தமிழகச் செய்திகள்

கருணாநிதியின் சிலை திறப்பு விழா இன்று

13 hours 27 minutes ago
கருணாநிதியின் சிலை திறப்பு விழா இன்று

அண்ணா அறிவாலயத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள, மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதியின் சிலையை காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி இன்று (ஞாயிற்றுக்கிழமை) திறந்துவைக்கவுள்ளார்.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், தி.மு.க. நிர்வாகிகள் ஆகியோரின் அழைப்பின் பேரில் குறித்த நிகழ்வில் பங்கேற்பதற்காக சோனியா காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் இன்று சென்னைக்கு பயணிக்கவுள்ளனர்.

அந்தவகையில் கருணாநிதியின் சிலையுடன் அறிஞர் அண்ணாவின் புதுப்பிக்கப்பட்ட சிலையையும் திறந்துவைப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் இச்சிலை திறப்புவிழா மாலை 5 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் இடம்பெறவுள்ளமையால் அப்பகுதி மிகவும் அழகாக அலங்கரிக்கப்பட்டுள்ளதுடன் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை பாதுகாப்பு மற்றும் சனநெரிசலை கருத்திற்கொண்டு முக்கிய பிரமுகர்களுக்கு மாத்திரம் தி.மு.க அழைப்பு விடுத்துள்ளது.

கருணாநிதியின் 9 அடி உயரமான முழு உருவ வெண்கல சிலையை தீனதயாளன் என்ற சிற்பி வடிவமைத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

http://athavannews.com/கருணாநிதியின்-சிலை-திறப-2/

 

 

ஸ்டெர்லைட் விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை: கடம்பூர் ராஜூ

13 hours 28 minutes ago
ஸ்டெர்லைட் விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை: கடம்பூர் ராஜூ
raja-720x450.png

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கக் கூடாது என்பதுதான் தமிழக அரசின் தொடர்ச்சியான நிலைப்பாடாமென  அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதி வழங்கியுள்ளமை தொடர்பாக தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியதாவது,

“22 வருடங்களாக நிலவிய ஸ்டெர்லைட் ஆலை பிரச்சினையில் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அ.தி.முக. செயற்பட்டது.

மேலும் அந்த ஆலையை திறக்க கூடாதென்பதில் அ.தி.மு.க அரசு உறுதியாகவே இன்னும் உள்ளது.

இதனால் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தீர்ப்பு தொடர்பில் எவ்வாறான நடவடிக்கையை மேற்கொள்ளலாம் என்பது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முடிவு செய்வார்” என குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தீர்ப்பினால் தூத்துக்குடி மாவட்டத்தில் பிரச்சினைகள் தோன்றுவதற்கு வாய்ப்புக்கள் உள்ளமையால், அப்பகுதியில் 1800 பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தூத்துக்குடி பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார்.

 

http://athavannews.com/ஸ்டெர்லைட்-விவகாரத்தில்/

 

 

செந்தில் பாலாஜி தாம் திமுகவில் இணைந்தது ஏன் என விளக்கம்

2 days 8 hours ago
 
செந்தில் பாலாஜி

அதிமுக முன்னாள் அமைச்சரும், டிடிவி தினகரனின் அமமுகவின் முக்கிய நிர்வாகியாக இருந்தவருமான வி.செந்தில் பாலாஜி, தமது ஆதரவாளர்களுடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளார்.

ஸ்டாலினை சிறந்த தலைவராகப் பார்ப்பதாகவும் அவர் மீதுள்ள ஈர்ப்பால் தாம் திமுகவில் இணைந்ததாகவும் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.

'அதிமுக ஒரு மூழ்கும் கப்பல்' என்றும் தகுதிநீக்கம் செல்லும் என்று உயர் நீதிமன்றத் தீர்ப்பு வந்தபோது, மேல்முறையீடு செய்யாமல் இடைத் தேர்தலை சந்திக்கலாம் என்று தினகரனிடம் கூறியதாகவும் இணைவுக்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த செந்தில் பாலாஜி கூறினார்.

செந்தில் பாலாஜி எங்கிருந்தாலும் வாழ்க என்று டிடிவி தினகரனும், 'அவர் விலகியது சரி, சென்ற இடம்தான் தவறு' என அதிமுக அமைச்சர் ஜெயக்குமாரும் கருத்து கூறியுள்ளனர்.

சமீப நாட்களாகவே ஆ.ராசா மற்றும் செந்தில் பாலாஜி ஆகியோர் ஒன்றாக இருக்கும் படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு அவர் திமுகவில் இணையப்போவதாக செய்திகள் வெளியாகின.

ஆனால், அது பழைய படம் என்றும், செந்தில் பாலாஜி திமுகவில் இணைவது குறித்து தமக்கு எதுவும் தெரியாது என்றும் ராசா ஊடகங்களிடம் கூறியிருந்தார்.

2006 மற்றும் 2011ஆம் ஆண்டுகளில் கரூர் சட்டமன்றத் தொகுதியில் இருந்து அதிமுக சார்பில் தேர்வு செய்யப்பட்ட செந்தில் பாலாஜி, 2016இல் அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியில் இருந்து வெற்றிபெற்றார்.

செந்தில் பாலாஜி

2011இல் ஜெயலலிதா தலைமையில் அதிமுக ஆட்சி அமைந்தபோது போக்குவரத்து அமைச்சராக நியமிக்கப்பட்ட செந்தில் பாலாஜி, அமைச்சர் பதவியில் இருந்தும் கரூர் மாவட்ட அதிமுக செயலாளர் பொறுப்பில் இருந்தும் 2015இல் ஜெயலலிதாவால் நீக்கம் செய்யப்பட்டார்.

2016 தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க அதிகமாக முறைகேடு நடந்ததாக தேர்தல் ஆணையத்தால் தேர்தல் ரத்து செய்யப்பட்டு, தாமதமாக தேர்தல் நடத்தப்பட்ட இரு தொகுதிகளில் அரவக்குறிச்சியும் ஒன்று.

அரவக்குறிச்சியில் செந்தில் பாலாஜியை எதிர்த்து திமுக சார்பில் போட்டியிட்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.சி.பழனிச்சாமியும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டார்.

அண்ணா அறிவாலயத்தில் நடந்த இந்த நிகழ்வின்போது திமுக பொருளாளர் துரை முருகன், கொள்கை பரப்புச் செயலாளர் ஆ.ராசா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

கடந்து செல்க யூடியூப் பதிவு இவரது BBC News Tamil
எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

முடிவு யூடியூப் பதிவின் இவரது BBC News Tamil

<div class="embed-image-wrap" style="max-width: 500px"> <a href="https://www.youtube.com/watch?v=5NT5wg7QtbU&amp;t=6s"> <figure class="media-landscape full-width embed-screenshot-nonejs"> <span class="image-and-copyright-container"> <img class="js-image-replace" alt="யூடியூப் இவரது பதிவு BBC News Tamil: ஜெயலலிதா முதல் திரைப்படத்துக்கு வாங்கிய சம்பளம் எவ்வளவு ?" src="https://ichef.bbci.co.uk/news/1024/socialembed/https://www.youtube.com/watch?v=5NT5wg7QtbU&amp;t=6s~/tamil/global-46563100" width="500" height="269"> <span class="off-screen">புகைப்பட காப்புரிமை BBC News Tamil</span> <span class="story-image-copyright" aria-hidden="true">BBC News Tamil</span> </span> </figure> </a> </div>

எடப்பாடி கே.பழனிசாமி அரசுக்கு அளித்து வந்த தங்கள் ஆதரவை விலக்கிக்கொண்டதால் தகுதிநீக்கம் செய்யப்பட்ட டிடிவி தினகரன் தரப்பு சட்டமன்ற உறுப்பினர்கள் 18 பேரில் இவரும் ஒருவர்.

முலாம் பூசப்பட்ட போலிகள் விலகுவதால் இங்கு யார் வருந்தபோகிறார்கள் என்று நேற்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டிருந்த தினகரன், ஒரு சிறு குழுவோ, சில நபர்களோ தங்கள் சுயநலத்துக்காக கட்சியைவிட்டு விலகிச் செல்வதால் கட்சியே முடங்கிவிடும் என நினைப்பது "பூனை கண்ணை மூடினால் உலகமே இருண்டுவிடும்" என்று நினைப்பதைப் போன்றது என்று கூறியுள்ளார்.

