மாவீரர் நினைவு

கப்பலுக்கான விநியோக நடவடிக்கை ஒன்றை மேற்கொண்ட லெப். கேணல் றோசா

1 month 2 weeks ago

FB_IMG_1555700776734.jpg

 

வேலாயுதம் வசந்தி என்ற இயற்பெயர் கொண்டு திருகோணமலை மாவட்டத்தில் இருந்து தமிழீழ மண் மீட்புப் போரிலே இணைந்து கொண்டார்.

விடுதலைப் புலிகள் அமைப்பில் சிறப்பு பயிற்சிகளை திறமையாக செய்து முடித்தார்.மகளிர் நாங்கள் ஆண்களுக்கு நிகரானவர்கள் என்ற செயல் வடிவம் மூலம் பயிற்சி ஆசிரியர்களுக்கு பல முறை நிரூபித்துக் காட்டினார்.

மகளிர் பிரிவில் இவரது அசாத்தியமான திறமை தேசியத் தலைவரின் பார்வைக்கு அறிவிக்கப்படுகிறது.அந்த சூழ்நிலையில் கடற்புலிகளின் கப்பலுக்கான விநியோக நடவடிக்கைக்கு மகளிர் அணி கட்டாயமாக பங்கு கொள்ள வேண்டிய தேவை இருந்தது. இந்த விநியோக நடவடிக்கைக்காக கடற்புலிகளின் சிறப்பு தளபதியால் லெப் கேணல் றோசாவை உள்வாங்க சிறப்பு தகமைப் பரீட்சை வழங்கப்பட்டது.

இந்த தகமைப் பரீட்சையில் அதிகூடிய  திறமையை வெளிப்படுத்தி அந்த கப்பல் விநியோக அணிக்கு பொறுப்பாளராக சிறப்பு தளபதியால் நியமிக்கப்பட்டார்.

லெப் கேணல் றோசாவாலே போராட்ட வரலாற்றில் மகளிர் அணி முதன்முதலாக வெற்றிகரமாக கப்பலுக்கான விநியோக நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டு சாதனைத் தடம் பதித்தார்.

இவருடைய திறமை பல சண்டைக்களங்களில் கடற்பரப்பில் ஈடுபடுத்தியது. ஒரு தொகுதி இராணுவ தளபாடங்கள் இடம்மாற்றும் நடவடிக்கை ஒன்றில் 18-04-1998 அன்று திருமலை கடற்பரப்பில் சிறிலங்கா  கடற்படையினருடனான நேரடி மோதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்டார். இவரை இந்நாளில் நெஞ்சில் நிறுத்தி இவரோடு வீரச்சாவடைந்த அனைத்து மாவீர மறவர்களுக்கும் எமது வீரவணக்கத்தைத் தெரிவித்துக் கொள்வோம்.

உங்கள் விடுதலை வேட்கை என்றும் எங்களை வழிநடத்தி போராட்டப் பாதையில் வீறுகொண்டு பயணிக்க வழிவகுக்கும்.

https://www.tamilarul.net/2022/04/18_01976124944.html

தியாகசீலங்களின் விபரங்கள்

2 months ago

"வேர்கள் வெளியில் தெரிவதில்லை - சில
வேங்கைகள் முகவரி அறிவதில்லை!"

 

இதற்குள் என்னால் முடிந்தளவு தியாகசீலங்களின் பெயர் விரிப்புகளை சேகரித்து எழுதி வைக்கின்றேன். ஆனால், தனிப்பட்ட பாதுகாப்புக் கருதி எவருடைய பாலும் எழுதமாட்டேன். இவர்கள் எவரினது பெயரும் மாவீரர் பட்டியலில் இல்லை. உங்கள் ஆருக்கேனும் இவ்வாறு வீரச்சாவடைந்த போராளிகளின் பெயர் விபரங்கள் தெரிந்தால் கீழே எழுதுங்கள்.

இத்தியாகசீலங்களின் எண்ணிக்கை நூற்றிற்கும் மேல் ஆகும்!

