Jump to content

ஆதரவு கேட்கும் ராமேஸ்வரம்


AJeevan

Recommended Posts

81024x7682kq7.jpg

படத்தைப் பெரிதாக்கிப் பார்க்க :

http://www.rameswaramthefilm.com/downloads.../8_1024x768.jpg

dreamphoenixkg8.jpg

http://www.rameswaramthefilm.com/

படம் சிறிதாக்கப்பட்டுள்ளது. - இணையவன்.

Link to comment
Share on other sites

  • Replies 55
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

தெனாலி, கன்னத்தில் முத்தமிட்டால் போன்று ஈழத்தமிழரைக் கொச்சைப்படுத்தாத படமாகவும், தமிழீழவிடுதலைப் போருக்கு எதிராகவும் இல்லாமல் இருந்தால் ஆதரவு கொடுக்கலாம்.

எம்மை ஆதரிப்பவர்களுக்கு மட்டும் தான் கைகொடுப்போம் என்பதை இதற்கான வாய்ப்பாகப் பயன்படுத்தலாம்.

Link to comment
Share on other sites

இத் திரைப்படத்தின் இயக்குனர் செல்வம்

தமிழகத்தில் இருந்து அவரது இளமைக் காலத்தில்

விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு சென்ற போது

விடுதலைப் புலிகளின் தலைமையால்

அவரது தமிழ் உணர்வு மற்றும் தேவை கருதி திருப்பி அனுப்பப்பட்டவர்.

தவிரவும்

படத்தின் இசையமைப்பாளர் நிரூ

ஈழத்தைச் சேர்ந்தவர் மட்டுமல்ல

பிரான்ஸ் நாட்டில் வாழ்ந்தவர்.

நம்மவர் குறித்து பேசும்

ஒரு நல்ல திரைப்படத்துக்கு

்ஆதரவழிப்பதால் இது போன்ற பல படங்கள் உருவாகும் வாய்ப்பிருக்கிறது.

இல்லையென்றால்...................

இது போன்ற முயற்சிகள் தொடரும் வாய்ப்பு இல்லாமல் போய்விடும்.

உலகமே எமக்காக பேசு என்பதை விட

பேசும் ஒருவனை ஊக்கப்படுத்த

நாம் தவறியது மட்டுமல்ல

பேசவிடாமலும் பண்ணியிருக்கிறோம்?

அது குறித்து சற்று சிந்தித்தால் என்ன?

Link to comment
Share on other sites

அஜீவன் உங்கள் அரிய தகவலுக்கு நன்றி. நிச்சயமாக எம்மவரின், எம்மவருக்காக உருவாக்கப்படும் திரைபடங்களுக்கு எனது ஆதரவு உண்டு.

Link to comment
Share on other sites

வணக்கம் அஜீவன் அண்ணா

தங்கள் தகவலிற்கு நன்றி

அந்த இளம் கலைஞர்களை ஊக்குவிக்கும் நோக்கோடு நாளை இத்திரைப்படம் பார்ப்பதற்காக ஓரு வாரத்திற்கு முன்பே ரிக்கற் பதிவு செய்து வைத்திருக்கின்றேன். இதுவரை இங்கு எந்த இந்திய திரைப்படமும் திரையில் பார்த்ததில்லை. ஆணிவேர் திரைப்படம் பார்த்திருந்தேன்.இது கட்டாயம் பார்க்கவேண்டும் என்ற அவாவில் ஈழத்தவர் என்ற என்னையறியாத ஒரு பாச உணர்விலும் . .

Link to comment
Share on other sites

இந்த அநியாய(தமிழ்).... உலகில்.... அருமையான.... ஓர் துளிர்.... :icon_mrgreen: இதை வளர்க்கவும் நாம் கனக்க.... இளக்கவேண்டி வரும்.... வாழ்க தமிழ்.

அஜீவன் அண்ணா.... மற்றும் நண்பர்கள்..... இப்படியான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளவர்களை இப்போ உடன் அறிமுகப்படுத்தவேண்டும் என்று இல்லை...என்பது எனது தனிப்பட்ட கருத்து. தமிழ் அவர்களை எப்பவும் அறிந்து கொள்ளும்... அது அவர்களுக்கும் தமிழுக்கும் கூட இன்றைய உலகின் பாதுகாப்பும் வளர்சியும் கூடவாக இருக்கும். அதை நாம் யாவரும் யாதார்த்தத்துடன் அறிந்து உள்வாங்கவேண்டும் நீங்கள் அறியாததா.... :icon_idea: நன்றி.

Link to comment
Share on other sites

நன்றி அஜீவன் இணைப்பிற்கு.

இத்திரைப்படம் வெற்றிபெற நாம் அனைவரும் கைகொடுப்போம்.

Link to comment
Share on other sites

நல்லது..... இத்திரைப்படத்தை பார்த்தபின்னர்......அடுத்த திரைப்படத்திற்கு ஆதரவு அளிப்பதா இல்லையா என்பது பற்றி.....பிறகு சிந்திப்போம்.....நிரு நல்ல ஒரு இசையமைப்பாளர்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[நான் பல ஆண்டுகளாக திரைப்படங்கள் பார்ப்பதில்லை. ஆனால் உங்கள் தகவலின் படி இப்படத்தை பார்க்கப்போகிறேன்!!!

