Jump to content

உயிர் பிரிந்தால் அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும் : இன்று முதல் சாகும் வரையிலான உண்ணாவிரதம்


Recommended Posts

உயிர் பிரிந்தால் அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும் : இன்று முதல் சாகும் வரை­யி­லான உண்ணாவிரதம்

 

 

தமிழர் தாய­கத்தில் கைய­ளிக்­கப்­பட்டு கடத்­தப்­பட்டு காணாமல் ஆக்­கப்­பட்ட உற­வு­களை தேடிக் ­கண்­ட­றியும் குடும்­பங்­களின் சங்­கத்­தினர், நான்கு முக்­கிய கோரிக்­கை­களை வலி­யு­றுத்தி, சாகும் வரை­யி­லான உண்­ணா­வி­ரதப் போராட்­டத்தை நடத்­த­வுள்­ள­தாக  ஜனா­தி­பதி, பிர­தமர் மற்றும் எதிர்க்­கட்­சித் ­த­லைவர் ஆகி­யோ­ருக்கு கையொப்­ப­மிட்டு அறி­வு­றுத்தல் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்­துள்­ளனர். 

image-0-02-06-6f216959f2ea2e53d634cf544c

வவு­னி­யாவில் மாவீரன் பண்­டா­ர­வன்­னியன் உரு­வச்­சி­லைக்கு முன்­பாக இன்று திங்­கட்­கி­ழமை  காலை 8.00 மணி­யி­லி ருந்து சாகும் வரை­யி­லான உண்­ணா­விரதப் போராட்­டத்தை ஆரம்­பிக்­க­வுள்­ள­தாக குறித்த சங்­கத்தின் வவு­னியா மாவட்­டத்­த­லைவி ஜெய­வ­னிதா காசிப்­பிள்ளை அறி­வித்­துள்ளார். 

image-0-02-06-fdb9c0a94169d565076eb1a0eb

குறித்த கடி­தத்தின் முழு­வி­பரமும் வரு­மாறு:

சாகும் வரை­யி­லான உண்­ணா­வி­ரதப் போராட்­டத்தில் ஈடு­ப­ட­வுள்ள எமது இறுதி முடிவை தங்­க­ளுக்கு அறி­யப்­ப­டுத்தல் தொடர்­பாக,

தமிழர் தாய­கத்தில் கைய­ளிக்­கப்­பட்டு கடத்­தப்­பட்டு காணாமல் ஆக்­கப்­பட்ட உற­வு­களை தேடிக் ­கண்­ட­றியும் குடும்­பங்­களின் சங்­கத்­தி­ன­ரா­கிய நாங்கள், ஸ்ரீ லங்கா அரச படைகள் மற்றும் அரச துணை ஆயு­த­க் கு­ழுக்­களால் எமது உற­வுகள் கடத்­திச் ­செல்­லப்­பட்­ட­மையை கண்­கண்ட சாட்­சி­க­ளாக உள்ளோம். 

அர­சினால் நிய­மிக்­கப்­பட்ட பல­த­ரப்­பட்ட ஆணை­க்கு­ழுக்கள், உள்ளூர் மற்றும் சர்­வதே மனித உரிமை அமைப்­புகள், ஜனா­தி­பதி, பிர­தமர், எதிர்க் ­கட்­சித் ­த­லைவர், தமிழ் மக்­களின் அர­சியல் அதி­காரம் பெற்­றுள்ள தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பு, சர்­வ­தேச சமூகம் என்று சகல தரப்­பு­க­ளி­டமும் முறை­யிட்டும், வரு­டங்கள் பல கடந்த நிலை­யிலும் எமது உற­வி­னர்கள் விடு­விக்­கப்­ப­ட­வில்லை. 

