Jump to content

-பாகிஸ்தானை பயங்கரவாத நாடாக அறிவிக்க வேண்டும்:


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

02.4.2010-பாகிஸ்தானை பயங்கரவாத நாடாக அறிவிக்க வேண்டும்: இந்தியா

[2010-04-01 20:46:45]

பாகிஸ்தானை பயங்கரவாத நாடாக அறிவிக்க வேண்டும் என இந்திய அமெரிக்க குழு, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளின்டனுக்கு எழுதிய கடித்தில் கேட்டுக் கொண்டுள்ளது.

நியூயோர்க்கில் உள்ள நாராயண் கட்டாரியா என்பவரை தலைவராகக் கொண்டு செயல்படும் இந்த அமைப்பு ஹிலாரிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டிருப்பது:

"பாகிஸ்தான் தீவிரவாதத்திற்கு ஆதரவளித்து ஊக்குவித்து வருகிறது. அந்த நாட்டை அமெரிக்கா பயங்கரவாத நாடாக அறிவிக்க வேண்டும். பாகிஸ்தானிடம் உள்ள அணு ஆயுதங்கள் அனைத்தையும் பறிமுதல் செய்யவேண்டும்.

ஆனால் அவ்வாறு செய்யாமல் தீவிரவாதத்தை ஒழிக்க உதவி செய்வதாகக் கூறி அமெரிக்கா அந்நாட்டுக்கு ஆயுத உதவி செய்கிறது. தெற்காசியப் பிராந்தியத்தில் தீவிரவாதம் உருவாவதற்கு முக்கிய காரணமாக உள்ள நாடு பாகிஸ்தான்தான்.

ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகளுக்கு எதிரான போரில் அமெரிக்கா வெற்றி பெற வேண்டுமானால் முதலில் பாகிஸ்தான் மீது கவனத்தை திருப்ப வேண்டும்.

லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பு இந்தியாவில் தீவிரவாத தாக்குதல் நடத்துவதற்காக சீனாவிடம் இருந்து ஆயுதங்கள் வாங்கி இருப்பதாக இந்திய உளவுத்துறை; தெரிவித்துள்ளன.

பாகிஸ்தான் அரசின் ஆதரவு இல்லாமல் லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பு இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட முடியாது' என அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

http://vettrinews.com/full_worldnews_view.php?id=663

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாகிஸ்தானில் நடந்த பல குண்டுவெடிப்புகளுக்கு இந்திய உளவு அமைப்புக்களே காரணம். அதற்காக இந்தியாவையும் பயங்கரவாத தேசமாக அறிவிப்பதோடு அதனிடம் உள்ள அணுகுண்டுகள் மற்றும் பயங்கர ஆயுதங்களை ஐநா சபை பறிமுதல் செய்ய வேண்டும் என்று இத்தாள் கேட்டுக் கொள்ள வேண்டும். இதனை பாகிஸ்தான் செய்தால்.. தான் பாகிஸ்தானில் நிகழும் அமைதியின்மையை கட்டுப்படுத்தலாம்.

பாகிஸ்தானில் பயங்கரவாதத்தை இந்தியாவே தூண்டி வருகிறது. சிறீலங்காவில் கூட பயங்கரவாதம் என்று தானே பின்னாளில் அறிவித்த தமிழ் போராளி அமைப்புக்களை இந்தியாவே உருவாக்கி பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுத்தி தனது நாட்டின் இருப்பை பாதுகாக்க முயன்றதை இங்கு உதாரணமாகக் காட்டலாம்.

ஜே ஆர் ஜெயவர்த்தன பல தடவைகள் இந்திரா காந்தியை பயங்கரவாதிகளுக்கு பயிற்சி அளித்து வளர்ப்பதை நிறுத்தக் கோரிய போதும் இந்தியா அப்படி செய்யவில்லை. ஆனால் பின்னர் தானே பிராந்திய ஊடுருவலுக்காக தானே உருவாக்கிய அமைப்புக்களை ஒடுக்க இந்திய அமைதிப்படை என்ற போர்வையில் ஆக்கிரமிப்புப்படையை இலங்கைக்கு அனுப்பி வைத்தது.

எனவே கடந்த கால இந்திய வெகுளித்தன செயற்பாடுகளில் இருந்து இந்தியாவின் பயங்கரவாதச் செயற்பாடுகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அந்த நாட்டை உலகின் மோசமான பயங்கரவாத தேசமாக அறிவித்து உலக நாடுகள் அதற்கு எதிராக இராணுவ நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனை பாகிஸ்தான் தனது பாதுகாப்பிற்காக சீனாவுடன் இணைந்து செயற்படுத்தினால் இந்திய பயங்கரவாதத்தால் சீரழிந்து போன ஈழத்தமிழர்களும் ஆதரவளிப்பார்கள்.

Link to comment
Share on other sites

ஈவிரக்கமற்ற பயங்கரவாதிகளாகவும், மிலேச்சர்களாகவும் இந்தியாவை உடன் பிரகடனப்படுத்த வேண்டும்.

ஐ. நா. சபையில் பயங்கரவாதிகள் சபை ஒன்றை நிறுவி அதில் இந்தியா, ஸ்ரீலங்கா போன்ற நாடுகளை இணைக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

நியூயோர்க்கில் உள்ள நாராயண் கட்டாரியாவை பயங்கரவாதியாக அறிவித்து, அவரது குழுவையும் உடன் தடை செய்வதோடு சொத்துக்கள் முழுவதையும் பறிமுதல் செய்ய வேண்டும்.

Link to comment
Share on other sites

நாகரீகம் வளராத காட்டுமிராண்டிகளை கொண்ட மனிதாபிமானம் இல்லாத நாடாக இந்தியாவை அறிவுக்க வேணும்...

Link to comment
Share on other sites

அப்போ இவ்வளவு நாளும் புனித நாடாகவோ இருந்தது.ஏற்கனவே பல நாடுகள் பாகிஸ்தானுக்கு செல்வதை தவிர்க்கும்படி அறிவித்திருந்ததே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அமைதிப்பூங்காவாக இருந்த அவுஸ்திரெலியாவில் காட்டுமிராண்டிகளான வட இந்தியர்கள் வந்ததினால் அவுஸ்திரெலியாவில் அமைதி கெட்டு விட்டது. இதனால் அவுஸ்திரெலியாவில் இருக்கும் பழக்கவழக்கங்கள் தெரியாத காட்டுமிராண்டிகளான வட இந்தியர்களை நாடு கடந்த அவுஸ்திரெலியா அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

02.4.2010-பாகிஸ்தானை பயங்கரவாத நாடாக அறிவிக்க வேண்டும்: இந்தியா

[2010-04-01 20:46:45]

பாகிஸ்தானை பயங்கரவாத நாடாக அறிவிக்க வேண்டும் என இந்திய அமெரிக்க குழு, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளின்டனுக்கு எழுதிய கடித்தில் கேட்டுக் கொண்டுள்ளது.

நியூயோர்க்கில் உள்ள நாராயண் கட்டாரியா என்பவரை தலைவராகக் கொண்டு செயல்படும் இந்த அமைப்பு ஹிலாரிக்கு எழுதியுள்ள கடிதத்தில்

-------

நாரயண் கட்டாரியா ஏன் கில்லாரிக்கு கடிதம் எழுதி பாகிஸ்தானை பயங்கரவாத அறிவிக்க வேண்டும் என்று கேட்கிறார்.

கில்லாரிக்கு பாகிஸ்தானாலை ஒரு பிரச்சினையும் இல்லையே....

இந்தியாவுக்கு, பாகிஸ்தானாலை பிரச்சினை என்றால் மன்மோகன் சிங்குக்கோ, சோனியாவுக்கோ கடிதம் எழுதி நேரடியாகவே பாகிஸ்தானை பயங்கரவாத நாடாக அறிவிக்க வேண்டியது தானே....

நேரடியாக அறிவிக்க பயம் ..... அதுக்குள்ளை அமெரிக்காவை துணைக்கு இழுத்துக் கொண்டு வல்லரசு கனவிலை இந்தியா இருக்குது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொந்தியாவை பயங்கரவாத நாடாக அறிவிக்க புலம்பெயர்ந்துவாழும் ஈழதோழர்கள் நடவடிக்கை எடுக்க முடியுமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாராயண் கட்டாரியாவுக்கு கடிதத்துக்கு கிளாரியிடம் இருந்து பதில் வராவிட்டால், கடிதம் எழுதி உலகசாதனை படைத்த கலைஞர் கருணாநிதியிடம் உதவி கேட்கலாம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.