Jump to content

`ருவென்ரி - 20' உலகக் கிண்ணப் போட்டிக்குப் பின்னர் தென் ஆபிரிக்காவில் இனத்துவேஷ பிரசாரம்


Recommended Posts

`ருவென்ரி - 20' உலகக் கிண்ணப் போட்டிக்குப் பின்னர் தென் ஆபிரிக்காவில் இனத்துவேஷ பிரசாரம்

[04 - October - 2007] [Font Size - A - A - A]

*புதிய சர்ச்சை கிளம்புகிறது

`ருவென்ரி-20' தொடரில் சாம்பியன் கிண்ணம் வென்ற இந்திய அணிக்கு ஆதரவு தெரிவித்த இந்திய வம்சாவளியினர் குறித்து தென் ஆபிரிக்க பத்திரிகையில் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது. இவர்களது நாட்டுப் பற்று குறித்து கேள்வி எழுப்பியுள்ளதால், பெரும் சர்ச்சை வெடித்துள்ளது.

சமீபத்தில் தென் ஆபிரிக்காவில் முதலாவது `ருவென்ரி-20' உலகக் கிண்ணத் தொடர் நடந்தது. இதில் அபாரமாக ஆடிய இந்திய வீரர்கள், முன்னணி அணிகளான தென் ஆபிரிக்கா, அவுஸ்திரேலியா, பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியன் கிண்ணத்தை வென்றனர். `ருவென்ரி - 20' கிண்ணத்தை கைப்பற்றிய உற்சாகத்தில் இந்தியா இருக்கும் போது, தென் ஆபிரிக்க பத்திரிகையில் வெளியான செய்தி சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இத்தொடரில் நடந்த `சுப்ப -8' மோதலில் இந்திய அணி, தென் ஆபிரிக்காவை வீழ்த்தியது. இப்போட்டியின் போது டேர்பனில் வாழும் இந்திய வம்சாவளியினர் அணிக்கு ஆதரவு தெரிவித்து கோஷம் எழுப்பினர். இது இனவெறியைத் தூண்டுவது போல் இருந்ததாக கறுப்பு இன பத்திரிகையாளரான பிலானி மக்வாபா என்பவர் `சண்டே ரிபியூனில்' எழுதியுள்ள கட்டுரையில் விமர்சித்துள்ளார்.

"மிக முக்கியமான `சுப்ப -8' போட்டியில் இந்திய வம்சாவளியினர் தென் ஆபிரிக்காவுக்கு ஆதவரளித்திருக்க வேண்டும். மாறாக இவர்கள் இந்திய அணியை உற்சாகப்படுத்தினர். இது இவர்களது நாட்டுப்பற்று குறித்து கேள்வி எழுப்பச் செய்துள்ளது. இந்தியர்கள் மற்றும் ஆபிரிக்க பெரும்பான்மையினர் மத்தியில் நிலவும் இனவேறுபாட்டையும் சுட்டிக்காட்டியுள்ளது" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இவரது இந்தக் கருத்துக்கு இந்திய வம்சாவளியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது குறித்து பலரும் `சண்டே ரிபியூன்' பத்திரிகைக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். ஜனநாயக முறையில் எந்த ஒரு அணிக்கும் ஆதரவு தெரிவிக்கும் உரிமை தங்களுக்கு உள்ளதாக கூறியுள்ளனர்.

லோகன் இயாலூ என்பவர் எழுதியுள்ள கடிதத்தில்;

" இங்கு ஜனநாயகம் மலர்ந்து பல ஆண்டுகளான போதும் `இந்தியர்' என்று பிரித்துத் தான் பார்க்கிறார்கள். அப்படியிருக்கையில் தென் ஆபிரிக்காவுக்கு தான் ஆதரவளிக்க வேண்டும் என்று கூறுவது எந்தவிதத்தில் நியாயம். நான் இங்கு ஐந்தாவது தலைமுறையாக வாழும் தென் ஆபிரிக்கர். ஆனாலும் என்னை `இந்தியர்' என்று தான் குறிப்பிடுகிறார்கள்.

இனவெறிக்கு எதிரான போராட்ட காலத்தில் எங்களை கறுப்பின சகோதர, சகோதரிகள் என்றனர். இப்போது இவர்களது வசதிக்காக இந்தியர்கள் என்று வேறுபடுத்துகின்றனர்" என காட்டமாக கூறியுள்ளார்.

thinakural.com

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.