Jump to content

என்ன செய்யலாம்


sathiri

Recommended Posts

குறிப்பிட்ட நபர் உரையாடியதில் பெரிய பிழை ஏதும் உள்ளதாக எனக்கு தெரியவில்லை. சுவை அவர்கள் கூறியதுபோல் கதவுமாறி தட்டியுள்ளார் என்று வேண்டுமானால் கூறலாம். சரி, அவர் ஊரிற்கு சென்று இக்கட்டான நிலையிலுள்ள ஓர் முப்பது வயது பெண்ணை திருமணம் செய்தால் உங்களால் என்ன செய்யமுடியும்? இது சட்டவிரோதமான செய்கை இல்லையே! வெளிப்படையாக துணிந்து தனது விருப்பத்தை கூறியுள்ளார். இதற்கு ஏன் பாக்குவெட்டி எல்லாம் தேவைப்படுகின்றது என்று தெரியவில்லை. பாக்குவெட்டி தூக்குவதற்கு ஓர் நாள் இரவு படுத்து எழும்புவதற்கா பெண் கேட்டார்? இணைந்து வாழ்க்கைத்துணையாக வாழ்வதற்குத்தானே இப்படி கேட்டுள்ளார். உண்மையில் இவர் எதிர்பாப்பதுபோல் உளப்பூர்வமாக விரும்பக்கூடிய வாழ்வைத்தேடுகின்ற ஓர் விதவைப்பெண் ஊரில் காணப்படலாம். வசதி, வாய்ப்புக்கள், வாழ்க்கைச்சூழ்நிலைகள் மாறுபடும்போது.. எல்லாரையும், எல்லாவற்றையும் ஒரே பார்வையில் பார்ப்பது தவறானது. வெளிநாட்டில் வாழ்கின்ற இவர் நினைத்தால்.. ஐம்பத்து ஐந்து வயது என்ன.. அறுபது வயதானால் எழுபது வயதானால் கூட.. கையில் காசை காட்டும்போது இளம்பெண்களுடன் உறவுகொள்ள முடியும். ஆனால்.. அவர் நாகரீகமாக, உண்மையாக தனது பிரச்சனைகளை கூறித்தானே இவ்வாறு தனது விருப்பத்தை வெளிப்படுத்தினார். இங்கு பிழை பிடிப்பதற்கு என்ன உள்ளது? பலர் இங்கு இன்னமும் யதார்த்த உலகம் அறியாமல் கண்ணை மூடிக்கொண்டு கருத்து எழுதுகின்றார்களோ என்று சிந்திக்கத் தோன்றுகின்றது. நீங்கள் நினைக்கும் வகையில் உங்கள் வரைவிலக்கணங்களிற்கு கட்டுப்பட்டு அதை திருப்திப்படுத்தும் வகையில் ஒருவன் வாழவேண்டும் என்று இல்லை. உலகம் நமது ஊரைவிட மில்லியன் மில்லியன் அளவு பெரியது. குறுகிய கோணத்தில் மட்டும் பார்க்காது பல்வேறு கோணங்களில் ஓர் விடயத்தை அணுகுங்கள். வெறும் கிண்டல்கள், நையாண்டிகள் மூலம் ஆகப்போவது ஒன்றும் இல்லை.

கரும்பு ஊரில் ஒரு பழமொழி உண்டு ஊரோடில் ஒத்தோடு ஒருவனோடில் கேட்டோடு என்பது..அதாவது ஒரு ஊரில் உள்ளவர்கள் அனைவருமே ஓடினால் நீயும் ஏன் எதற்கென்று கேட்காமல் உடனடியாகவே அவர்களுடன் சேர்ந்து ஓடு அது சரியானதே..ஆனால் ஒருவன் மட்டும் ஓடிக்கொண்டிருந்தால் அவனிடம் ஏன் ஓடுகிறாய் எங்கே ஓடுகிறாய் அதனால் என்ன சாதக பாதகம் என்று கேட்டு பின்னர் அவனுடன் சேர்ந்து ஒடலாமா வேண்டாமா என முடிவெடுத்து ஓடு என்பதுதான் அதன் அர்த்தம்.அதனால் தான் ஊர் எப்படி ஓடுகிறது என்று பார்த்து முடிவெடுக்கலாமென நினைத்து தணிகாசலத்தின் விடயத்தினை இங்கு இணைத்தேன்.ஆனால் ஊரே சேர்ந்து எடுத்த தவறான முடிவுகளை ஒரு சிலர் தனியாக மாற்றியமைத்த உதாரணங்களும் உண்டு அதே போல ஒருசிலரின் தவறான முடிவினை ஊரே சேர்ந்து மாற்றியமைத்த சம்பவங்களும் உண்டு..மற்றும்படி நேசக்கரம் அமைப்பு நூற்றுக்கு மேற்பட்ட கணவனை இழந்த பெண்களிற்கு உதவி வருகின்றது. ஆனால் இன்றுவரை ஒரு இளைஞன் தான் ஒரு பெண்ணை திருமணம் செய்ய விரும்புவதாக முன்வரவில்லையென்பதும் உண்மை. ஆனால் நேசக்கரம் அமைப்பின் வேலைத்திட்ட நிரலிலும் இவை அடங்காது அப்படி யாராவது வந்தாலும் நேசக்கரம் அதனை செய்ய முன்வராது. ஆனால் தணிகாசலம் இப்படியொரு முடிவெடுத்து என்னை தொடர்பு கொண்ட விடயத்தில் அவரை பாராட்டி நேசக்கரம் அமைப்பு என்பதை தாண்டி தனிப்பட சிறி என்கிற தனி மனிதனாக ஒரு பெண்ணிற்கான வாழ்க்கைத்துணையை அறிமுகப்படுத்தியிருக்கலாம்.ஆனால் அவரின் கோரிக்கையான 30 ற்கு குறைந்த வயதுதான் வேண்டும் என்கிற கோரிக்கைதான் உறுத்தலான விடயமாய் போய்விட்டது அதனால்தான் என்ன செய்யலாமென மற்றையவர்களையும் கேட்டேன்.

Link to comment
Share on other sites

  • Replies 187
  • Created
  • Last Reply

தனி முக்கியமான ஒன்றை யோசிக்க தவறி விட்டார்.அந்த வதில் ஒரு பெண் இங்கு வந்தாலும் தொடர்ந்து இவருடன் வாழ்வாரா என்று.கிட்டத்தட்ட சம வயதில் உள்ள பெண்ணுக்கு ஒருவர் வாழ்வு கொடுத்ததும் பெண் இங்கு வந்ததும் டாடா காட்டிய சம்பவமும் நடந்திருக்குது.மற்றும் படி இந்த வயது வித்தியாசத்தில் ளொள்ளு விடும் ஆண்களை எந்த இனத்திலும் தாராளமாக கானலாம்.இதுக்கு தீர்வு பாக்குவெட்டிதான் என்றால் முக்கால்வாசி ஆண்கள் முன்டமாக தான் திரிவினம்.இங்கு சாத்திரியின் குழப்பத்துக்கு நான் சொல்லக்கூடியது அந்த மனிசனுக்கு பிரச்சனையை பக்குவமாக விழங்கப்படுத்தி ஒரு பெண்ணுக்கு வாழ்வு கொடுக்க முற்சிக்கலாம்.

