Jump to content

கண் சத்திரசிகிச்சைக்கு நிதியுதவி கோரும் ஐந்து வயது சிறுவன்


Recommended Posts

கண் சத்திரசிகிச்சைக்கு நிதியுதவி கோரும் ஐந்து வயது கிளிநொச்சி சிறுவன்

விளையாடிக் கொண்டிருந்த போது தடி கண்ணில் தாக்கியதால் இடது கண்பார்வை இழந்த சிறுவனுக்கு அவசர சத்திரசிகிச்சைக்கான நிதியுதவி கோரப்பட்டுள்ளது. நாலாம் வாய்க்கால் மருதநகர் கிளிநொச்சியைச் சேர்ந்த ஐந்து வயதுடைய அருளம்பலம் நிரோஜன் என்ற சிறுவனே இடதுகண் பார்வையை இழந்துள்ளார். இடது கண் பார்வையின்மையால் வலது கண்ணும் இரவில் சிறுவனுக்குத் தெரியாமலுள்ளது. இச்சிறுவனின் கண் சத்திரசிகிச்சைக்கு இரண்டு இலட்சம் ரூபா உடனடியாக தேவைப்படுகிறது.

இச்சிறுவனின் கண் சத்திரசிகிச்சைக்கான நிதியைத் திரட்டும் பணியில் கிளிநொச்சி மாவட்ட மாற்றீடான வலுவுள்ளோர் சங்கம் ஈடுபட்டுள்ளது.

இச்சிறுவனின் கண் சத்திரசிகிச்சைக்கு உதவி செய்யக்கூடியோர் கிளிநொச்சி மாவட்ட மாற்றீடான வலுவுள்ளோர் சங்கத்தொலைபேசி இலக்கமான 0212285784 உடன் தொடர்பு கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது

http://sooriyan.com/index.php?option=conte...id=2755&Itemid=

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

இதுவரை 55000 ரூபாய்கள் தான் சேர்ந்துள்ளதாக அறிய முடிகிறது.

இந்த சங்கம் அந்தச் சிறுவன் போன்ற நிலையில் உள்ளவர்களுக்கு உதவிகளை பெற்றுக் கொடுக்கு ஒரு அமைப்பு.

அந்தச் சங்கத்திற்கு என்று ஒரு நிரந்தர நிதியத்தை உருவாக்கி சேமிப்பில் இது போன்ற அவசர தேவைகளிற்கு உடனடியாக நிதியை கொடுக்கக் கூடிய நிலைக்கு அவர்களின் நிதியத்தை பலப்படுத்த நாம் ஆதரவு அளிக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

மிகவும் வேதனைக்குரிய மேலதிக தகவல்கள்

அந்தச் சிறுவனின் கண் பாதிப்புக்கு உண்டாகி 6 மாதங்கள் ஆகிறது. இன்று காசை சேர்த்துக் கொடுத்தாலும் வைத்தியர்கள் கூறிவிட்டார்கள், சம்பந்தப்பட்ட நரம்புகள் இறந்துவிட்டதால் சத்திரசிகிச்சை செய்வதில் பலன் இல்லை என்று.

அந்தச் சிறுவனின் தாயின் ஆதங்கம் தமிழர் புனர்வாழ்வுக் கழகம் போன்றவர்கள் கடனாக ஆயினும் அந்த 2 லட்சத்தை தந்து உதவ முன்வரவில்லை என்று.

கிளிநொச்சி மாவட்ட மாற்றீடான வலுவுள்ளோர் சங்கம் அவர்களது உதவி கேரிக்கையை பரந்துபட்ட அளவில் இணைய ஊடகங்கள் மூலமும் கேட்டிருந்தால் உதவி நேரத்திற்கு சென்றடைந்திருக்கும்.

இந்த இரண்டு நிறுவனங்களும் எதிர்காலத்திலாவது இந்தப் பிழையினை மீண்டம் விடாமல் பார்த்துக் கொள்ள சம்பந்தப்பட்டவர்கள் முயற்சிப்பார்கள் என நம்புவோம்.

கண் பார்வை, காது கேட்டல், பேச்சு போன்றவை எல்லோருக்கும் மிகவும் அடிப்படையான தேவை. அதுவும் ஒரு 5 வயதுச் சிறுவனின் ஒரு கண் பார்வை முற்றாக இழந்தும் மற்றய கண்பார்வை ஏற்கனவே குன்றிய (வயது செல்ல செல்ல 1 கண்ணால் எல்லாவற்றை அவதானிப்பதால் வரும் stress ஆல் அந்தப்பார்வையும் நடுத்தர வயித்திலே அதற்கு முதலேயோ மேலும் பாதிக்கபட்டுவிடும்) எதிர்காலத்திற்கு காரணம் 2லட்சம் ரூபாய்கள் தட்டுப்பாடு என்பது ஒரு மிகவும் கேவலமான நிலை. அந்தச் சிறுவன் எதிர்காலத்தில் எப்படியான ஒரு பங்களிப்பை எமது சமுதாயத்திற்கு தந்திருக்க முடியும்?

ஜரோப்பாவில் மாத்திரமே ரிரிஎன் (தொலைக்காட்சி) ஜபிசி (வானொலி) போன்றவர்களினால் பொருத்தமான முறையில் அறிவிப்பு செய்து உதவியிருந்தால் 2..3 நாட்களில் 1200 GBP (1700 EURO) சேர்க்க முடியாத பிச்சைக்காரர்களாகவா எம்மவர்கள் இங்கு இருக்கிறார்கள்?

எமது ஊடகங்கள் மக்களின் இது போன்ற தேவைகளை முன்னுரிமை கொடுத்து பொறுப்பாக செயற்பட வேண்டும்.

Link to comment
Share on other sites

அந்த கிளிநொச்சி சங்கம் ஒரு கத்தோலிக்க அமைப்பு. அவர்களும் தெருத்தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு அடித்த கதையாக சாதாரண ஆக்களிடம் பணத்தை சேகரித்து கொடுத்தாலும் பின்னர் பயனாளர்களிடம் மதமாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள் போலுள்ளது. சங்கத்தினுடைய நிர்வாகச் செலவுகள் கொஞ்சம் ஆடம்பரமாகவும் உள்ளது போலுள்ளது.

எமது உறவுகளுக்கு இப்படியான மதமாற்ற நெருக்கடிகள் அற்ற உதவிகளை வழங்கும் கட்டமைப்புகளை உருவாக்குவது அவசியம்.

Link to comment
Share on other sites

இந்த சிறுவன் இந்தியாவிற்குச்சென்று சத்திர சிகிச்சை செய்வதுதான் சிறந்தது. .இப்போது நான் இந்தியாவில் இல்லாததால் என்னால் உதவமுடியவில்லை. இருந்தாலும் அவர்களுக்கு உதவ விரும்புகிறேன். யாராவது அவர்கள் மின்னஞ்சல் முகவரி கொடுத்தால் என்ன செய்ய வேண்டுமென்று என்னால் வழிகாட்ட முடியும்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.