Jump to content

இலங்கையில் வலுவடையும் இந்தியாவின் ஆதிக்கம்


Recommended Posts

இலங்கையில் வலுவடையும் இந்தியாவின் ஆதிக்கம்

Trincomalee-oil-tank-farm-7608583055641d41ff46a5701a4d59af4f5912d7.jpg

 

இந்­தியன் ஒயில் நிறு­வ­னத்­துக்கு குத்­த­கைக்கு வழங்­கப்­பட்ட சீனக்­குடா எரி­பொருள் தாங்­கிகள் சில­வற்றை மீளப் பெறும் விட­யத்தில் இலங்கை அர­சாங்கம் நெருக்­க­டி­களைச் சந்­தித்துக் கொண்­டி­ருக்கும் நிலையில், திரு­கோ­ண­மலைத் துறை­மு­கத்தை, அபி­வி­ருத்தி செய்யும் பொறுப்பை இந்­தி­யா­விடம் ஒப்­ப­டைக்­க­வுள்­ள­தாக பிராந்­திய அபி­வி­ருத்தி அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்­சேகா தகவல் வெளி­யிட்­டி­ருக்­கிறார்.

திரு­கோ­ண­மலை துறை­முக அபி­வி­ருத்தி தொடர்­பாக இந்­திய - இலங்கை அர­சாங்­கங்­க­ளுக்கு இடையில் பேச்­சுக்கள் நடந்து கொண்­டி­ருக்­கின்­றன. விரைவில் இது தொடர்­பான இறுதி முடிவு எடுக்­கப்­படும் என்று, புது­டில்­லியில் கடந்­த­வாரம் நடை­பெற்ற, ரைசினா கலந்­து­ரை­யா­டலில் உரை­யாற்­றிய போது பீல்ட் மார்ஷல் சரத் பொன்­சேகா கூறி­யி­ருந்தார்.

இந்­தி­யா­வுக்கும் சீனா­வுக்கும் சம­மான வாய்ப்­பு­களை வழங்­கு­கின்ற நடு­நிலை நாடாக இலங்கை விளங்­கு­கி­றது என்­பதை நிரூ­பிப்­ப­தற்­கான ஒரு சந்­தர்ப்­ப­மாக, இந்த விடயம் பார்க்­கப்­ப­டு­கி­றது.

ஏனென்றால், அம்­பாந்­தோட்டை துறை­மு­கத்தின் 80 சத­வீத உரி­மையை சீனா­வுக்கு குத்­த­கைக்கு வழங்க இலங்கை அர­சாங்கம் முடிவு செய்­தி­ருக்­கி­றது.

அதற்குப் பதி­லா­கவே, திரு­கோ­ண­மலைத் துறை­மு­கத்தை இந்­தி­யா­வுக்குக் கொடுத்து அபி­வி­ருத்தி செய்யும் சாத்­தியம் குறித்து பேச்­சுக்கள் நடத்­தப்­ப­டு­வ­தாகக் கூறப்­ப­டு­கி­றது.

பேச்­சுக்கள் நடக்­கின்­றன, விரைவில் முடிவு எடுக்­கப்­படும் என்று அமைச்சர் சரத் பொன்­சேகா கூறி­யி­ருந்­தாலும், இந்த விட­யத்தில் ஏற்­க­னவே இரண்டு நாடு­க­ளுக்கும் இடையில் ஓர் உள் இணக்கம் ஏற்­பட்­டி­ருக்­கலாம் என்றே கரு­தப்­ப­டு­கி­றது.

அதன் அடிப்­ப­டையில் தான், அம்­பாந்­தோட்டை துறை­மு­கத்தை சீனா­வுக்கு குத்­த­கைக்கு வழங்கும் விட­யத்தில் இந்­தியா எந்த எதிர்ப்­பையும் வெளிப்­ப­டுத்­தாமல், இருந்­தி­ருக்கக் கூடும். இது­வ­ரையில் இந்த விவ­கா­ரத்தில் இந்­தியா மூக்கை நுழைக்­கவோ, எதிர்ப்பை வெளி­யி­டவோ இல்லை.

உலகின் கேந்­திர முக்­கி­யத்­துவம் மிக்க, ஆழ­மான இயற்கைத் துறை­மு­கங்­களில் திரு­கோ­ண­ம­லையும் ஒன்று. அந்த வகையில், திரு­கோ­ண­மலை மீது அமெ­ரிக்கா, இந்­தியா போன்ற நாடு­க­ளுக்கு எப்­போ­துமே ஒரு கண் இருந்து வந்­தி­ருக்­கி­றது.

