ஊர்ப்புதினம்

ரணிலை ஆதரித்தால் கூட்டமைப்பு எதிர்க்கட்சியிலிருந்து விலக வேண்டும்: டளஸ்

47 minutes 12 seconds ago
Dules-Alagaperuma-720x450.png ரணிலை ஆதரித்தால் கூட்டமைப்பு எதிர்க்கட்சியிலிருந்து விலக வேண்டும்: டளஸ்

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் செயற்பாடுகளுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு தொடர்ச்சியாக தமது ஆதரவினை வழங்கி வருமாகவிருந்தால் எதிர்க்கட்சியிலிருந்து கூட்டமைப்பு விலக வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசியல் தொடர்பில் நேற்று (திங்கட்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது,

“நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பதற்காக ஐக்கிய தேசிய கட்சியினர் அமைச்சர்களின் விலையினை 500 மில்லியனாக நிரூபித்ததன் காரணமாகவே நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத நிலைமை ஏற்பட்டதாக ஜனாதிபதி கூறினார்

ஆனால் ஜனாதிபதியின் கூற்றை திரிவுப்படுத்தி மாற்று கருத்துக்களை உருவாக்கினர். தற்போதும் எமது கட்சி உறுப்பினர்களை பேரம் பேசும் செயற்பாட்டில் ஐக்கிய தேசிய கட்சி ஈடுபட்டு வருகின்றது.

இதேவேளை தமிழ் தேசிய கூட்டமைப்பு தமது அடுத்த அரசியல் இருப்பினை தக்கவைத்துக்கொள்ள முயற்சிகளை மேற்கொள்ளாமல் தமிழ் மக்களை கருத்திற்கொண்டு செயலாற்ற வேண்டும்.

ஆனால்  வடக்கு கிழக்கு மக்களின் தேவைகளை நிறைவேற்றாமல் புலம்பெயர் விடுதலைப் புலிகளின் தேவைகளை நிறைவேற்றும் செயற்பாடுகளையே கூட்டமைப்பு மேற்கொண்டு வருகின்றது.

மேலும் ரணிலுக்கு தொடர்ச்சியாக கூட்டமைப்பு ஆதரவினை வழங்கி வருமாயின் எதிர்க்கட்சியிலிருந்து முழுமையாக கூட்டமைப்பு விலக வேண்டியது அவசியம்” என டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

http://athavannews.com/ரணிலை-ஆதரித்தால்-கூட்டமை/

சாதாரண தர பரீட்சையில் மோசடி – மூவர் கைது

48 minutes 49 seconds ago
arrested-765389-720x450.jpg சாதாரண தர பரீட்சையில் மோசடி – மூவர் கைது

கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையில் பரீட்சார்த்திகளுக்கு பதிலாக தோற்றிய 3 சந்தேகநபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த மூவரும் கல்முனை, திககொட மற்றும் தனமல்வில ஆகிய பகுதிகளிலேயே கைது செய்யப்பட்டுள்ளனர்.

கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற கணிதப் பாட பரீட்சைக்காக, உரிய பரீட்சாத்திகளுக்கு பதிலாக வேறு நபர்கள் தோற்றியுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மாணவர்கள் நீதிமன்றில் இன்று (செவ்வாய்க்கிழமை) முன்னிபை்படுத்தவுள்ளனர்.

டிசம்பர் 3 ஆம் திகதி ஆரம்பமான கல்விப் பொதுத் தராதர சாதாரணத் தர பரீட்சைகள், நாளையுடன் நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/சாதாரண-தர-பரீட்சையில்-மோ/

சுன்னாகத்தில், பொலிஸ் நிலையம் அமைய இருந்த இடத்தில்.. பெற்றோல் குண்டு வீச்சு!

52 minutes 35 seconds ago
IMG_1525-720x450.jpg

IMG_1526.jpg

IMG_1524.jpg

யாழ்.சுன்னாகத்தில் பெற்றோல் குண்டு வீச்சு!

சுன்னாகம் பிரதேசத்தில் இயங்கி வந்த உடற்பயிற்சி நிலையம் ஒன்றின் மீது பெற்றோல் குண்டு வீச்சுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சுன்னாகம் கே.கே.எஸ் வீதியில் உள்ள தனியார் காணி ஒன்றில் பொலிஸ் நிலையத்தை மாற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்த நிலையிலேயே இன்று (திங்கட்கிழமை) மாலை குறித்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த வளாகத்துக்குள் புகுந்த 10 பேர் கொண்ட கும்பல், அங்கு இயங்கி வந்த உடற்பயிற்சி (ஜிம்) நிலையத்தை அடித்துச் சேதப்படுத்தியதுடன், பெற்றோல் குண்டுகளை வீசி, தீவைத்து எரித்து அடாவடியில் ஈடுபட்டுள்ளதாக அப்பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவத்தினால் அங்கு தீப்பிடித்ததையடுத்து, யாழ்ப்பாணம் மாநகர சபையின் தீயணைப்புப் படை வரவழைக்கப்பட்டு தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

குறித்த சம்பவம் தொடர்பாக சுன்னாகம் பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் இணைந்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவேளை சம்பவ இடத்தில் பொலிஸ் நிலையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஒரு தரப்பினர் இன்று காலை கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்தமையும் குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/யாழ்-சுன்னாகத்தில்-பெற்ற/

"குற்றத்தையும் ஒப்புக் கொண்டு மஹிந்தவையும் ஜனாதிபதி காட்டிக் கொடுத்து விட்டார்"

11 hours 31 minutes ago

(ஆர்.யசி)

மஹிந்தவின் அரசாங்கத்திற்கு பெரும்பான்மையை நிரூபிக்க அமைச்சர்களுக்கு கோடிக்கணக்கில் விலை பேசப்பட்டது, விலையை அதிகரித்தமையே மஹிந்தவினால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாது போனது என்பதை கூறியதன் மூலம்  தான் குற்றவாளி என்பதை ஜனாதிபதி ஒப்புக்கொண்டதுடன் மஹிந்தவையும் காட்டிக் கொடுத்துவிட்டார் என மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜத ஹேரத் தெரிவித்தார்.

