Jump to content

தமிழகத்தையே புரட்டிப் போட்ட ஜல்லிக்கட்டு போராட்டத்தின் நோக்கத்தை சிதைக்க, விஷமிகள் சதி செய்வதாக, பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


Recommended Posts

gallerye_002902118_1695473.jpg

சென்னை:தமிழகத்தையே புரட்டிப் போட்ட ஜல்லிக்கட்டு போராட்டத்தின் நோக்கத்தை
சிதைக்க, விஷமிகள் சதி செய்வதாக, பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

 

Tamil_News_large_169547320170123001156_318_219.jpg

பாரம்பரியத்தை மீட்டெடுக்க, தன்னெழுச்சி யாக திரண்டுள்ள மாணவர் கூட்டத்தை, திசை திருப்பும் வேலைகளில், தேச விரோத சக்திகள் களம் இறங்கியுள்ளதாக, தீவிர ஜல்லிக்கட்டு ஆர்வலரும், இசை அமைப்பாளருமான, 'ஹிப் ஹாப்' தமிழா ஆதி கூறியுள்ளார். அதனால், 'சூழ்ச்சி வலையில் விழ வேண்டாம்' என, மாணவர்களுக்கு வேண்டுகோளும் விடுத்துள்ளார்.

பொங்கல் பண்டிகைக்கு முன், கிராமம், நகரம் என்ற வேறுபாடு இல்லாமல், அனைவரின் உதடுகளும், ஜல்லிக்கட்டு என்ற வார்த்தையை உச்சரிக்க கருவியாக இருந்தது, 'ஜல்லிக்கட்டு...
ஜல்லிக்கட்டு..'என்ற ஆல்பம்.அதை உருவாக்கி, ஜல்லிக்கட்டுக்கான போராட்டத்தை முன்னெ டுத்தவர், ஹிப் ஹாப் தமிழா ஆதி. அவர் நேற்று, தன் முகநுாலில் கூறியுள்ளதாவது:

இரண்டு நாட்களாக, நான் ஜல்லிக்கட்டுக்கான

போராட்டத்தில் கலந்து கொள்ளாதது குறித்து, பலரும் பல கேள்விகளை முன்வைக்கின்றனர். ஜல்லிக்கட்டு போராட்டக் களத்தில் பல விரும்பத்தகாத நிகழ்வுகள் நடப்பதால், மன வேதனையுடன் வெளியேறி விட்டேன்.

பத்தாண்டுகளாக, ஜல்லிக்கட்டுக்காக போராடி வருவோரிடம் கலந்து பேசி, ஜல்லிக்கட்டு பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என, பாடலை வெளியிட்டேன். இப்போது, தேசியக் கொடியை மிதிப்பது, எரிக்கப் போவதாக மிரட்டுவது உள்ளிட்ட செயல்களில், சில அமைப்புகள் பேசுகின்றன.

அதேபோல், மத்திய அரசு, முஸ்லிம்களுக்கு எதிராக செயல்படுவதாக கூறி, பிரதமரை தகாத வார்த்தைகளில், திட்டி வருகின்றனர். மாணவர்கள், இளைஞர்கள், குடும்பத்துடன் போராட்டத்திற்கு வந்துள்ள நிலையில், 'பீட்டா' பற்றியும், அரசை பற்றியும், மத உணர்வுகளை துாண்டும் வகையிலும் பேசுகின்றனர். பல அமைப்புகள், போராட்டத்தை திசை திருப்புகின்றன.

நான் இந்தியன்; தேச விரோத செயல்களில் ஈடுபடவோ, பேசவோ மாட்டேன்; அதை துாண்டவும் மாட்டேன். என் புகைப்படத்தை பயன்படுத்தி, தேச விரோத செயல்களுக்கான விஷ விதைகளை பரப்பாதீர்கள். இதனால், அந்த போராட்டத்தில் இருந்து வெளியேறி விட்டேன். ஆனாலும், தொடர்ந்து ஜல்லிக்கட்டுக்காக, குரல்கொடுப்பேன். நாட்டு மாடுகள் காப்பாற்றப்பட வேண்டும் என்பது

 

தான், என் நோக்கம்.யாரையும் தகாத வார்த் தையில் திட்டக்கூடாது; அது தான் நாகரிக சமூகத்தின் அடையாளம்.

தற்போது இயற்றப்பட்டுள்ள சட்டம் குறித்து, முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜு, 'இது நிரந்தர தீர்வு' என்று கூறி உள்ளார். ஜல்லிக் கட்டுக்காக சட்டப் போராட்டம் நடத்தியவர் களும், அதை ஆராய்ந்து வருகின்றனர். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
 

'யோசிக்க வைக்கிறது'


'ஹிப் ஹாப் தமிழா ஆதியின் பேச்சு யோசிக்க வைக்கிறது' என, ஜல்லிக்கட்டு ஆர்வலரான, நடிகர் விவேக் தெரிவித்துள்ளார்.தன், 'டுவிட்டர்' பக்கத்தில் அவர் கூறியுள்ளதாவது:

ஜல்லிக்கட்டு போராட்டம் திசை மாறி செல்வதாக, ஆதி கூறியிருக்கிறார். அவரது பேச்சு யோசிக்க வைக்கிறது. உலகமே, நம் மாணவர் போராட்டத்தை உச்சி முகர்கிறது. அதற்கு பங்கம் வராமல், பார்த்துக் கொள்ளுங்கள்.

தனிநபரை கொச்சைப்படுத்தும் கோஷங்கள், தேசியக் கொடி அவமதிப்பு போன்றவை நிகழக் கூடாது; நிதானம் அவசியம். நீங்கள் அனை வரும், கலாமின் சீடர்கள். இப்போது, அவர் இருந்தால் என்ன முடிவெடுப்பார்; யோசித்து செயல்படுங்கள், கண்மணிகளே.இவ்வாறு விவேக் கூறியுள்ளார்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1695473

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.