Jump to content

யூரோ தாக்குப்பிடிக்குமா?


Recommended Posts

கிரேக்கத்தில் மாபெரும் ஆர்பாட்டப் பேரணி

கிரேக்க அரசு அறிவித்துள்ள மீதம் பிடிக்கும் கொள்கைகளை எதிர்த்து இன்று புதன் அதிகாலை மாபெரும் ஆர்பாட்டங்கள் வெடித்துள்ளன.

கிரேக்கத்தின் தொழிற் சங்கங்கள் ஒன்றிணைந்து இந்த ஆர்பாட்டங்களை முன்னெடுத்துள்ளன. கிரேக்கப் பிரதமர் இத்தகைய ஆர்பாட்டங்களும், அரசின் மீதம் பிடித்தல் கொள்கைகளுக்கு எதிரான போக்குகளும் இனி தேவையில்லை என்று அழுத்தம் திருத்தமாக தெரிவித்துள்ளார். கிரேக்கம் என்ற நாடு இன்னொரு நாட்டுடன் போர் புரிவதைப் போலவே இப்போது வங்குரோத்து அடைந்துள்ள பொருளதாரத்துடன் போரிட வேண்டிய அபாயத்தில் இருக்கிறது.

எத்தகைய நியாயங்களுக்கும் அப்பால் இந்தப் பொருளதார போரை வெல்ல கண்முன் தெரியும் ஒரேயொரு வழி மீதம் பிடித்தல்தான். ஆகவே பொதுத்துறையில் மீதம் பிடித்து, பலரை வேலையில் இருந்து நீக்கி வீண் செலவுகளை மட்டுப்படுத்தி, ஐரோப்பிய ஒன்றியத்தின் உதவியை பெற வேண்டும் என்ற தமது அரசின் கொள்கையில் யாதொரு மாற்றமும் இல்லை என்றார். ஆகவே ஆர்பாட்ட ஊர்வலங்கள் அவசியமற்றது என்றுள்ளார். நேற்றுவரை அவர் எடுத்த முயற்சிகள் எல்லாமே தோல்வியடைந்து தொழிற்சங்கங்கள் இன்று ஆர்பாட்டத்தில் குதித்துள்ளன.

ஐரோப்பிய ஒன்றிய நிதியத்தில் 99 வீதம் மக்களை சென்றடைய வேண்டுமென இப்போது போராட்டம் பல நாடுகளில் நடைபெற்று வருவது தெரிந்ததே. எத்தகைய போராட்டங்கள் நடந்தாலும், சுண்டங்காய் காற்பணம் சுமைகூலி முக்கால் பணம் என்ற ஐரோப்பிய ஒன்றியத்தின் நிபந்தனைகளை ஏற்றால் மட்டுமே கிரேக்கத்திற்கு உதவி கிடைக்கும் என்பதுதான் நிதர்சனமாக உள்ளது.

http://www.alaikal.com/news/?p=85530

Link to comment
Share on other sites

  • Replies 117
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

சுவீஸ் பாங்கிலை 200கோடி யூரோவுக்கு மேலை கிறீஸ்நாட்டுக்காரன்ரை காசு பத்திரமாய்க்கிடக்குதாம்.

Link to comment
Share on other sites

வாங்குகிறார்கள் சரி?

திருப்பித்தருவார்களா?

இல்லை என்றால் என்னசெய்வது?

- புதிய காலநிதித்துவம் ( Neo colonialism)

- அறவிட முடியாக்கடன்

Link to comment
Share on other sites

ஐரோப்பிய ஒன்றிய அடிப்படைச் சட்டங்களில் மாற்றம் வேண்டும்

ஐரோப்பாவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிடையே பிளவுபட்ட போக்கு காணப்படுகிறது. யூரோ நாணயத்தை தமது நாட்டு நாணயமாக ஏற்றுக்கொண்ட 17 நாடுகள் ஒரு புறமாகவும், யூரோ நாணயத்தை பாவனையில் வைத்திராத 10 நாடுகள்; வேறொரு பிரிவாகவும் நிற்கும் நிpலை ஏற்பட்டுள்ளது.

தற்போதைய பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கான கொள்கைகளை ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு பொதுவானதாக அறிவித்த ஐரோப்பிய ஒன்றியம், நிதி ஒதுக்கீட்டில் மட்டும் யூரோ சோன் என்ற கொள்கையை கடைப்பிடிக்கிறது. யூரோ நாணயத்தை பாவிக்கும் நாடுகளுக்கான மீட்புத் திட்டங்களை ஜேர்மனிய சான்சிலர் அஞ்சலா மேர்க்கலும், பிரான்சிய அதிபர் ஸார்கோஸியும் பின்கதவு வழியாக பேசி முடிவு செய்கிறார்கள் என்றும் குற்றச்சாட்டு உருவாகியுள்ளது. ஆகவேதான் திறந்த வெளி உரையாடல்களும், ஜனநாயகத் தன்மை கொண்டதாகவும் ஐரோப்பிய ஒன்றியத்தை மாற்றியமைக்க வேண்டும் என்று அதன் தற்போதைய தலைவர் ஜெர்சி புசெக் கேட்டுள்ளார்.

கடந்த ஞாயிறு ஐரோப்பிய ஒன்றிய அங்கத்துவ நாடுகளுக்கிடையே ஏற்பட்ட கருத்து மோதல் பெரும் கொதி நிலையை எட்டியுள்ளது. இதனால் திங்கள், செவ்வாய் இரண்டு தினங்கள் இடைவெளி விடுத்து மறுபடியும் பேச்சுக்கள் ஆரம்பமாகவுள்ளன. இதில் சமரசமான தீர்வு எட்டப்படுமென நம்பிக்கை தெரிவிக்கப்படுகிறது.

மேலும் சென்ற வாரம் ஐரோப்பா வந்து சென்றுள்ள சீன வெளிநாட்டு அமைச்சர் ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களுக்கு சிறிய நம்பிக்கையை வழங்கிச் சென்றுள்ளார். சீனா அமெரிக்காவுடன் மட்டும் பாரிய வர்த்தகத்தை தொடர விரும்பவில்லை, ஐரோப்பிய ஒன்றியத்துடனும் அதை தொடர விரும்புவதாக ஜாடை காட்டியுள்ளார். அமெரிக்காவை மட்டும் நம்பியிருக்காமல் சீனா தனது கால்களை உலகம் முழுவதும் பரவலாக பதித்து வருவது கவனிக்கத்தக்கது. அந்தவகையில் ஓர் ஆறுதல் பெருமூச்சை ஐரோப்பா விட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றிய மத்திய வங்கி 100 பில்லியன் யூரோ பற்றாக்குறையில் தள்ளாடிக் கொண்டிருக்கிறது. இந்த இடைவெளிக்கு சீன வர்த்தகம் பதில் சொல்லுமா என்ற நப்பாசை ஐரோப்பாவில் தொனிக்கிறது. ஆனால் பிளவுபட்டுக்கிடக்கும் ஐரோப்பிய ஒன்றியம் வரும் புதன் தனக்குள் ஓர் ஒற்றுமையை நிலைநாட்டாவிட்டால் பல நன்மைகளை இழக்க நேரிடும்.

http://www.alaikal.com/news/?p=86048

Link to comment
Share on other sites

உலகம் இன்று ஐரோப்பிய ஒன்றியத்தை உற்று நோக்குகிறது

இன்று ஐரோப்பிய ஒன்றியத்தின் 17 யூரோசோன் தலைவர்களும் நடாத்தும் மாநாடு ஐரோப்பிய நாடுகளால் நடுக்கத்துடன் அவதானிக்கப்பட்டு வருகிறது. இன்று மாலை எத்தகைய முடிவுகளை எட்டித் தொடப்போகிறார்கள் என்பதும் பாரிய எதிர் பார்ப்பாக உள்ளது. ஐரோப்பாவில் ஏற்பட்டுள்ள பொருளாதார இடைவெளியை நிரப்ப தீட்டப்படும் திட்டங்களிலேயே பல நாடுகளின் எதிர் காலமே தங்கியுள்ளது. இன்று நடைபெறும் கூட்டத்தொடரில் பின்வரும் ஐந்து விடயங்களுக்கு தீர்வு காணப்பட வேண்டும்.

01. ஐரோப்பிய பொருளாதாரம் தொடர்ந்து இலாபகரமாக முன்னேறுவதற்கான வழிவகைகளை முன் வைக்க வேண்டும். கடும் பொருளாதார நெருக்கடியில் மாட்டுப்பட்டுவிட்ட இத்தாலி ஐரோப்பாவை பாதிக்காத தீர்வுக்கு உடன்பட வேண்டும். இத்தாலியின் பாதிப்பு ஐரோப்பாவின் பொருளாதாரத்தை மூழ்கடித்துவிடக்கூடாது. ஆகவே காத்திரமான புதிய திட்டங்களை முன் வைக்க வேண்டும்.

02. கிரேக்கத்தின் பொருளாதார நெருக்கடி தீர்க்கப்பட வேண்டும். அந்த நாட்டின் அடிப்படைச் சொத்துக்களின் பெறுமதி 40 முதல் 60 வீதம் குறைக்கப்பட வேண்டும். இல்லையேல் அந்த நாட்டை மீட்க முடியாது.

03. புதிதாக வழங்கப்படவுள்ள ஐரோப்பிய ஒன்றிய கடன் நிதியத்தை பயன்படுத்துவதற்கான இரண்டு வடிவங்கள் முன் வைக்கப்படுகின்றன. இந்த நிதியை காப்பது ஒரு மொடல், இதை பயன்படுத்தி முன்னேறுவது இன்னொரு மொடலாக இருக்கும். இதில் சரியான உடன்பாடு காணப்பட வேண்டும். இதற்குள் இரகசியமான மோசடிகள் உள்ளன.

04. ஐரோப்பிய வங்கிகளை மீட்டெடுத்து செயற்பட வைக்க வேண்டும். இதை மீட்க 108 பில்லியன் யூரோ வேண்டும்.

05. யூரோ நாணயத்தை வைத்திருக்கும் நாடுகளின் தலைமை பலமாக உள்ளது. யூரோ நாணயத்தை வைத்திராத நாடுகள் பின்தள்ளப்படுகின்றன. இதனால் ஐரோப்பிய ஒன்றியத்தில்

பெரிய வெடிப்பு ஏற்பட்டுள்ளது. இதை சீர் செய்ய வேண்டும்.

இந்த ஐந்து விடயங்களுக்கும் ஐரோப்பிய ஒன்றியம் தீர்வை எட்டித் தொட வேண்டும். இது முடிகிற காரியமா.. அதிகமாக மேலும் பல கூட்டங்கள் நடாத்தப்பட வேண்டிய நிலையே வரும். இன்று மாலை முழுமையான தீர்வையும் காண்பது கடினமாகவே இருக்கும். ஆயினும் இன்றைய ஐரோப்பாவின் கொதிநிலை செய்தி இதுதான்.

http://www.alaikal.com/news/?p=86193

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடர்ந்து சுமப்பது என்று முடிவு எடுத்துவிட்டார்கள்போல்த்தான் உள்ளது. நல்லது நடக்கும் என்று எதிர்பார்ப்போம்.

Link to comment
Share on other sites

நடந்துகொண்டிருக்கும் மாநாடு சிக்கலில் இன்று உள்ளது.

வங்கிகளை அவர்கள் அரசுகளுக்கு கொடுத்த மீள பெற முடியாத கடனில் ஐம்பது வீதத்தை பெற சம்மதிக்க அரசுகள் கேட்டன. இதை வங்கிகள் ஏற்க மறுத்து வருகின்றன.

அதேவேளை வங்கிகள் பலவீனமான நிலையில் உள்ளன. அவற்றை பலமடைய செய்ய 1 த்ரிலியன்கள் யூரோ அளவில் மேலதிகமாக பெற உள்ளன.

அதேவேளை விரைவில் ஒரு நல்ல முடிவை அடையாவிட்டால் நாடுகள், கிரேக்கம் தொடங்கி, பாரிய சிக்கலுக்குள் உள்ளாகிவிடும். இதை தடுக்க அமெரிக்கா முதல் சகல நாடுகளும் வற்புறுத்தி வருகின்றன.

http://ca.reuters.com/article/topNews/idCATRE79I0IC20111026

Link to comment
Share on other sites

ஐரோப்பிய பொருளாதார நெருக்கடி முதல்கட்டம் முடிந்தது

நேற்று புறுக்சல்ஸ் நகரில் கூடிய 27 ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளும் இன்று அதிகாலை நாலு மணிக்கு தமது முரண்பாடுகளை முடிவுக்குக் கொண்டு வந்தனர். தற்போதைய பொருளதார நெருக்கடிகளுக்கான முதல்கட்டத் தீர்வை சமர்ப்பித்துள்ளனர். இவர்கள் எடுத்த முடிவை உலக நாடுகள் பாராட்டியுள்ளன. உலக வங்கித்தலைவர் றோபேட் சீயோலிஸ் சற்று முன்னர் வெளியிட்ட அறிக்கையில் ஐரோப்பிய ஒன்றியம் நீண்ட காலத்திற்குப் பின்னர் இப்போதுதான் சரியான தடத்தில் கால் பதித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஐரோப்பாவில் நிலவும் பற்றாக்குறை பிரச்சனையை தீர்ப்பதற்குரிய வல்லமை ஐரோப்பாவிடம் இருக்கிறது அதை வெளிக்காட்ட தயங்கக்கூடாது என்று அமெரிக்கா கேட்டுள்ளது. இப்போது எடுக்கப்பட்டுள்ள முடிவு முழுமையானது அல்ல என்றாலும் அதில் இரண்டு முக்கிய விடயங்கள் இருக்கின்றன.

முதலாவது கிரேக்கத்திற்கு வழங்கவிருந்த உதவி நிதி குறைக்கப்பட்டுள்ளது. அதன் தேசிய உற்பத்தியில் 160 வீதம் உதவி வழங்க முன்வந்த ஐரோப்பிய ஒன்றியம் அதை 120 வீதமாக இறக்கியுள்ளது. இது கிரேக்கர்களுக்கு விழுந்துள்ள பாரிய இடியாகும்.

அதுபோல வங்கிகள் தங்களுடைய மொத்த நிதியம் முழுவதையும் முதலிட்டுவிட்டு முறிவடைந்துவிட்டது என்று கீலா கூத்தாட முடியாது. கண்டிப்பாக மைய நிதியின் ஒன்பது வீதத்தை இருப்பில் வைத்திருக்க வேண்டும். மேலும் வங்கிகளின் சொத்து பெறுமதியும் 40 – 60 வீதம் குறைக்கப்படுகிறது. இதன்படி பார்த்தால் கிடைக்கும் உதவியுடன் முன்னேறவும், ஐரோப்பிய வர்த்தகத்தை மேம்படுத்தவும் முடியும்.

