Jump to content

கல்கி ஆசிரம மோசடிகள்: பக்தி எனும் போர்வையில் ஒரு படுபயங்கர பிஸினஸ்!

sam.s

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

எல்லா மதங்களிலும் குறை உள்ளது...ஆனால் சில பேர் இந்து மதத்தில் உள்ள குறைகளை மாத்திரம் தூக்கிப் பிடிக்கிறார்கள் கேட்டால் முதலில் எமது மதத்தில் உள்ள பிழைகளை களைவோம் பிறகு பிற மத பிழைகளை கதைப்போம் என்கிறார்கள்...நாங்கள் தான் எங்கள் மதத்தில் உள்ள பிழை,குறைகளை கதைக்கிறோம் அதே போல மற்ற மதத்தவர் தங்கள் மதங்களில் உள்ள பிழைகளை,குறைகளை பற்றி கதைக்கிறார்களா? அந்த மதத்திற்கு எதிரானவர்களும் நாத்திகர்களும் தான் அது பற்றி கதைக்கிறார்கள்...எங்கட மதம் எல்லாருக்கும் ஒரு சாக்கடையாய் போய் விட்டது.

Link to comment
Share on other sites

  • Replies 80
  • Created
  • Last Reply

ரதி

குறைவாக இருந்தாலும் இஸ்லாத்தைத் தவிர அநேகமான எல்லா மதங்களிலும் இப்படியான பல விடயங்கள் நடக்கின்றன. இதேபோல் அநேகமான இடங்களில் எல்லாம் வாதப் பிரதி வாதங்களும் நடக்கின்றன. சிங்கவங்களுகுள்ளும் பல பிச்சல் புடுங்கல்கள் தான். அனால் ஆமத்துருவுக்கு இருக்கும் அதிகாரம் அல்லது அதிகார தொடர்புகளால் அதெல்லாம் வெளியில் வருவதில்லை.

நடக்கிற எல்லா விசயங்களையும் நாங்கள் சரி பிழை பார்க்க முடியாதுஇ குறிப்பாக மற்றைய மதத்தில் நடக்கும் அநியாயங்களை நாங்கள் சொல்லப்போனால் மதப்பிரச்சனை பின்னர் இனப்பிரச்சனை ஆயிடும்.

ஆக அவரவர் தங்கள் தங்கள் புண்ணுக்கு மருந்து போடுவதுதான் சிறந்தது.

பின்குறிப்பு திராவிடத் தமிழன் இந்துவுமில்லை சைவனுமில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பின்குறிப்பு திராவிடத் தமிழன் இந்துவுமில்லை சைவனுமில்லை.

உண்மையை உரக்கச் சொன்னதினால் சூறாவளிக்கு என்சார்பில் ஒரு பச்சைப் புள்ளி. :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லா மதங்களிலும் குறை உள்ளது...ஆனால் சில பேர் இந்து மதத்தில் உள்ள குறைகளை மாத்திரம் தூக்கிப் பிடிக்கிறார்கள் கேட்டால் முதலில் எமது மதத்தில் உள்ள பிழைகளை களைவோம் பிறகு பிற மத பிழைகளை கதைப்போம் என்கிறார்கள்...நாங்கள் தான் எங்கள் மதத்தில் உள்ள பிழை,குறைகளை கதைக்கிறோம் அதே போல மற்ற மதத்தவர் தங்கள் மதங்களில் உள்ள பிழைகளை,குறைகளை பற்றி கதைக்கிறார்களா? அந்த மதத்திற்கு எதிரானவர்களும் நாத்திகர்களும் தான் அது பற்றி கதைக்கிறார்கள்...எங்கட மதம் எல்லாருக்கும் ஒரு சாக்கடையாய் போய் விட்டது.

வணக்கம் ரதியக்கா!

சிலபேர் இந்து மதத்தை மட்டுமே இழுக்கிறார்கள்?

அதில் நானும் அடக்கம். நிற்சயமாக நான் பல இடங்களில் இந்துமத்தை இழுக்கிறேன் காரணம் எனது சொந்த மதம் அதுதான். என்வீட்டுக்குள்ளேயே கள்வர்களை ஒழித்து வைத்துகொண்டு களவுக்கு எதிரா பிரச்சாரம் செய்யும் போலி வேலைக்கு எனக்கு அவ்வளவு இஸ்டமில்லை அதுதான் காரணம். தவிர இந்துமதம் என்பது எம்மீது திணிக்கபட்ட ஒன்று தமிழர்களால் ஏற்றுகொள்ள பட்டதில்லை. கடவுளின் பயத்தால் வாயடைக்க வைக்கபட்டுள்ளது. அதுதான் பாம்பை கண்டால் பாலுட்டி சக மனிதரை கண்டால் தொழிலின் அடிப்படையில் காறி ஊமிழ்வது போன்ற கொடுமைகளை செய்யும் அளவிற்கு கொண்டுவந்துவிட்டுள்ளது. கிறிஸ்தவ மதமும் எம்மீது ஆங்கிலேயரால் திணிக்கபட்ட மதம்தான். ஆக அடிகளும் முடிகளும் இல்லை என்று நாம் கிராமங்களில் வாழ்ந்தபோது சொன்னார்கள் நாம் அவற்றை தேடவில்லை தேட கூடிய வசதியுமில்லை. இப்போது கூகிளை தட்டியே பலதை அறியகூடிய காலம் வந்தபின்பு தேடல் சுலபமானது. அடிகள் முடிகள் எல்லாமே தெட்டதெளிவாக nதிhகின்றபோது. அதையேன் பார்க்கிறீர்கள் என்ற உங்களின் கேள்வி புரியவில்லை?

அப்போ எமக்கு பக்த்தியில் முத்தியும் அடைய அதிகாரமில்லை...........

பகத்தியை போலியென்று கண்டால் கைவிடவும் அதிகாரமில்லை.............

இந்த அதிகாரங்களை எமக்கு கடவுள் நேரடியாக விதிக்கவில்லை............. இந்த இடையில் நிற்கும் தரகு கூட்டம் யார்?

