Jump to content

அகில உலகக் கூட்டமைப்பொன்றை உருவாக்க வேண்டும்..! வடக்கு முதல்வர்


Recommended Posts

ஜல்லிக்கட்டுக்கு எதிராக போர் கொடி தூக்கியமை துர்ப்பாக்கிய நிலைமை. – சி.வி

vikki.jpg
 
ஜல்லிக்கட்டுக்கு எதிராக போர்க்கொடி தூக்குவது  ஒரு துர்ப்பாக்கிய நிகழ்வாகும். என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்து உள்ளார். வடமாகாண விவசாய அமைச்சின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் கோப்பாய் கிறிஸ்தவ கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற உழவர் தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார்.
 
மேலும் தெரிவிக்கையில் ,
 
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு நிகழ்வுகளாக ஜல்லிக்கட்டு அல்லது ஏறு தழுவல், போட்டிகளில்  மக்கள் ஈடுபடுவதுடன் ஜல்லிக்கட்டு விளையாட்டுக்களுக்கு அதற்கென விசேட பயிற்சிகள் அளிக்கப்பட்ட சிறந்த காளைகள் கொண்டுவரப்பட்டு அக்காளைகளை அடக்குகின்ற போட்டிகள் மஞ்சுவிரட்டு, வட்ட மஞ்சுவிரட்டு, வெளிவிரட்டு எனப் பலவிதமாக முன்னெடுக்கப்படுவன.
 
மஞ்சுவிரட்டு என்பது விளையாட்டுத்திடலில் வீறுகொண்டு நுழைகின்ற காளையை குறிப்பிட்ட தூரத்தில் அதன் ஏரியை அதாவது முதுகுப்புற மேற்பாகத்தை அழுத்திப்பிடித்து அடக்குவது.
 
வட்டமஞ்சுவிரட்டு என்பது பத்து மீற்றர் நீள கயிற்றில் கட்டப்பட்ட திமிறுகின்ற காளையை ஏரியைப்பிடித்து அடக்கி நிலத்தில் விழ வைப்பது. மூன்றாவது வகை வெளிவிரட்டு. இது திறந்த வெளியில் அல்லது வீதியில் ஓடுகின்ற காளையை துரத்திப்பிடித்து அடக்கி பணிய வைப்பது. இவ்விளையாட்டுக்களில் ஆதிகாலத்தில் திருமணம் செய்ய இருக்கின்ற இளைஞர்களும் ஈடுபடுவார்கள். ஜல்லிக்கட்டு அல்லது ஏறுதழுவல், மற்றும் இளவட்டக்கல் தூக்கல் ஆகிய போட்டிகளில் வெற்றி பெற்ற ஆடவர்களை மட்டுமே வசதி படைத்த திருமண நங்கைகள் தமது துணைவர்களாக அந்தக் காலத்தில்  தெரிவு செய்வர்.
 
இந்நிகழ்வுகள் மனிதர்களுக்கு மட்டும் உரித்தான போட்டிகள் என்று கூற முடியாது.  பறவைகள், விலங்குகள், பூச்சியினங்கள் கூட வீரியமுள்ள சந்ததியைத் தோற்றுவிப்பதற்காகப் பலம் பொருந்திய துணையைத் தேர்வு செய்வன.  அவற்றின் பலமானது பலவிதங்களில் பரீட்சிக்கப்படுவன.
 
ஜல்லிக்கட்டு போட்டிகள் இந்தியாவில் பன்நெடுங்காலமாக    முன்னெடுக்கப்பட்டு வந்த போதும் கடந்த ஒரு சில ஆண்டுகளாக இப் போட்டிகளை அரசு தடுத்து நிறுத்த முயல்வதும் அதற்கு எதிராக பல அணிகள் போர்க்கொடி தூக்குவது தமிழ் நாட்டில் இடம்பெற்றுவருவதும் ஒரு துர்ப்பாக்கிய நிகழ்வாகும்.
 
இருசாராரும் முன்வைக்கின்ற விடயங்களில் பல உண்மைத்தன்மைகள் காணப்படுகின்ற போதும் தொன்றுதொட்டு இடம்பெற்று வந்த பாரம்பரிய விளையாட்டுக் கலைகளை திடீரென்று மாற்றுவது சமூகச் சிக்கல்களை ஏற்படுத்தும். அது தான் இன்று தமிழ் நாட்டில் பூதாகரமாக வெடித்துள்ளது.
 
