Jump to content

கடந்த காலங்களில் நடந்து முடிந்த கசப்பான அரசியல் அனுபவங்களை மறந்து, அரசியல் முரண்பாடுகளை களைந்து நாங்கள் அனைவரும் ஒன்றுபட்டு பாடுபடுவோம் -EPDP டக்ளஸ் தேவானந்தா

Recommended Posts

  • Replies 185
  • Created
  • Last Reply

நான் மகிந்தவை.....

ம்ம்ம்ம்ம்....... யாருக்கு தெரியும்! அதுதான் எல்லாத்தையும் அடி தொடக்கம் முடி வரை அழித்தோமே தெரியாது?????

Link to comment
Share on other sites

இன்னும் சில வாரங்களுக்குள் புலம்பெயர் நாடுகளில் உள்ள பிரச்சனைகள் தீர்ந்து ஒரு ஒற்றுமையான கட்டமைப்பு உருவாக்கப்பட்டு அரசியல்ரீதியான போராட்டத்தை நடத்துவதற்கான வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்படவில்லை என்றால், நான் ஈபிடிபியை ஆதரிப்பதாக தீர்மானித்திருக்கின்றேன்.

ஓரு சில வாரங்கள் நல்லா சொன்னீங்க போங்க . சில வாரமாம் சிலவாரம் . பேசாமல் ஈ பி டி பி யை ஆதரியுங்கள் வடபகுதியின் நிவாரணங்கள் டக்ளசை முன்னிறுத்தியே

மேற்கொள்ளப்படும் .வன்னி மக்களும் ஆதரவு கொடுப்பார்கள். வட பகுதிமக்கள் எனி எந்தக் காலத்திலும் போரை விரும்பவே மாட்டார்கள். டக்கிளசுக்கு இது சரியான சந்தர்ப்பம் அதை பயன்படுத்து எப்படியென்று தெரிந்ததன் வெளிப்பாடே இந்த அழைப்பு.

Link to comment
Share on other sites

இன்னும் சில வாரங்களுக்குள் புலம்பெயர் நாடுகளில் உள்ள பிரச்சனைகள் தீர்ந்து ஒரு ஒற்றுமையான கட்டமைப்பு உருவாக்கப்பட்டு அரசியல்ரீதியான போராட்டத்தை நடத்துவதற்கான வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்படவில்லை என்றால், நான் ஈபிடிபியை ஆதரிப்பதாக தீர்மானித்திருக்கின்றேன்.

இப்படி எல்லோரும் ஒதுங்கினால் ... இங்குள்ள பூசாரிகளுக்கு வாய்ப்பாக போய் விடும்!! இது வரை நாம் கொடுத்த காசுகள் ....... பினாமிகளின் பெயர்களில் வைப்பிலிடப்பட்டவைகள் எல்லாம் எம்மக்களுக்கு செல்லும் வரையாவது நின்று பிடிக்க வேண்டும்!!!

ஈ.பி.டி.பி .... ம்ம்ம்ம்ம்ம்ம்....... நல்ல செலக்ஷன்! இப்போது ஈபிடிபி, புளொட் போன்றதுகளின் பிரதானமான வேலைத்திட்டம், வவுனியா முகாங்களில் இருக்கும் எவருக்கும் புலத்தில் உறவுகள் இருந்தால், அவர்களுடன் தொடர்பு கொண்டு 5 தொடக்கம் 30 லடசம் வரை தந்தால் வெளியே எடுத்து விடுகிறோம் என்ற பேரம் பேச்சுத் தொழிலாம்!!! ...... நேற்றும் கேள்விப்பட்டேன் இங்குள்ள ஒருவர் 30 லட்சம் கொடுத்து வெளியே விடப்பட்டு, மீண்டும் பிடித்து உள்ளுக்குள் விடப்பட்டிருக்கிறாராம். 30 லட்சம் அம்போ! ஈ.பி.டி.பிக்கு ரோகரா!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள அரசு வன்னியில் உள்ள மக்களை அழிக்கையில் கருனாவோ,டக்லஸோ அதற்கு எதிராக குரல் கொடுத்தார்களா? சும்மா பார்த்துக் கொண்டு தானே இருந்தார்கள் அவர்களின் காலில் விழுறதை விட மகிந்தாவின்ட காலில நேரடியாய் விழலாம்.

Link to comment
Share on other sites

:icon_mrgreen: quote name='காவடி' date='Jun 14 2009, 12:30 PM' post='523245']

சிற்பி - டக்ளஸ் போன்றோரோடு இணைப்பதென்பது மனக்கசப்பானதுதான். 3 லட்சம் மக்களைப்பற்றி அக்கறை எனக்கும் இல்லாவிடின் நானும் - மயிரை விட்டான் சிங்கன் என இறுமாந்திருக்க முடியும். மற்றும்படி தாயகத்து மக்கள் பேய் பிசாசுகளோடு இணையும் முடிவெதனையும் எடுத்துவிட்டால்

அவர்களை குற்றஞ்சொல்ல எந்த அருகதையும் உங்களுக்கு கிடையாது. அவ்வாறு குற்றஞ் சொல்வதினில் அவர்களில் ஒருவராக ஆகியபின்னர் சொல்லவும்.

