Jump to content

முறுகல்களுக்கு முடிவில்லாத முஸ்லிம் காங்கிரஸ்!


Recommended Posts

முறுகல்களுக்கு முடிவில்லாத முஸ்லிம் காங்கிரஸ்!

 

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் உரு­வான காலத்­தி­லி­ருந்து அக்கட்­சிக்குள் சர்ச்­சை­க­ளுக்கும் உட்­பி­ள­வு­க­ளுக்கும் பஞ்­ச­மி­ருக்­க­வில்லை. ஸ்தாபகத் தலைவர் அஷ்ரப் உயி­ரோ­டி­ருந்த காலத்­திலும் மு.கா. பல பிரச்­சி­னை­க­ளுக்கு முகங்­கொ­டுத்­துள்­ளது. பலர் கட்­சியை விட்டும் விலக்­கப்­பட்­டனர். பலர் தாமா­கவே வெளி­யே­றினர். பின்னர் அஷ்­ரபின் மர­ணமே பெரும் முரண்­பா­டு­க­ளுக்கும் பதவிப் போட்­டி­க­ளுக்கும் வித்­திட்­டது. அதனைத் தொடர்ந்து கட்சி இரண்­டாக மூன்­றாக மேலும் பல புதிய அணி­க­ளாக உடைந்து போனது. பலர் மு.கா. எனும் அர­சியல் வாழ்­வி­லி­ருந்தே முற்­றாக ஒதுங்கிப் போயினர்.

 ரவூப் ஹக்கீம், தலைவர் பத­வியை ஏற்­ற­தி­லி­ருந்து இன்று வரை மேலும் பல பிள­வு­களும் பிரச்­சி­னை­களும் தொடர்ந்த வண்­ண­மே­யுள்­ளன. அதன் உச்­சக்­கட்­டமே கட்­சியின் செய­லாளர் ஹசன் அலி மற்றும் தவி­சாளர் பஷீர் சேகு­தாவூத் ஆகி­யோ­ருடன் தலைவர் ரவூப் ஹக்கீம் கொண்­டுள்ள முரண்­பா­டு­க­ளாகும்.

ஹசன் அலி

கண்­டியில் நடை­பெற்ற கட்­சியின் பேராளர் மாநாட்டில் ஹசன் அலியின் அதி­கா­ரங்கள் பறிக்­கப்­பட்டு உயர்­பீட செய­லாளர் எனும் புதிய பதவி உரு­வாக்­கப்­பட்டு மற்­றொ­ரு­வ­ருக்கு வழங்­கப்­பட்­டது. அத்­துடன் ஏலவே உறு­தி­ய­ளிக்­கப்­பட்­டி­ருந்த படி ஹசன் அலிக்கு எம்.பி. பதவி வழங்­கப்­ப­ட­வில்லை. இக் கார­ணங்­களால் ஹசன் அலி தலை­வ­ருடன் முரண்­பட்டார்.

இதன் கார­ண­மாக கட்­சிக்குள் ஹக்கீம் அணி , ஹசன் அலி அணி இரு அணிகள் தோற்றம் பெற்­றன. கட்­சியின் உயர்பீடக் கூட்­டங்­களில் இரு சாராரும் முரண்­பட்டுக் கொண்­டார்கள். இந்த முரண்­பாட்­டினால் சுமார் ஒரு வருட கால­மாக கட்­சியின் தலை­மை­ய­கத்­துக்குக் கூட ஹசன் அலி செல்­ல­வில்லை. ஹசன் அலிக்கு அநீதி இழைக்­கப்­பட்­டுள்­ள­தாகக் குற்­றம்­சாட்டி 'கிழக்கின் எழுச்சி' எனும் பெயரில் ஒரு சாரார் போராட்­டங்­க­ளையும் முன்­னெ­டுத்­தார்கள்.

