ஊர்ப்புதினம்

இ.போ.ச - தனியார் இணைந்த நீண்ட தூர பேருந்து சேவை விவகாரம் - டக்ளஸின் தலையீட்டையடுத்து சுமுகமான தீர்வு

2 days 14 hours ago
15 APR, 2024 | 04:46 PM
image
 

இ.போ.ச மற்றும் தனியார் இணைந்த பேருந்து சேவையை முன்னெடுப்பதில் இருந்துவரும் இழுபறி நிலையையடுத்து, யாழ். நீண்ட தூர தனியார் பேருந்து சேவையில் ஈடுபட்டுவரும் பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்துவதற்கான முறையான பேருந்து தரிப்பிடம் இல்லாமையால் எழுந்த பிரச்சினைக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தலையீட்டை அடுத்து பரீட்சார்த்த அடிப்படையில் சேவைகளை நடத்துவது என சுமுகமான தீர்வு காணப்பட்டுள்ளது. 

FB_IMG_1713169072131.jpg

முன்பாக முறையான பேருந்து தரிப்பிடம் இல்லாமையை கண்டித்து உள்ளூர் மற்றும் நீண்ட தூர தனியார் பேருந்து சாரதிகள், நடத்துநர்கள் யாழ். மத்திய பேருந்து நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியிருந்தனர்.

இந்நிலையில், தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் முன்னெடுத்துள்ள போராட்டத்துக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் கலந்துரையாடி, தீர்வு வழங்கப்படும் என வட மாகாண ஆளுநர் உறுதி வழங்கியிருந்தார்.

இதையடுத்து இவ்விடயம் தொடர்பில் ஆளுநரால் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் அரச மற்றும் தனியார் பேருந்து சேவையில் ஈடுபடும் தரப்பினருடன் கலந்துரையாடப்பட்டது. 

இதன்போது சுமுகமான தீர்வு எட்டப்படாமையால் அன்றைய தினம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இவ்விடயம் தொடர்பில் வட மாகாண ஆளுநர் தலைமையில் 5 பேர் அடங்கிய விசேட குழு ஒன்றை நியமித்து, பிரச்சினை தொடர்பில் ஆராய்ந்து எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் மற்றும் பொறிமுறைகள் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்கும்படி கோரியிருந்தார்.

இந்நிலையில் இன்றைய தினம் (15) அந்த பிரச்சினைக்கான தீர்வினை வழங்கும் வகையில் ஆளுநர் அலுவலகத்தில் கூட்டம் நடைபெற்றது.

இக்குழுவினால் பரிந்துரைக்கப்பட்ட விடயங்களின் அடிப்படையில் எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதி முதல் பரீட்சார்த்தமான முறையில் அரச மற்றும் தனியார் பேருந்துகள் வீரசிங்கம் மண்டபத்துக்கு அருகாமையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பேருந்து நிலையத்தில் இருந்து இணைந்த சேவை பரீட்சார்த்த அடிப்படையில் நெடுந்தூர சேவைகளை முன்னெடுக்குமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அறிவுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இ.போ.ச - தனியார் இணைந்த நீண்ட தூர பேருந்து சேவை விவகாரம் - டக்ளஸின் தலையீட்டையடுத்து சுமுகமான தீர்வு | Virakesari.lk

கொழும்பு கோட்டை ரயில் நிலைய பயண மேடையை உடைத்துக் கொண்டு சென்ற ரயில்!

2 days 14 hours ago
15 APR, 2024 | 05:32 PM
image
 

கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து சிலாபம் நோக்கிப் பயணிக்கவிருந்த ரயில்,  கோட்டை ரயில் நிலையத்தின் முதலாவது மேடையில் நிறுத்த முயற்சித்தபோது அங்கிருந்த தடுப்பையும் ரயில் மேடையையும் உடைத்துக் கொண்டு சென்று நின்றதாக ரயில்வே திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்த சம்பவம் இன்று திங்கட்கிழமை (15) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

k_l_ui.gif

இந்த  சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் முதலாம் பயண மேடையின் ஒரு பகுதியும் தடுப்பும் ரயில் எஞ்ஜினின் முன்பகுதியும் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

nmbm.gif

இருப்பினும் ரயில் சேவைகளில் பாதிப்பில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் ரயில்வே திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

 

யாழில் விபத்து : இரு பேரப் பிள்ளைகளும் தாத்தாவும் படுகாயம்

2 days 21 hours ago
15 APR, 2024 | 11:47 AM
image
 

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி கச்சாய் வீதியில் அமைந்துள்ள மகிழங்கேணி சந்திப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு சிறுவர்களும் அவர்களது தாத்தாவும் காயமடைந்துள்ளனர்.

புதுவருட தினமான நேற்றைய தினம் (14) இரவு சாவகச்சேரி பகுதியிலிருந்து தனது இரண்டு பேரப் பிள்ளைகளை மோட்டார் சைக்கிளில் ஏற்றிச் சென்ற தாத்தா, மகிழங்கேணி பகுதியில் மோட்டார் சைக்கிளை திருப்ப முற்பட்டபோது, பின்பக்கமாக வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

இவ்விபத்தில் காயமடைந்த இரு குழந்தைகள் மற்றும் வேகமாக மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற அவர்களது தாத்தா என மூன்று பேரும் சிகிச்சைக்காக சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்களில் சிறுமியொருவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இவ்விபத்து தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 

https://www.virakesari.lk/article/181101

யாழில் மீண்டும் கொரோனா! ஒருவர் உயிரிழப்பு

2 days 23 hours ago
http://athavannews.com/wp-content/uploads/2024/01/1572229620-dead-body-2-650x375.jpg யாழில் மீண்டும் கொரோனா! ஒருவர் உயிரிழப்பு.