இந்­த­ நி­லையில், சாத்­வீக ரீதி­யாக சகல கவ­ன­யீர்ப்பு மற்றும் அழுத்த போராட்­டங்­களை நடத்­தியும், எமது உற­வி­னர்கள் தொடர்பில் உரிய தீர்வு எமக்கு வழங்­கப்­ப­ட­வில்லை. ஆகவே வேறு ­வ­ழி­யின்றி பின்­வரும் கோரிக்­கை­களை வலி­யு­றுத்தி எதிர்­வரும் 23.01.2017 திங்­கட்கி­ழமை அன்று காலை 8.00 மணி­யி­லி­ருந்து சாகும் வரை­யி­லான உண்­ணா­வி­ரதப் போராட்­டத்­தினை முன்­னெ­டுப்­பதை தங்­க­ளுக்கு அறி­யத் ­த­ரு­கின்றோம். 

image-0-02-06-20b4ae25e8150785623dcae1f2

01. எமது உற­வுகள் உயி­ருடன் இருக்­கி­றார்­களா? இல்­லையா? 

02. உயி­ருடன் இருந்தால், அவர்கள் எந்த இர­க­சிய சித்­தி­ர­வதை முகாம்­களில் தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ளார்கள்? 

03. உயி­ருடன் இல்­லா­விட்டால், அவர்­க­ளுக்கு என்ன நடந்­தது? யாரால்? எப்­படி? கொலை­ செய்­யப்­பட்டு, எங்கே புதைக்­கப்­பட்­டுள்­ளார்கள்? என்­ப­வற்றை நாட்டு மக்­க­ளுக்கு பகி­ரங்­கப்­ப­டுத்த வேண்டும். 

04. கடத்­தப்­பட்டு காணாமல் ஆக்­கப்­பட்­டுள்ள எமது உற­வுகள் உயி­ரோடு இருப்பின், அவர்கள் தத்­த­மது குடும்­பத்­தி­ன­ரோடு இணைந்து வாழ்­வ­தற்கு உட­ன­டி­யாக வழி விடு­வ­தோடு, சகல அர­சியல் கைதி­க­ளையும் விடு­தலை செய்ய வேண்டும். 

குறித்த எமது கோரிக்கைகள் அனைத்தும் நிபந்தனைகள் ஏதுமின்றி தங்களால் நிறை வேற்றப்படும் வரை சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தவுள் ளோம். நாங்கள் உயிர் இழந்தால் அதற்குரிய முழுப்பொறுப்பையும் ஜனாதிபதி,பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோரே ஏற்றுக்

கொள்ள வேண்டும் என்பதையும் தெரியப் படுத்துகின்றோம்.

http://www.virakesari.lk/

Link to comment
Share on other sites

உண்ணாவிரதம் மேற்கொண்டவர்களை வெளியேற்ற பொலிசார் மேற்கொண்ட நடவடிக்கை தோல்வி


வவுனியாவில் காணாமற்போன உறவுகள் மேற்கொண்டுவரும் உண்ணாவிரதப் போராட்டத்தை கலைக்க முயன்ற பொலிஸாரின் நடவடிக்கைகள்  தோல்வியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
unnamed-_35_.jpgவவுனியா தபால் நிலையத்திற்கு அருகில் இன்று காலை உண்ணாவிரதம் மேற்கொண்டுவரும் காணாமற்போன உறவுகளை அவ்விடத்திற்கு வந்த வவுனியா பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி நடைபாதையில் அமர்ந்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்த வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.“இந்நிலையில், அவ்விடத்தில் உண்ணாவிரதம் இருப்பவர்களால் போடப்பட்ட கொட்டகையையும் அகற்றுமாறும் அல்லது நகரசபை செயலாளரிடத்தில் அனுமதி பெறுமாறு அறிவுறுத்தப்பட்டது.unnamed-_36_.jpgஇதையடுத்து அப்பகுதிக்குச் சென்ற வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வடமாகாண சபை உறுப்பினர் செ.மயூரன் பொலிசாருடன் கலந்துரையாடியும் பொலிசார் அனுமதியளிக்கவில்லை. பின்னர் நகரசபை செயலாளரை சம்பவ இடத்திற்கு அழைத்து பொலிசாருடன் கலந்துரையாடப்பட்டதுடன் பாராளுமன்ற உறுப்பினர், உண்ணாவிரதம் மேற்கொண்டு வருபவர்களினால் இடையூறு ஏற்பட்டால் தான் பொறுப்பேற்பதாகவும் பொலிசாருக்கு வாக்குறுதியளிக்கப்பட்டது. நகரசபை செயலாளர் அனுமதியளித்துள்ளபோதும் பொலிசாரிடமிருந்து சாதகமான பதில் கிடைக்கவில்லை. எனினும் கொட்டகை அமைக்கும் பணி இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/

Link to comment
Share on other sites

சர்வாதிகாரமாக நடந்துகொண்டு பிறந்தநாள் கொண்டாடும் தமிழரசுக் கட்சியினருக்கும் பொறுப்பு இருக்கு!