இரண்டு தரப்பு உள்ளது. ஒன்று ஏமாற்று சிர்த்தார்த்தங்களை உருவாக்கி ஓசியில் வயிறு வளர்க்கும் கூட்டம். மற்றது கல்கிசாமி நான் கடவுளின் அவதாரம் என்றால் பொம்பிளை பிள்ளைகளையும் கொண்டு சென்று அருள்வாங்க தனியறைக்குள் அனுப்பி வைக்கும் மூட்டாள் கூட்டம்.

இந்த இரண்டில் ஒன்றுக்குள் அடங்கினாலேயே தற்போதுள்ள இந்துமதத்தை இப்படியே உள்ளபடி ஏற்றுகொள்ள முடியும். இந்த இரண்டுக்குள்ளும் அடங்க விரும்பாதவர்களுக்கு வேறு வழியில்லை திருத்தி அமைக்க வேண்டும் போலிகளை கடைய வேண்டும். மனிதனை பண்பாக்க கூடிய சமாச்சாரங்களை மட்டுமே சமயம் என்றெளவில் உருவாக்க வேண்டும்.

இதில் நீங்கள் எந்த தளத்தில் இருக்கின்றீர்கள் என்பதை பொறுத்ததே. என்னோடு முரண்படுவதும் ஒத்துபோவதும் தங்கியுள்ளது.

Link to comment
Share on other sites

உண்மையை உரக்கச் சொன்னதினால் சூறாவளிக்கு என்சார்பில் ஒரு பச்சைப் புள்ளி. :rolleyes:

ஆ... முதன் முதலா எனக்கொரு பச்சை... :rolleyes:

நெடுக சிவப்புச் சிவப்பாவங்கி நல்லா நொந்துபோனன் :rolleyes:

நன்றி காவாலி :rolleyes:

Link to comment
Share on other sites

எல்லாவற்றையும் வாசித்தேன்.தப்பு செய்யும் வரை சேர்ந்தே செய்வது.மாட்டியவுடன் மற்றவர்களை மாட்டிவிடுவதும் இயற்கையாக நடப்பதே.ஆசை என்ற ஒன்று மனதிலே இருக்கும் வரைக்கும் இவைகள் எல்லாம் நடக்கத்தான் செய்யும்.இந்த ஆச்சிரமங்களுக்கு போகிற யாராவது எங்களுக்கு உலகிலே இருந்த ஆசாபாசங்கள் எல்லாம் தீர்ந்துவிட்டது ஆன்மீகம் தான் தேவை,எங்களுக்கு சொத்து சுகம் தேவையில்லை முத்தி நிலை அடயவேண்டும் என்றா நினைத்து போனார்கள்.இல்லவே இல்லை.ஏதோ ஒன்றாவது கிடைக்க வேண்டும் என்று தானே போனார்கள்.அவர்களும் சம்பாதிக்கிறார்கள் இடையில் எத்தனை முகவர்கள் அவர்களும் சம்பாதிக்கிறார்கள்.இவர்களின் ஆச்சிரமம் போனவர்கள் பலனடைந்திருக்கிறார்கள் என்பதையும் மறுப்பதற்கில்லை.இவர்கள் இணையத்தில் உள்ள குறுக்குவழி(shortcut) போன்றவர்கள்.அடிமேல் அடி வைத்தால் அம்மியும் நகரும் அல்லவா அதே போல மந்திரங்களை தொடர்ந்து உச்சரிக்க பண்ணுகிறார்கள்.உங்களுக்கு வசியத்தன்மையை உருவாக்குகிறார்கள் உ+ம்:காயத்திரி மந்திரத்தை தொடர்ந்து உச்சரித்து வந்தால் செய்துபாருங்கள் வித்தியாசத்தை நீங்களே உணருவீர்கள் அத்துடன் வெள்ளை சுவரில் 6அங்குல இடைவெளியில் இரண்டு கறுத்த பொட்டுக்களை ஒட்டிவிட்டு ஒவ்வொரு நாளும் பார்த்து வாருங்கள் என்றைக்கு இரண்டு பொட்டும் ஒரு பொட்டாகத்தெரிகிறதோ அன்று உங்கள் கண்கள் ஒளி பெற்று விடும் இவைகளை வைத்து தான் மக்களும் எடுபடுகிறார்கள் ஒருசில நன்மையும் பெறுகிறார்கள்.இங்கே சாதி பற்றி குறிப்பிடபட்டுள்ளது.ஆறுமுக நாவலர் காலத்து சாதி ஒருவன் செய்யும் தொழிலை வைத்து தான் உருவாக்கப்பட்டது.இடையில் உள்ளவர்கள் மாற்றிவிட்டார்கள்.சாதி குறைந்தவருடன் இருட்டில் வாழலாம் திருமணம் முடிக்க கூடாது.என்பது இவர்களின் வரட்டு வாதம்.தமிழ் நாட்டில் இலங்கையிலும் தமிழ் நாட்டிலும் நடப்பது ஒரே ஆட்சிதான் எங்களின் பின்னே தான் மக்கள் அணி திரள வேண்டுமே ஒழிய மற்றவர்கள் பின் அல்ல ஆகவே எந்த அணியும் எமக்கெதிராக திரள முன் அழிப்பதே சிறந்தது.அதைவிட நாஸ்திகன் ஆட்சி மத நம்பிக்கையால் மக்கள் அணிதிரளாமல் இருக்க வேண்டுமல்லவா இதைத்தான் சண் டிவி செய்கிறது ஆகவே உறவுகளே இதனால் நாங்கள் பிளவுபடக்கூடாது.இந்த தலைப்பை வாசித்த போது இங்கேயும் இலங்கை உளவுப்படை புகுந்து விட்டதோ என்ற சந்தேகம் தான் வந்தது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மருதங்கேணி நான் மனிதர்களை சாமியார் என கும்பிடுவதில்லை...கல்கி சாமி செய்ததையோ அல்லது மற்ற சாமியார் செய்ததையோ நான ஆதரிக்கவில்லை...நீங்கள் இந்து எனச் சொல்கிறீர்கள் ஆனால் அது உங்கள் மீது திணிக்கப்பட்ட மதம் என சொல்கிறீர்கள் அப்படியாயின் நீங்கள் உண்மையில் யார்?...எனக்கு புரியவில்லை இந்து மத சித்தாந்தங்கள் எந்த வகையில் மக்களை ஏமாற்றுகிறது எனச் சொல்வீர்களா?...கல்கி சாமி நான் கடவுளின் அவதாரம் எனக் கூறுபவர்களை பற்றி கதைக்க தேவையில்லை ஏனென்றால் நானோ நீங்களோ அவர்களை நம்பவில்லை.

