Jump to content

தை 1 தான் தமிழ்ப் புத்தாண்டு

Vasampu

Recommended Posts

தைப்பொங்கல் உழவர் திருநாள். சித்திரைப் புத்தாண்டுதான் புதுவருடம். நெடுக்காலபோவான் கூறியது போல, சித்திரை வருடப் பிறப்பை தமிழ்நாட்டில் யாருமே கொண்டாடுவது இல்லை. ஆரியரின் திருநாளான தீபாவளியைத் தான் மிகவும் சிறப்பாகக் கொண்டாடுவார்கள். அதற்கடுத்தது தைப்பொங்கல். அங்கு விவசாயிகள் அதிகம் என்பதால்தான் அதுவும் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால் தீபாவளியைப் போல் சிறப்பாகக் கொண்டாடுவதில்லை. தாயகத்தில் நாம் சிறப்பாகக் கொண்டாடுவது பொங்கலையும் தீபாவளியையும் தான். இந்நாட்களில், நாம் மாமிசங்கள் உண்பதில்லை. ஆனால், தீபாவளிக்கு மாமிசம்தான் செய்வோம்.

எமது திருநாட்கள் தாயக சூழ்நிலைக்கேற்ப உருவாக்கப்பட்டன. அவற்றை தாயகத்தில்தான் சரியாகக் கடைப்பிடிக்க முடியும். புலம்பெயர் நாடுகளில், தாயகத்தில் செய்வது போன்று செய்ய முடியாது. சூழ்நிலைக்கேற்ப நாம்தான் மாற்றிச் செய்ய வேண்டும்.

Link to comment
Share on other sites

  • Replies 95
  • Created
  • Last Reply

தமிழும், தமிழ் புத்தாண்டும் திரு.கருணாநிதியின் பரம்பரை சொத்து அல்ல! கனிமொழியின் பாட்டன் வீட்டு சொத்தும் அல்ல. தமிழக வாழ் தமிழர்களின் தனிப்பட்ட சொத்தும் அல்ல!

தமிழர்கள் என்போர் இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, தென்னாபிரிக்கா, ஐரோப்பா, அமெரிக்கா, அவுஸ்திரேலியா என உலகம் முழுவதும் பரந்து வாழும் இனம். தமிழர்களின் புத்தாண்டை தை முதல் நாளுக்கு மாற்றும் முடிவு எடுக்கு முன்பு மேற்கூறிய நாடுகளில் வாழும் தமிழர்களின் பிரதிநிதிகள், அறிஞர் பெருமக்களோடு கலந்து பேசி தான் எடுக்கப்பட்டதா? இல்லை இணையத்தின் மூலமாவது உலகத்தமிழர்களின் கருத்துக்களை அறிய தமிழக அரசு முயற்சி செய்ததா? (அண்மையில் உலக அதிசயங்களை தீர்மானிக்க இணைய வாக்கெடுப்பு நடந்ததே. அது போல் ஏதாவது!) எதுவும் இல்லை!

தமிழகத்தின் ஆட்சி கையில் இருக்கிறது என்ற அகங்காரத்தில் தான்தோன்றித்தனமாக திரு.கருணாநிதியின் ஆட்சி எடுக்கும் முடிவின் விளைவு எதுவாக இருக்கும்? தமிழகத்தில் தி.மு.க சார்பான தமிழர்கள் தைப்பொங்கல் தினத்தன்று தமிழ் புத்தாண்டை கொண்டாட, மற்றவர்கள் சித்திரை பிறப்பன்று புத்தாண்டை கொண்டாட. வெளிநாடுகளில் உள்ள தமிழர்கள் சிலர் தையில் புத்தாண்டை கொண்டாட, இன்னும் சிலர் சித்திரையில் கொண்டாட, தமிழர்களுக்கிடையில் ஏலவே உள்ள பிரிவுகள் போதாதென்று புதிதாக இன்னும் ஒரு பிளவை ஏற்படுத்தும். அவ்வளவு தான்! .

தமிழனின் புத்தாண்டை மாற்றுங்கள் என்று இப்போது யார் அழுதார்கள்? இப்படி தமிழை விற்றே இன்னும் எத்தனை நாளைக்கு பிழைப்பு நடத்த உத்தேசம்? இதுவா இப்போது தமிழர்களின் தலையாய பிரச்சினை?

கருணாநிதி அவர்களே உங்கள் பக்கத்து நாட்டில், தமிழன் தமிழினத்தையும் மொழியையும் காக்க உயிர் கொடுத்து போராடி கொண்டிருக்கிறான்! இயந்திரப் பறவைகள் போடும் குண்டு மழை முதியோர் என்றும் அறியாப்பிஞ்சுகள் என்றும் பாராமல் தமிழர் உயிரை தினமும் காவு கொள்கிறது, சிங்கள அரசு செய்யும் இந்த கொலைவெறி தாண்டவத்திற்கு நீங்கள் பங்காளியாக இருக்கும் இந்திய மத்திய அரசு ஆயுதமும் அளித்து, ஆசீர்வாதமும் அளித்துக் கொண்டிருக்கிறது. அதை தடுத்து நிறுத்த துப்பில்லாத உங்களை போன்ற முதுகெலும்பற்ற பேடிகள் தமிழகத்தின் தலைவனாக இருப்பது தமிழர்களின் சாபக்கேடு

உங்கள் பக்கத்துவீட்டில் தமிழன் இரத்தத்தால் குளித்துக் கொண்டிருக்க, தமிழ் புத்தாண்டு நாளை மாற்றுவது பற்றி நீங்கள் யோசித்துக் கொண்டிருக்கிறீர்கள். இதில் உலகத் தமிழனத் தலைவர் என்ற தம்பட்டம் வேறு. வாழ்க உங்கள் போலி பகுத்தறிவு! வாழ்க உங்கள் போலி தமிழினப் பற்று!! வாழ்க உங்கள் பெரிய குடும்பமும் பேரப்பிள்ளைகளும்!!!

உங்கள் அரசியல் விளையாட்டு புரியாமல் சில அப்பாவி ஈழத்தமிழர்கள் வேறு நீங்கள் புத்தாண்டை மாற்றி தமிழுக்கு ஏதோ புது வாழ்வு தரப் போவதாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

அப்படியே தமிழர் புத்தாண்டை மாற்றியே தீருவது என்றால்

இதோ நாம் தருகிறோம் ஒரு உயர்வான திகதி!

உலகத்தமிழர்கள் பெரும்பாலோர் உவகையுடன் ஒப்புக்கொள்ளக் கூடிய திகதி!

தமிழ் வீரம் செப்ப வந்த திகதி!

நல்ல செயல் மறவர் போற்றுகின்ற திகதி!

கார்த்திகை (November) 27

திரு கருணாநிதி அவர்களே தமிழ் இரத்தம் உங்கள் உடம்பில் ஓடுவதாக நீங்கள் கூறுவது உண்மையென்றால் கார்த்திகை (November) 27 ஐ தமிழ் புத்தாண்டாக அறிவித்து விடுங்கள். அது உலகத்தமிழர்கள் அனைவரையும் ஒரே இலட்சியத்தின் கீழ் ஒன்றுபடுத்தும்

Link to comment
Share on other sites

வெற்றிவேல்!

உங்களுக்கு என்ன நடந்தது? நவம்பர் 27 மாவீரர்களை நினைவு கூரும் ஒரு உணர்வுபூர்வமான நாள். அதைப் புத்தாண்டாக அறிவித்து வெடி கொளுத்தி கொண்டாடச் சொல்கிறீர்ளா?

புலம்பெயர் நாடுகளில் நடக்கும் மாவீரர் தினக் "கொண்டாட்டங்களுக்கு" போனதால் உங்களுக்கு இந்தத் தடுமாற்றம் ஏற்பட்டு விட்டது என்று நினைக்கின்றேன்.

நெடுக்காலபோவான் பொங்கல் என்பது மகரசங்கராந்திதான் என்று அடம்பிடிக்கிறார்.

மகர சங்கராந்தி என்பது வட இந்தியாவில் உள்ளவர்கள் கொண்டாடும் ஒரு தினம். சூரியன் அன்றைக்குத்தான் மகர ராசியை கடப்பதாக அவர்கள் தவறாக நம்பி, அந்த நாளைக் கொண்டாடுகிறார்கள்.

மகர சங்கராந்தி அன்றைக்கு இறப்பவர்கள் நேரே சுவர்க்க லோகம் போவார்களாம். பாரதப் போரில் பீஸ்மர் அம்புகளால் தைக்கப்பட்டு கிழே விழுந்தும், தன்னுடைய உயிரைப் பிடித்துக் கொண்டு இந்த நாளுக்குத்தான் காத்திருந்தாராம்.

மகர சங்கராந்தி அன்றைக்கு வட இந்தியர்கள் செய்கின்ற முக்கிய காரியம் கங்கை, யமுனை போன்ற தலங்களில் நீராடுவது. பல ஆயிரக் கணக்கான பேர் சேர்ந்து நீராடுவார்கள். இதனால் தமது முன்னோர்கள் சொர்க்கம் சேர்வார்கள் என்றும், தாமும் சொர்க்கத்திற்கு போகலாம் என்று நம்புகிறார்கள்.

இதன் பிறகு சூரிய தேவன், விஸ்ணு போன்ற கடவுள்களுக்கு விசேட வழிபாடுகள் செய்வார்கள். இதற்காக சூரியத் தேவன் தன்னுடைய மனைவியோடும் பிள்ளை குட்டிகளோடும் அமர்ந்திருக்கின்ற சிலைகளையும் கோயில்களையும் நிறையக் கட்டியும் வைத்திருக்கிறார்கள்.

நெடுக்காலபோவான் பொங்கலை உழவர் திருநாள் என்று சொல்கிறார். அப்படிப் பார்த்தாலும் மகர சங்கராந்திக்கும் பொங்கலுக்கும் சம்பந்தம் இல்லை. மகர சங்கராந்தி உழவர் திருநாள் அல்ல.

மகர சங்கராந்தி கங்கை யமுனை போன்ற இடங்களில் நீராடுவதை முக்கிய நிகழ்வாக கொண்ட ஒரு விழா.

பொங்கலும், மகர சங்கராந்தியும் ஒரு நாள் இடைவெளியில் வருவதாகவும் சொல்கிறார்கள்.

ஏறக்குறைய ஒரே நேரத்தில் இந்த இரண்டு விழாக்களையும் கொண்டாடுவதால், இரண்டையும் ஒன்றாக்கி விடுவதற்கு இந்து வெறியர்கள் பல நாட்களாகவே முயன்று வருகின்றார்கள்.

இப்படித்தான் இவர்கள் முன்பு தீபாவளியையும் திணித்தார்கள். தமிழர்கள் விளக்கீடு கொண்டாடிய நாளில் கொண்டு வந்து தீபாவளியை புகுத்தினார்கள். இன்றைக்கு தமிழர்களிடம் தீபத் திருநாள் எது என்று கேட்டால், அவர்கள் சொல்லும் பதில் "தீபாவளி" என்பதுதான்.

அNது போன்று பொங்கலை இல்லாமல் செய்து "மகர சங்கராந்தியை" திணிக்கவும் சிலர் முயல்கிறார்கள். தமிழர்கள் விழிப்போடு இல்லாமல் போனால், விரைவில் பொங்கல் வாழ்த்து சொல்வது போய், மகர சங்கராந்தி வாழ்த்து சொல்லும் நிலை வரும்.

இப்பொழுதே சில பார்ப்பன ஏடுகள் பொங்கலின் போது "மகர சங்கராந்தி" வாழ்த்து சொல்கின்ற வேலையை செய்து வருகின்றன.

ஆகவே தமிழர்களே! கவனம்!

இந்தத் தமிழ் புத்தாண்டைப் பற்றிச் சொல்வது என்றால், சித்திரைப் புத்தாண்டா, தைத்திருநாளா தமிழர் புத்தாண்டு என்பது பற்றி நிறைய விவாதங்கள் இருக்கின்றன.

நிறைய இனங்கள் சித்திரையில் தமது புத்தாண்டை ஆரம்பிக்கின்றன. தமிழர்கள் சித்திரையில் தமது புத்தாண்டை கொண்டாடியிருக்கலாம் என்பதை நான் மறுக்கவில்லை.

இரு தரப்பும் வலுவான ஆதாரங்களை வைக்கின்றன.

இதிலே என்னுடைய விருப்பம் தைத்திருநாள் தமிழர் புத்தாண்டு ஆக வேண்டும் என்பதுதான்.

காரணம் தமிழர் புத்தாண்டு என்று சொல்லிக் கொண்டு வட மொழியில் அருவருப்பான பெயர்களோடு புத்தாண்டு பிறப்பது எனக்குக் கேவலமாகப் படுகிறது. இன்றைக்கு சித்திரைப் புத்தாண்டு இந்து ஆரிய மயப்படுத்தப்பட்டு விட்டது. இதை இனிமேல் தமிழர் புத்தாண்டு என்று சொல்ல முடியாது.

இதற்கு மாற்றாக முன்வைக்கப்படுகின்று தைத்திருநாள் சங்கராந்தி போன்று சூழ்ச்சிகளுக்கு மத்தியிலும் மதம் கடந்த தமிழர் திருநாளாக திகழ்கின்றது.

பல மதத்தவர்களை கொண்டு ஒரு இனத்தினுடைய புத்தாண்டு குறிப்பிட்ட ஒரு மதம் சார்ந்ததாக இருக்கக்கூடாது. ஆகவே தைத்திருநாளே புத்தாண்டாக கொண்டாடுவதற்கு ஏற்றது.

ஆனால் சில மதவெறியர்கள் இருக்கின்றார்கள். அவர்களுக்கு தமிழர்கள் கொண்டாடுகின்ற எல்லாமே இந்து மதத்தோடு சேர்ந்ததாக இருக்க வேண்டும். பூமிக்கும் பன்றிக்கும் பிள்ளை பிறந்த கதையும், கிருஸ்ணனும் நாரதரும் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டு 60 பிள்ளைகள் பிறந்த கதையும் இருக்க வேண்டும். இது எல்லாம் இருந்தால்தான் அவர்கள் விழாக்களை ஏற்றுக் கொள்வார்களாம்.

அப்படி இல்லாது ஒரு விழாவை தமிழர்கள் கொண்டாடினால் இவர்களுக்கு வயிற்றுக்குள் குடைகிறதாம்.