 

மறைமுகக் கரும்புலிகள்:

  1. தியாகசீலம் அன்பு (என்னைப் பொறுத்தவரை இவரே எமது தேசத்தின் முதல் மறைமுகக் கரும்புலி. சாஜர் இயக்கி இலக்கொன்றை அழித்து வீரச்சாவடைந்தார். இவரோடு சென்ற 10+ புலனாய்வாளர்களும் பின்னாளில் வீரச்சாவடைந்தனர். அன்னவர்களின் பெயர் விரிப்பு கிடைக்கவில்லை. இவர்கள் எவரினது பெயரும் மாவீரர் பட்டியலில் இல்லை)
  2. தியாகசீலம் மனோகரன் 
  3. தியாகசீலம் சோழன் (14/05/1998 அன்று யாழில் மேஜர் ஜெனரல் லரி விஜயரட்னவை கொன்று வீரச்சாவடைந்தார்.)
  4. தியாகசீலம் பாண்டியன் (2008ம் ஆண்டு இறுதியில் யாழில் வீரச்சாவடைந்தார்)
  5. தியாகசீலம் வசந்தன் (06/04/2008ம் ஆண்டு வெலிவேரிய என்ற இடத்தில் அமைச்சர் ஜெயராஜ் பெர்னான்டோபுள்ளே மீது கரும்புலித் தாக்குதல் நடாத்தி வீரச்சாவடைந்தார்)
  6. தியாகசீலம் செந்தமிழ் (10/03 2009ம் ஆண்டு மாத்தறையில் உள்ள அகுரேச என்ற இடத்தில் பல சிங்கள அரசாங்க அமைச்சர்கள் மீது ஒரே நேரத்தில் கரும்புலித் தாக்குதல் நடாத்தி வீரச்சாவடைந்தார்) 

இன்னும் மூன்று கரும்புலிகளினது பேந்து எழுதுகிறேன்.



படைத்துறைக் கிளை அறியில்லாதோர்:

  1. தியாகசீலம் ஐங்கரன் (பழனியாண்டி-ராக்கம்மா இணையரின் புதல்வன்) (https://www.kuriyeedu.com/?p=462880)

 

மேஜர் சோதியா!

