Jump to content

"உயில்" - சிறுகதை - ஆக்கம்- ஆதவி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

"உயில்" - சிறுகதை - ஆக்கம்- ஆதவி

22/12/2008

--------------------------------------------------------------------------------

என்னடா.... ஊருக்குப் போறதாச் சொல்லீட்டு, வேலைக்கு வந்து நிக்கிறாய்? என்ன நடந்தது?' - வசந்தன்தான் ஆதங்கத்துடன் கேட்டான். 'என்னத்தையடா சொல்றது..?அப்பா இப்படிச் செய்வாரெண்டு கனவிலையும் நான் நினைக்கேல்லையடா... இந்தா....இதை வாசி; விளங்கும்......' என்றபடி, நேற்றைய தினம் பதிவுத் தபாலில் வந்திருந்த மடலினை அவனிடம் கொடுத்து விட்டு நான் அப்பால் நகர்ந்தேன். குளிர் காற்று வேகமாக வீசிக் கொண்டிருந்தது. அதை விட வேகமாக என் மனதில் நினைவுப்புயல் அடித்துக் கொண்டிருந்தது. வேலை தொடங்க இன்னும் பத்து நிமிடங்களே இருந்தன. சரியாக இதே நேரத்துக்கு இன்று வானில பறந்து கொண்டிருந்திருப்பன்........அந்தக

் கடிதம் மட்டும் உரிய நேரத்தில என்னுடைய கைக்கு எட்டி இருந்திராவிட்டால்.

இரண்டு மாதம் முதல் அக்கா அறிவிச்சவ அப்பாவுக்கு உடல்நிலை சரியில்லை, சரியான சளி, மாறுதுமில்லை, மருந்தும் எடுக்கிறார் இல்லை என்று. அப்பவே நான் தீர்மானிச்சிட்டன்..........இந்த மாதம், இரண்டு கிழமையாவது ஊருக்குப் போய் நின்று தேவையான மருத்துவ சிகிச்சைகளுக்கு ஒழுங்கு செய்து பரிசோதனைகளையும் முடித்து விட்டு, தேவைப் பட்டால் நாலு கிழமையாவது நின்று விட்டு வாறதெண்டு.

நான்தான் எங்களுடைய வீட்டில கடைசிப் பிள்ளை. என்னைப் பெத்த வீட்டுக்குள்ளேயே அம்மா அதிக குருதிப் பெருக்கால எங்கள் எல்லோரையும் தவிக்க விட்டுவிட்டுப் போய்விட்டா. எனக்கு மூன்று அக்காமாரும் இரண்டு அண்ணமாரும் இருக்கினம். எல்லோரும் திருமணமாகி குழந்தையும் குடித்தனமுமாக வெளிநாடுகளில் வசதியாக இருக்க, எனக்கு நேரே மூத்த அக்கா தான் அப்பாவோட எங்களுடைய பரம்பரை வீட்டில இருக்கிறா. அவவுக்கும் எனக்கும் சரியாப் பத்து வயது வித்தியாசம்; இருந்தாலும், அவவுக்கு என்னில நல்ல பாசம். ஒரு பெரிய காணிக்குள்ளே மூன்று அறையுள்ள சின்ன-அடக்கமான வீடு எங்களுடையது. அந்தக் காலத்தில எங்களுடைய வீட்டைத் தெரியாதவர்களே இராயினம்.

சந்தியில இருக்கிற மரக்கறிச் சந்தைக்கு அடுத்து வருகிற முடக்கில் புளியடி வைரவர் கோயிலுக்கு கிழக்கால இருக்கிற ஒரே ஒரு கல் வீடு அது. சுற்றிவர ஒரே மாஞ்சோலை. அநேகமாக அந்தப் பிரதேசத்தில இருக்கிற எங்களுடைய சனங்கள் நல்ல தண்ணிக்கு எங்களுடைய வீட்டுக்குத்தான் வாரவ. என்னுடைய அம்மா ஒரு பிற்போக்குவாதி போல. விடிகின்ற வேளையில யாராவது வெறும் வாளி, குடத்தோடை படலையடியில நின்றாலே விரட்டிப் போடுவவாம். இரவும் பொழுதுபட்டாப் பிறகு தண்ணி அள்ள விட மாட்டாவாம். ஆனால், அப்பா, அப்படி இல்லையாம். அந்தக் காலத்திலேயே, 'சிவப்பு சட்டைக்காரருடைய' முற்போக்குக் கட்சி, கூட்டம் என்று திரிவாராம். அதிகம் படித்து இராவிட்டாலும் 'நாட்டு நடப்பு தர்மம் நியாயம் தெரிஞ்ச மானுசன்' என்று எங்களுடைய ஊரில மட்டுமல்ல அயற் கிராமங்களிளையும் நல்ல பெயர் எடுத்தவர், எங்களுடைய அப்பா மருது.