மக்கள் விடுதலை முன்னணியின் தலைமைக் காரியாலயத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் கூறுகையில், 

vijitha_herath.jpg

19 ஆம் திருத்தத்துக்கு அமைய ஜனாதிபதியினால்  நான்கரை ஆண்டுகளுக்கு பாராளுமன்றத்தை கலைக்க முடியாது. ஆனால் கடந்த வாரம் ஜனாதிபதி கூறியது என்ன? ஒரு வாரத்தில் அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காண்பதாக கூறினார். ஆனால் இன்று அந்த வாரம் முடிகின்றது. இப்போது நீதிமன்ற தீர்ப்பு வரையில் காத்திருக்க வேண்டும் என கூறுகின்றார். ஏன் இவர் நிமிடத்துக்கு நிமிடம் மாறி மாறி பேசுகின்றார். ஒரு கருத்தில் அவர் உறுதியாக இருப்பதில்லை என்பதை சகல சந்தர்ப்பத்திலும் அவர் நிரூபித்து  விட்டார்.  

அதேபோல் இன்று சபாநாயகர் மீது குற்றம் சுமத்தி வருகின்றனர். அனால் சபாநாயகர் மீது எந்த தவறும் இல்லை. நவம்பர் 14 ஆம் திகதி பாராளுமன்றம் கூடப்பட் வேண்டும் என்பது ஜனாதிபதியின் தீர்மானம். மாறாக சபாநாயகர் தீர்மானம் அல்ல. பொய்யான காரணிகளை கூறி இவர்கள் அனைவரும் நாட்டினை நாசமாக்கி வருகின்றனர். அன்று நீதிமன்றத்தை நாடுங்கள் என சவால் விருத்தவர்கள் இன்று நீதிமன்ற தீர்ப்பையே ஏற்றுகொள்ள மாறுகின்றனர் என்றார். 

http://www.virakesari.lk/article/46118

சம்பந்தன் கிழக்கு மாகாண ஆளுநருக்கு அவசரக் கடிதம்

11 hours 33 minutes ago

கிழக்கு மாகாண சபைக்கான முகாமைத்துவ உதவியாளர்களின் ஆட்சேர்ப்பானது இனரீதியின் அடிப்படையிலேயே முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஆகவே பாதகமான விளைவுகள் எதுவும் ஏற்படும் முன்னர் தேவையான நடவடிக்கை எடுக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகமவுக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.

sampanthan2.jpg

இது தொடர்பாக சம்பந்தன் அவருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கிழக்கு மாகாண சபைக்கான முகாமைத்துவ உதவியாளர்களின் ஆட்சேர்ப்பிற்கான போட்டிப் பரீட்சை கடந்த ஜூலை 14 ஆம் திகதியன்று இடம்பெற்றிருந்தது.

அதன்போது விண்ணப்பங்கள் கோரப்பட்டு பரீட்சை நடத்தப்பட்ட போது, இனரீதியிலான அடிப்படையில் ஆட்சேர்ப்பு இடம்பெறும் என்பதற்கான எந்தவொரு பிரத்தியேக பிரிவுகளும் கொடுக்கப்படவில்லை.எல்லா விண்ணப்பதாரிகளும் சமமாக நடத்தப்பட்டிருக்க வேண்டும்.

ஆனால் தற்போது கிழக்கு மாகாண சபையின் சில நிர்வாக உத்தியோகத்தர்களினால் ஆட்சேர்ப்பிற்கான வெட்டுப்புள்ளிகள் இனரீதியிலான அடிப்படையில் பின்வருமாறு அமையும் என ஒரு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. (சிங்களவர் 105, முஸ்லிம்கள் 120, தமிழர்கள் 130) 

ஆட்சேர்ப்பு தொடர்பில் இப்படியான ஒரு நடைமுறை முன்னர் எப்போதும் பின்பற்றப்படவில்லை என்பதோடு, இது அப்பட்டமான ஒரு பாகுபாடு காட்டும் அநீதியான செயலாகும். எந்த அடிப்படையில் இப்படியான ஒரு தீர்மானத்தினை உத்தியோகத்தர்கள் எடுத்தார்கள் என்பதனை விளங்கிக்கொள்ள முடியவில்லை. இந்த நடவடிக்கையானது கிழக்கு மாகாணத்தில் தனிப் பெரும்பான்மை சமூகமான தமிழ் மக்களுக்கு குறிப்பிடத்தக்க பாதக விளைவுகளை உருவாக்கும்

அண்மைக்காலங்களில் கல்வி விடயங்களில் மிகவும் பாதிக்கப்பட்ட சமூகம் தமிழ் சமூகமாகும். 30 வருடங்கள் நிலைத்த ஆயுத போராட்டமானது,வடக்கு கிழக்கிலுள்ள தமிழ் பிரதேசங்களிலேயே இடம்பெற்றது, இதன் நிமித்தம் தமிழ் பாடசாலைகள் தேவையான ஆசிரியர்களும் ஏனைய சலுகைகளும் இன்றி இயங்காத நிலைக்கு தள்ளப்பட்டது. இதனால் இந்த பிரதேசங்கள் கல்வியில் பின்னோக்கி நகர நேர்ந்தது. இந்த பின்னணியில், 3 ஆம் பந்தியில் குறிப்பிட்டுள்ளவாறு எவ்வாறு வெட்டுப்புள்ளிகள் முடிவு செய்யப்பட்டது என்பதனை விளங்கிக்கொள்ள முடியவில்லை.