தமிழ் இனத்திற்கு என்று ஒரு விழாவைக் கூட விட்டு வைக்கக்கூடாது என்ற ஆரியச் சிந்தனையோடு சில தமிழர்களே இருப்பது தமிழினத்திற்கு பெரும் கேடு

Link to comment
Share on other sites

மூடநம்பிக்கை என்று எதை வரையறை செய்கின்றீர்கள் எனப் புரியவில்லை. கோலம்போட்டு, மாவிலை கட்டுவது மூடநம்பிக்கையா?

ஒரு அணிவகுப்பு என்பதை ஏன் முக்கியமானவர் வரும்போது செய்கின்றார்கள். பேசாமல் உள்ளுக்குக் கூட்டிக் கொண்டு போகலாம் தானே?? அதையும் உங்களின் பாணியில் மூடநம்பிக்கை என்பீர்களா?

தூயவன் மாவிலை கட்டுவதையோ, கோலம் போடுவதையோ, முற்றத்தில் பொங்குவதையோ மூட நம்பிக்கை எண்டு சொல்லவில்லை. 'முற்றத்தில் பொங்கினால் தமிழனின் பெருமை உயரும் எண்டு "நம்புவது" அதனையே மூடநம்பிக்கை என்று சொன்னேன்.

ஒரு விருந்தினருக்கு வரவேற்பின் போது அணிவகுப்பு மதிப்புக் கொடுப்பது அவரிற்கு மரியாதை செலுத்த. ஆனால் முற்றத்தில் பொங்கினால் "தமிழனின் பெருமை வளரும்" என்பது உழைத்த காசை கோயில் உண்டியலுக்குள் போட்டல் தனக்கு வசதி வாய்ப்புக்கள் வரும் எண்டு நம்புவதற்கு ஈடானது.

அது எப்படி சம்பிர்தாயம், அவசியம் எனக் கருதுகின்றோமோ, அவ்வாறே தைப்பொங்கலில் பொங்குவதும் சூரியனுக்குப் படைப்பதும் அவசியம். இல்லாவிட்டால் தைப் பொங்கல் இது தான் எனப் பிள்ளைகளுக்கு படத்தில் போட்டுக் காட்டிக் கொண்டாட வேண்டியது தான். எந்தச் செலவும் வராது.

மாவிலைத் தேரணம் கட்டி, கோலம் போட்டு பொங்குவதெல்லாம் கடும் குளிர் நிலவும் நாடுகளில் செய்ய முடியாது. ஆனால் தமிழரின் தாயகப் பகுதிகள் மற்றும் குளிரற்ற காலநிலையுள்ள குடியேற்ற நாடுகளில் வழக்கமான முறைப்படி செய்யுங்கள். "பொங்கல்" தாயகத்தில் முற்றத்தில் பொங்கினாலும் பொங்கல்தான் குளிர்வலய நாடுகளில் ஸ்ரொவ்வில் கொங்கினாலும் பொங்கல்தான்.

Link to comment
Share on other sites

சித்திரைப் புத்தாண்டு சித்திரைப் புத்தாண்டாகவே இருக்கட்டும்.

இங்கே கலைஞர் கூறுவது தமிழ்ப் புத்தாண்டைப் பற்றியது. தமிழ் நாட்காட்டியில் தை முதலாம் திகதி தைப் பொங்கல் வருகிறது. அது எல்லோருக்கும் பொதுவான சூரியனை வழிபட்டு தனது நிகழ்வை முன்னிறுத்துகிறது. ஆதியிலே மனிதன் இயற்கையைத்தான் வழிபட்டான். தமிழனும் இயற்கையை வழிபட்டான். அதனால் 'சைவர்' என அழைக்கப்பட்டதாகவும் கூறுகிறார்கள். (ஆதாரம் கேட்டாலும் தரமாட்டன்.. :lol: )

பிறப்பு என்பது ஒன்றிலிருந்துதானே ஆரம்பமாக வேண்டும். ஒரு குழந்தை பிறந்தால்.. அதன் வயது ஒன்று இரண்டு என்றுதானே ஆரம்பிக்கும். நாலு ஐந்து என்றா வரும்? இதேபோலத்தான்.. 4ம் மாதமான சித்திரையில் ஒரு புதிய வருடம் எவ்வாறு பிறக்க முடியும்? சிலவேளை சித்திரை தமிழ் வருடத்தின் முதலாவது மாதமா? அல்லது சித்திரை வருடமானது குறுக்கால, நெடுக்கால வாற வருடமா? :rolleyes:

அத்துடன் சித்திரை வருடச் சுழற்றி எனக் குறிப்பிடப்படும் 60 வருடங்களில் ஒரு வருடமாவது தமிழ் பெயரில் உள்ளதா? எல்லாமு புலம்பெயர் நாடுகளிலுள்ள பல தமிழ்க் குழந்தைகளின் பெயர்களைப்போல ஏதோ ஒரு விளங்கா மொழிப்பெயர்களைக் கொண்டிருக்கின்றன. ஆக, தமிழ் அல்லாத ஒரு வருடத்தை எவ்வாறு தமிழ் புத்தாண்டு என ஏற்றுக் கொள்ள முடியும்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனைய மதத்தினரும் இனத்தவரும் தங்களை பாதுகாக்கின்றனர்.தமிழனும் இந்துக்களும் தங்களை தாங்களே

அழித்துக்கொள்கின்றார்கள். எமக்கு பிற எதிரிகள் அவசியமில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புத்தாண்டு வரும்போது இப்படி ஒர் சர்ச்சை வந்து போகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புத்தாண்டு வரும்போது இப்படி ஒர் சர்ச்சை வந்து போகிறது.

ஏனேனில் எல்லாம் அரைகுறை :lol:

Link to comment
Share on other sites

எனைய மதத்தினரும் இனத்தவரும் தங்களை பாதுகாக்கின்றனர்.தமிழனும் இந்துக்களும் தங்களை தாங்களே அழித்துக்கொள்கின்றார்கள்.எம
Link to comment
Share on other sites

சித்திரைப் புத்தாண்டு சித்திரைப் புத்தாண்டாகவே இருக்கட்டும்.

இங்கே கலைஞர் கூறுவது தமிழ்ப் புத்தாண்டைப் பற்றியது. தமிழ் நாட்காட்டியில் தை முதலாம் திகதி தைப் பொங்கல் வருகிறது. அது எல்லோருக்கும் பொதுவான சூரியனை வழிபட்டு தனது நிகழ்வை முன்னிறுத்துகிறது. ஆதியிலே மனிதன் இயற்கையைத்தான் வழிபட்டான். தமிழனும் இயற்கையை வழிபட்டான். அதனால் 'சைவர்' என அழைக்கப்பட்டதாகவும் கூறுகிறார்கள். (ஆதாரம் கேட்டாலும் தரமாட்டன்.. :rolleyes: )

ஆதாரம் நீங்கள் தேடத்தேவையில்லை. ஆதாரம் பக்கம் பக்கமாக உங்கள் பதிலுக்கு வந்து குவியும் பயப்பிடாதையுங்கோ சோழியண்ணை. எதற்கும் அண்ணியிட்டை சொல்லி 2சுடுதண்ணிப்போத்தலில் கோப்பி போட்டு வைச்சிருங்கோ குறட்டை வராமல் முளிச்சிருந்து வாசிக்க. :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அத்துடன் சித்திரை வருடச் சுழற்றி எனக் குறிப்பிடப்படும் 60 வருடங்களில் ஒரு வருடமாவது தமிழ் பெயரில் உள்ளதா? எல்லாமு புலம்பெயர் நாடுகளிலுள்ள பல தமிழ்க் குழந்தைகளின் பெயர்களைப்போல ஏதோ ஒரு விளங்கா மொழிப்பெயர்களைக் கொண்டிருக்கின்றன. ஆக, தமிழ் அல்லாத ஒரு வருடத்தை எவ்வாறு தமிழ் புத்தாண்டு என ஏற்றுக் கொள்ள முடியும்?

ஆண்டுகள் மாதங்கள் வாரங்கள் நாள் மணித்தியாலம் நிமிடம் எல்லாவற்றையும் வரையறுத்தவன் மனிதனே. இவை காலத்துக்குக் காலம் பிரதேசத்துக்குப் பிரதேசம் மக்களுக்கு மக்கள் பல வடிவங்களில் இருந்து வந்த இதற்கான வரையறைகள் பெரும்பாலானவை மறைந்து... இன்று உலகில் மக்கள் அனைவருக்கும் பொதுவான அலகுகள் தீர்மானிக்கப்பட்டுள்ளன.

அந்த வகையில் ஜனவரி 1 தான் உலகெங்கும் கால அடிப்படையில் புதிய ஆண்டின் ஆரம்பமாகக் கொள்ளப்படுகிறது. அதையே கொண்டாடிட்டுப் போகட்டன். பிறகுதெற்கு.. உழவர் பண்டிக்கை என்ற பொங்கலுக்க இன்னொரு செருகல்..!

உலகில் இன்று பெளதீக அளவீடுகளில் மீற்றர்.. கிலோ மீற்றர் கிராம், கிலோ கிராம்.. செக்கன்.. என்பன பொதுவாக உள்ள அடிப்படைக் கணியங்களின் அலகுகள்..(பிரித்தானியாவில் இன்னும் தங்களின் பழைய அளவீடுகளை சிறிதளவில் பாவனையில் வைத்துள்ளனர். காரணம் அவர்கள் தங்களின் பாரம்பரியத்தை நவீனத்துவத்தோடு கலந்தடிச்சு இழக்க விரும்பவில்லை. நவீனத்துவம் வளர்க்கப்படும் அதேவேளை பாரம்பரியத்தையும் முற்றாக புறக்கணிக்காமல் இயன்றளவு தேவைக்கு ஏற்ப காக்க விளைகின்றனர்) அதை உலகம் பூரா ஏற்றுக் கொள்கிறோம். அதேபோல் கால அடிப்படையில் ஜனவரி 1 ஐயே புத்தாண்டாய் கொண்டாடட்டும் உலக மக்கள் அனைவரும். தமிழர்களும் உலக மக்களின் ஓர் அங்கம் தானே. அதற்காக தமிழர்கள் தங்கள் தனித்துவ அடையாளங்களை இழக்கனும் என்றில்லை..!

தைப் பொங்கலை வழமை போல தமிழர்களின் உழவர் பெருநாளாகக் கொண்டாடப்படட்டும். சித்திரைப் புத்தாண்டை இளவேனிற் காலக் புதுவருடக் கொண்டாட்டமாகக் கொண்டாட்டும். சித்திரைப் புத்தாண்டு தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் மட்டும் தான் என்று அமைகின்ற படியால்.. அது உலக அரங்கில் பெரிய செல்வாக்குச் செய்யப் போவதில்லை. அதே போல் தான் சித்திரைப் புத்தாண்டை தைப் பொங்கலுக்கு நகர்த்துவன் மூலமும் அதன் முக்கியத்துவத்தை உலக அரங்குக் கொண்டு வர முடியாது. இல்லை உலகை கேட்க முடியாது தைப் பொங்கலையே உலக புதிய ஆண்டு தினமாகக் கருதச் சொல்லி.

இந்த மாற்றம் ஓர் அநாவசியமான அரசியல் விளம்பரத்துக்கான நகர்வே அன்றி.. உருப்படியா எதையும் செய்ய உதவப் போவதில்லை. வீணான குழப்பங்கள் தான் மக்கள் மத்தியில் விதைக்கப்படும். எனவே இந்த மாற்றங்கள் மீது கவனம் செலுத்துவதைத் தவிர்த்து விட்டு.. பொங்கலுக்கு பொங்கல்.. பொங்கற் பரிசாக... மாவட்டம் தோறும் ஆயிரம் இளைஞர்களுக்கு புதிதாய் வேலை வாய்ப்புக் கொடுக்க வேண்டும் என்று சட்டம் இயற்றச் சொல்லுவது உபயோகமானதாக இருக்கும்..! :rolleyes::lol:

Link to comment
Share on other sites

“ தைப்பொங்கல் தினமேஇ தமிழ்ப் புத்தாண்டுத் தினமாகும்!”

ஆக்கம்: சபேசன் - மெல்பேர்ண் - அவுஸ்திரேலியா

தமிழரின் தேசியத் திருநாளான தைப்பொங்கல் நாள் குறித்துப் பல கருத்துக்களை, வரலாற்று வழியாகவும், வாழ்வியல் வழியாகவும், பண்பாட்டு வழியாகவும், ‘பண்டைய காலக் கணக்கு முறை’ வழியாகவும் முன் வைத்துத் தர்;க்கிப்பதுவே இந்தக் கட்டுரையின் நோக்கமாகும். தமிழீழத்திலும், தமிழ் நாட்டிலும் மட்டுமன்றி, உலகளாவிய வகையில் இன்று புலம் பெயர்ந்திட்ட தமிழ் மக்களும் தைப்பொங்கல் திருநாளைக் கொண்டாடுகின்ற இக் காலகட்டத்தில் இவ்வகையான தர்க்கங்கள் பல ஆக்கபூர்வமான சிந்தனைகளைக் கிளர்ந்தெழச் செய்து அவற்றைச் செயற்பட வைப்பதற்கும் உதவக் கூடும்!

“பொங்கல்” என்கின்ற பழந்தமிழ்ச் சொல்லுக்கு உரிய அர்த்தங்கள்தான் என்ன?

பொங்குகை, பெருங்கோபம், மிளகு-சீரகம்-உப்பு-நெய், முதலியன கலந்து இட்ட அன்னம், உயர்ச்சி, பருமை, மிகுதி, கள், கிளர்தல், சமைத்தல், பொலிதல் என்று பல பொருட்களைத் தமிழ் மொழியகராதியும், தமிழ்ப் பேரகராதியும் தருகி;ன்றன. அத்தோடு இன்னுமொரு பொருளும் தரப்படுகின்றது.

‘சூரியன் மகரராசியில் பிரவேசிக்கும் நாளான தை மாத முதற்தேதியன்று சூரியனை வழிபட்டுப் பொங்கல் நிவேதனம் செய்யும் திருவிழா’-என்ற பொருளும், பொங்கல் என்ற சொல்லுக்குத் தரப்பட்டுள்ளது. இந்தப் பொருளுக்கு உள்ளே, பல முக்கியமான விடயங்கள் பொதிந்திருப்பதை நாம் காணக் கூடியதாக உள்ளது.

அதாவது பொங்கல் திருவிழா என்பது தமிழ் மக்கள் வாழ்வில் வரலாற்று ரீதியாக, ஒரு பண்பாட்டு அங்கமாக, அவர்களது வாழ்வியலில் திகழுகின்ற திருவிழாவாக இருந்து வந்துள்ளது என்பது புலனாகின்றது. அத்தோடு பண்டைத் தமிழர்கள் இயற்கையின் காலக்கணக்கைக் கணித்து, சரியாக எந்த நாளில் தைத்திருநாளைக் கொண்டாட வேண்டும் என்பதையும் அறிந்திருந்தார்கள் என்பதையும் நாம் அறியக் கூடியதாக உள்ளது.