2 months 1 week ago
May be an image of 1 person, tree and text
 
 
மேஜர் சோதியா!
மேஜர் சோதியா என்றவுடன் நெடிதுயர்ந்த தோற்றம்,வெள்ளை
நிறம், சிரித்த முகம் இவைதாம் எம்
நினைவுக்கு வரும்.நான் முதன் முதலில்
சோதியாவை மணலாற்றுக் காட்டில்
புனிதபூமியிற்தான் பார்த்தேன்.நான்
தலைவரோடு வாழ்ந்த அந்த மறக்க
முடியாத நாட்களின் போதுதான்
அடிக்கடி அவரைப் பார்க்க முடிந்தது.
"பெண் விடுதலை இல்லையேல்
மண் விடுதலை இல்லை".
பெண்கள் விடுதலை பெறாமல்
தேசவிடுதலை முழுமை பெறாது
என்பதனால்தான் மகளிர் படையணியை
உருவாக்கினார் தேசியத் தலைவர்
அவர்கள்.
"பெண்கள் சம உரிமை பெற்று
ஆண்களுடன் கௌரவமாக வாழக்கூடிய
புரட்சிகர சமுதாயமாக தமிழீழம் அமைய
வேண்டும் என்பது எனது ஆசை" என்றார்
தேசியத் தலைவர் அவர்கள்.
அந்த சிந்தனையின் வெளிப்பாடாகவே
1985 ஆம் ஆண்டு பெண் போராளி
களுக்கான பயிற்சிப் பாசறை
தமிழ்நாட்டிலே ஆரம்பிக்கப் பட்டது.
தமிழ்நாடு திண்டுக்கல் சிறுமலைப்
பகுதியில் 1985 ஆகஸ்ட் மாதம்
18 ஆம் திகதி பெண் போராளிகளுக்கான பயிற்சிப் பாசறை
ஆரம்பித்து வைக்கப்பட்டது.அந்த முகாம்
மகளிர்க்கான முதலாவது முகாம்.
ஆனால் அது தமிழ்நாட்டிலே
நடைபெற்ற புலிகளின் ஏழாவது பயிற்சி
முகாம் ஆகும்.
யாழ் மாவட்டம் வடமராட்சி
நெல்லியடியை பிறப்பிடமாகக் கொண்ட
மைக்கேல் வசந்தி அந்தப் பயிற்சி
முகாமிலேயே சோதியாவாக மாற்றம்
பெற்றார்.83 ஆம் ஆண்டின் கறுப்பு
ஜூலையே இளைஞர்களை மட்டுமின்றி
இளம் பெண்களையும் விடுதலைப்
போராட்டம் பற்றி சிந்திக்க வைத்தது.
விடுதலை இயக்கங்களோடு தங்களை
இணைத்துக் கொண்டு போராட
முன்வந்தவர்களில் ஒருவரே
மைக்கல் வசந்தி.இவரது சகோதரரும்
இவரும் ரெலோ இயக்கத்தில் இணைந்து
தமிழ்நாட்டுக்கு அழைத்து வரப்பட்டனர்.
ரெலோ இயக்கத்தினர் ஏனோ
தெரியவில்லை, பெண்களுக்கு பயிற்சி
கொடுக்க முன்வராது அவர்களை
கைவிட்டிருந்தனர்.தமிழ்நாட்டில்
கைவிடப்பட்டிருந்த நிலையில் இருந்த
பெண்கள் பற்றி தேசியத்தலைவர்
அறிந்து கொண்டார்.அவர்களையும்
விடுதலைப் புலிகள் அமைப்பில்
இணைத்துக் கொள்ள எண்ணி
கேணல் சங்கரையும்,ரகுவப்பாவையும்
அனுப்பி எங்கள் அமைப்பில் இணைந்து
கொள்ள விரும்பியவர்களை அழைத்து
வரும்படி ஏற்பாடு செய்தார்.அப்படி
அழைத்து வரப்பட்டவர்களில் ஒருவர்தான் மைக்கேல் வசந்தி.
இயக்கத்தில் இணைந்து
கொள்வதற்காக வந்திருந்த பெண்களுக்காக சென்னை
திருவான்மியூர் பகுதியில் வீடொன்றில்
வாடகைக்கு எடுத்து தங்க வைக்கப்
பட்டிருந்தார்கள்.தேசியத்தலைவர்
அவர்களினதும், திருமதி அடேல்
பாலசிங்கம் அவர்களினதும் கண்காணிப்பில் இவர்கள் பராமரிக்கப்
பட்டார்கள்.பயிற்சிப் பாசறைக்குச்
செல்வதற்கு முன் அரசியல் வகுப்புக்கள்,
கராத்தே பயிற்சி என்பன நடத்தப்
பட்டன.
1985 ஆகஸ்ட் மாதம் 18 ஆம் நாளில்
ஆரம்பிக்கப்பட்ட மகளிர்க்கான முதலாவது பயிற்சிப் பாசறை தான்
சோதியாவை புடம் போட்டு எடுத்தது.
தாதியர் பயிற்சியில் ஈடுபாடு
கொண்டிருந்த சோதியா அந்த பயிற்சி
முகாமில் ஒரு போராளியாக மட்டுமன்றி
மருத்துவதாதியாகவும் பணி
புரிந்தவர்.
ஓட்டத்தில் தொடங்கி,கயிறு ஏறுதல்,
மலை ஏறுதல் என்றெல்லாம் கடுமையான பயிற்சிகளை முடித்துக்
களைத்துப் போய் வந்தவர்களுக்கெல்லாம்
அக்காவாக,தாயாக,மருத்தவச்சியாக
செயற்பட்டவர் சோதியா.
காய்ச்சல்,வயிற்றுவலி,கைகால் வலி
என்று வேதனைப் பட்டவர்க்கெல்லாம்
தனது களைப்பும் பாராது ஓடி ஓடி சேவை
செய்தவர் சோதியா.சாப்பிடுவதற்குக்கூட
நேரமின்றி சக போராளிகளுக்கு
மருந்துகள் கொடுப்பதிலும் அவர்களைப்
பராமரிப்பிலும் முகம் சுளிக்காது
செயற்பட்டவர் அவர்.அந்த முகாமிலேயே
பயிற்சியாளர்களினதும்,தேசியத்
தலைவர் அவர்களினதும் பாராட்டைப்
பெற்றவர் சோதியா.
சோதியாவின் பரிவும் இரக்கமும், சக
போராளிகளின் மீதான கவனிப்பும்
அவரது மருத்துவப் பணியும் அவரை
ஒரு தாயாக,நவீன தாதியியல்
முறையை உருவாக்கிய இங்கிலாந்துத்
தாதி புளோரன்ஸ் நைட்டிங்கேல் உடன்
