Jump to content

நாட்டாமை படத்தில் மிக்சர் சாப்பிட்டவர் யார் தெரியுமா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்


நாட்டாமை படத்தில் மிக்சர் சாப்பிட்டவர் யார் தெரியுமா?

சென்னை: நாட்டாமை படத்தில் பெண் பார்க்கும் காட்சியில் மிக்சர் சாப்பிட்டவர் யார் என்பதை தெரிவித்துள்ளார் இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார்.

ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக் கோரி தமிழகமே கொந்தளித்துக் கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் மிக்சர் சாப்பிட்டது யார் என்ற செய்தி நாட்டுக்கு ரொம்ப முக்கியமா என்று நீங்கள் நினைக்கலாம்.

KS Ravikumar solves an important issue

 

பிரபலம் ஒருவர் ஜல்லிக்கட்டு தொடர்பாக எதுவும் செய்யாமல் மிக்சர் சாப்பிடுவது போன்ற மீம்ஸ்கள் சமூக வலைதளங்களில் தீயாக பரவிக் கொண்டிருக்கிறது.

நாட்டாமை படத்தில் வரும் மிக்சர் சாப்பிடும் காட்சியை வைத்து தான் இத்தனை மீம்ஸுகளும். ட்விட்டரில் வேறு மீம்கள் போட்டுத் தாக்குகிறார்கள்.

இந்நிலையில் நாட்டாமை படத்தில் வந்த அந்த மிக்சர் காட்சியில் நடித்தவர் யார் என்பதை இயக்குனர் கே.எஸ் ரவிக்குமார் தெரிவித்துள்ளார். பெண் பார்க்கும் காட்சியில் எதுவுமே கூறாமல் தன்பாட்டுக்கு மிக்சர் சாப்பிட்டவர் லைட்மேனாம்.

KS Ravikumar solves an important issue

படப்பிடிப்பிலும் எதுவும் பேசாமல் வேலை பார்ப்பாராம். ரவிக்குமாரின் உதவி இயக்குனர்கள் தான் அவரை மிக்சர் காட்சியில் நடிக்க பரிந்துரை செய்தார்களாம்.

முதலில் நடிக்கத் தயங்கியவர் எதுவும் பேசத் தேவையில்லை மிக்சர் மட்டும் சாப்பிட்டால் போதும் என்று கூறியதும் சந்தோஷமாக நடித்தாராம்.

 

நன்றி : தட்ஸ் தமிழ்

டிஸ்கி :

உங்க வீட்டு கலாய் எங்க வீட்டு கலாய் இல்லை .... மரண கலாய்க்கு ....வித்திட்ட காமெடி தலைவர் கவுண்டமணிக்கு நன்றியை உரித்தாக்குகிறேன் !!!:11_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

மிழ்ப் படங்களின் சில கேரக்டர்கள் முக்கிய கதாபாத்திரங்களை விட வலுவாக காலத்துக்கும் நின்று பேசும். நீங்கள் நெட்டிஸனாக இருந்தால் நீங்கள் கடந்து செல்கிற மீம்களில் தவறாமல் இடம்பிடித்திருக்கும் ஒரு கேரக்டர்தான் நாட்டாமை படத்தின் மிக்சர் மாமா கேரக்டர். நாட்டாமை படத்தின் இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் பகிர்ந்து கொண்ட பேட்டி:

"கதையில அந்த காமெடி பத்தி பேசும்போதே, அந்த இடத்துல ஒரு கேரக்டர்  வேணும்னு முடிவு பண்ணுனோம். ஆனா அந்த கேரக்டர் மிக்சர் சாப்பிடட்டும்னு ஸ்பாட்டுலதான் முடிவு பண்ணுனோம், கவுண்டமணிக்கு அம்மாவா நடிச்சவுங்க நல்ல கொஞ்சம் கலரா இருப்பாங்க. அப்போ வீட்டுக்காரரும் கொஞ்சம் வெள்ளையா இருக்கற ஆளா இருந்தா நல்லாயிருக்குமேன்னு ஆள் தேடுனா யாரும் கிடைக்கல.

நாட்டாமை  மிக்சர்எங்க அவுட்டோர் யூனிட்ல லைட் போர்டு கனெக்‌ஷன் குடுத்துட்டு இருந்தாரு. நல்லா வெள்ளையா இருப்பாரு, அவரோட வேலையே 'லைட் ஆன்' பண்ணனும்னா ஆன் பண்ணுவாரு. 'ஆஃப்னா ஆஃப் பண்ணுவாரு', அங்கேயும் சும்மாதான் உட்கார்ந்துட்டு இருந்தாரு. என்னோட அசிஸ்டண்ட்ஸ் எல்லோரும் இவர நடிக்க வைக்கலாம்னு சொன்னாங்க, அப்போ நான் வெளில போயிட்டு வந்த நேரம். எனக்கு வணக்கம் வச்சாரு, அப்போ கூப்பிட்டு, லைட் ஆஃப், ஆன் பண்ண உங்களுக்கு அசிஸ்டெண்ட் இருக்காங்களான்னு கேட்டேன், இருக்காங்கன்னு சொன்னாரு. சரி, அந்தப் பையன அங்க உட்காரவச்சுட்டு நீங்க போயி ஃபிரேம்க்குள்ள உட்காருங்கன்னு சொன்னேன், 'சார் நடிக்கல்லாம் வராது'-ன்னாரு, நீ ஒண்ணும் பண்ண வேணாம்ப்பா, ஸ்டார்ட் கேமரா ஆக்‌ஷன்னு சொன்னதும், மிக்சர் மட்டும் சாப்பிட்டா போதும்னு சொல்லித்தான் அவர உட்கார வச்சோம். அன்னைக்கு மட்டும் கிட்டத்தட்ட ஒன்றரை கிலோ மிக்சர் சாப்பிட்டுருப்பாரு மனுஷன்.

யாருமே அவர் பேரச் சொல்லி கூப்பிடுறது இல்ல. எல்லோருமே 'மிக்சர் மாமா', 'மிக்சர் மாமான்னு'தான் கூப்பிடுவாங்க, அதுக்கு முன்னாலவரை அவர மாமா, மாமான்னு கூப்பிட்டுட்டு இருப்பாங்க. இப்போ அவரு சினிமால அவுட்டோர் யூனிட்ல இருந்து ரிட்டையர் ஆகிட்டார், அவரு பையன் அந்த வேலையைப் பார்த்துட்டு இருக்காரு, .இப்போ அவரு கே.கே. நகர் பக்கத்துல உள்ள பூங்கால பொழுது போக்குக்காக அருகம்புல் ஜூஸ், நெல்லிக்காய் ஜூஸ்னு அங்க வாக்கிங் வர்றவுங்களுக்கு வித்துக்கிட்டு இருக்கறதா இடையில ஒரு தடவ பார்க்கும்போது சொன்னாரு. அப்பப்போ சில மீம்கள் பார்ப்பேன், அது அப்படித்தான் சில கேரக்டர்கள்  அதுவா அமைஞ்சுரும்.”

Vikadan

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.