எனவே அனைத்து விண்ணப்பதாரிகளும் சமமாக நடாத்தப்படுவதையும் இன அடிப்படியில் எந்தவொரு பாகுபாடும் காட்டப்படாமல் இருப்பதனையும் நீதி நிலைநாட்டப்படுவதனையும் உறுதி செய்யும் முகமாக உரிய திருத்த நடவடிக்கைகளை நீங்கள் மேற்கொள்ள வேண்டும் என நான் மிக வினயமாக கேட்டுக்கொள்கிறேன் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

http://www.virakesari.lk/article/46119

தமிழ் மக்களின் உரிமைகளை வலியுறுத்தி கொழும்பில் ஆர்ப்பாட்டம்

11 hours 34 minutes ago

(நா.தனுஜா)

சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு அரசியல் கைதிகள் விடுதலைக்கான தேசிய இயக்கம், இனவாத குடியேற்றங்களுக்கு எதிரான இயக்கம் மற்றும் சமவுரிமை இயக்கம் என்பன இணைந்து பொதுமக்களைத் திரட்டி அரசியல் கைதிகள் விடுதலை, காணி விடுவிப்பு, அரசியல் தீர்வு, தோட்டத்தொழிலாளர் சம்பள உயர்வு, இனங்களுக்கு இடையிலான சமத்துவம் உள்ளிட்ட பல்வேறு விடயங்களை வலியுறுத்தி இன்று திங்கட்கிழமை கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக பாரிய ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்திருந்தனர்.

fort1.jpg

மேற்படி ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகளுடன், ஏராளமான பொதுமக்கள் பங்கெடுத்திருந்தனர். மேலும் முல்லைத்தீவு மாவட்டத்தில் கேப்பாபுலவு காணி விடுவிப்பிற்காக தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டுவரும் முல்லைத்தீவு பிரதேசத்தைச் சேர்ந்த பொதுமக்களும் கலந்துகொண்டிருந்தனர். 

fort3.jpg

fort2.jpg

போராட்டக்காரர்கள் எமது காணிகளை விடுதலை செய், இராணுவமே வெளியேறு, அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய், புதிய பயங்கரவாதத்தடைச் சட்டத்தை உடன்நிறுத்து, காணாமல் போனோருக்கு என்ன நடந்தது?, தோட்டத்தொழிலாளர் கூலியை 1500 ரூபாவாக அதிகரிக்க வேண்டும், இனவாதக் குடியேற்றத்தை உடன்நிறுத்து, மகாவலியின் போர்வையில் நடத்தப்படும் தமிழர்  காணிக்கொள்ளையை நிறுத்து, மைத்திரி கொடுத்த வாக்கை நிறைவேற்று, எங்கள் தாயகத்தை துண்டாடாதே உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியிருந்தனர்.

http://www.virakesari.lk/article/46124

மயிலிட்டி துறைமுக அபிவிருத்தி துரித கதியில் !!

11 hours 50 minutes ago

வலி.வடக்கு மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்தின் அபிவிருத்தி பணிகள் துரித கதியில் இடம்பெற்று வருகின்றது.

துறைமுகத்தின் நுழைவாயிலை ஆழப்படுத்தல், அலைதடுப்பு நிலையம், குளிரூட்டல் அறைகள் உட்பட்ட அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

48185500_2770298272997751_30243149567838

47688525_2770290689665176_3606119692080547685752_2770289316331980_1357773122295547574837_2770290959665149_7509273979413048343441_2770289402998638_55249220369477

https://newuthayan.com/story/17/மயிலிட்டி-துறைமுக-அபிவிருத்தி-துரித-கதியில்.html

காணமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் முல்லைத்தீவில் போராட்டம்…

11 hours 53 minutes ago

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…

IMG_6642.jpg?zoom=1.2100000262260437&res

முல்லைத்தீவு மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவுகள் தமது பிள்ளைகளை தேடி கடந்த வருடம் மார்ச் மாதம் எட்டாம் திகதி ஆரம்பித்த தொடர் கவனயீர்ப்பு போராட்டம் இன்று 643 ஆவது நாளாகவும் முல்லைத்தீவில் தொடர்கிறது

சர்வதேச மனித உரிமைகள் நாளான இன்று 10.12.18 அன்று வடக்கில் உள்ள ஜந்து மாவட்டத்தினை சேர்ந்த வலிந்து காhணாமல் ஆக்கப்பட்டவர்கள் முல்லைத்தீவில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளார்கள்.

யாழ்ப்பாணம்,கிளிநொச்சி,மன்னார்,வவுனியா,முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தொடர்ச்சியான போராட்டங்களை மேற்கொண்டுவரும் வேளையில் சர்வதேச மனித உரிமைகள் நாளான இன்று முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒன்று திரண்டு கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளார்கள்.

IMG_6640.jpg?zoom=1.2100000262260437&res

முல்லைத்தீவு நகரில் உள்ள இராயப்பர் தேவாயலத்தின் முன்றலில் இருந்து ஆரம்பமான இந்த பேரணி முல்லைத்தீவு மாவட்டச்செயலகம் முன் சென்றடைந்துள்ளது.

இதன்போது வேண்டும்வேண்டும் நீதிவேண்டும்,சர்வதேசமே பதில்கூறு,சிறைகளில் வாடும் எமது உறவுகளுக்கு நீதிவேண்டும்,சர்வதேசமே திரும்பிப்பார், ஆட்சிக்கு அடிபடும் அரசு எமக்கு என்ன பதில்கூறும், என்ற வசாகங்கள் எழுதிய பாதாகைகளை தாங்கியவாறு கோசங்களை எழுப்பிய காணாமல் போனவர்களின் உறவினர்கள் ஜக்கியநாடுகள் சபையின் அலுவலகத்திற்கான வேண்டு ஒன்றினை விடுத்துள்ளார்கள்.

