ஊர்ப்புதினம்

கர்ப்பப்பை வாய்ப்புற்றுநோய்க்கான தடுப்பூசிகள் பற்றாக்குறை!

4 days 3 hours ago
24 MAR, 2024 | 03:55 PM
image
 

கர்ப்பப்பைவாய்ப் புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்க பெண்களுக்கு வழங்கப்படும் தடுப்பூசிகள் பற்றாக்குறையாக இருப்பதாக தெரிவிக்கப்ட்டுள்ளது . 

சுமார் 8 மாதங்களாக அந்த தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக வைத்தியர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக கடந்த வருடம் முதல் தடுப்பூசிப் பணிகள் முடங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பல மாதங்களாக இந்த நோய் தொடர்பான தடுப்பூசிகளுக்கு உலகளாவிய தட்டுப்பாடு நிலவுவதாக அவர் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும் இந்த தடுப்பூசிகளை  எதிர்வரும் ஏப்ரல் மாத தொடக்கத்தில் இலங்கையில் பெற்றுக் கொள்ள முடியுமென அவர் மேலும் தெரிவித்தார் . 

ஒன்றரை வருட காலத்திற்கு தேவையான தடுப்பூசிகள் இவ்வாறு இறக்குமதி செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/179586

தமிழ் பொது வேட்பாளருக்கான நிபந்தனை வரைவு தயாராகிறது - சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவிப்பு

4 days 12 hours ago
23 MAR, 2024 | 10:45 PM
image

ஆர்.ராம் 

ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளர் ஒருவரை களமிறக்கப்படும்போது அவருடைய நோக்கம் உட்பட தென்னிலங்கை தலைமைகளுடன் பேரம்பேசுவதற்கான நிபந்தனை வரைவொன்று தயாரிக்கப்படவுள்ளதாக ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் ஊடகப்பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன்  தெரிவித்துள்ளார்.

அத்துடன், தமிழ் பொதுவேட்பாளர் ஒருவர் நிறுத்தப்படுவதானது வெற்றி பெறுவதற்கு அல்லவெனவும், தேசிய இனப்பிரச்சினையை தென்னிலங்கைத் தலைமைகள் புறக்கணித்தமையாலேயே என்றும் சுரேஷ் பிரேமச்சந்திரன் குறிப்பிட்டுள்ளதோடு தென்னிலங்கைத் தலைவர்களுடன் பேசுவதற்கு தயாராகவுள்ளதாகவும் கூறினார்.

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளர் ஒருவரை களமிறக்குவதற்கான முயற்சிகள் குறித்து கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச, தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க ஆகியோர் களமிறங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

ஆனால், இந்த மூன்று தலைவர்களும் தமிழ் மக்கள் நீண்டகாலமான நீடித்துவருகின்ற இனப்பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வினைக் காணவேண்டும் என்று போராடி வருகின்றார்கள் என்பதை நன்கு அறிந்தவர்கள்.

எனினும் அவர்களில் எவருமே தற்போது வரையில் இந்த நாட்டில் இனப்பிரச்சினையொன்று காணப்படுகின்றது. அதற்கு தீர்வு காணப்பட வேண்டும் என்பதை பகிரங்கமாகக் கூறுவதற்கோ தமிழ் மக்களின் அரசியல் பிரதிநிதிகளுடன் பேச்சுக்களை முறையாக முன்னெடுப்பதற்கோ தயாராக இல்லை. அவர்கள் தற்போது தமிழ் மக்களுக்கு இனரீதியான பிரச்சினைகள் இல்லை. இந்த நாட்டில் பொருளாதாரப் பிரச்சினைகளே காணப்படுகின்றன என்பதை மையப்படுத்தியே கருத்துக்களை வெளியிட்டு வருகின்றார்கள்.

அத்துடன், தமிழ் மக்களின் அரசியல் பிரதிநிதிகளுடன் பேச்சுக்களை மேற்கொள்வதற்கும் தயாராக இல்லை. இவ்வாறான நிலையில் தான் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் மும்முனை தேர்தல் காணப்படுவதால் சிறுபான்மை மக்களின் வாக்குகள் தீர்மானிக்கும் சக்தியைக் கொண்டிருக்கின்றது. 

ஆகவே, சிறுபான்மை மக்களின் வாக்குகள் வெற்றியை தீர்மானிப்பதில் பெரும் செல்வாக்கைச் செலுத்தவுள்ளன. எனவே தான் தென்னிலங்கை தலைவர்களுக்கு தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கையை வெளிப்படுத்தும் முகமாக அவர்களின் வெற்றியை தீர்மானிக்கும் வாக்குகள் அவர்களுக்கு செல்வதை தடுக்கும் முகமாகவே தமிழர்களின் சார்பில் பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத்துவதற்கு முயற்சிகளை எடுத்துள்ளோம்.

அவ்வாறு வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதால் எமக்கு தேர்தலில் வெற்றி கிடைக்காது என்பதை நன்கே அறிந்துள்ளோம். ஆனால் தமிழ் மக்கள் அனைவரும் ஏகோபித்து வாக்களிக்கும்போது தென்னிலங்கைத் தலைவர்கள் பெரும்பான்மையை உறுதி செய்வது மிகக் கடினமாக இருக்கும்.

ஆகவே, அவர்கள் தமிழ் மக்களை நோக்கி வரவேண்டிய தேவை ஏற்படும். அப்போது தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளை உள்ளடக்கிய நிபந்தனைகளை தமிழ் பொதுவேட்பாளர் கொண்டிருப்பார். அதனடிப்படையில்  அதனை மையப்படுத்தி பேச்சுக்களை முன்வரும் வேட்பாளருடன் நடத்துவதற்கு தயாராகவே உள்ளோம். 

அதற்காக, தமிழ் பொதுவேட்பாளர் கொண்டிருக்க வேண்டிய நிபந்தனைகள் சம்பந்தமான வரைவொன்று தயாரிக்கப்படவுள்ளது. அத்துடன் தென்னிலங்கை தலைவர்கள் அல்லது வேட்பாளர்கள் பேச்சுக்களை முன்னெடுப்பதற்கு தயாராகின்றபோது அவர்களுடன் பேச்சுக்களை முன்னெடுப்பதற்கான உயர்மட்டக் குழுவொன்றும் உருவாக்கப்படவுள்ளது என்றார்.

https://www.virakesari.lk/article/179529

நாட்டில் வேகமாக பரவும் காசநோய்! கொழும்பு, கம்பஹா, களுத்துறையில் அதிகளவானோர் அடையாளம்!

4 days 13 hours ago
23 MAR, 2024 | 10:25 PM
image

நாட்டில் வேகமாக காசநோய் கரவிவருவதாகவும் கொழும்பு, கம்பஹா, களுத்துறை ஆகிய மாவட்டங்களில் அதிகளவானோர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் கொழும்பு மத்திய மார்புநோய்களுக்கான சிகிச்சை பிரிவின் மாவட்ட காசநோய் கட்டுப்பாட்டு அதிகாரி வைத்தியர் ஆர்.எம்.எம்.சரத் பண்டார தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், 

காச நோய் என்பது ஒரு வகை பாக்டீரியா நோய்க்கிருமிகளால் ஏற்படும் ஒரு நோயாகும். இந்நோய் வேகமாக பரவக்கூடிய ஒரு தொற்று நோயாகும். 

