்குவரத்து வசதியை ஏற்படுத்தியது. இடஒதுக்கீட்டை அறிமுகப்படுத்திவிட்டு அமைதியாக இல்லாமல் அதற்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கி மக்களுக்கு வேலை வழங்கியது உள்ளிட்ட பல காரணிகளை அடுக்குகிறார் ஜோதி சிவஞானம்.

 
தமிழ்நாட்டு வளர்ச்சி

பட மூலாதாரம்,DMK / AIADMK

படக்குறிப்பு,

முன்னாள் முதல்வர்கள் கலைஞர் கருணாநிதி மற்றும் எம்.ஜி.ராமச்சந்திரன்

கட்சி பேதமற்ற வளர்ச்சி கொள்கைகள்

மக்கள்நலன் சார்ந்த கொள்கைகள் தமிழ்நாட்டில் மட்டுமே கட்சிபேதமின்றி தொடர்ந்து வந்துள்ளதாக கூறுகிறார் ஜோதி சிவஞானம்.

உதாரணமாக, “காமராஜர் பள்ளிகளை கட்டினார். மதிய உணவு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அவற்றில் திமுக அதிமுக என இரண்டு ஆட்சி காலத்திலும் புதிய புதிய அம்சங்கள் புகுத்தப்பட்டன. ஆக எப்படியாவது மாணவர்களை பள்ளிக்கு வரவைக்க வேண்டும் என்பதில் தமிழக கட்சிகள் ஒத்த கருத்தோடு இருந்தன” என்கிறார் அவர்.

குறிப்பாக திமுக ஆட்சியில் கொண்டு வந்த பல மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை எம்ஜிஆரும் அப்படியே தொடர்ந்தார். திமுக கலை அறிவியல் கல்லூரிகளை தொடங்கியது. எம்ஜிஆர் பொறியியல் மற்றும் மருத்துவ கல்லூரிகளை தொடங்கினார்.

இதில் எம்.ஜி.ஆர் தொடங்கிய அண்ணா பல்கலைக்கழகத்திற்கு முக்கிய பங்குள்ளது. இதுகுறித்து பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “அண்ணா பல்கலைக்கழகத்தில் தான் முதன்முதலில் எலக்ட்ரானிக்ஸ் போன்ற துறைகள் கற்பிக்கப்பட்டன. அதன் விளைவாக 90களுக்கு பிறகு வந்த தொழில்நுட்ப நிறுவனங்களில் இங்கு படித்தவர்கள் நேரடியாக வேலைக்கு சேர முடிந்தது” என்பதை சுட்டிக்காட்டுகிறார்.

இந்த திட்டங்களின் விளைவாக 1990களில் தாராளமயமாக்கலுக்கு பிறகு இந்தியாவில் முதலீடு செய்ய வந்த பல நிறுவனங்களும் டெல்லி, மும்பைக்கு அடுத்து தமிழ்நாட்டை நோக்கி வந்ததாக கூறுகிறார் ஜோதி சிவஞானம். அதற்கு காரணம் மனிதவள மேம்பாட்டில் அதற்கு முந்தைய 30 ஆண்டுகளில் செய்யப்பட்ட வேலையின் காரணமாக திறன்மிக்க தொழில் நிபுணர்கள் தமிழ்நாட்டில் இருந்தனர் என்கிறார்.

 
சென்னை ரயில் நிலையம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

மத்திய அரசின் அணுகுமுறையில் ஏற்பட்ட மாற்றங்கள்

வளர்ச்சியை பகிர்தல் எனும் பாணியில் முன்னேற்றம் கிடைக்கவில்லை என்று புரிந்துகொண்ட மன்மோகன் சிங் 2004க்கு பிறகு உரிமை சார் அணுகுமுறையை கொண்டுவந்தார்.

"வளர்ச்சி கிடைத்தும் பகிர்தல் நடக்கவில்லை என்றபோது வேலைக்கான உரிமை, உணவுக்கான உரிமை, ஆரோக்கியத்திற்கான உரிமை உள்ளிட்ட கொள்கைகளை முன்வைத்தார். இந்த பிரச்னைகளை அரசே இனி நேரடியாக அணுகும் என்றும் அறிவித்தார்" என்று கூறுகிறார் ஜோதி சிவஞானம்.

"ஆனால், 2014க்கு பிறகான ஆட்சியில் அந்த முழக்கங்களையே விட்டுவிட்டார்கள். பகிர்தல் என்பதை விட்டுவிட்டு வளர்ச்சியே பெரிய விஷயம் என்ற பாதையில் எடுத்து செல்கிறார்கள்" என்றும் கூறுகிறார் அவர்.

 
தமிழ்நாட்டு வளர்ச்சி

பட மூலாதாரம்,TIDEL PARK

படக்குறிப்பு,

சென்னை டைடல் பார்க்

உலக மாற்றத்திற்கு ஏற்ப ஏற்பாடுகள்

தமிழகம் எப்போதும் உலக அளவில் நடைபெறும் மாற்றங்கள், ட்ரெண்டுக்கு ஏற்றவாறு தன்னை தகவமைத்து கொள்வதில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

அப்படி தமிழகத்தில் இதற்கு முன்னாலும் உலகளவில் ஏற்படக்கூடிய தொழில்நுட்ப மாற்றங்களுக்கேற்பவும் தயக்கமே இல்லாமல் முன் திட்டங்கள் வகுக்கப்பட்டதாக கூறுகிறார் பொருளாதார அறிஞர் ஜோதி சிவஞானம்.

அப்படித்தான் டைடல் பார்க் உள்ளிட்ட ஐடி நிறுவன திட்டங்கள் அமல்படுத்தப்பட்டன. ஆட்டோமொபைல் துறைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன என்கிறார் அவர்.

இதுகுறித்து பேசிய சேலம் தரணிதரன், "இந்தியாவின் முதல் ஐடி கொள்கையே தமிழ்நாட்டில் கருணாநிதி ஆட்சிக்காலத்தில் தான் கொண்டுவரப்பட்டது" என்று கூறுகிறார்.

மேலும், சிப்காட் உள்ளிட்ட தொழிற்பேட்டைகளை உருவாக்கியதையும் குறிப்பிடுகிறார்.

"அதே சமயம் தற்போதைய ஆட்சியில் ஸ்டார்ட்டப் நிறுவனங்களுக்கு கொடுக்கப்படும் முன்னுரிமை, முதலீடுகளை ஈர்த்தல், பட்டியலின மற்றும் பெண் தொழில் முனைவோருக்கான சிறப்பு ஒதுக்கீடுகளையும்” மேற்கோள் காட்டுகிறார் அவர்.

 
தமிழ்நாட்டு வளர்ச்சி

பட மூலாதாரம்,D JAYAKUMAR / TWITTER

படக்குறிப்பு,

முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார்

இதேபோல் பல திட்டங்கள் அதிமுக ஆட்சி காலத்திலும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கூறுகிறார் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார்.

அதிமுக ஆட்சியில் தான் தொழில்துறை நிறுவனங்களின் அனுமதிக்கான ஒற்றை சாளர முறை கொண்டுவரப்பட்டதாக குறிப்பிடும் அவர், “நான் ஐடி அமைச்சராக இருந்தபோது பல நிறுவனங்களுக்கும் எளிய வழியில் அனுமதி வழங்கப்பட்டது. சிறுசேரியில் நிறுவனம் தொடங்க ஹெச்சிஎல் போன்ற பல முன்னணி நிறுவனங்களுக்கு அரசு விலையில் நிலம் வழங்கப்பட்டது” என்பதை சுட்டிக்காட்டுகிறார்.

மேலும் தொழில்துறை வளர்ச்சிக்காக ஐடி காரிடார் அமைப்பு, சரக்கு பெட்டகம் செல்வதற்கான எண்ணூர் எக்ஸ்பிரஸ் சாலை உள்ளிட்ட பல்வேறு அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தியுள்ளதாக தெரிவிக்கிறார் அவர்.

பெண்களுக்கான முன்னேற்றம்

ஒட்டுமொத்த இந்தியாவின் பெண் தொழிலாளர்களில் 40 சதவீதத்திற்கும் மேல் தமிழ்நாட்டில் தான் உள்ளனர். பெண்களின் கல்விக்கு இன்னும் தடை போடும் சமூக கட்டமைப்பில் இது எப்படி சாத்தியமாயிற்று என்பதை கேட்டபோது,

“பெண்களுக்கு சொத்துரிமை என்ற சட்டத்தை சமீபத்தில் தான் மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. ஆனால் 1960 களிலேயே தமிழக பெண்கள் அதற்காக போராடியுள்ளனர். பெண்களுக்கெதிரான பல அநீதிகளுக்கு எதிராக அன்று பெண்களே போராடினர். தமிழ்நாட்டில் தொடர்ந்து வந்த ஆட்சிகளின் கொள்கைகள் மற்றும் திட்டங்களும் பெண்கள் வளர முக்கிய காரணம். அதன் விளைவே இன்று பொதுத்துறை பணிகளில் 100க்கு 65 பெண்கள் இருக்கின்றனர்” என்கிறார் ஜோதி சிவஞானம்.

 
தமிழ்நாட்டு வளர்ச்சி

பட மூலாதாரம்,TWITTER

படக்குறிப்பு,

பொருளாதார அறிஞர் அமர்த்தியா சென்

அனைத்தையும் உள்ளடக்கிய வளர்ச்சி

தமிழ்நாட்டின் வளர்ச்சி குறித்து பொருளாதார அறிஞர் அமர்த்தியா சென் தன்னுடைய புத்தகமான Uncertain Glory-இல் கூறியுள்ள சில விஷயங்களை சுட்டிக்காட்டுகிறார் ஜோதி சிவஞானம்.

அந்த புத்தகத்தில் இந்தியாவின் செயல்பாடுகள் பின்தங்கியுள்ள போதிலும், தமிழ்நாடு எப்படி சிறப்பாக செயல்பட்டுள்ளது என்று எழுதியுள்ளார் அமர்த்தியா சென்.

அதில், "குஜராத் உற்பத்தி துறையில் முன்னணியில் இருக்கிறது. ஆனால் வளர்ச்சியை பகிர்தல் மற்றும் மனிதவள மேம்பாட்டில் பின்தங்கியுள்ளது. கேரளா மனிதவள மேம்பாட்டில் உச்சத்தில் உள்ளது. ஆனால் உயர்கல்வி, உற்பத்தி துறை, ஐடி துறையில் பின்தங்கியுள்ளது. ஆனால், இது இரண்டையும் ஒன்றாக இணைத்து வளர்ந்து வந்த ஒரே மாநிலம் தமிழ்நாடு. அதற்கு காரணம் தமிழ்நாட்டின் அரசியல் சித்தாந்தம்" என்று அவர் குறிப்பிட்டு தமிழக வளர்ச்சியை பாராட்டி எழுதியுள்ளதை குறிப்பிடுகிறார் ஜோதி சிவஞானம்.

 
குடியரசு தின வாகனம் தமிழ்நாடு

பட மூலாதாரம்,GETTY IMAGES

தமிழ்நாட்டுக்கு இந்த வளர்ச்சி போதுமா?

மற்ற மாநிலங்களோடு ஒப்பிடும் போது முதன்மையாக தெரிந்தாலும், தமிழ்நாட்டுக்கு இந்த வளர்ச்சி போதுமானதா? என்ற கேள்வியும் எழாமல் இல்லை.

இதுகுறித்து பொருளாதார அறிஞர் ஜோதி சிவஞானம் கூறுகையில், “நாம் இன்னமும் முன்னேற வேண்டும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் மற்ற மாநிலங்களோடு ஒப்பிடும்போது நாம் மிக மிக சிறப்பாக செயல்பட்டிருக்கிறோம். சமூக வளர்ச்சி, பொருளாதார வளர்ச்சி இது இரண்டுமே தேவை. இது இரண்டிலும் தமிழ்நாடு மட்டுமே சுட்டிக்காட்ட கூடிய ஒரே மாநிலம்” என்று அவர் குறிப்பிடுகிறார்.

https://www.bbc.com/tamil/articles/c4nk8wrq48ko

கதாநாயக நடிகர்கள்: ஆட்சி செய்ய ஆசை! அரசியல் பேச அச்சம்!

2 months 2 weeks ago
கதாநாயக நடிகர்கள்: ஆட்சி செய்ய ஆசை! அரசியல் பேச அச்சம்!
tCdfLC4U-Rajan.jpg

ராஜன் குறை 

Actors want to rule and are fear to talk about politics

மக்களாட்சியில் யார் வேண்டுமானால் கட்சி தொடங்கலாம்; தேர்தலில் போட்டியிடலாம். மக்கள் ஆதரவளித்தால் ஆட்சி அமைக்கலாம். இது சிறு குழந்தைக்கும் தெரியும். சினிமாவில் கதாநாயகர்களாக நடிப்பவர்களுக்கு மக்களிடையே நல்ல அறிமுகம் இருக்கும். அவர்களை திரையில் பார்த்து ரசிப்பவர்கள் இருப்பார்கள். அதனால் அவர்கள் மக்களிடையே சென்று பிரச்சாரம் செய்வது சுலபம். அதனால் அவர்கள் கட்சி தொடங்க விரும்பலாம். மக்களாட்சியில் யாரும் அரசியலில் ஈடுபடலாம் என்பதால் அனைவரும் அதனை பொதுமக்கள் மாண்பு கருதி வரவேற்கவே செய்வார்கள்.

அப்படி ஒரு நடிகர் ஏற்கனவே உள்ள அரசியல் கட்சியில் சேராமல் தன் தலைமையில் கட்சி தொடங்கும்போது ஒரு முக்கியமான கேள்வி எழுகிறது. எதனால் கட்சி தொடங்கும் கதாநாயக நடிகருக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என்ற கேள்விதான் அது. அவர் சினிமாவில் நன்றாக நடனம் ஆடினார், சண்டை போட்டார், சிரிப்பு வரும்படி நடித்தார், உணர்ச்சிகரமாக நடித்தார் அதனால் அவர் முதல்வராக ஆட்சி செய்ய வேண்டும் என்று யாரும் கூற மாட்டார்கள். அது அபத்தமாக இருக்கும் என்று குழந்தைகளுக்குக் கூட தெரியும்.

அதனால் அந்த நடிகர் பொதுவாக என்ன சொல்வாரென்றால் எல்லா அரசியல் கட்சிகளும் ஊழல் செய்கின்றன, மக்களுடைய பிரச்சினைகளைத் தீர்க்கவில்லை, ஜாதி, மத பிரிவினைகளைப் பார்க்கின்றன; நான் அனைத்து மக்களும் பொதுவானவன், ஊழலே செய்ய மாட்டேன், என் ரசிகர் மன்றத்து நிர்வாகிகளெல்லாம் மக்கள் பிரதிநிதிகளானால் சுயநலம் இல்லாமல் மக்களுக்காக உயிரைக் கொடுத்து உழைப்பார்கள் என்று கூறுகிறார்கள்.

அதை எப்படி நம்புவது என்று கேட்டால், ஏற்கனவே ரசிகர் மன்றங்கள் நற்பணி மன்றங்களாக செயல்படுகின்றன என்று கூறுவார்கள். ரத்த தான முகாம்கள் நடத்தினார்கள், இலவச கண் சிகிச்சை முகாம் நடத்தினார்கள், வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சேலை, வேட்டி கொடுத்தார்கள், பள்ளி மாணவர்களுக்கு பேனா, பென்சில், கால்குலேட்டர் எல்லாம் வாங்கிக் கொடுத்தார்கள் என்று பல நற்பணிகளைப் பட்டியில் இடுவார்கள்.

இவர்கள் ஆட்சிக்கு வந்தால் மொத்த அரசே ஒரு நற்பணி மன்றம் போல செயல்பட்டு மக்களுக்கு தேவையானதையெல்லாம் செய்து கொடுக்கும் என்று கூறுவதுபோல தோன்றும். அப்புறம் ஒட்டுமொத்தமாக சிஸ்டத்தை மாற்றி அமைப்போம், முழுப்புரட்சி செய்வோம், “போர்! போர்!” என்றெல்லாம்  வீரமாக பொத்தாம் பொதுவாக எதையாவது பேசுவார்கள்.

ஒட்டுமொத்தத்தில் நடிகர் மிகவும் பிரபலமானவர் என்பதால் மக்கள் அவர் கட்சிக்காரர்களுக்கு வாக்களித்தால் அவர் முதல்வராகிவிட்டால் “நான் ஆணையிட்டால், அது நடந்துவிட்டால் இங்கு ஏழைகள் வேதனைப்பட மாட்டார்” என்று முடித்துவிடுவார்கள்.

இவ்வாறு பேசுவது ஆட்சிக்கு வரும் விருப்பம்தானே தவிர, அரசியலுக்கு வரும் விருப்பமல்ல. அரசியல் என்பது எண்ணற்ற சமூக முரண்பாடுகளின் களம். கார்ல் ஷ்மிட் என்ற அறிஞர் கூறியதுபோல எதிரி x நண்பன் என்பதே அரசியல். எதிரி என்றால் தனிப்பட்ட எதிரி அல்ல; போட்டி நடிகர் அல்ல. அரசியல் எதிரி என்பது வேறு ரகம்.
grMtvP1Z-Rajan-2.jpgஅரசியல் என்றால் என்ன?

இன்றுள்ள மக்களாட்சி நடைமுறை உருவாகி இன்னம் 250 ஆண்டுகள் கூட நிறைவடையவில்லை எனலாம். அதாவது மன்னரல்லாத அரசியலமைப்பு சட்ட குடியரசு 1776-ம் ஆண்டு அமெரிக்காவில்தான் முதன்முதலில் உருவானது. மக்களே பிரதிநிதிகளை தேர்ந்தெடுத்து தங்களைத் தாங்களே ஆண்டுகொள்வதுதான் மக்களாட்சி. அதற்கு 13 ஆண்டுகள் கழித்து பிரெஞ்சுப் புரட்சி 1789-ம் ஆண்டு வெடித்தது. சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற முழக்கம் உலகளாவிய மக்களாட்சி லட்சியமாக முன்மொழியப்பட்டது.

அதற்கு முன்னால் மன்னராட்சியில் மன்னர்கள், நிலப்பிரபுக்கள், மதகுருமார்கள், சாதாரண மக்கள் என்ற கட்டமைப்புதான் பரவலாக இருந்தது. இதிலும் மத அமைப்பிலோ அல்லது வேறு விதமாகவோ பலவிதமான ஒழுக்க விதிகள், கட்டுப்பாடுகள் இருந்தாலும் அதனை நடைமுறைப்படுத்துவது அரசர்களின் எதேச்சதிகாரமாக இருந்தது. மக்களுக்கான உரிமைகள் என்பது உத்தரவாதமில்லாமல் இருந்தன.

இதில் முதலீட்டிய பொருளாதாரம் உருவான பிறகு வர்த்தகர்கள், தொழில்முனைவோர் ஆகிய புதிய அதிகார மையங்கள் உருவானபோது அவர்கள் புதியதொரு அரசமைப்பை உருவாக்க நினைத்தார்கள். அச்சு ஊடகத்தின் பரவல், அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி எல்லாம் சேர்ந்த புதிய மத்தியதர வர்க்கமும் இந்த மாற்றத்தை வலியுறுத்தியதால் மக்களாட்சி என்ற நடைமுறை உருவாகியது. அனைத்து மக்களும் சுதந்திரமானவர்கள், சமமானவர்கள் ஆகிய சிந்தனைகள் உருவாயின.  