Link to comment
Share on other sites

">
" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">

">
" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலி முடமானாலும் புலிதான். ஆயுதங்களை மௌனிப்பதாகச்சொன்ன புலிகள்தான் 10 ஆயிரத்திற்குமேல் சிங்களக்காடையர்களின் பிடியிலிருக்கிறார்கள். இவர்களை ஒரு அரசியல்க்கட்சியாக இயங்கவிட்டு தமிழர்கள் சிங்களருடன் சேர்ந்து வாழ்வதா அல்லது பிரிந்துசெல்வதா என்று சர்வதேச கண்காணிப்பில் சர்வசனவாக்கெடுப்பொன்று நடாத்தும்படி புலம்பெயர் தமிழர் அந்தந்த அரசுகளிற்கு அழுத்தம் கொடுக்கவேண்டும். இதைவிடுத்து டக்ளஸ்ராஜபக்ச(டக்ளசிற்கும் அப்பன் ராஜபக்சதான்) கருணா பண்டாரநாயக்க(கருணாவின் அப்பன் பண்டாரநாயக்க) ஆகயோருடன் சேர்பவர்கள் விமல்வீரவன்சவையும் இணைக்கட்டும்.

அரசி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஊரில நூறு பேரு சாராயம் குடிக்கிறாங்கக்கிறதுக்காக குடி பழக்கத்தை நியாயப் படுத்த முடியுமா...

அதைப்போல வன்னி முகாமில் இருக்கிற சில பேர் டக்ள்ஸ் பின்னாடி போறாங்கிறதுக்காக நாமளும் போக முடியுமா...

அந்த மக்களுக்கு தமிழ் மக்களுக்கு சரியான தீர்வு கிடைக்க சரியான தலைமையின் கீழ போராடணும்...

புலி முடமானாலும் புலிதான். ஆயுதங்களை மௌனிப்பதாகச்சொன்ன புலிகள்தான் 10 ஆயிரத்திற்குமேல் சிங்களக்காடையர்களின் பிடியிலிருக்கிறார்கள். இவர்களை ஒரு அரசியல்க்கட்சியாக இயங்கவிட்டு தமிழர்கள் சிங்களருடன் சேர்ந்து வாழ்வதா அல்லது பிரிந்துசெல்வதா என்று சர்வதேச கண்காணிப்பில் சர்வசனவாக்கெடுப்பொன்று நடாத்தும்படி புலம்பெயர் தமிழர் அந்தந்த அரசுகளிற்கு அழுத்தம் கொடுக்கவேண்டும். இதைவிடுத்து டக்ளஸ்ராஜபக்ச(டக்ளசிற்கும் அப்பன் ராஜபக்சதான்) கருணா பண்டாரநாயக்க(கருணாவின் அப்பன் பண்டாரநாயக்க) ஆகயோருடன் சேர்பவர்கள் விமல்வீரவன்சவையும் இணைக்கட்டும்.

அரசி.

அரசியின் கருத்தை நான் முழுமையாக ஆதரிக்கிறேன்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது நியாயமான பேச்சு

வாறீங்களா அங்கேயே போய் போராடுவோம்.. இப்பிடி இங்கை இருந்து கதைச்சுக்கொண்டேயிருந்தா

தாயகத்தில இருக்கிற 30 லட்சம் மக்களாலும் நாங்கள் திரத்தியடிக்கப்படுவோம்.

சரி நானும் வாரேன்...

Link to comment
Share on other sites

புலம்பெயர் தமிழ் உறவுகளே!

உங்களின் போராட்டங்களின் வலிமைக்கு இது ஒரு சான்று. ஏனெனில், உங்கள் போராட்டங்களால் கதிகலங்கி நிற்கும் சிங்களம் ஏவிவிட்டிருக்கும் நச்சு அஸ்திரம்தான் துரோகி டக்ளஸின் இந்த அறிக்கை அறைகூவல். தயவுசெய்து இந்த நச்சுப் புகையில் மயங்கிவிடாதீர்கள்!

"புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது"

என்று இந்த கள்ளச்சோறு பூனைகளுக்கும், நாறித்தின்னும் நரிகளுக்கும் புரியவைப்போம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வன்னியில் இருக்கும் மக்களின் நிலையைக் காட்டி பல வேலைகள் நடக்குது. சிலர் காசு சேர்க்கிறார்களாம். சிலர் இப்போது இந்த வேலைகளும் ஆரம்பித்திருக்கிறார்கள். யாரையும் முத்திரை குத்தாமல் இந்த அறிக்கை வெளி வந்த பின்னணி பற்றி மட்டும் எனக்கு சில கருத்துகள் உண்டு:

1. கண் பார்வை மங்கி வரும் டக்கிளசுக்கு ஏராளமான ஆலோசகர்கள் இருக்கிறார்கள். இவர்களில் பலர் புலம் பெயர் வாசிகள். இப்போது புலம் பெயர் தமிழர்களிடையே இருக்கும் இடைவெளியை நன்றாக எடுத்துச் சொல்லியிருப்பார்கள் இந்த ஆலோசகர்கள். "கேப்பில கிடா வெட்டுற வேலை" சில கிடாக்கள் மாட்டுப் பட்டும் விட்டன.

2. மூன்று லட்சம் மக்களைக் காக்க இந்த அறைகூவல் என்கிறார்கள். இதே மூன்று லட்சம் மக்கள் வன்னிக் கொலைக் களத்தில் இருந்த போது ஒரு பிரிட்டிஷ் பா.உ "சொந்த மக்களையே குண்டு வீசிக் கொல்லும் ஒரே அரசு சிறி லங்கா" என்று சொன்ன போது " அது உண்மையல்ல" என்று மறுத்தார் டக்ளஸ். இது பல வருடங்கள் முன்பு நடந்ததல்ல, சில வாரங்கள் முன்பு நடந்தது! இந்த வெளிப் படையான உண்மை கூடத் தெரியாத அல்லது தெரியாதது போல நடிக்கும் ஒருவர் மக்களைக் காக்கும் பணிக்கு தலைமை தாங்கப் போவதாக அறிக்கை விட்டால் அதை நாங்கள் நம்பும் அளவுக்கு தலைவர்களுக்காக அலையும் பேர்வழிகளாக ஆகி விட்டோம்.

