Jump to content

யாழ் இணையத்தில நான் அறிந்தவர்கள்/பழகியவர்கள் பற்றிய சிறுகுறிப்புக்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

[

b]முனிவர்:

யாழில அண்மையில இணைஞ்சு கலக்கி அடிச்சு வருகிறார். அண்மையில கதைகளும் எழுதி இணைச்சு இருந்தார். எனக்கு வாசிக்க சந்தர்ப்பம் கிடைக்க இல்லை. இவருடன் அண்மையில பல கருத்தாடல்களில பங்குபற்றி இருக்கிறன். யாழில எல்லாப்பகுதிகளிலையும் கருத்துக்கள் பதிவார்.

தனிப்பட முனிவரை எனக்கு தெரியாது. எங்கிருந்தாலும் வாழ்த்துகள்!

நன்றி முரளி ஒரு சில கருத்துக்களை உங்களுடன் பகிர்ந்து கொண்டதில் மகிழ்ச்சி :blink:

என்னைப் பற்றியும் எழுதியதற்க்கு நன்றி :lol:

Link to comment
Share on other sites

  • Replies 183
  • Created
  • Last Reply

உண்மையிலே அருமை முரளி.

இப்ப நீங்க எழுதுறவை மகிழ்வை தருகிறது.

சில காலத்துக்கு முன்னர் குழப்பமான வினாக்களோடு விளை(னை)யாடிய போது

ஐயோ என்ன நடந்தது நம் கலைஞனுக்கு என்று யோசிக்கத் தொடங்கி மெளனமாக இருந்தேன்.

ஆர்த்தர் சீ கிளார்க் சந்திப்பு போன்ற புதிய தகவல்களை எழுதும் போது

முரளி குறித்து பாராட்டவும் மகிழவும் முடிகிறது.

இளையோர் சமூகத்துக்கு புதிய ஊட்டம்.

இந்த பகுதியில் தெரியாத பலர் குறித்த அலசல்

வியக்க வைக்கிறது. வெல் டன்.

சுவிஸ் வந்தால் நிச்சயம் சந்திப்போம்.

தொடர்ந்து எழுதுங்கள்.

உங்கள் எழுத்துக்களின் போக்கு கவர்ச்சியாக இருக்கிறது.

வாழ்த்துகள்.... பாராட்டுகள் முரளி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழ்பாடி:

இளைஞன் எனக்கு ஒருக்கால் சொன்னார் என்ன எண்டாவாம் யாழில மட்டறுத்துனராக இருக்கிற ஆக்களுக்கு வேறபெயருகளும் இருக்குமாம். அப்ப பின்ன நான் அவர் சொன்னாப்பிறகு இப்ப ரெண்டு வருசமா தீவிர ஆராய்ச்சி செய்து வாறன் மோகன், வலைஞன், இணையவன், யாழ்பாடி, யாழ்பிரியா, எழுவான் எண்டு இவையள் எல்லாரும் வழமையாக வேற என்னபெயரோட எங்களோட கருத்தாடல் செய்யுறீனம் எண்டு. அதில இறுதியில வெற்றியும் பெற்று இருக்கிறன். ஹிஹி. ஆனால் ஒருத்தருக்கும் சொல்லமாட்டன்.

யாழ்பாடி பொதுவாக பார்க்கேக்க மற்றைய மட்டறுத்துனர்கள் பட்ட அளவுக்கு மன உலைச்சல் அடைஞ்சு இருக்கமாட்டார் எண்டு நிச்சயம் சொல்லலாம். ஏன் எண்டால் கொஞ்சம் கவனமாக எக்கச்சக்கமாக குழப்பங்கள் ஏற்படாதவகையில மட்டறுத்தல் செய்வார் எண்டு நினைக்கிறன். அத்தோட கருத்தாடல் தளத்தை ஒழுங்கமைப்பது – கருத்துக்களை நகர்த்துவது – பொதுவான திருத்தங்கள் செய்வது தவிர பெரிய வெட்டு வேலைகளுக்கு போகமாட்டார். அதாவது உதாரணமாக.. யாழில வலைஞன் கோடாரிகொண்டு மரங்களை தறிக்கிற வேலை செய்வார் எண்டு சொன்னால் யாழ்பாடியை கத்தியால காய்கறி வெட்டுறவர் எண்டு சொல்லலாம்.

இணையவன், யாழ்பாடி ஆகிய இருவர் மாத்திரம்தான் இப்ப எல்லாரோடையும் கருத்தாடலும் செய்யுறது. முந்தி மதன் அப்படி செய்வார். நான் முந்தி ஒருக்கால் கேட்டு இருந்தனான் யாழ்பிரியாவை காலக்கண்ணாடியை செய்ய சொல்லி. அவ நைசாக மழுப்பிவிட்டா. ஒரு கிழமை யாழ்பிரியா சத்தமே இல்லை. கப்சிப். பிறகு மடல் அனுப்பி இருந்தா தான் சில நாட்களாக யாழுக்கு வரமுடிய இல்லையாம் எண்டு. நம்பத்தானே வேணும்!

யாழ்பாடி நான் ஆரம்பிச்ச எமக்கு விருப்பமான வேற்றுமொழி பாடல்கள் எனப்படுகிற திரியில நிறைய காணொளிகள் இணைச்சு இருந்தார். அவர் இணைச்ச ஒரு ஸ்பானிஸ் பாட்டு நல்லாய் இருந்திச்சிது கேட்க.

யாழ்பாடி யாராக இருந்தாலும், எங்கிருந்தாலும் வளமுடன் வாழ வாழ்த்துகள்!

முரளி உங்கள் தொகுப்பு நன்றாக உள்ளது. என்ன பற்றி சொன்னதுகளை பற்றி என்ன சொல்ல :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புஸ்பாவிஜி:

யாழில அண்மையில இணைஞ்சு கலக்கி அடிச்சு வருகிறார். இவர் தன்னைப்பற்றி யாழில சொன்னதுகளை பார்த்தால் யாழ் பல்கலைக்கழக பழைய மாணவனாகவும், குருநகரை பிறப்பிடமாக கொண்டவர் போலவும் இருக்கிது.

ஆரம்பத்தில கொஞ்சம் பிரச்சனைப்பட்டவர் என்ன எண்டால் செய்தி மூலங்களை போடுறது இல்லை எண்டு. யாழில சகல பகுதிகளுக்கும்போய் கருத்துக்கள் பதிவார். நல்லாய் எல்லாரோடையும் கலகலப்பாக கதைப்பார். பகிடிகளையும் விடுவார். எண்டமண்டையில தட்டி மேளம் அடிச்சு பழகலாமோ எண்டு அண்மையில ஒருக்கால் கேட்டார்.

புஸ்பாவிஜிக்கு வாழ்த்துகள்!

சந்தோசமாய் இக்குது முரளி என்னைப்பற்றியும் உங்களுக்கு தெரியுதே. முரளி நான் பல்கலைக்கழக பழைமாணவன் தான் ஆனால் குருநகர் அல்ல நல்லூர். முரளி வாழ்த்துக்கள் இன்னும் தொடருங்கள் இது ஒரு நட்புபாலமாய் அமையட்டும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி .முரளி ,

இணைந்து சில காலமென்றாலும் என்னையும் கருத்திலெடுத்து சிறுபதிவிட்டமைக்கு நன்றி, கள உறவுப் பட்டியலின் ஒழுங்கமைப்பு ,கணிப்பு,அவதானிப்பு என்பவைகளை கணிக்கும் திறமையினை பாராடுகிறேன் ,அக்கா நிலாமதி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி முரளி அண்ணா....

கிகீ ஜம்மு பேபிக்கு எழுதினதை நீங்களும் வாசிச்சிடிங்களா....

உங்களின் இந்த முயற்ச்சிக்கு வாழ்த்துக்கள் அண்ணா...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அட..டா...என்ன அருமை..என்ன அருமை..மதவடியில இருந்து அரட்டை அடிச்ச மாதிரி இருக்கு...

இப்;ப தான் படிச்சன்...சும்மா சொல்லப்படாது மாப்பிள்ளை தூள் ஓய்...இன்னும் ஆழமா போனா நல்லாய் இருக்கும்

சில குறிப்புக்கள அப்படியே போட்டுடைக்கிறியள். அந்த நிதர்சன கலகம் வெல்டன் ஓய்...

அசத்துங்கோ அசத்த போவது யாரு...?

பாராட்டு மாப்பிள்ளை ஓய்... :D:lol::lol::):D:lol::lol:

Link to comment
Share on other sites

முரளி கருத்து கூற வேண்டாம் என்றதால் எதையும் சொல்லவில்லை. நிறைய பேரை பற்றி நிறைய அவதனித்துள்ளீர்கள்.

நான் கனக்க எல்லாம் படிக்கவில்லை. கோபம் வரும் எண்டது உண்மை.

Link to comment
Share on other sites

மிக்க நன்றிகள் சஜீவன், மல்லிகைவாசம், முனிவர், அஜீவன் அண்ணா, யாழ்பாடி, புஸ்பாவிஜி, நிலாமதி அக்கா, குட்டிப்பையன், new man, குளக்காட்டான்.

நான் எழுதுறதுகளை வாசிக்க உங்களுக்கும் யாழ்பற்றிய பழைய எண்ணங்கள் - விசயங்கள் நினைவுக்கு வரும் எண்டு நினைக்கிறன். அவை நல்ல அனுபவங்களை உங்களுக்கு தந்தால் - மகிழ்வை ஏற்படுத்தினால் எனக்கு மிகவும் சந்தோசம்.

அடுத்த இருபது யாழ் கள உறவுகள்:

சுஜீந்தன்:

இவருடன் கருத்தாடல் செய்து இருக்கிறன். இப்ப ஒண்டுமா நினைவுக்கு வருகிது இல்லை. வாழ்த்துகள்!

சுகன்:

சுகன் யாழுக்காக முன்பு பல செய்தி ஆய்வுகளை செய்து இருந்தார். தாயக மக்கள், போராட்டம் மீது மிகுந்த பற்று உடையவர். சுகன் வரைந்த ஒரு கருத்துப்படம் மிகவும் பிரபலமானது. அதில தமிழீழம் வல்லாதிக்க சக்திகளால் சிலுவையில அறையப்படுவது போல காட்டப்பட்டு இருந்திச்சிது.

இந்த இடத்தில உந்த செய்தி ஆய்வு பற்றி கொஞ்சம் சொல்லலாம் எண்டு நினைக்கிறன். முந்தி யாழுக்காக சிலர் ஆய்வுகள் செய்தது. ஆனால் இப்ப அந்த ஆர்வம் குறைஞ்சுபோச்சிது. தமிழில எழுத இதயச்சந்திரனும், அருல்சும் இருக்கேக்க இன்னொருவர் ஏன் தேவை எண்டு போட்டு எழுதுற ஆக்கள் எல்லாம் எழுதுறத விட்டுப்போட்டு வாசிக்க துவங்கீட்டீனம். உங்கள் யாருக்காவது செய்தி ஆய்வு எழுதி அதை யாழில பிரசுரிக்க விருப்பம் எண்டால் அதை எழுதிப்போட்டு வலைஞனுக்கு இல்லாட்டிக்கு கறுப்பிக்கு அனுப்பி வைக்கலாம். தரமான செய்தி ஆய்வாக இருந்தால் அவையள் அதை யாழ் முகப்பில நிரந்தரமாக நிலைச்சு இருக்கும்படியாக போடுவீனம்.

நான் செய்த பாடல் காணொளிகளை தான் விரும்பி ரசித்ததாய் சுகன் முன்பு சொல்லி இருந்தார். கனடாவில இருக்கிறார் எண்டு நினைக்கிறன். எனக்கு தனிப்பட இவரை தெரியாது. வாழ்த்துகள்!

சித்தன்:

யாழில நகைச்சுவையாக கலகலப்பாக எழுதுற ஆக்களில சித்தனும் ஒருவர். சித்தன் நல்லாய் கவிதைகளும் எழுதுவார். பெரும்பாலும் ஓரிரு வசனம் எழுதி பின்னால அட்டகாசமாய் சிரிக்கிற நாலைஞ்சு முகக்குறிகளும் போட்டுவிடுவார். சித்தனை எழுதுறதுகளை பார்த்தால் நிறைய சித்திகள் பெற்றவர் போலத்தான் இருக்கிது. வளமுடன் வாழ வாழ்த்துகள்!

சங்கர்லால்:

சங்கர்லால் எழுதி யாழில பிரபலம் அடைஞ்ச தலைப்பு எண்டால் அவர் மத்திய கிழக்கு நாடு ஒண்டில மரண தண்டனை தீர்ப்பு அளிக்கப்பட்ட சிறீ லங்காவை சேர்ந்த ஓர் அப்பாவி முஸ்லீம் பெண்ணை (சிறுமி) காப்பாற்றுவதற்காக எடுத்த முயற்சிகளை சொல்லலாம் எண்டு நினைக்கிறன். முந்தி அடிக்கடி வருவார். இப்ப வருவது குறைவு. நல்லதொரு வலைப்பூவும் வச்சு இருக்கிறார். இவரிண்ட வலைப்பூ பிரபலமானது எண்டு நினைக்கிறன். அதுக்க நிறைய விசயங்கள் இருக்கிது. நான் முந்தி வாசிச்சு இருக்கிறன். சங்கர்லாலிண்ட Profileக்கு போனால் அதன் முகவரியை பார்க்கலாம் எண்டு நினைக்கிறன்.

மருதங்கேணி:

நான் எழுதின செல்வன் தொடரில மருதங்கேணியும் வருகிறார். மருதங்கேணிக்கு பல்வேறு விடயங்கள் பற்றிய ஆழ்ந்த அறிவு இருக்கிது எண்டு அவர் எழுதின கருத்துக்களில இருந்து அறிஞ்சு கொண்டன். நான் இவருடன் ஏராளம் கருத்தாடல்களில பங்குபற்றி இருக்கிறன். இப்ப ஒண்டும் நினைவு இல்லை.

மருதங்கேணியிண்ட அவாட்டர் படம் எனக்கு மிகவும் பிடிக்கும். இவர் ஏன் மருதங்கேணி எண்டு அப்பிடி ஒரு பெயர் வச்சவர் எண்டு தெரிய இல்லை. மருதங்கேணி எண்டு ஓர் ஊர் தாயகத்தில இருக்கவேணும் போல.

மருதங்கேணி அமெரிக்காவில இருக்கிறார் போல. தனிப்பட பழக்கம் இல்லை. வாழ்த்துகள்!

தேவன்:

தேவனுடன் நான் ஏராளம் கருத்துப்பரிமாற்றங்கள் செய்து இருக்கிறன். கடைசியாக தனது தனிப்பட்ட சில கருத்துக்களை சொல்லி ஊர்ப்புதினம் பகுதியில ஓர் கருத்தாடல் ஆரம்பிச்சு இருந்தார். அதை நிருவாகம் பிறகு நாற்சந்திக்கு நகர்த்திபோட்டிது. அதில நானும் எனது கொஞ்ச கருத்துக்களை சொல்லி இருந்தன்.

இப்ப கொஞ்ச நாளாய் தேவன் வருவார். வாசிப்பார். ஆனால் எழுதுவதை காண இல்லை. தேவனும் யாழில தாயக மக்கள், போராட்டம் மீது அதிக பற்றுக்கொண்ட ஒருவர் எண்டு சொல்லலாம். தனிப்பட தெரியாது. வாழ்த்துகள்!

சஞ்ஜே005:

சஞ்ஜேயை நான் யாழ் அரிச்சுவடியில வரவேற்ற நினைவு இருக்கிது. இவரிண்ட வலைத்தளம் அருமையானது. தாயகம் சம்மந்தமாக பலவிதமான தகவல்களை கொண்டு இருக்கிது. பாடல்கள், காணொளிகள் எண்டு நிறைய விசயங்களை நீங்கள் அங்கபோனால் பார்க்கலாம். இவரிண்ட Profileக்கு போனால் அதன் முகவரியை பார்க்கலாம்.

எனக்கு ஆச்சரியமாய் இருக்கிற ஒருவிசயம் என்ன எண்டால் இப்ப ஆயிரக்கணக்கில தாயக போராட்டத்துக்கு ஆதரவு சேர்கின்ற, தாயக மக்களின் பிரச்சனைகளை பரப்புரை செய்கின்ற வலைத்தளங்கள் இருக்கிது. எல்லாமே அருமை. பலருக்கு அவற்றிண்ட முகவரிகள் தெரியாது. நான் நினைக்கிறன் யாழ் ஆக்களிண்ட தனிப்பட்ட தளங்களிண்ட எண்ணிக்கையே சுமார் 30 - 50 சொச்சம் வரும் எண்டு. யாழ் ஆக்களிண்ட வலைத்தளங்களை – புள்ளி நிறுவனங்களை தனியாக யாழில எங்கையாவது இணைப்பு குடுத்தால் நல்லாய் இருக்கும். முந்தி தூயா அப்படி ஒரு திரியை ஆரம்பிச்சு இருந்தா. அதை யாழ் முகப்பில தெரியுறமாதிரி போட்டால் பயனுள்ளதாய் இருக்கும். எண்டாலும் தூயா ஆரம்பிச்ச அந்த திரியில கூட சுமார் 20% – 30% வலைத்தளங்கள்தான் உள்ளடக்கப்பட்டு இருக்கும் எண்டு நினைக்கிறன்.

சஞ்ஜே பிரித்தானியாவில இருக்கிறார் போல. சஞ்ஜேயுக்கு வாழ்த்துகள்!