யாழ் மாவட்டத்தில் நீண்ட நாட்களின் பின்னர் கொரோனாத் தொற்றுக் காரணமாக பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். பிரான்ஸ் நாட்டிலிருந்து ஆயுர்வேத சிகிச்சையைப் பெறுவதற்காக வருகை வந்த 62 வயதான பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண் வட்டுக்கோட்டை அராலியில் தங்கியிருந்த நிலையில் காய்ச்சல் காரணமாக இரண்டு நாட்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையிலேயே  சிகிச்சை பலனின்றி கடந்த வெள்ளிக்கிழமை உயிரிழந்துள்ளார்.

உயிரிழப்பின் பின் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளமை  குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2024/1378123

புதுவருட தினத்தில் காணாமல்போனவர்களின் உறவுகள் ஆர்ப்பாட்டம்!

3 days 13 hours ago

Published By: VISHNU   14 APR, 2024 | 05:45 PM

image
 

சித்திரை புதுவருடத்தினமான ஞாயிற்றுக்கிழமை (14) வவுனியா தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

அவர்கள் தொடர்ச்சியாக போராட்டம் மேற்கொண்டுவரும் வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக குறித்த ஆர்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. 

இதன்போது கருத்து தெரிவிக்கையில்….

காணாமல் ஆக்கப்பட்ட தமிழ்க் குழந்தைகளைக் கண்டறியவும், எதிர்கால இனப்படுகொலையில் இருந்து தமிழர்களைக் காப்பாற்ற, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் உதவியைப் பெறுவதற்காக 2611வது நாளாக நாம் போராடிவருகின்றோம். 

IMG_4428.jpg

அமெரிக்காவில் உள்ள புலம்பெயர் தமிழர்களின் குழு ஒன்று அமெரிக்க சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டமைப்பை உருவாக்கியுள்ளது. இது எமக்கு

மகிழ்ச்சியான விடயம். இவர்கள் சேர்ந்து, தமிழர்கள் மீதான அமெரிக்கக் கொள்கையில் ஒரு மாற்றத்தை வலியுறுத்தி, செயலாளர் பிளிங்கனுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளனர்.

இலங்கையில் நடந்ததும் நடப்பதும் இனப்படுகொலை என்பதை அவர்கள் அந்த கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தனர்.அத்துடன்தமிழர்கள் அரசியல் எதிர்காலத்தை தாமே  தீர்மானிக்கும் உரிமை உள்ளது. அவர்கள் சுயநிர்ணய உரிமைக்கு தகுதியானவர்கள். இதன் மூலம் தமிழர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் வகையில் பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்றும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தனர்.

அமெரிக்காவில் உள்ள நமது தமிழர்களின் ஆதரவிற்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம் மற்றும்  10 அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்களுக்கும் எங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். 

எனவே தமிழ் அரசியல்வாதிகள் மாறிவரும் உலக ஒழுங்கிற்கு ஏற்றவாறு தம்மை மாற்றியமைக்க வேண்டும். அவர்கள் அரசியலில் இருந்து பின்வாங்கி, புதிதாக நிறுவப்பட்ட இறையாண்மை நாடுகளான மொண்டினீக்ரோ, தெற்கு சூடான், கொசோவோ, கிழக்கு திமோர் போன்ற நாடுகளின் முன்மாதிரியைப் பின்பற்றி, தமிழ் இறையாண்மையை மீட்டெடுக்க புதிய தலைமுறையை அனுமதிக்க வேண்டும் என்றனர்.

https://www.virakesari.lk/article/181072

தமிழ் – சிங்கள புத்தாண்டு : அமெரிக்க ஜனாதிபதியின் வாழ்த்து!

3 days 21 hours ago
jeo-750x375.jpg தமிழ் – சிங்கள புத்தாண்டு : அமெரிக்க ஜனாதிபதியின் வாழ்த்து!

தமிழ் – சிங்கள புத்தாண்டை முன்னிட்டு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தனது X தளத்தில் அவர் இந்த, வாழ்த்தினை வௌியிட்டுள்ளார்.

இந்தச் சிறப்பான நிகழ்வைக் கொண்டாடும் உலகில் உள்ள அனைவருக்கும் தானும் தன் மனைவியும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதாக அவர் தனது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

https://athavannews.com/2024/1378019

இலங்கை ரூபாவின் பெறுமதி உயர்வு

3 days 21 hours ago

srilanka-ruppe-750x375.jpg

இலங்கை ரூபாவின் பெறுமதி உயர்வு

2024 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில், இலங்கை ரூபாய் (LKR) உலகின் சிறந்த செயல்திறன் கொண்ட வளர்ந்து வரும் சந்தை நாணயமாக மாறியுள்ளது.

இது ஆண்டின் தொடக்கத்தில் இருந்த பெறுமதியுடன் ஒப்பிடுகையில் 7மூ க்கும் அதிகமான வளர்ச்சியென Bloomberg சந்தை தரவு குறிகாட்டிகள் சுட்டிக்காட்டுகின்றன.

ஜனாதிபதி ஊடக பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளது.

https://athavannews.com/2024/1377990

யாழ். நகரின் தூய்மை குறித்து அவதானம் : கள விஜயம் செய்த அமைச்சர் டக்ளஸ்

3 days 21 hours ago
யாழ். நகரின் தூய்மை குறித்து அவதானம் : கள விஜயம் செய்த அமைச்சர் டக்ளஸ் யாழ். நகரின் தூய்மை குறித்து அவதானம் : கள விஜயம் செய்த அமைச்சர் டக்ளஸ்.