இதனைச் சற்று ஆழமாகக் கவனிப்போம்.

பண்டைத் தமிழன் இயற்கையை வணங்கி, இயற்கையோடு ஒன்றிணைந்து வாழ முனைந்தவன் ஆவான்! தன்னுடைய வாழ்க்கைக் காலத்தில் வித்தியாசமான காலப்பருவங்கள் தோன்றுவதையும் அவை மீண்டும் மீண்டும் தொடர்ந்து வருவதையும் தமிழன் அவதானித்தான். ஒரு குறிப்பிட்ட காலச் சேர்வையில், மழை, வெயில், குளிர், பனி, தென்றல், வாடை, ஆகியவை மாறி மாறித் தோன்றி, தமிழனின் வாழ்வை ஆண்டு வந்ததால் இந்தக் காலச் சேர்வையைத் தமிழன் ‘ஆண்டு’ என்று அழைத்தான் - என்று அறிஞர் வெங்கட்ராமன் என்பார் கூறுவார்.

தமிழகத்தில் வானியலில் தேர்ச்சி பெற்ற அறிஞர்களை ‘அறிவர், பணி, கணியன்’ -என அழைத்தார்கள். மூவகைக் காலமும் நெறியினாற்றும் ‘அறிவர்கள்’ குறித்துத் தொல்காப்பியர் குறிப்பிடுகின்றார். அரசர்களுடைய அவைகளில் ‘பெருங் கணியர்கள்’ இருந்ததாகச் சிலப்பதிகாரமும் குறிப்பிடுகின்றது. தொல்காப்பியத்திலும், சங்க நூல்களிலும் தென்படுகின்ற வானியற் செய்திகள் முழுமையாக உருப்பெற்றமைக்குப் பல ஆயிரம் ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கும் என்பதில் ஐயமில்லை. அத்தோடு ஆரியர்களது ஊடுருவலுக்கு முன்னரேயே தமிழர்கள் வானியலில் பெரிய அளவில் முன்னேறி இருந்தனர் என்று பல் நாட்டு அறிஞர்களும் கூறியுள்ளார்கள். மேல்நாட்டு அறிஞரான சிலேட்டர் என்பவர் ‘தமிழருடைய வானநூற் கணித முறையே வழக்கில் உள்ள எல்லாக் கணிதங்களிலும் நிதானமானது’ என்று குறிப்பிட்டுள்ளார். தமிழகத்துப் பரதவர்கள் திங்களின் நிலையைக் கொண்டு சந்திரமானக் காலத்தைக் கணித்தனர் என்றும், தமிழகத்து உழவர்கள் சூரியன், திங்கள் ஆகியவற்றின் இயக்கங்களையும் பருவங்களையும் மிகத் தெளிவாக அறிந்திருந்தனர் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. (யு ளுழஉயைட ர்ளைவழசல ழக வாந வுயஅடைள-Pயசவ 1)

தமிழர்கள் இயற்கையை ஆதாரமாகக் கொண்டு, காலத்தைப் பகுத்தார்கள். ஒரு நாளைக் கூட ஆறு சிறு பொழுதுகளாகத் தமிழர்கள் அன்றே பகுத்து வைத்தார்கள். ‘வைகறை, காலை, நண்பகல், ஏற்பாடு, மாலை, யாமம்’ என்று அவற்றை பகுத்து அழைத்தார்கள். அது மட்டுமல்ல, அந்த ஆறு சிறு பொழுதுகளின் தொகுப்பையும் அறுபது நாழிகைகளாகப் பகுத்துக் கணக்கிட்டார்கள். அதாவது ஒரு நாளில் ஆறு சிறுபொழுதுகள் உள்ளன. அந்த ஆறு சிறு பொழுதுகள் கழிவதற்கு அறுபது நாழிகைள் எடுக்கின்றன என்று தமிழர்கள் பண்டைக் காலத்தில் கணக்கிட்டார்கள். ஒரு நாழிகை என்பது தற்போதைய 24 நிமிடங்களைக் கொண்டதாகும்.

அதாவது பண்டைக் காலத்தமிழர்களது ஒரு நாட்பொழுதின் அறுபது நாழிகைகள் என்பன தற்போதைய கணக்கீடான 1440 நிமிடங்களோடு - அதாவது 24 மணித்தியாலங்களோடு - அச்சொட்டாகப் பொருந்துகின்றன. தமிழர்கள் ஒரு நாட் பொழுதை, தற்போதைய நவீன காலத்தையும் விட, அன்றே மிக நுட்பமாகக் கணித்து வைத்திருந்தார்கள் என்பதே உண்மையுமாகும்.

தைப்பொங்கல் தினத்தின் முக்கியத்துவத்தைக் காட்டுகின்ற தமிழர்களின் ஆண்டுப் பகுப்பை அடுத்துக் கவனிப்போம்.

பின்னாளில் வந்த ஆரியர்கள் ஓர் ஆண்டை நான்கு பருவங்களாக மட்டும்தான் வகுத்தார்கள். ஆனால் பண்டைக்காலத் தமிழர்களோ, தமக்குரிய ஆண்டை, அந்த ஆண்டுக்குரிய தமது வாழ்வை, ஆறு பருவங்களாக வகுத்திருந்தார்கள்.

1. இளவேனில் - ( தை-மாசி மாதங்களுக்குரியது)

2. முதுவேனில் - (பங்குனி - சித்திரை மாதங்களுக்குரியது)

3. கார் - (வைகாசி – ஆனி மாதங்களுக்குரியது)

4. கூதிர் - (ஆடி - ஆவணி மாதங்களுக்குரியது.)

5. முன்பனி – (புரட்டாசி – ஐப்பசி மாதங்களுக்குரியது)

6. பின்பனி – (கார்த்திகை - மார்கழி மாதங்களுக்குரியது)

(இதைத் தவிர, ஓர் ஆணின் வாழ்க்கைக் காலத்தை, ஒரு பெண்ணின் வாழ்க்கைக் காலத்தை, ஏன் ஒரு மலரின் வாழ்க்கைக் காலத்தைக் கூடத் தமிழன் பல காலத் தொகுதிகளாக வகுத்து வைத்துள்ளான் என்பதானது இன்னுமொரு தளத்திற்குரிய ஆய்வுக் கருத்துக்களாகும்!)

காலத்தை, அறுபது நாழிகைகைளாகவும், ஆறு சிறு பொழுதுகளாகவும், ஆறு பருவங்களாகவும் பகுத்த பண்டைத் தமிழன் தன்னுடைய புத்தாண்டு வாழ்வை இளவேனிற் காலத்தில்தான் தொடங்குகின்றான். இங்கே ஒரு மிக முக்கியமான விடயத்தை நேயர்கள் கருத்தில் கொள்ள வேண்டும்! பண்பாட்டுப் பெருமை கொண்ட மற்றைய பல இனத்தவர்களும், தங்களுடைய புத்தாண்டு வாழ்வை, தங்களுடைய இளவேனிற் காலங்களில்தான் ஆரம்பிக்கின்றார்கள். தமிழர்கள் மட்டுமல்ல, சீனர்களும், ஜப்பானியர்களும், கொரியர்களும், மஞ்சூரியர்களும் என, பல கோடி இன மக்கள் - தொன்மையான பண்பாட்டு வாழ்வினைக் கொண்ட பெருமை வாய்ந்த மக்கள்- தங்களுடைய இளவேனிற் காலத்தையே தமது புத்தாண்டாகக் கொண்டாடி வருகின்றார்கள்.

தமிழர்கள் மட்டுமல்ல, உலகத்தில் பலகோடி வேற்று இன மக்களும் தத்தமக்குரிய இளவேனிற் காலத்தையே புத்தாண்டாக கொண்டாடி வருவதாக குறிப்பிட்டிருந்தோம். உதாரணத்திற்காக (ஜ)யப்பானிய மக்களின் புத்தாண்டை, தமிழர்களின் புத்தாண்டான பொங்கல் திருநாளோடு ஒப்பிட்டுப் பார்ப்போம்.

தமிழர்-யப்பானிய பண்பாட்டு ஒற்றுமை நிலையை வெளிப்படுத்தும் நடைமுறையாகத் தைப்பொங்கல் விளங்குகிறது. யப்பானியர் தை 14ம் திகதி அன்று பழைய பயன்பாட்டுப் பொருட்களை எரிப்பார்கள். தமிழர்களும் அவ்வாறே செய்கின்றார்கள்.

தை 15ம் நாள் யப்பானியர்களும், தமிழர்கள் போன்று தோரணங்களைத் தொங்கவிட்டு புதுநீர் அள்ளி, பருப்புச் சேர்த்து சமைத்த பொங்கலைப் பரிமாறுகின்றார்கள். தமிழர்கள் பொங்கல் பானையில் பால் பொங்கும் போது ‘பொங்கலோ பொங்கல்’ என்று மகிழ்ச்சி ஆரவாரம் செய்வார்கள். அதே போல் யப்பானியர் தமது புத்தாண்டான தை 15ம் நாளில் குழுNமுயுசுயு - குழுNமுயுசுயு – என்று மகிழ்ச்சி ஆரவாரம் செய்வார்கள்.

தை 16ம் நாள் பணியாளர்களுக்குப் புத்தாடை வழங்கல், முன்னோர்க்குப் படையல் செய்தல், கலை நிகழ்ச்சிகளை நிகழ்த்தல், மாடுகளுக்கு உணவளித்தல் போன்ற காரியங்களைத் தமிழர்கள் செய்வது போலவே யப்பானியர்களும் செய்கிறார்கள்.

பருப்புத் தவிடு பொங்க - பொங்க

அரிசித் தவிடு பொங்க - பொங்க

-என்ற கருத்துப்படப் பாடப்படும் யப்பானிய வாய் மொழிப் பாடலில் ‘பொங்க-பொங்க’ என்ற சொற்களுக்கு யப்பானிய மொழியில் ‘HONGA-HONGA’ என்றே பாடுகிறார்கள்.

இடையில் தமிழன் மட்டும் மாறி விட்டான்! ஆளவந்த ஆரியர்களின் அடிமையாக மாறியது மட்டுமல்லாது, இன்றும் கூட ஆரியர்களின் பண்டிகைகளான சித்திரை வருடப்பிறப்பு, தீபாவளி போன்ற பண்டிகைகளை, தன் இனத்துப் பண்டிகைகளாக எண்ணி மயங்கிப் போய்க் கிடக்கின்றான்.

இவை குறித்து பேராசியரியர் க.பொ. இரத்தினம் அவர்கள் கீழ் வருமாறு அன்று கூறியிருந்தார்.

“சித்திரை வருடப்பிறப்பு” என்பது சாலிவாகனன் என்ற வடநாட்டு அரசனால் பின்னாளில் நிலைநாட்டப்பட்டது. இந்த அரசனுக்கு முன்னர் பல்லாயிரம் ஆண்டுகளாக நயத்தக்க நாகரிகத்துடன் வாழ்ந்த தமிழ் மக்கள் தம் நாட்டுப் பெருமகன் ஒருவனுடன் இணைந்த தொடர் ஆண்டை நிலை நாட்ட முயலாதது பெரும் விந்தையாக உள்ளது….. …….. (சித்திரை வருடப் பிறப்பை) வரவேற்று, (அதன் மூலம் ) தமிழினத்தின் பழமையையும், பண்பையும், சிறப்பையும், செல்வாக்கையும் (இன்றைய தமிழர்கள்) சிதைத்து வந்துள்ளமை பெரும் வெட்கத்திற்கு இடமானதாகவும் இருக்கின்றது. தமிழ் மக்களிடையே நிகழ்ந்த மானக்கேடான, நகைப்புக்கிடமான செயல் இது ஒன்று மட்டும்தானா? - தமிழ் மக்களின் கோவில்களிலே இன்று தமிழ் மொழியும், தமிழ் இசையும் ஒதுக்கப்பட்டுள்ளன. . .

- என்று பேராசிரியர் க.பொ. இரத்தினம் அவர்கள் மிகக் கடுமையாக விமர்சித்து இருந்தார்.

தமிழர்களின் தேசியத் திருநாளான தைப்பொங்கல் தினத்தை தமிழர்களுடைய பண்டைக் காலத்திலிருந்தே வரலாற்று வழியாகவும், வாழ்வியல் வழியாகவும்;, பண்பாட்டு வழியாகவும், வானியல் அறிவு வழியாகவும் தமிழர்கள் இனம் கண்டு அறிந்துணர்ந்து கொண்டாடி வந்துள்ளார்கள் என்பதையும் நாம் தர்க்கித்ததோடு, ஆரியர்கள் எம்மீது திணித்த சித்திரை வருடப் பிறப்பு குறித்தும் நாம் சில கருத்துக்களைத் தெரிவித்ததற்குக் காரணங்கள் உண்டு!

“தைப்பொங்கல் தினமான, தைத்திங்கள் முதல் நாள்தான் தமிழனுக்குரிய தமிழ்ப் புத்தாண்டுத் தினமாகும்!!”

பொங்கல் திருநாள்-தமிழ்ப் புத்தாண்டுத் திருநாள்-என்பதானது, சிலர் பிதற்றித் திரிவதுபோல் இந்துக்களின் விழா அல்ல! உண்மையில் இது, சமய சார்பற்ற, இயற்கை சார்ந்த, எல்லாத் தமிழர்களுக்கும் பொதுவான திருநாளாகும்! மற்றைய எல்லாத் திருநாட்களையும் எடுத்து ஒப்பிட்டுப் பார்த்தால் அங்கே ஏதாவது ஓர் அரசனை, வீரனை, கடவுளைக் குறிப்பிட்ட ‘கதை’ ஒன்று புனையப்பட்டு அந்தத் திருநாள் உருவாகியதற்கான காரணம் ஒன்றும் கற்பிக்கப்பட்டிருக்கும்.

ஆனால் தைப்பொங்கல் திருநாள் அப்படியான ஒன்றல்ல! அது வான் சார்ந்து, மண் சார்ந்து, முழுமையான இயற்கை சார்ந்து உருவாகிய திருநாளாகும்! இது தமிழர்களான எமக்குப் பெருமையையும் மகிழ்ச்சியையும் தருகி;ன்ற திருவிழாவாகும்! இத் திருநாளைப் புறம் தள்ளுவதும், இதற்கு மதம் சார்ந்த கற்பிதங்களை உருவாக்குவதும், தமிழினத்தைக் கேவலப்படுத்தும் செயல்களாகும்!