நேற்றைய தினம் தொடர்புடையவர்கள் சில உடன்படிக்கைகளுக்கு வந்துள்ளாதாகக் கேள்வி.  பொறுமையுடனும் பொறுப்புணர்ச்சியுடனும் இந்திய மத்திய மற்றும் மாநில அரசுகள் இப்பிரச்சனையை அணுகி உரிய தீர்வைப் பெற முயற்சிக்க வேண்டும்.
 
படித்த இளைஞர்கள் விவசாயம் செய்ய முன்வர வேண்டும். 
 
இந்த வகையில் இயற்கையோடு ஒன்றிய வாழ்க்கையை உடைய தமிழ் மக்கள் “சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம்”;  என்ற கருப்பொருளுக்கு அமைவாக பல தொழில்களிலும் சுற்றித்திரிந்து ஈற்றில் ஏரால் உழும் தொழிலைச் செய்யும் உழவர்களைப் பின்பற்றியே உலகம் செல்லும் என்ற வள்ளுவன் வாக்கிற்கு வளம்சேர்ப்பவர்களாக விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருவது எமக்கு மகிழ்வைத் தருகின்றது. எமது படித்த வாலிபர்கள் பலர் விவசாயத்தில் ஈடுபட வேண்டும்.நவீன தொழில்நுட்ப அறிவுடன் விவசாயத்தில் தன்னிறைவைக் காண எமது படித்த வாலிபர்கள் முன்வரவேண்டும்.
 
தமிழ் மக்களின் விவசாய காணிகளை கையகப்படுத்தியவர்கள் மீள ஒப்படைப்பார்கள் என எதிர்ப்பார்க்கிறேன். 
 
தமிழ் மக்கள் விவசாயத்தின்பால் கொண்டுள்ள நாட்டத்தையும் விவசாயத்தின் மூலம் அவர்கள் பெற்றுக் கொள்கின்ற நன்மைகளையும் கண்ணுற்ற பலர் தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களை கையகப்படுத்துவதில் குறியாக இருக்கின்றார்களோ என்று எண்ண வேண்டியுள்ளது.
 
விரைவில் இவ்வாறு கையகப் படுத்தியுள்ளவர்கள் தாம் குடியேறி இருக்கும் காணிகளை மக்களிடம் திரும்பக் கையளிப்பார்கள் என்று எதிர்பார்க்கின்றேன்.
 
தரிசு நிலங்களை விவசாய அமைச்சு பொறுப்பு ஏற்க வேண்டும். 
 
எது எவ்வாறு இருப்பினும் எமது மக்களின் விவசாய நிலங்கள் முழுமையாகப் பயன்படுத்தப்பட வேண்டும். எமது தரிசு நிலங்களில் ஒரு சிறு பகுதிகூட விவசாய  முயற்சிகளுக்கு பயன்படுத்தாது எஞ்சியிருக்கக் கூடாது. ஏதாவது காரணங்களால் சில நிலங்களில் விவசாய நடவடிக்கைகள் தொடர முடியாத விடத்து அக் காணிகளை தற்காலிகமாகவேனும் விவசாய அமைச்சு பொறுப்பேற்று அந் நிலங்களில் தோதான விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுவதன்மூலம் எமது உற்பத்திகள் அதிகரிப்பதுடன் நிலங்களும் பாதுகாக்கப்படுவன.
 
 
வெளிநாட்டில் உள்ள நில சொந்தக்காரர்களுடன் ஒப்பந்தம் செய்து அனலைதீவு போன்ற இடங்களில் இருக்குந் தரிசு நிலங்கள் எமது விவசாய அமைச்சினால் பொறுப்பேற்று சொந்தக்காரர்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்தாமல் நன்மைதரும் பயிர்ச் செய்கைகளில் ஈடுபடுத்தப்பட வேண்டும். எவ்வாறு மழைநீர் ஒருதுளி கூட கடலை அடையாது சேமிக்கப்பட வேண்டுமோ தரிசு நிலங்களும் உரியவாறு பயன்படுத்தாமல் வெட்டியாக வைத்திருக்கப்படாது நாம் பார்த்துக் கொள்ள வேண்டும். என தெரிவித்தார்.

http://globaltamilnews.net/archives/14743

Link to comment
Share on other sites

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை போல் உலக தமிழர்களை ஒன்றிணைத்து அகில உலக கூட்டமைப்பை உருவாக்க வேண்டும். – சி.வி.