கட்­சிக்குள் இந்த முரண்­பாடு கூர்­மை­ய­டைந்­தி­ருந்த நிலையில், கட்­சியின் செய­லாளர் தான்தான் என்றும் தேர்­தல்கள் திணைக்­க­ளத்­து­ட­னான தொடர்­பு­களை மேற்­கொள்­வ­தற்­கான அதி­காரம் தனக்கே உள்­ளது என்றும் கோரி ஹசன் அலி தேர்­தல்கள் ஆணைக்­குழுத் தலை­வ­ருக்கு முறைப்­பாடு செய்­தி­ருந்தார். இத­னை­ய­டுத்து இந்த முறைப்­பாடு தொடர்பில் ஆராயும் நோக்கில் கடந்த டிசம்பர் மாதம் 15 ஆம் திகதி கட்­சியின் தலைவர் ஹக்கீம், செய­லாளர் ஹசன் அலி மற்றும் உயர்பீட செய­லாளர் மன்சூர் ஏ காதிர் ஆகி­யோ­ருக்கு அழைப்­பு­வி­டுத்­தி­ருந்தார். இதற்­க­மைய மூவரும் தேர்தல் ஆணைக்­குழு தலைவர் முன்­னி­லையில் பிர­சன்­ன­மாகி இந்த விட­யத்தை தமக்குள் தீர்த்துக் கொள்­வ­தாக இணக்கம் தெரி­வித்­தனர்.

இதற்கு முன்­ன­தாக தலைவர் ஹக்­கீ­முக்கும் செய­லாளர் ஹசன் அலிக்­கு­மி­டையில் தனி­யான சந்­திப்­பொன்று இடம்­பெற்­றது. இச்சந்­திப்பில் இரு­வரும் என்ன விட­யங்­களில் இணங்கிக் கொண்­டார்கள் என்­பது வெளியி­டப்­ப­டா­விட்­டாலும் ஹசன் அலிக்கு எம்.பி. பதவி வழங்­கு­வது எனவும் அடுத்த பேராளர் மாநாட்டில் ஹசன் அலி­யி­ட­மி­ருந்து பறிக்­கப்­பட்ட அதி­கா­ரங்­களை மீள வழங்­கு­வ­தற்­கான அனு­ம­தியைப் பெற்றுக் கொள்­வது என்றும் இணக்கம் காணப்­பட்­ட­தாக தக­வல்கள் வெளி­யி­டப்­பட்­டன.

இந்த இணக்­கப்­பா­டு­களைத் தொடர்ந்து ஹசன் அலி மீண்டும் மு.கா. தலை­மை­ய­க­மான தாருஸ் ஸலா­முக்குச் சென்று தனது கட­மை­களை ஆரம்­பித்­த­துடன் உயர்­பீடக் கூட்­டத்­திலும் பங்­கேற்றார். தற்­போது ஹசன் அலிக்கும் தமக்­கு­மி­டையில் எந்­த­வித முரண்­பா­டு­க­ளு­மில்லை என தலைவர் ஹக்கீம் பகி­ரங்­க­மா­கவே கூறி வரு­கிறார். 

கடந்த வாரம் புத்­த­ளத்தில் இடம்­பெற்ற கட்­சியின் நிகழ்­வு­களில் ஹக்­கீமும் ஹசன் அலியும் ஒன்­றா­கவே பங்­கேற்­றனர். இக் கூட்­டத்தில் உரை நிகழ்த்­திய தலைவர் ஹக்கீம், ''கட்­சி­யிலே பெரிய பூதா­க­ர­மான பிரச்­சி­னை­யாக வெளிச்­சக்­திகள் பெருப்­பித்­துக்­காட்­டு­வ­தற்கு காத்­துக்­கொண்­டிந்த பிரச்­சி­னைக்கு இன்று முற்­றுப்­புள்ளி வைக்­கப்­பட்­டுள்­ளது. எமது கட்­சியின் செய­லாளர் நாயகம் தற்­போது தலை­வ­ருடன் மேடையில் இருக்­கின்‌றார். புத்­தளம், வன்னி, யாழ்ப்­பாணம் மற்றும் அனு­ரா­த­புரம் ஆகிய 4 மாவட்­டங்­களைச் சேர்ந்த மக்­க­ளுக்­காக 24 மணித்­தி­யாலம் இயங்­கக்­கூ­டிய கிளை­யொன்றை நாங்கள் புத்­த­ளத்தில் திறந்­து­வைத்­துள்ளோம். இந்த கிளையை வழி­ந­டாத்தும் பொறுப்பை கட்சி செய­லாளர் ஹஸன் அலி ஏற்­றுக்­கொண்­டுள்ளார்'' எனக் குறிப்­பிட்டார்.