தைப்பொங்கல் திருவிழாவிற்குச் சமயச் சாயம் பூச முற்படுபவர்களை மறைமலை அடிகளாரும் கடுமையாகச் சாடியுள்ளார். இது குறித்த வரலாற்றுப் பதிவு ஒன்றை இங்கே குறிப்பிட விரும்புகின்றோம்.

1935ம் ஆண்டு திருச்சியில் அகிலத் தமிழர் மகாநாடு என்ற பெயரில் ஒரு மகாநாடு நடைபெற்றது. பசுமலை சோமசுந்தரப் பாரதியார் தலைமையில் நடைபெற்ற இந்த மகாநாட்டில் கா. சுப்பிரமணியனார், மதுரை தமிழவேள், பி.டி. இராசன், தெ.பொ.மீனாட்சி சுந்தரனார், புலவர் கா.ப. சாமி, திரு.வி.க. மறைமலை அடிகளார் முதலான பல தமிழறிஞர்கள் கலந்து கொண்டார்கள். தந்தை ஈ.வெ.ரா. பெரியாரும் இந்த மகாநாட்டில் கலந்து கொண்டிருந்தார். இந்த மகாநாட்டின் போது தைப்பொங்கல் சமயவிழாவா? இல்லை சமயமற்ற விழாவா? என்று பலத்த விவாதம் எழுந்தது. இறுதியாக, மறைமலை அடிகளார் திட்டவட்டமாகக் கீழ்வருமாறு கூறினார்.

“பொங்கலைச் சமயவிழா என்று சொல்லிச் சர்ச்சையைக் கிளப்பிக் குழப்பம் செய்ய யார் முயன்றாலும் அவர்கள் இம் மாநாட்டை விட்டு வெளியேறி விடவேண்டும். இது சமய சார்பு இல்லாத விழா! எந்த சமயத்துக்காரன், எந்த சாத்திரக்காரன் இந்த விழாவை எடுத்துள்ளான்? எந்தச் சூத்திரம் இதற்கு இருக்கிறது? எந்த இதிகாசம் இதற்கு இருக்கிறது? ஆனால் தமிழில் புறநானூற்றில், பிட்டங்கொற்றன் வரலாற்றில், கதப்பிள்ளை சாத்தனாரின் பாடலில் சான்று இருக்கின்றது. இதை என்னுடைய அருமை நண்பர் ஈ.வெ.ரா ஏற்றுக் கொண்டாலும் சரி, ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் சரி” - என்று மறைமலை அடிகளார் முழங்கினார்.

“இல்லை - நான் ஏற்றுக் கொள்கின்றேன்”- என்று ஈ.வெ.ரா. பெரியார் தெளிவாகப் பதிலுரைத்தார். அனைவரும் கையொலி எழுப்பினர். அதனையடுத்து திரு.வி.க. அவர்கள் இதனைப் பாராட்டிப் பேசினார்.

ஆகவே தைப்பொங்கல் திருவிழா என்பது ஒரு சமய விழா அல்ல! தமிழரின் பண்பாட்டு விழா! காலக் கணிப்பை மேற் கொண்டு மிகச் சரியாகத் தமது புத்தாண்டுக்குரிய இளவேனிற் காலத்தின் முதல்நாளை வகுத்தறிந்து தமிழரின் தமிழ்ப் புத்தாண்டு ஆரம்பத்தைக் கொண்டாடும் நாள்!

பொங்கல் திருநாளுக்கு முதல் நாளை ‘போகி’ (போக்கி) என்று அழைத்தார்கள். போகி என்பது போக்கு, போதல் என்பதாகும். (ஓர் ஆண்டைப் போக்கியது- போகி -போகியது). இத் தினத்தில் பழைய பொருட்களை எரித்தல், பழைய குடில்களை எரித்தல் போன்ற நடைமுறைகள் மேற் கொள்ளப்படுகின்றன. (முன்னாளில் யாழ்ப்பாணத்தில் பட்டி அடைக்கின்ற வயற்குடில்களை எரிக்கும் பழைய நடைமுறை இருந்தது. ஆனால் இப்போது இந்த நடைமுறை அருகி விட்டது.)

தமிழ்ப் புத்தாண்டான தைப்பொங்கல் தினமன்று புத்தாண்டுக்குரிய சகல நடைமுறைகளும் மேற்கொள்ளப்படும். தோரணம் தொங்கவிடல், புதுநீர் அள்ளுதல், வீட்டை அழகுபடுத்தல், பொங்கலிடுதல், புத்தாடை அணிதல், கையுறை பெறுதல் போன்ற நடைமுறைகள் மேற்கொள்ளப்படும்.

தைப்பொங்கல் தினத்திற்கு அடுத்தநாள் நடைபெறுகின்ற நடைமுறைகள் புத்தாண்டின் தொடக்கத்தை உணர வைப்பதாக உள்ளன. பயிர்ச் செய்கையிலே இணைந்து தொழிற்படும் மாடு, தமிழரால் பொங்கலின் மறுநாள் சிறப்பிக்கப்பட்டு அது மாட்டுப் பொங்கல் தினமாக அறியப்பட்டது. அத்துடன் மாட்டுப் பொங்கலின் மறுநாள், உறவினர் வீடுகளுக்குச் செல்லும் நடைமுறையைக் ‘காணும் பொங்கல்’ என்று அழைப்பர். இந்த நாளில் சமைக்கப்படும் படையலின் போது மதுவும், புலாலும் படையற் பொருட்களாக முன்னர் விளங்கின. ஆரிய நடைமுறைக் கலப்பினால் மதுவும், புலாலும் படையற் பொருட்களிலிருந்து விலக்கப்பட, தமிழரிடையே இருந்த தவப்படையல் என்ற நடைமுறை இப்போது அருகி விட்டது. யாழ்ப்பாணத்தில், வடமராட்சிப் பகுதியில் தைப் பொங்கல் தினமன்றே தவப் படையல் செய்யப்படும் வழக்கமிருந்தது. இப்படையலில் மீன்-இறைச்சி முதலியன படைக்கப்பட்டன. இத்தினத்தில் கலை நிகழ்வுகள், அரங்கேற்ற நிகழ்வுகள், புத்தாண்டுப் போட்டிகள் போன்ற நிகழ்ச்சிகளும் இடம் பெறும்.

தமிழாண்டின் தொடக்கக் காலகட்டம் உழைப்பின் பயனைப் பெற்று மகிழும் காலகட்டமாகவும் அமைந்தது. புத்தொளி வழங்கிய கதிரவனைப் போற்றிய தமிழ் நெஞ்சம், உழைப்பையும் தனக்குத் துணை நின்ற உயிரையும் போற்றியது. கதிரவனின் சுழற்சியைக் கொண்ட காலக்கணிப்பைக் காட்டும் அறிவியலும், நன்றியுணர்வை வெளிப்படுத்துகின்ற முதிர்ந்த பண்பாடும் பொங்கல் விழாவில்; போற்றப்படுவதை நாம் காணலாம்.

அன்புக்குரிய வாசகர்களே! இன்றைய நடைமுறை யதார்த்தத்தை சுட்டிக் காட்டித் தர்க்கிக்கவே நாம் இவ்வாறு மேற்கோள் காட்டினோம். இல்லாவிட்டால் யார்-யார் எந்த எந்த நாளில், எந்த எந்தக் கொண்டாட்டங்களையும் கொண்டாடுவதைத் தடுப்பதற்கு நாம் யார்? எவரும் - எதையும் - எப்படியும் கொண்டாடட்டும் ஆனால் பெயரை மட்டும் சரியாகச் சொல்லட்டும்.

தனித்துவமான மொழியைப் பேசுகின்ற, தனித்துவமான பண்பாட்டைக் கொண்டுள்ள, தனித்துவமான கலைகளைக் கொண்டுள்ள, தமக்கென பாரம்பரிய மண்ணைக் கொண்டுள்ள மக்கள், ஒரு தேசிய இனத்தவர் ஆவார்கள். அவர்களுக்குச் சுயநிர்ணய உரிமைக் கோட்பாடு உரித்தானதாகும் என்று உலகச்சட்டமொன்று சொல்கிறது. இப்போது எமக்கு ஒரு தனித்துவமான பண்பாடு இருக்கின்றதா? என்ற கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.

அன்புக்குரிய எமது வாசகர்களே! தமிழனின் வாழ்க்கையையும் பண்பாட்டையும் எதிரிகள் சிதைத்தது போதாதென்று நாமும் கூட ஆரிய மாயையில் மயங்கிப்போய் எமது பண்பாட்டை இகழ்ந்தும், இழந்தும் வருகின்றோம். இந்தக் காலகட்டத்தில் தமிழ்ப் புத்தாண்டு தினமான தைப்பொங்கல் குறித்துச் சில வரலாற்று உண்மைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள முனைந்தோம். அனைவருக்கும் எமது இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

இந்தக் கட்டுரைக்குப் பல நூல்களும், ஆய்வுநூல்களும் பயன்பட்டன. முக்கியமாகத் தொல்காப்பியம், சிலப்பதிகாரம், எட்டுத்தொகை-பத்துப்பாட்டு, தமிழர் நாகரிகமும் பண்பாடும், ஒப்பியன் மொழி நூல், வாக்கிய பஞ்சாங்கம், பண்பாட்டுக் கட்டுரைகள், செம்பருத்தி சஞ்சிகைக் கட்டுரைகள், பொங்கலே தமிழ்ப் புத்தாண்டு - மலேசியச் சிறப்பு மலர், தமிழர் - யப்பானியர் வாழ்வில் தைப்பொங்கல் போன்ற நூல்கள் பேருதவி புரிந்தன. சில சொல்லாக்கங்ககளும் சொல்லாடல்களும் அப்படியே எடுத்தாளப்பட்டுள்ளன. சம்பந்தப்பட்ட அனைவருக்கும் எனது மனங் கனிந்த நன்றிகள். காலத்தின் தேவை கருதி ஏற்கனவே என்னால் எழுதப்பட்ட ஆய்வுக் கட்டுரைகளின் சில கருத்துக்கள் மீண்டும் இடம் பெற்றுள்ளன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

" தைப்பொங்கல் தினமே தமிழ்ப் புத்தாண்டுத் தினமாகும்!"

ஆக்கம்: சபேசன் - மெல்பேர்ண் - அவுஸ்திரேலியா

தமிழரின் தேசியத் திருநாளான தைப்பொங்கல் நாள் குறித்துப் பல கருத்துக்களை, வரலாற்று வழியாகவும், வாழ்வியல் வழியாகவும், பண்பாட்டு வழியாகவும், ‘பண்டைய காலக் கணக்கு முறை’ வழியாகவும் முன் வைத்துத் தர்;க்கிப்பதுவே இந்தக் கட்டுரையின் நோக்கமாகும். தமிழீழத்திலும், தமிழ் நாட்டிலும் மட்டுமன்றி, உலகளாவிய வகையில் இன்று புலம் பெயர்ந்திட்ட தமிழ் மக்களும் தைப்பொங்கல் திருநாளைக் கொண்டாடுகின்ற இக் காலகட்டத்தில் இவ்வகையான தர்க்கங்கள் பல ஆக்கபூர்வமான சிந்தனைகளைக் கிளர்ந்தெழச் செய்து அவற்றைச் செயற்பட வைப்பதற்கும் உதவக் கூடும்!

"பொங்கல்" என்கின்ற பழந்தமிழ்ச் சொல்லுக்கு உரிய அர்த்தங்கள்தான் என்ன?

பொங்குகை, பெருங்கோபம், மிளகு-சீரகம்-உப்பு-நெய், முதலியன கலந்து இட்ட அன்னம், உயர்ச்சி, பருமை, மிகுதி, கள், கிளர்தல், சமைத்தல், பொலிதல் என்று பல பொருட்களைத் தமிழ் மொழியகராதியும், தமிழ்ப் பேரகராதியும் தருகி;ன்றன. அத்தோடு இன்னுமொரு பொருளும் தரப்படுகின்றது.

‘சூரியன் மகரராசியில் பிரவேசிக்கும் நாளான தை மாத முதற்தேதியன்று சூரியனை வழிபட்டுப் பொங்கல் நிவேதனம் செய்யும் திருவிழா’-என்ற பொருளும், பொங்கல் என்ற சொல்லுக்குத் தரப்பட்டுள்ளது. இந்தப் பொருளுக்கு உள்ளே, பல முக்கியமான விடயங்கள் பொதிந்திருப்பதை நாம் காணக் கூடியதாக உள்ளது.

அதாவது பொங்கல் திருவிழா என்பது தமிழ் மக்கள் வாழ்வில் வரலாற்று ரீதியாக, ஒரு பண்பாட்டு அங்கமாக, அவர்களது வாழ்வியலில் திகழுகின்ற திருவிழாவாக இருந்து வந்துள்ளது என்பது புலனாகின்றது. அத்தோடு பண்டைத் தமிழர்கள் இயற்கையின் காலக்கணக்கைக் கணித்து, சரியாக எந்த நாளில் தைத்திருநாளைக் கொண்டாட வேண்டும் என்பதையும் அறிந்திருந்தார்கள் என்பதையும் நாம் அறியக் கூடியதாக உள்ளது.

இதனைச் சற்று ஆழமாகக் கவனிப்போம்.

பண்டைத் தமிழன் இயற்கையை வணங்கி, இயற்கையோடு ஒன்றிணைந்து வாழ முனைந்தவன் ஆவான்! தன்னுடைய வாழ்க்கைக் காலத்தில் வித்தியாசமான காலப்பருவங்கள் தோன்றுவதையும் அவை மீண்டும் மீண்டும் தொடர்ந்து வருவதையும் தமிழன் அவதானித்தான். ஒரு குறிப்பிட்ட காலச் சேர்வையில், மழை, வெயில், குளிர், பனி, தென்றல், வாடை, ஆகியவை மாறி மாறித் தோன்றி, தமிழனின் வாழ்வை ஆண்டு வந்ததால் இந்தக் காலச் சேர்வையைத் தமிழன் ‘ஆண்டு’ என்று அழைத்தான் - என்று அறிஞர் வெங்கட்ராமன் என்பார் கூறுவார்.