சோதியாவை உருவகப்படுத்தும் அளவுக்கு அவரது பணிகள் இடம்
பெற்றிருந்தன.
தமிழ்நாட்டில் பயிற்சியை முடித்துக்
கொண்டு ஈழத்துக்குத் திரும்பிய
சோதியா சிங்கள,இந்திய இராணுவங்
களுக்கு எதிரானபோர் நடவடிக்கைகளில்
பங்கேற்றார்.89 களின் போது மணலாற்றுக் காட்டிற்குச் சென்று சேர்ந்த
சோதியா அங்கு விடியல் முகாம் அமைத்தல் உட்பட பல பணிகளிலும்
பங்கேற்றார்.திசையறி கருவியின்
உதவியோடு காட்டினுள் நகர்தல்,
கம்பாலா மூலம் சுமைகளைத் தூக்குதல்
என அனைத்து விதமான பணிகளிலும்
தானும் ஒருவராக பங்கேற்று, அவர்கள்
களைப்புற்ற வேளைகளில் அவர்களோடு
உட்கார்ந்து அவர்களுக்கு நம்பிக்கை
ஊட்டியவர்.ஊக்கத்துடனும் உற்சாகத்துடனும் அனைத்துக் கடமைகளையும் பொறுப்பேற்றுச்
செய்தமை,புதிய போராளிகளை
உருவாக்குதல்,அவரது மருத்துவப்
பணிகள்,அவரது தலைமைத்துவப் பண்பு
என்பனவற்றையும் அவதானித்த
தேசியத் தலைவர் அவர்கள் சோதியாவை மகளிர் படையணியின்
முதற் தளபதியாக நியமனம் செய்தார்.
ஆரம்பத்தில் மருத்துவம்,தொலைத்
தொடர்பு சேவைகள் என செயற்பட்ட
சோதியாவுக்கு தளபதியாக நியமிக்கப்
பட்ட பின்பு பொறுப்புக்கள் அதிகரித்தன.
பெண் போராளிகளின் சகல விதமான
பிரச்சனைகளையும் உடனுக்குடன்
தேசியத் தலைவரின் கவனத்திற்கு
கொண்டு சென்று அனைத்து குற்றம்
குறைகளையும் நிவர்த்தி செய்தார்.
போராளிகள் நோய்வாய்ப்படும்போது
அவர்களுக்கு மருந்து மாத்திரைகள்
கொடுப்பதோடு மாத்திரம் நின்று விடாது
அவர்களுக்கு தைரியம் ஊட்டி அவர்களை எழுந்து நடமாடச் செய்வார்.
மற்றையவர்களுக்கு மருத்துவராக
சேவையாற்றி அவர்களது நோய் அறிந்து
மருத்துவம் பார்த்த சோதியா தனது
உடலில் ஏற்பட்ட நோயைக் கண்டறிய
முடியாமற் போனமை பெரும் துயரமான
சம்பவமே.சாதாரண காய்ச்சல் என்று
எண்ணி மாத்திரைகளோடு வாழ்ந்த
அவரை நோயின் தாக்கம் அதிகரித்த
போது தேசியத்தலைவரின் பணிப்பிற்கு
அமைய சக போராளிகள் வல்வை ஊறணி மருத்துவ மனைக்கு அழைத்துச்
சென்றார்கள்.அங்கு மேற்கொள்ளப்பட்ட
சிகிச்சைகள் பலனளிக்காது அவர்
மரணத்தைத் தழுவிக் கொண்டார்.
சக போராளிகளோடு நடந்து சென்றவரை
உயிரற்ற உடலாக சவப்பெட்டியில்
சக போராளிகள் தோளில் சுமந்து வந்த
போது தேசியத் தலைவர் உட்பட
புனிதபூமியில் வாழ்ந்த நாம் அனைவருமே ஆற்ற முடியாத துயரில்
மூழ்கிப் போனோம்.
இறுதிக் கணங்களில் சக போராளி
களிடம் தனது உடல் புனிதபூமியிலே
விதைக்கப்பட வேண்டும் என தனது
இறுதி விருப்பத்தைத் தெரிவித்திருந்
தார்.
அதற்காக புனிதபூமியில் குழியும்
தயார் செய்யப்பட்டிருந்தது.சோதியாவின்
உடலோடு புனிதபூமிக்கு வந்த
சோதியாவின் உறவினர் ஒருவர்
தேசியத்தலைவரிடம் ஒரு வேண்டுகோளை முன்வைத்தார்.
சோதியாவின் பெற்றோர்,உறவினர்கள், ஊரவர்கள்
சோதியாவின் உடலுக்கு அஞ்சலி
செலுத்த வேண்டும்.அவர்களது குடும்பசேமக்காலையில் நல்லடக்கம்
செய்யப்பட வேண்டும்.அதற்கான
சந்தர்ப்பத்தைத் தாருங்கள் என்று
கேட்டுக்கொண்ட போது எதுவித மறுப்பும்
இன்றி சம்மதம் தெரிவித்ததோடு
அதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளு
மாறும் போராளிகளிடம் பணித்தார்
தலைவர்.
புனிதபூமியில் சோதியாவின் வித்துடலுக்கு இறுதி மரியாதை
செய்த பின், தேசியத்தலைவர் அவர்கள்
பூனிதபூமியில் இருந்து ஒரு பிடி மண்ணை எடுத்து பெட்டியினுள் இட்டு
சோதியாவை வழியனுப்பி வைத்தார்.
சோதியாவின் வித்துடல் சக பெண்
போராளிகளால் எடுத்துச் செல்லப்பட்டு
வடமராட்சியின் சில பகுதிகளுக்கு
ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்ட பின்
கரவெட்டி புனித அந்தோனியார்
ஆலயத்தில் மத நிகழ்வுகள் இடம்பெற்ற
பின்,சோதியா குடும்பத்தினர்களுக்கான
சேமக்காலையில் அவரது வித்துடல்
நல்லடக்கம் செய்யப்பட்டது.
சோதியாவுக்கு நினைவுக் கல்
வடமராட்சி எள்ளங்குளம் துயிலும்
இல்லத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
மேஜர் சோதியாவின் நினைவாக
14.07.96 இல் சோதியா படையணி
உருவாக்கப்பட்டது.