உமிழ்நீர், சளி மூலமாக பரவக்கூடிய இந்நோய் தற்போது இலங்கையின் பல்வேறு மாவட்டங்களில் வேகமாக பரவி வருகிறது.

இருப்பினும் மேல் மாகாணத்தில் கொழும்பு ,  கம்பஹா மற்றும் களுத்துறை உள்ளிட்ட மாவட்டங்களிலேயே அதிகளவான நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கொழும்பு  மாவட்டத்தில் மட்டக்குளி, மோதரை, மாளிகாவத்தை, தெமட்டகொடை, பொரள்ளை மற்றும் வனாத்தமுல்ல உள்ளிட்ட பிரதேசங்களிலேயே அதிகளவான நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்த நோய் வேகமாக பரவக் கூடியது என்பதால் வீட்டில் உள்ள ஒருவர் பாதிக்கப்பட்டாலும் முழுக் குடும்ப உறுப்பினர்களையும் பரிசோதிப்பது மிகவும் அவசியம்.

2 வாரங்களுக்கு மேல் தொடரும் இருமல், உணவில் நாட்டமின்மை,  உடல் எடை குறைதல், சளியுடன் இரத்தம் வெளியேறுதல் உள்ளிட்ட அறிகுறிகள் தோன்றினால் உடனடியாக அருகில் உள்ள வைத்தியரிடம் பரிசோதனை மேற்கொண்டு நோயை உறுதி செய்ய வேண்டும்.

வைத்தியரின் ஆலோசனைகளின் கீழ் தொடர்ந்து 6 மாதங்களுக்கு தீவிர சிகிச்சை பெற்று வருவதால் இந்த நோயை குணப்படுத்த முடியும்.

இந்த நோயானது பாதிப்பு தன்மை அற்றது என்பதுடன் இந்த நோய் அறிகுறிகளை விரைவில் அறிந்து கொண்டால் இதனை குணப்படுத்துவது மிகவும் எளிது. ஆனால் இந்த நோய் அறிகுறிகளை அறிந்து கொள்ள தாமதமானால் இதனை குணப்படுத்துவது சிரமமாகலாம் என அவர் மேலும் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/179539

தமிழக முதல்வருடனான சந்திப்பில் தாமதம் - வடக்கு கடற்றொழிலாளர்கள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் கரிசனை

4 days 13 hours ago
இந்திய தேர்தல் அறிவிப்பால் தமிழக முதல்வருடனான சந்திப்பில் தாமதம் - வடக்கு கடற்றொழிலாளர்கள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் கரிசனை
23 MAR, 2024 | 10:44 PM
image

(ஆர்.ராம்)

இலங்கை, இந்திய கடற்றொழிலாளர்களுக்கு இடையிலான முறுகல் நிலைமைகள் தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டானுக்கும், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கும் இடையிலான சந்திப்பொன்று நடத்தப்படுவதற்கு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் இந்தியப் பொதுத்தேர்தல் அறிவிப்பால் தாமதமடைந்துள்ளது. 

இலங்கைக் கடற்பரப்பிற்குள் சட்டவிரோதமாக பிரவேசிக்கும் இந்திய மீனவர்கள் இழுவைமடிப் படகுகளைப் பயன்படுத்தி கடற்றொழிலில் ஈடுபடுவதால் கைது செய்யப்படுவதோடு, அவர்களது உபகரணங்களும் கையகப்படுத்தப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் எல்லை தாண்டும் மீனவர்கள் மீது நடவடிக்கைகளை  எடுக்க வேண்டும் என்றும் நாட்டின் கடல்வளத்தைப் பாதுகாக்க வேண்டும் என்று கோரியும் போராட்டங்கள் பல இடம்பெற்று வந்தன. அதேநேரம், தமிழகத்திலும் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. 

இந்நிலையில், இருநாட்டு கடற்றொழிலார்கள் விவகாரத்திற்கு விரைந்து முற்றுப்புள்ளி வைப்பதற்கு பாண்டிச்சேரி ஜுனியன் பிரதேசத்தின் மீன்பிடி மற்றும் மீனவர் நலன் கே.லக்ஷ்மி நாராயணன்; அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு கடிதமொன்றை அனுப்பியிருந்தார்.

குறித்த கடிததத்தின் பிரகாரம், தமிழக முதல்வர் ,மு..க.ஸ்டாலினுக்கும் அமைச்சர் டக்ளஸ{க்கும் இடையில் சந்திப்பொன்றை நடத்துவதென்றும் அதில் இருதரப்பும் இணக்கப்பாடுகளை எட்டுவதென்றும் கூறப்பட்டிருந்தது.

அதனடிப்படையில், அமைச்சர் டக்ளஸ் பாண்டிச்சேரி செல்வதற்கான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையி இந்திய பாராளுமன்றத்திற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், முதலமைச்சர் ஸ்டாலின் அமைச்சர் டக்ளஸ் உள்ளிட்ட இந்த விவகாரத்துடன் தொடர்புடைய எந்தவொரு தரப்பினரையும் சந்திப்பதாக இருந்தால் இந்திய தேர்தல்கள் ஆணையகத்தின் முன் அனுமதி பெற வேண்டியது அந்நாட்டுச் சட்டமாகவுள்ளது.

அந்தவகையில், இருதரப்பு அரசியல் ரீதியான பேச்சுவார்த்தைகள் தாமதமாகியுள்ளது. அத்துடன், விசேடமாக தமிழக மீனவர்கள் எல்லை தாண்டமாட்டார்கள் என்ற உத்தரவாதக் கடிதத்தினை பாண்டிச்சேரி மற்றும் தமிழக முதலமைச்சர்கள் வழங்குவதற்கு உறுதிய அளித்துள்ளன. 

இந்தியாவில் 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படவுள்ளதாக இந்திய தலைமை தேர்தல்கள் ஆணையகம் அறிவித்துள்ளதோடு ஏப்ரல் 19ஆம் திகதி முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/179534

வவுனியாவில் காசநோயால் கடந்த வருடம் மூன்று பேர் இறப்பு; 58 பேர் பாதிப்பு - காசநோய் கட்டுப்பாட்டு வைத்திய அதிகாரி

5 days 1 hour ago

Published By: DIGITAL DESK 3    23 MAR, 2024 | 04:11 PM

image
 

காசநோயினால் வவுனியாவில் கடந்தவருடம் மூன்று பேர் உயிரிழந்துள்ளதுடன், 58 பேர் நோயாளர்களாக இனம் காணப்பட்டுள்ளதாக வவுனியா காசநோய் கட்டுப்பாட்டு வைத்திய அதிகாரி கே.சந்திரகுமார் தெரிவித்தார்.