பொன்னியின்செல்வன்:

சொல்லிறதாய் பொன்னியின் செல்வன் அண்ணா கோவிக்கக்கூடாது. எனக்கு இந்த சந்தேகத்தை ஏற்படுத்தியவர் மியாவ் மியாவ் பூனைக்குட்டி தான். அது என்ன எண்டால் அனைவரினதும் அன்பைப்பெற்ற தமிழ்விசன் தொலைக்காட்சியில இந்த வைத்திலிங்கம் ஷோ செய்யுற – மணி அண்ணை ரைட் வந்து இவர் பொன்னியின் செல்வனாக இருக்குமோ எண்டு. இது ஒரு சந்தேகம்தான். பிறகு கோவிக்கக்கூடாது.

இப்ப வசீகரன் (தமிழ்வாணம்), அஜீவன் (அஜீவன்) இவையளை மாதிரி நீங்களும் உங்கள் உண்மையான முகத்தை காட்டினால் மற்றவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். கொஞ்சம் கூடுதல் மரியாதையும் கிடைக்கும். ஹிஹி அதான் கேட்கிறன். வேறு யாராவது எண்டாலும் பரவாயில்லை. என்னவோ... நம்மவர்கள் - தாயக கலைஞர்கள், கலைகள் மீது மிகவும் ஆர்வம் உள்ள ஒருவர் பொன்னியின்செல்வன் அண்ணா.

பொன்னியின் செல்வன் அண்ணாவுக்கு படலைக்கு படலை மன்மதனை மிகவும் பிடிக்கும் எண்டு நினைக்கிறன். படலைக்கு படலை பற்றி ஏதாவது எழுதினால் திடும் எண்டு பள்ளிக்கூடத்தில ஆசிரியர்கள் தினப்பதிவேட்டில வகுப்பு பிள்ளைகளிண்ட பெயர் கூப்பிடேக்க உள்ளேன் ஐயா... எண்டு சொல்லிறமாதிரி.. படலைக்கு படலை எண்டு ஏதாவது கதை யாழில அடிபட்ட உடன இஞ்ச பிரசன்னமாகி தனது கருத்துக்களை வைத்துவிடுவார். அப்ப இப்ப நான் படலைக்கு படலை எண்டு ரெண்டு மூண்டுதரம் இதில எழுதிவிடுறன். எங்க ஆள் வாறாரோ எண்டு பார்ப்பம்..

படலைக்கு படலை..! அய்

படலைக்கு படலை ! பட..

படலைக்கு படலை..!

பொன்னியின் செல்வன் அண்ணா தாயக கலைஞர்கள், கலைகள் பற்றி மிகுந்த அறிவும் உடையவர். இவர் எழுதினதுகளை வாசிக்க ஊரில இணுவில் போல இருக்கிது. பொன்னியின் செல்வன் அண்ணா இப்ப ஒரு மூண்டு நாலு மாதமா யாழ்பக்கம் வாறது இல்லை. சிலது நான் ‘கடலைக்கு கடலை’ எண்டு யாழில செய்த காதல் காவியத்தை வாசிச்சஉடன கோவம் ஏதாவது வந்திட்டுதோ தெரியாது. யாழினுள்ளும் யாழிற்கு வெளியிலும் பொன்னியின் செல்வன் அண்ணாவின் சேவைகள் தொடர வாழ்த்துகள்!

கர்ணன்:

கர்ணன் நான் யாழில இணைஞ்ச காலத்தில இணைஞ்சவர். நான் மாப்பிளை எண்டுற பெயரை கலைஞன் எண்டுமாற்றேக்க இவரும் பெயர் மாத்தினார் எண்டு நினைக்கிறன். இவரிண்ட ஆரம்ப பெயர் மறந்துபோச்சிது. நான் ஏராளம் கருத்தாடல்களில இவருடன் ஆரம்பத்தில ஈடுபட்டு இருக்கிறன். இப்ப எல்லாம் மறந்துபோச்சிது. இவர் தமிழ்நாட்டை சேர்ந்த ஒரு உறவு. கணணி தொழில்நுட்பத்தில புலமை பெற்றவர். தாயகபோராட்டம் மீது மிகுந்த கரிசனை கொண்டவர் இப்படி பல விசயங்கள் கர்ணன் பற்றி சொல்லலாம். இப்போது கனகாலமாக யாழுக்கு வருவதில்லை. எங்கிருந்தாலும் நலமுடன் வாழ வாழ்த்துகள்!

விது:

எங்கட செல்வன் தொடரிண்ட கதாநாயகன் விது அவர்கள் தான். விதுவிண்ட அட்டகாசங்களை செல்வன் சீரியலில நடிக்க ஆக்கள் தேவை, செல்வன் தொடர் விமர்சனம் ஆகிய பழைய திரிகளுக்கு போனால் பார்க்கலாம். விது முன்பு அடிக்கடி வருவார். நான் விதுவுடன் ஏராளம் கருத்தாடல்களில பங்குபற்றி இருக்கிறன். பலவிதமான பகிடிகளை பரிமாறி இருக்கிறன். இப்ப ஏன் விது வருவதில்லை எண்டு தெரியாது. கனகாலமாக காணவில்லை. விது எங்கிருந்தாலும் வாழ்க!

சும்மா:

சும்மாவுடன் பல கருத்துக்களை யாழில பரிமாறி இருக்கிறன். எனக்கு மிகவும் ஆரம்பமாய் நினைவில இருக்கிறது சிவாஜி பட புறக்கணிப்பு சம்மந்தமாய் நான் ஆரம்பிச்ச கருத்தாடலில் “மிஸ்டர். கலைஞன்..” எண்டு துவங்கி... எனது ஆற்றல்களை இப்படியான தேவையற்ற விடயங்களில செலவளிக்க வேண்டாம் எண்டு கூறும் சும்மாவின் கருத்து.

நான் சிறிதுகாலம் முதல் கொஞ்சம் புதுமையான விசயங்களை – ஆண்கள் எதிர்காலத்தில குழந்தை பெறல், சாவு இவை சம்மந்தமாக சில கருத்தாடல்களை ஆரம்பிக்க சும்மாவுக்கு கோவம் வந்துவிட்டிது. என்னை யாழில சைக்கோ எண்டு அழைச்ச முதலாவது பெருமகன் சும்மா.

நான் ஆரம்ப காலங்களில கருத்தாடல் செய்யும்போது யாராவது என்னை திட்டினால் கண்டுகொள்வது இல்ல. அல்லது பெரிதாக எடுப்பது இல்ல. ஆனால்... பின்பு எனது கருத்தாடல் போக்கை மாற்றிகொண்டன். அதாவது எனக்கு தரப்படும் மரியாதையின் அடிப்படையில மற்றவருக்கும் மரியாதை செய்து கருத்தாடல் செய்கின்ற பாங்கு.

சும்மாவிண்ட முறைப்பாடு என்ன எண்டால் தான் யாழ் இணையத்துக்கு தமிழ் கற்கிறதுக்கு சிறுவர்களை அழைத்து வந்ததாகவும், எனது கருத்துக்களை வாசிக்கும் சிறுவர்கள் பழுதாகப்போய் விடுவீனமாம் எண்டும் கருத்து சொல்லி இருந்தார்.

நான் எனது அபிப்பிராயமாக முன்பு கூறியது, இப்போதும் கூட கூறுவது என்ன எண்டால் இந்த யாழ் கருத்தாடல் தளம் சிறுவர்களுக்கு உகந்த ஒண்டு அல்ல. ஊர்பாசையில சொல்லிறதாய் இருந்தால் ஆகக்குறைஞ்சது 16 (Preferably 18) வயசுக்கு கீழ்ப்பட்டவர்கள் பிரதான கருத்தாடல் தளத்தில பங்குகொள்வது தவிரக்கப்படவேண்டும். வெளிநாடு எண்டால் பிள்ளைகள் எல்லாம் பிஞ்சிலை முத்தீட்டுதுகள். நான் பதினெட்டு வயசில அறிஞ்ச விசயங்களை இப்ப பால்குடிகள் அஞ்சு, ஆறு வயசில அறிஞ்சுவச்சு இருக்கிதுகள்.

நீங்கள் யாராவது அண்மையில கேள்விப்பட்டு இருப்பீங்களோ தெரியாது அமெரிக்காவில இருக்கிற ஒரு ஒன்பது வயசு சின்னப்பெடிப்பிள்ளை ஒருவர் பெண்களை எப்படி கையாள்வது, பெண்களுடனான உறவுகளை வளர்ப்பது சம்மந்தமாக (Dating) ஒரு புத்தகம் எழுதி அமெரிக்கா எங்கும் அறியப்பட்ட முக்கியஸ்தர் ஆகிவிட்டார். கலிகாலத்தில நிலமை இப்பிடி இருக்கிது. ஏன் எங்கட நாயன்மார்கள் அந்தக்காலத்தில ஒன்பது வயசில கலியாணமே செய்து இருக்கிறீனமே எண்டு நீங்கள் சொன்னால் ஒண்டும் செய்யஏலாது.

மற்றது இன்னொரு விசயம், யாழில பெரும்பாலும் ஒருவரும் பொருத்தமான தமிழில, எழுத்து, இலக்கணப்பிழைகள் இல்லாமல், மேலும் நல்ல நாகரீகமான வார்த்தைகளை பாவிச்சு கருத்து எழுதுவது இல்லை. என்னைப்பொறுத்தவரை தமிழ்கற்ற விரும்பும் குழந்தைகளிற்கு யாழ் இணையம் ஆகாது – கண்ணில காட்டக்கூடாது எண்டு அவர்கள் பெற்றோருக்கு பரிந்துரை செய்வன். யாழ் களத்தில குழந்தைகளுக்கு எண்டு ஒரு தனியான சிறுவர் பகுதி இருக்கிது. வேண்டுமானால் அவர்கள் – குழந்தைகள் அங்குபோய் ஏதாவது பயன் பெறலாம்.

இந்தநேரத்தில இன்னொரு முக்கியமான் விசயத்தை சொல்லவேணும் என்ன எண்டால் அண்மையில நோர்வேயில இருக்கிற எங்கட ஜெயபாலன் அண்ணாவிண்ட துணைவி வாசுகி அக்காவை அஜீவன் அண்ணா பேட்டி கண்டு தனது வானொலியில ஒலிபரப்பி இருந்தார். அதில கதைக்கப்பட்ட ஒரு முக்கிய விசயம் என்ன எண்டால் இந்தகாலத்தில சிறுவர்களுக்கான படைப்புக்களில எங்கட கலைஞர்கள் கவனம் செலுத்துறது மிகவும் குறைஞ்சு போச்சிது எண்டு. சிறுவர்களுக்கான படைப்பிலக்கியங்கள் உருவாக்கப்படுவது இப்ப நல்லாய் குறைஞ்சிட்டிது.

வலைத்தளத்திலையும் இதே நிலமைதான். தமிழ் சிறுவர்களுக்கு மட்டுமான வலைத்தளம், கருத்தாடல் தளம் எண்டு ஏதாவது இருக்கிறதாய் எனக்கு தெரிய இல்ல. யாராவது அக்கறை உள்ள ஆக்கள் முக்கியமாக மோகன், இளைஞன், சோழியன் மாமா, நெடுக்காலபோவான் (குருவிகள்?) எல்லாரும் சேர்ந்து இந்தக்குறையை போக்கலாம் எண்டு நினைக்கிறன். சிறுவர்களுக்கு ஏற்றவகையில குழந்தைகளுக்கு மட்டுமான ஒரு கருத்தாடல்தளம் இருந்தால் உண்மையில சூப்பராய் இருக்கும். கூகிழில அல்லது தமிழ்நாட்டு தளங்கள் ஏதும் சிறுவர்களுக்காக தனிப்பட இருக்கிதோ தெரியாது. நான் தனிப்பட இதுபற்றி ஆராய்ச்சி செய்ய இல்லை. அப்படி ஏதாவது இருந்தால் - யாழ் முகப்பில அதை போட்டுவிட்டால் தேவையில்லாத பல பிரச்சனைகளை தவிர்க்கலாம்.

சும்மாவை பற்றி சொல்லிறதாய் இருந்தால் நன்கு கல்வி கற்றவர். தொழில் தகமை உடையவர். மடியுக்க நிறையக்காசு வச்சு இருப்பவர் எண்டு சொல்லலாம். தான் Business Templates ஐ உருவாக்கின்ற உலகப்பிரசித்திபெற்ற ஒரு நிறுவனத்தில வேலை செய்யுறதாக சொல்லி இருந்தார். சும்மாவை கையுக்கபோட்டு வச்சால் நீங்கள் அவர்மூலம் பல அனுகூலங்களை பெற்றுக்கொள்ளலாம். எண்டபடியால அவருடன் சினேகபூர்வமாக உரையாடி நல்லுறவை வளர்த்துக்கொள்ளுங்கோ.

சும்மா முன்பு யாழ் சமூகச்சாளரத்தில எழுதிய கருத்துக்களை நான்வாசிச்சு அறிஞ்சது என்ன எண்டால் சும்மா அவர்களது வாழ்விலும் யாரோ பெண்கள் புகுந்துவிளையாடி வேதனையை ஏற்படுத்தி இருந்தார்கள். அத்தோட அதனாலதான் என்னமோ அவர் தமிழ் பெண்களை வெறுத்து வேற்றின பெண் ஒருவரை திருமணம் செய்யப்போவதாக சொல்லி இருந்தார் எண்டு நினைக்கிறன்.

சும்மாவுடன் எனக்கு தனிப்பட தொடர்புகள் கிடையாது. எங்கிருந்தாலும் எவரை திருமணம் செய்தாலும் சும்மா அவர்கள் வளமுடன், மகிழ்ச்சியுடன் வாழ வாழ்த்துகள்!

தாய்மண்.சீ.எச்:

இவர் பழைய ஆள். ஆனால் எனக்கு தாய்மண்ணை அண்மையிலதான் தெரியும். பல்கலைக்கழகத்தில ஓர் ஒப்படை செய்யுறதுக்கு உதவி கேட்டு இருந்தார். Balanced Score Card எண்டால் என்ன எண்டு தெரியுமோ? நான் அவருக்கு அதுபற்றிய விளக்கம் சொல்கின்ற தகவல்களை குடுத்து இருந்தன். என்னைவிட மேல நான் விபரிச்ச சும்மா அவர்களிற்கு Balanced Score Card பற்றி மிகவும் ஆழமான அறிவு இருக்கும் எண்டு நினைக்கிறன். ஏன் எண்டால் அவர் பணியாற்றுகின்ற துறையில அது மிகவும் முக்கியமான ஒரு பகுதி.

மற்றது தாய்மண் சுவிசில இருக்கிறார், உதைபந்தாட்டத்தில மிகுந்த ஈடுபாடுகொண்டவர் எண்டு அறியக்கூடியதாக இருந்திச்சிது. இவரது Profileக்கு போனால் அவர் வலைத்தளத்துக்குபோய் சுவிசில எங்கட ஆக்கள் விளையாட்டுகளில (Sports ஐயா... வேறொண்டும் இல்ல) ஈடுபடுவது சம்மந்தமாய் பலவிதமான விசயங்கள் அறியலாம்.

தாய்மண் அண்மையில இணைச்ச மகிழ்ச்சி தரும் ஓர் செய்தி என்ன எண்டால் 18 வயசுக்கு குறைவான தமிழர் ஒருவர் இத்தாலியில இருக்கிற பேர்பெற்ற ஓர் கழகத்துக்காக உதைபந்தாட்டம் விளையாடுறதுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறாராம். அவரிண்ட சம்பளம் வருசத்துக்கு சுமார் 550,000 யூரோக்கள் எண்டு சொல்லி இருந்தார். குறிப்பிட்ட இளைஞருக்கு பாராட்டுக்கள்!

தாய்மண் தாய்மண்ணிண்ட நினைவுகளோடு சுவிசில வளமுடன் வாழ வாழ்த்துகள்!

ராகவா:

யாழில இருக்கிற ஆக்களிண்ட கையெழுத்துக்களில கொஞ்சம் பயப்படுத்துற கையெழுத்து இவரிண்டை யாத்தான் இருக்கும். எனக்கு உம்மட ஐபி முகவரி தெரியும் அது: “ ..... .... “ எண்டு இலக்கமும் காட்டும். ராகவா கனடாவில இருக்கிறார் எண்டு நினைக்கிறன்.

கணணி – தொழில்நுட்பங்கள் – காணொளிகள் – காட்சிப்படுத்தல் இதுகளில கைதேர்ந்தவர். பறவைகள், விலங்கினங்கள் தமிழ் சினிமா பாட்டுக்கு நடனம் ஆடுகின்ற ரீமிக்ஸ் பாடல்களை சிலவற்றை செய்து யூரியூப்பில பிரசுரம் செய்து இருந்தார். அவை மிகவும் பிரபலம் பெற்றுவிட்டிது.

ராகவாவை விரைவில சந்திக்க சந்தர்ப்பம் கிடைகும் எண்டு நினைக்கிறன். வாழ்த்துகள்!

நெர்பிரண்ட்:

நெட்பிரண்ட் உடன் நான் பலப்பல கருத்தாடல்களில பங்குபற்றி இருக்கிறன். இவர் நல்லதொரு விமர்சகர் என்பதோட மட்டும் இல்லாமல் பொன்னியின் செல்வன் அண்ணா மாதிரி இவரும் தாயக கலைஞர்களை, நம்மவர்களை அவர்களது படைப்புக்களை ஊக்குவிப்பவர்.