Wicki_CI.jpg

உலகம் பூராகவும் உள்ள தமிழ்ப் பேசும் மக்கள் ஒன்றிணைந்து தமிழ் அகில உலகக் கூட்டமைப்பொன்றை உருவாக்கும் காலம் தற்போது கனிந்துள்ளதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்து உள்ளார்.

வடமாகாண விவசாய அமைச்சின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் கோப்பாய் கிறிஸ்தவ கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற உழவர் தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில் , தமிழ்ப் பேசும் மக்களும் தமக்குள் ஒற்றுமையை வரவழைக்க, வளர்க்க தைப்பொங்கலை மையமாகக் கொண்டு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று கருதுகின்றேன்.

நாங்கள் நான்கைந்து கட்சிகளைச் சேர்த்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அமைத்தோமோ அதேபோல் உலகம் பூராகவும் உள்ள தமிழ்ப் பேசும் மக்கள் சேர்ந்து தமிழ் அகில உலகக் கூட்டமைப்பொன்றை உருவாக்கும் காலம் தற்போது கனிந்துள்ளது.  இறைவன் அருளால் அவ்வாறான அமைப்பொன்று உருவாக வேண்டும் என்று பிரார்த்திக்கின்றேன்.

சாதி, மத, வர்க்க பேதமின்றி நாடுகள் கடந்து எம் மக்கள் அனைவரும் ஏகோபித்த குரலில் எமது குறைகளை உலகுக்கு எடுத்துக்கூற வேண்டும்.என தெரிவித்தார்.

http://globaltamilnews.net/archives/14772

Link to comment
Share on other sites

உலகம் முழுவதும் உள்ள தமிழ்ப் பேசும் மக்கள் ஒன்றிணைந்து தமிழ் அகில உலகக் கூட்டமைப்பொன்றை உருவாக்கும் காலம் தற்போது ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இதனை தெரிவித்துள்ளார். வடமாகாண விவசாய அமைச்சின் ஏற்பாட்டில் உழவர் தின நிகழ்வு நேற்று இடம்பெற்றது.

யாழ்ப்பாணம் கோப்பாய் கிறிஸ்தவ கல்லூரியில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்து அவர்,

தமிழ்ப் பேசும் மக்கள் தமக்குள் ஒற்றுமையை வரவழைக்க, வளர்க்க தைப்பொங்கலை மையமாகக் கொண்டு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என தாம் கருதுவதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

நான்கைந்து கட்சிகளைச் சேர்த்து எவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஏற்படுத்தியுள்ளோமோ, அதனை போலவே உலகம் முழுவதும் உள்ள தமிழ்ப் பேசும் மக்கள் ஒன்றிணைந்து தமிழ் அகில உலகக் கூட்டமைப்பொன்றை உருவாக்க வேண்டும்.

அதற்கான காலம் தற்போது கனிந்துள்ளது. இறைவன் அருளால் அவ்வாறான அமைப்பொன்று உருவாக வேண்டும் என தாம் பிரார்த்திக்கின்றேன்.

இதேவேளை, சாதி, மத பேதமின்றி நாடுகள் கடந்து எம் மக்கள் அனைவரின் ஏகோபித்த குரலில் எமது குறைகளை உலகுக்கு எடுத்துக்கூற வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

