Jump to content

சிறீலங்கா சிறைகளில்பட்ட உங்கள் சொந்த அனுபவங்கள்!


சிறீ லங்கா நீதி விசாரணை நடைமுறை!  

17 members have voted

You do not have permission to vote in this poll, or see the poll results. Please sign in or register to vote in this poll.

Recommended Posts

காலை சுமார் 5.45 மணியளவில் எல்லாரும் மெல்ல மெல்ல எழும்பி விட்டோம். பொலிஸ்காரன் ஒருவன் எங்களில் ஒவ்வொருவராக அழைத்து முகங்கழுவி மலசலகூடம் செல்வதற்கு கூட்டிக் கொண்டு போனான். சீ.ஐ.டி யாக இருக்ககூடும் என்று எதிர்பார்த்தவனைக் காணவில்லை. நாங்கள் ஓரளவு சோர்வில் தூங்கியபின் அவன் எங்களது கூண்டில் இருந்து வெளியே சென்றுவிட்டான் என்பதை அறிந்து கொண்டோம். இப்போதுதான் சிறீ லங்கா உளவுப் பிரிவு எத்தனை ஜிம்மாளங்கள் எல்லாம் செய்கிறார்கள் என எனக்கு விளங்கத் தொடங்கியது!

ஊரில் இருந்தபோது தமிழ் ஆட்களை தினமும் கொழும்பில் பிடிக்கிறார்கள், சித்திரவதை செய்கிறார்கள் என பந்தி, பந்தியாக செய்திகள் படித்திருந்தேன். ஆனால் இப்போது நானே செய்தியாகி விட்டதை நினைக்கும் போது மனதிற்கு மிகவும் துக்கமாகவும், அதேநேரம் பயமாகவும் இருந்தது. உதயன், ஈழநாதம், முரசொலி பேப்பர்களில் படித்த சித்திரவதைகள் எனக்கும் நடக்கப்போகிறதோ என்பதை நினைக்க மிகவும் பயமாக இருந்தது. கொழும்புக்கு போகப்போகின்றேன் எனச் சொன்னதும் வீட்டில் மிகவும் எதிர்ப்பு வந்தது. கொழும்பில் உன்னையும் பிடித்து உள்ளே போட்டு விடுவார்கள் என பயமுறுத்தினார்கள். நண்பர்களும் அவ்வாறே சொன்னார்கள். ஊரிலிருந்து போன பல அப்பாவி நண்பர்களை சிறீ லங்கா பொலிசு அயோக்கியத்தனமாக உள்ளே தள்ளிவிட்டார்கள் என கூறினார்கள். ஆனால் ஊரில் எனது நிலமை, குடும்ப நிலமை மோசமாக இருந்ததால் எவ்விதமான ஆபத்தையும் எதிர்கொள்வது என்று துணிந்து கொழும்பு வந்தேன்.

என்னுடன் பிடிக்கப்பட்டவர்களில் பதின் நான்கு பேர் முதல் தரமாக பிடிபட்டவர்கள். நான்கு பேர் இரண்டாவது தரமாக பிடிக்கப்பட்டிருந்தார்கள். இரண்டுபேர் ஏற்கனவே இரண்டுக்கு மேற்பட்ட தடவைகள் பொலிசினால் பிடிக்கப்பட்டிருந்தார்கள். ஏற்கனவே பிடிபட்டிருந்தவர்களிற்கு அனுபவம் இருந்ததால் தீர்க்கதரிசிகளைப் போல் எனக்கு இனி என்னென்ன நடைபெறப்போகிறது என்று காண்டம் வாசிக்கத் தொடங்கினார்கள். எப்படி, எப்படி பிரச்சனைகளை எதிர்கொள்வது என்று எனக்கு அறிவுரைகளும் தந்தார்கள். இவர்கள் சொல்லும் கதைகளைக் கேட்கக் கேட்க எனக்கு தலைசுற்றத் தொடங்கியது. வாழ்க்கையில் படுபாதாளத்தில் விழுந்துவிட்டதை முதல் தடவையாக உணர்ந்தேன்.

சுமார் ஏழுமணிக்கே பொலிஸ் ஸ்டேசனுக்கு பொறுப்பான ஓ.ஐ.சி(Officer In Charge) வந்துவிட்டான். அவனுக்கு ஒவ்வொரு நிமிடத்துக்கு ஒரு தடவைக்கு மேலாக தொலைபேசி அழைப்புக்கள் வந்து கொண்டிருந்தன. வந்த அழைப்புக்கள் எல்லாம் பிடிபட்டவர்களை விடுவிக்க கோருவது சம்மந்தமாகவே வந்தது. உறவினர்கள் பொலிஸ் ஸ்டேசனுள் உள்ளே வரமுடியாதபடி வாசலிலேயே வைத்து மறிக்கப்பட்டனர். எம்மை நீதிமன்றத்துக்கு கொண்டு செல்லப்போவதாகவும் எதையும் நீதி மன்றத்தில் வந்து கதைக்குமாறும் சொல்லி அனுப்பப்பட்டார்கள். எம்முடன் பிடிபட்ட மட்டக்களப்பை சேர்ந்த இருவர் யாரோ ஒரு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் ஓ.ஐ.சி க்கு தனது செல்வாக்கை பயன்படுத்தியதால்(இந்த தமிழ் எம்.பி யின் பெயர் யோகேஸ்வரன் என்று நினைக்கிறேன். யோக என்று இவரது பெயர் ஆரம்பிக்கிறது) காலை ஏழு முப்பது மணியளவில் விடுதலை செய்யப்பட்டார்கள். என்னையும் இவ்வாறு யாராவது தமது செல்வாக்கை பயன்படுத்தி விடுதலை செய்யமாட்டார்களா என்ற ஏக்கம் எனக்கு வந்தது. இப்போது எமது குழுவில் எல்லாமாக பதினெட்டு பேர் இருந்தோம். மற்றவர்களின் உறவினர்களும் தமது செல்வாக்குகளை பயன்படுத்தி தமது உறவுகளை காப்பாற்ற முயற்சித்தார்கள். ஆனால் ஓ.ஐ.சி மிகவும் துவேசம் பிடித்தவனாக, கரார் பேர்வழியாக இருந்ததால் முயற்சி பலிக்கவில்லை.

இந்த நேரத்தில் ஒரு உதவாக்கரையைப் பற்றியும் பேசவேண்டியுள்ளது. நான் கொழும்புக்கு வெளிக்கிட்டபோது எனது நெருங்கிய உறவினர் ஒருவரின் தொலைபேசி இலக்கம், விலாசம் எனது பெற்றோரால் எனக்கு தரப்பட்டது. ஏதாவது பிரச்சனை வந்தால் இவருடன் தொடர்பு கொண்டு இன்னாரின் மகன் என்று சொல்லி உதவி கேட்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தேன். குறிப்பிட்ட நபர் சிறீ லங்காவின் ஒரு அமைச்சரவையில் செயலாளராக இருந்தான். நான் கொழும்பு வந்ததும் பலமுறை இவனுடன் தொடர்பு கொள்ள முயற்சித்தும் பயனளிக்கவில்லை. வீட்டிற்கு நேரில் செல்லாம் என யோசித்த போது அதுவும் முடியவில்லை. அவன் பெரிய அரசியல் புள்ளிகளின் வீடுகளிற்கு அருகில் இருந்ததால் என்னை போன்ற லோக்கல் குடிமகனால் அவனை உறவினனாக இருந்தும் கிட்டவும் அணுக முடியவில்லை. அவனும் நான் புலியாக இருப்பேனோ என சந்தேகப்பட்டான். இறுதியில் இவ்வாறு நான் அவனை உதவிகேட்டு துரத்தி திரிவதை அறிந்தவன் இன்னொரு உறவினனிடம் நான் தன்னை பார்க்கமுடியாதென்றும் தான் சரியான பிசி என்றும், மேலும் கொழும்பில் நான் தங்க வசதி இல்லையென்றால் ஊருக்கு திரும்பி போய்விடுவதே புத்திசாலித்தனமானது என்றும் சொல்லிவிடுமாறு கூறியிருந்தான். இவனாவது இறுதி நேரத்தில் நான் பொலிசில் பிடிபட்டுள்ளதை அறிந்து உதவி செய்யக்கூடும் என்ற நப்பாசையில் நான் பிடிபட்டதை கேள்வியுற்று வந்த நண்பனிடம் இவனது தொலைபேசி இலக்கத்தை கொடுத்து தொடர்பு கொள்ளுமாறு கூறியிருந்தேன். நண்பன் அவனுடன் தான் கதைத்ததாகவும் அவன் நான் தனக்கு உறவினராக இருந்தாலும் என்னைப்பற்றி விபரமாகத் தெரியாதபடியால் எனக்கு உதவமுடியாது என்று கூறிவிட்டதாகவும், மேலும் தமது செல்வாக்கை பயன்படுத்தி இவ்வாறு உறவினர்களுக்கு உதவக்கூடாது என்று தான் அரசாங்கத்தால் கட்டளையிடப்பட்டிருப்பதாகவு ம் என்னை நீதிமன்றத்தில் வைத்து கதைத்தபோது அவனுடன் கதைத்தவற்றை கூறினான்.

இப்போது காலை 7.45 மணியளவில் இருக்கும். ஏற்கனவே அனுபவம் உடைய என்னுடன் பிடிபட்ட மற்றவர்கள் எம் எல்லோரையும் பொலிசு நீதிமன்றதிற்கு கொண்டு சென்றபின் நாம் எல்லோரும் மகர சிறைச்சாலையில்(Mahara Prison) அடைக்கப்படலாம் என எதிர்வு கூறினர். நேற்று நடைபெற்ற குண்டுத்தாக்குதல் மிகப்பாரிய அழிவை கொழும்பில் ஏற்படுத்தியிருப்பதாகவும் இதனால் நாம் நீதிமன்றத்தில் வைத்து பிணையில் (Bail) விடுவிக்கப்படுவதற்கு வாய்ப்பேயில்லையென்றும் அபசகுணமாகப் பேசினார்கள். இப்போது காலை சுமார் எட்டு மணியளவில் பொலிசு கூண்டிலிருந்து எம்மை ஒவ்வொருவராக வெளியே கூப்பிடப்பட்டு பொலிஸ்டேசனின் இன்னொரு பகுதிக்கு கூட்டிச் செல்லத் தொடங்கினார்கள். ஏற்கனவே 18 பேரில் 12 பேர் சென்றுவிட்டார்கள். 6 பேர் கூண்டினுள் மிஞ்சி இருந்தோம். மற்றவர்களை வைத்து பொலிஸ் என்ன செய்கிறார்கள் என எங்களுக்கு விளங்கவில்லை. அவர்களிற்கு பொலிஸ் அடிக்கிறார்களோ என்பதை நினைக்க பயமாக இருந்தது.

தொடரும்....