எனினும் தினகரன் இந்த அறிக்கையில் செந்தில் பாலாஜியின் பெயரைக் குறிப்பிடவில்லை.

'கடலில் கரைத்த பெருங்காயம்' - ஜெயக்குமார்

"செந்தில் பாலாஜி அமமுகவில் இருந்து விலகியது சரி. ஆனால், சேர்ந்த இடம்தான் தவறு. அவர் ஏற்கனவே திமுகவில் இருந்துதான் அதிமுக வந்தார். பழைய பாசத்தால் அவர் மீண்டும் திமுக சென்றுள்ளார். அதிமுக ரத்தம் உள்ள யாரும் இவ்வாறு சென்று சேர மாட்டார்கள். அதிமுகவில் இருந்து திமுக செல்பவர்கள் கடலில் கரைத்த பெருங்காயம்போல காணாமல் போய்விடுவார்கள்."

'செந்தில் பாலாஜி எங்கிருந்தாலும் வாழ்க' - தினகரன்

"செந்தில் பாலாஜி நல்ல தம்பிதான். அவர் போனதில் எங்களுக்கு வருத்தமில்லை. அவர் எங்கிருந்தாலும் வாழ்க. எந்தக் கட்சிக்கு செல்வது என முடிவெடுக்க அவரவர்க்கு உரிமை உண்டு. அவர்கள் தங்கள் விலகலுக்கு காரணம் சொன்னால், அதற்கும் பதில் சொல்லப்படும்."

"தம்பி செந்தில் பாலாஜியை 2006இல் இருந்து எனக்கு நன்றாகத் தெரியும். நான்கு மாதங்களுக்கு முன்பு வந்து சில சொந்த பிரச்சனைகள் இருப்பதால் அரசியலில் தீவிரமாக செயல்பட முடியாது," என்றும் தம்மிடம் கூறினார் என்று அமமுக துணைப் பொதுச் செயலாளர் தினகரன் கூறியுள்ளார்.

தினகரன்

டிசம்பர் 5 அன்று ஜெயலலிதா நினைவு நாளுக்கும் வராததால் விசாரித்தபோது ஏதோ வழக்கு விவகாரமாக வழக்கறிஞருடன் இருப்பதாகவும் ,18 சட்டமன்ற உறுப்பினர்களையும் தாம்தான் அழைத்து வந்தது போலவும் பேசுவதாகவும் தமக்கு தெரிவிக்கப்பட்டதாக தினகரன் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

"அமமுக நிர்வாகிகள் வீடுவீடாகச் சென்று உறுப்பினர் சேர்க்கை நடத்திய நான்காயிரம் படிவங்கள் அவரிடம் உள்ளன. அது நிர்வாகிகளின் உழைப்பு. அதைமட்டும் யாரிமாவது அவர் கொடுத்து அனுப்ப வேண்டும்," என்றும் தினகரன் கூறினார்.

"எங்கள் கட்சியில் இருந்து ஒரு நிர்வாகியை அழைத்து அதை விழாவாக நடத்தும் அளவுக்கு அவர்களின் நிலை உள்ளது. ஆர்.கே.நகரில் டெபாசிட் கூட கிடைக்காததால் அப்போதிருந்தே என்னை எதாவது செய்ய நினைக்கிறார்கள்," என்றும் தினகரன் தெரிவித்தார்.

"அவர் அதிமுகவில்கூட சேர்ந்திருக்கலாம். அதுவும் அம்மாவின் கட்சிதான். ஆனால் திமுக சென்றால் அம்மாவின் பெயரைப் பயன்படுத்த முடியாது," என்று தினகரன் தெரிவித்தார்.

https://www.bbc.com/tamil/global-46563100

"ஆம்புலன்ஸில்"  வந்து லீவு கேட்டு,  அதிர வைத்த ஊழியர்!

3 days 6 hours ago

à®à®®à¯à®ªà¯à®²à®©à¯à®¸à¯

"ஆம்புலன்ஸில்"  வந்து லீவு கேட்டு,  அதிர வைத்த ஊழியர்!

உடம்பு சரியில்லைன்னு எத்தனையோ முறை சொல்லியும் கேட்காததால், ஊழியர் ஒருவர் ஆம்புலன்சில் வந்து லீவு லட்டர் தந்த அவலம் நடந்துள்ளது.

ஈரோடு மாவட்டம் காஸ்பாபேட்டை பகுதியைச் சேர்ந்தவர் பாபு. இவரது மனைவி மலர்கொடி. இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். பாபு அரசு போக்குவரத்து கழகத்தில் 5 வருடமாக டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.

லà¯à®µà¯ à®à¯à®à¯à®à®¾à®°à¯

இந்த நிலையில், பாபுவுக்கு நேற்று முன்தினம் திடீரென்று உடல்நிலை சரியில்லாமல் போய்விட்டது. அதனால் அவரை குடும்பத்தார், முள்ளாம்பரப்பில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

à®à¯à®¯à¯à®à¯ லà¯à®µà¯ லà®à¯à®à®°à¯

அங்கு அவருக்கு ஒரு பக்கம் சிகிச்சை நடந்து கொண்டிருந்த நேரத்தில், மலர்கொடி சென்னிமலை போக்குவரத்து கழகத்தின் மண்டல ஆபீசில் உள்ள கிளை மேலாளருக்கு போன் செய்து தகவலை சொன்னார். ஆஸ்பத்திரியில் கணவனை சேர்த்துள்ளதால், அவருக்கு லீவு வேண்டும் என்று கேட்டார்.

ஆனால் அதற்கு கிளை மேலாளர் ஒத்து கொள்ளவே இல்லை. கணவரின் நிலைமையை எவ்வளவோ எடுத்து சொல்லியும் கேட்காததால், என்ன செய்வதென்று மலர்கொடி விழித்தார். பிறகு ஆஸ்பத்திரி படுக்கையில் சிகிச்சை பெற்று கொண்டிருந்த பாபுவை, ஆஸ்பத்திரி ஆம்புலன்சில் ஏற்றினார்.

à®à®¤à®¿à®°à¯à®¨à¯à®¤à®©à®°à¯

பாபு ஆம்புலன்சில் படுத்து கிடக்க, அவர் பக்கத்தில் மலர்கொடி மகனுடன் ஏறி உட்கார்ந்துகொண்டார். ஆம்புலன்ஸை போக்குவரத்து அலுவலகத்து செல்லுமாறு சொன்னார். டிரான்ஸ்போர்ட் ஆபீசுக்குள் ஆம்புலன்ஸ் வருவதை கண்ட எல்லோரும் அதிர்ந்தார்கள்.

பின்னர் ஆம்புலன்சில் பாபு வருவதை பார்த்து மேலும் ஷாக் ஆனார்கள். அப்போது பாபு மலர்கொடியை துணைக்கு அழைத்து சென்று கிளை மேலாளர் அறைக்கு சென்றார். கையோடு தான் கொண்டு வந்த விடுமுறை கடிதத்தை அவரிடம் கொடுத்துவிட்டு திரும்பவும் ஆம்புலன்ஸில் ஏறி ஆஸ்பத்திரிக்கு சென்றார்.

பரபரபà¯à®ªà¯

அதிகாரிகள் கெடுபிடி காரணமாக, லீவு கிடைக்காததால், குடும்பத்துடன் ஆம்புலன்சில் வந்து லீவு லட்டர் கொடுத்துவிட்டு போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Read more at: https://tamil.oneindia.com/news/erode/bus-driver-came-ambulance-give-leave-letter-near-erode-336460.html

சசி கலாவிடம் இன்று வருமான வரி விசாரணை..

3 days 15 hours ago

à®à®©à¯à®±à¯, நாள௠விà®à®¾à®°à®£à¯

சசிகலாவிடம் இன்று வருமான வரி விசாரணை.. பெங்களூர் சிறையில் வைத்து!

சிறையில் உள்ள சசிகலாவிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று தங்களது விசாரணையை தொடங்குகிறார்கள்.

கடந்த ஆண்டு, நவம்பர் மாதம் சசிகலா குடும்பத்தாருக்கு சொந்தமான 187 இடங்களில் கடந்த 5 நாட்களாக வருமான வரித்துறையினர் ரெய்டு நடத்தினார்கள்.