1980களில் அமெ­ரிக்­கா­வுக்கும் இலங்­கைக்கும் இடையில் நெருக்கம் அதி­க­மான போது, திரு­கோ­ண­மலைத் துறை­மு­கத்தை அமெ­ரிக்­காவின் பயன்­பாட்­டுக்கு வழங்க ஜே.ஆர். அர­சாங்கம் இணங்கி விட்­ட­தாக பேச்­சுக்கள் அடி­பட்­டன. அது இந்­தி­யாவை கோபத்­துக்­குள்­ளாக்­கி­யது.

அந்தத் திட்­டத்தை முறி­ய­டிக்க இந்­தியா பல்­வேறு உத்­தி­களைக் கையாண்டு, கடை­சியில் இலங்­கை­யுடன் ஓர் அமைதி உடன்­பாட்டைச் செய்து, திரு­கோ­ண­ம­லையில் தனது படை­களை நிறுத்­தி­யது,

அத்­துடன் திரு­கோ­ண­மலை மீதான அமெ­ரிக்­காவின் கன­வுக்கு இந்­தியா ஆப்பு வைத்­தது.

1990க்குப் பின்னர், திரு­கோ­ண­ம­லையில் தனது படை­களைக் கொண்­டி­ராது போனாலும், அதன் மீது கண்­கா­ணிப்­பையும் கவ­னத்­தையும் செலுத்தி வந்­தது இந்­தியா.

2014இல் சீனக்­கு­டாவில் விமான பரா­ம­ரிப்பு நிலையம் ஒன்றை சீனா அமைக்க முற்­பட்ட போதே இந்­தியா அதனைத் தடுத்து நிறுத்­தி­யி­ருந்­தது. இந்த விமான பரா­ம­ரிப்பு நிலையம், பின்னர் கடந்த ஆண்டு தொடக்­கத்தில் கட்­டு­நா­யக்­கவில் நிறு­வப்­பட்டு, சீன போர் விமா­னங்­களை மறு­சீ­ர­மைக்கும் நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றமை குறிப்­பி­டத்­தக்­கது.

திரு­கோ­ண­ம­லையில், தனக்கு விரோ­த­மான சக்­திகள் காலடி எடுத்து வைப்­பதை இந்­தியா எப்­போதும், எதிர்த்தே வந்­தி­ருக்­கி­றது.

அதற்குக் காரணம், திரு­கோ­ண­மலைத் துறை­முகம் மாத்­தி­ர­மல்ல, சீனக்­கு­டாவில் இந்­தி­யாவின் கட்­டுப்­பாட்டில் உள்ள எரி­பொருள் குதங்­களும் தான்.

இரண்டாம் உலகப் போர் காலத்தில், பிரித்­தா­னி­யா­வினால் அமைக்­கப்­பட்ட 99 எரி­பொருள் தாங்­கிகள் சீனக்­கு­டாவில் இன்­னமும் பயன்­ப­டுத்தக் கூடிய நிலையில் இருக்­கின்­றன. இவற்றை இந்­தியன் ஓயில் நிறு­வனம் மூலம் இந்­தியா தனது கட்­டுப்­பாட்டில் வைத்­தி­ருக்­கி­றது.

2002ஆம் ஆண்டு ஆட்­சிக்கு வந்த ஐ.தே.க. அர­சாங்­கத்­துடன் செய்து கொண்ட உடன்­பாட்­டுக்கு அமைய, சீனக்­குடா எரி­பொருள் தாங்­கி­களை இந்­தியா தனது கட்­டுப்­பாட்டின் கீழ் கொண்டு வந்­தது.

இந்த எரி­பொருள் தாங்­கி­களின் முக்­கி­யத்­துவம் கார­ண­மா­கவும், திரு­கோ­ண­ம­லையில் தனக்கு விரோ­த­மான சக்­திகள் காலூன்­று­வதை இந்­தியா விரும்­ப­வில்லை.

இந்த எரி­பொருள் தாங்­கிகள் தொடர்­பாக, அண்மை நாட்­க­ளாக இந்­தியன் ஒயில் நிறு­வ­னத்­துக்கும், இலங்கை அர­சாங்­கத்­துக்கும் இடையில் இழு­பறிப் போர் ஒன்றும் நடந்து கொண்­டி­ருக்­கி­றது.