வவுனியாவில் இன்று சனிக்கிழமை (23) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

இம்முறை “ஆம் எங்களால் காசநோயை முடிவுக்கு கொண்டுவர முடியும்” எனும் தொனிப்பொருளில் உலக காசநோய் தினம் மார்ச் 24 ஆம் திகதி நினைவுகூரப்படுகின்றது. 

இலங்கையை பொறுத்தவரை ஒரு இலட்சம் பேரில் 62 பேர் காசநோயாளர்களாக இனம்காணப்படவேண்டும். 

இருப்பினும் 4 ஆயிரம்பேர் வரை இனம் காணப்படாமல் இருக்கின்றனர். நாட்டில் இறப்பிற்கு காரணமானமூன்றாவது நோயாக இது காணப்படுகின்றது.

கடந்தவருடம் வவுனியா மாவட்டத்தில் 58 நோயாளர்கள் இனம்காணப்பட்டனர். அதில் மூன்றுபேர் உயிர் இழந்துள்ளனர். 

தொடர்ச்சியாக இரு வாரங்களிற்கு மேற்ப்பட்ட இருமல் மாலைநேரத்தில் காய்ச்சல், உணவில் நாட்டம்இன்மை, உடல்நிறை குறைவடைதல், சளியுடன் ரெத்தம் வெளியேறல். இப்படியான அறிகுறிகள் தென்பட்டால் அது காசநோயாக இருக்கலாம்.

மேற்கூறிய அறிகுறிகள் இருந்தால் அருகில் உள்ள பொதுவைத்தியசாலைகளுக்கு சென்று சாதாரண சளிப்பரிசோதனையினை இலவசமாக செய்துகொள்வதன் மூலம் இந்த நோயினை இனம் காணலாம். 

எந்தவித அறிகுறியும் இல்லாமலும் இந்த நோய் உடலில் இருக்கலாம். குறிப்பாக ஏற்கனவே நோய் ஏற்ப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள், அல்லது நாட்பட்ட நோய் கொண்டவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள், சிறுநீரக நோயாளர்கள், மூட்டுவாதம் போன்ற நோய்கள் உள்ளவர்களுக்கு அறிகுறிகள் வெளிப்படாமல் இந்த நோய்கிருமி தங்ககூடும். 

அப்படியானவர்களுக்கு பரிசோதனையினை செய்வதன் மூலம் அதனை கண்டறியலாம். 

ஒருவருக்கு காசநோய் ஏற்ப்பட்டால் ஆறுமாதத்திற்கு நேரடி கண்காணிப்புடனான சிகிச்சையின் மூலம் மருந்துகளை பெற்றுக்கொண்டால் அதனை முற்றாக குணப்படுத்தலாம். அது தொடர்பில் அச்சம் கொள்ளத்தேவையில்லை. சிகிச்சைகளை எடுக்கத்தவறினால் அது தீவிரமடைந்து இறப்பிற்கு வழிவகுக்கும். என்றார்.

https://www.virakesari.lk/article/179515

திங்கட்கிழமை முதல் பாடசாலை மாணவர்களுக்கு மதிய உணவு!

5 days 3 hours ago
susil-premajayantha-300x200.jpg

பாடசாலை மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கும் வேலைத்திட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் தெரிவித்தார்.

நாட்டில் உள்ள 1,700,000 பாடசாலை மாணவர்களுக்காக இந்த வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படுவதாகவும் அத்துடன், இந்த வேலைத்திட்டத்திற்காக 26 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

https://thinakkural.lk/article/296893

கனடாவில் வசிக்கும் இலங்கை குடும்பம் ஒன்று அளித்த பாரிய நன்கொடை

5 days 4 hours ago

ரூ. 470 மில்லியன் பெறுமதியான அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய தீவிர சிகிச்சை பிரிவுக்கான(ICU) 157 படுக்கைகள் இந்த வாரம் (மார்ச் 21) சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரனவிடம் கையளிக்கப்பட்டது.

இந்த படுக்கைகள் கனடாவில் வசிக்கும் இலங்கை குடும்பம் ஒன்றினால் சீதுவையில் உள்ள சுபுவத் அரணாவின் இயக்குநரும் நிறுவனருமான அருட்தந்தை டாரல் கூங்கேவிடம் ஒப்படைக்கப்பட்டது.

34 அரசு மருத்துவமனைகளுக்கு

சுகாதார அமைச்சகத்தின் தகவலின்படி, ICU படுக்கைகள் ஒவ்வொன்றும் ரூ. 3 மில்லியன் பெறுமதி வாய்ந்தவை என்பதுடன், 34 அரசு மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனடாவில் வசிக்கும் இலங்கை குடும்பம் ஒன்று அளித்த பாரிய நன்கொடை | A Huge Donation Sri Lankan Family Ln Canada

நீர்கொழும்பு, ராகம போதனா வைத்தியசாலை, சிலாபம், புத்தளம், சீதுவ, கம்பஹா, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் குருநாகல் ஆகிய மருத்துவமனைகளுக்கு இந்த ICU படுக்கைகள் வழங்கப்பட உள்ளன.

சுகாதார அமைச்சரின் நன்றி

நன்கொடையை ஏற்றுக்கொண்ட சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன, கனடாவில் வசிக்கும் பட்ரிக் நீல்கமல் பெர்னாண்டோ மற்றும் அவரது குடும்பத்தினருக்கு மிகவும் தேவையான நன்கொடைக்காக நன்றி தெரிவித்தார்.

கனடாவில் வசிக்கும் இலங்கை குடும்பம் ஒன்று அளித்த பாரிய நன்கொடை | A Huge Donation Sri Lankan Family Ln Canada

https://ibctamil.com/article/a-huge-donation-sri-lankan-family-ln-canada-1711175253

இலங்கையில் கொண்டாடப்பட்ட பாகிஸ்தானின் தேசிய தினம்

5 days 9 hours ago
23 MAR, 2024 | 02:04 PM
image
 

பாகிஸ்தான் தேசிய தின நிகழ்வு இன்று (23) கொழும்பில் உள்ள பாகிஸ்தான் இஸ்லாமிய குடியரசின் உயர்ஸ்தானிகராலயத்தில் நடைபெற்றது. 

இந்நிகழ்வில் இலங்கையைச் சார்ந்த பாகிஸ்தான் சமூகத்தினர் கணிசமானோர் கலந்துகொண்டனர். 

ஆகஸ்ட் 14, 1947 அன்று பாகிஸ்தான் உருவாக்கத்தின் அடிப்படையாக அமைந்த வரலாற்று சிறப்புமிக்க 1940 லாகூர் தீர்மானத்தின் நினைவாக ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 23ஆம் திகதி பாகிஸ்தானின் தேசிய தினம் கொண்டாடப்படுகிறது.

இம்முறை தேசிய தின நிகழ்வில் பாகிஸ்தானின் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு நிலை) ஃபஹீம்-உல் அஸீஸ் பாகிஸ்தானின் தேசிய கீதம் இசைக்கப்படும்போது பாகிஸ்தான் தேசியக்கொடியை உயர்த்தி விழாவை ஆரம்பித்தார். 

இந்நிகழ்வில், பாகிஸ்தான் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் பாகிஸ்தானின் தேசிய தினத்தை குறிக்கும் விசேட செய்திகளும் வாசிக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் பாகிஸ்தானின் உயர்ஸ்தானிகர் கருத்து தெரிவிக்கையில், பாகிஸ்தான் கொள்கைகளின் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டியதோடு தமது தாய்நாட்டின் முன்னேற்றம் மற்றும் செழிப்பு ஆகியவற்றில் மட்டுமல்லாமல், இரு நட்பு நாடுகளான பாகிஸ்தான் மற்றும் இலங்கையை மேலும் நெருக்கமாக கொண்டுவருவதிலும் பாகிஸ்தான் சமூகம் தங்கள் பங்கை திறம்பட ஆற்றுமாறும் குறிப்பிட்டார். 

பாகிஸ்தானுக்கும் இலங்கைக்கும் இடையில் நிலவும் ஆழமான நட்பையும் உயர்ஸ்தானிகர் இதன்போது நினைவுகூர்ந்தார். எதிர்காலத்திலும் இரு நட்பு நாடுகளும் இரு நாடுகளினதும் நலனுக்காக இந்த உறவினை மேலும் பலப்படுத்தும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

fd6551b5-265c-4218-b14a-28a20e89c2b4.jpg

https://www.virakesari.lk/article/179507

பிள்ளைகளை ஞானத்துடன் வளர்க்க வேண்டும் - வட மாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தின் சமூக மருத்துவ ஆலோசகர்

5 days 9 hours ago
23 MAR, 2024 | 02:17 PM
image

(எம்.நியூட்டன்)

பிள்ளைகளை ஞானத்துடன் வளர்க்க வேண்டும். அதை விடுத்து அவர்களை அடித்து துன்புறுத்தி வளர்க்கின்றபோதுதான் அவர்கள் குடும்பத்தை விட்டுப் பிரிகின்ற நிலை ஏற்படுகிறது என வட மாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தின் சமூக மருத்துவ ஆலோசகரான மருத்துவர் திருமகள் தெரிவித்தார்.

தேவை நாடும் மகளிர் அமைப்பின் சர்வதேச மகளிர் தின நிகழ்வு இன்று வியாழக்கிழமை (21) மல்லாகத்திலுள்ள அலுவலகத்தில் இடம்பெற்றது. 

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், 

இன்றைய சூழலில் பிள்ளைகளை அன்புடனும் அக்கறையுடனும் வளர்க்க வேண்டும். அதை விடுத்து அவர்களை அச்சுறுத்தி, துன்புறுத்தி வளர்ப்பதால் அவர்கள் குடும்பத்தை விட்டு வெளியேறும் சூழல் ஏற்படுகின்றது. இதனால் பல சமூக விரோத செயற்பாடுகளுக்கு உள்ளாகிறார்கள். இது ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. 

எனவே, பிள்ளைகளை வளர்க்கும்போது ஞானத்துடன் வளர்க்க வேண்டும். இந்த விடயத்தில் சிறுவர்கள் மீது பெற்றோர்கள் கூடிய கவனம் செலுத்தும் அதேவேளை சிறுவர்கள் தொடர்பில் செயற்படும் அமைப்புகள் கூடிய அக்கறையுடன் தொடர் கண்காணிப்புடன் செயற்படவேண்டும் என்றார்.

இந்நிகழ்வில் பிரதேச செயலாளர்கள், மகளிர் அமைப்பின் உத்தியோகத்தர்கள், சுகாதார வைத்திய அதிகாரிகள், மகளிர் அமைப்பின் பிரதிநிதிகள் கலந்துகொண்டிருந்தனர்.

பிரதம விருந்தினர், சிறப்பு விருந்தினர்களின் உரைகளை தொடர்ந்து சிறு கைத்தொழில் முயற்சியாளர்களின் பங்கேற்பிலான கண்காட்சியும் இடம்பெற்றது.

https://www.virakesari.lk/article/179505

சீன பல்கலைக்கழக பிரதிநிதிகள் கிழக்கு பல்கலைக்கழகத்துக்கு விஜயம் : ஒப்பந்தம் கைச்சாத்து

5 days 12 hours ago
23 MAR, 2024 | 10:44 AM
image

சீனாவின் முன்னணி பல்கலைக்கழகமான யுனான் பல்கலைக்கழக பிரதிநிதிகள் (22) இலங்கை கிழக்கு பல்கலைக்கழகத்துக்கு விஜயம் செய்து கலாசார மற்றும் மொழி ரீதியான பரிமாற்றங்களை செய்வதற்கான நிலையம் (Confucius Unit) ஸ்தாபிக்கும் ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டனர். 

இந்நிகழ்வு கிழக்கு பல்கலைக்கழக சர்வதேச விவகாரங்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் வந்தாறுமூலையில் அமைந்துள்ள பல்கலைக்கழக மூதவை கட்டட தொகுதியில் இடம்பெற்றது.

IMG-20240322-WA0140.jpg

யுனான் பல்கலைக்கழக உப பீடாதிபதி ஹூ ஜின்மிங்க் தலைமையிலான குழுவினர் கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் வ.கனகசிங்கம், பிரதி உபவேந்தர், பதிவாளர் உட்பட சர்வதேச விவகாரங்கள் திணைக்கள இணைப்பாளர் ஆகியோருடன் கிழக்கு பல்கலைக்கழகத்தில் இந்த நிலையம் அமைப்பது தொடர்பான கலந்துரையாடல் உபவேந்தர் அலுவலகத்தில் நடைபெற்றது.

அத்துடன் சீன பல்கலைக்கழக பிரதிநிதிகளுக்கும் கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தருக்கும் இடையிலான கூட்டம் சுவாமி விபுலானந்தர் அழகியல் கற்கைகள் நிறுவக பணிப்பாளர், பீடாதிபதிகள், பதிவாளர், நூலகர், நிதியாளர் அத்துடன் சர்வதேச விவகாரங்கள் திணைக்கள இணைப்பாளர் ஆகியோரின் பங்குபற்றலுடன் பல்கலைக்கழக சபா மண்டபத்தில் நடைபெற்றது. 

IMG-20240322-WA0141.jpg

இதன்போது, இந்த நிலையத்தின் செயற்பாடுகள் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டது. 

கிழக்கு பல்கலைக்கழகம் சார்பாக உபவேந்தர் பேராசிரியர் வ.கனகசிங்கம், யுனான் பல்கலைக்கழகம் சார்பாக அதன் உபபீடாதிபதி ஹூ ஜின்மிங்க் ஆகியோர் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.