இதே கூட்­டத்தில் உரை­யாற்­றிய ஹசன் அலியும் தாம் முரண்­பா­டு­களைக் கைவிட்டு கட்­சிக்­காக ஒன்­று­பட்டுச் செயற்­படப் போவ­தாகக் குறிப்­பிட்­டி­ருக்­கிறார். '' எங்­க­ளிடம் இருக்­கின்ற பிரச்­சி­னை­களை முதலில் தூக்­கி­யெ­றிய வேண்டும். இன்று முஸ்லிம் சமூகம் இக்­கட்­டான சூழ்­நி­லையில் வாழ்ந்­து­கொண்­டி­ருக்­கி­றது. அவர்­களின் வாழ்­வா­தாரம் முதல் வாழ்­வி­டங்கள் வரை சுரண்­டப்­பட்டுக் கொண்­டி­ருக்­கின்­றன. இவ்­வா­றான நிலையில் சில்­லறை பிரச்­சி­னைகள் மூலம் எமது கட்­சியின் பாதையை திசை திருப்ப முய­லக்­கூ­டாது. நான் உட்­பட இங்கு அனை­வரும் எங்­க­ளுக்­கி­டையில் இருந்த வேறு­பா­டு­களை மறந்து இந்த புத்­தளம் மாவட்­டத்தில் ஒன்­று­கூ­டி­யி­ருக்­கிறோம்'' என அவர் குறிப்­பிட்­டி­ருந்தார்.

எம்.பி. பதவி வழங்­கப்­ப­டுமா?

ஹசன் அலிக்கும் ஹக்­கீ­முக்­கு­மி­டையில் இணக்­கப்­பாடு எட்­டப்­பட்ட போதிலும் தேசியப் பட்­டியல் எம்.பி. பதவி வழங்­கப்­ப­டுமா என்­பதில் இன்­னமும் சந்­தேகம் நீடிக்­கவே செய்­கி­றது. ''எம்.பி. பதவி வழங்­கப்­படும் அதற்­கான ஏற்­பா­டுகள் விரைவில் பூர்த்தி செய்­யப்­படும் என தலைவர் ஹக்கீம் என்­னிடம் கூறினார். ஆனால் நான் எப்­போது எம்.பி.யாக பதவி ஏற்க வேண்டும் என்­பது பற்றி உத்­தி­யோ­க­பூர்­வ­மாக எனக்கு இது­வரை அறி­விக்­க­வில்லை'' என ஹசன் அலி சில தினங்­க­ளுக்கு முன்னர் ஊட­கங்­க­ளுக்குக் குறிப்­பிட்­டி­ருக்­கிறார்.

இதற்­கி­டையில் ஹசன் அலிக்கு தேசியப் பட்­டியல் மூலம் எம்.பி. பதவி வழங்­கப்­படும் என கட்­சியின் உயர்­பீடக் கூட்­டத்தில் தீர்­மானம் எதுவும் நிறை­வேற்­றப்­ப­ட­வில்லை என மு.கா.வின் உயர்­பீட பிர­தி­நிதி ஒருவர் ஊட­கங்­க­ளுக்குத் தெரி­வித்­துள்ளார். 

சல்மான் ராஜி­னாமா?

ஹசன் அலிக்கு தேசியப் பட்­டியல் பத­வியை வழங்­கு­வ­தாயின் தற்­போது அப் பத­விக்கு தற்­கா­லி­க­மாக (ஒரு வரு­டத்­திற்கும் மேலாக) நிய­மிக்­கப்­பட்­டி­ருக்கும் சட்­டத்­த­ரணி சல்மான் இரா­ஜி­னாமாச் செய்ய வேண்டும். எனினும் அவர் தான் இரா­ஜி­னாமாச் செய்­த­தாக பாரா­ளு­மன்ற செய­லாளர் நாய­கத்­திற்கு அறி­விக்­க­வில்லை.

எனினும் சல்மான் தனது இரா­ஜி­னாமாக் கடி­தத்தை கட்­சியின் தலைவர் ரவூப் ஹக்­கீ­மிடம் கைய­ளித்­துள்­ள­தா­கவும் அக் கடி­தத்­தினை ஹக்கீம் ஹசன் அலி­யிடம் காண்­பித்­த­தா­கவும் அறிய முடி­கி­றது. இருந்­த­போ­திலும் இது­வரை அக் கடிதம் பாரா­ளு­மன்ற செய­லா­ள­ருக்கு அனுப்­பப்­ப­டா­மைக்­கான காரணம் என்ன என்­பது வெளிப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை.

