Jump to content

தடையை மீறி ஜல்லிக்கட்டு..! கூகுள் வரைக்கும் சென்ற போராட்டம்..! இரவு அரங்கேறிய நிகழ்ச்சிகள்..!


Recommended Posts

மெரினாவில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் இரவு பகலாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கூகுள் மேப்ஸ் மூலம் ட்ராபிக் மற்றும் அங்குள்ள கூட்டத்தை கணக்கிட முடியும்.

அதன்படி தற்போது கூகுள் மேப்ஸ் சென்று பார்த்தால் மெரினாவில் குவிந்துள்ள போராட்டக்காரர்களின் வலிமையை படம் போட்டு காட்டுகிறது கூகுள் மேப்ஸ்.

2009-ம் ஆண்டு கூகுள் நிறுவனம் Crowd sourcing என்று கூறப்படும் தொழில்நுட்பத்திற்கு மாறியது. அதாவது மக்களிடமிருந்தே தகவலை பெற்று அதனை சீர் செய்து மக்களுக்கே திரும்பி அளிக்கும் முறை. இதற்கு முதல் தேவை மக்களின் மொபைல் போனில் “லொக்கேஷன்” வசதி ஆன் செய்திருக்க வேண்டும்.

இதன் மூலம் நீங்கள் எங்கு இருக்குறீர்கள், எந்த வேகத்தில் நகர்கிறீர்கள் என்பது குறித்த தகவல் கூகுளை சென்றடையும். அது மட்டுமின்றி ஒரே இடத்திலிருந்து பல வாகனங்களின் லொக்கேஷன் வந்து சேருமாயின் அந்த இடத்தில் எத்தனை வாகனங்கள் இருக்கின்றன, என்ன வேகத்தில் நகர்கின்றன என்ற தகவல்களை கூகுள் எளிதாக பெறும்.

நீங்களும், உங்கள் முன்னால் இருக்கும் வாகனமும், அதற்கு முன்னால் இருக்கும் வாகனமும் என பல பேர் ஒரே நேரத்தில் தகவல்களை பகிர்வீர்கள். இது மட்டுமின்றி மெதுவாக அனைத்து வாகனமும் நகர்வது போக்குவரத்து நெரிசலை குறிக்கும். இங்கே கூகுள் நிறுவனம் செய்யும் வேலை என்னவென்றால், எத்தனை வாகனங்கள் இருக்கின்றன, எவ்வாறு நகர்கின்றன என்பதனை வைத்து போக்குவரத்து நெரிசலில்லை, சிறிய அளவு நெரிசல், மிக நெரிசல் என கணக்கிடுவது தான்.

இந்த முறையில் தான் கூகுள் மெரினாவின் கூட்டத்தையும் காட்டுகிறது. போராட்டத்தில் இருக்கும் நபர்களில் 90 சதவிகிதம் பேர் ஸ்மார்ட்போன் பயன்பாட்டாளர்கள். ஈஸியாக மக்கள் கூட்டத்தை காட்டுகிறது.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

அத்துடன் நேற்று மெரினா கடற்கரையில் இளைஞர்கள் குளிரினை போக்க கபடி விளையாடியடினார்கள். அத்துடன் கடற்கரையில் ஓரமாக நெருப்பினை மூட்டி ஜல்லிக்கட்டு கானா பாடல்களையும் பாடியமை அங்குள்ளவர்களை கவர்ந்திருந்தது.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

அதுமட்டுமல்லாமல் அங்கு தொலைபேசிகளுக்கு இலவசமாக மின்சார வசதிகள் சில தரப்பினரால் செய்து கொடுக்கப்பட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

கடந்த சில தினங்களுக்கு முன்னர் அறிவித்ததன் படி கிடாரிப்பட்டியில் ஜல்லிக்கட்டினை நடத்தியுள்ளார் சீமான்.

அத்துடன் சீமான் அலங்காநல்லூரில் நடத்துவேன் என்று 17 ஆம் திகதி அவர் கூறியிருந்ததால் காவல்துறை அங்கு விழிப்பாக இருந்தனர்.

அவர்களின் கவனத்தை திருப்பிவிட்டு, இன்று காலை மேலூர் அருகே கிடாரிப்பட்டியில் மலைகளுக்கு இடையே உள்ள பகுதியில் ஜல்லிக்கட்டை நடத்திவிட்டார் சீமான்.

 

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

http://www.tamilwin.com/india/01/132579?ref=youmaylike1

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.