அவ்வேளை கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தரின் எண்ணக்கருவில் உருவாக்கப்பட்டு அவரது நெறிப்படுத்தலில் இப்பல்கலைக்கழக ஊழியர் மேம்பாட்டு நிலையத்தினால் முன்னெடுக்கப்பட்ட நிருவாக தலைமைத்துவ பயிற்சிநெறிகளை பூர்த்திசெய்த கல்விசார் உத்தியோகத்தர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நல்லையா மண்டபத்தில் நடைபெற்றது. 

ஊழியர் மேம்பாட்டு நிலையத்தின் பணிப்பாளர் பேராசிரியர் சிதம்பரேசன் தலைமையில் நடைபெற்ற இச்சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் ஹூ ஜின்மிங்க் பிரதம அதிதியாக கலந்துகொண்டு சான்றிதழ்களை வழங்கி வைத்தார். 

இதில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றதுடன், விஜயத்தின் ஓர் அங்கமாக Confucius Unit நிலையத்துக்கான உத்தேச இடம் சீன பிரதிநிதிகளால் பார்வையிடப்பட்டது.

மேற்படி நிலையம் இலங்கை கொழும்பு பல்கலைக்கழகம் உட்பட உலகின் பல்வேறு பகுதிகளிலும் இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

IMG-20240322-WA0138.jpg

IMG-20240322-WA0142.jpg

IMG-20240322-WA0139.jpg

https://www.virakesari.lk/article/179488

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் திடீர் விபத்து, அவசர சிகிச்சை பிரிவுக்கான புதிய கட்டடம் திறப்பு!

5 days 12 hours ago
23 MAR, 2024 | 10:42 AM
image

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் திடீர் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவுக்கான புதிய கட்டடம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இன்று (23) திறந்துவைக்கப்பட்டது. 

நெதர்லாந்து அரசின் மென்கடன் திட்டத்தின் கீழ் இந்த புதிய கட்டடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. சுமார் 4000 மில்லியன் ரூபாய் செலவில் இக்கட்டடம் நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது.

புதிய கட்டடத் தொகுதியில் அவசர சிகிச்சைப் பிரிவு, தீவிர சிகிச்சைப் பிரிவு, சத்திர சிகிச்சை கூடங்கள், குருதி சுத்திகரிப்பு பிரிவு, கதிரியக்கப் பிரிவு, சிறுவர்களுக்கான விசேட சிகிச்சைப் பிரிவு, குழந்தைகளுக்கான சிகிச்சை பிரிவு மற்றும் நோயாளர் விடுதி ஆகியன உள்ளடக்கப்பட்டுள்ளன.

யாழ்ப்பாண மாவட்டத்தில் அமைந்துள்ள நான்கு ஆதார வைத்தியசாலைகளில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையும் ஒன்றாகும். இது “ஏ” தர ஆதார வைத்தியசாலையாக உள்ளது. 

ஆதார வைத்தியசாலைகளின் வசதிகள் குறைவாக காணப்படுவதால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையை அதிகளவில் நாட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில், தற்போது புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள அவசர மற்றும் திடீர் விபத்து பிரிவின் ஊடாக பலர் நன்மையடையவுள்ளனர்.

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் புதிய கட்டடத்தை திறந்து வைத்ததன் பின்னர், ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினர் சிகிச்சைப் பிரிவுகளை சென்று பார்வையிட்டனர். 

இந்த வைத்தியசாலையின் ஊடாக அதிகபட்ச பலனை பெற்றுக்கொள்ள வேண்டுமென வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ்  இதன்போது தெரிவித்தார். 

குறிப்பாக, புதிய சிகிச்சை பிரிவில் சிடி ஸ்கேன் மற்றும் தீவிர சிகிச்சை பிரிவுகள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளமையானது இப்பகுதி மக்களுக்கான ஒரு வரப்பிரசாதம் எனவும் ஆளுநர் தெரிவித்தார். 

ஆகவே, மத்திய அரசாங்கத்தின் “அனைவருக்கும் ஆரோக்கியம்” என்ற கொள்கையை அனைத்து மக்களிடையேயும் கொண்டு செல்வதை உறுதி செய்வதற்காக கடுமையாக உழைக்க வேண்டும் என ஆளுநர் மேலும் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/179484

நாட்டில் 12 சதவீதமான முதியவர்களுக்கு பற்கள் இல்லையாம்

5 days 12 hours ago

Published By: DIGITAL DESK 3

23 MAR, 2024 | 08:58 AM
image
 

நாட்டிலுள்ள  12 சதவீதமான முதியவர்கள் அனைத்தை  பற்களையும் இழந்துள்ளதாக சுகாதார அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.

இதனை உலக வாய் சுகாதார தினத்தை முன்னிட்டு நடைபெற்ற விழாவில் தெரிவித்துள்ளார்.

பல் ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை பாடசாலை மட்டத்தில் கற்பிக்க வேண்டும். வாழ்நாள் முழுவதும் வாய் பல் ஆரோக்கியத்தை சரியாக பேணுவது முக்கியம். நாட்டில் இன்று ஏராளமானோர் வாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதுபோன்ற நோய்களைத் தடுக்க சரியான சுகாதாரப் பழக்கங்களைப் பின்பற்றுவதன் அவசியம் என வலியுறுத்தியுள்ளார்.

https://www.virakesari.lk/article/179475

வெளிநாட்டவர்கள் இலங்கை சாரதி அனுமதிப்பத்திரத்தை விமான நிலையத்திலேயே பெற்றுக்கொள்ள வாய்ப்பு - போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன

5 days 13 hours ago
22 MAR, 2024 | 08:49 PM
image

இலங்கையில் சாரதி அனுமதிப்பத்திரம் கோரி விண்ணப்பிக்கும் வெளிநாட்டவர்களுக்கு ஏப்ரல் 15 ஆம் திகதி முதல் விமான நிலையத்திலிருந்து வெளியில் வரும்போதே சாரதி அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொடுப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுமென போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்தார்.

வீதி விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதிமன்ற நடவடிக்கைகளின்றி உடனடியாக இழப்பீடு வழங்கும் வேலைத்திட்டமும் மார்ச் 01 ஆம் திகதியிலிருந்து ஆரம்பிக்கப்பட்டுமென இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.

அதற்கமைய, விபத்து இடம்பெற்று ஒரு வருடத்திற்குள் சம்பந்தப்பட்ட காப்புறுதி நிறுவனத்திற்கு விண்ணப்பிப்பதன் மூலம் 05 இலட்சம் ரூபா வரையான இழப்பீட்டுத் தொகையை பெற்றுக்கொள்ள முடிவதோடு, அந்த தொகையை நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள காப்புறுதி நிறுவனத்தின் எந்தவொரு கிளையிலும் பெற்றுக்கொள்ள கூடிய வசதிகள் வழங்கப்படும் எனவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

 

ஜனாதிபதி ஊடக மையத்தில் வெள்ளிக்கிழமை (22) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

இங்கு மேலும் கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர், 

"ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைய வீதி விபத்துக்களை மட்டுப்படுத்தும் வகையிலான பல திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. வீதி விபத்துக்களால் பாதிக்கப்படுபவர்கள் பல பிரச்சினைகளை எதிர்கொள்வதாகவும் அறியப்பட்டுள்ளது. 

