Jump to content

பிருந்தனின் கவிதைகள்


Recommended Posts

அடெ பெடியா என்னை மாதிரியே நீரும் கவிதை எல்லாம் நல்ல எழுதிறிர் எப்படி?

எல்லாம் உங்க ஆசீர்வாதம்தான் அண்ணா.

வாழ்த்துக்கள் கூறிய அனைத்து உறவுகளுக்கும் நன்றிகள்.

Link to comment
Share on other sites

  • Replies 101
  • Created
  • Last Reply

கவிதைக் காதலை சுவைத்தோம் பிருந்தன். தொடருங்கள்.

"வாலி போடுவார் அவளுக்கு வேலி" என்கிற வரிகளின் கருத்தோடு உங்களுக்கு உடன்பாடு இருக்கிறதா? கவிதைக்கு வேலி போட முடியுமா? வாலி என்கிற சொல்லுக்காக வேலியை பயன்படுத்தியிருக்கிறீர்கள், ஆனால் கருத்து பொருத்தமாக இருக்குமா என்பது குழப்பமாகவே உள்ளது.

நன்றி.

அந்த வார்த்தைகள் எதுகைமோனைக்காக எழுதப்பட்டிருந்தாலும், ஒவ்வொருகவிஞனும் கவிதை தம் வசப்படவேண்டும் என்றே விரும்புகிறான் எழுதுகிறான், எமதுகாணியை சுற்றி வேலிபோட்டால் அது எமக்கு சொந்தம், காணிக்குபோடலாம் கவிதைக்கு போடலாமா? போட்டாலும் அது அடங்குமா? என்பதுதான் நான் சொல்லவந்த கருத்து.

உங்கள் கருத்துக்கு நன்றி இளைஞன்.

Link to comment
Share on other sites

மீண்டும் களத்தில் பிருந்தன் அண்ணாவை கண்ணுற்றதில் மட்டற்ற மகிழ்ச்சி. அண்ணா நலமா? கவிதையோடு வந்திருக்கிறீங்க. உங்கள் காதல் கவிதை நாயகியோடு சந்தோசித்திருக்க வாழ்த்துகிறேன் :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கவிதை அழகா இருக்கு பிருந்தன்........தொடர்ந்து எழுதுங்க....

Link to comment
Share on other sites

பிருந்தன்... உங்கட கவிதை எல்லாம் நல்லா இருக்கு,

வாழ்த்துக்கள்..

தொடர்ந்து எழுதுங்கோ....

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புதுப்புதுக் கருக்களை எடுத்து புதுமையான வகையில்

புதுக்கவிதைகளை வடிக்கும் பிருந்தனை பாராட்டாமல் இருக்க முடியவில்லை!

பிறப்பாலே இவர் ஒரு கவிஞர்தான் சந்தேகமில்லை!

Link to comment
Share on other sites

புதுப்புதுக் கருக்களை எடுத்து புதுமையான வகையில்

புதுக்கவிதைகளை வடிக்கும் பிருந்தனை பாராட்டாமல் இருக்க முடியவில்லை!

பிறப்பாலே இவர் ஒரு கவிஞர்தான் சந்தேகமில்லை!

ஜயா செல்வமுத்து ஆசிரியரே உங்கள் வார்த்தைகள் எனக்கு உற்சாகத்தை கொடுத்தாலும், பிறப்பாலே கவிஞர் என்பது கொஞ்சம் ஓவர்போல் இருக்கிறது. :lol:

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

கால நதி

காதலெனும் தீவினிலே

நான் ஓடமாய் காத்திருந்தேன்!

ஓடம் நான் ஓட்டிடவே

கடல் தன்னை கானவில்லை!

தண்ணீர் இல்லா ஓடமெதற்கு

காதல் இல்லா வாழ்வெதற்கு!

காத்திருந்தேன் தீவினிலே

உனை நான் பாத்திருந்தேன்!

காத்திருந்தும் நீ வரவில்லை

கடல் மட்டும் வந்து சேர்ந்தது!

வந்த கடல் கதை கூறி சென்றது

அது உன் கண்ணீரென்று சொன்னது!

