Jump to content

ராமர் பாலம் கட்டவில்லை.....மத்திய தொல்பொருள் ஆரய்ச்சியாளர் துறை அறிவிப்பு !!!


narathar

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஆரம்பத்தில் நீங்கள் கருத்தாடிய சமயம் என்ற வட்டத்துக்குள் நின்றே தற்போதும் கருத்தாடல் செய்வதால்.. உங்களின் கருத்துக்களுக்கு மேலதிக ஆழமான பார்வை அவசியமானதாக நான் கருதவில்லை. நீங்கள் சமயம் தான் மக்களின் பிரச்சனைக்குக் காரணம் என்ற அடிப்படைக்குள் இருந்து வெளிவராமல் விடயங்களை அறிவுபூர்வமான அணுக முடியும் என்று நான் கருதவில்லை. அந்த வகையில் எனது நேரத்தைச் செலவிட்டு.. உங்கள், சமயத்தை குற்றவாளிக் கூண்டில் ஏற்றும் அறிவு விளக்கத்துக்கு விரிவான பதில் தேடுவதால் தீர்வு கிட்டும் என்று நான் கருதவில்லை. காரணம்.. நீங்கள் நடைமுறை உலக ஒழுங்குக்கு வெளியில் நின்று உலகை தரிச்சிக்க விரும்புகிறீர்கள். அது கூட ஒருவகை.. அறிவுபூர்வமற்ற நிலைதான்.

மிகவும் நல்லது. சமூகத்தின் மிக ஆழமாக வேரூண்டியுள்ள பிரச்சனைகளின் மொத்த உருவத்தின் ஒரு பகுதியை சுட்டிக் காட்டினேன். ஏற்பது, ஏற்காமல் விடுவது, அதைப்பற்றி சிந்திப்பது எல்லாம் தனிமனிதர்களை பொறுத்தது.

ஒரு பகுதியை அல்ல. உங்களின் "ஆழ்ந்த" சிந்தனையில்.. சமயம் தான் எல்லாப் பிரச்சனைகளின் மூலம் எங்கிறீர்கள். மனித வரலாற்றில் சமயம் என்பது எப்போது அவனால் அவனுக்கு என்று இயம்பப்பட்டது.. அதன் தேவை என்ன..??! அப்போதைய மனிதன் சந்தித்துக் கொண்டிருந்த பிரச்சனை என்ன..??! இப்படி ஆரம்ப அடிப்படைகளை நீங்கள் இனங்கண்டு.. இதைப் பற்றிக் கதைத்திருக்கிறீர்களா...??!

நீங்களே உங்களவில் தீர்மானித்தவைகளைக் கொண்டு ஆழநோக்குகிறோம் எங்கிறீர்கள்.. இரண்டு ஆங்கிலப் பதத்தை பாவித்து எழுதுவது ஆழ நோக்குதல் என்று அர்த்தமா..??.. இதுவல்ல... ஆழ நோக்குதல். இது தான் மக்கள் நோக்கி மாயைத்தனமாக ஒரு உலகை அறிவியல் என்று இனங்காட்டிக் கொண்டு..வழமையில் இருந்து நாம் மாறுபட்டவர்கள் என்ற தோற்றப்பாட்டைக் காட்டுவது. இதை யாழில் இன்னும் சிலரும் செய்கின்றனர். இவை ஆழ்ந்து நோக்குதலாக நான் காணவில்லை. காரணம்.. நீங்கள் எடுத்தாளும் விடயங்கள் ஒரு சில பதங்களைச் சுற்றிச் சுழங்கின்றதே தவிர அடிப்படைகளை நோக்கி ஆழ்ந்து நோக்கி காரணங்களைத் தேடுவதாகத் தெரியவில்லை. இதை வைத்தே உங்களின் கருத்துக்களைப் பற்றிய மதிப்பீட்டை செய்கிறேன். இதுவரை அதுதான் உங்கள் நிலை.

உங்களுக்கு சமயம் என்ற ஒரு வெறுப்புணர்வு ஆழமாக இருக்கிறதே தவிர.. எந்த விதமான நுட்பமான பார்வையும் இல்லை என்பதை நீங்கள் எடுத்ததற்கெல்லாம் சபேசன் போல சமயத்தைச் சாடுவது எடுத்துக் காட்டுகிறது.

இது என்னைப்பற்றிய உங்கள் சொந்த முடிவு. இதைத்தான் "உண்மையை" தெரியாமல் "ரியாலிட்டி"யில் வாழ்வதென்பது. என்னைப் பற்றிய அத்தனை முடிவுகளும் உங்களளவில் வைத்து எடைபோடுவதே அன்றி வேறேதும் இல்லை. மற்றது சமயம் என்பதன் மீது எனக்கு வெறுப்போ அல்லது ஆசையோ இல்லை. சமயம் என்பதை எந்தவித திரிபுகளும் அல்லாமல் "அது எப்படி இருக்கிறதோ அப்படியே" பார்க்கிறேன்.

நீங்கள் வரையறுக்கும் உண்மைக்குள் மற்றவன் வாழ்வதுதான் அவனின் றியாலிட்டி என்பதும் தவறானது. உண்மைக்கு இதுதான் என்று ஒரு வரைவிலக்கணம் அறுதியிட்ட வடிவில் இல்லை. ஏலவே இதைப் பற்றி சுட்டிக்காட்டிய பின்னும். மனிதனைச் சுற்றி உண்மை என்பது காட்டப்படுகின்றனவே தவிர.. அறிவியலால் கூட.. அதுதான் அறுதியிட்ட உண்மை என்று எதுவும் வரையறுக்கப்படவில்லை. நீங்கள் இந்த உலகில் தரிசித்த அல்லது அறிவியல் கொண்டு விளங்கிய அறிதியிட்ட உண்மை என்ன... என்பதைச் சொல்லும் போது உங்களின் நிலையை மற்றவர்கள் விளங்கிக் கொள்ள முனைவார்கள். இதற்கு இரசாயனத் தாக்கம் நடத்த வேண்டிய தேவையில்லை. ஒரு மனிதனை அளவிடுதல் என்பது அவனின் உயரைத்த அளத்தல் அல்ல. அவன் வெளியிடும் கருத்தில் இருந்து அவனின் சிந்தனைப் போக்கை.. கண்டறிதல். உங்கள் கருத்துக்கள் உங்கள் கருத்துக்கள் பற்றிய அளவிடப் போதுமான காரணி என்று நான் நினைக்கிறேன். அதென்ன.. "நான்" என்பதால் நீங்கள் வரையறுத்துள்ளது...???! நீங்களும் இந்த பிரபஞ்சத் இந்த தொகுதியில் ஒரு கூறு. நான் " தனி மனிதன்" என்பதில்.. "தனி" என்பது கூட ஒரு எல்லை வரைதான். அதற்குமேல்.. நீங்கள் ஒரு பொதுக் கூறு. உலகில் உள்ள ஒரு பொதுக்கூறைப் பற்றி விளங்கிக் கொள்வது கடினமல்ல.

நான் சமயங்களுக்கு அப்பால் மனித சமூகத்தின் பிரச்சனைகளுக்கு வேறு காரணிகளும் இருக்கின்றன என்பதில் தெளிவானவன். நீங்கள் அறிவுபூர்வமாகக் கதைகிறேன் என்ற அடிப்படையைக் கொண்டு சுற்றிச் சுழன்று சமயத்துக்குள் தான் நிற்கிறீர்களே தவிர உலக மக்கள் எந்த வகைகளில் எல்லாம் அடக்குமுறைக்கு ஆளாகின்றனர் என்பதை அறிய முற்படுகிறீர்கள் இல்லை. நீங்கள் இங்கு கருத்தாடியது முதல் எதற்கு எடுத்தாலும் சமயம் சமயம் சமயம் என்றுதான் சமயத்தை வைத்து மனித சமூகத்தை எடைபோடை விளைகிறீர்களே தவிர.. இன்னுமொருவன் போன்றவர்கள் சுட்டிக்காட்டியது போல மனித சமூகம் சந்திக்கும் பல்வேறு அடக்குமுறை வடிவங்களை நீங்கள் இனங்காணவோ.. சுட்டிக்காட்டவோ இல்லை. மாறாக உங்கள் சிந்தனை என்பது சமயம் என்பதை பொய்ப்பிப்பது என்ற குறுகிய எல்லைக்குள் தான் சுழன்று கொண்டிருக்கிறது.

