Jump to content

வென்றாலும் அடி தோற்றாலும் அடி.


arjun

Recommended Posts

சின்ன வயதில புட்போல் விளையாடும் பொழுது தோத்தால் 'கோதாரி' என்று கூவிக்கொண்டு எதிரணியினரின் மீது மண்ணை அள்ளி எரிந்து விட்டு ஓடுவதுதான் ஞாபகம் வருகிறது.

:D

Link to comment
Share on other sites

  • 4 years later...

காங்கேசன்துறையில் யங் றோயலுடன் விளையாடினதாய் எழுதி இருக்கின்றீர்கள்? இது எந்த வருடம் என்று நினைவு உள்ளதா? ஆட்டம் செல்லப்பிள்ளையார் கோயில் மைதானத்திலா அல்லது டவுன் கவுன்சில்  மைதானத்திலா நடைபெற்றது? அப்போது யங் றோயல் சார்பாக விளையாடிய எவர் பெயராவது தற்போது நினைவில் உள்ளதா? நீங்கள் கிரிக்கெற் மட்டுமே விளையாடியதாய் உங்கள் பதிவுகளில் தென்பட்டது. உதைபந்தாட்டமும் விளையாடினீர்களா?

பி/கு: காங்கேசன் துறை, நடேஸ்வரா ஆகிய பதங்களில் நான் யாழ் இணையத்தில் தேடல் செய்தபோது உங்களின் இந்தப்பதிவை கண்டேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உதென்ன கலைஞன் இத்தனை கேள்விகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குருஜி கப்பல் பார்க்கப் போன மந்திரியின் வழி வந்தவர்....! முடிந்தால் அர்ஜுன் பதில்களைக் கூறட்டும், கூறிப் பார்க்கட்டும்....!

Link to comment
Share on other sites

10 minutes ago, suvy said:

குருஜி கப்பல் பார்க்கப் போன மந்திரியின் வழி வந்தவர்....! முடிந்தால் அர்ஜுன் பதில்களைக் கூறட்டும், கூறிப் பார்க்கட்டும்....!

அர்ஜுன் பதில் கூறுவது கூறாமல் விடுவது இருக்கட்டும்..

அர்ஜுன் கிரிக்கெட் விளையாடிய அந்த காலத்தில் கலைஞன்க்கு எத்தனை வயது// அல்லது பிறந்து இருப்பாரா..:unsure:

Link to comment
Share on other sites

கலைஞன் டவுன் கவுன்சில் மைதானத்தில் தான் விளையாடினோம் ,சற்று தள்ளி கே கே எஸ் வெளிச்சவீடு இருந்ததாக ஞாபகம் .விளையாடிய எவரது பெயர்களும் நினைவு இல்லை .

நீங்கள் கே கே எஸ் என்றால் தெரிந்திருக்கும் இவரை ,

இலங்கை சாம்பியனாக வந்த  உதைபந்தாட்டத்தில்  இளவாலை சென் கென்றிஸ் வந்த நேரம் காப்டன் பண்ணியவர் எனது உறவினர் .டவுன் கவின்சிளுக்கு முன் தான் அவர்கள் வீடு .தகப்பன் மலே இனத்தை சேர்ந்தவர் தாய் கே கே எஸ் வைத்தியசாலை நேர்ஸ் .

 

 

Link to comment
Share on other sites

1 hour ago, ரதி said:

உதென்ன கலைஞன் இத்தனை கேள்விகள்

நான் மூன்றாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரை காங்கேசன்துறையில் படித்தேன். அப்போது விளையாட்டு பார்ப்பதும், விளையாடுவதுமே பிரதானமாக செய்பவை. தவிர, அப்போது யங் ரோறலில் விளையாடியவர்களையும் ஞாபகம் இருக்கின்றது. 

1 hour ago, suvy said:

குருஜி கப்பல் பார்க்கப் போன மந்திரியின் வழி வந்தவர்....! முடிந்தால் அர்ஜுன் பதில்களைக் கூறட்டும், கூறிப் பார்க்கட்டும்....!