மறுபுறம் வங்குரோத்து அடைந்துவிட்டோமென கூற முடியாது. வங்குரோத்து என்ற சொல்லே வர முடியாதளவுக்கு கையிருப்பை எல்லா நாடுகளும் வைத்திருக்க வேண்டும். இந்தத் திட்டங்கள் ஜேர்மனிய சான்சிலர் அஞ்சலா மேர்க்கலும், பிரான்சிய அதிபர் ஸார்கோஸியும் எடுத்த திரை மறைவு முயற்சிகளை உடைத்து பொதுவான உலக முன்னேற்றத்திற்கு வழி வகுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பேச்சுக்கள் மேலும் தொடர்கின்றன. இதுவரை ஜேர்மன், பிரான்சின் நாடுகளின் தப்பான வழிநடாத்தலில் தள்ளாடிய ஐரோப்பிய பொருளாதாரம் முதன் முதலாக தனது தலையை சரியான பக்கத்தில் வைத்துள்ளது. இன்றைய முடிவு பாராட்டப்பட வேண்டிய முடிவென டேனிஸ் பொருளியல் நிபுணர் ஜெஸ்பா ராங்வில் கோப்பன்கேகன் பல்கலைக்கழகத்திலிருந்து தெரிவித்துள்ளார்.

http://www.alaikal.com/news/?p=86251

Link to comment
Share on other sites

கிரேக்க நாட்டை ஐரோப்பிய ஒன்றியத்துக்குள் இணைத்தமை ஒரு தவறு - பிரான்ஸ் சனாதிபதி சர்கோசி

"Let's be clear; it was a mistake," Sarkozy told French television. "Greece came into the Euro with numbers that were false and its economy was not prepared to assume an integration into the Eurozone. It was a decision that was taken in, I believe, 2001, for which we now are paying the consequence."

http://money.cnn.com/2011/10/27/news/international/europe_crisis_reaction/index.htm

Link to comment
Share on other sites

யூறோ வலய நாடுகளுக்கு உதவும் நிதியத்தில் முதலிடுமாறு சீனாவிடம் கோரப்பட்டுள்ளது.

கடன்நெருக்கடியை எதிர்கொள்ளும் யூறோ வலய நாடுகளுக்கு உதவும் முகமாக உருவாக்கப்பட்டுள்ள நிதியத்தின் தலைவர், அந்த நிதியத்தில் முதலிடுமாறு சீனாவைக் கேட்டுள்ளார்.

சீனத் தலைவர்களுடன் சந்திப்பொன்றை நடத்திய குளோஸ் றெக்லிங்இ சீனாவுடன் முறைப்படியான பேச்சுக்கள் இடம்பெறவில்லையெனவும், ஒப்பந்தம் எதுவும செய்து கொள்ளப்படாதெனவும் கூறினார்.

சீனா, 100 பில்லியன் டொலர் அளவான பணத்தை அந்த நிதியத்தில் முதலிடுமென எதிர்பார்ப்பு நிலவுகிறது. தமது முதலீடுகளின் பாதுகாப்புக் குறித்துப் பலமான உறுதிமொழிகள் தரப்படவேண்டுமென சீனா கேட்டுள்ளது.

http://thamilfm.com/thamilfm/NewClients/NewsDetail.aspx?ID=9776

Link to comment
Share on other sites

கிறேக்கம் குறித்த கவலை காரணமாக, அனைத்துலக பங்குச் சந்தைகளில் வீழ்ச்சி ஏற்பட்டது.

ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் கிறேக்கத்திற்கு வழங்க முன்வந்துள்ள கடன் தொடர்பாக சர்வசன வாக்கெடுப்பு ஒன்றை நடத்தவுள்ளதாக கிறேக்க பிரதம மந்திரி ஜோர்ஜ் பாபன்றோ அறிவித்ததைத் தொடர்ந்து, ஐரோப்பிய பங்குச் சந்தைகளில் இன்று பாரிய வீழ்ச்சி ஏற்பட்டது.

பங்கு வர்த்தகம் ஆரம்பமாகியபோது ஃபிறாங்ஃபேர்ட் பங்குச் சந்தை, 3.5 சதவீதமும், பாரிஸ் பங்குச் சந்தை 3.4 சதவீதமும், லண்டன் பங்குச் சந்தை 2.2 சதவீதமும் வீழ்ச்சியடைந்தன.

கிறேக்க அரசு கடன்களைத் திருப்பி செலுத்தாவிட்டால் அதிகம் பாதிக்கப்படவுள்ள பிறான்ஸ் நாட்டு வங்கிகளின் பங்குகள் பத்துச் சதவீதம் வரை குறைவடைந்தன.

கிறேக்க மக்களில் பெரும்பாலானவர்கள், அரசின் சிக்கன நடவடிக்கைகளை எதிர்க்கிறார்கள். அப்படியான நிலையில் சர்வசன வாக்கெடுப்பை நடத்த்தினால், ஐரோப்பிய ஒன்றியம் கடந்த வாரம் இணங்கிய மீட்பு நிதித் திட்டம் செயல் இழக்கும் ஆபத்துள்ளதென்ற அச்சம் நிலவுகிறது. எதிர்வரும் ஜனவரி மாதத்திற்கு முன்பு, சர்வசன வாக்கெடுப்பு நடைபெறாதென்று எதிர்பார்க்கப்படுவதால், அதுவரையான காலகட்டத்தில் பங்குச் சந்தைகளில் தளம்பல் நிலை காணப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.

http://www.cmr.fm/thamilfm/NewClients/NewsDetail.aspx?ID=9822

Link to comment
Share on other sites

கிரேக்கத்தில் சர்வஜன வாக்கெடுப்பு ஆபத்தான முடிவு

ஐரோப்பிய ஒன்றியத்தால் கிரேக்கத்திற்கு பல்வேறு நிபந்தனைகளுடன் வழங்கப்படவுள்ள 130 பில்லியன் யூரோவையும் வாங்குவது தொடர்பாக பாராளுமன்ற ஆதரவை பெறமுடியாது போயுள்ளது. இந்த நிலையில் இப்பணத்தை பெறுவதா இல்லையா என்பதை அறிவதற்கான சர்வஜன வாக்கெடுப்பு நடைபெறும் என்று கிரேக்க பிரதமர் George Papandreou அறிவித்துள்ளார்.

ஆனால் இவருடைய முடிவு மிகவும் ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தக் கூடியது என்று அங்கிருக்கும் டேனிஸ் தூதுவர் தகவல் தருகிறார். ஒரு வேளை சர்வஜன வாக்கெடுப்பு தோல்வியடைந்தால் கிரேக்கத்தின் பிரதமர் தனது அரசு நம்பிக்கை இழந்துவிட்டதாக கருதி பதவி விலக நேரிடும், மேலும் புதிய தேர்தல் ஒன்றை அறிவிக்க வேண்டியும்வரும். புதிய தேர்தல் வந்தால் இப்போதுள்ள நிலையில் நாட்டைக் காப்பது பாரிய சிக்கலாகிவிடும்.