Link to comment
Share on other sites

உறவுகளுக்காக....
 
23-01-2017 03:54 PM
Comments - 0       Views - 34

article_1485167188-protest-%288%29.jpg

காணாமல் போனோரின் உறவினர்கள், சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தினை வவுனியாவில்  ஆரம்பித்துள்ளனர்.

article_1485167219-protest-%281%29.jpg

article_1485167231-protest-%282%29.jpg

article_1485167260-protest-%283%29.jpg

article_1485167271-protest-%284%29.jpg

article_1485167279-protest-%285%29.jpg

article_1485167287-protest-%286%29.jpg

article_1485167295-protest-%287%29.jpg

article_1485167305-protest-%289%29.jpg

(க.அகரன், ரொமேஸ் மதுசங்க)

- See more at: http://www.tamilmirror.lk/190197/உறவ-கள-க-க-க-#sthash.7bawgmJs.dpuf
Link to comment
Share on other sites

சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் குதிப்பு

01-25a3b98e37d31ee9e8d1d5026ce1d06490261a9f.jpg

 

உயிர் பிரிந்தால் அரசாங்கமே பொறுப்பு எனவும் வலியுறுத்தல்
ஓமந்தை,

காணாமல் போனோரின் உற­வி­னர்கள் நேற்று முதல் வவு­னி­யாவில் சாகும் வரை­யி­லான உண்­ணா­வி­ர­தப்­போ­ராட்­டத்­தினை ஆரம்­பித்­துள்­ளனர்.

காணாமல் ஆக்­கப்­பட்டோர் தொடர்­பான நிலைப்­பாட்டை அறி­விக்கவேண்டும்; அர­சியல் கைதிகள் விடு­தலை செய்­யப்­ப­ட­வேண்டும் உட்­பட 4 அம்சக் கோரிக்­கை­களை முன்­வைத்தே இவர்கள் இந்தப் போராட்­டத்தை ஆரம்­பித்­துள்­ளனர்.

வவு­னியா கந்­த­சாமி கோவிலில் நேற்று காலை 9.30 மணி­ய­ளவில் வழி­பா­டு­களை நடத்­திய காணாமல்

போனோர்­க­ளது உற­வி­னர்கள் தேங்காய் உடைத்து வழி­பட்­டதன் பின்னர் ஊர்­வ­ல­மாக வவு­னியா பிர­தான தபா­ல­கத்­திற்கு முன்­பாக வருகை தந்து தமது உண்­ணா­வி­ர­தப்­போ­ராட்­டத்­தினை ஆரம்­பித்­தனர்.

தமது கோரிக்கை நிறை­வேற்­றப்­படும் வரை உண்­ணா­வி­ரத போராட்­டத்தை கைவிடப் போவ­தில்லை என்றும் போராட்­டத்தில் உயிர்கள் பிரிந்தால் அதற்கு அர­சாங்­கமே பொறுப்­பேற்க வேண்­டு­மென்றும் போராட்­டத்தில் ஈடு­பட்­டுள்­ள­வர்கள் தெரி­வித்­துள்­ளனர்.

இந்த நிலையில் போராட்­டத்தில் ஈடு­பட்­ட­வர்கள் மழை மற்றும் வெயிலை கருத்தில் கொண்டு கொட்­டகை அமைக்க முற்­பட்­ட­போது பொலி­ஸா­ரினால் தடை விதிக்­கப்­பட்­டது.

இத­னை­ய­டுத்து அவ்­வி­டத்­திற்கு வருகை தநத வன்னி மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சிவ­சக்தி ஆனந்தன் மற்றும் வட மகா­ண­சபை உறுப்­பினர் செ. மயூரன் ஆகியோர் பொலி­ஸா­ருடன் கலந்­து­ரை­யா­டி­ய­போ­திலும் அவர்கள் நக­ர­சபை செய­லாளர் அனு­ம­தி­ய­ளித்தால் மாத்­தி­ரமே தாங்கள் அனு­ம­திக்க முடியும் என தெரி­வித்­தனர்.