3. சரி. மக்கள் நிலை கருதி மறப்போம் மன்னிப்போம். இப்போது இந்த மக்களை வதை முகாம்களில் இருந்து விடுவிக்கும் வேலைக்கு புலம் பெயர் தமிழ் மக்கள் எதற்கு டக்ளசுக்குத் தேவை? காசு கொடுக்கவா? அல்லது புலம் பெயர் மண்ணில் போராட்டம் செய்யவா? அரசின் ஆதரவாளருக்கு எதற்கு மக்கள்? சிறி லங்காவின் அரசியல் கூத்துகள் பற்றி அறியாதவர்களா நாங்கள்?

4. ஆனால் ஒரு விஷயத்திற்காக புலம் பெயர் மக்கள் டக்கிளசுக்கு (அவர் பின்னாலிருக்கும் சிங்கள அரசுக்கும்) தேவை.புலம் பெயர் மக்கள் டக்ளசை ஆதரித்தால் தமிழர்களுக்கு நாம் ஜனநாயக வழித் தீர்வைக் கொடுத்து விட்டோம் என்று சிங்களவன் சொல்லும் போது அதற்கு poster boy ஆக டக்ளஸ் பயன் படுவார்.(டக்ளஸ் ஜனநாயக ஒளியாக இருப்பார் என்று நம்புவோர் தீவகத்தில் நடந்த பாலியல் வல்லுறவுகளையும், நடேசன் போன்றோரின் கொடூரமான கொலைகளையும் நினைவு மீட்டிப் பார்க்க வேண்டுகிறேன்!)

5.அறிக்கையில் கவனிக்க வேண்டிய ஒரு சொல் "நாம்" என்பதாகும். "நாம் போராடினோம்" என்கிறார். டக்ளஸ் ரசிகர்கள் இதை எப்படி மறந்தார்கள்? எங்கே டக்ளஸ் போராடினார் தமிழர்களுக்காக? பல்லாயிரம் தமிழர்களுக்கு அரச துறை வேலை வாய்ப்பு எடுத்துக் கொடுத்ததாக சிலர் சொல்கிறார்கள். எல்லாம் முறைப்படி நடக்கும் ஒரு நாட்டில் தகுதி உள்ளவன் விண்ணப்பித்தால் வேலை கிடைக்க வேணும். ஊழலில் ஊறிய சிறி லங்காவில் தகுதியை தூக்கிப் போட்டு விட்டு மந்திரியின் சிபார்சுக்கு வேலை கிடைக்கிறது. இந்த ஊழல் இயந்திரத்தை டக்ளஸ் பயன் படுத்த சிறி லங்கா அனுமதித்தது என்பது தானே உண்மை? இதை எப்படி "டக்ளஸ் போராடினார்" என்கிறார்கள்?

Link to comment
Share on other sites

தழிழ்தேசிய கூட்டமைப்பும் புலம் பெயர் தமிழர் அமைப்புக்களும்( பிரித்தானிய தமிழர் பேரவை, கனடிய தமிழர் பேரவை)முன் நிறுத்தப்பட்டே எமது போராட்டம் தொடர வேண்டும். விடுதலை போரில் பின்னனடைந்ததற்கு இந்த எட்டப்பன்கள் தான் காரணம்

புலி போராளிகளை இல்லாமல் செய்து தமிழரின் பேரம் பேசும் ஆற்றலை அழித்ததில் சிங்களவனோடு கூடி நின்ற இந்த எட்டப்பன்கள் தான்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு எங்களுடன் சேர்ந்து இதுவரை சனநாயக ரீதீயில் விடுதலைக்காக பாடுபட்டார்கள்.

உண்மையாகவே ஈழத்தமிழர் தேர்தலின் போது அவர்கள் புலிகளின் பினாமிகள் என்று டக்கிளஸ்ஸ் பிரச்சாரம் செய்த போதும் மக்கள் யாரால் தாங்கள் உண்மையாகவே நேசிக்க படுகின்றோம் என உணர்ந்து வாக்கு சிதறாமல் பெரு வெற்றியுடன் பாராளுமன்றம் அனுப்பினார்கள். அவர்கள் தான் இன்றைய தற்காலிக தமிழரின் பிரதிநிதிகள்.

அதனால் தான் இந்தியனும் இப்ப தமிழ் தேசிய கூட்டமைப்பை கூப்பிட்டு கதைக்கினம். டக்கிளஸ் எட்டப்பன் என்று தமிழகம் முழுவதும் தெரியும். வழக்கு வேற நிலுவையில் இருக்கு.

தமிழ்தேசிய கூட்டமைபுடன் ,நாங்களும் சேர்ந்து போராடி ஒரு தற்காலிக தீர்வுக்கு வழி காண்போம்

அழிந்து போனாலும் போகலாம் எட்டப்பனாக வாழ்ந்தவனை மீண்டும் கால் பிடிச்சு அரசியல் தீர்வை பெற முன் நிற்பது ஈனம்.

தாயக மக்கள் உண்மையான அரசியல் தீர்வு சனநாயக வழியில் பெற்று தரக்கூடியவர்கள் வேண்டாம் நாங்கள் எட்டபன் தரும் தீர்வு சரிதான் என்று ஏற்பார்களேயானால் நாங்கள் ஒதுங்குவது தான் சரி.

இல்லையேல் இவ்வளவு காலமும் எமக்காக போராடி கடைசி வரை சரண் அடையோம் என்று வீழந்த என் இனிய மாவீர்களுக்கு செய்யும்

துரோகமாகும்.

அப்படி ஒரு எட்டப்பங்கள் வழி நடத்தும் நிலை வந்தால் நான் இப்பவே ஒதுங்க தயாராகி விட்டேன்.