இந்த வேண்டுகேளினை முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்வர்களின் சங்க தலைவி ம.ஈஸ்வரி அவர்கள் வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி கலாராஞ்சினி அவர்களிடம் கையளித்துள்ளார்கள் அவர்கள் ஜ.நா அலுவலகத்திடம் கையளிக்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

http://globaltamilnews.net/2018/106226/

யாழ் வீட்டுத் திட்டத்தில் சிபாரிசுகளை, கணக்கெடுக்கப் போவதில்லை

11 hours 57 minutes ago

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…

vethanayagam.jpg?zoom=1.2100000262260437

யாழ்.மாவட்டத்தில் வழங்கப்படவுள்ள வீட்டுத் திட்டத்தில் அரசியல் சிபாரிசுகளை கணக்கில் எடுக்காது பாதிக்கப்பட்ட குடும்பங்கள் என உறுதி செய்யப்பட்டவர்களுக்கே வீட்டு திட்டம் வழங்கப்படும் . என யாழ் மாவட்டச் செயலாளர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.

யாழ். மாவட்டத்தில் அரசியல் கட்சி அலுவலகங்களில் வீட்டுத் திட்டம் தொடர்பில் பதிவுகளை மேற்கொண்டு வருகின்றனர். என குற்றசாட்டுக்கள் எழுந்துள்ள நிலையில் அது தொடர்பில் மாவட்டச் செயலாளரிடம் கேட்டபோதே அவ்வாறு தெரிவித்தார்.

அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் ,

யாழில் வீட்டு வசதிகள் அற்றவர்கள் வீட்டுத் திட்டம் கோரி பிரதேச செயலகங்களில் பதிவு செய்கின்றனர். அவ்வாறு பதிவு செய்தவர்களின் விபரம் மாவட்டச் செயலகங்களிற்கு அனுப்பி வைக்கப்படும். அதன் அடிப்படையில் மாவட்டத்திற்கு கிடைக்கும் வீடுகளில் இருந்து நியாயபூர்வமான தகமையின் அடிப்படையில் மட்டுமே முன்னுரிமை வழங்கப்படும் .  அதனை விட எந்தக் கட்சியானாலும் அல்லது எந்த அரசியல்வாதிகளிடம் சென்று பதிந்தாலும் அதனை நாம் கணக்கில் எடுக்க மாட்டோம்.

அவ்வாறு தற்போது அவர்கள் பதிவுகளை மேற்கொள்வது, அவர்களின் அரசியல் செயற்பாடு என்பதனால் நாம் அதில் தலையிட முடியாது. ஆனால் எந்த அரசியல்வாதிகளின் சிபாரிசுகளுக்கும் முன்னுரிமை அளிக்கப்படமாட்டாது. என்பதனை மட்டும் என்னால் உறுதியாக கூறமுடியும். என தெரிவித்தார்.

http://globaltamilnews.net/2018/106224/

இரணைமடு குளம் – டி.எஸ. சேனநாயக்க – நினைவுகல் – நீர்பாசண திணைக்களம் – உருவாகியுள்ள சர்ச்சைகள்

11 hours 58 minutes ago

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..

Iranaimadu-DS-Sena1.jpg?zoom=1.210000026
இரணைமடு குளத்தில் காணப்பட்ட இலங்கையின் முதலாவது பிரதமர் டி.எஸ. சேனநாயக்கவின் நினைவுகல்லை மீளவும் அதே பகுதியில் வைப்பதற்கு நீர்பாசண திணைக்களம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இரணைமடு குளத்தின் அபிவிருத்தி பணிகள் இடம்பெற்றிருந்த வேளை அதன் நிறைவுக்காக குளத்தின் சுற்றுவட்டம் அழகுபடுத்தும் பணிகள் இடம்பெற்று வந்தன.

இந்த நிலையில் குறித்த நினைவுகல் அமைந்திருந்த பகுதியும் பக்குவமாக அகற்றப்பட்டு அந்த பகுதியில் சுற்றுவட்டம் ஒன்றும் அமைக்கப்பட்டது. இந்த நிலையில் குறித்த சுற்றுவட்டம் அமைந்திருந்த பகுதியில் குறித்த நினைவு கல்லையும், புதிய நினைவு கல்லையும் அமைப்பதற்கான பணிகள் இடம்பெற்று வந்த நிலையில், ஜனாதிபதியினால் குறித்த குளம் விவசாயிகளிடம் கையளிக்க மேற்கொள்ளப்பட்ட திடீர் நடவடிக்கை காரணமாக உடனடியாக குறித்த நினைவு கல்லை அப்பகுதியில் பொருத்த முடியாது போனதாகவும், தற்போது அந்தக் கல்லினை ஏற்கனவே அமைந்திருந்த பகுதியில் பொருத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் நீர்பாசன திணைக்களம் தெரிவிக்கிக்கின்றது.

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் குறித்த கல் அகற்றப்பட்டு புதிய கல் திரைநீக்கம் செய்யப்பட்டமை தொடர்பில் வெளியான செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை என தெரிவிக்கும் நீர்பாசன திணைக்களம், ஓரிரு நாட்களில் பழமைவாய்ந்த நினைவு கல்லும் மக்கள் பார்வைக்காக பொருத்தப்பட்டு அங்கு காட்சிப்படுத்தப்படும் எனவும், அதற்கான பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றர். முன்னைய நினைவு கல் சுமார் 8 இஞ்சி அகலம் கொண்டதுடன், பாரிய கருங்கல் ஒன்றில் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கதாகும்.

http://globaltamilnews.net/2018/106235/

அரசியல் நெருக்கடியை தீர்க்க ஜனாதிபதி கோரிய 7 நாட்கள் நாளையுடன் நிறைவு!