இவரிண்ட எழுத்தில முகக்குறி முக்கியமான பங்கை வகிக்கும். இவர் முகக்குறி இல்லாமல் யாழில ஏதாவது கருத்து எழுதி இருப்பதாய் எனக்கு நினைவு இல்லை. நீங்கள் யாராவது முகக்குறியை யாழில சும்மா ஓர் சாதாரண விசயமாக எடுக்கக்கூடாது. யாழில ஒரு சுனாமியை கிளப்ப எழுத்துக்கள் ஒண்டும் இல்லாமல் தனியாக வெறுமனே ஒரே ஒரு முகக்குறியை போட்டு பதியப்படுகின்ற கருத்து ஒண்டே போதும். முகக்குறிகளிண்ட செல்வாக்கை உணர்ந்தபடியாலதான் நான் முந்தி சும்மா பகிடிக்கு யாழ் கள உறுப்பினர்களை அவர்கள் அதிகஅளவில பாவிக்கிற முகக்குறிகளிண்ட அடிப்படையில குழுமங்களாக பிரிச்சு ஒரு கருத்தாடல் செய்தது.

நெட்பிரண்டின் சேவைகள் தொடர நிறைவுடன் வாழ வாழ்த்துகள்!

நோர்வேஜியன்:

யாழில இருக்கிற விரல்விட்டு எண்ணக்கூடிய மிகச்சிறப்பான முறையில மரபுக்கவிதைகள் எழுதக்கூடிய கவிஞர்களில நோர்வேஜியனும் ஒருவர்.

யாழ் இணையம் பற்றி நான் ஒரு பாடல் பாடி அதை அனிதா காணொளியாக செய்து இருந்தா. அந்தப்பாடலுக்குரிய வரிகளிண்ட 50% சொந்தக்காரர் நோர்வேஜியன். அவர் யாழ் இணையம் அகவை ஒன்பது சார்பாக வைக்கப்பட்ட கவிதைபோட்டியில எழுதின கவிதையுடன் நான் எனது வரிகளையும் கலந்து குறிப்பிட்ட பாடலை இசையமைச்சு பாடி இருந்தன். அது பலரது பாராட்டை பெற்றது. சரி இப்ப அந்தக்காணொளியையும் நான் செய்த கிறிஸ்மஸ், இதர காணொளிகள், ஒலி, ஒளிப்பதிவுகளையும் வலையில காண இல்லை. இப்ப அதுகள் எல்லாம் எங்கை? – எப்பிடி காணாமல் போயின எண்டு கேட்கிறீங்களோ? அது ஒரு பெரிய கதை சமயம் வரும்போது சொல்லமுடியுமாயின் சொல்லிறன். ஒருசிலர் அந்தப்பாடல்களை ஏற்கனவே தங்கட கணணிகளில தரவிறக்கம் செய்துவைச்சு இருக்கக்கூடும்.

நோர்வேஜியன் முன்பு அடிக்கடி யாழுக்கு வருவார். நான் இணைஞ்ச காலத்தில இவருடன் பல கருத்தாடல்களில பங்குபற்றி இருக்கிறன். தாயகம் மீது அதிகபற்று உடையர். “மாங்கிளியும் மரங்கொத்தியும் கூடு திரும்ப தடையில்லை - நாங்க மட்டும் உலகத்திலை நாடு திரும்ப முடியலை……. “ எண்டுற அழகிய பாடலை நான் இவர்மூலம்தான் யாழ்மூலம் முதன்முதலாக அறிஞ்சு கேட்டு மகிழக்கூடியதாக இருந்திச்சிது.

நோர்வேஜியன் இப்ப வருவது இல்ல. ஏன் எண்டு தெரியாது. தனிப்படவும் தெரியாது. வாழ்த்துகள்!

பொன்னையா:

பொன்னையா அண்ணைக்கும், தூயவனுக்கும் தொடர்பு இருக்கிதாம் எண்டு யாழில இருக்கிற எல்லாரும் கொஞ்சநாளாய் மண்டையப்போட்டு உடையோ உடைஎண்டு உடைச்சுக்கொண்டு இருந்திச்சீனம். அதிண்ட உச்சக்கட்டமாய் தூயவா வா எண்டு சொல்லி டங்குவார் கவிதை ஒண்டு எழுதி தூயவனை திரும்பி வரச்சொல்லி பகிரங்க அழைப்புவிட்டு இருந்தார். கடைசியில யாழை விட்டு ஒதுங்கிறன் எண்டு சொல்லி கோவிச்சுகொண்டு போன தூயவனை எல்லாருமாய் சேர்ந்து சமாதானப்படுத்தி கூட்டிகொண்டு வந்திட்டீனம். ஆனால்... தூயவன் வந்தபிறகு என்னமோ பொன்னையா அண்ணை காணாமல் போயிட்டார்.

தூயவன் எண்டுசொன்ன உடன கொஞ்ச விசயங்கள் இப்ப நினைவுக்கு வருகிது. நான் தூயவன்பற்றி மேல அதிகம் சொல்லாதபடியால இதுல கொஞ்சம் சொல்லாம் எண்டு நினைக்கிறன். எனக்கு யாழில தூயவன் சொன்ன முதலாவது பொய் என்ன எண்டால்... நான் யாழ் இணையம் அகவை ஒன்பது நிறைவை ஒட்டி ஒரு வழக்காடு மன்றம் மாதிரி செய்து இருந்தன். அதில அஞ்சு நீதிபதிகளை போட்டு இருந்தன். அதில ஒருத்தராக தூயவனை அழைச்சு இருந்தன். ஏன் எண்டால் எனக்கு யாழில இணைஞ்ச ஆரம்பத்தில தூயவன் எழுதுறதுகளை வாசிச்சுப்போட்டு அகில இலங்கை கம்பன் கழகத்துக்க படுத்து எழும்பின யாரோ பெரிய ஆளாக்கும் எண்டு நினைச்சன்.

அப்ப பதில் மடலில தான்ஏதோ படிக்கிறதாய்... நேரம் இல்லை எண்டு ஏதோ தூயவன் சொல்லி இருந்தார். பிறகுதான் கொஞ்சக்காலத்தால விசாரிச்சுப்பார்த்தால் எனக்கு பொய் சொல்லி இருக்கிறார் எண்டு தெரிஞ்சிது. நான் ஏன் அப்பிடி சொன்னீங்கள் எண்டு கேட்க சொன்னார் இஞ்ச யார் உண்மை பேசுறாங்களாம்? மற்றது யாழ் ஆக்கள் கலந்துகொள்ளுற எம்.எஸ்.என் உரையாடல்களுக்கு தூயவன் தான் மட்டறுத்துனர் மாதிரி.

நான் முந்தி தூயவனுக்கு சொன்ன ஒருவிசயம் என்ன எண்டால்... சுயமாக யாழில ஆக்கங்கள் செய்யச்சொல்லி. இப்ப கவிதை எழுதலாம். கதை எழுதலாம்... செய்தி ஆய்வுகள் கூட எழுதலாம். இப்பிடி வித்தியாசமான முறையில அவரிண்ட ஆற்றல்களை விருத்தி செய்யச்சொல்லி. ஆனால்... அவர் அதுகளை காதில போடுறதாய் காண இல்லை. எல்லாரும் சொல்லிச்சீனம் தூயவன் வலையுக்கதானாம் ஆக்கிரோசமாய் இருப்பார். வெளியில சரியான அடக்கம்... பணிவு எண்டு சொல்லிச்சீனம். நான் கெதியில அவரை சந்திக்க சந்தர்ப்பம் கிடைக்கும் எண்டு நினைக்கிறன். பிறகு இனி...

பொன்னையா அண்ணை தான் தூயவன் இல்லை எண்டு ஏற்கனவே அடிச்சுசொல்லிபோட்டார். இனி திரும்பவும் உதுகளைக்கிளறாமல் பொன்னையா பற்றி (பெயரைப்பார்த்தோன அண்ணை எண்டு சொல்லவேணும் போல இருக்கிது) சொல்லிறதாய் இருந்தால்... கொஞ்ச விசயங்கள் நினைவுக்கு வருகிது.

சில மாதங்களுக்கு முன்னம் வெண்ணிலா ஏதோ ஒரு கவிதையை எழுதிப்போட.. அதுக்க கருத்து எழுதின பொன்னையா உங்களுக்கு காதல் தவிர வேற ஒரு சிந்தனையும் வராதோ எண்டு ஏதோ கேட்டு கருத்து எழுத... வெண்ணிலா சொன்னா... நான் எத்தினயோ எல்லாம் எழுதி இருக்கிறன் உங்களுக்கு இதுமட்டும்தான் நினைவில இருக்கிதுபோல எண்டு ஏதோ... நான் எழுதுற சில ஆக்கங்களுக்கும் பொன்னையா பதில் கருத்து எழுதி இருக்கிறார். இப்ப நினைவுக்கு வருகிது இல்ல.

முந்தி கொஞ்ச காலத்துக்கு முன்னம் யமுனா ஆக்களுக்கு ஏதோ விருதுகள் குடுத்துக்கொண்டு திரிஞ்சார். டன்னும் விருதுகள் குடுத்துகொண்டு திரிஞ்சார். இவர்கள் இரண்டு பேருட்டையும் இருந்து பொன்னையா விருதுகள் வாங்கி இருக்கிறார். அவர் அவற்றை வாங்க சந்தோசமாய் இருந்திச்சிது எண்டு சொன்னார்.

வேற ஒண்டும் நினைவுக்கு வருகிது இல்லை. பொன்னையா யாராக இருந்தாலும், எங்கிருந்தாலும் மகிழ்வுடன் நிறைவுடன் வாழ, மற்றும் யாழுடன் இணைந்திருக்க வாழ்த்துகள்!

எல்லாளன்:

எல்லாளானை பற்றி நான் எப்ப அறிஞ்சுகொண்டன் எண்டால் முந்தி கவிதைப்பூங்காடு பகுதிக்கு போய் பழசுகளைக்கிளறி ஆராய்ச்சி செய்யேக்க இவரிண்ட சில அருமையான கவிதைகளை கண்டன். முந்தி நான் யாழ் ஆக்களை பாத்திரங்களாக வச்சு செல்வன் தொடர் எழுதுறதுமாதிரி எல்லாளன் நீதிக்கதைகள் எழுதுவாறாம் எண்டு அனிதா எழுதின ஒரு பதிவில வாசிச்சு அறிஞ்சன்.

எல்லாளனிண்ட முக்கியமான சோடி ஆதி எண்டு அவரது பதிவுகளை பார்க்க விளங்கிது. கனகாலத்துக்கு பிறகு யாழுக்கு மீண்டும் வந்து இருக்கிறார். முன்புபோல தொடர்ந்து கலக்கி அடிக்க வாழ்த்துகள்!

டைகர்பிளேட்:

நான் மேல சொன்னனான் தானே எங்கட ஆக்கள் வலைப்பூக்களில பரப்புரை செய்கிற விசயம். டைகர்பிளேட் பனங்காய் மாதிரி அருமையான ஒரு சேவை செய்து வருகிறார். ஜேர்மன், தமிழ், ஆங்கிலம் எண்டு மூண்டு மொழிகளில எங்கட பிரச்சனைகள் பற்றி வெளியுலக்கு எடுத்து சொல்லிவருகிறார். நான் இவரிண்ட வலைத்தளத்துக்கு முன்புபோய் பார்த்து இருக்கிறன். சூப்பராய் இருந்திச்சிது. இவர் சுவிசில இருக்கிறார். யமுனாவிண்ட கருத்துக்கள் இவருக்கு மிகவும் பிடிக்கும் எண்டு நினைக்கிறன். தென்னங்கீற்று பகுதியில அழகிய காணொளிகளை – பாடல்களை இணைச்சு வருகிறார்.

தனிப்பட இவரை எனக்கு தெரியாது. டைகர்பிளேட்டின் சேவைகள் தொடர வாழ்த்துகள்!

அகிலன்:

இவர் இருந்திட்டு எப்பையாவதுதான் வருவார். தனது ஊரிண்ட பெயர் கிளாங் எண்டு போட்டு இருந்தார். நான் அது என்னது எண்டு கேட்டு முந்தி ஒருக்கால் இவரிண்ட Profileக்கு போய் கருத்து எழுதி இருந்தன். ஒருசில கருத்தாடல்களில இவரோட பங்குபற்றி இருக்கிறன். வாழ்த்துகள்!

ஜூட்:

உங்களுக்கு ஒருத்தர் இளனி குடிக்கிற அவாட்டரை நினைவு இருக்கிதோ? அவர் ஜூட். நான் முந்தி ஜூட் அவர்களுடன் கருத்தாடல் செய்து இருக்கிறன். எல்லாம் மறந்து போச்சிது. இப்ப கனகாலமாக இவர் யாழுக்கு வாறது இல்லை போல கிடக்கிது. எங்கிருந்தாலும் வாழ்க வளமுடன்!

வளரும்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சபேஸ்:

தான் சின்னவயசிலேயே வெளிநாடுவந்து விட்டதாயும், ஊர் கட்டுவன் எண்டும், யூனியன் கல்லூரியில முந்தி படிச்சதாகவும், ஜேர்மனியில முந்தி இருந்ததாகவும் எல்லாம் சபேஸ் சொல்லி இருக்கிறார். சபேஸ் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக வாழ வாழ்த்துகள்!

நான் அண்மையில் யாழில் வாசித்த கதை ஒன்றின் போது தனது ஊரைக் குறிப்பிட்டிருந்தார் சபேஸ். அவர் கட்டுவனைப் பிறப்பிடமாகக் கொண்டவர் அல்ல.

http://www.yarl.com/forum3/index.php?s=&am...st&p=206366

Link to comment
Share on other sites

நன்றி கந்தப்பு.

எல்லாருக்கும் வணக்கம்,

இதுதான் இந்த கருத்தாடலில கள உறவுகளை விபரிக்கின்ற எனது கடைசிப்பதிவு. நான் இதுவரை 162 கள உறவுகளை நினைவுகூர்ந்து சுருக்கமாகவும், விரிவாகவும் எழுதி இருக்கிறன். இந்தப்பதிவில மேலும் நாற்பது பேரை நினைவுகூறுகிறன். ஆக மொத்தமாக 202 யாழ் கள உறவுகள் பற்றி இஞ்ச நான் அலசக்கூடியதாக இருந்திச்சிது. இதில சிலவேளைகளில ஒருவரே பல பெயர்களில விபரிக்கப்பட்டு இருக்கலாம். அத்தோட... இன்னும் பலநூறுபேர் இருக்கின்றார்கள்.

எனக்குள்ள வசதியீனம் காரணமாக யாழில இருக்கின்ற எல்லாரையும் பற்றி குறிப்புக்களை முழுமையாக எழுதமுடியவில்லை. எனக்கு தெரிஞ்ச பலரை நான் தவறவிட்டு இருக்கிறன். என்னைத்தெரிஞ்ச பலரும் தவறவிடப்பட்டு இருக்கலாம். சம்பவங்கள் சிலவற்றை நான் தவறுதலாக குறிப்பிட்டு இருக்கலாம். ஏதாவது பிழைகள் இருந்தால் மன்னிச்சுக்கொள்ளுங்கோ.

இந்தக்கருத்தாடல் உங்களிற்கு மகிழ்வை ஏற்படுத்தினால்.. பயனுள்ள பல தகவல்களை நீங்கள் பெற்றுக்கொள்ள உதவியிருந்தால் அதை நினைத்து திருப்தி அடைகின்றேன். நன்றி! :)

நான் மிகவும் அறிஞ்ச / எனக்கு இப்போது மிகவும் நினைவில இருக்கிற இறுதி நாற்பது யாழ் கள உறவுகள்:

ஜஸ்டின்:

ஜஸ்டின் ஆரம்ப காலத்தில இருந்து என்னோட கருத்தாடல் செய்து வாற ஆக்களில முக்கியமான ஒருத்தர். முந்தி அடிக்கடி நிறைய கருத்து பரிமாற்றம் செய்யுறது. பிறகு ஜஸ்டினிண்ட வருகை குறைஞ்சிட்டிது. வைகாசி நிலவே வைகாசி நிலவே எண்டு போனவருசம் நான் உன்னாலே உன்னாலே படம் பற்றி எழுதிய விமர்சனம் ஜஸ்டினுக்கு பிடிச்சு இருந்திச்சிது.

ஜஸ்டின் யாழில சகல பகுதிகளுக்கும்போய் கருத்துக்கள் சொல்லி வருவார். தாயகம் பற்றி அதிக அக்கறைகொண்ட ஒருத்தர் எண்டு சொல்லலாம். அமெரிக்காவில இருக்கிறார் போல. Statue of Libertyஐ தனது அவாட்டரில போட்டு இருக்கிறார். ஜஸ்டினின் சேவைகள் தொடர வாழ்த்துகள்!

ஈழத்திருமகன்:

யாழில இருக்கிற அறிவாளிகளில ஒருத்தராக இவரையும் சொல்லலாம். முன்பு பலவிதமான கனதியான விசயங்கள் பற்றி விரிவான கருத்துக்கள் சொல்லி வந்தார். இப்போது யாழுக்கு வருவது குறைஞ்சிட்டிது. யோகக்கலை சம்மந்தமாக பயன்தரும் தகவல்களை ஓர் நூலில இருந்து பெற்று இணைச்சு வந்தார்.