'மருதம்மான் மாதிரி எல்லோரும் இருந்தா.......எப்படி இருக்கும் இந்த உலகம்...' என்று எங்களுடைய ஊரவர் அங்கலாய்த்துப் பேசுவதை நானும் என்னுடைய காதுபடக் கேட்டு இருக்கிறன். தண்ணீர் அள்ள வருகிற சின்னப் பிள்ளைகளுக்கு மாம்பழங்களைப் பறித்துத் தானே கொடுப்பார். கேட்டால், மாங்காய்களைப் பறித்துக் கொண்டு போகவும் விடுவார். சனங்களும் அப்படித்தான். 'பாவம் மனுசன். தாரம் இல்லாவிட்டாலும் தனியே என்ன மாதிரி தாய்க்குத் தாயாயும் தந்தைக்குத் தந்தையாயும் எல்லா உறவாயும் இருந்து தன்னுடைய பிள்ளைகளை என்ன மாதிரி பக்குவமாய் வளர்க்கிறார்' என்று சொல்லிக் கொண்டு அப்பப்ப வந்து எங்களுடைய வீட்டுக்குத் தேவையான சில வேலைகளைத் தாமாகவே செய்து கொடுப்பினம்.

சிலர் தவணை முறையில வந்து மா இடிச்சுத் தருவினம். சிலர் விடிய வந்து தண்ணீர் அள்ளி விட்டுப் போறதால, தங்களுக்கு நேரம் கிடைக்கிற நேரம் தாங்களாகவே வந்து கோழிக் கொட்டிலைத் துப்பரவு செய்வினம். தென்னை ஓலையில கிடுகு பின்னுவினம். விளக்குமாறு எடுத்து வளவைக் கூட்டித் துப்பரவாக வைப்பினம். நான் வளர்ந்தாப் பிறகு, சின்னக்காவும் நானும் கூடமாட ஏதாவது வேலை செய்தால் 'இஞ்ச பிள்ளைகள், நீங்கள் விடுங்கோ. அம்மா இருந்தால் உப்படி விடுவாவே? போங்கோ......போய்ப் படியுங்கோ.....' என்று அன்புக் கட்டளை இடுவினம். அப்பாவுக்கும் கடைசிப் பிள்ளைகளையாவது நல்லாப் படிப்பிச்சுப் பார்க்க வேண்டும் எண்டு ஒரே ஆசை. நானும் சாதாரண தரம் படிச்சு சோதனை எழுதினவுடனேயே அண்ணமாருடைய வற்புறுத்தலால வெளிநாடு வந்திட்டன். எனக்கு இங்கு வரவே விருப்பமில்லை. ஆனாலும் சின்னக்காவுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைச்சுக் கொடுக்க வேணும். மூத்த அக்காக்களை தாங்கள் இரண்டு பேரும் பார்த்த மாதிரி, நான் தான் சின்னக்காவுடைய எதிர்கால வாழ்க்கைக்கு உதவ வேணும் என்று சொன்னதால, மறுக்கவே ஏலாமல் போட்டுது.

தொண்ணூற்று இரண்டில இங்கே வந்து படாத பாடெல்லாம் பட்டு, ஒன்றுக்கு இரண்டு, மூன்று வேலை செய்து ஒரு மாதிரி வந்த கடன் காசெல்லாம் திருப்பிக் கட்டி முடிச்சு குருவி மாதிரி கொஞ்சம் கொஞ்சமாக மிச்சம் பிடிச்சுக் காசு சேர்த்தன். சின்னக்காவுக்கு, அவவுடைய வகுப்பிலேயே ஒன்றாகப் படித்து வந்த எங்களுடைய ஊர்ப் பரிகாரியுடைய மகனுக்கு இரண்டு பேருடைய விருப்பத்தின் பேரிலே இரு வீட்டாருடைய சம்மதத்தோட 'யுத்த நிறுத்தம்' வந்த கையோட போய் நின்று கலியாணத்தைச் செய்து என்னுடைய கடைமையையும் நிறைவேற்றி விட்டுத்தான் திரும்பி வந்தனான். இப்ப அவவுக்கு இரண்டு பிள்ளைகள் இருக்கினம். அப்பாவையும் பார்த்து நாலு ஐந்து வருசத்துக்கும் மேலாகிட்டுது. பேச்சுவார்த்தை நடக்கிற காலத்தில ஒருக்காப் போட்டு வருவம் எண்டு போன வருசத்துக்கு முதல் வருசம் நத்தார் விடுமுறைக்கு விமானச் சீட்டுக்குப் பதியப் போனனான். ஆனால், வேலைத் தளம் இடம் மாறின காலம் என்றதால விடுமுறை தர மறுத்திட்டினம். அதோட, அந்த மாதம் மட்டும் சம்பளமும் இரட்டிப்பாகத் தரப்பட்டதால தைப்பொங்கலோட போகலாம் எண்டு விட்டுட்டு இருந்திட்டன். பிறகு அப்படியே, வேலை மும்முரமாக ஒரு மாத விடுமுறை எடுக்கிறது, முதல் ஒரு வருச காலத்தில் ஏலாமல் போட்டுது.