அதற்கமைய, இலங்கை காப்புறுதி ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவிற்கும் காப்புறுதி நிறுவனங்களுக்கும் இடையில் இடம்பெற்ற தொடர் கலந்துரையாடலின் பலனாக நீதிமன்ற நடவடிக்கையின்றி விரைவாக இழப்பீடு வழங்கும் வேலைத் திட்டம் மார்ச் 1 ஆம் திகதியிலிருந்து ஆரம்பிக்கப்பட்டது. மார்ச் 1 ஆம் திகதிக்கு பின்னரான விபத்துக்கள் தொடர்பில் மாத்திரமே இத்திட்டம் செயற்படுத்தப்படும்.

விபத்து இடம்பெற்று ஒரு வருடத்திற்குள் சம்பந்தப்பட்ட காப்புறுதி நிறுவனத்திற்கு விண்ணப்பிப்பதன் மூலம், நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள காப்புறுதி நிறுவனத்தின் எந்தவொரு கிளையிலிருந்தும் அதிகபட்சமாக 05 இலட்சம் ரூபா வரையான இழப்பீட்டுத் தொகையை பெற்றுக்கொள்ள முடியும். 

மாறாக பாதிக்கப்பட்டவர் மேலதிகமான இழப்பீட்டுத் தொகையை பெற எதிர்பார்க்கும் பட்சத்தில் அவர்கள் நீதிமன்ற நடவடிக்கைகளை நாட வேண்டும்.

இந்த நடவடிக்கை குறித்து இலங்கை பொலிஸார் மற்றும் பிரதேச செயலாளர்கள் கிராம சேவை அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

 

மேலும், குடிவரவுத் திணைக்களம், விமானப் போக்குவரத்து சேவைகள் அதிகார சபை மற்றும் சுற்றுலா அமைச்சு ஆகியன இலங்கையில் சாரதி அனுமதிப்பத்திரத்தைப் பெற விரும்பும் வெளிநாட்டவர்களுக்கு ஏப்ரல் 15 ஆம் திகதி முதல் விமான நிலையத்தில் விண்ணப்பிப்பதற்கும் சாரதி அனுமதிப்பத்திரத்தை வழங்குவதற்கும் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது. 

அதன்படி மாதமொன்றுக்கான சாரதி அனுமதி பத்திரங்களுக்கு 25 டொலர்களும், மூன்று மாதங்களுக்கான சாரதி அனுமதி பத்திரங்களுக்கு 50 டொலர்களும், 6 மாதங்களுக்கு 75 டொலர்களும், ஓரு வருடத்திற்கு மேலான அனுமதி பத்திரங்களுக்கு 200 டொலர்களும் அறவிடப்படவுள்ளது.

 

மேலும், ஏப்ரல் 10 முதல் திறன் மதிப்பீட்டு புள்ளிகள் வழங்குவதற்கான வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படும் வரையில்,  போக்குவரத்து விதி மீறல்களுக்கு அபராதம் செலுத்தும் தபால் நிலையங்கள், குற்றத்தின் தன்மை, உரிய பொலிஸ் நிலையம், சாரதி அனுமதிப் பத்திர விவரம் மற்றும் தொலைபேசி இலக்கம்  உள்ளிட்ட  தகவல்கள் தேசிய வீதி போக்குவரத்து அதிகார சபையின் தகவல் கட்டமைப்பின் இணைக்கப்படவுள்ளன. 

அந்த தரவுகளின்படி, விபத்து குறித்த குறுஞ்செய்தி மற்றும் விபத்து தொடர்பான காணொளிகள் தேசிய வீதி போக்குவரத்து பாதுகாப்பு அதிகார சபையினால் உரிய தொலைபேசி இலக்கங்களுக்கு வட்ஸ் அப் மூலம் அனுப்பப்படும்.

 

வீதி விபத்துகளைக் குறைப்பதற்கான விழிப்புணர்வு பாடசாலை மட்டத்திலிருந்து ஆரம்பிக்கப்பட வேண்டும். அதன்படி, கல்வி அமைச்சு, போக்குவரத்து அமைச்சு மற்றும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு ஆகியவை இணைந்து ஏப்ரல் 3ஆம் திகதி முதல் ஒவ்வொரு பாடசாலைகளிலும் வீதி பாதுகாப்பு ஒன்றியங்களை நிறுவ தீர்மானிக்கப்பட்டளது. பல்வேறு படிமுறைகளின் கீழ் இத்திட்டத்திற்காக பாடசாலை மாணவர்களுக்கு ஜனாதிபதி பதக்கம் வழங்குவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

 

ஜனாதிபதி பதக்கம் வெள்வோர் சாரதி அனுமதி பத்திரத்திற்கான எழுத்துமூல பரீட்சையிலிருந்து விடுவிக்கப்படுவர். கல்வியற் கல்லூரிகளிலும் வீதி போக்குவரத்து தொடர்பிலான ஒன்றியங்களை நிறுவி மேற்கூறியது போன்ற செயற்பாடுகளை முன்னெடுக்கவும் எதிர்பார்த்திருக்கிறோம். 

அதற்கு மேலதிகமாக வீதி விதிமுறைகள் மற்றும் வீதி போக்குவரத்து தொடர்பிலான அறிவை பாலர் பாடசாலை மட்டத்தில் பெற்றுகொடுப்பதற்கான ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்படுகின்றன. 

 

தேசிய வீதிப் போக்குவரத்து அதிகார சபை 1998 இல் நிறுவப்பட்டது. தற்போதைய நிலைமைகளுக்கமைய அதற்காக ஏற்பாடுகளை செய்ய முடியாது என்பதால் தேசிய வீதிப் போக்குவரத்து அதிகார சபையை வீதிப் போக்குவரத்து ஆணைக்குழுவாக மாற்றியமைப்பதற்கான அங்கீகாரத்தை போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன மேற்கொண்டுள்ளார். அதனை விரைவில் பாராளுமன்றத்தில் சமர்பித்து நிறைவேற்றிக்கொள்ளவும் எதிர்பார்க்கப்படுகிறது.

https://www.virakesari.lk/article/179468

இரண்டு மில்லியன் மக்களுக்கு இலவச காணி உரிமை வழங்க நடவடிக்கை!

5 days 23 hours ago
ranil-4-700x375.jpg இரண்டு மில்லியன் மக்களுக்கு இலவச காணி உரிமை வழங்க நடவடிக்கை!

இரண்டு மில்லியன் மக்களுக்கு இலவச காணி உரிமை வழங்கும் தேசிய வேலைத்திட்டத்தை இந்த ஜூன் மாதத்திற்குள் பூர்த்தி செய்யுமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் ஒட்டகபுலம் பகுதியில் இன்று முற்பகல் இடம்பெற்ற உறுமய சுதந்திர காணி உறுதி வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

2 மில்லியன் மக்களுக்கு இலவச காணி உரிமை வழங்கும் உறுமய வேலைத்திட்டத்தின் கீழ் யாழ்ப்பாண மக்களுக்காக 408 காணி உறுதிகள் கையளிக்கப்பட்டிருந்தன. இதேவேளை, யாழ்.பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் பயன்படுத்தப்பட்ட காணி விடுவிப்பும் இன்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் பலாலி விமானப்படை தளத்தில் இடம்பெற்றது.