தமிழகத்தில் வானியலில் தேர்ச்சி பெற்ற அறிஞர்களை ‘அறிவர், பணி, கணியன்’ -என அழைத்தார்கள். மூவகைக் காலமும் நெறியினாற்றும் ‘அறிவர்கள்’ குறித்துத் தொல்காப்பியர் குறிப்பிடுகின்றார். அரசர்களுடைய அவைகளில் ‘பெருங் கணியர்கள்’ இருந்ததாகச் சிலப்பதிகாரமும் குறிப்பிடுகின்றது. தொல்காப்பியத்திலும், சங்க நூல்களிலும் தென்படுகின்ற வானியற் செய்திகள் முழுமையாக உருப்பெற்றமைக்குப் பல ஆயிரம் ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கும் என்பதில் ஐயமில்லை. அத்தோடு ஆரியர்களது ஊடுருவலுக்கு முன்னரேயே தமிழர்கள் வானியலில் பெரிய அளவில் முன்னேறி இருந்தனர் என்று பல் நாட்டு அறிஞர்களும் கூறியுள்ளார்கள். மேல்நாட்டு அறிஞரான சிலேட்டர் என்பவர் ‘தமிழருடைய வானநூற் கணித முறையே வழக்கில் உள்ள எல்லாக் கணிதங்களிலும் நிதானமானது’ என்று குறிப்பிட்டுள்ளார். தமிழகத்துப் பரதவர்கள் திங்களின் நிலையைக் கொண்டு சந்திரமானக் காலத்தைக் கணித்தனர் என்றும், தமிழகத்து உழவர்கள் சூரியன், திங்கள் ஆகியவற்றின் இயக்கங்களையும் பருவங்களையும் மிகத் தெளிவாக அறிந்திருந்தனர் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. (யு ளுழஉயைட ர்ளைவழசல ழக வாந வுயஅடைள-Pயசவ 1)

தமிழர்கள் இயற்கையை ஆதாரமாகக் கொண்டு, காலத்தைப் பகுத்தார்கள். ஒரு நாளைக் கூட ஆறு சிறு பொழுதுகளாகத் தமிழர்கள் அன்றே பகுத்து வைத்தார்கள். ‘வைகறை, காலை, நண்பகல், ஏற்பாடு, மாலை, யாமம்’ என்று அவற்றை பகுத்து அழைத்தார்கள். அது மட்டுமல்ல, அந்த ஆறு சிறு பொழுதுகளின் தொகுப்பையும் அறுபது நாழிகைகளாகப் பகுத்துக் கணக்கிட்டார்கள். அதாவது ஒரு நாளில் ஆறு சிறுபொழுதுகள் உள்ளன. அந்த ஆறு சிறு பொழுதுகள் கழிவதற்கு அறுபது நாழிகைள் எடுக்கின்றன என்று தமிழர்கள் பண்டைக் காலத்தில் கணக்கிட்டார்கள். ஒரு நாழிகை என்பது தற்போதைய 24 நிமிடங்களைக் கொண்டதாகும்.

அதாவது பண்டைக் காலத்தமிழர்களது ஒரு நாட்பொழுதின் அறுபது நாழிகைகள் என்பன தற்போதைய கணக்கீடான 1440 நிமிடங்களோடு - அதாவது 24 மணித்தியாலங்களோடு - அச்சொட்டாகப் பொருந்துகின்றன. தமிழர்கள் ஒரு நாட் பொழுதை, தற்போதைய நவீன காலத்தையும் விட, அன்றே மிக நுட்பமாகக் கணித்து வைத்திருந்தார்கள் என்பதே உண்மையுமாகும்.

தைப்பொங்கல் தினத்தின் முக்கியத்துவத்தைக் காட்டுகின்ற தமிழர்களின் ஆண்டுப் பகுப்பை அடுத்துக் கவனிப்போம்.

பின்னாளில் வந்த ஆரியர்கள் ஓர் ஆண்டை நான்கு பருவங்களாக மட்டும்தான் வகுத்தார்கள். ஆனால் பண்டைக்காலத் தமிழர்களோ, தமக்குரிய ஆண்டை, அந்த ஆண்டுக்குரிய தமது வாழ்வை, ஆறு பருவங்களாக வகுத்திருந்தார்கள்.

1. இளவேனில் - ( தை-மாசி மாதங்களுக்குரியது)

2. முதுவேனில் - (பங்குனி - சித்திரை மாதங்களுக்குரியது)

3. கார் - (வைகாசி - ஆனி மாதங்களுக்குரியது)

4. கூதிர் - (ஆடி - ஆவணி மாதங்களுக்குரியது.)

5. முன்பனி - (புரட்டாசி - ஐப்பசி மாதங்களுக்குரியது)

6. பின்பனி - (கார்த்திகை - மார்கழி மாதங்களுக்குரியது)

(இதைத் தவிர, ஓர் ஆணின் வாழ்க்கைக் காலத்தை, ஒரு பெண்ணின் வாழ்க்கைக் காலத்தை, ஏன் ஒரு மலரின் வாழ்க்கைக் காலத்தைக் கூடத் தமிழன் பல காலத் தொகுதிகளாக வகுத்து வைத்துள்ளான் என்பதானது இன்னுமொரு தளத்திற்குரிய ஆய்வுக் கருத்துக்களாகும்!)

காலத்தை, அறுபது நாழிகைகைளாகவும், ஆறு சிறு பொழுதுகளாகவும், ஆறு பருவங்களாகவும் பகுத்த பண்டைத் தமிழன் தன்னுடைய புத்தாண்டு வாழ்வை இளவேனிற் காலத்தில்தான் தொடங்குகின்றான். இங்கே ஒரு மிக முக்கியமான விடயத்தை நேயர்கள் கருத்தில் கொள்ள வேண்டும்! பண்பாட்டுப் பெருமை கொண்ட மற்றைய பல இனத்தவர்களும், தங்களுடைய புத்தாண்டு வாழ்வை, தங்களுடைய இளவேனிற் காலங்களில்தான் ஆரம்பிக்கின்றார்கள். தமிழர்கள் மட்டுமல்ல, சீனர்களும், ஜப்பானியர்களும், கொரியர்களும், மஞ்சூரியர்களும் என, பல கோடி இன மக்கள் - தொன்மையான பண்பாட்டு வாழ்வினைக் கொண்ட பெருமை வாய்ந்த மக்கள்- தங்களுடைய இளவேனிற் காலத்தையே தமது புத்தாண்டாகக் கொண்டாடி வருகின்றார்கள்.

தமிழர்கள் மட்டுமல்ல, உலகத்தில் பலகோடி வேற்று இன மக்களும் தத்தமக்குரிய இளவேனிற் காலத்தையே புத்தாண்டாக கொண்டாடி வருவதாக குறிப்பிட்டிருந்தோம். உதாரணத்திற்காக (ஜ)யப்பானிய மக்களின் புத்தாண்டை, தமிழர்களின் புத்தாண்டான பொங்கல் திருநாளோடு ஒப்பிட்டுப் பார்ப்போம்.

தமிழர்-யப்பானிய பண்பாட்டு ஒற்றுமை நிலையை வெளிப்படுத்தும் நடைமுறையாகத் தைப்பொங்கல் விளங்குகிறது. யப்பானியர் தை 14ம் திகதி அன்று பழைய பயன்பாட்டுப் பொருட்களை எரிப்பார்கள். தமிழர்களும் அவ்வாறே செய்கின்றார்கள்.

தை 15ம் நாள் யப்பானியர்களும், தமிழர்கள் போன்று தோரணங்களைத் தொங்கவிட்டு புதுநீர் அள்ளி, பருப்புச் சேர்த்து சமைத்த பொங்கலைப் பரிமாறுகின்றார்கள். தமிழர்கள் பொங்கல் பானையில் பால் பொங்கும் போது ‘பொங்கலோ பொங்கல்’ என்று மகிழ்ச்சி ஆரவாரம் செய்வார்கள். அதே போல் யப்பானியர் தமது புத்தாண்டான தை 15ம் நாளில் குழுNமுயுசுயு - குழுNமுயுசுயு – என்று மகிழ்ச்சி ஆரவாரம் செய்வார்கள்.

தை 16ம் நாள் பணியாளர்களுக்குப் புத்தாடை வழங்கல், முன்னோர்க்குப் படையல் செய்தல், கலை நிகழ்ச்சிகளை நிகழ்த்தல், மாடுகளுக்கு உணவளித்தல் போன்ற காரியங்களைத் தமிழர்கள் செய்வது போலவே யப்பானியர்களும் செய்கிறார்கள்.

பருப்புத் தவிடு பொங்க - பொங்க

அரிசித் தவிடு பொங்க - பொங்க

-என்ற கருத்துப்படப் பாடப்படும் யப்பானிய வாய் மொழிப் பாடலில் ‘பொங்க-பொங்க’ என்ற சொற்களுக்கு யப்பானிய மொழியில் ‘HONGA-HONGA’ என்றே பாடுகிறார்கள்.

இடையில் தமிழன் மட்டும் மாறி விட்டான்! ஆளவந்த ஆரியர்களின் அடிமையாக மாறியது மட்டுமல்லாது, இன்றும் கூட ஆரியர்களின் பண்டிகைகளான சித்திரை வருடப்பிறப்பு, தீபாவளி போன்ற பண்டிகைகளை, தன் இனத்துப் பண்டிகைகளாக எண்ணி மயங்கிப் போய்க் கிடக்கின்றான்.

இவை குறித்து பேராசியரியர் க.பொ. இரத்தினம் அவர்கள் கீழ் வருமாறு அன்று கூறியிருந்தார்.

"சித்திரை வருடப்பிறப்பு" என்பது சாலிவாகனன் என்ற வடநாட்டு அரசனால் பின்னாளில் நிலைநாட்டப்பட்டது. இந்த அரசனுக்கு முன்னர் பல்லாயிரம் ஆண்டுகளாக நயத்தக்க நாகரிகத்துடன் வாழ்ந்த தமிழ் மக்கள் தம் நாட்டுப் பெருமகன் ஒருவனுடன் இணைந்த தொடர் ஆண்டை நிலை நாட்ட முயலாதது பெரும் விந்தையாக உள்ளது(சித்திரை வருடப் பிறப்பை) வரவேற்று, (அதன் மூலம் ) தமிழினத்தின் பழமையையும், பண்பையும், சிறப்பையும், செல்வாக்கையும் (இன்றைய தமிழர்கள்) சிதைத்து வந்துள்ளமை பெரும் வெட்கத்திற்கு இடமானதாகவும் இருக்கின்றது. தமிழ் மக்களிடையே நிகழ்ந்த மானக்கேடான, நகைப்புக்கிடமான செயல் இது ஒன்று மட்டும்தானா? - தமிழ் மக்களின் கோவில்களிலே இன்று தமிழ் மொழியும், தமிழ் இசையும் ஒதுக்கப்பட்டுள்ளன. . .

- என்று பேராசிரியர் க.பொ. இரத்தினம் அவர்கள் மிகக் கடுமையாக விமர்சித்து இருந்தார்.

தமிழர்களின் தேசியத் திருநாளான தைப்பொங்கல் தினத்தை தமிழர்களுடைய பண்டைக் காலத்திலிருந்தே வரலாற்று வழியாகவும், வாழ்வியல் வழியாகவும்;, பண்பாட்டு வழியாகவும், வானியல் அறிவு வழியாகவும் தமிழர்கள் இனம் கண்டு அறிந்துணர்ந்து கொண்டாடி வந்துள்ளார்கள் என்பதையும் நாம் தர்க்கித்ததோடு, ஆரியர்கள் எம்மீது திணித்த சித்திரை வருடப் பிறப்பு குறித்தும் நாம் சில கருத்துக்களைத் தெரிவித்ததற்குக் காரணங்கள் உண்டு!

தைப்பொங்கல் தினமான, தைத்திங்கள் முதல் நாள்தான் தமிழனுக்குரிய தமிழ்ப் புத்தாண்டுத் தினமாகும்!!”

பொங்கல் திருநாள்-தமிழ்ப் புத்தாண்டுத் திருநாள்-என்பதானது, சிலர் பிதற்றித் திரிவதுபோல் இந்துக்களின் விழா அல்ல! உண்மையில் இது, சமய சார்பற்ற, இயற்கை சார்ந்த, எல்லாத் தமிழர்களுக்கும் பொதுவான திருநாளாகும்! மற்றைய எல்லாத் திருநாட்களையும் எடுத்து ஒப்பிட்டுப் பார்த்தால் அங்கே ஏதாவது ஓர் அரசனை, வீரனை, கடவுளைக் குறிப்பிட்ட ‘கதை’ ஒன்று புனையப்பட்டு அந்தத் திருநாள் உருவாகியதற்கான காரணம் ஒன்றும் கற்பிக்கப்பட்டிருக்கும்.

ஆனால் தைப்பொங்கல் திருநாள் அப்படியான ஒன்றல்ல! அது வான் சார்ந்து, மண் சார்ந்து, முழுமையான இயற்கை சார்ந்து உருவாகிய திருநாளாகும்! இது தமிழர்களான எமக்குப் பெருமையையும் மகிழ்ச்சியையும் தருகி;ன்ற திருவிழாவாகும்! இத் திருநாளைப் புறம் தள்ளுவதும், இதற்கு மதம் சார்ந்த கற்பிதங்களை உருவாக்குவதும், தமிழினத்தைக் கேவலப்படுத்தும் செயல்களாகும்!

தைப்பொங்கல் திருவிழாவிற்குச் சமயச் சாயம் பூச முற்படுபவர்களை மறைமலை அடிகளாரும் கடுமையாகச் சாடியுள்ளார். இது குறித்த வரலாற்றுப் பதிவு ஒன்றை இங்கே குறிப்பிட விரும்புகின்றோம்.

1935ம் ஆண்டு திருச்சியில் அகிலத் தமிழர் மகாநாடு என்ற பெயரில் ஒரு மகாநாடு நடைபெற்றது. பசுமலை சோமசுந்தரப் பாரதியார் தலைமையில் நடைபெற்ற இந்த மகாநாட்டில் கா. சுப்பிரமணியனார், மதுரை தமிழவேள், பி.டி. இராசன், தெ.பொ.மீனாட்சி சுந்தரனார், புலவர் கா.ப. சாமி, திரு.வி.க. மறைமலை அடிகளார் முதலான பல தமிழறிஞர்கள் கலந்து கொண்டார்கள். தந்தை ஈ.வெ.ரா. பெரியாரும் இந்த மகாநாட்டில் கலந்து கொண்டிருந்தார். இந்த மகாநாட்டின் போது தைப்பொங்கல் சமயவிழாவா? இல்லை சமயமற்ற விழாவா? என்று பலத்த விவாதம் எழுந்தது. இறுதியாக, மறைமலை அடிகளார் திட்டவட்டமாகக் கீழ்வருமாறு கூறினார்.