ஊரில பள்ளிக்கூடங்களும் இரண்டாம் தவணை விடுமுறை வருவதால இந்த ஆவணி மாதம் போவம் என்று என்னுடைய பயணத்தைப் பற்றி எண்ணிக் கொண்டு இருந்த நேரத்தில தான் சின்னக்கா ஒருநாள் முன் வீட்டில இருந்த தொலைதொடர்பு நிலையத்தில இருந்து கதைத்தவ. நான் வரும் வரை அப்பா தாங்குவாரோ தெரியாதென்றும் பரியாரிமாமா - சொந்த பந்தங்களுக்கு சொல்லச் சொல்லி தனக்குச் சொல்லி விட்டார் என்றும் சொல்லி அழுதா. உடனேயே, நான் ஒருமாதிரி, விமானப் பயணத்துக்கான ஏற்பாடுகளைச் செய்து, தெரிந்தொருவர் மூலம், கூடக் காசு கொடுத்து முட்பதிவையும் செய்து வேலைத் தளத்தில அவசர நிலைமை என்று கூறி சம்பளம் இல்லாத ஒரு மாத கால விடுப்பையும் எடுத்து, புறப்பட முன் இருந்த கடைசி இருபத்து நாலு மணி நேரத்தில தான் அப்பாவுடைய இந்தக் கடிதம் என்னுடைய கையில வந்து சேர்ந்தது.

இதை எல்லாம் உண்மையிலேயே நம்ப முடியாமல் தான் இருக்குது. பாவம் மனுசன், என்னில அவருக்கு நல்ல பாசம்தான். எண்டாலும், அவருக்கு அதேயளவு பாசமும் அக்கறையும் தன்னைச் சுற்றி இருந்த ஆக்களிலையும் எங்களுடைய மண்ணிலையும் இருந்திருக்கு எண்டதை இப்பத்தான் நான் விளங்கிக்கொள்ள சந்தர்ப்பம் வந்திருக்கு. தனக்கு ஏலுமாக இருக்கிற போதே எழுதிய இந்தக் கடிதம் மூலமும், தன்னுடைய உயில் மூலமும் அதைத் தெளிவாக நிரூபித்து விட்டார், அவர். எத்தனை தரம் இதுவரை அந்தக் கடிதத்தைப் படிச்சிட்டனோ தெரியேல்ல; அதில எழுதப்பட்டுள்ள ஒவ்வொரு சொல்லும் மனப் பாடமாக்கிட்டுது எனக்கு. கிட்டத்தட்ட, ஒரு வருசம் முதல் எழுதி வைச்சிட்டு, தனக்கு ஏலாம வருகுதென்று தெரிந்த கையோட, தானே தபாலில சேர்த்திருக்கிறார் போல இருக்கு. இல்லாட்டி கட்டாயம் அக்கா சொல்லி இருப்பா அல்லது, கடிதம் கிடைச்சுதா என்றாவது கேட்டிருப்பா.