யாழ். நகரத்தின் சுகாதார நிலைமைகள் தொடர்பில் ஆராய்ந்த கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அவற்றை தூய்மையாக்குவது தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ளார்.

புது வருடப் பிறப்பு தினமான இன்று காலை யாழ். நகரத்தில் கண்காணிப்பு விஜயம் ஒன்றை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கொண்டுள்ளார்.

இதன்போது, யாழ். நகரின் மையப்பகுதி மற்றும் புதிய மாநகரசபை கட்டட வளாகம் அதனை அண்டிய சுற்றுவட்டத்தின் நீர் வடிந்தோடும் வடிகால்கள் உள்ளிட்டவற்றை அமைச்சர் பார்வையிட்டுள்ளார்.

இதனையடுத்து, அவற்றை தூய்மையாக்குவது குறித்து அமைச்சர் அவதானம் செலுத்தியதாக குறிப்பிடத்தக்கது.

யாழ். நகரின் தூய்மை பராமரிப்பு தொடர்பில் பல்வேறு குற்றச்சாடுக்களும் விமர்சனங்களும் எழுந்துள்ள நிலையிலேயே, அது தொடர்பில் ஆராய்வதற்காகவே அமைச்சர் இந்த கள விஜயத்தை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

IMG-20240414-WA0033-1-600x450.jpg

IMG-20240414-WA0039-600x322.jpg

IMG-20240414-WA0037-600x450.jpg

IMG-20240414-WA0035-600x450.jpg

https://athavannews.com/2024/1378007

விதிகளை மீறும் பேருந்து சாரதிகள் தொடர்பில் அறிவிக்க அவசர தொலைபேசி இலக்கம்

4 days 11 hours ago
bus-2-300x200.jpg

புத்தாண்டு காலத்தில் போக்குவரத்து விதிகளை மீறும் பேருந்து சாரதிகள் தொடர்பில் முறைப்பாடுகளை முன்வைப்பதற்காக 1955 என்ற அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

குறித்த தொலைபேசி இலக்கம் 24 மணிநேரமும் செயற்பாட்டில் இருக்கும் என அந்த ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

புத்தாண்டு காலத்தில் பேருந்துகளின் மூலம் ஏற்படும் விபத்துக்களை குறைக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் பேருந்து உரிமையாளர்கள் மற்றும் சாரதிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

குறித்த அவசர தொலைபேசி இலக்கத்துக்கு கிடைக்கப்பெறும் முறைப்பாடுகள் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்காக அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

https://thinakkural.lk/article/298988

 

மட்டக்களப்பு வாழ் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

4 days 11 hours ago
13 APR, 2024 | 07:50 PM
image
 

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடுமையான வெயிலுடனான காலநிலை நீங்கி மழைபெய்துவரும் நிலையில் மக்கள் குடியிருப்புகளை நோக்கி முதலைகள் வரும் சாத்தியம் இருப்பதால் மக்களை அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட மக்கள் அதிகளவாக வாழும் கூழாவடி பகுதிக்குள் நுழைந்த முதலையொன்று மக்களினால் பிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதிக்குள் நீர்நிலைகள் இல்லாதபோதிலும் முதலையொன்று மக்கள் பகுதிக்குள் நுழைந்ததனால் பெரும் பதற்ற நிலைமையேற்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

அதனை அப்பகுதியை சேர்ந்த மக்கள் பிடித்து அது தொடர்பான தகவல்கள் வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து குறித்த முதலையினை கொண்டுசெல்லும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

தற்போது மழையுடனான காலநிலை நிலவும் நிலையில் முதலைகளின் நடமாட்டம் தொடர்பில் அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/181055

விமானப்படை வீரர்களின் எண்ணிக்கையை குறைக்க முடிவு

4 days 22 hours ago

35,000 விமானப்படை வீரர்களின் எண்ணிக்கை 2030 ஆம் ஆண்டளவில் 18,000 ஆகக் குறைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று எயார் வைஸ் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ கூறுகிறார்.

விமானப்படை தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தகவல் தொழில்நுட்பம், ட்ரோன் தொழில்நுட்பம், யுஐபி தொழில்நுட்பம் ஆகியவற்றைப் பயன்படுத்திதுவதன் விளைவாக விமானப்படை வீரர்களின் எண்ணிக்கையை குறைக்க நம்புவதாக எதிர்பார்ப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்..

“வணிகச் சந்தையில் தற்போதுள்ள தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலமும் படையினரின் எண்ணிக்கையைக் குறைக்க முடியும். உதாரணத்திற்கு. பாதுகாப்பு தளத்தில் துருப்புகளைச் சுற்றி நிற்க வைப்பதை விட கேமராக்கள் போன்றவற்றைப் பயன்படுத்தலாம், தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தலாம், ட்ரோன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தலாம்.

எனவே எங்கள் படைகளின் எண்ணிக்கையை குறைக்கவும். தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தவும், முயற்சிக்கிறோம். அந்த நாட்களில் 35,000 இராணுவம் வழங்கிய செயல்பாட்டு பணியை 2030 க்குள் 18,000 பேரைப் பயன்படுத்தி செய்ய முடியும் என்று நம்புகிறோம் என அவர் தெரிவித்துள்ளார்.

https://thinakkural.lk/article/298961

தமிழ் சிங்கள புத்தாண்டு வாழ்த்துச் செய்திகள்

4 days 22 hours ago
புதிய ஆண்டில் 'ஒரு நாடு' என்ற அடிப்படையிலான முன்னேற்றத்துக்கு காரணம் சமூக உறவுகளும் ஒற்றுமையுமே - ஜனாதிபதி 
10 APR, 2024 | 05:09 PM
image
 

புதிய ஆண்டில் 'ஒரு நாடு' என்ற வகையில் சரியான வழியில் முன்னேறுவதற்கு சமூக உறவுகளும் ஒற்றுமையுமே அடிப்படைக் காரணிகளாகும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 

தமிழ் சிங்கள புத்தாண்டு வாழ்த்துச் செய்தியிலேயே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 

அதில் அவர் மேலும் தெரிவிப்பதாவது :   

புதுப்பித்தல் வாழ்க்கைக்கு புதிய நம்பிக்கை தரும். புதுப்பிப்புக்களின் அடிப்படையிலேயே நாடு, உலகம் முன்னேற முடியும். புதிய சிந்தனைகளினாலேயே புத்தாக்கம் பிறக்கும்.