12 hours 1 minute ago

குளோபல் தமிழ் செய்தியாளர்

mahi-maithri.png?zoom=1.2100000262260437

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியை எழு நாட்களுக்குள் தீர்வு காணப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருந்தார். கடந்த 4ஆம் திகதி சுகததாஸ உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்ற ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் விஷேட மாநாடிலேயே ஜனாதிபதி இவ்வாறு கால அவகாசத்தைக் கோரியிருந்தார்.

ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்து, நாளை 11ஆம் திகதியுடன் ஏழு நாட்கள் நிறைவடைகின்றது. இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி காரணமாக பிரதமர் பதவி வெற்றிடமாக காணப்படுவதுடன் நாட்டில் அமைச்சரவை ஒன்றும் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

இலங்கையின் வரலாற்றில் இவ்வாறனதொரு நெருக்கடி நிலை ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை இலங்கையில் தொடரும் அரசியல் நிலவரம் தொடர்பில் உண்ணிப்பாக அவதானித்து வருவதாக சர்வதேச நாடுகள் பலவும் கூறியுள்ளன.

இதுவேளை நாட்டில் இயல்புநிலையை ஏற்படுத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுரைகள் கூறப்பட்டுள்ளன. இந்த நிலையிலேயே, ஏழு நாட்களுக்குள் அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காணப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். நாளையும் அவர் குறிப்பிட்ட ஏழு நாட்களும் நிறைவடைகின்றமை குறிப்பிடத்தக்கது.

http://globaltamilnews.net/2018/106243/

கொழும்பில் துப்பாக்கிச் சூடு: பெண் ஒருவர் உட்பட ஐவர் படுகாயம்

17 hours 4 minutes ago
1_09481_01395-720x450.jpg கொழும்பில் துப்பாக்கிச் சூடு: பெண் ஒருவர் உட்பட ஐவர் படுகாயம்

கொழும்பு – மட்டக்குளி பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் பெண் ஒருவர் உட்பட ஐவர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் றுவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

இச்சம்பத்தில் படுகாயமடைந்த ஐவரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு ஆயுததாரிகளே முச்சக்கரவண்டி ஒன்றின் மீது குறித்த துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுவிட்டு தப்பி சென்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், சம்பவம் தொடர்பில் முழுமையான விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாகவும், துப்பாக்கிப் பிரயோகத்தினை மேற்கொண்டவர்களை அடையாளம் காணும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

http://athavannews.com/கொழும்பில்-துப்பாக்கிச்/

மேல்முறையீட்டு நீதிமன்றில் புதிய மனு

17 hours 18 minutes ago

ஜனாதிபதியின் மனோநிலையினை பரிசோதனைக்கு உள்ளாக்க உத்தரவிடுமாறி கோரி மேல்முறையீட்டு நீதிமன்றில் புதிய மனு
ஒன்று இன்று தாக்கல் செய்யப் பட்டுள்ளது. 

IGP, கோட்டை போலீஸ் OIC இருவரும், கொழும்பு மாவட்ட நீதிமன்றுக்கு  சென்று, மனநல சட்ட இரண்டாம் பிரிவின் கீழ் இது தொடர்பில் உத்தரவினை பெற, உத்தரவு விடுமாறு இந்த மனு கோருகின்றது.  

இலங்கை அரசியல் அமைப்பின் பிரகாரம், பதவியில் உள்ள ஜனாதிபதி, தானாக ராஜினாமா செய்தாலோ, இறந்தாலோ, பாராளுமனறத்தினால் பதவி இறக்கப் பட்டாலோ அல்லது மனநிலை பாதிக்கப் பட்டாலோ, ஜனாதிபதி பதவி காலியாகும்.

இந்த வகையில், இந்த மனு அரசியல் அமைப்புக்கு அமைவானதும் சட்ட ரீதியானதுமாகவும் என்பது முக்கியமானது.

தக்சிலா  ஜெயவர்த்தனே என்ற பெண்ணே இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.

ஒருவர் தனக்கு பைத்தியம் என்று தானே சொல்ல முடியாது. ஆகவே, இது தொடர்பில் நீதிமன்றமே உத்தரவு இடவேண்டும் என்கிறது மனு.

சரி பிழைக்கு அப்பால், இது மைத்திரிக்கு ஒரு அவமானமானது.

http://www.dailymirror.lk/article/Petition-in-CA-on-President-s-state-of-mind-159571.html

வவுணதீவு பொலீசார் படுகொலை: அதிரவைக்கும் விசாரணைத் தகவல்கள்!

19 hours 17 minutes ago
வவுணதீவு பொலீசார் படுகொலை: அதிரவைக்கும் விசாரணைத் தகவல்கள்!
_17888_1544425512_F2CFEDBA-530C-4DDB-B3E

மட்டக்களப்பு வவுணதீவு பொலீசார் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டமை தொடர்பாக பல தகவல்கள் வெளியாகியபடி உள்ளது.

குறிப்பாக பொலீசார் கொலை செய்யப்பட்ட விதம் தொடர்பாக சில திடுக்கிடும் தகவல்கள் பிரேதப் பரிசோதனை அறிக்கைகள் மூலம் வெளியாகியுள்ளமை தெரியவந்துள்ளது.

அதாவது படுகொலை செய்யப்பட்ட தினேஸ் என்ற தமிழ் பொலீஸ் உத்தியோகத்தரை கொலையாளிகள் சுட்டுப்படுகொலை செய்ததன் பின்னரே கைகளை பின்னால் கட்டி குப்புரப் படுக்கப் போட்டு தலையில் சுட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது கொலையாளிகள் இறுதி யுத்தத்தில் சரணடைந்த விடுதலைப் புலிகளை இராணுவம் கைகளை பின்னால் கட்டி தலையில் சுட்டுக்கொன்றதைப் போன்றே குறித்த பொலீசார் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள் என்ற காட்சிகளை ஏற்படுத்தும் நோக்கில் இவை செய்யப்பட்டதா என்ற கேள்விகளை பொலீசார் கொலைசெய்யப்பட்ட விதம் ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

பொலீஸ் உத்தியோகத்தரின் நகங்களுக்குள் இருந்த இரத்த படிவுகள் யாருடயவை?