சூறாவளி திராவிடத் தமிழன் இந்துவுமில்லை,சைவனுமில்லை என்றால் உண்மையில் அவன் யார்?

உண்மையில் அவர்கள் திராவிடர்கள்.

:rolleyes::rolleyes: :rolleyes: :rolleyes:

ஆதாவது திராவிடன் என்பது நாங்கள் தான்

எங்கள் மூதாதையர்கள் இந்துக்கள் இல்லை அவர்கள் சைவர்களும் இல்லை.

இந்து மதமும் சைவமும் இடையில் எங்களுக்குள் புகுத்தப்பட்ட ஒன்று.

அப்படிஎன்றால் திராவிடர்களுக்கு மதம் என்று ஒன்று இருக்கவில்லையா என்று கேட்கத் தோன்றுகிறதா?

முழுக்க அறிய விரும்பின் உங்களுக்கு தேவையான அறிவியல் செல்வத்துக்கு வழிகாட்ட முடியும்

ஆனால் நீங்கள் தான் அறியவேண்டும். :blink:

என்னொமொரு பின்குறிப்பு: இந்துமதத்துக்கு முன்னரும் அதுக்குப் பின்னரும் திராவிடர்கள் திராவிடர்கள் தான் எந்த வகையிலும் மாறவில்லை.

எதையும் மாற்ற முடியாத ஒன்றை எல்லாத்தையும் மாற்றுமென்று நம்பி சுயபுத்தியை விட்டு இன்னொருத்தனுக்கு அடைவு வைத்து வாழவேண்டுமா?

மதங்களும் புரோகிதர்களும் எதை இருக்கென்று சொல்லி காலா காலமாக வயிறு வளர்த்தார்களோ அதையேன் இன்று சாமியார்கள் செய்கின்றார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆ... முதன் முதலா எனக்கொரு பச்சை... :rolleyes:

நெடுக சிவப்புச் சிவப்பாவங்கி நல்லா நொந்துபோனன் :rolleyes:

நன்றி காவாலி :rolleyes:

இல்லை சூறாவளி (அண்ணை) தொடக்கத்தில் இருந்தே உங்கள் கருத்தை வாசித்துக்கொண்டு தான் வருகின்றேன். உங்களுடைய கருத்துத்தான் என்னுடைய கருத்தும். நீங்கள் அற்புதமாக உங்கள் கருத்தை முன்வைக்கிறீர்கள். பிறகு நான் இடையில் வந்து குழப்புவான் எண்டு சும்மா இருக்கிறன்.

"தனக்கு பால் ஊற்றததால் உன்னை சொர்க்த்திற்கு அனுப்ப முடியாது என்று கடவுள் சொன்னால். காறி உமிழ்ந்துவிட்டு நரகத்திற்கு போவதையே நான் விரும்புகிறேன்" என்ற வார்த்தை ஆயிரத்தில் ஒரு வார்த்தை.

இந்து மதத்தையும் அதனுடன் தொடர்புபட்ட சாதியத்தையும் பற்றிப் பேசினால், பலருக்கு இருப்புக் கொள்ளாது, ஒன்றில் கிறிஸ்தவப் பட்டம் கிடைக்கும் இல்லாவிட்டால் குறைந்த சாதிப்பட்டம் கிடைக்கும். தமிழன் என்று சொன்னால் மனச்சாட்சிதான் அவன் கடவுள், ஆண் - பெண் என்பது தான் அவன் சாதி. அதற்காக எந்தப் பட்டத்தையும் கேட்கவும் ஆயத்தம். மதங்கள் எல்லாம் வெறும் வியாபாரம்தான்.

தொடருங்கள், இந்த ஒரு தமிழனாவது உங்களுடன் கடைசிவரை இணைந்து நிற்பான். :rolleyes:

Link to comment
Share on other sites

நான் பரதேசி இல்லை என்று எங்காவது நான் சொன்னேனா?

எனது வாதம் அதுவல்ல அதைபற்றிய முடிவை நான் எடுக்க முடியாது.

எனது வாதம் சாதி வெறியை இந்தியாவில் இருந்து இந்துமதம் ஊடாக இறக்குமதி செய்து. எரிகிற நெருப்பில் எண்ணை ஆறுமுகநாவலார் ஊற்றினார் என்பதுதான். ஈழத்தில் சாதி வெறியை துண்டினார் அதற்கு சார்பான சொற்பிரயோகங்களை தனது பாடல்களிலேயே பாடியுள்ளார் என்பதுதான்.

நீங்கள் கொஞ்சம் மறைந்து மறைந்து நின்றீர்கள்.......

எனது கருத்து விளங்காமல்தான் சிவப்பு புள்ளி குத்துகின்றீர்கள் என்று முன்பு நினைத்தேன்.

எல்லாம் விளங்கிதான் செயற்படுகின்றீர்கள். இந்து மதத்தின் அழுக்குகளை சுட்டிகாட்டடினால் பொதுவாக ஜனாஸ்தானம் தருவார்கள்.

இப்போ சாதி கொடுமைகளை கொஞ்சம் தொட்டுள்ளதால்.............. இனி என்ன தயக்கம். ஏதாவது ஒரு குறைவாக நீங்கள் எடைபோடும் சாதியின் முத்திரை ஒன்றை குத்திவிட்டு போகவேண்டியதுதானே?

சுகங்களை கொஞ்சம் விடுங்கள் என்றால் எல்லா மனிதருக்கும் அதில் முரண்பாடுதான். ஆனால் சிங்களவனிடம் மட்டும் அதை எல்லோரும் எதிர்பார்பதுதான் புரியாமல் இருக்கின்றது.

நான் எவ்வகையிலும் சாதி முறைமையை ஆதரிக்கவில்லை. குறிப்பாக தென்தமிழீழத்திலே சாதிவேறுபாடுகள் பெருமளவில் இல்லை. ஆனால் அங்கு வதியும் வட தமிழீழ மக்கள் தான் சாதி முறைமையை தூக்கிப்பிடிக்கிறார்கள் என்பது உண்மை.