குருஜி, நீங்கள் எழுதிய யாழ். இந்து மற்றும் உள்ளூர் கிரிக்கெற் அணி பற்றிய பதிவுகளை முன்பு வாசித்தேன். இங்கு பெரும்பாலும் எல்லோரும் சிறுவயதில் வேலை, வெட்டி இல்லாமல் கிரிக்கெற் கனவுடன் சுற்றி நேரத்தை வீணாக்கிவிட்டோமோ என்று எண்ணத்தோன்றுகின்றது. ஊர்கள், காலம் வேறுபட்டாலும் அர்ஜுனின் அனுபவத்தினையொத்த அனுபவம் இங்கு பலருக்கும் இருக்கும் என்று நினைக்கின்றேன்.

 

50 minutes ago, நவீனன் said:

அர்ஜுன் பதில் கூறுவது கூறாமல் விடுவது இருக்கட்டும்..

அர்ஜுன் கிரிக்கெட் விளையாடிய அந்த காலத்தில் கலைஞன்க்கு எத்தனை வயது// அல்லது பிறந்து இருப்பாரா..:unsure:

அப்போது பெரியவர்கள் மாலையில் விளையாடும்போது பந்து பொறுக்குவதற்கும், மற்றும் கீப்பராக நிற்பதற்கு ஒருவரும் முன்வராவிட்டால் கீப்பராக நிற்பதற்கும் விடுவார்கள். வேகமாய் அடிக்கப்படும் பந்தை மொக்குத்தனமாய் சின்னக்கைகளால் தடுத்து கையை சேதப்படுத்தியது உண்டு.

21 minutes ago, arjun said:

கலைஞன் டவுன் கவுன்சில் மைதானத்தில் தான் விளையாடினோம் ,சற்று தள்ளி கே கே எஸ் வெளிச்சவீடு இருந்ததாக ஞாபகம் .விளையாடிய எவரது பெயர்களும் நினைவு இல்லை .

நீங்கள் கே கே எஸ் என்றால் தெரிந்திருக்கும் இவரை ,

இலங்கை சாம்பியனாக வந்த  உதைபந்தாட்டத்தில்  இளவாலை சென் கென்றிஸ் வந்த நேரம் காப்டன் பண்ணியவர் எனது உறவினர் .டவுன் கவின்சிளுக்கு முன் தான் அவர்கள் வீடு .தகப்பன் மலே இனத்தை சேர்ந்தவர் தாய் கே கே எஸ் வைத்தியசாலை நேர்ஸ் .

நீங்கள் சொல்லும் பகுதியில் வாழ்ந்து எனக்கு தெரிந்த பிரபல உதைபந்தாட்ட வீரர் என்றால் வெஸ்லி. அவர் இப்போது மொன்றியலில் இருக்கின்றார். அவரையா சொல்கின்றீர்கள்? யங் றோயல் கழகம் இப்போதும் சிறு அளவில் மொன்றியலில் உள்ளது. முன்னைய பிரபல வீரர் பாப்பா- சுருள் தலையையும் பன்னிரண்டு வருடங்களின் முன் மொன்றியலுக்கு போனபோது மைதானத்தில் கண்டேன். இப்போது அவர்களின் பிள்ளைகள் யங் றோயலுக்காய் விளையாடுகின்றார்கள். கிரிக்கெற் ஆட்டங்கள் எப்போதும் செல்லப்பிள்ளையார் கோயில் மைதானத்திலேயே இடம்பெறும். உதைபந்து செல்லப்பிள்ளையார் கோயில் மைதானம், மற்றும் டவுண் கவுண்சில் மைதானங்களில் இடம்பெறும்.

காங்கேன்சன்றையின் சில பகுதிகள் அண்மையில் விடுவிக்கப்பட்ட செய்தியே உங்கள் பழைய பதிவை பார்க்க உதவியது. எமது வீடு உள்ள பகுதி (குருநாதர் சாமி கோயிலடி) இன்னமும் விடுவிக்கப்படவில்லை என்று சொல்கின்றார்கள். அங்கு ஆமிக்காரர் தோட்டம் செய்கின்றார்களாம். 

Link to comment
Share on other sites

இலங்கை சம்பியன் சென் கென்றிஸ் டீம் கப்டன் வெஸ்லியின் அண்ணன் .

வெஸ்லியும் நல்ல பிளேயர் என்று கேள்விப்பட்டேன் ,மொன்றியலில் தான் இருக்கின்றார் .சில வருடங்களின் முன் சந்தித்து தண்ணி வேறு அடித்தோம் .