Link to comment
Share on other sites

  • Replies 103
  • Created
  • Last Reply

மாப்பிள்ளை உங்களை போல ஆயிரமாயிரம் தமிழர்கள் இலங்கை சிறைகளில் காரணமின்றி சித்திரவதைபட்டு வெளிவந்திருக்கிறார்கள் அவர்கள் இன்று ஏதோ ஒரு விதத்தில் நோயாளிகளாகவும் திரிகிறார்கள் .உங்கள் அனுபவங்களை தொடர்ந்து தாருங்கள். நானும் இந்தியன் ஆமிகாலத்தில் வவுனியாவில் குருமண் காட்டு முகாமில் பிடிபட்டு சித்திரவதை பட்டிருக்கிறேன் பின்னர் அங்கிரந்து எப்பிடியோ தப்பியோடிவிட்டேன் பின்னர் 90 களில் உலகின் பயங்கரசித்திரவதை முகாம்களில் ஒன்றான 4ம் மாடியில் இருந்திருக்கிறேன் ஆனால் அவற்றை இங்கு விபரிக்கமுடியாது. அதற்கான நெரம் வரும் போது எழுதுவேன்:அனால் நான் 4ம் மாடியில் இருந்த காலத்தில் காமினி திசா நாயக்கா கொல்லபட்டகாலபகுதி. அந்த கொலை ஒரு பெண் தற்கொலை தாரியால் நடாத்த பட்டதாக இலங்கை புலனாய்வு பிரிவு தெரிவித்து இறந்த பெண்ணின் சகோதரி என்று சந்தேகபட்டு ஒரு மட்டகளப்பு பெண் ஒரவரை கைது செய்து 4ம் மாடியில் வைத்து சித்திரவதை செய்தனர் அவரின் பெயர் விபரங்கள் புகைபடத்துடன் அன்றை காலகட்டத்தில் இலங்கை பத்திரிகை அனைத்திலும் வெளிவந்திருந்தது.அந்த பெண்ணுடன் நான் சந்தித்து கதைக்கும் சந்தர்ப்பங்கள் கிடைத்தது. அப்போது அவர் பட்ட சித்திரவதைகளை பற்றி கூறுவார். அவற்றை விபரமாக எழுதுகிறேன் பின்னர்.

Link to comment
Share on other sites

இப்போது எனது தடவை வந்தது. குலை நடுக்கத்துடன் பொலிசு காட்டிய பகுதிக்கு அவனது காவலுடன் நடந்து சென்றேன். ஒரு தடியன் முன்னால் கொண்டுபோய் நான் நிறுத்தப்பட்டேன். அவன் என்னை பல கேள்விகள் கேட்டு விசாரித்தான். நேற்று நடந்த குண்டுவெடிப்பை பற்றி ஏதாவது தகவல் தெரியுமா? ஏன் கொழும்புக்கு வந்தாய்? ஊரில் என்ன செய்தாய்? உனக்கு யார் கொழும்பில் இருப்பதற்கு காசு தருகிறார்கள் என அடுக்கடுக்காக கேள்விகள் கேட்டான். இந்த விசாரணையின் பின் நான் பொலிஸ்டேசனின் இன்னொரு பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டேன். எனக்கு இன்னும் உடம்பில் அடிவிழாதது கண்டு ஆச்சரியப்பட்டேன். மற்றைய பகுதிக்கு சென்றபோது என்னுடன் பிடிக்கப்பட்ட மற்றவ்ர்கள் சேர்ந்து ஒரு குழுவாக நிற்பதைக் கண்டேன். எனக்கு பொலிசாரினாலும், மற்றைய நண்பர்களாலும் உற்சாகமான வரவேற்பு தரப்பட்டது. திடீரென்று பொலிசார் எம்மீது காட்டும் அன்புக்கான அர்த்தம் அப்போது எனக்கு தெரியவில்லை. அங்குதான் முதன்முதலாக நான் எனது வழக்கறிஞரை சந்திப்பதற்கு சந்தர்ப்பம் தரப்பட்டது.

இந்த தமிழ் வழக்கறிஞரை பற்றி இங்கே கொஞ்சம் கூறுவது பொருத்தமானது. இவன் பார்ப்பதற்கு ஒரு வெருளிக் குஞ்சு போல் இருந்தான். நல்ல குடிகாரச்சாமி என்று வேறு சொன்னார்கள். எனக்கென்று ஒரு வழக்கறிஞரும் வரவில்லை. இதனால் மற்றைய நண்பர்கள் தங்கள் வழக்கை கவனிக்கப்போகும் இவனையே வழக்கறிஞராக நான் பிடிக்கலாம் என்றும் இதற்கு ஆகக்குறைந்தது ரூபா 5000 ஆகுமென்றும் கூறினார்கள். இன்னும் சிலர் சேர்ந்து இன்னொரு தமிழ் வழக்கறிஞரை பிடித்தார்கள். இப்பொழுது எம் 18 பேரின் வழக்கை கவனிக்க இரண்டு வழக்கறிஞர்களும் தயாராகி விட்டார்கள். ஆனால் எம்மீது போடப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் என்ன என்று ஒருவருக்கும் தெரியவில்லை. இரு வழகறிஞர்களும் பொலிஸ் அதிகாரிகளும் பெரிய, பெரிய பகிடிகள் எல்லாம் விட்டு, சத்தம் போட்டு சிரித்து மச்சானும், மச்சானும் போல கதைத்துக் கொண்டு இருந்தார்கள். இதேநேரம் வேறு இரு பொலிஸ் அதிகாரிகள் ஒரு பெரிய சட்டப்புத்தகத்தை கையில் தூக்கிவைத்துக் கொண்டு எமக்கெதிரான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும் கடதாசியை நீதி மன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக தட்டச்சு செய்து கொண்டிருந்தார்கள். தட்டச்சு செய்யும் போது இடையிடையே அந்தப் பெரிய சட்டப்புத்தகத்தை கையில் வைத்துக் கொண்டு பைபிலை ஆராய்வது போல் வரிவரியாகக் காட்டி தம்மிடையே விவாதித்துக் கொண்டு இருந்தார்கள். சுமார் 30 நிமிடங்களில் எமக்கு எதிரான குற்றச்சாட்டுக் கடதாசி தயாராகிவிட்டது. எமது வெருளிக் குஞ்சு வழக்கறிஞரையும் மற்றும் சில பொலிஸ் அதிகாரிகளையும் குற்றச்சாட்டு கடதாசியை எழுதிய பொலிஸ் அதிகாரி கூப்பிட்டான். இப்போது சுமார் ஐந்துபேர் குற்றக் கடதாசியை வைத்து விவாதித்துக் கொண்டு இருந்தார்கள்.

கடைசியில் எமது வெருளிக் குஞ்சு எம்மிடம் வந்து தான் நீதிமன்றத்தில் கதைத்து எம்மை விடுதலை செய்வதாகவும் ஒப்புதல் வாக்குமூலத்தில் கையெழுத்து இடுமாறும் சொன்னது. எனக்கு நான் கையெழுத்து இடப்போவது குற்றத்தை நான் ஒப்புக்கொள்ளும் ஒப்புதல் வாக்குமூலம் என்று தெரிந்திருக்கவில்லை. கும்பலுடன் கோவிந்தா என்று எல்லோருடனும் சேர்ந்து நீதிமன்றத்தில் விடுதலை செய்யப்படப்போகின்றேன் என்ற புளுகத்தில் குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தில் நான் கையெழுத்திட்டேன். அதில் என்ன எழுதப்பட்டிருந்தது என்பதை வெருளிக்குஞ்சும் சொல்லவில்லை, நாங்களும் கேட்கவில்லை. இங்கு ஒரு விடயத்தை சுட்டிக் காட்டுவது மிகப்பொருத்தமானது. அதாவது தமிழ் வழக்கறிஞர்கள் கூட உண்மையுடனும், நேர்மையுடனும், தொழில் தர்மத்துடனும் வேலைசெய்யவில்லை. அப்பாவித் தமிழ் மக்களை சிங்களக் குண்டர்கள் துன்புறுத்துவது போதாதென்று இவர்களும் தமிழ் இளைஞர்களின் வாழ்க்கையுடன் விளையாடுகிறார்கள். அப்பாவித் தமிழ் இளைஞர்களிற்கு பச்சைத் துரோகம் செய்கிறார்கள்.

சிறீ லங்கா பொலிசு அப்பாவித் தமிழ் இளைஞர்களை அள்ளி அள்ளிப் பிடிப்பதன் இன்னொரு இரகசியம் இது ஒரு பெரிய வியாபாரம். இந்த வியாபாரம் சிறீ லங்கா நீதித்துறையாலும் சிறீ லங்கா காவல்துறையாலும் உத்தியோகப்பற்றற்ற முறையில் நடத்தப்படுகிறது. ஒரு அப்பாவி தமிழ் இளைஞனைப் பிடித்து நீதிமன்றத்துக்கு கொண்டுபோனால் பொதுவாக சுமார் ரூபா 5000 தொடக்கம் சுமார் ரூபா 25000 வரை சம்பாதிக்க முடியும். வழக்கறிஞர்கள் சுருட்டிக் கொள்ளும் காசு இந்தக் கணக்கில் அடங்கவில்லை. அது வேறாக இன்னும் பல ஆயிரங்கள்! வெளியில் இருந்து பார்க்கும் பார்வையாளர்களிற்கு இது வெறும் கைதுகளாகத்தான் தெரியும். ஆனால் இதனுள் எத்தனை கோடிகள் புரட்டப்பட்டு வியாபாரம் நடக்கின்றது என்பது சிறீ லங்கா நீதித்துறைக்கும், சிறீ லங்கா காவல்துறைக்கும் மட்டும் தெரிந்த இரகசியங்கள். கொழும்பில் உள்ள ஊடகத்துறைக்கும் இந்த ஜிம்மாளங்கள் எல்லாம்தெரியும். ஆனால் பத்திரிகைகளில் இதைப்பற்றி எழுதும் அளவிற்கு அவர்கள் இன்னும் பக்குவப்படவில்லை.கைதுகள் என்ற போர்வையில் அப்பாவித் தமிழ் இளைஞர்கள் வதைக்கப்பட்டு, அவர்களது வாழ்க்கை சிதைக்கப்படும் அதேநேரம், அவர்களை ஏமாற்றி கோடிக்கணக்கான ரூபாய்கள் சிறீ லங்கா அரசாங்கத்தால் அப்பாவி தழிழ் இளைஞர்களிடமிருந்து திருடப்படுகிறது. இதை பட்டப்பகலில் சிறீ லங்கா அரசு செய்யும் கொள்ளை என்று கூறினால் அது மிகையாகாது. இதில் கசப்பான உண்மை என்னவென்றால் தமிழ் வழக்கறிஞர்களும் இந்தபகல் கொள்ளைக்கு உடந்தையாக இருக்கிறார்கள் என்பதுதான். ஆனால் இதைப்பற்றி ஏதாவது கொழும்பில் உள்ள தமிழ் வழக்கறிஞர்களிடம் கேட்டால் அவர்கள் தமிழர்களிற்கு தாம் சேவை செய்வதாகவும், வெறும் காற்றைக்குடித்து வாழ்வதாகவும், தாம் ஒரு அப்பாவிகள் எனவும் கூறி உங்கள் காதில் பூ வைத்துவிடுவார்கள்!