இதே நேரம் படுகொலை செய்யப்பட்ட தமிழ் பொலீஸ் உத்தியோகத்தரின் நகங்களுக்குள் இருந்த கொலையாளிகளின் இரத்த படிவங்களின் துகள்கள் மரபணு பரிசோதனைகளுக்காக கொழும்பிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் பரிசோதனைகள் நிறைவடைய மூன்று மாதங்கள் தேவைபடுவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அதாவது மூன்று மாதங்களுக்கு பின்னரே அனுப்பப்பட்ட இரத்த படிவங்களின் மரபணு சந்தேக நபர்களின் மரபணுக்களுடன் ஒத்துப்போகின்றதா என்ற உண்மைகளை கண்டறிய முடியம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறித்த மரபணு பரிசோதனைகளை ஐரோப்பிய நாடுகளில் நான்கு நாட்களில் மேற்கொள்ள முடியுமென கூறப்படும் நிலையில் இலங்கையில் அதனை மேற்கொள்வதற்கு மூன்று மாதங்கள் தேவைப்படுவது என்பது விசாரணைகளில் தேக்கநிலையை உருவாக்கியுள்ளது என கூறப்படுகிறது.

குற்றவாளிகளை கண்டுபிடிக்க உதவி கோரும் பொலீசார்!

இதேநேரம் வவுணதீவு பொலீசார் படுகொலையுடன் தொடர்புடையவர்களைகண்டுபிடிப்பதற்கு பொது மக்கள் மற்றும் பொது அமைப்புகள் பொலிஸாருக்குஉதவவேண்டும் என கிழக்கு பிராந்திய சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் கபிலஜயசேகர தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பிரதேச பொலிஸ் ஆலோசனைசபை உறுப்பினர்களுடனான கலந்துரையாடலின் போது இதனை தெரிவித்துள்ளார்.

இதில் மட்டக்களப்பு உதவி பொலிஸ் அத்தியட்சகர் சி.சந்திரபால மட்டக்களப்பு மாவட்டத்தில் பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 12 பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் மற்றும் முக்கிய பொலிஸ் அதிகாரிகள் கலந்துகொண்டிருந்தனர்.

கிழக்கு பிராந்திய சிரேஸ்ட பிரதிப்பொலிஸ்மா அதிபர் கபில ஜயசேகர அவர்களின் கருத்துப்படி பார்க்கும்போது வவுணதீவு சம்பவம் தொடர்புடைய குற்றவாளிகள் இதுவரை கைது செய்யப்படவில்லை என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளதுடன் கைதுசெய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டுவரும் சந்தேக நபர்கள் குற்றவாளிகள் இல்லை என்பதையும் ஓரளவுக்கு ஊகிக்க கூடியதாக உள்ளது.

அதாவது வவுணதீவு சம்பவம் தொடர்பான குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் விடயத்தில் பொலீசாருக்கு தகுந்த ஆதாரங்கள் இதுவரை கிடைக்கவில்லை என்பதுடன் குற்றவாளிகளை இன்றுவரை பாதுகாப்பு தரப்பினருக்கு நெருங்கமுடியாது போயுள்ளதா? என்ற கேள்விகளை தோற்றுவித்துள்ளது.

உடனடியாக இந்த கொலையுடன் மாவீரர் தினத்தை நடாத்திய முன்னாள் போராளிகளை முடிச்சுப்போட்டு அவர்களை துருவி துருவி விசாரணை செய்த பாதுகாப்பு தரப்பினரால் கொலைக்காண எந்தவித ஆதாரங்களையும் கண்டுபிடிக்கமுடியவில்லை.

எனவே இதுவரை எந்த ஆதாரங்களும் சிக்காத நிலையில் விசாரணையின் கோணத்தை மாற்றவேண்டிய நிலைக்கு பாதுகாப்பு தரப்பினர் தள்ளப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது

 

http://www.battinaatham.net/description.php?art=17888

ஜனாதிபதி ஊடகப்பிரிவின் அழுத்தத்தினால், சிறிசேனவின் சர்ச்சைக்குரிய வீடியோ நீக்கம்?

19 hours 56 minutes ago
ஜனாதிபதி ஊடகப்பிரிவின் அழுத்தத்தினால், சிறிசேனவின் சர்ச்சைக்குரிய வீடியோ நீக்கம்?
December 10, 2018

Maithiri5.png?zoom=3&resize=335%2C294

ஜனாதிபதி ஊடக பிரிவின் கடும் அழுத்தம் காரணமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சர்ச்சைக்குரிய கருத்துக்கள் உள்ளடங்கிய வீடியோவை கொழும்பு ஊடகமொன்று அகற்றியுள்ளதென கொழும்பு டெலிகிராவ் தெரிவித்துள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர்களின் விலை அதிகமானதன் காரணமாகவே மகிந்த ராஜபக்ஸவினால் பெரும்பான்மையை காண்பிக்க முடியவில்லை எனவும் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்சி தாவுவதற்கு 500 மில்லியன்வரை கோரினர் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்ட ஊடகத்திற்கு தெரிவித்திருந்தார்.

இவ்வாறான நிலைமைகள் குறித்து தனக்கு நன்கு தெரியும் எடினவும் இதன் காரணமாகவே மகிந்தவினால் பெரும்பான்மையை நிருபிக்க முடியவில்லை எனவும் ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.