இந்­தி­யா­வுக்கு 35 ஆண்­டுகள் குத்­த­கைக்கு வழங்­கப்­பட்ட இந்த எரி­பொருள் தாங்­கி­களில், 16 தாங்­கி­களை, மீளப்­பெ­று­வ­தற்கு கடந்த டிசம்பர் மாதம் அமைச்­ச­ர­வையில் அனு­மதி பெறப்­பட்­டது.

வரட்­சியை எதிர்­கொள்­வ­தற்­காக, மின்­சார உற்­பத்­திக்­காக எரி­பொ­ருளை சேமித்து வைப்­ப­தற்­காக அவ­ச­ர­மாக மூன்று தாங்­கி­களை மீளப் பெறு­வ­தற்கு, பெற்­றோ­லியக் கூட்டுத் தாபனம் முற்­பட்ட போது அதற்கு இந்­தியன் ஒயில் நிறு­வனம் அனு­ம­திக்­க­வில்லை.

இலங்கை அதி­கா­ரிகள் தாங்­கி­களை ஆய்வு செய்­வ­தற்குக் கூட இந்­தியன் “ ஒயில் நிறு­வன அதி­கா­ரிகள் அனு­ம­திக்­க­வில்லை. இது­பற்றி இந்­திய அர­சாங்­கத்­துடன் பேசித் தீர்த்துக் கொள்­ளு­மாறு திருப்பி அனுப்பி விட்­டார்கள்.

இந்­தியன் ஒயில் நிறு­வன அதி­கா­ரி­களின் செய­லினால், பெற்­றோ­லியக் கூட்­டுத்­தா­பன தொழிற்­சங்­கங்கள் கொதிப்­ப­டைந்­துள்­ளன. அமைச்­ச­ரவை முடி­வுக்கு எதி­ராக செயற்­படும் அள­வுக்கு இந்­தியன் ஒயில் நிறு­வ­னத்­துக்கு அதி­காரம் கிடைத்­தது எப்­படி என்று அவர்கள் கேள்வி எழுப்­பு­கின்­றனர்.

ஆனாலும், இந்­தியன் ஒயில் நிறு­வனம் அசை­ய­வே­யில்லை. இந்­திய அர­சுடன் பேசித் தீர்த்துக் கொள்­ளு­மாறு திட்­ட­வட்­ட­மாக கூறி­விட்­டது.

இதனால், புதிய இந்­தியத் தூதுவர் தரன்ஜித் சிங் சந்து பத­வியைப் பொறுப்­பேற்கும் வரையில் இந்த விவ­கா­ரத்தை நிறுத்தி வைக்­கு­மாறு பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க உத்­த­ர­விட்­டுள்ளார்.

அது­மாத்­தி­ர­மன்றி, சீனக்­குடா எண்ணெய்த் தாங்­கிகள் அமைந்­துள்ள பகு­திக்கு செல்­வ­தற்கும் தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது. வரும் 28ஆம் திகதி புதிய இந்­தியத் தூதுவர் பொறுப்­பேற்கும் வரையில் எந்த நகர்­வையும் எடுப்­ப­தில்லை என்­பதில் அர­சாங்கம் உறு­தி­யாக இருக்­கி­றது.

இந்­தி­யாவைப் பகைத்துக் கொள்ளக் கூடாது என்­ப­தற்­கா­கவே, இலங்கை அர­சாங்கம் பொறு­மை­யாக இந்த விவ­கா­ரத்தைக் கையாள முனை­கி­றது.

சீனக்­குடா எரி­பொருள் தாங்­கிகள் விட­யத்­திலோ, அம்­பாந்­தோட்டை எரி­பொருள் சுத்­தி­க­ரிப்பு ஆலைத் திட்டம் தொடர்­பா­கவோ, பிராந்­திய சக்­தி­க­ளான இந்­தி­யா­வையோ, சீனா­வையோ கோப­மூட்டும் எந்த முடி­வையும் அர­சாங்கம் எடுக்­காது என்று அமைச்சர் சந்­திம வீரக்­கொடி கூறி­யி­ருக்­கிறார்.

சீனக்­குடா எரி­பொருள் தாங்­கிகள் விட­யத்தில் இந்­தி­யா­வுக்கும் இலங்­கைக்கும் இடையில் சிறு முரண்­பாடு ஒன்று ஏற்­பட்­டுள்ள நிலையில் தான், திரு­கோ­ண­மலைத் துறை­மு­கத்தை இந்­தி­யா­வுக்கு வழங்­கு­வது பற்­றிய தக­வல்கள் வெளி­யா­கி­யி­ருக்­கின்­றன.