புதிய வருடம் பிறத்தல், புதிய நாட்காட்டி, பருவத்துக்குப் பருவம் ஏற்படும் புதிய மாற்றங்கள் உலக மக்களுக்கான வாய்ப்புக்களை புதுப்பிக்கின்றன.  

இந்த புதுப்பித்தல்களுக்குப் பின்னால் மற்றொரு மிக முக்கியமான விடயமும் உள்ளது. அதுவே சமூக ஒற்றுமையும் ஒருமைப்பாடும் ஆகும். 

தமிழ், சிங்களப் புத்தாண்டை உறவுகளையும்  ஒற்றுமையையும் அடிப்படையாகக் கொண்டே புதுப்பித்துக்கொள்கிறோம். உலக நாடுகள் அனைத்தும் இந்த சம்பிரதாயத்தைப் பின்பற்றியே புத்தாண்டு கொண்டாட்டங்களை கட்டமைத்துள்ளன.  

புத்தாண்டு நமக்கு சொல்லும் பாடத்தை இந்த தருணத்தில் சுட்டிக்காட்டுவது பொருத்தமானது என நம்புகிறேன்.

புதிய ஆண்டில், ஒரு நாடு என்ற வகையில் சரியான வழியில் முன்னேறுவதற்கு சமூக உறவுகளும் ஒற்றுமையுமே அடிப்படைக் காரணிகளாகும் என்பதை நினைவுகூருவதோடு அனைவருக்கும் புத்தாண்டு பிறப்பு சிறப்பானதாக அமையட்டும் என பிரார்த்திக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

https://www.virakesari.lk/article/180920

யாழில் சர்வதேச தரத்திலான இரு மைதானங்கள் : அமைவிடம் குறித்து அமைச்சர் டக்ளஸ் நேரில் ஆராய்வு!

5 days 12 hours ago
12 APR, 2024 | 09:41 PM
image
 

யாழ். செம்மணி பகுதியில் சர்வதேச தரத்திலான கிரிக்கெட் மற்றும் உதைபந்தாட்ட மைதானங்களை அமைப்பதற்கான ஏதுநிலைகள் குறித்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா துறைசார் அதிகாரிகளுடன் குறித்த பகுதிக்கு கள விஜயம் மேற்கொண்டு நிலைமைகளை ஆராய்ந்தறிந்து கொண்டார்.

யாழ்ப்பாணத்தை வரவேற்கும் செம்மணி வளைவு பகுதியை அண்டிய நிலப்பரப்பில் சர்வதேச தரத்திலான கிரிக்கெட் மற்றும் உதைபந்தாட்ட மைதானங்களை அமைப்பதற்கான திட்ட முன்மொழிவை நகர அபிவிருத்தி அதிகார சபை முன்வைத்துள்ள நிலையில் அதற்கான அனுமதியை கோரி யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்தி குழுவுக்கு திட்டமுன்மொழிவை சமர்ப்பித்துள்ளது. இந்நிலையிலேயே குறித்த பகுதியை அமைச்சர் நேரல் சென்று பார்வையிட்டுள்ளார்.

முன்பதாக குறித்த விடயம் தொடர்பில் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் பிரஸ்தாபிக்கப்பட போது குறித்த பகுதியில் விவசாய நிலங்கள் மற்றும் மழை நீர் வழிந்தோடும் வழிகள் இருப்பதால் அப்பகுதியில் மைதானங்களை அமைப்பதில் உள்ள சாதக பாதகங்கள் குறித்து ஆராயப்பட்ட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

இந்நிலையில் குறித்த பகுதிக்கு கள விஜயம் சென்ற அமைச்சர் நிலைமைகளை அவதானித்ததுடன் விவசாயம் மற்றும் நீர் வழிந்தோடும் பொறிமுறையை உள்ளடக்கியதான தீர்வுகள் தொடர்பில் ஆராய்ந்து காணொளி வடிவிலாள திட்டவரைபை தனக்கு தருமாறு துறைசார் அதிகாரிகளுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/181040

இலங்கையின் தெற்கே ஆழ்கடலில் 200 கிலோ போதைப்பொருள் சிக்கியது!

5 days 12 hours ago

Published By: DIGITAL DESK 5

12 APR, 2024 | 05:53 PM
image
 

ஹெரோயின் அல்லது ஐஸ் போதைப்பொருள் என சந்தேகிக்கப்படும் 200 கிலோ போதைப்பொருளுடன் இரண்டு மீன்பிடிப் படகுகள் இலங்கையின் தெற்கு ஆழ்கடல் பகுதியில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இரண்டு படகுகளிலும் காணப்பட்ட 10 இலங்கை மீனவர்களும் கைது செய்யப்பட்டதாக கடற்படைப் பேச்சாளர் கயான் விக்ரமசூரிய தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/181032

பொருத்தமான தருணம் : சஜித், அநுரவுடன் தமிழ்த் தரப்பு பேச வேண்டும் - தயான் ஜயதிலக்க

5 days 17 hours ago

Published By: VISHNU   12 APR, 2024 | 06:38 AM

image

ஆர்.ராம்

உள்நாட்டில் நீண்டகாலமாக அரசியலில் புரையோடிப்போயிருக்கின்ற சிங்கள, பௌத்த தேசிய இனவாதத்தினை களைவதற்கு பொருத்தமான தருணம் ஏற்பட்டுள்ள நிலையில் தமிழ் தரப்புக்கள் பிரதான போட்டியாளர்களான சஜித், அநுரவுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க வேண்டும் என்று இராஜதந்திரியான தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளார்.

