Jump to content

ஆணாய் இருப்பதில் வெட்கப்படுகின்றேன்


Recommended Posts

ஆணாய் இருப்பதில் வெட்கப்படுகின்றேன்

By டிசே தமிழன்

எங்கேயிருந்து ஆரம்பிப்பது என்றும் தெரியவில்லை. ஆனால் எழுதாமல் இருக்கவும் முடியாது மனது அவதிப்படுகிறது. சில தினங்களுக்கு முன், ரொரண்டோவில் ஒரு இளந்தமிழ்த்தாய் (30 வயதளவில் இருக்கும்) தனது இருபிள்ளைகளை குளிக்கும் தொட்டியில் மூழ்கவைத்து சாகடித்து தானும் தற்கொலை செய்ய முயற்சிக்கையில், அவர் மட்டும் காப்பாற்றப்பட்டு கொலையாளியாக (first degree murder) அடையாளங்காணப்பட்டுள்ளார். இந்தக் கொலையின் பின்னாலுள்ள 'கதைகள்', 'துப்பத் துலக்கும் புள்ளிகள்'இன்னபிறவற்றை அறிவதில் எனக்கு எந்த ஆர்வமும் இல்லை. இரண்டாவது குழந்தை பிறந்து சில மாதங்களாய் இருப்பதால், ஒரு பிள்ளையைப் பெறுகின்ற தாயிற்கு, குழந்தை பிறக்கமுன்னரும், பிறந்தபின்னரும் வருகின்ற மனவழுத்தமும் ஒரு காரணமாயிருக்கலாம் என்று இந்தச் செய்தியை தொலைக்காட்சியைப் பார்த்துக்கொண்டு இருந்தபோது அறிய நேர்ந்தது.

இதற்கு முன்பாகவும் இப்படிக் குழந்தைகள் பெறுகின்ற தாயாருக்கு ஏற்படும் அழுத்தத்தினால் தற்கொலைகள், குழந்தைகளைக் கொல்லுதல் நடந்திருப்பதை அறிந்திருக்கின்றேன். மேலும், எமது சமூகம் போன்ற ஒரு மூடிய சமுகத்திற்கு இவ்வாறான விசயங்களுக்காய் ஆலோசனைகள் பெறுவதோ, கலந்துரையாடல்கள் செய்வதோ என்பதோ அவ்வளவு இலகுவில் வாய்த்து விடுவதுமில்லை. அப்படி ஆலோசனைகள் கேட்டால், தங்களைச் சமூகத்திலிருந்து ஒதுக்கிவிடுவார்கள் என்ற அச்சமும் அதிகம் மேலோங்கி இருக்கலாம்.

பல்வேறு சந்தர்ப்பங்களில் நான் வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழ்ச்சமூகத்திலிருந்து விலகியே இருக்கின்றேன். அவ்வாறு இருந்தால் தங்களை 'னடீயர்களாக'மற்ற சமூகத்தினர் அடையாளங்கண்டு கொள்வார்கள் என்று சிலர் நினைக்கும் ‘பெருமிதத்தால்’ அல்ல. எங்கள் சமூகத்தில் நடக்கும் பல அக்கிர அட்டூழியங்களைக் கேள்விப்படும்போது அதற்கு எதிராய் ஒரு சிறு சலனத்தையும் ஏற்படுத்தமுடியாத என் கையாலகாத நிலையில் வரும் சலிப்பே முக்கிய காரணம் (அதன் காரணமாகவே இதுவரை எந்த தமிழ் வானொலியோ அல்லது தொலைக்காட்சியோ வைத்திருக்கவில்லை).