இந் நிலையில் நக­ர­சபை செய­லா­ளரை அவ்­வி­டத்­திற்கு வரு­மாறு கூறிய வன்னி மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சிவ­சக்தி ஆனந்தன் நிலை­மையை எடுத்­தி­யம்­பி­ய­துடன் கொட்­ட­கையின் அவ­சி­யத்­தி­னையும் வலி­யு­றுத்­தினார்.

இத­னை­ய­டுத்து செய­லாளர் காணாமல் போனோரின் உண்­ணா­வி­ர­தப்­போ­ராட்டம் என்­ப­தனை அறிந்­த­துடன் கொட்­டகை அமைப்­தற்கும் அனு­ம­தி­ய­ளித்­தி­ருந்தார்.

இந்த உண்ணா விரத போராட்­டத்தில் வன்னி பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சிவ­சக்தி ஆனந்தன், வட மாகா­ண­சபை உறுப்­பினர் செ. மயூரன், முச்­சக்­க­ர­வண்டி உரி­மை­யாளர் சங்­கத்­தினர், மாக்­ஸிஸ லெனி­னிச கட்­சியின் அமைப்­பாளர் பிர­தீபன், ஈழ­மக்கள் புரட்­ச­க­ர­வி­டு­தலை முன்­ன­ணியின் உறுப்­பி­னர்கள், பொது அமைப்­பு­களின் பிர­தி­நி­திகள், முன்னாள் பிர­தேச சபை உறுப்­பினர் சிவம் ஆகி­யோரும் கலந்து கொண்டு ஆத­ரவு தெரி­வித்­தி­ருந்­தனர்.

இதே­வேளை வவு­னியா மாவட்­டத்தைச் சேர்ந்த காணாமல் போனோ­ரது உற­வி­னர்கள் மேற்­கொண்டு வரும் சாகும் வரை­யி­லான உண்­ணா­வி­ரத போராட்­டத்­திற்கு ஆத­ரவு தெரி­வி்த்து திரு­கோ­ண­ம­லை­யிலும் காணாமல் போனோ­ரது உற­வி­னர்கள் நேற்று அடை­யாள உண்ணா விர­தத்தில் ஈடு­பட்­டனர். திரு­கோ­ண­ம­லை­யி­லுள்ள கிழக்கு மாகாண ஆளுநர் அலு­வ­லக்­துக்கு முன்­பாக இடம்­பெற்ற இந்த போராட்­டத்தில் பெரு­ம­ள­வானோர் கலந்­து­கொண்­டனர்.

சம்­பந்தன் அளுத்தம்

கொடுக்க வேண்டும்

வவு­னி­யாவில் நேற்று ஆரம்­ப­மான காணாமல் போனோ­ரது உற­வி­னர்­களின் உண்ணா விரத போராட்­டத்தில் பங்­கேற்ற ஆத­ரவு தெரி­வித்த வன்னி மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் காணாமல் போனோரின் நிலை அறிய கூட்­ட­மைப்பின் தலைவர் இரா சம்­பந்தன் அழுத்தம் கொடுக்க வேண்­டு­மென்று கோரிக்கை விடுத்தார்.

