Jump to content

பாலை குறுந்தகடு = வ.ஐ.ச.ஜெயபாலன் New Message


Recommended Posts

இனித் தமிழர் அடிமையென தலை பணிவதில்லை என்ற பாடலை உங்களோடு சேர்ந்து பாடவேண்டுமென்று எனது மனம் விரும்புகிறது. பாலை இசை குறுந்தகட்டில் மிகவும் பிரபலமான 10வது படல் அது. வாசுகியுடன் சேர்ந்து பாலை இசை தட்டு வெளியிட்டு 8 மாதங்கள் ஆகிவிட்டது. திரும்பிப் பார்க்கிறபோது பாலையாகிப்போன காலங்கள் வயிற்றினுள் பாம்புபோல நெழிகிறது. பழம்கனவாய்ப்போன இனத்தின் வாழ்வும் பாலையாகிவிட்டது. தனிப்பட என்னை அமுக்கிய பாலை கடன் சுமையை அடைக்க திரைத் துறைக்கு போக நேர்ந்ததது. என்னினும் 1996ல் ஆரம்பித்தது போலவே, ஜெயசுக்குறு தருணத்தில் தீவிரப் பட்டதுபோல எனது ஆய்வுப் பணிகளும் அறிக்கைகளும் தொடர்ந்தன. ஏனோ முன்போலலாமல் என் தோழர்கள் கேட்க்கவிம் பார்க்கவும் தவறிவிட்டனர். தைமாதமே தீப்பற்றிய புல்வெளியாய் என் தயகம் சாம்பல்மேடாகப் போவதை முன்னுணர்ந்து பாடுகமனமே http://www.yarl.com/forum3/index.php?showtopic=53138 கவிதையை எழுதினேன். மேற்படி கவிதை கலங்காதே தாய்மண்ணே என்ற தலைப்பில் இவ்வாரக் குமுதத்தில் வெளிவந்துள்ளது.

எனக்கு வாய்த்த ஒரே ஒரு புரவலரான எனது மனைவி வாசுகியும் தென் இந்திய பாடகர் அனந்துவும் பாடல்களைப் பாடி உள்ளனர். வாசுகியின் பேட்டியை பின்வரும் தளத்தில் கேட்கலாம்: http://www.radio.ajeevan.com/

நமது வாழ்வையும் போராட்டத்தையும் அதன் வரலாற்றுக் காவியத் தன்மை கெடாமல் எழுதுவதையே எனக்கு எங்சியுள்ள பணியாகக் காண்கிறேன். கடன்கள் அடைத்ததும் கலங்காதே தாய்மண்ணே என போராளிகளுக்கு அஞ்சலியும் அவர்களது கனவுகளுக்குக் கட்டியமுமாக இசைப் பேழை ஒன்று தயாரிக்கும் கனவு உள்ளது.

பாடலைக் கேட்பதற்க்கு இங்கே நெருடுங்கள்:

. http://voiceofthf.blogspot.com/2008_03_01_archive.html

அன்புடன்

வ.ஐ.ச.ஜெயபாலன் கவிஞன்

visjayapalan@gmail.com

004722162235

அன்புடன்

.ஜெயபாலன்

Postbanken, Norway.

Shanmugampillai Jayapalan

Bank Account number. 0532 51 18328

Payment from abroad,

use the IBAN number : NO 6105325118328,

My paypal is : visjayapalan@gmail.com

பாடல்களை தரவேற்றம் செய்துகொள்ளுங்கள்

http://voiceofthf.blogspot.com/2008_03_01_archive.html

தயாரிப்பு வாசுகி ஜெயபாலன் + ஜெயபிரகாஸ் எரீம்

Link to comment
Share on other sites

பாலை குறுந்தகடு = வ.ஐ.ச.ஜெயபாலன்

அன்புக்குரிகுரிய யாழ்க்கள கவிதை ஆர்வலர்களுக்கு. கடந்த 4ம் திகதி சென்னைப் பல்கலைக் களகத் தமிழ் இலக்கிய துறையினரால் என்னுடைய பாலை குறுந்தகடு வெளியிடப் பட்டது. குறுந்தகட்டை பாலுமகேந்திரா வெளியிட்டுவைத்தார். பாடல்கள்பற்றியும் வாசுகியின் குரல் வளம்பற்றியும் பலுமஹேந்திராவும் கவிஞர் மேத்தாவும் கவிஞர் நா முத்துக்குமாருவும் சென்னைப் பல்கலைக்க் களக் தமிழ் இலக்கியத் துறைத் தலைவர் டாக்டர் வி அரசுவும் பேசினார்கள். இசை இன்னும் இளமையாக இருந்திருக்கலாம் என்று சிலர் கருத்துரைத்தார்கள். இந்த தயரிப்புக்கு இந்தியப் பணம் 150000 ஒன்றரை இலட்சம் ருபா செலவாகிற்று. ஆனந்த விகடனில் பாலை விமர்சனக் குறிப்பு இடம்பெற்றுள்ளது. குறுந்தகட்டை யாழ் களம ஊடாக என்னரும் ஈழத்து மக்களுக்குச் சமர்ப்பிக்கிறதில் நானும் வாசுகியும் மகிழ்ச்சி அடைகிறோம். பாடல்கள் பிடித்து வசதியும் இருந்தால் மட்டும் உங்கள் அன்பளிப்பை எனது வங்கிக் கணக்கிற்க்கு அனுப்புங்கள் நன்றி.

Link to comment
Share on other sites

பாடல் - 1

புலரும் வேளையில் யன்னல் ஓரமாய்

கவிதை பாடுகின்ற தாரோ

பூக்கள் சிந்திடும் முல்லைப் பந்தரில்

பாக்கள் சூடுகின்றதாரோ - குயிலே

துயரம் தீயெனச் சுட்டபோதிலும்

சுடரும் பொன் உந்தன் வாழ்வு

பொழுது புலர்ந்தது எழுக கவிஞனே

என்று பாடுகின்றதாரோ - குயிலே

வசந்தம் உன்னிடம் சொன்ன சேதிகள்

எனக்கு சொல்லலாகாதா

கசந்த போர்க்களம் நாண மானிடம்

சேர்ந்து பாடக் கூடாதா - குயிலே

பாடல் - 2

கண்ணம்மா இந்த பனிகொட்டும் இரவினிலே

இலையற்ற தனிமரமாய் உன்னையே நினைத்திருந்தேன்

என்று உன் பூவிரல்கள் தீண்டிடுமோ என்று

ஏங்கிடும் வீணையைப் போல் துயருறுதே நெஞ்சம்

பூத்திடும் கனவினில் கானகங்கள் என்றும்

புலர்ந்திடும் வசந்தத்தின் கற்பனைகள்

தேற்றும் உன் காதலில் பாரதியின்

சிந்துகள் பாடிடும் ராத்திரிகள்

பாடல் -3

வெண்பனி மீது பொன்மலர் சூடும்

செங்கதிரோனை வாழ்த்துகிறோம்

கண்பனி சூடி எம் நினைவோடு

ஏங்கும் எம் தேசத்தை வாழ்த்துகிறோம்

பொங்கல் வாழ்த்துக்கள் தோழர்களே

பொங்கல் வாழ்த்துக்கள் தோழியரே

பனை நிழல் வீழும் முற்றத்தில் நின்று

பாசத்தில் வாடும் நெஞ்சங்களே

பனியையும் மீறி பசுமையில் நிமிரும்

பைன்மரம் போன்ற சிங்கங்களே

பொங்கல் வாழ்த்துக்கள் தோழர்களே

பொங்கல் வாழ்த்துக்கள் தோழியரே

பூமியில் என்றும் அகதிகள் என்று

புழுதி மண் போல சுழலுவதோ

தாயகம் மீண்டு துயர்களை வென்று

தலைநிமிர்ந்தே நாம் வாழுவதோ

பொங்கல் வாழ்த்துக்கள் தோழர்களே

பொங்கல் வாழ்த்துக்கள் தோழியரே

பாடல் - 4

மேலை அணைகளிலே கிழிந்து

மெலிந்த காவேரியாய்

ஏழைக் கவிமனசு ஒடிய

உன்மத்தம் கொண்டதென்ன

ஈழக்கரைகளிலே நலிந்து

ஏங்கிடும் அகதிகள் போல

வாழத்துடிக்குதடி நெஞ்சு வா

எனும் மந்திரச் சொல் கேட்டு

கண்ணில் மனசு உதிர உனது

காதலில் நான் எரிந்தேன்

உன்னில் உயிர் படர அதனை

உரித்துரித்தே எறிந்தாய்

ஐம்புல சிப்பியுள்ளே தைத்து

அறுத்திடும் விழிச்சுடரே

செம்புலப்பெயல் நீராய் நாங்கள்

சேர்ந்திடல் தர்மமடி

பாடல் - 5

வெண்பனி கொட்டும் காலையில் நாங்கள்

பள்ளிக்குப் போகையிலே

சின்னமுயல் என் அருகினில் வந்து ஹாய்

என்று சொல்லியது

ஹாய் ஹாய் ஹாய் ஹாய்

சின்ன முயலே சின்ன முயலே

பள்ளிக்கு போகலையா

முயல்களின் பள்ளி புல்வெளி தானே

உனக்கிது தெரியலையா

ஐயையோ புரியலையா

புல்வெளி எங்கும் வெண்பனி போர்வை

சாப்பிட ஏதும் இல்லை

அம்மா தந்த ரொட்டியில் பாதி

தந்திட தடையும் இல்லை

எமக்கினி கவலை இல்லை

பாடல் - 6

மாரி மழைக்கரத்தால்

பாய் விரிச்ச பச்சைப்புல்லு

பச்சைப்புல்லு சூடிக்கொண்டு

பவுசு காட்டும் வண்ணப்பூவு

சிட்டாகப் பறந்து வந்து

சிந்து பாடத் துடிக்குதடி

நீ எட்டாது போன பின்பும்

உன்னை நெஞ்சு நினைக்குதடி

கூதலாம் குழவிக் கூடு

குலைந்து போன வாடைக்காலம்

காதலாம் தங்கத் தோணி

கவிழ்ந்து போன வாழ்க்கைக் கோலம்

வண்டாகப் பறந்து வந்து

மலர்ச் சோலை நடுவினிலே

உன்னை எண்ணி உபவாசம்

இருக்கிறதே இன்பம் கண்ணே

நாளை ஒரு நாளையிலே

நடை வரம்பில் கோல மயில்

ஏழை என்னைக் காணக் கூடும்

இதயம் கொஞ்சம் நோகக் கூடும்

யார் மீதும் குற்றம் இல்லை

கோபம் கொள்ள ஞாயமில்லை

ஆலாய் விழுது விட்டு

அறுகாக வேர் பரப்பி

மூங்கிலாய்த் தோப்பாகி

வாழ வேண்டும் எந்தன் கண்ணே

பாடல் - 7

பொன்னாய் உருகும் மாலையிலே - முடி

புனைந்து அரசாளும் சூரியனே

தென்றல் காற்றின் மோகனமாய் - ஒரு

சிறு குயில் அழைப்பது கேட்கலையா

வானவில் கிண்ணத்தில் மது ஏந்தும் -இள

வாசமலர்களின் கனவுகளோ

வண்ணங்களாலே விண் திரையில் - நீ

வார்க்கிறதெல்லாம் கவிதைகளோ

பாடல் - 8

பயிரோ மழைக்கேங்கும் -கொடும்

பாலையோ நதியிடம் யாசிக்கும்

ஏழையின் காவியங்கள்

உயிர்த்திட உன்னிடம் கையேந்தும்

உயிரினில் இனித்திடவும்

உருக்கிடும் துயரெல்லாம்

அன்பே காதலால்

கருகிடவும்

யாழினை எடுத்தேனடா கண்ணா கண்ணா

இனி நதியென பெருகட்டும்

கவிதை என்றாய்

என் வாழ்க்கையின் தவப்பயனே -சொன்ன

மந்திர வார்த்தைகள் மறந்தனையோ

வானுக்குள் மதிபோல - அந்த

மதியினுள் சுடரும் செங்கதிர்போல

உன் யாழுக்குள் தேன்போல

என் ஊனுக்குள் உயிரானாய்

உள்ளத்தில் ஒளிர்கின்ற கவியானாய்

வீணுக்குள் தள்ளுவையோ - என்னை

விளக்கெனத்தூண்டி நீ அருளுவையோ

பாடல் -9

கள்ளெனக் கொட்டுதடி வள்ளி

கால வெளியினில் போதைநிலா

அள்ளுது வா வா என

அழைத்திடும் பூங்குயில் கவிமனசை

வாழ்வென்னும் இனிப்பையெல்லாம் அள்ளி

வார்க்குதே வசந்தத்தின் தேன் இரவு

மூழுதே மேனி எங்கும் தாபமாம்

இன்ப வேள்வியின் மோகனத்தீ

நினைவென்னும் நெருஞ்சி முள் பாலையிலே

நில்லென்று சொல்லி நீ போனதெங்கே

துணை வரும் நிலவுக்கே தெரியுமடி

என் நெஞ்சத்தில் நீயன்றி யாருமில்லை

பாடல் - 10

இனித் தமிழர் அடிமையென தலைபணிதல் இல்லை

இனித் தமிழர் கோழைகளின் வழிதொடர்தல் இல்லை

இனித் தமிழர் மானுடத்தின் விடுதலை என்றெழுந்தார்

இனித் தமிழர் உலகத்தின் விலங்குகளும் தகர்ப்பார்

சிங்களமே ஏன் எமது மண்மீது வந்தாய் - நீ

சிந்தாத செங்குருதி ஏன் சிந்துகின்றாய்

பண்டாரவன்னியன் படை நடந்த காடு

பணியாது ஒரு போதும் ஈழவர் எம் நாடு

ஜாதி மத பேதமின்றி

செந்தமிழர் கூடி

நீதி நெறியோடு என்றும்

வெற்றி வாகை சூடி

பாங்கொலிக்கும் பள்ளி

பாடும் கோவில் மணிகள்

மங்களமாய் எங்களது

மண்ணில் வாழ்வு எழுக

சிங்களமே ஏன் எமது மண்மீது வந்தாய் - நீ

சிந்தாத செங்குருதி ஏன் சிந்துகின்றாய்

பண்டாரவன்னியன் படை நடந்த காடு

பணியாது ஒரு போதும் ஈழவர் எம் நாடு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவிஞரே,

சில பாடல்களை இராஜ் இராஜரட்ணம் அவர்களின் குரலில் கேட்ட ஞாபகம்.

அப்படி ஏற்கனவே இவை(ஒரு சில) ஆண் குரலில் வெளிவந்தவையா?

Link to comment
Share on other sites

கவிஞரே,

சில பாடல்களை இராஜ் இராஜரட்ணம் அவர்களின் குரலில் கேட்ட ஞாபகம்.

அப்படி ஏற்கனவே இவை(ஒரு சில) ஆண் குரலில் வெளிவந்தவையா?

நன்றி பிரபா, கண்ணம்மா பாடல் இராஜ் இராஜரட்ணம் பாட கேட்டிருப்பீர்கள். உணர்வு சிந்தும் அவருடைய குரலை மறக்கமுடியுமா? இந்த தொகுப்பு வாசுகி சென்னையின் நின்ற கடைசி ஒருவாரத்தில் அவசரம் அவசரமாக எங்கள் திருமண 21ம் வருட நினைவாக உருவாக்கியது. குறுந்தட்டை வெளியிட்ட சென்னைப் பல்கலைக் களக தமிழ் இலக்கியத்துறை அரங்கில் வாசுகி என்னை 21 வருடங்கள் வத்திருப்பதன் நினைவாக என்று குறிப்பிட்டேன். உண்மை அதுதானே.

யாழ்க்கள நண்பர்கள் யாரும் word ஊனிக்கோட்டில் எழுதக்கூடிய எழுத்துரு font அனுப்பி உதவமுடியுமா.

Link to comment
Share on other sites

பாலை இசைத் தொகுப்பின் குறுந்தககட்டுப் பிரதி வேண்டுகிறவர்கள்மின்னஞ்சல்ம

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் கவிதைத்தொகுப்பு வாசித்தேன். நன்றாக இருக்கின்றது.பாடலுடன் மலர்ந்த கவிதை இலகுநடையில் யாரும் புரிந்து கொள்ளும் தக்கனவாக அமைந்திருப்பது சிறப்பைத்தருகிறது.

உன் யாழுக்குள் தேன்போல

என் ஊனுக்குள் உயிரானாய்

உள்ளத்தில் ஒளிர்கின்ற கவியானாய்

வீணுக்குள் தள்ளுவையோ - என்னை

விளக்கெனத்தூண்டி நீ அருளுவையோ

மாரி மழைக்கரத்தால்

பாய் விரிச்ச பச்சைப்புல்லு

பச்சைப்புல்லு சூடிக்கொண்டு

பவுசு காட்டும் வண்ணப்பூவு

சிட்டாகப் பறந்து வந்து

சிந்து பாடத் துடிக்குதடி

நீ எட்டாது போன பின்பும்

உன்னை நெஞ்சு நினைக்குதடி

அழகான வரிகள்.

வாழ்த்துகள்......

வீணுக்குள் தள்ளுவையோ - என்னை

விளக்கெனத்தூண்டி நீ அருளுவையோ

Link to comment
Share on other sites

உங்கள் கவிதைத்தொகுப்பு வாசித்தேன். நன்றாக இருக்கின்றது.பாடலுடன் மலர்ந்த கவிதை இலகுநடையில் யாரும் புரிந்து கொள்ளும் தக்கனவாக அமைந்திருப்பது சிறப்பைத்தருகிறது.

உன் யாழுக்குள் தேன்போல

என் ஊனுக்குள் உயிரானாய்

உள்ளத்தில் ஒளிர்கின்ற கவியானாய்

வீணுக்குள் தள்ளுவையோ - என்னை

விளக்கெனத்தூண்டி நீ அருளுவையோ

மாரி மழைக்கரத்தால்

பாய் விரிச்ச பச்சைப்புல்லு

பச்சைப்புல்லு சூடிக்கொண்டு

பவுசு காட்டும் வண்ணப்பூவு

சிட்டாகப் பறந்து வந்து

சிந்து பாடத் துடிக்குதடி

நீ எட்டாது போன பின்பும்

உன்னை நெஞ்சு நினைக்குதடி

அழகான வரிகள்.

வாழ்த்துகள்......

வீணுக்குள் தள்ளுவையோ - என்னை

விளக்கெனத்தூண்டி நீ அருளுவையோ

வணக்கம் கறுப்பி,

வணிக கலைஞர்களை மட்டுமே பேணுகிற இலங்கைத் தமிழர் மத்தியில் உங்களைப் போன்ற ஒரிருவர் இருப்பது மகிழ்ச்சி தருகிறது. வணிக வட்டத்துக்கு வெளியில் வாழும் கலைஞர்களின் செல்வாக்கு தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. நம்மவர் நிலை அதுவல்ல. என் இசைத் தொகுப்புப் பற்றி இரண்டு கருத்துக்கள் மட்டுமே எழுதப் பட்டாலும் அவை எனக்கு மிகவும் முக்கியமான கருத்துக்கள். உலகம் முழுவதும் கப்பல்களில் சுற்றினாலும் தங்கள் பாலையில் தங்கள் பாலையுடனேயே அரேபியர்கள் வாழ்ந்தார்கள் என் மனசும் அத்தகையதுதான். கலச்சாரப் பாலைதான். ஆனாலும் என்னுடைய பாலை.

Link to comment
Share on other sites

முரண்பாடுகளுன் நாம் வாழ்ந்தாலும் கவிதைவரிகளிற்கு நான் அடிமை. ஆழ்ந்த அனுபவம் வரிகளில் தெறிக்கின்றது. இசை பாடலை விழுங்கும் காலத்தில் பாடல் வரிகள் தெளிவாக செவிவழியே நுழைவது அருமை. . வாழ்த்துக்கள் கவிஞரே. . தற்போதைய இளைய சமுதாயத்தை கவர்வாதாயின் அவர்களிற்கு ஏற்ற வகையிலும் சில பாடல்களை நீங்கள் வெளியிட்டால் நன்று . .

கலைக்கு நான் என்றுமே அடிமை. . தாங்கள் நோர்வே வரும் சமயத்தில் தொடர்புகொள்ளுங்கள் தங்களுடைய இறுவட்டை நான் பெற்றுக்கொள்கின்றேன். . கலைக்கு விலை இல்லை. . கவிஞர்களிற்கும்தான் . . தொடரட்டும் உங்கள் பணி. . .

Link to comment
Share on other sites

நன்றி பரணி.

முரண்பாடுகள் எல்லம் பனிச் சுவர்கள்தனே. கூதிர்காலத்தில் மலைபோல வழி மறிக்கும். வசந்ததில் உருகிக் காணாமல் போய்விடும் இல்லையா. நோர்வேயில் வாழும் உங்களுக்கு இதெல்லாம் நான் சொல்லியா தெரிய வேண்டும்.

Link to comment
Share on other sites

முதற்கண் அனைத்து கலைஞர்களுக்கும் வாழ்த்துகள்

நல்லதொரு முயற்சி.

பாடல்களை கேட்டேன்.

நன்றாக இருக்கிறது

இனியும் காலம் கடந்துவிடலாகாது எனும்

ஆதங்கத்தோடு

ஒலி வட்டுகளை அக்கா அனுப்பியிருந்தார்.

எம்மால் முடிந்ததை செய்கிறோம்.

செய்த பின் என்ன செய்தோம் என பார்ப்போம்.

தூக்க முடிந்தது துரும்பாக இருந்தாலும்

அதை செய்யுங்கள்....

அது பலன் தரும்.

நன்றி

Link to comment
Share on other sites

வணக்கம் ஜெயபாலன் ; பாடலை எழுதியவனிற்கே விளங்காமல் இசை என்கிற பெயரில் இரைச்சல்கள் விழுங்கிக் கொண்டு இசைக்கு பின்னணியாக பாடல் என்கிற காலத்தில் . மீழ்கலவை என்று(றீ மிக்ஸ்) பல பழைய பாடல்களில் வெட்டி ஒட்டி. பிச்சைக்காரனின் சட்டையைப்போல இருக்கின்ற இன்றை பாடல்களில் உங்கள் முயற்சி நன்றாக இருக்கிறது. உங்களிற்குத்தான் பல தரப்பட்ட துறைகளிலும் ஆட்களைத்தெரியுமே. எனவே யாரவது இறுவட்டு வெளியீட்டாளர் ஒருவருடன் ஒப்பந்தம் போட்டு உங்கள் பாடல்களை வெளியிட்டால் உங்களிற்கும் தொடர்ச்சியாக இப்படியான முயற்சிகளிற்கு பணம் கிடைக்குமே. எனவே முயற்சித்துப்பாருங்கள் நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் கவிஞரே.

உங்களுடைய பாடல்கள் மிகவும் பிடித்திருக்கிறது. மனதை வசீகரிக்கும் மெல்லிசை. இலக்கியச் சுவைஞர்களுக்கு நல்ல விருந்தாகவும், படைப்பாளிகளுக்கு வழிகாட்டியாக அமையப்போகிறது என்பதில் எச்சந்தேகமும் இல்லை. கவிஞரே, உங்களுடைய இப்படைப்பை இறுவட்டாக கனடாவில் பெற்றுக் கொள்ள முடியுமா? அறியத் தாருங்கள்.

இங்கு பாராட்டப்படவேண்டியவர்கள் கவிஞர் மட்டுமல்ல, இசைஞர்களும், இசையமைப்பாளரும்.

சின்னக்குரலில் வெண்பனி கொட்டும் காலையிலே.. என்று ஆரம்பிக்கும் போது தொலைந்துபோன கடந்த காலங்கள் கண்ணெதிரே துள்ளி வருகிறது.... உறவுகளே பாடல்களைக் கேட்டுப்பாருங்கள். பிரமித்துப் போவீர்கள்.

வாழ்த்துகள் கவிஞரே.

நம்மவர் படைப்புகள் எல்லைகளின்றி விரியும்போது மனதிற்குள் மத்தாப்பூச் சிரிக்கிறது. நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் கவிஞரே .தொடரட்டும் உங்கள் பணி

Link to comment
Share on other sites

கவிஞருக்கு வாழ்த்துகள்.

ippathan Chennai vanthen. malai pathil ezuthukiRen.

My Teliphone : 00919941484253

Link to comment
Share on other sites

கவிஞரே, உங்களுடைய இப்படைப்பை இறுவட்டாக கனடாவில் பெற்றுக் கொள்ள முடியுமா? அறியத் தாருங்கள். valvaizagara

தோழர்கள் அஜீவன், சாத்திரி, வல்வைசாகரா, புத்தன், கந்தப்பு, ஈசன் அனைவருக்கும் என் அன்பான நன்றிகள். உங்கள் கருத்துக்கள் மகிழ்ச்சி தருகிறது. ஈசன் உங்களைப் பற்றி ஞாபகப் படுத்தி எழுதுங்கள்.

தோழமைமிக்க வல்வை சாகராவுக்கு, நலம். கனடாவிலோ வேறு மேற்க்கு நாடுகளிலோ எனக்கு வர்தகர் தொடர்பு கிடைக்காது. ஆர்வமுள்ள வர்த்தகர்கள் யாரும் தொடர்புகொள்ளவில்லை. பணம்தீர்ந்துவிட்டதால் அதிகம் பிரதிகள் போட இயலவில்லை. வர்த்தகம் தெரிந்தவனுமல்ல. பணம் அனுப்பும் ஆர்வலர்களுக்குப் பிரதி எடுத்து அனுப்ப ஏற்பாடுள்ளது. பல்வேறு இணைய வாயில்களூடாக சில ஆயிரம்பேருக்கு என் இசைத்தொகுப்புச் சேர்ந்திருப்பது மகிழ்ச்சி. அதுதான் என் முதல் எதிர்பார்ப்பும்.

இந்த இணையத்தில் வெளியிடும் முயற்ச்சியின் ஆரம்பத்தில் ஒரு யாழ்க் கள தோழர் ஒருவர் இறக்கம்செய்து கேட்டுவிட்டு பணம் அனுப்ப தமிழர்கள் யாரும் முன்வரமாட்டார்கள் என்று சொன்னார். நான் வணிகக் கவிஞன் அல்ல. வாசுகிக்கும் எனக்கும் முதல் விருப்பு பாடல்கள் இசைத் தமிழை வேட்பவர்களுக்குக் கிட்ட வேண்டும் என்பதுதான். நண்பரிடம் ஒரு 5% லிருந்து 10% பேர் குறுந்தகடு வாங்க முன்வரக்கூடும் என்று சொன்னேன். இன்றுவரை அப்படி யாருமே முன்வரவில்லை என்றாலும் இசைத்தொகுப்பு பலரைச் சேர்ந்திருப்பது மகிழ்ச்சியே.

கூழ் குடித்துக்கொண்டிருந்த கிரேக்க ஞானி டஜோஜீனசை (பெயர் சரியென நம்புகிறேன்) பார்த்து அவரது நண்பர் கவலைப் பட்டாராம். நீ அரசவைக்குச் சென்றால் அலக்சாண்டர் புகழ்பாடினால் இப்படிக் கூழ் குடிக்க வேண்டியதில்லையே என்று அந்த நண்பன் அறிவுரை கூறினாராம். சிரித்தபடியே டயோஜீனஸ் சொன்ன என் மனம் கவர்ந்த பதில் இதுதான். "நண்பரே கூழ்குடிக்கப் பழகிவிட்டால் அரசர் புகழ்பாட வேண்டியதில்லை" இருக்கவே இருக்கிறது கூழ். ஆனாலும் கடன்வாங்கி இன்னுமொரு இசைத் தொகுப்பு என்கிற விசப் பரீட்சையில் இறங்கமுடியாது என்கிற கவலை நிரந்தரமானதுதான்.

அன்புடன்

ஜெயபாலன்

Link to comment
Share on other sites

Poet,

Australian $ 100 உங்கள் A \ C இற்கு அனுப்பி வைக்க இருக்கிறேன். It will take two working days to set up my Internet banking for international telegraphic transfer. அதன் பின்பே அனுப்பிவைப்பேன். இது எறக்குறைய உங்கள் செலவின் 2.5%.

கிடைத்தவுடன் அறியத்தாருங்கள்.

songs are very pleasant. good luck with your endeavour. :rolleyes:

நல்வாழ்த்துக்கள் ஈசன். உங்கள் முகவரியை ஈமெயிலில் அனுப்பிவையுங்கள் குறும்தகட்டுப் பிரதி அனுப்பிவைப்பேன். இதுதான் இணையத்தில்

பாலை இசைத் தொகுபிற்ககுக் கிடைத்த முதல் கரிசனையாகும். காட்டாறு நாவலை எழுதி முடிக்க எனக்கு உதவவென்று வாசுகி வைத்திருந்த பணத்தை இசைத் தொகுப்புள் முடக்ககிவிட்டாள். இது என் பணிகலை முடக்கியிருந்தது. இசைத்தொகுப்புமீதான உங்கலைப்போன்றவர்கள் காட்டும் கரிசனை உண்மையில் வேண்டிய ஆய்வுகளோடு காட்டாறு நாவலை எழுதிமுடிப்பதையும் என்பணிகளைத் தொடர்வதையும் சாத்தியமாக்கும். உங்கள் மனைவி பிள்ளைகளுக்கும் என் நல்வாழ்த்தைச் சொல்லுங்கள்.

Link to comment
Share on other sites

யாழ்க்கள நண்பர்களுக்கு,

CD பதுகாப்பாக அஞ்சலில் அனுப்புவதற்க்கு கடைப்பிடிக்கவேண்டிய இலகுவான நடைமுறைகள் என்ன. உடையாத பிளாற்ரிக் சிடி கவரில் வைத்து அனுப்பினால் போதுமா. தயவுசெய்து அறியத்தாருங்கள்.

Link to comment
Share on other sites

யாழ்க்கள நண்பர்களுக்கு,

CD பதுகாப்பாக அஞ்சலில் அனுப்புவதற்க்கு கடைப்பிடிக்கவேண்டிய இலகுவான நடைமுறைகள் என்ன. உடையாத பிளாற்ரிக் சிடி கவரில் வைத்து அனுப்பினால் போதுமா. தயவுசெய்து அறியத்தாருங்கள்.

இனித் தமிழர் அடிமையென தலை பணிதல் இல்லை. என்கிற பாடல்பற்றி யாராவது எழுதுவீர்கள் என்று எதிர்பார்த்தேன். யாரும் ஒன்றும் குறிப்பிடவில்லையே. இந்திய நிலமையில் சென்னைப் பல்கலைக்களக இலக்கியபீடம் வெளியிட்ட இசைத்தொகுப்பில் இப்பாடல் இடம்பெற்றதும் இப்பாடலை வாசுகியும் அநந்தும் தியாகராஜனும் மேடையில் பாடியதும் மகிழ்ச்சி.

எனது சாதி ஒழிப்பு போராட்ட காலத்துத்துத் தோழன் புதுவை இரத்தின துரைக்கு 60 வயது ஆகிறவேழையில் ஈழத்து மண்ணும் வாழ்வும்பற்றிய ஒரு இசைத்தொகுதியை அவனுக்கு சமர்ப்பணமாக வெளியிடவும் விரும்பினேன். பாலை பொருளாதர ரீதியாக தோற்றுப்போனதால் எதுவும் சாத்தியமாகவில்லை. பாலை 1000 பேர் இறக்கம் செய்வார்கள் ஏறக்குறைய 50ல் இருந்து 100 கொள்வனவு செய்வார்களென மதிப்பிட்டேன். எனது இலக்கான 1000 எட்டப்பட்டாலும் இதுவரை ஒருவர் மட்டுமே கொள்வதாக முன்வந்திருக்கிறார். யாழ் நண்பர்கள் யாராவது புதுவையை வாழ்த்துவது தொடர்பாக முன்னெடுக்கும் செயல்பாடுகளில் நானும் சேர்ந்துகொள்ள முன்வருகிறேன்.

Link to comment
Share on other sites

அஞ்சலி உரை. பாலை இசைத்தொகுப்பு

............... இனி நின் ஊர்க்

கடிமரம் வருத்தத் தந்துயாம் பிணித்த

நெடுநல் யானை எம் பரிசில்.

கடுமான் தோன்றல்! செல்வல் யானே.

- சங்கப் புலவர் பெரும்சித்திரனார்.

புறம் 162

நான் யாழில் எனது குறுந்தகட்டை வெளியிட்டதையும் பின்விழைவுகலையும் அறிந்த இந்திந்தியத் தமிழரான பிரபல கலை விமர்சகரும் இசை ஆர்வலருமான நண்பர் எழுதிய கடிததில் இருந்து.ஒரு பகுதி.

"அன்பின் ஜெயபாலன்:

கவிஞர்கள் என்றால் வெகுளிகளாகத்தான் இருக்க வேண்டுமென்ற நியாயமா? இவ்வளவு

கஷ்டப்பட்டு ஒரு அழகான, தரமான இசைப்பேழை கொண்டு வந்துவிட்டு அதை அப்படியே

வலைத்தானம் செய்துவிட்டீர்கள்! வாழ்த்துவதா? வருந்துவதா என்று

தெரியவில்லை."

அவரதும் ஏனைய நண்பர்களதும் வசவு உண்மைதான், எதிர்பார்த்ததுபோல 1000 மேல் நேரடியாக தரவிறக்கம் செய்தபோதும் விலை தருவதாக ஒரே ஒரு வாக்குறுதி மட்டுமே வந்தது. நான் குறைந்தது 5% ஆர்வலர்களையாவது எதிர்பார்த்தேன். இணையத்தில் போட்டதால் வினியோகஸ்தர்களும் பின்வாங்கிவிட்டனர். எதிர்காலத்தில் எனது வழியைப் முனைகிறவர்கள் மேலுள்ள கடிதத்தை ஒருமுறை வாசிக்கவும்.

இப்பொழுது புலம் பெயர்ந்த இந்திய தமிழர்களின் தளம் ஒன்று கேட்டிருக்கிறது. பார்ப்போம். பொதுவாக இலங்கைத் தமிழர்கள் தமிழக வணிகக் கலைஞர்களைத் தவிர்த்து, இலங்கைக் கலஞர்களின் உழைப்பையும் முதலீடுகளையும் மதித்ததில்லை. கலைசார்ந்த தாழ்வு மனப்பாண்மை எங்கள் இனத்துவ முழுமையின் ஆழுமையின் ஒரு பிரச்சினைதான். சர்வதேச அரங்கில் முன்னணியில் இருக்கும் இலங்கைத் தமிழ்க் கலைஞர்கள் அனைவருமே தமிழகத்தவர்களாலோ அல்லது அயல் நாட்டவர்களாலோ கண்டுகொள்ளப் பட்டவர்கள்தான் என்கிற உண்மையும் சுடுகிறது. எனினும் இது நானே எடுத்த முடிவு. இனி யாரையும் குறை கூற முடியாது.

இத்துடன் இந்த விவாதங்களைப் புறந்தள்ளிவிட்டு சங்கப் புலவன் பெருஞ்சித்திரனாரைப் போல "செல்வல் யானே" என விட்டு விலகிச் செல்கிறேன்.

வ.ஐ.ச.ஜெயபாலன்

Link to comment
Share on other sites

Dear poet,

Since i had viral infection last few days could not go out. Only today i got my internet banking enabled for TT.

I was trying to send the money i promised.

unfortunately, they need your bank address. Can you please provide the details. thanks.

-Esan

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.