நீங்கள் எமது மத பெரியவர் ஒருவரை தகாத வார்த்தை கொண்டு பிரயோகிப்பதை தான் என்னால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை. வேற்று மத பெரியவர் ஒருவரை நீங்கள் இவ்வாறு விமர்சித்தால் தங்களது நிலைமை எவ்வாறு இருக்கும்? மற்றவர்களுடைய நம்பிக்கைகளை தாக்குவதற்கு யாருக்கும் உரிமையில்லை என்பதை நினவிற்கொள்க.

இல்லை சூறாவளி (அண்ணை) தொடக்கத்தில் இருந்தே உங்கள் கருத்தை வாசித்துக்கொண்டு தான் வருகின்றேன். உங்களுடைய கருத்துத்தான் என்னுடைய கருத்தும். நீங்கள் அற்புதமாக உங்கள் கருத்தை முன்வைக்கிறீர்கள். பிறகு நான் இடையில் வந்து குழப்புவான் எண்டு சும்மா இருக்கிறன்.

"தனக்கு பால் ஊற்றததால் உன்னை சொர்க்த்திற்கு அனுப்ப முடியாது என்று கடவுள் சொன்னால். காறி உமிழ்ந்துவிட்டு நரகத்திற்கு போவதையே நான் விரும்புகிறேன்" என்ற வார்த்தை ஆயிரத்தில் ஒரு வார்த்தை.

இந்து மதத்தையும் அதனுடன் தொடர்புபட்ட சாதியத்தையும் பற்றிப் பேசினால், பலருக்கு இருப்புக் கொள்ளாது, ஒன்றில் கிறிஸ்தவப் பட்டம் கிடைக்கும் இல்லாவிட்டால் குறைந்த சாதிப்பட்டம் கிடைக்கும். தமிழன் என்று சொன்னால் மனச்சாட்சிதான் அவன் கடவுள், ஆண் - பெண் என்பது தான் அவன் சாதி. அதற்காக எந்தப் பட்டத்தையும் கேட்கவும் ஆயத்தம். மதங்கள் எல்லாம் வெறும் வியாபாரம்தான்.

தொடருங்கள், இந்த ஒரு தமிழனாவது உங்களுடன் கடைசிவரை இணைந்து நிற்பான். :rolleyes:

தமிழர்களிலே கிறிஸ்தவர்கள் இருக்கின்றார்கள். அவர்களும் சாதி பார்க்கின்றார்கள். ஆகவே கிறிஸ்தவ மதத்தையும் நீங்கள் விமர்சிக்கலாமே. இதிலிருந்து தெரிகிறது உங்களுடைய பிரச்சனை சாதி இல்லை இந்து மதமே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் எவ்வகையிலும் சாதி முறைமையை ஆதரிக்கவில்லை. குறிப்பாக தென்தமிழீழத்திலே சாதிவேறுபாடுகள் பெருமளவில் இல்லை. ஆனால் அங்கு வதியும் வட தமிழீழ மக்கள் தான் சாதி முறைமையை தூக்கிப்பிடிக்கிறார்கள் என்பது உண்மை.

நீங்கள் எமது மத பெரியவர் ஒருவரை தகாத வார்த்தை கொண்டு பிரயோகிப்பதை தான் என்னால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை. வேற்று மத பெரியவர் ஒருவரை நீங்கள் இவ்வாறு விமர்சித்தால் தங்களது நிலைமை எவ்வாறு இருக்கும்? மற்றவர்களுடைய நம்பிக்கைகளை தாக்குவதற்கு யாருக்கும் உரிமையில்லை என்பதை நினவிற்கொள்க.

தமிழர்களிலே கிறிஸ்தவர்கள் இருக்கின்றார்கள். அவர்களும் சாதி பார்க்கின்றார்கள். ஆகவே கிறிஸ்தவ மதத்தையும் நீங்கள் விமர்சிக்கலாமே. இதிலிருந்து தெரிகிறது உங்களுடைய பிரச்சனை சாதி இல்லை இந்து மதமே.

நீ குறைந்த சாதி சேர்சுக்குள் வரதே என்று கிஸ்தவ தேவலாயங்கள் சொல்கின்றனவா?

சாதிகளின் பித்தலாட்டாங்களாலேயே பலபேர் ஜெகோவா பென்ரிகோஸ்து போன்ற கிறிஸ்தவ கிளை மதங்களுக்க தாவினார்கள் என்பது உண்மை. தவிர கிறிஸ்தவ சமயம் என்பது ஏற்கனவே சாதியபிளவுபாட்டால் கிடந்தவர்களிடம் திணிக்கபட்டதால்தான் இந்தியாவிலும் ஈழத்திலும் கிறிஸ்தவர்களிடம் சாதிவேற்றுமைகள் வேரோடிகிடக்கின்றன. இங்கே கிறஸ்தவ மதம் உயர்ந்தது என்பது வாதமில்லை. ஆனால் இந்துமதமே சாதியின் பெயரால் மனிதனை பிரித்தது என்பதே எனது சுட்டிகாட்டு. தாம் உயர்ந்த சாதி எனும் அகங்காரத்தில் சக மனிதர்களுக்கு இளைக்கபட்ட கொடுமைகள் எழுத்தில் அடங்காது. அது எவ்வாறு கடவுளின் பெயரால் உருவாகி மதம் வழியாக வந்தது என்பதே சிந்தனைக்கு உட்டபடுத்த வேண்டியது.

ஆறுமுகநாவலாரை ஒரு பெரியாராக ஏற்றுகொண்டுள்ளதால்தான் உங்களுக்கு சுடுகின்றது.......... அதுவும் இந்து மதம் கட்டவிழ்த்துவிட்ட புராண கட்டுகதைகளைபோல எங்கள் மீது திணிக்கபட்ட ஒன்று என்பதால் எல்லோரும் அதை ஏற்றுகொண்டோம் ஆறுமுகநாவலாருக்கு தலைவணங்கினோம். பின்பு அவருடைய பாடல்களை பாட பாடதான் சாதியத்தில் எவ்வளவு பெருமிதத்தை அவர் கண்டுள்ளார் என்பது புரிகின்றது. வாழிகாட்டி என்பவர் அனைவருக்கும் வழிகாட்டியாக இருக்க வேண்டும். ஒரு குறிபிட்ட சாதியினருக்கே கோவிலுக்குள் உரிமை உண்டு என்று பாட கூடியவரிடம் இறைபக்த்தி எப்படி இருந்திருக்கும் என்பது கேள்விக்குரியது............. மாறாக அவரிடம் சாதிபற்று இருந்தது என்பது தெட்ட தெளிவானது.

ஆறுமுகநாவலாரின் கதை முடிந்துபோனது ஏதோ தழிழுக்கும் சில பாடல்களை பாடியுள்ளார் என்று வேண்டுமானால் பாராட்டிவிட்டு போகலாம் அதில் எனக்கும் சம்மதமே. ஆனால் குறைகள் சுட்டிகாட்ட படவேண்டும் அதுவே இனிமேல் காலத்தில் உருவாகுபவர்களுக்கு ஒரு தெளிவான சிந்தனையை கொடுக்க கூடியது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களிலே கிறிஸ்தவர்கள் இருக்கின்றார்கள். அவர்களும் சாதி பார்க்கின்றார்கள். ஆகவே கிறிஸ்தவ மதத்தையும் நீங்கள் விமர்சிக்கலாமே. இதிலிருந்து தெரிகிறது உங்களுடைய பிரச்சனை சாதி இல்லை இந்து மதமே.

தமிழன் என்று சொல்லிக்கொண்டு யூத, ஐரோப்பிய பண்பாடுகளைச் சுமந்து நிற்கும் கிறிஸ்தவ மதத்தை ஆதரிக்க வேண்டிய தேவை எங்களுக்கு இல்லை. தற்போது கிறிஸ்தவ தமிழர்களாக இருப்பவர்கள் முன்னர் பிராமணர்களால் இந்துவாக மதமாற்றம் செய்யப்பட்டு பின்னர் கிறிஸ்தவ பாதிரிகளால் மதம்மாற்றம் செய்யப்பட்டவர்களே. எனவே அவர்களிடமும் இந்து மதத்தின் நச்சுவேரான சாதியம் இருப்பது என்பது உண்மையானது. தமிழன் ஆண்டாண்டு காலமாக இந்த மத வாதிகளால் ஏமாற்றப்பட்டு வந்திருக்கிறான். பிராமணர், பௌத்தர், ஜைனர், கிறிஸ்தவர், இஸ்லாமியர் என காலத்துக்கு காலம் தமிழனை ஏய்த்துப் பிழைத்து வந்துள்ளனர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சூறாவளி எழுதுங்கள் திராவிடர் ஆகிய தமிழர்கள் யாரை வழிபட்டார்கள்...யாரை வழிபட வேண்டும்?

மருதங்கேணி சைவர்கள் மதம் மாறியதற்கு தனிய சாதி வெறி மாத்திரம் காரணம் இல்லை...மற்ற மதத்திற்கு மாறினால் அவர்களுக்கு இலவசமாய் நிதி,பொருளாதார உதவி கிடைத்தது....அவர்களுக்கு உழைத்து சாப்பிட பஞ்சி.

உண்மைதான். ஆங்கிலேயர் ஈழத்தினை ஆட்சி செய்தபோது உயர்சாதியென தம்மை விளித்துக்கொள்ளும் பல இந்துக்கள் உயர் பதவிகளைப் பெறுவதற்காகவும் ஆங்கிலேயரின் பள்ளிகளில் சேர்ந்து கல்விகற்பதற்காகவும் மதம் மாறினார்கள். அதனைவிட பல மக்கள் பலவந்தமாக மதமாற்றம் செய்யப்பட்டார்கள்.

Link to comment
Share on other sites

ரதி யாரை வழிபடவேண்டும் என்னால் சொல்ல முடியாது.

யாரையும் வழிபடவேண்டாம் என்று மாத்திரம் என்னால் சொல்ல முடியும்.

கடந்த காலத்தைப் பார்த்தால் யாரை வளிபட்டாலும் வளிபடாவிட்டாலும் எந்த மாற்றமும் நிகழ்ந்ததாக இல்லை.

திராவிடர்களுக்கு இயற்கைதான் கடவும் தமது முன்னோர்களையும் இயற்கையையுமே அவர்கள் வணங்கினார்கள்.

செந்தமிழன்... நாங்கள் மதங்களைப்பற்றி அதன் பித்தலாட்டங்கள் பற்றி சொல்கிறோம் இதில் நல்லமதம் கேட்டமதம் என்றில்லை. மதங்களின் தோற்றுவாயும் அதுகளின் தத்துவங்கள் சித்தாந்தங்கள் எல்லாம் ஒன்றுதான்.

எங்கேயாவது கிறிஸ்தவம் அல்லது இஸ்லாம் நல்லம் என்று சொன்னோமா? எல்லா இடத்திலும் பித்தலாட்டம்தான்.

அனால் உங்களைப் பார்த்தால் சிரிப்புத்தான் வருது... உந்த விடியோவை இணைத்து கல்கியின் செயலை நீங்கள் நியாயப் படுத்தப் பார்க்கிரஈகளா?

கோட்டுக்குப் பத்தில் கோடுகள் போடுவதால் கோடுகள் அழிவதில்லை நண்பரே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாதிவெறி மட்டுமே காரணம் என்பது எனது கருத்துமில்லை. ஆங்கிலேயேரின் காலத்தில் அரசாங்க உத்தியோகத்திற்காவே பலர் மாறினார்கள். ஆனால் அதன்பின்பு ஆங்கிலேயர் விட்டுசென்ற பின்பு பலரும் ஜெகோவா போன்ற மதங்களுக்கு தாவியதற்கு சாதியமே மூலகாரணமாக இருந்தது. அந்தமதங்கள் எல்லோரையும் அன்புடன் அழைத்தார்கள்.............. ஆனால் உயர்மட்டத்தில் அங்கும் மோசடிதான் இருந்தது. அடிமட்டத்திற்கு எட்டும்படியாக அது இருக்கவில்லை.

செந்தில்அண்ணே......

உங்களின் வீடியோ நன்று! ஆனால் அடுத்தவனின் குற்றங்களைகாட்டி எமது அழுக்குகளை அடிக்கு வைத்திருப்பது என்பதுதான் காலம் காலமாக நடக்கின்றது. அதனால்தான் ஊரை கொள்ளையடிக்கும் கல்கி போன்ற பொறுக்கிகள் கோட்டைபோன்ற மாளிகையில் வாழ்கிறார்கள் என்பதை இனியாவது புரிந்துகொள்ள முன்வர வேண்டும் என்பதே எனது ஆரம்ப கருத்தினதும் தொடரும் கருத்தினதும் நோக்கமாகும்.

கோவிலை புனிதமாக்குவது என்பது கோவிலில் உள்ள அழுக்குகளை கழுவுதல் என்தாகும். அதிலும் அழுக்கான கோவில்களின் புகைபடங்களை கோவிலின் சுவரில் ஓட்டுவதல்ல...

Link to comment
Share on other sites

பின்குறிப்பு திராவிடத் தமிழன் இந்துவுமில்லை சைவனுமில்லை.

திராவிடத் தமிழன் -

கிறிஸ்தவனும் இல்லை,

முசுலிமும் இல்லை.

ஜைனனும் இல்லை,

சீக்கியனும் இல்லை,

பௌத்தணும் இல்லை.

ஏன் கொலைகார சிங்கள பௌத்தணும் இல்லை.

மொத்தத்தில் இல்லாத ஒன்றைப் பற்றி சூறாவளி கதைப்பது ஏனோ?

இதை உண்மை என்று துணைசெய்ய அரிச்சந்திர பரம்பரை காவாலி இருக்க கவலை ஏன் சூறாவளி? நித்தியானந்தாவையும் உங்கள் கூட்டு மூலம் வென்றிடலாம்!

நான் இக்காணொளியை இணைத்ததன் நோக்கம் அவர்களை விமர்சிப்பதற்கல்ல. சில கிறிஸ்தவ சபைகளின் வழிபாடுகளிற்கு சென்று பார்த்தீர்களாயின் கல்கி சாமியார் காணொளியில் காணப்பட்ட காட்சிகள் போன்றவற்றை காணலாம். எனவே அவர்களும் போதை மருந்து சாப்பிட்டார்கள் என கூறுவீர்களா?

கல்கி பகவான் ஆச்சிரமத்தில் எடுக்கப்பட்டதாக கூறப்படும் காணொளி மறைந்திருந்து எடுக்கப்பட்டதல்ல. தவறு செய்தவர்கள் அதனை நேரடியாக காட்சிப்படுத்த அனுமதீப்பார்களா? எனவே இது தொடர்பாக உறுதியாக கூறமுடியாதுள்ளது.

மேலும் நான் இந்துமதத்திலுள்ள தவறுகளை மறைக்கவோ மறுக்கவோ இல்லை. ஆனால் இந்த திரியில் கருத்தெழுதுபவர்கள் யாவருமே கல்கியினை விமர்சிக்கும் பாங்கில் இந்து மதத்தினையே தாக்குவதை காணக்கூடியதாகவுள்ளது. மற்ற மதங்களை புனிதமானவையாகவும் இந்து மதம் மாத்திரமே அழுக்குகள் நிறைந்ததாகவும் இவர்கள் புனைய முற்படுகின்றனர். இதிலிருந்து இவர்களது யோக்கியத்தனம் தெரிகின்றது.

கீழுள்ள திரிகளுக்கும் சென்று பொறுக்கிகள் அயோக்கியர்கள் என விமர்சனம் செய்வீர்களாயின் கோயில்களை புனிதப்படுத்தும் உங்கள் சேவையில் நாங்களும் இணைகின்றோம்.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=70488

http://www.yarl.com/forum3/index.php?showtopic=70618

Link to comment
Share on other sites

திராவிடத் தமிழன் -

கிறிஸ்தவனும் இல்லை,

முசுலிமும் இல்லை.

ஜைனனும் இல்லை,

சீக்கியனும் இல்லை,

பௌத்தணும் இல்லை.

ஏன் கொலைகார சிங்கள பௌத்தணும் இல்லை.

மொத்தத்தில் இல்லாத ஒன்றைப் பற்றி சூறாவளி கதைப்பது ஏனோ?

இதை உண்மை என்று துணைசெய்ய அரிச்சந்திர பரம்பரை காவாலி இருக்க கவலை ஏன் சூறாவளி? நித்தியானந்தாவையும் உங்கள் கூட்டு மூலம் வென்றிடலாம்!

சிவ சிவா ...

இல்லாத ஒன்றைப்பற்றி நான் கதைத்தேனா? அப்போது வாத்தியார்? இல்லாத ஒன்றை இருப்பதாக நீங்களும் நித்தியானந்தாவும்தான் கதைக்கிரிர்கள்.. கடவுள் சாமி என்று ஊரையே ஏமாற்றுகிறீகள்.

இயற்கையை வழிபட்டுவந்த திராவிடர்களுக்குள் இந்து சமயமும் பின்னர் இஸ்லாம் கிறிஸ்தவம் எல்லாம் புகுத்தப்பட்டது.

ஓ ஒருமனிதனாக இருந்தால் ஏதாவது ஒரு மதத்தை அண்டி வாழவேண்டும் அதைத்தான் நீங்கள்

இந்துவும்பில்லை

கிறிஸ்தவனும் இல்லை என்று அடுக்கிநீர்களா?

பொய் என்று தெரிந்தும் தமிழ் சைவப் பாடப் புத்தகங்களில் பிள்ளையாரைப் பார்த்து சிரித்ததுதான் சந்திர கிரகணமே தோன்றக்காரணம் என்று படிப்போத்த வாத்தியார்கள் அல்லவா நீங்கள்.

உங்களின் மதவாத பிரச்சாரங்களில் இருந்து மனிதர்களுக்கு விடுதலை தாருங்கள்.

Link to comment
Share on other sites

சிவ சிவா ...

இல்லாத ஒன்றைப்பற்றி நான் கதைத்தேனா? ....

"இல்லாத ஒன்றைப்பற்றி நான் கதைத்தேனா?" என்று கேட்ட நீங்கள், இயற்கையை வழிபட்டவர்கள் திராவிடர்கள் என்கிறீர்கள் நீங்கள். எதோ காரணத்தால் தொன்று தொட்டு வழிபாடு முறைகள் இருந்து வந்ததை சொல்லியுள்ளீர்கள். இதை நான் சொல்லவில்லை - சொன்னது நீங்கள் தான்.