தொடரும்........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் வழக்கறிஞ்சர்களே எரிந்தவீட்டில் களவெடுப்பவர்களாக இருக்கிறார்களே. மாப்பிள்ளை நீங்கள் வெளி நாடு ஒன்றில் அகதி அந்தஸ்து கிடைத்த நிலையில் தற்பொழுது இருந்தால்(அதாவது பாதுகாப்பாக இருந்தால்), இப்படியான தமிழ் வழக்கறிஞ்சர்களின் பெயர்களையும் எழுதுங்கள்

Link to comment
Share on other sites

தமிழ் வழக்கறிஞ்சர்களே எரிந்தவீட்டில் களவெடுப்பவர்களாக இருக்கிறார்களே. மாப்பிள்ளை நீங்கள் வெளி நாடு ஒன்றில் அகதி அந்தஸ்து கிடைத்த நிலையில் தற்பொழுது இருந்தால்(அதாவது பாதுகாப்பாக இருந்தால்), இப்படியான தமிழ் வழக்கறிஞ்சர்களின் பெயர்களையும் எழுதுங்கள்

இந்த வெருளிக் குஞ்சின் பெயர் என்ன என்று தெரியவில்லை. மறந்துவிட்டது. அப்போது அதற்கு ஒரு 45 அல்லது 50 வயது இருக்கும். அது ஒரு சரியான குடிகாரப் பயல் என்பதுதான் அதைக் கண்டுபிடிக்கக்கூடிய அடையாளம். இந்த அடையாளத்தை சொன்னால் கொழும்பில் பிடிபட்ட அப்பாவி இளைஞர்களுக்கு இந்த கழுதையை அடையாளங் காட்டக்கூடியதாக இருக்கும்!

Link to comment
Share on other sites

:blink::icon_mrgreen: மாப்பிள்ளை தம்பி..உங்க வாழ்க்கையில் நீங்கள் எவ்ளோ கஷ்டப்பட்டிருக்கிறீர்கள். (இன்னும் பல தமிழ் இளையோர்களும் தான்.) ஆனால் இப்படியான சம்பவங்கள் எண்ணைக்குமே மற்க்க ஏலாது இல்லையா? நான் ஏனோ இதெல்லாம் அனுபவித்ததில்லை. ஆனால்

அனுபவித்தவர்களை பார்த்தும், கேள்விப்பட்டும் இருக்கிறேன். உங்க கதையை கேட்க ரொம்ப கஷ்டமா இருக்கின்றது.

தொடர்ந்து எழுதுங்கள்....

அப்பாவித் தமிழ் மக்களை சிங்களக் குண்டர்கள் துன்புறுத்துவது போதாதென்று இவர்களும் தமிழ் இளைஞர்களின் வாழ்க்கையுடன் விளையாடுகிறார்கள். அப்பாவித் தமிழ் இளைஞர்களிற்கு பச்சைத் துரோகம் செய்கிறார்கள்.

இவங்களுமா????????

சீ..சில தமிழர் (தமிழர் எண்டே சொல்ல கூடாது) இவங்களை நிக்க வைச்சு சுடணும். :angry:

Link to comment
Share on other sites

:blink::icon_mrgreen: மாப்பிள்ளை தம்பி..உங்க வாழ்க்கையில் நீங்கள் எவ்ளோ கஷ்டப்பட்டிருக்கிறீர்கள். (இன்னும் பல தமிழ் இளையோர்களும் தான்.) ஆனால் இப்படியான சம்பவங்கள் எண்ணைக்குமே மற்க்க ஏலாது இல்லையா? நான் ஏனோ இதெல்லாம் அனுபவித்ததில்லை. ஆனால் அனுபவித்தவர்களை பார்த்தும், கேள்விப்பட்டும் இருக்கிறேன். உங்க கதையை கேட்க ரொம்ப கஷ்டமா இருக்கின்றது.

தொடர்ந்து எழுதுங்கள்....

அப்பாவித் தமிழ் மக்களை சிங்களக் குண்டர்கள் துன்புறுத்துவது போதாதென்று இவர்களும் தமிழ் இளைஞர்களின் வாழ்க்கையுடன் விளையாடுகிறார்கள். அப்பாவித் தமிழ் இளைஞர்களிற்கு பச்சைத் துரோகம் செய்கிறார்கள்.

இவங்களுமா????????

சீ..சில தமிழர் (தமிழர் எண்டே சொல்ல கூடாது) இவங்களை நிக்க வைச்சு சுடணும். :angry:

கதையை கேட்பதற்கு கஸ்டமாகத்தான் இருக்கும். மற்றைய இளைஞர்களின் கதையுடன் ஒப்பிடும் போது எனது கதை வெறும் ஜுஜுப்பி! பலர் சிறை சென்றுவந்தபின் பொது வாழ்வை, சமூகத்தை வெறுத்து ஒதுங்கிவிடுகிறார்கள் அல்லது சமூகத்தை வெறுத்து தலைமறைவாக வாழ்கிறார்கள். பலர் தமது அனுபவங்களை, உண்மைகளை வெளிவிட்டால் தமக்கு சிறீ லங்கா அரசால் எதிர்காலத்தில் வரக்கூடிய ஆபத்துக்களை எண்ணி மெளனமாகி விட்டார்கள். இதனால் சிறீ லங்கா அரசு அப்பாவி தமிழருக்கு செய்யும் கொடுமைகள், வண்டவாளங்கள் எல்லாம் மூடி மறைக்கப்பட்டுவிடுகிறது.

Link to comment
Share on other sites

நான் ஒன்றை சொல்ல மறந்துவிட்டேன். எம்முடன் பொலிஸ்டேசனில் ஐந்து தமிழ் பெண்களும் பிடிக்கப்பட்டிருந்தார்கள் என்று முன்னர் சொன்னேன் அல்லவா? அவர்களை எங்களை கூண்டினுள் போட்ட நேரத்தில் வேறு எங்கோ கூட்டிக் கொண்டுபோய் எங்களிலிருந்து பிரித்துவிட்டார்கள். அவர்கள் போட்ட கூக்குரல், அட்டகாசம், மற்றும் அழுகை காரணமாக காலையில் கடுமையான எச்சரிக்கையின்பின் நிபந்தனையுடன் விடுவிக்கப்பட்டுவிட்டார்க ள். அதாவது அவர்கள் தினமும் பொலிஸ்டேசனுக்கு போய் கையெழுத்து போட வேண்டும். இந்த நேரத்தில் ஒரு அறிவுரையை தமிழ் பெண்களுக்கு கூறிக்கொள்ள விரும்புகின்றேன். நீங்கள் சிறீ லங்கா காவல்துறையால் கைது செய்யப்பட்டால் கைதுசெய்யப்படும் அந்தக் கணத்திலிருந்தே உங்களால் முடிந்தளவு போராட்டத்தை அழுகை, கூக்குரல், பேயாட்டங்கள் மூலம் செய்து நீங்கள் பொலிசினை நிலைகுழையச் செய்யவேண்டும். இவ்வாறு செய்யும்போது உங்களது தொல்லையை தாங்க முடியாத பொலிசு எப்படியும் உங்களை விரைவில் விடுதலை செய்துவிடும். அவ்வாறு இல்லாது அமைதியாக இருந்து உங்களுக்குள் முணகி அழுதுகொண்டிருந்தால் கடைசியில் கம்பி எண்ணவேண்டியதுதான்!

இப்போது காலை ஒன்பது மணியளவு ஆகத்தொடங்கியது. வெருளிக்குஞ்சு வழக்கறிஞன் தான் எங்களை சிறீ லங்காவின் நீதிமன்றத்தில் சந்திப்பதாக சொல்லிவிட்டு பொலிஸ்டேசனைவிட்டு போய்விட்டான். இப்போது ஆயுதம் தரித்த சுமார் ஆறு பொலிசார் எம்மை சுற்றி வளைத்துக் கொண்டார்கள். ஒரு பெரிய நாய்பிடிக்கும் வண்டி ரிவேர்சில் எங்களை நோக்கி வந்தது. நாம் உடனடியாக வண்டியினுள் ஏற்றப்பட்டு ஆயுதந்தரித்த பொலிசாரின் காவலுடன் சிறீ லங்காவின் நீதிமன்றம் நோக்கி கொண்டுசெல்லப்பட்டோம். வீதியின் இருமருங்கும் நின்றவர்கள் எங்களை படுபாதகர்களாக கற்பனைசெய்தபடி சந்தோசத்துடன் விடுப்பு பார்த்தார்கள். சூரியன் உதித்து கொழும்பு மாநகர் வெளிச்சமாகக் காணப்பட்டது. ஆனால் எனது வாழ்வு இருண்டுவிட்டதை சிறீ லங்காவின் நீதிமன்றம் செல்லும் போது நான் உணர்ந்தேன்.

நாய்வண்டி சிறீ லங்கா நீதிமன்றத்தின் வாயிலினூடாக நுழைந்து கைதிகளை தற்காலிகமாக அடைக்கும் இடத்திற்கு அருகாக போய் நின்றது. கடகட வென நாம் எல்லோரும் ஆடுமாடுகளைப்போல் அவசரப்படுத்தப்பட்டு இறக்கப்பட்டோம். வரிசையாக ஒருவர் பின் ஒருவராக கைதிகளின் சிறைக்கூண்டு நோக்கி கூட்டிச்செல்லப்பட்டோம். முன்பு இருந்த நிலைக்கும் இப்போது இருந்த நிலைக்குமிடையே பொலிசாரின் நடத்தையில் பாரிய மாற்றத்தினை அவதானிக்க கூடியதாக இருந்தது. பொலிசார் எம்மீது மிகக் கடுமையாக நடக்கத்தொடங்கினாங்கள். மெதுவாக நடந்தவர்களின் மண்டைமீது குட்டுக்கள் விழுந்தது. அங்கால், இங்கால் பறாக்கு பார்த்தவருக்கு சொக்கையில் பவுண்டரி அடிக்கப்பட்டது. எங்களது நாய்வண்டி வந்த அதேநேரம் வேறு வேறு இடங்களிலும் இருந்து பல நாய்வண்டிகள் வந்தன. எமது வண்டிக்கு முன்பு வந்த சில வண்டிகள் சரக்கை இறக்கிவிட்டு திரும்பிச்சென்றுகொண்டிருந் தன. வெவ்வேறு சிறிய, சிறிய அளவுகளிலும் நாய் வண்டிகள் வந்தன. "சிறீ லங்கா போலிசிடம் இத்தனை வகை வகையான நாய்வண்டிகளா!" நான் இவற்றை முதன்முறை பார்த்ததால் பிரமித்துபோய்விட்டேன்!

இங்கு ஒரு விடயத்தை கூறிச் செல்வது பொருத்தமானது. நீஙகள் ஒரு உறவினரின் அல்லது தெரிந்தவரின் உயிரை தனியார் வைத்தியசாலையில் பறிகொடுத்தபோது வைத்தியசாலையின் நிருவாகம் எப்படி ஒருவரின் மரணத்தை உறவினர்களுடன் கையாள்கிறது என்பதை உற்றுக் கவனித்து இருந்தால் சிறீ லங்கா பொலீசு எப்படி கைதிகளின் உறவினர்களை நிருவாகம் செய்கின்றது என்பதை புரிந்து கொள்ளமுடியும். இதை படிமுறைகளாக சொன்னால் விளங்குவதற்கு இலகுவாக இருக்கும்.

வைத்தியசாலை நிருவாகம் மரணத்தை நிருவகிக்கும் முறை:

அ. அடிக்கடி தாதிகளை அனுப்பி நோயாளியை பார்க்கச் செய்வார்கள்

ஆ. அடிக்கடி வைத்தியர் மிகவேகமாக நடந்துவந்து நோயாளியை பார்த்துச் செல்வார்

இ. நோயாளிக்கு ஒட்சிசன் வாய்மூலம் கொடுக்கப்படும்

ஈ. நோயாளி ICUக்கு கொண்டு செல்லப்படுவார்

உ. உறவினர்கள் நோயாளியை பார்ப்பதும் தடை செய்யப்படும். தம்மால் இப்போது ஒன்றும் சொல்ல முடியாது என்று உறவினர்களிற்கு வைத்தியர் கூறுவார்

ஊ. மிக நீண்ட நேரத்திற்கு நோயாளி ICU இனுள்ளேயே வைத்திருக்கப்படுவார்

எ. நோயாளி இறந்ததும் நோயாளியின் இதயத்துடிப்பு நன்றாகக் குறைந்துவிட்டது என்று உறவினர்களிடம் கூறப்படும்

ஏ. நோயாளிக்கு இப்போது இதயத்துடிப்பே இல்லையென்ற மாதிரி உறவினர்களிற்கு கூறப்படும்.

ஐ. இறுதியில் உறவினர்கள் ICU இனுள் சென்று நோயாளியை பார்வையிடலாம் என்று கூறப்படும். அங்கே பல மணி நேரத்துக்கு முன் இறந்த அன்புக்குரியவரின் உயிரற்ற உடல் காணப்படும்.

அதாவது ஒருவரது மரணத்தை எப்படி உறவினர்களுடன் கையாள்வது என்பது ஒரு கலை. இது படிப்படியான பல அம்சங்களைக் கொண்டது (It is a Step by Step Process). சரியாக இதேமாதிரியானதே அப்பாவித் தமிழ் கைதிகளை சிறீ லங்கா போலிசு கையாளும் முறை!

சிறீ லங்கா போலிசு நிருவாகம் தமிழ் கைதிகளை கையாளும் முறை:

தொடரும்.......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் ஒன்றை சொல்ல மறந்துவிட்டேன். எம்முடன் பொலிஸ்டேசனில் ஐந்து தமிழ் பெண்களும் பிடிக்கப்பட்டிருந்தார்கள் என்று முன்னர் சொன்னேன் அல்லவா? அவர்களை எங்களை கூண்டினுள் போட்ட நேரத்தில் வேறு எங்கோ கூட்டிக் கொண்டுபோய் எங்களிலிருந்து பிரித்துவிட்டார்கள். அவர்கள் போட்ட கூக்குரல், அட்டகாசம், மற்றும் அழுகை காரணமாக காலையில் கடுமையான எச்சரிக்கையின்பின் நிபந்தனையுடன் விடுவிக்கப்பட்டுவிட்டார்க ள். அதாவது அவர்கள் தினமும் பொலிஸ்டேசனுக்கு போய் கையெழுத்து போட வேண்டும். இந்த நேரத்தில் ஒரு அறிவுரையை தமிழ் பெண்களுக்கு கூறிக்கொள்ள விரும்புகின்றேன். நீங்கள் சிறீ லங்கா காவல்துறையால் கைது செய்யப்பட்டால் கைதுசெய்யப்படும் அந்தக் கணத்திலிருந்தே உங்களால் முடிந்தளவு போராட்டத்தை அழுகை, கூக்குரல், பேயாட்டங்கள் மூலம் செய்து நீங்கள் பொலிசினை நிலைகுழையச் செய்யவேண்டும். இவ்வாறு செய்யும்போது உங்களது தொல்லையை தாங்க முடியாத பொலிசு எப்படியும் உங்களை விரைவில் விடுதலை செய்துவிடும். அவ்வாறு இல்லாது அமைதியாக இருந்து உங்களுக்குள் முணகி அழுதுகொண்டிருந்தால் கடைசியில் கம்பி எண்ணவேண்டியதுதான்!

இந்திய இராணுவகாலத்தில் என்னொடு சிலரை இந்திய இராணுவமும் அவர்களோடு சேர்ந்து இயங்கிய தமிழ்க்குழுக்களும் பிடித்தார்கள். பிறகு ஒரிடத்தில் இருக்கவிட்டு ஒவ்வொருவரிடமும் அக்குழுக்களைச் சேர்ந்தவர்கள் கேள்விகேட்டார்கள்(பெயரையும், சொந்த விலாசத்தையும்). எல்லொரும் இருந்த நிலையில் பதில் அளித்தார்கள். எனது முறை வர நான் இருந்த இடத்தில் எழும்பி 'அண்ணை' என்று மரியாதை போட்டு சொன்னேன். என்னை விட்டு விட்டார்கள். மற்றவர்களில் சிலரைப் பிடித்துக் கொண்டு போய் இருனாட்களில் விட்டு விட்டார்கள். அவர்கள் என்னிடம் 'ஏன் இந்த ஒட்டுக்குழுக்களுக்கு முன்பு எழுந்து நின்று மரியாதையுடன் அண்ணா போட்டுக் கதைத்தனீர்கள் என்று கேட்டினம். அதற்கு நான் அப்படி கதைத்ததினால் தான் என்னை விட்டினம். விவேகத்துடன் 'அண்ணை' போட்டுக் கதைத்தாதினால் உடனே விட்டுவிட்டார்கள்.அல்லது அழுது குழரினாலும் சிலவேளை விடுவார்கள்.

Link to comment
Share on other sites

இந்திய இராணுவகாலத்தில் என்னொடு சிலரை இந்திய இராணுவமும் அவர்களோடு சேர்ந்து இயங்கிய தமிழ்க்குழுக்களும் பிடித்தார்கள். பிறகு ஒரிடத்தில் இருக்கவிட்டு ஒவ்வொருவரிடமும் அக்குழுக்களைச் சேர்ந்தவர்கள் கேள்விகேட்டார்கள்(பெயரையும், சொந்த விலாசத்தையும்). எல்லொரும் இருந்த நிலையில் பதில் அளித்தார்கள். எனது முறை வர நான் இருந்த இடத்தில் எழும்பி 'அண்ணை' என்று மரியாதை போட்டு சொன்னேன். என்னை விட்டு விட்டார்கள். மற்றவர்களில் சிலரைப் பிடித்துக் கொண்டு போய் இருனாட்களில் விட்டு விட்டார்கள். அவர்கள் என்னிடம் 'ஏன் இந்த ஒட்டுக்குழுக்களுக்கு முன்பு எழுந்து நின்று மரியாதையுடன் அண்ணா போட்டுக் கதைத்தனீர்கள் என்று கேட்டினம். அதற்கு நான் அப்படி கதைத்ததினால் தான் என்னை விட்டினம். விவேகத்துடன் 'அண்ணை' போட்டுக் கதைத்தாதினால் உடனே விட்டுவிட்டார்கள்.அல்லது அழுது குழரினாலும் சிலவேளை விடுவார்கள்.

உண்மைதான் கந்தப்பு!

கூலிக்குழுக்களுக்கு தம்மை ஒருவரும் மதிப்பதில்லை என்று நன்றாகவே தெரியும்! இதனால் அவர்களிற்கு யாராவது மரியாதை கொடுத்தால் ஐசாக உருகி விடுவார்கள்! பெண்களுக்கும் இந்த நுட்பம் உதவக்கூடும்! ஆபத்தான நேரங்களில் விவேகமாக நடப்பது மிகவும் முக்கியம்! இதற்காகத்தான் சிலர் வீடுகளில் சிறீ லங்கா படைகளிடமிருந்து தப்புவதற்காக புத்தர் சிலைகளை வைத்துள்ளார்கள்!

Link to comment
Share on other sites

இந்திய இராணுவகாலத்தில் என்னொடு சிலரை இந்திய இராணுவமும் அவர்களோடு சேர்ந்து இயங்கிய தமிழ்க்குழுக்களும் பிடித்தார்கள். பிறகு ஒரிடத்தில் இருக்கவிட்டு ஒவ்வொருவரிடமும் அக்குழுக்களைச் சேர்ந்தவர்கள் கேள்விகேட்டார்கள்(பெயரையும், சொந்த விலாசத்தையும்). எல்லொரும் இருந்த நிலையில் பதில் அளித்தார்கள். எனது முறை வர நான் இருந்த இடத்தில் எழும்பி 'அண்ணை' என்று மரியாதை போட்டு சொன்னேன். என்னை விட்டு விட்டார்கள். மற்றவர்களில் சிலரைப் பிடித்துக் கொண்டு போய் இருனாட்களில் விட்டு விட்டார்கள். அவர்கள் என்னிடம் 'ஏன் இந்த ஒட்டுக்குழுக்களுக்கு முன்பு எழுந்து நின்று மரியாதையுடன் அண்ணா போட்டுக் கதைத்தனீர்கள் என்று கேட்டினம். அதற்கு நான் அப்படி கதைத்ததினால் தான் என்னை விட்டினம். விவேகத்துடன் 'அண்ணை' போட்டுக் கதைத்தாதினால் உடனே விட்டுவிட்டார்கள்.அல்லது அழுது குழரினாலும் சிலவேளை விடுவார்கள்.

கந்தப்பு,

உதுகளை கொஞ்சம் மெல்லமா கதையுங்கோ!

அவங்கட காதில விழுந்து தொலைக்கப் போகுது.

பிறகு இப்ப பிடிபடுறதுகளின்ட பாடு சங்கு தான்!

Link to comment
Share on other sites

அ. அப்பாவி தமிழ் இளைஞர்கள் போலீசுஸ்டேசனுக்கு விசாரணைக்கு வருமாறும் சில மணி நேரத்தில் விசாரணையின் பின் விடுவிக்கப்படுவதாகவும் சொல்லி சிறீ லங்கா பொலிசாரினால் கூட்டிச் செல்லப்படுவார்கள்

ஆ. பொலிஸ்டேசனில் வைத்து நீதிமன்றத்திற்கு கூட்டிச் செல்லப்பட்டபின் அங்கு வைத்து உடனடியாக விடுவிக்கப்படுவார்கள் என்று கூறப்படுவார்கள்

இ. நீதி மன்றத்தில் வைத்து அப்பாவி இளைஞர்களை தற்காலிகமாக சிறையில் அடைக்குமாறு நீதிபதியிடம் சிறீ லங்கா போலிசார் மனு சமர்ப்பிப்பார்கள்

ஈ. பிணையில் இளைஞர்களை விடுவது ஆபத்தானது எனக்கூறி சிறைவாசக்காலத்தை பொலிசார் சிறீ லங்கா நீதிமன்றம் மூலம் நீடிப்பார்கள்

உ. இறுதியில் அப்பாவி இளைஞர்களின் சிறைவாசம் பயங்கரவாத சந்தேக நபர்கள் என்ற போர்வையில் சிறீ லங்கா பொலிசாரினால் நிரந்ததரமாக்கப்பட்டுவிடும்

கைதிக்கு கைதி மேற்கூறிய படிமுறைகளில் சிறு, சிறு மாற்றங்கள் இருக்கலாம். ஆனால் சிறீ லங்கா பொலிசார் அப்பாவித் தமிழ் இளைஞர்களிற்கு எதிராகப் பயன்படுத்தும் அடிப்படைச் சித்தாந்தம் அனைத்து தமிழ் இளைஞர்களிற்கும் பொதுவானது. அதாவது அப்பாவி தமிழ் இளைஞர்கள் மிகநன்றாக சட்டத்தின் பெயரால் சிறீ லங்கா அரசினால் ஏமாற்றப்படுகின்றார்கள்.

நாம் எல்லோரும் சுமார் நூற்று ஐம்பது சதுரஅடி பரப்பளவுள்ள தற்காலிக சிறைக்கூண்டினுள் அடைக்கப்பட்டோம். அதனுள் ஏற்கனவே சுமார் ஐம்பது கைதிகள் இருந்தார்கள். நாம் போனபின்பும் புதிதாக கைதிகள் கூண்டினுள் வந்து கொண்டிருந்தார்கள். எழும்பி நிற்கவும் முடியவில்லை. குந்தி இருக்கவும் முடியவில்லை. ஒற்றைக்காலில் சுவரை பிடித்துக் கொண்டு நிற்க வேண்டியிருந்தது. இதை விபரிக்க நெரிசல் என்ற சொல்லை பாவிப்பது பொருந்தாது. தேன் கூட்டில் எவ்வளவு அடர்த்தியாக தேனீக்கள் ஒன்றின்மீது ஒன்று ஏறி மொய்த்து இருக்கின்றனவோ அவ்வாறான சனக்கூட்டம் அச்சிறிய கூண்டினுள் அடைக்கப்பட்டிருந்தார்கள்.

இப்போது கூண்டில் இருந்த 75% கைதிகள் பெரும்பான்மை இனத்தை சேர்ந்த சிங்கிளவர்களாக இருந்தார்கள். அவர்கள் பெரிய, பெரிய கொலை கேசுகளுடன் சம்மந்தப்பட்ட கிரிமினல்களாகவும், கொள்ளைக்காரர்களாகவும், பாலியல் வல்லுறவு வழக்குகளில் சம்மந்தப்பட்டவர்களாகவும், சிறு, சிறு திருட்டுச் சம்பவங்களுடன் சம்மந்தப்பட்டவர்களாகவும் இருந்தார்கள். ஆனால் நாம் ஒன்றும் அறியாத அப்பாவிகளாக இருந்தோம். கண்ட, கண்ட கெட்ட வாசனைகள் எல்லாம் சிங்கிள கைதிகளில் இருந்து வீசியது. சிலர் அச்சிறிய கூண்டில் இருந்தும் புகை, மற்றும் கஞ்சா அல்லது குடு போன்றவற்றை நுகர்ந்து கொண்டிருந்தார்கள். கெட்ட, கெட்ட வார்த்தைகள் கூறினார்கள். தமிழ் கைதிகளை வெருட்டவும் செய்தார்கள். நான் தற்செயலாக சனநெரிசலின் காரணமாக தன்னை சிறிது தள்ளிவிட்டேன் என்ற கோபத்தில் ஒரு வெறிகாரன் எனக்கு அடிக்கவும் வந்துவிட்டான்.

இந்த நேரத்தில் குந்தியிருந்த ஒரு தமிழ் இளைஞன் நெரிசல், வலி தாங்க முடியாது எழும்ப முயன்ற போது சிறைக்கூண்டிற்கு வெளியே நின்று எம்மை அவதானித்துக் கொண்டு இருந்த ஒரு சிறீ லங்கா போலிசுகாரன் அவனை திரும்பவும் அதே இடத்தில் உட்காருமாறு சத்தமாக கட்டளையிட்டான். இவனால் வலி தாங்க முடியவில்லை. திரும்பவும் மெல்ல எழும்ப முயற்சித்தபோது மின்னல் வேகத்தில் பெரிய சத்தமிட்டபடி கூண்டை அடித்துத் திறந்து கொண்டுவந்த சிறீ லங்கா போலிசுகாரன் மிகக்கொடூரமான முறையில் அந்த அப்பாவி இளைஞனைத் தாக்கினான். தனது சப்பாத்து கால்களால் இளைஞன் மீது ஏறி உலக்கி மிகக்கொடூரமாக இளைஞனை அவன் தாக்கினான். அப்பாவித் தமிழ் இளைஞன் வலியின் கொடூரம் தாங்க முடியாததால் சத்தமிட்டு அழுதான். அவனது முகம் இருபுறமும் கொழுக்கட்டையாக சிவந்து வீங்கிவிட்டது. இளைஞனின் கண் இரத்தச் சிவப்பாகிவிட்டது. பல்லும் உடைந்துவிட்டது. இவ்வளவற்றையும் நேரில் பார்த்த சிங்களக் கைதிகள் கூட பயந்து நடுங்கிவிட்டார்கள். கூண்டு சுமார் பத்து நிமிடங்களிற்கு மயான அமைதியாகிவிட்டது. ஒருவருடன் மற்றவர் கதைக்கவில்லை. எல்லோரும் அடிவாங்கிய அப்பாவித் தமிழ் இளைஞனை அமைதியாகப் பார்த்தார்கள். எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அந்தக் கணத்தில் நான் ஒரு முழு மனநோயாளியாகிவிட்டேன் என்றுதான் கூற வேண்டும்.

தொடரும்......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனது நண்பர் ஒருவரும் களுத்துறை சிறையில் சிங்கள கைதிகளோடு அடைக்கப் பட்டிருந்தான். அவர்கள் ஒரினச்சேர்க்கையில் ஈடுபட நண்பரை வர்புறுத்திய சம்பவமும் நடந்திருக்குது.

Link to comment
Share on other sites

மாப்பிளை உங்களிட்டயும் இப்பிடி ஒரு சோகமான கதை. வெளிமாவட்டங்களிலிருந்து கொழும்பு செல்லும் எம்மவர்கள் படும் கொடுமைகள். எல்லாம் எதுவரையோ......

Link to comment
Share on other sites

சிறிது நேரத்தில் சிறீ லங்கா அநீதி மன்றத்தின் அநீதிபதி வந்ததும் விசாரணகள் தொடங்கியது. ஒவ்வொரு வழக்கினதும் வரிசைக்கிரமத்தில் விசாரணைகள் தொடங்கியது. விசாரணைக்கு குறிப்பிட்ட வழக்குகள் அண்மிக்கும் நேரத்தில் கூண்டினுள் இருந்த அந்தந்த வழக்குகளுடன் சம்மந்தப்பட்ட குற்றைவாளிகள்(?) ஆயுதந்தரித்த பொலிசாரின் கண்காணிப்பில் அநீதிபதி முன்னால் கொண்டுசெல்லப்படுவதற்காக கூண்டைவிட்டு வெளியேற்றபட்டு வெளியே வரிசையாக காத்திருக்கச் செய்யப்பட்டார்கள். முதலில் சிங்களப் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த கைதிகளின் வழக்கே விசாரணைக்கு வந்தது. ஒவ்வொருவராக விசாரணை முடிந்து கூண்டுக்கு திரும்பிக் கொண்டு இருந்தார்கள். கூண்டில் இருந்த எல்லோருக்குமே இன்னொரு திகதிக்கு வழக்கிற்கான தவணை கொடுக்கப்பட்டு சிறைவாசம் நீடிக்கப்பட்டு இருந்தது. எமது வழக்கு எப்போது விசாரணைக்கு வரும், நாம் விடுவிக்கப்படுவோமா என்ற எதிர்பார்ப்புடன் 18 அப்பாவி தமிழ் இளைஞர்களும் கூண்டினுள் காத்துக்கொண்டு இருந்தோம்.

கொஞ்ச நேரத்தின் பின் எங்கள் 18 பேரின் பெயர்களும் கொச்சையாக சிங்களப் பொலிசாரினால் உச்சரிக்கப்பட்டு கூப்பிடப்பட்டது. சிறைக்கூண்டு திறக்கப்பட்டு நாங்கள் வரிசையாக அநீதிபதியின் முன் நிறுத்தப்படுவதற்காக தயார்ப்படுத்தப்பட்டோம்.

சில நிமிடங்களில் எமது பெயர் அநீதிமன்றத்தில் உரத்து வாசிக்கப்பட்டது. குற்றவாளிக்கூண்டினுள் 18 பேரும் ஒன்றாக நிற்பதற்கு இடம் போதவில்லை. அதனுள் எம் எல்லோரையும் அமுக்கி அடக்க எமக்கு பின்னால் இருந்து சிறீ லங்காப் பொலிசார் தள்ளிக்கொண்டு இருந்தார்கள். இப்போது போலிசார் எமக்கெதிரான குற்றப்பத்திரிகையை அநீதிபதியிடம் தாக்கல் செய்து, அதை விபரிக்கத் தொடங்கினர். அநீதிபதி அவர்கள் பக்கமாகத் திரும்பி அவர்கள் சொல்வதை கேட்டுக் கொண்டு இருந்தான். எங்களை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. அவனுக்கே அவனது மனச்சாட்சி சங்கடம் கொடுத்ததாலேயே எங்களைப் பார்க்கவில்லையோ தெரியாது! போலிசார் தமது அறிக்கையை விளக்கிமுடிந்ததும் எமது வெருளிக்குஞ்சு வழக்கறிஞர் மேசையைவிட்டு எழும்பி நின்று அநீதிபதியைப் பார்த்து ஏதோ சொல்ல வெளிக்கிட்டது. ஆனால் அநீதிபதி வெருளிக்குஞ்சை அசட்டை செய்தபடி போலிசு தனது கதையைச் சொல்லி முடிந்தகையோடே கிடுகிடுவென ஏதோ எழுதத்தொடங்கிவிட்டது.

இதன்பின் அநீதிமன்றத்தில் என்ன நடந்தது என்பது இப்போது நினைவில்லை. ஆனால் எமது வெருளிக்குஞ்சு வழக்கறிஞர் எம்மிடம் வந்து எம்மை ஒரு கிழமைக்கு ரிமான்ட்டில் வைத்து மகர சிறைச்சாலையில் அடைத்துவிடுமாறு அநீதிபதி உத்தரவிட்டுள்ளதாக வந்து சொன்னது. நாம் எல்லோரும் இச்செய்தியைக் கேட்டு தலையில் அடித்துக் கொண்டோம். போலிசு உடனடியாகவே கடும் கண்காணிப்புடன் எம்மை திரும்பவும் கூண்டுக்குள் கூட்டிக் கொண்டுவந்து அடைத்துவிட்டார்கள். அநீதிமன்றத்தில் இருந்த சிங்களப் பெரும்பான்மையினர் நாம் 18 பேரும் அநீதிபதி முன்னால் கொண்டு செல்லப்பட்டபோது மிகுந்த ஆரவாரம் செய்தார்கள். போலிசார் உண்மையான குண்டுவெடிப்பின் குற்றவாளிகளைப் பிடித்துவிட்டது போல் சந்தோசப்பட்டார்கள். எங்களை நோக்கி நையாண்டியும் செய்தார்கள். நாங்கள் வெட்கிப்போய் சிறீ லங்கா பேரினவாதிகளின்முன் தலைகுனிந்து நின்றோம்!

தொடரும்.......

Link to comment
Share on other sites

சிறிது நேரத்தில் சிறீ லங்கா அநீதி மன்றத்தின் அநீதிபதி வந்ததும் விசாரணகள் தொடங்கியது. ஒவ்வொரு வழக்கினதும் வரிசைக்கிரமத்தில் விசாரணைகள் தொடங்கியது. விசாரணைக்கு குறிப்பிட்ட வழக்குகள் அண்மிக்கும் நேரத்தில் கூண்டினுள் இருந்த அந்தந்த வழக்குகளுடன் சம்மந்தப்பட்ட குற்றைவாளிகள்(?) ஆயுதந்தரித்த பொலிசாரின் கண்காணிப்பில் அநீதிபதி முன்னால் கொண்டுசெல்லப்படுவதற்காக கூண்டைவிட்டு வெளியேற்றபட்டு வெளியே வரிசையாக காத்திருக்கச் செய்யப்பட்டார்கள். முதலில் சிங்களப் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த கைதிகளின் வழக்கே விசாரணைக்கு வந்தது. ஒவ்வொருவராக விசாரணை முடிந்து கூண்டுக்கு திரும்பிக் கொண்டு இருந்தார்கள். கூண்டில் இருந்த எல்லோருக்குமே இன்னொரு திகதிக்கு வழக்கிற்கான தவணை கொடுக்கப்பட்டு சிறைவாசம் நீடிக்கப்பட்டு இருந்தது. எமது வழக்கு எப்போது விசாரணைக்கு வரும், நாம் விடுவிக்கப்படுவோமா என்ற எதிர்பார்ப்புடன் 18 அப்பாவி தமிழ் இளைஞர்களும் கூண்டினுள் காத்துக்கொண்டு இருந்தோம்.