எனக்குத் தெரியுது நீங்க இப்ப என்ன யோசிக்கிறீங்கள் எண்டு. கொஞ்சம் பொறுங்கோ - அப்பாண்ட கடிதத்தைப் படிச்சிட்டு வசந்தன் வாரான். 'என்னடா, இப்ப என்ன செய்வதாய் உத்தேசம்? இதை நான் எதிர்பார்க்கவே இல்லை.......' 'ஏனடா, நானும் அப்படித்தானே? கொள்ளி வைக்க வராட்டியும் பரவாயில்லை. ஆனால் எங்களுடைய சனத்தைக் காப்பாத்தடா.......' எண்டு அவர் எழுதியதைத் தானடா என்னால தாங்க முடியாமல் இருக்குதடா...' இதோ வேலை தொடங்குவதற்கான மணி அடிச்சிட்டினம். இனி நான் கோப்பி இடைவேளைக்குத்தான் வெளில வருவன். அதுவரை, இதை வாசிச்சிட்டு உங்களுடைய அலுவல்களைப் பாருங்கோ. வந்து சொல்லுறன், வசந்தனுக்கு என்னுடைய பதிலை. அப்ப, உங்களுக்கும் விளங்கும் - நான் என்ன தீர்மானத்தை எடுத்து இருக்கிறன் எண்டு.

இல 100, மூன்றாம் கட்டை,

தபால்பெட்டிச் சந்தி,

கரும்புத் தோட்டம், கிளிநொச்சி.

அன்பு மகன் இந்திரனுக்கு,

இதுதான் அநேகமாக நான் சுயநினைவோடு உனக்கு எழுதிற கடைசிக் கடிதமாக இருக்கும் எண்டு நினைக்கிறன். என்னுடைய நிலைமை எனக்குத் தெரியும். உனக்கு அதை விபரமாக எழுத ஏலாமல் இருக்கிறதால முன் வீட்டு விதானையாரிட்டையும் பரியாரி மாமாவிட்டையும் முதலே விரிவாக எழுதிக் கொடுத்திட்டன். இதோடு அதனுடைய பிரதியையும் அனுப்புகிறேன்; ஆறுதலாகப் படிச்சுப் பார்; உனக்கு எல்லாம் விளங்கும். நீ இங்கே வந்திட்டுப் போனாப் பிறகு, நாங்கள் பட்ட பாடுகள் கொஞ்ச நஞ்சமில்லை. ஏதோ.........வெளிநாட்டுக் காசு மாறி மாறி வந்து கொண்டு இருந்ததால நாங்கள் சமாளிச்சிட்டம். ஆனால், இந்த ஊரில எங்களுடைய சனம் படுகிற பாட்டைப் பார்க்க, எனக்குத் தாங்க முடியுரதில்லையடா.... நாங்கள் ஒரு காலத்தில விட்ட பிழைகளாலதான் எங்களுடைய சந்ததிகள் இந்தப் பாடு படுகுது. ஆனால், நீங்களும் உந்தப் பிழையை விட்டுடாதையுங்கோ. முந்தி இடம்பெயர்ந்து வந்த சனம், திரும்பவும் தங்களுடைய ஊருக்கு மீளக் குடியமரப் போய்விட்டு, கொஞ்ச நாளிலேயே திரும்பவும் இடம் பெயர்ந்து வந்திட்தினம். உங்கே இருக்கிற நீங்களும், இங்கத்தயப் புதினங்களை ஒவ்வொரு நாளும் அறிஞ்சு கொள்ளுவீங்கள் தானே? சிலர் பேச்சுவார்த்தைதான் வழி எண்டு நம்பிக்கொண்டு இருந்தவ.... இப்பவும் கொஞ்சப் பேர் அந்த நினைவோட தான் இருக்கினம்.

ஆனால், உது சரி வராது. ஐம்பது வருசமா நாங்கள் பார்க்காத மேசையும் இல்லை கதிரையும் இல்லை. மாறி மாறி பதவிக்கு வார சிங்கள அரசியல்வாதிகள் எங்களுடைய தலைவர்களைப் பேசிப் பேசியே பேக்காட்டிப் போட்டாங்கள். நாங்களும் நம்பி நம்பி நாசமாப் போனது தான் மிச்சம். இனி, அது நடவாது.........எங்களுடைய வீட்டு வேலிய நாங்கள் தான் போட வேணும், பராமரிக்க வேணும் - பழுதாப் போச்சுண்டால் நாங்கள் தான் புதுசாப் போட வேணும் அல்லது மாத்தி அமைக்க ஒழுங்கு பண்ண வேணும். அது போல தானடா - எங்களுடைய நாட்டின்ட எல்லைகளை நாங்கள் தான் பாதுகாக்க வேணும். ஆள் மாறி ஆள் நிக்க உதவி செய்ய வேணும். 'அவங்கள்' எல்லாப் பக்கத்தாலையும் ஆயத்தப்படுத்திராங்கள் என்ற சங்கதி, எங்களுக்கும் தெரியும். பக்கத்து நாட்டுக் காரன், வெள்ளைக்காரன், அவன், இவன் எண்டு, நான் முந்தி நீ முந்தி எண்டு போட்டி போட்டுக் கொண்டேல்லோ எல்லாரும் உதவி செய்ரான்கள்; அள்ளி அள்ளிக் கொடுக்கிறாங்கள்.........அவயளுக்க