 

தமிழீழ விடுதலைப்புலிகளின் மூத்த உறுப்பினரான கப்டன் பண்டிதரின் 39ஆம் ஆண்டு நினைவு தினம்.

2 months 2 weeks ago

யாழ்ப்பாணம் 23 மணி நேரம் முன்

தமிழீழ விடுதலைப்புலிகளின் மூத்த உறுப்பினரான கப்டன் பண்டிதரின் 39ஆம் ஆண்டு நினைவு தினம்.

 

1051355771.jpg

 


 (இனியபாரதி)

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறைப் பகுதியில், தமிழீழ விடுதலைப்புலிகளின் மூத்த உறுப்பினரான கப்டன் பண்டிதரின் 39ஆம் ஆண்டு நினைவு தினம் கடைப்பிடிக்கப்பட்டது.

இந்த நினைவேந்தல் இன்று செவ்வாய்க்கிழமை (09) அவரது இல்லத்தில் இடம்பெற்றுள்ளது.

இதன் போது, பண்டிதரின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து தீபம் ஏற்றி மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த நினைவேந்தலில் பண்டிதரின் குடும்பத்தினர், யாழ் மாநகர முன்னாள் முதல்வரும் சட்டத்தரணியுமான வி.மணிவண்ணன், யாழ் மாநகர சபை முன்னாள் உறுப்பினர் வரதராஜன் பார்த்தீபன் உள்ளிட்ட சிலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

1985ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9 ஆம் திகதி அச்சுவேலியில் உள்ள விடுதலைப்புலிகளின் முகாமை படையினர் முற்றுகையிட்டதால் ஏற்பட்ட சமரில் கப்டன் பண்டிதர் உட்பட பல போராளிகள் வீர மரணமடைந்தமை குறிப்பிடத்தக்கது. 

தமிழீழ விடுதலைப்புலிகளின் மூத்த உறுப்பினரான கப்டன் பண்டிதரின் 39ஆம் ஆண்டு நினைவு தினம். (newuthayan.com)

அத்தான் சுட்ட இளநீர்

2 months 3 weeks ago

காவலூர் அகிலன் அகில்

ஒரு முறை வீட்டில் உணவு சமைத்திருந்தோம் போராளிகளோடு உண்பதற்கு வந்திருந்தான் அண்ணா மேஜர் கஜன்.

அதற்குள் அவர்களுக்குள் ஏதோ போட்டி வந்துவிட்டது சரி சுட்டுப் பார்க்கலாம் வாருங்கள் என எல்லோரையும் அழைத்தான் அவர்களோடு அத்தானும் சேர்ந்துகொண்டார். (சாந்தன் அரசியல் துறைப்போராளி காணாமல் ஆக்கப்பட்டவர் பட்டியலில் உள்ளார்)

போட்டி இளநீரைச் சுட்டு வீழ்த்த வேண்டும் என்பதே...!

(நிற்க ஊருக்குள் துப்பாக்கிகள் பயன்படுத்துவது தடை ஆனால் இவர்கள்தான் ஆயுதங்களை வழங்குபவர்கள் திருத்தம் செய்பவர்கள் ஆதலால் கொஞ்சம் இப்படியான செயல்களைச் செய்வர் பலமுறை தண்டனைகளும் அனுபவித்திருக்கிறான்)

எல்லோருமாகச் சுட்டுச் சுட்டு வீழ்த்தி தாங்கள் எப்படிச் சுட்டோம் என்பதைக் கூறிக்கொண்டிருந்தனர் சிலர் காம்புகளின் அடியிலும் சிலர் இளநீரின் முகப்பிலும் என சுட்டிருந்தனர் இறுதியாக அத்தானிடம் துவக்கு நீட்டப் பட்டது அவர் ஒரு அரசியல் போராளி என்பதால் அது (81 )என நினைக்கிறேன்.

அவரை கொஞ்சம் பகுடியாக கதைத்தும் விட்டனர் ஆனால் அவர் சிரித்தபடி தன் திறமையைக் காட்டினார் துரோணாச்சாரியார் சீடனே என்ன தெரிகிறது என அருச்சுனனிடம் கேட்கும் போது பறவையின் கண்மட்டுமே தெரிகிறது என அருச்சுனன் சொன்னதுதான் எனக்கு அன்று நினைவுக்கு வந்தது எல்லோரும் ஒரு இளநீரைச் சுட்டு வீழ்த்த அவர் ஒரு குலையையே வீழ்த்தினார் .

அது தவறு ஒரு இளநீரை வீழ்த்த வேண்டும் என்றவும் அவர்கள் சொன்ன இளநீரை வீழ்த்தி நான் பழய போராளி (1986 காலப்பகுதியில் பயிற்சி பெற்றவர்) அரசியலில் மட்டுமல்ல துப்பாக்கி சுடுவதிலும் நான் ஞானி என்பதை நிருபித்தார் அத்தான்.

அன்றோடு அவரிடம் போட்டிக்குப் போவைதை விட்டுவிட்டார்கள் எங்கள் வீட்டுக்கு வரும் போராளிகள் அவர்களில் பத்துப் பதினைந்துபேர் வீரமரணம் அடைந்துவிட்டார்கள் ஆனால் ஓரிருவர் புலம்பெயர்தேசத்தில் வாழ்கின்றனர் அவர்களது உலகம் மிக அழகானது என்றே நினைத்திருந்தோம் ஆபத்தானது என்பதை ஒருபோதும் நினைத்திருக்கவில்லை.

416120078_2135093476826486_3989053924614

 

https://www.facebook.com/photo.php?fbid=2537090856468774&set=pb.100005036528824.-2207520000&type=3

தலைவரின் பாதுகாப்புப் பொறுப்பிலிருந்து வீரச்சாவடைந்த போராளிகள் சிலரின் பெயர் விரிப்பு

3 months ago

தலைவரின் பாதுகாப்புப் பொறுப்பிலிருந்து வீரச்சாவடைந்த போராளிகள் சிலரின் பெயர் விரிப்பு

இவையாவும் தலைவரின் மெய்க்காவலராகக் கடமையாற்றிய பிரியன் என்ற ராதா வான்காப்புப் படையணிப் போராளி அண்ணாவின் வாக்குமூலம் ஆகும்.