Link to comment
Share on other sites

நன்றி அஜீவன்,

நேற்று பகல் கட்ச்சிக்கு 20 பேர் மட்டில்தான் வந்திருந்தார்கள். நாங்கள் வெளியில் வரும்போது தியேட்டரில் ஒரு 40பேர் வரையில் கூடி இருந்தார்கள். கவலையாய் இருந்தது. சிவாஜிக்கு கூட்டம் அலை மோதியதாம். இன்னொருமுறை திரையிடப் படால் பலர் பார்க்கிற வாய்ப்பு கிட்டலாம். கள்ள சி.டி தொடர்பாக அஜீவன் சொன்னதை நான் வழி மொழிகிறேன்

Link to comment
Share on other sites

இதற்கான படப்பிடிப்பு இராமேஸ்வரத்தில் உள்ள அகதிமுகாம் ஒன்றி நடந்ததாம். படப்பிடிப்பு குழுவில் உள்ள ஒருவர் முகாமில் இருந்த பெண்ணை விரும்பி இருக்கிறார். பெண்ணும் சம்மதித்ததால் படப்பிடிப்பு முடியும் முன்னரோ அவர்களும் படப்பிடிப்புக்குழுவின் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனராம்.

படக்கதையின் உணர்வு ஆழம் சில உண்மை நிகழ்வுகளிற்கும் தூண்டுகிறது? :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மண்டபம் அகதிகள் முகாம்[/b](தழிழ் நாட்டில் உள்ளமுகாமில் மிகவும் பெரிய முகாம்10,000 பேர் வாழகூடிய வேம்பு மரம் அதிக உள்ள இந்தமுகாமில் பலவருடங்கள் வாழ்ந்தவன் ராமேஸ்வரம் படத்தின் கதை என்னுடைய கதையாகவும் இருக்கலாம்

Link to comment
Share on other sites

இராமேஸ்வர ஆரம்பமே ஆங்கில திரப்படங்களைப் பார்ப்பதைப் போன்ற பிரமையுடன் தொடங்கி ..... முடிபு வரை ஓர் அழகிய சிற்பத்தை செதுக்கி முடிக்க .... அருகில் இருந்த பிரமை!!!!!

எம் தமிழை சொச்சைப்படுத்தியும், இழிவு படுத்தியும் தமிழ்த்திரைப்படங்களே இது வரை பார்த்திருந்தோம்!!! ஆனால் இங்கோ எம் தமிழ் உச்சரித்த விதம் அழகு!!!

படத்தில் ஹீரோ, ஹீரோயினின் நடிப்புக்கு நிகராக ஏனையோரும் நடித்திருக்கிறார்கள். ஆனால் சிலரது நடிப்புகளில் நாடகப்பாணி தென்படுகிறது(புது நடிகர்களாக இருக்கலாம்).

இசை .... எம் கலைஜர்களில் இன்றுவரை முழு நேர தொழிலாக கலையை கொண்டிருப்பவர்கள் எவருமில்லை!! நிரூவின் பயணமும் அவ்வாறே தொடங்கியது ... ஈழத்திலிருந்து பிரான்சுக்கு அகதியாய் .... இசை மீது ஏற்பட்ட மோகத்தினால் ... இசையை முறையாக படிக்காவிடினும் .... சில அல்பங்களை வெளியிட்டு இசைப்பயணம் தொடங்கி .... இன்றி ராமேஸ்வரம்.... அப்பாரம்!! ஏனைய தமிழக இசையமைப்பாளர்களுக்கு இணையாக செய்து முடித்திருக்கிறார்!!!

இராமேஸ்வரத்தின் அழகு ..... கமராமான் முழுவதுமாக சுருட்டி கமராவுக்குள் போட்டுள்ளார்!!!

கதை...... இது மண்டப அகதி ஒவ்வொருவரினது கதை! கூறிய விதம் அருமை!! அங்குள்ள எம்மவர்கள் இந்திய புலனாய்வுத்துறையினராலும், காவல்துறையினராலும் படும் இம்சைகளை .... அழகிய ஒரு காதல் கதையின் பின்னனியில் எடுத்துக்காட்டிய விதம் .... நிச்சயமாக இறுக்கப்பூட்டிய சில தமிழக மக்களின் இதயங்களையாவது திறக்கப்பார்க்கும்!!! இயக்குனருக்கு நன்றிகள்!!!

மொத்தத்தில் ராமேஸ்வரம் என்றால் பாலமோ! கோயிலோ!! அகதிமுகாமோ!! எம் கண் முன் வரும். ஆனால் அவற்றை இக்கலைச்சிற்பம் மாற்றீடு செய்திருக்கிறது!!!.

எமக்கு இன்று தேவை ஆனிவேர்களல்ல ராமேஸ்வரங்களே!!! நிச்சயமாக ராமேஸ்வரம் திரப்படமானது தமிழக, தமிழீழ மக்களுக்கு இன்னொரு பாலத்தை திறந்திருக்கிறது!!!!

Link to comment
Share on other sites

என் இனிய உறவுகளின் கருத்துகளுக்கு நன்றி!

நமக்காக ஒரு நல்ல சினிமா வளர காலம் எடுக்கும்.

ஆனால்

நம்மை பற்றி வரும் திரைப்படங்களுக்கு ஆதரவு கொடுப்பது

இது போன்ற திரைப்படங்கள் உருவாக தொடர்ந்தும் வழி செய்யும்.

ஒரு வழியில்

அது ஒரு வியாபாரம் என்று பட்டால் கூட

நமது வேதனைகளை

நமது பிரச்சனைகளை சொல்ல வருவோரை

நாமே தாக்க முனைவது அல்லது

தாக்குவது நமக்கே தீங்காக விளையும்?

இப்படிச் சொன்னால்

இவை எதிர் கருத்துகள் போல்தான் இருக்கும்.

ஆனாலும் இவற்றின் பாதிப்பு

நம்மை அறியாமலே அதிகம்.

அதாவது குறிப்பாக

புலம் பெயர் நாடுகளில்

ஏகப்பட்ட தமிழ் ஊடகங்கள் இருந்தன

இன்னும் இருக்கின்றன.

சில ஊடகங்கள்

தமிழர் தொடர்பான செய்திகளை

தாங்கள் மட்டுமே கொண்டுவர வேண்டும் என்று

எத்தனித்ததன் பயன் காரணமாக

பல தமிழ் ஆர்வு ஊடகங்கள் சோர்ந்து போயின.

சில எதிரணிகளின் கைகளில் சிக்கின.

இவை யதார்த்த உண்மை!

பல கலைஞர்களும் ஆர்வலர்களும் கூட இங்கே அடக்கம்.

TTN போன்ற ஊடகங்களின் தடை நிலைக்கு பின்னர்

ஏனைய ஊடகங்களால்தான்

செய்திகளை ஒளி - ஒலிபரப்ப முடிகின்றன.

ஆரம்பம் முதலே

செய்திகளையும் - நிகழ்்வுகளையும்

அனைத்து ஊடகங்களுக்கும் வழங்கியிருந்தால்

அனைத்து ஊடகங்களையும் வளர்க்க வழி செய்திருந்தால்

பல நல்ல மாற்றங்கள் ஏற்பட்டே இருக்கும்.

அது நம்மில் ஒரு ஒற்றுமை உணர்வை மேலும் ஏற்படுத்தியேயிருக்கும்.

ஒரு பக்க தடை ஏற்பட்ட போது

மறு புறத்தே சிலவற்றை செய்ய

ஒரு சில சகோதர ஊடகங்கள் இருக்கிறது எனும்

நம்பிக்கை கூட நமக்குள் இருந்திருக்கும்.

இது போலத்தான்

தமிழகத்தில் இருந்து ஒரு ஆர்வலர்

உருவாக்கும் நம்மவர் குறித்த ஒரு திரைப்படத்தின்

தோல்விக்கு நாமே காரணமானால்

இலங்கை தமிழ் சினிமாவை நாமே பார்க்காமல் அழித்தது போல

நம்மவர் குறித்த அடுத்தவர் பார்வைகள் கொண்ட

நல்ல படைப்புகள் கூட

எதிர்காலத்தில் தொடராமல் போய்விடும்?

விமர்சிப்பது என்பது வேறு

பார்க்காமலே வெறுப்பது என்பது வேறு

நாம் எதைச் செய்ய வேண்டும்?

உலகத் தமிழர்களே ஒன்று படுங்கள் என்பதை

இப்படியான சிறு செயல்களால் கூட

செய்ய முடியுமா?

முடியாதா?

நன்றி!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கண்ணோட்டம் அஜீவன்.

நானும் தொடக்கத்தில் வழமையாக ஈழத்தைக் கொச்சைப்படுத்தி வருகின்ற படமோ எனச் சந்தேகித்து விட்டேன். உங்களின் தெளிவாக்கலுக்கு நன்றிகள்.உங்களின் நாடுகளில் படம் வெளியிடப்படா விட்டால், அதை உரிமம் கொண்ட விநியோகஸ்தரிடம் ஒளிப்பேழைகளை வாங்குவது படத்துக்கான ஊக்குவிப்பாக அமையும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இராமே'ஸ்வரம்' திரைக்காவியம் பற்றி...

தூரிகை வரையும் ஓவியங்கள்

பேசினால் அவன் தான் ஓவியன் !

திரையில் கூட பாத்திரங்கள்

நம்மோடு கலந்துவிட்டால் அது காவியமாகிறது, சேதுபடத்திற்கு பிறகு ஒரு நேர்த்தியாக, இயல்பை எடுத்தப்படம் இராமேஸ்வரம்.

இராமேஸ்வரம் படத்தை திரைப்படம் என்ற அளவு, இலக்கணத்தில் என்னால் விமர்சிக்க முடியாது, படம் தொடங்கிய நொடியில் இருந்து முடியும் வரை இராமேஸ்வரத்தில் ஈழத்தமிழர்களின் முகாம்களில் நடப்பதை நேரடியாக பார்த்தது போன்று உணர்வு.

அகதிகளுக்கு காதல் உணர்வு வரலாமா ? ஏற்படும் காதலினால் வந்து தங்கி இருக்கும் இடத்தில் வலியையும் வேதனையும் மறந்துவிடலாமா ? அப்படி இந்திய மண்ணில், இங்குள்ள தமிழ் பெண்ணின் மேல் காதல் வந்தால் அதனை ஏற்பதற்கு எந்தவகையான தியாகங்களெல்லாம் தேவைப்படுகிறது என்பது தான் கதை.

ஜீவன் என்ற பெயரில் அகதியாக இராமேஸ்வரம் வந்திறங்கும் ஜீவா, கடைசிவரை ஜீவாவாக இல்லாமல் ஜீவனாகவே கதைக்கும் ஜீவனாகவே வாழ்ந்திருக்கிறார். அவரை துறத்தி துறத்தி காதலிக்கும் அழகிய பட்டாம் பூச்சியாகவும், நகைச்சுவைக்காவும் பாவனா கலக்கி இருக்கிறார். காட்சிக்கு காட்சி பாவனா அழகு பதுமையாகவே செய்திருக்கிறார். மலர் புகைப்பட போட்டிக்கும் பாவனாவின் பூவுனுடன் சேர்ந்த பட்டாம் பூச்சிபோலவே இருக்கிறார், அவரின் ஸ்டில் ஒன்றை கொடுக்கலாம் ( இங்கு எழுதியதில் இது மட்டுமே என் காமடி, அமீரகம் நண்பர்கள் படம் பார்க்க கிளம்பிடுவாங்க)

ஈழத்திலிருந்து வந்த ஒரு ஜோடி ஏழுவருடம் தங்களுக்குள் இருந்த காதலை மறந்து ஈழத்தை நினைத்தப்படி எரியும் ஈழத்தின் நினைவு தீயில் காதலை எரித்துக் கொண்டு திரும்பும் நாள் நோக்கி எண்ணிக் கொண்டிருக்கும் சில நிகழ்வுகள் ஆகியவற்றை உணர்வாக வடித்திருக்கிறார்கள்.

படத்தில் ஈழத்தமிழர்கள் பாத்திரம் மேற்றிருப்பவர்கள் அனைவரும் உணர்வை தோய்த்துப் பேசி உணர்ச்சி காவியம் ஆக்கி இருக்கிறார்கள். மணிவண்ணன் 30 நிமிட காட்சிகளில் இருந்தாலும், ஈழ ஆசிரியர் ஒருவரை கண்ணுக் கொண்டு வந்து உணர்வுக்குள் மறைந்து போகிறார்.

தமிழ்நாட்டுக்காரராக பாவனாவின் அப்பாவாக நடித்திருப்பவர் (மலையாள நடிகர் லால்) மிக அருமையான குணச்சித்ர நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். அதற்கு முன்பு பலபடங்களில் வில்லனாகவே நடித்தவர். சண்டைக் கோழி படத்தில் வில்லனாக வந்து இறுதி காட்சியில் விசாலுடன் மோதுவாரே அவர்தான்.

போஸ்வெங்கட் படத்தில் பாவனாவின் முறைமாமன், ஒருதலையாக பாவனாவை காதலிப்பவர், பாவனா ஜீவாவை காதலிப்பதை ஏற்கமுடியாம்ல் வில்லனாக மாறுகிறார். அவர் நடிப்பில் உச்சத்தில் அவரை பலரும் சபிக்கும் படி இயல்பாக, பார்வையாளர்களின் வில்லன் மீதான வெறுப்பை வரவழைக்கும் படி நன்றாகவே செய்திருக்கிறார்.

அகதி என்ற ஒரு சொல் தரும் வேதனையும், ஆதரவு கிடைக்கும் மண்ணில் நிகழும் ஒருசிலரின் துவேசங்களும் எப்படி உணர்வுகளைக் கொல்கிறது என்பதை படம் பார்பவர்கள் புரிந்து கொள்வார்கள். அகதிகள் முகாம், என்பதை ஜீவா 'புலம்பெயர்ந்தோர் முகாம்' என்று மாற்றுவதும், அதைத் தொடர்ந்து 'பெயரை மாற்றினால் எலலாம் மாறிவிடுமா ?' என்று ஈழப்பெண் கேட்கும் போது, 'எல்லாமும் மாறனும், முதலில் இதை மாற்றுகிறேன், எனது பங்களிப்பு என்று இதுவாக இருக்கட்டும்' என்ற வசனம் பேசும் போது ஜீவனாக தெரியாமல் நடிகர் ஜீவாக ஈழத்தமிழரின் நலனில் அவரது பங்களிப்பு என்பதை படம் பார்பவர்களும் புரிந்து கொள்வர்.

கொடுப்பவரின் மகிழ்வை விட ஏற்பவர்களின் வலி எத்தகையது என்பதை நன்றாக சொல்லி இருக்கிறார்கள். இசை என்.நிரு, அவர் ஈழமைந்தர் என்பதால் பாடல்களின் உணர்வையை சேர்த்து இசை அமைத்திருக்கிறார். 'எல்லோரையும் ஏற்றிப் போக கப்பல் வருமா ? ' என்ற ஏக்கப்பாடல் மகிழ்ச்சியின் பின்னனியில் பாடப்பட்டாலும் அதிலுள்ள சோகம் மட்டுமே உணரமுடிகிறது. இயக்கம், கதை வசனம் எஸ் செல்வம், ஒவ்வொரு வசனமும் பேசுவது தத்துவமா ? உணர்வா ? இயல்பா ? சொல்லத் தெரியவில்லை. எல்லாம் ஒருங்கே சேர்ந்த உணர்வுவரிகள்.

ஜீவினின் (ஜீவா) ஒரு நிமிட நினைவில் ஈழத்தில் விமானங்கள் குண்டு மழைபொழியும் ஒரே ஒரு காட்சியே நம்மை உணர்ச்சி வசப்பட வைக்கிறது, அதே சூழலில் இருப்பவர்களின் நிலை சொல்லவும் வேண்டுமா ?

ஈழத்தமிழர்கள் மீது உண்மையிலேயே அக்கறை உள்ளவர்கள், புலம்பெயரும் ஈழத்தமிழர்களைப் பற்றி ஓரளவாவது புரிந்து கொள்ள இந்த படம் மிகச்சிறந்த படம். மற்றவர்களுக்கெல்லாம் மற்றொரு திரைப்படம் போல் தான் தெரியும்.

இறுதி காட்சியில் ஜீவாவின் நடிப்பிற்கும், சண்டைக்காட்சிகளுக்கும் அவரை பலமுறை பாராட்டலாம், ஈழத்தமிழர்களின் 'நலன்' என்று வாய்கிழிய பேசும், நடிகர்கள், அரசியல்வாதிகள், குறிப்பாக 'சோ' த்தனமானவர்கள் போல் இன்றி ஜீவா மற்றும் பாவானா ஆகியோர் இந்தப்படத்தில் தயக்கமின்றி நடித்தது உண்மையிலேயே பாராட்டப் படவேண்டியவை. அமையப்போகும் தமீழத்தில் தனக்கென ஒரு பெயரை ஜீவா பதித்துக் கொண்டார். வாழ்க வளர்க !

இராமே'ஸ்வரம்' படமல்ல ... உணர்வால் கலந்து ஒன்றிணைந்த தமிழர்களின் பல உணர்வுகளை மீட்டும் ஒரு காவியம் !

http://govikannan.blogspot.com/2007/12/blog-post_3686.html

ஆக்கத்தின் மூல இணைப்பு வழங்கப்பட்டுள்ளது- யாழ்பாடி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல படம் நல்ல இசை... அது சரி எம் உயிரனினும் மேலான ஈழத்தமிழ் உறவுகளே என்று குறிபிட்டிருந்தார்... இதற்கு என்ன அர்த்தம். எல்லோரும் எழுந்தமானத்தில் இந்த வார்த்தையைப் பயன்படுத்தலாமா... மற்றது ஈழத்தமிழர்கள் தான் திருட்டு வீ.சீடீ யை உருவாக்குகிறார்களா?

Link to comment
Share on other sites

நன்றி தூயவன்.

நல்ல படம் நல்ல இசை... அது சரி எம் உயிரனினும் மேலான ஈழத்தமிழ் உறவுகளே என்று குறிபிட்டிருந்தார்... இதற்கு என்ன அர்த்தம். எல்லோரும் எழுந்தமானத்தில் இந்த வார்த்தையைப் பயன்படுத்தலாமா... மற்றது ஈழத்தமிழர்கள் தான் திருட்டு வீ.சீடீ யை உருவாக்குகிறார்களா?

திருட்டு வீசீடி டீவீடியை

ஏனைய நாட்டினர் யார் விட்டாலும்

ஈழத் தமிழர் தொடர்பான ஒரு திரைப்படத்தை

புலம்பெயர் ஈழத் தமிழர்கள்

விழ விடக்கூடாது எனும் கருத்திலாக இருக்கக் கூடும் .

எம்மவரிடம் வேண்டுதலாக செய்திருக்கலாம்?

அது சரி எம் உயிரனினும் மேலான ஈழத்தமிழ் உறவுகளே என்று குறிபிட்டிருந்தார்... இதற்கு என்ன அர்த்தம். எல்லோரும் எழுந்தமானத்தில் இந்த வார்த்தையைப் பயன்படுத்தலாமா

புலம் பெயர்ந்து வாழும் நம்மவர்

வாழும் நாட்டு குடியுரிமை பெற்று வாழும் நாட்டை

அது தமது நாடு என சொல்ல முடியுமானால்

மனதால் ஒரு ஈழத் தமிழனாக வாழும்

எவராலும் அவர் விரும்பியதை சொல்லலாம்தானே?

வா என்றும் சொல்கிறார்கள்?

வந்தால்

ஏன் வந்தாய் என்றும் கேட்கிறார்கள்? :unsure:

தமிழனுக்கு ஒரு நாடு வேண்டும் எனும்

கோஸம் மட்டும் போதாது

இணைபவரை அணைத்துக் கொள்ளும் மனமும் வேண்டும்.

வார்த்தைகளை விட

நடைமுறைகளே உயர்ந்தவை

நன்றி

Link to comment
Share on other sites

சில ஊடகங்கள்

தமிழர் தொடர்பான செய்திகளை

தாங்கள் மட்டுமே கொண்டுவர வேண்டும் என்று

எத்தனித்ததன் பயன் காரணமாக

பல தமிழ் ஆர்வு ஊடகங்கள் சோர்ந்து போயின.

சில எதிரணிகளின் கைகளில் சிக்கின.

இவை யதார்த்த உண்மை!

பல கலைஞர்களும் ஆர்வலர்களும் கூட இங்கே அடக்கம்.

TTN போன்ற ஊடகங்களின் தடை நிலைக்கு பின்னர்

ஏனைய ஊடகங்களால்தான்

செய்திகளை ஒளி - ஒலிபரப்ப முடிகின்றன.

ஆரம்பம் முதலே

செய்திகளையும் - நிகழ்்வுகளையும்

அனைத்து ஊடகங்களுக்கும் வழங்கியிருந்தால்

அனைத்து ஊடகங்களையும் வளர்க்க வழி செய்திருந்தால்

பல நல்ல மாற்றங்கள் ஏற்பட்டே இருக்கும்.

அது நம்மில் ஒரு ஒற்றுமை உணர்வை மேலும் ஏற்படுத்தியேயிருக்கும்.

ஒரு பக்க தடை ஏற்பட்ட போது

மறு புறத்தே சிலவற்றை செய்ய

ஒரு சில சகோதர ஊடகங்கள் இருக்கிறது எனும்

நம்பிக்கை கூட நமக்குள் இருந்திருக்கும்.

நன்றி!

நன்றி ஜீவன்,

மிக முக்கியமான ஒரு கோட்பாடு விவாதத்தை தொட்டிருக்கிறீர்கள். இது தொடர்பாக 1996ல் இருந்தே நமது தாய் மண் தளத்தில் விவாதித்து வருகிறேன். அனைத்து ஊஉடகங்களுக்கும் வளங்குவதன் அவசியன் தொடர்பாக வலியுறுத்தினேஎன். பெயர் புலத்தில் தனியார் துறை பெரூம்பாலும் விடுதலை ஆதரவாளார்களாக இருக்கும் நிலையில் கைவசம் இருக்ககும் வர்த்தக ஊடக வழிபாட்டு நிறுவனங்களையும் தனியார் மயப்படுத்துதல் அவசியம் என்கிற விவாத்தை வைத்து வருகிறேஎன். புலம்ம் பெயர்ந்த தனியார் துறைக்கு தனியார் அமைப்புகளுக்கும் விடுதலை ஆதரவு அமைஇப்புகள் போட்டியாகாமல் "ஆயிரம் மலர்கள் மலரட்டும் ஆயிரமும் ஈழ விடுதலையை அலங்கரிக்கட்டும்" என்கிற வழியை பின்பற்ற வேண்டும் என்பதே எனது விவாதம். இத்தகைய போட்டியினால் நண்பர்களை எதிரிகளாக உருவாக்கி வருகிறோம். இதுபற்றி இப்போது கரிசனை ஏற்பட்டு வருகிறது. ஆயிரம் மலர்கள் மலரட்டும் ஆயிரமும் விடுதலையைஆதரிக் கட்டும்.

Link to comment
Share on other sites

நன்றி ஜீவன்,

மிக முக்கியமான ஒரு கோட்பாடு விவாதத்தை தொட்டிருக்கிறீர்கள். இது தொடர்பாக 1996ல் இருந்தே நமது தாய் மண் தளத்தில் விவாதித்து வருகிறேன். அனைத்து ஊடகங்களுக்கும் வளங்குவதன் அவசியம் தொடர்பாக வலியுறுத்தினேஎன். பெயர் புலத்தில் தனியார் துறை பெரூம்பாலும் விடுதலை ஆதரவாளார்களாக இருக்கும் நிலையில் கைவசம் இருக்ககும் வர்த்தக ஊடக வழிபாட்டு நிறுவனங்களையும் தனியார் மயப்படுத்துதல் அவசியம் என்கிற விவாத்தை வைத்து வருகிறேன். புலம் பெயர்ந்த தனியார் துறைக்கு தனியார் அமைப்புகளுக்கும் விடுதலை ஆதரவு அமைப்புகள் போட்டியாகாமல்

"ஆயிரம் மலர்கள் மலரட்டும் ஆயிரமும் ஈழ விடுதலையை அலங்கரிக்கட்டும்"

என்கிற வழியை பின்பற்ற வேண்டும் என்பதே எனது விவாதம்.

இத்தகைய போட்டியினால் நண்பர்களை எதிரிகளாக உருவாக்கி வருகிறோம்.

இதுபற்றி இப்போது கரிசனை ஏற்பட்டு வருகிறது.

ஆயிரம் மலர்கள் மலரட்டும் ஆயிரமும் விடுதலையை ஆதரிக் கட்டும்.

நன்றி பொயட்

Link to comment
Share on other sites

ராமேஸ்வரம் - விமர்சனம்

உலகமே கவனிக்கிறது ஈழத்தமிழர் பிரச்சனையை! அவர்களில் ஒருவருக்கு நடக்கிற காதல் பிரச்சனையை கவனித்திருக்கிறார் இயக்குனர் செல்வம்.

கூட்டம் கூட்டமாக வந்திறங்கும் ஈழத்தமிழர்களுக்கு அடைக்கலம் கொடுக்கும் ராமேஸ்வரத்தில் நடக்கிறது கதை. யாழ்பாணத்திற்கும் ஈழத்தமிழர்கள் பரவிக்கிடக்கும் பிற நாடுகளுக்கும் இடையே உள்ள தூரங்களை அளக்கும் டைரக்டர், 'ராமேஸ்வரம் யாழ்பாணத்திலிருந்து 36 மைல்' என்று டைட்டில் கார்டு போடுகிறாரே, அங்கேதான் புதைந்து கிடக்கிறது எண்ணிலடங்கா அர்த்தங்களும், வெளிப்படுத்த முடியாத ஏக்கங்களும்! அதை கடைசிவரை வெளிப்படுத்த முடியாமலே தவி(ர்)த்திருக்கிறார் இயக்குனர்.

தன் ஒரே சொந்தமான தாத்தாவுடன் ராமேஸ்வரத்திற்கு வரும் ஜீவாவிற்கு, மறுபடியும் இலங்கைக்கே போய்விட வேண்டும் என்ற தவிப்பு. இங்கே முதல் பார்வையிலேயே இவர் மேல் காதல் வயப்படும் பாவனாவுக்கோ ஜீவனை கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்ற ஆசை. ராமேஸ்வரத்திற்கு வந்திறங்கும் எல்லா ஈழத்தமிழர்களுக்கும் உதவிக்கரம் நீட்டும் பணக்கார லால், தன் மகளை ஈழத்திலிருந்து வந்த ஒருவனுக்கு தர சம்மதிப்பாரா? ஆரம்பிக்கிறது காதல் யுத்தம்! ஒரு பைசாவுக்கு வழியில்லாத அகதி நீ என்று இவரும், ஒரு பைசாவுக்கு வழியில்லாத அகதிதான் நான். என்ன வேணாலும் செய்வேன் என்று ஜீவாவும் முட்டிக் கொள்ள, தவியாய் தவிக்கிறது பாவனாவின் காதல். இடையில் பாவனாவின் முறைமாமன் இன்ஸ்பெக்டர் போஸ் வெங்கட்டும் சேர்ந்து கொள்ள, திரையில் கலவர சுனாமி. பாவனா காதல் என்னாச்சு என்பது விறுவிறுப்பான கடைசி ரீல்!

கண்களில் ஏக்கமும் கோபமும் தெறிக்க, மூடி வைத்த கங்கு போல் கொதித்திருக்கிறார் ஜீவன். திரும்ப திரும்ப தொல்லை தரும் பாவனாவின் கன்னத்தில் பளார் என்று அறைந்துவிட்டு யதார்த்தத்தை எடுத்துச் சொல்கிறாரே... ஒவ்வொரு வார்த்தைகளும் கன்னத்தில் அறையும் நிஜங்கள். குழந்தைகளுக்கு சட்டை துணிகள் வாங்கிவரும் லால், அதை தன் கையால் கொடுக்க நினைக்க, வேண்டாம் என்று மறுத்துவிடும் ஜீவன், அதற்கு சொல்லும் காரணம் நெகிழ்வு. நீ அகதிதானே என்று கேட்கும் பாவனாவிடம், ஆமாம்... அகதிதான் என்று எரிந்து விழுந்துவிட்டு, முகாமிற்கு வந்து அகதிகள் முகாம் என்பதை, புலம் பெயர்ந்த தமிழர்கள் முகாம் என்று மாற்றி எழுதும்போது தமிழனுக்கான சுயமரியாதை தலை நிமிர்ந்து நிற்கிறது. படம் முழுக்க யுத்தபூமியிலிருந்து எழுந்து வந்தவர்போல் நிஜத்தை அப்படியே வெளிப்படுத்தியிருக்கிறார் ஜீவா.