http://www.tamilwin.com/special/01/132883?ref=home

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதுவரை> உலகத் தமிழாராய்ச்சி  பன்னாட்டுத் தமிழுறவு..... என்று பலகுதிரைகளிலேறிப் பலபேர் சறுக்கி விழுந்திருக்கிறார்கள்.  பாக்கு நீரிணையின் இருபுறத்திலுமுள்ள தமிழர் தேசியத்தை ஆசியப் பிராந்தியத்தில் ஓர் வலுமிக்க சக்தியாகக் கட்டியெழுப்புவதற்கு உலகத் தமிழர் அனைவரும் ஒன்றிணைந்து உருவாக்கும்> குறிக்கோளும்> செயற்பாட்டு வரைபும் கொண்ட உலகத் தமிழர் ஒன்றியத்தை வடமாகாண முதல்வர் தனது தலைமையில் வடிவமைத்து அதனையொரு சர்வதேச நிறுவனமாகச் செயற்பட வைப்பாராயின்>  சிலவேளைகளில் அதன் பெறுமதி மிகவுயர்ந்ததாயமைந்து விடவும் கூடும்.  இவ்வளவு காலமும் எந்தவொரு அரசியல் ராஜதந்திரப் பெறுமதிகளுமில்லாத> நிறுவனங்களாக எமது சர்வதேசத் தமிழ் நிறுவனங்களிருந்தன.  ஆனால் வடக்கு முதல்வரின் தலைமையில் உருவாகக் கூடிய அகில உலகத் தமிழ்க் கூட்டமைப்பு> ஆகக்  குறைந்தது (அல்லது கூடியது) நமக்கெனவுள்ளவோர் மாகாண அரசின் பக்கத்துணையோடு செயற்படக் கூடியது.  ஆதலால்  அது> சறுக்கி விழுத்தாத ரேஸ் குதிரையாய் எம் தமிழ்த் தேசியத்தை முன்னோக்கி எடுத்துச் செல்லுமென எதிர்பார்க்கலாம்.   முதல்வரின் நோக்கம் செயற்பட்டு, வெற்றியடைய வாழ்த்துகள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஓம் அண்ணா நானும் இதை முதலில் நம்பவில்லை. உண்மை தானாம். வெளிநாட்டு இலங்கை தமிழர்கள் ஈரானுக்கு அளித்துவருகின்ற மிகபெரும் ஆதரவை கவனத்தில் எடுத்து அவர்களை சந்தோசபடுத்துவதற்காக இவ்வளவு பிரச்சனைகளை மேற்குலகும் இஸ்ரேலும் தந்துகொண்டிருக்கின்ற   நேரத்திலும் இலங்கை சென்று அணைக்கட்டை திறந்துவிட வேண்டும் என்று முடிவு எடுத்திருப்பார்.
    • சன்ரைசர்ஸ் அணி ப‌ல‌ ஜ‌பிஎல்ல‌ சுத‌ப்பின‌து.................இந்த‌ ஜ‌பிஎல்ல‌ ந‌ல்லா விளையாடுகின‌ம்.................வ‌ஸ்சின்ட‌ன் சுந்த‌ருக்கு ஒரு விளையாட்டில் விளையாட‌ வாய்ப்பு கிடைச்ச‌து அதுக்கு பிற‌க்கு கூப்பில‌ உக்க‌ரா வைச்சிட்டின‌ம்...................ந‌ல்ல‌ சுழ‌ல் ப‌ந்து வீச்சாள‌ர் ம‌ற்றும் ஒரு நாள் தொட‌ர் ரெஸ் விளையாட்டி நிலைத்து நின்று ஆட‌க் கூடிய‌ இள‌ம் வீர‌ர்🙏🥰....................................    
    • வ‌ங்கிளாதேஸ்ச‌ சொந்த‌ ம‌ண்ணில் வெல்வ‌து க‌டின‌ம் ஆனால் 20 ஓவ‌ர் தொட‌ரில் இல‌ங்கை வெற்றி ஒரு நாள் தொட‌ரில் வ‌ங்க‌ளாதேஸ் வெற்றி 5நாள் தொட‌ரில் இல‌ங்கை அமோக‌ வெற்றி....................... இப்ப‌ எல்லாம் 5 நாள் விளையாட்டு சீக்கிர‌ம் முடிந்து விடுது  விளையாட்டு ச‌ம‌ நிலையில் முடிய‌னும் என்றால் ம‌ழை வ‌ந்தால் தான் இல்லையேன் ஏதோ ஒரு அணி வெல்லும் இதே 20வ‌ருட‌த்தை முன்னோக்கி பார்த்தா நிறைய‌ விளையாட்டு ச‌ம‌ நிலையில் முடியும்.....................20 ஓவ‌ர் வ‌ந்தாப் பிற‌க்கு ஜ‌ந்து நாள் விளையாட்டை கூட‌ 20ஓவ‌ர் விளையாட்டு போல் அடிச்சு ஆடுகின‌ம்😁.................................
    • சுனில் ந‌ர‌ன் இந்த‌ ஜ‌பிஎல்ல‌ ந‌ல்லா விளையாடுகிறார்🙏🥰.......................
    • வெற்றி பெற‌ வாழ்த்துக்க‌ள் மிஸ்ர‌ர் க‌ட்ட‌த்துரை🙏🥰...........................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.