பொங்கலைச் சமயவிழா என்று சொல்லிச் சர்ச்சையைக் கிளப்பிக் குழப்பம் செய்ய யார் முயன்றாலும் அவர்கள் இம் மாநாட்டை விட்டு வெளியேறி விடவேண்டும். இது சமய சார்பு இல்லாத விழா! எந்த சமயத்துக்காரன், எந்த சாத்திரக்காரன் இந்த விழாவை எடுத்துள்ளான்? எந்தச் சூத்திரம் இதற்கு இருக்கிறது? எந்த இதிகாசம் இதற்கு இருக்கிறது? ஆனால் தமிழில் புறநானூற்றில், பிட்டங்கொற்றன் வரலாற்றில், கதப்பிள்ளை சாத்தனாரின் பாடலில் சான்று இருக்கின்றது. இதை என்னுடைய அருமை நண்பர் ஈ.வெ.ரா ஏற்றுக் கொண்டாலும் சரி, ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் சரி - என்று மறைமலை அடிகளார் முழங்கினார்.

இல்லை - நான் ஏற்றுக் கொள்கின்றேன்- என்று ஈ.வெ.ரா. பெரியார் தெளிவாகப் பதிலுரைத்தார். அனைவரும் கையொலி எழுப்பினர். அதனையடுத்து திரு.வி.க. அவர்கள் இதனைப் பாராட்டிப் பேசினார்.

ஆகவே தைப்பொங்கல் திருவிழா என்பது ஒரு சமய விழா அல்ல! தமிழரின் பண்பாட்டு விழா! காலக் கணிப்பை மேற் கொண்டு மிகச் சரியாகத் தமது புத்தாண்டுக்குரிய இளவேனிற் காலத்தின் முதல்நாளை வகுத்தறிந்து தமிழரின் தமிழ்ப் புத்தாண்டு ஆரம்பத்தைக் கொண்டாடும் நாள்!

பொங்கல் திருநாளுக்கு முதல் நாளை ‘போகி’ (போக்கி) என்று அழைத்தார்கள். போகி என்பது போக்கு, போதல் என்பதாகும். (ஓர் ஆண்டைப் போக்கியது- போகி -போகியது). இத் தினத்தில் பழைய பொருட்களை எரித்தல், பழைய குடில்களை எரித்தல் போன்ற நடைமுறைகள் மேற் கொள்ளப்படுகின்றன. (முன்னாளில் யாழ்ப்பாணத்தில் பட்டி அடைக்கின்ற வயற்குடில்களை எரிக்கும் பழைய நடைமுறை இருந்தது. ஆனால் இப்போது இந்த நடைமுறை அருகி விட்டது.)

தமிழ்ப் புத்தாண்டான தைப்பொங்கல் தினமன்று புத்தாண்டுக்குரிய சகல நடைமுறைகளும் மேற்கொள்ளப்படும். தோரணம் தொங்கவிடல், புதுநீர் அள்ளுதல், வீட்டை அழகுபடுத்தல், பொங்கலிடுதல், புத்தாடை அணிதல், கையுறை பெறுதல் போன்ற நடைமுறைகள் மேற்கொள்ளப்படும்.

தைப்பொங்கல் தினத்திற்கு அடுத்தநாள் நடைபெறுகின்ற நடைமுறைகள் புத்தாண்டின் தொடக்கத்தை உணர வைப்பதாக உள்ளன. பயிர்ச் செய்கையிலே இணைந்து தொழிற்படும் மாடு, தமிழரால் பொங்கலின் மறுநாள் சிறப்பிக்கப்பட்டு அது மாட்டுப் பொங்கல் தினமாக அறியப்பட்டது. அத்துடன் மாட்டுப் பொங்கலின் மறுநாள், உறவினர் வீடுகளுக்குச் செல்லும் நடைமுறையைக் ‘காணும் பொங்கல்’ என்று அழைப்பர். இந்த நாளில் சமைக்கப்படும் படையலின் போது மதுவும், புலாலும் படையற் பொருட்களாக முன்னர் விளங்கின. ஆரிய நடைமுறைக் கலப்பினால் மதுவும், புலாலும் படையற் பொருட்களிலிருந்து விலக்கப்பட, தமிழரிடையே இருந்த தவப்படையல் என்ற நடைமுறை இப்போது அருகி விட்டது. யாழ்ப்பாணத்தில், வடமராட்சிப் பகுதியில் தைப் பொங்கல் தினமன்றே தவப் படையல் செய்யப்படும் வழக்கமிருந்தது. இப்படையலில் மீன்-இறைச்சி முதலியன படைக்கப்பட்டன. இத்தினத்தில் கலை நிகழ்வுகள், அரங்கேற்ற நிகழ்வுகள், புத்தாண்டுப் போட்டிகள் போன்ற நிகழ்ச்சிகளும் இடம் பெறும்.

தமிழாண்டின் தொடக்கக் காலகட்டம் உழைப்பின் பயனைப் பெற்று மகிழும் காலகட்டமாகவும் அமைந்தது. புத்தொளி வழங்கிய கதிரவனைப் போற்றிய தமிழ் நெஞ்சம், உழைப்பையும் தனக்குத் துணை நின்ற உயிரையும் போற்றியது. கதிரவனின் சுழற்சியைக் கொண்ட காலக்கணிப்பைக் காட்டும் அறிவியலும், நன்றியுணர்வை வெளிப்படுத்துகின்ற முதிர்ந்த பண்பாடும் பொங்கல் விழாவில்; போற்றப்படுவதை நாம் காணலாம்.

அன்புக்குரிய வாசகர்களே! இன்றைய நடைமுறை யதார்த்தத்தை சுட்டிக் காட்டித் தர்க்கிக்கவே நாம் இவ்வாறு மேற்கோள் காட்டினோம். இல்லாவிட்டால் யார்-யார் எந்த எந்த நாளில், எந்த எந்தக் கொண்டாட்டங்களையும் கொண்டாடுவதைத் தடுப்பதற்கு நாம் யார்? எவரும் - எதையும் - எப்படியும் கொண்டாடட்டும் ஆனால் பெயரை மட்டும் சரியாகச் சொல்லட்டும்.

தனித்துவமான மொழியைப் பேசுகின்ற, தனித்துவமான பண்பாட்டைக் கொண்டுள்ள, தனித்துவமான கலைகளைக் கொண்டுள்ள, தமக்கென பாரம்பரிய மண்ணைக் கொண்டுள்ள மக்கள், ஒரு தேசிய இனத்தவர் ஆவார்கள். அவர்களுக்குச் சுயநிர்ணய உரிமைக் கோட்பாடு உரித்தானதாகும் என்று உலகச்சட்டமொன்று சொல்கிறது. இப்போது எமக்கு ஒரு தனித்துவமான பண்பாடு இருக்கின்றதா? என்ற கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.

அன்புக்குரிய எமது வாசகர்களே! தமிழனின் வாழ்க்கையையும் பண்பாட்டையும் எதிரிகள் சிதைத்தது போதாதென்று நாமும் கூட ஆரிய மாயையில் மயங்கிப்போய் எமது பண்பாட்டை இகழ்ந்தும், இழந்தும் வருகின்றோம். இந்தக் காலகட்டத்தில் தமிழ்ப் புத்தாண்டு தினமான தைப்பொங்கல் குறித்துச் சில வரலாற்று உண்மைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள முனைந்தோம். அனைவருக்கும் எமது இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

இந்தக் கட்டுரைக்குப் பல நூல்களும், ஆய்வுநூல்களும் பயன்பட்டன. முக்கியமாகத் தொல்காப்பியம், சிலப்பதிகாரம், எட்டுத்தொகை-பத்துப்பாட்டு, தமிழர் நாகரிகமும் பண்பாடும், ஒப்பியன் மொழி நூல், வாக்கிய பஞ்சாங்கம், பண்பாட்டுக் கட்டுரைகள், செம்பருத்தி சஞ்சிகைக் கட்டுரைகள், பொங்கலே தமிழ்ப் புத்தாண்டு - மலேசியச் சிறப்பு மலர், தமிழர் - யப்பானியர் வாழ்வில் தைப்பொங்கல் போன்ற நூல்கள் பேருதவி புரிந்தன. சில சொல்லாக்கங்ககளும் சொல்லாடல்களும் அப்படியே எடுத்தாளப்பட்டுள்ளன. சம்பந்தப்பட்ட அனைவருக்கும் எனது மனங் கனிந்த நன்றிகள். காலத்தின் தேவை கருதி ஏற்கனவே என்னால் எழுதப்பட்ட ஆய்வுக் கட்டுரைகளின் சில கருத்துக்கள் மீண்டும் இடம் பெற்றுள்ளன.

சபேசன் அண்ணாச்சி (மெல்பேன்).. போர்க்கள விமர்சனத்தை முடிச்சிட்டு.. இப்ப இதில இறங்கிட்டார் போல..!

தமிழன்.. மாசிப் பனியில இளவேனிலைக் கண்டவனே... அடடா... தமிழன் மேல சொன்ன காலநிலையை எத்தனை ஆண்டுகளுக்கு முன்னர் வகைப்படுத்தினவன் என்று ஏதாச்சும் சொல்லுங்கள். இப்ப காலநிலை மாற்றங்கள கருத்தில் எடுத்தால் இளவேனில்... பின்னால போகுமா முன்னால வருமா..???! :D:lol:

அதென்ன தமிழனுக்கு யாரும் எதிரியில்ல.. எந்தப் புத்தக்கத்தைப் புரட்டினாலும் சில பேருக்கு தமிழனுக்கு எதிரி ஆரியன் என்ற குறிப்பு கிடைச்சிடுது.. :lol: தமிழன் எப்படி உருவானான் என்றதுக்கே ஒரு ஆதாரக் குறிப்பில்ல.. ஆனால் தமிழன்ர எனிமி பற்றிய குறிப்பு மட்டும் கிடைச்சிடுது..!

அதுமட்டுமன்றி.. சில அண்ணாச்சிகளின் கட்டுரைகளில்.. தமிழனைக் காட்டுமிராண்டி என்ற ஈ வெ ராமசாமி மட்டும்.. தமிழனுக்கு அறிவியல் விளக்கம் கொடுத்த பெருமைக்குரியவரா.. எதிலையும் நுழைச்சிடப்படுறார்..???!

சபேசண்ணாச்சி.. உந்தக் கட்டுரைக்கு நீங்கள் பாவிச்ச உசாத்துணைகளைப் பட்டியலிடுறதுதான் நல்லம். சும்மா நூல்கள்.. அறிக்கைகள் என்றால்.. யாற்ற அறிக்கைகள்.. எவற்ற பகுத்தறிவுப் புலம்பல்களில இருந்து உதுகளை எடுத்தியல் என்பதும் எந்தக் காலத்தில நின்று எடுத்தியள் என்பதும் கேள்விக்குறியாகிடும்..???! :D:lol:

அண்ணாச்சி.. அதென்ன 14 நாள் பிந்தி ஒரு புத்தாண்டும் பொங்கலும்... பேசாம ஜனவரி 1 யையே.. மெரினா பீச்சில பியரால பொங்கிறவையோட... பொங்கலையும் பொங்கிட்டால் எவ்வளவு சிறப்பு... அதைப்பற்றி.. கருணாநிதிக்கு கொஞ்சம் அறிவுறுத்தலாமே...???! மனித உயிர்களையும் விலங்குகளின் நலனையும் கருத்தில் எடுக்க மறுத்ததால.. "தமிழரின் வீர விளையாட்டு.." புட்டுக் கிட்டுப் போட்டுது.. எனி இதுதான் மிச்சம்.. அதையும் ஒரு வகை பண்ணிடுவம்..??! பொங்கலும் தடை வாங்கித் தந்திட்டுத்தான் நான் போவன்.. என்று முடிவெடுத்திட்டார் போல..! :D:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கண்டு பிடிப்பாளர் மெல்போன் சபேசன், சித்திரைப் புத்தாண்டிற்கும், தைப் பொங்கலுக்கும் என்ன கண்டு பிடிப்புச் செய்தார் என்று ஒரு காரணம் சொல்லட்டும்.

தாங்கள் நினைக்கின்ற முட்டாள்தனமான கருத்துக்களுக்கு ஆரியம், பார்ப்பானி, இந்து மதம் என்று மூன்றுக்குள் முடிச்சுச் தேடுகின்ற அறிவாளிகள்.

இதற்கு அப்பால் என்றைக்குமே இவர்களின் ஆராய்வு வருவதில்லை.

Link to comment
Share on other sites

தமிழுக்கென்று பல்வேறு சிறப்புகள் உள்ளன. உலகில் தோன்றிய ஆதிக்குடிகளில் ஒருவர் தமிழர் என்பதற்கும், தமிழர்களின் கலாச்சாரம் மிகப்பழமையானது என்பதற்கும் பல ஆதாரங்களை வைக்கலாம்.ஆனால் தமிழர்களின் கலாச்சாரம் வேறு எந்த ஒரு கலாச்சாரத்தினதும் ஆதிக்கமும் இல்லாமல் தானாகவே இன்றைய வளர்ச்சியை பெற்றது என நிறுவ முனைவது முட்டாள்தனமும் நடைமுறைக்கு ஒவ்வாததும் ஆகும். இது வடமொழி தழுவிய கலாச்சாரத்திற்கும் பொருந்தும்.

ஆயிரக்கணக்கான வருடங்கள் நிலத்தொடர்புடன் கூடிய புவியியல் சூழழில் வாழும் வட, தென் இந்திய கலாச்சாரங்கள் தங்களுக்குள் வானியல், அறிவியல் போன்ற பல்வேறு விடயங்களில் பரிவர்த்தனை செய்யாது வாழ்ந்தார்கள் என்று சொல்வது அறிவுடைமையாகாது.

மேலே உள்ள கட்டுரையில் திரு.சபேசன் பல்வேறு விடயங்களை தவறாகவும் திரித்தும், சரியான ஆதாரங்களை வைக்காமலும் எழுதி உள்ளார்.

