Jump to content

பிடல் காஸ்ட்ரோ


SUNDHAL

Recommended Posts

ஃபிடல் காஸ்ட்ரோ ரஸ் (பிறப்பு:13, ஆகஸ்ட் 1926) கியூபாவின் 20-வது குடியரசுத் தலைவர். 1959-1976 வரை கியூபாவின் பிரதமராகவும், 1976 முதல் குடியரசுத் தலைவராகவும் இருந்து வருகிறார்.

கியூபாவின் ஹோல்கின் மாகாணம், பைரன் என்ற இடத்தில் பிறந்தவர் காஸ்ட்ரோ. இவரது பெற்றோர் ஸ்பெயினில் இருந்து குடியேறியவர்கள். ஹவானா பல்கலைக் கழகத்தில் சட்டக் கல்வி பயின்ற காஸ்ட்ரோ மாணவப் பருவத்திலேயே அரசியல் ஈடுபாடு கொண்டார். 1947-ல் சீர்கேடு அடைந்த அரசு நிர்வாகத்தை எதிர்த்து, மறுசீரமைப்பைக் கோரிய கியூப மக்கள் கட்சியில் இணைந்தார்.

சட்டக் கல்வி முடித்து வழக்குரைஞர் தொழிலில் ஈடுபட்ட காஸ்ட்ரோ, கியூபாவில் அமெரிக்காவின் தலையீட்டை எதிர்த்து குரல் கொடுத்தார். கியூப மக்கள் கட்சித் தலைவராக இருந்தவர் மரணமடைந்த பின்னர் அக்கட்சியின் தலைவரானதுடன் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கான தயாரிப்புகளை செய்யத் தொடங்கினார். இதற்கிடையில் பாடிஸ்டா ராணுவத்தின் உதவியுடன் ஆட்சிக்கவிழ்ப்பு நடத்தி தேர்தல்களை ரத்து செய்தார். பாடிஸ்டா கியூப அரசியல் சாசனத்தை மீறிவிட்டதாக காஸ்ட்ரோ தொடுத்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

இதையடுத்து ஜூலை 26, 1953-ல் காஸ்ட்ரோ பாடிஸ்டா ராணுவ முகாம் மீது தொடுத்த தாக்குதல் தோல்வியில் முடிவடைந்தது. வழக்குத் தொடரப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட காஸ்ட்ரோ 2 ஆண்டுகளுக்குப் பின்னர் மெக்சிக்கோவுக்கு நாடு கடத்தப்பட்டார்.

மெக்சிக்கோவில் நாடு கடத்தப்பட்டவர்களை ஒருங்கிணைத்து "ஜூலை இயக்கத்தை' உருவாக்கினார். புகழ்பெற்ற புரட்சியாளர் சே குவேராவும் இந்த குழுவில் இணைந்தார். ராணுவப் பயிற்சி பெற்ற பின்னர், கியூபா திரும்பிய காஸ்ட்ரோ தலைமையிலான ஜூலை இயக்கத்தினர் கெரில்லா முறை போரின் மூலம் பாடிஸ்டா ஆட்சியைத் தூக்கியெறிந்து விட்டு, மேற்குலகின் முதல் சோஷலிச அரசை அமைத்தனர் (1959).

பின்னர் சோவியத் யூனியனுடன் நெருங்கிய உறவு கொண்ட காஸ்ட்ரோ, அமெரிக்காவுக்கு சிம்ம சொப்பனமானார். பல முறை காஸ்ட்ரோவைக் கொல்லவும், அவரது ஆட்சியைக் கவிழ்க்கவும் செய்யப்பட்ட முயற்சிகளை முறியடித்து கியூபாவின் ஆட்சித் தலைவராக உள்ளார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவிற்கு பக்கத்தில் இருந்தே அதை நோக்கி விரலை நீட்டக்கூடிய தலைவன்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.