ஆனால் கிரேக்கத்திற்கு வழங்கும் நிதி தொடர்பான இறுதி முடிவு வரும் வியாழன் ஐரோப்பிய பாராளுமன்றில் இறுதி வாக்கெடுப்பிற்கு வருகிறது. கடுமையான நிபந்தனைகளுடன் இந்த நிதியை பெற வேண்டியிருப்பதால் கிரேக்கத்தில் பாரிய ஆர்பாட்டங்கள் நடக்கின்றன. பாராளுமன்றத்தில் கட்சிகளிடையே பாரிய குழப்ப நிலை நிலவுகிறது. இந்த நிலையில் பிரச்சனை அரசியல் கட்சிகள் மட்டத்தில் தீர்க்கப்பட முடியாது பொது மக்கள் மன்றுக்கு இறங்கியுள்ளது. கிரேக்கத்தின் வாக்கெடுப்பு இச்சிக்கலை அடுத்த கட்டத்திற்குள் திசைமாற்றும் ஆபத்தும் கொண்டதாகும்.

http://www.alaikal.com/news/?p=86709

Link to comment
Share on other sites

கிறேக்கத்தில் நடைபெறவுள்ள சர்வசன வாக்கெடுப்பு, அந்நாடு யுறோ வலய நாடுகளில் ஒன்றாக இருக்கவேண்டுமா என்பது குறித்த முடிவை எடுக்குமென எதிர்பார்ப்பு

ஐரோப்பிய நாடுகளிடம் இருந்து கடனைப் பெறுவது குறித்து கிறேக்கத்தில் சர்வசன வாக்கெடுப்பொன்றை நடத்தும் அந்நாட்டுப் பிரதம மந்திரி ஜோர்ஜ் பாபன்றெயோவின் முடிவுக்கு, அவரது நிதியமைச்சர் எதிர்ப்பு வெளியிட்டார்.

பிறான்சின் கான் நகரில், இன்று ஜேர்மனியின் சான்சலர் அங்கெலா மேர்கல், பிறான்ஸ் ஜனாதிபதி நிக்கொலா சார்கோசி ஆகியோருடன் பேச்சு நடத்திய பின்னர், யுறோ வலயத்தில் கிறேக்கம் தொடர்வது குறித்து சர்வசன வாக்கெடுப்பு நடத்தப்படக்கூடாதென கிறேக்க நிதியமைச்சர் இவான்ஜெலோஸ் வெனிசேலோஸ் குறிப்பிட்டார்.

கிறேக்கத்திற்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் வழங்க முன்வந்த கடன் உடனடியாக வழங்கப்படவேண்டுமென அவர் கோரிக்கை விடுத்தார்.

கிறேக்கத்தில் நடைபெறவுள்ள சர்வசன வாக்கெடுப்பு, அந்நாடு யுறோ வலய நாடுகளில் ஒன்றாக இருக்கவேண்டுமா என்பது குறித்த முடிவை எடுக்குமென கிறேக்கத் தலைவர்களும், ஐரோப்பிய தலைவர்களும் குறிப்பிட்டுள்ளார்கள்.

அந்த முடிவு எடுக்கப்படும்வரை கிறேக்கத்திற்கு வழங்கத் திட்டமிடப்பட்ட கடன்கள் வழங்கப்படாதென ஐரோப்பிய தலைவர்கள் கூறினார்கள்.

கான் நகரில் நடைபெறும் ஜீ – 20 நாடுகளின் உச்சி மகாநாட்டில், கிறேக்க நெருக்கடி இன்று பிரதானமான இடத்தை வகிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

http://www.cmr.fm/thamilfm/NewClients/NewsDetail.aspx?ID=9850

கிரேக்க நாடு ஐரோப்பிய யூனியனை விட்டு விலகுமா?

Greek PM on brink as world tells Europe to fix crisis

Greece's government was on the brink of collapse on Thursday, casting doubt on plans for a referendum on staying in the euro, as European leaders talked for the first time of a possible Greek exit to preserve the single currency.

Beleaguered Prime Minister George Papandreou chaired an emergency cabinet meeting in Athens, with his finance minister and some Socialist lawmakers in revolt, after France and Germany gave Greeks an ultimatum to make up their minds.

http://ca.reuters.com/article/topNews/idCATRE7A20E920111103

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிரேக்க நாடு நல்லநாடு.....மக்கள்தான் சரியில்லை.

Link to comment
Share on other sites

கிறேக்கத்தில் நடைபெறவுள்ள சர்வசன வாக்கெடுப்பு, அந்நாடு யுறோ வலய நாடுகளில் ஒன்றாக இருக்கவேண்டுமா என்பது குறித்த முடிவை எடுக்குமென கிறேக்கத் தலைவர்களும், ஐரோப்பிய தலைவர்களும் குறிப்பிட்டுள்ளார்கள்.

அந்த முடிவு எடுக்கப்படும்வரை கிறேக்கத்திற்கு வழங்கத் திட்டமிடப்பட்ட கடன்கள் வழங்கப்படாதென ஐரோப்பிய தலைவர்கள் கூறினார்கள்.

கிறேக்கத்தில் நடைபெறவுள்ள சர்வசன வாக்கெடுப்பு இரத்துச்செய்யப்பட்டுள்ளது.

Greek PM scraps referendum on Greek debt plan

Greece's prime minister abandoned his explosive plan to put a European rescue deal to popular vote and opened emergency talks Thursday with his opponents, who reversed themselves and agreed to broad austerity measures in exchange for a European bailout.

http://finance.yahoo.com/news/Greek-PM-scraps-referendum-on-apf-1455838074.html?x=0&sec=topStories&pos=main&asset=&ccode=

Link to comment
Share on other sites

கிரேக்கம் ஐரோப்பிய யூனியனுக்கு : நீங்கள் தர சம்மதித்த நிதி உதவிகளையும் அது சம்பந்தமான வரி அதிகரிப்புக்களையும் நாட்டில் சர்வசன வாக்கெடுப்புக்கு விரும்புகிறோம்.

ஐரோப்பிய யூனியன் கிரேக்கத்திற்கு: அப்படியானால் அதில் கிரேக்க நாடு ஐரோப்பிய யூனியனை விட்டு செல்வதை விரும்புகிறீர்களா? என்ற கேள்வியையும் போடுங்கள்.

கிரேக்கம் ஐரோப்பிய யூனியனுக்கு : நாங்கள் சர்வசன வாக்கெடுப்பை கைவிடுகிறோம்.

ஐரோப்பிய யூனியன் கிரேக்கத்திற்கு: நல்லது. நாங்கள் தந்த உதவியை அப்படியானால் ஏற்று சம்மதியுங்கள்.

கிரேக்கம் ஐரோப்பிய யூனியனுக்கு : எதிர்க்கட்சியும் இணைந்தால் மட்டுமே சம்மப்திப்போம்.

G20 நாடுகளின் கூட்டத்தை நடாத்தும் பிரான்சு தலைவர் : 17 ஆம் நூற்றாண்டின் மாதிரி இரத்த ஆறு ஐரோப்பாவில் ஓடலாம் :wub:

வழமையாக எல்லாவற்றையும் எழுதிய தாளில் கையொப்பம் இடும் தலைவர்கள் இம்முறை தலையை பிய்த்தபடி உள்ளனர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

G20 நாடுகளின் கூட்டத்தை நடாத்தும் பிரான்சு தலைவர் : 17 ஆம் நூற்றாண்டின் மாதிரி இரத்த ஆறு ஐரோப்பாவில் ஓடலாம் :wub:

அப்படி இரத்த ஆறு ஓடினால்?????நாங்கள் எங்கை ஓடலாம்? இதை நான் கேக்கேல்லையப்பா?????எனக்கு தெரிஞ்சவங்கள் கேக்கிறாங்கள் :D கந்தப்பு,புத்தன்,நுணாவில்,ஈழப்பிரியன்,மாப்பு,நிழலி,இ.கலைஞன் எண்டு.....எல்லாரையும் சுகம் கேட்டதாய் சொல்லச்சொன்னவங்கள் :wub: :wub:

Link to comment
Share on other sites

அப்படி இரத்த ஆறு ஓடினால்?????நாங்கள் எங்கை ஓடலாம்? இதை நான் கேக்கேல்லையப்பா?????எனக்கு தெரிஞ்சவங்கள் கேக்கிறாங்கள் :D கந்தப்பு,புத்தன்,நுணாவில்,ஈழப்பிரியன்,மாப்பு,நிழலி,இ.கலைஞன் எண்டு.....எல்லாரையும் சுகம் கேட்டதாய் சொல்லச்சொன்னவங்கள் :wub: :wub:

கிரேக்க நாட்டை கைவிட்டால் - இன்னும் பல புதிய பிரச்சனைகள் உருவாகும். கைவிடாவிட்டலும் - பிரச்சனை உள்ளது, குறிப்பாக இத்தாலி. உலகம் முழுவதும் பாரிய தாக்கம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. பல கலகங்கள் நிச்சயம் வரும்.

எங்கு ஓடினாலும், ஓட ஓட துரத்தும். :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாசமறுப்பு....பேசாமல் ஊருக்கு போய் இரண்டு நாம்பன் மாட்டை வாங்கி வயல் உழுது,தரைகொத்தி...அஞ்சாறுமிளகாய் கண்டையும்வைச்சு....பாவல்...புடலங்காய்..கீரைப்பாத்தியெண்டு வைச்சு சுகமாய் சீவிக்கலாம் போலைகிடக்கு....எண்டாலும் சிங்களவனை நம்பி அங்கை கால்வைக்கேலாது. ^_^

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிரேக்க நாட்டை கைவிட்டால் - இன்னும் பல புதிய பிரச்சனைகள் உருவாகும். கைவிடாவிட்டலும் - பிரச்சனை உள்ளது, குறிப்பாக இத்தாலி. உலகம் முழுவதும் பாரிய தாக்கம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. பல கலகங்கள் நிச்சயம் வரும்.

எங்கு ஓடினாலும், ஓட ஓட துரத்தும். :rolleyes:

இந்த... ஐரோப்பிய யூனியனை கண்டு பிடிச்சவன் அம்பிட்டால்...

அவனுக்கு, என்ரை கையாலை தான் சாவு. :lol:

Link to comment
Share on other sites

இதைத்தான் சொல்வது சேரக் கூடாத கூட்டத்தோடு சேர வேண்டாம் என்று. இப்ப சேர்ந்திருந்தாலும் பிரச்சனை. பிரிந்து வந்தாலும் பிரச்சனை. ஆப்பிழுத்த குரங்கின் நிலை.

பிணை எடுப்பதற்கு பிரித்தானியா 29 பில்லியன் பவுண்ஸ்கள் மட்டில் கொடுக்க வேண்டுமாம்.

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருக்கும் வறுமையான நாடுகள், ஜேர்மனி, பிரான்ஸ், பிரித்தானிய போன்ற ஓரளவு வசதியான நாடுகளையும் வங்குரோத்து நிலைக்கு தள்ளி விடப் போகின்றன.

Link to comment
Share on other sites

தங்கத்தின் விலை மேலும் பல மடங்கு உயரும் சாத்தியங்கள் உள்ளன.

சீனா கூட பாரிய பாதிப்பை எதிர்நோக்கும். இதனால் அங்கு 10-12 வீதத்திற்கு மேலாக வளரும் பொருளாதாரம் 5-6 வீதமாக இறங்கக்கூடும்.

இது சீனாவில் மட்டுமல்லாது அதன் உதவிகளை நம்பி உள்ள நாடுகளில் எல்லாம், சிங்களம் உட்பட, பாதிப்பை ஏற்படுத்தும்.

Link to comment
Share on other sites

G20 நாடுகளின் மாநாட்டில் பணக்கார நாடுகள், எந்த உதவியையும் திணறும் ஐரோப்பிய யூனியனுக்கு தர மறுத்துவிட்டன. இதில் அமேரிக்கா, கனடா, சீனா மற்றும் இந்தியாவும் அடங்கும்.

G-20 rejects extra help for debt-strapped Europe

World leaders to Europe: Solve your own problems, then maybe IMF can help later

http://finance.yahoo.com/news/G20-rejects-extra-help-for-apf-1489512202.html?x=0&sec=topStories&pos=main&asset=&ccode=

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

G20 நாடுகளின் மாநாட்டில் பணக்கார நாடுகள், எந்த உதவியையும் திணறும் ஐரோப்பிய யூனியனுக்கு தர மறுத்துவிட்டன. இதில் அமேரிக்கா, கனடா, சீனா மற்றும் இந்தியாவும் அடங்கும்.

G-20 rejects extra help for debt-strapped Europe

World leaders to Europe: Solve your own problems, then maybe IMF can help later

http://finance.yahoo...in&asset==

:o :o :o

Link to comment
Share on other sites

உண்மையில் இந்தியாவையும் சீனாவையும் இந்த 'போட போட' மறையும் உதவிகள் அழைத்து மாட்டப்பார்த்தார்கள். ஆனால், சீனாவே அதிகம் பாதிக்கப்படும். இந்தியா ஓரளவுக்கு உள்ளூரில் பலமான போரிலாதரத்தை கொண்டது; சீனாவோ அமெரிக்க/ஐரோப்பிய நாடுகளுடனான வியாபரத்தை முழுக்க நம்பியுள்ளது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இவர்களும் அவ்வப்போது நித்திரையால் எழும்பி கனவு கண்டவர்கள் போல்  குரலெழுப்பி விட்டு மறுபடியும் உறங்கு நிலைக்கு போய் விடுவார்கள். சேர்வதேச விசாரணை இல்லையென்று அடித்துக்கூறிவிட்டார் மாத்தையா, இவர்கள் காதுக்கு இன்னும் எட்டவில்லையோ செய்தி அலறித்துடிக்கிறார்கள். தேர்தலுக்காக இவர்களை யாராவது இயக்குகிறார்களா எனும் சந்தேகமாய் இருக்கு.
    • LSG vs CSK: லக்னௌ விரித்த வலையில் விழுந்த சிஎஸ்கே - ஆட்டத்தை முடித்த 3 விக்கெட் கீப்பர்கள் பட மூலாதாரம்,SPORTZPICS 2 மணி நேரங்களுக்கு முன்னர் வலிமையான பேட்டிங் வரிசை, பந்துவீச்சு பலம் இருந்தும் லக்னௌவின் தொடக்க வரிசையை அசைக்கக்கூட சிஎஸ்கே அணியால் முடியவில்லை. அதேநேரம், சிஎஸ்கே பேட்டர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வியூகம் அமைத்து களத்தில் செட்டில் ஆகவிடாமல் லக்னெள அணி திட்டமிட்டுக் காலி செய்துள்ளது. சிஎஸ்கே அணியை கடினமாகப் போராடி லக்னெள அணி வீழ்த்தவில்லை. கனகச்சிதமான திட்டங்களை முன்கூட்டியே வகுத்து, எந்த பேட்டரை எப்படி வீழ்த்த வேண்டுமெனத் தீர்மானித்து தங்கள் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வெற்றி கண்டுள்ளது. ஆட்டத்தைப் பார்த்தபோது, லக்னெள அணியின் பந்துவீச்சு, ஃபீல்டிங், பேட்டிங்கில் இருந்த ஒழுக்கம், கட்டுக்கோப்பு அனைத்தும் சிஎஸ்கே அணியில் மிஸ்ஸிங். தொடக்க வரிசை பேட்டர்களைகூட வீழ்த்துவதற்கு சிரமப்பட்டது, அதன்பின்பும் நெருக்கடி கொடுக்க முடியாமல் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளது. லக்னெள அணியின் 3 விக்கெட் கீப்பர்களான கேப்டன் கே.எல்.ராகுல், குயின்டன் டீ காக், நிகோலஸ் பூரன் ஆகிய 3 பேரும் சேர்ந்து ஒட்டுமொத்த சிஎஸ்கே அணியின் ஆட்டத்தை முடித்துவிட்டனர். லக்னெளவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 34வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி.   பட மூலாதாரம்,SPORTZPICS முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்தது. 177 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய லக்னெள அணி 6 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், லக்னெள அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்வி என 8 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருக்கிறது. 8 புள்ளிகள் பெற்றாலும் நிகர ரன்ரேட்டில் 0.123 என்று குறைவாகவே இருக்கிறது. அடுத்தடுத்த போட்டிகளில் பெறும் வெற்றி நிகர ரன்ரேட்டை உயர்த்தும். அதேநேரம், சிஎஸ்கே அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்விகள் என 8 புள்ளிகளுடன் 3வது இடத்தில் நீடிக்கிறது. சிஎஸ்கே அணியின் நிகர ரன்ரேட் வலுவாக இருப்பதால், 0.529 எனத் தொடர்ந்து 3வது இடத்தைத் தக்க வைத்துள்ளது. லக்னெள அணியின் வெற்றிக்கு கேப்டன் கே.எல்.ராகுல்(82), டீகாக்(54) முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்து, இதுதவிர கேப்டனுக்குரிய பொறுப்புடன் கே.எல்.ராகுல் பேட் செய்து 82 ரன்கள் சேர்த்தது முக்கியக் காரணங்களில் ஒன்று. இரு பேட்டர்களும், சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் செட்டில் ஆவதை அனுமதிக்காமல் ஷாட்களை அடித்து அழுத்தம் கொடுத்து வந்தனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே எப்போதுமே நன்றாகப் பந்துவீசக் கூடியது. இதைத் தெரிந்து கொண்டு ராகுல், டீகாக் நடுப்பகுதி ஓவர்கள் யார் வீசினாலும் அந்த ஓவர்களை குறிவைத்து அடித்ததால், சிஎஸ்கேவின் அந்த உத்தியும் காலியானது. லக்னெள ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு சென்ற ராகுல், டீகாக் ஒரு கட்டத்தில் கவனக் குறைவால் விக்கெட்டை வீழ்த்தினர் என்றுதான் சொல்ல வேண்டும். சிஎஸ்கே பந்துவீச்சு சிறப்பாக இருந்தது எனக் கூறுவது சரியானதாக இருக்க முடியாது. குறிப்பிடப்பட வேண்டிய அம்சமாக, சிஎஸ்கே அணிக்காக லக்னெள அணி “ஹோம் ஓர்க்” செய்து முன்கூட்டியே திட்டமிட்டுக் களமிறங்கியது. அந்தத் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தியது வெற்றிக்கு முக்கியக் காரணம். ஏனென்றால், லக்னெள அணியின் சரியான திட்டமிடலால்தான், 90 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே அணி தடுமாறியது. கடைசி 4 ஓவர்களில் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகப் பந்துவீசியிருந்தால், சிஎஸ்கே அணி 120 ரன்களில் சுருண்டிருக்கும். மொயீன் அலியை ஹாட்ரிக் சிக்ஸ் அடிக்க அனுமதித்தது, தோனியின் கடைசி நேர கேமியோ ஆகியவை சிஎஸ்கே ஸ்கோரை உயர்த்தியது. ஒட்டுமொத்தத்தில் சிஎஸ்கேவுக்கு எதிராக லக்னெள அணி செயல்படுத்திய திட்டங்களை சிஎஸ்கே பேட்டர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.   பதிலடி கொடுத்த ராகுல்-டீகாக் பட மூலாதாரம்,SPORTZPICS இந்த ஐபிஎல் சீசனில் லக்னெள தொடக்க ஆட்டக்காரர்கள், டீ காக், கே.எல்.ராகுல் இருவரும் பவர்ப்ளே ஓவர்களை சரியாகப் பயன்படுத்தவில்லை, பவர்ப்ளே ஓவர்களுக்குள் ஆட்டமிழந்து விடுகிறார்கள், விரைவாக ரன்களை சேர்ப்பதில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. கடந்த 6 ஆட்டங்களில் பெரும்பாலும் நிகோலஸ் பூரனின் அதிரடியால்தான் பெரிய ஸ்கோர் கிடைத்தது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் விமர்சித்தனர். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் கே.எல்.ராகுல், டீகாக் இருவரும் அந்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 10.5 ஓவர்களில் இருவரால் லக்னெள அணி 100 ரன்களை தொட்டது. கே.எல்.ராகுல் அதிரடியாக பேட் செய்ய, டீகாக் வழக்கத்துக்கு மாறாக மிகவும் நிதானமாக தேவையான ஷாட்களை மட்டும் ஆடினார். ராகுல் ஷார்ட் பால் வீசப்பட்டால் நம்பிக்கையுடன் பிக்-அப் ஷாட்களை ஆடி சிஎஸ்கே பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். குறிப்பாக பதீராணா பலமுறை யார்கர் வீச முயன்றும் ராகுல் அவர் பந்துவீச்சை நொறுக்கினார். தீபக் சஹர் வீசிய 2வது ஓவரிலிருந்தே ராகுல் பவுண்டரிகளாக விளாசத் தொடங்கி, மிட்விக்கெட்டில் சிக்ஸரும் அடித்து சிஎஸ்கேவுக்கு அதிர்ச்சி அளித்தார். முஸ்தபிசுர் ரஹ்மான் பந்துவீச வந்தபோதும் அவரையும் ராகுல் விட்டு வைக்கவாமல் பவுண்டரிகளாக விளாசினார். பட மூலாதாரம்,SPORTZPICS பவர்ப்ளேவில் 5வது, 6வது ஓவரில் ராகுல், டீகாக் இருவரும் இணைந்து சிஸ்கர், பவுண்டர்களாக விளாசியதால் விக்கெட் இழப்பின்றி பவர்ப்ளேவில் லக்னெள 54 ரன்கள் சேர்த்தது. ஜடேஜா வீசிய 9வது ஓவரில் டீ காக் அடித்த ஷாட்டை ஷார்ட் தேர்டு திசையில் இருந்த பதீராணா எளிமையான கேட்சை பிடிக்கத் தவறவிட்டார். இந்த கேட்ச் தவறவிட்டதற்கான விலையை கடைசியில் சிஎஸ்கே கொடுக்க நேர்ந்ததது. ஜடேஜாவின் அடுத்த ஓவரில் டீகாக் பவுண்டரியும், ராகுல் பவுண்டரியும் விளாசி, ராகுல் 31 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். நிதானாமாக ஆடிய டீகாக் 41 பந்துகளில் அரைசதம் அடித்தார். இருவரையும் பிரிக்க முடியாமல் கேப்டன் கெய்க்வாட், தோனி இருவரும் பல பந்துவீச்சாளர்களை மாற்றிப் பயன்படுத்தியும் ஒன்றும் நடக்கவில்லை. முஸ்தபிசுர் வீசிய 15வது ஓவரின் கடைசிப் பந்தில் ஸ்லோ பவுன்ஸரை அடிக்க முற்பட்டு, டீகாக் தேவையின்றி தனது விக்கெட்டை இழந்தார். அடுத்ததாக, பதீராணா பந்துவீச்சில் ராகுல் அடித்த ஷாட்டில் பேக்வேர்ட் பாயின்ட் திசையில் ஜடேஜா அற்புதமான கேட்சை பிடித்தார். இரு விக்கெட்டுகள் விழுந்ததால் சிஎஸ்கே ஏதேனும் மாயம் செய்யும் என ரசிகர்கள் நினைத்தனர். ஆனால், நிகோலஸ் பூரன், ஸ்டாய்னிஷ் ஜோடி அதற்கு இடம் அளிக்கவில்லை. அதிலும் நிகோலஸ் பூரன் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகள் அடித்து சிஎஸ்கே திட்டத்தை உடைத்தெறிந்தார். பூரன் 22 ரன்களிலும், ஸ்டாய்னிஷ் 7 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.   கட்டுக்கோப்பான பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள அணியின் பந்துவீச்சு நேற்றைய ஆட்டத்தில் நேர்த்தியாகவும், கட்டுக்கோப்பாகவும் இருந்தது. யாஷ் தாக்கூர், மோசின்கான், ரவி பிஸ்னோய் 3 பேரும் கடைசி 4 ஓவர்களில்தான் ரன்களை வழங்கினர். மற்ற வகையில் தொடக்கத்தில் சிஎஸ்கே பேட்டர்களுக்கு கொடுத்த நெருக்கடியை விடாமல் பிடித்துச் சென்றனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே பேட்டர்கள் விஸ்வரூபம் எடுக்கலாம் என்பதைக் கருதி, குர்ணல் பாண்டியா, ரவி பிஸ்னோய், ஸ்டாய்னிஷ், மாட் ஹென்றி, என வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலவையாக பந்துவீசி பேட்டர்களை செட்டில் ஆகவிடாமல் தடுத்தனர். இந்த சீசனில் நடுப்பகுதி ஓவர்களில் சிறப்பாக பேட் செய்து வரும் ஷிவம் துபே விக்கெட்டை ஸ்டாய்னிஷ் எடுத்துக் கொடுத்தார். ரூ.8 கோடிக்கு வாங்கப்பட்ட உ.பி. வீரர் சமீர் ரிஸ்வியை பிஸ்னோய் பந்துவீச்சில் ராகுல் ஸ்டெம்பிங் செய்து வெளியேற்றி கட்டுக்கோப்பாகக் கொண்டு சென்றனர். இதனால் பவர்ப்ளே ஓவர்களில் சிஎஸ்கே அணி விக்கெட்டுகளை இழந்து 51 ரன்கள் சேர்த்த நிலையில், அடுத்த 10 ஓவர்களில் 62 ரன்கள் மட்டுமே சேர்த்தது. 7வது ஓவரிலிருந்து 13வது ஓவர் வரை சிஎஸ்கே அணி 36 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதில் ஒரு பவுண்டரிகூட அடிக்கவிடாமல் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகவும், நெருக்கடி தரும் விதத்திலும் பந்துவீசினர். நடுப்பகுதி 10 ஓவர்களில் 5 ஓவர்களை ரவி பிஸ்னோய், குர்ணல் பாண்டியா இருவரும் பந்துவீசி 29 ரன்கள் மட்டுமே கொடுத்தனர். அதிலும் செட்டில் ஆன பேட்டர் ரஹானே விக்கெட்டையும் குர்ணல் பாண்டியா வீழ்த்தினார்.   ஹோம் ஓர்க் செய்ததன் பலன் பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள பந்துவீச்சு குறித்து கேப்டன் ராகுல் கூறுகையில், “சிஎஸ்கே போன்ற வலிமையான அணியை எதிர்கொள்ள நாங்கள் திட்டமிட்டுக் களமிறங்கினோம். எங்கள் திட்டங்களைச் சிறிதுகூட தவறுசெய்யாமல் செயல்படுத்தினோம். எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாத வகையில் பந்துவீச வேண்டும் என முடிவு செய்தோம். அதற்கு ஏற்றார்போல் நடுப்பகுதியில் சுழற்பந்துவீச்சு, வேகப்பந்துவீச்சு என மாறி, மாறி பந்துவீசி, ஒரு பந்துவீச்சுக்கு பேட்டர் செட்டில் ஆகாமல் தடுத்தோம். எங்கள் திட்டங்களுக்குத் தக்க வகையில் ஆடுகளம் இருந்தது, சிஎஸ்கே பேட்டர்களும் அதற்கேற்ப எதிர்வினையாற்றியதால் எளிமையாக முடிந்தது. என்ன விதமான உத்திகளைக் கையாள்வது, பந்துவீசுவது, எவ்வாறு பேட் செய்வது, என்பதை முன்கூட்டியே ஆலோசித்து, ஹோம் ஓர்க் செய்துதான் களமிறங்கினோம். வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலந்து பயன்படுத்த வேண்டும், குறிப்பாக சிஎஸ்கேவின் எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாமல் பந்துவீச முடிவு செய்தோம். ஒவ்வொரு வீரரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். குறிப்பாக பந்துவீச்சாளர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். இல்லாவிட்டால், அணி ஒட்டுமொத்தமாக வீணாகியிருக்கும். திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தினோம், தீவிரமாகப் பயிற்சி எடுத்ததன் பலன் கிடைத்தது,” எனத் தெரிவி்த்தார்.   சிஎஸ்கே சறுக்கியது எங்கே? பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியின் மோசமான தொடக்க பேட்டர்கள், நடுப்பகுதி பேட்டர்களின் சொதப்பல், பல் இல்லாத பந்துவீச்சு, மோசமான ஃபீல்டிங் ஆகியவை தோல்விக்கான காரணங்கள். ரச்சின் ரவீந்திரா முதல் இரு போட்டிகளைத் தவிர வேறு எந்த ஆட்டத்திலும் ஜொலிக்கவில்லை. கான்வே இல்லாத வெற்றிடத்தை சிஎஸ்கே நன்கு உணர்கிறது. ரஹானே இதுவரை தொடக்க ஆட்டக்காரராக களமிறங்காத நிலையில் இப்போது வழங்கப்பட்டிருக்கும் பணியால் புதிய பந்தில் பேட் செய்ய முடியாமல் திணறுவது தெரிகிறது. புதிய பந்து நன்றாக ஸ்விங் ஆகும்போது, அதை டிபெண்ட் செய்து ஆடுவதற்கே ரஹானே முயல்கிறாரே தவிர, பவர்ப்ளேவுக்கு ஏற்றார்போல் அடித்து ஆட முடியவில்லை. ஆக சிஎஸ்கே அணியின் தொடக்க வரிசை சிக்கலில் இருக்கிறது. கேப்டன் கெய்க்வாட் நேற்றைய ஆட்டத்தில் ஆங்கர் ரோல் எடுக்காமல் 17 ரன்னில் யாஷ் தாக்கூர் பந்துவீச்சில் அவுட்ஸ்விங்கில் எட்ஜ் எடுத்து