இவர்கள் எனக்கு மிக நெருங்கிய உறவினர்கள் .

கே கே எஸ் இவர்கள் வீட்டிற்கு பல தடவைகள் சென்றிருக்கின்றேன் .-

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, arjun said:

இலங்கை சம்பியன் சென் கென்றிஸ் டீம் கப்டன் வெஸ்லியின் அண்ணன் .

வெஸ்லியும் நல்ல பிளேயர் என்று கேள்விப்பட்டேன் ,மொன்றியலில் தான் இருக்கின்றார் .சில வருடங்களின் முன் சந்தித்து தண்ணி வேறு அடித்தோம் .

இவர்கள் எனக்கு மிக நெருங்கிய உறவினர்கள் .

கே கே எஸ் இவர்கள் வீட்டிற்கு பல தடவைகள் சென்றிருக்கின்றேன் .-

வெஸ்லி எனது நெருங்கிய கூட்டாளி நியுயோர்க்கில் இருந்து கடந்த 20 வருடமாக மொன்றியாலில் வாழ்கிறார்.இவரது அண்ணனும் எனது நண்பர்.கால்ப் பந்தில் கில்லாடி.இவரது பெயர் யுவான்.ஆனால் ரிடி என்று தான் எல்லோரும் அழைப்பார்கள்.இவர்களது தகப்பனார் மலே இனத்தவர்.

Link to comment
Share on other sites

வெஸ்லியின் தம்பி என்னுடன் நடேஸ்வர கனிஷ்ட வித்தியாலயத்தில் ஒன்றாக படித்தவர், நண்பர். பின்னர் நான் எட்டாம் வகுப்பில் சென்.ஜோன்ஸிற்கு மாறினேன், அவர் ஆறாம் வகுப்பிலேயே சென். பற்றிக்ஸிற்கு மாறிவிட்டார். பாடசாலை பேருந்தில் இருவரும் ஒன்றாக காங்கேசன்துறை திரும்புவோம். பின்னர் ஈப்பி ஆர் எல் எவ்வின் ஆட்கள் பிடித்தலோடு எல்லா தொடர்புகளும் துண்டிக்கப்பட்டு விட்டன. அவரை நான் பின்னர் கனடாவில் அவர் வீட்டிற்கு சென்று சந்தித்தேன். அப்போது அவருடன் மொன்றியல் போனபோது வெஸ்லியையும் சந்தித்தோம். வெஸ்லிக்கு அண்ணர் ஒருவர் இருப்பது கொஞ்சம் கொஞசமாய் நினைவில் வருகின்றது. அவரை நேரில் கண்டால் அடையாளம் தெரியவரும். மிக நீண்டகாலம் என்பதால் பல நினைவுகள் போய்விட்டன.  போர் காரணமாக பாரியளவில் சின்னாபின்னமாகிய ஊர்களில் காங்கேசன்துறையும் ஒன்று. நடந்த அழிவுகள், உறவுகளின் பிரிவுகள், பலவிதமான இழப்புக்கள் எல்லாவற்றையும் நினைத்தால் இரத்தக்கண்ணீர்தான் வரும். 

Link to comment
Share on other sites

எனக்கும் பழைய நினைவுகள் பலவற்றை கிளறிவிட்டார் கலைஞன் .இவர்களின் அம்மா எனக்கு சின்னம்மா .

வெஸ்லியின் அண்ணர் டி டி , அவர்தான் உதைபந்து சுப்பர் ஸ்டார் .அவரையும் உறவினர் ஒருவரின் கல்யாணத்தில் சந்தித்தேன் .அவருக்கும் ஒரு அண்ணர் நோர்வேயில் இருக்கின்றார் .இலங்கையில் Beatnicks இசைக்குழுவில் கிட்டார் அடித்தவர் .

இவர்கள் ரொறொண்டோ வந்தால் எங்ளது அம்மாவுடன் தான்  தங்குவார்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கலைஞன்,

நீங்கள் ஆறாம் ஆண்டில் அல்லவா சென் ஜோன்சிற்கு மாறினீர்கள்? அப்போ இணுவிலில் இருந்தீர்கள்?