நல்லது. அனைத்துப் பிரச்சனைகளையும் மேம்போக்காக பார்க்காமல் அதன் அடிவரை சென்று பாருங்கள். அங்கு "சமயம்" என்பதும் இருக்கும். அப்படி இதுவரை பார்க்க முடியவில்லையானால் உங்களை நீங்கள் இன்னமும் கேள்விகளால் துளைக்கவில்லை என்று அர்த்தம். சமூகத்தின் பல்வேறு அடக்குமுறைகளையும், வாழ்க்கைமுறைகளின் குருட்டுத்தனமான கொள்கைகளையும் அடையாளம் கண்டிருக்கிறேன். ஆனால் எனக்கு நம்பிக்கை தரும்படி, இதில் நுணுகி ஆராயும்படியான "சீரியஸான" நபர்களை இன்னமும் சந்திக்கவில்லை. குறுக்ஸ், இன்னுமொருவன் போன்றவர்கள் இதில் ஆர்வமாக கருத்தாட தொடங்கினர். ஆனால் இந்த சமூகத்தின் பிறழ்வும், அதன் அதிமுக்கியத்துவமும் அவர்கள் மனதில் ஆழமாக தைத்திருக்குமானால் ஒன்றில் அவர்களாகவே அதன்மூல காரணங்களை நோக்கி சிந்திக்க தொடங்கியிருப்பர் அல்லது கேள்விகளால் என்னை துளைத்திருப்பர்.

இதற்கான உங்களின் முரண்பாடுகள் நீங்கள் எழுதிய இப்பந்தியிலேயே அமைகிறது. பாருங்கள்.

மிகவும் நல்லது. சமூகத்தின் மிக ஆழமாக வேரூண்டியுள்ள பிரச்சனைகளின் மொத்த உருவத்தின் ஒரு பகுதியை சுட்டிக் காட்டினேன். ஏற்பது, ஏற்காமல் விடுவது, அதைப்பற்றி சிந்திப்பது எல்லாம் தனிமனிதர்களை பொறுத்தது.

உங்களைப் போன்று சமயத்தைக் கொண்டு சமூகத்தை அளவிடுவதை சீரியஸாக நோக்க வேண்டிய தேவை உங்களைத் தவிர வேறு எந்த மனிதனுக்கும் இருப்பதாகத் தெரியவில்லை. மனிதன் எந்தனையோ விடயங்களில் நிச்சயமற்ற, ஆனால் நம்பிக்கைக்குரிய இலக்கை நோக்கித்தான் செயற்பட்டுக் கொண்டிருக்கிறான். அந்த வகையில் அவனுக்கு சமயங்கள் பற்றிய தாக்கம் என்பது ஒரு வரையறைக்கு உட்பட்டதுதான். சமய எண்ணங்கள் மனித இயற்றுகைகள். அந்த வகையில் அவற்றின் ஆழ்ந்த நோக்கல் என்பது மனிதப் புலனுக்குள் உள்ள ஒன்றுதான். ஒரு கணணியை வடிவமைத்த மனிதன் அதனைப் பற்றி 100% அறிந்திருப்பது சாத்தியம். ஆனால் இயற்கையாக வடிவமைக்கப்பட்ட மனித உடலைப் பற்றி மனிதன் 100% அறிய முடியாதுள்ளது. சமயத்தின் ஆழம், பரிமானம்.. தாக்கம் இவை அனைத்தும் மனித திட்டமிட்டவை. உங்களின் முயற்சி என்பது மனிதன் திட்டமிட்டு நடைமுறைப்படுத்தியதன் தாக்கத்தை ஆழ நோக்குதல் என்பது. மனிதன் திட்டமிடாத இயற்கையின் தாக்கமும் மனிதனை ஆளுமை செய்கிறது. அதை நீங்கள் கருத்தில் எடுப்பதாகத் தெரியவில்லை. அதனால் தான் உலகில் முக்கிய விஞ்ஞானியான அயன்ஸ்ரைன் கடவுள் என்பதை இயற்கைக்குள் வரையறுக்க முயற்சித்தார். கடவுள் என்பதை தனி ஒரு வடிவமாக அவர் காண மறுத்தார். காரணம்.. இயற்கைக்குள் தான் மனித அறிவியலுக்கு எட்டாத அம்சங்கள் இன்னும் நிறைந்திருக்கின்றன. கடவுள் என்பதும்.. அதற்குள் தான் பொதிந்திருக்கிறது. கடவுள் என்பது வேறு சமயம் என்பது வேறு. நீங்கள் இரண்டையும் ஒன்றாக்கி குழப்பிக் கொள்கிறீர்கள்.

சமயம் என்பது மனித கோட்பாட்டு வகுப்பில் இருந்து பிறந்தவை. கடவுள் என்பது மனிதனால் விளங்க முடியாத தன்மையை அடையாளமிட வைத்துக் கொண்ட ஒரு பதநிலை. அவ்வளவும் தான். மனிதக் கோட்பாடுகளின் தாக்கம் ஒரு வரையறைக்குள் தான் அமையும். அதன் தாக்கப் பரிமானம் ஒரு எல்லைக்குள் தான் இருக்கும். அதை விளங்கிக் கொள்வது கடினமல்ல. அதை தடுப்பதும் கடினமல்ல. ஆனால் அது உலகில் ஊக்கிவிக்கப்படுகிறது காரணம் தற்கால உலகில் மனிதனின் தேவைகள்.. அதனை மூலதனமாக்கின்ற போதும் நிறைவடைவதால் ஆகும். இது இலகுவாக விளங்கக் கூடிய ஒன்று.

சமயத்தை பொய்ப்பித்து மக்களின் எண்ணங்களில் இருந்து சமய நம்பிக்கைகளை தகர்த்துவிட்டால்.. உலகில் எந்தப் பிரச்சனையும் தோன்ற மூலம் கிடைக்காது என்பது போலத்தான் உங்கள் வாதம். இதில் நீங்கள் எந்த அறிவியல் நுட்பத்தை பாவித்துக் கருத்துரைக்கிறீர்களோ தெரியவில்லை. ஆனால்.. உங்களுக்கு சமயங்கள் மீதுள்ள வெறுப்புணர்வே.. காரணங்களை சரியாகத் தேடல் செய்ய விடாமல் தடுக்கிறது என்பது எனது பார்வை.

சமயம் என்பதே ஒரு பொய்தான். அதை எப்படி பொய்ப்பிக்க முடியும். இதில் வேடிக்கை என்னவென்றால், உங்களளவில் என்னை எடைபோடுவது. சரி. நான் திரும்பத் திரும்ப எழுதிவருவது "சமயம் என்பதில் இருக்கும் பொய்மையை பாருங்கள்" என்பதையே. நீல்ஸ் போர் போன்ற மிகப் பெரும் விஞ்ஞானிகள் இந்த "கடவுள்" கொள்கைகளில் இருந்து மீண்டு இருக்கிறார்கள். இத்தருணத்தில் ஐன்ஸ்டைன்னுக்கும் நீல்ஸ் போர்க்கும் இடையில் நடைபெற்ற ஒரு விவாதத்தை கூறவேண்டும். குவாண்டம் கொள்கையின் தந்தை நீல்ஸ்போர், ஐன்ஸ்ட்டைனிடம் கூறியது "ஐன்ஸ்டைன், தயவுசெய்து உம்முடைய கடவுள் என்பதை விஞ்ஞானத்தினுள் கொண்டுவராதையும்". தன் இறுதிக் காலத்தில் ஐன்ஸ்டைன் குவாண்டம் கொள்கையை ஏற்றுக் கொண்டார். அதாவது "கடவுள் கூட தாயம் விளையாடுகிறார்". :):lol:

சக்திச் சொட்டுக் (குவாண்டம்) கொள்கைக்கும்.. கடவுள் இல்லை என்பதற்கும் உள்ள தொடர்பு என்ன...???! அணுவில் உள்ள கூறுகளின் சக்தி நிலைகளைப் பற்றிப் பேசுவது அது. சக்தியின் மூலம் என்ன என்பதை அறிய முடியாத நிலையில் மனிதன் கடவுளை உருவகித்து வைத்திருக்கிறான். இது தொடர்பில் மீள விவாதிப்பது என்பது மீண்டும் முடிவிலிக்கு எது எல்லை என்று வரையறுக்கிறீர்கள் என்ற கேள்வியில் போய் முடியும். உங்களால் அல்லது போரின் சக்திச் சொட்டுக் கொள்கையால் முடிவிலி என்ற "சிந்தனை தூரத்துக்கு" முடிவை இட முடிந்தால் நானும் அதை ஏற்றுக் கொள்வேன்.. நீங்கள் சொல்லும் விடயத்தில் கடவுள் என்ற உருவகிப்புக்கு இடமே இல்லை என்று. அதுவரை நான் கடவுள் தொடர்பில் "பொய்" என்பதைக் கொண்டு மக்கள் அணுக முடியாது.. அவர்களின் நம்பிக்கைக்குள் உள்ள போலித்தனத்தை நிறுவ முடியாது.

அறிவு என்பது உண்மை என்பதை அறிதல் எங்கிறீர்கள். நான் சொல்கிறேன் உண்மை என்பதை மனிதர் நாம் எமது அறிவுக்கு உட்பட்டு வரையறுக்கிறோமே தவிர.. இவைதான் உண்மைகள் என்று அறுதிட்டுக் கூற முடியாத நிலையில் தான் இன்றும் உள்ளன. உண்மைகள் நிலைமாறிக் கொண்டிருக்கின்றனவே தவிர நிலல பெற்று நின்றிடவில்லை. உங்கள் விவாதங்கள் சுற்றிச் சுழன்று ஒரே வட்டத்துக்குள் அறிவு.. உண்மை.. நுட்பம்.. நுணுக்கம்.. ஆழம்.. சமயம் என்று சுற்றுகிறதே தவிர நடைமுறை உலகில் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளின் வடிவங்களை ஆராயவோ.. அவற்றிற்கான காரணிகளை சரிவர இனங்காணவோ தீர்வுகளை முன்வைக்கவோ.. செய்யவில்லை என்பதில் இருந்து.. உங்களின் வாதங்கள் அறிவு பூர்வமானவை என்பதற்கான அடிப்படைகளை இழந்து நிற்பதாகவே நான் காண்கிறேன்.

Non verbal thoughts என்பன பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? கூகிள் ஆண்டவரிடம் கேட்டுப் பார்க்கவும். அதன் பிறகு தேவையானால் மேலே தொடரலாம்.

கூகிள் என்பது இலத்திரனியல் உலகில் முக்கியமான ஒரு தேடல் சாதனம். இன்று உலகம் இலத்திரனியல் பிரதிகள் (Electronic documents) மற்றும் அச்சு (print documents) பிரதிகள் என்று இரு பிரதான தளத்தில் தகவல்களைச் சேமித்து வைத்திருக்கின்றன. நீங்களும் சரி பிறரும் சரி இவை இரண்டையும் இன்றைய உலகில் பாவிப்பது தவிர்க்க முடியாதது. நீங்கள் வெறுமனவே அச்சு வடிவ தகவல் திரட்டுக்களையே பாவித்து கருத்துரைப்பது போல தோற்றம் காட்டுவது தவறானது. அதுபோல கூகிள் மீது பாய்வதும் அறிவு பூர்வமான சிந்தனையல்ல. தகவல் திரட்டுக்கள் இரண்டு வடிவிலும் உள்ள போது.. தேவைக்கேற்ப அவற்றைப் பாவித்து விடயங்களை அறிதல் தெளிவுறுதல் சிறப்பே. உங்களைப் போல எல்லோரும் "நான் அனைத்தும் அறிந்த அறிஞன்" என்ற நிலையில் இல்லை. நாம் இந்தப் பாரிய முடிவற்ற பிரபஞ்சத்தில் (இதுவரை பிரஞ்சத்துக்கு எல்லை இடமுடியவில்லை) எங்கோ ஓர் மூலைக்குள் இருந்து கொண்டு அங்குள்ள இயற்கையைக் கூட இன்னும் சரி வர விளங்க முடியாத நிலையில்.. உண்மை என்பதன் இறுதி வடிவத்தை காண்பது உடனடிச் சாத்தியமல்ல. என்பது எனது சிந்தனைக்கு தெளிவாகத் தெரிகிறது.

உங்களின் எடுகோளான... நான் சமயத்தில் ஊறித்திழைத்தவன் என்பதே மிகத் தவறானது. கடவுளை நான் என்னுள் காண்பவன் என்று வரையறுத்துக் கொள்ளுங்கள். நான் கடவுளையோ மனிதனையோ வேறெங்கும் தேடுபவனல்ல. என்னை நானே கடவுளாகக் காண்கிறேன். அப்படித்தான் ஒவ்வொரு மனிதனும் தன்னை தானே கடவுளாகக் காணலாம். அது ஒன்றும் பெரிய சமூக கொடுமைகயைச் செய்யப்போவதில்லை. என்னை நான் மனிதன் என்று வரையறுக்க முடியும் என்றால் ஏன் கடவுள் என்றும் வரையறுக்க முடியாது. மனிதன் என்பது உண்மையா..??! மனிதன் என்பதை நாம் தான் அறிமுகம் செய்தோமே தவிர.. அது தான் உண்மை என்பது எப்படியாகும்...??! இப்போ அதுவல்ல பிரச்சனை. சமூகத்தில் பிரச்சனைகளுக்கு பல காரணிகள் இருக்க.. சுற்றிச் சுற்றி மதங்களுக்குள் நிற்பது அறிவுபூர்வமான அணுகுமுறையாக எனக்குப் புலப்படவில்லை என்பதை உங்களுக்கு தெளிவாக உணர்த்த விரும்புகிறேன்.

முதலில் எது "ரியாலிட்டி", எது "இல்லூஷன்" என்பது பற்றி உணர்ந்துகொள்ளவும். மதங்கள் மனிதருக்கு செய்த, செய்துகொண்டிருக்கும் மிகப் பெரும் பேரழிவின் தாக்கத்தை உணர்ந்து கொண்டபடியினாலே முதலில் மதம் என்பதுபற்றி பேசுகிறேன்.

நான் மதங்கள் மனிதனைப் பேரழிவில் தள்ளியுள்ளது என்பதை ஏற்றுக் கொள்ளவில்லை. மதங்களின் அடிப்படையில் மனிதன் பிரச்சனைகளை உருவாக்கிக் கொள்கிறானே தவிர.. மதங்கள் பேரழிவுகளை தருகின்றன என்பது தவறான எண்ணக்கரு. மதங்கள் மனிதனின் பண்பாட்டு உலகோடு சம்பந்தப்பட்டதே அன்றி.. அது மனிதனின் இதர இயக்க நிலைகளில் செல்வாக்குச் செய்யும் என்பது போலித்தனமான குற்றச்சாட்டு. மதம் என்பது மனிதன் உருவாக்கியது. உங்கள் கருத்துப்படி நோக்கின்.. நான் சொல்வேன்.. மனிதன் உருவாக்கிய கணணியும் மனிதரில் பேரழிவுத்தாக்கங்களை உண்டு பண்ணி வருகிறது என்று. நீங்கள் அதை ஏற்றுக் கொண்டு.. உலகில் கணணிகளை அழிக்க உத்தரவு பிறப்பிக்க சொல்வீர்களா...??! மனிதனின் ஆக்கங்களில் நன்மையும் தீமையும் உண்டு. அதனை எதிர்கொண்டு சமாளிக்க வேண்டியது மனித ஆளுமையே அன்றி திட்டுதல் செய்தல் அல்ல.

நீங்கள் இந்த சமயம் என்ற எல்லைக்குள் நின்று பிரச்சனைகளுக்கான காரணங்களை தேடின் நிச்சயம்.. அதில் அறிவுபூர்வமான தன்மை முற்றுப்பெறும் என்று நான் கருதவில்லை என்பதை தெளிவுறுத்த விரும்புகிறேன். அப்படியான ஒரு வழி விவாதப் போக்கில் பயனேதும் இல்லை.

நீங்கள் இன்னமும் மிகமேலோட்டமாக் பார்க்கிறீர்கள். வற்புறுத்த வேண்டிய தேவை எனக்கு இருப்பதாக தெரியவில்லை.

மேலோட்டம் என்று உச்சரிப்பது இலகு. குறித்த மேலோட்டத்துக்கான உங்களின் "ஆழ்ந்த" விளக்கம் என்ன என்று சொன்னால் தானே நாங்கள் உங்களின் "ஆழ்ந்த" சிந்தனையின் ஆழத்தை அளவிட முடியும். குறித்த விடயங்கள் தொடர்பில் உங்கள் "ஆழ்ந்த" சிந்தனைகளை வெளியிடாமலே இது மேலோட்டம் என்று வரையறுப்பது நீங்கள் உங்களுக்குள் உள்ள கருத்து "ஆழமானது" என்ற ஒரு தோற்றப்பாட்டூடே வளர்த்து வரும் போலியான மேலாதிக்க தன்மையோடு கருத்துரைப்பதாகவே நான் கருதுகின்றேன். உங்கள் "ஆழ்ந்த " சிந்தனைகளை மூடி வைச்சிராமல்.. அடுத்தவர்களை எதிர்பார்த்து பொத்தி வைச்சிராமல்.. வெளியிடுங்கள். அப்போதுதான் அவை அடுத்தவர்களுக்கு தெரியவரும். அதுமட்டுமன்றி அதன் ஆழத்தை தீர்மானிக்க வசதி அளிக்கும். வெளியிடப்படாத சிந்தனையை வைத்துக் கொண்டு அடுத்தவர்களை நோக்கி மேலோட்டம் என்று சொல்வதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. அது மேதாவித்தனமான கருத்தியல் அணுகுமுறை. அது மிகத் தவறான அணுகுமுறை.

நாம் நால்வர் சமயங்களைத் தூற்றிக் கொண்டு இருப்பதை.. அல்லது சமயங்கள் போலி என்று அறிவு விளக்கம் கொடுப்பதால்.. சமயங்களால் தான் பிரச்சனைகள் தோன்றுவிக்கின்றன என்று நிறுவிக் கொண்டு.. அதுவே உண்மை என்று.. சொல்லிக் கொண்டிருப்பதால்.. உலகில் அடக்குமுறைக்கு உள்ளாகும் மக்களிற்காக விடிவு கிடைத்திடுமா...??! அடக்குமுறைக்கான வடிவங்களில் சமயமும் ஒன்றாக இருக்கலாம். அதைத்தான் சில நாட்டுத் தலைவர்களும் சில சமூகங்களும் செய்யகின்றன. ஆனால் அதுவே முடிந்த முடிவல்ல. ஒரே காரணியும் அல்ல. ஒரு அறிவுபூர்வமான அணுகுமுறையாளன் அடக்குமுறைகள் சமயம் என்ற எல்லைக்குள் தான் அடங்கி நிற்கின்றன என்பதாக மட்டும் கருதி கருத்துரைக்கமாட்டான். :3d_019:

முதலில் மக்களை விடுவிப்பது என்ற போலியான கருத்துக்களில் இருந்து எப்போது தெளிவடைய போகிறீர்கள் என தெரியவில்லை. மக்கள் தாங்களாகவே தம்மை பிரச்சனைகளில் இருந்து விடுவிக்க வேண்டும். இன்னொருவர் அவர்களை விடுவிக்க முடியாது. முதலில் இதை புரிந்துகொள்ளுங்கள். மக்களை விடுவிக்க புறப்பட்ட பலர் அவர்களை இன்னும் புதிய பிரச்சனைகளில் தள்ளிவிட்டதையே கண்டிருக்கிறோம்.

இதில் போலியாக உள்ளது உங்கள் பக்க நிலைதான். மனிதன் ஒவ்வொருவருக்கும் என்று தனிச் சூழல் என்ற ஒன்றுண்டு. அதன் பின்னர்தான் பொதுச் சூழல். மனிதர்கள் தங்களின் தனிச் சூழலில் உள்ள தாக்கத்தின் விளைவுக்கும் ஆளாகின்றனர். பொதுச் சூழலின் தாக்கத்துக்கும் ஆளாகின்றனர். தனிச் சூழலில் உள்ள தாக்கங்களின் பரிமானம் வேறுபட்டது. அதில் தனி மனிதர்கள் தான் சிந்தித்து தீர்வு தேட வேண்டும். ஆனால் சமயம்.. மதம் போன்ற பொதுச் சூழல் காரணிகளும் கூட தனிச் சூழலில் செய்யும் தாக்கங்களில் இருந்து மனிதனை விடுவிக்க வேண்டியது என்பது மாறுபட்ட பரிமானத்தைக் கொண்டது. இதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். அதற்கான அணுகுமுறை என்பது திட்டித்தீர்த்தலோ.. அல்லது.. கடவுள் மறுப்போ.. மத எதிர்ப்புப் பிரச்சாரமோ அல்ல. பிரபஞ்சம் பற்றிய அறுதியான உண்மையை நோக்கி மக்களை இட்டுச் செல்லுதல். அதை இன்றைய அறிவியல் உலகால் பூரணமாக வழங்க முடியும் என்ற நிலை இன்னும் இல்லை.இதை அறிவியல் உலகமும் இன்றைய அதன் நிலையில் இருந்து ஏற்றே கொள்கிறது.

Link to comment
Share on other sites

  • Replies 85
  • Created
  • Last Reply

இன்றைக்கு உலகில் நடக்கின் பெரும்பாலான யுத்தங்களுக்கு மதம் என்பது ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது.

அது மட்டுமன்றி மதம் சார்ந்து நடக்கின்ற யுத்தங்கள் ஒரு முடிவின்றி தொடர்ந்து நடந்து வருகின்றன.

உலகின் பிரதான பிரச்சனை என்பது மதம்தான்

மதம் என்பதில் நல்ல விடயம் என்று இன்றைக்கு எதுவும் இல்லை. மக்கள் உருவாக்குகின்ற அரசுகள் இருக்கின்ற இன்றைய காலத்தில் மதங்களின் தேவையும் மனிதர்களுக்கு இல்லை.

இருக்கின்றதா இல்லையா என்று தெரியாத ஒரு விடயத்திற்காக மனிதர்களை கொலை செய்யத் தூண்டுவதுதான் இன்றைக்கு மதங்கள் செய்கின்ற பணியாக இருக்கின்றது.

மக்கள் மதத்தை கைவிட்டு மனிதத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

இன்றைக்கு ராமர்பால விவகாரத்தில் மதம் என்ன செய்கிறது. தமிழ்நாட்டு மக்கள் பெறுகின்ற நன்மையை தடுக்கின்ற அளவிற்கு மதம் செயற்படுகிறது. ஒரு அரசு மக்களுக்கு செய்ய வேண்டிய பணியை மிரட்டி தடுக்கிறது.

குறிப்பிட்ட மணற்திட்டை இடித்தால், இயற்கை வளம் அழியும் என்று போராடுவதை ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் எவ்வித ஆதாரமும் அற்ற ஒன்றைக் காட்டி ஒரு அரசை மிரட்ட முடிகிறது என்றால், இது மதத்தால் ஏற்பட்ட நன்மையா தீமையா?

Link to comment
Share on other sites

சேலம், செப். 16: ÔÔ

சேது சமுத்திர திட்ட விவகாரத்தில் மதவாதிகளுக்கும் எங்களுக்கும்தான் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதே தவிர, மத்திய அரசுடன் இல்லை. இந்த பிரச்னையில் மதவாத சக் திகளுக்கு மத்திய அரசு பணிந்து விடக்கூடாதுÕÕ என்று முதல்வர் கருணாநிதி கூறினார்.

சேலத்தில் நேற்று முன்தினம் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற முதல்வர் கருணாநிதி, அன்று இரவு ஏற்காட்டில் தங்கினார். அங்கு, நேற்று அவர் அளித்த பேட்டி:

சேலத்தில் நடைபெற்ற அரசு விழா, மாநாடு போல் நடந்துள்ளதே?

மக்கள் எழுச்சியை அது காட்டுகிறது. சேலம் மாவட்ட செயலாளர் வீரபாண்டி ஆறுமுகத்தின் உழைப்பை காட்டுகிறது.

சேது சமுத்திரம் திட்டம் தொடர்பாக உங்களுக்கும் மத்திய அரசுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதா?

எங்களுக்கும் மதவாதிகளுக்கும்தான் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. மதத்தை பயன்படுத்தும் நாட்டில், மூட நம்பிக்கைகளை விதைத்து தங்களுடைய எண்ணங்களை பூர்த்தி செய்ய வேண்டும் என எண்ணும் ஆதிக்க சக்திகளுடன்தான் எங்களுக்கு வேறுபாடு. மத்திய அரசுடன் எந்த கருத்து வேறுபாடும் இல்லை. ஆதிக்க சக்தியான மதவாதிகளுக்கு தலை வணங்கக்கூடாது என்பதுதான் எங்களின் நிலைபாடு.

ராமர் பாலம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு கூறிய தனது கருத்தை திரும்ப பெற்றுள்ளதே?

நீதிமன்றம் கூறியதால் மத்திய அரசு சற்று தணிந்துபோய் உள்ளது. இதனால், சேது சமுத்திர திட்டத்தை திட்டமிட்டபடி நடத்துவதில் இருந்து வாபஸ் ஆகி விடுகிறோம் என பொருள் அல்ல. அப்படி வாபஸ் பெறுவதை, பகுத்தறிவு இயக்கமாக இந்த உலகத்தில் வளர்ந்திருக்கிற, விஞ்ஞான ரீதியான முற்போக்கு எண்ணங்களுக்கு மேலும் மேலும் வலு தேடும் தி.மு.க. போன்ற இயக்கங்களால் ஏற்றுக் கொள்ள இயலாது.

சேலத்தில் நேற்று நடந்த ஓய்வு பெற்ற அரசு அலுவலர் விழாவில் பேசிய நீங்களும் ஓய்வு பெற விரும்புவதாக கூறினீர்களே?

ஓய்வு பெற்றவர்கள் எவ்வளவு உற்சாகமாக இருக்கிறார்கள் என்பதை விளக்கமாக சொல்லி, ஓய்வு பெற்ற உங்களை பார்த்து பொறாமைப்படுகிறேன் என்றேன். அதற்காக பொதுவாழ்வில் இருந்து நான் ஓய்வு பெறுவதற்கும் இதற்கும் சம்பந்தமில்லை.

கூட்டணி கட்சிகள் இடையே பிளவு இல்லைஎன்று கூறியிருக்கிறீர்கள். இது தொடருமா?

தொடர வேண்டும் என விரும்புகிறோம்.

திமுக, பாமக இடையே சிறு சிறு பிரச்னைகள் ஏற்படுகிறது. மேல் மட்டத்தில் தலைவர்கள் நன்றாக உள்ளனர். கீழ் மட்டத்திலுள்ள இந்த பிரச்னைகளை நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக முதல்வர் தீர்க்க வேண்டும் என சேலத்தில் ராமதாஸ் கூறியுள்ளாரே?

அது தானாகவே தீர்ந்துவிடும்.

தி.மு.க. கூட்டணியை உடைக்கும் முயற்சி தொடர்ந்து நடைபெறுவதாக கருதுகிறீர்களா?

கூட்டணி உருவானதில் இருந்தே, அதை உடைக்கும் முயற்சியிலும், கூட்டணி கட்சிகளிடையே சிறுசிறு சலசலப்புகளை உண்டாக்க வேண்டும் என்ற திட்டமிட்ட செயல்களும் தொட ர்ந்து நடக்கின்றன.

வரப்பில் நடந்து செல்லும்போது நெரிஞ்சிமுள் குத்துகிறது என்பதற்காக, வரப்பில் நடந்து வயலில் விளைச்சலை எப்படி ஒரு உழவன் கவனிக்காமல் இருக்க முடியாதோ, அதுபோலத் தான், கூட்டணி கட்சி தலைவர்களாகிய நாங்களும் இருக்கிறோம்.

விவசாயத்துக்கும் சிறப்பு பொருளாதார மண்டலம் வேண்டும் என ராமதாஸ் கேட்டுள்ளாரே?

எல்லாவற்றுக்கும் சிறப்பு பொருளாதாரம் வேண்டும் என்றுதான் நினைக்கிறோம். குறிப்பாக, தொழில் துறையில் அப்படியரு பொருளாதார மண்டலத்தை நடைமுறைப்படுத்தி இருக்கிறோம். இதேபோல் ஒவ்வொரு துறைக்கும் வரும்.

சேலம் ரயில்வே கோட்டம் எப்போது துவங்கும்?

விரைவில் துவங்கும்.

அதிமுக & பாஜ நெருக்கம் அதிகரிக்கிறதே?

அதில் ஆச்சரியமில்லை.

லோக்சபாவுக்கு விரைவில் தேர்தல் வருமா?

விரைவில் தேர்தல் வருகிறதோ, இல்லையோ லோக்சபாவில் அமைதி வேண்டும்.

துணை முதல்வர் நியமிக்கும் திட்டம் உள்ளதா?

இல்லை.

தமிழக அமைச்சரவையில் மாற்றம் உண்டா?

வெளியிடப்படும், மாற்றம் இருந்தால் வெளியிடப்படும்.

இவ்வாறு கருணாநிதி கூறினார்.

http://www.dinakaran.com/slideshow/default.asp

Link to comment
Share on other sites

சேதுசமுத்திர திட்டம்

சேது சமுத்திர திட்டம். நிறைவேறினால் பொருளாதார ரீதியாக தமிழகம் வளம் பெறும். தற்போது கடலில் இலங்கையை சுற்றி செல்லும் கப்பல்கள், சேது சமுத்திர கால்வாய் வழியே வரும்போது நேரமும் மிச்சமாகும். பொருளாதாரமும் மிச்சமாகும். இந்த திட்டத்தை நிறைவேற்றினால் பொருளாதார ரீதியாக வளம் பெறும் என்று பொருளாதார நிபுணர்கள், வல்லுனர்கள் கூறுகிறார்கள்.

ஆனால் இத்தகைய திட்டத்தை ராமர் பாலத்தை சொல்லி, கடவுளின் பெயரால் எதிர்க்கிறார்கள். 17 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு ராமாயண காலத்தில் கட்டப்பட்ட ராமர் பாலத்தை இடிக்கக்கூடாது என்கிறார்கள்.

வாபஸ் பெறுவதா?

அது தொடர்பாக மத்திய அரசு ராமாயணம் என்பதே கற்பனைக்கதை, ராமர் வாழ்ந்ததற்கான வரலாற்று ஆதாரம் கிடையாது என்று நேற்று கோர்ட்டில் கூறிய மத்திய அரசு இன்று அதை வாபஸ் வாங்கிக்கொள்கிறது.

ஆட்சிக்காக இதை எப்படி பார்த்துக்கொண்டிருக்க முடியும்? கேவலம் ஆட்சிக்காக நாம் ஏற்றுக் கொண்ட சுயமரியாதை கொள்கை என்ன ஆவது.

ராமாயணம் நடந்த கதை அல்ல. அப்போது ஆரியர்களுக்கும், திராவிடர்களுக்கும் நடந்த மோதலை அடிப்படையாக கொண்டு உருவான கற்பனை என்று பண்டித ஜவகர்லால் நேருவே கூறி இருக்கிறார்.

பேரம் பேசுகிறார்கள்

இந்த நிலையில் நேற்று ஒருவர் என்னை சந்தித்து ராமர்பாலத்தை உடைக்கக்கூடாது, அது உண்மையிலேயே பாலம் அல்ல, அதில் கந்தகம் இருக்கிறது. அணுகுண்டு தயாரிக்க தேவையான மருந்து இருக்கிறது. அது இருந்தால் ஆயிரம் ஆண்டுகள் இந்தியாவை பாதுகாக்க முடியும் என்று என்னிடம் கூறினார்.

நான் உடனே அவரிடம் அப்படியானால் இந்த உண்மையை உலகறிய ஊரறிய மேடை போட்டு கூறுங்கள், ராமர் பாலம் பிரச்சினையை நான் பேசவில்லை என்று கூறினேன். நான் இவ்வாறு கூறியதும், அவர் அப்படியானால் நாங்கள் கட்சி நடத்த வேண்டாமா? என்று என்னை கேட்கிறார்.

அவர்கள் கட்சி நடத்த வேண்டுமாம், அதற்கு நாம் என்ன இளித்த வாயர்களா? பாரதிய ஜனதா கட்சியினர் கட்சி நடத்த தி.மு.க., பா.ம.க., கம்ïனிஸ்டு கட்சியினர் என்ன இளித்தவாயர்களா? ராமர் பாலம் பெயரால் போராட்டத்தை அவர்கள் தொடங்கி விட்டார்கள். அதை முடிக்க தெரியாமல் நம்மிடம் வந்து பேரம் பேசுகிறார்கள்.

வழக்கு

சேது சமுத்திர திட்டத்தை தன்னுடைய தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டவர்கள், சேது சமுத்திரம் திட்டம் நிறைவேற வேண்டும் நம்மைவிட வேகமாக வலியுறுத்திவர்கள், இப்போது சேது சமுத்திரம் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.

அதே அடிப்படையில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா சேது சமுத்திர திட்டத்துக்காக ராமர் பாலத்தை இடிக்கக்கூடாது என்று வழக்கு போட்டு இருக்கிறார். இவருடைய கட்சி அண்ணாவின் பெயரில் உள்ளது. அண்ணாவின் பெயரில் கட்சியை நடத்திக்கொண்டு இப்படி ஒரு வழக்கு போடுகிறார்.

பகுத்தறிவுக்கொள்கையை வலியுறுத்திய அண்ணாவே இந்த நேரத்தில் உன்னை நினைத்து நான் வருத்தப்படுகிறேன், வெட்கப்படுகிறேன். நான் இருக்கும் இந்த காலத்திலேயே உன்னை இந்த அளவு இழிவுபடுத்துகிறார்களே என்று வேதனைப்படுகிறேன்.

இந்த விழாவில் இதை நான் தெரிவிப்பதால், அரசு விழாவில் அரசியல் பேசுகிறேன் என்று கூறுவார்கள். நான் அரசியல் பேசுவதாக நினைத்துவிடக்கூடாது. இது சமுதாய பிரச்சினை, இதை வலியுறுத்தியே ஆக வேண்டும். நாம் திருந்துவதோடு நாட்டையும் திருத்த வேண்டும். அந்த உறுதியை நாம் இங்கு மேற்கொள்ள வேண்டும். சேலத்தில் நாம் இந்த உறுதியை மேற்கொள்வதால், அது மாறாத உறுதியாக இருக்கும். யாரும் மாற்ற முடியாத உறுதியாக இருக்கும் என்று கூறி விடை பெறுகிறேன்.

இவ்வாறு முதல்-அமைச்சர் கருணாநிதி பேசினார்.

http://www.dailythanthi.com/article.asp?Ne...2007&advt=1

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைக்கு உலகில் நடக்கின் பெரும்பாலான யுத்தங்களுக்கு மதம் என்பது ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது.

அது மட்டுமன்றி மதம் சார்ந்து நடக்கின்ற யுத்தங்கள் ஒரு முடிவின்றி தொடர்ந்து நடந்து வருகின்றன.

உலகின் பிரதான பிரச்சனை என்பது மதம்தான்

மதம் என்பதில் நல்ல விடயம் என்று இன்றைக்கு எதுவும் இல்லை. மக்கள் உருவாக்குகின்ற அரசுகள் இருக்கின்ற இன்றைய காலத்தில் மதங்களின் தேவையும் மனிதர்களுக்கு இல்லை.

இருக்கின்றதா இல்லையா என்று தெரியாத ஒரு விடயத்திற்காக மனிதர்களை கொலை செய்யத் தூண்டுவதுதான் இன்றைக்கு மதங்கள் செய்கின்ற பணியாக இருக்கின்றது.

மக்கள் மதத்தை கைவிட்டு மனிதத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

இன்றைக்கு ராமர்பால விவகாரத்தில் மதம் என்ன செய்கிறது. தமிழ்நாட்டு மக்கள் பெறுகின்ற நன்மையை தடுக்கின்ற அளவிற்கு மதம் செயற்படுகிறது. ஒரு அரசு மக்களுக்கு செய்ய வேண்டிய பணியை மிரட்டி தடுக்கிறது.

குறிப்பிட்ட மணற்திட்டை இடித்தால், இயற்கை வளம் அழியும் என்று போராடுவதை ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் எவ்வித ஆதாரமும் அற்ற ஒன்றைக் காட்டி ஒரு அரசை மிரட்ட முடிகிறது என்றால், இது மதத்தால் ஏற்பட்ட நன்மையா தீமையா?

யுத்தங்கள் சண்டைகள் மனிதருக்கு மட்டுமானதல்ல. சிம்பன்சி குரங்குகள் மத்தியிலும் சண்டைகள் படுகொலைகள் யுத்தங்கள் நிகழ்கின்றன. இனவிடைப் போட்டி என்பது உயிர்கள் அனைத்திலும் இயற்கையான நிகழ்வு. அதுதான் உயிர் வாழ்த்தலை தீர்மானிக்கிறது. மதங்கள் இல்லாத காலத்திலும் மனிதப் பேரவலங்கள் நிகழ்ந்துதான் உள்ளன. மதங்களே யுத்தங்களுக்குக் காரணமல்ல. இன்றைய உலகில் மதங்களைக் கொண்டு மனிதர்கள் வளர்த்துள்ள தவறான எண்ணப்பாடுகளின் அடிப்படையில் எழுந்த போட்டிகளால்.. யுத்தங்களுக்கான காரணிகள் உருவாக்கப்படுகின்றனவே தவிர.. மதங்களைக் காக்க என்று யுத்தங்கள் என்பது அர்த்தமற்றவையாக்கப்பட்டுள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆட்சிக்காக இதை எப்படி பார்த்துக்கொண்டிருக்க முடியும்? கேவலம் ஆட்சிக்காக நாம் ஏற்றுக் கொண்ட சுயமரியாதை கொள்கை என்ன ஆவது.

சுயமரியாதைக் கொள்கை.. பகுத்தறிவுக் கொள்கை.. என்ற விசித்திரமான கொள்கைகளோடு.. மஞ்சள் காவியும் கறுப்புக் கண்ணாடியும் அணிந்து.. குடும்ப அரசியல் கொண்டு..பார்க்க மறுத்த.. சாதிச் சான்றிதழ்களும்.. சாதியக் கட்சிகளும்.. கூட்டணிகளும்.. சாயி பாபாவின் பாதார விந்தங்களை தடவிப் பார்த்து மகிழ்ந்த போது எழுந்த பெருமிதமும்.. கோவில்கள் எங்கும் திமுக தொண்டர்கள்.. அரோகரோ கோசம் எழுப்புவதும்.. உண்டியல் பணத்தில் கட்சிக் கொடி நாட்டுவதும்... கண்ணகிக்கு.. சிலை நாட்டிப் பத்தினித் தெய்வத்தை வைத்துப் பெருமைப்பட்டதும்.. கொள்கைப் பிடிப்பின் உச்சத்தின் விளைவுகளா..??!

திராவிடம் என்ற போலியான அடையாளத்தினூடு தமிழரின் தேசிய அடையாளத்தையே.. இருப்பையே அழிக்க நினைத்த... திமுகவும் பெரியார் வாரிசிகளும்.. இன்று இராமர் பாலம் தொடர்பில்.. முதலைக் கண்ணீர் வடிப்பது.. திட்டங்களூடு சுருட்டப்படும் கோடிகளுக்காகவே அன்றி.. தமிழக முன்னேற்றத்துக்கல்ல..! தமிழகம் முன்னேற வேண்டின் இராமர் பாலம் மட்டுமல்ல.. கருணாநிதி ஐயாவின் குடும்பக் கோட்டைக்குள் சிக்கிக் கிடக்கும் கோடிகளும் கோட்டைகள் உடைக்கப்பட்டு... ஏழை மக்கள் அள்ளிப் போக வகை செய்யப்பட வேண்டும். சாதிச் சான்றிதழ்களைக் கிழித்தெறிந்து கறுப்புக் கண்ணாடியைப் புடுங்கி எறிய வேண்டும்...செய்வார்களா.. பகுத்தறிவுச் சிங்கங்கள்...???! சுயமரியாதை பொறிகள்....??!

சுய நல அரசியலுக்காய் கூட வளர்ந்த தொண்டனையே பலியிடத் துணிந்த சாமானியன்.. பகுத்தறிவுவாதி.. சுயமரியாதை..சிங்கங்கள்..! போலி மனிதர்களுக்கு.. சோடிக்க போலிப் பதங்கள்..! :huh: B)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இராமர் பற்றிய அறிக்கை. இந்திய கலாசார அமைச்சர் இராஜினாமா செய்யத் தயார்.

Gods row minister offers to quit

Hindu devotees believe the bridge was built by Lord Ram

India's culture minister has offered to resign in a row over whether Hindu gods are mythological figures.

Officials had presented the argument in court to support construction plans for an area devotees believe has remnants of a bridge built by the Hindu god Ram.

http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/6996621.stm

Link to comment
Share on other sites

எனவே பொய்களையும் புரட்டுக்களையும் இங்கே விதைத்து கொண்டிருக்காமல் நேர்மையாக கருத்தாடவும்.

மற்றவர்களை மடையராக்கும் எண்ணத்தில் அதி மேதாவித்தனமாக இப்படி எழுதுவதால் உங்களை எல்லோரும் நகைப்பிக்கிடமான வகையிலேயே பார்க்க வேண்டி இருக்கும்.

திராவிடரின் சரித்திரத்தை ஆரியரின் இராமயணப் புனைகதையை வைத்து எவரும் நிறுவி விடவில்லை.எவ்வாறு இலங்கையில் தமிழரின் சரித்திரம் மகாவம்சத்தால் எழுதப்பட முடியாதோ அதே போல் திராவிடரின் சரிதிரத்தை இராமாயணம் சொல்ல முடியாது.இராமயணம் ஆரியரின் சூழ்ச்சியைப் பறை சாற்றும் ஒரு ஆதாராம் மட்டுமே.

அடிப்படை எதுவும் இல்லாமல் நகைப்பத்து சாதனை அல்ல.. கேவலம்... உங்களுக்கு மரபணு புரிந்ததாகவும் தெரிய வில்லை.. அந்த அடிப்படையும் தெரிய வில்லை...

நீங்கள் சொல்லும் திராவிடம் என்னும் சொல் கூட தமிழ் கிடையாது,...

எதையும் அடிப்படையில் இருந்து தெரிந்து வந்து உங்களது வாதங்களை வையுங்கள்..... Race என்னும் வர்ணங்களும் உலகபரம்பல்களும், எதன் அடிப்படையில் அவை ஏழுந்தன என்பது பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள்...

மனித குலத்தை நான்கு இனங்களாக ஆராட்ச்சியாளர்கள் பிரிக்கிறார்கள்... அதில் (( இப்போ ஐந்தாம் அதை பிறக்கு பார்க்கலாம்))

Australoid ,Mongoloid ,Caucasoid , Negroid

http://en.wikipedia.org/wiki/Race_%28histo..._definitions%29

என்பன பற்றியும் அவர்களின் ஆங்கிலத்தனமான ஆராட்சியாளர்களின் பெயரிடுதல்களையும் ஆராயுங்கள்.... இதன் அடிப்படையில் தான் உங்களின் மரபணு ஆராட்சி முடிவுகள் இருக்கின்றன...

இந்தியர்களை Australoid எண்று ஆராய்ந்தவர்கள் சொன்னார்கள்... ஆனால் இப்போ Carleton S. Coon என்னும் அமெரிக்கர் இந்தியர்களை Caucasoid ( நான் இதை இப்போதான் கேள்வி ப்படுகிறேன் ஆகவே என்னால் கருத்து கூற முடியாது) ஆனாலும் மனிதன் பரவல் என்பது ஆண்டு களாக நடப்பவை...

ஆகவே

இந்த இனங்களின் கலப்பை உறுதி செய்ய மரப்பணு தேஎவையா....??

அந்த இனம் கலப்பில்லாமல் வர்ணத்தை இந்தியாவில் காப்பத்தியவாறு இருக்கிறது என்பதை நீங்கள்தான் நிரூபிக்க வேண்டும்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெடிக்கும் ராமர் பால சர்ச்சை: அமைச்சர்கள் மோதல் - சங்கடத்தில் காங்.!

ராமர் பாலம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில், தொல்பொருள் துறை தாக்கல் செய்த தவறான அறிக்கைக்கு பொறுப்பேற்று கலாச்சாரத் துறை அமைச்சர் அம்பிகா சோனி தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று அமைச்சர் ஜெயராம் ரமேஷ் கூறியுள்ளதால் காங்கிரஸ் கட்சிக்குள் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

ராமர் பாலம் தொடர்பான வழக்கில் மத்திய கலாச்சாரத்துறைக்கு உட்பட்ட மத்திய தொல்பொருள் ஆய்வுத் துறை உச்சநீதிமன்றத்தில் பதில் அறிக்கை தாக்கல் செய்தது.

அதில், ராமர் இருந்ததற்கான ஆதாரம் இல்லை. ராமாயணத்தில் நடந்தவை உண்மை என்பதற்கான ஆதாரங்களும் இல்லை என்று கூறப்பட்டிருந்தது. இது பெரும் சர்ச்சையைக் கிளப்பி விட்டது.

பெரும் எதிர்ப்பு கிளம்பியதால், அந்த சர்ச்சைக்குரிய அறிக்கையை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற்றது. இந்த நிலையில், காங்கிரஸ் அமைச்சர்களுக்குள் தற்போது மோதல் மூண்டுள்ளது.

இந்த சர்ச்சை குறித்து மத்திய அமைச்சர் ஜெயராம் ரமேஷ் கூறுகையில், நான் கலாச்சாரத்துறை அமைச்சராக இருந்திருந்தால், எனது பதவியை ராஜினாமா செய்திருப்பேன். எங்கேயோ அரியலூரில் நடந்த ரயில் விபத்துக்குப் பொறுப்பேற்று லால் பகதூர் சாஸ்திரி தனது பதவியை ராஜினாமா செய்தார்.

அப்படிப்பட்ட நிலையில் இதுபோன்ற முக்கியமான விஷயத்தில் மிகவும் மெத்தனமாக நடந்து கொண்டதற்காக கலாச்சாரத் துறை அமைச்சர் ஏன் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யக் கூடாது.

இது ஒரு சமூக மக்களின் உணர்வுகளை கடுமையாக பாதித்துள்ளது. இது தவறான அறிக்கை என்று கோபமாக கூறியுள்ளார். இதனால் காங்கிரஸ் கட்சிக்குள்ளும், மத்திய அமைச்சரவையிலும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

ரமேஷின் இந்த பேச்சு குறித்து கலாச்சாரத் துறை அமைச்சர் அம்பிகா சோனி கூறுகையில், நான் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், பிரதமரும் உத்தரவிட்டால் அடுத்த நிமிடமே அதைச் செய்யத் தயாராக இருக்கிறேன்.

ஜெயராம் ரமேஷ் சொல்வதற்காக எல்லாம் ராஜினாமா செய்ய முடியாது. இந்த விஷயத்தில் எனது துறை தவறு செய்யவில்லை. பதில் அறிக்கை தொடர்பாக 3 திருத்தங்கள் பரிந்துரைக்கப்பட்டன. அதில் 2 செய்யப்பட்டன. ஒன்று விட்டுப் போய் விட்டது.

இந்த பதில் அறிக்கையை தொல்பொருள் ஆய்வுத் துறைக்கு கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் அனுப்பினார். தவறு காரணமாக ெதால்பொருள் துறை அதிகாரிகள் 2 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

தொல்பொருள் ஆய்வுத் துறை தலைவரிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. பரிந்துரைக்கப்பட்ட முக்கியமான திருத்தத்தை செய்யாமல் விட்டதுதான் தவறாகி விட்டது. இது மிகப் பெரிய தவறு. கவனக்குறைவு. இதை நாம் சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது.

இந்தத் தவறு காரணமாக துறை ரீதியிலான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தவறு செய்தவர்கள் அதற்குப் பதில் சொல்லியாக வேண்டும்.

இந்த விவகாரம் தொடர்பான அனைத்து ஆவணங்களும் பிரதமர் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் தரப்பட்டுள்ளது என்றார் சோனி.

இதற்கிடையே, சேது சமுத்திரத் திட்டத்தை அமல்படுத்தி வரும் மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சகம் தான் இந்தப் பிரச்சினையை கையாண்டிருக்க வேண்டும் என தொல்பொருள் ஆய்வுத் துறை கூறுகிறது.

காங்கிரஸ் அமைச்சர்கள் இருவர் ராமர் பாலம் தொடர்பாக மோதிக் கொண்டிருப்பதால் இந்தப் பிரச்சினை மேலும் சூடு பிடித்துள்ளது.

http://thatstamil.oneindia.in/news/2007/09...mbika-soni.html

Link to comment
Share on other sites

இராமர் பாலம் சர்ச்சை

[17 - September - 2007] [Font Size - A - A - A]

மன்னார்க்குடாவை பாக்கு நீரிணையுடன் இணைக்கும் கால்வாயை ஆழமாக்கும் சேது சமுத்திரம் கப்பல் கால்வாய்த் திட்டத்தை முன்னெடுப்பதற்கு இந்திய அரசாங்கம் இருவருடங்களுக்கு முன்னர் தீர்மானித்தபோது அத்திட்டத்தினால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படக்கூடிய பாதக விளைவுகள் குறித்து பரந்தளவிலான ஆய்வுகளும் விவாதங்களும் மேற்கொள்ளப்பட வேண்டுமென்று தமிழகத்திலும் இலங்கையிலும் சுற்றாடலியல் ஆர்வலர்கள் வலியுறுத்திக் கேட்டிருந்தனர். அவ்வேளையில் அவர்களின் கோரிக்கைகள் தொடர்பில் பெருமளவுக்கு அக்கறை காட்டாமல் எடுத்த எடுப்பிலேயே சுற்றுச் சூழலுக்கோ அல்லது மீனவர்களுக்கோ எந்தவிதமான பாதிப்பும் ஏற்படப்போவதில்லை என்ற பதிலே இந்திய அரசாங்கத்தின் தரப்பிலிருந்து வந்ததைக் காணக்கூடியதாக இருந்தது. தமிழக முதலமைச்சரும் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவருமான கலைஞர் மு.கருணாநிதியும் மத்திய கப்பல் மற்றும் தரைவழிப் போக்குவரத்து அமைச்சர் டி.ஆர்.பாலுவும் சுற்றாடலியல் ஆர்வலர்களின் அக்கறைகளுக்கு எந்தவித ஆதாரமும் கிடையாது என்று மறுதலித்து பேசியவர்களில் மிகவும் முக்கியமானவர்கள். சுற்றுச்சூழலுக்கு ஏற்படக்கூடிய பாதக விளைவுகள் குறித்து வெளிப்படுத்தப்பட்ட நியாயபூர்வமான அக்கறைகளை அலட்சியம் செய்து அத்திட்டத்தை நடைமுறைப்படுத்த ஆரம்பித்த இந்திய அரசாங்கம் இப்போது புராண இலக்கியத்தை அடிப்படையாகக் கொண்டு கிளப்பப்பட்டிருக்கும் ஆட்சேபங்கள் காரணமாக பெரும் சஞ்சலத்துக்குள்ளாகியிருக்க

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருணாநிதியும் இராமர் பாலமும்..

கருணாநிதி மீது வழக்கு- பிரவீன் தொகாடியா

ராமர் பாலம் இருந்ததற்கான ஆதாரம் இல்லை என்று கூறியிருக்கும் முதல்வர் கருணாநிதி மீது வழக்கு தொடருவோம் என்று விஷ்வ இந்து பரிஷத் பொதுச் செயலாளர் பிரவீன் தொகாடியா கூறியுள்ளார்.

அவர் கூறியதாவது,

தமிழக முதலமைச்சர் கருணாநிதி ராமர் பாலம் இருந்ததற்கான ஆதாரம் இல்லை என்று கூறியிருக்கிறார். ஆனால் அவர் 1972ம் வருடம் முதல்வராக இருந்தபோது வெளியிட்ட ராமநாதபுரம் மாவட்ட கெஜட்டில், அவர் எழுதிய முன்னுரையில் ராமர் பாலம் இருந்ததை ஒத்துக் கொண்டுள்ளார்.

ஆனால் ஈரோட்டில் நடந்த விழாவில் ராமர் பாலம் கிடையாது, அதெல்லாம் சதிகாரர்களின் கூற்று என்று கூறியுள்ளார். கெஜட்டில் எழுதியதை அவர் மறுத்ததால் அவர் மீது வழக்கு தொடரப்படும்.

இந்தப் பிரச்சனைக்கு குறிப்பிட்ட மத்திய அமைச்சரை மட்டும் பொறுப்பாக்குவது பெரிய தவறு. மத்தியில் அங்கம் வகிக்கும் முழு அமைச்சரவையும் இதற்கு ஒட்டுமொத்த பொறுப்பு. இதற்கு பிரதமர் மன்மோகன் சிங் எங்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார் தொகாடியா.

பாஜக மூத்தத் தலைவரான வெங்கையா நாயுடு கூறுகையில்,

ராமர் பாலம் குறித்து நீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்த அறிக்கைக்கு மத்திய மந்திரிகள் பரத்வாஜ், டி.ஆர்.பாலு, அம்பிகா சோனி ஆகிய 3 பேரும் தான் முழு பொறுப்பு. எனவே அவர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.

ராமர் பால விவகாரத்தில் சாதாரண அதிகாரிகளை பலிகடா ஆக்கிவிட்டு மந்திரிகள் தப்பிக்கவிடக் கூடாது. மத்திய மந்திரிகள் 3 பேர் பதவி விலக வேண்டும் இல்லையெனில் அவர்களை மத்திய அரசு பதவி நீக்கம் செய்ய வேண்டும்.

கோடிக்கணக்கான இந்து மக்களின் மனதை புண்படுத்தியதற்காக பிரதமரும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார்.

--------------------

ராமர் பாலம்-ஜெவிடம் இருந்து ஒதுங்கும் வைகோ

மத உணர்வுகளைத் தூண்டிவிட்டு தமிழகத்துக்கு நன்மை பயக்கும் சேது சமுத்திரத் திட்டத்தை எதிர்ப்பதை ஏற்க முடியாது என மதிமக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார். இதன்மூலம் தனது கூட்டணியின் தலைவியான அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் நிலையில் இருந்து வைகோ விலகியுள்ளார்.

சேது சமுத்திரத் திட்டத்தை பாஜகவுடன் இணைந்து தீவிரமாக எதிர்த்து வருகிறார் ஜெயலலிதா. ஆனால், இத் திட்டத்தை மிகத் தீவிரமாக ஆதரித்து அதற்காக பல போராட்டங்களையும் நடத்திய வைகோ இதுவரை இந்த விஷயத்தில் கருத்து கூறாமல் அமைதி காத்தார்.

இந் நிலையில் இன்று பெரியாரின் பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு மாலை அணிவித்த வைகோ பின்னர் நிருபர்களிடம் பேசுகையில்,

நான் எந்த மதத்துக்கும் எதிரானவன் அல்ல. எத்தா மதங்களையும் உணர்வுகளையும் மதிப்பவன்.

சேது சமுத்திரத் திட்டம் அண்ணாவின் கனவு. ஆனால், ஆதாம் பாலம் (ராமர் பாலம்) இடிக்கப்படுவதாகக் கூறி அதைத் தடுக்க பாஜக மற்றும் மதவாத அமைப்புகள் முயல்வதை ஏற்க முடியாது. இதற்காக மத உணர்வுகளைத் தூண்டி விட முயல்வது சரியல்ல.

இத் திட்டத்தை நிறைவேற்ற அண்ணா பாடுபட்டார். ஆனால், முதல்வர் கருணாநிதி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. வாய்ப்புகள் வந்தபோது கூட அமைதி காத்தார்.

ஆனால், இத் திட்டத்துக்காக நான் அயராது பாடுபட்டேன் என்றார் வைகோ.

அதிமுக கூட்டணிக்குப் போனதில் இருந்து முக்கிய விவகாரங்களில் ஜெயலலிதாவின் நிலையே தனது நிலை என்ற வகையில் முடிவெடுத்து வந்த வைகோ முதன் முறையாக தனி நிலையை எடுத்துள்ளார்.

இதற்கு ஜெயலலிதாவிடம் இருந்து எப்படி ரியாக்ஷன் இருக்கப் போகிறதோ தெரியவில்லை.

தற்ஸ்தமிழ். கொம்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உங்க‌ட‌ அறிவுக்கு நீங்க‌ள் இப்ப‌டி எழுதுறீங்க‌ள் அவ‌ர்க‌ள் ஜ‌ன‌நாய‌க‌த்தின் மீது ந‌ம்பிக்கை இருந்த‌ ப‌டியால் தான் அர‌சிய‌லில் இற‌ங்கின‌வை இந்தியாவில் ஜ‌ன‌நாய‌க‌ம் என்ற‌து சொல் அள‌வில் தான் இருக்கு செய‌லில் இல்லை................ 2023 டெல்லிக்கு உள‌வுத்துறை கொடுத்த‌ த‌க‌வ‌ல் உங்க‌ளுக்கு வேணும் என்றால் தெரியாம‌ இருக்க‌லாம் இது ப‌ல‌ருக்கு போன‌ வ‌ருட‌மே தெரிந்த‌ விடைய‌ம்.........................நீங்க‌ள் யாழில் கிறுக்கி விளையாட‌ தான் ச‌ரியான‌ ந‌ப‌ர்.............................என‌க்கும் த‌மிழ‌க‌ அர‌சிய‌ல் அமெரிக்கா அர‌சிய‌ல் டென்மார்க் அர‌சிய‌ல் ப‌ற்றி ந‌ங்கு தெரியும் ஆனால் நான் பெரிதாக‌ அல‌ட்டி கொள்வ‌து கிடையாது.................   ந‌ண்ப‌ர் எப்போதும் த‌மிழ‌ன் ம‌ற்றும் விவ‌சாயிவிக் அண்ணா இவ‌ர்க‌ள் இருவ‌ரும் 2020ம் ஆண்டு ர‌ம் தான் மீண்டும் ஆட்சிக்கு வ‌ருவார் என்று சொன்ன‌வை  நான் அதை ம‌றுத்து பைட‌ன் தான் ஆட்சிக்கு வ‌ருவார் என்று சொன்னேன் அதே போல் நான் சொன்ன‌ பைட‌ன் அமெரிக்கன் ஜனாதிபதி ஆனார்😏............................ ஆர‌ம்ப‌த்தில் தாங்க‌ளும் வீர‌ர்க‌ள் தான் என்று வார்த்தைய‌ வீடுவின‌ம் ஒரு சில‌ர் அடிக்கும் போது  அடிக்கு மேல் அடி விழுந்தால் ப‌தில் இல்லாம‌ கோழை போல் த‌ங்க‌ளை தாங்க‌ளே சித்த‌ரிப்பின‌ம்🤣😁😂..............................
    • இந்த மாத முடிவில் சில நாடுகளின் நரித்தனத்தாலும், சுயநலத்தாலும் இரு நாடுகள் அணு ஆயுதங்களால் பலமாக தாக்கபட போகின்றன. ஜீசசும் வருகின்றார் என்ற செய்தும் உலாவுகிறது.
    • நான் யாழில் எழுத தொடங்கியது 2013. அதுதான் உளவுதுறை பிஜேபி கைப்பாவை ஆச்சே? அதேபோல் இப்படி சொன்ன தேர்தல் ஆணையம் மீது ஏன் சீமான் வழக்கு போடவில்லை? நம்ப வேண்டிய தேவை இல்லை. என் கருத்து அது. ஆனால் தேர்தல் ஆணையம் இப்படி ஒரு விடயத்தை சீமானிடம் சொல்லாது. எந்த அதிகாரியாவது மேலிட பிரசரால் இப்படி செய்கிறோம் என சீமானிடமே வெளிப்படையாக சொல்வாரா? மிகவும் சின்னபிள்ளைதனமாக சீமான் கதை பின்னுகிறார். நம்ப ஆள் இருக்கு என்ற தைரியத்தில். சீமான் சொல்வது உண்மை எனில் சீமான் வழக்கு போட்டிருக்க வேண்டும்.  போடமாட்டார் ஏன் என்றால் இது சும்மா….லுலுலுலா கதை. இந்த 😎 இமோஜியை பாவிக்காமலாவது விட்டிருக்கலாம். திருடப்போகும் இடத்தில் சிக்னேச்சர் வைத்தது போல் உள்ளது. 🤣🤣🙏
    • நான் எப்போதும் என்னை தேர்தல் விற்பனர் என்றோ - என் கணிப்புகள் திறம் என்றோ சொன்னதில்லை.  நான் என்ன லயலா கொலிஜா அல்லது இந்தியா டுடேயா? சர்வே எடுக்க. அல்லது சாத்திரக்காரனா🤣 நான் கணிக்கிறேன் என நீங்கள் எழுதுவதே சுத்த பைத்தியக்காரத்தனம். எல்லாரையும் போல் நான் என் கருத்தை எதிர்வுகூறலாக எழுதுகிறேன். அது என் கருத்து மட்டுமே. Pure speculation. அது சரி வரும், பிழைக்கும் - I don’t give a monkey’s.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.