Jump to content

கேப்சி (KFC) உணவிலிருந்த அருவறுக்கதக்க பொருள்: அதிர்ச்சியில் உறைந்த காதலர்கள்


Recommended Posts

13151.jpg
 

பிரித்தானியாவில் கேப்சி உணவில் அருவறுக்கதக்க பொருள் இருந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜோர்டான் சிம்ப்சன் என்ற 22 வயது இளைஞன் தனது காதலி ஷெர்லியுடன் Suffolk, Ipswich பகுதியில் உள்ள கேப்சி உணவக கிளைக்கு சென்றுள்ளார்.

இருவரும் ஆர்டர் செய்த உணவை சாப்பிட்டுக்கொண்டிருந்த போது உணவில் அலகுடன் கோழி மண்டையோடு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதுகுறித்து ஜோர்டான் சிம்ப்சன், என் தாத்தா பறவை ஆர்வலர் அவரிடம் அந்த பாகத்தை கொடுத்து சோதனை செய்தோம். அதில், அது அலகுடனான கோழியின் மண்டையோடு என உறுதியானது.

இது மிகவும் அருவறுக்கதக்க விடயம். இதன் மூலம் உணவகத்தின் தரத்தை நான் உணர்ந்துள்ளேன். இனி குறித்த கிளை மட்டுமின்றி எந்தவொரு கேப்சி உணவகத்திலும் சாப்பிடமாட்டேன் என முடிவு செய்துள்ளளேன் என தெரிவித்துள்ளார்.

http://www.valampurii.lk/valampurii/content.php?id=13151&ctype=news

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

KFC எனக்கு பிடித்தமானது இல்லை எனினும், இது போன்ற பல செய்திகளை கேள்விப் படுகிறேன்.

இது போலியானது என்பதில் சந்தேகம் இல்லை. உண்மையில் இப்படி ஒரு சந்தர்ப்பத்தில், அப்பகுதி, அரசாங்க உணவு தர கட்டுப்பாடு அதிகாரத்துக்கு (Food standard agency) அறிவிக்காமல், அவரிடம் காட்டினேன், இவரிடம் கொடுத்தேன் என்ற பீலாக்கள் உதவப் போவதில்லை.

உண்மையிலேயே இவ்வாறு ஒரு விடயம் நடந்து , உணவு தர கட்டுப்பாடு பகுதிக்கு தெரிய வந்து, அவர்கள் உண்மைதான் எனக் கண்டால், சம்பந்தப் பட்ட கடையை இழுத்து மூடி இருப்பார்கள். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.