அத்துடன், தமிழர்களின் அரசியல் போக்கு அவரோணகத்தில் சென்றுகொண்டிருக்கையில், தமிழ் பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத்துகின்ற முயற்சியானது பொருத்தமான வியூகமாக அமையப்போவதில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வடக்கு, கிழக்கை தளமாகக் கொண்டு செயற்படும் தமிழ் அரசியல் கட்சிகள் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளர் ஒருவரை களமிறக்குவதற்கான முஸ்தீபுகளை எடுத்துள்ள நிலையில் அதுதொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் கடந்த காலங்களில் பல்வேறு உபாயங்களை முன்னெடுத்துள்ளனர். இருப்பினும் அந்த உபாயங்களால் தமிழ் மக்களுக்கு போதுமான அளவில் பிரதிபலங்கள் கிடைத்திருக்கவில்லை. 

அவ்வாறான பின்னணியில் தற்போது தமிழ் அரசியல் தரப்புக்கள் அடுத்து நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் தமது தரப்பில் பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத்துவதற்கு முயற்சிக்கின்றார்கள்.

அனைத்துக் கட்சிகளும் இந்த விடயத்தில் ஒருமித்து நின்று செயற்பட்டுவதற்கு முன்வருகின்ற பட்சத்தில் சாத்தியமானதொரு வியூகமாகும்.

ஆனால் கள யதார்த்தத்தின் அடிப்படையில் தமிழ் தரப்பில் பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத்தும் வியடத்தில் அனைத்து தமிழ் கட்சிகளுக்கும் இடையில் ஏகமனதான நிலைமைகள் வரப்போவதில்லை.

இதன்காரணமாக, தமிழ் கட்சிகளுக்கு இடையில் காணப்படுகின்ற உறவுகள் தற்போதைய நிலைமையை விடவும் மோசமானதாகவே அடையப்போகின்றது. 

அவ்விதமான நிலைமையில், நிறுத்தப்படும் தமிழ் வேட்பாளரால் அதியுச்ச கோரிக்கையான சுயாட்சி உள்ளிட்டவற்றை முன்வைப்பது மிகக் கடினமானதாகவே அமையும். 

1976ஆம் ஆண்டு வட்டுக்கோட்டை தீர்மானம் மேற்கொள்ளப்பட்டு 1977இல் தேர்தலுக்கு முகங்கொடுத்த நிலைமைகள் தற்போது இல்லை. தமிழர்களின் அரசியல் போக்கு அவரோகணத்திலேயே உள்ளது. அவ்விதமானதொரு சூழலில் பொதுவேட்பாளர் முடிவானது பொருத்தமான நகர்வாக அமையாது.

மேலும் தென்னிலங்கையில் அடுத்த ஜனாதிபதி தோதலில் பிரதான வேட்பாளராக இருக்கப்போகின்றவர்கள் சஜித் பிரேமதாசவும், அநுரகுமார திஸாநாயக்கவுமே. 

இவர்கள் இனவாதத்துக்கு எதிராக ஒன்றுதிரண்ட ‘அரகல’வின் சக்தியை அறிந்தவர்கள். ஆகவே அவர்கள் மீண்டும் சிங்கள, பௌத்த இனவாத விடயங்களை மையப்படுத்தி அரசியல் செய்வதற்கு விளைய மாட்டார்கள்.

அவ்விதமான சூழலில் நாட்டில் தற்போது, சிங்கள, பௌத்த இனவாதத்தினை அரசியலில் இருந்து துடைத்தெறிவதற்கான சூழல் ஏற்பட்டுள்ளது. இந்தச் சூழலை தமிழ்த் தரப்பினர் சரியாக பயன்படுத்த வேண்டும்.

ஆகவே, அவர் சஜித், அநுர ஆகியோருடன் நீண்டகாலமாக காணப்படுகின்ற பிரச்சினைகளுக்கான குறுகிய மற்றும் நீண்டகால தீர்வுகள் சம்பந்தமாக பேச்சுக்களை முன்னெடுத்து தீர்வினை எட்ட வேண்டும்.

அதேநேரம், ஸ்பெயினின் கட்டலோனியாவில் நடைபெற்ற விடயத்தினையும், குர்திஸ்லாந்தில் ஏற்பட்ட நிலைமைகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும். 

அதுமட்டுமன்றி, பிரித்தானிய பிரமர் தட்சருக்கு எதிராக போராடிய சின்பிங் அமைப்பின் வியூகத்தினையும் முன்னுதாரணமாகக் கொண்டு தீர்மானங்களை எடுக்கவும் முடியும். 

அதனடிப்படையில் தமிழ்த் தரப்பு பொருத்தமான தருணத்தினை பயன்படுத்தும் வகையில் தீர்மானங்களை மேற்கொள்வதே பொருத்தமானது என்றார்.

https://www.virakesari.lk/article/181012

அவங்களே நமக்கு ஆலோசனை சொல்லும் நிலைக்கு கொண்டுவந்து விட்டாயிற்று!