இது குறித்து அவர மேலும் கருத்து தெரி­விக்­கையில் கூறி­ய­தா­வது,

காணாமல் போனோரின் உற­வுகள் கால­வ­ரை­ய­றை­யற்ற உணவு தவிர்ப்பு போராட்டம் ஒன்றை மேற்­கொண்­டுள்­ளார்கள். இவர்­க­ளுக்கு ஆத­ர­வாக வடக்கு. கிழக்கு பகு­தி­களில் உள்ள காணாமல் போன­வர்­களின் உற­வு­களும் இந்த போராட்­டத்தை முன்­னெ­டுத்­துள்­ளார்கள். காணாமல் போன­வர்­களின் உற­வுகள் கடந்த 7 வரு­டங்­க­ளாக தமது பிள்­ளைகள், உற­வு­களை மீட்­டுத்­த­ரும்­படி வடக்கு, கிழக்கு, தெற்கு என பல போராட்­டங்­களை நடத்­தி­யி­ருந்­தார்கள். இதற்கு அப்பால் பல்­வேறு பட்ட இடங்­களில் தமது பிள்­ளை­களை கண்டு பிடித்து தரு­மாறு பதி­வு­களை செய்­துள்­ளார்கள். ஜனா­தி­பதி ஆணைக்­குழு, பொலிஸ், இரா­ணுவம், மனித உரிமை ஆணைக்­குழு, செஞ்­சி­லுவைச் சங்கம் என ஒவ்­வொ­ரு­வரும் கிட்­டத்­தட்ட 10இற்கும் மேற்­பட்ட இடங்­களில் பதி­வு­களை மேற்­கொண்­டுள்­ளார்கள்.

வடக்கு, கிழக்கு, தெற்கு என ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழவில் 24 ஆயி­ரத்­திற்கு மேற்­பட்­ட­வர்கள் காணாமல் போகச் செய்­யப்­பட்­ட­தாக பதிவு செய்­யப்­பட்­டுள்­ளது. அதிலும் தமிழ் பேசும் மக்கள் என்று பார்த்தால் 19 ஆயி­ரத்­திற்கு மேற்­பட்­ட­வர்கள் காணாமல் போகச் செய்­யப்­பட்­டுள்­ளார்கள். கடந்த ஆட்சிக் காலத்தில் காணாமல் போகச் செய்­யப்­பட்­ட­வர்கள் தொடர்பில் ஓமந்தை முகா­மிலும், செட்­டி­குளம் முகா­மிலும் பதி­வுகள் இருந்­தன.

2015 ஆம் ஆண்­டுக்கு பின்னர் புதிய அர­சாங்கம் வந்­துள்­ளது. புதிய பிர­தமர், புதிய பாது­காப்பு செய­லாளர் வந்து இரண்டு வரு­டங்கள் ஆகி­விட்­டது. இதில் கூட இந்த காணாமல் போகச் செய்­யப்­பட்­ட­வர்கள் இருக்­கின்­றார்­களா, இல்­லையா என ஒழுங்கு முறையில் கூற முடி­யாது இருக்­கின்­றது. 2015 ஆம் ஆண்டு ஐ.நா மனித உரிமை பேர­வையில் இலங்கை அர­சாங்­கமும், ஐ.நாவும் இணைந்து ஒரு தீர்­மானம் நிறை­வேற்­றி­யி­ருந்­தது. குறிப்­பாக போர்க்­கா­லத்தில் காணாமல் போன­வர்கள் தொடர்பில் முறை­யான விசா­ரணை மேற்­கொள்­ளப்­ப­கட வேண்டும், பங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தை நீக்க வேண்டும், மக்­களின் காணிகள் ஒப்­ப­டைக்க வேண்டும், இலங்­கையின் இனப்­பி­ரச்­ச­னைக்கு நிரந்­த­ர­மான அர­சியல் தீர்வு கொண்டு வரப்­பட வேண்டும் என தீர்­மா­னங்கள் நிறை­வேற்­றப்­பட்­டன. இது எத­னை­யுமே இந்த அர­சாங்கம் நரை­ட­மு­றைப்­ப­டுத்­த­வில்லை.

ஒன்­றரை வரு­டங்கள் கடந்தும் காணாமல் போனோர் தொடர்­பான ஒரு அலு­வ­ல­கத்தை திறக்க முடி­யா­த­நி­லையில் அர­சாங்கம் உள்­ளது. காணாமல் போனோர் தொடர்பில் நிய­மிக்­கப்­பட்ட ஆணைக்­கு­ழுவின் அறிக்­கையைக் கூட ஜனா­தி­ப­தியோ, பிர­த­மரோ, முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிக்­காவே முழு­மை­யாக நடை­மு­றைப்­ப­டுத்த மாட்டோம் எனக் கூறு­கின்ற நிலமை தான் இருக்­கி­றது. இந்த நிலையில் இந்த மக்கள் ஒரு விரக்­கி­தியின் விழிம்பில் தள்­ளப்­பட்­டுள்­ளார்கள். 7 வருட போராட்­டங்கள் மூலம் எது­வுமே நிறை­வே­றாத நிலையில் தான் இந்த சாகும் வரை­யி­லான போராட்­டத்தை முன்­னெ­டுத்­துள்­ளார்கள்.