ஏன் காதலிக்கிறார் என்பதற்கு அழுத்தமான காரணங்கள் இல்லையென்றாலும், பாவனாவின் துரத்தல்கள் கவிதை. யுத்தத்திற்கு பிறகு உங்க ஊரிலே காதலே நடக்கலையா? குழந்தையே பிறக்கலையா? என்று ஜீவனை மடக்குவது அழகு. வழக்கமான சினிமா காதலிகள் போல, முறைமாமன் அடிவாங்குவதை ரசிப்பது கொடுமை. கன்றுகுட்டிக்கு தன் புடவை தலைப்பால் ஈரம் துடைத்துவிட்டு, விலகிய மாராப்பை ஜீவா பார்த்திருப்பாரோ என்று பதறி தவிப்பது சுவாரஸ்யம்.

'வசந்தியை நான் உனக்கு கொடுக்கலை, நீ எனக்கு கொடுத்திட்டே' என்று சரண்டர் ஆகும் லால், வழக்கம்போல் கம்பீரம்! சின்ன சின்ன பாத்திரங்கள் கூட கவிதையாக செதுக்கப்பட்டிருக்கின்றன. நாம என்ன பிக்னிக்கா வந்திருக்கோம், காதலிக்க? என்று காதலில் விழுந்த ஜீவனின் மனசை ஷேக் பண்ணும் சாந்தி, ஒரு காலை இழந்த சம்பத், தன் ஊரில் வசிக்கும் குருவிக்காக கவலைப்படும் அந்த சிறுமி என்று எல்லா பாத்திரங்களும் மனசுக்குள் ஒரு கீறலையாவது ஏற்படுத்துகிறார்கள்.

இவ்வளவு பெரிய தழும்பா? என்று கலவரப்படும் அதிகாரியிடம், இதுதான் எங்க ஊர்ல சின்ன தழும்பு என்று அலட்சியம் காட்டும் மணிவண்ணன் சில காட்சிகளே வந்தாலும் தழும்பாக அல்ல, அடையாளமாக பதிகிறார்.

இசையை கருவியிலிருந்து உருவாக்காமல், உணர்வின் கருவறைக்குள்ளிருந்து உருவாக்கியிருக்கிறார் இசையமைப்பாளர் நிரு. 'எல்லாரையும் ஏத்திப்போக கப்பல் வருமா...' இசையும், வரிகளும் மனசை பிசைந்திருக்கிறது. ஆர்.பி.குருதேவின் ஒளிப்பதிவு ஓவியம்!

கலையா? கமர்ஷியலா? தடுமாறியிருக்கிறார் இயக்குனர். இன்னும் கொஞ்சம் சிரத்தை எடுத்திருந்தால் வரமாக வந்திருக்கும் இந்த ராமேஸ்வரம்!

-ஆர்.எஸ்.அந்தணன்

http://www.tamilcinema.com/CINENEWS/REVIEW...rameshwaram.asp

Link to comment
Share on other sites

இணைப்புக்கு நன்றி சோழன்.

இந்த விமர்சனத்தை

தனித் தலைப்பாக மாற்றி விடுகிறேன்.

காரணம்

இந்த சச்சரவுக்குள் இதுவும் அல்லல்பட வேண்டாமே?

நன்றி சோழன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது என்ன தனிப்பட்ட கருத்து. யாரையும் தாக்குவதற்காக எழுதவில்லை.

இந்த திரைப்படம் ஈழத்தமிழருக்கு ஆதரவானதா இல்லையா என்பதை நான் இங்கு விவாதிக்கவில்லை.

இந்த திரைப்படத்தை ஈழத்தமிழர் பார்ப்பதனால் கிடைக்கும் வருமானம் இந்தியாவுக்கு தானே போகின்றது?

இந்தியாவுக்கு அன்னியசெலாவனி வருமானம் கிடைக்கின்றது. அதற்காக இந்த சிறிய வருமானத்தை நம்பியா இந்தியா இருக்கின்றது என்று எழுதி உங்கள் எழுத்து திறமையை காட்டவேண்டாம்.

சிறு துளி தான் பெரு வெள்ளம்

ஈழத்தில் எடுக்கபடும் திரைப்படங்களை ஒரு முறைக்கு இரு முறை பாருங்கள். அதை உற்சாகபடுத்துங்கள்.

இது நமது கலைஞர்களை உற்சாக படுத்தும் அதோடு கலையை வளர்கவும் உதவும் நமது தேசத்தில்

ஏதோ ஒரு விதத்தில் நாம் எம்மையே நாம் முட்டாளாக்குகின்றோம்.

இங்கு ஒரு சிலர் பந்தி பந்தியா எழுதுவினம் சீறிலங்காவின் பொருட்களை புலம் பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழரை வாங்கவேண்டாம் என்று. ஆனால் சிங்களவனுக்கு பலவிதத்திலும் ஈழ தமிழரை அழிக்க உதவும் இந்தியாவிலிருந்து வரும் தமிழ் படத்துக்கு ஆதரவு வழங்கிவினம்...... இதனால் வரும் வருமானம் இந்தியாவுக்கு தான் செல்கின்றது. தனிப்பட்ட மனிதனுக்கு இல்லை

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.