யாழ்ப்பாண கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விக்கிரமசிங்க காணி விடுவிப்புக்கான உத்தியோகபூர்வ ஆவணங்களை ஜனாதிபதியிடம் கையளித்தார், அதனைத் தொடர்ந்து காணி உரிமையாளர்களுடன் சிநேகபூர்வ உரையாடலில் ஈடுபட்ட ஜனாதிபதி, விடுவிக்கப்பட்ட காணியில் மரக்கன்று ஒன்றையும் நாட்டிவைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2024/1374512

 

இந்திய உயர் ஸ்தானிகராலயம் மற்றும் இலங்கை தொழில் நுட்ப அமைச்சுடன் இணைந்து ஏற்பாடுசெய்துள்ள டிஜிட்டல் பொது உட்கட்டமைப்பு மாநாடு

6 days 2 hours ago
22 MAR, 2024 | 06:05 PM
image

இலங்கை தொழில் நுட்ப அமைச்சுடன் இந்திய உயர் ஸ்தானிகராலயம் இணைந்து டிஜிட்டல் பொது உட்கட்டமைப்பு குறித்த மாநாடு ஒன்றினை மார்ச் 26 ஆம் திகதி கொழும்பில் ஒழுங்கமைத்துள்ளது.

சேவைகள் வழங்கலுக்கான இயலுமை, உள்ளீர்ப்பினை வலுவாக்குவதன் ஊடாக சமூகங்களை வலுவூட்டல் மற்றும் கண்டுபிடிப்புகள் மூலம் பொருளாதாரத்தை வளமாக்கல் ஆகியவற்றுக்காக டிஜிட்டல் பொது உட்கட்டமைப்பின் நிலைமாற்றத்திற்கான ஆற்றல்களை பயன்படுத்துவது குறித்து இந்த மாநாடு ஆராய்கின்றது.

இந்த மாநாடானது அங்குரார்ப்பண அமர்வுடன் ஆரம்பமாகும் நிலையில், இந்த அமர்வில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சிறப்புரை நிகழ்த்தவுள்ளார். அதனைத் தொடர்ந்து இரண்டு குழு நிலைக் கலந்துரையாடல்கள் நடைபெறவுள்ளன.

முதலாவதாக நடைபெறும் “Accelerating Digital Sri Lanka’ என்ற தலைப்பிலான கலந்துரையாடலில் டிஜிட்டல் பொது உட்கட்டமைப்பானது எவ்வாறு ஆட்சியினை இலகுவாக்குகின்றது என்பது தொடர்பாகவும், குறித்த சேவைகளை மக்கள் இலகுவாக பயன்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்தும் ஆராயப்படுகின்றது.

அத்துடன் “Unlocking the Digital Stack” என்ற தலைப்பிலான இரண்டாவது குழு நிலை கலந்துரையாடலில் முதல் நிலை தளங்கள், இணைப்பு தொழில்நுட்பம், சந்தை மற்றும் ஆட்சி உள்ளிட்டவற்றில் டிஜிட்டல் பொது உட்கட்டமைப்பின் பயன்பாடு குறித்தும் கவனம் செலுத்தப்படும். 

இந்த இரு அமர்வுகளும் முறையே தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கௌரவ கனக ஹேரத் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ ஹர்ஷ டி சில்வா ஆகியோரால் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளன.

டிஜிட்டல் உட்கட்டமைப்பு மற்றும் ஆட்சி  குறித்த நோக்கினையும், சிறந்த அறிவு மற்றும் அனுபவம் ஆகியவற்றை வழங்குவதற்காக பல்வேறு துறைகளையும் அடிப்படையாகக் கொண்ட இந்திய, இலங்கை நிபுணர்கள் இந்த இரு கலந்துரையாடல்களிலும் பங்கேற்கின்றனர்.

அத்துடன் இந்த மாநாட்டினை

https://www.virakesari.lk/article/179453

பாலியல் உறவில் ஈடுபடும் வயது குறைப்பு

6 days 3 hours ago

குற்றவியல் சட்டத்தில் முன்மொழியப்பட்ட திருத்தங்களின் ஊடாக பாலியல் செயற்பாட்டில் ஈடுபடக்கூடிய பெண் பிள்ளைகளின் வயதை 14 வருடங்களாக குறைக்க மற்றும்  ஆண் குற்றவாளிகளின் வயது 22க்கு குறைவாக இருந்தால் தண்டனையை தளர்த்த வேண்டும் என்றும் முன்மொழியப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளமை பற்றி  விசேட கவனம் செலுத்துவதாக  ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளர்,  நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச  இன்று (22) எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இது தொடர்பான உரையாடல் பின்வருமாறு.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச –

2024 பெப்ரவரி 13 ஆம் திகதி வெளியிடப்பட்ட தண்டனைச் சட்டத்தின் 363 மற்றும் 364 ஆவது சரத்தின் 19 ஆம் அத்தியாயத்தின் திருத்தம் தொடர்பான சட்டமூலத்தை அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் கவனத்திற்குக் கொண்டு வர விரும்புகிறேன்.

இந்த மசோதாவின் மூலம், பாலியல் செயற்பாட்டிற்காக வயது குறைந்த சிறுமிகளின் வயதை 16 இலிருந்து 14 ஆகக் குறைப்பது, 22 வயதுக்குட்பட்ட ஆண் குற்றவாளிகளுக்கான தண்டனையைக் குறைப்பது, அது போல தண்டனைச் சட்டத்தின் பிரிவு 363 ஆண் மற்றும் பெண் பலாத்காரத்தை ஒன்றாக வைப்பதற்குப் பதிலாக , பெண் பலாத்காரத்திற்கான தனிச்சட்டங்களும் மற்றும் ஆண்களுக்கு தனித்தனி சட்டங்கள், தனித் திருத்தங்கள் மூலம் ஆண்களுக்கு இருக்க வேண்டிய சட்டங்களும்  முன்வைக்க மிகவும் முக்கியமான விஷயங்களாக ஆளும் கட்சியின் பிரதம அமைப்பாளரின் கவனத்திற்கு நான் கொண்டு வருகிறேன்.

மேலும், குற்றவியல் சட்டத்தின் 363 மற்றும் 364 பிரிவுகளை திரும்பப் பெறுமாறு அரசை கேட்டுக் கொள்கிறேன். குழந்தைகள், பெண்கள் மற்றும் ஆண்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும்.