கெளரி அம்பாளில் பள்ளிக்கூடம் போவீர்கள்.

நான் நினைக்கும் ஆள் நீங்களாயின்.

Link to comment
Share on other sites

5 hours ago, arjun said:

அவருக்கும் ஒரு அண்ணர் நோர்வேயில் இருக்கின்றார்

பெயர் டொலி

Link to comment
Share on other sites

9 hours ago, கலைஞன் said:

கிரிக்கெற் ஆட்டங்கள் எப்போதும் செல்லப்பிள்ளையார் கோயில் மைதானத்திலேயே இடம்பெறும்.

இந்த மைதானம் முழுவதும் கிளிசீரியா (சீமைக் கிளுவை) நட்டு வைத்திருக்கிறார்கள். செல்லப் பிள்ளையார் கோயில் இருக்கு ஆனால் புதர், மரங்களிற்கிடையே அடையாளம் காண்பது கஸ்டம். நில அளவையாளர் சிவசுப்பிரமணியத்தின் வீட்டடியில் நின்று பார்த்தால் கோயில் தெரியும். இந்த கோவிலும் மைதானமும் எனது வாழ்கையிலும் 1979 இலிருந்து சில வருடங்களை விழுங்கியிருந்தது. மீட்க மீட்க சுகமான அனுபவங்கள்.

9 hours ago, கலைஞன் said:

எமது வீடு உள்ள பகுதி (குருநாதர் சாமி கோயிலடி) இன்னமும் விடுவிக்கப்படவில்லை என்று சொல்கின்றார்கள்.

அப்ப நிச்சயமாக உங்களுக்கு என்னை தெரிந்திருக்கும்.

இப்பதிவையும் பாருங்களேன்.

 

 

Link to comment
Share on other sites

On 3/14/2016 at 9:45 PM, arjun said:

எனக்கும் பழைய நினைவுகள் பலவற்றை கிளறிவிட்டார் கலைஞன் .இவர்களின் அம்மா எனக்கு சின்னம்மா .

வெஸ்லியின் அண்ணர் டி டி , அவர்தான் உதைபந்து சுப்பர் ஸ்டார் .அவரையும் உறவினர் ஒருவரின் கல்யாணத்தில் சந்தித்தேன் .அவருக்கும் ஒரு அண்ணர் நோர்வேயில் இருக்கின்றார் .இலங்கையில் Beatnicks இசைக்குழுவில் கிட்டார் அடித்தவர் .

இவர்கள் ரொறொண்டோ வந்தால் எங்ளது அம்மாவுடன் தான்  தங்குவார்கள் 

செல்லப்பிள்ளையார் கோயில் மைதானத்தில் யாழ் கழகங்களிற்கிடையிலான உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் யங் றோயல் சார்பாய் அண்ணன், தம்பி இருவரும் விளையாடுவது நினைவில் உள்ளது. இவ்வாறே நேசக்குமார், சாந்திகுமார்களும் யங் றோயல் சார்பாய் விளையாடியுள்ளார்கள். நடேஸ்வரா கல்லூரியில் இருந்த கிறிக்கெற் அணி ஒன்று, நேசக்குமாரை யாழ்ப்பாணத்தில் இருந்து அழைத்து வந்து தமது பரம எதிரியான அணியை வெல்வதற்காக தமது அணி சார்பாக விளையாட வைப்பார்கள். அப்போது நேசக்குமார் சென். ஜோன்ஸ் கல்லூரியில் பயின்றார். தற்போது கனடாவில் உள்ள, முன்பு பிரச்சனைக்கு உள்ளாகிய சுவிஸ் முரளி (நடராசா முரளிதரன்) செல்லப்பிள்ளையார் கோயில் மைதானத்தில் நடைபெறும் கிறிக்கெற் சுற்றுப்போட்டிகளில் சுழற்பந்து வீசுவது இப்போதும் எனது நினைவில் உள்ளது. நான் அப்போது நாலாம், ஐந்தாம் வகுப்பு படித்தேன் என்று நினைக்கின்றேன். காங்கேசன் துறை, மற்றும் அண்டிய இடங்களில் மிகச்சிறந்த ஏராளம் விளையாட்டு வீரர்கள் இருந்தார்கள். அதில் பெரும்பாலானோர் பல்வேறு இயக்கங்களில் சேர்ந்தும், பிரச்சனை காரணமாக வெளிநாடுகளிற்கு சென்றும், இலங்கைப்படைகளின் ஓபரேசன் லிபரேசன் மற்றும் இந்திய இராணுவம் கால் பதித்த காலத்திலேயே விளையாட்டு அங்கு வெகுவாக சோபை இழந்துவிட்டது.