யோக கலை எண்டு சொல்ல எனக்கும் ஒரு விசயம் நினைவுக்கு வருகிது. அது என்ன எண்டால் நான் ஒவ்வொருநாளும் சிரசாசனம் (அதான் தலைகீழாக நிக்கிறது) செய்யுறது. தலைகீழாக நிக்கிறது மட்டும் அல்லாமல் அப்பிடியே மேல இருக்கிற கால்களையும் விதம்விதமாக திருப்பி – அசைச்சு – சுழட்டி பயிற்சி செய்யுறது. நான் ஒவ்வொருநாளும் இப்பிடி தலைகீழாக நிக்கிறதாலதான் யாழிலையும் நான் தலைகீழாக நிக்கிறனோ எண்டு கேட்கக்கூடாது. ஹிஹி நான் சிரசாசனத்தை கடந்த பதினாறு சொச்சம் வருசங்களாக தொடர்ந்து செய்து வருகிறன். அது நல்லதொரு அனுபவம். ஒவ்வொரு அசைவையும் அனுபவிச்சு செய்தால் யோக கலை மிகவும் இனிமை உடையதாய் இருக்கும். நீங்களும் விருப்பம் எண்டால் முயற்சித்து பாருங்கோ. ஆனால் அவசரம் கூடாது. மெதுமெதுமெதுவென முன்னேறவேணும். அவசரப்பட்டால் பாரதூரமான விளைவுகள் ஏற்படும்.

அப்ப என்ன எண்டால் திருப்பி கதைக்கு வருவம். இவர் ஈழத்திருமகன் அமெரிக்காவில இருக்கிறார் போல. பல பயனுள்ள கருத்துக்களை யாழில சொல்லி இருந்தார். வளமுடன் வாழ வாழ்த்துகள்!

கறுப்பன்:

யாழில கருப்பன் எண்டும் ஒருத்தர் இருக்கவேணும். ஆனால் இவர் கறுப்பன். கறுப்பன் வண்ணத்திரை, செய்தி திரட்டி, உலகநடப்பு, விளையாட்டு எண்டு எல்லா இடங்களிலையும் செய்திகளை, தகவல்களை இணைப்பார். ஜேர்மனியில இருக்கிறன் எண்டு சொல்லி இருந்தார். வாழ்த்துகள்!

வேலவன்:

வேலவன் தமிழ்நாட்டில இருக்கிற ஓர் யாழ் கள உறவு. இவரை ஈழத்தமிழர் மீது தீவிர அக்கறை உள்ளவர்களில ஒருவராக சொல்லலாம். தாயக மக்கள், போராட்டம் சம்மந்தமாக பலப்பல பயன்தரும் தகவல்களை, கருத்துக்களை யாழில சொல்லி இருக்கிறார். வேலவனின் சேவைகள் தொடர வாழ்த்துகள்!

poet:

நோர்வேயில இருக்கிற ஜெயபாலன் அண்ணாவின் கவிதையிண்ட பலத்தை – ஈர்ப்பை நான் மிக அண்மையிலதான் அறிஞ்சுகொண்டன். அஜீவன் அண்ணா ஜெயபாலன் அண்ணாவிண்ட துணைவியார் வாசுகி அவர்களை விரிவாக பேட்டி கண்டு இருந்தார். வாசுகி அக்கா ஜெயபாலன் அண்ணாவின் பாடல்களை அழகிய குரலில பாடி இருந்தா. சூப்பரான பாடல்கள். அந்த வள்ளி எண்டு வருகிற பாடலை அது ஆக சில செக்கன்கள் தான் பேட்டியில போடப்பட்டது அதை நான் சுமார் 20 தடவைகள் திருப்பித்திருப்பி Rewind பண்ணி கேட்டு இருப்பன். அவ்வளவு இனிமையான பாடல் அது. அஜீவன் அண்ணாவிண்ட வானொலி தளத்துக்கு போனால் அந்தபேட்டியை கேட்கலாம். யாழ் உறவாடும் ஊடகம் பகுதியிலயும் இணைப்பு கொடுத்து இருக்கிறார்.

கவிஞர் அண்ணாவுக்கு யாழுக்க பல கசப்பான அனுபவங்கள் கிடைச்சதை நினைக்க கொஞ்சம் வருத்தமாகத்தான் இருக்கிது. எனக்கு கவிஞர் அண்ணா பற்றி ஆரம்பத்தில ஒன்றும் தெரிஞ்சு இருக்காதபடியால அவருக்கு பரிந்துபேசி ஒரு கருத்தைக்கூட யாழில என்னால எழுதமுடியாமல் போயிட்டுது எண்டுறதை நினைக்க கவலையாக இருக்கிது. கவிஞர் அண்ணா ஒரு கவிஞர் மட்டுமல்லாது செய்தி ஆய்வாளரும் கூட என்பதை குறுக்காலபோவான் அண்ணா இணைச்ச ஒரு காணொளி மூலம் அறிஞ்சுகொண்டன்.

கவிஞர் ஜெயபாலன் கல்வி, தொழில மிகவும் புலமை பெற்றவர் எண்டு அவரது சில பதிவுகளை முந்தி வாசிச்சு அறிஞ்சுகொண்டன். இவர் யாழில உறுப்பினராக இருக்கிறது நாங்கள் பெருமைப்படக்கூடிய ஒரு விசயம் எண்டு சொல்லலாம்.

ஜெயபாலன் அண்ணாவை எனக்கு தனிப்பட தெரியாது. ஆனால் விரைவில வாசுகி அக்கா பாடிய அவரது பாடல் குறுந்தட்டை வாங்குவதற்காக அவரை தொடர்புகொள்ளக்கூடியதாக இருக்கும் எண்டு நினைக்கிறன். ஜெயபாலன் அண்ணாவினதும், வாசுகி அக்காவினதும் சேவைகள் தொடர, மற்றும் வெற்றியுடன், மகிழ்ச்சியுடன் வாழ இதயபூர்வமான வாழ்த்துகள்!

இளங்கோ:

யாழில நிறைய இளங்கோக்கள் இருக்கிறீனம். எல்லாரோடையும் கருத்தாடல் செய்து இருக்கிறன். இளங்கோக்கள் எழுதின கவிதைகள், கதைகள் எல்லாம் வாசிச்சு இருக்கிறன். மிகவும் கனதியான விசயங்களை பற்றி ஆராய்ச்சி செய்து நீளமாக எழுதி விவாதம் செய்யுற ஆக்களில இளங்கோவும் ஒருவர். அண்மையில இளங்கோவிற்கு திருமண வாழ்த்து எண்டு வாழிய வாழிய பகுதியில தூயவன் ஆரம்பிச்ச ஒரு கருத்தாடல் நினைவில இருக்கிது. இளங்கோவிற்கு வாழ்த்துகள்!

KUGGOO:

நான் யாழில இணைஞ்ச ஆரம்பத்தில இவருடன் (பெயரை எப்படி உச்சரிக்கிறது எண்டு தெரிய இல்ல) பலப்பல கருத்துக்களை பரிமாறி இருக்கிறன். அண்மையில நான் சேர்.ஆர்தர்.சீ. கிளார்க் சம்மந்தமாக ஆரம்பிச்ச கருத்தாடலில பங்குபற்றி எனக்கு வாழ்த்து சொல்லி இருந்தார். கனகாலம் யாழுக்கு வராமல் இருந்தார். ஏன் எண்டு தெரிய இல்லை. வளமுடன் வாழ, இவரது தாயகத்திற்கான சேவைகள் தொடர வாழ்த்துகள்!

வன்னியன்:

வன்னியன் கோவிச்சுக்கொண்டு போனவர்தான். திரும்பி யாழுக்கு வரவே இல்லை. கோவிச்சுகொண்டு போகேக்க எனக்கு மின்னஞ்சலில யாழில இருந்து விலகுவதற்கான தனது காரணங்களையும் சொல்லி இருந்தார். கையில பழங்காலத்து போர்வீரன் ஒருத்தர் ஆயுதத்தோட நடந்துகொண்டு இருக்கிற அவாட்டர் உங்கட கண்களில இப்பவும் நினைவில இருக்கும். அது வன்னியனிண்ட அவாட்டர் படம். வன்னியன் யாழைவிட்டு விலகமுன்னம் - சுமுகமான நல்லுறவை பேணிய நேரத்தில சகல பகுதிகளிலையும் கருத்துக்கள் சொல்லி வந்தார். என்னுடனும் கருத்தாடல் செய்து இருந்தார். வன்னியனுக்கு யாழுக்க எப்படி மனக்கசப்பு ஏற்பட்டது.. என்ன பிரச்சனை எண்டு.. எல்லாம் மறந்துபோச்சிது. வன்னியன் எங்கிருந்தாலும் நிறைவுடன் வாழ வாழ்த்துகள்!

நெல்லையன்:

ஊர்ப்புதினம் பகுதியில அதிகம் மினக்கடுவார். தாயகம் சம்மந்தமாக பல்வேறு விசயங்களை அறிஞ்சவர் – கொஞ்சம் விபரமான ஆள் எண்டு இவரது கருத்துக்களை வாசிச்சு அறிஞ்சுகொண்டன். ஊர்ப்புதினம் பகுதியில காரசாரமாக எழுதுற ஆக்களில முக்கியமான ஒருத்தர். நெல்லையனை தனிப்பட தெரியாது. பல கருத்தாடல்களில நெல்லையனுடன் கலந்து இருக்கிறன். வாழ்த்துகள்!

கானாபிரபா:

உங்கள் எல்லாருக்கும் கானாபிரபாவை தெரிஞ்சு இருக்கும். நான் கானாபிரபா பற்றி அறிமுகம் தரத்தேவையில்லை எண்டு நினைக்கிறன். அஜீவன் அண்ணாவை நான் பேட்டிகண்டபின்னர் கானாபிரபாவை பேட்டிகாண முந்தி ஒருக்கால் தொடர்புகொண்டு இருந்தன். தான் படிப்பில மும்மரமாக இருக்கிறதால சற்று காலம் தாழ்த்தி அந்த பேட்டியை வைக்கலாம் எண்டு கானாபிரபா சொல்லி இருந்தார். இப்ப அண்மையில சயந்தன் தான் கானாபிரபாவை பேட்டி காணப்போவதாய் தூயாவுடனான ஒலியுரையாடலில சொல்லி இருந்தார்.

கானாபிரபாவிண்ட பெயரைப் பார்த்துபோட்டு நான் நினைச்சன் என்ன எண்டால் இவர் கானா பாட்டோட சம்மந்தப் பட்டவராக்கும் எண்டு. பிறகு தான் தெரிஞ்சுது இவர் - க.பிரபா- வை 'கானா பிரபா' எண்டு எழுதுறார் எண்டு. நான் சொல்லிறது சரியோ பிரபா?

கானாபிரபாவிண்ட வலைப்பூ நம்மவர்களிடையே, அத்தோட தமிழ்நாட்டு மக்களிடமும் கூட மிகவும் பிரபலம் பெற்றது எண்டு சொல்லலாம். நான் அண்மையில கலைஞர் வர்ண ராமேஸ்வரனை பேட்டி காணலாம் எண்டு யோசிச்சுபோட்டு அவரை தொடர்புகொண்டு கதைச்சன். அவர் சொன்னார் ஏற்கனவே இவன் பிரபா தன்னை பேட்டிகண்டு அவுஸ்திரேலிய வானொலியில எல்லாம் போட்டிட்டானாம் எண்டு. அட.. பிரபா என்னை முந்தீட்டார். ஹிஹி. கானபிரபா ஏற்கனவே விரிவான ஒரு பேட்டியை வர்ண ராமேஸ்வரன் பற்றி செய்து இருந்ததால எனக்கு அவரை மீண்டும் பேட்டி காணுகின்ற ஆர்வம் பெரிசாக வர இல்லை. எண்டாலும் கானாபிரபா கேட்கத்தவறிய, அவர் பேட்டியில உள்ளடக்காத சில விசயங்கள் பற்றி சந்தர்ப்பம் கிடைச்சால் வர்ண ராமேஸ்வரனுடன் பேட்டி காணலாம் எண்டு நினைக்கிறன்.

கானாபிரபா நல்ல கலகலபாக கதைப்பார். எழுதுவார். முந்தி யாழில நல்லதொரு நண்பராக இருந்தார். பிறகு ஏன் யாழுக்கு வருவது இல்லை எண்டு கொஞ்சக்காலம் முன்னம் கேட்க.. தனக்கு சின்னப்பயலுகள் இருக்கிற இடத்திலவந்து மினக்கட விருப்பம் இல்லையாம் எண்டு கோவமாக சொல்லி இருந்தார். கானாபிரபா கோவப்படுற அளவுக்கு யாழில என்ன பிரச்சனை நடந்தது எண்டு எனக்கு தெரியாது.

என்னை முந்தி மாப்பு எண்டு கூப்பிடுற ஆக்களில கானாபிரபாவும் முக்கியமான ஒருத்தர். கானாபிரபா யாழுக்கு வருவதை நிறுத்திக்கொண்டது யாழுக்கு ஓர் இழப்பு எண்டுதான் சொல்லவேணும். கானாபிரபா பழசுகளை மறந்துபோட்டு மீண்டும் யாழுக்கு வந்து கலக்கி அடிக்கவேணும் என்பதே எனது விருப்பம்.

கானாபிரபாவின் சேவைகள் தொடர, விருப்பங்கள் கைகூட இதயபூர்வமான வாழ்த்துகள்!

பிறேம்:

பிறேமோட நிறைய விசயங்கள் பரிமாறி இருக்கிறன். நிறைய கருத்து முரண்பாடுகளையும் கொண்டு இருக்கிறன். யாழில இருக்கிற கவர்ச்சியான அவாட்டரிகளில இவருண்டையும் முக்கியமான ஒன்று. முந்தி பிறேம் அடிக்கடி யாழுக்கு வருவார். இப்ப என்னமும் விஷேசம் எண்டால்தான் வருவார். வாழ்த்துகள்!

நடா:

உங்களுக்கு ஏதாவது பாடல் தேவைப்பட்டால் இவரை தொடர்புகொள்ளலாம். இவர் நீங்கள் கேட்கின்ற எந்தப்பாடலையையும் தனது தொகுப்பில இருந்து தேடி எடுத்து தந்துவிடுவார். நடா ஆரம்பிச்ச 'பாடல்களை கேளுங்கள் – இருந்தால் கொடுக்கப்படும்' எண்டு ஏதோ பெயர் கொண்ட இனியபொழுது பகுதியில இருக்கிற கருத்தாடல் யாழில பலரது கவனத்தை ஈர்த்து இருக்கிறதோட அது மிகவும் பிரபலமாகியும் விட்டிது. ஆனால்.. இவர் அதை ஆரம்பிச்சுபோட்டு யாழுக்கு வருவதை நிறுத்திவிட்டார் போல இருக்கிது. யாழில இருக்கிற 'தேடலில புலமை பெற்ற' நிபுணர்களிண்ட ஆதரவோட குறிப்பிட்ட கருத்தாடல் தொடர்ந்து வெற்றிகரமாக நடைபோடுது.

அட இந்தநேரத்தில எங்கட நுணாவிலான் பற்றி ரெண்டுமூண்டு விசயங்கள் சொல்லவேணும். இவரும் 'தேடலில புலமை பெற்ற' ஒரு நிபுணர். ஆரம்பத்தில எனக்கு நுணாவிலானைபற்றி பெரிசா ஒண்டும் நினைவுக்கு வர இல்லை. அதான் மேல ஆக ஒரு வரியில் அவரைப்பற்றி சொல்லி இருந்தன். இப்ப நினைவு வந்திட்டிது.

நுணாவிலான் தாயகம் மீது அதிக கரிசனை கொண்ட துடிப்புமிக்க இளைஞர். பல்கலைக்கழகத்தில படிச்சுக்கொண்டு வேலை செய்கிறார் எண்டு நினைக்கிறன். தாயக மக்களிற்கு உதவுகின்ற யாழ் நேசக்கரம் திட்டத்துக்கு தீவிர ஆதரவு கொடுக்கின்ற பலரில நுணாவிலான் முக்கியமானவர். மிகுந்த கலை ரசனை உள்ளவர். அவர் சுயமாக எழுதுவது மிகக்குறைவு எண்டாலும் நுணாவிலானிண்ட கலைரசனை பாராட்டுக்குரியது.

அப்ப திருப்பி நடாவைப்பற்றி கதைப்பம். இவர் சுவிசில இருக்கிறார் எண்டு அனிதா மூலம் அறிஞ்சுகொண்டன். தனிப்பட தெரியாது. தொடர்ந்து ரசிகப்பெருமக்கள் ஆவலுடன் கேட்கின்ற பல்வேறு பாடல்களை தேடிக்கொடுக்கின்ற சேவையை யாழில தொடரவும், மகிழ்ச்சியுடன் வாழவும் நடாவுக்கு வாழ்த்துகள்!

இளங்கவி:

யாழில அண்மையில இணைஞ்ச இளங்கவி மிகவும் புதுமையான முறையில கவிதைகள் எழுதி பலரதும் பாராட்டை பெற்று வருகின்றார். இவர் எழுதிய 'இண்டர்நெட் காதல்' பற்றிய ஓர் கவிதையை நான் வாசிச்சு மகிழ்ந்து இருந்தன். இளங்கவியிண்ட கொள்கை என்ன எண்டால் நாங்கள் படைக்கின்ற படைப்புகள் தாயகத்துக்கும், தாயக மக்களுக்கும் - எங்கள் மொழி - இனத்திற்கு வலுவூட்டுவனவாக இருக்கவேணும் எண்டுறது. இளங்கவியின் சேவைகள், ஆக்கங்கள் தொடர இதயபூர்வமான வாழ்த்துகள்!