எங்கள் சமூகத்தில் பெண்கள் மீதான் வன்முறையும், குழந்தைகள் மீதான பாலியல் சுரண்டல்களும் அளவில்லாது நடந்துகொண்டிருக்கின்றன. முக்கியமாய் இந்தப்பிரச்சினைகளின்போது குற்றஞ்செய்கின்றவர்கள் தப்பிப்பதற்கு உபயோகிப்பதற்குப் பயன்படுத்தப்படும் வார்த்தை, ‘என்ன சாட்சி இருக்கிறது?. அதைக் கொண்டுவா முதலில்’ என்பார்கள். நிச்சயம் பாதிக்கப்பட்டவர்கள், இன்னொருமுறை அதை நினைவுக்கு திருப்பிவர விருப்பமாட்டார்கள் என்பதோடு, அப்படி வெளிப்படையாகப் பேசும்போது இந்தச் ‘சமூகம்’ தங்களைப் பற்றிய பார்வைகளை எப்படி மாற்றிக்கொள்ளும் என்ற பயமும் அதிக சந்தர்ப்பங்களில் முதன்மைபெறுகிறது. இன்னுமே கைம்பெண்களை, விவாகரத்துச் செய்தபெண்களை இயல்பாய் ஏற்றுக்கொள்ளாத சமூகத்தில் சிறு வயதில் பாலியல் வல்லுறவாக்கப்பட்டதை, பதின்மங்களில் பாலியல் ரீதியில் சுரண்டப்பட்டுக்கொண்டிருப்ப

Link to comment
Share on other sites

டிஜே

நீர் சொன்ன பல விடயங்கள் களங்களில் விவாதிக்கப்படாதத்கான ஒரு காரணம் நீர் சொன்ன மாதிரி உமக்கா இப்பிடி நடந்ததா என்ற கேட்பார்களே என்பதும் தான்.

நான் ஒரு வானொலி நாடகத்தயாரிப்பாளருக்கு ஒரு கதை சொன்னேன்..கிட்டத்தட்ட நீர் சொன்ன பெண்ணின் கதைதான்.அவர்கள் என்னிடம் கேட்ட கேள்வியும் அதான்…சொந்தக்கதையா ???கடைசியில் அந்தக்கதை நாடகமாக்கப் படவில்லை. நான் அதே கதையை பாடசாலையில் ஆங்கில வகுப்பில் எழுதினேன்.ஆசிரியர் அதை ஒரு விவாதமாகவே மாற்றி விட்டார்.ஆரோக்கியமான ஒரு விவாதமாக.

ஒரு படத்தில் கூட ரகுவரன் தன் மகளையே தாயாக்கி விடுவார்.மனைவி ஆச்சிரமம் நடத்த தொடங்கினார்.(திரைப்படத்தின் பெயர் ஞாபகம் இல்லை-தயா படமோ தெரியவில்லை).

பாடசாலையில் “ஸோ கேஸ்’ தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட ஒரு படம் பாரத்தோம்.அந்தப்படத்தின்ர பெயரும் ஞாபகம் இல்லை.அதில் ஒரு 9 வயதுப்பிள்ளை பாடசாலை ஆசிரியரிடம் தந்தையாரைப் பற்றி முறைப்பாடு செய்து ஆசிரியர் அந்தப்பிள்ளையை ஒரு ஆலோசகரிடம் அழைத்துச்சென்று அதன் பின்னர் வழக்குத் தொடர்வார்.வீட்டில் அந்த ஒன்பது வயதுப்பிள்ளையை அக்கா தங்கை அம்மா எல்லோரும் திட்டுவார்கள்.நீ சொன்னது பொய்யென்று நீதிமன்றத்தில் சொல்லச் சொல்லுவார்கள்.ஆனால் சின்னத்தம்பி மட்டும் அக்கா நீ சொல்றதை நான் நம்புறன் என்பான்.அந்தப்பிள்ளை இறுதிவரை தன் கூற்றில் உறுதியாகவே இருந்தது.

வழக்கு நடைபெறும்போது தந்தையின் வக்கீல் அந்தப்பெண்ணிடம் கேட்பார் நீ ஒரு நாள் உன் தந்தையின் குறியைத் தொட்டுப்பார்க்க கேட்டாயா என்று அதற்கு அந்தச்சிறுமியும் ஆமாம் எனப்பதில் சொல்வாள்.அந்த வக்கீல் நீதானே கேட்டாய் தொட்டுப்பார்க்க வேண்டுமென்று பிறகேன் இப்பிடி ஒரு குற்றச்சாட்டு?அதற்கு அந்தப் பெண் சொல்வாள் அப்பா ஆடை மாற்றும்போது அது வித்தியாசமா இருந்தது அதனால் தான் அப்பிடிக்கேட்டேன். அப்பா நான் குழப்படி செய்யும்போதெல்லாம் என்னை கழிவறையில் பூட்டி வைத்து அடிக்கிறன் என்று அம்மாவிடம் சொல்லிவிட்டு என்னைப் பாலியல் சித்திரவதை செய்வதுண்டு என்பாள்.அக்காவிடமும் விசாரணை நடைபெறும்.அக்கா அப்பா தன்னில நல்ல பாசம் தங்கை சொல்வதில் உண்மையில்லை என்று சொல்வாள்.