உதாரணம்:

ஆக்கம்: சபேசன் - மெல்பேர்ண் - அவுஸ்திரேலியா

பின்னாளில் வந்த ஆரியர்கள் ஓர் ஆண்டை நான்கு பருவங்களாக மட்டும்தான் வகுத்தார்கள். ஆனால் பண்டைக்காலத் தமிழர்களோ, தமக்குரிய ஆண்டை, அந்த ஆண்டுக்குரிய தமது வாழ்வை, ஆறு பருவங்களாக வகுத்திருந்தார்கள்???!!!. :lol::lol::lol:

திரு.சபேசன் குறிப்பிட்டுள்ள 6 பருவங்களும் தமிழர்களுக்கு மட்டும் அல்ல எல்லா இந்துக்களுக்கும் பொதுவானது ஆகும். இதோ அந்த பருவங்கள் அவற்றின் வடமொழி பெயர்களுடன்

1. இளவேனில் - ( தை-மாசி மாதங்களுக்குரியது) - வடமொழி Shishira Ritu

2. முதுவேனில் - (பங்குனி - சித்திரை மாதங்களுக்குரியது) - வடமொழி Vasanta Ritu

3. கார் - (வைகாசி - ஆனி மாதங்களுக்குரியது) - வடமொழி Greeshma Ritu

4. கூதிர் - (ஆடி - ஆவணி மாதங்களுக்குரியது.) - வடமொழி Varsha Ritu

5. முன்பனி - (புரட்டாசி - ஐப்பசி மாதங்களுக்குரியது) - வடமொழி Sharad Ritu

6. பின்பனி - (கார்த்திகை - மார்கழி மாதங்களுக்குரியது - வடமொழி Hemanta Ritu

மாதம் என்பது வடமொழியில் மாசம் எனப்படுகிறது. தமிழ் மாதங்களான சித்திரை முதல் பங்குனி வரையிலான மாதங்களின் பின்னே உள்ள அர்த்தமும் வரலாறும் கூட கட்டுரையாளருக்கு தெரியவில்லை போல் உள்ளது. தமிழ் மாதங்கள் ஒவ்வொன்றின் பெயரும் அந்த மாதத்தில் வரும் பௌர்ணமி அன்று சந்திரன் இந்து பஞ்சாங்கத்தின் படி எந்த நட்சத்திர பாகையில் நிற்கிறதோ அந்த நட்சத்திரத்தின் பெயர் ஆகும்

இதோ கீழே தமிழ் மாதங்களும் அவற்றின் வடமொழி மூலங்களும் தரப்பட்டுள்ளன

1. சித்திரை - (சித்ரா - வடமொழி) - ஏப்ரிலில் சித்திரை நட்சத்திரத்தில் பௌர்ணமி வருகிறது

2. வைகாசி - (வைசாகி - வடமொழி) - மே மாதம் - வைசாக (வெசாக்)நட்சத்திரத்தில் பௌர்ணமி வருகிறது

3. ஆனி - (அனுசி - வடமொழி) - ஜுனில் அனுச நட்சத்திரத்தில் பௌர்ணமி வருகிறது

4. ஆடி - (ஆஷாட - வடமொழி) - ஜுலையில் பூராட (பூர்வ-ஆஷாட - வடமொழி)நட்சத்திரத்தில் பௌர்ணமி வருகிறது

5. ஆவணி - (சிரவண - வடமொழி) - ஆகஸ்டில் திருவோண (சிரவண - வடமொழி) )நட்சத்திரத்தில் பௌர்ணமி வருகிறது

6. புரட்டாசி - (புரஸ்டபாதி - வடமொழி) - செப்டம்பரில் உத்தரட்டாதி (உத்தரபுரஸ்டபாதி- வடமொழி)நட்சத்திரத்தில் பௌர்ணமி வருகிறது

7. ஐப்பசி - (அஸ்வதி - வடமொழி) - ஒக்டோபரில் அஸ்வினி (அஸ்வதி - வடமொழி) நட்சத்திரத்தில் பௌர்ணமி வருகிறது

8. கார்த்திகை - (கிருத்திகா - வடமொழி) - நவம்பரில் கார்த்திகை (கிருத்திகா - வடமொழி) நட்சத்திரத்தில் பௌர்ணமி வருகிறது

9. மார்கழி - (மர்கசிர்சி - வடமொழி) - டிசம்பரில் மிருகசிரீட (மர்கசிர்சி - வடமொழி) நட்சத்திரத்தில் பௌர்ணமி வருகிறது

10. தை - (தைஷ்ய அல்லது பூஷ்ய - வடமொழி) - ஜனவரியில் பூச (பூஷ்ய அல்லது தைஷ்ய - வடமொழி) - நட்சத்திரத்தில் பௌர்ணமி வருகிறது

11. மாசி - (மக - வடமொழி) - பெப்ரவரியில் மகம் (மக - வடமொழி) நட்சத்திரத்தில் பௌர்ணமி வருகிறது

12. பங்குனி - (பல்குனி- வடமொழி) - மார்ச்சில் உத்தர (உத்தரபல்குனி - வடமொழி ) நட்சத்திரத்தில் பௌர்ணமி வருகிறது

மேலும் இந்துக்கள் (தமிழர்கள்) ஏன் சித்திரையில் புத்தாண்டை வைத்தார்கள்? தமிழர்களின் அழிந்து போன குமரிக்கண்டமும் சரி இப்போதைய தமிழகமும் சரி புவிமத்திய கோட்டை (Equator) அண்டியுள்ள பகுதிகளாகும். மார்ச் 20ம் திகதியில் இருந்து சரியாக சூரியனின் மையப்பகுதியோடு புவிமத்திய கோடு சரி நேராக வரும் Equinox காலம் ஆகும். அதிலிருந்து 3 வாரங்களில் சரி அரைவாசியாக இரவு பகல் வரும் நாளை கணிப்பிட்டு அன்றே புத்தாண்டாக தமிழர்கள் கொண்டாடினார்கள் என்பது வானவியல் அறிந்தவர்கள் புரிந்து கொள்வார்கள்.

அத்தோடு ஏப்ரில் 14 அன்று சூரியனின் மையப்பகுதி Equator ஐ அண்டிய எந்த இந்துசமுத்திர பகுதியோடு சரிநேராக வருகிறதோ அதுவே அழிந்து போன குமரிக்கண்டம் இருந்த இடமாக இருக்கலாம் என்ற கருத்தும் உண்டு(இது ஒரு ஊகம் மட்டுமே). இது மடகாஸ்கருக்கும் இலங்கையின் தென்பகுதிக்கும் இடையில் வரும் என்று நினைக்கிறேன். சரியாகத் தெரியவில்லை.

More information about equinox below

http://en.wikipedia.org/wiki/Vernal_equinox

தமிழர்களுக்கு என்று புத்தாண்டை புதிதாக மாற்ற முனைபவர்கள் இந்துக்களின் வானசாஸ்திரத்தை ஒட்டி அமைக்கப்பட்டுள்ள மாதங்களையும் அவற்றின் பெயர்களையும் உபயோகிக்காது, புதிதாக தமிழ் மாதங்களையும் தமிழ் கலண்டரையும் அமைக்க வேண்டி இருக்கும். அந்த மாதங்களுக்கு வேண்டுமென்றால் திரு.கருணநிதியினதும் அவரின் வாரிசுகளினதும் பெயரை வைத்துக் கொள்ளலாம் :lol: . திரைப்படத்தில் கதை எழுதுவது போல் அல்ல வானவியல் என்பது

ஏய் திருடர்களே!!! கண்டதை எல்லாம் வடமொழி என்று ஒதுக்கி ஏதோ இந்து மதத்தில் இருந்து தமிழர்களின் கலாச்சாரத்தை தனிமைப்படுத்தி விடமுடியும் என்று மனப்பால் குடிக்காதீர்கள். ஏனென்றால் இந்த இரு மொழிகளுக்கும் 5000 வருடத்திற்கு மேற்பட்ட உறவும் நட்பும் உண்டு. பல சமஸ்கிருத நூல்கள் அழிந்து போன குமரிக்கண்டத்தின் நூல்களின் மொழிபெயர்ப்பாக (வேத உபநிடதங்கள் உட்பட) இருக்கக்கூடிய சாத்தியங்களை வடமொழி அறிஞர்களே மறுக்கவில்லை

Link to comment
Share on other sites

சமஸ்கிருதத்திற்கும் தமிழுக்கும் எந்த ஒரு உறவும் நட்பும் இல்லை. அப்படி இருக்கின்ற உறவு ஆண்டான் அடிமை உறவுதான்.

ஆங்கிலேயர்கள் ஆண்டதால் இன்றைக்கு எமக்கு ஆங்கிலத்தோடு உறவு இருக்கின்றது.

அன்றைக்கு ஆரியர்கள் ஆண்டதால் சமஸ்கிருதத்தோடு உறவு இருக்கிறது.

ஆங்கிலேயர்கள் ஆண்டதால் கிறிஸ்தவ மதம் பரவியது.

ஆரியர்கள் ஆண்டதால் அவர்களுடைய மதம் பரவியது.

இதேலே எதையும் எமது என்று உறவு கொண்டாட முடியாது.

தமிழின் பெருமையைக் கண்ட பல ஐரோப்பியர்கள் அதனுள் இருந்த பல விடயங்களை பெற்றிருக்கின்றனர். அன்றைக்கு வந்த ஆரியரும் தமிழில் இருந்து பல விடயங்களைப் பெற்றுக் கொண்டனர்.

ரிக் வேதத்தில் இருக்கின்ற சில நல்ல விடயங்கள் திராவிடத்தில் இருந்து பெறப்பட்டவை என்று சில ஆய்வாளர்கள் சொல்வார்கள்.

தமிழர்கள் ஆறு பருவங்களைக் கொண்டிருப்பதைக் கண்ட ஆரியர், தாமும் ஆறு பருவத்தை வகுத்திருக்கக் கூடும். வட மொழியில் பருவகாலங்களின் பெயர்கள் இருப்பதனாலேயே அவைகள் அவர்களிடமும் இருந்தன என்று அர்த்தம் இல்லை.

தமிழில் மாதங்களுக்கு தனிப் பெயர் இருக்கின்றது. "சுறவம்" என்று ஆரம்பிக்கும்.

அதே வேளை ஏப்ரல் 14தான் புத்தாண்டு என்பதற்கு நீங்கள் சொல்லும் காரணத்தை பல சொல்கிறார்கள். இவைகள் மேலும் ஆய்வுக்கு உரியன.

எனக்கு எந்த நாளை புத்தாண்டாகக் கொண்டாடினாலும் பறவாயில்லை. ஜனவரி 1ஐயோ 14ஐயோ, ஏப்ரல் 14ஐயோ, ஆடிப் பிறப்பையோ எதையென்றாலும் கொண்டாடட்டும்.

ஆனால் தமிழ் புத்தாண்டு என்று சொல்வதற்கு ஒரு அர்த்தம் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றேன்.

இந்திரஜித்து, பார்த்திப போன்ற பெயர்களோடும் மற்றும் அருவருப்பான வடமொழிப் பெயர்களோடும் "தமிழ்" புத்தாண்டு பிறப்பதாக சொல்வதற்கு எனக்கு வெட்கமாக இருக்கிறது.

நீங்கள் எல்லோரும் இந்த ஆரிய அசிங்கங்களிடம் இருந்து ஏப்ரல் 14ஐ மீட்டுத் தந்தால், நான் உட்பட எந்த ஒரு தமிழனும் எப்ரல் 14ஐ தமிழ் புத்தாண்டாக கொண்டாடுவதற்கு பின்னிற்க மாட்டான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

rdddddd+44444+tretrttr-dsfdsf+dffrewr =திராவிடம்

ஆகவே தைப் பொங்கல் தான் தமிழரின் புத்தாண்டாகும்

Link to comment
Share on other sites

சமஸ்கிருதத்திற்கும் தமிழுக்கும் எந்த ஒரு உறவும் நட்பும் இல்லை. அப்படி இருக்கின்ற உறவு ஆண்டான் அடிமை உறவுதான்.

ஆங்கிலேயர்கள் ஆண்டதால் இன்றைக்கு எமக்கு ஆங்கிலத்தோடு உறவு இருக்கின்றது.

அன்றைக்கு ஆரியர்கள் ஆண்டதால் சமஸ்கிருதத்தோடு உறவு இருக்கிறது.

ஆங்கிலேயர்கள் ஆண்டதால் கிறிஸ்தவ மதம் பரவியது.

ஆரியர்கள் ஆண்டதால் அவர்களுடைய மதம் பரவியது.

இதேலே எதையும் எமது என்று உறவு கொண்டாட முடியாது.

இவை உங்களின் வழமையான பிதற்றல்கள். கொஞ்சம் குறைக்க முயற்சிப்பது உடல் நலத்திற்கு நல்லது

தமிழின் பெருமையைக் கண்ட பல ஐரோப்பியர்கள் அதனுள் இருந்த பல விடயங்களை பெற்றிருக்கின்றனர். அன்றைக்கு வந்த ஆரியரும் தமிழில் இருந்து பல விடயங்களைப் பெற்றுக் கொண்டனர்

அது போல் ஐரோப்பியரிடம் தமிழர்கள் கற்றுக்கொண்டதும் பெற்றுக்கொண்டதும் ஏராளம். வடமொழி பேசுபவர்களிடம் இருந்தும் அப்படியே. மனிதனின் கலாச்சாரம், மற்றும் அறிவியல் பரிமாற்றம் என்பது எப்போதும் இருவழி பாதை தான்

தமிழர்கள் ஆறு பருவங்களைக் கொண்டிருப்பதைக் கண்ட ஆரியர், தாமும் ஆறு பருவத்தை வகுத்திருக்கக் கூடும். வட மொழியில் பருவகாலங்களின் பெயர்கள் இருப்பதனாலேயே அவைகள் அவர்களிடமும் இருந்தன என்று அர்த்தம் இல்லை.

இதற்கு ஆதாரம் ஏதும் வைத்து உள்ளீர்களா? 6 பருவங்களின் பெயர்கள் மட்டும் அல்ல அந்த பருவங்களின் ஆரம்பம், முடிவு பற்றியும் வடமொழி பஞ்சாங்கங்களில் கணிப்புகள் உள்ளன

இந்திரஜித்து, பார்த்திப போன்ற பெயர்களோடும் மற்றும் அருவருப்பான வடமொழிப் பெயர்களோடும் "தமிழ்" புத்தாண்டு பிறப்பதாக சொல்வதற்கு எனக்கு வெட்கமாக இருக்கிறது.