தமிழ் பொதுவேட்பாளரை நிறுத்த கொள்கையளவில் இணங்குகிறேன் - சிறீதரன்

5 days 17 hours ago

Published By: VISHNU   12 APR, 2024 | 06:41 AM

image

ஆர்.ராம்

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளர் நிறுத்தப்படுவதற்கு கொள்கையளவில் இணக்கம் தெரிவிக்கும் அதேநேரம், கட்சியின் தீர்மானமும் முக்கியமானது என்று இலங்கைத் தமழரசுக்கட்சியின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ்க் கட்சிகளின் சார்பில் பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத்துவதற்கான முயற்சிகள் தொடர்பில் கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் அரசியல் கட்சிகளின் சார்பில் பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத்துவதற்கான முன்முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன.

தற்போதைய நிலையில், ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றவர்கள் தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வு உட்பட எந்தவொரு விடயங்களிலும் கரிசனைகளைக் கொண்டவர்களாக தம்மை வெளிப்படுத்தவில்லை. 

ஆகவே, எந்த அடிப்படைகளுமின்றி தென்னிலங்கை வேட்பாளர்களை ஆதரிப்பது பொருத்தமற்றதொரு முயற்சியாகும். அந்த வகையில் தமிழ் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து  பொதுவேட்பாளரை நிறுத்துகின்றமை பொருத்தமான அணுகுமுறையாகும்.

அந்த முயற்சிக்கு நான் கொள்கை அளவில் இணக்கம் தெரிவிக்கின்றேன். எனினும், இலங்கைத் தமிழரசுக்கட்சியினுள் இந்த விடயம் சார்ந்து கலந்துரையாடி கட்சியாக தீர்மானம் எடுக்க வேண்டியது மிகவும் முக்கியமானதாகின்றது. 

ஆகவே, குறித்த விடயம் சம்பந்தமாக கட்சியாக கூடி ஆராய்ந்து தீர்மானிக்கப்பட வேண்டியது அவசியமாகின்றது என்றார்.

https://www.virakesari.lk/article/181010

வெடுக்குநாறியில் அடாவடியில் ஈடுபட்ட சிவசேனை

5 days 18 hours ago
32-2-1-750x375.jpg வெடுக்குநாறியில் அடாவடியில் ஈடுபட்ட சிவசேனை.

சிவசேனையின் அடாவடி தனத்தால் வெட்டுக்குநாறி ஆதி சிவன் ஆலய நிர்வாக குழு கூட்டம் இடைநடுவில் இரத்து செய்யப்பட்டுள்ளது.

வெட்டுக்குநாறி ஆதி சிவன் ஆலய நிர்வாகக்குழு கூட்டம் இன்றைய தினம் ஒலுமடு பகுதியில் உள்ள மண்டபம் ஒன்றில் நடைபெற்றது.

அதன் போது கூட்டத்திற்கு அழையா விருந்தாளிகளாக சிவசேனை அமைப்பின் மறவன்புலவு சச்சிதானந்தன் தலைமையிலான குழு வருகை தந்து கிறிஸ்தவர்களுக்கு எதிரான கருத்துக்களை கூட்டத்தில் முன் வைத்து குழப்பங்களை ஏற்படுத்தினர்.

அதன் போது, வெட்டுக்குநாறியில் சிவராத்திரி தினத்தன்று பொலிஸார் அடாவடியில் ஈடுபடும் போது , நீங்கள் எங்கே சென்றீர்கள் ? ஆலய பூசாரி உள்ளிட்ட 08 பேரை கைது செய்து சிறையில் அடைத்த போது எங்கே போனீர்கள் ? கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்குமாறு நெடுங்கேணி மற்றும் வவுனியாவில் நடத்தப்பட்ட போராட்டத்தின் போது எங்கே போனீர்கள் ? என கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கேள்வி கேட்ட போது , அதற்கு பதில் அளிக்காது கிறிஸ்தவர்களுக்கு எதிரான கருத்துக்களை தொடர்ந்து கூறி வந்தனர்.

அதனை அடுத்து கூட்டத்தில் இருந்து வெளியேற 10 நிமிடம் அவகாசம் வழங்கப்பட்டது. அவர்கள் அதற்கு பின்னரும் வெளியேறாத நிலையில் , குழப்பங்களை தவிக்கும் முகமாக கூட்டத்தினை மண்டபத்திற்கு வெளியே நடத்த முயன்ற போதும் குழப்பத்தை ஏற்படுத்தியமையால், தற்போதைய நிர்வாகமே அடுத்த ஒரு வருட காலத்திற்கு தொடர்ந்து செயற்படும் என கூட்டத்தில் ஏக மனதாக முடிவெடுக்கப்பட்டு , கூட்டம் நிறைவு பெற்றது.

கூட்டம் நிறைவு பெற்று மக்கள் அங்கிருந்து கிளம்பும் போது , மண்டபத்திற்குள் சென்ற சிவ சேனையினர் அங்கிருந்த மேசைகள் மீது படுத்து உறங்கினர்.

இதேவேளை சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்ட குறுந்தூர் மலை விகாரைக்கு சென்று அங்கிருந்த புத்தரை வழிபட்டதுடன் , விகாரதிபதியுடன் நல்லுறவில் உள்ளவர்கள் , வெடுக்குநாறியில் ஆதி சிவன் ஆலயத்தையும் அந்த விகாராதிபதியிடம் கையளிக்கும் ஏற்பாடாகவே சிவசேனையினர் கூட்டத்தில் குழப்பத்தை ஏற்படுத்தினர் என அப்பகுதி மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

32-6-600x450.jpg

32-7-600x450.jpg

32-5-600x450.jpg

32-1-1-600x450.jpg

32-3-1-600x450.jpg

32-4-600x450.jpg

https://athavannews.com/2024/1377874

சுமந்திரனை அவமதித்தது விரும்பத்தகாத செயல் : அமைச்சர் டக்ளஸ் கருத்து

5 days 18 hours ago
Douglas-Devananda-650x375.jpg சுமந்திரனை அவமதித்தது விரும்பத்தகாத செயல் : அமைச்சர் டக்ளஸ் கருத்து.