இதில் ஏராளமான நகைகள், பணம், வரி ஏய்ப்பு செய்ததற்கான ஆவணங்கள் போன்வற்றை வருமான வரித்துறையினர் கைப்பற்றினார்கள்.

எனவே சோதனையில் சிக்கிய பொருட்கள், ஆவணங்கள் குறித்து சசிகலாவிடம் விசாரணை நடத்த வருமான வரித்துறை, ஏற்கனவே சிறை அதிகாரிகளிடம் அனுமதி கேட்டிருந்தது. ஆனால், சசிகலா மவுன விரதம் இருப்பதால் அதற்கு அனுமதி அளிக்க சிறை நிர்வாகம் மறுத்துவிட்டது.

அதற்கு பிறகு 10 நாட்களுக்கு முன்பு மீண்டும் சசிகலாவிடம் 13, 14-ம் தேதிகளில் விசாரணை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று கேட்டு, இன்னொரு கடிதத்தை சிறை நிர்வாகத்திற்கு அனுப்பினார்கள்.

இதற்கு சிறை அதிகாரிகளும் ஒப்புக் கொண்டதுடன், 5 பேர் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள் இந்த விசாரணையில் இடம்பெற வேண்டும் என்ற குறிப்பையும் தங்களது கடிதத்தில் தெரிவித்திருந்தார்கள். அதன்படி, இன்றும் நாளையும் சசிகலாவிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தவுள்ளனர்.

இந்த இரு தினங்களிலும் அதிகாரிகள் சிறைக்கு சென்று சசிகலாவை ஒரு தனி அறையில் அமர வைத்து நேரடி விசாரணையில் இறங்குவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more at: https://tamil.oneindia.com/news/chennai/income-tax-officials-decided-investigation-sasikala-336408.html

பிரிவினைவாத பேச்சு: சீமான் மீது வழக்கு!

3 days 21 hours ago
பிரிவினைவாத பேச்சு: சீமான் மீது வழக்கு!
69.jpg

தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளை பேசும் மக்களிடையே பிரிவினையை உண்டாக்கும் வகையில் பேசியதற்காக சீமான் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை தரமணியில் 2016ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் தமிழ், தெலுங்கு பேசும் மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் பேசியுள்ளார். இந்த பொதுக்கூட்டத்தின் காணொளிக் காட்சியை சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞரான ராஜ்குமார் யூட்யூப் இணையதளத்தில் கண்டுள்ளார். இரு மொழிகளை பேசும் மக்களிடையே பிரிவினை உண்டாக்கும் வகையில் சீமான் பேசியதாகக் கருதிய ராஜ்குமார் இவ்விவகாரம் குறித்து சீமான் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்த புகார் காவல்துறை ஆணையர் அலுவலகத்திலிருந்து தரமணி காவல்நிலையத்திற்கு அனுப்பப்பட்டது. சம்பந்தப்பட்ட யூட்யூப் காணொளியை பார்த்த தரமணி காவல்துறையினர் சட்ட நிபுணர்களின் கருத்துகளை கேட்டபிறகு இந்திய தண்டனை சட்டப் பிரிவு 153 (1) (ஏ)இன் கீழ் இரு தரப்பினரிடையே பகையை ஊக்குவிக்கும் வகையில் பேசியதற்காக நேற்று (டிசம்பர் 11) இரவு வழக்கு பதிவு செய்துள்ளனர்.

ஏற்கெனவே வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியது, சர்ச்சைக்குரிய விதத்தில் பேசியது, பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் பேசியது, பொது அமைதியை சீர்குலைக்கும் வகையில் பேசியது, தவறான செய்திகளை பரப்பி அமைதியை சீர்குலைப்பது, சமூக ஊடகங்களில் தவறான தகவல்களை பரப்பியது போன்றவற்றிற்காக பல்வேறு பிரிவுகளின் கீழ் சீமான் மீது தரமணி காவல்நிலையத்தில் வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

 

https://minnambalam.com/k/2018/12/12/69

 

2 படம் பார்க்க பேரன்களுடன் சென்ற ரஜனிக்கு வந்த தலைவலி

4 days 8 hours ago

ரஜினி தனது மனைவி லதா மற்றும் பேரன்கள் யாத்ரா, லிங்காவுடன் சேர்ந்து தியேட்டரில் 2.0 படம் பார்த்தபோது எடுத்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

அந்த புகைப்படங்களில் லதா ரஜினிகாந்தின் இருக்கைக்கு பின்னால் ஒரு பெண் நிற்கிறார். அந்த பெண் ரஜினி வீட்டு பணிப்பெண் என்றும் அவர் நின்று கொண்டே படம் பார்த்தார் என்றும் சமூக வலைதளங்களில் பேச்சு கிளம்பியுள்ளது. தியேட்டரில் இருக்கை இருந்தும் பணிப்பெண்ணை நிற்க வைத்துள்ளனர் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ரஜினியின் பிறந்தநாளான இன்று அந்த புகைப்படங்களை மீண்டும் சமூக வலைதளங்களில் ஷேர் செய்து விமர்சிக்கிறார்கள்.

Controversial photos: Put an end to this Rajini sir

 

அவர் பணிப்பெண் தான் என்றும், தியேட்டரில் இருக்கைகள் இருந்தும் அவரை நிற்க வைத்தனர் என்றும் தமிழ் நடிகர் ஒருவர் ஆங்கில நாளிதழுக்கு பேட்டி அளித்துள்ளார்.
 

Controversial photos: Put an end to this Rajini sir


https://tamil.filmibeat.com/news/controversial-photos-put-an-end-this-rajini-sir-057331.html

8 வழி பசுமைச்சாலைக்கு எதிராக உண்ணாவிரதம் இருக்கப்போவதாக விவசாயிகள் அறிவிப்பு

5 days 14 hours ago
8 வழி பசுமைச்சாலைக்கு எதிராக உண்ணாவிரதம் இருக்கப்போவதாக விவசாயிகள் அறிவிப்பு

December 10, 2018

Chennai-Salem.jpg?zoom=3&resize=335%2C19

சேலம்-சென்னை இடையே 8 வழி பசுமைச்சாலைக்கு எதிராக சேலத்தில் மீண்டும் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக விவசாயிகள் அறிவித்துள்ளனர்.  சேலம்-சென்னை இடையே 8 வழி பசுமைச்சாலை அமைக்க முடிவு செய்துள்ள மத்திய அரசு இதற்காக 10 கோடி ரூபா நிதி ஒதுக்கீடு செய்துள்ளது

இந்த திட்டத்தால் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சீபுரம் ஆகிய மாவட்டங்களில் பல்லாயிரக்கணக்கான விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதனால் இந்த திட்டத்தை கைவிட வேண்டும் என பாதிக்கப்படும் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

மேலும் இந்த திட்டத்தை கைவிடக்கோரி பாதிக்கப்படுபவர்கள் மற்றும் விவசாய சங்கத்தினர், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டவர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்ற நிலையில் விவசாயிகள் சிலர் தற்கொலை முயற்சியிலும் ஈடுபட்டனர்.

இந’;தநிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இந்த திட்டத்திற்காக கையகப்படுத்தப்படும் நிலங்கள் அளவீடு செய்யப்பட்டு, அந்த நிலங்களில் எல்லை கற்கள் நடும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள் சென்னை உயர்நீதிமன்றில் வழக்கு தொடர்ந்ததனையடுத்து அதற்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது .

இந்த நிலையில் 8 வழிச்சாலை அமைப்பதற்காக கையகப்படுத்தப்பட உள்ள நிலங்களை ஆய்வு எண்ணுடன் பட்டியலிட்டு கடந்த வாரம் மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சு அறிவிப்பு வெளியிட்ட நிலையில் 8 வழிச்சாலைக்காக கூடுதலாக விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளதாக தகவல் பரவியது.

இதைத்தொடர்ந்து மீண்டும் போராட்டம் நடத்த விவசாயிகள் முடிவு செய்துள்ளனர். இதனால் சேலம்-சென்னை 8 வழிச்சாலைக்கு எதிராக மீண்டும் போராட்டம் தீவிரம் அடைய வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகின்றது

 

http://globaltamilnews.net/2018/106195/

 

உடுமலை கௌசல்யா மறுமணம் - சங்கரின் குடும்பம் வாழ்த்து

1 week ago
  •  
உடுமலை கௌசல்யா மறுமணம் செய்துகொண்டார்படத்தின் காப்புரிமை NATHAN G Image caption கௌசல்யா

சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டதற்காக, ஆணவப்படுகொலை செய்யப்பட்ட தலித் இளைஞர் சங்கரின் மனைவி கெளசல்யாவிற்கு கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழக அலுவலகத்தில் மறுமணம் நடைபெற்றது.

 

பறை இசை முழங்கும் சமயத்தில் கௌசல்யா - சக்தி ஆகியோர் திருமண உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

சங்கரின் தந்தை வேலுச்சாமி, சங்கரின் இரு இளைய சகோதரர்கள் விக்னேஷ் மற்றும் யுவராஜ் இந்த திருமணத்தில் கலந்துகொண்டு தம்பதியை வாழ்த்தினர். சங்கரின் பாட்டி மாரியாயி தம்பதிக்கு மாலை எடுத்து கொடுத்தார்.

சாதிய வன்முறைகள் மற்றும் சாதி ஆணவ படுகொலைக்கு எதிராகவும், பெண்ணுரிமை செயற்பாட்டாளராகவும் இருந்து வருகிறார் கெளசல்யா.

"சாதி ஒழிப்புக் களத்தில் நாங்கள் ஒன்றாக இணைந்து செயல்படுவோம். ஆணவப் படுகொலைக்கு எதிராக சட்டம் இயற்றப் போராடுவேன்," என்று திருமணத்துக்குப் பிறகு கௌசல்யா கூறினார்.

உடுமலை கௌசல்யா மறுமணம் செய்துகொண்டார் Image caption கௌசல்யா - சக்தி

உறுதிமொழி ஏற்றபின் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய கௌசல்யா - சக்தி தம்பதி, அங்கிருந்த பறை இசைக் கலைஞர்கள் உடன் சேர்ந்து தாங்களும் பறையை இசைத்தனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே உள்ள குமரலிங்கம் எனும் கிராமத்தைச் சேர்ந்த சங்கர் மற்றும் பழநியைச் கெளசல்யா ஆகியோர் பொள்ளாச்சியில் உள்ள பொறியியல் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது 2015ஆம் ஆண்டு சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டனர்.

சங்கர் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் எனக்கூறி சாதி இந்துக்களான கௌசல்யாவின் பெற்றோர் இத்திருமணத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.

கடந்த 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் உடுமலைப்பேட்டையில் பட்ட பகலில் சங்கர் படுகொலை செய்யப்பட்டார்.

கௌசல்யா - சக்தி

சங்கரின் கொலை நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அந்த கொலை வழக்கில் கெளசல்யாவின் பெற்றோர் சின்னச்சாமி - அன்னலட்சுமி உறவினர் உள்பட 11 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருப்பூர் எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில் நீதிபதி அலமேலு நடராஜன் ஆறு பேருக்கு தூக்குதண்டை, ஒருவருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ஒருவருக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

அன்னலட்சுமி, அவரது சகோதரர் பாண்டித்துரை மற்றும் பிரசன்னா எனும் குற்றம்சாட்டப்பட்ட இன்னொரு நபர் ஆகிய மூவர் விடுதலை செய்யப்பட்டனர். அவர்கள் விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாகவும் கௌசல்யா கூறியிருந்தார்.

இந்த தீர்ப்பு ஆணவப்படுகொலைக்கு எதிராக வழங்கப்பட்ட ஒரு வரவேற்கப்பட்ட தீர்ப்பாக பெண்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கருதினர். சங்கர் கொலைக்குப்பிறகு ஆணவப்படுகொலைக்கு எதிராக தனிச்சட்டம் இயற்றப்பட வேண்டும் எனவும் கௌசல்யா வலியுறுத்தி வருகிறார்.

உடுமலை கௌசல்யா மறுமணம் செய்துகொண்டார்

இந்நிலையில் அவருக்கு தற்போது கோவை வெள்ளலூர் பகுதியை சேர்ந்த சக்தி என்பவருடன் மறுமணம் நடைபெற்றுள்ளது. சக்தி தமிழக பாரம்பரிய கலையான பறை இசை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.

கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள தந்தை பெரியார் திராவிடர் கழகத்தில் வாழ்க்கை ஒப்பந்த உறுதிமொழி ஏற்று சக்தி, கெளசல்யா இருவரும் மாலை மாற்றி திருமணம் செய்துகொண்டனர்.

திருமணத்தை தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் ராமகிருஷ்ணன் நடத்தி வைத்தார். உடன் திராவிடர் கழகத்தின் கொளத்தூர் மணி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப்பொதுச்செயலாளர் வன்னியரசு, எவிடன்ஸ் கதிர் மற்றும் செயற்பாட்டாளர்கள் உடனிருந்தனர்.

கௌசல்யாவே இதற்கு முன்னர் பல சாதி எதிர்ப்புத் திருமணங்களை நடத்திவைத்துள்ளதுடன், பல சாதி எதிர்ப்புப் போராட்டங்களிலும் தொடர்ச்சியாக கலந்துகொண்டு வருகிறார்.

https://www.bbc.com/tamil/india-46498406

 

தமிழகத்தின் மூவாயிரம் ஊர்களின் பெயர்களை தமிழில் மாற்றம் செய்ய நடவடிக்கை

1 week ago
Tamilnadu-1-720x450.png தமிழகத்தின் மூவாயிரம் ஊர்களின் பெயர்களை தமிழில் மாற்றம் செய்ய நடவடிக்கை

தமிழகத்தில் பிற மொழிகளிலுள்ள மூவாயிரம் ஊர்களின் பெயர்கள் தமிழில் மாற்றம் செய்யப்படுமென அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்

சென்னையில் நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறியதாவது,

“தமிழகத்தில் பிற மொழிகளிலுள்ள ஊர்களின் பெயர்களை தமிழில் மாற்றம் செய்ய உலக தமிழாராய்ச்சி நிறுவனம் தற்போது முயற்சி மேற்கொண்டு வருகின்றது.

அதன்படி ஆங்கிலத்திலுள்ள ஊர்களின் பெயர்கள் தமிழில் மாற்றம் செய்யப்படும். இதற்காக வருவாய்த்துறை, செய்தித்துறை மற்றும் தமிழ் வளர்ச்சித்துறை ஆகியவற்றுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம்.

அந்தவகையில்  மாவட்ட ஆட்சியருடனும் இவ்விடயம் தொடர்பில் ஆலோசனை கூட்டமொன்றை நடத்தப்பட்டது. அதில் சில கிராமங்களின் பெயர்களை  தேர்வு செய்து வருவாய்த்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ஆகையால் ஆங்கிலத்திலுள்ள ஊர்களின் பெயர்கள் தமிழில் மாற்றம் செய்வதற்கான அரசாணை இன்னும் இரு வாரத்தில் பிறப்பிக்கப்படும். அப்போது ‘டிரிப்ளிகேன்’ என்பது திருவல்லிக்கேணியாகவும், ‘டூட்டிக்காரின்’ என்பது தூத்துக்குடியாகவும் உருமாறும்.

இதேபோன்று தமிழகத்தில் ஆங்கிலத்தில் இருக்கும் மூவாயிரம் ஊர்களின் பெயர்கள் தமிழில் மாற்றம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது” என அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

http://athavannews.com/தமிழகத்தின்-மூவாயிரம்-ஊர/

2018ன் சிறந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினர்.. கனிமொழிக்கு விருது.

1 week ago

DMK MP Kanimozhi gets the best woman parliamentarian award for 2018

2018ன் சிறந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினர்.. கனிமொழிக்கு விருது.. குவியும் பாராட்டு!

2018 ஆம் ஆண்டுக்கான சிறந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினருக்கான விருது திமுகவை சேர்ந்த கனிமொழிக்கு வழங்கப்பட்டு இருக்கிறது.

பிரபல செய்தி நிறுவனமான லோக்மட் சார்பில் வருடா வருடம் சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான விருதுகள் வழங்கப்படும். இந்த வருடமும் இதற்கான பெயர்கள் தேர்வு செய்யப்பட்டது.