ஆட்டமிழந்தது பெரிய பின்னடைவு. பவர்ப்ளே ஓவர்களுக்குள் 51 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது, அடுத்த 31 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது என சிஎஸ்கே பேட்டர்கள் ஒட்டுமொத்தமாகத் தவறு செய்தனர். பட மூலாதாரம்,SPORTZPICS ஜடேஜா 4வது வீரராக களமிறக்கப்பட்டாலும், அவர் சிங்கில், 2 ரன்கள் எடுக்கத்தான் முக்கியத்துவம் அளித்தாரே தவிர, பவுண்டரி, சிக்ஸருக்கு பெரிதாக முயலவில்லை. டி20 போட்டிகளில் பவுண்டரி, சிக்ஸர்தான் அணியின் ஸ்கோரை பெரிதாக உயர்த்தும், ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு செல்லும். அதைச் செய்ய ஜடேஜா, மொயீன் அலி தவறிவிட்டனர். நடுப்பகுதி ஓவர்களில் மொயீன் ஜடேஜா களத்தில் இருந்தபோதிலும் 7வது ஓவரில் இருந்து 13வது ஓவர்கள் வரை ஒருபவுண்டரிகூட சிஎஸ்கே அடிக்காதது ரன்ரேட்டை கடுமையாக இறுக்கிப் பிடித்தது. ஜடேஜா ஆங்கர் ரோல் எடுத்து 34 பந்துகளில் அரைசதம் அடித்தாலும், அவரிடம் இருந்து தேவையான பவுண்டரிகள், சிக்ஸர்கள் அரிதாகவே வந்தன. மொயீன் அலி தொடக்கத்தில் நிதானமாக ஆடி கடைசி நேரத்தில் பிஸ்னோய் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்து 30 ரன்களில் ஆட்டமிழந்தார். சிஎஸ்கே அணியில் நேற்று ஜடேஜா, மொசின் அலி என இரு சுழற்பந்துவீச்சாளர்கள் இருந்தும் ஜடேஜாவுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. மொசின் அலி ஒரு ஓவர் வீசி 5 ரன்கள் என சிறப்பாகப் பந்துவீசியும் தொடர்ந்து வாய்ப்பு வழங்கவில்லை. ஆனால், சுமாராகப் பந்துவீசிய தேஷ்பாண்டே, முஸ்தபிசுர் இருவருக்கும் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டன. மொசின் அலிக்கு கூடுதலாக சில ஓவர்கள் வழங்கி இருக்கலாம்.   பல் இல்லாத பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியில் முஸ்தபிசுர் ரஹ்மானை தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் பேட்டர்களுக்கு நெருக்கடி தரும் அளவுக்கு அனைத்து ஆடுகளங்களிலும் துல்லியமாகப் பந்துவீசுவோர் அல்ல. பந்துவீச்சில் வேரியேஷன், ஸ்லோ பவுன்ஸர்கள், நக்குல் பால், ஷார்ட் பால், பவுன்ஸர் என வேரியேஷன்களை வெளிப்படுத்தி பேட்டர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் அளவுக்கு பந்துவீச்சு இல்லை என்பதுதான் நிதர்சனம். சிஎஸ்கே அணி தனது வெற்றியை பந்துவீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி நடுப்பகுதி ஓவர்களில்தான் எதிரணியிடம் இருந்து கபளீகரம் செய்கிறதே தவிர டெத் ஓவர்களிலோ அல்லது பவர்ப்ளே ஓவர்களிலோ அல்ல. அதிலும் மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் ரஹ்மான் சொந்த நாட்டுக்குத் திரும்புகிறார் என்பதால், சிஎஸ்கே பந்துவீச்சு இன்னும் பலவீனமாகும். கான்வே தொடரிலிருந்து முழுமையாக விலகிவிட்டது பேட்டிங்கில் சிஎஸ்கேவுக்கு பெரிய அடி. அவருக்குப் பதிலாக இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ரிச்சார்ட் கிளீசனை சிஎஸ்கே வாங்கியுள்ளது. மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் சென்றபின் அவருக்குப் பதிலாக பந்துவீச்சாளரை வாங்க முக்கியத்துவம் அளிக்குமா அல்லது பேட்டருக்கு முக்கியத்துவம அளிக்குமா என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது. பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கூறுகையில், “நாங்கள் பேட்டிங்கை நன்றாக ஃபினிஷ் செய்தோம். இன்னும் கூடுதலாக 15 முதல் 20 ரன்கள் சேர்த்திருக்க வேண்டும். பவர்ப்ளேவில் விக்கெட்டுகள் வீழ்த்த முடியாமல் இருக்கும் சிக்கலைத் தீர்க்க வேண்டும். அதற்கு விரைவாகத் தீர்வும் காண்போம். பவர்ப்ளேவில் விக்கெட் வீழ்த்தினால் நிச்சயமாக எதிரணி கவனமாக ஆடுவார்கள், ரன் சேர்ப்பும் குறையும். இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் சரியாக பேட்டிங் செய்ய முடியால் திணறியது, 15வது ஓவர் வரை சிரமம் நீடித்தது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தோம். இதுபோன்ற ஆடுகளங்களில், இரவு நேர பனிப்பொழிவு இருப்பதால், 190 ரன்களாவது சேர்ப்பது பாதுகாப்பானது,” எனத் தெரிவித்தார். தோனியின் 101 மீட்டர் சிக்ஸர் சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இந்த சீசன் முழுவதும் கலக்கி வருகிறார். லக்னௌ ரசிகர்களும் தோனியின் ஆட்டத்தைக் கண்டு ரசித்தனர். 9 பந்துகளைச் சந்தித்த தோனி 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 28 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதிலும் யாஷ் தாக்கூர் வீசிய கடைசி ஓவரில் லாங்-ஆன் திசையில் இமாலய சிக்ஸர் விளாசினார் இந்த சிக்ஸர் 101 மீட்டர் உயரம் சென்றது. இந்த ஐபிஎல் சீசனிலேயே அதிக உயரத்துக்கு அடிக்கப்பட்ட, மிகப்பெரிய சிக்ஸர் இதுதான். தோனியின் கடைசி நேர கேமியோவில் 28 ரன்கள், பிஸ்னோய் ஓவரில் மொயீன் அலி ஹாட்ரிக் சிக்ஸர் உள்பட 30 ரன்களும் இல்லாவிட்டால் சிஎஸ்கே ஸ்கோர் 125 ரன்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.bbc.com/tamil/articles/cx03y922278o
    • யார் அந்த ஸ்ரீதரன்? சோசல் காசுதரும் அதான் யுனிவேர்சல் கிரடிட் நான்கு பேரில் தரும் புரோக்கரோ?
    • ஆமாம் நானும் விரும்புகிறேன்   நடக்குமா??  நடக்காது ஓருபோதும்.  நடக்கப்போவதில்லை,....காரணம் தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை    சீமானை முதல்வர் ஆக்க தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை   6.23 கோடி வாக்குகளில். குறைந்தது 3.5 கோடி வாக்குகள். பெற்றால் தான்   முதல்வர் ஆக முடியும் அது தனி கட்சி அல்லது பல கட்சிகளின் கூட்டமைப்பு      தனியா போட்டி இடும் சீமான் 0.3 கோடி வாக்குகளைப் பெற்று எப்படி  முதல்வர் ஆகலாம்??   சீமான் தலைமையில் எந்தவொரு கட்சியும். கூட்டணி அமைக்காது   சீமான் தான்  மற்ற கட்சிகளின் தலைமையில் கூட்டணி அமைக்கலாம்   அப்படி அமையும் கூட்டணியில். சீமானுக்கு முதல்வர் பதவி கிடைக்காது  சீமான் வென்றால் தேர்தல் ஆணையம் நல்லது,....வாக்கு எண்ணும் மெசினும். நல்லது    சீமான் தோற்கும்போது இவை இரண்டுமே கூடாது      மேலும் என்னை சீமான் எதிர்ப்பாளர். என்று ஏன் முத்திரை குற்ற வேண்டும்  ...?? ஒருவர் வெல்லும் வாய்ப்புகள் இல்லை என்று கருத்து எழுதும் போது   அவரின் எதிர்ப்பாளர். என்பது சரியான கருத்தா?? இல்லையே?? 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.