ஜே.வி.பியின் மாநாட்டுக்கு அழையா விருந்தாளியாக சுமந்திரன் வந்திருந்தார் எனக் கூறி சுமந்திரனை அவமதித்தது விரும்பத்தகாத செயல் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறியுள்ளார்.

யாழ்ப்பாணத்திலுள்ள தனது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது இவ்விடயம் தொடர்பில் ஊடகவியலாளர் கேட்டதற்கு பதிலளிக்கையில் இவ்வாறு தெரிவித்தார்.

அண்மையில் ஜே.வி.பி கட்சி தனது கட்சி மாநாடொன்றை யாழ்ப்பாணத்தில் நடத்தியிருந்தது. இந்த மாநாட்டுக்கு அழைப்பு விடுக்காமல் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான சுமந்திரன் சென்றதாக ஜேவிபியின் பேச்சாளர் எனக் கூறுபவர் ஊடக சந்திப்பொன்றில் தெரிவித்திருந்தமையை சுட்டிக்காட்டி குறித்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

மேலும், இது தொடர்பாக அவர் கருத்து தெரிவிக்கையில், தமது நிகழ்வில் கலந்துகொண்ட ஒருவரை அவமானப்படுத்தும் வகையில் ஏன் அவ்வாறு கூறினார் என்று தெரியவில்லை. இதேநேரம் மாநாடொன்றிற்கு ஏனைய கட்சிகளுக்கு அழைப்பு விடுப்பது இயல்பான ஒன்றுதான்.

அதேநேரம் கட்சிக்கான அழைப்பு விடுக்கப்பட்டால் அந்த அழைபை ஏற்று அழைக்கப்பட்ட கட்சியின் சார்பில் எவரும் செல்லமுடியும். அந்த வகையில்தான் சுமந்திரனும் சென்றிருப்பார் என நினைக்கின்றேன். அந்தவகையில் சுமந்திரனை அவமானப்படுத்தும் வகையிலேயே குறித்த பேச்சாளர் கூறியுள்ளார் என்றே தான் கருதுவதாக குறிப்பிடடுள்ளார்.

https://athavannews.com/2024/1377856

வெடுக்குநாறிமலை, குருந்தூர்மலை விவகாரம் தொடர்பில் விசேடமாக ஆராய்ந்த அலன் கீனன் - பரந்துபட்ட அறிக்கையொன்றை வெளியிடவும் உத்தேசம்

5 days 22 hours ago

Published By: DIGITAL DESK 7   11 APR, 2024 | 05:11 PM

image

(நா.தனுஜா)

அண்மையில் இலங்கைக்கு வருகைத்தந்திருந்த சர்வதேச நெருக்கடி கண்காணிப்புக்குழுவின் ஆய்வாளர் அலன் கீனன், வெடுக்குநாறிமலை மற்றும் குருந்தூர்மலை விவகாரம் தொடர்பில் விசேடமாக ஆராய்ந்ததாகவும், அதுபற்றிய அறிக்கையொன்றை வெளியிடுவதற்கு அவர் எதிர்பார்த்திருப்பதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் மூலம் அறியமுடிகின்றது.

 வவுனியா மாவட்டத்தின் வெடுக்குநாறிமலையில் உள்ள ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் கடந்த சிவராத்திரி தினத்தன்று (மார்ச் 8 ஆம் திகதி) பூஜை வழிபாடுகளில் ஈடுபடச்சென்ற பக்தர்களுக்கு பொலிஸாரால் இடையூறு விளைவிக்கப்பட்டதுடன், இரவு வேளையில் அங்கு வழிபாடுகளைத் தொடர முற்பட்டோர் அங்கிருந்து வலுகட்டாயமாக வெளியேற்றப்பட்டனர். அதுமாத்திரமன்றி ஆலயப்பூசகர் உள்ளடங்கலாக 8 பேர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டனர்.

இந்த சம்பவம்  நடைபெற்று சில தினங்கள் கடந்ததன் பின்னர், நாட்டில் தேசிய தேர்தல்கள் நடைபெறவுள்ள பின்னணியில் அரசியல் மற்றும் மனித உரிமைகள் கள நிலைவரம் தொடர்பில் ஆராயும் நோக்கில் இலங்கைக்கு வருகைதந்த சர்வதேச நெருக்கடி கண்காணிப்புக்குழுவின் ஆய்வாளர் அலன் கீனன், வெடுக்குநாறிமலை மற்றும் குருந்தூர்மலை பகுதிகளுக்கு நேரடியாகச்சென்று பார்வையிட்டதாகவும், அங்குள்ள சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டதாகவும் அறியமுடிகின்றது.

அதுமாத்திரமன்றி மட்டக்களப்பு மயிலத்தமடு, மாதவனை பண்ணையாளர்கள் விவகாரம் பற்றியும் அலன் கீனன் பரந்துபட்ட ரீதியில் ஆராய்ந்ததாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 மேலும் சுமார் இரண்டு வாரங்களுக்கும் மேற்பட்ட காலம் இலங்கையில் தங்கியிருந்த அலன் கீனன், அக்காலப்பகுதியில் தெரிவுசெய்யப்பட்ட சில அரசியல் தலைமைகள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட தரப்பினரை சந்தித்துக் கள நிலைவரம் தொடர்பில் கலந்துரையாடியுள்ளார்.