சஜீவன் இங்கு பெரும்பான்மை கருத்துக்களை வைத்து முடிவெடுக்கலாமென இருக்கிறேன். :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கரும்பு ஊரில் ஒரு பழமொழி உண்டு ஊரோடில் ஒத்தோடு ஒருவனோடில் கேட்டோடு என்பது..அதாவது ஒரு ஊரில் உள்ளவர்கள் அனைவருமே ஓடினால் நீயும் ஏன் எதற்கென்று கேட்காமல் உடனடியாகவே அவர்களுடன் சேர்ந்து ஓடு அது சரியானதே..ஆனால் ஒருவன் மட்டும் ஓடிக்கொண்டிருந்தால் அவனிடம் ஏன் ஓடுகிறாய் எங்கே ஓடுகிறாய் அதனால் என்ன சாதக பாதகம் என்று கேட்டு பின்னர் அவனுடன் சேர்ந்து ஒடலாமா வேண்டாமா என முடிவெடுத்து ஓடு என்பதுதான் அதன் அர்த்தம்.அதனால் தான் ஊர் எப்படி ஓடுகிறது என்று பார்த்து முடிவெடுக்கலாமென நினைத்து தணிகாசலத்தின் விடயத்தினை இங்கு இணைத்தேன்.ஆனால் ஊரே சேர்ந்து எடுத்த தவறான முடிவுகளை ஒரு சிலர் தனியாக மாற்றியமைத்த உதாரணங்களும் உண்டு அதே போல ஒருசிலரின் தவறான முடிவினை ஊரே சேர்ந்து மாற்றியமைத்த சம்பவங்களும் உண்டு..மற்றும்படி நேசக்கரம் அமைப்பு நூற்றுக்கு மேற்பட்ட கணவனை இழந்த பெண்களிற்கு உதவி வருகின்றது. ஆனால் இன்றுவரை ஒரு இளைஞன் தான் ஒரு பெண்ணை திருமணம் செய்ய விரும்புவதாக முன்வரவில்லையென்பதும் உண்மை. ஆனால் நேசக்கரம் அமைப்பின் வேலைத்திட்ட நிரலிலும் இவை அடங்காது அப்படி யாராவது வந்தாலும் நேசக்கரம் அதனை செய்ய முன்வராது. ஆனால் தணிகாசலம் இப்படியொரு முடிவெடுத்து என்னை தொடர்பு கொண்ட விடயத்தில் அவரை பாராட்டி நேசக்கரம் அமைப்பு என்பதை தாண்டி தனிப்பட சிறி என்கிற தனி மனிதனாக ஒரு பெண்ணிற்கான வாழ்க்கைத்துணையை அறிமுகப்படுத்தியிருக்கலாம்.ஆனால் அவரின் கோரிக்கையான 30 ற்கு குறைந்த வயதுதான் வேண்டும் என்கிற கோரிக்கைதான் உறுத்தலான விடயமாய் போய்விட்டது அதனால்தான் என்ன செய்யலாமென மற்றையவர்களையும் கேட்டேன்.

கரும்பின், வெருட்டலுகளுக்கு பயப்படாதேங்கோ ...சாத்திரியார்.

.

Link to comment
Share on other sites

நெல்சன் மண்டேலா அவர்கள் மூன்று தடவைகள் திருமணம் செய்துள்ளார். நெல்சன் மண்டேலா அவர்களிற்கு 80 என்பது வயதில் அவரது மூன்றாவது திருமணம் நடந்தது. அவருக்கும் மணப்பெண்ணிற்கும் இடையில் வயது வேறுபாடு 27 இருபத்து ஏழு.

245px-Nelson_Mandela-2008_%28edit%29.jpg

First marriage

Mandela's first marriage was to Evelyn Ntoko Mase who, like Mandela, was also from what later became the Transkei area of South Africa, although they actually met in Johannesburg. The couple broke up in 1957 after 13 years, divorcing under the multiple strains of his constant absences, devotion to revolutionary agitation, and the fact she was a Jehovah's Witness, a religion which requires political neutrality. Evelyn Mase died in 2004. The couple had two sons, Madiba Thembekile (Thembi) (1946–1969) and Makgatho Mandela (1950–2005), and two daughters, both named Makaziwe Mandela (known as Maki; born 1947 and 1953). Their first daughter died aged nine months, and they named their second daughter in her honour. All their children were educated at the United World College of Waterford Kamhlaba. Thembi was killed in a car crash in 1969 at the age of twenty-five, while Mandela was imprisoned on Robben Island, and Mandela was not allowed to attend the funeral. Makgatho died of AIDS in 2005, aged 54.

Second marriage

Mandela's second wife, Winnie Madikizela-Mandela, also came from the Transkei area, although they, too, met in Johannesburg, where she was the city's first black social worker. They had two daughters, Zenani (Zeni), born 4 February 1958, and Zindziswa (Zindzi) Mandela-Hlongwane, born 1960. Zindzi was only 18 months old when her father was sent to Robben island. Later, Winnie would be deeply torn by family discord which mirrored the country's political strife; while her husband was serving a life sentence on the Robben Island prison, her father became the agriculture minister in the Transkei. The marriage ended in separation (April 1992) and divorce (March 1996), fuelled by political estrangement.

Mandela still languished in prison when his daughter Zenani was married to Prince Thumbumuzi Dlamini in 1973, elder brother of King Mswati III of Swaziland. Although she had vivid memories of her father, from the age of four up until sixteen, South African authorities did not permit her to visit him. The Dlamini couple live and run a business in Boston. One of their sons, Prince Cedza Dlamini (born 1976), educated in the United States, has followed in his grandfather's footsteps as an international advocate for human rights and humanitarian aid.

Zindzi Mandela-Hlongwane made history worldwide when she read out Mandela's speech refusing his conditional pardon in 1985. She is a businesswoman in South Africa with three children, the eldest of whom is a son, Zondwa Gadaffi Mandela.

Third marriage

Mandela was remarried, on his 80th birthday in 1998, to Graça Machel née Simbine, widow of Samora Machel, the former Mozambican president and ANC ally who was killed in an air crash 12 years earlier. The wedding followed months of international negotiations to set the unprecedented bride-price to be remitted to Machel's clan. Said negotiations were conducted on Mandela's behalf by his traditional sovereign, King Buyelekhaya Zwelibanzi Dalindyebo. The paramount chief's grandfather was the regent Jongintaba Dalindyebo, who had arranged a marriage for Mandela, which he eluded by fleeing to Johannesburg in 1940.

தகவல் மூலம்: நெல்சன் மண்டேலா

Link to comment
Share on other sites

1. எனது மனைவி நான் ஐம்பத்து நான்கு வயது வரும்போது இறந்தால்.. அவள் உண்மையில் என்னில் அன்பை பகிர்ந்து எனது உள்ளத்தில் நிரந்தர இடத்தை பிடிக்காதவளாக காணப்படின்,

அத்துடன்

2. நன்றி கெட்ட எனது இரண்டு பிள்ளைகள் தாங்கள் மணம் முடித்தபின்னர் என்னை யாரோ மூன்றாம் மனிதனாக நினைத்து கைவிட்டு சென்றால்.. தமது அன்பை என்மீது செலுத்தாவிட்டால்,

அத்துடன்

3. பிரான்சில் வாழ்கின்ற என்னிடம் பொருளாதார பலமும், உடல் உள உறுதிகளும் காணப்பட்டால்

அத்துடன்

4. ஊரில் உள்ள ஓர் முப்பது வயது விதவைப்பெண் என்னில் அன்பு செலுத்தி, எனது வாழ்க்கைத் துணையாக இணைவதற்கு உளப்பூர்வமாக சம்மதித்தால்

அவளை திருமணம் செய்வதை சாதகமான வகையில் பரிசீலிப்பதற்கு ஆயத்தமாக நான் காணப்படுவேன்.