ஆனால், ஏற்கனவே இருந்த பொருளாதார ஏற்றத்தாழ்வு, சமூகப் பிரிவினைகள் ஆகியவையும் இருந்தன. அதனால் மக்களில் பல்வேறு தொகுதியினருக்குள் இருந்த முரண்பாடுகள் பல்வேறு சமூக இயக்கங்களைத் தோற்றுவித்தன. குறிப்பாக தொழிலாளர்கள் ஒன்று திரண்டு அவர்கள் பிரச்சினைகளுக்காக போராடினார்கள். விவசாயிகளும் அவர்கள் கோரிக்கைகளுக்காக போராடினார்கள். அப்படியே சமூகத்தின் அனைத்து பிரிவினரும் தங்கள் உரிமைகள், கோரிக்கைகளுக்காக அமைப்பாக மாறுவதில்தான் மக்களாட்சி அரசியல் கால்கொண்டது.

அரசு அனைவருக்கும் பொதுவானதாக இருந்தாலும், வரி விதிப்பில் எத்தகைய கொள்கைகளை பின்பற்றுவது, முதலாளிகளுக்கும், செல்வந்தர்களுக்கும் வரி விதித்து, பிற சாமானிய மக்களுக்கான வசதிகளை செய்துகொடுப்பது என்ற மக்கள்நல அரசு மாதிரிகள் தோன்றின.

முதலாளிகளுக்கும், கார்ப்பரேட்களுக்கும் வரியைக் குறைத்து பொருளாதாரத்தை வளர்ப்பது, சந்தையைக் கட்டுப்படுத்தாமல் இருப்பது, தனிச்சொத்தைப் பெருக்குவது என்பவை வலதுசாரி முதலீட்டியக் கொள்கைகள். செல்வக் குவிப்புகளுக்கு அதிக வரி விதித்து, சந்தை நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தி, சமூக முழுமைக்கும் வாழ்வாதாரத்தை உத்தரவாதம் செய்வது இடதுசாரி சோஷலிச சிந்தனை.

சமூகத்தின் அனைத்து வளங்களும் பொது உடமையாக இருக்க வேண்டும், எல்லா பொருளாதார நடவடிக்கைகளும் அரசு கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்ற கம்யூனிச சித்தாந்தமும் தோன்றியது.

இந்தியாவிலோ கூடுதலாக ஜாதீயம் ஏற்படுத்திய கடுமையான சமத்துவமின்மையை என்ன செய்வது என்பது பெரும் கேள்வியாக இருந்தது. பல காலமாக கல்வி மறுக்கப்பட்டு, கிட்டத்தட்ட அடிமைகள் போல வைக்கப்பட்டிருந்த சூத்திரர், அவர்ணர் என்று கூறப்பட்ட மக்களை எப்படி சம வாய்ப்புகளை பயன்படுத்தக் கூடியவர்களாக மாற்றுவது என்பது பெரும் சவாலாக இருந்தது. அதனால் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கும், தாழ்த்தப்பட்டவர்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்க வழி வகுக்கப்பட்டது.

ஆனாலும் இன்னமும் சமூகத்தில் முன்னேறிய வகுப்பினருக்கும், பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கும் உள்ள இடைவெளி குறையவில்லை. செல்வாக்கான பதவிகளில், தொழில்களில் அவர்கள் மிகவும் குறைவான எண்ணிக்கையிலேயே காணப்படுகிறார்கள். அவர்களுக்கான அதிகாரத்தைப் பெற மக்களாட்சி அரசியலே ஒரே களமாக உள்ளது.

அதனால்தான் சமூகத்தின் பல்வேறு பிரிவினரின் நலன்களை பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிகளிடையேயான கடுமையான மோதல் களமாக மக்களாட்சி அரசியல் உள்ளது. அரசியலில் ஈடுபடுவோர் தாங்கள் ஏழைகள் பக்கமா, பணக்காரர்கள் பக்கமா, வரி விதிப்பு பொருளாதாரக் கொள்கைகள் என்ன என்பதைக் கூற வேண்டும். இட ஒதுக்கீட்டில் தங்கள் நிலைப்பாடு என்ன, தலித்துகளுக்கு எதிராக இழைக்கப்படும் வன்கொடுமைகளுக்கு எதிராக எப்படி போராடப் போகிறோம் என்றெல்லாம் அரசியலில் ஈடுபடுபவர்கள் பேச வேண்டும்.

இந்தியாவின் மற்றொரு முக்கியமான அரசியல் பிரச்சினை என்பது அதன் கூட்டாட்சி வடிவமாகும். மாநிலங்களில்தான் அரசுகள் உள்ளன. அனைத்தையும் இணைக்கும் ஒன்றிய அரசாங்கம்தான் தேசிய அளவில் உள்ளது. ஒன்றியத்திற்கும், மாநிலத்திற்குமான அதிகாரப் பகிர்வு சரிவர வகுக்கப்படவில்லை. ஒன்றியத்தில் அதிகாரம் குவிந்திருப்பது பல்வேறு மாநில அரசுகளாலும் கண்டிக்கப்படுகிறது. நாள்தோறும் பிரச்சினைகள் பெருகுகின்றன. ஒரு மாநிலக் கட்சி இந்த முக்கியமான பிரச்சினைக்கு முகம் கொடுக்க வேண்டும்.

அரசின் ஒவ்வொரு கொள்கை முடிவும், வரி விதிப்பும் சமூகத்தில் பல்வேறு மக்கள் பிரிவினரிடையே தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியது என்பதால் அரசு என்பது வெறும் நற்பணி மன்றமல்ல. ஓர் அரசியல் கட்சி எந்த வகையில் சமூக இடைவெளிகளைக் குறைப்பது என்பதைக் குறித்த ஆழ்ந்த புரிதலுடன் செயல்பட வேண்டும். அதைத்தான் நாம் கொள்கை என்று அழைக்கிறோம். முரண்பாடுகளை சமன் செய்வதே அரசியல் என்னும் கலை என்றார் சமூகநீதிக் காவலர் வி.பி.சிங்.
M26YAdjF-Rajan-3.jpgபெரும்பாலான அரசியல் கட்சிகள் எப்படி உருவாயின?

திராவிட முன்னேற்றக் கழகம் ஜாதீய ஏற்றத்தாழ்வை களையும் சமூகநீதியை முன்வைத்தும், மாநில சுயாட்சி, மாநில உரிமைகளை முன்னிலைப்படுத்தியும், இந்தி திணிப்பை எதிர்த்தும் பிறந்தது. அது முதலில் தென்னிந்திய மாநிலங்களை தனி கூட்டாட்சி குடியரசாக, திராவிட நாடாக உருவாக்கும் லட்சியத்தைக் கொண்டிருந்தது. பின்னர் இந்திய கூட்டாட்சியிலேயே மாநில சுயாட்சி கோரிக்கையாக மாற்றிக்கொண்டது. சோஷலிச பார்வை கொண்டது.

எம்.ஜி.ஆர் தி.மு.க-விலிருந்து பிரிந்தாலும் அண்ணாவின் கொள்கைகள்தான், அண்ணாயிசம்தான் தன் கட்சியின் கொள்கை என்று கூறினார். அண்ணா பெயரில்தான் கட்சியே தொடங்கினார். அதனால் அவர் தி.மு.க-வின் நகல் என்றுதான் கூற வேண்டும். நாளடைவில் தி.மு.க-விலிருந்து சில பல அம்சங்களில் வேறுபாடுகளை உருவாக்கினார். ஆனாலும் மாநில உரிமை, சமூகநீதி அரசியல் தடத்திலிருந்து முற்றாக விலகவில்லை. அ.இ.அ.தி.மு.க என்பது தி.மு.க-விற்கு ஒரு மாற்று என்பதே அதன் வரலாற்று விளக்கம்.

முத்துராமலிங்க தேவரின் ஃபார்வார்டு பிளாக் முக்குலத்தோரின் நலன்களை பிரதிநிதித்துவம் செய்யும் கட்சியாக உருவானது. பாட்டாளி மக்கள் கட்சி வன்னியர் சங்கத்திலிருந்து உருமாறி வன்னியர் நலனுக்கான கட்சியாக நிறுவிக்கொண்டது. கம்யூனிஸ்டு கட்சிகள் தொழிலாளர்கள், விவசாயிகள் ஆகியோரின் வர்க்க நலன்களை முன்னெடுக்கும் கட்சிகளாக தங்களை நிலைநிறுத்திக் கொண்டன. விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலித் மக்களின், குறிப்பாக ஆதி திராவிட மக்களின் நலன்களை முன்னிலைப்படுத்தும் முற்போக்குக் கட்சியாக உருவாகியுள்ளது.

மக்களாட்சியில் எல்லா கட்சிகளுமே பொதுவான சமூக நலனுக்கு இயங்கினாலும் அவர்கள் முன்னிலைப்படுத்தும், பிரதிநிதித்துவப்படுத்தும் சமூகப் பிரிவுகள் என்ன, அவர்கள் கொள்கைகள் எந்த லட்சியங்களைக் கொண்டுள்ளன என்பது தெளிவாக இருப்பதுதான் அரசியல்.

நடிகர்களின் கட்சிகள் எப்படி உருவாகின்றன?
 
கதாநாயக நடிகர்கள் தங்கள் திரைப்படங்களை எல்லோருமே பார்த்து ரசிப்பதால் எல்லா மக்களுக்குமான கட்சியையே தொடங்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். அப்போது சமூகத்திலுள்ள முரண்களை எப்படி எதிர்கொள்வார்கள் என்று கேட்டால் ஏதாவது பொத்தாம்பொதுவாக மனிதநேய சிந்தனைகளைக் கூறுகிறார்கள். எந்த அரசியல் பிரச்சினையையும் எதிர்கொள்ள அஞ்சுகிறார்கள். எல்லோருக்கும் நல்லவராக இருப்பதாக காட்டிக்கொள்ள நினைக்கிறார்கள். ஆட்சிக்கு வர ஆசைப்படுகிறார்கள். அரசியல் பேச அஞ்சுகிறார்கள்.

pkDeQooa-Rajan-4.jpg
விஜய்காந்த்:

விஜய்காந்த் என்ற கதாநாயக நடிகர் அப்படித்தான் தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் என்று கலவையான பெயரில் கட்சி தொடங்கினார். தான் தி.மு.க, அ.இ.அ.தி.மு.க ஆகிய இரண்டு கட்சிக்கும் மாற்று என்றார். ஒன்பது சதவிகித வாக்குகளை இந்த “மாற்று” என்ற பெயரில் பெற முடிந்தது.

ஆனால், அதற்குமேல் அவரால் அரசியல் பேச முடியவில்லை. எந்த பிரச்சினைக்காகவும் எந்த மக்கள் தொகுதியையும் அணி திரட்ட முடியவில்லை. இறுதியில் ஜெயலலிதாவுடன் கூட்டணி வைத்தார். அதன் பிறகு “மாற்று” என்ற லட்சியம் காணாமல் போனதில் அவர் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களே கட்சி மாறிவிட்டார்கள். இறுதியில் அவர் கட்சி எந்த முக்கியத்துவமும் இல்லாத கட்சியாக மாறிவிட்டது.
7jbbV2xE-Rajan-5.jpgரஜினிகாந்த்:

ரஜினிகாந்த் 1996-ம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சி ஏற்படுத்திய அதிருப்தி அலையில் அவர் ஆட்சியை அகற்ற வேண்டும் என்று குரல் கொடுத்தார். அந்த தேர்தலில் ஜெயலலிதா படுதோல்வி அடைந்ததில் அவருக்கு பங்கிருப்பதாக ஒரு பிம்பம் உருவானது. ஆனால், எந்த அரசியல் கட்சியிலும் சேர மறுத்தார். அவரை எப்படியாவது அரசியலுக்குக் கொண்டு வர சோ ராமசாமி உள்ளிட்ட பாஜக-வினர் கடுமையாக முயன்றார்கள்.

அவருக்கு தனிப்பட்ட முறையில் பாஜக அரசியல் பிடித்திருந்தாலும், தமிழ்நாட்டில் அந்த அரசியல் பேசினால் சிக்கல் என்பதை பாபா படம் அடைந்த தோல்வியிலிருந்து புரிந்துகொண்டார். அதனால் அவரால் கட்சி தொடங்குவதைப் பற்றி எந்த நிலைப்பாடும் எடுக்க முடியவில்லை. கலைஞரையும், ஜெயலலிதாவையும் மாறி, மாறி புகழ்ந்தார்.

கலைஞரும், ஜெயலலிதாவும் மறைந்த பிறகு அரசியலுக்கு வர முற்பட்டார். அப்போதும் தான் யாரையும் எதிர்த்து அரசியல் செய்யவில்லை என்றார். ஒட்டுமொத்த சிஸ்டத்தையும் மாற்றப் போகிறேன் என்றார். கொள்கை என்னவென்று கேட்டால் தலை சுத்துகிறது என்றார்.

எல்லோரும் மக்களை அணி திரட்டுங்கள் – நான் பிறகு வந்து தலைமையேற்கிறேன் என்று கூறி திடுக்கிட வைத்தார். நான் முதலமைச்சராகப் பதவியேற்று எல்லோர் கேள்விக்கும் பதில் சொல்லிக்கொண்டிருக்க மாட்டேன் என்றார். இவர் கட்சியை கட்டமைத்துக் கொடுக்க பாஜக-விலிருந்து ஒருவரை இரவலாகப் பெற்றார். இறுதியில் நல்லவேளையாக உடல்நிலை சரியில்லை, அரசியலுக்கு வரவில்லை என்று முற்றுப்புள்ளி வைத்தார்.
Actors want to rule and are fear to talk about politics by Rajan Kuraiகமல்ஹாசன்:
 
மக்கள் நீதி மய்யம் என்று கட்சிக்கு பெயர் வைத்தார். வலதுசாரியும் இல்லாத, இடதுசாரியும் இல்லாத நடுப்பாதை, செண்டிரிஸ்ட் (Centrist) கட்சி என்றார். ஆனால் தெளிவாக நான் பாஜக-வை எதிர்க்கிறேன். அ.இ.அ.தி.மு.க-வை எதிர்க்கிறேன். தி.மு.க-வை எதிர்க்கிறேன் என்றெல்லாம் பேச மாட்டார். பள்ளப்பட்டியில் போய் இந்த நாட்டின் முதல் தீவிரவாதி இந்து தான் என்பார். மற்ற இடங்களில் தெளிவாக ஆர்.எஸ்.எஸ் நாட்டை பிளவுபடுத்தும் இயக்கம் என்று சொல்ல மாட்டார்.

திரைப்படங்களில் போட்டி நடிகர்களை இவர்கள் குறை சொல்ல முடியாது. விஜய்காந்துக்கு நடிக்கத் தெரியாது என்று பொதுவெளியில் கமல்ஹாசன் சொல்ல முடியாது. அது தொழிலுக்கு நல்லதல்ல. ஒருவர் படத்தை மற்றவர் விமர்சித்தால் பொதுவாக தொழிலும், வர்த்தகமும் பாதிக்கப்படும் என்பதால் அது விரும்பத்தக்கதல்ல.

அரசியல் அப்படி இல்லை. எடப்பாடிக்கு ஆட்சி செய்யத் தெரியவில்லை; அவர் ஊழல் செய்கிறார் என்று ஸ்டாலின் சொல்லத்தான் வேண்டும். ஸ்டாலின் ஆட்சி சரியில்லை என்று எடப்பாடி கூறத்தான் வேண்டும். “செளகிதார் சோர் ஹை” என்று மோடியை திருடன் என்று ராகுல் காந்தி குற்றம் சாட்ட வேண்டும். ஏனெனில் அரசியலில் முரண்களும், எதிர்ப்பும் அவசியம். வன்முறை கூடாதே தவிர, கருத்தியல் எதிர்ப்பு, கண்டனம் என்பது இன்றியமையாதது.

ஆனால், நடிகர்களாகவே வாழ்ந்து பழகியதால் இவர்களால் பகிரங்கமாக அரசியலில் யாரையும் விமர்சித்து பேச முடிவதில்லை. கமல்ஹாசனால் இட ஒதுக்கீடு பற்றிய கேள்விக்குக் கூட தெளிவாகப் பதில் கூற முடியவில்லை. அருகிலிருந்தவரைக் காட்டி அவர்தான் கொள்கைகளை வகுத்துக் கொண்டுள்ளார் என்று கூறிவிட்டார்.  
Actors want to rule and are fear to talk about politics by Rajan Kuraiவிஜய்:

இந்தப் பட்டியலில்தான் மற்றொரு கதாநாயக நடிகர் விஜய் இப்போது சேர்ந்துள்ளார். “தமிழக வெற்றி கழகம்” என்று ஒற்றுப்பிழையுடன் பெயர் வைத்துவிட்டார். ஆனால், நாடாளுமன்றத் தேர்தலில் அவருக்கு எந்த நிலைப்பாடும் கிடையாதாம்.

நீட் தேர்வில் வெற்றிபெற முடியாமல் அனிதா தற்கொலை செய்துகொண்டபோது நாடே கொந்தளித்ததே, அப்போது விஜய் எங்கே போயிருந்தார்? அவருக்கு நீட் தேர்வு எத்தகைய பிரச்சினை என்றே தெரியாதா? நடிகர் சூர்யா கூட குரல் கொடுத்தாரே?

அவரையே ஜோசப் விஜய் என்று மதச்சாயம் பூசி பாஜக விமர்சித்ததே? அது மத அடையாளம் பேசி நாட்டைப் பிளவுபடுத்துகிறது என்று தெரியாதா? தமிழ்நாட்டு நலன்கள் ஒன்றிய அரசால் புறக்கணிக்கப்படுகிறதென்று ஊடகங்களில் பல்வேறு தரப்பினரும் ஓயாமல் குரல் கொடுக்கிறார்களே? அதெல்லாம் அவர் காதிலேயே விழவில்லையா?

குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஒரு வாரத்தில் அமலாக்கிவிடுவோம் என பாஜக அமைச்சர் ஒருவர் பேசுகிறாரே? முதல்வர் ஸ்டாலின் கண்டித்து அறிக்கை விடுகிறாரே? அதையெல்லாம் படிக்க மாட்டாரா இந்த எதிர்கால அரசியல்வாதி?

நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக ஆட்சிக்கு வர வேண்டுமா? வேண்டாமா? என்ற ஒரு நிலைப்பாடே இல்லாமல் எதற்காக தேர்தல் நெருங்கும்போது கட்சி தொடங்குகிறார்? இது யார் கொடுத்த அசைன்மைண்ட் என்று மக்கள் கேட்கிறார்களே? அவருக்குப் புரியாதா?

பிரகாஷ் ராஜ் என்ற அரசியல்வாதி

பிரகாஷ் ராஜ் விஜய்யின் பல படங்களில் வில்லனாக நடித்தவர். பல படங்களில் குணசித்திர வேடங்களிலும் நடித்தவர். அவர் வளர்ந்த ஊரான பெங்களூருவில் கெளரி லங்கேஷ் என்ற சிந்தனையாளர் கொலை செய்யப்பட்டபோது அவர் வலதுசாரி அரசியலுக்கு எதிராக பொங்கி எழுந்தார். மதவாத சக்திகளை பகிரங்கமாக விமர்சித்தார். பாஜக, ஆர்.எஸ்.எஸ் என பெயர் சொல்லி கண்டித்தார். தன் கண்டனத்தைத் தெரிவிக்க சுயேச்சையாக தேர்தலில் கூட நின்றார்.