ஆட்சி மாற்­றத்­திற்­காக இந்த நல்­லாட்சி அர­சாங்­கத்­திற்கும், கடந்த பாரா­ளு­மன்ற மற்றும் மாகா­ண­சபைத் தேர்­தல்­களில் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்­புக்கும் வாக்­க­ளித்த இம் மக்­க­ளது நியா­ய­மான இந்த போராட்­டத்­திற்கு பதில் வழங்க வேண்­டிய பொறுப்பு அனை­வ­ருக்கும் இருக்­கி­றது. குறிப்­பாக ஐ.நா மனித உரி­மைகள் பேர­வையும், இலங்கை அர­சாங்­கமும் இணைந்து எடுத்த தீர்­மா­னத்தை நடை­மு­றைப்­ப­டுத்தும் படி வலி­யு­றுத்த வேண்­டிய பாரிய பொறுப்பு தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைவர் சம்­மந்தன் ஐயா அவர்­க­ளுக்கும் இருக்­கி­றது. ஆகவே இந்தப் பொறுப்­புக்­களில் இருந்து நாங்கள் விலக முடி­யாது. இந்த நல்­லாட்சி அர­சாங்­கத்­தையும், தமிழ் தேசியக் கூட்­ட­மைப்­பையும் நம்பி வாக்­க­ளித்த இம் மக்­க­ளுக்கு இந்த அர­சாங்கம் வந்து இரண்டு வருடம் கழிந்தும் அவர்கள் இருக்­கின்­றார்­களா, இல்­லையா என அர­சாங்­கத்­துடன் பேசி ஒரு தீர்வை எடுத்துக் கொடுக்க முடி­யாத நிலையில் தான் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு இருக்­கி­றது.

ஆகவே, ஒரு பாராதூரமான நிலமைக்கு இந்த மக்கள் தள்ளப்பட்டுள்ளார்கள். இவர்களுக்கு ஏதாவது நெருக்கடிகள், உயிராபத்துக்கள் ஏற்படுமாக இருந்தால் அதற்கான பொறுப்புக்களை அனைவரும் ஏற்க வேண்டியுள்ளது. குறிப்பாக ஜனாதிபதி, பிரதமர், கூட்டமைப்பின் தலைவர் சம்மந்தன் உள்ளிட்ட நாங்கள் அனைவுரம் பொறுப்பு சொல்ல வேண்டியுள்ளது. இந்த அரசாங்கம் காணாமல் போனவர்கள் இருக்கின்றார்களா, இல்லையா எனக் கூற வேண்டும். மஹிந்த காலத்தில் காணாமல் போனவர்கள் இல்லை என்றால் அவர்களுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் விசாரணை நடத்த வேண்டும். இதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் தொடர்ந்தும் அழுத்தம் கொடுக்க வேண்டும். நாம் அது தொடர்பில் தொடர்ந்தும் பேசுவோம் என்றார்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-01-24#page-1

பிள்ளைகள் இல்லையேல் மரணம் எம்மை அணைக்கும்

SP14-d691c9c705b2246d3bb444153c31d50a5e18a1b1.jpg

 

ஓமந்தை,

எமது பிள்­ளை ­களை எம்­முடன் இணைக்க அர­சா ங்கம் நட­வ­டிக்கை எடுக்­க­வேண்டும் இல்­லையேல் இந்த இறுதிப் போராட்­டத்தில் மரணம் எங்­களை அணைத்­துக்­கொள்ளும் என தமிழர் தாய­கத்தில் கைய­ளிக்­கப்­பட்டு, கடத்­தப்­பட்டு, காணாமல் ஆக்­கப்­பட்ட உற­வு­களை தேடிக் கண்­ட­றியும் குடும்­பங்­களின் சங்­கத் ­த­லைவி கா. ஜெய­வ­னிதா தெரிவித்தார். வவு­னி­யாவில் நேற்று ஆரம்­பிக்­கப்­பட்ட சாகும் வரை­யி­லான உண்­ணா­வி­ரத்தில் பங்கேற்றிருந்த அவ­ரிடம் உண்­ணா­வி­ரத்தின் நோக்கம் தொடர்­பாக கேட்­ட­போதே அவர் இவ்­வாறு தெரிவித்தார். 