கொஞ்ச நேரத்தின் பின் எங்கள் 18 பேரின் பெயர்களும் கொச்சையாக சிங்களப் பொலிசாரினால் உச்சரிக்கப்பட்டு கூப்பிடப்பட்டது. சிறைக்கூண்டு திறக்கப்பட்டு நாங்கள் வரிசையாக அநீதிபதியின் முன் நிறுத்தப்படுவதற்காக தயார்ப்படுத்தப்பட்டோம்.

சில நிமிடங்களில் எமது பெயர் அநீதிமன்றத்தில் உரத்து வாசிக்கப்பட்டது. குற்றவாளிக்கூண்டினுள் 18 பேரும் ஒன்றாக நிற்பதற்கு இடம் போதவில்லை. அதனுள் எம் எல்லோரையும் அமுக்கி அடக்க எமக்கு பின்னால் இருந்து சிறீ லங்காப் பொலிசார் தள்ளிக்கொண்டு இருந்தார்கள். இப்போது போலிசார் எமக்கெதிரான குற்றப்பத்திரிகையை அநீதிபதியிடம் தாக்கல் செய்து, அதை விபரிக்கத் தொடங்கினர். அநீதிபதி அவர்கள் பக்கமாகத் திரும்பி அவர்கள் சொல்வதை கேட்டுக் கொண்டு இருந்தான். எங்களை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. அவனுக்கே அவனது மனச்சாட்சி சங்கடம் கொடுத்ததாலேயே எங்களைப் பார்க்கவில்லையோ தெரியாது! போலிசார் தமது அறிக்கையை விளக்கிமுடிந்ததும் எமது வெருளிக்குஞ்சு வழக்கறிஞர் மேசையைவிட்டு எழும்பி நின்று அநீதிபதியைப் பார்த்து ஏதோ சொல்ல வெளிக்கிட்டது. ஆனால் அநீதிபதி வெருளிக்குஞ்சை அசட்டை செய்தபடி போலிசு தனது கதையைச் சொல்லி முடிந்தகையோடே கிடுகிடுவென ஏதோ எழுதத்தொடங்கிவிட்டது.

இதன்பின் அநீதிமன்றத்தில் என்ன நடந்தது என்பது இப்போது நினைவில்லை. ஆனால் எமது வெருளிக்குஞ்சு வழக்கறிஞர் எம்மிடம் வந்து எம்மை ஒரு கிழமைக்கு ரிமான்ட்டில் வைத்து மகர சிறைச்சாலையில் அடைத்துவிடுமாறு அநீதிபதி உத்தரவிட்டுள்ளதாக வந்து சொன்னது. நாம் எல்லோரும் இச்செய்தியைக் கேட்டு தலையில் அடித்துக் கொண்டோம். போலிசு உடனடியாகவே கடும் கண்காணிப்புடன் எம்மை திரும்பவும் கூண்டுக்குள் கூட்டிக் கொண்டுவந்து அடைத்துவிட்டார்கள். அநீதிமன்றத்தில் இருந்த சிங்களப் பெரும்பான்மையினர் நாம் 18 பேரும் அநீதிபதி முன்னால் கொண்டு செல்லப்பட்டபோது மிகுந்த ஆரவாரம் செய்தார்கள். போலிசார் உண்மையான குண்டுவெடிப்பின் குற்றவாளிகளைப் பிடித்துவிட்டது போல் சந்தோசப்பட்டார்கள். எங்களை நோக்கி நையாண்டியும் செய்தார்கள். நாங்கள் வெட்கிப்போய் சிறீ லங்கா பேரினவாதிகளின்முன் தலைகுனிந்து நின்றோம்!

தொடரும்.......

:angry: :angry: :angry: :angry: :angry: :angry: :angry: :angry: :angry: :angry:

:angry: :angry: :angry: :angry: :angry: :angry: :angry: :angry: :angry: :angry:

:angry: :angry: :angry: :angry: :angry: :angry: :angry: :angry: :angry: :angry:

:angry: :angry: :angry: :angry: :angry: :angry: :angry: :angry: :angry: :angry:

:angry: :angry: :angry: :angry: :angry: :angry: :angry: :angry: :angry: :angry:

:angry: :angry: :angry: :angry: :angry: :angry: :angry: :angry: :angry: :angry:

:angry: :angry: :angry: :angry: :angry: :angry: :angry: :angry: :angry: :angry:

:angry: :angry: :angry: :angry: :angry: :angry: :angry: :angry: :angry: :angry:

:angry: :angry: :angry: :angry: :angry: :angry: :angry: :angry: :angry: :angry:

:angry: :angry: :angry: :angry: :angry: :angry: :angry: :angry: :angry: :angry:

:angry: :angry: :angry: :angry: :angry: :angry: :angry: :angry: :angry: :angry:

:angry: :angry: :angry: :angry: :angry: :angry: :angry: :angry: :angry: :angry:

:angry: :angry: :angry: :angry: :angry: :angry: :angry: :angry: :angry: :angry:

:angry: :angry: :angry: :angry: :angry: :angry: :angry: :angry: :angry: :angry:

:angry: :angry: :angry: :angry: :angry: :angry: :angry: :angry: :angry: :angry:

:angry: :angry: :angry: :angry: :angry: :angry: :angry: :angry: :angry: :angry:

:angry: :angry: :angry: :angry: :angry: :angry: :angry: :angry: :angry: :angry:

:angry: :angry: :angry: :angry: :angry: :angry: :angry: :angry: :angry: :angry:

:angry: :angry: :angry: :angry: :angry: :angry: :angry: :angry: :angry: :angry:

:angry: :angry: :angry: :angry: :angry: :angry: :angry: :angry: :angry: :angry:

:angry: :angry: :angry: :angry: :angry: :angry: :angry: :angry: :angry: :angry:

:angry: :angry: :angry: :angry: :angry: :angry: :angry: :angry: :angry: :angry:

:angry: :angry: :angry: :angry: :angry: :angry: :angry: :angry: :angry: :angry:

:angry: :angry: :angry: :angry: :angry: :angry: :angry: :angry: :angry: :angry:

:angry: :angry: :angry: :angry: :angry: :angry: :angry: :angry: :angry: :angry:

:angry: :angry: :angry: :angry: :angry: :angry: :angry: :angry: :angry: :angry:

:angry: :angry: :angry: :angry: :angry: :angry: :angry: :angry: :angry: :angry:

இலையுதிர்காலம் ஒன்று இருந்தால் வசந்த காலம் என்று ஒன்று நிச்சயம் வரும்............ நாளைக்கு நமக்கொரு காலம் வரும், அதுவரை பொறுத்திரு தோழா பழி தீற்பதற்க்கு,

Link to comment
Share on other sites

நாங்கள் ஒவ்வொருவரும் மனதில் பெரும் சோகங்களுடனும், அதிர்ச்சியுடனும் என்ன இனி செய்வது, சிறையில் எமக்கென்ன சித்திரவதைகள் நடக்கப்போகிறது என்று நினைத்து கவலைப்படத் தொடங்கினோம். இப்போது பிற்பகல் சுமார் இரண்டு மணியாகத் தொடங்கியது. வழக்கு விசாரணைகள் முடிந்ததும் கூண்டிலிருந்து சிறைக்கைதிகள் மெதுமெதுவாக அவர்களுக்குரிய சிறைகளிற்கு கொண்டு செல்லப்படுவதற்காக கூண்டிலிருந்து அகற்றப்படத் தொடங்கினார்கள். கூண்டினுள் இருந்து வெளிக்கடை சிறைக்கு கொண்டு செல்லப்பட வேண்டியவர்களே முதலாவதாக அகற்றப்படத் தொடங்கினார்கள். கொஞ்ச நேரத்தில் கூண்டு மெல்ல, மெல்ல வெளிக்கத் தொடங்கியது. கூண்டினுள் சிங்கிளக் கைதிகளுடன் முஸ்லீம் கைதிகளும் கணிசமான அளவில் காணப்பட்டனர். சிங்கிளவர்களுடன் அவர்கள் சினேகபூர்வமாக கதைத்து மகிழ்ந்தார்கள். எம்முடன் ஒன்றும் கதைக்கவில்லை.

கூண்டிற்கு வெளியே தமிழ்க் கைதிகளின் உறவினர்கள் உறவுகளிற்கு குளிர்பானப் போத்தல்கள், சிற்றுண்டிகள், பல் மினுக்குவதற்கு பற்பசை, சோப் போன்றவற்றை கடையில் வாங்கி சப்ளை பண்ணிக்கொண்டு இருந்தார்கள். வந்தோம், கண்டோம், சாமன்களைக் கொடுத்தோம், விடைபெற்றுச் சென்றோம் என்ற மாதிரியே உறவினர்கள் தமது உறவுகளை அணுக முடிந்தது. உறவினர்கள் அழுவதற்கோ அல்லது கூண்டுக்கு அருகில் ஒரு நிமிடத்துக்கு மேல் நிற்பதற்கோ போலிசார் அனுமதிக்கவில்லை. சிங்களக் கைதிகளைப் பார்க்க பெரும்பாலும் உறவினர்கள் வரவில்லையென்றே கூற வேண்டும். ஆனால் பல தாதாக்கள் வந்து அவர்களிற்கு உணவுப் பொருட்களை கொடுத்து(முக்கியமாக சிகரட், குடு) தாம் விரைவில் வெளியே எடுப்பதாய் உறுதி கூறிச் சென்றார்கள் (நம்மட தமிழ் சினிமாப் படங்களில் வருவது போல்).

நேரம் சுமார் ஐந்து மணியாகத் தொடங்கியது. மகர சிறை தவிர்ந்த மற்றைய சிறைகளிற்கு கொண்டு செல்லப்பட வேண்டிய கைதிகள் ஏற்கனவே கூண்டைவிட்டு அகற்றப்பட்டு விட்டனர். கூண்டில் சுமார் நாற்பது பேர் எஞ்சி இருந்தோம். அனைவரும் மகர சிறைக்கு போகப்போறவர்கள். எனக்கு அப்போது ஏற்பட்ட ஆச்சரியம் என்னவென்றால், சிங்களக் கைதிகளின் முகத்தில் மீண்டும் தாம் சிறை செல்லப்போகின்றோம் என்ற கவலையோ, பதற்றமோ காணப்படவில்லை. மாறாக ஏதோ தங்கள் சொந்த வீட்டுக்கு திரும்பிச் செல்லப்போகின்றோம் என்ற நினைப்பில் அவர்கள் அமைதியாக இருந்தார்கள். பலர் புகை, குடு போன்றவற்றில் பிசியாக இருந்தார்கள். ஒருசிலர் தமிழ்க்கைதிகளுடன் பேசத் தொடங்கினார்கள்.

எனக்கு "சிங்கள புளுவங் எப்பா", "நம மொக்கத", "வெலாவ கியத" போன்ற ஒருசில சிங்கிள சொற்களே தெரிந்திருந்தது. ஆனால் எம்மில் சிலர் தென் தமிழீழத்தை பிறப்பிடமாகக் கொண்டவர்களாகவும், சிலர் கொழும்பில் நீண்ட காலமாக வசிப்பவர்களாகவும் இருந்தார்கள். இவர்கள் சிங்களக் கைதிகளுடன் சரளமாகக் கதைத்து ஒருவிதமான புரிந்துணர்வையும், நட்பையும் ஏற்படுத்தும் முயற்சியில் இறங்கியிருந்தார்கள். ஆனால் சிங்கிளக் கைதிகளின் எம்மிடமிருந்தான எதிர்பார்ப்பு வேறுவிதமாக இருந்தது. அதாவது அவர்கள் நேரடியாகக் கேட்டும், எம்மைப் பயமுறுத்தியும் எம்மிடம் இருந்த காசுகளை பறிக்கத் தொடங்கினார்கள். ஒரு சிங்களக் கைதி என்னிடம் வந்து காசு இருக்கிறதா என்று கேட்டான். நான் இல்லை என்று பதில் சொல்ல அவன் எனது பொக்கற்று, உள்ளாடைகளை பரிசோதித்து நான் காசு வைத்திருக்கின்றேனா என்று பரிசோதித்தான். எம்மில் சிலர் தங்க நகைகள் போட்டிருந்தனர். ஆனால் அவர்களை சிங்களக் கைதிகள் காசுமட்டும் கேட்டு தொந்தரவு செய்தார்கள். இவர்கள் தங்க நகைகளை கேட்டு பறிக்காததற்கு ஒரு காரணம் இருக்கிறது. அதாவது தாம் சிறைக்கு திரும்பிச் செல்லும் போது சிறைக்காவலர்கள் உடற்பரிசோதனை செய்யும் போது இந்த தங்க நகை எப்படி கிடைத்தது என்று கேட்டால் அவர்களிற்கு பதில் சொல்ல தெரிந்திருக்கவில்லை. இதனாலேயே காசை பறிப்பதில் மட்டும் குறியாக இருந்தார்கள். சிறிது நேரத்தில் இன்னொரு சிங்களக் கைதி என்னிடம் வந்து காசு தருமாறும் தான் என்னை சிறையில் வைத்து நன்றாக கவனிப்பதாகவும் சொன்னான். இன்னொருவன் வந்து கேட்டதற்கு நான் காசில்லை என்று சொன்னபோது சிறீ லங்காவின் அநீதிமன்றத்துக்கு என்னைப் பார்க்க வந்த உறவினர்களிடம் கேட்டு காசு வாங்கித் தருமாறு தொந்தரவு தந்தான். நாம் சிங்களக் கைதிகள் எம்மீது பலாத்காரம் புரிந்தாலும் அவர்களை பயத்தின் காரணமாக பகைத்துக் கொள்ள விரும்பவில்லை.

இப்போது மாலை ஆறு மணிசொச்சம் ஆகத்தொடங்கியது. கோர்ட்டிலிருந்து எல்லோரும் வெளியேறி விட்டார்கள். அப்பாவித் தமிழ் கைதிகளின் சில உறவினர்கள் மட்டும் வெளியில் தமது அன்புக்குரியவர்களை சிறைக்கு வழியனுப்பிவைப்பதற்காக காத்திருந்தார்கள். சிறைக்காவலாளிகளும் பொலிசாரும் சிறிது நேரத்தில் பரபரப்பு அடையத் தொடங்கிவிட்டார்கள். நாம் செல்லவேண்டிய நாய் வண்டி எமது கூண்டிற்கு அருகாக ரிவேர்சில் வந்துவிட்டது. நாம் ஒவ்வொருவராக வெளியே பெயர் சொல்லி அழைக்கப்பட்டு எமது ஒரு கையிலும் ஒரு காலிலும் நாய்ச்சங்கிலி இணைக்கப்பட்டது. இந்தச் சங்கிலி மூலம் தொடராக சுமார் இருபது பேரை ஒரேயடியாக இணைக்கமுடியும். கைகளிற்கும், கால்களிற்கும் இருவேறு சங்கிலிகள் பாவிக்கப்பட்டது. ஒருவர் பின் ஒருவராக நாற்பது பேருக்கும் சங்லிகள் மாட்டப்பட்டபின் நாம் அருகருகில் இருவராக சுமார் இருபது சோடிகளாக, ஒரு சோடிக்கு பின்னால் இன்னொரு சோடியாக அணிவகுத்து நின்றோம்.

இவ்வாறு கையிற்கும், காலிற்கும் சங்கிலிகள் போட்டு அடிமைகள் போல கைதிகளை இழுத்துச் செல்லும் காட்சியை நான் சிறு குழந்தையாக இருந்தபோது ஒருநாள் இரவு எனது அப்பாவுடன் திருகோணமலை நகரில் முற்றவெளியில் இருந்து விளையாடிக்கொண்டு இருந்தபோது நேரில் கண்டுள்ளேன். அவர்களை சுமார் பத்து நேவிக்காரர்கள் முன்னும், பின்னுமாக ஆயுதங்களுடன் பிரதான விதியால் நடத்திச் சென்றார்கள். அப்போது அந்தக் காட்சியைப் பார்த்த எனக்கு பயமாகவும், கைதிகளின் மீது பரிதாபமாகவும் இருந்தது. ஆனால் அதே நிலமை சுமார் இருபது வருடங்களின் பின் எனக்கு ஏற்பட்டுவிட்டதை நினைக்க மனதிற்கு மிகவும் கவலையாக இருந்தது.

குறிப்பு: இது எனது வாழ்வில் ஏற்பட்ட மிகவும் ஒரு துன்பகரமான சம்பவம். இதன் காரணமாக நான் விடுதலையடைந்த பின் சுமார் ஒரு வருடம் மனநோயாளியாக (ஆனால் வைத்தியரிடம் சென்று சிகிச்சை ஒன்றும் எடுக்கவில்லை) இருக்க வேண்டி வந்தது. கால ஓட்டத்தில் எனக்கு நடந்த கொடுமைகளை மறந்துவிட்டேன். இப்போது யாழ் கள நண்பர்களிற்காக நடந்த சம்பவத்தை மீளவும் நினைவுபடுத்தி எனக்கு என்ன நடந்தது என்பதை மீண்டும் யோசித்து நினைவுபடுத்தி கதையாகக் கூறுகின்றேன். உடனடியாக விசயங்களை கிடுகிடுவென்று விரைவாக எழுதிக் கொண்டு போனால் முக்கியமான விசயங்களை நான் மறந்து உங்களுக்கு சொல்லாது விடக்கூடும். எனவேதான் இத்தொடரை மெது, மெதுவாக பழைய சம்பவங்களை நினைவுபடுத்தி கொஞ்சம், கொஞ்சமாக எழுத வேண்டியுள்ளது!

உங்கள் பொறுமைக்கும் கருத்துக்களிற்கும் நன்றி! நான் இத்தொடரை எழுதுவதன் நோக்கம் அப்பாவித் தமிழ்மக்கள் சிங்களப் பேரினவாதிகளால் நீதி விசாரணை என்று பெயரில் எவ்வாறு ஏமாற்றப்பட்டு கொடுமைப்படுத்தப் படுகின்றார்கள் என்பதை அறியாதவர்களும், வெளி உலகமும் அறிந்துகொள்வதற்காகவேயாகும்!

தொடரும்........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாசிக்கவே கவலையாக இருக்குது. மாப்பிள்ளையின் சோகக்கதை ஒரு பேப்பர் போன்ற ஊடகங்களிலும் வரவேண்டும். பலருக்கு சிறைக் கொடுமைகள் பற்றி அறிந்திருக்க வாய்ப்பில்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வேதனையான சம்பவம்.. கேட்கவே சிங்களவன் மீது எரிச்சலாக வருகிறது..

மாப்பிளை அண்ணை தொடருங்கள்..

ஆவலுடன் காத்திருக்கிறேன்..

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

இப்போது சோடி சோடியாக நாய் வண்டியினுள் ஏறுமாறு நாம் சிறைக் காவலாளிகளால் பணிக்கப்பட்டோம். நான் முதன்முறையாக வார்டின் என அழைக்கப்படும் சிறைவாசம் அனுபவிக்கும் ஆனால் மற்றைய கைதிகளிற்கு பொறுப்பாக இருக்கும் (அதுதான் அந்த தமிழ்ப் படங்களில் காட்டுவாங்களே, சிறையினுள் இருக்கும் வெள்ளை காற்சட்டை, வெள்ளை பெனியன் போட்ட ஊத்தைவாளிகள், அவங்களைப் போல்) தடியன்களைப் பார்த்தேன். இந்தத் தடியன்களைப் பற்றி நான் புத்தகங்களில், சினிமாப் படங்களில் பார்த்திருந்தேன், அறிந்திருந்தேன். ஆனால முதல் தடவையாக சொந்த வாழ்க்கையில் இவனுகளைப் பார்த்தபோது மிகவும் பயமாக இருந்தது.

நாய் வண்டியினுள் இருந்த இரண்டு தடியன்கள் உள்ளே ஏறும் கைதிகளை வண்டியினுள் ஒழுங்குபடுத்தி இருக்க வைத்துக் கொண்டு இருந்தான்கள். கைதிகள் சுமார் நாற்பது பேரும் கையிலும், காலிலுமாக சங்கிலிகளால் தொடராக பிணைக்கப்பட்டிருந்ததால் எல்லோரும் ஏறி முடிவதற்கு நீண்ட நேரம் எடுத்தது. வழியனுப்பவந்த அப்பாவித் தமிழ்க் கைதிகளின் உறவுகள் தமது அன்புக்குரியவர்களை அடிமைபோல் இழுத்துச் செல்லும் காட்சியைப் பார்த்து கதறி அழுதார்கள். என்னால் அழ முடியவில்லை. ஏனெனில் நான் ஏற்கனவே எனது மேல்வீடு ஓரளவு கழன்ற நிலையில் இருந்தேன். ஆனால் மற்றைய சில அப்பாவிக் கைதிகள் தமது உறவுகளுடன் சேர்ந்து கண்ணீர் விட்டார்கள்.

என்னுடன் சோடியாக சங்கிலியால் இணைக்கப்பட்டிருந்தவன் ஒரு வயதுபோன சுமார் 55 வயது மதிக்கத்தக்க தாடி வளர்த்த திருடனாக இருந்தான். அவன் எனது பதற்றமடைந்த முகத்தை பார்த்தோ அல்லது என்மீது பரிதாபப்பட்டோ என்னமோ எனக்கு ஆறுதல் தரும் வார்த்தைகளை கொச்சைத் தமிழில் சொன்னான். நான் குற்றவாளியாக இருப்பேன் என்று தான் நம்மவில்லை என்று சொன்னான். எனக்கு சிறையில் வைத்து வேறு தனது சிங்கிள நண்பர்கள் மூலம் உதவி செய்வதாகவும், என்னைப் பயப்பட வேண்டாம் என்றும் சொன்னான். அவன் என்ன தான் ஆறுதல் வார்த்தை எனக்கு சொன்னாலும் அவனது முகத்தை என்னால் ஏறிட்டு பார்க்கமுடியவில்லை. குடு மற்றும் புகைத்தலால் அவனது வாயில் இருந்து குப்பு குப்பென்று செத்த எலியின் நாற்றம் அடித்தது.