பெயர் (பதவி நிலை)

  1. சிலம்பரசன் (ராதா வான்காப்புப் படையணியின் முன்னாள் சிறப்புக் கட்டளையாளர். பின்னாளில் மெய்க்காவலர் அணிக்குள் உள்வாங்கப்பட்டார்.)
  2. செந்தில் (ராதா வான்காப்புப் படையணியின் சிறப்புக் கட்டளையாளர். சிலம்பரசன் அவர்களுக்குப் பின்னர் நியமிக்கப்பட்டார்.)
  3. சுவர்ணன் (வட்டப் பொறுப்பாளர்)
  4. ரட்ணம் மாஸ்டர் 
  5. சேந்தன் (தலைவரின் நிதிப் பொறுப்பாளர்)
  6. குறிஞ்சிக்குமரன் (தலைவரின் முதன்மை மருத்துவர்)
  7. ஈழவாணன் (தலைவரின் தனிப்பாட்ட உதவியாளர்)
  8. வண்ணம் (இரண்டாம் வட்டப் பொறுப்பாளர்.)
  9. இகைவேந்தன் (தலைவரின் முதன்மை சமையல்காரர்)
  10. தென்றல் (தலைவரின் சமையலோடு தொடர்புடையவர்)
  11. பெருவாணன் (தலைவரின் சமையல்காரர்)
  12. நக்கீரன் (இரண்டாம் வட்டப் போராளி)
  13. அழகரசன் (இரண்டாம் வட்டப் போராளி)
  14. தயாளன் (முதன்மை மெய்க்காவலர்களில் ஒருவர். தேவைப்படும் நேரங்களில் இரண்டாம் வட்டப் போராளியாகவும் கடமையாற்றினார்.)
  15. ஈகை
  16. விடியல் (முதன்மை மெய்க்காவலர்களில் ஒருவர்)
  17. கதிரேஸ் (பெறுநர்/ தலைவருக்கு வருபவற்றை பெற்றுக்கொள்பவர்)
  18. வள்ளுவன் மாஸ்டர் (முதன்மை மெய்க்காவலர்களில் ஒருவர்)
  19. இளங்கோ (முதன்மை மெய்க்காவலர்களில் ஒருவர்)
  20. புரட்சி
  21. காசி
  22. அறிவுமாறன்
  23. வள்ளல் (தலைவரின் முதன்மை நிழற்படக்காரர்)
  24. பொன் (மெய்க்காவலர்களில் ஒருவர்)
  25. முரசு (மெய்க்காவலர்களில் ஒருவர்)
  26. தென்னவன் (மெய்க்காவலர்களில் ஒருவர்)
  27. மொழியறிவு (மெய்க்காவலர்களில் ஒருவர்)
  28. ஐயன்னா

 

  • அமரர் பி. மதிவதனி அவர்களின் வழங்கல் போராளி: இளந்தீ

 

எண் 1 முதல் 17 வரையுள்ள போராளிகள் யாவரும் இறுதிநாளில் விழிமூடினர். 17 முதல் 28 வரையுள்ள போராளிகள் ஒடுவில் நிலைக்கு முன்னரே சிறிலங்காப் படையினரின் எறிகணை வீச்சில் புலிகளின் படைமுகாம்களினுள் வித்தாகினர்.

இவர்களில் சிலம்பரசன் அவர்கள் ஏற்கனவே விழுப்புண் அடைந்திருந்து மே 16இற்குப் பின்னர் வீரச்சாவடைந்தார் என்று அறிகிறேன்.

ரட்ணம் மாஸ்டர் அவர்களோடு வண்ணம் அவர்களும் மே 17 அதிகாலை நடைபெற்ற கேப்பாப்புலவு நோக்கிய ஊடறுப்புச் சமரில் வீரச்சாவடைந்தார்.

வள்ளுவன் மாஸ்டர் வீரச்சாவடைந்த அந்நிகழ்விலேயே இளங்கோவும் வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்.

வள்ளல் அவர்கள் ஏற்கனவே ஒருகாலை இழந்திருந்த நிலையில் தான் களமாடிக்கொண்டிருந்தார். ஆனந்தபுரத்தில் நடந்த சமரொன்றில் காயப்பட்டதால் முற்றுகைக்குள்ளிருந்து வெளியேற்ற முடியாத சூழ்நிலை ஏற்பட்டதால் அங்கேயே விடுபட வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்.

 

ஆதாரம்:

ஆக்கம் & வெளியீடு
நன்னிச் சோழன்

Checked
Thu, 03/28/2024 - 16:25
மாவீரர் நினைவு Latest Topics
Subscribe to மாவீரர் நினைவு feed