கடந்த 7 ஆண்டு கால­மாக பிள்­ளை­களை காணாமல் நாம் அலைந்து திரி­கின்றோம். இவ்­வி­டயம் தொடர்­பாக அமைச்­சர்கள், ஜனா­தி­பதி, பிர­தமர், எதிர்க்­கட்­சித்­த­லைவர் உட்­பட பல­ருடன் கதைத்தும் எவ்­வித பலனும் கிடைக்­க­வில்லை.

எங்­க­ளு­டைய காணாமல் போன பிள்­ளைகள் தொடர்­பான தக­வல்­களை வெளியி­ட­வேண்டும். அவர்கள் இர­க­சிய முகாம்­களில் இருந்தால் முகாம்­களில் உள்­ளார்கள் என்­பது தொடர்பில் கூற­வேண்டும். நாம் இர­க­சிய முகாம்கள் தொடர்­பாக தக­வலை பெற்­று­தெரி­வித்தால் மறு­நாளே அந்த முகாமை மாற்­றி­ய­மைக்­கின்­றனர். பின்னர் அம்­மு­காமை வெளிநாட்­ட­வர்­களின் சுற்­றுலா தளம் போல் வெளிநாட்டு பிர­தி­நி­தி­களை காட்ட கூட்­டிச்­செல்­கின்­றனர்.

அர­சியல் கைதிகள் விட­யத்­திலும் எவ்­வித முன்­னேற்­றமும் இல்லை. தங்­க­ளது பெரும்­பான்­மை­யி­னரை பொங்கல், வரு­டப்­பி­றப்பு, நத்தார் என்று சிறையில் இருந்து விடு­தலை செய்­கின்­றனர். ஆனால் சிறு­பான்­மை­யி­னரின் பிள்­ளை­களை மாத்­திரம் விடு­வ­தற்கு பல கார­ணங்­களை கூறு­கின்­றனர்.

எதற்­காக இன்றும் அவர்­களை அர­சியல் கைதி­க­ளாக வைத்­துள்­ளீர்கள். கார­ண­மின்றி இன்றும் அவர்­களை பல ஆண்­டு­க­ளாக சிறையில் வைத்­துள்­ளனர். எனவே எந்­த­வித நிபந்­த­னையும் இன்றி அர­சியல் கைதி­களை விடு­தலை செய்­ய­வேண்டும்.

அடுத்து எங்கள் காணாமல் போன பிள்­ளைகள் உயி­ருடன் இருக்­கின்­றார்­களா இல்­லையா என்­ப­தனை கூற­வேண்டும். எங்கள் பிள்­ளைகள் உயி­ருடன் இல்­லா­விட்டால் அவர்­க­ளுக்கு என்ன நடந்­தது. இல்­லா­விட்டால் யாரால் எப்­போது எப்­படி படு­கொலை செய்­யப்­பட்­டனர் எங்கே புதைக்­கப்­பட்­டனர் என்­ப­தனை எங்­க­ளுக்கு அறி­யத்­த­ர­வேண்டும். உயி­ருடன் இருக்கும் பட்­ச­ததில் அவர்கள் தத்­த­மது உற­வி­னர்­க­ளுடன் இணைந்து வாழ ஏற்­பா­டு­களை செய்­ய­வேண்டும் என்­ப­த­னையே நாம் கோரி நிற்­கின்றோம்.

இந்த கோரிக்­கைகள் புதி­யவை அல்ல. பல ஆண்­டு­க­ளாக நாம் இத­னையே கோரு­கின்றோம். எனினும் எந்த பலனும் கிடைக்க்ாத நிலையிலேயே நாங்கள் வடக்கு கிழக்கில் உள்ள காணாமல் போனோரின் உறவினர்களை இணைத்து சாகும் வரையிலான போராட்டத்தினை ஆரம்பித்துள்ளோம். இதுவே எங்களது இறுதி முடிவு. இதில் எமக்கு முடிவு கிடைக்கவேண்டும். இல்லையேல் மரணம் எம்மை அழைக்கும் என தெரிவித்தார்.