அந்த 30000 மாவீரர் ஆனதற்கு நானும் ஒரு பங்காளி ஆகிவிட்டேன். இதை விட இழப்பு அழிவு இனி ஒன்றும் வரப்போவதிலை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நேசனின் கருத்து சரி. புலிகள் அழியும் வரை "ஒற்றுமை கீதம்" பாடக் காத்திருந்திருக்கிறார்கள் எட்டப்பன்கள். இதை நடிப்பு என்றால் "மூன்று லட்சம் மக்கள் ஏற்றுக் கொண்டால் நாங்களும் ஏற்க வேண்டும்" என்கிறார்கள் சிலர்.மூன்று லட்சம் மக்கள் சில காரணங்களுக்காக ஏற்றுக் கொண்டால் எனக்கு ஒரு அபிப்பிராயமும் இல்லை. நாம் ஒதுங்கிக் கொள்வதே நல்லது.

Link to comment
Share on other sites

உணர்வுகளை கொஞ்சம் அடக்கி, அறிவை கொஞ்சம் பயன்படுத்தி செல்வது நல்லது. உணர்வுகளிற்கு கொஞ்சம் ஓய்வுகொடுத்து அறிவை கொஞ்சம் முன்னிலைப்படுத்தலாமே?

கே.பி அவர்களே பகிரங்கமாக சகல தரப்பினரையும் ஒன்றுசேருமாறு கேட்டு அறைகூவல் விடுத்து இருக்கின்றார். அவர் தனது அடுத்த கட்ட நிலைப்பாட்டை தெரிவிக்கும்வரை நாங்கள் கொஞ்சம் அடக்கி வாசிப்பது நல்லதோ?

நாங்கள் விரும்புகின்றோமோ இல்லையோ... தற்போது தாயகத்தில், மற்றும் சிறீ லங்காவில் அதிக அதிகாரம் உடைய - அதாவது அல்லல்படும் தமிழ்மக்களிற்கு உதவிகள் செய்வதற்கு அதிக அதிகாரம் நேரடியாக உடைய ஒருசில தமிழர்களில் (சகித்துத்தான் ஆகவேண்டும்) டக்லசும் ஒருவர்.

தற்போது தற்காலிகமாகவேனும் டக்லசின் உதவி மக்களின் அவலங்களை குறைப்பதற்காக தேவைப்படுகின்றது. டக்லஸ் உண்மையில் மனம் வைத்தால் தாயக மக்களின் அவலங்களை தற்காலிகமாகவேனும் குறைப்பதற்கு உதவக்கூடும்.

தவிர, நாங்கள் விரும்பியோ அல்லது விரும்பாமலோ... நீதியான முறையிலோ அல்லது திருகுதாளங்கள் செய்தோ ஈ பீ டீ பி குழுவினர் இன்னும் அதிக அளவில் சிறீ லங்கா பாராளுமன்றம் செல்லப்போவது நிச்சயம்.

இந்தவகையில்... நாங்கள் துரோகி, துரோகம் என்ற சொற்களை சில காலத்திற்கு தற்காலிகமாகவேனும்... வெளிநாடுகளில் பாதுகாப்பாக, சொகுசாக வாழ்கின்ற எங்களுக்காக அல்ல... ஆனால்.. அங்கு ஒரு நேரம் உணவு இல்லாமல் அல்லல்படும் மக்களிற்காக தூக்கி எறியவேண்டி இருக்கின்றது.

காலங்காலமாக ஆயுதங்கள் ஏந்தி போராடிய வீரம் மிகுந்த கைகளே ஆயுதத்திற்கு ஓய்வு கொடுத்து எதிரிக்கு முன்னால் வெள்ளைக்கொடி தூக்கி சரண் அடைந்ததுதான் தற்போதைய யதார்த்தம். தற்போதைய கள நிலமை.

எனவே...

டக்லஸ் அறிக்கையை காறித்துப்பாமல்...

இந்த அறிக்கையின் நம்பிக்கைத்தன்மையை உறுதிப்படுத்த...

டக்லஸ் தேவானந்தா அவர்களிடம் செயற்பாடுகளை எதிர்பார்க்கலாமே?

1. அல்லல்படும் தாயக மக்களிற்கு தேவையான உடனடி வசதிகளை செய்துகொடுக்கலாம்.

2. சரண் அடைந்த போராளிகள் நாகரீகமான முறையில் நடாத்தப்படுவதற்கும், சிறைகளில் உள்ள அப்பாவி தமிழ் மக்கள் உடனடியாக விடுதலை பெறவும் ஆகவேண்டிய செயற்பாடுகளை செய்யலாம்.

3. வதை முகாம்களில் உள்ள மக்களை பார்வையிட்டு அவர்கள் நிலமைகள் சம்மந்தமான உண்மையான அறிக்கைகளை வெளிக்கொணரலாம். அவர்கள் விரைவில் மீளக்குடியேறுவதற்கு தேவையான செயற்பாடுகளைச் செய்யலாம்.

4. ஆயுதங்களை கீழே போடலாம் (?). இனி புலி இல்லைத்தானே. எனவே, உங்களுக்கு ஏன் ஆயுதங்கள்?

5. தாயகத்தில் கலாச்சார சீர்கேடுகள் நிகழ்வதை உடனடியாக தடுத்து நிறுத்த ஆகவேண்டிய காரியங்களை செய்யலாம்.

5. தாயகத்திலும், மற்றும் தென்பகுதியிலும் தமிழ்மக்கள் கடத்தப்படுவதையும், கொலை செய்யப்படுவதையும் நிறுத்த செயற்பாடுகளாக பல விசயங்களை செய்து காட்டலாம்.

6. வெளிநாடுகளில் உள்ள தமிழர்கள் தாயகம், மற்றும் தாயகத்திற்கு, சிறீ லங்காவிற்கு வருகைதரும்போது அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த செயற்பாடுகளை செய்து காட்டலாம்.