அந்த வருடம் உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் பேசியது, எழுப்பிய பிரச்சனைகள், நடந்து கொண்ட விதம், நாடாளுமன்றத்திற்கு வெளியே நடந்து கொண்ட விதம் என்று பல விஷயங்களை மையப்படுத்தி இந்த விருது வழங்கப்படுவது வழக்கம்.

இந்த நிலையில் இந்த முறை 2018 ஆம் ஆண்டுக்கான சிறந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினருக்கான விருது திமுகவை சேர்ந்த கனிமொழிக்கு வழங்கப்பட்டு இருக்கிறது. திமுகவின் மகளிரணிச் செயலாளராகவும், மாநிலங்களவை திமுக குழுத்தலைவராகவும் கனிமொழி இருக்கிறார்.

இவர் இந்த விருதுக்கு தேர்வானதை அடுத்து பலரும் இவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். திமுக உறுப்பினர்கள் காலையில் இருந்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Read more at: https://tamil.oneindia.com/news/delhi/dmk-mp-kanimozhi-gets-the-best-woman-parliamentarian-award-2018-336087.html

தமிழகத்துடன் சண்டைபோட விரும்பவில்லை, நாங்கள் சகோதரர்கள்: கர்நாடக மாநில அமைச்சர் சிவக்குமார்

1 week ago
தமிழகத்துடன் சண்டைபோட விரும்பவில்லை, நாங்கள் சகோதரர்கள்: கர்நாடக மாநில அமைச்சர் சிவக்குமார்

 

மேகதாது அணை விவகாரத்தில் தமிழகத்துடன் சண்டைபோட விரும்பவில்லை என்று கர்நாடக மாநில அமைச்சர் சிவக்குமார் தெரிவித்துள்ளார். #Karnataka #Mekedatu

தமிழகத்துடன் சண்டைபோட விரும்பவில்லை, நாங்கள் சகோதரர்கள்: கர்நாடக மாநில அமைச்சர் சிவக்குமார்
 
கர்நாடக மாநில நீர்ப்பாசனத்துறை அமைச்சர் சிவக்குமார் சென்னை விமான நிலையத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது ‘‘தமிழக முதல்வரை சந்திக்க நேரம் கேட்டிருந்தோம். இதுவரை எந்த பதிலும் இல்லை. நாங்கள் தமிழகத்துடன் சண்டை போட விரும்பவில்லை. நாங்கள் சகோதர மாநிலம்.

மேகதாது திட்டம் கர்நாடகாவை விட தமிழகத்திற்கே பயனளிப்பதாக இருக்கும். இரு மாநிலங்களும் பயன்படுத்த முடியாமல் வீணாக கடலில் கலக்கும் நீரை தடுக்கவே அணை கட்டுகிறோம். கர்நாடக மக்களுக்கு குடிநீர் தரவேண்டியது எங்கள் கடமை. எனவே அணை கட்டுவதில் உறுதியாக உள்ளோம்.
 


மொத்த கர்நாடாக மக்களும் ஆதராவாக இருப்பார்கள். கர்நாடகாவில் 6 கிராம மக்கள் எதிர்ப்பு என்பதில் உண்மையில்லை. திட்டம் வகுத்த பின் தமிழக அரசு உணர்ந்து கொள்ளும். மேகதாது அணையால் 67 டிஎம்சி தண்ணீரை சேமிக்க முடியும்’’ என்றார்.

https://www.maalaimalar.com/News/TopNews/2018/12/09093819/1217146/Tamil-Nadu-get-More-water-for-Mekedatu-sivakumar.vpf

கருணாநிதி சிலை திறப்பு விழா: ரஜினி-கமல்ஹாசனுக்கு தி.மு.க அழைப்பு!

1 week 2 days ago
கருணாநிதி சிலை திறப்பு விழா: ரஜினி-கமல்ஹாசனுக்கு தி.மு.க அழைப்பு!
rajinikanth-kamal-haasan-pti_650x400_51516243769-720x450.jpg

மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் முழு உருவச்சிலை திறப்பு விழாவில் பங்கேற்குமாறு ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோருக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது.

மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் முழு உருவச்சிலை அறிவாலய வளாகத்தில் திறக்கபபடவுள்ளது. அண்ணா, கருணாநிதி ஆகியோரது சிலைகள் ஒரே இடத்தில் அமைக்கப்பட்டு, சிலைகள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது.

எதிர்வரும் 16ஆம் திகதி நடைபெறும் விழாவில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா, கருணாநிதி சிலையை திறந்து வைக்கவுள்ளார்.

இந்நிலையில், விழாவுக்கு அகில இந்திய அளவில் தலைவர்கள் அழைக்கப்படுகின்றார்கள்.

மேலும் நாளைமறு நாள் மு.க.ஸ்டாலின் டெல்லி சென்று சோனியா காந்தியை நேரில் சந்தித்து அழைப்பிதழ் வழங்குகின்றார்.

ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, புதுவை முதலமைச்சர் நாராயணசாமி, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் ஆகியோரும் அழைக்கப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில், ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோருக்கும் அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது. இருவரும் விழாவில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.

 

http://athavannews.com/கருணாநிதி-சிலை-திறப்பு-வ/

 

 

பாபர் மசூதி இடிப்பு தினம் இன்று

1 week 3 days ago
பாபர் மசூதி இடிப்பு தினம் இன்று இன்று பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி, தமிழகம் முழுவதும் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

பாபர் மசூதி இடிக்கப்பட்ட 26ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அயோத்தி நகரில் சட்டம், ஒழுங்கை பாதுகாக்கும் விதமாக 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. 

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் 1992ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் திகதி பாபர் மசூதி இடிக்கப்பட்டது. 26ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. பாபர் மசூதி இடிக்கப்பட்டதை ஆதரித்து இந்து அமைப்புகளும், கண்டித்து முஸ்லிம் அமைப்புகளும் ஊர்வலம், பொதுக் கூட்டங்கள் நடத்த திட்டமிட்டு உள்ளன.

இன்று பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி, தமிழகம் முழுவதும் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கும்படி அனைத்து மாவட்ட பொலிஸ் கண்காணிப்பாளர்களுக்கும் பொலிஸ் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

 சென்னையில் பொலிஸார் உஷார்படுத்தப்பட்டுள்ள நிலையில்  பொலிஸ் ரோந்து பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பொலிஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் தலைமையில் 15 ஆயிரம் பொலிஸார் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

New_Layout.jpg

சென்டிரல், எழும்பூர் உள்ளிட்ட ரயில் நிலையங்கள், மத்திய-மாநில அரசு அலுவலகங்கள், வணிக வளாகங்கள், சினிமா தியேட்டர்கள், பஸ் நிலையங்கள் உட்பட மக்கள் அதிகமாக கூடும் இடங்களிலும் பொலிஸார்  பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

வீதிகளில் நீண்டநேரமாக அநாதையாக கிடக்கும் பொருட்களை தொட வேண்டாம் என்றும், அக்கம் பக்கத்தில் உள்ள வீடுகளில் சந்தேக நபர்கள் யாராவது தங்கியிருந்தால், அதுபற்றி அருகில் உள்ள பொலிஸ் நிலையங்களுக்கு தகவல் கொடுக்க வேண்டும் என்றும் பொதுமக்களுக்கு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

http://www.virakesari.lk/article/45844

 

 

நெல் ஜெயராமன் காலமானார்.

1 week 3 days ago
17474-720x450.png இயற்கை விவசாயத்திற்காக பாடுபட்ட நெல் ஜெயராமன் காலமானார்

சென்னை அப்பல்லோ வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வந்த விவசாயி நெல்ஜெயராமன் (வயது-60), சிகிச்சை பலனின்றி இன்று (வியாழக்கிழமை) காலை காலமானார்.

பாரம்பரிய, இயற்கை விவசாயங்களை பேணிப்பாதுகாத்துவந்த நெல்ஜெயராமன், பாரம்பரிய நெல் ரகங்களை விவசாயிகள் விளைவிக்க வேண்டும் என்பதற்கான முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு விழிப்புணர்வு ஏற்படுத்திவந்ததோடு 160ற்கும் மேற்பட்ட அரியவகை நெல் விதைகளை சேகரித்தவர்.

இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சென்னை தேனாம்பேட்டையில் அப்பல்லோ வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிப்பட்டிருந்த அவர், இன்று காலை 5.10 மணியளவில் சிகிச்சை பலனின்றி காலமானதாக அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.