RishiK:

ரிசீக்கிண்ட அவாட்டார் கார்டூன் சித்திரத்தில வருகிற ஒரு பாத்திரமாக இருக்கவேணும். இவரோட பல கருத்தாடல்களில பங்குபற்றி இருக்கிறன். ஆனால் இப்ப நினைவில இருக்கிற மிகவும் பயனுள்ள ஓர் கருத்தாடல் என்ன எண்டால் முந்தி ஒருகால் இவர் எங்கட ஞானிகள், சித்தர்கள் மனக்கணிதம் மூலம் கணக்கு செய்கின்றது பற்றிய ஒரு தகவலை தந்து இருந்தார். இந்த குறிப்பிட்ட மனக்கணித கலையுக்கு ஓர் நல்ல பெயர் இருக்கிது. இப்ப எனக்கு அது நினைவில இல்ல. நான் அண்மையில ஜெயா ரீவியில ஒரு நிகழ்ச்சி பார்த்து இருந்தன். தமிழ்நாட்டில இந்தக்கலையை கற்பிக்கின்ற பல ஆசிரியர்கள் இருக்கிறீனம். பல குழந்தைகள் இந்தக்கலையை பயின்று வருகிறீனம். இந்த மனக்கணித விளையாட்டு உங்களுக்கு அத்துப்படி எண்டால் நீங்கள் ஓர் நடமாடும் Calculator!

ரிசீக்கை தனிப்பட தெரியாது. வளமுடன் வாழ வாழ்த்துகள்!

கிருபா:

கிருபா நோர்வேயில இருக்கிறார். அண்மையில கொஞ்சக்காலம் முன்னம் இணைஞ்சு எல்லாப்பகுதியிலையும் கலக்கி அடிச்சு வருகிறார். இவர் யாழில இணைஞ்ச ஆரம்பத்தில மிகவேகமாக தூயாவுடன் சேர்ந்து கிகிகிகி எண்டு சொல்லி அரட்டை அடிச்சு எழுதின கருத்துக்களை பார்த்துப்போட்டு நான் நினைச்சன் அது புலிப்பாசறை அண்ணாவாக்கும் எண்டு.

இந்த நேரத்தில புலிப்பாசறை அண்ணா பற்றியும் சில நினைவுகள் வந்திட்டிது. மிகுந்த திறமை கொண்டவர். கல்வி, தொழில் ரீதியாக மிகவும் புலமை பெற்றவர். யாழில அதிக அளவு வெவ்வேறு பெயர்களில வந்த, மற்றும் அதிக குழப்படிகள் செய்த பெருமையும் இவரையே சாரும். நான் ஒருக்கால் மோகனுக்கு சொன்னன் என்ன எண்டால் போறபோக்கை பார்த்தால் இனி புதியவர்கள் தெரிவு செய்வதற்கு தமிழில பெயருகள் ஒண்டும் இருக்காது போல எண்டு. அப்பிடி அந்தளவுக்கு ஒவ்வொருநாளும் விதம்விதமாக பெயருகளை தெரிவு செய்து யாழ் அரிச்சுவடியில தன்னை அறிமுகமாக்கி, சிலவேளைகளில யாழிண்ட சூனியப்பிரதேசத்தையும் தாண்டி பாதுகாப்பு வேலியையும் வெட்டிக்கொண்டு வெற்றிகரமாக உள்ளயும் நுழைஞ்சு பலவிதமான விளையாட்டுக்கள் காட்டி இருக்கிறார்.

புலிப்பாசறை அண்ணா மிகுந்த திறமை கொண்டவர். ஆனால் ஏன் அடிக்கடி பலவிதமான பிரச்சனைகளை யாழில உருவாக்கினார் எண்டு தெரிய இல்லை. புலிப்பாசறை அண்ணாவிண்ட கடைசி அவதாரம் ‘குஞ்சு’. நான் இவர் வலைத்தளத்துக்கு சிலதுபோய் வாசிச்சு இருக்கிறன். வித்தியாசமாய் பிரச்சனைப் படும்படியாக அங்கு ஒரு கருத்தும் இல்லை. எல்லாம் பயன் தருகின்ற தகவல்கள்தான் இருக்கிது. ஆனால் யாழில மட்டும் ஏன் கொஞ்சம் குழப்படி செய்கிறார் எண்டு தெரிய இல்லை. தனிப்பட தெரியாது. அவுஸ்திரேலியாவில இருக்கிறார். வாழ்த்துகள்!

அப்ப மிச்சம் கிருபா பற்றி சொல்லிறதாய் இருந்தால் இப்ப கொஞ்சக்காலமாக கிருபா மிகவும் பொறுப்புணர்வுடன் ஊர்ப்புதினம் பகுதியில கருத்துக்கள் எழுதிவருகிறார். தாயகம் சம்மந்தமாக மிகவும் ஆர்வமுள்ள, துடிப்புள்ள இளைஞர் எண்டு கிருபாவை சொல்லலாம். கிருபாவின் பணிகள் தொடர வாழ்த்துகள்!

Bond007:

இவருக்கும் நெருப்பு வலைத்தளத்துக்கும் ஏதோ தொடர்பு இருக்கிது போல. இல்லாட்டிக்கு இவர் நெருப்பிண்ட தீவிர வாசகரோவும் தெரியாது. நெருப்பு வலைத்தளத்தில வருகின்ற பல செய்திகளை யாழில கொண்டுவந்து ஒட்டுவார். முந்தி நாவூற எனப்படுகின்ற உறுப்பினர் யாழ் உறவோசையில நெருப்பு செய்திகளை ஒட்டுவார். எத்தினயோதரம் - இருவது முப்பது தரம் இப்பிடி செய்து இருப்பார். ஆனால் யாழ்பிரியாவும் விடுறபாடாய் இல்ல. இவர் யாழ் உறவோசையில ஒட்டுறதுகள் எல்லாத்தையும் நிருவாகத்துக்கு நகர்த்திப்போடுவா. கெட்டிக்காரி.

நாவூற ஏன் கருத்துகள உறவுகள் குழுமத்தில சேர்க்கப்பட இல்லை எண்டு எனக்கு தெரியாது. சிலது ஊர்ப்புதினம் பகுதியில உறுதிப்படுத்தப்படாத, மற்றும் கண்டகண்ட, அத்தோட அநாகரிகமான முறையில மற்றவர்களை வசைபாடுகின்ற நெருப்பின் செய்திகளை ஒட்டிப்போடுவார் எண்டுற காரணத்தால இவருக்கு அனுமதி மறுக்கப்பட்டு இருக்கிதோ தெரியாது.

பிணைப்பு (Bond) பற்றி சொன்னால் இவருடன் நான் பல கருத்தாடல்களில பங்குபற்றி இருக்கிறன். தாயகபோராட்டம் சம்மந்தமாக அதிக அக்கறை கொண்டவர். யாழ் ஊர்ப்புதினத்தில வாசகர்களினால் அதிக அளவில பார்க்கப்பட்ட பிரபலமான பல செய்திகளை இணைச்சு இருக்கிறார். வாழ்த்துகள்!

வணங்காமுடி:

இவர் பெயருக்கு ஏற்றமாதிரி.. கொஞ்சம் வணங்காமுடிதான். ஏராளம் கருத்தாடல்களில நான் வணங்காமுடியுடன் பங்குபற்றி இருக்கிறன். இப்ப ஒண்டும் நினைவில இல்லை. வாழ்த்துகள்!

நிழலி:

யாழில அண்மையில இணைஞ்சு இருந்தாலும் பலரது கவனத்தை ஈர்த்து இருக்கிறார். குறிப்பாக தாயக நினைவுகளை சுமந்து வருகின்ற இவரது கவிதைகள் பலரது பாராட்டை பெற்று இருக்கிது. தான் முந்தி பத்திரிகைகளில ஆக்கங்கள் செய்து இருப்பதாகவும், தவிர கணணி – தொழில்நுட்பம் சம்மந்தமாக ஆங்கில வலைத்தளங்களிலும் கருத்துக்கள் பதிவதாகவும் முன்பு ஒருமுறை சொல்லி இருந்தார்.

கனடாவிலதான் இருக்கிறார். விரைவில நேரில சந்திப்பதற்கு வாய்ப்பு கிடைக்கும் எண்டு நினைக்கிறன். இன்னும் தனிப்பட இவரை எனக்கு தெரியாது. நிழலியின் படைப்புக்கள் பெருக, வளமுடன் வாழ வாழ்த்துகள்!

கவிரூபன்:

பெயரிலயே இவரிண்ட விலாசம் இருக்கிது. யாழில ஏராளம் கவிதைகள் எழுதி இருக்கிறார். சொந்தமாகவும், அத்தோட கறுப்பியிண்ட கவிதை அந்தாதியிலயும் பலப்பல கவிதைகளை படைச்சு இருக்கிறார். நல்ல நகைச்சுவையாகவும் கவிதை எழுதுவார். வலைப்பூவும் வச்சு இருக்கிறார். நான் முந்தி சிலது இவரிண்ட வலைப்பூவிற்கு போய் வாசிக்கிறது. முந்தி வல்வை அண்ணாவிண்ட அழைப்பை ஏற்று யாழில அழகிய காலக்கண்ணாடி ஒண்டையும் செய்து இருந்தார். இப்ப வரவு குறைஞ்சிட்டிது. தொடர்ந்து கவிப்பயணத்தை வெற்றிகரமாக தொடர வாழ்த்துகள்!

கலைநேசன்:

யாழில கணணி – தொழில்நுட்பம் சம்மந்தமாக நிறைந்த அறிவு உள்ளவர்களில ஒருவராக கலைநேசனையும் சொல்லலாம். இலவச தரவிறக்கம் பகுதியில கலைநேசன் ஏராளாமான பயனுள்ள தகவல்களை இணைச்சு வந்தார். பலர் இவரது தகவல்கள் மூலம் மிகுந்த பயனை பெற்று இருந்தார்கள். பிறகு யாழ் நிருவாகம் அந்த இலசவ தரவிறக்கம் பகுதியை மூடீட்டிது போல. இப்ப நினைவில இல்ல.

கலைநேசன் ஜேர்மனியில இருக்கவேணும். தனிப்பட பழக்கம் இல்ல. ஆனால் கலைநேசனுடன் நிறைய கருத்தாடல்களில பங்குபற்றி இருக்கிறன். வாழ்த்துகள்!

rmsachitha:

இவர் தமிழ்நாட்டில இருக்கிற ஒரு யாழ் கள உறவு. நான் வந்த ஆரம்ப காலத்தில ஊர்ப்புதினம் பகுதியில அதிகம் பிரச்சனைப்பட்டுகொண்டு இருந்தார். நானும் ஆரம்பத்தில இவரோட பல்வேறு கருத்து முரண்பாடுகளை கொண்டு இருந்தன். ஆனாலும் பின்னர் இவர் தண்ட கருத்துக்களை நிறைய மாற்றிவிட்டார் எண்டு சொல்லலாம். இவர் கடைசியாக யாழுக்கு வந்து எழுதிய பதிவுகளை முந்தி நான் வாசிச்ச நினைவில இருந்து பார்க்க இப்ப ஆள் கொஞ்சம் மாறீட்டார் போல இருக்கிது.

முன்பை விட இப்ப இவருக்கு ஈழ மக்கள் மீது இருக்கிற கரிசனை அதிகரிச்சு விட்டிது போல. முன்பு, குறிப்பாக இந்திய இராணுவம் தாயகத்தில இருந்தபோது நடந்த சம்பவங்கள் பற்றிய தெளிவற்ற தன்மையை இவர் கொண்டு இருந்தார் எண்டு முன்னைய காலங்களில இவருடன் கருத்தாடல் செய்தபோது அறியக்கூடியதாக இருந்திச்சிது. இப்ப யாழுக்கு கனகாலமாக வாறது இல்லை. ஏன் எண்டு தெரியாது. எங்கிருந்தாலும் வாழ்க!

மதராசி:

யாழில கொஞ்சக்காலமாய் மதராசி நல்ல கதைகள் இணைச்சு வந்தார். பிறகு ஆளை இப்ப காண இல்ல. 'முரளி சார்..!' எண்டு எல்லாருக்கும் 'சார்' போட்டுத்தான் கதைப்பார். நகைச்சுவையான, கனதியான விசயங்களை பற்றி எல்லாம் சுவாரசியமாக எழுதுவார். சின்னக்குட்டி மாதிரி நல்லாய் கதை எழுதுவார். தமிழ்நாட்டில இருக்கிற கள உறவு போல.. வாழ்த்துகள்!

பறவைகள்:

பறவைகள் நான் இணைஞ்ச ஆரம்பத்தில அடிக்கடி வருவார். பிறகு வாறது இல்லை. பிறகு வந்தார். பிறகு வாறது இல்லை. இப்ப இருந்துட்டு வருவார். கனடா தமிழர், அவர்களது பிரச்சனைகள் சம்மந்தமாக பறவைகளுக்கு நல்ல அறிவு இருக்கிது. நான் கனடாவில இருந்தாலும் கனடா தமிழர் பற்றிய பல விசயங்களை பறவைகளிண்ட பல்வேறு பதிவுகளில இருந்து அறிஞ்சுகொண்டன். பறவைகளுக்கு வாழும் புலம் பகுதியில கருத்தாடல் செய்யுறதில அதிக ஈடுபாடு காட்டுவார் எண்டு நினைக்கிறன். அண்மையில கனடாவில நடைபெற்ற தேர்தலில நான் பறவைகளுடன் பல கருத்து முரண்பாடுகளை கொண்டு இருந்தன்.

பறவைகளிண்ட Profileக்கு போய் முந்தி பல விசயங்களை வாசிச்சு இருக்கிறன். இப்ப மறந்து போச்சிது. கவிதைகளும் எழுதுவார் எண்டு நினைக்கிறன். தனிப்பட பழக்க இல்ல. வாழ்த்துகள்!

கிருபாகரன்:

முந்தி கிருபாகரன் யாழில வண்ணத்திரை பகுதியில ஒவ்வொருநாளும் விதம்விதமாக செய்திகள் இணைச்சு வந்தார். கனடா நேரம் மாலை சுமார் 7 – 10 க்கு இடையில அதிகம் வருவார். யாழில நான் தமிழ் சினிமா பற்றி அதிக செய்திகளை அறிஞ்சுகொண்டது கிருபாகரனிண்ட பதிவுகள் மூலம்தான். கிருபாகரன் இப்ப யாழுக்கு வாறது குறைஞ்சுபோச்சிது. இவர் தமிழ்நாட்டில இருக்கிறார் போல சரியாக தெரியாது. வாழ்த்துகள்!

சயந்தன்:

சயந்தன் ஒருமுறை தன்னை 'பாண்டிய மன்னன்' எண்டு யாழில சொல்லி இருந்தார். சயந்தனிண்ட ஏராளம் ஆக்கங்களை நான் யாழில வாசிச்சு, கேட்டு இருக்கிறன். குறிப்பாக சயந்தன் இணைச்ச யாழ் நூல்நிலையம் சம்மந்தமான கருத்தாடலை முக்கியமான ஒன்றாக சொல்லலாம். நல்ல குரல்வளம் இருக்கிது. அண்மையில தூயாவுடனான ஒரு ஒலிப்பதிவை யாழில இணைச்சு இருந்தார்.

சயந்தனிண்ட படத்தை (அத்தோட சாத்திரி அண்ணை, சபேசன் படங்களையும்) யாழில ஒரு கருத்தாடலில பார்த்து இருந்தன். சயந்தனை முன்பு எங்கையோ பார்த்த ஞாபகம் இருக்கிது. யாராச்சும் சொந்தக்காரரோ தெரியாது.

சயந்தனிண்ட படைப்பாற்றல்கள் பெருக, சேவைகள் தொடர, மகிழ்வுடன் வாழ வாழ்த்துகள்!

தேவகுரு:

யாழில இருக்கிற பலருக்கு கணணி – தொழில் நுட்ப துறையில வாத்தியாராக இருப்பவர் தேவகுரு அண்ணா. பெயருக்கு ஏற்றபடி உண்மையில இவர் ஓர் சிறந்த குரு. எத்தனையோ பேருக்கு கணணி, தொழில்நுட்பம் சம்மந்தமாக ஏராளம் உதவிகள் செய்து இருக்கிறார். நான் பொழுதுபோகாவிட்டால் இவரது கணணி வளாகம் பகுதியில இருக்கிற கருத்தாடல்களை – குறுக்கு வழிகள், கணணி திருத்துதல் பகுதிகளுக்கு சென்று வாசிக்கிறது. அங்கு பலவிதமான பயனுள்ள தகவல்களை பெற்றுக்கொண்டன். யாழ் இணையம் மூலம் பயனுள்ள பல விசயங்களை செய்யமுடியும், பயனுள்ள விசயங்களை பரிமாறிக்கொள்ள முடியும் என்பதற்கு தேவகுரு அண்ணாவின் பதிவுகள் சாட்சி.

தேவகுரு அண்ணா கனடாவில இருக்கிறார் எண்டு நினைக்கிறன். அவரது சேவைகள் தொடர வாழ்த்துகள்!

சமாதானம்:

நான் யாழில இணைஞ்ச ஆரம்பத்தில சமாதானம் மிகவும் பிரபலமாக இருந்தார். இப்ப சாணக்கியன் வித்தியாசமாக கருத்துக்கள் கூறி பலருடன் கருத்து முரண்பாடுகளை கொண்டு இருக்கிறமாதிரி சமாதானம் முன்பு வித்தியாசமாக கருத்துக்கள் சொல்லி பலருடன் பிரச்சனைப்பட்டு இருந்தார். பிறகு திடீரெண்டு யாழுக்கு வருவதை நிறுத்திவிட்டார். யாராக இருந்தாலும், எப்படியான கருத்துக்களை கொண்டு இருந்தாலும் வளமுடன் வாழ வாழ்த்துகள்!