ஜன­வரி 9 ஆம் திகதி இடம்­பெற்ற பாரா­ளு­மன்றக் கூட்டத் தொடரில் ஹசன் அலி பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக பத­வி­யேற்பார் என்றும் சில தக­வல்கள் வெளி­யா­கி­யி­ருந்­தன. எனினும் அவ்­வாறு எதுவும் நடக்­க­வில்லை. அடுத்த மாதம் நடை­பெ­ற­வுள்­ள­தாக அறி­விக்­கப்­பட்­டுள்ள கட்­சியின் உயர்­பீடக் கூட்­டத்தில் இந்த விவ­காரம் ஆரா­யப்­பட்டு அதன் பிற்­பாடே ஹசன் அலி எம்.பி.யாக பத­வி­யேற்பார் என்றும் பிந்திக் கிடைத்த தக­வல்கள் தெரி­விக்­கின்­றன.

பஷீர் சேகு­தாவூத்

தவி­சா­ள­ராகப் பதவி வகிக்கும் பஷீர் சேகு­தா­வூ­துக்கும் தலைவர் ஹக்­கீ­முக்­கி­டையில் கடந்த பல வரு­டங்­க­ளா­கவே பனிப் போர் தொடர்ந்தே வரு­கி­றது. ஹக்­கீமின் தலை­மைத்­துவம் தொடர்பில் பஷீர் அதி­ருப்­தியை வெளிப்­ப­டுத்தி வந்த நிலையில் கடந்த பாரா­ளு­மன்றத் தேர்­தலில் பஷீரை போட்­டி­யிட ஹக்கீம் அனு­ம­திக்­க­வில்லை. மேலும் தேசியப் பட்­டி­ய­லிலும் அவ­ருக்கு இடம் வழங்­க­வில்லை. இத­னை­ய­டுத்து இரு­வ­ருக்­கு­மி­டை­யி­லான முரண்­பாடு மேலும் கூர்­மை­ய­டைந்­தது.

பஷீர் சேகு­தாவூத் தற்­போது ஹக்­கீ­முக்கு எதி­ராக பகி­ரங்­க­மா­கவே அறிக்­கை­களை விட்டும் பொதுக் கூட்­டங்­களில் பேசியும் வரு­கிறார். இந் நிலையில் பஷீரை தவி­சாளர் பத­வி­யி­லி­ருந்தும் அகற்­று­வ­தற்­கான திட்­ட­மொன்றை ஹக்கீம் கொண்­டுள்­ள­தா­கவும் அடுத்த பேராளர் மாநாட்டில் இத் திட்டம் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­டலாம் என்றும் எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.

இறு­தி­யாக பால­மு­னையில் நடை­பெற்ற மு.கா. தேசிய மாநாட்டில் பஷீர் சேகு­தாவூத் பங்­கேற்ற போதிலும் அவரை அவ­ம­திக்கும் வகையில் தனது உரை­யின்­போது ஹக்கீம் வார்த்தைக் கணை­களைப் பயன்­ப­டுத்­தி­யி­ருந்தார். இவ்­வா­றான சூழ்­நி­லை­யில்தான் அடுத்த பேராளர் மாநாட்டில் பஷீரை முழு­மை­யாக கட்­சியை விட்டும் அப்­பு­றப்­ப­டுத்­து­வ­தற்­கான காய் நகர்த்­தல்­களை ஹக்கீம் தரப்­பினர் மேற்­கொள்ளக் கூடும் என எதிர்வு கூறப்­ப­டு­கி­றது. அது சாத்­தி­யப்­படும் பட்­சத்தில் பஷீர் ஹக்கீம் தரப்பை பழி­வாங்கும் செயற்­பா­டு­களை நிச்­சயம் முன்­னெ­டுப்பார். அது நிச்­சயம் கட்­சிக்கு பெரும் சவா­லா­கவே அமையக் கூடும்.

தாருஸ் ஸலாம் விவ­காரம்

கட்­சியின் அதி­காரப் போட்­டிகள் ஒரு­புறம் நிகழ்ந்து கொண்­டி­ருக்­கையில் கட்சித் தலை­மை­ய­க­மான தாருஸ் ஸலாம் காணி மற்றும் கட்­டிட விவ­காரம் மீண்டும் பேசு­பொ­ரு­ளாக மாறி­யி­ருக்­கி­றது. இதற்குக் காரணம் 'தாருஸ் ஸலாம் - மறைக்­கப்­பட்ட மர்­மங்கள்' எனும் தலைப்பில் கடந்த வாரம் வெளி­யி­டப்­பட்­டுள்ள நூல் ஆகும்.

'தாருஸ் ஸலாம் மீட்பு முன்­னணி' எனும் பெயரில் வெளி­யி­டப்­பட்­டுள்ள இந்த நூலில் இக் கட்­டி­டத்தின் வர­லாறு, அதனை அஷ்ரப் நிர்­மா­ணித்­ததன் நோக்கம், பின்னர் யார் அதனைக் கைய­கப்­ப­டுத்­தி­னார்கள், அதன் வரு­மானம் எங்கே செல்­கி­றது என்­பன போன்ற பல்­வேறு விட­யங்கள் உள்­ள­டக்­கப்­பட்­டுள்­ள­துடன் அதற்­கான ஆதார ஆவ­ணங்­களும் இணைக்­கப்­பட்­டுள்­ளன. தாருஸ் ஸலாத்தை மீட்­ப­தற்­கான தமது போராட்­டத்தின் முதற்­கட்ட நகர்வு இது என்றும் எதிர்­கா­லத்தில் இதுபோன்ற மேலும் பல வெளியீ­டுகள் வரும் என்றும் அதில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

எனினும் இதனை வெளி­யிட்ட நபர்கள் யார் என்­பது பற்­றிய விப­ரங்கள் குறிப்­பி­டப்­ப­ட­வில்லை. இப்புத்­தகம் முஸ்லிம் அர­சி­யல்­வா­திகள், கல்­வி­மான்கள், அர­சியல் ஆர்­வ­லர்கள், ஊட­க­வி­ய­ல­ளர்கள் ஆகி­யோ­ருக்கு தபாலில் அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ளது.

இப் புத்­தகம் மு.கா.வுக்குள் பலத்த சல­ச­லப்பை தோற்­று­வித்­துள்­ளது. அதன் பிர­தி­ப­லிப்­பா­கவே ஹக்கீம் கடந்த வாரம் புத்­த­ளத்தில் நடந்த கூட்­டத்தில் இது­பற்றிப் பிரஸ்­தா­பித்தார். '' எமது இயக்கம் மற்றும் அதன் தனித்துவம் பாதுகாக்கப்படவேண்டும். இப்போது இயக்குத்துள் இருந்து கொண்டே குழிபறிப்பவர்கள் இருக்கிறார்கள். வெளியிலிருப்பவர்களுடன் தொடர்புகளை வைத்துக்கொண்டு பல்வேறு திட்டங்களை தீட்டிக்கொண்டிருக்கிறார்கள். அந்த திட்டங்களுக்கு நாங்கள் சோரம்போகமுடியாது. 

சந்தர்ப்பவாதத்துக்காக கட்சியின் உறுப்பினர்களை ஒட்டுமொத்தமாக பஷில் ராஜபக் ஷவிடம் விற்றவர்களும் கட்சியில் இருக்கிறார்கள். தங்களுக்கு பதவி கிடைக்கும்வரை அவர்கள் இந்தக் கூத்தை தொடர்வார்கள். தாருஸ்ஸலாம் கட்டிடத்தை தலைவரும், முதலமைச்சரும் கபளீகரம் செய்ததாக கதைகட்டிவிடுகிறார்கள். இந்த அடிப்பைடையற்ற குற்றச்சாட்டுகளை புத்‌தகமாக வெளியிடுபவர்கள் இந்த கட்சிக்குள் இருப்பவர்கள்தான்.

தங்களுக்குப் பதவி இல்லையென்றால் கட்சியும் அழியவேண்டும் என்று நினைப்பவர்கள்தான் இவ்வாறான வேலையை செய்கிறார்கள். அவ்வாறான சதிகாரர்கள் இருந்தாலும் நாங்கள் கட்சியை பலமான நிலையில் வழிநடாத்திச் செல்கிறோம்'' என ஹக்கீம் காட்டமாகக் குறிப்பிட்டிருந்தார்.

ஹக்கீம் மறை­மு­க­மாக பஷீர் சேகு­தா­வூ­தைத்தான் சாடு­கிறார் என்­பதை மு.கா. அர­சியல் நோக்­கர்கள் இல­குவில் புரிந்து கொள்­வார்கள். ஏனெனில் பஷீர் சேகு­தாவூத் ஏற்­க­னவே தலைவர் ஹக்­கீ­முக்கு தாருஸ் ஸலாம் விவ­காரம் தொடர்பில் விளக்கம் கோரி பகி­ரங்க கடிதம் ஒன்றை எழு­தி­யி­ருந்தார். இதன் தொட­ராக அவர்தான் தற்­போது தாருஸ் ஸலாம் விவ­கா­ரத்தைக் கிளப்­பி­விட்­டுள்ளார் என்­பது ஹக்கீம் தரப்பின் குற்­றச்­சாட்­டாகும். 