கடல் அளவு கண்ணீர் வடித்திடவே

உனக்கு என்ன துன்பம் நேர்ந்துவிட்டது!

ஓடத்திலே ஓடிவந்தேன் உனைதேடி

ஓடி வந்த ஓடம் தன்னும் நின்றுவிட்டது!

ஓடிய ஓடம் நின்றதேன்

உன் கண்ணீரும் உறைந்ததேன்!

உப்புப் பாறையில் நான்

துக்கப் பார்வையில் நீ!

தூள் தூளாகாதோ இப்பாறை

திறந்திடாதோ உன் சிறை.

Link to comment
Share on other sites

அவளின் சிறை திறந்து விட வாழ்த்துக்கள். பிருந்தன் இந்தக் கவிதையும் அருமை.

Link to comment
Share on other sites

நன்றி ரமா உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்.

Link to comment
Share on other sites

  • 2 months later...

சொந்தம் ஆகிவிட்ட காதல்.

உன் பார்வை எனக்கு கிடைத்துவிட

என் பாதையை நான் மறந்து விட்டேன்!

அவ்வழி நீபோவது கண்டால்

இவ்வழி நான் ஏங்குவது உண்டு!

சேர்ந்து நீ உன் அண்ணனுடன் போகையில்

சோர்ந்து இருப்பேன் அன்று முழுதும்!

கடைக்கண் பார்வை கிடைத்திடவே

கடை வீதியில் காத்திருப்பேன்!

தூரத்தில் நீ வருதல் கண்டால்

ஓரத்தில் நான் பார்த்திருப்பேன்!

பார்வைதன்னும் கிடைத்து விட்டால்

பாரயே வென்றவன் போலாவேன்!

இன்று கிடைத்தது உன் பார்வை

அன்று பெற்றேன் நான் ஜனித்த பலனை!

பார்த்திருந்தேன் நாளை விடியலுக்காக

போர்த்திருந்தேன் இரவுமுழுதும் போர்வைக்குள்ளே!

கடிதமொன்று தந்து விட்டாய்

படி எல்லாம் தடுமாறி நிலைமாறுதே!

படித்து விட்டேன் உன் கடிதத்தை

முடித்து விட்டாய் என் வாழ்கையை!

கொடுத்து விட்டேன் நீ அண்ணனுக்கு எழுதியகடிதத்தை

கொழுந்து விட்டு எரியுதே என் நெஞ்சக்கணல்!

பொறுத்து விட்டேன் நீ

என் அண்ணி என்பதால்.

Link to comment
Share on other sites

அச்சோ பாவம் காதலி அண்ணி ஆகிட்டாவா

கவிதை நல்லாயிருக்கு பிருந்தன் அண்ணா

Link to comment
Share on other sites

பிருந்தன் கவிதை முயற்சிக்கு வாழ்த்துக்கள்....

சொல் சிக்கனமும் கவிதைக்கு அழகு...

எல்லாவற்றையும் விபரித்து விட வேண்டுமென்பதல்ல.....

சொல்லாமல் வாசகர் ஊகத்திற்கு விடுவதும் கவிதைக்கு அழகு சேர்க்கும்.....

தேர்ந்தெடுத்த வார்த்தகள் கவிதையைச் சிகரத்திற்கு கூட்டிச் செல்லும்....

வார்த்தைகளின் அழகும் கவிதை தான் ....ஆனால் நல்ல உட்பொருளும் இருந்தால் அது நல்ல கவிதை.....

உதாரணம்: // முகிலினங்கள் அலைகின்றன....முகவரிகள் தொலைந்ததுவோ?

முகவரிகள் தொலைந்ததனால் அழுதிடுமோ.. அது மழையோ?// - வைரமுத்து

இது நல்ல சொற்கட்டுக்கு உதாரணம் ஆனால் மேலோட்டமான விடயம் ....அதற்கு மேல் இது கிலாகிக்கப் பட மாட்டாது....

//காத்திருக்கும் வரை நமது பெயர் காற்றாய் இருக்கட்டும்...

புறப்பட்டு விட்டால் புரிய வைப்போம் புயலென்று...// மேத்தா.

இதில் சொல்கட்டும் உட்பொதிந்த ஆழமான பொருளும் இருக்கின்றது.