பிரகாஷ் ராஜ் ஆட்சிக்கு வர நினைக்கவில்லை. அவரும் எந்தக் கட்சியிலும் சேரவில்லை. கட்சியும் தொடங்கவில்லை. ஆனால் மத அடையாளவாத வன்முறை நாட்டை பாழ்படுத்தி விடும் என்று துணிந்து குரல் கொடுக்கிறார்.

எந்த ஒரு நடிகராவது அரசியலுக்கு வந்தாரென்றால் பிரகாஷ் ராஜைத்தான் கூற முடியும். உதயநிதி அரசியல் குடும்பத்திலிருந்து நடிக்கச் சென்றவர் என்பதால் அவரை கணக்கில் கொள்ளவில்லை. மற்றவர்களெல்லாம் ஆட்சிக்கு வரத்தான் நினைக்கிறார்களே தவிர, அரசியலுக்கு வர நினைப்பதில்லை. அரசியல் பேசவே அஞ்சுகிறார்கள். நேராக தேர்தல்; முதல்வர் பதவி. அவ்வளவுதான் அவர்கள் ஆசை. சின்னச்சின்ன ஆசை. பாவம்.
 

 

https://minnambalam.com/political-news/actors-want-to-rule-and-are-fear-to-talk-about-politics-by-rajan-kurai/

நீயா நானா: 17 ஆண்டுகளாக ஒளிபரப்பாகும் டாக் ஷோ அடிக்கடி பேசுபொருளாவதன் பின்னணி

2 months 2 weeks ago
நீயா நானா: 17 ஆண்டு காலம் ஒளிப்பரப்பாகும் ‘டிவி ஷோ’ அடிக்கடி பேசுபொருளாவது ஏன்?

பட மூலாதாரம்,VIJAY TELEVISION/YOUTUBE

கட்டுரை தகவல்
  • எழுதியவர், அஷ்ஃபாக்
  • பதவி, பிபிசி தமிழ்
  • 4 பிப்ரவரி 2024

“அப்பா டீக்கடைல வேலை பாக்குறாங்க... அம்மா பீடி சுத்துவாங்க. எனக்கு பீடி சுத்த அந்தளவுக்கு தெரியாது. டாக்டர் ஆகணும்னு ஆசை. கட் ஆஃப் 196.25 இருக்கு. இப்போ 198 கிட்ட கேக்குறாங்க.”

கடந்த 2016ஆம் ஆண்டு நீயா நானா நிகழ்ச்சியில் சங்கவி இதைச் சொல்லி முடிப்பதற்குள்ளேயே அவரது கண்கள் குளமாகிவிடும். சங்கவியை 2022இல் மீண்டும் நிகழ்ச்சிக்கு அழைத்திருந்தது நீயா நானா குழு. அப்போது அவர் பயிற்சி மருத்துவர்.

“இவ்வளவு சிரமத்திலும் ஏன் கட்டாயம் படிச்சிடணும்னு நினைச்சீங்க?” என வினவினார் நெறியாளர் கோபிநாத்.

“படிப்பு ஒன்னுதான் சார் எல்லாருக்கும் கிடைக்குது... ஏழையா இருந்தாலும் பணக்காரரா இருந்தாலும் கல்வி கிடைக்கும். படிச்சா மட்டும்தான் குடும்பம் நல்ல நிலைமைக்கு வரும். நான் படிச்சதால மட்டும்தான் இப்போ என் குடும்பமே நல்லா இருக்கு,” என யோசிக்காமல் பதிலளித்து முடித்தார் மருத்துவர் சங்கவி.

நீயா நானா கடந்த 17 ஆண்டுகளாக தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் டாக் ஷோ. பல முகங்களை இந்த நிகழ்ச்சி வெளிக்கொணர்ந்துள்ளது. சமூக ரீதியான பிரச்னைகளைப் பேசியிருக்கிறது. மிக நுணுக்கமான கருத்துகளும் சிந்தனைகளும் உணர்வுப்பூர்வமான கலந்துரையாடல்களும் பல நேரம் அதிர்வுகளைக் கிளப்பியுள்ளன. அதேநேரம், நீயா நானாவுக்கு எதிர்ப்புக் குரலும் எழாமல் இல்லை.

நீயா நானா இத்தனை ஆண்டுகள் தொடர்ச்சியாக இயங்குவது எப்படி? இந்த நிகழ்ச்சி எப்போதும் பேசு பொருளாவதன் பின்னணி என்ன? விரிவாக அலசுகிறது இந்தக் கட்டுரை.

 
நீயா நானா உருவான கதை
நீயா நானா: 17 ஆண்டு காலம் ஒளிப்பரப்பாகும் ‘டிவி ஷோ’ அடிக்கடி பேசுபொருளாவது ஏன்?

பட மூலாதாரம்,VIJAY TELEVISION/TWITTER

கவனிக்க வைக்கும் இசையுடன் ஒரு ஓபனிங். இன்று எதைப் பற்றி நிகழ்ச்சி விவாதிக்கப் போகிறது என்பதை நறுக்கென எடுத்துச் சொல்லும் நெறியாளர். அதன் பிறகு சூடுபிடிக்கும் விவாதம். இதுதான் நீயா நானா.

நீயா நானா என்கிற நிகழ்ச்சியை உருவாக்கியவரும், இன்று வரை அதைத் தயாரித்து வரும் மெர்குரி ப்ரொடக்சன்ஸ் நிறுவனத்தின் நிறுவனருமான ஆண்டனியிடம் பிபிசி தமிழ் பேசியது.

“தமிழ் தொலைக்காட்சி வரலாற்றில் நீயா நானா போன்றதொரு நிகழ்ச்சி அப்போது இல்லை. டாக் ஷோ என்பது வெறும் அரட்டை எனச் சொல்வதே எனக்கு அசிங்கமாக இருந்தது. தமிழ் மக்கள் அறிவுக்கூர்மை உடையவர்கள். நீண்ட திட்டமிடலுக்குப் பிறகு ஒரு டாக் ஷோவை அறிமுகப்படுத்த நினைத்தோம். 2006 மே மாதம் நீயா நானா தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. இந்த நிகழ்ச்சி இத்தனை ஆண்டுகள் கடந்தும் தொடர்ந்து பேசப்படுவதற்குக் காரணம் இங்குள்ள மக்கள்தான்.

மிகச் சிறந்த கருத்துகளை, நுட்பமான சிந்தனைகளை தமிழர்களால் எளிதாகச் சொல்லிவிட முடியும். ஆங்கிலத்தில் வரும் டாக் ஷோவில் பங்கேற்பவர்கள் சாமானியர்கள் அல்ல. மொழிப்புலமை, குறிப்பிட்ட துறையில் நிபுணத்துவம் பெற்றவர்களாக இருப்பார்கள்.

ஆனால் தமிழகத்தில் அறிவார்ந்த கூட்டம் நிரம்பியுள்ளது. சாமானிய மக்களிடமும் கூர்மையான பார்வை உள்ளது. அதனால்தான் எங்கோ ஒரு கிராமத்தில் இருந்து வந்தவரால்கூட நீயா நானாவில் கருத்துகளை எடுத்து வைக்க முடிகிறது,” என்றார் ஆண்டனி.

மேலும், சமூகத்தைத் தொடர்ந்து கவனிப்பதாகவும் அதைப் பேசவேண்டும், கேள்வி கேட்க வேண்டும் என நினைப்பதாகவும் கூறும் ஆண்டனி, "உதாரணமாக, இங்கு நவீன ஏழைகள் அதிகமாகிவிட்டனர். இங்கு பல இளைஞர்களின் வருமானம் 15,000 ரூபாயைத் தாண்டுவதாக இல்லை.

அவன் பிரச்னைகளைக் கவனிக்கிறோம். அது பேசப்பட வேண்டும் என நினைக்கிறோம். அதுதான் நீயா நானா நிகழ்ச்சியாக மாறுகிறது. சமநிலையுடன் பேசுகிறது,” எனக் குறிப்பிட்டார்.

 
பிற மொழிகளில் நீயா நானா?
நீயா நானா: 17 ஆண்டு காலம் ஒளிப்பரப்பாகும் ‘டிவி ஷோ’ அடிக்கடி பேசுபொருளாவது ஏன்?

பட மூலாதாரம்,VIJAY TELEVISION/TWITTER

“நீயா நானா நிகழ்ச்சியை வெளி மாநிலங்களுக்குக் கொண்டு சென்று, இதர மொழிகளில் ஒளிபரப்ப திட்டமிட்டு அது தோல்வியில் முடிந்தது. அதற்குக் காரணம் அங்குள்ள சாமானிய மக்களால் பெரியளவில் தங்கள் கருத்துகளை, சிந்தனைகளை வெளிக்கொணர முடியவில்லை. அப்படி இருந்தால் ஷோவை நகர்த்த முடியாது,” என ஆண்டனி கூறுகிறார்.

இதேபோல நீயா நானாவை ‘காப்பி கேட்’ செய்ய முடியாது எனவும் நம்புகிறார் ஆண்டனி.

“ஒரு நிகழ்ச்சியை ‘காப்பி கேட்’ செய்பவர்களால் ஜெயிக்க முடியாது. இதற்குப் பின்னால் பலரது உழைப்பும், அறிவுப்பூர்வமான தேடலும் அடங்கியிருக்கிறது. உதாரணமாக, எங்கள் நிகழ்ச்சி அரங்கைக் குறிப்பிடலாம். நீயா நானா தொடங்கிய காலத்திலேயே அது தனித்துவமாக வடிவமைக்கப்பட்டது. சாதாரண பட்டிமன்ற, விவாத நிகழ்ச்சிகளைப் போல மண்டபத்தை தேர்வு செய்யாமல், மக்களுக்காகவே பிரத்யேகமான அரங்கை அமைத்தோம். இந்த யோசனையை தலைமை தயாரிப்பாளர் பிரதீப் முன்வைத்தார்.

மக்களுக்கான நிகழ்ச்சியைத் தொடங்க வேண்டும் என்ற சிந்தனையில் இருந்தபோதுதான் கோபியும் கிடைத்தார். அவரும் நாம் எதை யோசிக்கிறோம், என்ன செய்ய நினைக்கிறோம் என்பதை விரைவாகவே புரிந்துகொண்டார். ஒரே நேர்கோட்டில் நீயா நானா குழு பயணிக்கத் தொடங்கியது,” என்றார் ஆண்டனி.

ஆண்டனி
படக்குறிப்பு,

ஆண்டனி

'இது மக்களுக்கான மேடை'

கடந்த 2006ஆம் ஆண்டு மே மாதம் தொடங்கப்பட்ட நிகழ்ச்சியை 17 ஆண்டுகளாக நெறியாள்கை செய்து வருகிறார் கோபிநாத். முன்பு பத்திரிகையாளராகப் பணியாற்றிய கோபிநாத், இன்று வரை நீயா நானாவுடன் பயணித்து வருவதோடு பிரபல தொகுப்பாளராகவும் அறியப்படுகிறார்.

 
நீயா நானா: 17 ஆண்டு காலம் ஒளிப்பரப்பாகும் ‘டிவி ஷோ’ அடிக்கடி பேசுபொருளாவது ஏன்?

பட மூலாதாரம்,GOBINATH CHANDRAN/FB

படக்குறிப்பு,

கோபிநாத்

"அடிப்படையில் தொலைக்காட்சி நிகழ்ச்சி என்பதையும் கடந்து நீயா நானா பார்க்கப்படுகிறது. இது வெறும் டாக் ஷோ என்பதையும் தாண்டி மக்கள் வாழ்வின் ஓர் அங்கமாக மாறிவிட்டது" என்கிறார் இந்த நிகழ்ச்சியின் முகமாகத் திகழும் கோபிநாத்.

“நீயா நானா பார்க்கவில்லை எனில் அந்த நாளே முழுமையடையாது என்ற அளவுக்கெல்லாம் சிலர் என்னிடம் சொல்வதுண்டு. இதைத் தங்கள் வாழ்வியலோடு மக்கள் ஒப்பிடுகின்றனர். பெரிய நிபுணர்கள் யாரும் வந்து தங்களுக்குள் பேசி கலைந்து செல்லும் நிகழ்ச்சி அல்ல இது. முழுக்க முழுக்க இது சாமானியர்களுக்கான நிகழ்ச்சி என்பதால் எப்போதும் பேசப்படுகிறது,” என்கிறார் கோபிநாத்.

சமூக ஊடகங்களில் இந்த நிகழ்ச்சி குறித்த காணொளிகள் அதிகம் பகிரப்படுவதுண்டு. சில நேரம், இந்த வைரல் காணொளிகள் அதிகார மட்டத்திலும் எதிரொலித்திருக்கிறது.

வடமாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் 2023ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் கிடைத்த மருத்துவ சேவை குறித்து இந்த நிகழ்ச்சியில் பேசியிருந்தார். அதே ஆண்டு மார்ச் மாதம் வடமாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவதாக வதந்தி பரவியபோது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் இந்த நிகழ்ச்சியையும் வடமாநில பெண் பேசியதையும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

“எதையும் நாங்கள் வைரலாக்குவதில்லை. சமூக ஊடகங்களில் ஒரு சிலர் தாமாக முன்வந்து நிகழ்ச்சியின் ஒரு சிறிய பகுதி குறித்துப் பேசுகின்றனர், காணொளிகளைப் பரப்புகின்றனர். அப்படியெனில், அவர்கள் இந்த நிகழ்ச்சியை விரும்பிப் பார்க்கிறார்கள் என்றுதானே அர்த்தம்,” என்கிறார் கோபிநாத்.

 
நீயா நானா எப்படி தயாராகிறது?
திலீபன்
படக்குறிப்பு,

திலீபன்

"இதர நிகழ்ச்சிகளைக் காட்டிலும் நீயா நானா தனித்து தெரிவதற்கு, நாங்கள் எப்போதும் முன்னோக்கியே யோசிப்பதும் ஒரு காரணம்" என்கிறார் இணை இயக்குநர் முத்து.

“நீயா நானா இல்லத்தரசிகளுக்கு ஊதியம் வழங்க வேண்டும் என்கிற விவாதத்தை உருவாக்கியது. திருநங்கைகளுக்கான உரிமைகள் குறித்துப் பேசியது. இப்படி யாரும் பேசாத, பேச முன்வராத விஷயங்களை விவாதிப்போம்,” என முத்து கூறினார்.

நிகழ்ச்சியின் தயாரிப்புப் பணிகள் குறித்து தற்போதைய இயக்குநர் திலீபனிடம் பேசினோம். நீயா நானாவுடனான திலீபனின் பயணம் மிக நீண்டது. 2006இல் உதவி இயக்குநராகப் பணியாற்றத் துவங்கிய அவர், 2 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு தற்போது வரை நீயா நானா நிகழ்ச்சிக்காகப் பணியாற்றி வருகிறார். 2017 முதல் நீயா நானாவின் இயக்குநராகச் செயல்படுகிறார்.

"ஒரு மாதத்திற்கு முன்பே தலைப்பை முடிவு செய்துவிடுவோம். தலைப்பையொட்டி ஆய்வுகளை மேற்கொள்வோம். அதற்கேற்ப பேசுவோரை அழைக்கிறோம். பெரும்பாலும் நிகழ்ச்சியில் பேச ஆர்வம் உள்ளவர்கள் எங்களைத் தொடர்பு கொள்வார்கள். சில நேரங்களில் எங்கள் செய்தியாளர் குழு பொருத்தமானவர்களை நிகழ்ச்சிக்கு அழைத்து வருவார்கள்.

ஒரேநாளில் 2 எபிசோட்கள் வீதம் வாரத்தில் 6 எபிசோட்களை ஷூட் செய்துவிடுவோம். நிகழ்ச்சி 3 முதல் 4 மணிநேரம் வரை செல்லும். படத் தொகுப்பில் ஒரு மணிநேரமாக சுருக்கிக்கொள்வோம்," என திலீபன் கூறினார்.

 
நீயா நானாவும் சர்ச்சைகளும்...
நீயா நானா: 17 ஆண்டு காலம் ஒளிப்பரப்பாகும் ‘டிவி ஷோ’ அடிக்கடி பேசுபொருளாவது ஏன்?

பட மூலாதாரம்,VIJAY TELEVISION/TWITTER

ஜூலை 2022இல் சமூக ஊடகங்களில் பிரபலமாக விரும்புவோருக்கும் பொதுமக்களுக்கும் இடையே விவாதம் நடந்தது. இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பானதைத் தொடர்ந்து சமூக ஊடகங்களில் சில விமர்சனங்களும் எழுந்தன.

நீயா நானா நிகழ்ச்சி நடந்த விதம் குறித்து அதிருப்தி தெரிவித்து யூடியூபர்கள் சிலர் காணொளிகளை வெளியிட்டனர்.

"தலைப்பைக் குறிப்பிடாமலேயே நிகழ்ச்சியில் பேச அழைத்தனர். நிகழ்ச்சி தாமதமாகத் தொடங்கியது. நாங்கள் பேசியது நிகழ்ச்சியில் ஒளிபரப்பாகவில்லை," என்பது அவர்களின் குற்றச்சாட்டாக இருந்தது.

நிகழ்ச்சிக்கு எதிராகப் பேசியவர்களைத் தற்போது தொடர்பு கொண்டோம். ஆனால் பதிலளிக்கவில்லை.

Twitter பதிவை கடந்து செல்ல
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு

"யாருக்கும் நாம் சார்புடையவர்கள் அல்ல. இது மக்களுக்கான மேடை என்பதால் எதிரெதிர் திசையில் இருப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களின் கருத்துகளைப் பறிமாறிக்கொள்ள வாய்ப்பளிக்கிறோம்.

தலைப்புக்கு ஏற்றவாறும் நெறியாளரின் கேள்விக்குத் தகுந்த பதிலை அளிப்பவர்களுக்கும் முன்னுரிமை வழங்குகிறோம். சிலர் சம்பந்தம் இல்லாமல் பேசிக்கொண்டே செல்வார்கள். அதை படத்தொகுப்பில் சரி செய்துவிடுவோம்," என்றார் இயக்குநர் திலீபன்.

கடந்த 2017ஆம் ஆண்டில் தமிழ் – கேரளா பெண்கள் இருவருக்கு இடையிலான விவாத நிகழ்ச்சியும் கடுமையான சர்ச்சைக்கு வித்திட்டது. நிகழ்ச்சியின் ப்ரோமோ வெளியானதும், மகளிர் அமைப்புகள் இந்த நிகழ்ச்சி, பெண்களை அழகுப் பொருளாக சித்தரிப்பதாக குற்றச்சாட்டுகளை முன்வைத்தன. எதிர்ப்பு வலுத்ததால் அந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகாமலேயே நிறுத்தி வைக்கப்பட்டது.

 
'நீயா நானாவே தெரியாது; ஆனால் வாழ்க்கை மாறுச்சு'
விஜய் டிவி சங்கவி

பட மூலாதாரம்,VIJAYTV

கடந்த 2016ஆம் ஆண்டின் ஒரு நீயா நானா நிகழ்ச்சியில், மருத்துவராக வேண்டும் என கண்ணீரோடு நா தழுதழுக்கப் பேசி, தற்போது மருத்துவராகவே ஆகிவிட்ட சங்கவியிடம் பேசினோம்.