இதனால் ஜனாதிபதியின் கருத்திற்கு சமூக ஊடகங்களில் கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன. மேலும் பாராளுமன்ற உறுப்பினர்கள் இலஞ்சம் கோரிய விபரம் குறித்து உரிய அதிகாரிகளிடம் முறையிடாதமைக்காக ஜனாதிபதிக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறையிடவேண்டும் எனவும் கருத்துக்கள் வெளியாகியுள்ளன.

எனினும் குறிப்பிட்ட வீடியோ ஊடக நிறுவனத்தின் முகப்புத்தகத்திலிருந்து அகற்றப்பட்டு அதற்கு பதிலாக பதில் சிறிய புதிய வீடியோவொன்று காணப்படுகின்றது எனவும் அதில் குறிப்பிட்ட சர்ச்சைக்குரிய கருத்து காணப்படவில்லை என கொழும்பு டெலிகிராவ் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதியின் கருத்துகுறித்து எழுந்த கடுமையான எதிர்மறையான விமர்சனங்களை மூடிமறைப்பதற்காகவே குறிப்பிட்ட வீடியோ அகற்றப்பட்டுள்ளது என கொழும்பு டெலிகிராவ் தெரிவித்துள்ளது.

முன்னாள் மகாராஜா நிறுவன பணியாளர் தர்மசிறி பண்டார ஏக்கநாயக்க என்பவரின் தலைமையிலான ஜனாதிபதி ஊடகப்பிரிவின் கடும் அழுத்தத்தை தொடர்ந்தே குறிப்பிட்ட வீடியோவை அகற்ற ஊடகத்தின் ஆசிரிய பீடம் தீர்மானித்தது என கொழும்பு டெலிகிராவ் தெரிவித்துள்ளது. எனினும் குறிப்பிட்ட நிறுவனத்தின் யூடியுப்பில் அந்த வீடியோ தொடர்ந்தும் காணப்படுகின்றது என கொழும்பு டெலிகிராவ் தெரிவித்துள்ளது.

 

http://globaltamilnews.net/2018/106211/

 

முன்னணியின் கோரிக்கை பேரவையால் நிராகரிப்பு

19 hours 57 minutes ago
முன்னணியின் கோரிக்கை பேரவையால் நிராகரிப்பு
December 10, 2018

TPC.jpg?zoom=3&resize=335%2C195

தமிழ் மக்கள் பேரவையில் இருந்து ஈ.பீ.ஆர்.எல்.எப். மற்றும் புளொட் அமைப்புக்களை வெளியேற்ற வேண்டுமென தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி விடுத்த கோரிக்கையை தமிழ் மக்கள் பேரவை நிராகரித்துள்ளது.

குறித்த இரு கட்சிகளும் பேரவையில் தொடர்ந்தும் இருக்கலாமென தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவர்களில் ஒருவரும் முன்னாள் முதலமைச்சருமான சீ.வீ.விக்கினேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள பேரவையின் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற தமிழ் மக்கள் பேரவையின் கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த போதே சீ.வீ. விக்கினேஸ்வரன் இவ்விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் ஆராய்ந்து ஒரு சுமூகமான முடிவிற்கு தாங்கள் வந்துள்ளதனடிப்படையில் பேரவைக்குள் இருந்த கருத்து வேறுபாடுகள் இத்துடன் நீங்குமென்ற நம்பிக்கை தங்களுக்கு இருக்கிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பேரவையில் இருந்து இரண்டு கட்சிகளை வெளியேற்ற வேண்டுமென ஒரு கட்சி கோரியிருந்த நிலையில் அந்த இரு கட்சிகளதும் விளக்கமும் கோரப்பட்டிருந்தது.

அதனடிப்படையில் இது சம்மந்தமாக இரு தரப்பாரும் தங்களுடைய விளக்கத்தை அறியத் தந்ததால் அதனை ஏற்றுக் கொள்வதென ஒரு முடிவிற்கு தாங்கள் வந்திருக்கின்றோம் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

 

http://globaltamilnews.net/2018/106209/

 

ரணில் – மகிந்த – இரண்டு மனுக்கள் ஜனவரியில் விசாரணை – தம்பர அமில தேரரின் மனு ஒத்திவைப்பு….

19 hours 58 minutes ago
ரணில் – மகிந்த – இரண்டு மனுக்கள் ஜனவரியில் விசாரணை – தம்பர அமில தேரரின் மனு ஒத்திவைப்பு….
December 10, 2018

Judgement1.jpg?resize=560%2C390

ரணில் விக்ரமசிங்கவை பிரதமர் பதவியில் இருந்து நீக்கி விட்டு மகிந்த ராஜபக்ஸவை பிரதமராக நியமிப்பதற்கு ஜனாதிபதி எடுத்த தீர்மானம் சட்ட விரோதமானது என தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட இரு மனுக்கள் ஜனவரி மாதம் 7 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதேவேளை ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பதவியிலிருந்து நீக்கியமைக்கெதிராக தம்பர அமில ரேரர் தாக்கல் செய்திருந்த அடிப்படை உரிமை மனு மீதான விசாரணை, எதிர்வரும் ஜனவரி 7 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது

http://globaltamilnews.net/2018/106206/

 

 

அன்று கூறியது இன்று நடக்கிறது என்கிறார் திஸ்ஸ அத்தநாயக்க….