நல்லது. அடுத்தது "கடவுள் இருக்கிறார்" (அல்லது "கடவுள் இல்லை") என்ற விவாதத்தை நான் முன்வைக்கவில்லை. "திராவிடத் தமிழன் இந்துவுமில்லை சைவனுமில்லை" என்ற இக்காலத்துக்கு துளியும் பொருந்தாத ஒரு கருத்துக்கே எனது பதில் எழுதப்பட்டது.

ஆனால் சூறாவளி நீங்களோ உங்கள் இஸ்டத்துக்கு "பொய் என்று தெரிந்தும் தமிழ் சைவப் பாடப் புத்தகங்களில் பிள்ளையாரைப் பார்த்து சிரித்ததுதான் சந்திர கிரகணமே தோன்றக்காரணம் என்று படிப்போத்த வாத்தியார்கள் அல்லவா நீங்கள்" என்று மிக மிக அப்பட்டமான ஒரு படுபொய்யை அவிழ்த்துள்ளீர்கள். அதனால், கடவுள் பெயரில் நித்தியானந்த ஏமாற்றியது போல, நீங்கள் தான் கடவுள் இல்லை என்ற பெயரில் உலகை ஏமாற்றி வாழ முனைகிறீர்கள். நீங்கள் மேலே சொன்ன பொய் உங்கள் ஏமாற்றல் முயற்சிக்கு நல்ல எடுத்துக்காட்டு.

எப்படி நித்தியானந்த போன்றவர்கள் கடவுள் பெயரால் மக்களை ஏமாற்றுகிறார்களோ, எந்த வித்தியாசமும் இல்லாமல், திராவிட கொள்கை என்ற பெயரில் தமிழன் "இந்து இல்லை, சைவன் இல்லை" என்று ஏமாற்றி வருகிறார்கள்.

இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான (95%) தமிழன் (திராவிடன்) இந்துவாகவும் - சைவனாகவும் - கிறிஸ்தவனாகவும் - முஸ்லிமாகவும் - ஏனைய ஏதோவொரு மத நம்பிக்கை உடையவனாகவும், மிகச் சொற்பமானவர் "கடவுள் இல்லை" என்ற நம்பிக்கை உடையவராக இருப்பதே நான் அறிந்த உண்மை. இது தவறெனில் விளக்குங்கள்.

நாம் கற்பனைக்கும் எட்டாத அக்காலத்தை, இன்றுள்ள யதார்த்ததினுள் திணிப்பது சாத்தியம் குறைந்தது, தேவையும் அற்றது, நேரத்தை வீணடித்து இருக்கும் அனைத்தையும் இழப்பதில்தான் முடியும். நாம் பழமைவாதிகளாக இருந்துகொண்டு முன்னேறுவது மிகச்சிரமம் என்பது இன்றைய உலக யதார்த்தம்.

சில முது மொழிகள்:

"Yesterday is history, tomorrow is a mystery, today is a gift. That’s why we call it the present".

"For time and the world do not stand still. Change is the law of life. And those who look only to the past are certain to miss the futre".

"Do not dwell in the past, do not dream of the future, concentrate the mind on the present moment."

"The secret of health for both mind and body is not to mourn for the past, nor to worry about the future, but to live the present moment wisely and earnestly."

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரதி யாரை வழிபடவேண்டும் என்னால் சொல்ல முடியாது.

யாரையும் வழிபடவேண்டாம் என்று மாத்திரம் என்னால் சொல்ல முடியும்.

கடந்த காலத்தைப் பார்த்தால் யாரை வளிபட்டாலும் வளிபடாவிட்டாலும் எந்த மாற்றமும் நிகழ்ந்ததாக இல்லை.

திராவிடர்களுக்கு இயற்கைதான் கடவும் தமது முன்னோர்களையும் இயற்கையையுமே அவர்கள் வணங்கினார்கள்.

சூறாவளி திராவிடர்களுக்கு இயற்கை தான் கடவுள்...அந்த இயற்கையோடு பின்னிப் பிணைந்தது எமது சைவ மதம்...எமது கடவுளுக்கும் இயற்கைக்கும் நெருங்கிய சம்மந்தம் உள்ளது...கடவுள் நம்பிக்கை என்பது அவரவரைப் பொறுத்தது ஆனால் எங்கள் மதத்தை மட்டும் தாழ்த்தியும் மற்ற மதத்தை உயர்த்தியும் சிலர் எழுதி வருகிறார்கள் அது தான் பிழை எனச் சொல்கிறேன்...இந்து மதம் நீங்கள் சொல்கின்ற மாதிரி பிராமணரால் புகுத்தப்பட்டதாக இருக்கலாம் ஆனால் சைவம் திராவிடருக்கு உரியது.

நீங்கள் ஒரு போரில் ஒரு இனம் அழிந்தததை வைத்து கடவுளே இல்லை என எழுதுகிறீர்கள் என நினைக்கிறேன் ஆனால் தனிப்பட்ட ரீதியில் கடவுளை கும்பிடுவர்களுக்கு கடவுள் கொடுப்பதால் தான் கடவுளை தொடர்ந்து கும்பிடுகிறார்கள்.இராமரும் லக்சுமியும் காசு கொடுப்பதால் அவர்களையும் கும்பிடுகிறார்கள்.

Link to comment
Share on other sites

ரதி

இந்து மதம் இயற்கையானதேன்றே வைத்துக்கொள்வோம்.. அதில் நான் உங்களுடன் முரண்படவில்லை.

அனால் அதனுள் உள்ள பொய்களை களைவதனால் அது மேருகேராதா?

அதைக் களைவதில் ஏன் இவ்வளவு எதிர்ப்பும் தயக்கமும்?

ஆசான்..

ஒரே பொய்யை மாறி மாறி புரட்டிப் புரட்டி போட்டால் இந்துமதமும் உங்கள் புளுகும் உண்மையாகாது. உங்களை போன்றோர்களே சாமிகளை வளர்ப்பதுக்குப் போதுமானது.

கடவுள் இல்லை என்பவன்தான் உந்த நித்தியானதாவுக்கு காரணமா? நல்ல அவியலையா நீங்கள்.. தொடருங்கள் உங்கள் சேவையை.

