Jump to content

ஆண்டியான கந்தர்..


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பூசைக்கு நேரம் போனதை உணர்ந்த கந்தர் ஓட்டமும் நடையுமாக வந்து காலை கழுவி தலையிலும் தண்ணிரை தெளித்து விட்டு அரோகரா என்று தலையில் கையை வைத்து கும்பிட்டபடியே பூசை மணி அடிக்க முதலே முருகனிடம் தனது பிரசனத்தை தெரியபடுத்தி பூசை முடியமட்டும் யாரையும் திரும்பி பார்க்காமல் முருகனுடன் இரண்டர கலந்து விட்டார்.ஜயர் வீபூதி சந்தனம் கொடுக்கும் போது தான் தனக்கு பக்கத்தில் நிற்பவர்களை ஒரு நோட்டம் விட்டார்.

தனிமையில் பேச்சு துணைக்கு யாரும் கிடைக்கவில்லை என்று பார்த்து கொண்டு நின்ற சுரேசிற்கு கந்தரை கண்டவுடன் அருகே சென்று என்ன அண்ணை எப்படி சுகம் ஏன் பூசைக்கு கொஞ்சம் "லேட்டா" வந்தனீங்க என்று கேட்டான்.மகள் வேலையால் வந்து கூட்டி கொண்டு வர நேரம் போயிட்டுதோ?

சீ..சீ நான் அவளின்ட காரில ஏற ஏலாது என்று சொல்லிபோட்டன்.புது கார் "டோயடா லேட்டஸ் மொடல்" ஆனால் ஜப்பான்காரனின் காரில் எனி மேல் ஏறமாட்டன் என்று போட்டேன்.மருமகன் சொன்னார் தன்னுடைய "வோ வீல் டிரைவில்" கொண்டு போய் விடுறன் என்று அதுவும் ஜப்பான் காரனின்ட தானே அதனால் அதிலையும் ஏற ஏலாது என்று விட்டேன்.பேரன் சொன்னான் தன்னுடைய "போஸ்ஸில்"கூட்டி கொண்டு விடுறன் என்று ஆளை விடுறா சாமி என்று போட்டன்.இப்படி தான் போன கிழமை அவனின்ட காரில ஏறினான் தாத்தா தமிழ் பாட்டு போடட்டோ என்று அது உங்களுடைய ரகுமானின் பாட்டு என்று சொன்னான் நானும் ஓம் போடடா தம்பி என்றேன்.

அவனும் "வுல் வொலியூமில" போட்டு விட்டான் என்ற ஒரு செவிப்பறை அன்றைக்கு கேட்காமல் விட்டது தான் அதுக்கு பிறகு இன்னும் அது சரி வரவில்லை.அன்று அவன் ஓடின ஓட்டத்தில் என்ற உயிர் போயிருக்க வேண்டும் ஆனால் அந்த முருகன் தான் காப்பாற்றி வைத்திருக்கிறான் அன்றிலிருந்து அவனின் காரில் ஏறுவதில்லை என்றூ முடிவெடுத்து விட்டேன்.

அண்ணை களைத்து போயிட்டியள் போல இருக்கு வாங்கோ பின்னுக்கு போய் "டீ" குடிப்போம் என்று கேட்டான் சுரேஷ்.தம்பி உனக்கு விஷயம் தெரியாதோ உயவள் "டில்மா" தேயிலை வைத்திருக்கீனம் நான் குடிக்கமாட்டன் "டீ" குடிக்காமல் சும்மா இருந்தாலும் இருப்பேன் ஆனால் உவங்களின்ட சிறிலங்கா தேயிலையை மட்டும் குடிக்கமாட்டேன் என்றார் கந்தர்.

சரியான குளிராக இருக்கு ஏன் "ஜாக்கேட்" போடாமல் வந்தனியள் இந்தாங்கோ என்னுடைய "ஜாக்கேட்" இதை போடுங்கோ நான் மற்ற "ஜாக்கேட்" காருகுள் இருக்கு எடுத்து கொண்டு வாறன் என்று சுரேஷ் தனது "ஜக்கேட்டை" கழற்ற போனான்.தம்பி இந்த "ஜாக்கேட்" எல்லாம் சீனாகாரன் தான் செய்கிறான் அது தான் நான் போடாமல் வந்தனான்.நீர் போட்டிருக்கிற இந்த "ஜாக்கேட்" சீனாகாரனினது நான் சீனாகரானின்ட சாமாங்கள் ஒன்றும் இப்ப பாவிப்பதில்லை என்று நடுங்கி கொண்டே பதில் கூறினார்.

சுரேஷ் கந்தரை மேலும் கீழுமாக பார்த்தான் இதை அறிந்த அவர் என்ன பார்க்கிறீர் இந்தியாகாரனின் வேஷ்டியும்,சேஷ்டும் உடுத்திருக்கிறன் என்றோ?

அது எங்களிண்ட தமிழ்நாட்டில தான் தயாரித்திருக்கிறார்கள் அது தான் உடுத்திருக்கிறன்.அப்ப கோவணம் எந்த நாடு என்று கேட்க வேண்டும் போல் இருந்தது சுரேஷியிற்கு முதியவர் என்ற காரணத்தினால் ஒன்றும் கேட்காமல் விட்டு விட்டான்.

ஆனால் சுரேஷின் மனதில் முருகனின் ஆண்டி கோலத்தில் கந்தர் தென்பட்டார்.கந்தர் உந்த புறகணிப்பு கொள்கையை கடைபிடிப்பார் எனில் ஆண்டி ஆவதும் நிச்சயம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வாறு நாம் சிறிலங்கா பொருட்களை பகிஷ்கரித்திருந்தால் ...அவர்களுக்கு எப்பவோ பொருளாதார கஷ்டம் வந்திருக்கும். நம் புலம் பெயர்

உறவுகள் திருந்த்தவேனும்.

Link to comment
Share on other sites

ஆனால் சுரேஷின் மனதில் முருகனின் ஆண்டி கோலத்தில் கந்தர் தென்பட்டார்.கந்தர் உந்த புறகணிப்பு கொள்கையை கடைபிடிப்பார் எனில் ஆண்டி ஆவதும் நிச்சயம்.

இக் கதையின்மூலம் என்ன சொல்ல நினைக்கிறீங்கள் புத்தன்?

புறக்கணிப்பு தப்பெண்டு சொல்லுறீங்களா

அல்லது தேவையற்றத மட்டும் புறக்கணிக்கச் சொல்லுறியளா?

Link to comment
Share on other sites

புறக்கணிப்பு பொருட்களுக்கு மாற்றீடு செய்தால் ஏன் கோவணத்தோடு போகவேண்டி வருகிறது?

Link to comment
Share on other sites

ஒரு நன்மை கிடைக்கும் எனில் எத்தனை துன்பம் வந்தாலும் தாங்கித்தான்

ஆகவேண்டும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள் கருத்து பகிர்ந்தமைக்கு

இவ்வாறு நாம் சிறிலங்கா பொருட்களை பகிஷ்கரித்திருந்தால் ...அவர்களுக்கு எப்பவோ பொருளாதார கஷ்டம் வந்திருக்கும். நம் புலம் பெயர்

உறவுகள் திருந்த்தவேனும்.

ஒவ்வொருத்தரும் உணர்ந்து செய்ய வேண்டும்

இக் கதையின்மூலம் என்ன சொல்ல நினைக்கிறீங்கள் புத்தன்?

புறக்கணிப்பு தப்பெண்டு சொல்லுறீங்களா

அல்லது தேவையற்றத மட்டும் புறக்கணிக்கச் சொல்லுறியளா?

அப்படி சொல்லவில்லை கட்டாயம் சிறிலங்கா பொருட்களை புறக்கணிக்க வேண்டும்

க்ருத்து பகிர்ந்தமைக்கு நன்றிகள்

புறக்கணிப்பு பொருட்களுக்கு மாற்றீடு செய்தால் ஏன் கோவணத்தோடு போகவேண்டி வருகிறது?

ஒமோம் மாற்றீடு செய்தால் சரி கருத்து பகிர்வுக்கு நன்றிகள்

ஒரு நன்மை கிடைக்கும் எனில் எத்தனை துன்பம் வந்தாலும் தாங்கித்தான்

ஆகவேண்டும்

ஒம் தாங்கித்தான் ஆகவேண்டும் கருத்து பகிர்வுக்கு நன்றிகள்

Link to comment
Share on other sites

இந்த கந்தர் மாதிரி எல்லாரும் மாறினால்..........!!! காலம் போகேலே

கட்டாயம் சாதிக்கலாம்.............

அதுக்கு தமிழர் நாங்கள் ஒற்றுமையாக மட்டுமல்ல மற்ரவனை எமாற்றி

வாழாமலும் கற்றுக் கொள்ள வேணும்...........

தன்ர இனத்தை அழித்துக் கொண்டு மானத்தை மறைக்க பல உடுப்பு போடுதை விட

கோவணமே இல்லாமல் திரிவது மிக மிக நன்று....................

Link to comment
Share on other sites

கதை நல்லாதான் இருக்கு, ஆனால் என்னத்தை எதிர் பார்க்கிறீங்கள் என்று தான் விளங்கவில்லை புத்தன்.

Link to comment
Share on other sites

  • 4 years later...
  • கருத்துக்கள உறவுகள்

நம்மட கதை இன்றைய தெரிவில் வந்து இருக்கு ....நன்றிகள் நியானி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மற்ற நாட்டுப் பொருட்களைப் பற்றிக் கவலையில்லை. ஆனால் சிங்கள தேசத்துப் பொருட்களை எழுமானவளவு புறக்கணியுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி  புத்தர்

மீண்டுமொரு குட்டலுக்கு...

 

இந்த கந்தர் மாதிரி எல்லாரும் மாறினால்..........!!! காலம் போகேலே
கட்டாயம் சாதிக்கலாம்.............
அதுக்கு தமிழர் நாங்கள் ஒற்றுமையாக மட்டுமல்ல மற்ரவனை எமாற்றி
வாழாமலும் கற்றுக் கொள்ள வேணும்...........

தன்ர இனத்தை அழித்துக் கொண்டு மானத்தை மறைக்க பல உடுப்பு போடுதை விட
கோவணமே இல்லாமல் திரிவது மிக மிக நன்று....................

 

எம்மால் முடிந்தளவு

புறக்கணிப்பை செய்யணும்

ஒருவரால் முடிந்தது

மற்றவரால் முடியாதிருக்கலாம்

ஆனால் ஒவ்வொருவரால் ஏதாவது ஒன்றையாகினும்  புறக்கணிக்கமுடியும்

அதை நாம் செய்கின்றோமா என்பது தான் கேள்வி.

 

நான் பலவற்றை  புறக்கணிக்கின்றேன்

மேலும்

எனது உறவுகள் எவராவது 

புறக்கணிக்கக்கூடிய பொருட்களை  பாவித்தால்

அவற்றை  தவிர்க்கும்படியும்

அதற்கான மாற்றீடுகளையும்   சொல்வது எனது வழமை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

:) புத்தன், ஒரு தீர்க்கதரிசி.

Link to comment
Share on other sites

  • 1 year later...

நான் இங்கிலாந்தில் 2012 வரை இருந்தேன், அதுமட்டும் உந்தபுறக்கணிப்பு இருந்தது

இப்பவும் நடைமுறையில் இருக்குதோ?

என்னைபொறுத்தவரை இந்த புறக்கணிப்பால் ஈழத்திலும், புலத்திலும் பாதிப்பு தமிழருக்கே அதிகம் இருந்தது

இதிலும் பார்க்க வணங்கா மண்ணை ஒழுங்கா அனுப்பி இருக்கலாம்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.