“நீயா நானா என்கிற நிகழ்ச்சி பற்றி எனக்கு அப்போது எதுவுமே தெரியாது. வீட்டில் தொலைக்காட்சி இல்லாததும் ஒரு காரணம். பக்கத்து வீட்டு அண்ணன் மூலமாகத்தான் நிகழ்ச்சிக்குச் சென்றேன். நான் பேசியது இந்தளவுக்கு ’ரீச்’ ஆகும் என நினைக்கவில்லை. நாங்கள் நினைத்துப் பார்த்திராத அளவுக்கு அது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. என் வாழ்க்கையை மாற்றிய தருணம் அது,” என்றார் சங்கவி.

“பேசுவதற்கு நேரம் இல்லை என்கிற குறையும் அவ்வப்போது எழுவதுண்டுதான். ஆனால் எல்லோரும் கலந்துகொள்ளும் இடமாக நீயா நானா இருந்திருக்கிறது,” என பெண்கள் செயற்பாட்டாளரும் பத்திரிகையாளருமான கவின் மலர் கூறுகிறார்.

“நீயா நானா தேர்வு செய்யும் தலைப்புகள் சில நேரங்களில் மேலோட்டமாகவும் இருந்திருக்கிறது. சமூகத்தில் பேச வேண்டியது நிறைய இருக்கும்போது இதை ஏன் விவாதிக்கிறார்கள் என்றுகூட விமர்சனங்கள் எழும்.

தமிழ் பெண்கள் vs கேரள பெண்கள் நிகழ்ச்சி ஒளிப்பரப்பாகவிருந்த சமயத்தில் அதைக் கடுமையாக விமர்சித்தவர்களில் நானும் ஒருவர். அதேநேரம், விமர்சித்தவர்களாக இருந்தாலும் பின்னாட்களில் நிகழ்ச்சியில் பங்கேற்க நீயா நானா குழு அழைத்திருக்கிறது,” என கவின் மலர் கூறுகிறார்.

'கூடுதல் பொறுப்புணர்வுடன் செயல்படுவது அவசியம்'
Kavin Malar

பட மூலாதாரம்,KAVIN MALAR/FB

படக்குறிப்பு,

கவின் மலர்

“வடமாநில தொழிலாளர்கள், திருநங்கைகள் எனப் பலருக்கும் மேடை அமைத்துக் கொடுத்திருக்கிறது. திருநங்கை சார்ந்த உரையாடல்கள் மட்டுமின்றி இதர தலைப்புகளில் விவாதிக்கும்போதுகூட அனைவரையும் உள்ளடக்கிய நிகழ்ச்சியாக, திருநங்கைகள் பேச இடமளித்திருக்கிறது.

ரியாலிட்டி ஷோக்கள் பெரும்பாலும் செயற்கைத்தனமாக ஒருவரை அழ வைத்து, பின்னணி இசையில் ஒளிபரப்பும். ஆனால் நீயா நானா இதில் விதிவிலக்கு.

சாதித் திமிருடன், மத துவேசத்துடன், பெண்களைப் பற்றி இழிவாக, பிற்போக்குத்தனமான அல்லது ஆட்சேபகரமான கருத்துகளை பங்கேற்பாளர்கள் கூறினால், கோபிநாத் மெளனம் காக்காமல் உடனடியாக பதில் பேசி தெளிவுபடுத்துவது நல்ல விஷயம் என நினைக்கிறேன்.

நீயா நானா நிகழ்ச்சியை மக்கள் குடும்பமாக அமர்ந்து பார்க்கின்றனர். கூடுதல் பொறுப்புணர்வுடன் குழுவினர் செயல்பட வேண்டியது அவசியம்,” என்கிறார் கவின் மலர்.

https://www.bbc.com/tamil/articles/cd1le9qwgjlo

ஈழம் அழிந்ததற்கு தி.மு.கவை மட்டும் குறை கூறுகிறார்கள்; ஆனால் உலகளவில் நடந்த அரசியலைப் பற்றி யாரும் பேசவில்லை! – திருமாவளவன்

2 months 2 weeks ago

Published By: RAJEEBAN   04 FEB, 2024 | 09:58 AM

image

ஈழம் அழிந்ததற்கு திமுகவை மட்டும் குறை கூறுகிறார்கள், ஆனால் உலக அளவில் ஈழத்தை அழிக்க செய்யப்பட்ட அரசியலைப் பற்றி யாரும் பேசவில்லை என விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். 

சென்னையில் சர்.பி.டி. தியாகராயர் மண்டபத்தில் நடைபெற்ற ஈழம் குறித்த நிகழ்வில் விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் பங்கேற்றார்.

அப்போது விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் பேசியதாவது:

ஈழத் தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு காரணம் கருணாநிதி மற்றும் திமுக தான் என்று கூறினால் அது அரசியல்வாதிகளுக்கு வேண்டுமானால் பயன் தரலாம் ,ஆனால் ஈழத்தமிழர்களுக்கு எப்போதும் பயன் தராது.

ஈழம் அழிந்ததற்கு தமிழ்நாட்டில் உள்ளவர்கள் திமுகவையும் கருணாநிதியை மட்டுமே குறை கூறினார்கள். ஆனால் உலக அளவில் ஈழத்தை அழிக்க செய்யப்பட்ட அரசியலைப் பற்றி யாரும் பேசவில்லை.

இந்தியாவில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக ஒரு போராட்டம் கூட நடைபெறவில்லை. உலக நாடுகள் ஈழத் தமிழர்களை பயங்கரவாதிகள் என திரும்ப திரும்ப குறை கூறியுள்ளனர். ஈழத் தமிழர்களை மிகப் பெரிய ஆயுதக் குழுக்களாக மாற்றியது காங்கிரஸ்தான். இவ்வாறு விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் பேசினார்.

https://www.virakesari.lk/article/175495

'20 வருஷமா பால்தான் உணவு' இளைஞரை தாக்கிய அபூர்வ நோய்...

2 months 2 weeks ago

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை சேர்ந்த 20 வயது இளைஞருக்கு பிறக்கும் போதே தாடையில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக அவரால் உணவு ஏதும் உண்ண முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பிறந்தது முதலே பால் மட்டுமே குடித்து உயிர் வாழ்கிறார் அவர். பிறந்தவுடன் அவரைப் பார்த்த மருத்துவர்கள், அவர் உயிர் பிழைப்பது கடினம் என்று கூறியிருந்தனர்.

ஆனால், இரவும் பகலும் தூக்கமில்லாமல் தன் குழந்தைக்கு பால் கொடுத்து வளர்த்து வந்துள்ளார் அவரது தாய் தேவி. அவரால் 100 மில்லி லிட்டர் குடிக்கவே இரண்டு முதல் மூன்று மணி நேரங்கள் ஆகும் என்கிறார் தேவி. ஐந்து வயதில் அவருக்கு செய்யப்பட்ட அறுவை சிகிச்சைக்கு பிறகே, அவரால் தானாக பால் குடிக்க முடிந்தது. அவரது முக அமைப்பை பார்த்து அக்கம் பக்கத்தினர் எரிச்சலையும் பயத்தையும் வெளிப்படுத்தினர். ஆனால் இத்தனை ஆண்டுகளில் அவரை புரிந்து கொண்ட சமூகம், அவருடன் உரையாடி நட்பு பாராட்டுவதாக அவரது தந்தை சந்தோசமாக பகிர்ந்து கொள்கிறார்.

 

 

கண்ணகி - முருகேசன்: ஆணவக்கொலை என்ற சொல்லாடல் உருவாகக் காரணமான கொடூர சம்பவம்

2 months 2 weeks ago
கண்ணகி-முருகேசன் கொலை

பட மூலாதாரம்,HANDOUT

படக்குறிப்பு,

கண்ணகி முருகேசன்

25 நிமிடங்களுக்கு முன்னர்

ஜூலை 8, 2003.

கடலூர் மாவட்டம், விருத்தாச்சலம் அருகே உள்ள குப்பநத்தம் முந்திரிக்காடு. எப்போதுமே ஆள் அரவம் இல்லாத அந்தக் காட்டிற்குள் அன்று ஊரே கூடியிருந்தது. குப்பநத்தம் புதுக்காலனியைச் சேர்ந்த முருகேசனும், அவரது சித்தப்பாவும் கை கால்கள் கட்டப்பட்டு கிழே தள்ளப்பட்டிருந்தனர். இவர்கள் இருவரும் பட்டியல் சாதியைச் சேர்ந்தவர்கள். சற்று தள்ளியிருந்த ஒரு மரத்தில், கண்ணகி கட்டப்பட்டிருந்தார். இவர் மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர்.

எழுத்தில் விவரிக்க முடியாத சித்திரவதைக்குப் பிறகு, முருகேசன், கண்ணகி ஆகியோரின் மூக்கு மற்றும் காதுகளில் விஷம் ஊற்றப்பட்டது. வாயைத் திறக்க மறுத்து இறுக்கி மூடியிருந்த இருவரின் காது மற்றும் மூக்கில் நஞ்சை ஊற்ற, இருவரும் அலறித் துடித்திருக்கிறார்கள்.

ஊரே பார்க்க, இருவரும் துடிதுடிக்க இறந்த பிறகு, இருவரின் உடல்களையும் அவர்களின் குடும்பத்தினர் எடுத்துச் சென்று தனித்தனியாக எரித்தனர்.

ஒரே கிராமத்தைச் சேர்ந்த இருவேறு சாதியைச் சேர்ந்த கண்ணகியும் முருகேசனும், மே 5, 2003 அன்று காதல் திருணம் செய்து கொண்டதற்கு எதிர்ப்பு தெரிவித்துதான் இப்படி ஆணவக்கொலை செய்யப்பட்டார்கள்.

கொலை நடந்து ஒராண்டுக்கு பிறகு வெளியே எப்படித் தெரிந்தது? இந்த வழக்கை எப்படி சிபிஐ விசாரித்தது? வழக்கின் விசாரணையில் காவல்துறையினர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் என்ன?

இங்கு விரிவாகப் பார்ப்போம்...

 
என்ன நடந்தது?
கண்ணகி-முருகேசன் கொலை

பட மூலாதாரம்,HANDOUT

படக்குறிப்பு,

ஆணவப் படுகொலை செய்யப்பட்டவர்கள்

ஜூலை 7, 2003.

ஊரில் எப்போதும் போல வயல் வேலைக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்த முருகேசனின் தந்தை சாமிக்கண்ணுவை மறித்த கண்ணகியின் அண்ணன் மருதுபாண்டியன், “உம்மவன் முருகேசன் எங்கே?” எனக் கேட்டுள்ளார்.

ஒன்றும் புரியாத சாமிக்கண்ணு, என்ன விஷயம் எனக் கேட்டுள்ளார். ஆனால், அவருக்கு முறையான பதில் எதுவும் சொல்லாமல், “உன் மகன் எங்க இருந்தாலும், அவனை உடனடியாக கூட்டிக்கிட்டு வா,” எனக் கூறியுள்ளார் மருது பாண்டியன்.

மருதுபாண்டியனின் மிரட்டல் மற்றும் அவர்களுடன் வந்த ஆட்கள் செய்த களேபரத்தில், குப்பநத்தம் புதுக்காலனியே பதற்றமானது. இதற்கிடையில், முருகேசனின் தம்பி வேல்முருகன் அவர்களின் கண்ணில் பட, “முருகேசன் எங்கே?” எனக் கேட்டு, அவரை ஒரு அறைக்குள் அழைத்துச் சென்ற மருதுபாண்டியனும் அவரது ஆட்களும், சரமாரியாகத் தாக்கியுள்ளனர்.

சம்பவம் அறிந்து சமாதானத்திற்கு முயன்ற முருகேசனின் சித்தப்பாவிற்கும் கெடு விதிக்கப்பட்டு, முருகேசனை அழைத்து வருவதே ஒரே வழி, இல்லையேல், வேல்முருகனை விடமாட்டோம் என மருதுபாண்டியன் கூறியுள்ளார்.

நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர, தன் மகன் எங்கிருப்பான் என அறிந்துகொண்ட முருகேசனின் சித்தப்பா, முருகேசனை விருதாச்சலம் வண்ணான்குடிகாட்டில் உள்ள அவரது அக்கா வீட்டில் இருந்து அழைத்து வந்தார்.

“வந்தவனை அவர்கள் சற்றும் இறக்கமின்றிக் கொடுமைப் படுத்தினார்கள். அவன் அவ்வளவு கொடுமைகளுக்கு மத்தியிலும் கண்ணகி எங்கிருக்கிறாள் என்று சொல்லவே இல்லை. ஒரு கட்டத்தில், அவனைக் கயிற்றில் கட்டி, தலைகீழாகத் தொங்கவிட்டு அடித்தபோதும், அவன் தலை கீழே அடித்தபோதுதான், அவன் கண்ணகியை எங்கே வைத்திருந்தான் என்பதையே சொன்னான்,” எனக் கூறியிருந்தார் முருகேசனின் சித்தப்பா அய்யாசாமி.

கண்ணகியையும் அழைத்து வந்த அவரது குடும்பத்தினர், இருவரையும் துன்புறுத்தி, காது மற்றும் மூக்கில் விஷம் ஊற்றிக் கொலை செய்தனர்.

 
எப்படித் தெரிந்தது?
கண்ணகி-முருகேசன் கொலை

பட மூலாதாரம்,KIZHAKU PATHIPAGAM

படக்குறிப்பு,

ஓராண்டுக்குப் பிறகு இச்சம்பவம் ஒரு தமிழ் இதழில் வெளிவர, அப்போதுதான் இந்தக் கொடூரக் கொலை வெளியுலகத்திற்கே தெரிய வந்தது.

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே உள்ள குப்பநத்தம் புதுக்காலனியைச் சேர்ந்தவர் சாமிக்கண்ணு. இவரது மகன் முருகேசன், சிதம்பரத்தில் உள்ள அண்ணாமலைப் பல்கலையில் இளங்கலை பொறியியல் படித்து வந்தார். அதே பல்கலையில் துரைசாமியின் மகள் கண்ணகி வணிகவியல் துறை படித்து வந்தார்.

இருவரும் தங்களது கல்லூரி நாட்களில் இருந்து காதலித்து வந்த நிலையில், மே 5, 2003 அன்று கடலூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் ரகசியத் திருமணம் செய்துள்ளனர். இந்த நிலையில்தான், இருவரும் ஊரைவிட்டு வெளியே சென்று வாழ முடிவெடுத்து, ஜூலை 6ஆம் தேதி ஊரை விட்டு வெளியேறியுள்ளனர். ஆனால், இரண்டு மணிநேரத்திலேயே இருவரும் பிடிக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டனர்.

“முருகேசனை அழைத்து வந்ததுதான் என் வாழ்நாளில் நான் செய்த மிகப்பெரிய தவறு. அன்று நான் அவனை அழைத்து வராவிட்டால், இந்நேரம் எங்காவது சென்று வாழ்ந்திருப்பான்,” என தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார் முருகேசனின் சித்தப்பா அய்யாசாமி.

இந்தக் கொலைக்குப் பிறகுதான் தமிழ்நாட்டில் முதன்முதலாக ஆணவப் படுகொலை என்னும் பதத்தை தமிழ்நாடு பாவிக்கத் தொடங்கியதாக மூத்த பத்திரிகையாளர் இளங்கோவன் ராஜசேகரன், தனது ‘சாதியின் பெயரால்’ என்னும் நூலில் குறிப்பிடுகிறார்.

“இதற்கு முன்பே இத்தகைய நிகழ்வுகள் நடத்திருக்கின்றன என்றாலும், சாதிய மோதல், சாதியக் கொலை என்றெல்லாம் எவை அழைக்கப்பட்டு வந்தன. சாதியம் எப்படி இயல்பானதாக, எங்கும் நிறைந்ததாக இருக்கிறதோ, அதேபோல சாதியக் கொலைகளும் இயல்பானவையாகவும் அவ்வப்போது நிகழ்பவையாகவும் கருதப்பட்டு வந்தன,” என எழுதியுள்ளார் இளங்கோவன்.

கண்ணகியும், முருகேசனும் கொலை செய்யப்பட்டு, 10 நாட்களுக்குப் பிறகுதான் முதல் தகவல் அறிக்கையே பதிவு செய்யப்பட்டதாக இந்த வழக்கை ஓராண்டுக்குப் பிறகு கையில் எடுத்த தமிழ்நாடு அம்பேத்கர் சட்ட உதவி மையத்தில் இருந்த வழக்கறிஞரும் சமூக ஆர்வலருமான சுகுமாரன் தெரிவித்தார்.

சுமார் 10 நாட்களுக்குப் பிறகு ஜூலை 17ஆம் தேதி, கண்ணகியும் முருகேசனும் குடும்பத்தினரின் விருப்பத்திற்கு மாறாக திருமணம் செய்து கொண்டதால், கண்ணகியை அவரது குடும்பத்தினரும், முருகேசனை அவரது குடும்பத்தினரும் கொலை செய்ததாக காவல்துறை வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

கண்ணகியின் அப்பா துரைசாமி, அண்ணன் மருதுபாண்டி மற்றும் அவர்களது உறவினர்கள் இருவர் என நான்கு பேர், முருகேசனின் அப்பா சாமிக்கண்ணு, சித்தப்பா அய்யாசாமி மற்றும் இவர்களது உறவினர்கள் இரணடு பேர் என மொத்தம் எட்டு பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. எட்டு பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

சுமார் ஓராண்டுக்கு பிறகு இச்சம்பவம் ஒரு தமிழ் இதழில் வெளிவர, அப்போதுதான் இந்தக் கொடூரக் கொலை வெளியுலகத்திற்கே தெரிய வந்தது.

அதைத் தொடர்ந்து, அம்பேத்கர் சட்ட உதவி மையத்தில் இருந்த மூத்த வழக்கறிஞர் ரத்தினம் மற்றும் சமூக ஆர்வலர் சுகுமாரன் இணைந்து, உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். அதன் விளைவாக, இந்த வழக்கு சிபிஐ.க்கு மாற்றப்பட்டது.

 
போலீஸ் மீதும் வழக்குப் பதிவு செய்த சிபிஐ
கண்ணகி-முருகேசன் கொலை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

கண்ணகி மற்றும் முருகேசனுக்கு விஷத்தை ஊற்றிய டம்ளரை சிபிஐ கைப்பற்றியது.

ஏப்ரல், 2004இல் வழக்கைக் கையில் எடுத்த சிபிஐ, வழக்கு தொடர்பாக அனைவரையும் விசாரணை செய்தது. இதில், சம்பவ இடத்தில் இருந்த முக்கிய ஆதாரங்களையும் சிபிஐ சேகரித்தது. கண்ணகி மற்றும் முருகேசனுக்கு விஷத்தை ஊற்றிய டம்ளரையும் சிபிஐ கைப்பற்றியது.

மேலும், இந்தக் கொலையை நேரில் பார்த்த முருகேசனின் சகோதரி தமிழரசி, அப்பா சாமிக்கண்ணு, முருகேசனின் தம்பி வேல்முருகன், பழனிவேலு ஆகியோர் முக்கிய சாட்சிகளாகச் சேர்க்கப்பட்டனர்.

சிபிஐ.யின் விசாரணையில், விருத்தாச்சலம் காவல் நிலையத்தைச் சேர்ந்த ஆய்வாளர் தமிழ்மாறன் மற்றும் உதவி ஆய்வாளர் செல்லமுத்து ஆகியோரையும் குற்றவாளிகளாகச் சேர்த்தனர். இந்த வழக்கில் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டிருந்த முருகேசனின் குடும்பத்தினர், வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.