திரு­கோ­ண­மலைத் துறை­முக அபி­வி­ருத்­தியை இரண்டு கட்­டங்­க­ளாக முன்­னெ­டுக்க அர­சாங்கம் எதிர்­பார்க்­கி­றது. முத­லா­வது வர்த்­தக துறை­மு­க­மாக அபி­வி­ருத்தி செய்­வது. இரண்­டா­வது கடற்­படைத் தள­மாக அபி­வி­ருத்தி செய்­வது.

இந்­தியப் பெருங்­கடல் பிராந்­தி­யத்தின் பாது­காப்பை உறு­திப்­ப­டுத்­து­வ­தற்­கான கடல்சார் பாது­காப்பு, கண்­கா­ணிப்பு நட­வ­டிக்­கை­களை திரு­கோ­ண­மலை தளத்தில் இருந்து ஒருங்­கி­ணைக்­கவே திட்­ட­மி­டப்­பட்­டுள்­ளது.

அதற்­காக, திரு­கோ­ண­மலை கடற்­படைத் தளத்தை மேலும் விரி­வு­ப­டுத்தும் நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­ப­ட­வுள்­ளன.

அதே­வேளை, வர்த்­தக நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­வ­தற்­கான துறை­மு­க­மாக இதனை அபி­வி­ருத்தி செய்யும் நட­வ­டிக்­கை­களும் இடம்­பெ­ற­வுள்­ளன.

இதில் இந்­தியா எதனைப் பொறுப்­பேற்­க­வுள்­ளது, அது­பற்­றிய உடன்­பா­டுகள் எந்த அடிப்­ப­டையில் மேற்­கொள்­ளப்­ப­ட­வுள்­ளன என்ற விப­ரங்கள் இன்­னமும் வெளி­யா­க­வில்லை.

எவ்­வா­றா­யினும், இந்­தியா தனது படை­க­ளையோ, கடற்­ப­டை­யையோ நிறுத்தி வைத்து செயற்­பா­டு­களை முன்னெடுப்பதற்கு இலங்கை அனுமதிக்காது.

அது இலங்கையின் இறைமையை மீறும் செயலாக இருக்கும் என்பதுடன், அம்பாந்தோட்டையில் அத்தகையதொரு வாய்ப்பை சீனா கோருவதற்கும் இடமளித்ததாகி விடும்.

அத்தகையதொரு வாய்ப்பை சீனாவுக்கு விட்டுக் கொடுக்க இந்தியா தயாராகவும் இருக்காது.

எனவே வர்த்தகத்துறை சார்ந்த அபிவிருத்திகளை மேற்கொள்ளும் பொறுப்பை இந்தியா ஏற்றுக்கொள்ளும். அதன்மூலம் திருகோணமலை துறைமுகத்தின் கட்டுப்பாட்டை மேலும் இறுக்கமாக்கிக் கொள்ள இந்தியா முற்படலாம்.

ஏற்கனவே சீனக்குடாவில் இந்தியன் ஒயில் நிறுவனம் எந்தளவுக்கு பிடிமானமாகச் செயற்படுகிறதோ அதேயளவுக்கு திருகோணமலை துறைமுகத்தின் கட்டுப்பாட்டையும் இந்தியாவினால் பேண முடியும்.

கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த திருகோணமலைத் துறைமுகத்தை, இந்தியா தனது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ளுமானால், இலங்கையில் இந்தியாவின் பிடி மேலும் இறுக்கமடைவதற்கான வாய்ப்புகளே அதிகமாக உள்ளன.