7. மக்களை அச்சுறுத்தல் செய்வதை நிறுத்தலாம். அச்சுறுத்தி பணம் பெறுவதை நிறுத்தலாம். அதைச் செய்பவர்கள் யாராக இருந்தாலும் அப்படியான செயற்பாடுகள் நிறுத்தப்படுவதற்கு ஆகவேண்டிய காரியங்களை செய்யலாம்.

8. தாயகத்தில் உள்ள மக்கள் திறந்த சிறைச்சாலைகளில் இருந்து வெளியேறி சுதந்திரமாக நடமாட ஆகவேண்டிய காரியங்களை செய்யலாம்.

9. தாயகத்தில் ஊடக சுதந்திரம் ஏற்படுவதற்கும், ஊடகவியலாளர்களின் சுதந்திரமான நடவடிக்கைகளும் நடைபெற ஆகவேண்டிய காரியங்களை செய்யலாம்.

10. NGOக்கள் தாயக மக்களிற்கு சேவை செய்வதற்கு - அவை தாயகத்தில் அனுமதிக்கப்படுவதற்கு ஆகவேண்டிய காரியங்களை செய்யலாம்...

இப்படி பல விசயங்களை பட்டியல் இட்டுக்கொண்டு செல்லலாம். இவற்றில் தம்மால் முடியுமான நடவடிக்கைகளை இதயசுத்தியுடன் மேற்கொண்டு.. தாயக மக்களின் அவலங்கள் தற்காலிகமாகவேனும் நீங்குவதற்கு டக்லஸ் தேவானந்தா அவர்கள்... நடைமுறை செயற்பாடுகளை மேற்கொண்டால்... மேலே அறிக்கையில் கேட்கப்பட்ட விடயங்களிற்கு புலம்பெயர் தமிழ்மக்கள் ஆதரவு தருவார்கள் என்று நான் நினைக்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உணர்வுகளை கொஞ்சம் அடக்கி, அறிவை கொஞ்சம் பயன்படுத்தி செல்வது நல்லது. உணர்வுகளிற்கு கொஞ்சம் ஓய்வுகொடுத்து அறிவை கொஞ்சம் முன்னிலைப்படுத்தலாமே?

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

எதிரியின் எலும்புத்துண்டிற்கு ஆடும் நாயின் காலடியை விடவே எதிரியின் காலடி பற்றுவது அறிவுடையதே ஏன் அப்படித் தோன்றவில்லை.

Link to comment
Share on other sites

எதிரியின் காலடியை பற்றினால் பிறகு நாங்களும் நாய்களாகி விடுவோமே.. அது பரவாயில்லையா?

அதாவது எதிரியின் காலடியை பற்றினால் நாங்களும் நாய்கள் என்று வகைப்படுத்தப்படுவோமே!

Link to comment
Share on other sites

இன்னும் சில வாரங்களுக்குள் புலம்பெயர் நாடுகளில் உள்ள பிரச்சனைகள் தீர்ந்து ஒரு ஒற்றுமையான கட்டமைப்பு உருவாக்கப்பட்டு அரசியல்ரீதியான போராட்டத்தை நடத்துவதற்கான வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்படவில்லை என்றால், நான் ஈபிடிபியை ஆதரிப்பதாக தீர்மானித்திருக்கின்றேன்.

சரி அடுத்த துரோகி நீங்கள் தன் சபேசன். :icon_mrgreen:

நீங்கள் எதிர்பார்க்கும் வேலைத்திட்டங்களில் யார் அடுத்த பதவியை எடுப்பதென்ற பிரச்சனை உருவெடுத்து ஆடுவதாக கேள்வி.

இப்போதைக்கு மக்களுக்கு யார் நல்லது செய்கிறார்களோ அவர்கள் தன் தேவை.

Link to comment
Share on other sites

உணர்வுகளை கொஞ்சம் அடக்கி, அறிவை கொஞ்சம் பயன்படுத்தி செல்வது நல்லது. உணர்வுகளிற்கு கொஞ்சம் ஓய்வுகொடுத்து அறிவை கொஞ்சம் முன்னிலைப்படுத்தலாமே?

கே.பி அவர்களே பகிரங்கமாக சகல தரப்பினரையும் ஒன்றுசேருமாறு கேட்டு அறைகூவல் விடுத்து இருக்கின்றார். அவர் தனது அடுத்த கட்ட நிலைப்பாட்டை தெரிவிக்கும்வரை நாங்கள் கொஞ்சம் அடக்கி வாசிப்பது நல்லதோ?

நாங்கள் விரும்புகின்றோமோ இல்லையோ... தற்போது தாயகத்தில், மற்றும் சிறீ லங்காவில் அதிக அதிகாரம் உடைய - அதாவது அல்லல்படும் தமிழ்மக்களிற்கு உதவிகள் செய்வதற்கு அதிக அதிகாரம் நேரடியாக உடைய ஒருசில தமிழர்களில் (சகித்துத்தான் ஆகவேண்டும்) டக்லசும் ஒருவர்.

தற்போது தற்காலிகமாகவேனும் டக்லசின் உதவி மக்களின் அவலங்களை குறைப்பதற்காக தேவைப்படுகின்றது. டக்லஸ் உண்மையில் மனம் வைத்தால் தாயக மக்களின் அவலங்களை தற்காலிகமாகவேனும் குறைப்பதற்கு உதவக்கூடும்.

தவிர, நாங்கள் விரும்பியோ அல்லது விரும்பாமலோ... நீதியான முறையிலோ அல்லது திருகுதாளங்கள் செய்தோ ஈ பீ டீ பி குழுவினர் இன்னும் அதிக அளவில் சிறீ லங்கா பாராளுமன்றம் செல்லப்போவது நிச்சயம்.