சி.பி.ஐ தாக்கல் செய்த குற்றப் பத்திரிக்கையில், 15 பேர் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டிருந்தனர். கடலூர் சிறப்பு நீதிமன்றம் செப்டம்பர் 2021இல் தீர்ப்பளித்தது. அதில், குற்றம் சாட்டப்பட்ட 15 பேரில், 13 பேரை குற்றவாளிகள் எனத் தீர்ப்பளித்த நீதிமன்றம், கண்ணகியின் அண்ணன் மருதுபாண்டியனுக்கு தூக்கு தண்டனை வழங்கியது. மற்ற 12 பேருக்கும் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.

உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு

தண்டனையை ரத்து செய்யக் கோரி 13 பேர் தரப்பிலும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். மேல்முறையீடு மனுக்களை நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஏ.ஏ.நக்கீரன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.

மனுதாரர்கள் தரப்பில், முதலில் தற்கொலை செய்துகொண்டதாக வழக்குப் பதியப்பட்ட நிலையில், பின் கொலை வழக்காகப் பதியப்பட்டதாகவும், சம்பவத்தைக் கண்ணால் கண்ட சாட்சியங்கள் ஏதும் இல்லை எனவும், குற்றம் சாட்டப்பட்டவர்களில் இருவர் பட்டியலினத்தவர்கள் என்பதால் வன்கொடுமை தடுப்புச் சட்டம் பொருந்தாது என்றும் வாதிடப்பட்டது.

 
கண்ணகி-முருகேசன் கொலை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

சென்னை உயர்நீதி மன்றம்

சிபிஐ தரப்பிலும், முருகேசன் குடும்பத்தினர் தரப்பிலும், இந்தக் கொலை சம்பவத்திற்குத் தொடர் சாட்சியங்கள் உள்ளதாகவும், இது ஆணவக்கொலைதான் என்பதால், கடலூர் நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் வாதிடப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் கண்ணகியின் சகோதரர் மருதுபாண்டியனுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்து உத்தரவிட்டனர்.

மேலும், அப்போதைய உதவி ஆய்வாளர் தமிழ்மாறன் மீதான ஆயுள் தண்டனையை ரத்து செய்த நீதிபதிகள், வேறு ஒரு பிரிவில் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையையும், வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் ஓராண்டு சிறைத் தண்டனையையும் உறுதி செய்து உத்தரவிட்டனர்.

இந்த வழக்கு ஒரு முன்மாதிரி வழக்கு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் நடந்த சங்கர் ஆணவக்கொலை வழக்கில், கெளசல்யாவின் தந்தை விடுவிக்கப்பட்டதைச் சுட்டிக்காட்டினார் மூத்த வழக்கறிஞர் ரத்தினம்.

“கண்ணகி முருகேசன் வழக்கில் அப்படி எதுவும் நடைபெறவில்லை. இந்த வழக்கில் நேரடி சாட்சியங்கள் இருந்தபோதும், அவற்றை முறையாக வழக்கில் சேர்த்து, சாட்சிகளைக் காப்பாற்றி, நீதிமன்றத்தில் வெற்றி பெற கடுமையாகப் போராட வேண்டியிருந்தது. அதனால், இந்த வழக்கு அனைத்து ஆணவக்கொலை வழக்குகளுக்கும் ஒரு முன்மாதிரி வழக்கு,” என்றார்.

https://www.bbc.com/tamil/articles/c84ng8wx0dgo

இன்னுமொரு அரிதாரம் பூசிய முகம்,  அரசியலில் அறிமுகமாகிறது.

2 months 2 weeks ago

இன்னுமொரு அரிதாரம் பூசிய முகம், 
அரசியலில் அறிமுகமாகிறது.

கடந்த ஓரிரு வருடங்களுக்கு முன்பு திரைப்படமொன்றின் படப்பிடிப்புக்காக வெளியூர் சென்றிருந்த தமிழ்நாட்டின் ("தமிழகம்" நன்றி பிஜோபி யின் தமிழ்நாட்டு ஏஜண்டு ஆளுனர் ரவி) முண்ணணித் திரைப்பட நடிகர் விஜை அவர்களை இந்திய நடுவண் அரசின் அமுலாக்கல்துறை (அதாவது வருமானங்கள் தொடர்பான கண்காணிப்புத்துறை) அதிகாரிகள் வரவழைத்து விசாரணைக்குப் பின்பு  அனுப்பிவிட்டார்கள் என்பது நினைவிருக்கும்.

அந்த விசாரணையில் கணக்குக்காட்டாத வருமானம், அவ்வருமானத்தில் வாங்கப்பட்ட சொத்துக்கள் முதலீடுகள் தொடர்பாகக் கேள்விக்குள்ளாக்கப்பட்டு தங்களுக்கிருந்த சந்தேகங்கள் அனைத்தையும் நிவர்த்திசெய்த பின்னரே அனுப்பியிருந்தார்கள்.

அந்த விசாரணையில் சில பல உண்மைகளைத் தெரிந்துகொண்ட அமுலாக்கல்துறை எதிர்காலத்தில் தேவைப்படுவதற்காக அவற்றை ஆவணப்படுத்தியும் வைத்திருப்பார்கள் என்பது புலனாய்வுபற்றிய அரிவரிப்பாடம் மட்டும் தெரிந்தவர்களுக்கே  சாதாரணமாக மனதில்படும்.

ஆனால் "விஜையது விசிலடிச்சன் குஞ்சுகளோ" எங்கள் தளபதி கறைபடாத கைகளையுடையவர் ஆகவே அவரை எந்தக்கொம்பனாலும் அசைக்கமுடியாது என ஊளையிட்டார்கள்.

இன்னுமொருபுறத்தில் விஜைக்கு இப்படியான விசாரணையும் தேவைப்பட்டது தவிர ஆளும் ப ஜ க அரசுக்கும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் அமிர்த்ஸா அவர்களுக்கும் தேவைப்பட்டது.
காரணம் தங்கள் சொல்லுக்கு ஆடக்கூடிய ஒரு கைப்பாவை முகவும் செல்வாக்கனவராக இருக்கவேண்டும் அவர் மிஸ்டர் கிளீன் என அவரது ஆதரவாளர்களால் உணரப்படவேண்டும் இந்த மிஸ்டர் கிளீன் எனும் பிம்பத்தை நாம் தான் அவருக்கு ஏற்படுத்திக்கொடுக்கவேண்டும் என ப ஜ க மிகவும் துல்லியமாகத் திட்டம் போட்டது. அதன்மூலம் விஜையது விஜையது விசிலடிச்சன் குஞ்சுகளுக்கு அண்மையானவர்களது ஆதரவும் கூடும் எனும் கணக்கிடல்மூலம் தனது அரசியல் சதுரங்கத்தை தமிழ்நாட்டில் ஆரம்பிக்க உருட்டும் பகடக்காயாக விஜை உருவாக்கப்பட்டார்.

இந்திய உபகண்டத்தில் பல்வேறு மாநினங்கள் இருந்தபோதும் பொருளாதாரத்தில் மிகவும் முன்னிலையில் உள்ள மாநிலமாக தமிழ்நாடு இருப்பதும் அபரிமிதமான முதலீடுகளும் கல்வி முதலீடுகளும் தொழில்நுட்ப அறிவாற்றலும் செறிந்துகாணப்படுவதும் தவிர சகிப்புத்தன்மை ஒருங்கிணைவு ஆகியவற்றில் ஓரளவு முன்னேற்றமுடையதும் முக்கியமாக ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தை நோக்கிப் பயணிக்கும் உள்ளகக் கட்டமைப்பை தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் நிர்வகிப்பதும் ப ஜ வுக்கும் அவர்களை முண்டுகொடுக்கும் வடநாட்டு மார்வாடிகளுக்கு எரிச்சலூட்டும் விடையம் தவிர எப்போது இந்தக் கனிந்தபழம் தங்கள் கைகளுக்கு வந்துசேரும் எனும் கனவில் வாழும் அவர்களது காதுகளுக்குத் தேன்வார்க்கச் சிறுகச் சிறுகத் திட்டமிட்டு நடாத்தப்படும் அரசியல் சதுரங்கத்தின் ஓரங்கம்தான் விஜை அவர்களது அரசியல் கட்சியின் பெயர் அறிவிப்பு.

இப்பெயர் ஒன்றும் விஜையது மூளையிலிருந்து உதித்ததல்ல இதை ப ஜ க ஏஜண்டு ஆளுனர் ரவியின் வாயிலிருந்து உதித்த "தமிழகம்" எனும் வார்த்தை எச்சத்தில்தான் இப்பெயர் கருவுற்றது. தனது கணக்குக்காட்டாத பணவருவாயின் தகிடுதித்தங்களை இன்றுவரைக்கும் மறைத்த நடுவண் அரசின் எஜமானர்களுக்குத் தனது விசுவாசத்தின் ஒரு பகுதியாவது காட்ட தனது கட்சியின் பெயரின் ஒருபகுதியிலாவது அவர்களது எச்சிலை இட்டு நிரப்புவது ஒன்றும் ஆச்சரியமில்லையே!

"தமிழக வெற்றிக் கழகம்" அறிவிப்பு வந்தாச்சு.

இந்த அறிவிப்பு எப்போ வந்திருக்கு! அப்போ இப்போ என்றிருந்த நடிகர் விஜயகாந் அவர்கள் காலமாகிக் கடைசிநாள் காரியம் முடிந்த கையுடன் வந்திருக்கு. மண்ணுக்குள் புதைத்த வரது உடலை கரையான் மற்றும் இன்னபிற நுண்கிருமிகள் உள்நுளைந்து டீகொம்போஸ் பண்ண ஆரம்பித்தனவோ இல்லையோ அதற்கும் இந்தாபிடி ஒரு விருது எனக்கொடுத்து அவர்களது கட்சியின் தொண்டர்களைக் குசியாக்கி " ஆமா இவைங்களை என்னமோண்ணு அநியாயத்துக்கும் நினைச்சோமே, ஆனா இவைங்க அநியாயத்துக்கும் நியாயமானவங்களா இருக்காங்களே" என தொண்டர்கள் மூக்கில விரலை வைக்க, இதுதாண்டா தருணம் என ஆரம்பிங்கடா கச்சேரியை என விஜையை உசுப்பிவிட்டாச்சு.

அந்தக்கையோடு நாம் தமிழர் கட்சியை உண்டு இல்லை என ஆக்குறம் அவர்களுக்கு இருக்கும் ஆதரவுத்தளத்தை அசைத்து இந்தப்பக்கம் திருப்புறம் எனச்சொல்லி அமூலாக்கல்துறை நாம்தமிழர்களது இரண்டாம் நிலைத்தலைவர்களது வீடுகளுக்கு சோதனைசெய்ய உள்நுழைந்துள்ளது.

இதில் என்ன வேடிக்கை என்றால் புலம்பெயர் இலங்கைத் தமிழர்களில் கணிசமானவர்கள் சீமானது நாம்தமிழர் ஆட்சியில் ஈழம் வெல்லலாம் எனக் கனவுப்பால்குடித்து மேற்படி இரண்டாம் நிலைத்தலைவர்களுடன் தாம் வாழும் நாடுகளிலிருந்து தொடர்புகளை ஏற்படுத்தி அவர்களுக்கு ஆபத்து அவசரத்துக்கு காசு உதவி மற்றும் காதுகுத்து, குலசாமிக்கு மொட்டையடிப்பு ஆகியவற்றுக்கு  "சப்றைஸ்" பரிசுப்பொட்டலங்கள் பணமுடிச்சுகள் அனுப்பி தாங்களும் குதூகலமாகி அவர்களையும் குதூகலப்படுத்து கடைசியில கூமுட்டையாகிவிடும் கோஸ்டிகளால் இப்போ இந்த இரண்டாம் கட்ட தலைகளுக்கு ஆபத்து வந்துவிட்டது.

திருச்சி சிறப்பு முகாமில் இருக்கும் போதை கடத்தல் கும்பல்களில் இலங்கையைச் சேர்ந்த சிங்களவர்கள் இஸ்லாமியர்கள் தமிழர்கள் என கலந்துகட்டி ஒரு பட்டியலே இருக்கு, இக்கும்பலில் முன்னாள் போராளிக்குழுக்கலிள் இருந்தவர்களும் உள்ளார்கள் ஏன் விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்தவர்களும் இருக்கிறார்கள். ஆனால் அக்கும்பலில் உள்ள அனைவரும் (யார் சிங்களவர் இஸ்லாமியர் புலிகள்தவிர்ந்த தமிழர்கள்) விடுதலைப் புலிகளை மீளுருவாக்கம் செய்ய சிறப்பி முகாமுக்குள்(?) இருந்து போதைப்பொருள் கடத்துகிறார்கள் அதன்மூலம் ஆயுதங்கள் கடத்தத் திட்டமிடுகிறார்கள் கைத்துப்பாக்கிகள் வைத்திருக்கிறார்கள் அவர்களை மத்திய புலனாய்வுக்குழு விசாரணை வளையத்துக்குள் கைது செய்துள்ளது (?) எனப் பத்திரிகைகளில் கண்டமேனிக்கு வதந்திபரப்பும் இந்தப் புலனாய்வுப்புலிகள் புலம்பெயர் தேசங்களில் வாழும் நாம்தமிழர்களது ரசிகப்பெருமக்களைப் புலிகளது ஏஜண்டு எனப் பெயர் சூட்டினால் நம்ம சனம் நம்பும்தானே (அத்துதானே நம்பாம")

அப்போ தமிழ்நாட்டின் ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தை விஜையை வைத்து இன்னுமொரு அங்குலம் நெருங்கியாச்சு. அப்போ விஜையது அரசியல் எதிர்காலம்?

அவர்தானே நாடாளுமன்றத் தேர்தல் எனது குறி இல்லை 2026 சட்டசபைத் தேர்தலில் நான் குதிக்கப்போகிறென் எனச்சொல்லிப்போட்டார்.

மார்வாடிகளது கைகளுக்கு பொருளாதாரம் போகவேண்டுமெனில் யார் வேண்டுமானாலும் முதலமைச்சர் ஆகலாம் அப்போ யார் ப ஜ கவின் கைத்தடியோ அவர்தார் முதல்வர். சிலவேளை ட்ரில்லியன் டாலர் கைக்கு எட்டும்போது அண்ணாமலைக்கு வசசுபோய் நடைபயணம்போகமுடியாத அளவுக்கு உடல் நிலை சீரற்றதாக இருக்கலாம் இருக்கவே இருக்கிறது இன்னுமொரு  மலை.

நாடாளுமன்றத் தேர்தலில் விஜையது ஆசீர்வாதத்தில் பி ஜெ பி கணிசமான வாக்குகளை அள்ளினால். வரப்போகும் சட்டசபைத்தேர்தலில் விஜை கட்சியின் இரண்டாம் நிலைத் தலைகளது வீடுகளுக்குள் அமூலாக்கத் துறையை அனுப்பினால் அலுவர் முடிந்துவிடும். 

விஜையது பணத்தில் ஒரு சினிமா ரசிகன் எப்படி அரசியல் கட்சியின் தொண்டனாக மாறி மக்கள் முன்பு வாக்குகள் சேர்க்கவேண்டும் எனும் பயிற்சியை முடித்துப் பட்டம்பெற்ற இரண்டாம் நிலைத்தலைவர்கள் பி ஜே பியினுடன் இணைந்தால் சட்டமன்றத்தேர்தலில் விஜை பி ஜே பி சொன்னதைச் செய்யத்தான் வேண்டும்.

அமூலாக்கல்துறை இருக்கும்மட்டும் எங்களுக்குத் திருவிழா. 

விஜை அரசியலில் வெல்வாரா? இல்லை மூழ்குவாரா?

இதைப்பற்றி யோசிக்கும்போது திருமதி தமிழிசை சவுந்தரராஜன் அவர்கள் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் கூறியது நினைவிருக்கு,

அவரது (நடிகர் சத்தியராஜ்) வீட்டுக்கும் அமூலாக்கல்துறைச் ச்சோதனையை நடத்திவிட்டால் போச்சு என.

கதையோட கதையாக இந்திய உழவுத்துறையது கைகளுக்குள் புலம்பெயர் தேசமொன்றில் வாழும் ஒரு பெண்ணும் நாம் தமிழர் கட்சியுடன் கருத்துவேறுபாடுகொண்டுள்ளதால் அகப்பட்டுள்ளார். 

கொஞ்சம் பொறுங்கோ யாரோ கதவைத்தட்டினம் அமூலாக்கல்துறையாக இருக்கப்போகிறது.

அரசியல் கட்சி தொடங்கினார் நடிகர் விஜய்

2 months 2 weeks ago
"தமிழக வெற்றி கழகம்" என்ற பெயரில் அரசியல் கட்சி தொடங்கினார் நடிகர் விஜய்
விஜய்

பட மூலாதாரம்,AGS

2 பிப்ரவரி 2024, 08:03 GMT
புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கியுள்ளார். அதற்கு தமிழக வெற்றிக் கழகம் எனப் பெயரிடப்பட்டுள்ளது. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவில்லை என்றும், யாருக்கும் ஆதரவுமில்லை என்றும் அவர் அறிவித்துள்ளார்.

அதே நேரத்தில் 2026-ஆம் ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தலைக் குறிவைத்து தனது கட்சி செயல்படும் என்றும் விஜய் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையின் விவரம் :

"விஜய் மக்கள் இயக்கம்" பல வருடங்களாக தன்னால் இயன்ற வரையில் பல்வேறு நிவாரண உதவிகளையும் மக்கள் நலத்திட்டங்களையும், சமூக சேவைகளையும்,செய்து வருவது நீங்கள் அனைவரும் அறிந்ததே. இருப்பினும், முழுமையான சமூக, பொருளாதார, அரசியல் சீர்திருத்தங்களை கொண்டுவர ஒரு தன்னார்வ அமைப்பினால் மட்டும் இயலாத காரியம். அதற்கு அரசியல் அதிகாரம் தேவைப்படுகிறது.

"தற்போதைய அரசியல் சூழல் பற்றி நீங்கள் அனைவரும் அறிந்ததே. நிர்வாக சீர்கேடுகள் மற்றும் "ஊழல் மலிந்த அரசியல் கலாச்சாரம்" ஒருபுறம் என்றால், நம் மக்களை சாதி மத பேதங்கள் வாயிலாக பிளவுபடுத்த துடிக்கும் "பிளவுவாத அரசியல் கலாச்சாரம்" மறுபுறம், என்று இருபுறமும் நம் ஒற்றுமைக்கும் முன்னேற்றத்திற்குமான முட்டுக்கட்டைகள் நிறைந்துள்ளன. "

"ஒரு தன்னலமற்ற, வெளிப்படையான, சாதிமத பேதமற்ற, தொலைநோக்கு சிந்தனை உடைய, லஞ்ச- ஊழலற்ற திறமையான நிர்வாகதிற்கு வழிவகுக்ககூடிய அடிப்படை அரசியல் மாற்றத்திற்காக குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பது நிதர்சனமான உண்மை. "

"மிக முக்கியமாக, அத்தகைய அரசியல், நம் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு, தமிழ் நாட்டின் மாநில உரிமைகள் சார்ந்து, இந்த மண்ணுக்கேற்ற "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" (பிறப்பால் அனைவரும் சமம் ) என்கிற சமத்துவ கொள்கைப்பற்று உடையதாகவும் இருக்க வேண்டும். அத்தகைய அடிப்படை அரசியல் மாற்றத்தை மக்களின் ஏகோபித்த அபிமானமும், அன்பும் பெற்ற முதன்மையான ஒரு மக்கள்சக்தியால் தான் சாத்தியப்படுத்த முடியும்."