 அதன்படி வெடுக்குநாறிமலை மற்றும் குருந்தூர்மலை விவகாரங்களின் பின்னணி, அப்பகுதியில் வாழும் மக்களின் மனநிலை, இக்குழப்பங்களின் பின்னணியிலுள்ள நோக்கம் என்பன உள்ளடங்கலாக நாட்டின் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பில் வெகுவிரைவில் அவர் அறிக்கையொன்றை வெளியிடுவார் எனவும் அறியமுடிகின்றது.

https://www.virakesari.lk/article/180987

மியன்மார் அடிமை முகாமிலிருந்து 8 இலங்கையர்கள் மீட்பு

5 days 22 hours ago

மியன்மார் அடிமை முகாமிலிருந்து 8 இலங்கையர்கள் மீட்பு - விரைவில் நாட்டுக்கு அழைத்துவர நடவடிக்கை
Rizwan Segu MohideenApril 12, 2024
Myanmar-Cybercrime-Camp-8-Sri-Lankan-Res

– IT தொழில் என கூறி இணைய மோசடியில்

மியன்மாரின் மியாவாடி பகுதியில் உள்ள சைபர் கிரைம் அடிமை முகாம்களில் இருந்து மீட்கப்பட்ட எட்டு இலங்கையர்கள், தாய்லாந்தில் உள்ள இலங்கை தூதரகத்தை பாதுகாப்பாக வந்தடைந்துள்ளனர்.

இவ்வாறு மீட்கப்பட்டவர்கள் எதிர்வரும் நாட்களில் நாட்டுக்கு திருப்பி அனுப்பப்படுவார்கள் என தாய்லாந்திற்கான இலங்கைத் தூதுவர் ஜனக பண்டார தெரிவித்துள்ளார்.

மியாவாடியில் உள்ள சைபர் கிரைம் முகாம்களில் சிக்கியிருந்த 56 இலங்கையர்களில் எட்டு பேர் மியன்மார் அரசாங்க அதிகாரிகளால் மார்ச் மாத தொடக்கத்தில் மீட்கப்பட்டு மியாவாடி மத்திய பொலிஸ் நிலையத்திற்கு அனுப்பப்பட்டனர்.

மீட்கப்பட்டவர்களில் 6 ஆண்கள் மற்றும் 2 பெண்கள் உள்ளடங்குகின்றனர்.

இந்நிலையில் குறித்த குழுவினரை நேற்றையதினம் (11) மியன்மார் குடிவரவு அதிகாரிகள் தாய் – மியன்மார் நட்புறவு பாலத்தின் ஊடாக தாய்லாந்து அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

மீட்கப்பட்ட இலங்கையர்கள் நலமுடன் இருப்பதாகவும் தற்போது தாய்லாந்தில் உள்ள இலங்கை தூதரகத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் தூதுவர் ஜனக பண்டார தெரிவித்துள்ளார்.

தகவல் தொழில்நுட்பத் துறை வேலை வாய்ப்புகள் என்ற பொய்யான தொழில் வாய்ப்புக்காக, சுற்றுலா வீசாக்களில் ஏமாற்றி அழைக்கப்பட்டு, மியன்மாரில் ஒரு மோசமான இன ஆயுதக் குழுவால் சிறைப்பிடிக்கப்பட்ட 60 இலங்கையர்களைக் கொண்ட குழுவின் அவலநிலை தொடர்பில் 2023 டிசம்பரில், ஊடகங்கள் வெளிச்சத்திற்கு கொண்டு வந்தன.

அவர்கள் ஐக்கிய அரபு இராச்சியத்தில் (UAE) உள்ள ஒரு குறிப்பிட்ட முகவரால் துபாயில் தகவல் தொழில்நுட்ப வேலைகளுக்கு விண்ணப்பிக்குமாறு ஏமாற்றி, மியாவாடியில் இணைய அடிமை முகாமில் பணியாற்ற மியன்மாருக்கு கடத்தப்பட்டனர், அங்கு அவர்கள் இணைய மோசடிகளைச் செய்ய வேண்டிய பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

சிறைப்பிடிக்கப்பட்டவர்கள் வழங்கிய தகவல்களின்படி, அவர்கள் வெளிநாட்டவர்களிடமிருந்து பணத்தை திருடுவதற்காக காதலர்கள் போன்று நடிக்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். அவ்வாறு அவர்கள் சொன்னதைச் செய்ய மறுத்தால், மின்சாரம் பாய்ச்சுதல், நீர் நிரம்பிய சிறைகளில் அடைத்தல், கைகளில் கட்டி தொங்கவிடுதல், பட்டினியாக்குதல் போன்ற சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக தாய்லாந்தின் பிரதி பிரதமரும் வெளிவிவகார அமைச்சருமான Parnpree Bahiddha-Nukara உடன் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தொலைபேசியில் உரையாடினார்.

மியன்மாரிலுள்ள இலங்கைத் தூதரகத்தின் ஒருங்கிணைப்புடன் வெளிவிவகார அமைச்சு, மனிதக் கடத்தலினால் பாதிக்கப்பட்டு மியன்மாரில் சிக்கியுள்ள சுமார் 56 இலங்கையர்களை மீட்டு நாட்டுக்கு திரும்புவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.

மியன்மார் அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தையை தொடர்ந்து இலங்கைத் தூதரகம் கடந்த ஆண்டு பயங்கரவாதக் குழுவிடமிருந்து 32 இலங்கையர்கள் மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

https://www.thinakaran.lk/2024/04/12/breaking-news/54772/மியன்மார்-அடிமை-முகாமிலி/

Checked
Thu, 04/18/2024 - 02:29
ஊர்ப் புதினம் Latest Topics
Subscribe to ஊர்ப்புதினம் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr