Jump to content

''தாய் மனம் ''


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தாய் மனம் - வனிதா

"டேய் கணேசா... இன்னும் வேலைக்கு கிளம்பல? உனக்கு சாப்பாடு எடுத்து வெச்சிருக்கேன், எடுத்துட்டு போடா. வேல முடிஞ்சதும் ஊர சுத்தாம வீடு வந்து சேரு. சரி... நான் கிளம்பறேன் நேரமாச்சு, கொஞ்சம் நேரமானாலும் அந்தம்மா கத்தும்." என்று அவசர அவசரமாக கிளம்பினாள் ரேவதி.

"அம்மா..."

"என்னடா..."

"இன்னைக்கு தான் அண்ணனுக்கு கல்யாணம்... அண்ணன் துபாயில் இருந்து வந்திருக்குமில்லம்மா...."

"நீ வேலைக்கு கிளம்பு. நேரமாச்சு" என்று சொல்லி வாசலுக்கு வந்தாள்.

செருப்பை போட போகும் போது தான் நினைவுக்கு வந்தது, நேற்றே அது அறுந்து போனது.

"அட... இதை தெச்சு வாங்க நினைச்சேன், மறந்து போச்சு.

செருப்பில்லாமலே நடக்க ஆரம்பித்தாள்.

நினைவுகள் பல மனதில் ஓடியது....

"யாருடா அந்த பொண்ணு??? ஏன் அவ கூட சுத்திகிட்டு இருக்க? உன்ன படிக்க வைக்க ஆளாக்க நான் மாடா கஷ்டப்படறேன் நீ என்னன்னா எவ பின்னாடியோ சுத்திட்டு கெடக்க???"

"அம்மா... நான் மாலதிய காதலிக்கறேன். அவளையே கல்யாணம் பண்ணிக்க போறேன்."

"என்னடா எதுத்து பேசுற? உங்கப்பா போய் சேர்ந்து 20 வருஷமாச்சு. சொந்தகாரங்க சொத்த முழுசா தூக்கிகிட்டு நம்மல அம்போன்னு நடுத்தெருவுல விட்டாங்க. அடுத்த வேளை சோத்துக்கு வழி இல்லாம தான் நாம இந்த ஊருக்கு வந்தோம். ஏதோ ஆண்டவன் புன்னியத்துல 4 வீட்டுல வீட்டு வேல பாத்து இன்னைக்கு உன்ன காலேஜு வரைக்கும் படிக்க வெச்சிருக்கேன்.... கடைசி வருஷம் படிப்பு முடிக்கல இன்னும் அதுகுள்ள காதலென்னடா காதல்???"

"இதெல்லாம் பார்த்தா காதலிக்க முடியும்? இப்ப எனக்கு என்ன குறை?? நல்லா படிக்கறேன், அடுத்த வருஷமே நல்ல வேலைக்கு போய் நல்லா சம்பாதிப்பேன், கல்யாணம் பண்ணிகிட்டா என்ன தப்பு?"

"மனசாட்சியே இல்லாம பேசாதடா. உனக்கப்பறம் ஒரு தம்பி இருக்கான்... அவனை ஒரு நல்ல நிலைக்கு கொண்டு வர வேண்டாமா? உனக்கு பொறுப்பு இருக்குடா..."

"அவனுக்கு படிப்பே ஏறல... அவனுக்காகலாம் நான் என் வாழ்க்கைய அழிச்சுக்க முடியாது"

"அப்போ... அவனை பத்தி கவலை இல்லன்னா, இத்தனை வருஷம் உனக்காக கஷ்டப்பட்ட என்னை பத்தியும் உனக்கு கவலை இல்லை. அப்படி தான?"

"என்ன கஷ்டபட்டேன் கஷ்டப்பட்டேன்னு எப்ப பார்த்தாலும் சொல்லிகிட்டு இருக்க?? என்ன பெரிய கஷ்டம்? 3 வேளை சோறு போட்டதா? அது எல்லா பெத்தவங்களும் பிள்ளைகளுக்கு செய்ய வேண்டிய கடம. ஏதோ கவர்ன்மன்ட் பள்ளிகூடத்துல சேர்த்த நானா பொறுப்பா படிச்சு மெரிட்ல காலேஜும் வந்தேன்... காலேஜ் பீஸ் கட்ட கொஞ்சம் கடன் வாங்கி கொடுத்த ஒத்துக்கறேன். அதை நான் வேலைக்கு போனா 2 மாசத்துல திருப்பி கொடுத்துடுவேன்."

"என்னடா சொன்ன... கடமய செய்தோமா?? சம்பாதிச்சு திரும்ப தரியா?? குடுடா.. உனக்கு குடுத்த உயிர என்ன செய்வ? அதையும் குடுத்துடுவியா? வாய கிளறாத... எதாவது வந்துடும் நல்லா. போடா... போ வெளிய... எப்போ எங்களை பத்தி கவலை இல்ல, அவ தான் முக்கியம்னு சொன்னியோ அப்பவே நீ என் புள்ள இல்ல... போடா"

"போறேன்... எனக்கு ஒரு நஷ்டமும் இல்ல... உங்களுக்கு தான் நஷ்டம். உன் சின்ன புள்ள ஒன்னும் சம்பாதிச்சு கொட்ட போறதில்லை. நான் இருந்தா தான் வாங்கின கடன கூட அடைக்க முடியும்.... உனக்கே கவலை இல்லனா, எனக்கென்ன. எனக்கு மாலதி வேணும்மா... அவ்வளவு தான்."

அவனுடைய அந்த பேச்சின் கூர்மை ரேவதியின் கண்ணில் ரத்தம் வர வைத்தது. தான் வளர்த்த மகனா இப்படி பேசுவது என்று தன்னை தானே நொந்து கொண்டாள். இந்த பிரெச்சனையில் வீட்டை விட்டு போனவன் இன்று வரை வரவில்லை. யார் யாரோ சொல்லி அவன் துபாயில் நல்ல வேலையில் இருப்பதாக தெரிந்து கொண்டாள்.

இன்று கண்ணனுக்கும், மாலதிக்கும் திருமணம். தபாலில் வந்தது பத்திரிக்கை. அழைப்பா தகவலா என்று கூட யோசிக்க அவளால் முடியவில்லை.

யாரோ அழைப்பது கேட்டு கண்ணை துடைத்து கொண்டு திரும்பி பார்த்தாள்.

"என்ன ரேவதி... இன்னைக்கு வந்ததுல இருந்து ஏதோ லோகத்துல இருந்துகிட்டே வேலை பார்க்கிற??"

"ஒன்னுமில்லம்மா..."

"எனக்கும் தெரியும் ரேவதி, 5 வருஷமா என்கிட்ட வேலை பார்க்கிற... உன் மனசு தெரியாதா எனக்கு? கண்ணனை நினைச்சு தானே கவலை படற? பேசாம வாதம் பண்ணாம, சமாதானமா அவன் கூடவே துபாய்க்கு போயிட வேண்டியது தானே?? சின்னவனுக்கும் ஒரு வேலை வாங்கி குடுக்க சொல்லிட்டு, மீதி காலத்தை நிம்மதியா கழிக்கலாமே... ஏன் இப்படி 5க்கும் 10க்கும் ஓடி ஓடி வேலை பார்க்கணும்?" என்றார் மீனாட்சி.

"இல்லம்மா... அதெல்லாம் சரி வராது."

"கோவத்த விடு ரேவதி... என்ன இருந்தாலும் அவன் உன் பிள்ளை இல்லையா..."

"ஆமாம்மா... அதனால தான் இன்னைக்கு அவன் கல்யாணம்னு தெரிஞ்சதும், அவன் நல்லா இருக்கணும்னு மனசார வேண்டிகிட்டேன். இத்தனை வருஷம் நான் பட்ட கஷ்டத்த புரிஞ்சுக்காம என்னை வேணாம்னு சொல்லிட்டு போனவன் கிட்ட நான் இனி போக கூடாதும்மா. கட்டிக்கிட்டவளயாவது சந்தோஷமா கடைசி வரை வெச்சு காப்பாத்தினான்னா சரி. எங்க இருந்தாலும் நல்லா இருக்கட்டும்மா... அது போதும்." என்றவள் "பாத்திரம் கழுவிட்டேம்மா, வீட்டை சுத்தம் பண்ண போகவா?" என்றாள்.

அந்த தாயின் வேதனையை புரிந்து கொண்டு ஒரு நிமிடம் வார்த்தை இல்லாமல் நின்ற மீனாட்சி... "சரி ரேவதி..." என்றார். ரேவதியை நினைத்து மனதுக்குள் பெருமையாகவே இருந்தது மீனாட்சிக்கு.

அறுசுவை- வனிதா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"கோவத்த விடு ரேவதி... என்ன இருந்தாலும் அவன் உன் பிள்ளை இல்லையா..."

இந்த வசனம், உலகத்தில் உள்ள எல்லாத் தாய்மாரையும் உருக்கும் பாசுபதாஸ்திரம்!!!

அருமையான ஒரு படைப்பு, தமிழரசு!!!

Link to comment
Share on other sites

இது கதை தான். என்றாலும், அந்த மகனை சிலகாலம் பொறுத்திருக்க சொல்லியிருக்கலாம். பிள்ளைகள் தம் துணையை தேட பெற்றோர் அனுமதிக்க பழக வேண்டும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • https://online.srilankaevisa.lk/ யாராவது முயற்சி செய்து பார்த்தீர்களா? எனக்கு சரிவர வேலை செய்யவில்லை.
    • சர்கரை இல்லாங்கால்லிலுப்பை அஃதுபோல் சொல் ஒன்றின்றி நகைக்க லொல். உடான்ஸ்சுவாமி உரை எவ்வாறு சர்க்கரை இல்லாதவிடத்து, இனிப்பு சுவைக்கு இலுப்பை உபயோகிக்கப்படுகிறதோ, அதே போல,  சிரிப்பதை, நகைப்பு என சொல்லால் எழுதாமல், குறியீடாக லொல் எனவும் எழுதலாம்.  
    • வீசா பெறுவது இலகுவாக்கபடுவது முக்கியம். இழுபறி கூடாது. மற்றும்படி கட்ணங்கள் சம்மந்தமாக குறை சொல்ல ஏதும் இல்லை. அது எல்லாருக்கும் பொதுவானது தானே.  ஆனால் இங்கே என்ன கவனிக்கப்படவேண்டும் என்றால் நாங்கள் வீசா பெற்று சென்று இறங்கும்போது விமானநிலையத்தில் இலங்கை குடிவரவுப்பகுதி கையூட்டு/கைவிசேடம் கேட்டு எங்களுக்கு கரைச்சல் தரக்கூடாது. 
    • ஓம்….இடையிடே இச்சையின்றி வரும் yeah, தோள் குலுக்கல், கண் மேலே உருட்டல், பிறகு கடையில் வாய்தவறி £இல் விலை கேட்பது… எதையும் 100% மறைக்க முடியாது…. ஆனால் அப்பட்டமாய் ஜொலி ஜொலித்தால்…..ஏமாறும் சதவிகிதம் எகிறும். அதே போல் வெளிநாடு என தெரிந்தாலும், ஏமாற்ற முடியாது, விசயம், விலை தெரியும் என்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்துவதும் கைகொடுக்கும். எந்த வளர்முக நாட்டுக்கு போனாலும் உதவும் உத்திகள்தானே இவை.     நன்றி🙏
    • நான் இதன் மறுவளமாகவே பார்க்கிறேன். அங்கே மண்னெணை, முதல், மா, சகலதும் மானிய விலையில்தான் மக்களுக்கு தரப்படுகிறது.  ஏன் என்றால் அதை விட கூட விலைக்கு விற்றால் அந்த மக்களால் வாங்க முடியாது. அதே போலவே வடையும். அங்கே இவற்றுக்கான விலை அந்த மக்களின் வாங்கு திறனை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது. ஆனால் நாம் ஒரு பிரிதானியா வாங்கு திறனோடு போய், இலங்கை வாங்குதிறனுக்குரிய விலையில் பொருட்களை வாங்குவது - ஒரு வகையில் அந்த மக்களிடம் அடிக்கும் கொள்ளையே. ஆனால் எம் அந்நிய செலவாணி வரவால் அதை விட அதிகம் கொடுக்கிறோம் என்பதால் நன்மையே அதிகம். இது எல்லா 3ம் உலக நாட்டுக்கும் பொருந்தும்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.