திருவாளர் கரும்பு அவர்களே, நீங்கள் இப்படி சுத்தி மூக்கை தொடுவதை விட்டிட்டு நேரடியாக பதில் சொல்லுறீங்களா.? நீங்கள் உந்த தணிகாசலமாக இருந்து , உந்த நிகழ்ச்சியை கேட்டு இருந்தால், இப்படி தான் சாத்திரியிடம் கேட்டு இருப்பீர்களா.?

இதற்கு தயவு செய்து ஓம் அல்லது இல்லை என்ற பதிலை மட்டும் தரவும்.

Link to comment
Share on other sites

அதேசமயம், வாழ்க்கை வெறுத்து ஊரிலேயே தற்கொலை செய்யக்கூடிய விதவைப்பெண்கள் பற்றியும் சிந்தித்து பார்க்கலாம். இவர் மூலம் இன்னமும் சில நாட்களில், அல்லது சில மாதங்களில், அல்லது சில வருடங்களில் தற்கொலை செய்யப்போகும் விதவைப்பெண் ஒருவரின் உயிர் காப்பாற்றப்படக்கூடும், குறிப்பிட்ட பெண் பிரான்சிற்கு வந்து பல்லாண்டுகள் வசதிகள், வாய்ப்புக்களுடன் வாழ்வதற்கு சந்தர்ப்பம் கிடைக்கக்கூடும்.

நீங்கள் சொல்லும் தீமே பிழையாக இருக்கே..... விதவை பெண்கள் எல்லாம் தற்கொலை செய்கிறார்கள் என்பது மிகவும் மிகைப்படுத்த பட்ட செய்தி...

பெண்களை பற்றி நீங்கள் கொண்டிருப்பது மிகவும் இழிவான எண்ணம்... கணவனை இழந்தால் மனம் ஒடிந்து வாழ்க்கை வெறுத்து பெண்கள் உடன் கட்டை ஏறுகிறார்கள் என்பது எல்லாம் சங்க காலத்தோடை சரி... இப்ப பெண்கள் அப்படி எல்லாம் கிடையவே கிடையாது...

பெண்கள் எப்போதும் கட்டிய கணவரில் பாசம் இருப்பது போல நடிப்பார்கள் ஆனால் பிள்ளைகள் மீது உயிரையே வைத்து இருப்பார்கள்... இதுதான் உண்மை... கணவர் இறந்து போனால் பிள்ளைகளை அம்போ எண்டு விட்டு போட்டு சாகும் பெண்கள் மிக மிக குறைவு... அப்படி சாவதாக இருந்தால் பிள்ளைகளுக்கு விசம் குடுத்து தானும் குடித்து சாவார்கள்... ஆனால் பிள்ளைகளை சாவதை பார்க்க எந்த தாயும் ஒப்ப மாட்டாள்...

நான் சொல்வதில் சந்தேகம் இருந்தால் யாராவது ஒரு தாயிடம் கேட்டு உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.... ( ஏற்கவனே நான் சிலரிடம் கேட்டு உறுதிப்படுத்தி விட்டேன்)

ஆக பிள்ளைகள் இருக்கும் விதவை தாய் தன் பிள்ளைகளுக்காக வாழ்வதையே விரும்புவாள்... ஆனால் பிள்ளைகள் இல்லாத பெண் அதுவும் முப்பது வயதுக்கு கீழ், திருமணம் ஆகி சிறிது காலத்தில் கணவரை இழந்தவள் ஏன் சாக வேண்டும்...?? தன்னை மட்டும் பார்த்துக்கொள்வது அவளுக்கு சிரமமானதா....?? அப்படி அவர்கள் சாவதாக இருந்தால், அங்கிருக்கும் ஆண்கள் உட்பட எல்லாரும் சாக வேண்டும்...

மிக முக்கியமாக இந்த தற்கொலை எண்று சொல்வதுக்கு மிக முக்கிய காரணமே மன அழுத்தம் தான்... இந்த மன அழுத்தம் தாயகத்தில் இருக்கும் பெண்களை விட புலம்பெயர்ந்த பெண்களுக்கு மிக அதிகம்.... இது பற்றி இதே யாழில் பரவலாக ஆராந்து எழுதி இருக்கிறார்கள்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் சாத்தரி

தணிகாசம் தட்டிய இடமும் பிழை.

நீங்கள் எழுதிய இடமும் பிழை.

உங்களுக்குத் தான் நேசக்கரம் மூலம் ஊரில் தொடர்புகள் இருக்கும் போது நேரடியாக அவர்களிடமே இந்தப் பிரச்சனையை அணுகியிருக்கலாம்.

குறைந்தது பத்து விதவைப் பெண்களைக் கூப்பிட்டு இப்படி ஒருவர் பிரான்ஸ்சில் இருந்து கேட்கிறார் உங்கள் முடிவை யோசித்து சொல்லுங்கள் என்று சொன்னால்

சிலவேளைகளில் பத்து பேருமே ஆம் என்று சொன்னாலும் ஆச்சரியப்பட ஏதுமில்லை.

இங்கு கருத்தெழுதும் உறவுகள் அங்கிருப்பவர்கள் எதிர்காலம் பற்றியும் சிந்தியுங்கள்.

ஒரு நேரக் கஞ்சிக்கு அடுத்தவன் கையை எதிர் பார்த்திருப்பவர்களை யோசியுங்கள்.

Link to comment
Share on other sites

அதனால்தான் என்ன செய்யலாமென மற்றையவர்களையும் கேட்டேன்.

சாத்திரி அண்ணை, குறிப்பிட்ட நபர் ஏதோ ஆர்வக்கோளாற்றில் உங்களிடம் அவ்வாறு பேசியுள்ளார். அவருக்கு இல்லை என்று ஒரு பதில்கொடுத்தால் போதும். உதவி கேட்டாலே ஓடி ஒளிந்து கொள்பவர்கள் மத்தியில் இப்படி ஒருவர் தொலைபேசியூடாக தொடர்புகொண்டு வெளிப்படையாக தனது உள்ளக்கிடக்கையை உங்களுக்கு கூறியதில் நொந்து கொள்வதற்கு என்ன உள்ளது? அவருக்கு உண்மையில் ஆர்வமும், திறமையும் காணப்பட்டால் தனது வழியில் சென்று தனக்கு விருப்பமான வகையில் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளட்டும். நாங்கள் வாழ்க்கையில் ஆயிரம் விதமான ஆக்களை, ஆயிரம் விதமான பிரச்சனைகளை பார்க்கின்றோம். அதிலும் குறிப்பாக சமூகநலன்களில் ஈடுபடுபவர்கள் தினமும் தினமும் ஆயிரக்கணக்கான வெவ்வேறு குண, நலன்கள் உள்ள நபர்களை எதிர்கொள்ள வேண்டிய தேவை வருகின்றது. நாம் தேவையில்லாத வகையில் வில்லங்கங்களில் மாட்டுப்படாதும் வாழவேண்டும். ஊரில் உள்ள சகல பிரச்சனைகளையும் எங்கள் தலையில் ஏற்றிவைக்க முடியாது. மேற்கண்டது போன்ற தொலைபேசி அழைப்புக்கள் வந்தால் இயலுமான அளவு அவர்களிடம் அவல நிலைகளை கூறி ஏதாவது உதவிகளை பெறப்பாருங்கள், உதவிகள் கிடைக்காவிட்டால் நன்றி, வணக்கம் கூறிவிட்டு தொலைபேசியை துண்டிக்கவேண்டியதுதான். சிறீ கூறியதுபோல் யாராவது கிண்டல் செய்வற்காகவும்கூட அவ்வாறு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தக்கூடும். அல்லது உண்மையிலேயே அவர் ஓர் நல்ல மனிதராக அல்லது ஓர் அப்பாவியாக காணப்படலாம்.