சூறாவளி அவர்களே எதைக்கொண்டு இந்து மதம் உண்மையில்லை மற்ற மதங்கள் உண்மையானவை எனக் கூறுகின்றீர்கள் ? விளக்கம் தர முடியுமா?

Link to comment
Share on other sites

ஆசான்..

ஒரே பொய்யை மாறி மாறி புரட்டிப் புரட்டி போட்டால் இந்துமதமும் உங்கள் புளுகும் உண்மையாகாது. உங்களை போன்றோர்களே சாமிகளை வளர்ப்பதுக்குப் போதுமானது.

சூறாவளிக்கு பதில் எழுதத் தெரியாது, விவாதிக்கத் தெரியாது புளுக மட்டும் தெரியும் என்று நிரூபித்துள்ளார்.

போலித் திராவிடம் பேசுபவர்கள் முயலுக்கு 3 கால்கள் தான்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பாவம் சிரித்திரன் சுந்தர்.  கல்லறைக்குள் இருந்து நெளிவார் என நினைக்கிறேன். 
    • இதென்ன பிரமாதம்…. நான் ஒரு முடா குடியன் எண்டும்…லண்டனில் ஹரோ பகுதி பப் ஒன்றில் வெறியில் அரசியல் கதைக்கும் ஆள் நான் தான் என்று சத்தியம் செய்ததோடு… அந்த நபரோடு டெலிபோன் தொடர்பை ஏற்படுத்தி…அவரும் ஓம் நான் கோஷாந்தான் என சொல்லி…. இவரை ஒரு சில மாதம் ஓட்டு…ஓட்டு எண்டு ஓட்டி🤣. இன்னும் அந்த மனுசன் இவரை உசுபேத்தி கொண்டு இருக்கோ தெரியாது🤣.   கேட்டா எண்ட சாதகம் மோகனிடம் இருக்கு, நிழலிட்ட இருக்கு என்பார். அந்த தகவலை அவர்கள் தந்தாலும்…அதை வச்சு நான் என்ன செய்யலாம்? கலியாணம் பேசவோ🤣
    • 28 MAR, 2024 | 11:04 AM   நியூமோனியாவினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 59 வயதுடைய நபரொருவரின் சடலத்தில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின் போது அவரது நுரையீரலில் காணப்பட்ட பல் ஒன்று பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் பல வருட காலமாக நியூமோனியா மற்றும் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டிருந்ததாக வைத்தியர்கள் தெரிவித்தனர். பலாங்கொடை ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியினால் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின்போதே இந்த பல் கண்டுபிடிக்கப்பட்டதாக பலாங்கொடை ஆதார வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி பத்மேந்திர விஜேதிலக தெரிவித்தார். பலாங்கொடை - பின்னவலை பிரதேசத்தை சேர்ந்த எஸ் . கருணாரத்ன என்பவரின் நுரையீரலில் இருந்தே இவ்வாறு பல் கண்டுப்பிடிகக்ப்பட்டுள்ளது. இவர் மதுபானத்துக்கு அடியானவர் என்பதுடன் நியூமோனியா நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்தனர். சில வருடங்களுக்கு முன்னர் இவரது பல் ஒன்று உடைந்துள்ள நிலையில், அந்த பல் நுரையீரலில் சிக்கியிருக்கலாம் என வைத்தியர்கள் சந்தேகிக்கின்றனர். https://www.virakesari.lk/article/179883
    • உற‌வே அவ‌ர் சொல்ல‌ வ‌ருவ‌து நாம் த‌மிழ‌ர் க‌ட்சி...........திமுக்கா ஆதிமுக்கா வீஜேப்பி இவ‌ர்க‌ளுக்கு அடுத்து 4வ‌து இட‌த்துக்கு தான் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி வ‌ரும் என்று எழுதி இருக்கிறார் சில‌ தொகுதிக‌ளில் மூன்றாவ‌து இட‌ம் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி வ‌ர‌லாம் இது அதான் க‌ந்த‌ப்பு அண்ணாவின் தேர்த‌ல் க‌ணிப்பு.................
    • Published By: SETHU    28 MAR, 2024 | 02:08 PM   சுவீடனில் புனித குர்ஆனை எரித்து சர்ச்சை ஏற்படுத்திய நபர், ஈராக்குக்கு நாடு கடத்தப்படவுள்ள நிலையில் நோர்வேயில் புகலிடம் கோருவதற்கு முயற்சிக்கிறார். ஈராக்கியரான சல்வான் மோமிகா எனும் இந்நபர், 2021 ஆம் ஆண்டில் சுவீடனில் வதிவிட உரிமை பெற்றவர்.  கடந்த பல வருடங்களில் அவர் பல தடவைகள் குர்ஆனை எரித்து சர்ச்சை ஏற்படுத்தினார்.  இச்சம்பவங்களுக்கு எதிராக பல நாடுகளில் ஆர்ப்பாட்டங்களும் வன்முறைகளும் இடம்பெற்றன.  கடந்த ஒக்டோபர் மாதம் அவரின் வதிவிட அனுமதி இரத்துச் செய்யப்பட்டது. வதிவிட அனுமதி கோரிக்கைக்கான விண்ணப்பத்தில் தவறான தகவல்களை அளித்திருந்தமை இதற்கு காரணம் என சுவீடன் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.  அவரை ஈராக்குக்கு நாடு கடத்த சுவீடன் நீதிமன்றம் அனுமதி அளித்தது. எனினும், ஈராக்கில் தனது உயிருக்கு ஆபத்துள்ளதாக மோமிகா தெரிவித்ததையடுத்து நாடு கடத்தல் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. அவருக்கு வழங்கப்பட்டிருந்த புதிய தற்காலிக அனுமதிப்பத்திரம் எதிர்வரும் ஏப்ரல் 16 ஆம் திகதியுடன் காலவாதியாகிறது. இந்நிலையில், தான் நோர்வேயில் புகலிடம் கோரவுள்ளதாக சுவீடன் ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியில் மோமிகா தெரிவித்துள்ளார். இது குறித்து நோர்வே அதிகாரிகள் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. https://www.virakesari.lk/article/179895
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.