On 3/14/2016 at 10:37 PM, goshan_che said:

கலைஞன்,

நீங்கள் ஆறாம் ஆண்டில் அல்லவா சென் ஜோன்சிற்கு மாறினீர்கள்? அப்போ இணுவிலில் இருந்தீர்கள்?

கெளரி அம்பாளில் பள்ளிக்கூடம் போவீர்கள்.

நான் நினைக்கும் ஆள் நீங்களாயின்.

90இல் இடம்பெயர்ந்து இணுவிலில் சிறிது காலம் இருந்தேன், பின்னர் கொக்குவிலிற்கு சென்றுவிட்டேன். நீங்கள் சொல்லும் வகையிலான காங்கேசன்துறையை சேர்ந்த எனது வயது பிரிவை சேர்ந்த ஒருவரும் சென். ஜோன்சில் அப்போது படிக்கவில்லை.  நீங்கள் கூறுபவர் தெல்லிப்பளையாக இருக்கலாம்.

On 3/14/2016 at 3:10 AM, ஜீவன் சிவா said:

இந்த மைதானம் முழுவதும் கிளிசீரியா (சீமைக் கிளுவை) நட்டு வைத்திருக்கிறார்கள். செல்லப் பிள்ளையார் கோயில் இருக்கு ஆனால் புதர், மரங்களிற்கிடையே அடையாளம் காண்பது கஸ்டம். நில அளவையாளர் சிவசுப்பிரமணியத்தின் வீட்டடியில் நின்று பார்த்தால் கோயில் தெரியும். இந்த கோவிலும் மைதானமும் எனது வாழ்கையிலும் 1979 இலிருந்து சில வருடங்களை விழுங்கியிருந்தது. மீட்க மீட்க சுகமான அனுபவங்கள்.

அப்ப நிச்சயமாக உங்களுக்கு என்னை தெரிந்திருக்கும்.

இப்பதிவையும் பாருங்களேன்.

 

உங்கள் பதிவை பார்த்தேன். கூச்சியத்தை பிள்ளையார் கோயில் எங்களுடன் இரண்டர கலந்தது. கோயிலுடன் அண்மித்த பகுதியில் எமக்கு வயல் உள்ளது. உங்கள் வயதுப்பிரிவு வேறுபட்டால் என்னால் உங்களை மட்டுக்கட்டுவது கடினம். ஆனால், நிச்சயம் உங்களுக்கு எனது ஒன்றுவிட்ட சகோதரங்கள், மற்றும் உறவினர்களை தெரிந்திருக்ககூடும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று தான் படிக்க முடிந்தது கதையை 

எனக்கு உதைபந்து என்றால் உயிர் போல 2002, 2003தமிழீழ தேசிய விளையாட்டு விழாவில் கலந்து விளையாடியது மறக்க முடியாத நினைவுகளில் ஒன்று  இன்று வரை விளையாடிக்கொண்டு இருக்கிறன் 15 வருடங்களுக்கு மேலாக பலரையும் பயிற்சி கொடுத்து பழக்கிவிட்டு விட்ட திருப்தி எனக்கு 

அடிபிடி இல்லாமல் உதைபந்தாட்டம் இல்லை நாங்கள் வெற்றி பெற்று பொல்லால் பரிசு வாங்கியது  மறக்க இயலாது ??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அழகான இயல்பான நடையில் எழுதியிருக்கிறீர்கள் . வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • 3 months later...
On 14/03/2016 at 2:51 AM, கலைஞன் said:

நீங்கள் சொல்லும் பகுதியில் வாழ்ந்து எனக்கு தெரிந்த பிரபல உதைபந்தாட்ட வீரர் என்றால் வெஸ்லி. அவர் இப்போது மொன்றியலில் இருக்கின்றார். அவரையா சொல்கின்றீர்கள்? யங் றோயல் கழகம் இப்போதும் சிறு அளவில் மொன்றியலில் உள்ளது. முன்னைய பிரபல வீரர் பாப்பா- சுருள் தலையையும் பன்னிரண்டு வருடங்களின் முன் மொன்றியலுக்கு போனபோது மைதானத்தில் கண்டேன். இப்போது அவர்களின் பிள்ளைகள் யங் றோயலுக்காய் விளையாடுகின்றார்கள். கிரிக்கெற் ஆட்டங்கள் எப்போதும் செல்லப்பிள்ளையார் கோயில் மைதானத்திலேயே இடம்பெறும். உதைபந்து செல்லப்பிள்ளையார் கோயில் மைதானம், மற்றும் டவுண் கவுண்சில் மைதானங்களில் இடம்பெறும்.

13423858_10206288384589271_2781123422466

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அடுத்த‌ பாராள‌ம‌ன்ற‌ தேர்த‌லில் ஸ்டாலின் தான் பிர‌த‌மரா போட்டி போடுவார் என்று அமெரிக்கா க‌னடா தொட்டு ப‌ல‌ நாட்டில்  க‌தை அடி ப‌டுது.....................துண்டறிக்கை பார்த்தே த‌மிழ‌ ஒழுங்காய் வாசிக்க‌ தெரியாது............ பிரத‌மர் ஆகினால் ஒட்டு மொத்த‌ உல‌க‌மே அதிரும் ஸ்டாலின் ஜயாவின் பேச்சை கேட்டு  😁😜................ வீட்டில் சீமான் பிள்ளைக‌ளுக்கு க‌ண்டிப்பாய் தூய‌ த‌மிழ் சொல்லிக் கொடுப்பார் அதில் எந்த ச‌ந்தேக‌மும் இல்லை யுவ‌ர் ஆன‌ர்.............ஆட்சிக்கு வ‌ராத‌ ஒருத‌ர‌ 68கேள்வி கேட்ப‌து எந்த‌ வித‌த்தில் ஞாய‌ம்...........ஒரு முறை ஆட்சி சீமான் கைக்கு போன‌ பிற‌க்கு அவ‌ர் த‌மிழை தமிழை வளர்க்கிறாரா அல்ல‌து திராவிட‌த்தை போல் தமிழை அழிக்கிறாரா என்று பின்னைய‌ காலங்களில் விவாதிக்க‌லாம்............இப்ப‌ அவ‌ர் எடுக்கும் அர‌சிய‌லை ப‌ற்றி விவ‌திப்ப‌து வ‌ர‌வேற்க்க‌ த‌க்க‌து...................
    • நோர்வே அனுமதித்தால் அங்கும் குரானை எரிக்கலாம்.
    • கனிமொழி எப்படி ஆங்கிலம் பேசுகிறார் என கேள்விக்கு விடை இருக்கா? மேற்கூறிய காரணங்கள் அவருக்கு பொருந்தாதா? இது வரை அப்படி ஒரு முறைப்பாடு இருந்ததாக தெரியவில்லை?  
    • இந்த நியாயத்தை சொன்னவர் தான் எதை சொன்னாலும் அதை அப்படியே சாப்பிட ஆட்கள் உள்ளனர் என தெரிந்தே சொல்கிறார்🤣. பயிற்று மொழிதொகு அதிக அளவிலான தனியார் பள்ளிகள் ஆங்கிலத்தைப்பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. அதே வேளையில் அரசுப் பள்ளிகள் தமிழை முதன்மைப் பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. மேலும், நடுவண் அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ஆங்கிலத்தையும் இந்தியையும் பயிற்றும் மொழியாகக் கொண்டுள்ளன. https://ta.m.wikipedia.org/wiki/தமிழ்நாட்டில்_கல்வி சீமான் பள்ளி படிப்பு தமிழில்தானே? நல்லாத்தானே தமிழ் பேசுறார்? அதிலே சேர்த்திருக்கலாம். ஒட்டு மொத்த தமிழ்நாட்டில் தமிழில் படிக்க சரியான பள்ளி இல்லை என்பதை எதையும் தாங்கும் புலன்பெயர்ந்தோர் ஏற்கலாம். தமிழ்நாட்டு மக்கள்?  
    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.