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் நொச்சி யாரே ...........கதை தந்த ஆதவிக்கும் பதிந்த உங்களுக்கும் நன்றி. தமிழ் உணர்வுள்ள ,தந்தையால் வளர்க்க பட்ட ,இந்திரன் போன்ற உணர்வுள்ள இளைஞர்கள் தான் இப்போது தேவை என்று சொல்லாமல் சொன்ன கதை மிக மிக பொருத்தமானது. ரசித்தேன். புல்லரித்தேன் .நானும் ஒரு இந்திரனாக கூடாதா என்று ஆதங்க பட்டேன்சிறந்த ஒரு கதை . நிலாமதி அக்கா.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இப்போது உள்ள‌ சூழ‌லில் ஈழ‌ உண‌ர்வு ம‌ன‌சில் இருக்க‌னும் அதை ஊரில் வெளிக் காட்டினால் அடுத்த‌ க‌ன‌மே ஆப்பு வைப்பாங்க‌ள்   ஊரில் ந‌ட‌க்கும் மாவீர‌ நாளுக்கு இன்னும் அதிக‌ ம‌க்க‌ள் க‌ல‌ந்து கொள்ளுபின‌ம் ஆனால் பின்விலைவுக‌ளை நினைச்சு வீட்டிலையே மாவீர‌ர் ப‌ட‌த்துக்கு பூ வைச்சு வில‌க்கு ஏற்றி விட்டு ம‌ன‌சில் இருக்கும் க‌வ‌லைக‌ளை க‌ண்ணீரால் போக்கி விட்டு அந்த‌ நாள் அதோடையே போய் விடும்   பெத்த‌ தாய் மாருக்கு தான் பிள்ளைக‌ளின் பாச‌ம் நேச‌ம் அன்பு ம‌ழ‌லையில் இருந்து வ‌ள‌ந்த‌ நினைவுக‌ள் தாய் மாரின் ம‌ன‌சை போட்டு வாட்டி எடுக்கும் என்ன‌ செய்வ‌து 2009க‌ளில் இழ‌க்க‌ கூடாத‌ எல்லாத்தையும் இழ‌ந்து விட்டோம்😞..............................
    • நிச்சயமாக  @goshan_cheக்கு புதிய சம்பவம் என்று அவருக்கு தெரிந்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால்.... அவர் @பெருமாள் யும், @பையன்26யும் கலாய்ப்பதற்காக அடி மட்டத்திற்கு இறங்கி... "தூர் வாரியிருக்கிறார்". 😂 நமக்கும் அவரை கலாய்ப்பதில் ஒரு அலாதி இன்பம். 🙂
    • நான் நினைக்கின்றேன் அவருக்கு தெரியும் இது புதிது என்று.  ஆனால் பையனின் கருத்தை மட்டும் வைத்து எப்படி சம்பவம் பழையதுதான் என்று அடிச்சு சத்தியம் பண்ணினாரோ தெரியவில்லை. ஓருவர் இங்கு எழுதுவதை மட்டும் வைத்து தனது நிலைப்பாட்டினை மாற்றும் ஆள் அல்ல அவர்.0
    • ஈரான் ஜனாதிபதியின் இலங்கை வருகை : கண்கானிப்பு நடவடிக்கையில் அமெரிக்க உளவுத்துறை. ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் இலங்கை வருகையை இஸ்ரேலின் மொசாட் புலனாய்வு சேவையும், அமெரிக்க எப்.பி.ஐ உளவுத்துறையும் கண்காணித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தின் திறப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொள்வதற்காக ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி எதிர்வரும் புதன்கிழமை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். இந்நிலையில், இலங்கையில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் நடைமுறையில் உள்ளதோடு, ஈரானிய சிரேஷ்ட பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் குழுவொன்று அண்மையில் இலங்கைக்கு வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டிருந்தது. ஈரான் ஜனாதிபதியின் இலங்கை விஜயம் தொடர்பில் இலங்கை அரசாங்கத்திற்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும், சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதேவேளை, கொழும்பிற்கு அழைத்து வரப்படும் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1379001
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.