இவ்­வாறு மு.கா.வின் அர­சியல் வர­லாற்றில் அதன் முக்­கிய பத­வி­களில் இருப்­ப­வர்­க­ளாக பொதுச் செய­லா­ளரும் தவி­சா­ளரும் தலை­வரும் மனக்­க­சப்பைக் கொண்­டுள்­ளனர். ஹசன் அலிக்கு எம்.பி. பத­வியும் செய­லா­ள­ருக்­கான அதி­கா­ரங்­களும் வழங்­கப்­ப­டும்­பட்­சத்தில் அவர் அமைதி காப்பார். அவ­ரு­ட­னான முரண்­பா­டுகள் முற்றுப் பெறும். ஆனால் சகல அதி­கா­ரங்­க­ளையும் ஹக்கீம் வழங்­குவார் என்­ப­தற்கு எந்­த­வித உத்­த­ர­வா­த­மு­மில்லை.

மறு­புறம் பஷீர் விவ­கா­ரத்தில் ஹக்கீம் இணக்­கப்­பாட்­டுக்கு செல்­வ­தற்குத் தயா­ரில்லை. இரு­வ­ரி­னதும் நகர்­வு­களும் கருத்­துக்­களும் அத­னையே உறு­திப்­ப­டுத்தி நிற்­கின்­றன. ஆக மு.கா.விற்குள் அடுத்த வரும் நாட்­களில் உட்­பூ­சல்கள் வலுக்­கத்தான் போகின்­றன. 

இது அக் கட்­சியின் அர­சியல் எதிர்­கா­லத்தை பாதிக்­கின்ற அதே நேரம் மு.கா. வின் வாக்கு வங்­கியைக் குறி­வைத்­தி­ருப்­போ­ருக்கு வாய்ப்­பா­கவும் அமைந்­து­விடும். உள்­ளூ­ராட்சித் தேர்­த­லுக்கு முன்­பாக கிழக்கு மாகாண சபைத் தேர்தல் நடத்­தப்­ப­டலாம் என அர­சியல் அரங்கில் எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்ற நிலையில் மு.கா.வின் இந்த உட்­பூ­சல்கள் அக் கட்சிக்கு பின்னடைவுகளையே கொண்டுவரும். சாணக்கியம் நிறைந்த தலைவர் இவற்றை எப்படிக் கையாளப் போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-01-21#page-5

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
    • 🤣........ நீங்கள் சொல்வது போல அது ஒரு சடங்கு மட்டுமே. நாங்கள் அந்தச் சடங்கின் மேல் முழுப் பொறுப்பையும் ஏற்றி விட்டு, அது பிழைத்தால் எல்லாமே, மொத்த வாழ்க்கையுமே பிழைத்து விடும் என்று எங்களை நாங்களே வருத்திக் கொள்கின்றோம். இவ் விடயங்களை நாங்கள் கொஞ்சம் இலகுவாக எடுக்கலாம். சடங்குகள் பூரணமாக நடக்குதோ இல்லையோ, காலமும் வாழ்க்கையும் காத்துக் கொண்டிருக்கின்றன எவரையும் அடித்து வீழ்த்த..........😀  
    • நூறாவ‌து சுத‌ந்திர‌ தின‌த்தின் போது இந்தியா என்ற‌ நாடு இருக்காது என்று ப‌ல‌ர் சொல்லி கேள்வி ப‌ட்டு இருக்கிறேன்.............மோடியே போதும் இந்தியாவை உடைக்க‌............இந்தியாவில் வ‌சிக்கும் முஸ்லிம்க‌ளும் இந்திய‌ர்க‌ள் ஆனால் மோடி முற்றிலும் முஸ்லிம்க‌ளுக்கு எதிராக‌ இருக்கிறார் ......................நீங்க‌ள் சொன்ன‌து போல் சோவியத் யூனியன் ம‌ற்றும் முன்னால் யூகேசுலோவியா உடைந்த‌து போல் இந்தியாவும் உடையும்.......................இன்னும் 10வ‌ருட‌ம் மோடி என்ற‌ கேடி ஏவிம் மிசினில் குள‌று ப‌டி செய்து ஆட்சியை பிடித்தால் இந்திய‌ர்க‌ள் த‌ங்க‌ளுக்குள் தாங்க‌ள் ஆயுத‌ம் தூக்கி ச‌ண்டை பிடிப்பின‌ம் பிற‌க்கு ஜ‌ம்மு க‌ஸ்மீர் போல் எல்லா மானில‌மும் வ‌ந்து விடும்.......................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.