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க 

அவரது விளக்கத்தை நீதி அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்வேன். இது எதிர்க்கட்சிகளின் கருத்தா என்று எனக்குத் தெரியவில்லை. ஜே.வி.பி விபச்சாரத்தை சட்டப்பூர்வமாக்க முயற்சிப்பதால், அதற்கு எப்படி எதிர்வினையாற்றுவது என்று தெரியவில்லை. இது ஒரு சிக்கலான பிரச்சினை. இது கலந்தரையாட  வேண்டிய விஷயம். எனவே, அதைச் செய்வதில் இரண்டு கதைகள் இல்லை.

Tamilmirror Online || பாலியல் உறவில் ஈடுபடும் வயது குறைப்பு

மட்டக்களப்பின் இடம்பெற்ற வீதி விபத்தில் பிரபல சிவில் சமூக செயற்பாட்டாளர் பலி!

6 days 3 hours ago
22 MAR, 2024 | 07:05 AM
image
 

மட்டக்களப்பில் பிரபல சிவில் சமூக செயற்பாட்டாளரான சிறிபாலு வியாழக்கிழமை (21) செங்கலடி பதுளை வீதியில் இடம்பெற்ற விபத்தொன்றில் சிக்கி பலியாகியுள்ளார்.

செங்கலடி, கொம்மாதுறை பகுதியைச் சேர்ந்த சிவில் செயற்பாட்டாளரான தம்பிநாயகம் சிறிபாலு வயது (54) எனும் குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

மட்டக்களப்பு,  கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செங்கலடி -  பதுளை வீதியில் புலையவெளி என்ற இடத்தில் இடம்பெற்ற வாகன விபத்திலேயே இவர் பலியாகியுள்ளார் .

இவர் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் மக்களுக்காக நடைபெற்ற போராட்டங்கள் முதல் கொண்டு பல சிவில் சமூக செயற்பாடுகளில் ஈடுபட்டவர் என்பதோடு மட்டக்களப்பு மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களிலும் பணியாற்றி வருகிறார்.

கரடியனாறு பகுதியில் இருந்து பதுளை வீதி வழியாக செங்கலடி நோக்கி தனது மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்தபோது வீதி ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கனரக வாகனமொன்றுடன் மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து மோதிய போது ஏற்பட்ட விபத்தில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்துள்ளார்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக செங்கலடி பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.நசீர் சடலத்தை பார்வையிட்டு விசாரணை நடாத்தியதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கரடியனாறு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மட்டக்களப்பின் இடம்பெற்ற வீதி விபத்தில் பிரபல சிவில் சமூக செயற்பாட்டாளர் பலி! | Virakesari.lk

கனடா சென்ற அநுரகுமார திஸாநாயக்கவுக்கு சிறப்பான வரவேற்பு !

6 days 3 hours ago
22 MAR, 2024 | 07:16 AM
image
 

கனடாவுக்கு தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க விஜயம் மேற்கொண்டுள்ளார்.

கனடாவின் டொரன்டோ மற்றும் வான்கூவர் ஆகிய இரு பிரதான நகரங்களில் நாளை 23 சனிக்கிழமை மற்றும் 24 ஆம் திகதி ஞாயிற்றுக்கிமைகளில் நடாத்தப்படவிருக்கும் இலங்கையர்களுடனான சந்திப்புக்களில் பங்கேற்பதற்காக அநுரகுமார திஸாநாயக்க கனடா சென்றுள்ளார்.

கனடாவுக்கு சென்றுள்ள அநுர குமார திசாநாயக்கவுக்கு டொரன்டோ விமான நிலையத்தில் கனடாவாழ் இலங்கையர்களால் அமோக வரவேற்பளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

WhatsApp_Image_2024-03-22_at_7.03.58_AM.கனடா சென்ற அநுரகுமார திஸாநாயக்கவுக்கு சிறப்பான வரவேற்பு ! | Virakesari.lk

14 வயது மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் தந்தை கைது : வவுனியாவில் சம்பவம்

6 days 3 hours ago
22 MAR, 2024 | 12:36 PM
image
 

வவுனியா, தோணிக்கல் கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் 14 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டமை தொடர்பில் சிறுமியின் 36 வயதுடைய தந்தை கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சிறுமி, தான் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டதாக வியாழக்கிழமை (21) பாடசாலைக்குச் சென்று தனது ஆசிரியரிடம் தெரிவித்துள்ளார்.

அதன் பின்னர், இவ்விடயம் தொடர்பாக பாடசாலை நிர்வாகத்தால் வவுனியா பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதன் பிறகு, விரைந்து செயற்பட்ட பொலிஸார் சிறுமியை விசாரணை செய்ததில், தாய் வீட்டில் இல்லாதபோதே சிறுமி துஷ்பிரயோகம் செய்யப்பட்டமை தெரியவந்துள்ளது. 

அதனையடுத்து, பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். 

அத்தோடு, சிறுமி வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் வவுனியா தலைமைப் பொலிஸ் நிலைய சிறுவர், பெண்கள் பிரிவு பொலிஸார் தீவிரமாக விசாரித்து வருவதோடு, கைதான சந்தேக நபரை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்தனர். 

14 வயது மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் தந்தை கைது : வவுனியாவில் சம்பவம்   | Virakesari.lk

ஈஸ்டர் தாக்குதலை யார் மேற்கொண்டது என்பது எனக்குத் தெரியும் – மைத்திரி

6 days 7 hours ago
maithripala-300x200.jpg

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை உண்மையில் யார் மேற்கொண்டது என்பது தனக்குத் தெரியும் எனவும் நீதிமன்றம் கோரிக்கை விடுத்தால், அதனை வௌிப்படுத்துவதற்கு தான் தயார் எனவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கண்டியில் இன்று அது தொடர்பில் தௌிவுபடுத்தினார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் எவ்வாறு நடைபெற்றது என்பது தனக்குத் தெரியும் எனவும் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்படும் பயங்கரவாதிகள் தொடர்பிலான விடயம் சரியானது எனவும் மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டார்.

தன்னால் கைது செய்யப்பட்டவர்களே நீதிபதிகள் குழாத்தினால் விசாரணைக்கு உட்படுத்தப்படுவதாகக் குறிப்பிட்ட அவர், உயிர்த்த ஞாயிறு தாக்குதலை உண்மையாகவே யார் செய்தார் என்பதனை எவரும் இன்னும் கூறவில்லை என தெரிவித்தார்.

இது தொடர்பில் கருத்துக் கூறுமாறு நீதிமன்றம் தன்னிடம் கோரிக்கை விடுத்தால், அல்லது உத்தரவு பிறப்பித்தால், யார் இந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதலை மேற்கொண்டார்கள் என்பதனை கூறுவதற்கு தான் தயாராகவுள்ளதாக அவர் கூறினார்.

எவ்வாறாயினும், அதனை மிகவும் இரகசியமாக பேணுவது நீதிபதிகளின் பொறுப்பு எனவும் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

https://thinakkural.lk/article/296776

Checked
Thu, 03/28/2024 - 16:25
ஊர்ப் புதினம் Latest Topics
Subscribe to ஊர்ப்புதினம் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr