துகிலுரித்த மரங்களின் நிர்வாண அழகை ரசித்தது போதுமென்று நினைத்ததோ இயற்கை, மரங்களுக்கெல்லாம் பனிப்போர்வை போர்த்திக் கொண்டிருந்தது.
நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழியோடி புல்லுக்குமாங்கே பொசிவது போல், இயற்கையின் இந்தச் சொரிவில் வீடுகளின் ஓடுகளும் வீதிகளும் கூடப் பனிப் போர்வைக்குள் தம்மை ஒளித்துக் கொண்டன. எங்கு பார்த்தாலும் வெண்மை. வானம்; பூமி, மரங்கள், வீடுகள் எல்லாமே வெண்பனிப் போர்வையில் கண்களைக் கொள்ளை கொண்டன. இந்த அழகையெல்லாம் ரசிக்க பெண்களுக்கெங்கே நேரம்!!!