காலமெல்லாம் நிலைத்திருக்கக் கூடியவை இவைகள்.... :idea: :idea:

தொடருங்கள்.... தொடர்ந்த பயிற்சி சிறப்பைத் தரும்....

கவி எழுதத் துடிக்கும் -எல்லாள மஹாராஜா-

Link to comment
Share on other sites

ஐயோ பாவம் அந்தக் காதலன். கவிதை நன்றாக இருக்கு பிருந்தன். தொடர்ந்து எழுதுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கவிதைகளுக்கு மீண்டும் எனது நன்றிகள்.

உங்கள் கவிகளில் ண, ன இவைகளைக் கவனித்து எழுதவும்.

கால நதி

உணை நான் பாத்திருந்தேன்!

ஓடி வந்த ஓடம் தன்னும் நிண்றுவிட்டது!

சொந்தம் ஆகிவிட்ட காதல்.

சேர்ந்து நீ உன் அன்னனுடன் போகையில்

பாரயே வெண்றவன் போலாவேன்!

கடிதமொண்று தந்து விட்டாய்

கொடுத்து விட்டேன் நீ அண்ணுக்கு எழுதியகடிதத்தை

மற்றைய எழுத்துப் பிழைகளையும் கவனிக்கவும்.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

வாழ்த்துக்கூறிய நித்திலா,ரசிகைக்கும். பயிற்சி தந்த எல்லாளனுக்கும், குறைகளை சுட்டிக்காட்டிய ஆசிரியருக்கும் நன்றிகள்.

Link to comment
Share on other sites

  • 10 months later...

போராட்டம்

பேறுகாலத்தில்

பிள்ளைகளை,பிரசவிக்க

தாய் நடத்துவாள்,

ஈழத்தில்

தாயைப் பிரசவிக்க

பிள்ளைகள் நடத்துகிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவிதைப் பூங்காட்டினுள் காலிடறி நானுழைந்தேன்!

கண்ட மலர்களெல்லாம் பொன் மலராய் மின்னுதம்மா!

வண்ணங்களோ ஏராளம் சிந்துவதோ தேன் துளிகள்!

பறந்துவந்த வண்டார்ரெலாம் பார்வையினாள் பருகுகின்றார்!

வேண்டுமட்டும் நானுமுண்டு நினை வாழ்த்திப் பறக்கின்றேன் !!!

Link to comment
Share on other sites

கவிதைகள் இருக்குது உணர்வோடு

படிக்கிறோம் நமதை மகிழ்வோடு

இணைக்கனும் தினமும் யாழோடு

இனிதே உரைக்கிறோம் வாழ்த்தோடு...

Link to comment
Share on other sites

பிருந்தன், உங்கள் கவிதை அற்புதம்.

இதுவரை:

அம்மா

லிபரேஷன் ஒப்பரேஷன்

காதல் அவஸ்த்தை

வெளிநாடு

அக்கரை

இயற்கை காதல்

இழப்பு

இயந்திர மனிதன்

கவிதைக் காதல்

கால நதி

சொந்தம் ஆகிவிட்ட காதல்

போராட்டம்

என்று அடுக்கடுக்காக உங்கள் கவிதைகள் கிடைக்கப்பெற்றது மட்டற்ற மகிழ்ச்சி.

சற்றுத் தாமதமாகவே உங்கள் கவிதைகளைக் கண்ணுற்றேன் எனினும் ஒன்றுவிடாமல் ஒரே மூச்சில் படித்து முடித்துவிட வேண்டுமென்ற ஆர்வமாயிருந்தது.

தொடர்ந்து வழங்க எனது வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மகிந்த படுத்த கட்டிலில் தம்பி படுத்து எழுந்து வந்திட்டார். மற்றவர்களுக்கும் அந்த ஆசை வரும் தானே? (நான் ஜனாதிபதிக்கட்டிலை சொன்னேன் ராசா😜)
    • பையா நீங்கள் புதுப் பதிவு போட வேண்டிய  அவசியமே இல்லை........ அதுதான் அவர் போட்டி விதிகளில் வடிவாக சொல்லியிருக்கிறார் ....போட்டி விதி  04 ஐப் பின்பற்றி அவரின் அனுமதி பெற்று உங்களின் பதிவில் சில திருத்தங்கள் செய்யலாம்........ அவரின் அனுமதி பெறுவது உங்களின் கெட்டித்தனம் ...... ஏதோ என்னாலானது "புத்தியுள்ள பிள்ளை பிழைத்துக் கொள்ளும்".....!  😁
    • அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அலுவலகத்தில் குழப்பநிலை! முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு மந்துவில் பகுதியில் அமைந்துள்ள கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அலுவலகத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போது குழப்பநிலை ஏற்பட்டிருந்தது. இது தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது குறித்த  மக்கள் சந்திப்பின் போது செய்தி சேகரிப்பதற்கு சென்றிருந்த முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளர் ஒருவர் அதனை காணொளியாக பதிவு செய்திருந்த நிலையில், அமைச்சரின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு உத்தியோகத்தர் காணொளி எடுக்க வேண்டாமென  அவரைத் தடுத்ததோடு அதனை மீறி எடுத்து செய்தி பிரசுரித்தால் வீடுதேடி வருவோம் எனவும் அச்சுறுத்தல் விடுத்ததாகத்  தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இச்சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸ் அதிகாரிக்கு அறிவிக்கப்பட்டதாகவும், பின்னர் பொலிஸார் அமைச்சருக்கு இது குறித்து தெரியப்படுத்தி இருந்ததாகவும் ஆனால் எந்த நடவடிக்கையும் இது தொடர்பாக  எடுக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது. https://athavannews.com/2024/1378726
    • இராணுவ வீரர்களின் கவனத்திற்கு! முறையான விடுமுறையின்றி கடமைக்கு சமூகமளிக்காத மற்றும் சட்டவிரோதமான முறையில் சேவையை விட்டு வெளியேறியுள்ள இராணுவத்தினருக்கு ஏப்ரல் 20 ஆம் திகதி முதல் மே மாதம் 20 ஆம் திகதி வரை பொது மன்னிப்பு காலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொது மன்னிப்புக் காலத்தின் போது, தமது படையணி தலைமையகத்துடன் தொடர்பு கொண்டு சட்டரீதியாக சேவையை விட்டு வெளியேற வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. அதன்படி, எதிர்வரும் ஏப்ரல் 20 ஆம் திகதிக்கு முன்னர் முறையான விடுமுறையின்றி பணிக்கு சமூகமளிக்காத அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் உரிய ஆவணங்களுடன் தத்தமது படையணி தலைமையகத்திற்கு மட்டும் சமூகளிக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து இராணுவ சேவையில் இருந்து வெளியேறும் அடிப்படை அனுமதி வழங்கல் நடவடிக்கை, 72 மணித்தியலங்களுக்குள் எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இராணுவ அடையாள அட்டை அல்லது இராணுவ அடையாள அட்டை தொலைந்து விட்டது எனின் சமீபத்தில் பெற்றுக் கொள்ளப்பட்ட பொலிஸ் அறிக்கையின் பிரதி, தேசிய அடையாள அட்டை அல்லது சாரதி அனுமதி பத்திர பிரதி, சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள், வரவு வைக்கப்பட்டுள்ள வங்கி புத்தகத்தின் பிரதி ஆகியவற்றை கொண்டுவருமாறு இராணுவ ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. மேலும், முறையான விடுமுறையின்றி பணிக்கு சமூகமளிக்காமை தவிர வேறு சட்ட விரோத நடவடிக்கைகளில் சம்பந்தப்படாதவர்கள் மற்றும் முறையான விடுமுறை இன்றி தற்போது வெளிநாட்டில் இருக்கும் இராணுவ உறுப்பினர்கள் மீண்டும் சமூகமளிக்காது தனது படையணியுடன் தொடர்பு கொண்டு இந்த பொது மன்னிப்புக் காலத்தின் போது சட்டரீதியாக தமது சேவையை விட்டு வெளியேறுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இராணுவ ஊடகப் பிரிவு மேலும் அறிவித்துள்ளது. https://athavannews.com/2024/1378764
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.