விஜய்

பட மூலாதாரம்,VIJAY MAKKAL IYAKKAM / YOUTUBE

'2026 சட்டமன்றத் தேர்தல் தான் இலக்கு'

"இந்நிலையில், என்னுடைய தாய் தந்தைக்கு அடுத்து எனக்கு பெயர், புகழ் மற்றும் எல்லாமும் கொடுத்த தமிழ்நாட்டு மக்களுக்கும், தமிழ் சமுதாயத்திற்கும் என்னால் முடிந்த வரையில், இன்னும் முழுமையாக உதவ வேண்டும் என்பதே எனது நீண்ட கால எண்ணம் மற்றும் விருப்பமாகும். "எண்ணித் துணிக கருமம்" என்பது வள்ளுவன் வாக்கு. அதன்படியே, "தமிழக வெற்றி கழகம்" என்கிற பெயரில் எமது தலைமையிலான அரசியல் கட்சி துவங்கப்பட்டு, இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய எமது கட்சியின் சார்பில் இன்று விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக 25.01.2024 அன்று சென்னையில் நடைபெற்ற மாநில பொதுக்குழு மற்றும் செயற்குழுக் கூட்டத்தில், கட்சியின் தலைவர் மற்றும் தலைமை செயலக நிர்வாகிகள் தேர்தெடுக்கப்பட்டு கட்சியின் அரசியலமைப்பு சட்டம் மற்றும் சட்டவிதிகள் (bylaws) முறைப்படி ஒப்புதல் வழங்கப்பட்டு அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று மக்கள் விரும்பும் அடிப்படை அரசியல் மாற்றதிற்கு வழிவகுப்பது தான் நமது இலக்கு. தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் கிடைக்கப் பெற்றபின்,வரும் நாடாளுமன்றத் தேர்தல் முடிந்தவுடன் தமிழ்நாடு சார்ந்த கொள்கைகளின் வெற்றிக்கும், தமிழ்நாட்டு மக்களின் உயர்வுக்குமான எமது கட்சியின் கொள்கைகள், கோட்பாடுகள், கொடி, சின்னம் மற்றும் செயல்திட்டங்களை முன்வைத்து, மக்கள் சந்திப்பு நிகழ்வுகளுடன், தமிழ்நாட்டு மக்களுக்கான நம் அரசியல் பயணம் துவங்கும்." என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

 
விஜய்

பட மூலாதாரம்,VIJAY MAKKAL IYAKKAM

'சினிமாவிலிருந்து விலகுகிறேன்'

அந்த அறிக்கையில் மேலும், "இடைப்பட்ட காலத்தில், எமது கட்சியின் தொண்டர்களை அரசியல்மயப்படுத்தி, அமைப்பு ரீதியாக அவர்களை தயார் நிலைக்கு கொண்டுவரும் பணிகளும், கட்சியின் சட்டவிதிகளுக்குட்பட்டு ஜனநாயக முறையில் பொறுப்பாளர்களை தேர்ந்தெடுத்து, உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் பணிகளும் தீவிரமாக செயல்படுத்தப்படும். தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் மற்றும் கட்சி விரிவாக்கபணிகளுக்கு தேவையான கால அவகாசத்தை கணக்கில் கொண்டே தற்போது எமது கட்சி பதிவிற்காக விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது.

வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் நாம் போட்டியிடுவதில்லை என்றும், எந்தக் கட்சிக்கும் நம் ஆதரவும் இல்லை என்றும் பொதுக்குழ, மற்றும் செயற்குழுவில் முடிவெடுக்கப்பட்டுள்ளது என்பதையும் தாழ்மையுடன் இங்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

இறுதியாக, என்னைப் பொறுத்த வரையில் அரசியல் மற்றொரு தொழில் அல்ல; அது ஒரு புனிதமான மக்கள் பணி. அரசியலின் உயரம் மட்டுமல்ல, அதன் நீள அகலத்தையும் அறிந்து தெரிந்து கொள்ள, எம்முன்னோர் பலரிடமிருந்து பாடங்களைப் படித்து நீண்டகாலமாக என்னை அதற்கு தயார்படுத்தி, மனதளவில் பக்குவப்படுத்திக் கொண்டு வருகிறேன். எனவே அரசியல் எனக்கு பொழுதுபோக்கு அல்ல; அது என் ஆழமான வேட்கை. அதில் என்னை முழுமையாக ஈடுபடுத்தி கொள்ளவே விரும்புகிறேன். என் சார்பில், நான் ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ள இன்னொரு திரைப்படம் சார்ந்த கடமைகளை, கட்சி பணிகளுக்கு இடையூறு இல்லாத வகையில் முடித்துவிட்டு, முழுமையாக, மக்கள் சேவைக்கான அரசியலில் ஈடுபட உள்ளேன். அதுவே தமிழ் நாட்டு மக்களுக்கு நான் செய்யும் நன்றி கடனாக கருதுகிறேன்." என்று விஜய் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 
விஜய்

பட மூலாதாரம்,PIB ARCHIVE

நடிகர் விஜய் பற்றிய அரசியல் பிம்பம் எப்போது தொடங்கியது?

2006ஆம் ஆண்டு ஜனவரி 12ஆம் தேதி அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் டெல்லியில் வைத்து பொங்கல் சிறப்பு தபால்தலையை வெளியிட்டார். முதல் தபால்தலையை பெற்றுக்கொண்டவர் நடிகர் விஜய். தகவல் தொலைத்தொடர்பு அமைச்சராக இருந்த தயாநிதி மாறன் போன்றோர் உடன் இருந்தனர். அரசு சார்ந்த நிகழ்ச்சியாக இது இருந்தாலும் அப்போதே விஜய் மீது அரசியல் வெளிச்சம் பாயத் தொடங்கியது.

2009ஆம் ஆண்டு தனது ரசிகர் மன்றத்தின் பெயரை விஜய் மக்கள் இயக்கமாக மாற்றினார். இயக்கத்திற்கென தனி கொடியும் அறிமுகப்படுத்தப்பட்டது. ரத்த தானம், அன்னதானம் போன்ற நலத்திட்ட உதவிகளையும் ரசிகர்கள் மூலம் தொடங்கினார். அப்போது மன்றம் விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் கையில் இருந்தது.

நடிகர் விஜயின் அரசியல் பிம்பம் அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரிடம் இருந்து வந்தது என்று கூறுகிறார் மூத்த செய்தியாளர் தராசு ஷ்யாம். இது தொடர்பாக பிபிசி தமிழிடம் அவர் பேசுகையில், `விஜயின் அரசியல் என்பது அவரது அப்பாவிடம் இருந்தே தொடங்கிவிட்டது. திராவிட சித்தாந்தம் சார்ந்தவர் எஸ்.ஏ.சந்திரசேகர். விஜயகாந்துடன் சேர்ந்து எஸ்.ஏ.சி.யும் ஒன்றாக 90களிலேயே அரசியலுக்கு வந்திருக்க வேண்டியவர்கள். ஏனோ, எஸ்.ஏ.சி.யால் அரசியல் அடிகளை எடுத்துவைக்க முடியவில்லை` என்றார்

விஜய்

பட மூலாதாரம்,VIJAY MAKKAL IYAKKAM / YOUTUBE

சர்ச்சையில் சிக்கிய விஜயின் திரைப்படங்கள்

2011ல் விஜயின் 'காவலன்' திரைப்படம் வெளியாவதில் அரசியல் தலையீடு காரணமாக சிக்கல் ஏற்பட்டது. தீவிர முயற்சிக்கு பின்னர் காவலன் வெளியானாலும் , வெளியீட்டில் ஏற்பட்ட `காயம்` விஜயை வெகுவாக பாதித்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில்தான் 2011 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுக்கு விஜய் மக்கள் இயக்கம் ஆதரவளிப்பதாக தெரிவிக்கப்பட்டது. அந்த தேர்தலில் அதிமுக வெற்றிப் பெற்ற நிலையில் 'இந்த வெற்றியில் ஒரு அணிலைப் போல் உதவினோம்' என்று விஜய் தரப்பில் கூறப்பட்டது.

இதை தொடர்ந்து தலைவா திரைப்படமும் அரசியல் தலையீட்டை சந்தித்து. பிற மாநிலங்களில் வெளியான நிலையில் தமிழ்நாட்டில் படம் வெளியாகவில்லை. திரையரங்கங்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டன. விஜய் கோடநாடு சென்று, அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவை சந்திக்க முயன்றார். ஆனால், சந்திக்க நேரம் ஒதுக்கப்படாமல் அவர் திருப்பி அனுப்பப்பட்டார்.

இந்த நேரத்தில் விஜய் ஒரு வீடியோவை வெளியிட்டார். அதில், ` முதலமைச்சர் அம்மா(ஜெயலலிதா)வை சந்திக்க நேரம் கேட்டுள்ளோம் விரைவில் கிடைக்கும் என்று நம்புகிறோம். 'தலைவா' பிரச்சனையில் தலையிட்டு அம்மா ரிலீஸ் செய்ய நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்புகிறோம்` என்று கூறியிருந்தார்.

பின்னர், தலைவா படத்தின் தலைப்பில் இடம்பெற்றிருந்த டைம் டூ லீட் என்ற வாசகம் நீக்கப்பட்டு படம் தமிழ்நாட்டில் வெளியானது.

விஜய்

பட மூலாதாரம்,VIJAY MAKKAL IYAKKAM

கத்தி திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்திருந்ததை முன்னிறுத்தி பிரச்சனைகள் கிளம்பின. இந்த படத்தை ரிலீஸ் செய்ய விட மாட்டோம் என்று சில அமைப்புகள் போர்க்கொடி எழுப்பின. இதையெல்லாம் தாண்டி கத்தி படம் வெளியானபோது, படத்தில் இடம்பெற்ற `காற்றை வைத்து ஊழல் செய்கின்ற நாடு இது ` என்ற வசனம் அரசியல் ரீதியான அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

அதன்பின்னர் விஜயின் மெர்சல் படத்தில் ஜிஎஸ்டி, மருத்துவத் துறைக்கு எதிரான வசனம் இடம்பெற்றிருந்ததற்கு பாஜகவினர் தரப்பில் எதிர்ப்பு கிளம்பியது. சர்கார் படத்தில் அரசு தரும் இலவசங்கள் குறித்து அவர் விமர்சித்திருந்தது பேசுபொருள் ஆனது. இது ஒருபுறம் இருக்க தனது திரைப்படங்களின் நிகழ்ச்சியில் விஜய் அரசியல் பேச தொடங்கினார். சர்கார் பட ஆடியோ வெளியீடு விழாவில் முதலமைச்சர் ஆனால் என்ன செய்வீர்கள் என்ற கேள்வி விஜயிடம் எழுப்பப்பட்டபோது, ` முதலமைச்சர் ஆனால் முதலமைச்சராக நடிக்க மாட்டேன், உண்மையாக இருப்பேன்` என்று பதிலளித்தார்.

அரசியல் தொடர்பான விஜயின் ஒவ்வொரு கருத்தும் அவரது ரசிகர்களுக்கு நம்பிக்கையையும் உற்சாகத்தையும் தரத் தொடங்கின. தமிழ்நாட்டை தலைமை தாங்க விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என்று அவரது ரசிகர்கள் சார்பில் பல இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன, தற்போதும் ஒட்டப்பட்டு வருகின்றன.

விஜய்

பட மூலாதாரம்,YOUTUBE/SONY MUSIC INDIA

தந்தையுடன் ஏற்பட்ட முரண்பாடு

2020ல் அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் கட்சியை தொடங்குவதாக எஸ்.ஏ.சந்திரசேகர் அறிவித்தார். இது குறித்த அறிவிப்பு வந்த போதே அதற்கு எதிர்வினையாற்றிய நடிகர் விஜய், தனக்கும் தன் தந்தை தொடங்கியுள்ள கட்சிக்கும் நேரடியாகவும் மறைமுகமாகவும் எந்த தொடர்பும் இல்லை எனவும், தனது பெயரையும் புகைப்படத்தையும் அரசியல் அமைப்புக்கு பயன்படுத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என்று அறிவித்தார்.

அரசியல் செயல்பாடுகளில் ஈடுபடவும், பொதுக்கூட்டங்களை நடத்தவும் தனது பெயரையும், புகைப்படத்தையும் பயன்படுத்த கூடாது, அதற்கு தடை விதிக்க வேண்டும் எனவும் இயக்குநர் எஸ்.ஏ.சி, தாய் ஷோபா மற்றும் அவருடன் இருந்த மற்ற நிர்வாகிகள் மீது நடிகர் விஜய் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தார்.

https://www.bbc.com/tamil/articles/c51w53dx1lno

லண்டன் பிரமுகருடன் தொடர்பு – நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளின் வீடுகளில், NIA அதிகாரிகள் சோதனை!

2 months 2 weeks ago
லண்டன் பிரமுகருடன் தொடர்பு – நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளின் வீடுகளில், NIA அதிகாரிகள் சோதனை!
February 2, 2024

நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளின் வீட்டில் இன்று காலை முதல் என்ஐஏ அதிகாரிகள்  சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சோதனையின் பின்னணி குறித்த தகவல்கள்  வெளியாகி உள்ளன.

விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பணிகளை சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையில் தான் இன்று நாம் தமிழர் கட்சிக்கு அதிர்ச்சி வைத்தியம் அளிக்கப்பட்டுள்ளது. அதாவது இன்று அதிகாலை முதல் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளின் வீடுகளில் என்ஐஏ எனும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.

தடை செய்யப்பட்ட அமைப்புகள், தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்பில் இருப்போரை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கும் பணியை என்ஐஏ மேற்கொண்டு வரும் நிலையில் இந்த ரெய்டு என்பது பெரும் அதிர்ச்சியை நாம் தமிழர் கட்சிக்கு கொடுத்தது.

தமிழகத்தை பொறுத்தமட்டில் இன்று சென்னை, தென்காசி, திருநெல்வேலி, சிவகங்கை, மதுரை, கோவை உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று காலை முதல் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். திருச்சி சண்முகா நகரில் உள்ள நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் சாட்டை துரைமுருகன் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

மேலும் சென்னை கொளத்தூரில் பாலாஜி, கோவையில் ஆலாந்துறை ஆர்ஜி நகர் நாம் தமிழர் கட்சியில் ஐடி விங்க் நிர்வாகி ரஞ்சித் குமார், கோவை காளப்பட்டி முருகன், தென்காசி மாவட்டம் சிவகிரி பகுதியை சேர்ந்த நாம் தமிழர் கட்சியின் மாநில கொள்கை பரப்புச் செயலாளர் இசை மதிவாணன் , சிவகங்கை மாவட்டம் இளையான்குடி விஷ்ணு பிரதாப் உள்ளிட்ட நிர்வாகிகளின் வீடுகளில் அதிரடியாக சோதனை நடத்தப்பட்டுள்ளது.

மேலும் நாம் தமிழர் கட்சியின் மாணவர் அணி செயலாளர் இடும்பாவனம் கார்த்திக் விசாரணைக்கு முன்னிலையாகக் கோரி என்ஐஏ சார்பில் சம்மன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. வரும் 5ம் தேதி என்ஐஏ விசாரணைக்கு ஆஜராக வேண்டும் எனக்கூறி சம்மனில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படி முக்கிய நிர்வாகிகள் மீது என்ஐஏ அதிகாரிகள் கண்வைத்துள்ளதால் நாம் தமிழர் கட்சி சிக்கலில் சிக்கலில் சிக்கி  உள்ளது.

இந்நிலையில்  நாம் தமிழர் நிர்வாகிகள் வீடுகளில் என்ஐஏ சோதனை மேற்கொள்வதன் பின்னணி குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதாவது நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளுக்கு இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளில் இருப்போரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். மேலும் புலிகள் அமைப்பை சேர்ந்தவர்களும் நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவாக இருப்பதாக சொல்லப்படுகிறது.

இத்தகைய சூழலில் தான் தடை செய்யப்பட்ட அமைப்பை சேர்ந்த லண்டன் பிரமுகர் ஒருவருடன் நாம் தமிழர் கட்சியினர் தொடர்ந்து தொடர்பில் இருந்து வந்துள்ளனர். இவர்கள் பிரத்யேக செயலி ஒன்றின் மூலம் லண்டன் பிரமுகருடன் தொடர்பில் இருந்தாக கூறப்படுகிறது. இந்த தகவலை தொடர்ந்து  என்ஐஏ அதிகாரிகள் நாம் தமிழர் நிர்வாகிகளின் வீடுகளில் என்ஐஏ அதிகாரிகள்  சோதனை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் இந்த சோதனைக்கு முக்கிய காரணம் என்பது 2 ஆண்டுகளுக்கு முன்பு சேலம் மாவட்டம் ஓமலூரில் சிக்கிய 2 பேர் எனவும் கூறப்படுகிறது. அதாவது 2 ஆண்டுகளுக்கு முன்பு 2022ம் ஆண்டு சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே காவற்துறையினர்  சோதனை நடத்தினர். அப்போது செவ்வாய்பேட்டையை சேர்ந்த சஞ்சய் பிரகாஷ், எருமாபாளையத்தை சேர்ந்த நவீன் சக்கரவர்த்தி ஆகியோர் கைது செய்பயப்ட்டனர். இவர்கள் யூடியூப் பார்த்து துப்பாக்கி தயாரித்ததாக கைது செய்யப்பட்டனர். மேலும் இவர்களுக்கு தீவிரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பதாக சந்தேகம் கிளம்பியது. இதையடுத்து என்ஐஏ அதிகாரிகள் 2 பேரின் வீடுகளில் சோதனை மேற்கொண்டனர். இவர்களிடம் நடத்திய விசாரணையின்போது தான் நாம் தமிழர் கட்சி குறித்த தகவலை என்ஐஏ அறிந்ததாகவும், அதனடிப்படையில் அவர்கள் இன்று நாம் தமிழர் நிர்வாகிகளின் வீடுகளில் சோதனை மேற்கொண்டது தெரியவந்தது.
 

https://globaltamilnews.net/2024/200289/

முருகன், ராபர்ட்பயஸ் கால வரையறையற்ற உண்ணாவிரதம்?!

2 months 2 weeks ago

 

சட்டத்தின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டாலும் இன்னும் சிறை கொட்டடியில் வாடுகின்றோம்; முருகன், ராபர்ட்பயஸ் தமிழக முதலமைச்சருக்கு கடிதம்; கால வரையறையற்ற உண்ணாவிரதம்!

Published By: RAJEEBAN   01 FEB, 2024 | 11:14 AM

image

திருச்சி சிறப்பு  முகாமில் உரிமைகளும் உணர்வுகளும் பறிக்கப்படுவதாக கூறி காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடப் போவதாக முருகன் ராபர்ட் பயஸ் அகியோர் தமிழக முதலமைச்சருக்கு கடிதம் அனுப்பி உள்ளனர்.

இந்த கடிதத்தில் இருவரும் தெரிவித்துள்ளதாவது,

murugan_letter2.jpg

 "முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 32 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைவாசம் அனுபவித்து வந்த நிலையில்இ ஏறக்குறைய ஒன்றை ஆண்டுகளுக்கு முன்பு உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டோம்.