அதேசமயம், வயது சம்பந்தமான துவேசமான கருத்துக்களிற்கும் - age discrimination இடம்கொடுக்ககூடாது. ஒருவனுக்கு 56வயது. அவன் 30 வயது விதவைப்பெண்ணை மணம் முடிக்க விரும்பினால்.. முழுமையாக பின்னணியை அறியாமல் வயதை மாத்திரம் கருத்தில்கொண்டு அவனை தூற்றுவதன் மூலம் யாது பயன்? நான் உங்களை கூறவில்லை. ஆனால் இங்குள்ள பல கருத்துக்கள் 56நபர் என்றால்... ஏதோ நாளைக்கு மண்டையை போடக்கூடிய நோயாளி போலவே சித்தரிக்கப்பட்டுள்ளார். இது மிகவும் தவறான கருத்து. இதையே நான் சுட்டிக்காட்டினேன்.

Link to comment
Share on other sites

குறைந்தது பத்து விதவைப் பெண்களைக் கூப்பிட்டு இப்படி ஒருவர் பிரான்ஸ்சில் இருந்து கேட்கிறார் உங்கள் முடிவை யோசித்து சொல்லுங்கள் என்று சொன்னால்

சிலவேளைகளில் பத்து பேருமே ஆம் என்று சொன்னாலும் ஆச்சரியப்பட ஏதுமில்லை. இங்கு கருத்தெழுதும் உறவுகள் அங்கிருப்பவர்கள் எதிர்காலம் பற்றியும் சிந்தியுங்கள். ஒரு நேரக் கஞ்சிக்கு அடுத்தவன் கையை எதிர் பார்த்திருப்பவர்களை யோசியுங்கள்.

உண்மைதான் ஈழப்பிரியன் அண்ணா.

திருவாளர் கரும்பு அவர்களே, நீங்கள் இப்படி சுத்தி மூக்கை தொடுவதை விட்டிட்டு நேரடியாக பதில் சொல்லுறீங்களா.? நீங்கள் உந்த தணிகாசலமாக இருந்து , உந்த நிகழ்ச்சியை கேட்டு இருந்தால், இப்படி தான் சாத்திரியிடம் கேட்டு இருப்பீர்களா.? இதற்கு தயவு செய்து ஓம் அல்லது இல்லை என்ற பதிலை மட்டும் தரவும்.

தணிகாலசலம் யார், என்ன செய்கின்றார் அவரது பின்னணி, பிரச்சனைகள் எதுவும் தெரியாமல் பதில்கூறும்போது மூக்கை சுத்தி தொட்டே பதில்கூற முடியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் சாத்தரி

தணிகாசம் தட்டிய இடமும் பிழை.

நீங்கள் எழுதிய இடமும் பிழை.

உங்களுக்குத் தான் நேசக்கரம் மூலம் ஊரில் தொடர்புகள் இருக்கும் போது நேரடியாக அவர்களிடமே இந்தப் பிரச்சனையை அணுகியிருக்கலாம்.

குறைந்தது பத்து விதவைப் பெண்களைக் கூப்பிட்டு இப்படி ஒருவர் பிரான்ஸ்சில் இருந்து கேட்கிறார் உங்கள் முடிவை யோசித்து சொல்லுங்கள் என்று சொன்னால்

சிலவேளைகளில் பத்து பேருமே ஆம் என்று சொன்னாலும் ஆச்சரியப்பட ஏதுமில்லை.

இங்கு கருத்தெழுதும் உறவுகள் அங்கிருப்பவர்கள் எதிர்காலம் பற்றியும் சிந்தியுங்கள்.

ஒரு நேரக் கஞ்சிக்கு அடுத்தவன் கையை எதிர் பார்த்திருப்பவர்களை யோசியுங்கள்.

இதுதான் உண்மை.

Link to comment
Share on other sites

1. எனது மனைவி நான் ஐம்பத்து நான்கு வயது வரும்போது இறந்தால்.. அவள் உண்மையில் என்னில் அன்பை பகிர்ந்து எனது உள்ளத்தில் நிரந்தர இடத்தை பிடிக்காதவளாக காணப்படின்,

அத்துடன்

2. நன்றி கெட்ட எனது இரண்டு பிள்ளைகள் தாங்கள் மணம் முடித்தபின்னர் என்னை யாரோ மூன்றாம் மனிதனாக நினைத்து கைவிட்டு சென்றால்.. தமது அன்பை என்மீது செலுத்தாவிட்டால்,

அத்துடன்

.....

1. உங்கள் மனைவி உண்மையில் உங்களில் அன்பை பகிர்ந்து உங்கள் உள்ளத்தில் நிரந்தர இடத்தை பிடிக்காதவளாக காணப்படின்...

மணம் முடித்து இரண்டு பிள்ளைகள் பெற்றும் உங்கள் உள்ளத்தில் நிரந்தர இடத்தைப் பிடிக்காது போனால் அது ஒரு தனிப்பட்ட பிழை இல்லையே? உங்கள் அன்புப் பகிர்தலும் அல்லவா அதில் பாதிப்பு ஏற்படுத்தி இருக்கும்? ஒரு பெண்ணோடு குடும்ப வாழ்கையை வாழ்ந்து உண்மையான அன்பை பெறவில்லை என்று நினைக்கும் ஒருவரால் எப்படி இன்னொரு பெண்ணோடு வாழ்ந்து உண்மையான அன்பைப் பெற முடியும் அல்லது உண்மையான அன்பைக் கொடுக்க முடியும் என்று நினைகிறீர்கள்? அதுவும் இருவருக்கும் பிள்ளைகள் இல்லாத பட்சத்தில்... (பிள்ளைகள் இல்லாத குடும்ப வாழ்கையில் என்ன எதிர் பார்ப்பு இருக்கும்?)

2. நன்றி கெட்ட எனது இரண்டு பிள்ளைகள் தாங்கள் மணம் முடித்தபின்னர் என்னை யாரோ மூன்றாம் மனிதனாக நினைத்து கைவிட்டு சென்றால்.. தமது அன்பை என்மீது செலுத்தாவிட்டால்,

"தணிகாசலம்....எனக்கு இரண்டு பிள்ளையள் அதுகளும் கலியாணம் கட்டி தனியா போட்டுதுகள்."
இதில எங்க அவர் நீங்கள் சொல்வது போல் குறிப்பிட்டு இருக்கிறார்? சும்மா ஏன் கற்பனையில் எழுதுகிறீர்கள்?

ஊரில் இருக்கும் நீங்கள் குறிப்பிட்ட 'விதவை' பெண் எப்படி எல்லாம் உங்களால் வரையாறுக்கப் பட்டதோ அதுவே தணிகாசலத்திற்கு சார்பாக இருக்கும்... (இங்கு வந்ததும் அந்தப் பெண்ணுக்கு அவரால் எது நடந்தாலும் அந்தப் பெண்ணுக்காக யாரும் நியாயம் கேட்டு வரமாட்டார்கள்... உங்கள் கருத்தை வைத்துப் பார்க்கும் போது தற்கொலை செய்யும் மனநிலையில் யார் இருப்பினும் இங்கே வந்தும் தற்கொலை நடக்க வாய்ப்புகள் அதிக தூரத்தில இல்லை...)

...

அதேசமயம், வயது சம்பந்தமான துவேசமான கருத்துக்களிற்கும் - age discrimination இடம்கொடுக்ககூடாது. ஒருவனுக்கு 56வயது. அவன் 30 வயது விதவைப்பெண்ணை மணம் முடிக்க விரும்பினால்.. முழுமையாக பின்னணியை அறியாமல் வயதை மாத்திரம் கருத்தில்கொண்டு அவனை தூற்றுவதன் மூலம் யாது பயன்? நான் உங்களை கூறவில்லை. ஆனால் இங்குள்ள பல கருத்துக்கள் 56நபர் என்றால்... ஏதோ நாளைக்கு மண்டையை போடக்கூடிய நோயாளி போலவே சித்தரிக்கப்பட்டுள்ளார். இது மிகவும் தவறான கருத்து. இதையே நான் சுட்டிக்காட்டினேன்.

இதில நீங்கள் என்ன பின்னணியை முழுமையாக அறிஞ்சனீங்கள்?

56 என்றால் அடுத்த நாளே மண்டையப் போடுறது என்று நான் சொல்ல வர இல்லை, முதல இரண்டு பிள்ளைகளுக்குத் தகப்பன் ஆனா ஒருத்தர் தனது பிள்ளைகளின் வயதில் தனக்கு தாரத்தைத் தேடுவது மனித உளவியல் படி சரியாகப் படவில்லை. தாய்-மகன், தகப்பன்-மகள் உறவுக்கு ஒரு தனி அர்த்தம் உண்டு.

நடிகர் கமலஹாசன் பிள்ளை உள்ள ஒரு விவாகரத்தான புற்று நோயினால் பாதிக்கப்பட்ட பெண்ணைத் தான் தனது வாழ்க்கைத் துணையாக வைத்து இருக்கிறார். பிள்ளை இல்லாத விதவையை இல்லையே... :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் யாழ்ப்பாணத்துக்கு விசயம் செய்த சிங்கள அமைச்சன் ஒருவன்.. அவருக்கு திருமணமாகி குழந்தைகளும் உள்ள நிலையில்.. யாழ்ப்பாணத்துப் பெண்ணையும் திருமணம் செய்ய விரும்புவதாகச் சொல்லி இருந்தார்.. இதைப் போய் எங்க எழுதிறது...???! அவனைப் போய் யார் திட்டிறது.. சபிக்கிறது..!

இராணுவத்தால் ஒட்டுக்குழுவால் பலாத்காரம்.. கதறக் கதறக் கற்பழித்துக் கொலை.. இளம் பெண் குழந்தையை வீதியில் போட்டுவிட்டு மாயம்... படிக்கிறம்...

இன்னொரு பக்கம்.. போரின் விளைவால்.. முதிர் கன்னிகள்.. விதவைகள் என்றும் அழுகிறம்...

நாளுக்கு நான்கு பெண்கள் தற்கொலை என்று நீலிக்கண்ணீர் வடிக்கிறம்..

பிறகு ஒருவர் முன் வந்தால்.. அவரை மட்டமும் தட்டிறம்...

26 வயசு வித்தியாசம் வேற பார்க்கிறம்... ஆனால் தற்கொலை செய்ய விடுவம்....!

இடைக்கிடை பெரியாரின் போதனைகளை செருகிறம்...

இப்படியே நீங்கள் முரண்பட்டுக் கொண்டு நில்லுங்கோ..

தணிகாசலத்தார் ஊருக்குப் போய் ஒன்றல்ல.. இரண்டு கட்டிக் கொண்டு வராட்டிப் பாருங்கோ...!

இதில தணிகாசலத்தின் வெளிப்படைத்தன்மையை பாராட்டலாம். எத்தனையோ பேர் எத்தனையோ விசயங்களை களவாச் செய்துபோட்டு நல்ல பிள்ளைக்கு நடிச்சுக் கொண்டு திரியினம்... அவையைக் காட்டிலும்.. தனது விருப்பத்தை முன் வைத்து மறு தரப்பிலும் அப்படியான விருப்பமுள்ளவை இருந்தா சொல்லுங்கோ என்று தானே கேட்கிறார்.

ஏன்.. ஒருவர் 26 வயசு வித்தியாசத்தில ஒரு விதவைக்கு வாழ்வு கொடுக்கிறதில.. யாழ் களத்தில உள்ளவைக்கு என்ன நஸ்டம் வந்திச்சுது...???!

எனக்குப் புரியல்ல.. நீங்களும்.. உருப்படமாட்டீங்க.. உருப்பட விரும்பிறவனையும் விடமாட்டீங்க.. உளறிக்கொண்டு மட்டும் இருங்கோ.. ஒரு பயனும் இல்ல..!

என்னுடைய கருத்து.. சம்பந்தப்பட்ட தரப்புக்கள் விரும்பினால்.. அவர்கள் விரும்பிய படி செய்ய அனுமதிக்கலாம்.. அது தவறல்ல. இதில் 3ம் மவர்கள் கருத்துச் சொல்வது நல்ல விடயம் அல்ல..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

.

பத்து விதைவை பெண்ககளும்,

வாங்கடா..... எனக்கு, வாழ்வை தாருங்கடா..... , கிழட்டு மூதேவிகளே.......

என்று... திட்டினாலும், காரியமில்லை.

.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதை எல்லாம் வாசிக்கும் போது நாங்கள் எவ்வளவு நல்லவங்களாயிட்டம் என்று தெரியுது.

"அந்த ஒருத்தனை நினைக்க"...........

அத்திவாரமே இவ்வளவு கோணலாக‌ இருக்கும் போது மாளிகை வேணுமாம். :unsure::lol:

Link to comment
Share on other sites

இன்று தாயகத்தில் எவ்வளவு விதவைப்பெண்கள் உள்ளார்கள்?

இந்த பிரச்னைக்கு என்ன தீர்வு?

இதை ஆராய்ந்தால், யதார்த்த ரீதியாக கருத்துறவாடினால் பயனாக இருக்கும்.

எனது தகவல் படி எண்பதினாயிரம் விதவைகள் உள்ளார்கள். இது ஒரு சமுதாய, சமூக மற்றும் கலாச்சார பிரச்சனை.

இதை இலகுவில் தீர்க்க முடியாது. ஒரு பரந்த திட்டமும் திறந்த சமூக நல நோக்கும் தேவை.

1. பிள்ளைகள் உள்ள பல விதவைகள், அவர்களுக்காகவே வாழ எண்ணுகிறார்கள். அவர்களின் வாழ்வு ஊடாக வாழ விரும்புகின்ர்ரர்கள். அதை எவ்வாறு வளம்படுத்த நாம் உதவலாம்?

2. பிள்ளைகள் இல்லாத விதவைகளுக்கு எவ்வாறு மறுவாழ்வுக்கு உதவலாம்?

3. பொருளாதார ரீதியாக எவ்வாறு இவர்கள் வாழ்வை வளப்படுத்தலாம் ?

4. வெளிநாட்டில் உள்ளவர்கள் "மறுவாழ்வு" என்ற பெயரில் அவர்களை "ஏமாற்றுவதை" எப்படி தடுக்கலாம்?

Link to comment
Share on other sites

நான் நினைக்கிறன் வெளி நாட்டு மாப்பிள்ளை எண்டு சொல்லுறது ஒரு qualiucation எண்டு.... இப்பதான் தெரியும் ஊரிலை வளி இல்லாமல் இருக்கிற பொம்பிளையள் எல்லாம் வெளி நாட்டு மாபிள்ளை எண்ட உடனை எதையும் பாக்காமல் வயசு வித்தியாசம் இரண்டு மடங்காக இருந்தாலும் பறவாய் இல்லை எண்டு, பல்லக்காட்டிக்கொண்டு வர வரிசையிலை நிக்கினம் எண்டு...

எங்கட வெளி நாடு கிழட்டு ஆம்பிளை சிங்கங்கத்துக்கு தான் எவ்வளவு பெரிய மனசு... வயசு குறைஞ்ச பிள்ளைக்கு வாழ்வு குடுக்கிறது எண்டால் சும்மாவே... எவ்வளவு சுமையை சுமக்க போறார்...

அவருக்கு ஒரு விழா எடுக்க வேணும்...

Link to comment
Share on other sites

4. வெளிநாட்டில் உள்ளவர்கள் "மறுவாழ்வு" என்ற பெயரில் அவர்களை "ஏமாற்றுவதை" எப்படி தடுக்கலாம்?

4.1. வெளிநாட்டில் இருந்து மனம் முடிக்க வரும் ஒவ்வொருவரும் தான் பிரம்மச்சாரி என்ற சட்ட உறுதிப்பத்திரம் கொண்டுவர வேண்டும்.

4.2. தனக்கு எந்த பாலியல் ரீதியான சுகயீனமும் கிடையாது என்ற வைத்தியர் சான்றிதழ் கொண்டுவர வேண்டும்.

4.3. சீதனம் கேட்க கூடாது.

Link to comment
Share on other sites

ஊரிலை இருக்கும் அபலை பெண்களுக்கு வாழ்வு குடுக்க நினைக்கும் புலம் பெயர் சிங்கங்களுக்கும், ஆதரவு நல்கும் நல் உள்ளங்களும் பார்க்க வேண்டிய ஒரு படம்....

தமிழ் பெண்களை எப்படி வதைக்கிறார்கள் எண்டு... வெள்ளை காறி எண்டால் காறி துப்பி போட்டு போய் இருப்பாள்...

http://www.youtube.com/watch?v=J77Mlhw_D1A

Link to comment
Share on other sites

மணம் முடித்து இரண்டு பிள்ளைகள் பெற்றும் உங்கள் உள்ளத்தில் நிரந்தர இடத்தைப் பிடிக்காது போனால் அது ஒரு தனிப்பட்ட பிழை இல்லையே? உங்கள் அன்புப் பகிர்தலும் அல்லவா அதில் பாதிப்பு ஏற்படுத்தி இருக்கும்? ஒரு பெண்ணோடு குடும்ப வாழ்கையை வாழ்ந்து உண்மையான அன்பை பெறவில்லை என்று நினைக்கும் ஒருவரால் எப்படி இன்னொரு பெண்ணோடு வாழ்ந்து உண்மையான அன்பைப் பெற முடியும் அல்லது உண்மையான அன்பைக் கொடுக்க முடியும் என்று நினைகிறீர்கள்? :

ஒரு பெண்ணோடு குடும்ப வாழ்க்கையை வாழ்ந்து உண்மையான அன்பை பெறவில்லை என்று நினைக்கும் ஒருவரால் எப்படி இன்னொரு பெண்ணுடன் வாழ்ந்து உண்மையான அன்பைப் பெற முடியாது அல்லது உண்மையான அன்பை கொடுக்கமுடியாது என்று நீங்கள் நினைக்கின்றீர்கள்?

இதில எங்க அவர் நீங்கள் சொல்வது போல் குறிப்பிட்டு இருக்கிறார்? சும்மா ஏன் கற்பனையில் எழுதுகிறீர்கள்? :

நீங்கள் மாத்திரம் என்ன தணிகாசலம் பற்றிய தகவல்களை கையில் வைத்துக்கொண்டு, அவர் பற்றி விரிவாக அறிந்து, அவர் வீட்டுக்கோடியில் இருந்தா எழுதுகின்றீர்கள்?

இதில நீங்கள் என்ன பின்னணியை முழுமையாக அறிஞ்சனீங்கள்?:

நீங்கள் மட்டும் என்ன பின்னணியை முழுமையாக அறிஞ்சனீங்கள்?

நடிகர் கமலஹாசன் பிள்ளை உள்ள ஒரு விவாகரத்தான புற்று நோயினால் பாதிக்கப்பட்ட பெண்ணைத் தான் தனது வாழ்க்கைத் துணையாக வைத்து இருக்கிறார். பிள்ளை இல்லாத விதவையை இல்லையே... :lol:

அதுகூட அர்த்தம் புரியவில்லை? முதுமை என்பது வயதில் தங்கி இல்லை. இதற்கு உதாரணமாக மேற்கண்ட புகைப்படங்கள் இணைக்கப்பட்டன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளைக்கார வயதான வசதியான ஆக்கள்.. தாய்லாந்து.. பிலிப்பைன்ஸ் என்று போய் 20 வயசுள்ள பொண்ணுங்களை கட்டி குடும்பம் நடத்திறாங்க. வெளிநாடுகளில் வாழும் முஸ்லீம் வயதானவர்கள் பாகிஸ்தான் வங்காளதேசத்தில் சின்னப் பெண்களை எல்லாம் கட்டிக் கொண்டு வந்து குடும்பம் நடத்துகிறார்கள்.

வெளிநாட்டு சட்ட திட்டத்தின் படி... பொய் சொல்லி அகதி அந்தஸ்து வாங்கிறதை விட.. ஒரு வயதான ஆணும் பெண்ணும் எந்த வயது வேறுபாடு கருதாமலும் திருமணம் செய்து கொள்ளலாம். 56 வயது ஆண் 26 வயதுப் பெண்ணை திருமணம் செய்யக் கூடாது என்று எந்த நாட்டிலும் சட்டம் இயற்றப்படவில்லை.