எல்லோரும் ஏறிய பின்னரும் சுமார் பதினைந்து நிமிடங்கள் நாய் வண்டி சிறீ லங்காவின் அநீதி மன்றத்தில் காத்திருந்தது. வாகன ஓட்டுனர் ஏதோ சமிக்ஞைக்காக, மேலிட உத்தரவிற்காக காத்திருந்தான் என நினைகின்றேன். ஏன் இப்படி தாமதிக்கின்றான் என்பதற்கு எனக்கு ஒரு சிங்கள நண்பன் பிற்காலத்தில் வேறு ஒரு காரணம் கூறினான். அதாவது சிறீ லங்கா போலிசார் சில குறிப்பிட்ட, தமக்கு பிடிக்காத, ஆனால் சட்டத்தின் மூலம் ஒன்றும் செய்துவிட முடியாத நபர்களை உளவியல் ரீதியாக துன்புறுத்தி, வெருட்டுவதற்காக இவ்வாறு செய்வதாகக் கூறினான். அதாவது அந்த குறிப்பிட்ட நபர் வெளியில் தெருவில் போகும்போது அடிக்கடி ஒவ்வொரு முறையும் அந்த நபருக்கு சிறைவண்டியினை காண்பிப்பதன் மூலம் அவரது மனதில் அவர் ஒரு குற்றவாளி என்பதை பலாத்காரமாகத் திணிப்பதாகும். தினமும் இரண்டு மூன்று தடவைகள் இவ்வாறு உளவியல் தாக்குதல் தொடர்ந்து செய்யப்பட்டு அந்த குறிப்பிட்ட நபர் உளவியல் ரீதியாக சிறைப்பிடிக்கப்படுவார். இவ்வாறு செய்யும் போது ஒரு குற்றமும் செய்யாத நிரபராதி கூட சிறிது காலத்தின் பின் தான் ஒரு குற்றவாளி என்று நினைக்கத் தொடங்குவார். உளவியலில் இதை இன்டிமிடேசன் - Intimidation என்று அழைப்பார்கள். இந்த உளவியல் தாக்குதல் குறிப்பிட்ட சில சிங்களவர்களின் மீதும் நடத்தப்பட்டாலும், தமிழ் தேசியத்திற்காக குரல் கொடுக்கும் அரசியல் வாதிகள், தமிழ் தேசியத்திற்காக குரல் கொடுக்கும் பத்திரிகையாளர்கள் மற்றும் அப்பாவித் தமிழ் மக்கள் மீதும் சிறீ லங்கா போலிசினால் நடாத்தப்படுகின்றது என்பதை நான் உங்களுக்கு சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இவ்வாறு ஒரு குறிப்பிட்ட நபரின் முன்னால் சிறை வண்டியை காண்பித்து அந் நபருக்கு உளவியல் தாக்குதலை நடாத்துவதற்காகவே எமது நாய் வண்டியின் வாகன ஓட்டுனர் காத்திருந்தான் என நினைக்கின்றேன். ஆனால் தான் இவ்வாறு உளவியல் தாக்குதல் செய்கின்றேன் என்று வாகன ஓட்டுனர் அறிந்திருக்க முடியாது. அவனுக்கு தெரிந்ததெல்லாம் மேலதிகாரி சொல்லும் நேரத்தில் வாகனத்தை ஓட்ட வேண்டும் என்பதே.

Intimidation is an attempt to [fear/frighten/negatively influence] or 
overawe by speaking or acting in a dominating manner, often with the goal
of making a person or people do what the intimidator wants. It is a maladaptive
outgrowth of normal competitive urge for interrelational dominance generally
seen in animals, but which is more completely modulated by social forces
in humans Like all behavioral traits it exists in greater or lesser manifestation
in each individual person over time, but may be a more significant compensatory
behavior for some as opposed to others. Behavioral theorists often see intimidation
in children as a consequence of being intimidated by others, including parents,
authority figures, playmates and siblings. Intimidation may be employed consciously
or unconsciously, and a percentage of people who employ it consciously may do so
as the result of rationalized notions of its appropriateness, utility or self-empowerment.
Intimidation may be manifested in such manner as physical threat, glowering
countenance, emotional manipulation, verbal abuse, purposeful embarrassment
and/or actual physical assault.

[url="http://www.answers.com/topic/intimidation-3"]http://www.answers.com/topic/intimidation-3[/url]
[/codebox]

சுமார் ஏழு மணியளவில் நாய்வண்டி மகர சிறை நோக்கி புறப்படத் தொடங்கியது. உறவினர்கள் அழுதபடி அப்பாவித் தமிழ்க் கைதிகளிற்கு கையசைத்து பிரியாவிடை கொடுத்தார்கள். நாய் வண்டியினுள் இருந்ததே சிறையில் இருந்தது போன்ற அனுபவத்தையே எமக்கு தந்தது. அதாவது நாங்கள் ஓடிக்கொண்டிருக்கும் சிறையினுள் இருந்தோம். பெரும்பாலும் எல்லோருமே கம்பிகளால் அடித்து வேயப்பட்ட யன்னலூடாக வெளியில் எட்டிப் பார்த்தார்கள். சிங்களக் கைதிகள் ஆரவாரம் போட்டு தெருவில் போய்வருபவர்களை கூவியழைத்து, சத்தம் போட்டு கும்மாளம் அடித்தார்கள். வெளியில் இருப்பவர்கள் எங்களை தருதலைக் கூட்டம் போவதாக நினைத்து சீ என்று பார்த்தார்கள். பைத்தியக்காரர்களை கொண்டு செல்லும் வண்டிக்கும், நாம் சென்ற சிறை வண்டிக்குமான வித்தியாசமாக என்னால் கூறக்கூடியது, பைத்தியக்காரர் வண்டியில் ஏற்கனவே பைத்தியமாக்கப்பட்ட மனிதர்கள் இருக்கிறார்கள், நாம் சென்ற வண்டியில் பைத்தியமாகிக் கொண்டு இருப்பவர்களும், பைத்தியமாகப் போகின்றவர்களும் இருந்தார்கள்.

இப்போது நன்றாக இருண்டுவிட்டது. சிறிது நேரம் நான் வெளியால் பார்த்துக்கொண்டு இருந்துவிட்டுபின், எனது முகத்தை எனது மடியில் புதைத்தபடி நித்திரை செய்யத் தொடங்கிவிட்டேன். நாய் வண்டியினுள் இருந்து பிரயாணம் செய்தது மிகுந்த துன்பத்தை தந்தது. எனது வாழ்க்கையில் இவ்வாறான ஒரு கேவலமான பயணத்தை நான் சந்திக்கவில்லை. திருநாவுக்கரசு நாயனார் கல்லுடன் கட்டி கடலுடன் போடப்பட்டபோது இவ்வளவு துன்பத்தை அனுபவித்து இருப்பாரா என்பது சந்தேகமே. ஏனெனில், முதலில் எங்களால் சுத்தமான காற்றை கூட நாய் வண்டியினுள் சுவாசிக்க முடியவில்லை. வண்டியினுள் வந்ததெல்லாம் செத்த பல்லியின் நெடியைக் கொண்ட காற்று மட்டும் தான். இவ்வாறு சுமார் இரண்டு, மூன்று மணித்தியாலங்கள் பயணித்தபின் (சரியாக எத்தனை மணித்தியாலங்கள் வண்டியினுள் இருந்தேன் என்று இப்போது என்னால் நினைவுபடுத்த முடியவில்லை) எமது நாய் வண்டி மகர சிறைச் சாலை வாசலில் போய் நின்றது.

தொடரும்...

[/size][/color][/b]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இக்கொடுமையினை வாசிக்க முடியவில்லை. வாசிக்க வாசிக்க நானும் கைது செய்யப்பட்டது போல ஒரு உணர்வுடன் பயமாகவும் இருக்கிறது. ஆனால் மாப்பிள்ளை இப்பொழுது சிறைவாசம் இல்லாமல் நிம்மதியாக எதாவது ஒரு நாட்டில் வாழ்வதை எண்ணி எனக்கு ஒரு சந்தோசம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இப்போது உள்ள‌ சூழ‌லில் ஈழ‌ உண‌ர்வு ம‌ன‌சில் இருக்க‌னும் அதை ஊரில் வெளிக் காட்டினால் அடுத்த‌ க‌ன‌மே ஆப்பு வைப்பாங்க‌ள்   ஊரில் ந‌ட‌க்கும் மாவீர‌ நாளுக்கு இன்னும் அதிக‌ ம‌க்க‌ள் க‌ல‌ந்து கொள்ளுபின‌ம் ஆனால் பின்விலைவுக‌ளை நினைச்சு வீட்டிலையே மாவீர‌ர் ப‌ட‌த்துக்கு பூ வைச்சு வில‌க்கு ஏற்றி விட்டு ம‌ன‌சில் இருக்கும் க‌வ‌லைக‌ளை க‌ண்ணீரால் போக்கி விட்டு அந்த‌ நாள் அதோடையே போய் விடும்   பெத்த‌ தாய் மாருக்கு தான் பிள்ளைக‌ளின் பாச‌ம் நேச‌ம் அன்பு ம‌ழ‌லையில் இருந்து வ‌ள‌ந்த‌ நினைவுக‌ள் தாய் மாரின் ம‌ன‌சை போட்டு வாட்டி எடுக்கும் என்ன‌ செய்வ‌து 2009க‌ளில் இழ‌க்க‌ கூடாத‌ எல்லாத்தையும் இழ‌ந்து விட்டோம்😞..............................
    • நிச்சயமாக  @goshan_cheக்கு புதிய சம்பவம் என்று அவருக்கு தெரிந்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால்.... அவர் @பெருமாள் யும், @பையன்26யும் கலாய்ப்பதற்காக அடி மட்டத்திற்கு இறங்கி... "தூர் வாரியிருக்கிறார்". 😂 நமக்கும் அவரை கலாய்ப்பதில் ஒரு அலாதி இன்பம். 🙂
    • நான் நினைக்கின்றேன் அவருக்கு தெரியும் இது புதிது என்று.  ஆனால் பையனின் கருத்தை மட்டும் வைத்து எப்படி சம்பவம் பழையதுதான் என்று அடிச்சு சத்தியம் பண்ணினாரோ தெரியவில்லை. ஓருவர் இங்கு எழுதுவதை மட்டும் வைத்து தனது நிலைப்பாட்டினை மாற்றும் ஆள் அல்ல அவர்.0
    • ஈரான் ஜனாதிபதியின் இலங்கை வருகை : கண்கானிப்பு நடவடிக்கையில் அமெரிக்க உளவுத்துறை. ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் இலங்கை வருகையை இஸ்ரேலின் மொசாட் புலனாய்வு சேவையும், அமெரிக்க எப்.பி.ஐ உளவுத்துறையும் கண்காணித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தின் திறப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொள்வதற்காக ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி எதிர்வரும் புதன்கிழமை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். இந்நிலையில், இலங்கையில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் நடைமுறையில் உள்ளதோடு, ஈரானிய சிரேஷ்ட பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் குழுவொன்று அண்மையில் இலங்கைக்கு வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டிருந்தது. ஈரான் ஜனாதிபதியின் இலங்கை விஜயம் தொடர்பில் இலங்கை அரசாங்கத்திற்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும், சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதேவேளை, கொழும்பிற்கு அழைத்து வரப்படும் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1379001
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.