நெல்ஜெயராமன், திருவாரூர் மாவட்டத்திலுள்ள கட்டிமேடு என்ற கிராமத்தில், ஏழை விவசாய குடும்பத்தில் பிறந்தவர். இயற்கை விவசாயம் உள்ளிட்ட பல்வேறு வேளாண் பணிகளுக்காக தொடர்ந்து பிரசாரம் மேற்கொண்டு வந்தார்.

மரபணுமாற்று விதை திட்டங்களுக்கு எதிராக போராடி வந்ததுடன் பாரம்பரிய நெல் விதைகளை காப்பாற்றியமைக்காக மத்திய,  மாநில அரசுகளின் விருதுகளையும் பெற்றுள்ளாரென்பது குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/இயற்கை-விவசாயி-நெல்ஜெயரா/

பெண்கள் விடுதியில் ரகசிய கேமரா: '15 நாட்களுக்கு முன்புதான் விடுதி தொடங்கப்பட்டது'

1 week 4 days ago

பெண்கள் விடுதியில் ரகசிய கேமராக்கள் பொருத்தியதாக விடுதி காப்பாளர் கைது செய்யப்பட்டார்.

சென்னை ஆதம்பாக்கத்தில் ஒரு தனியார் மகளிர் விடுதியில் ரகசிய கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்ததை விடுதியில் தங்கியிருந்த பெண்கள் கண்டறிந்துள்ளனர். 

பெண்கள் விடுதி

சென்னை ஆதம்பாக்கம் தில்லை கங்கா நகரில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் வீடுகளை வாடகைக்கு எடுத்து மகளிர் விடுதி நடத்துபவர் சம்பத்குமார் என்ற சஞ்சய் (45). வேலைக்குச் செல்லும் பெண்கள் அந்த விடுதியில் தங்கி இருந்தனர்.

சித்தரிப்புப் படம்படத்தின் காப்புரிமை Getty Images

இந்நிலையில், நேற்று முன் தினம் காலையில் விடுதியில் இருந்த ஒரு பெண் தனது கூந்தலை உலர வைப்பதற்கான கருவியை மின்சார பிளக்கில் செருக முயன்றுள்ளார். அப்போது, எதிர்பாராமல் பிளக் உடைந்துவிடவே, சுவருக்குள் பேட்டரியுடன் ஏதோ ஒரு கருவி இணைக்கப்பட்டிருப்பது தெரிந்தது. அதை எடுத்து பார்த்தபோது, அது ரகசிய வீடியோ கேமரா என்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து உடனடியாக ஆதம்பாக்கம் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர்.

விசாரணையும், கைதும்

விடுதியை பார்வையிட்ட காவலர்கள், அங்கிருந்து மேலும் சில கேமராக்களை கைப்பற்றினர்.

Hidden Camerasபடத்தின் காப்புரிமை Getty Images

இதனை தொடர்ந்து, அந்த விடுதியை நடத்திவந்த காப்பாளர் சம்பத்குமாரை ஆதம்பாக்கம் போலீசார் கைது செய்து விசாரித்துவருகின்றனர். 

ரகசிய கேமராக்களை பெண்கள் கண்டறிந்தது எப்படி?

ரகசிய கேமராக்கள் இருந்ததை விடுதி பெண்கள் எவ்வாறு கண்டறிந்தனர் என ஆதம்பாக்கம் காவல்நிலைய ஆய்வாளர் முரளியிடம் கேட்டபோது, ''ஞாயிற்றுக்கிழமையன்று தலைமுடியை காய வைக்க ஹேர் டிரையர் பயன்படுத்த ஒரு பெண் பிளக் பாக்சில் வையரை பொருத்தியபோது, அந்த பாக்ஸ் உடைந்துள்ளது. அதில் ஒரு கேமரா இருப்பதை பார்த்த அந்த பெண் அதிர்ச்சியடைந்துள்ளார். மற்றொரு அறையில் இருந்த சுவிட்ச் பாக்சை பார்த்தபோது அதிலும் ஒரு கேமரா இருந்தது. இதையடுத்து, எங்களை தொடர்பு கொண்டு அவர் உதவி கோரினார்,''என்றார். 

சம்பத்குமார் நடத்திய விடுதியை சோதனை செய்தபோது மொத்தம் ஆறு கேமராகளை கைப்பற்றியதாக கூறுகிறார் ஆய்வாளர் முரளி. ''இந்த விடுதி கடந்த 15 நாட்களாக மட்டுமே செயல்பட்டுவந்துள்ளது. ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு பகுதியை வாடகைக்கு எடுத்து, அதை விடுதியாக நடத்தியுள்ளார் சம்பத்.

அவர் மீது தகவல்தொழில்நுட்ப சட்டம் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறையைத் தடுக்கும் சட்டம் போன்றவற்றின்கீழ் வழக்குப் பதிவு செய்து,புழல் சிறையில் அடைத்துள்ளோம். இவரைப் பற்றிய முழுமையான விவரங்கள் இன்னும் தெரியவில்லை. பாதிக்கப்பட்ட பெண்கள் மிகவும் அச்சத்தில் இருப்பதால், அவர்களைப் பற்றிய விவரங்களை தற்போது தெரிவிக்கமுடியாது,'' என்று முரளி பிபிசி தமிழிடம் தெரிவித்தார். 

https://www.bbc.com/tamil/india-46451557

 

பொன் மாணிக்கவேலுக்கு பதவி நீட்டிப்பு.. சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு.

1 week 4 days ago

à®à®°à®à®¾à®£à¯ ரதà¯à®¤à¯

பொன் மாணிக்கவேலுக்கு பதவி நீட்டிப்பு.. சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு.

சிலை கடத்தல் தடுப்பு பிரிவின் ஐஜியாக இருந்த பொன் மாணிக்கவேலுவுக்கு பதவி நீட்டிப்பு வழங்கியதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்படுகிறது.

தமிழகத்தில் பழங்கால கோயில்களில் ஐம்பொன் சிலைகள் மற்றும் விலைமதிப்புள்ள சிலைகள் கடத்தப்பட்டன. இது தொடர்பாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி பொன் மாணிக்கவேல் கடத்தல் சிலைகளை வெளிநாடுகளில் இருந்து மீட்டு கொண்டு வந்தார்.

எனினும் அவர் மீது நம்பிக்கை இல்லை என கூறி தமிழக அரசு சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐ வசம் ஒப்படைக்க அரசாணை பிறப்பித்தது. இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அப்போது தமிழக அரசின் அரசாணைக்கு இடைக்கால தடை விதித்தது.

இந்நிலையில் சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐ விசாரணை நடத்துவது குறித்து கடந்த 30-ஆம் தேதி தீர்ப்பளித்தது. அன்றைய தினமே பொன் மாணிக்கவேல் ஓய்வு பெறுகிறார் என்பதால் அவரது பதவிக்காலம் நீட்டிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. அது போல் சென்னை உயர்நீதிமன்றமும் தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்து உத்தரவிட்டது.

மேலும் பொன் மாணிக்கவேலை சிலை கடத்தல் பிரிவு சிறப்பதிகாரியாக நியமித்து அதிரடி உத்தரவு பிறப்பித்தது. மேலும் அவர் மீண்டும் பதவியேற்றுக் கொள்வது குறித்து தமிழக அரசிடம் தெரிவிக்க தேவையில்லை என்று கூறியது. இது தமிழக அரசுக்கு பேரிடியாக இருந்தது.

இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுகளை ரத்து செய்யக் கோரி இன்று தமிழக அரசு மேல்முறையீடு செய்யவுள்ளது. தனக்கு கொடுக்கப்பட்ட ஓராண்டுக்குள் அனைத்து சிலைகளையும் மீட்பேன் என பொன் மாணிக்கவேல் சூளுரைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read more at: https://tamil.oneindia.com/news/delhi/tn-government-files-appeal-plea-sc-against-pon-manickavel-s-extension-335738.html

இந்தியாவில் இருக்கும் இலங்கை அகதிகளுக்குக் குடியுரிமை வழங்கப்பட வேண்டும்…. ரஜினிகாந்த்

1 week 5 days ago
இந்தியாவில் இருக்கும் இலங்கை அகதிகளுக்குக் குடியுரிமை வழங்கப்பட வேண்டும்…. ரஜினிகாந்த்

December 4, 2018

 

rajini.jpg?resize=600%2C450

இந்தியாவில் இருக்கும் இலங்கை அகதிகளுக்குக் குடியுரிமை வழங்கப்பட வேண்டுமென நடிகர் ரஜினிகாந்த் வலியுறுத்தியுள்ளார். ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்துள்ள 2.0 திரைப்படம் இந்தியா முழுவதும் பல திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கின்ற நிலையில் ரஜினியின் போயஸ் கார்டன் இல்லத்தில் இந்தியா டுடே சார்பில் எடுக்கப்பட்ட நேர்காணலிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அதில் அரசியல், சினிமா, தனி வாழ்க்கை, முக்கிய பிரச்சினைகள் குறித்து மனம் திறந்திருந்த ரஜினிகாந்த் இலங்கைத் தமிழர் விவகாரம் தமிழகத்தில் தொடர்ந்து சர்ச்சைக்குரியதாகவே இருந்துவருகிறது. இலங்கை தமிழர்களுக்கு இந்தியா என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள் என எழுப்பபப்பட்ட கேள்விக்கு பதிலளித்த போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

முதலில் இந்தியாவில் இருக்கக் கூடிய இலங்கை தமிழ் அகதிகளை, இந்தியா ஏற்றுக்கொள்ள வேண்டுமென்பதுடன் அவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்படவேண்டும் என அவர்p குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா இதைச் செய்தே ஆக வேண்டும் எனவும் தமிழக அரசு இதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்த ரஜினிகாந்த் இலங்கைத் தமிழர்கள் பல ஆண்டுகளாகச் சிறையில் வாழ்வது போல வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். ஆனால், இதைப் பற்றிப் பேச இங்கு யாரும் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.

இந்தப் பிரச்சினையில் இந்தியா எப்போது ஒரு கண் வைத்துக் கொண்டே இருக்க வேண்டும் எனவும் இலங்கையில் வாழும் தமிழ் மக்களைக் கவனித்துக்கொள்ள வேண்டும் எனவும் அது இலங்கையின் பிரச்சினைதானே என்று விட்டுவிடக் கூடாது எனவும் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

http://globaltamilnews.net/2018/105584/

 

மேகதாது அணைக்கு அனுமதி.. திமுக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம்

1 week 5 days ago

DMK protest against Meketadu dam across Cauvery

மேகதாது அணைக்கு அனுமதி.. திமுக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம்.

கர்நாடகத்தில் காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணை கட்ட அந்த மாநில அரசுக்கு அனுமதி அளித்ததை கண்டித்து திமுக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்துகிறது.

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் ரூ. 5900 கோடியில் புதிதாக அணை கட்ட கர்நாடகம் முயற்சித்து வருகிறது. இதற்கான அறிக்கையை மத்திய நீர்வள ஆணையத்திடம் கர்நாடக அரசு தாக்கல் செய்தது. இந்த அறிக்கையை மத்திய நீர்வள ஆணையம் ஏற்றுக் கொண்டது.

இதையடுத்து விரிவான திட்ட அறிக்கையை தயாரித்து அளிக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டது. மேகதாதுவில் அணை கட்டுவதற்கான சாத்தியக்கூறு அறிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்ததை எதிர்த்து பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதினார்.

இந்த நிலையில் நேற்று கூடிய காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்திலும் இது தொடர்பாக தமிழக அரசு கொந்தளித்தது. கடந்த 29-ஆம் தேதி திமுக சார்பில் அனைத்து கட்சிக் கூட்டம் கூடியது.

இந்த கூட்டத்தில் மேகதாது அணையை கட்ட மத்திய அரசு அனுமதி அளித்ததை கண்டித்து டிசம்பர் 4-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. அதன்படி இன்று திருச்சியில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார்.

Read more at: https://tamil.oneindia.com/news/chennai/dmk-protest-against-meketadu-dam-across-cauvery-335669.html

கருணாநிதியின் சிலை திறப்பும் தேசிய அளவிலான கூட்டணியும்

1 week 6 days ago
கருணாநிதியின் சிலை திறப்பும் தேசிய அளவிலான கூட்டணியும்
எம். காசிநாதன் / 2018 டிசெம்பர் 03 திங்கட்கிழமை, மு.ப. 11:39 Comments - 0

திராவிட முன்னேற்றக் கழகத் தலைவராக இருந்த கலைஞர் கருணாநிதியின் சிலையை, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி திறந்து வைக்கச் சம்மதம் தெரிவித்திருப்பது, அரசியல் வியூகங்களுக்கு தமிழகத்தில் ஒரு தளத்தை உருவாக்கியிருக்கிறது.   

தி.மு.கவும் காங்கிரஸும் கூட்டணிக் கட்சிகளாக இருந்தாலும் “ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்கவில்லை தி.மு.க” என்ற முணுமுணுப்பு காங்கிரஸ்காரர்களிடம் இருக்கிறது.

ஆனால், டிசெம்பர் 16ஆம் திகதியன்று, கருணாநிதியின் சிலையை சோனியா காந்தி திறந்து வைக்கிறார். காங்கிரஸ்- தி.மு.க உறவை, முன்னெடுத்துச் செல்லும் முக்கிய திருப்பமாக, இது இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.   

இந்தச் சிலை திறப்பு அதற்கு மட்டுமல்ல, அகில இந்திய அளவில் பாரதிய ஜனதாக் கட்சிக்கு எதிரான ஒரு கூட்டணிக்கான மிக முக்கிய களமாகவும் அமையும் சூழல் உருவாகியிருக்கிறது.   

அண்டை மாநிலமான கர்நாடகாவில், இதற்கு முன்பு ஜனதாத் தளத்தின் சார்பில், குமாரசாமி முதலமைச்சராகப் பொறுப்பேற்ற போது, எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் பெங்களூரில் சங்கமம் ஆனார்கள். ஆனால் அப்போது மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, அந்தக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தார். 

அதன் பிறகு, இப்போது சென்னையில் தி.மு.க தலைவர் ஸ்டாலின், எதிர்க்கட்சிகள் ஒன்று கூடும் ஒரு நிகழ்ச்சியாக, கருணாநிதி சிலை திறப்பு விழாவை நடத்துகிறார்.  

தேசிய அளவில் புதிய அணி உருவாகும் வாய்ப்பை, இதற்கு முன்பு தி.மு.க தலைவராக இருந்த கருணாநிதிதான் முன்னெடுத்துச் சென்றார். மொரார்ஜி தேசாய், வி.பி.சிங், தேவ கவுடா, ஐ.கே. குஜ்ரால், வாஜ்பாய், டொக்டர் மன்மோகன் சிங் ஆகியோர் பிரதமரானதில் தமிழகத்தில் அமைந்த கூட்டணி முக்கிய  பங்காற்றியது.   

குறிப்பாக, “நேருவின் மகளே வருக, நிலையான ஆட்சி தருக” என்று முழங்கி, நெருக்கடி நிலைமைக்குப் பிறகு, இந்திரா காந்தி பிரதமராக வர முக்கிய பங்கு வகித்தவரும் கருணாநிதிதான்.   

“இந்திராவின் மருமகளே வருக; நிலையான ஆட்சி தருக” என்று சோனியா காந்தியைப் பிரதமராக்குவேன் என்று, முதன் முதலில் குரல் எழுப்பியவரும் கருணாநிதிதான். தேசிய முன்னனி, ஐக்கிய முன்னணி, தேசிய ஜனநாயகக் கூட்டணி போன்ற காங்கிரஸ் எதிர்ப்புக் கூட்டணிகள் அமைவதில், கருணாநிதி முன்னிலையில் நின்றார்; தமிழகமும் முன்னணி வகித்தது.   

அதேபோல், பாரதிய ஜனதாக் கட்சிக்கு எதிராக, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அமைப்பதிலும் கருணாநிதியும் தமிழ்நாடும் முன்னிலை வகித்தது. “கெட்ட மரத்தில் உள்ள நல்ல பழம்” என்று, வாஜ்பாயைப் பாராட்டி, அவர் பிரதமராகத் துணை நின்றவர் கருணாநிதி. ஆகவே இப்போது, பா.ஜ.கவுக்கு எதிராக தேசிய அளவில் அணி அமைப்பதில் ஸ்டாலினும், தி.மு.கவும் முன்னணியில் நிற்கிறது.  