காட்டாறு:

காட்டாறு அதிகம் ஊர்ப்புதினம் பகுதியில மினக்கட்டுக்கொண்டு இருப்பார். இவருடன் ஏராளம் கருத்தாடல்கள் செய்து இருக்கிறன். இப்ப நினைவில இருக்கிறது ஆங்கில ஊடகங்களில எங்களைப்பற்றி விசமத்தனமான முறையில செய்யப்படுகின்ற பொய்யான பிரச்சாரங்களை முறியடிக்கிறது சம்மந்தமான கருத்தாடலில இவர் கலந்து கருத்து சொல்லி இருந்தார். வாழ்த்துகள்!

தலைவன்:

தலைவன் அண்மையில இணைஞ்சு யாழில கலகலப்பாக எழுதி வருகிறார். எனக்கு தலைவன் இணைச்ச பதிவில மிகவும் பிடிச்சது அவர் முன்பு யாழில இணைச்ச ஒரு காணொளி. ‘பயங்கரமான ஒரு ஆளிண்ட படம்’ எண்டு நான் முந்தி குரங்கு ஒண்டினால தாக்கப்பட்டு மூக்கு இல்லாமல் போன ஒரு மனிதரிண்ட அகோரமான படம் ஒண்டை செய்திதிரட்டி பகுதியில போட்டு இருந்தன். அதில பதில் எழுதின தலைவன் ஒரு சிங்கத்துக்கும் மனிசனுக்கும் இடையிலான உறவை விபரிக்கின்ற மிகவும் அருமையானதொரு காணொளி இணைப்பை தந்து இருந்தார். நீங்களும் நேரம் கிடைக்கேக்க பாருங்கோ. நல்லாய் இருக்கிது. தலைவன் பற்றி தனிப்பட தெரியாது. தொடர்ந்து கலக்கி அடிக்க வாழ்த்துகள்!

பெப்சி:

பெப்சி நான் யாழில இணைஞ்ச ஆரம்ப காலத்தில ஒன்லைன் மூலம் இலவசமாக தமிழ் சினிமா படங்கள் பார்ப்பதற்கு இணைப்புக்கள் வழங்கி வந்தார். நான் அவரது வலைத்தளத்துக்கு சென்று இரண்டு, மூண்டு தமிழ் படங்கள் பார்த்து இருக்கிறன். அது நல்ல நகைச்சுவையான கருத்தாடல். முன்பு நல்ல நகைச்சுவையாக எழுதுவார். முன்பு யாழுக்கு அடிக்கடி வருவார். பிறகு வரவை குறைச்சுக்கொண்டார். பெப்சிக்கு வாழ்த்துகள்!

இன்னுமொருவன்:

யாழில இருக்கிற அறிஞர்களில இன்னுமொருவன் முக்கியமான ஒருத்தர். கல்வி, தொழிலில மிகவும் புலமை பெற்றவர் எண்டு இவரது பதிவுகளை வாசிச்சு அறிஞ்சுகொண்டன். தனக்கு யாழுக்கு வந்துஎழுத நேரம் இல்லை எண்டு முன்பு சொல்லி இருந்தார். ஆனால் தினமும் யாழுக்கு வந்து வாசிக்கிறவர் போல. தமிழ் இலக்கியத்திலையும் இன்னுமொருவனுக்கு ஆழ்ந்த அறிவு இருக்கிது. யாழில கனதியான விசயங்கள் விளங்கின, கனதியான விசயங்களை பற்றி யாழில கருத்தாடல் செய்கின்ற ஆக்களில இன்னுமொருவன் முக்கியமான ஒருவர்.

இன்னுமொருவன் நன்றாக கவிதை எழுதுவார். அத்துடன் நல்ல ரசிகர் + வாசகன் எண்டும் சொல்லலாம். நான் முந்தி ஒருக்கால் எண்ட அக்கா சின்னனில எழுதின கவிதை ஒண்டை யாழில இணைச்சு இருந்தன். இன்னுமொருவன் தனிமடலில அந்தக்கவிதைக்கு பாராட்டு தெரிவிச்சு இருந்தார். யாழ் இணையம் அகவை ஒன்பது சார்பாக என்னால ஒழுங்குபடித்தி வைக்கப்பட்ட கவிதைப்போட்டியில இன்னுமொருவனின் கவிதை முதலாம் இடத்தை பெற்றது. யாழ் கீதம் எண்டுற தலைப்பில எழுதப்பட்ட இன்னுமொருவனிண்ட முதலாம் இடம்பெற்ற கவிதையை இதுல இணைக்கிறன் வாசிச்சு பாருங்கோ:

கொக்கை பறித்த குளைகள் சுமந்து,

மெத்தெனச் செல்லும் வெறுமேனித் தாத்தா...

அவர் படலையைத் திறக்க வெள்ளாடு துள்ளும்.

யாழிற்குள் நுளைந்ததும் நம் மனங்களும் அதுபோல்!

சறத்தோடு, காற்றோடு, நெளித்து வளைத்துத் துவிச்சக்கரம் ஓட்டி,

ஊரோடு ஓழுங்கைகளில் கதைபேசும் நங்கையர்க்கு நக்கல்கள் பேசி,

குளத்தடியில் கோம்பை கட்டி நீச்சல்கள் பழகி,

கூட்டமாய் பெடியளாய்க் கருப்பணி குடித்து,

அந்தியில் மீள்கையில் அப்பருங் கடிய...

புத்தகம் எடுத்தாலும் நினைவுகள் மனதில்.

யாழின் அனுபவம் இதுவும் அது போல்...

நெற்பயிர் அறுவடை முடிந்திட்ட கையோடு

சிறுபயிர் சுமக்கும் நம்மூர் வயல் போல்

விவாத முடிவில் விவாதம் பிறக்கும்

பண்பட்ட யாழ் களம், இங்கு சிந்தனை விளையும்!

கருதுகோள்கள், கொள்கைகள், கருத்துக்கள் நமக்குள் ஏராளம் .

குழப்பங்கள் கொஞ்சம் குளப்படி கொஞ்சம்,

சுய பரிசீலனை நாளாந்தம் மனதுக்குள் நடக்கும்.

படித்தவற்றைப் பரிசோதிக்கப் பயங்கள் தடுக்கும்,

பழிக்கு அஞ்சி வாய் பொத்தி நாட்கள் பேசாது மழுங்கி நகரும்.

முகமூடி மனிதராய் பரீட்சித்துப் பார்க்க யாழ் களம் கதவு திறக்கும்

வரப்பிரசாதம்... அச்சகம்... யாழ் ஒரு ஆய்வு கூடம்!

படிப்புக்கள் தவறில்லை ஆராய்ச்சி அபத்தமில்லை

வாதிடல் கேடில்லை தர்க்கங்கள் நோயில்லை

கருத்தாடல் இல்லாது பண்படுதல் நடவாது

தனியாகத் தர்க்கித்து முளுவதும் விளங்காது.

மூளைகள் களமாட, சிந்தனைகள் முளை அவிழ,

தவறுகள் திரையகல, மனங்கள் பண்பட...

இணையமாய்ப் பாராது அதிகமாய் நேசித்து,

யாழ் மீட்டும் இதயங்கள் யாழோடு வளர்ந்திடுக!

இன்னுமொருவன் பற்றி தனிப்பட எனக்கு தெரியாது. கனடாவில இருக்கிறார் போல. தொடர்ந்து யாழில இணைஞ்சு இருக்க, மேலும் மகிழ்வுடன் வாழ வாழ்த்துகள்!

கொக்குவிலான்:

யாழில ஒவ்வொருத்தரும் ஒவ்வொருவிதமாய் சிரிக்கிறது. ஹிஹி ஹாஹா இப்பிடி சிலர் சிரிக்கிறது. இப்ப யாழில கிகி எண்டு சிரிக்கிறது பிரபலமாய் வந்திட்டிது. அதை அறிமுகப்படுத்தியது தூயா எண்டு நினைக்கிறன். கொக்குவிலான் கீக்கீ கீக்கீ எண்டு சிரிக்கிறவர். கொக்குவிலானோட நான் நிறைய நகைச்சுவைகளை பரிமாறி இருக்கிறன். கொக்குவிலான் கிகி எண்டு நல்லாய் சிரிச்சு மகிழ்ச்சியாக வாழ வாழ்த்துகள்!

கரிகாலன்:

கரிகாலன் ஆரம்பத்தில என்னோட கொஞ்சம் முரண்பட்டு இருந்தாலும்.. பின்னர் நல்லதொரு முகமறியாத நண்பராக வந்துவிட்டார் எண்டு சொல்லலாம். முந்தி எனது கலைஞன்@யாழ்.கொம் எண்டுற முகவரிக்கு மடல் போடுவார். நான் இப்ப ஒன்பது பத்து மாதமா அதை பாவிக்கிறது இல்லை. குறிப்பாக யாழில தனக்கு பிடிக்காத விசயங்கள் பற்றி தனது மடல்களில சுட்டிக்காட்டி இருப்பார்.

சுத்துமாத்து எனப்படுகின்ற வலைத்தளம் இவரினுடையதோ தெரியாது. ஆனால் பல மூலங்களை அவர் அங்க இருந்துதான் குறிப்பிடுவார். கரிகாலனுக்கு பிடிக்காத ஓர் விசயம் என்ன எண்டால் ஆனந்தசங்கரி, டக்லஸ், கருணா இவர்களிண்ட செய்திகளை யாழில ஆக்கள் இணைக்கிறது. அத்தோட யாழில நடைபெற்ற சில கருத்தாடல்களும் இவருக்கு மனக்கசப்பை ஏற்படுத்திவிட்டிது எண்டு நினைக்கிறன்.

இந்த மனக்கசப்பிண்ட உச்சக்கட்டமாக கரிகாலன் தான் யாழில எழுதின எல்லாக்கருத்துக்களையும் அழிச்சுப்போட்டார். இதை நான் பிழை எண்டு சொல்லமாட்டன். நானும் எனக்கு அளவுக்கு மிஞ்சி மனக்கசப்பு ஏற்பட்டு இருந்தால் அப்படி செய்து இருக்கக்கூடும்.

கரிகாலன் இப்படி மனம் உடைஞ்சு போனதற்கான காரணங்களில ஒன்றாக நான் நினைக்கிறது என்ன எண்டால் இவருக்கு யாழில இணையும்போது அதிக எதிர்பார்ப்பு இருந்து இருக்கலாம். அதாவது தாயக போராட்டம் சம்மந்தமாக யாழ் மூலம் தீவிரமாக ஏதாவது செய்ய முடியும் என்கின்ற ஓர் எதிர்பார்ப்பு. ஆனால் உள்ளுக்க வந்தாப்பிறகு நடைமுறை ரீதியாக இஞ்ச இருக்கிற நிலமையை பார்த்தபிறகு வெறுப்பு வந்து இருக்கலாம்.

சுத்துமாத்து எனப்படுகின்ற இணையம் யாழ் பற்றி இடைக்கிடை தனது கடுமையான விமர்சனங்களை சொல்லி வருகிது. நான் இடைக்கிடை அங்கபோய் எழுதப்படுவதுகளை வாசிப்பது. நல்லவிசயங்களை யார் சொன்னாலும் கேட்கலாம். நான் கரிகாலன் மூலம்தான் சபேசன் யாழில ஆரம்பிச்ச ஒரு கருத்தாடல் பற்றி அறிஞ்சுகொண்டன். இந்தவகையில சுத்துமாத்துக்களும் தனது சேவையை தொடர வாழ்த்துகள்!

கரிகாலன் கனடாவில இருக்கிறார் எண்டு நினைக்கிறன். தனிப்பட தெரியாது. அவரது சேவைகள் தொடர, மகிழ்ச்சியுடன் வெற்றிகரமாக வாழ வாழ்த்துகள்!

விசால்:

நான் யாழில இணைஞ்சு கொஞ்சக்காலத்தால விசாலும் இணைஞ்ச்சு இருந்தார். முந்தி விசாலுடன் நிறையக் கருத்தாடல்கள் செய்யுறது. இப்ப விசால் யாழுக்கு வாறது, கருத்து எழுதுறது மிகவும் குறைவு.

விசால் நிறைவுடன் வாழ வாழ்த்துகள்!

என்.செந்தில்:

இவருடன் நான் யாழில எதுவித கருத்தாடலும் செய்ய இல்லை எண்டு நினைக்கிறன். ஆனால் இவரை நான் அறியவந்தது தூயாவின் பதிவுகளை பார்த்தபின்னர்தான். இவர் தூயாவின் நெருங்கிய நண்பர் எண்டு நினைக்கிறன். அண்மையில யாழுக்கு வந்து ஊர்ப்புதினம் பகுதியில சில கருத்துக்கள் சொல்லி இருந்தார். புதிய சில தலைப்புக்களையும் ஆரம்பிச்சார். ஒண்டும் விரிவாக இப்ப நினைவில இல்லை. இவர் கொஞ்சம் துணிஞ்ச கட்டை எண்டு நினைக்கிறன். ஏன் எண்டால் தனது Public Profile இல தனது தொலைபேசி இலக்கத்தையும் போட்டு வச்சு இருக்கிறார். ஆனால் அது உண்மையான இலக்கம்தானா எண்டு எனக்கு தெரியாது. வேண்டுமானால் யாராச்சும் அந்த நம்பருக்கு அழைப்புச்செய்து உறுதிப்படுத்திக்கொள்ளுங்கோ. கிகி

செந்தில் வலைப்பூவில பிரபலமான ஒருத்தர் எண்டு நினைக்கிறன். தூயாவிண்ட தளத்துக்கு சென்று வாசிச்சு அறிஞ்சதில வரவணையாளன் (பிழையாக உச்சரிச்சு இருந்தால் மன்னிக்கவும்) எண்டு சொல்லப்படுபவர் இவராக இருக்கவேணும்.

என்(ம்) . செந்திலின் சேவைகள் தொடர, வளமுடன் வாழ வாழ்த்துகள்!

தமிழ்வானம்:

தமிழ்வானம் – நோர்வே வசீகரன் யாழில அறியவந்தது எப்ப எண்டால் தனது பாடல்களை யாழில இணைச்சு தன்னை யார் எண்டு இனம்காட்டிய பிறகுதான். உங்களில பலருக்கும் வசீகரன் பற்றி தெரியும் எண்டுறதால நான் அவர்பற்றி இதில அதிகம் சொல்லத்தேவை இல்லை எண்டு நினைக்கிறன்.

வசீகரின் படைப்புக்கள், சேவைகள் தொடர வாழ்த்துகள்!

chozhan + பல்லவன்:

இவர்கள் இருவரது பெயரையும் நான் ஒண்டாக போட்ட காரணம் என்ன எண்டால் இருவரும் அண்மையில இணைஞ்சு இருந்தார்கள் அத்தோட ஏறக்குறைய ஒரேமாதிரியான பாணியில என்னுடன் கருத்தாடல் செய்து இருந்தார்கள்.

சோழன் பற்றி சொல்லுவதாய் இருந்தால் அதிகம் ஊர்ப்புதினம் பகுதியில மினக்கட்டுகொண்டு இருப்ப்பார். பல்லவன் ஊர்ப்புதினம் பகுதியில மினக்கட்டாலும் இதரபகுதிகளுக்கும் சென்று கருத்தாடல் செய்வார். மல்லிகைவாசம் ஆரம்பிச்ச நான் விரும்பிய புத்தகம் பகுதியில இவர் எழுதிய பயனுள்ள கருத்துக்கள் நினைவில இருக்கிது.

இப்ப நீங்கள் கருத்து எழுதேக்க உங்களை ஒருவர் Annoy பண்ணிக்கொண்டு இருந்தால் என்ன செய்வீங்கள்? நான் முந்தி யாராவது அப்பிடி செய்யேக்க கண்டுகொள்ளுறது இல்லை. ஆனால்.. இப்ப திருப்பி ஏதாவது எழுதி விடுறது. சிலது அநாகரிகமான வார்த்தைகளும் பாவிக்கிறது. நான் அநாகரிகமான வார்த்தைகளை பாவிச்சு கருத்து எழுதேக்க அந்த கருத்தை மட்டறுத்துனர்கள் தூக்குவார்கள் எண்டு எனக்கு தெரியும் ஆனால் தெரிஞ்சும் அப்பிடி எழுதுறது. ஏன் எண்டால் சில சூழ்நிலைகளில இப்பிடி எழுதினால்தான் யாராவது Annoy பண்ணேக்க கருத்தாடல் தலைப்பு திசைதிரும்பாமல் பார்த்துக்கொள்ள முடியும். மேலும் அவர் Annoy பண்ணுவதை நிறுத்தமுடியும்.

நான் இஞ்ச அநாகரிகமாக எழுதுறன் எண்டால் அதற்கு நிருவாகமும் பொறுப்பு. ஏன் எண்டால் இப்ப கருத்தாடல் தளத்துக்க நுழைஞ்சு சகல பகுதிகளிலையும் கருத்து எழுதுவதற்கு – அதாவது 'கருத்துக்கள உறவு' ஆகுவதற்கு எதுவித தகமையும் இல்லை. இஞ்ச நான் தகமை எண்டு சொல்லவாறது என்ன எண்டால் யாழ் கருத்தாடல் தளம்பற்றிய கொஞ்ச அனுபவத்தை பெற்று இருக்கிறது. இதை எப்பிடி விளங்கப்படுத்தலாம் எண்டால்..

நீச்சல் தடாகத்தில நிறையப்பேர் நீச்சல் அடிக்கிறீனம். இந்த தடாகம் ஆழம் குறைவான பகுதிகளையும், ஆழமான பகுதிகளையும் கொண்டு இருக்கிது எண்டு வைப்பம். ஆழம் இல்லாத பகுதியுக்க நீச்சல் தெரியாத ஒருத்தர் நீந்தேக்க அவருக்கு பாதிப்பு இல்லை. ஆனால்... ஆழமான பகுதியுக்க நீச்சல் தெரியாதவர் இறங்கினார் எண்டால் மூழ்கி சாகவேண்டியதுதான்.

யாழ் தளத்தை ஒரு நீச்சல் தடாகமாக பார்த்தால்... தண்ணியைப்பற்றி ஆராய்ச்சி செய்து அதில கலாநிதி பட்டம் பெற்ற - ஆனால் நீச்சல் தெரியாத ஒருத்தர் ஆழமான பகுதியுக்க இறங்க முடியாது.

அதாவது வெளியுலகம் பற்றி என்னதான் அறிவு இருந்தாலும், என்னதான் படிச்சு இருந்தாலும், என்னதான் அனுபவம் இருந்தாலும்.... யாழ் கருத்தாடல் தளத்தில அனைவருடனும் சேர்ந்து சினேகபூர்வமான முறையில கருத்தாடல் செய்கிறது மிகவும் கஸ்டம். இதற்கு அனுபவம் வேணும். இந்த அனுபவம் மெதுமெதுவாகவே யாழில பெறப்படமுடியும். அதாவது உறவுகள் கட்டி எழுப்பப்பட வேணும்.

நான் யாழில இணையேக்க எனக்கு இருந்த மனநிலைக்கும், இப்ப ரெண்டு வருசத்தால எனக்கு இருக்கிற மனநிலைக்கும் இடையில ஏராளம் வேறுபாடுகள் இருக்கிது. காரணம் என்ன எண்டால் ஆரம்பத்தில நான் யாழ் இணையம் – கருத்தாடல் தளத்தில – கருத்துக்கள் எழுதேக்க... ஏதோ இல்லாத பல கற்பனைகளை எண்ணங்களை நினைச்சுக்கொண்டு கருத்தாடல் செய்தன். ஆனால்.. உண்மையில யாழுக்க என்ன நடக்கிது, யாழுக்க இருக்கிற சூசகமான விசயங்கள் - Politics பற்றி அறிஞ்சாப்பிறகு எனது மனநிலையில மாற்றங்கள் வந்திட்டிது.

எனக்கு யாழில புதிதாக இணையேக்க வெளியாக அழகான ஒரு உடல் மட்டும் தெரிஞ்சிது எண்டு சொன்னால், இணைஞ்சு கொஞ்சக்காலத்தால மெதுமெதுவாக... அந்த உடலினுள் இருந்த அழுக்குகள் தெரியத் துவங்கிச்சிது. இந்த உடலுக்க இருக்கிற நோய்கள் எல்லாம் ஆரம்பத்தில நான் இணையேக்க எனக்கு தெரிஞ்சு இருக்க இல்லை. ஏன் எண்டால் ஆரம்பத்தில எனக்கு அனுபவம் (நீச்சல் பற்றிய) இருக்க இல்லை.

இதை நான் ஏன் சொல்லிறன் எண்டால் யாழினுள் புதிய உறுப்பினர்கள் வரவேற்கப்படவேணும். ஆனால்.. உடனடியாக அவர்கள் சகல பகுதிகளிலும் கருத்துக்கள் பதிவதற்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படவேணும்.

இப்படியான கட்டுப்பாடுகளாக நான் பரிந்துரை செய்யக்கூடிய சில என்ன எண்டால்:

1. புதியவர்கள் 'கருத்துக்கள உறவுகள்' நிலையை அடைவதற்கு குறிப்பிட்ட அளவு காலம் பொருத்து இருக்கவேணும். உதாரணமாக சுமார் ஒரு மாதம் எண்டு கூறலாம். அதுவரை யாழ் உறவோசை, யாழ் அரிச்சுவடி பகுதியில மாத்திரம் கருத்துக்கள் எழுத அனுமதிக்கப்படலாம்.

2. யாழுக்க புதியவர்களுக்கான இன்னொரு பகுதியை திறந்து அவர்கள் தங்கள் ஆக்கங்களை இணைப்பதற்கு வசதி செய்து கொடுக்கலாம். குறிப்பிட்டளவு - உதாரணமாக - சுமார் பத்து சுய ஆக்கங்களை இணைச்ச பின்னர்தான் கருத்துக்கள உறவுகள் எண்டுற நிலை புதிய உறுப்பினர்களுக்கு கொடுக்கப்படலாம்.

இதை நான் ஏன் சொல்லிறன் எண்டால் யாழ்பற்றி ஒண்டும் தெரியாமல் அதாவது நீச்சல் தெரியாமல் நீச்சல் தடாகத்துக்க குதிக்கிற ஆக்களால பாதிக்கப்படுவது அவர்கள் மாத்திரம் அல்ல... மிகுந்த அனுபவமும், ஆற்றலும் உடைய ஏனைய கருத்துக்கள உறவுகளும்தான்.

இப்ப யாழில நன்றாக ஆக்கங்கள் செய்யுற ஒருத்தர் இருக்கிறார் எண்டு வைப்பம். திடீரெண்டு யாழுக்க புகுந்து அரிச்சுவடியில ரெண்டு கருத்துக்கள் எழுதி கருத்துகள உறவாகிப்போட்டு பிறகு குறிப்பிட்ட ஆற்றல் மிகுந்த ஒருவரிடன் ஆக்கத்துக்கு சென்று இந்த புதிய உறுப்பினர் சேட்டைகள் செய்தால் – சீண்டிவிளையாடினால்.. என்ன செய்யுறது? கடைசியில ஒழுங்காக நீந்தத்தெரிந்தவரும் நீச்சல்தெரியாதவர் இவரைப்போய் கட்டிப்பிடிக்க அவருடன் சேர்ந்து தண்ணியுக்க அமிழ்ந்துபோய் சாகவேண்டியதுதான்.

நிருவாகம் மேற்கூறிய விசயங்களை கவனத்தில எடுத்து... ஆகவேண்டிய வேலைகளை செய்யவேணும் எண்டு தயவுடன் கேட்டுக்கொள்ளிறன். யாழ் கள உறவுகள் தம்மிடையே ஒரு நட்புறவான சூழலை வளர்ப்பதற்கு – நட்புறவுடன் கருத்தாடல் செய்யுறதுக்கு அனுபவமற்றவர்களின் கருத்தாடல்கள் இடையூறு விளைவிக்கலாம்.

மற்றும்படி சோழன், பல்லவனுடன் எனக்கு எதுவித பிரச்சனைகளும் இல்லை. இருவரும் தாயகம்மீது அதிகபற்று வைத்து இருக்கின்றார்கள் எண்டு அவர்கள் எழுதுகின்ற கருத்துக்களை வாசிக்கும்போது விளங்கிது. சோழன், பல்லவன் வளமுடன், மகிழ்வுடன் வாழ வாழ்த்துகள்!

PSIVARAJAKSM:

சிவராஜா யாழில பலராலும் அறியப்பட்டவர். நல்லாக் கவிதைகளும் எழுதுவார். பல விசயங்கள் பற்றிய அறிவு இருக்கிது. அண்மையில யாழ் உறவுகளுக்கும் தனது திருமண அழைப்பிதழை தந்து இருந்தார். அதற்காக யாழ் சார்பாக நன்றிகள்! இவர் ஈழமக்கள் மீது அதிக கரிசனை கொண்டவர். நான் இணைஞ்ச காலத்தில அடிக்கடி வருவார். இப்ப யாழுக்கு வருவது குறைவு. வாழ்த்துகள்!

காவல்துறை:

காவல்துறை வன்னிமைந்தனின் ஓர் நண்பன் எண்டு நினைக்கிறன். முந்தி அடிக்கடி யாழில எல்லாப்பகுதிகளிலையும் கருத்துக்கள் பதிவார். இப்ப கலகம் வலைத்தளத்துக்க மட்டு இருந்து மினக்கடுறார் போல இருக்கிது. என்னையும் கலகத்துக்கு வந்து கலகம் பண்ணச்சொல்லி ரெண்டு மூண்டு அழைப்புக்கள் விட்டு இருந்தார். நான் முந்தி ஒருக்கால் அங்கபோய் கலைஞன் எண்டுற பெயரில உறுப்புரிமை எடுத்தன். ஆனால் பிறகு லொகின் செய்யமுடியவில்லை. ஏககாலத்தில தாயகபறவைகளுக்கு போய் அங்கையும் கலைஞன் எண்டுற பெயரில உறுப்புரிமை எடுத்தன். அங்கையும் லொகின்பண்ணி உள்ளுக்க போக முடிய இல்லை.

அது சரி உந்த தாயக பறவைகளுக்கு என்ன நடந்சிச்சிது? தாயகபறவைகளை கூகிழில தேடல் செய்ய இப்பிடி ஒரு அறிவித்தல் வருகிது:

Website not yet configured

The website you are trying to access is unknown in the system. Best regards, Your Servage.net team. Cluster..

இழுத்து மூடிப்போட்டீனமோ தாயக பறவைகளை? இல்லாட்டிக்கு தாயக பறவைகள் வெளிநாட்டு பறவைகளாக மாறிவிட்டுதோ? இந்தசெய்தியை அறிஞ்சால் தாயக பறவைகள் கருத்தாடல் தளத்தில இருக்கிற ‘எதிரி’ எண்டு சொல்லப்படுவர் கவலைப்படப்போறார். கிகி

காவல்துறை பற்றி சொன்னால்.. அவருக்கு இஞ்ச இருக்கிற பகுத்தறிவாளர்கள் யாழில இந்துமதங்களை இழிவுபடுத்துகின்ற விசயங்கள் – அதாவது இந்துமதத்தை குற்றவாளிக்கூண்டில ஏத்தி துகிலுறியுற விளையாட்டுக்கள் சுத்தமாக பிடிக்கவில்லை எண்டு நினைக்கிறன். பல தடவைகள் முன்பு இதுபற்றி தண்ட கவலைகளை சொல்லி மடல்கள் அனுப்பி இருந்தார். ஏன் இவர்கள் இந்துமதத்தை சீண்டிவிளையாடுகிறீனம் எண்டு கேட்டு.

எங்க இருக்கிறார் எண்டு தெரியாது. காவல்துறை எங்கிருந்தாலும் வெற்றிகரமாக வாழ்வதோடு, துப்பரவுக்கும் சொல்லிவழி கேளாது நாட்டில இருக்கிற சட்டங்களை தமது செல்வாக்கு மூலம் துஸ்பிரயோகம் செய்து குற்றங்கள் செய்யுற பெரிய கேடிகளை எண் கவுண்டரில போட்டுத்தள்ள வாழ்த்துகள்!

அம்பலத்தார்:

நான் யாழில அன்போட அங்கிள் எண்டு கூப்பிடுற ஆக்களில முக்கியமானவர் அம்பளம் அங்கிள். இவர் பழைய உறுப்பினர். ஆனால் கனகாலம் யாழுக்கு வாறது இல்லை. இப்ப நாலைஞ்சு மாதங்களுக்கு முன்னர்தான் இவர்பற்றி எனக்குத்தெரியும்.

நல்லாக் கதைகள் சொல்லுவார் எண்டு நினைக்கிறன். பிரான்சில இருக்கிறார் போல. தனது நாளாந்த வாழ்க்கையில நடக்கிற சம்பவங்கள் பற்றி நகைச்சுவையாக சொல்லி இருந்தார். அம்பளம் மாமா சுகதேகியாக, மகிழ்ச்சியுடன் வாழ வாழ்த்துகள்!

முற்றும்!

முடிவுரை:

அனைவரினதும் உற்சாகமான கருத்துக்களுக்கும், விமர்சனங்களுக்கும் முதற்கண் நன்றிகள்.

நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்

பெருமை உடைத்துஇவ் வுலகு

இந்தக்குறள் யாழ் இணையத்தில இருக்கிற கள உறவுகளுக்கும் மிகவும் பொருத்தமானது. எல்லாரும் ஒரு தாகம் வரேக்க இதுக்கவந்து எழுதுறம். ஆனால்... வாழ்க்கையில இன்னொரு நிலையுக்குபோகேக்க, வாழ்க்கையில வெவ்வேறு சூழ்நிலைகளுக்கு முகம்கொடுக்கேக்க திடீரெண்டு காணாமல் போயிடுறம். இணைவும், பிரிவும் கலந்ததுதான் வாழ்க்கை. இதற்கு யாழ் இணைய உறவுகளும் விதிவிலக்காக இருக்கமுடியாது.

இண்டர்நெட் எண்டுறது ஒரு புது விசயம். ஒருவருக்கும் இதுபற்றி முன் அனுபவம் இல்லை. இண்டர்நெட் மூலம் வருகின்ற நன்மை, தீமைகள் பற்றி ஆராய்ஞ்சு மனிதகுலத்தை அதற்கு ஏற்றவகையில நிலைநிறுத்திக்கொள்ள இன்னும் ஐம்பது, நூறு ஆண்டுகள் எடுக்கலாம். உண்மையைக் கூறுவதானால் தொழில்நுட்பம், விஞ்ஞானம் மனிதனிண்ட முழுமையான கட்டுப்பாட்டில இப்போது இல்லை. இதனால வருகின்ற, வரக்கூடிய பாதிப்புக்கள் - கேடுகள் மிகவும் பாரதூரமானது. இந்தவகையில எங்களை மகிழ்விக்கின்ற, எங்கள் வாழ்க்கையை இலகுபடுத்துகின்ற இந்த வசதிகளை நாங்கள் நாளாந்த வாழ்க்கையில கவனமாக கையாளவேண்டிய தேவை இருக்கிது. யாழ் இணையமும் அதேமாதிரித்தான்.

நட்புடன் புதியதோர் உலகம் அமைப்போம் எண்டு இளைஞன் தனது கையெழுத்தில சொல்லி இருக்கிறமாதிரி.. அனைவரும் உங்கள் ஒத்துழைப்புக்களை கொடுத்து யாழ் இணையத்தை பல்வேறு பயன்களை உங்களுக்கு தருகின்ற கற்பகதருவாக மாற்றி அமைத்துங்கொள்ளுங்கள்.

இறுதியாக, நானும் நாளை இங்கு இல்லாமல் போகக்கூடும். இந்தப்பதிவை நான் ஆரம்பிச்சதன் பிரதான நோக்கங்களில ஒன்று நான் யாழைவிட்டு ஒரு காலத்தில விலகிவிட்டாலும் நான் இல்லாத காலத்தில இந்தப்பதிவு மூலம் நீங்கள் என்னை நினைவுகூறுவீங்கள் எண்டுற நம்பிக்கைதான். ஹிஹி :D

நன்றி! வணக்கம்!

Link to comment
Share on other sites

"நட்புடன் புதியதோர் உலகம் அமைப்போம் எண்டு இளைஞன் தனது கையெழுத்தில சொல்லி இருக்கிறமாதிரி.. அனைவரும் உங்கள் ஒத்துழைப்புக்களை கொடுத்து யாழ் இணையத்தை பல்வேறு பயன்களை உங்களுக்கு தருகின்ற கற்பகதருவாக மாற்றி அமைத்துக்கொள்ளுங்கள்."

ஜமாய்ச்சிட்டீங்க. இவ்வளவு பேரையும் தேடிப்பிடித்து கருத்தெழுதுவது, பொறுமையான ஒரு வேலை.

"நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்

பெருமை உடைத்துஇவ் வுலகு"

Link to comment
Share on other sites

வாசகன்:

யாழ் களத்தில அதிக சுனாமிகளை ஏற்படுத்திய பெருமை வாசகனையே சாரும். ஆக ஒண்டு இல்லாட்டிக்கு ரெண்டு வசனத்தில சின்னதாய் ஒரு விசயத்தை யாழ் உறவோசையில நைசாக சொல்லிப்போட்டு இரவு படுக்கப்போயிடுவார். பிறகு நித்திரையால அவர் எழும்பி வரேக்க கலிபோர்னியாவில காடுகள் பற்றி எரியுறமாதிரி யாழ் உறவோசையில கருத்துக்கள் எல்லாம் பெரிய புகைமண்டலத்தை கிளப்பி எரிஞ்சுகொண்டு இருக்கும். இந்தவகையில வாசகனை யாழில ஒரு தீக்குச்சி எண்டு சொல்லலாம். ஹிஹி

யாழில வெட்கப்படாமல் விரசமாக எழுதக்கூடிய ஆக்கள் சிலர். டங்குவார் எழுதுவார். ஆனால் இடைக்கிடை தனக்கு மட்டறுத்துனர்களை நினைக்க பயமாய் இருக்கிது எண்டு சொல்லுவார். நெடுகாலபோவான் வெட்கப்படாமல் எழுதி வெட்டு வாங்குவார். வசம்பு வெட்ட முடியாத வகையில விரசமாக எழுதுவார். இந்த விரசமாக எழுதக்கூடியவர்கள் பட்டியலில வாசகனையும் போடலாம். இவர்கள் நகைச்சுவைக்குத்தான் அப்படி எழுதுவது. ஆனால் சிலவேளைகளில சிலருக்கு அவை கோபத்தை ஏற்படுத்தக்கூடும்.

தாயகபோராட்டத்திற்கு யாழில ஆதரவு குடுக்கிற ஆக்களில வாசகனும் முக்கியமான ஒருத்தர். எனக்கு தனிப்பட இவரை தெரியாது. வாசகன் வளமுடன் வாழ வாழ்த்துகள்!