சட்டத்தின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டாலும் இன்னும் சிறை கொட்டடியில் இருந்து விடுவிக்கப்படவில்லை. சிறப்பு முகாம் எனப்படும் மற்றொரு சிறையில் அடைத்தார்கள். திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் ராபர்ட் பயஸ் ஜெயக்குமார்இ சாந்தன் முருகனும் அடைத்து வைக்கப்பட்டுள்ளோம். சிறப்பு முகாம் எனப்படுவது சிறையை விட கொடுமையானதாக இருக்கிறது. இங்கு நடைபயிற்சி செய்வதற்கோ நண்பர்களை பார்ப்பதற்கோ முடியவில்லை.

சிறைவாசிகளோடு பழகுவதற்கு கூட எந்தவித அனுமதியும் வழங்கப்படுவதில்லை. சிறப்பு முகாமில் அடைக்கப்பட்ட நாளில் இருந்து பல மாதங்கள் ஆரம்பத்தில் அறையிலேயே தங்க வைக்கப்பட்டதால் பல நோய்களுக்கு உள்ளாகி உள்ளனர். எங்களது உடல் நலத்தை சரி செய்ய நடைபயிற்சி செய்ய அனுமதி கேட்டும்இ இதுவரை எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை. இதனால் நோய்வயப்பட்டுள்ளோம்.

கடந்த மாதம் திருச்சி அரசு மருத்துவமனை சென்று ஆய்வு செய்த போது ரத்த அழுத்தம் கொழுப்பு சிறுநீரகக் கல் மூட்டு வலி இருப்பதாக மருத்துவர்கள் சான்றிதழ் வழங்கியுள்ளார்கள். அதனால் கடந்த 22.1.2024 ஆம் தேதி அன்று மீண்டும் மாவட்ட ஆட்சியருக்கு நடைப்பயிற்சி செய்யவும் விளையாடவும் அனுமதி கேட்டு கடிதம் எழுதியும் இதுவரை எந்தவித பதிலும் இல்லை.

இந்த முகாமில் எங்களது உரிமைகளுக்கோ உணர்வுகளுக்கோ எந்த மதிப்பும் இல்லை. இதனால் தான் சாந்தன் உடல்நலக் குறைபாட்டால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அதே நிலை தொடர்ந்தால் நாங்கள் இங்கேயே இறப்பது உறுதி. எங்கள் உயிருக்கு ஏதேனும் ஆபத்து நேரிட்டால் அதற்கு இங்குள்ள அதிகாரிகளே பொறுப்பேற்க வேண்டும்.

அகதிகள் நேரடியாக பிற நாடு செல்வதற்கு இலங்கை அரசு பாஸ்போர்ட் வழங்கிட அனுமதி வழங்கி வருகிறது. அதற்கு இலங்கை தூதரகம் அழைத்து போய் கடவுச்சீட்டு பெறவும் அனுமதி கேட்டுள்ளோம். இதுவரை எந்த பதிலும் கிடைக்காததால் வேறு வழியின்றி இன்று முதல் கால வரையற்ற உண்ணா மறுப்பு போராட்டத்தை முன்னெடுக்க உள்ளோம்" என்று அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

murugan_letter.jpg

சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களை விடுதலை செய்ய கோரியும் சிறப்பு முகாமை இழுத்து மூடக் கோரியும் நாம் தமிழர் கட்சியின் தலைவரும் ஒருங்கிணைப்பாளருமான சீமான் தலைமையில் வருகின்ற பிப்.3 ஆம் தேதி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/175291

‘தமிழக கோயில்களில் இந்துக்கள் அல்லாதவர்களை அனுமதிக்கக் கூடாது’- பழநி கோயில் வழக்கில் ஐகோர்ட் உத்தரவு

2 months 2 weeks ago
1191044.jpg  
 

மதுரை: ‘கோயில்களில் இந்துக்கள் அல்லாதவர்களை அனுமதிக்கக் கூடாது. இது தொடர்பாக கோயில் நுழைவாயில், கொடிமரம் மற்றும் முக்கிய இடங்களில் தகவல் பலகை வைக்க வேண்டும்’ என பழநி முருகன் கோயில் வழக்கில் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பழநி மலைக்கோயில் பக்தர்கள் சங்க ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: ‘பழநி மலைக் கோயிலில் சில நாட்களுக்கு முன்பு பழநி பேருந்து நிலையம் அருகே பழக்கடை நடத்தி வரும் சாகுல் என்பவர் பர்தா அணிந்தவர்களை அழைத்து வந்து விஞ்ச் வழியாக மலைக்கு செல்ல டிக்கெட் வாங்க வந்தார். பர்தா அணிந்திருந்ததை பார்த்து, அவர்கள் இந்துக்கள் அல்லாதவர்கள் என்பதால் கோயில் ஊழியர் டிக்கெட் வழங்க மறுத்தார். அவருடன் சாகுல் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதையடுத்து இந்துக்கள் அல்லாதவர்கள் கோயிலுக்குள் நுழைய அனுமதியில்லை என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது. அந்தப் பலகை சில மணி நேரத்தில் அகற்றப்பட்டது.

சில நாட்களுக்கு முன்பு தஞ்சை பெரிய கோயில் வளாகத்தில் சில இளைஞர்கள் மாமிச உணவு சாப்பிட்டனர். உத்தரப் பிரதேசத்தில் இந்து கோயிலில் தொழுகை நடத்திய இஸ்லாமிய இளைஞர் கைது செய்யப்பட்டார். இந்து கோயில்கள் வழிபாட்டுக்குரிய இடமாகும். இந்துக்களின் உணர்வுகளுடன் சம்பந்தப்பட்டது. மசூதிகளில் இஸ்லாமியர்கள் அல்லாதவர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. மசூதி அருகே தொழுகை நடைபெறும் நேரமாக இருந்தாலும், இல்விட்டாலும் பேண்ட், வாத்தியம் இசைப்பதில்லை. இந்த முறை அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பின்பற்றப்பட வேண்டும். எனவே பழநி கோயில் மற்றும் உப கோயில்களில் இந்து அல்லாதவர்கள் நுழையக் கூடாது என அறிவிப்பு பலகை வைக்க உத்தரவிட வேண்டும்’ என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்த போது, பழநி கோயிலில் இந்துக்கள் அல்லாதவர்கள் நுழையக்கூடாது என மீண்டும் அறிவிப்பு பலகை வைக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார். இந்த மனு நீதிபதி எஸ்.ஸ்ரீமதி முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் அனந்த பத்மநாபன், வழக்கறிஞர் அருண் சுவாமிநாதன் ஆகியோர் வாதிடுகையில், “பெரும்பாலான அறநிலையத் துறை கோயில்களில் இந்துக்கள் அல்லாதவர்கள் நுழையக் கூடாது என அறிவிப்பு பலகைகள் இருக்கின்றன. ஆனால், சிலர் ஊடக வெளிச்சம் பெறும் நோக்கத்திலும், கோயில் வளாகத்திற்குள் நுழைந்து பிரச்சினை செய்கின்றனர்.

பழநி கோயிலுக்கு பக்தர்கள் விரதம் இருந்து வருகின்றனர். பழநி கோயில் சுற்றுலா தலம் அல்ல. இந்துக்களின் புனித இடமாகும். இங்கு இந்துக்கள் அல்லாதவர்கள் நுழைய அனுமதிக்கக் கூடாது” என்றனர்.

கூடுதல் அட்வகேட் ஜெனரல் வீராகதிரவன் வாதிடுகையில், “முருகனை இந்துக்கள் மட்டும் வழிபடுவதில்லை. முருகன் மீது நம்பிக்கை வைத்து பிற மதத்தினரை பின்பற்றுபவர்களும் கோயிலுக்கு வருகின்றனர். அரசியலமைப்பு சட்டப்பிரிவு 25 முதல் 28-ல் இந்திய குடிமகன்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகளை பாதுகாப்பது மதச்சார்பற்ற அரசு மற்றும் கோயில் நிர்வாகத்தின் கடமை. கோயில் நுழைவு அனுமதி சட்டத்தில், கோயில் என்றால் கருவறை எனத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. அங்குதான் இந்துக்கள் அல்லாதவர்களை அனுமதிக்கக் கூடாது. விஞ்ச் நிலையம், ரோப் கார் நிலையங்கள் கோயில் வளாகத்திற்கு வெளியே உள்ளன. இங்கு அறிவிப்பு பலகை வைப்பதால் எந்த பலனும் ஏற்படாது. இந்து மதத்தின் மீது நம்பிக்கை உள்ளவர்கள் தமிழகத்தில் எந்தக் கோயில்களுக்கும் சென்று அந்தந்த கோயில்களின் மரபுகளை பின்பற்றி தரிசனம் செய்யலாம். கொடிமரம் வரை கோயில் வளாகத்தில் யாரும் நுழைவதை தடுக்க முடியாது.

தமிழகத்தில் பல்வேறு கோயில்களில் இந்துக்கள் அல்லாதவர்கள் செல்கின்றனர். மதுரை மீனாட்சியம்மன் கோயிலிலில் ரூ.50 கட்டணம் செலுத்தி வெளிநாட்டினர் செல்கின்றனர். அவர்கள் கொடி மரம் வரை அனுமதிக்கப்படுகின்றனர். இந்த நடைமுறை பிற கோயில்களிலும் உள்ளது. கோயிலில் முக்கியத்துவம் அறியும் வகையில் சுற்றுலா வரும் வெளிநாட்டினர் உட்பட அனைவரும் அனுமதிக்கப்படுகின்றனர். இதனால் இந்துக்கள் அல்லாதவர்கள் நுழையக் கூடாது என அறிவிப்பு பலகை வைக்க வேண்டும் என்ற உத்தரவை திரும்ப பெற வேண்டும்” என்றார்.

இதேபோல், சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த ஆலய வழிபடுவோர் சங்கத் தலைவர் டி.ஆர்.ரமேஷ் சார்பில், இந்துக்கள் அல்லாதவர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கக் கூடாது என மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில் நீதிபதி எஸ்.ஸ்ரீமதி பிறப்பித்த உத்தரவு: ‘கோயில் நுழைவு அனுமதி சட்டம், அறநிலையத் துறை சட்டத்தில் இந்து கோயில்களில் இந்துக்கள் அல்லாதவர்கள் நுழைய அனுமதியில்லை என தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. கோயில்களில் பட்டியலில் துணை கோயில்கள், மண்டபங்களும் சேர்க்கப்பட்டுள்ளன. இப்பகுதிகளுக்கு செல்ல இந்துக்கள் மட்டுமே உரிமைப்பட்டவர்கள். கோயில் நுழைவு அனுமதிச் சட்டம், இந்துக்களை மட்டும் கோயிலுக்குள் அனுமதிக்க வேண்டும், இந்துக்கள் அல்லாதவர்களை அனுமதிக்க வேண்டாம் என்பது. இதனால் கோயில் நுழைவு அனுமதிச் சட்டம் மற்றும் அறநிலையத் துறை சட்டத்தை அதிகாரிகள் தீவிரமாக அமல்படுத்த வேண்டும்.

இந்து கடவுள்கள், இந்து மதம், விழாக்களில் சம்பந்தப்படாதவர்களை இந்துக்களின் வழிபாட்டு தலங்களில் அனுமதிக்கக் கூடாது. கிறிஸ்தவ ஆலயத்தில் கிறிஸ்தவர்கள் அல்லாதவர்கள், மசூதிகளில் இஸ்லாமியர்கள் அல்லாதவர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. இது அரசியலமைப்பு சட்டப்பிரிவு 15-ஐ மீறுவதாகது. மாறாக இந்தக் கட்டுப்பாடுகள் பல்வேறு மதங்களுக்கு இடையிலான மதநல்லிணக்கத்தையும், சமூகத்தில் அமைதியையும் நிலை நாட்டும்.

அரசியலமைப்பு சட்டப்பிரிவு 13, 15 குறிப்பாக 15(1)-ல் கூறப்பட்டுள்ள மற்ற மதத்தினரின் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என அரசு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அதில் கோயில் சேர்க்கப்படவில்லை. கோயில் சேர்க்கப்படாத நிலையில் கோயில்களை சுற்றுலா தலமாக கருத முடியாது. இந்து கடவுள், இந்து மதத்தின் மீது நம்பிக்கை வைத்து வருபவர்களை கோயிலுக்கு அனுமதிக்கலாம் என அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்து கடவுள், மதம் மீது நம்பிக்கை வைத்துள்ள பிற மதத்தினரை எப்படி அடையாளம் கண்டுபிடிப்பது? இந்து அல்லாதவர்களின் உணர்வுகள் குறித்து கவலைப்படும் அதிகாரிகள், இந்துக்களின் நம்பிக்கை குறித்து கவலைப்படுவதில்லை. இந்து மதம், இந்து கோயில்களின் பழக்க, வழக்கம், பாரம்பரியத்தை பாதுகாக்கவே அறநிலையத் துறை கொண்டுவரப்பட்டது. ஆனால், இந்துக்களின் மத உணர்வுகளை பாதுகாப்பதில் அதிகாரிகள் தோல்வி அடைந்துள்ளனர்.

அரசியலமைப்பு சட்டப்பிரிவு 25 முதல் 28 வரை ஒவ்வொரும் தங்களின் மதத்தை பின்பற்ற உரிமை வழங்கப்பட்டுள்ளது. பிறர் மத நம்பிக்கைகளில் இடையூறு ஏற்படுத்தக் கூடாது எனக் கூறப்பட்டுள்ளது. பாரத தேசத்தில் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள், பிற மதத்தினர் இடையிலான மதநல்லிணக்கம் எப்போதும் பாதுகாக்கப்படுகிறது. தஞ்சை கோயில் உள்பட பல்வேறு கோயில்களில் நடைபெற்ற சம்பவங்கள் அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளில் தலையிடுவதாகும். இந்துக்கள் தங்களின் மதத்தை சுதந்திரமாக பின்பற்றவும் உரிமை உண்டு. இந்து கோயில்களில் இதுபோன்ற அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் பாதுகாக்க வேண்டும். ஆனால், அறநிலையத் துறை அதிகாரிகள் அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளை பாதுகாப்பதில் தவறிவிட்டனர்.

பழநி மலைப்பகுதி முழுவதும் இந்துக்களின் புனித இடமாகும். இந்துக்கள் அல்லாதவர்களை மலையேற அனுமதித்து மலையேறிய பிறகு அவர்கள் இந்துக்கள் அல்லாதவர்கள் என தெரியவந்து தடுக்கப்பட்டால் அவர்கள் விரக்தி அடைவர். ஏன் முன்கூட்டியே சொல்வதில்லையா என கேள்வி எழுப்புவர். இதுபோன்ற நிலைய தவிர்க்க ரோப் கார் நிலையம், விஞ்ச் நிலையம் என அனைத்து இடங்களில் இந்துக்கள் அல்லாதவர்கள் நுழையக் கூடாது என அறிவிப்பு புலகை வைக்க வேண்டும். இந்த உத்தரவை தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் அமல்படுத்த வேண்டும்.

எனவே, இந்துக்கள் அல்லாதவர்கள் கொடிமரத்துக்கு அப்பால் அனுமதிக்கமாட்டார்கள் என கோயில் நுழைவாயில் மற்றும் முக்கிய பகுதிகளில் அறிவிப்பு பலகை வைக்க வேண்டும். இந்து மதத்தின் மீது நம்பிக்கை இல்லாதவர்கள், இந்துக்கள் அல்லாதவர்களை கோயிலுக்குள் அனுமதிக்கக் கூடாது. இந்துக்கள் அல்லாதவர்கள் யாராவது கோயிலுக்கு வந்தால் அவர்களிடம் இந்து கடவுள் மீதும், இந்து மதம் மீது நம்பிக்கை வைத்திருப்பதாகவும், கோயில் மரபுகளை பின்பற்றுவதாக உறுதிமொழி கடிதம் பெற வேண்டும். அதன் பிறகு அவர்களை கோயிலுக்குள் அனுமதிக்க வேண்டும். இவ்வாறு உறுதியளித்து கோயிலுக்கு செல்லும் இந்து அல்லாதவர்கள் குறித்து கோயில்களில் தனிப்பதிவேடு பராமரிக்க வேண்டும். கோயில் வளாகத்தில் ஆகம விதிகள், பழக்க, வழக்கங்களை தீவிரமாக பின்பற்ற வேண்டும்’ என்று நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

‘தமிழக கோயில்களில் இந்துக்கள் அல்லாதவர்களை அனுமதிக்கக் கூடாது’- பழநி கோயில் வழக்கில் ஐகோர்ட் உத்தரவு | Non-Hindus should not be allowed in TN temples: HC orders in Palani temple case - hindutamil.in

இந்தியாவிற்கு சீனாவிடமிருந்து வரும் முதல் ஆபத்து இலங்கையிலிருந்தே வரும் - வைகோ

2 months 2 weeks ago
31 JAN, 2024 | 10:50 AM
image
 

இந்தியாவிற்கு சீனாவிடமிருந்து வரும் ஆபத்து முதலில்  தெற்கிலிருந்தே வரும் என்பதை இந்திய மத்திய அரசாங்கம் உணரவேண்டும் என தமிழக நாடாளுமன்ற உறுப்பினரும் மதிமுக செயலாளருமான வைகோ தெரிவித்துள்ளார்.

செஞ்சீனா இலங்கைக்குள் நுழைந்துவிட்டது என அவர் தெரிவித்துள்ளார்செஞ்சீனா இலங்கைக்குள் நுழைந்துவிட்டது என அவர் தெரிவித்துள்ளார்

இந்த நாள் சோகமயமான நாள். 76 ஆண்டுகளுக்கு முன்னர் ஜனவரி 30 ஆம் நாள்இ இந்தியாவே கண்ணீர் கடலில் மிதந்த நாள். தேசப் பிதா உத்தமர் காந்தியடிகள் சுட்டுக்கொல்லப்பட்ட நாள்.

எங்கள் மாநிலத்திற்கு ஒரு ஆளுநர் வந்திருக்கிறார். எதையாவது உளறிக்கொண்டிருப்பதே அவருக்கு வழக்கம். அண்மையில் சொன்னார்இ இந்திய சுதந்திரம் காந்தியாரால் கிடைக்கவில்லை. நேதாஜி சுபாஷ்சந்திர போஸ் அவர்களால்தான் இந்திய சுதந்திரம் கிடைத்தது என்று ஆர்.என்.ரவி கூறினார்.

நான்இ நேதாஜியை மிகவும் நேசிப்பவன். கல்கத்தாவிற்கு இரண்டு முறை சென்று நேதாஜி கடைசியாக வாழ்ந்த அந்த வீட்டில் நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில் நேதாஜியின் பெருமைகளைப் பேசியிருக்கிறேன். நேதாஜிஇ சிங்கப்பூர் மைதானத்திலிருந்துஇ 

“ஓ! தேசப் பிதாவே! காந்தியடிகள் அவர்களேஇ இந்தியாவிற்கு விடுதலை கிடைப்பதற்கு இங்கே நானும் போராடிக் கொண்டிருக்கிறேன். நான் வெற்றிபெற வேண்டும் என்று ஆசி கூறுங்கள்” என்று வானொலியில் பேசிய நேதாஜிஇ மகாத்மா காந்தி அவர்களை தேசப் பிதா என்று முதன் முதலில் அழைத்தவர்.

ஆளுநரே அப்படி பேசவில்லை என்று மறுத்துவிட்டாரே  என்றார் பிரகலாத் ஜோசி.