ஓருநாள் அக்காவினுடைய பச்சிளங்குழந்தையை அப்பாவிடம் குடுத்துவிட்டு எங்கோயே போய் வரும்போது குழந்தையின் வித்தியாசமான அழுகுரலைக் கேட்பாள்.பிறிதொரு முறை சின்னத்தம்பியை அப்பா பாலியல்; சித்திரவதை செய்வதைக் கண்டு விடுவாள்.பின்னர் நீதிமன்றத்தில் தன்னையும் தந்தையர் பாலியல் சித்திரவதைக்குள்ளாக்கியதை விபரிப்பாள்.தன் தாயார் தந்தையாரை மிகவும் நேசித்ததால் தன்னால் தந்தையாரின் வக்கிரத்தை யாரிடமும் சொல்ல முடியவில்லை.இப்பொழுது தன் தங்கை தம்பி குழந்தை இப்படி எல்லாரும் பலிக்கடாவாக்கப்பட்டதால் இந்த உண்மையைச் சொல்கிறேன் என்றாள்.

அந்த 9 வயதுச்சிறுமியின் துணிச்சலை அனைவரும் பாராட்டினார்கள்.முக்கியமாக அவளை வெறுத்த பழித்த அவளது தோழியரும் அவளுக்குத் திரும்பக் கிடைத்தனர்.

திரைப்படத்தின் பெயர் ஞாபகம் வந்தால் சொல்கிறேன்.

Link to comment
Share on other sites

உங்கள் நண்பி கேட்டது நல்ல ஒரு கேள்வி.பெண்களில் 97 சதவீதமானோர் வாழ்வில் ஒருமுறையாவது பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டிருப்பார்கள்.

Link to comment
Share on other sites

நாம் சுத்தமானவர்கள்

நமக்குள் அழுக்குகள் இல்லை

நாம் ஒழுக்கமானவர்கள்

நமக்குள் குற்றங்கள் இல்லை

நாம் அவர்கள் போலில்லை

நமது கலாசாரம் சிறந்தது

நாம் அன்பு கொண்டவர்கள்

நமக்குள் பேதங்கள் இல்லை

அவர்கள் பற்றி பேசுவோம்

அவர்களைக் காறித் துப்புவோம்

அவர்கள் மீது நாமெல்லோரும்

அருவருப்புக் கொள்ளுவோம்

சத்தியம் செய்கிறேன்

எனது அழுக்கற்ற சமூகத்தின் மீது

நாம் சுத்தமானவர்கள் என

சத்தியம் செய்கிறேன்

அது செத்து நாளாயிற்று

என்கிற நம்பிக்கையில்

மறுபடியும் மறுபடியும்

சத்தியம் செய்கிறேன்

Link to comment
Share on other sites

உண்மை தான் இளைஞன் அண்ணா அழுக்கற்ற சமுதாயம் என்ற ஒண்டு என்றுமேயிருந்ததில்லையே அப்படி இருந்திருந்தாலும் அது இப்ப இல்லவேயில்லை

கவிதை நல்லாயிருக்கு அண்ணா

சினேகிதி எழுதின பிரச்சனை எல்லா சமுதாயத்தில இருந்தாலும் எங்கட சமுகத்தில இதைப் பற்றி ஏன்யாரும் வெளிப்படையா கதைப்பதில்லை

Link to comment
Share on other sites

அது உயிர்த்தெழும்போதெல்லாம் களையெடுக்க வேண்டும் இளைஞன்.

அந்த எல்லாருமாக நாங்களில்லாமல் இருப்போம் நித்திலா.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.