யாழ்களத்தில் சிலகாலம் வந்து போனாலும் என்னையும் ஞாபகம் வைத்து தனது கருத்தை சொன்ன முரளிக்கு மிகவும் நன்றி. என்னை வாழ்தி வேற இருக்கிறீங்கள் :) முரளியும் 16 செல்வங்களும் பெற்று பெருவாழ்வு வாழ வாழ்த்துக்கள். :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாழ்த்துக்கள் முரளி அண்ணா, உங்களின் பார்வையில் மற்ற உறுப்பினர்கள் மீதுள்ள கணிப்பு நன்றாக உள்ளன. ; )

Link to comment
Share on other sites

தூயா:

யாழில இணைஞ்ச ஆரம்பத்தில நான் தூயாவுடன் அதிக கருத்தாடல்களில கலந்து இருக்கிறன் எண்டு நினைக்கிறன். எங்கட சுயசரிதையை யாழ் நாற்சந்தியியில சொல்லிற ஏதோ ஒரு விளையாட்டுக்கு தூயா என்னை முதலாவதாக அழைத்து இருந்தா. யாழில பெண்களிடையே சில பிரச்சனைகள் ஏற்பட்டபோது நான் எல்லாரிடமும்போய் கெஞ்சிக்கூத்தாடி சமரசம் செய்யவேண்டிய ஒருநிலை ஏற்பட்டிச்சிது. தூயாவுக்கு வரக்கூடிய கோபத்தை நான் அப்போது அறிஞ்சு இருந்தன்.

எனக்கு யாழில இருக்கும் தூயாவைவிட வலைப்பூவில இருக்கிற தூயாவை அதிகம் பிடிக்கும் எண்டு சொல்லலாம். நான் தூயாவின் வலைப்பூவில பின்னூட்டல்கள் போடுவது இல்லை எண்டாலும் இடைக்கிடை போய் பார்க்கிறது என்ன நடக்கிது எண்டு. கந்தப்பு மாதிரி தூயாவிண்ட தமிழ்பற்றும், தாயகப்போராட்டம் மீது இருக்கிற நம்பிக்கை, ஆதரவும் பாராட்டுக்குரியது.

தூயாவில எனக்கு பிடிச்ச விசயம் எண்டால் சமையல்தான். தூயாவுடன் தற்போது சேர்ந்து இருக்கும் பெற்றோர், அண்ணாமார் கொடுத்து வைத்தவர்கள். தூயாவின் வருங்கால துணையும், குழந்தைகளும் கொடுத்து வைத்தவர்கள் (கோவிக்க்கூடாது கனக்க கதைக்கிறன் எண்டு). ஏன் எண்டால் வீட்டில இருந்து Restaurant மாதிரி விதம், விதமாக சாப்பிடலாம். தூயாபற்றி தனிப்பட அதிகம் தெரியாது. வளமுடன் வாழ வாழ்த்துகள்!

படிக்கும் போதே மகிழ்வாக இருந்தது.

வாழ்த்துகளுக்கும் நன்றிகள்.

உங்களுக்கும் எங்கள் அனைவரின் சார்பிலும் வாழ்த்துகள் :)

Link to comment
Share on other sites

யாழ்களத்தில் சிலகாலம் வந்து போனாலும் என்னையும் ஞாபகம் வைத்து தனது கருத்தை சொன்ன முரளிக்கு மிகவும் நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வல்வைசகாரா:

வல்வைசகாரா அக்காவோட ஒரு இடத்தில நான் முறுகுப்படவேண்டி வந்திட்டிது. அது என்ன எண்டால் நட்பு – காதல் சம்மந்தமான ஒரு கவிதை எண்டு நினைக்கிறன். பிறகு சபேசன் நண்பியிண்ட மார்பகத்தை உற்றுப்பார்க்கிறது ஏதோ கண்றாவி எண்டு ஏதோ சொல்லவெளிக்கிட்டு நடந்த வாதங்கள்.

சகாரா அக்காவோட நான் வாதம் செய்து கடைசியில எனது வாதத்தை வலுப்படுத்த நட்பு – காதல் – கலியாணம் எண்டு நான் இன்னொரு கவிதை எழுதவேண்டி வந்திட்டிது. பிறகு ஏதோ கோவத்திலதான் இயங்கு – முயங்கு – மயங்கு (வயதுவந்தவர்களுக்கு மட்டும்) எண்டு ஒரு கவிதையை யாழில போட்டு இருந்தா எண்டு நினைக்கிறன். இல்லாட்டிக்கு அதற்கு வேற என்னமும் காரணமோ தெரியாது. நான் அதில பிறகு ஏதோ கேள்வி கேட்க எனக்கு அதுபற்றி கதைக்க வயசுகாணாது எண்டு சொல்லி எண்ட வாயை அடக்கிபோட்டா. மிகவும் திறமைபடைச்ச ஒரு கவிஞர் சகாரா அக்கா.

ஒருமுறை நேசக்கரம் சம்மந்தமா தனிமடலுக்கால கதைக்கேக்க... என்ன யாழில எல்லா இடமும் உங்கட அட்டகாசமா இருக்கிது. மடலில ஒண்டும் தெரியாத அச்சாபாப்பா மாதிரி அடக்கமா பதில்போடுறீங்கள் எண்டு கேட்டு ஒருபோடு போட்டு இருந்தா. எனக்கு அதை வாசிக்க சரியான சிரிப்பாய் இருந்திச்சிது.

சகாரா அக்காவுடன் எனக்கு தனிப்பட பழக்கம் இல்லை. தொடர்ந்து பலப்பல கவிதைகளை படைக்க வாழ்த்துகள்!

நன்றி முரளி உங்கள் பதிவிற்கு,

ஓரிடத்தில் சரியாகத்தான் புரிந்து கொண்டிருக்கிறீர்கள். "தயங்கு, இயங்கு, முயங்கு, மயங்கு" என்ற கவிதையை மிகவும் கோபத்துடன்தான் எழுதினேன். காரணம் கவர்ச்சிக்கு எல்லாவிடத்திலும் கிடைக்கிற முதல் மரியாதையால் மனம் வெந்தபோது தாயக விடுதலையை நேசிக்கும் படைப்பாளிகளாலும் கவர்ச்சியின், காமக்கிளர்ச்சியின் உச்சத்தையும் எழுத முடியும் என்று நிரூபிப்பதற்காகவே அக்கவிதையைப் படைத்தேன். மற்றப்படி யார்மேலும் தனிப்பட்ட கோபம் கிடையாது. இப்போது கூட சபேசனுடன் கருத்தாடிய "நட்பு" கவிதையின் திரியை வாசித்து முறுவலிக்கிறேன். :)

Link to comment
Share on other sites

முரளி சார்... நன்னிங்கங்க,,இன்ட சேரி பயலை கூட கவுரச்சீங்கங்க..நன்னா கதெ எழுதறனா?...ரம்ப புழுகமாக இருக்குங்க...முரளி சார், இன்னோரு தபா டாங்ஸ்ங்க :)

Link to comment
Share on other sites

ரசிகை:

யாழில எனக்கு முதன்முதலாக தனிமடல் மூலம் எனது கவிதைபற்றிய விமர்சனம் சொல்லி எனது எழுத்துக்களை ஊக்குவிச்ச ஆளாக

ரசிகையை சொல்லலாம். ரசிகை புதுமைகளை விரும்புபவர், முற்போக்கான சிந்தனைகளை ஆதரிப்பவர் எண்டு நினைக்கிறன்.

நான் ஆண்களும் ஒரு காலத்தில குழந்தைகள் பெற்றுக்கொள்ள விஞ்ஞான வசதிகள் கிடைக்கும் என்றுகூறி ஆரம்பிச்ச ஒரு கருத்தாடலை

பலர் நையாண்டி செய்தவேளையில நான் மனம்கோணிப்போய் இருந்தவேளையில எனது சிந்தனையை ஆதரிச்சு ஒரு ஆக்கபூர்வமான

கருத்து பதிந்து இருந்தா. நான் யாழில இணைவதற்கு முன்னர் நிறையவிவாதங்கள் எல்லாம் செய்து இருக்கிறா. இப்போது வருவது குறைந்துவிட்டிது.

ரசிகையின் வாழ்க்கைத்துணை மணிவாசகன் ஒரு சிறந்த கவிஞர். தனிப்பட இவர்களை எனக்கு தெரியாது. ஆனாலும் விரைவில இவர்களை

சந்திக்க சந்தர்ப்பம் கிடைக்கலாம் எண்டு நினைக்கிறன். மணிவாசகனும் ரசிகையும் சிவபெருமானும், உமாதேவியாருமாக வளமுடன் வாழ வாழ்த்துகள்!

ஆகா முரளி என்க்கு ஞாபகமே இல்லை. நீங்கள் எல்லாத்தையும் ஞாபகம் வச்சு இருக்கிறியள்.

நல்ல ஞாபக சக்தி உங்களுக்கு. யுனில இருந்து படிக்கிற படிக்கிற என்டு ஒழுங்கா படிச்சமோ

இல்லையோ 5 நிமிடத்துக்கு ஒரு தடவை யாழுக்கு வந்து போறதுதான் வேலை. அப்ப நிறைய

எழுதுவம் ஒரு பதிவுக்கும் கருத்து எழுதாமல் விடுற இல்லை. எல்லாரோடையும் கதைக்கிறது

பதில் எழுதுறது. முந்தி நிறையப்பேர் பெண்கள் இருந்தார்கள். மாறி மாறி ஒருவரை கடிக்கிற

எண்டு நல்ல பம்பலா போச்சு. இப்ப எல்லாரும் வேலை மற்ற பொறுப்புக்கள் என்டு பிஸி

ஆகிட்டினம் போல வாறது குறைச்சுட்டினம். நானும்தான். அது ஒரு காலம் மறக்க ஏலாது.

என்னையும் ஞாபகம் வைச்சு என்னைப் பற்றியும் நினைவு கூர்ந்தமைக்கு நன்றிகள்

Link to comment
Share on other sites

வினித்:

விரும்பியோ விரும்பாமலோ விஜய் படம்பார்க்கேக்க, பாடல்கேட்கேக்க தனது நினைவையும் எண்ட மனதில கொண்டுவாற மாதிரி செய்துபோட்டார் தண்ட அவாட்டரில விஜயிண்ட படம் போட்டு.

அஜீவன் அண்ணா சம்மந்தமான ஒரு கருத்தாடலில என்னுடன் மல்லுக்கட்டியவர். ஊர்ப்புதினம் பகுதியில அண்மையிலயும் ஏதோ முறுகுப்பட்டார். ஆனால்.. ஒட்டுமொத்தமாக பார்க்கேக்க.. நாங்கள் இருவரும் ஊர்ப்புதினம் பகுதியில கும்மாளம் போட்டு இருக்கிறம் எண்டு சொல்லவேணும்.

எனக்கு சிரிப்பை ஏற்படுத்துற ஒரு விசயம்.. யாழுக்கு வருகின்ற ஆக்களிண்ட நாடித்துடிப்பை பரிசோதிச்சு பார்க்க கிளிநொச்சியுக்க ஆமி இறங்கீட்டிது எண்டு ஏதோ பொய்யான ஒரு தகவலை வினித் ஊர்ப்புதினம் பகுதியில போட்டது. உடன எல்லாரும் Alert ஆகி ஒவ்வொருவிதமான அபிப்பிராயங்கள் சொல்ல... விசயம் முத்தி எல்லாரும் முட்டாள் ஆகுமுன்னம் விழிப்படைஞ்ச நிருவாகம் அந்த தலைப்பை நீக்கிவிட்டிது.

தனிப்பட வினித் எனக்கு பழக்கம் இல்லை. மகிழ்வுடன் வாழ வாழ்த்துகள்!

நீண்ட காலத்துக்கு அப்புறம் யாழில் விரும்பி படிக்க ஆரவமாக இரு பதிவு உங்களால் எனக்கு கிடைத்து..

முன்பு டன் னால் நகைச்சுவையாக அனைவரையும் நினைவில் வைத்து எழுதுவார்

தற்போது உங்கள் இந்த பதிவு வாசிக்கும் போது சிறப்பாக இருக்கிறது நன்றி முரளி...

நீங்கள் தான் கலைஞனா?

ஆகா முரளி என்க்கு ஞாபகமே இல்லை. நீங்கள் எல்லாத்தையும் ஞாபகம் வச்சு இருக்கிறியள்.

நல்ல ஞாபக சக்தி உங்களுக்கு. யுனில இருந்து படிக்கிற படிக்கிற என்டு ஒழுங்கா படிச்சமோ

இல்லையோ 5 நிமிடத்துக்கு ஒரு தடவை யாழுக்கு வந்து போறதுதான் வேலை. அப்ப நிறைய

எழுதுவம் ஒரு பதிவுக்கும் கருத்து எழுதாமல் விடுற இல்லை. எல்லாரோடையும் கதைக்கிறது

பதில் எழுதுறது. முந்தி நிறையப்பேர் பெண்கள் இருந்தார்கள். மாறி மாறி ஒருவரை கடிக்கிற

எண்டு நல்ல பம்பலா போச்சு. இப்ப எல்லாரும் வேலை மற்ற பொறுப்புக்கள் என்டு பிஸி

ஆகிட்டினம் போல வாறது குறைச்சுட்டினம். நானும்தான். அது ஒரு காலம் மறக்க ஏலாது.

என்னையும் ஞாபகம் வைச்சு என்னைப் பற்றியும் நினைவு கூர்ந்தமைக்கு நன்றிகள்

மேல முரளி கருத்து சொன்னதுக்கும் நீங்கள் யுனி(ய)னில படிக்கிறதுக்கு என்ன சமந்தம்?

நினைவில் வைத்து எழுதினதுக்கு நன்றி சொல்லுறது என்றால் சொல்லுங்க யுனில படிச்சனான் யூனியனில படிச்சனான் என்று தற்பெருமை விடாதிங்கள்

:)

இதை வாசிக்கும் போது தேவயானி ரிவி பேட்டியின் போது எனது கனவர் என்னை விட படிக்காதவர் தான் ஆனால் நல்லவர் என்று சொல்லுவது போல :lol: இருக்கு .........

Link to comment
Share on other sites

நன்றி முரளி உங்கள் நேரத்துக்கு. நீண்டதொரு கள உறுப்பினர் பால் உள்ள அபிப்பிராய கோவையை பார்வையிட முடிந்தது. பேச்சு தமிழும் எழுத்து தமிழும் கலந்து எழுதியது சுவாரசியமாக இருந்தது. சம்பவங்கள் அனைத்தையும் நினைவில் வைத்து எழுதியது பிரமிக்க வைத்தது. நான் பொதுவாக யாழில் அதிகம் எழுதாதது என்னவோ உண்மைதான்.என்றாலும் காலக்கணிப்பில் எனது எழுத்தை நீங்கள் பார்த்திருப்பீர்கள் என நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் முரளி

ஒவ்வொருவர் பற்றிய உங்கள் எண்ணப் பரிமாற்றம் என்னை வியக்க வைத்தது. எனது கவிதைகளைப் படிக்கும்போது பறவைகள் இசைபாடுறமாதிரி என்று எழுதியிருந்ததைப் படித்தபோது என் மனதுக்குள் மத்தாப்பூ. எனக்கு கிரீடம் அணிவித்த உங்களுக்காக இன்னுமொருமுறை பறவைகள் இசைபாடட்டும்.

யாழோடு இணைந்திட்ட நல்லதொரு தோழமையின்

தோளோடு உறவாடும் தோழருக்கு வாழ்த்துரைத்து

சீரோடு சிறப்போடு சிந்தனையில் வனப்போடு

நேராக நிமிர்ந்திடுவோம் நெஞ்சத்தில் உரமோடு

கார்கால மேகங்கள் சூழ்ந்திட்ட மார்கழியில்

களிப்போடுஒன்றிப்போம்நட்பும

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் காவலூர் கண்மணி , தோழருக்கு உரைத்த அழகு தமிழ் கவியில் நானும் நனைந்தேன். நீண்ட நாட்களுக்கு பின்

உங்கள் கவி காண கிடைத்ததில் மகிழ்ச்சி .என்று உங்கள் கவி மழை தொடரவேண்டும். அதில் நாம் நனைய வேண்டும். .

Link to comment
Share on other sites

யாழில வெட்கப்படாமல் விரசமாக எழுதக்கூடிய ஆக்கள் சிலர். டங்குவார் எழுதுவார். ஆனால் இடைக்கிடை தனக்கு மட்டறுத்துனர்களை நினைக்க பயமாய் இருக்கிது எண்டு சொல்லுவார்.

யோவ் மாப்பிளை.. இது அபாண்டம்..! நான் எழுதினது விரசம் இல்லை. கவி நயம். நம்மட கண்ண‌தாசன் போல. ஹீ..ஹீ.. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

**உப்பிட்டவரை உள்ளளவும் நினை" என்றொரு பழமொழி இருக்கு!! நீங்கள் உங்களை எப்போதும் மறவாத வண்ணம் உப்பளத்தையே இந்தக்களத்தில் உறவினர்களுக்கு தூவிவிட்டிருக்கீங்கள் முரளி.

அறிவும், தெளிவும் தொலைநோக்குப்பார்வையும் ஒரே இடத்தில் ஒருவரிடத்தில் அமைவது குறைவு. ஆனால் மூன்றும் உங்களிடத்தில் சிறந்து மிளிர்வதை கதைத்த பொழுதுகளில் களமாடிய*(போர்க்களம் என்று நினைக்ககூடாது) யாழ்களம் தான்) பொழுதுகளில் உணர்ந்திருக்கின்றேன்.

பல்வேறு வகைப்பட்ட வித்தியாசமான சிந்தனைகளினூடே நீங்கள் படைக்கும் ஆக்கம் விழி உயர்த்தி பார்க்க வைத்திருக்கின்றது(ஆச்சரியம்+

அதிசயமாய் பார்க்கிறது)...

தங்களின் இலட்சியப்பாதையில் வெகு சிரத்தையோடு முன்னேறி இலக்கினை எட்ட நல்லதொரு நட்புத்தோழியாக வாழ்த்துகள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.