இந்தவகையில்... நாங்கள் துரோகி, துரோகம் என்ற சொற்களை சில காலத்திற்கு தற்காலிகமாகவேனும்... வெளிநாடுகளில் பாதுகாப்பாக, சொகுசாக வாழ்கின்ற எங்களுக்காக அல்ல... ஆனால்.. அங்கு ஒரு நேரம் உணவு இல்லாமல் அல்லல்படும் மக்களிற்காக தூக்கி எறியவேண்டி இருக்கின்றது.

காலங்காலமாக ஆயுதங்கள் ஏந்தி போராடிய வீரம் மிகுந்த கைகளே ஆயுதத்திற்கு ஓய்வு கொடுத்து எதிரிக்கு முன்னால் வெள்ளைக்கொடி தூக்கி சரண் அடைந்ததுதான் தற்போதைய யதார்த்தம். தற்போதைய கள நிலமை.

எனவே...

டக்லஸ் அறிக்கையை காறித்துப்பாமல்...

இந்த அறிக்கையின் நம்பிக்கைத்தன்மையை உறுதிப்படுத்த...

டக்லஸ் தேவானந்தா அவர்களிடம் செயற்பாடுகளை எதிர்பார்க்கலாமே?

1. அல்லல்படும் தாயக மக்களிற்கு தேவையான உடனடி வசதிகளை செய்துகொடுக்கலாம்.

2. சரண் அடைந்த போராளிகள் நாகரீகமான முறையில் நடாத்தப்படுவதற்கும், சிறைகளில் உள்ள அப்பாவி தமிழ் மக்கள் உடனடியாக விடுதலை பெறவும் ஆகவேண்டிய செயற்பாடுகளை செய்யலாம்.

3. வதை முகாம்களில் உள்ள மக்களை பார்வையிட்டு அவர்கள் நிலமைகள் சம்மந்தமான உண்மையான அறிக்கைகளை வெளிக்கொணரலாம். அவர்கள் விரைவில் மீளக்குடியேறுவதற்கு தேவையான செயற்பாடுகளைச் செய்யலாம்.

4. ஆயுதங்களை கீழே போடலாம் (?). இனி புலி இல்லைத்தானே. எனவே, உங்களுக்கு ஏன் ஆயுதங்கள்?

5. தாயகத்தில் கலாச்சார சீர்கேடுகள் நிகழ்வதை உடனடியாக தடுத்து நிறுத்த ஆகவேண்டிய காரியங்களை செய்யலாம்.

5. தாயகத்திலும், மற்றும் தென்பகுதியிலும் தமிழ்மக்கள் கடத்தப்படுவதையும், கொலை செய்யப்படுவதையும் நிறுத்த செயற்பாடுகளாக பல விசயங்களை செய்து காட்டலாம்.

6. வெளிநாடுகளில் உள்ள தமிழர்கள் தாயகம், மற்றும் தாயகத்திற்கு, சிறீ லங்காவிற்கு வருகைதரும்போது அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த செயற்பாடுகளை செய்து காட்டலாம்.

7. மக்களை அச்சுறுத்தல் செய்வதை நிறுத்தலாம். அச்சுறுத்தி பணம் பெறுவதை நிறுத்தலாம். அதைச் செய்பவர்கள் யாராக இருந்தாலும் அப்படியான செயற்பாடுகள் நிறுத்தப்படுவதற்கு ஆகவேண்டிய காரியங்களை செய்யலாம்.

8. தாயகத்தில் உள்ள மக்கள் திறந்த சிறைச்சாலைகளில் இருந்து வெளியேறி சுதந்திரமாக நடமாட ஆகவேண்டிய காரியங்களை செய்யலாம்.

9. தாயகத்தில் ஊடக சுதந்திரம் ஏற்படுவதற்கும், ஊடகவியலாளர்களின் சுதந்திரமான நடவடிக்கைகளும் நடைபெற ஆகவேண்டிய காரியங்களை செய்யலாம்.

10. NGOக்கள் தாயக மக்களிற்கு சேவை செய்வதற்கு - அவை தாயகத்தில் அனுமதிக்கப்படுவதற்கு ஆகவேண்டிய காரியங்களை செய்யலாம்...

இப்படி பல விசயங்களை பட்டியல் இட்டுக்கொண்டு செல்லலாம். இவற்றில் தம்மால் முடியுமான நடவடிக்கைகளை இதயசுத்தியுடன் மேற்கொண்டு.. தாயக மக்களின் அவலங்கள் தற்காலிகமாகவேனும் நீங்குவதற்கு டக்லஸ் தேவானந்தா அவர்கள்... நடைமுறை செயற்பாடுகளை மேற்கொண்டால்... மேலே அறிக்கையில் கேட்கப்பட்ட விடயங்களிற்கு புலம்பெயர் தமிழ்மக்கள் ஆதரவு தருவார்கள் என்று நான் நினைக்கின்றேன்.

கலைஞன் சொல்வதை அப்படியே ஏற்றுக்கொள்கின்றேன். வீர வசனங்களை புலம் பெயர் நாடுகளில் இருந்து கொண்டு முழங்குவதை விட காலத்தின் தேவைக்கேற்றவாறு நடபோம்.

Link to comment
Share on other sites

எதிரியின் காலடியை பற்றினால் பிறகு நாங்களும் நாய்களாகி விடுவோமே.. அது பரவாயில்லையா?

அதாவது எதிரியின் காலடியை பற்றினால் நாங்களும் நாய்கள் என்று வகைப்படுத்தப்படுவோமே!

நாய் நன்றியுள்ள மிருகம் அதை இப்பிடியெல்லாம் சொல்லாதையுங்கோ :icon_mrgreen:

Link to comment
Share on other sites

தழிழ்தேசிய கூட்டமைப்பும் புலம் பெயர் தமிழர் அமைப்புக்களும்( பிரித்தானிய தமிழர் பேரவை, கனடிய தமிழர் பேரவை)முன் நிறுத்தப்பட்டே எமது போராட்டம் தொடர வேண்டும். விடுதலை போரில் பின்னனடைந்ததற்கு இந்த எட்டப்பன்கள் தான் காரணம்

புலி போராளிகளை இல்லாமல் செய்து தமிழரின் பேரம் பேசும் ஆற்றலை அழித்ததில் சிங்களவனோடு கூடி நின்ற இந்த எட்டப்பன்கள் தான்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு எங்களுடன் சேர்ந்து இதுவரை சனநாயக ரீதீயில் விடுதலைக்காக பாடுபட்டார்கள்.

உண்மையாகவே ஈழத்தமிழர் தேர்தலின் போது அவர்கள் புலிகளின் பினாமிகள் என்று டக்கிளஸ்ஸ் பிரச்சாரம் செய்த போதும் மக்கள் யாரால் தாங்கள் உண்மையாகவே நேசிக்க படுகின்றோம் என உணர்ந்து வாக்கு சிதறாமல் பெரு வெற்றியுடன் பாராளுமன்றம் அனுப்பினார்கள். அவர்கள் தான் இன்றைய தற்காலிக தமிழரின் பிரதிநிதிகள்.

அதனால் தான் இந்தியனும் இப்ப தமிழ் தேசிய கூட்டமைப்பை கூப்பிட்டு கதைக்கினம். டக்கிளஸ் எட்டப்பன் என்று தமிழகம் முழுவதும் தெரியும். வழக்கு வேற நிலுவையில் இருக்கு.

தமிழ்தேசிய கூட்டமைபுடன் ,நாங்களும் சேர்ந்து போராடி ஒரு தற்காலிக தீர்வுக்கு வழி காண்போம்

அழிந்து போனாலும் போகலாம் எட்டப்பனாக வாழ்ந்தவனை மீண்டும் கால் பிடிச்சு அரசியல் தீர்வை பெற முன் நிற்பது ஈனம்.

தாயக மக்கள் உண்மையான அரசியல் தீர்வு சனநாயக வழியில் பெற்று தரக்கூடியவர்கள் வேண்டாம் நாங்கள் எட்டபன் தரும் தீர்வு சரிதான் என்று ஏற்பார்களேயானால் நாங்கள் ஒதுங்குவது தான் சரி.

இல்லையேல் இவ்வளவு காலமும் எமக்காக போராடி கடைசி வரை சரண் அடையோம் என்று வீழந்த என் இனிய மாவீர்களுக்கு செய்யும்

துரோகமாகும்.

அப்படி ஒரு எட்டப்பங்கள் வழி நடத்தும் நிலை வந்தால் நான் இப்பவே ஒதுங்க தயாராகி விட்டேன்.

அந்த 30000 மாவீரர் ஆனதற்கு நானும் ஒரு பங்காளி ஆகிவிட்டேன். இதை விட இழப்பு அழிவு இனி ஒன்றும் வரப்போவதிலை

போடு....... அப்படிப் போடு!!! புலத்திலிருந்து நாம் அழிந்தாலும் அழிவோம்!!! ...... உரத்துச் சொல்லு!! அதுவும் புலத்திலிருந்து .... அங்கு எம்மcவர்கல் தெரு நாய்களை விட கேவலமாக அகதி முகாங்களில் அவதியுற, கேட்பார் இல்லாமல் இனம் தொடர்ந்து நிற்கதியாக நிற்க ............ நிச்சயமாக உன் போன்றோரின் குரல்கள் எமக்குத் தேவை!! உரத்துச் சொல்!! இரூதி மட்டும் அழிவோம் என்று!!

அது கிடக்க ஓர் கேள்வி, நீர் இங்கு தொடர்ந்து வாழ்ப் போகிறீர் என்ன??????????

அழிவுக்கு எட்டப்பர் காரணம் ....... உண்மை!! 100 பங்கில் அவர்கள் 25 விழுக்காடு, மிச்சம் 75 ??????? அது நாங்கள்!!!!!!! எதிரியை வளவிற்குள் கூட்டி வந்து அழிந்தோம்!!! இல்லையா??????? வேறு வேண்டாம் என நினைக்கிறேன் .......

இனியாவது நண்பர்களை சந்திப்போம்!! அது இந்தியன் என்றால் என்ன, அமெரிக்கன் என்றால் என்ன???

Link to comment
Share on other sites

ஒருவன் கொலையாளியாக இருந்தால்கூட... மக்களின் உயிர்கள் அவனது கட்டுப்பாட்டின்கீழ் இருக்கும்போது குறிப்பிட்டவனுடன் சமரசம் செய்யவேண்டிய தேவை இருக்கின்றது. உதாரணமாக ஓர் பொதுஇடத்தில் ஒருவன் மக்களை பணயக்கைதிகளாக வைத்து இருக்கும்போது முதலில் காவல்துறை குறிப்பிட்டவனுடம் சமரசம் செய்வதிலேயே ஈடுபடுவார்கள். நிலமை கட்டுப்பாட்டுக்குள் வரும் என்று நிச்சயமாக தெரியாதவரை மோட்டுட்தனமாக குறிப்பிட்டவன்மீது நடவடிக்கை எடுக்கமாட்டார்கள். மக்களை அவனது அச்சுறுத்தலில் இருந்து காப்பாற்றிய பின்னரே குறிப்பிட்டவன் மீது நடவடிக்கை எடுப்பார்கள்.

தாயகத்திலும் இதே நிலமையே இருக்கின்றது. நீங்கள் விரும்பியோ விரும்பாமலோ தமிழ்மக்களின் வாழ்வு டக்லஸ் தேவானந்தா போன்றோரின் கைகளில் இருக்கின்றது. ஏதோ ஒரு வகையில் அவர்கள் அந்த அதிகாரத்தை பெற்றுவிட்டார்கள்.

நாங்கள் துரோகி என்று காறித்துப்பலாம். ஆனால்... ஐ.நாவும்... சர்வதேச நாடுகளும்... ராஜதந்திரிகளும் அவரை ஓர் அரசியல்வாதியாகவும், தமிழ்மக்களின் ஓர் பிரதிநிதியாகவுமே பார்க்கின்றன. எனவே, எங்களுக்குள் நாங்கள் கதை அளந்து மகிழ்ந்து என்ன பயன்?

வெளிநாடுகளில் உள்ள தமிழ்மக்களிற்காக அல்ல.. தாயகத்தில் உள்ள தமிழ்மக்களிற்காக டக்லஸ் தேவானந்தா அவர்களுடன் தற்காலிகமாகவேனும் சமரசம் செய்யவேண்டிய தேவை இருக்கின்றது.

Link to comment
Share on other sites

தமிழ் தேசிய கூட்டமைப்பு எங்களுடன் சேர்ந்து இதுவரை சனநாயக ரீதீயில் விடுதலைக்காக பாடுபட்டார்கள்.

உண்மையாகவே ஈழத்தமிழர் தேர்தலின் போது அவர்கள் புலிகளின் பினாமிகள் என்று டக்கிளஸ்ஸ் பிரச்சாரம் செய்த போதும் மக்கள் யாரால் தாங்கள் உண்மையாகவே நேசிக்க படுகின்றோம் என உணர்ந்து வாக்கு சிதறாமல் பெரு வெற்றியுடன் பாராளுமன்றம் அனுப்பினார்கள். அவர்கள் தான் இன்றைய தற்காலிக தமிழரின் பிரதிநிதிகள்.

இவர்களை செயற்பட விட்டோமா????

Link to comment
Share on other sites

காலங்காலமாக ஆயுதங்கள் ஏந்தி போராடிய வீரம் மிகுந்த கைகளே ஆயுதத்திற்கு ஓய்வு கொடுத்து எதிரிக்கு முன்னால் வெள்ளைக்கொடி தூக்கி சரண் அடைந்ததுதான் தற்போதைய யதார்த்தம். தற்போதைய கள நிலமை.

இன்னும் கனவு காணுவோம். ஆயுதக்கிடங்குகள் புதிதாக வெடிக்க வைக்கிறது தெரியாமல் கதைக்கிறியளே ? உப்பிடியெல்லாம் சொல்லப்படாது. கனவு உள்ளவரை வன்னியில பசியில சாகிற சனத்துக்கு ஆர் நல்லது செய்ய வந்தாலும் அவையளைத் துரோகியாக்கி முழங்க வேணும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • யார் து…துரைமுருகன் சொல்வதையா…நோ சான்ஸ்🤣. ஜூன் 4 தெரியும்தானே ஏன் அவசரம். எனது ஒரே கவலை பிஜேபி எவ்வளவு சீட் எடுக்கப்போகிறது என்பது மட்டுமே. பூஜ்ஜியம் என்றால் சந்தோசம்.  பூஜ்ஜியத்துக்கு மேல் கூடும் ஒவ்வொரு சீட்டுக்கும் ஏற்ப கவலை கூடும். தேர்தல் கட்டம் கட்டமாக தானே நடக்குது? இன்று முழு உபிக்கும் நடக்கவில்லை. நடந்த இடங்களில் 67% மாம். ஆனால் மேற்கு வங்கத்தில் நடந்த இடங்களில் 77 சதவீதமாம். இன்று நடந்த மொத்த தொகுதிகளில் 62% பதிவு. ஆனால் தமிழ் நாட்டு தொகுதிகளில் 72.09% நான் யாழ்கள திமுக ஆதரவாளன் இல்லை. ஆனால் சீமான், பிஜேபியை எதிர்ப்பவன். பழனிச்சாமி எதிர்கட்சி தலைவர், குறைந்ததது 29% வாக்கு வங்கி உள்ள கட்சியின் தலைவர். அவர் எப்படி வாக்கை பிரிப்பவர் ஆவார்? விட்டால் திமுக வும் வாக்கை பிரிக்கும் கட்சி என்பீர்கள் போலுள்ளது. 10% கீழே வாக்கு வங்கி, தனியே ஒரு தொகுதியிலும் வெல்ல வாய்ப்பு இல்லை என தெளிவாக தெரிந்தும், 39 தொகுதியிலும் நிற்பவர்கள்தான் வாக்கை பிரிப்போர்.
    • ர‌ம் மீண்டும் ஆட்சியை பிடிப்பார் பைட‌ன் வென்றால் ஆள் இல்லாத‌ இட‌த்துக்கு எல்லாம் கை காட்டுவார் ஹா ஹா...............................................
    • தெரியும் ஆனால் இந்த‌ தேர்த‌லில் ப‌ண‌ம் பெரிசா புகுந்து விளையாட‌ வில்லை எல்லாம் சில்ல‌றை காசு தான் இந்த‌ முறை ச‌கோத‌ரி காளிய‌ம்மாள் போட்டியிட்ட‌ தொகுதியில் 2000ரூபாய் கொடுத்த‌தாக‌ த‌க‌வ‌ல் வ‌ந்த‌து😏.................................
    • சென்னையின் தோல்விக்கு கார‌ண‌ம் வேக‌ ப‌ந்து வீசாள‌ர்க‌ள் சுழ‌ல் ப‌ந்துக்கு சாத‌க‌மான‌ பிச்சில் வேக‌ ப‌ந்து வீச்சாள‌ர்க‌ளை தெரிவு செய்வ‌து முட்டாள் த‌ன‌ம்...........................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.