ஆனால் 16 வயதுக்கு உட்பட்ட பெண்ணை திருமணம் செய்யக் கூடாது. 13 வயதுப் பெண்ணை 33 வயது ஆண் விபச்சாரியாக நடத்த இதே வெளிநாட்டில் உள்ள தமிழர்கள் அனுமதித்திருப்பதையும்.. நாம் காண்கிறோம். அது மிகவும் சட்டவிரோதமான செயல். அதை செய்யலாம்.. ஆனால் சட்டத்துக்கு உட்பட்டதை செய்யக் கூடாது.. அது விதவையை ஏமாத்திறது ஆகும். இந்த அறிவை என்னென்று சொல்லுறது..???!

இந்தியாவில் வயதான கிழவர்களுக்கு தங்கள் இளம் பெண் பிள்ளைகளை கட்டி வைத்து சொத்துச் சுருட்டுவதை படங்களில் தான் பார்த்திருக்கிறம். ஆனால்... ஒரு 56 வயது மனிதன் 30 வயதுள்ள விதவைப் பெண்ணை அவள் விரும்பும் பட்சத்தில் திருமணம் செய்வதை எம்மால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஆனால் அவள் தன் வாழ்க்கையை எந்தத் துயரோடும்.. 100 யூரோவை நாங்க கொடுக்க அதை நம்பி வாழ்வது மேல்.. என்று நினைக்கிறம்..!

அப்போ அந்த விதவைகளுக்கு தீர்வு தான் என்ன.. சிங்களக் காடைகளும்.. முஸ்லீம் காடைகளும்.. தமிழ் ஒட்டுக்குழு காடைகளும் மேய்ந்து திரியவும்.. விபச்சாரம் செய்யவும் அனுமதித்துவிட்டு.. அதை செய்தியாக்கி.. அவர்களுக்கு நாம் உதவுகிறோம் என்ற பாணியில் நாம் விளம்பரம் தேடிக் கொள்வதுதானா...????!

இந்தக் கொடுமைகளையும் நாம் தான் செய்கிறம்..! :lol::unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அண்மையில் யாழ்ப்பாணத்துக்கு விசயம் செய்த சிங்கள அமைச்சன் ஒருவன்.. அவருக்கு திருமணமாகி குழந்தைகளும் உள்ள நிலையில்.. யாழ்ப்பாணத்துப் பெண்ணையும் திருமணம் செய்ய விரும்புவதாகச் சொல்லி இருந்தார்.. இதைப் போய் எங்க எழுதிறது...???! அவனைப் போய் யார் திட்டிறது.. சபிக்கிறது..!

நெடுக்ஸ் அண்ணா, :lol:

தணிகாசலத்தின் செயல் நியாயம், சரி என கூறும் நீங்கள் உட்பட ஏனைய கள உறவுகளும் சிங்கள அமைச்சர் செய்வதையும் சரி என நியாயப்படுத்துவீர்கள் தானே, ஏனென்றால் அவனும் வெளிப்படையகத்தானே கேட்கிறான்?

அவனும் விதவைக்கு தானே வாழ்வுகொடுக்கிறேன் என்கிறான்?

நெல்சன் மண்டேலா மூன்று திருமணம் செய்தவர் என உதாரணம் காட்டும் உங்களுக்கு இதற்கு நியாயம் கற்பிப்பது பெரிய வேலையா? இல்லை ஒருத்தனுக்கு ஒருத்தி என்பது நியதியா? வசதி வாய்ப்புக்கள் இருந்தால் பத்தும் வைத்திருக்கலாம் என்று நிறுவுகிறீர்களே போதாதா?

சம்பந்தப்பட்ட பெண் சிங்களவனை கட்ட சம்மதம் சொன்னால் அதுவும் சரி தானே? அப்படி என்றால் எதற்கு சிங்களவனை போய் நோவான்?

தணிகாசலம் செய்வது நியாயம் என்றால் சிங்கள அமைச்சர் சொன்னதும்,செய்ய நினைப்பதும் சரி தானே?

Link to comment
Share on other sites

இன்னொரு பக்கம்.. போரின் விளைவால்.. முதிர் கன்னிகள்.. விதவைகள் என்றும் அழுகிறம்... நாளுக்கு நான்கு பெண்கள் தற்கொலை என்று நீலிக்கண்ணீர் வடிக்கிறம்..

பிறகு ஒருவர் முன் வந்தால்.. அவரை மட்டமும் தட்டிறம்... 26 வயசு வித்தியாசம் வேற பார்க்கிறம்... ஆனால் தற்கொலை செய்ய விடுவம்....! ஏன்.. ஒருவர் 26 வயசு வித்தியாசத்தில ஒரு விதவைக்கு வாழ்வு கொடுக்கிறதில.. யாழ் களத்தில உள்ளவைக்கு என்ன நஸ்டம் வந்திச்சுது...???!

எல்லாம் அறியாமையின் கோளாறுகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி எல்லாமா.... தமிழர் இருப்பார்கள்?

.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் அண்ணா, :unsure:

தணிகாசலத்தின் செயல் நியாயம், சரி என கூறும் நீங்கள் உட்பட ஏனைய கள உறவுகளும் சிங்கள அமைச்சர் செய்வதையும் சரி என நியாயப்படுத்துவீர்கள் தானே, ஏனென்றால் அவனும் வெளிப்படையகத்தானே கேட்கிறான்?

அவனும் விதவைக்கு தானே வாழ்வுகொடுக்கிறேன் என்கிறான்?

நெல்சன் மண்டேலா மூன்று திருமணம் செய்தவர் என உதாரணம் காட்டும் உங்களுக்கு இதற்கு நியாயம் கற்பிப்பது பெரிய வேலையா? இல்லை ஒருத்தனுக்கு ஒருத்தி என்பது நியதியா? வசதி வாய்ப்புக்கள் இருந்தால் பத்தும் வைத்திருக்கலாம் என்று நிறுவுகிறீர்களே போதாதா?

சம்பந்தப்பட்ட பெண் சிங்களவனை கட்ட சம்மதம் சொன்னால் அதுவும் சரி தானே? அப்படி என்றால் எதற்கு சிங்களவனை போய் நோவான்?

தணிகாசலம் செய்வது நியாயம் என்றால் சிங்கள அமைச்சர் சொன்னதும்,செய்ய நினைப்பதும் சரி தானே?

தணிகாசலம் என்ற மனிதன்.. தனது இனம் சார்ந்து ஒரு பெண்ணை தானே அதுவும் அவர்கள் விரும்பினால் செய்வன் என்று தானே சொல்லி இருக்கிறார். அவர் ஒன்றும் இராணுவத்தை கொண்டு வந்து வைச்சுக் கொண்டு தமிழ் பொம்பிளைகளை கலியாணம் கட்டப் போறன் என்று சவால் விடல்லையே..??!

56 வயது மனைவியை இழந்த ஆணை திருமணம் செய்ய 30 வயதுள்ள ஒரு விதவைப் பெண் விரும்பினால்.. அல்லது அவரின் துணையோடு வாழ விரும்பினால் அதை தடுக்கும் உரிமை எமக்கு யாருக்கும் இல்லை. அது சட்டப்படி செல்லுபடியாகும். தணிகாசலம்.. இந்த ரேடியோவுக்கு சொல்லாமல்.. தான் போய் செய்து கொண்டு வந்திருந்தா.. நாங்க என்ன ஊர்வலமா நடத்தி இருக்கப் போறம்.

என்னுடைய நிலைப்பாடு 90 வயது தாத்தாவை 20 வயதுப் பெண் திருமணம் செய்ய விரும்பினால் கூட அதைத் தடுக்கும் உரிமை நம்மிடம் இல்லை. அது அவளின் விருப்பம். அவளுக்கு அந்த முடிவை எடுக்க சட்டப்படி உரிமை இருக்கிறது. அதில் தலையிட நமக்கு உரிமை இல்லை. அதேபோல் 20 வயதுப் பையன் 50 வயது பெண்ணை திருமணம் செய்ய விரும்பினால் கூட அதைத்தடுக்கும் உரிமை சட்டத்துக்கோ எமக்கோ கிடையாது. அது அவர்களின் சொந்த விருப்பு வெறுப்பின் பாற்பட்ட அவர்களின் சொந்த விடயம்.

இதே தலைப்பை ஒரு வெள்ளைகளின் போறத்தில் போட்டு கருத்துக்கேட்டுப் பாருங்கோ.. அதுகள்.. தனிமனித விருப்பத்தை சட்டத்தின் அனுமதியை தான் பார்க்குங்களே தவிர.. தங்கள் தங்களின் சுய ஒழுக்கக்கோவைகளை.. அடுத்தவர்கள் மீது திணிக்காதுகள். பலர் எழுத்தில் சுத்தமா இருந்தாலும்... உண்மையில் அசுத்தமான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

கருணாநிதி 3 பொண்டாட்டியை வைச்சுக்கிட்டு வாழுறார்.. அவரைப் போய் கேள்வி கேட்க முடியுமா.. தண்டிக்க முடியுமா...??! ஆனால் ஒரு அப்பாவி 56 வயது ஆண் தனது விருப்பை சுயமாக வெளியிட உரிமை கிடையாது.. நீங்கள் எல்லாம் சிங்களவனிடம் உரிமை கேட்பதுதான் வேடிக்கையாக உள்ளது. :blink::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

.

தமிழ் இனத்தில் ஒரு, ஆண் மகன் குறைந்தாலும் காரியமில்லை.

பாக்கு ,வெட்டியை... ரெடியாய்... வைச்சுருங்கோ....

.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • ஆழ்ந்த இரங்கல்கள். மேலே  ஏராளன் இணைத்த தினக்குரல் பத்திரிகையில் 1933 ஓகஸ்ட்இல் பிறந்த எதிர்வீரசிங்கம் வயது 89 என்று எழுதியிருக்கிறார்கள். 90 என்றுதானே வரவேண்டும்?. அவர் மத்திய கல்லூரியில் படிக்கும் போது இலங்கை சாதனையை முறியடிக்கும் போது ,  கொழும்பில் வெளிவந்த ஆங்கில பத்திரிகை ஒன்றில் இவரது பெயரை எதிர்வீரசிங்க என்று எழுதியிருந்தது. அப்பொழுது மத்திய கல்லூரியின் அதிபர் சிமித் அவர்கள் ‘எதிர்வீரசிங்க அல்ல நாகலிங்கம் எதிர்வீரசிங்கம்’  என்று எழுதிய கடிதம் அதே பத்திரிகையில் பிறகு வந்தது.  ஆசிய விளையாட்டுப்போட்டியில் தங்கப்பதக்கம் வென்றபின்பு யாழ் புகையிரத நிலையத்தில் இருந்து மத்திய கல்லூரிக்கு அழைத்து வரப்பட்டு ,எதிர்வீரசிங்க அவர்களுக்கு சிறந்த வரவேற்பு பாடசாலையில்வழங்கப்பட்டது.  -  மத்திய கல்லூரியின் பழைய மாணவரான எனது தகப்பனார் சொன்ன தகவல்
    • அட்லீஸ்ட் விஜயலக்சுமிக்கு செய்தது போல் அநியாயம் செய்யாமல் தன்னை நம்பி வந்த பெண்ணை கண்ணியத்தோடு நடத்தினார் என நினைக்கிறேன்🤣. பதில் விளக்கம் போதும் என நினைக்கிறேன்🤣 ஐயகோ….இரு மாநில ஆளுனர்….ஆட்டுகுட்டி கதையை கேட்டு…
    • இல்லை அண்ணாவின் ஆட்சிகாலம் போல இருக்கும்.   
    • அவ‌ங்க‌ள் இட‌த்தில் நேர்மை ஊழ‌ல் இல்லாம‌ இருந்தால் ஏன் த‌மிழ‌ர்க‌ள் திராவிட‌த்தை வெறுக்க‌ போகின‌ம் 2ஜீ ஊழ‌லால் ஒரு இன‌ம் அழிவ‌தை வேடிக்கை பார்த்த‌வ‌ர்க‌ள் பெரியார் ஜாதியை ஒழித்தார் அது தான் குறிப்பிட்ட‌  ஜாதி ம‌க்க‌ள் வ‌சிக்கும் இட‌த்தில் ம‌னித‌க் க‌ழிவை த‌ண்ணீருக்கை க‌ல‌ந்த‌வை....................... சோடா க‌டையில் வேலை பார்த்து விட்டு ம‌ஞ்ச‌ல் வாக்கில் 4புத்த‌க‌த்தோட‌ வ‌ந்த‌வ‌ரின் குடும்ப‌த்துக்கு இத்த‌னை ல‌ச்ச‌ம் கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து ச‌த்திய‌மாய் கோடி காசுக்கு எத்த‌னை 0 என்று என‌க்கு தெரியாது ஆனால் நீட் தேர்வை ர‌த்து செய்ய‌ எங்க‌ளிட‌ம் ர‌க‌சிய‌ம் இருக்கு என்று சொல்லி ப‌ல‌ பிள்ளைக‌ள் நீட்டால் இற‌ந்து போனார்க‌ள் அத‌ற்க்கு பிற‌க்கு உத‌ய‌நிதியின் பெயர் கொல்லிநிதி கொல்லுநிதியின் ம‌க‌ன் இன்ப‌நிதிக்கு தெரியும் கோடி காசுக்கு எத்த‌னை 0 என்று....................திமுக்காவுக்கு ஓட்டு போட்ட‌ ம‌க்க‌ள் ம‌ழை வெள்ள‌த்தால் பாதிக்க‌ப் ப‌ட்ட‌ போது வீட்டுக்குள் இருந்து க‌டும் வேத‌னை ப‌ட்ட‌வை 4000ஆயிர‌ம் கோடி ஒதுக்கி ப‌ணி செய்தார்க‌ளா அல்ல‌து அதையும் ஊழ‌ல் செய்து மூடி ம‌றைத்தார்க‌ளா...........................ஆண்ட‌வா இனி வ‌ள‌ந்து வ‌ரும் பிள்ளைக‌ளுக்கு ந‌ல்ல‌ அறிவைக் கொடு அப்ப‌ தான் கால‌ம் க‌ட‌ந்து த‌மிழ் நாட்டில் ந‌ல் ஆட்சி ம‌ல‌ரும் நாடும் செல்ல‌ செழிப்பாய் இருக்கும் ம‌க்க‌ளும் குறைக‌ள் இல்லாம‌ எல்லா வ‌ச‌தியோடும் வாழுவின‌ம்...............................................  
    • இப்படியா தலைவரே?  😍 பட விளக்கம் போதுமா? இல்லை எழுத்து விளக்கங்களும்  தேவையா? 🤣
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.