19 hours 59 minutes ago
அன்று கூறியது இன்று நடக்கிறது என்கிறார் திஸ்ஸ அத்தநாயக்க….
December 10, 2018

Tissa.jpg?zoom=3&resize=335%2C215

தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் சிக்கல்கள் தொடர்பில் தான் 4 வருடங்களுக்கு முன்னர் கருத்து தெரிவித்ததாக ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பொது செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.  அஸ்கிரி மற்றும் மல்வத்து தேரர்களை சந்தித்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், நீதிமன்ற தீர்ப்பின் பின்னர் பொதுத் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் தான் கருத்து ஒன்றை முன்வைப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலுக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் அன்றி, இன்னொருவரை பொதுவேட்பாளராக களமிறக்க வேண்டாம் எனக் கூறியிருந்ததாகவும், இதனால், ஐக்கிய தேசியக் கட்சிக்கு எந்தவொரு பலனும் ஏற்படாது  என வலியுறுத்தியதாகவும் தெரிவித்த அவர்,  இதனால் தன்னை கட்சியிலுள்ள சிலர் துரோகியாக அடையாளப்படுத்தினார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக  மஹிந்த ராஜபக்ஸவுடன் இணைந்து சூழ்ச்சி செய்வதாகக் குற்றம் சுமத்தி, தான் கட்சியிலிருந்து விலகிச் செல்லும் நிலைமைக்கும் தள்ளினார்கள்.

அப்போது தான் கூறியதை யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை. இன்று என்ன நடந்துள்ளது? நான்கு வருடங்களுக்குப் பின்னர்தான் கூறியது அவ்வாறே இடம்பெற்றுள்ளது என திஸ்ஸ அத்தநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.

 

http://globaltamilnews.net/2018/106198/

 

தற்போது அரசியலில் தொடர்புபட்டுள்ள புலி உறுப்பினரின் கொலை முயற்சி தொடர்பில் 48 மணித்தியாலத்துள் அறிவிப்பு

20 hours 1 minute ago
தற்போது அரசியலில் தொடர்புபட்டுள்ள புலி உறுப்பினரின் கொலை முயற்சி தொடர்பில் 48 மணித்தியாலத்துள் அறிவிப்பு
December 10, 2018

Namal-kumara.png?zoom=3&resize=335%2C213

முன்னாள் விடுதலைப் புலிகள் அமைப்பின் பிரதானி ஒருவரால் இலங்கையில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த கொலை முயற்சி ஒன்று குறித்து எதிர்வரும் 48 மணி நேரத்துக்குள் தெரிவிப்பதாக ஊழல் ஒழிப்பு பிரிவின் நடவடிக்கை பணிப்பாளர் நாமல் குமார தெரிவித்துள்ளார்.

குறித்த கொலை சதித்திட்டம் தொடர்பான குரல் பதிவை 12ஆம் திகதி காவல்துறையினரிடம் ஒப்படைக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பிரதி காவல்துறைமா அதிபராக நாலக சில்வா பதவி வகித்த போது இந்த விடயம் தொடர்பான குரல் பதிவை அவரிடம் தான் வழங்கிய போதும் , அவர் அது தொடர்பில் எவ்வித நடவடிக்கையும் முன்னெடுக்கவில்லையெனவும் நாமல் குமார தெரிவித்துள்ளார்.

மதஸ்தலம் ஒன்றை மையப்படுத்தி மேற்கொள்ளப்படவிருந்த குறித்த கொலை சதித்திட்டம் தொடர்பான தகவல் இந்த குரல்பதிவு மூலம் உறுதியானதாகவும் இந்த சதித்திட்டம் 150 இலட்சத்துக்கு மேற்கொள்ளப்படவிருந்ததாகவும் நாமல் குமார தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினரான அவர் தற்போது அரசியலுடன் தொடர்புபட்டுள்ளாரெனவும் இதற்கமைய இன்னும் 48 மணி நேரத்துக்குள் இந்த சதி முயற்சி குறித்த தகவலை வெளியிடவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

http://globaltamilnews.net/2018/106185/

 

புன்னாலைக்கட்டுவனில் கிராமசேவகரின் இடமாற்றத்தைக் கண்டித்து போராட்டம்

20 hours 3 minutes ago
புன்னாலைக்கட்டுவனில் கிராமசேவகரின் இடமாற்றத்தைக் கண்டித்து போராட்டம்
December 10, 2018

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

IMG_1488.jpg?resize=800%2C600

யாழ்ப்பாணம் புன்னாலைக்கட்டுவன் கிராமசேவகர் இடமாற்றத்தைக் கண்டித்து அப் பகுதி மக்கள்இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  அரசியல் பழிவாங்கல் காரணமாகவே கிராமசேவகருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கின்ற அப்பகுதிமக்கள் இந்த இடமாற்றத்தை ரத்துச் செய்ய வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர். புன்னாலைக்கட்டுவன் 208 கிராம சேவகருக்கு கடந்த சில தினங்களிற்கு முன்னர் வழங்கப்பட்டுள்ள இடமாற்றத்திற்கு எதிராக அப் பகுதிமக்கள் கடுமையான எதிர்ப்பைவெளியிட்டு வந்திருந்தனர்.

இந் நிலையில் அந்தஇடமாற்றத்தைக் கண்டித்தும் இடமாற்றத்தை இரத்துச்செய்ய வலியுறுத்தியும் குறித்த கிராம சேவகர் அலுவலகம் முன்பாக அப்பகுதி மக்கள்இணைந்து கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.  இதன் போது அரசியல் பழிவாங்கல் காரணமாகவே குறித்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள மக்கள் இந்த இடமாற்றத்தை ரத்துச் செய்து தமக்கு முன்னர் இருந்த கிராமசேவகரையே மீள நியமிக்கவேண்டுமென்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜரொன்றையும் பிரதேச செயலர் மற்றும் அரசஅதிபர் ஆகியோருக்கும் அப்பகுதி மக்கள் வழங்கியுள்ளனர்.

 IMG_1489.jpg?resize=800%2C600

 

http://globaltamilnews.net/2018/106171/

 

Checked
Tue, 12/11/2018 - 05:25
ஊர்ப் புதினம் Latest Topics
Subscribe to ஊர்ப்புதினம் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr