Jump to content

சிறீலங்கா சிறைகளில்பட்ட உங்கள் சொந்த அனுபவங்கள்!


சிறீ லங்கா நீதி விசாரணை நடைமுறை!  

17 members have voted

You do not have permission to vote in this poll, or see the poll results. Please sign in or register to vote in this poll.

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அந்தத் தமிழ்க்கைது எவ்வளவு வருடம் சிறையில் இருந்தார்?. நீங்கள் வெளிவந்தபின்பும் சிறையில் இருக்கிறரா?. தென் தமிழீழத்தைச் சேர்ந்த ஒருவர் 86 ,87மாண்டில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தார். பல வருடங்களுக்கு பிறகு 2001, 2002ல் சிறையில் இருந்து தப்பி கால் நடையாக அவரது சொந்த இடத்துக்கு சென்றார். பல வருடங்களுக்கு பிறகு அவருடைய ஊருக்கு சென்றதினால் அவரை அவரது மகள் கூட அடையாளம் காணமுடியமால் இருந்ததாம். அவர் சிறையில் இருந்த காலத்தில் அவரது மனைவியும் இறந்து விட்டார். அவருக்கு தான் எந்த சிறைச்சாலையில் இருந்தது என்றது கூடத்தெரியாதாம். அச்சிறையில் மேலும் பல தமிழ்க்கைதிகள் இருக்கிறார்கள் என்றும் அவர் சொல்லி இருந்தார். அவர் இறந்து விட்டார் என்றே அவர்களது ஊரவர்கள் நினைத்திருந்தார்கள். இதேபோல அகதிகளாக வெளிக்கிட்டு பல நாடுகளில் பலவருடங்களாக சிறைகளில் தமிழர்கள் இருக்கிறார்கள். வட இந்தியாவிலும் அப்பாவித் தமிழர்கள் சிறைகளில் இருக்கிறார்கள். எகிப்து போன்ற நாடுகளிலும் 10,15 வருடங்களாக தமிழர்கள் சிறையில் இருக்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • Replies 103
  • Created
  • Last Reply

மன்னிக்கவும் கந்தப்பு, அவர் பலகாலமாக சிறையில் இருந்தார். ஆனால், எவ்வளவு காலம் இருந்தார் என்பது எனக்கு இப்போது நினைவில்லை / தெரியாது.

இங்கு பிரச்சனை எப்படி வருகின்றது என்றால்,

1. மொழிப்பிரச்சனை: தமிழர் ஒருவர் பிடிக்கப்பட்டால் - அவருக்கு சிங்களம் தெரியாவிட்டால், அவர் Bae Bae.. என்று வாயில் சொல்லிக் கொண்டிருப்பார். சரியாக அவரால் பொலிசாரின் விசாரணை, நீதிமன்றம் என்பனவற்றை எதிர்கொள்ள முடியாமல் இருக்கும்.

2. அறிவு போதாமை: பலருக்கு கைது செய்யப்பட்டால் என்ன நடக்கும், அதன் நடைமுறை ஒழுங்குகள் எவை - Procedures - தெரியாமல் இருக்கின்றது. போலிசார் அல்லது வேறு யாராவது இவற்றை பற்றி இவர்களிற்கு கூறி... உனக்கு இந்த இந்த வழிகளில் வெளியால வர சந்தர்ப்பம் இருக்கு... இப்படி வழிகள் அல்லது சட்ட ஆலோசனைகள் இருக்கின்றது என்று இவர்களிற்கு சொல்வதில்லை.. இந்நிலையில் இவர்கள் மற்றைய தமிக்கைதிகளுடனும் உரையாடாது Reserved Type ஆட்களாக இருக்கும் போது நிலமை இன்னும் சிக்கலாகிவிடுகின்றது...

3. பயம்: கைதுசெய்யப்பட்டதும் உளவியல் ரீதியாக ஏற்பட்ட அதிர்ச்சி, மற்றும் பயத்தில் இருந்து மீள்வதற்கு சிலருக்கு நீண்டகாலம் செல்கின்றது. இவர்களால் மற்றையவர்கள் போல் சாதாரணமாக செயற்பட முடியாது. நான் எனது சொந்தக்கதையிலேயே எனக்கு ஏற்பட்ட உளவியல் அதிர்ச்சிகளை பற்றி உங்களுக்கு தெளிவாக கூறியுள்ளேன். எனினும், நான் ஓரளவு சிறைவாழ்வை தாக்குபிடிக்க காரணம் என்னுடன் சேர்த்து இன்னும் 17 தமிழர்கள் கைது செய்யப்பட்டிருந்தார்கள்.

ஆனால், நான் தற்செயலாக தனியாக கைது செய்யப்பட்டு, தனியாக சிங்களக்கைதிகளுடன் சிறையில் அடைக்கபட்டிருந்தால் எனது நிலமை என்னவாகி இருக்கும் என்று நினைக்கின்றீர்கள்? அது வேறு ஏதாவது விபரீதமான முடியில் போயிருக்கும்...

பயம் காரணமாக பலர் போலிசாருடன், வார்டனுடன் தம்மை வெளியில் எடுக்கும் முயற்சிக்கு தேவையான ஆரம்ப வேலைகளில் ஈடுபட முடியாமல் இருக்கின்றார்கள். அதாவது ஏதாவது கதைக்க போனால் தமக்கு ஆபத்து வரக்கூடும் என்ற பயம்...

4. திட்டமிட்ட உளவியல் தாக்குதல்கள்: நான் பல வருடங்களிற்கு முன் ஒரு ஆங்கிலப் படம் பார்திருந்தேன். அந்தப் படத்தின் கரு என்னவென்றால் ஒரு அமெரிக்கன் வசமாக மத்திய கிழக்கு நாட்டில் உள்ள சிறை ஒன்றில் மாட்டுப்படுகின்றான். அந்தப் படத்தில் மிக அழகாக எப்படி மிகவும் திட்டமிட்ட வகையில் மனித மனம் சிதைக்கப்பட்டு வாழ்க்கையில் மீளவும் சாதாரண பிரஜைகளாக வாழமுடியாதபடி மனநோயாளிகள் ஆக்கப்படுகின்றார்கள் என்று காட்டப்பட்டது..

அதாவது, இங்கு நான் சொல்ல வரும் செய்தி என்னவென்றால், கைது நடவடிக்கையை வெறும் கைது நடவடிக்கை என்று மட்டும் சொல்ல முடியாது. தமிழரை கைது செய்து உள்ளே அனுப்புவதன் மூலம் அவர்களது மூளை திட்டமிட்ட வகையில் சிங்கள பேரினவாதிகளால் சிதைக்கப்படுகின்றது..

இதை இன்னொரு வகையில் சொன்னால், நாயிற்கு நலம் எடுப்பது மாதிரி என்று சொல்லலாம். அதாவது தமிழன் ஒருவன் சிறையினுள் ஒருமுறை உள்ளே போய் வெளியே வந்தால் அவன் முற்றிலும் ஒரு மனநோயாளியாக மாறுவதற்கு 100% சந்தர்ப்பம் உள்ளது.

இங்கு மனநோயாளி என்றால் அது மற்றவர்களிற்கு வெளியில் வெளிக்காட்டப்படும் வகையில்/ வெளியில் தெரியும் வகையில் இருக்கும் என நீங்கள் நினைக்ககூடாது. பலர் தீவிர மனநோய்களினால் பாதிக்கப்பட்டு இருப்பார்கள், ஆனால் வெளியில் மற்றவர்களிற்கு அது தெரியாது. மற்றவர்கள் அவனை சாதாரணமானவனாகவே நினைப்பார்கள்...

அதாவது பிரச்சனை இங்குதான் இருக்கின்றது.. நீங்கள் சொன்னபடி 10, 15 வருடங்களாக சிறையில் இருப்பவர்கள் மேற்கூறிய 04 காரணங்களின் தாக்கத்தினால் அவ்வாறு இருக்க கூடும்...

மனநோயாளியாக தமிழன் ஒருவன் சிறையில் இருந்தால் அவனால் எப்படி சிறைக்கு வெளியில் வர முயற்சிக்க முடியும்? இதுதான் பிரச்சனை!

Link to comment
Share on other sites

நீங்கள் நேரடியாக அனுபவித்த இலங்கை சிறைச்சாலை அனுபவங்களை பகிர்ந்து கொள்வது சிறைச்சாலை பற்றிய ஆய்வுகளை விட நல்ல விசயம். வாசிக்கும் போது சில இடங்களில் பயமும் அச்ச உணர்வும் புலம் பெயர் தேசத்தில் இருக்கின்றோம் என்பதை கடந்து எமக்கே ஏற்படுகின்றது. கொழும்பில் வாழும் தமிழருக்கு எப்படி இருக்கும்? அன்றாடம் சிறையில் அடைபட்டுக்கொண்டிருக்கும் மக்களுக்கு எப்படி இருக்கும்? என்று உணர முடிகின்றது. பத்து தமிழர்கள் பிடிபட்டார்கள் இருபது தமிழர்கள் கைது என்று செய்திகள் பல பத்து வருடங்களாக வருவதால் சாதாரண செய்தியாகி விட்டது. அதற்கு அப்பால் என்ன நடக்கின்றது என்ற பயங்கரம் உங்களை போல் எழுதினால் தான் மக்களுக்கு தெரியும். இப்பதிவு பல தளங்களில் வெளிவர வேண்டும். பல தரப்பு மக்களும் அறிந்து கொள்ள வேண்டும்.

தொடர்ந்து துன்பங்களை தரும் சிங்களமும் அந்த துன்பத்தை சாதகமாக்கி பிழைப்பு நடத்தும் ஈவிரக்கமற்ற எம்மினத்தை சேர்ந்த சட்டத்தரணிகள்பற்றியும் அறிந்து கொள்ள முடிகின்றது. பிணையில் எடுப்பது பற்றியும் சிறையில் காசு பிடுங்குவது பற்றியும் நிறைய தகவல்கள் இதில் அறிய முடிகின்றது. கொழும்பில் சிறையில் எமது உறவு ஒருவர் பிடிபட்டால் வெளிநாடுகளில் இருக்கும் உறவுகளிடம் பண உதவி Nகட்பவர்கள் நிறைய உண்டு. அதை சாதாரண கதையாக அலட்சியம் செய்பவர்களும் இருக்கின்றார்கள். எல்லத்தரப்புக்கும் பயனுள்ளது.

உங்கள் அனுபவங்கள் இயல்பான எழுத்து நடையுடன் இருப்பதால் நன்றாக உணர முடிகின்றது. அதற்கும் முன்வந்து பகிர்ந்து கொண்டதுக்கும் பாரhட்டுக்கள். தொடருங்கள்.

Link to comment
Share on other sites

நன்றி கலைஞன்.

சிங்கள் சிறைகளில் அடைக்கப்படும் தமிழ் இளைஞர்களிற்கு இழைக்கப்படும் கொடுமைகளை உண்மையிலேயே வார்த்தைகளால் வர்ணிப்பதென்பது என்றுமே இயலாத விடையம்.கலைஞனின் பதிவு ஒரு உதாரணம் மட்டுமே............

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

இப்படியான பதிவுகள் வரவேண்டும். வாசிக்கும் போதே கவலையாக இருக்கிறது.

Link to comment
Share on other sites

அந்த சந்தோசமான செய்தி அன்றொரு நாள் அதிகாலை எமக்கு கிடைத்தது. நாம் சிறீ லங்கா அநீதிமன்றத்தின் கட்டளைப்படி பிணையின் மூலம் விடுதலை செய்யப்படுவதற்கு ஆவண செய்யப்பட்டோம். எம்மை சிறையில் தள்ளிய தினத்தில் இருந்து கைதுசெய்யப்பட்ட தமிழ் கைதிகளின் உறவினர்கள் பலர் பலவிதமாக எம்மை பிணை மூலம் வெளியே கொண்டுவருவதற்கு முயற்சி செய்திருந்தார்கள். ஆனால், ஆரம்பத்தில் அந்த முயற்சிகள் வெற்றிபெறவில்லை. ஆனால், தமிழ் கைதிகளின் உறவினர்கள் தினமும் எம்மை பிடித்த போலிஸ் ஸ்டேசனுக்கு சென்று அந்த ஸ்டேசனின் தலைமை அதிகாரிக்கு அழுத்தம் கொடுத்ததன் காரணமாகவும், தினமும் அவனை தொலைபேசியில் தொல்லைப் படுத்தியதன் காரணமாகவும். இறுதியில் அவன் பிணைமூலம் எம்மை வெளியே எடுப்பதற்கு போடப்பட்ட முட்டுக்கட்டைகளை விலக்கிக் கொண்டான்.

காலையில் எமது பெயர் வாசிக்கப்பட்டதில் இருந்து எமக்கு எல்லோருக்கும் நல்ல சந்தோசம். ஆனால், பிரச்சனை என்னவென்றால் போடுவதற்கு ஒழுங்கான உடுப்பு இல்லை. நாம் எல்லோரும் தெருவில் நிற்கும் பிச்சைக்காரங்கள் போடுவது போன்ற நாற்றம் மிக்க கேவலமான உடுப்புகளை போட்டிருந்தோம். காலில் செருப்பு இல்லை. களவு போய்விட்டது. எமது கோலம் பார்ப்பதற்கு மிகவும் மோசமாய் இருந்தது. ஆனாலும், இனியென்ன? வீடு சென்று உடுப்பை மாற்றுவது தானே என்ற ஆறுதலுடன் மனதை சாந்திப்படுத்திக் கொண்டோம்.

நாம் வெளியே போகப் போகின்றோம் என அறிந்ததும் சிங்கள கைதிகள் எம்மிடம் வந்து நாம் வெளியே போனதும் தமக்கு காசு தர வேண்டும் என வற்புறுத்தினார்கள். போலீசுகாரரும், காவலாளிகளும், வார்டனும் ஒவ்வொருவராக எம்மிடம் வந்து நாம் வெளியே போனதும் தமக்கு காசு தரவேண்டும் எனவும், அப்போதுதான் நாம் அடுத்தமுறை பிடிபட்டு சிறையினுள் வரும்போது எம்மை தாம் நல்ல முறையில் கவனிப்போம் என்றும் கூறினார்கள். எமக்கும் அந்த நேரத்தில் நாம் மீண்டும் சிறைக்கு வரக்கூடும் போன்ற உணர்வு தோன்றியது. இதனால், அவர்கள் கேட்டபடி காசு தருவதாக வாக்குறுதி அளித்தோம்.

காலை சுமார் ஏழு மணியளவில் நாம் மற்றைய கைதிகளில் இருந்து பிரிக்கப்பட்டு சிறை வாயிலுக்கு அருகில் இருந்த ஒரு இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டோம். அங்கு பல விசாரணகள், கேள்விகள் கேட்கப்பட்டன (இவை இப்போது எனக்கு நினைவில் இல்லை). கடைசியில் எமக்கு மீண்டும் விலங்குகள் மாட்டி அநீதிமன்றத்திற்கு அழைத்து செல்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. ஆனால், சில தமிழ் கைதிகள் "நாங்கள் இப்போது பிணையில் விடுவிக்கப் படப்போகின்றோம் தானே, எனவே ஏன் எங்களுக்கு மீண்டும் விலங்கு மாட்டுகின்றீர்கள்?" என கேட்டு வாதிடதொடங்கினார்கள். இந்த நேரத்தில் எம்மிடம் இருந்து காசு வாங்கவேண்டிய தேவை (கையூட்டு) போலிசாருக்கு இருந்ததால் அவர்கள் நாங்கள் சொன்னதை உடனடியாக கேட்டார்கள். அவர்கள் எம்முடன் இப்போது மிகவும் சினேகபூர்வமாக மாறிவிட்டார்கள். ஏனெனில், நாம் விரைவில் அவர்களிற்கு கையூட்டு கொடுக்கப்போகின்றோம் என்ற சந்தோசத்தில் இருந்தார்கள். எனவே, போலிசார் எம்மிடம் "சரி சும்மாவா வரபோறீங்கள்?" என்று கொச்சைத் தமிழில் கேட்டுவிட்டு (அதாவது கைகளிலும், கால்களிலும் விலங்கு மாட்டப்படாது) "சரி.. நீங்க சும்மா வரலாம், ஆனா தப்பி ஏதாவது யாராவது போனா, பிறகு திருப்பி இங்க இருக்க வேண்டியதுதான்!" இவ்வாறு எச்சரிக்கை தந்துவிட்டு, லொறி போன்ற ஒரு வாகனத்தில் எம்மை ஏற்றினார்கள்.

வாகனத்தில் நாம் எல்லோரும் பின்னால் இருந்தோம். எம்முடன் நான்கு போலீசுகாரர் ஆயுதங்களுடன் காவலுக்கு பின்னால் இருந்தார்கள். அவர்கள் எம்முடன் பகிடிகள் விட்டு சந்தோசமாக இருந்தார்கள். ஏனெனில், நாம் எல்லோரும் குறிப்பிட்ட அந்த போலிசுகாரரிடம் அநீதிமன்றத்திற்கு சென்றதும் உறவினர்களிடம் காசு வாங்கி கொடுக்கவேண்டும் என சிறையில் சிங்கள குண்டர்களினால் அறிவுறுத்தப் பட்டிருந்தோம். காவலுக்கு வந்த போலிசுகாரர் எம்மிடம் நாயாய் வழிந்தார்கள். "அட தூ!" என்று அவர்களின் மூஞ்சையில் காறித் துப்ப வேண்டும் போல இருந்தது.

வாகனம் மகர சிறையில் இருந்து வெளியேறி சில மணித்தியாலங்களின் பின் (நான் நினைக்கின்றேன், சிறீ லங்கா அநீதி மன்றத்தை சென்றடைய சுமார் நான்கு மணித்தியாலம் நேரம் பிடித்தது என்று.. சரியாக நினைவில் இல்லை) அநீதி மன்றத்தை - அதாவது எம்மை சிறைக்கு ஆரம்பத்தில் அனுப்பிய அநீதிமன்றத்தை சென்றடைந்தோம். அங்கு motion - பிணை பத்திரத்தில் நாம் ஒவ்வொருவராக கையெழுத்திட்டதும் விடுவிக்கப்பட்டோம். சிறீ லங்கா அநீதிமன்றத்தில் எமது ஏராளம் உறவினர்கள் எமது வருகைக்காக காத்திருந்தார்கள். அநீதிமன்றத்தில் நாம் விடுவிக்கப்படும் போது சிறீ லங்கா அநீதி மன்றத்தினால் சில நிபந்தனைகள் எமக்கு விடுக்கப்பட்டன. அவை...

1. நாம் தினமும் மாலை நான்கு மணிக்கு எம்மை கைது செய்த போலீசு ஸ்டேசனுக்கு சென்று கையெழுத்து இடவேண்டும்.

2. நாம் சிறீ லங்காவை விட்டு வெளியேற முடியாது.

3. எமது வழக்கு மூன்று மாதங்கள் தள்ளி மீண்டும் விசாரணைக்கு வர இருந்தது. இந்த விசாரணை தேதிக்கு நாம் எல்லோரும் - 18 பேரும் சமூகம் தரவேண்டும்.

4. போலிசார் விரும்பும் பட்சத்தில் நாம் எந்த நேரமும் மீண்டும் சிறைக்கு அனுப்பப்படலாம்.

எமது இந்த விடுவிப்பு தற்காலிகமானதாக இருந்தாலும் சிறையை விட்டு வெளியே வந்து மூச்சு எடுப்பது மனதில் மகிழ்ச்சியை தந்தது. எம்மை கண்ட உறவினர்கள் எல்லோரும் எமது மோசமான கோலங்களை பார்த்துவிட்டு சத்தம் போட்டு, ஒப்பாரி வைத்து அழத்தொடங்கி விட்டார்கள். நாம் எல்லோரும் தாடிகள், மீசைகளுடன் சாமியார் கோலத்தில் காட்சி கொடுத்தோம். நான் வெறுங்காலுடன் நிற்பதை கண்ட உறவினர் ஒருவர் எனக்கு உடனடியாக அருகில் இருந்த ஒரு கடையில் Bata செருப்பு ஒன்று வாங்கி தந்தார். வயிறு சரியான பசி. என்னை உடனடியாக அருகில் உள்ள ஒரு சாப்பாட்டு கடைக்கு அழைத்துச் சென்று சிற்றுண்டியும் வாங்கித் தந்தார். இதில் பகிடி என்னவென்றால், நாங்கள் ஒருவரும் போலிசாருக்கு கையூட்டு கொடுக்கவில்லை. அவர்களிற்கு டிமிக்கி கொடுத்துவிட்டு நாங்கள் ஆளாளுக்கு எம்மை தேடி வந்த உறவினர்களுடன் ஒவ்வொரு திசைகளில் வீடுகளிற்கு கிளம்பிவிட்டோம். சிறை போலிசார் காசு - கையூட்டு கிடைக்காததையிட்டு ஏமாற்றமும், எம்மில் கோபமும் அடைந்தனர்.

தொடரும்...

Link to comment
Share on other sites

கந்தப்பு, நான் மாதக்கணக்கில் சிறையில் இருக்கவில்லை...

இங்கு பிரச்சனை - அடிப்படை விசயம் என்னவென்றால்... நீங்கள் ஒரே ஒருநாள் அங்கு - மகர சிறைக்கு சென்றுவந்தாலே - ஒரே ஒரு நாளைக்கு உங்களை அங்கே உள்ளே தள்ளி எடுத்தாலே ஆயுள்பூராக அல்லது பகுதியாக உங்கள் மனதை நேரடியாக திட்டமிட்டு சிதைப்பதற்கு தேவையான காரியம் மிகக் கச்சிதமாக செய்யப்பட்டு விடும்.

ஒரு உதாரணத்திற்கு கூறுகின்றேன். ஒரு பெண் வாழ்க்கையில் ஒரே ஒருமுறை கற்பழிக்கப்படுவளாய் இருந்தால் அந்த கொடூரத்தை அவளால் அவள் ஆயுள் காலம் முழுவதும் மறக்க முடியாது. அவள் வாழ்க்கையில் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட அந்த சம்பவம் இறக்கும்வரை அவள் மனதில் பூதம் போல் ஒளிந்திருந்து அவளை உறுத்திக்கொண்டு இருக்கும். அந்தப்பெண் எத்தனை தடவைகள் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டாள் அல்லது எத்தனை பேரால் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டாள் என்பதல்ல, அவள் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டு விட்டாள் என்பது தான் மிகவும் கொடூரமான விசயம்.

இந்த சிறை கைதுகளும் அவ்வாறுதான். நான் எனக்கு ஏற்பட்ட உளவியல் பிரச்சனைகள், அதிர்ச்சிகள் பற்றி தொடர்ந்து எழுதும்போது கூறுகின்றேன். எனது உடலில் ஏற்பட்ட தோல் வியாதிகளை பற்றி ஏற்கனவே கூறியுள்ளேன்.

இந்த சிறை அனுபவ தொடரை தொடர்ந்து வாசித்து கருத்து கூறிவரும் கந்தப்புவிற்கு மிக்க நன்றி!

Link to comment
Share on other sites

வீட்டிற்கு போனதன் பின்புதான் எனக்கு என்னென்ன சனியன்கள் பிடித்துள்ளது என்று தெரியவந்தது. குளிப்பதற்கு முன் கண்ணாடிக்கு முன் நின்று எனது உருவத்தை பார்த்தபோது என்னாலேயே என்னை நம்பமுடியவில்லை. யாரோ மாதிரி - தெருப்பிச்சைக்காரன் மாதிரி இருந்தது. கிலோ கணக்கில் உடம்பில் படிந்திருந்த ஊத்தைகளை மணித்தியாலக் கணக்கில் தேய்த்து குளித்தபின் சிறிது ஆறிவிட்டு உறங்கிவிட்டேன்.

சாமத்தில் தூக்கம் கலைந்தது. திடுக்கிட்டு எழும்பினேன். நான் படுத்திருக்கும் போது என்னை அறியாமல் ஏதேதோ சொல்லி பிதற்றுவதாய் வீட்டுக்காரர் சொன்னார்கள். எனக்கு தூக்கத்தால் எழுந்ததும் நான் தற்போது எங்கு இருக்கின்றேன் என்று தெரியவில்லை. யாழ்ப்பாணத்தில் இருக்கின்றேனா அல்லது கொழும்பில் இருக்கின்றேனா அல்லது சிறையினுள் இருக்கின்றேனா என உடனடியாக தெரியவில்லை. சிறிது நேரம் கட்டிலில் இருந்து யோசிக்க வேண்டி இருந்தது. மலசலகூடத்திற்கு செல்ல வேண்டும் போல இருந்தது. ஆனால், உடனடியாக போகமுடியவில்லை. ஏனென்றால், நான் தற்போது எங்கு இருக்கின்றேன் என எனக்கு தெரியவில்லை. இறுதியில் ஒருவாறாக நான் சுதாகரித்து என்னிலை அறிந்துகொள்ளக்கூடியதாக இருந்தது. இவ்வாறு இரவில் சில மாதங்கள் படுத்திருக்கும் போது பிதற்றுதல், திடீரென்று எழும்பியபின் பிறகு எங்கு இருக்கின்றேன் என்று தெரியாமல் முழுசிக்கொண்டு இருத்தல்... இப்படி பல உளவியல் சிக்கல்கள் ஏற்பட்டது.

இதைவிட முகம், முதுகு தோல்களில் பருக்கள் போட்டு (சின்னம்மைக்கு வருவது போன்று...) பார்ப்பதற்கு அகோரமாக இருந்தது. இந்த தோல் வியாதிகள் மாறுவதற்கு பல வருடங்கள் சென்றது.

எமது வழக்கு சுமார் இரண்டு வருடங்களிற்கு மேல் இழுபட்டது. ஒவ்வொரு முறையும் தவணை போடும்போது, வாழ்க்கை சீ என்று இருக்கும். ஒவ்வொரு முறையும் சிறீ லங்காவின் அநீதிமன்றத்திற்கு போவதற்கு முன் முதல்நாள் இரவு நம்முடன் பிடிபட்ட மற்றையவர்களுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு அவர்கள் நாளை அநீதிமன்றத்திற்கு வருகின்றார்கள் என்பதை உறுதி செய்துகொள்வோம். ஏனெனில், ஒருவர் வராவிட்டாலும், எமக்கு அநீதிமன்றத்தில் பிரச்சனை வந்துவிடும். ஒருவர் வராததை காரணம் காட்டி வழக்கை இன்னொரு நாளுக்கு தள்ளிவிடுவான்கள் (நாங்கள் எல்லாமாக 18 ஒன்றாக பிடிக்கப்பட்டு, ஒன்றாக வழக்கு பதிவு செய்யப்பட்டு இருந்தோம்). ஒரு குற்றமும் செய்யாத அப்பாவிகளான நாங்கள் கொலைகாரர், கொள்ளைக்காரர், திருடர்கள், பெண்களை கற்பழித்த அயோக்கியர்கள் கூடும் அநீதிமன்றத்தில் ஒன்றாக வைத்து விசாரிக்கப்பட்டோம். இது என்னை மிகவும் பாதித்தது.

இறுதியில் பல துன்பங்களை அனுபவித்தபின், ஒருவாறாக சுமார் இரண்டரை வருடங்கள் சொச்சத்தின் பின் நாங்கள் நிரபராதிகள் என தீர்ப்பு தரப்பட்டு அநீதிமன்றத்தின் பிடியில் இருந்து விடுதலை செய்யப்பட்டோம். விடுதலையை சிங்களத்தில் நிதாஸ் என்று சொல்வான்கள் என நினைக்கின்றேன். நாங்கள் விடுதலை செய்யப்பட்டு விட்டோம் என அறிந்ததும் ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி சந்தோசப்பட்டோம்.

சில தனிப்பட்ட காரணங்களால் சில விடயங்களை நான் இங்கு எழுதவில்லை. ஆனால், வெளிஉலகிற்கு சொல்லவேண்டிய சுமார் 95% செய்தியையும் நான் இந்த கதையில் கூறிவிட்டேன். என்னைப்போல் ஆயிரம், ஆயிரம் அப்பாவி தமிழ் இளைஞர்கள் எனது அனுபவத்தை விட மிகவும் பயங்கரமான அனுபவங்களையெல்லாம் சிறீ லங்கா சிறைகளில் பெற்று இருப்பார்கள். இப்போதும் கூட ஆயிரக்கணக்கில் அப்பாவி தமிழ் இளைஞர்கள் சிறீ லங்கா சிறைகளில் இருந்து வாடிக்கொண்டு இருக்கின்றார்கள். இவர்களை கடவுள்தான் காப்பாற்றவேண்டும்!

சிறைக்குபோய் வந்ததாலும், அதனால் எனக்கு ஏற்பட்ட நேரடியான, மற்றும் மறைமுகமான உடல், உளவியல் பாதிப்புக்களாலும் நான் வாழ்க்கையில் அதளபாதாளத்தினுள் தூக்கிவீசப்பட்டேன். எனது வாழ்க்கையை மறுசீரமைக்க பல வருடங்கள் எடுத்தது. வேறு என்னத்தை கூறுவது?

இத்துடன் சுமார் ஐந்து மாத காலமாக இழுபட்டு வந்த இந்த தொடர்கதை நிறைவுக்கு வருகின்றது. கதையை வாசித்து தொடர்ந்து கருத்துக்கள் கூறிவந்த கந்தப்பு, மற்றும் கருத்துக்கள் கூறிய அனைவருக்கும், மற்றும் வாசகர்களிற்கும் மிக்க நன்றிகள்!

நன்றி! வணக்கம்!

முற்றும்!

Link to comment
Share on other sites

சோகமான அனுபவம் உங்களுடையது இதனை ஏன் நீங்கல் புளக் ஒன்றினை உருவாக்கி பதியக்கூடாது

Link to comment
Share on other sites

மைக்கல் ஜக்சனின் "They Don't Care About Us" பாடல்.. (Prison Version)

Skin head, dead head

Everybody gone bad

Situation, aggravation

Everybody allegation

In the suite, on the news

Everybody dog food

Bang bang, shot dead

Everybody's gone mad

All I wanna say is that

They don't really care about us

All I wanna say is that

They don't really care about us

Beat me, hate me

You can never break me

Will me, thrill me

You can never kill me

Jew me, sue me

Everybody do me

Kick me, kick me

Don't you black or white me

All I wanna say is that

They don't really care about us

All I wanna say is that

They don't really care about us

Tell me what has become of my life

I have a wife and two children who love me

I am the victim of police brutality, now

I'm tired of bein' the victim of hate

You're rapin' me of my pride

Oh, for God's sake

I look to heaven to fulfill its prophecy...

Set me free

Skin head, dead head

Everybody gone bad

trepidation, speculation

Everybody allegation

In the suite, on the news

Everybody dog food

black man, black male

Throw your brother in jail

All I wanna say is that

They don't really care about us

All I wanna say is that

They don't really care about us

Tell me what has become of my rights

Am I invisible because you ignore me?

Your proclamation promised me free liberty, now

I'm tired of bein' the victim of shame

They're throwing me in a class with a bad name

I can't believe this is the land from which I came

You know I do really hate to say it

The government don't wanna see

But if Roosevelt was livin'

He wouldn't let this be, no, no

Skin head, dead head

Everybody gone bad

Situation, speculation

Everybody litigation

Beat me, bash me

You can never trash me

Hit me, kick me

You can never get me

All I wanna say is that

They don't really care about us

All I wanna say is that

They don't really care about us

Some things in life they just don't wanna see

But if Martin Luther was livin'

He wouldn't let this be

Skin head, dead head

Everybody gone bad

Situation, segregation

Everybody allegation

In the suite, on the news

Everybody dog food

Kick me, strike me

Don't you wrong or right me

All I wanna say is that

They don't really care about us

All I wanna say is that

They don't really care about us

All I wanna say is that

They don't really care about us

All I wanna say is that

They don't really care about us

All I wanna say is that

They don't really care about us

All I wanna say is that

They don't really care about us

Link to comment
Share on other sites

Akon & Obie Trice பாடிய இன்னொரு சிறையுடன் ஓரளவு சம்மந்தப்பட்ட பாடல்..

{Convict}

(Yeah, SHADY)

{Convict Music}

(Guess who's back)

Still here, haters

{Akon & Obie Trice, Yeah}

Whatcha gonna do it with it, A?

Whatcha gonna do?

{Take em on back to the streets}

I keep the 40 cal on my side

Steppin with the mindstate of the mobster

See a n**** pass by

Tuck your chain in cause he might rob ya

Got glocks for sale, red tops for sale

Anything you need, believe me, I'm gon lace you

Just don't whatever you do, Snitch

Cause you will get hit, pray I don't lace you, yeah

It's risky, the b**** tend to rise out a n****

It's history, Snitch, who decided he's a member

Once he got pinched, coincided with law

Same homie say he lay it down for the boy

Brought game squad around ours

How could it be? Been homies since Superman draws

Only foniness never came to par

He had us, a true neighborhood actor

Had his back with K's

Now we see through him like X-Ray's

Cuffed in that Adam car

No matter, his loss, we at him, it's war

Knowing not to cross those resevoir dogs

You helped plant seeds just to be a vegetable

When we invest in team, it's to the death fo sho

No ex and oh's, tex calicos

Aim at your chest nicca

We started out as a crew, in one speak, it's all honest

Private conferences when we eat, Benihana's

Recondences when we peep enemies on us

Been on these corners, sellin like anything on us

Knowing heaven has shown us being devil's minors

That ain't got s*** to do with the tea in China

We gon keep the grind up til death come find us

Meanwhile in them European whips reclined up

It's an eye for an eye for the riders

We ain't trying to get locked up, we soul survivors

Po Pos is cowards, there's no you, it's ours

We vow this, mixing yayo with soda powder

Who woulda known he would fold and cower

Once the captain showed, he sold whole McDonalds

So no exs and ohs, tex calicos

Aim at your chest nicca

Nowadays, Sammy Da Bull's got the game full

So he move to a rural area to keep cool

He snitchin on a snitch now, there's nothin to tell

Nowadays, your circles should be small as hell

Ain't tryin to meet new faces, this don't interest me

Even if we bubble slow, we'll get it eventually

No penitentary, there will be no climacy

You will meet the lowest snitch in given us a century

These cats is rats now, the streets need decon

That's how they react now, weak when the heat's on em

Stop snitchin, you asked for the life your living

This act is not permitted, Nowhere on the map, It is

Forbidden to send a n**** to prison if you been in it

Along with em and then snitch and become hidden

So it's no exs and ohs, techs calicos

Aim at your chest nicca

Link to comment
Share on other sites

இன்னொரு சிறை சம்மந்தமான பாடல்..

பி/கு: ஈழவன், எனக்கு தனிப்பட்ட புளக்குகள் உருவாக்குவதில் விருப்பமில்லை. யாருக்காவது விருப்பமென்றால் இந்தக்கதையை அவர்களது இணையத்தளங்களில் போடமுடியும்... நன்றி!

Link to comment
Share on other sites

ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஅஅஅ

வேண்டாம் சாமி என்ரை அனுபவத்தை சொல்லப்போக பிறகு நான் ஊரிற்கு போற நேரத்திலை இதைப்படிச்ச சிஜடி காரன் ஞாபகம் வைச்சு என்னை கட்டி வைச்சு அடிக்க ஜயோ சாமி வேண்டாம். வேண்டின அடியை நினைச்சால் இப்பவே எல்லாம் நனையுது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் வழக்கு 2 வருடங்களாக இழுபட்டது. ஆனால் உயிரைப்பாதுக்காக 18 ப் பேரில் ஒருவர் அந்த இரு வருடங்களில் வெளினாட்டுக்கு அகதியாகச் சென்றிருந்தால் வழக்கு இன்னும் இழுபட்டுக் கொண்டே இருந்திருக்கும். மற்றைய 17 பேர்களும் இப்பொழுது இலங்கையில் இருக்கிறார்களா? அல்லது பாதுகாப்பிற்காக வெளினாடு சென்றார்களா?. அவர்கள் மீண்டும் கைது செய்யப்பட வில்லையா?

Link to comment
Share on other sites

குருவே உங்கள் வாழ்க்கையில் இவ்வளவு சோகமா :o ....................இப்படி தான் குருவே எங்களின்ட தூரத்து உறவினர் அவர்கள் கோயில் ஜயர்..............அவரின்ட மகன் சரியான கெட்டிகாரன் என்று எல்லாரும் சொல்லுவீனம் ........நான் அப்ப சின்னபிள்ளை வடிவா தெரியாது...........லலித் அத்துலக்முதலிக்கு குண்டு தாக்குதலின் போது இவன் அந்த இவர் கடைக்கு சாமான் வாங்க போய் கொண்டிருந்தவர்,இவரை தான் இவையள் பிடித்தவை அவனுக்கு ஒன்றும் தெரியாது வடிவா சிங்களம் பேச கூட வடிவா தெரியாது ஏற்றி கொண்டு போயிட்டாங்கள் போய் இவன் மேல குற்றம்சாட்டினவை...........பெற்றோர

Link to comment
Share on other sites

உங்கள் வழக்கு 2 வருடங்களாக இழுபட்டது. ஆனால் உயிரைப்பாதுக்காக 18 ப் பேரில் ஒருவர் அந்த இரு வருடங்களில் வெளினாட்டுக்கு அகதியாகச் சென்றிருந்தால் வழக்கு இன்னும் இழுபட்டுக் கொண்டே இருந்திருக்கும்..

உண்மைதான். 18 பேரில் ஒருவர் வழக்கு முடியுமுன் இலங்கையைவிட்டு சொல்லாமல் கொள்ளாமல் வெளியேறி இருந்தால் கூட வழக்கு வருடக்கணக்காக முடிவின்றி இழுபட்டுக்கொண்டே இருந்திருக்கும்.

மற்றைய 17 பேர்களும் இப்பொழுது இலங்கையில் இருக்கிறார்களா?

தெரியவில்லை. ஆனால், பலர் மிகவும் ஏழைகள். இவர்கள் வெளிநாடு வந்துஇருப்பார்கள் என நான் நினைக்கவில்லை.

அல்லது பாதுகாப்பிற்காக வெளிநாடு சென்றார்களா?

ஒரு சிலர் வெளிநாடு செல்வதற்காக அப்போது காத்திருந்தார்கள். இவர்கள் வெளிநாடு சென்றார்களா இல்லையா என்பது எனக்கு தெரியாது.

அவர்கள் மீண்டும் கைது செய்யப்பட வில்லையா?

அவர்கள் மீண்டும் கைது செய்யப்பட்டிருக்கலாம். நான் பிறகு ஒருவரையும் சந்திக்கவில்லை. பல அப்பாவி தமிழ் இளைஞர்கள் திரும்பத் திரும்ப கைது செய்யப்பட்டு உள்ளே தள்ளப்பட்டார்கள்.

ஒரு அப்பாவியை தண்டித்துவிட்டு பின் நீ குற்றவாளி இல்லை/ நிரபராதி என்று சொல்லி விடுதலை செய்கின்ற, மேலும் அப்பாவிகளை சட்டத்தின்முன் குற்றிவாளிகளாக்கும் இந்த அநீதிகளிற்கு காரணமான சிறீ லங்கா அநீதிமன்றமும், சிறீ லங்கா காவல்துறையும், சிறீ லங்கா அரசும் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும்.

சிங்களவருக்கு ஒரு நீதி, தமிழருக்கு ஒரு நீதி என நீதி வழங்கப்படும் இந்த சிறீ லங்கா நாட்டில் தமிழர்கள் சிங்களவர்களிடம் இருந்து பிரிந்து தனிநாட்டில் சுதந்திரமாக வாழ்வதே தமிழருக்கு தமது இருப்பை காப்பாற்றிக்கொள்ள உதவும்.

கந்தப்பு, யமுனா உங்கள் கருத்துக்களிற்கு நன்றி!

Link to comment
Share on other sites

உங்கள் அனுபவத்தை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள் நண்பரே

இந்த அவஸ்தைகளை என்றும் மறக்க முடியாது,இதைப்போல் பல மடங்கு நானும் அனுபவித்துள்ளேன்.

Link to comment
Share on other sites

அனுபவப்பதிவு அருமை. முன்வந்து எழுதியதிற்கும் இயல்பான எழுத்து நடையில் பதிவை கொண்டு சென்றதற்கும் பாராட்டுக்களும் நன்றிகளும். உங்கள் பதிவை வாசிக்கும் போது எமக்கு ஏற்பட்டதை போன்ற உணர்வு ஏற்பட்டது. விடுதலை செய்யப்பட்டதை படிக்கும் போது ஒரு சந்தோச உணர்வு எற்பட்டது. ஆனால்இந்த கொடும் அனுபவம் எற்பட்டுத்தி விட்ட பாதிப்புகளை படிக்கும் போதும் ஏனைய நிறைய மக்கள் இன்னும் இந்த சிறைகளில் அவலப்படுவதை பார்க்கும் போது சந்தோச உணர்வு காணமல் போய்விட்டது.

நீங்கள் மேலும் சிறைகளில் அனுபவப்பட்டவர்கள்தங்கள் அனுபவங்களை எழுதுவதற்கு முன்மாதிரியாக விளங்கு கின்றீர்கள்.

இலங்கை அரசின் கொடும் செயல்களில் ஒரு பெரும்பகுதி சிறையும் சித்திரவதையும். அந்த வகையில் இவ்வாறான ஆக்கங்கள் ஆங்கிலத்திலும் வர வேண்டும். பலதரப்பட்ட சமூகமும் படிக்க வேண்டும்.

கலைஞன் தனது அனுபவபவ பதிவில் சிறைச்சாலை சம்மந்தமான சில தகவல்களையும் இணைத்து எழுதியது மேலும் சிறப்பு.

இந்த அனுபவப்பதிவை ஆங்கிலத்திலும் எழுதி வெளியிட முயற்சி செய்தால் அது நன்மை பயக்கும்.

அன்புடன்

சுகன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாறன் என்பவரின் வலைப்பதிவிலும் கலைஞனின் சிறை அனுபங்களை பார்க்கக்கூடியதாக இருக்கிறது.

http://thamilamutham.blogspot.com/2007/07/blog-post_31.html

Link to comment
Share on other sites

சுகன்,

உங்கள் கருத்திற்கு நன்றி!

கலைநேசன்,

நீங்களும் உங்கள் சிறை அனுபவங்களை எழுதலாமே?

மாறன் என்பவர் தனது தமிழமுதம் எனும் புளக்கில் இந்த தொடர் கதையை இணைத்துள்ளார். எனவே, எனது சிறீ லங்கா சிறையில் பட்ட அனுபவங்களை தொடர்ச்சியாக ஒரு தடவையில் வாசிக்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைப்பை சொடுக்கி அதை வாசித்து கொள்ளலாம். கொப்பியும் (பிரதி) செய்து கொள்ளலாம் (மாறன் அனுமதிப்பார் என நினைக்கின்றேன் :huh: ).

http://thamilamutham.blogspot.com/2007/07/blog-post_31.html

யாருங்க இந்த மாறன்? அவருக்கு நன்றி!

நன்றி!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பலருக்கு ஈழத்தில் இராணுவ அடக்குமுறையினால் பல்வேறான அனுபங்கள் ஏற்பட்டிருக்கலாம். கலைஞனின் சிறை அனுபவங்கள், சாத்திரி, தயா, துயா, சோழியன் போன்றவர்களும் தங்களது அனுபவங்களை யாழில் தந்திருக்கிறார்கள். யழ் கள உறவுகளே உங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களை (யாழ் இடப் பெயர்வு, இந்தியா இராணுவ காலத்து அனுபவங்கள் )யாழில் பதியுங்கள். தெரியாத பல விடயங்களைச் சொல்லுங்கள்.

Link to comment
Share on other sites

ம் கலைஞன் நீங்கள் கூறியதுபோல் உறவினர்கள் அவசரத்திற்கு உதவாதவர்கள் என்பது உண்மை

நானும் அனுபவப்பட்டிருக்கின்றேன். திருகோணமலையில் ஆமி சுற்றிவளைத்து பிடித்துக்கொண்டிருக்கின்றா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கும் ஓர் கதை..

பலரின் அனுபவங்களை பிரதிபலிக்கக் கூடிய ஓர் கதை....

கோலங்கள்..!

1325.jpg

விமானம் யாழ்ப்பாணம் பலாலியில் இருந்து கிளம்புகிறது. ஏக்கம் கவ்விய மனதோடு கவின் யன்னலோர இருக்கையில் இருந்து சொந்த தேசத்தின் அவலங்களை பார்த்தபடி பறக்கிறான். என்ன அழகான தேசம், என்ன நேர்த்தியான கட்டுமானங்கள், கட்டம் கட்டமாக வயல்களும் தோட்டங்களும், இன்று அவை இருந்த அடையாளங்கள் சிதைந்து சின்னாபின்னமாகி..காவலரண்களால

Link to comment
Share on other sites

பரணி, நெ.போ உங்கள் பதிவுகளிற்கு நன்றி!

இந்திய படைகளின் அனுபவங்களை நாங்கள் எல்லோரும் சேர்ந்து எழுதுவது பற்றி என்ன நினைக்கின்றீர்கள்? ஒரு தலைப்பை ஆரம்பித்துவிட்டு அதன் கீழ் சிறு சிறு அனுபவங்களாக எல்லோரும் பதிவு செய்யலாம்.

ஒருவர் தமிழீழத்தை ஆக்கிரமித்த இந்திய படைகளுடனான அனுபவங்கள் என்று ஒரு தலைப்பை கதை கதையாம் பகுதியில்ஆரம்பித்தால் மற்றவர்கள் தொடரமுடியும். யாராவது ஆரம்பியுங்கள். நானும் எழுதுகின்றேன்.

ஏற்கனவே இவ்வாறான ஒரு தலைப்பு யாழில் இருந்தால் அறியத்தாருங்கள், அதன்கீழ் எங்கள் அனுபவங்களை தொடருவோம்

நன்றி!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
    • சென்ரல் கொமாண்டின் மறுப்பு.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.