இந்திரஜித்து, பார்த்திபன் என்ற பெயர்களை போலவே சபேசன் என்ற பெயரும் ஓசைப்படுகிறதே. அருவருப்பாகவோ வெட்கமாகவோ இல்லையா? :lol::lol::lol:

நீங்கள் எல்லோரும் இந்த ஆரிய அசிங்கங்களிடம் இருந்து ஏப்ரல் 14ஐ மீட்டுத் தந்தால், நான் உட்பட எந்த ஒரு தமிழனும் எப்ரல் 14ஐ தமிழ் புத்தாண்டாக கொண்டாடுவதற்கு பின்னிற்க மாட்டான்.[/ஃஉஒடெ]

இப்படி ஏழு கோடி தமிழர்களின் ஏகோபித்த கருத்தாக உங்கள் கருத்துக்களை எண்ணும் மனநிலையில் இருந்து எப்போது வெளிவரப் போகிறீர்கள். ஏதாவது விபரீதம் நடந்து விடப் போகிறது. :lol:

Link to comment
Share on other sites

"இந்திரஜித்து, பார்த்திப போன்ற பெயர்களோடும் மற்றும் அருவருப்பான வட மொழிப் பெயர்களோடும்"

இதிலே "மற்றும்" என்ற சொல்லைப் பாவித்ததில் இருந்து இந்திரஜித்து, பார்த்திப போன்ற பெயர்கள் அருவருப்பான பெயர்கள் அல்ல என்பதைச் சொல்லியுள்ளேன். உங்களுக்கு இது புரியவில்லை.

ஆனால் இந்த வடமொழிப் பெயர்களுக்குள் அருவருப்பான பெயர்களும் இருப்பதைச் சுட்டிக் காட்டியுள்ளேன்.

விந்து என்ற அர்த்தம் வருகின்ற சுக்கில ஆண்டு. அதை விட குரோதி ஆண்டு, விரோதி ஆண்டு, விகாரி ஆண்டு....... இவைகள் எல்லாம் என்ன?

இந்தப் பெயர்களில் பிறப்பது தமிழர்களின் புத்தாண்டா?

யாரோ பார்ப்பனர்கள் தமிழர்களின் தலையில் மிளகாய் அரைத்து, இவைகளை தமிழர்களின் தலையில் கட்டிவிட்டுள்ளனர்.

இவைகளுக்கு தமிழர்களும் வக்காலத்து வாங்கிக் கொண்டு திரிவது பெரும் கேவலம்.

நான் சொல்வதை சரியாகப் புரிந்து கொள்ளுங்கள். தைத் திருநாள் புத்தாண்டிற்கு இருக்கின்ற வலுவான வாதங்கள் போன்று, ஏப்ரல் 14 இற்கும் இருப்பதை நான் அறிவேன்.

ஆனால் தமிழ் புத்தாண்டு தமிழாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால் எந்த ஒரு தமிழருக்கும் ஏப்ரல் 14ஐ கொண்டாட தயக்கம் இருக்காது.

("எந்த ஒரு தமிழரும்" என்பது அனைத்துத் தமிழர்களையும் குறிப்பது இல்லை)

Link to comment
Share on other sites

"இந்திரஜித்து, பார்த்திப போன்ற பெயர்களோடும் மற்றும் அருவருப்பான வட மொழிப் பெயர்களோடும்"

இதிலே "மற்றும்" என்ற சொல்லைப் பாவித்ததில் இருந்து இந்திரஜித்து, பார்த்திப போன்ற பெயர்கள் அருவருப்பான பெயர்கள் அல்ல என்பதைச் சொல்லியுள்ளேன். உங்களுக்கு இது புரியவில்லை.

ஆனால் இந்த வடமொழிப் பெயர்களுக்குள் அருவருப்பான பெயர்களும் இருப்பதைச் சுட்டிக் காட்டியுள்ளேன்.

இந்திரஜித்து, பார்த்திபன் போன்ற பெயர்கள் தமிழ் வருடத்திற்கு வேண்டாம் என்று சொல்லும் நீங்கள் சபேசன் என்ற பெயரை வைத்திருக்க அருவருப்பாகவோ வெட்கமாகவோ இல்லையா என்பது தான் கேள்வி!!!

விந்து என்ற அர்த்தம் வருகின்ற சுக்கில ஆண்டு. அதை விட குரோதி ஆண்டு, விரோதி ஆண்டு, விகாரி ஆண்டு....... இவைகள் எல்லாம் என்ன?

விந்து என்பது உங்களுக்கு அருவருப்பானதா? அதற்கு மூலசக்தி என்றும் அர்த்தம் உள்ளது. அதில் இருந்து தோன்றியது தான் வேந்தன் என்ற சொல் என்பதை அறிவீர்களா???

("எந்த ஒரு தமிழரும்" என்பது அனைத்துத் தமிழர்களையும் குறிப்பது இல்லை)

எந்தவொரு தமிழரும், என்பது அனைத்து தமிழர் என்பதை குறிக்கவில்லயா? அப்படி என்றால் சுமாராக எத்தனை தமிழர்களை குறிக்கிறது :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரி வெளிப்படையாக்க கதைப்போம்.

உங்களின் கருத்துப்படி தைப் பொங்கலைத் தமிழ்ப் புத்தாண்டாக எடுப்போம். அதற்கு என்ன செய்யப் போகின்றீர்கள்.

சூரியனுக்குப் படையல் படைக்க மற்றய மதத்தவரான கிறிஸ்தவர், இஸ்லாமியர், வருவார்களா? ஏன் நீங்கள் கூட சூரியனை வழிபடத் தயாரா?

அல்லாவைத் தவிர, வேறு எவரையும் வணங்கமாட்டார்கள் என்பவர்கள் இசுலாமியர். நாங்கள் பொதுவாக வணக்கம் சொன்னால் கூட, அவர்கள் பதிலுக்கு வணக்கம் சொல்லமாட்டார்கள்.

உழவரின் திருநாள், சூரியனுக்கான வழிபாட்டுத் தினம் ஒன்றை, உங்களிட்டத்தி;றகு மாற்றுகின்றபோது, ( புலத்தை விடுவோம். தாயகத்தில் நாம் கொண்டாடுவதன்படி பார்ப்போம்) அதன் அடிப்படையில் ஒன்றைக் கூட உள்ளவாங்கமல் வேறு ஒன்றை அணிந்து கொள்ளச் செய்வது உழவர்களுக்கு நாம் செய்கின்ற அநியாயமல்லவா?

ஆனால் சித்திரைப் புத்தாண்டு தொடர்பாகச் சொன்னீர்கள். அதில் யாரும் பொங்குவதுமில்லை.

அதில் வருகின்ற ஆண்டுப் படி என்பது முக்கியத்துவமானதற்காகப் போய்விட்டது. இந்த வருடம் என்ன ஆண்டு ஓடுகின்றது என்பது குறித்து நிறையப் பேர் அறியார்.

தமிழன் காலத்தைக் கண்டு நாட்காட்டியமைத்தான். அதிலும் கிரகங்கள், சூரியனின் நகர்வு பற்றி அவன் கொண்டிருந்த ஆளுமையின் வெளிப்பாடு தான், வருடப்பிறப்பிற்கான நேரக்கணிப்பு.

சித்திரைப் புத்தாண்டு நேரத்தில் தைப்பொங்கலைப் போலச் சூரிய வழிபாட்டைக் கூடச் செய்ய வேண்டியதில்லை. விரும்பிய தெய்வங்களை வழிபட்டுக் கொள்ளலாம்.

தமிழரின் அடையாளங்களை ஒன்றொன்றாகச் சிதைக்கின்ற செயற்பாடின் வெளிப்பாடு தான், தைப்பொங்கலைப் புத்தாண்டு ஆக்குகின்றோம் என்ற செயற்பாடு.

தைப்பொங்கலில் சூரியவழிபாட்டைச் செய்யத் தாங்கள் தயாரா? தைப்பொங்கலின் மூலக்கருவே அது தானே! அதில் கூட உங்களுடைய திராவிடச் செல்வாக்கைச் செலுத்துவதன் மூலம் காலம்காலமாகத் தமிழர் தாங்கி வந்த ஒரு பண்டிகையின் இருப்பைக் கேள்விக் குறியாக்குகின்றீர்கள்.

நீங்கள் என்னவும் சொல்லுங்கள் சபேசன். ஆனால் என்னைப் பொறுத்தவரைக்கும் சித்திரை 1ம் திகதி தான் தமிழ்ப் புத்தாண்டு. அதற்கு மாற்றுக்கருத்து என்றைக்குமே இல்லை.

Link to comment
Share on other sites

வேந்தன் என்பது "வேல்" என்று சொல்லில் இருந்து உருவாகியிருக்கும் என்று நினைக்கின்றேன். ஆனால் எனக்கு இது உறுதியாக தெரியவில்லை. ஆராய்ந்து பார்த்து சொல்கிறேன்.

"சுக்கில" என்பது எதைக் குறிப்பது என்பது உங்களுக்குத் தெரியும். ஆனால் இப்படி சப்பைக் கட்டுக் கட்டிய அனைத்து அசிங்கங்களையும் தமிழர் தலையில் கட்டிவிட்டார்கள்.

ஆபாசங்களை எம் மீது திணித்து விட்டு, தெரிந்தவர்கள் கேட்டால் வேறு அர்த்தம் சொல்லி சமாளித்து, உள்ளுக்குள் நீங்கள் தமிழர்களைப் பார்த்து ஒரு நமுட்டுச் சிரிப்பு சிரிப்பது எனக்கு தெரிகிறது.

சுக்கில" என்பதற்கு ஒரு அர்த்தம் சொன்னது போன்று குரோதி, விரோதி போன்றவைக்கும் ஏதாவது விளக்கம் சொல்லுங்கள். இப்படியே தமிழனை மடையன் ஆக்குங்கள்.

எங்களுடைய பெயர்களையும், வழிபாடுகளையும் விழக்களையும் சமஸ்கிருதம் ஆக்கிவிட்டீர்கள். அது போதாது என்று ஏப்ரல் 14 வரும் புத்தாண்டையும் நாசம் பண்ணி விட்டீர்கள். தைப் பொங்கலையும் "மகர சங்கராந்தி" ஆக்கத் துடிக்கின்றீர்கள்

தமிழர்களுக்கு எதையும் மிச்சம் வைக்க மாட்டோம் என்று துடிக்கின்ற மதவெறியர்களால் இந்து மதம் தமிழர்களிடம் இருந்து இல்லாமல் போகப் போவது உறுதி!

Link to comment
Share on other sites

தூயவன்!

கிறிஸ்தவர்களும் முஸ்லீம்களும் தைப் பொங்கலை பல இடங்களில் கொண்டாடுகின்றார்கள். தேவாலங்கள,; மசூதிகள் போன்றவற்றிற்கு முன்னால் பொங்கலிட்டு இதைக் கொண்டாடுவார்கள். இந்த ஆண்டும் கொண்டாடுவார்கள்.

இதில் சூரிய வழிபாடு ஒரு அங்கமே தவிர, அதுவே எல்லாம் அல்ல. தொடர்ந்து மூன்று நாட்கள் பலவிதமான அம்சங்களோடு இந்த விழா கொண்டாடப்படுகின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தைப்பொங்கலோடு மகர சங்காந்தி ஆக்கப்படவில்லை. நீங்கள் சொல்லுகின்ற தனித்துவம் என்ற போலி முகமூடி களையத் தான் அது சொல்லப்பட்டது. அடுத்தவன் கொண்டாடுகின்றான் என்பதற்காக எம் அடையாளங்களை இழந்து அம்மணமாக நிற்கமுடியாது.

அவன் கொண்டாடுகின்றான், இவன் கொண்டாடுகின்றான் என தமிழரின் அடையாங்களை உதறித்தள்ளுகின்ற தமிழ் விரோத செயலுக்குத் தான், இந்த எதிர்வினை(உங்கள் பாசையில்)

தமிழருடைய அடையாளங்களையும், மொழியையும் 2000 ஆண்டுகளுக்கு மேலாக்க காவி வந்தது மதங்களே தவிர, இந்த 50 ஆண்டு வரலாறு கொண்ட திராவிடக் கும்பல்கள் அல்ல. அவர்கள் என்றைக்கு எம்மை ஆள வந்தார்களோ, அன்றைத் தமிழனுக்குப் பிடிச்சது சனி.

அதில் இருந்து தமிழ் மொழி அழியுமோ என்று கவலைப்படுகின்ற அளவுக்குத் தமிழர்களை வர வைத்து விட்டனர். பக்தியாலும், கடவுள் மீதான இனிமையான பாடல்களாலும் தமிழின் பெருமையைக் காவி வந்த பக்தி, திராவிட்க கும்பல்கள் சிதைக்கப் போய் வெறுமனே விளம்பலப்பலகைகளில் உள்ள வேற்றுமொழிகளை அழிப்பதன் மூலம் தமிழ் காப்பதாக ஏமாற்றிக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால் தமிழ் படிக்க குழந்தைகளுக்கோ, மக்களுக்கு எவ்வித வழியையும் இவர்கள் விட்டு வைக்கவில்லை.

Link to comment
Share on other sites

வேந்தன் என்பது "வேல்" என்று சொல்லில் இருந்து உருவாகியிருக்கும் என்று நினைக்கின்றேன். ஆனால் எனக்கு இது உறுதியாக தெரியவில்லை. ஆராய்ந்து பார்த்து சொல்கிறேன்.

"சுக்கில" என்பது எதைக் குறிப்பது என்பது உங்களுக்குத் தெரியும். ஆனால் இப்படி சப்பைக் கட்டுக் கட்டிய அனைத்து அசிங்கங்களையும் தமிழர் தலையில் கட்டிவிட்டார்கள்.

ஆபாசங்களை எம் மீது திணித்து விட்டு, தெரிந்தவர்கள் கேட்டால் வேறு அர்த்தம் சொல்லி சமாளித்து, உள்ளுக்குள் நீங்கள் தமிழர்களைப் பார்த்து ஒரு நமுட்டுச் சிரிப்பு சிரிப்பது எனக்கு தெரிகிறது.

சுக்கில" என்பதற்கு ஒரு அர்த்தம் சொன்னது போன்று குரோதி, விரோதி போன்றவைக்கும் ஏதாவது விளக்கம் சொல்லுங்கள். இப்படியே தமிழனை மடையன் ஆக்குங்கள்.

ஐயோ பாவம் நீங்கள். விந்துவிற்கு என்ன அர்த்தமோ அதே அர்த்தம் தான் சுக்கிலத்திற்கும். ஆபாசம் என்பது அவரவர் பார்வையில் உள்ளது. விரோதி குரோதி என்பதன் அர்த்தம் நேரிடையாகவே தெரிகிறதே.

விரோதிக்கும், குரோதிக்கும் கூட இந்து மதம் மதிப்பளிக்கும் விதமாக அவர்களை வருடப்பெயர்களில் வைத்து உள்ளது. அது போன்றவர்களுக்கும் அன்பு செலுத்த சொல்கிறது. இது கூடவா புரியவில்லை உங்கள் பகுத்தறிவுக்கு

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.