http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2017-01-22#page-4

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • ஆழ்ந்த இரங்கல்கள். மேலே  ஏராளன் இணைத்த தினக்குரல் பத்திரிகையில் 1933 ஓகஸ்ட்இல் பிறந்த எதிர்வீரசிங்கம் வயது 89 என்று எழுதியிருக்கிறார்கள். 90 என்றுதானே வரவேண்டும்?. அவர் மத்திய கல்லூரியில் படிக்கும் போது இலங்கை சாதனையை முறியடிக்கும் போது ,  கொழும்பில் வெளிவந்த ஆங்கில பத்திரிகை ஒன்றில் இவரது பெயரை எதிர்வீரசிங்க என்று எழுதியிருந்தது. அப்பொழுது மத்திய கல்லூரியின் அதிபர் சிமித் அவர்கள் ‘எதிர்வீரசிங்க அல்ல நாகலிங்கம் எதிர்வீரசிங்கம்’  என்று எழுதிய கடிதம் அதே பத்திரிகையில் பிறகு வந்தது.  ஆசிய விளையாட்டுப்போட்டியில் தங்கப்பதக்கம் வென்றபின்பு யாழ் புகையிரத நிலையத்தில் இருந்து மத்திய கல்லூரிக்கு அழைத்து வரப்பட்டு ,எதிர்வீரசிங்க அவர்களுக்கு சிறந்த வரவேற்பு பாடசாலையில்வழங்கப்பட்டது.  -  மத்திய கல்லூரியின் பழைய மாணவரான எனது தகப்பனார் சொன்ன தகவல்
    • அட்லீஸ்ட் விஜயலக்சுமிக்கு செய்தது போல் அநியாயம் செய்யாமல் தன்னை நம்பி வந்த பெண்ணை கண்ணியத்தோடு நடத்தினார் என நினைக்கிறேன்🤣. பதில் விளக்கம் போதும் என நினைக்கிறேன்🤣 ஐயகோ….இரு மாநில ஆளுனர்….ஆட்டுகுட்டி கதையை கேட்டு…
    • இல்லை அண்ணாவின் ஆட்சிகாலம் போல இருக்கும்.   
    • அவ‌ங்க‌ள் இட‌த்தில் நேர்மை ஊழ‌ல் இல்லாம‌ இருந்தால் ஏன் த‌மிழ‌ர்க‌ள் திராவிட‌த்தை வெறுக்க‌ போகின‌ம் 2ஜீ ஊழ‌லால் ஒரு இன‌ம் அழிவ‌தை வேடிக்கை பார்த்த‌வ‌ர்க‌ள் பெரியார் ஜாதியை ஒழித்தார் அது தான் குறிப்பிட்ட‌  ஜாதி ம‌க்க‌ள் வ‌சிக்கும் இட‌த்தில் ம‌னித‌க் க‌ழிவை த‌ண்ணீருக்கை க‌ல‌ந்த‌வை....................... சோடா க‌டையில் வேலை பார்த்து விட்டு ம‌ஞ்ச‌ல் வாக்கில் 4புத்த‌க‌த்தோட‌ வ‌ந்த‌வ‌ரின் குடும்ப‌த்துக்கு இத்த‌னை ல‌ச்ச‌ம் கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து ச‌த்திய‌மாய் கோடி காசுக்கு எத்த‌னை 0 என்று என‌க்கு தெரியாது ஆனால் நீட் தேர்வை ர‌த்து செய்ய‌ எங்க‌ளிட‌ம் ர‌க‌சிய‌ம் இருக்கு என்று சொல்லி ப‌ல‌ பிள்ளைக‌ள் நீட்டால் இற‌ந்து போனார்க‌ள் அத‌ற்க்கு பிற‌க்கு உத‌ய‌நிதியின் பெயர் கொல்லிநிதி கொல்லுநிதியின் ம‌க‌ன் இன்ப‌நிதிக்கு தெரியும் கோடி காசுக்கு எத்த‌னை 0 என்று....................திமுக்காவுக்கு ஓட்டு போட்ட‌ ம‌க்க‌ள் ம‌ழை வெள்ள‌த்தால் பாதிக்க‌ப் ப‌ட்ட‌ போது வீட்டுக்குள் இருந்து க‌டும் வேத‌னை ப‌ட்ட‌வை 4000ஆயிர‌ம் கோடி ஒதுக்கி ப‌ணி செய்தார்க‌ளா அல்ல‌து அதையும் ஊழ‌ல் செய்து மூடி ம‌றைத்தார்க‌ளா...........................ஆண்ட‌வா இனி வ‌ள‌ந்து வ‌ரும் பிள்ளைக‌ளுக்கு ந‌ல்ல‌ அறிவைக் கொடு அப்ப‌ தான் கால‌ம் க‌ட‌ந்து த‌மிழ் நாட்டில் ந‌ல் ஆட்சி ம‌ல‌ரும் நாடும் செல்ல‌ செழிப்பாய் இருக்கும் ம‌க்க‌ளும் குறைக‌ள் இல்லாம‌ எல்லா வ‌ச‌தியோடும் வாழுவின‌ம்...............................................  
    • இப்படியா தலைவரே?  😍 பட விளக்கம் போதுமா? இல்லை எழுத்து விளக்கங்களும்  தேவையா? 🤣
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.