Link to comment
Share on other sites

இரண்டாவது நாளாக தொடரும் உண்ணாவிரதப் போராட்டம்
 
24-01-2017 11:23 AM
Comments - 0       Views - 10

article_1485237478-2.jpg

-க.அகரன்

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டம், இன்று இரண்டாம் நாளாகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

article_1485237505-4.jpg

வவுனியா, பிரதான தபாலகத்துக்கு முன்பாக அமைக்கப்பட்டுள்ள பிரத்தியேக மேடையில் இந்த உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

 

- See more at: http://www.tamilmirror.lk/190265/இரண-ட-வத-ந-ள-க-த-டர-ம-உண-ண-வ-ரதப-ப-ர-ட-டம-#sthash.FT0a0Orv.dpuf
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • திமுகாவில் ஒரு  it குருப் இருக்கு அதன் முக்கிய வேலையே திமுகாவை பற்றி இல்லாத பொல்லாத  செய்தியை சொல்லி dmk எதிரானவர்களின் நட்பை அனுதாபத்தை பெற்று கொள்வது .
    • தமிழ்மக்கள் 60 வருசத்துக்கு மேலாக தூர நோக்கோடுதான் வாக்களித்துக்கொண்டிருக்கிறார்கள். இதில் கொடுமை என்னவென்றால் அந்த தூர நோக்கு தனது எல்லையை தொடவில்லை. தொடுவதற்கான அறிகுறியும் கண்ணுக்கெட்டிய தூரம் வரை தெரியவில்லை.
    • பாவம் சிரித்திரன் சுந்தர்.  கல்லறைக்குள் இருந்து நெளிவார் என நினைக்கிறேன். 
    • இதென்ன பிரமாதம்…. நான் ஒரு முடா குடியன் எண்டும்…லண்டனில் ஹரோ பகுதி பப் ஒன்றில் வெறியில் அரசியல் கதைக்கும் ஆள் நான் தான் என்று சத்தியம் செய்ததோடு… அந்த நபரோடு டெலிபோன் தொடர்பை ஏற்படுத்தி…அவரும் ஓம் நான் கோஷாந்தான் என சொல்லி…. இவரை ஒரு சில மாதம் ஓட்டு…ஓட்டு எண்டு ஓட்டி🤣. இன்னும் அந்த மனுசன் இவரை உசுபேத்தி கொண்டு இருக்கோ தெரியாது🤣.   கேட்டா எண்ட சாதகம் மோகனிடம் இருக்கு, நிழலிட்ட இருக்கு என்பார். அந்த தகவலை அவர்கள் தந்தாலும்…அதை வச்சு நான் என்ன செய்யலாம்? கலியாணம் பேசவோ🤣
    • 28 MAR, 2024 | 11:04 AM   நியூமோனியாவினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 59 வயதுடைய நபரொருவரின் சடலத்தில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின் போது அவரது நுரையீரலில் காணப்பட்ட பல் ஒன்று பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் பல வருட காலமாக நியூமோனியா மற்றும் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டிருந்ததாக வைத்தியர்கள் தெரிவித்தனர். பலாங்கொடை ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியினால் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின்போதே இந்த பல் கண்டுபிடிக்கப்பட்டதாக பலாங்கொடை ஆதார வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி பத்மேந்திர விஜேதிலக தெரிவித்தார். பலாங்கொடை - பின்னவலை பிரதேசத்தை சேர்ந்த எஸ் . கருணாரத்ன என்பவரின் நுரையீரலில் இருந்தே இவ்வாறு பல் கண்டுப்பிடிகக்ப்பட்டுள்ளது. இவர் மதுபானத்துக்கு அடியானவர் என்பதுடன் நியூமோனியா நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்தனர். சில வருடங்களுக்கு முன்னர் இவரது பல் ஒன்று உடைந்துள்ள நிலையில், அந்த பல் நுரையீரலில் சிக்கியிருக்கலாம் என வைத்தியர்கள் சந்தேகிக்கின்றனர். https://www.virakesari.lk/article/179883
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.