Jump to content

காற்சட்டைகளைக் கழுவும்போது பைக்குள் காணப்படும் சில்லறை காசுகளைச் சேர்த்து வைத்து பயணச் செலவுக்குப் பயன்படுத்தி கொண்டேன் - 17 வயதில் காணாமல் போய் 26 வருடங்களின் பின்னர் வீடு திரும்பிய பத்மா குமாரி கூறுகிறார்


Recommended Posts

காற்சட்டைகளைக் கழுவும்போது பைக்குள் காணப்படும் சில்லறை காசுகளைச் சேர்த்து வைத்து பயணச் செலவுக்குப் பயன்படுத்தி கொண்டேன் - 17 வயதில் காணாமல் போய் 26 வருடங்களின் பின்னர் வீடு திரும்பிய பத்மா குமாரி கூறுகிறார்
 

(கம்­பளை நிருபர்)


21948DSC07511.jpg26 ஆண்­டு­க­ளுக்கு முன்னர் பெண் ஒருவர் காணா மல் போய் அவ­ருக்­காக உற­வி­னர்­களால் ஆத்ம சாந்தி கிரி­யை­களும் செய்து முடிக்­கப்­பட்­டி­ருந்தநிலையில் கடந்த புதன் கிழமை திடீ­ரென அவர் தனது வீட­டுக்கு வந்த சம்­பவம் தொடர்பில் நாம் கடந்த வெள்­ளிக்­ கி­ழமை செய்தி வெளி­யிட்­டி­ருந்தோம்.

 

இந்தச் சம்­பவம் தொடர்பில் மேலும் பல தக­வல்கள் தற்­போது கிடைத்­துள்ளன.

 

திரு­ம­ண­மாகி 3 மாதங்­களில் கணவன் சுட்டுக் கொலை!


நாட்டில் அசா­தா­ர­ண­ சூழல் நில­விய 1988 ஆம் ஆண்டு ஜே.வி.பி. கிளர்ச்சி காலப் பகு­தியில் அப்­போது 17 வய­தாக இருந்த பத்மா குமாரி என்ற குறித்த பெண் திரு­ம­ண­மாகி மூன்றே மாதங்­க­ளா­ன நிலையில் கண­வ­ருடன்  கோஹோ­மட கிரா­மத்தில் வசித்து வந்தபோது ஒரு நாள் நள்­ளி­ரவில் முக­மூடி அணிந்த மூவர் வீட்­டுக்குள் புகுந்து  குறித்த பெண்ணின் கண­வரை வெளியில் இழுத்துச் சென்று தேயிலை தோட்டம் ஒன்றில் வைத்து  துப்­பாக்­கியால் சுட்டுக் கொன்றனர்.

 

21948DSC07510.jpg

 

கண­வனின் உற­வி­னர்­களால் கொழும்பு வீட்டில் ஒப்­ப­டைப்பு


அதன்பின்னர் பத்மா குமாரி நாவ­லப்­பிட்­டிய பிர­தே­சத்­தைச் ­சேர்ந்த கண­வரின் பெரி­யம்­மாவின் மகள் குடும்­பத்­தி­னரால் கொழும்­புக்கு அழைத்து வரப்­பட்டு கொட்­டாவை பகு­தி­யைச்­சேர்ந்த குடும்பம் ஒன்­றிடம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டார்.

 

அதன்பின்னர் அக்­ கு­டும்­பத்­தினர் பத்மா குமா­ரியை வெளி­யு­லக தொடர்­பற்ற நிலையில் சம்­பளம் வழங்­காது வீட்­டுக்குள் சிறை வைத்தி­ருந்­த­னர். தொடர்ச்­சி­யாக வேலை வாங்­கப்­பட்டு வந்த நிலை­யி­லேயே சம்­பவ தினம் (18) வீட்டில் உள்­ள­வர்கள் அனை­வரும் நித்­தி­ரைக்குச் சென்­றதன் பின்னர் வீட்­டி­லி­ருந்து வெளி­யேறி தப்­பித்து வந்­துள்ளார்.

 

ஆண்­களின் காற்­சட்­டைக்­குள்­ளி­ருந்த சில்­லறைக் காசுகள் சேமிப்பு

 

இவர் அந்த வீட்டில் சிறை வைக்­கப்­பட்­டி­ருந்த காலப்­ப­கு­தியில் அங்­குள்ள ஆண்­களின் காற்சட்­டை­களை கழுவும் சம­யங்­களில் அதற்குள் தவறி விடப்­படும் சில்­லறைக் காசு­களை இர­க­சி­ய­மாக சேமித்து வைத்தே தப்பி வந்த சமயம் பயணச் செல­வுக்கு பயன்­ப­டுத்­தி­ய­தாக தெரி­வித்­துள்ளார்.  

 

21948DSC07516.jpg

 

கிராம சேவ­கர் வீட்­டுக்கு வந்தால் மறைத்து வைத்­தனர்


குறித்த வீட்­டில் பத்மா குமாரி சிறை வைக்­கப்­பட்­டி­ருந்த காலப் ­ப­கு­தியில் அவ்­ வீட்­டுக்கு கிராம உத்­தி­யோ­கஸ்தர் வரும் சந்­தர்ப்­பங்­களில் அவரை வீட்டில் உள்­ள­வர்கள் மறைத்து வைத்­திருந்தனர்.  

 

ஆத்­ம­சாந்தி கிரி­யைகள்


தற்­போது 43 வயதை எட்­டி­யுள்ள பத்மா குமாரி காணாமல் போயி­ருந்த காலப்­ப­கு­தியில் இவரின் உற­வி­னர்­களால் இவ­ருக்கு ஆத்ம சாந்தி கிரி­ையகள் செய்­யப்­பட்­டுள்­ள­துடன் கங்­க­ஹி­யல கோரல பிர­தேச செய­ல­கத்தின் ஊடாக காணாமல் போனோ­ருக்­கான நிவா­ர­ணமும் பெறப்­பட்­டுள்­ள­தோடு நாவலப் பிட்டி பொலிஸ் நிலையத் திலும் முறைப்பாடொன்றும் செய்யப்பட்டுள்ளமையும் குறிப் பிடத்தக்கது

 

இந்தப் பெண் வீடு திரும்பியதனையடுத்து சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நாவலப்பிட்டி பொலிஸார் மேற் கொண்டு வருகின்றனர்.

 

- See more at: http://www.metronews.lk/article.php?category=news&news=21948#sthash.LniB4GFk.dpuf
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.