 தமிழகம் எப்போதெல்லாம், தேசிய அளவில் அணி அமைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறதோ, அப்போதெல்லாம் டெல்லியில், தமிழகத்தில் வெற்றி பெறும் கட்சிகளின் ஆதரவில் ஆட்சி அமைந்திருக்கிறது. தேசிய அரசியலுக்கு, குறிப்பாக மத்தியில் ஆட்சியிலிருக்கும் கட்சிக்கு எதிராக, முதலில் தமிழகத்திலிருந்து குரல் எழுவதோ, அணி அமைப்பதோ அகில இந்திய அளவில் எதிரொலிக்கும். இதுவே, மற்ற மாநிலங்களில் உள்ள தலைவர்களின் நம்பிக்கை.   

இந்தத் தருணத்தில் கருணாநி இல்லை. ஆனால், அவரது சிலை திறப்பு அதற்குப் பயன்படுகிறது. அகில இந்தியத் தலைவர்கள், குறிப்பாக எதிர்க்கட்சி வரிசையில் உள்ள தலைவர்கள், சென்னையில் டிசெம்பர் 16ஆம் திகதி கூடுவார்கள்.   

அதற்கு முன்பு, டிசெம்பர் 10ஆம் திகதி டெல்லியில் ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, இது போன்ற எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டத்தைக் கூட்டுகிறார். நவம்பர் 22ஆம் திகதி நடைபெறுவதாக இருந்த இக்கூட்டத்தை, ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகளுக்காக ஒத்தி வைக்கப்பட்டிருந்தது.   

அக்கூட்டம், இப்போது டிசெம்பர் 10ஆம் திகதி நடக்கிறது. அதிலும் தி.மு.க உள்ளிட்ட மதச்சார்பற்ற அனைத்து எதிர்க்கட்சிகளும் டெல்லியில் கூடுகின்றன.   

ஆனால், இரண்டுமே மாநிலக் கட்சிகளின் தலைவர்கள் மூலம் ஏற்பாடு செய்யப்படுகிறது (ஸ்டாலின், சந்திரபாபுநாயுடு) என்பதுதான் வருகின்ற தேர்தலில் மாநில கட்சிகளின் ஆதிக்கம் எப்படித் தேசிய அரசியலில் இருக்கப் போகிறது என்பதற்கு அச்சாரமாக, இருக்கிறது.  

அகில இந்திய அளவில் இந்தப் பணியில் ஈடுபட்டிருக்கும் தி.மு.கவுக்குக் ‘செக்’ வைக்கும் விதத்தில், ஒரு குழப்பம் தமிழகத்தில் முளைத்தது. அக்கட்சியின் பொருளாளராக இருக்கும் துரைமுருகன், “வைகோவும், விடுதலை சிறுத்தை அமைப்புகளின் தலைவர் தொல் திருமாவளவனும் தோழமையாக இருக்கிறார்கள். கூட்டணியில் இல்லை” என்று ஒரு பேட்டியில் கூறி, “தி.மு.கவுடன் காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் மட்டுமே கூட்டணியாக உள்ளன” என்றார்.   

ஆனால், தி.மு.க தரப்பிலோ, இதில் என்ன தவறு இருக்கிறது என்றே எண்ணினார்கள். தி.மு.கவுடன் கூட்டணி யார் யார் என்பதை துரைமுருகன் முடிவு செய்ய முடியாது. ஏற்கெனவே கூட்டணியில் இருந்தவர்களைப் பற்றி மட்டுமே கூற முடியும். அதைத்தான் அவரும் செய்தார்.   

ஆனால், வைகோவின் பேட்டி ஒரு சலசலப்பை ஏற்படுத்தியது. “ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும்” என்று வைகோ சொன்ன மறுநாள், ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள ஏழு பேரை, ஆளுநர் விடுதலை செய்ய வேண்டும் என்று வைகோவும், வீரமணியும் சேர்ந்து நடத்தும் போராட்டத்தைத் தி.மு.க ஆதரிக்கிறது என்று அறிக்கை வெளியிட்டார்.   

இந்த அறிக்கை, வைகோ தி.மு.க கூட்டணியில் இருக்கிறார் என்பதற்கான பதில் என்றாலும், தி.மு.க தரப்பில் வைகோ கூட்டணியில் இருக்கிறார் என்று அறிவிக்கவில்லை. அதற்குக் காரணம், “தேர்தல் இன்னும் அறிவிக்கப்படாததே தவிர, வைகோ கூட்டணியில் இல்லை என்று அர்த்தம் இல்லை. எந்தக் கட்சியும் தேர்தல் அறிவிக்கும் முன்பே கூட்டணி கட்சிகள் பற்றிய விவரத்தை அறிவிப்பதில்லை. அந்த வகையில்தான் நாங்களும் அறிவிக்கவில்லை” என்கிறார் தி.மு.க பிரமுகர் ஒருவர்.   

இறுதியில் வைகோவே நேரடியாக அறிவாலயம் வந்தார். தி.மு.க கூட்டணியில் ம.தி.மு.க இருக்கிறது என்ற தோற்றத்தை அவரே ஏற்படுத்தி விட்டுப் பத்திரிகையாளர்களைச் சந்தித்து, “தி.மு.க. கூட்டணி தமிழ்நாடு, பாண்டிச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் வெற்றி பெறும்” என்று அறிவித்து விட்டுச் சென்றார். அதற்கு முதல் நாளே, திருமாவளவன் அறிவாலயத்துக்கு வந்து ஸ்டாலினைச் சந்தித்து, “விடுதலை சிறுத்தைகள், தி.மு.க உறவு வலுவாக உள்ளது” என்று கூறிச் சென்றார்.   

பிறகு காங்கிரஸ், ம.தி.மு.க, விடுதலை சிறுத்தைகள், இந்திய கொம்யூனிஸ்ட் கட்சி, மார்க்ஸிஸ்ட் கொம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட ஆதரவு எதிர்க்கட்சிகள் எல்லாம் கர்நாடக மாநிலம் மேகதாது அணை கட்டுவதை எதிர்த்து, தி.மு.க கூட்டிய அனைத்துக் கட்சி கூட்டத்தில் ஸ்டாலின் தலைமையில் கலந்து கொண்டனர். இந்த கட்சிகள் எல்லாம் தி.மு.கவின் தலைமையில்தான் இருக்கின்றன என்ற செய்தி விடுக்கப்பட்டுள்ளது.   

இந்தப் பின்னணியில்தான் கூட்டம் முடிந்த மறு நாள், “கருணாநிதி சிலையை சோனியா காந்தி திறக்கச் சம்மதித்துள்ளார்” என்ற தகவலை தி.மு.க தலைமை வெளியிட்டுள்ளது. ஆகவே, தமிழகத்தில் தி.மு.க தலைமையில் ஒரு கூட்டணி அமைவதற்கும், தேசிய அளவில் டெல்லியில் பா.ஜ.கவுக்கு எதிரான கூட்டணி அமைவதற்கும் களம் சென்னையில் தயார் படுத்தப்பட்டு விட்டது. ராகுல் காந்திதான் காங்கிரஸ் கட்சி அதிக எம்.பிக்கள் வெற்றி பெற்றால் பிரதமர் என்பது காங்கிரஸ் அல்லாத இந்த கட்சிகளின் எழுதப்படாத ஒப்பந்தமாக இருக்கும் என்று தெரிகிறது.   

பிரதமர் நரேந்திரமோடிக்கு எதிரான பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்திதான் என்பதை, இந்த எதிர்க்கட்சிகள் இப்போது அறிவிக்க வேண்டாம் என்பது அவர்களுக்குள் எழுதிக் கொள்ளப்பட்ட ஒப்பந்தமாக இருக்கிறது.   

ஆகவே தேசிய அரசியலில் முக்கிய பங்காற்றும் விதமாக தமிழகம் மாறுகிறது. அதற்கான முஸ்தீபுகளில் தி.மு.கவும் மற்றக் கட்சிகளும் வியூகங்களை வகுத்துச் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன.   

 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/கருணாநிதியின்-சிலை-திறப்பும்-தேசிய-அளவிலான-கூட்டணியும்/91-226035

 

 

Checked
Sun, 12/16/2018 - 20:12
தமிழகச் செய்திகள் Latest Topics
Subscribe to தமிழகச் செய்திகள் feed