வைகோ: அனைத்துப் பத்திரிகைகளிலும்இ அனைத்துத் தொலைக்காட்சிகளிலும் நான் கூறியது செய்தியாக வந்திருக்கிறது. அமைச்சர் பத்திரிகைகள் படிப்பதில்லை போலும்.

இந்திய ஜனநாயகத்திற்குப் பேராபத்து ஏற்பட்டிருக்கிறது. ஒரே நாடு; ஒரே தேர்தல்; ஒரே மொழி; ஒரே மதம் என்று இந்துத்துவா சக்திகள் சொல்கின்றன. அப்படி ஒரு நிலைமை ஏற்பட்டால்இ இந்தியாவின் ஜனநாயகம் அழிந்துவிடும்.

தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் நாள்தோறும் தாக்கப்படுகின்றனர். அவர்களைப் படகுகளோடு கைது செய்துஇ இலங்கை அரசு சிறையில் அடைக்கிறது. அவர்களது உயிருக்கும் பாதுகாப்பு இல்லை. ஏறத்தாழ 800-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் இதுவரை கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

இப்பொழுது மற்றொரு ஆபத்து நம்மைச் சுற்றி வளைத்துள்ளது. செஞ்சீனா இலங்கைக்குள் நுழைந்துவிட்டது. ஹம்பன்தோட்டா துறைமுகத்தையும் அமைத்துவிட்டது. நமக்கு சீனாவிடமிருந்து ஆபத்து முதலில் தெற்கே இருந்துதான் வரும். ஒன்றிய அரசு இந்த ஆபத்தை உணர வேண்டும்.

இலங்கையில் பூர்வீகத் தமிழர்கள் இலட்சக்கணக்கில் கொல்லப்பட்டுவிட்டார்கள். இதை நினைத்து இலங்கைப் பிரச்சினையை ஒன்றிய அரசு கையாள வேண்டும்.

இந்தியாவிற்கு சீனாவிடமிருந்து வரும் முதல் ஆபத்து இலங்கையிலிருந்தே வரும் - வைகோ | Virakesari.lk

80 ஆண்டுகளுக்குப் பிறகு கோவிலுக்குள் சென்ற பட்டியலினத்தவர்; புதிய கோவிலை கட்டும் பிற சமூகத்தினர்

2 months 2 weeks ago
  • மாயகிருஷ்ணன் க
  • பதவி,பிபிசி தமிழுக்காக
  • 9 மணி நேரங்களுக்கு முன்னர்

திருவண்ணாமலை அருகே அம்மன் கோவிலுக்குள் வந்து பட்டியலின மக்கள் வழிபாடு செய்ய தொடங்கியதால் மற்ற சமூக மக்கள் ஒன்று சேர்ந்து தங்களுக்கென புதிய கோவில் கட்ட தொடங்கியுள்ளனர்.

தண்டராம்பட்டு அடுத்த தென்முடியனூர் கிராமத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இந்த முத்து மாரியம்மன் ஆலயத்திற்குள் கடந்த 80 ஆண்டுகளாக பட்டியலின மக்கள் அனுமதிக்கப்படவில்லை.

80 ஆண்டு போராட்டத்துக்குப் பிறகு கடந்த ஆண்டில்தான் பட்டியலின மக்கள் கோவிலுக்குள் சென்று வழிபட அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த நிலையில், பட்டியலின மக்கள் கோவிலுக்குள் நுழைந்ததால் மற்ற பிரிவு மக்கள் தங்களுக்கென வேறொரு கோவிலை கட்டத் தொடங்கியிருப்பது புதிய சர்ச்சையை உருவாக்கி இருக்கிறது.

அம்மன் கோவிலில் பட்டியலின மக்கள் வழிபட மற்ற பிரிவினர் எதிர்ப்பு

கடந்த ஆண்டு பொங்கல் தினத்தன்று முத்து மாரியம்மன் கோவிலில் 12 நாட்கள் திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவில் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் எங்களையும் திருவிழா நடத்த ஒரு நாள் அனுமதிக்க வேண்டும் மற்றும் கோவில் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

ஆனால் பிற சமூக மக்கள் இதற்கு அனுமதி அளிக்கவில்லை. இதையடுத்து பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த மக்கள் கோவிலின் உள்ளே செல்ல தங்களை அனுமதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருவண்ணாமலை இந்து சமய அறநிலைத்துறை அலுவலகத்தில் மனு அளித்தனர்.

இந்த மனுவின் அடிப்படையில் இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் இப்பகுதியில் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் கடந்த 80 ஆண்டுகளாக பட்டியலின மக்கள் கோவிலுக்குள் அனுமதிக்க படவில்லை என தெரியவந்தது.

கோயில் வழிபாடு- சாதி பிரச்னை
படக்குறிப்பு,

பட்டியலினத்தவர்கள் கோவிலுக்குள் சென்றதற்கு பிற சமூகத்தினர் தனியாக ஒரு கோவிலைக் கட்ட முடிவெடுத்துள்ளனர்.

அதன் அடிப்படையில் பட்டியலின மக்கள் கோவிலுக்கு உள்ளே செல்லலாம் என்றும் கோவில் சாதி, மதத்திற்கு அப்பாற்பட்டது என்றும் கடந்த ஆண்டு ஜனவரி 30 ஆம் தேதி இந்து சமய அறநிலைத்துறை துறையினர் கூறினர்.

பிற சமூக மக்களால் எந்தவித அசம்பாவிதமும் நடைபெறாமல் இருக்க இந்த கிராமத்தை காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தலைமையில் காவல்துறையினர் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தனர்.

பட்டியலின மக்களை கோவிலுக்கு உள்ளே அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதை அறிந்த ஊர்பொதுமக்கள் கோவிலுக்கு உள்ளே அவர்களை அனுமதிக்க கூடாது, இந்த கோவில் எங்களுக்கு சொந்தமான கோவில் எனக்கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இருப்பினும் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் அதிகாரிகள் முன்னிலையில் முத்துமாரியம்மன் கோவில் கதவை திறந்து 80 ஆண்டுகளுக்குப் பிறகு கோவிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்தனர்.

கோயில் வழிபாடு- சாதி பிரச்னை
படக்குறிப்பு,

பட்டியலினத்தவர்கள் முத்துமாரியம்மன் கோவிலுக்குள் சென்றதையடுத்து, அந்த கோவிலில் வழிபாடு செய்வதைக் கைவிட்டனர்.

"பட்டியலினத்தவர் நுழைந்த கோவில் எங்களுக்கு வேண்டாம்"

இந்நிலையில் பல மாதங்களாக பிற சமூகத்தைச் சேர்ந்த மக்கள் முத்து மாரியம்மன் கோவிலில் வழிபாடு செய்வதை கைவிட்டனர். மேலும் அவர்கள் ஒன்று கூடி பேசி அந்த கோவில் நமக்கு வேண்டாம் என்றும் புதிதாக ஒரு கோவிலை கட்டி வழிபாடு செய்வோம் என்றும் முடிவெடுத்தனர். இது தொடர்பாக பெயர் கூற விரும்பாத, பிற சமூகத்தைச் சேர்ந்த நபர் பிபிசி தமிழிடம் தொலைபேசியில் பேசினார்.

“எங்கள் கிராமத்தில் பலதரப்பட்ட சமூகங்களை சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றோம். எங்களுக்குள் எந்த பிரச்னையும் இல்லை. நாங்களும் பிரச்னை செய்ய போவதில்லை. தேவையில்லாமல் எங்களுக்கு கோவில் சார்ந்த பிரச்னை ஏற்பட்டது. நாங்கள் பட்டியிலினத்தவர் என்று தனியாக இடம் ஒதுக்கி கோவில் கட்டித் தந்தோம். அதில் அவர்கள் தொடர்ந்து வழிபாடும் நடத்தி வந்தனர்."

"அப்படி இருக்கும் போது, தேவையில்லாமல் எங்கள் பகுதியில் இருக்கும் கோவிலுக்கு வழிபட வந்தது வருத்தத்தை அளித்தது. எனவே பிரச்னைக்குரிய அந்த கோவில் வேண்டாம் என்று முடிவு எடுத்து விட்டோம். அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளதால் அந்த கோவிலை அனைவரும் சொந்தம் கொண்டாடுகின்றனர்," என்று தன் கருத்தை வெளிப்படுத்தினார்.

இந்நிலையில், பிற சமூகத்தினர் இணைந்து தங்கள் சொந்த பணத்தை வைத்து இரண்டு சென்ட் நிலத்தை வாங்கி அதில் கோவில் கட்டவுள்ளனர்.

கோயில் வழிபாடு- சாதி பிரச்னை

இதுகுறித்து பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த நபர், பட்டியலினத்தவர்கள் அந்த கோவிலுக்குள் சென்று வழிபாடு செய்ததால் ஊர் பொதுமக்கள் யாரும் பட்டியலினத்தவர்களிடம் பேசுவதில்லை என்று தெரிவித்தார்.

பெயர் குறிப்பிட விரும்பாத அவர் பிபிசி தமிழிடம் பேசிய போது, "சாமி எல்லாவற்றுக்கும் பொதுவானது தானே? நாங்கள் அப்படித்தான் நினைத்து கும்பிட்டோம். இந்நிலையில் அவர்கள் தனியாக கோவில் கட்ட முடிவெடுத்தது அவர்கள் விருப்பம். இதில் நான் என்ன சொல்ல முடியும்” என்று கேள்வி எழுப்பினார்.

வழக்கறிஞரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருவண்ணாமலை மாவட்ட நிர்வாக குழு உறுப்பினருமான முத்தையன், ராமர் கோயிலுக்கு அனைத்து சமூகத்தினரும் செல்லும் போது ஏன் முத்துமாரியம்மன் கோயிலுக்குள் அனைவரும் செல்லக் கூடாது என்று கேள்வி எழுப்பினார்.

"தனியாக இடம் வாங்கி அதில் புதிதாக கோவில் கட்டினால் அதில் தவறு ஒன்றும் இல்லை. ஆனால் ஏற்கனவே வழிபாடு செய்து கொண்டிருந்த கோவிலை தவிர்த்து அது வேண்டாம் என்று கூறி ஒதுங்கி வேறு ஒரு கோவிலை கட்டுவது என்பது ஏற்றுக்கொள்ள இயலாது," என்று கூறிய அவர், இதை “இடதுசாரி இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் எதிர்க்கிறோம்,” என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், "தற்பொழுது கூட அயோத்தியில் நடைபெற்ற ராமர் கோவில் விசேஷத்திற்கு அனைத்து சமூக மக்களுமே சென்றார்கள். இது எல்லோருக்குமே தெரியும். இங்கு எல்லோரும் இணக்கத்துடன் வாழ வேண்டும். இது போன்ற நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெறாமல் இருக்க அரசு போதுமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். மேலும், சமூக நல்லிணக்கத்துடன் அனைவரும் வாழ, சமாதான பேச்சுவார்த்தை நடத்தி மக்களுக்கு புரிதலை ஏற்படுத்த வேண்டும்," என்றார்.

கோயில் வழிபாடு- சாதி பிரச்னை
படக்குறிப்பு,

சிபிஐஎம் கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் முத்தையன், ராமர் கோயிலுக்குள் அனைத்து சமூகத்தினரும் அனுமதிக்கப்படும் போது ஏன் முத்துமாரியம்மன் கோயிலுக்குள் அனைவரும் செல்லக் கூடாது என்று கேள்வி எழுப்பினார்.

மத்திய அரசு வழக்கறிஞர் சங்கர் கோயில் வழிபாடு குறித்த விதிகளை விளக்கினார். யார் ஒருவரும் தனியாக கோயில் கட்டிக் கொள்வதை சட்டம் அனுமதிக்கிறது என்றாலும், சாதி அடிப்படையில் பாகுபாடுகள் காட்டுவது சட்டப்படி குற்றம் என்று அவர் கூறினார்.

பிபிசி தமிழிடம் பேசிய அவர், "இந்து சமய அறநிலையத்துறை சட்டப்பட்டி இரண்டு வகை கோவில்கள் உள்ளன‌. ஒன்று பொது கோவில், மற்றொன்று தனிநபர் கோவில். இதில் இந்திய அரசியல் அமைப்புச் சட்டப்படி தனி நபர் அல்லது அவர் சார்ந்தவர்கள் இணைந்து தனியாக கோவில் கட்டி வழிபடுவதை யாரும் தடுக்க முடியாது. தனியார் கோவில்களான மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவில், ஸ்ரீபுரம் கோவில் உள்ளிட்ட பல கோவில்களிலும் பொதுஜன வழிபாடு தற்போது நடைபெற்று வருகிறது. இதற்கு அவர்கள் அனுமதி வழங்கி உள்ளனர்," என்று விளக்கினார்.

கோயில் வழிபாடு- சாதி பிரச்னை
படக்குறிப்பு,

சாதி, மொழி அடிப்படையில் யாரையும் விலக்கி வைப்பது தவறு என மத்திய அரசு வழக்கறிஞர் சங்கர் கூறினார்.

"பொதுக் கோவில்கள் எனப்படும் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களுக்கு அனைவரும் வந்து வழிபாடு செய்யலாம். அதாவது உண்டியல் வைத்து நிதி சேர்த்து அதை கோவில் புனரமைப்பு பணிகளுக்கு பயன்படுத்தினால் அது அனைவரும் வந்து வழிபடும் கோவில் என்று எளிதாக புரியும்படி கூறலாம்."

"ஆனால் உண்டியல் இல்லாமல் தனி நபர்கள் கட்டி அவர்களைச் சார்ந்தவர்கள் மட்டுமே வந்து வழிபாடு செய்யவும் சட்டத்தில் இடம் உள்ளது. எனினும், சாதி, மொழி அடிப்படையில் யாரையும் விலக்கி வைப்பது தவறு. ஆனால் எங்களுக்கான கோவிலை நாங்கள் வழிபாடு செய்வதற்காக மட்டும் கட்டிப் பராமரித்து வைத்துக்கொள்வோம் என்ற நிலைப்பாட்டில் ஒரு கோவிலைக் கட்டினாலும், அதை யாராலும் தடுக்க முடியாது." என்றார்.

திருவண்ணாமலை: 80 ஆண்டுகளுக்குப் பிறகு கோவிலுக்குள் சென்ற பட்டியலினத்தவர்; புதிய கோவிலை கட்டும் பிற சமூகத்தினர் - BBC News தமிழ்

சாந்தன் உள்ளிட்ட நால்வரையும் இலங்கைக்கு அனுப்ப வேண்டுகோள்

2 months 2 weeks ago
சாந்தனின் தாயாரின் கடிதத்தை மேற்கோள்காட்டி தமிழக முதல்வருக்கு சிறீதரன் கடிதம் - சாந்தன் உள்ளிட்ட நால்வரையும் இலங்கைக்கு அனுப்பிவைக்க வேண்டுகோள்

Published By: RAJEEBAN   29 JAN, 2024 | 08:55 PM

image
 

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ள இலங்கை தமிழர்களை விடுவிக்குமாறு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, சாந்தனின் தாயாரின் கோரிக்கைக் கடிதத்தை மேற்கோள்காட்டி நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்  கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளார்.

கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளதாவது

let.jpg

 

மறைந்த பாரதப்பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்டு 32 வருடங்கள் சிறைத்தண்டனையின் பின்னர் கடந்த 2022-11-11 அன்று இந்திய உச்சநீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட சாந்தன் அவர்களின் தாயாரால் எனக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள உருக்கம் நிறைந்த கோரிக்கை கடிதம் மீதான தங்களின் கரிசனையையும் கவனத்தையும் கோரிநிற்கின்றேன்.

32 வருடகால சிறைத்தண்டனையின் பின்னர் நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டு ஒருவருடம் கடந்துள்ள நிலையில்  அவ்வழக்கிலிருந்து விடுதலையான இலங்கை பிரஜைகளான சாந்தன் முருகன் ரொபேர்ட் பயஸ் ஜெயக்குமார் ஆகிய நால்வரையும் இலங்கைக்கு வரவழைப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட எந்த முயற்சிகளும் பலனளிக்காததால் இன்றுவரை அவர்கள் திருச்சி சிறப்புமுகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர் என்பதை கரிசனையோடு தெரிவித்துக்கொள்ளவிரும்புகின்றேன்.

இந்நிலையில் தனது இளமைக்காலம் முழுவதையும் சிறையில் கழித்து முதுமைக்காலம் முழுவதையும் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய சிறுநீரக கல்லீரல் பாதிப்பினால் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சாந்தன் தற்போது மருத்துவமனையில் தீவிரசிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 33 ஆண்டுகளாக தனது மகனை காணாது பரிதவித்திருக்கும் சாந்தனின் தாயார் தனது 77 வயதில் மகனை ஒருதடவையாவது நேரில் பார்வையிடவேண்டும் எனவும் அவரை இலங்கைக்கு வரவழைக்க ஆவண செய்யுமாறும் உருக்கமான வேண்டுகோளை விடுத்துள்ளார்.

lett1.jpg

தமிழக முதல்வராக பொறுப்பேற்றதிலிருந்து ஈழத்தமிழர்கள் விடயத்தில் அதிக கரிசனை கொண்டு செயற்பட்டுவரும் நீங்கள் இவ்விடயத்தை மனிதாபிமான அடிப்படையில் அணுகி நோய்வாய்பட்டிருக்கும் சாந்தனின் உடல்நிலை கருதியும் அவரது குடும்பத்தினரின் உணர்வுநிலைப்பட்ட எதிர்பார்ப்பை கருத்தில்கொண்டும் சாந்தன் உள்ளிட்ட நால்வரையும் இலங்கைக்குஅனுப்பிவைக்க ஆவண செய்யவேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன்.

https://www.virakesari.lk/article/175107

நான் முதல்வராக வந்தவுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில், தமிழர்கள் மட்டுமே விளையாடுவார்கள் - அவ்வணியில் நானும் விளையாடுவேன்

2 months 3 weeks ago

தமிழகத்தில் நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில், தமிழர்கள் மட்டுமே விளையாடுவார்கள் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பார் சீமான் பேசியுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடைபெற்ற வீரவணக்க பொதுக்கூட்டத்தில், அவர் இவ்வாறு பேசியுள்ளார்.

 

பொதுக்கூட்டத்தில் பேசிய சீமான், ''கட்சி தொடங்கிய காலத்தில் இருந்து, எவரோடும் சமரசம் இல்லை, எவரோடும் கூட்டணியும் இல்லை. நோட்டுக்கும், சீட்டுக்கும் எவரோடும் பேரமில்லை. சாவோ, வாழ்வோ தனித்துதான். வெற்றியோ, தோல்வியோ தனித்துதான். ஒத்தையடி பாதையில்தான் செல்வேன்.

 

CSK னு ஒரு கிரிக்கெட் அணி இருக்குல. அதுல, ஒருத்தர் கூட தமிழர் கிடையாது. நாம் ஆட்சிக்கு வந்தால், 11 வீரர்களும் தமிழனாகதான் இருப்பான், உங்க அண்ணனும் வந்து விளையாடுவேன்'' எனக் கூறினார்.

 

சீமானின் இந்த பேச்சு, தற்போது தமிழகத்தில் நெட்டிசன்களின் பேசுபொருளாக மாறியுள்ளது

https://www.madawalaenews.com/2024/01/i_858.html

Checked
Fri, 04/19/2024 - 23:41
தமிழகச் செய்திகள் Latest Topics
Subscribe to தமிழகச் செய்திகள் feed