Jump to content

இரட்டை நிலைப்பாட்டில் தடுமாறும் அரசாங்கம்


Recommended Posts

இரட்டை நிலைப்பாட்டில் தடுமாறும் அரசாங்கம்

 

இலங்கை தேயி­லைக்குப் பெயர் பெற்ற நாடாகும். உலகில் எந்­த­வொரு நாட்­டிலும் தேயி­லையைப் பற்றி குறிப்­பிட்டால், உட­ன­டி­யாக நினைவில் இலங்கை என்ற சின்­னஞ்­சி­றிய நாடே மனதில் நிழ­லாடும். சிலோன் என்று ஆரம்ப காலத்தில் அழைக்­கப்­பட்டு சிறி­லங்கா என பெயர் மாற்றம் செய்­யப்­பட்­டுள்ள இலங்கை தேயி­லையின் மறு­பெ­ய­ரா­கவே உலக நாடுகள் பல­வற்­றி­னாலும் கரு­தப்­பட்டு வந்­தது. 

ஆனால் அந்த நிலை­மைகள் இப்­போது இல்லை. ஆங்­கி­லே­யரின் நாடா­கிய பிரித்­தா­னி­யாவில் இன்னும் இலங்கைத் தேயி­லைக்கு இருந்த மரி­யா­தையும் கௌவ­ரமும் இருப்­ப­தாகக் கருதப்­ப­டு­கின்ற போதிலும், உலக அரங்கில் மனித உரி­மை­களை மீறிய ஒரு நாடா­கவே இப்­போது இலங்கை உரு­வ­கப்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றது. 

முப்­பது வரு­டங்­க­ளாக நில­விய போர்ச்­சூ­ழலில், இலங்­கையில் மனித உரி­மை­களும், சர்­வ­தேச மனி­தா­பி­மான சட்­டங்­களும் மீறப்­பட்­டி­ருப்­ப­தா­கவே குற்றம் சாட்­டப்­பட்­டி­ருக்­கின்­றது. இதனை தற்­போ­தைய அர­சாங்­கமும் உலக அரங்கில் கொள்­கை­ய­ளவில் ஏற்­றுக்­கொண்­டி­ருக்­கின்­றது.

மனித உரி­மைகள் மிக மோச­மான முறையில் மீறப்­பட்­டி­ருக்கின்றன என்­பதை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மை­யி­லான அர­சாங்கம் கொள்கை அளவில் ஏற்­றுக்­கொண்­டதன் கார­ண­மா­கவே அது­பற்­றிய பொறுப்பு கூறு­தலை வலி­யு­றுத்தி ஐ.நா.மனித உரி­மைகள் பேர­வையில் இலங்­கைக்கு எதி­ராகக் கொண்டு வரப்­பட்ட பிரே­ர­ணைக்கு இணை அனு­ச­ரணை வழங்கி ஏற்­றுக்­கொண்­டி­ருக்­கின்­றது.

யுத்­தத்தைத் தீவி­ர­மாகக் கொண்டு நடத்­திய ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ தலை­மை­யி­லான முன்­னைய அர­சாங்கம், விடு­த­லைப்­பு­லி­க­ளுக்கு எதி­ராக நடத்­தப்­பட்ட யுத்­தத்தில் அர­ச­ப­டைகள் மனித உரி­மை­களை மீறிச் செயற்­ப­ட­வில்லை என முற்­றாக மறு­த­லித்­தி­ருந்­தது.

அதன் கார­ண­மா­கவே, ஐ.நா.மனித உரி­மைகள் பேர­வையில் தனக்கு எதி­ராகக் கொண்டு வரப்­பட்ட பிரே­ர­ணையை அது ஏற்­றுக்­கொள்­ள­வில்லை. அதற்கு வெளிப்­ப­டை­யாகத் தனது எதிர்ப்பை வெளி­யிட்­டி­ருந்­தது.

ஆனால் மஹிந்த ராஜ­பக்­ ஷவை ஜனா­தி­பதி தேர்­தலில் தோற்­க­டித்து ஆட்­சியைக் கைப்­பற்­றிய ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, மனிதஉரி­மைகள் மீறப்­பட்­டி­ருப்­பதை ஏற்று அதற்கு பொறுப்பு கூறு­வ­தற்­கு­ரிய செயற்­பா­டு­களை முன்­னெ­டுப்­ப­தற்­கான பொறி­மு­றைகள் உரு­வாக்­கப்­படும் என்று ஐ.நா.மனித உரி­மைகள் பேர­வையில் உறு­தி­ய­ளித்­தி­ருந்­தது.

இறுதி யுத்தம் நடை­பெற்ற போது இடம்­பெற்ற மனித உரிமை மீறல்­க­ளுக்கு பொறுப்பு கூறும் அதே­வேளை, மனித உரிமை நிலை­மைகள் மேம்­ப­டுத்­தப்­படும் என்றும் அர­சாங்கம் ஐ.நா. மனித உரி­மை கள் பேர­வையில் ஒப்­புக்­கொண்­டி­ருந்­தது.

மனித உரி­மைகள் விவ­கா­ரத்தில் இரண்டு படி நிலை­களில் அர­சாங்கம் செயற்­பட வேண்­டி­யி­ருக்­கின்­றது. இறுதி யுத்­தத்தின் போது இடம்­பெற்ற மனித உரிமை மீறல் சம்­ப­வங்­க­ளுக்குப் பொறுப்பு கூறு­கின்ற அதே­வேளை. மனித உரிமை நிலை­மை­களை நாட்டில் மேம்­ப­டுத்­தவும் வேண்டும்.

ஆனால் பொறுப்பு கூறு­வ­தற்­கான நட­வ­டிக்­கைகள் உரிய முறையில் முன்­னெ­டுக்­கப்­ப­டு­வ­தாகத் தெரி­ய­வில்லை. அதே­வேளை, மனித உரி­மைகள் நிலை­மை­களை மேம்­ப­டுத்­து­வ­தற்­கு­ரிய முக்­கி­ய­மான நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுப்­ப­திலும் அர­சாங்கம் தயக்கம் காட்டிச் செயற்­ப­டு­கின்ற ஒரு போக்­கையே அவ­தா­னிக்க முடி­கின்­றது. 

இறுதி யுத்­தத்தில் மனித உரி­மைகள் மீறப்­பட்­ட­மைக்கு பொறுப்பு கூற வேண்டும் என்­ப­தையும் நாட்டில் மனித உரிமை நிலை­மைகள் மேம்­ப­டுத்­தப்­பட வேண்டும் என்ற இந்த இரண்டு விட­யங்­களும் யுத்தம் முடி­வுக்குக் கொண்­டு­வ­ரப்­பட்ட கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் பல்­வேறு தரப்­பி­ன­ராலும் வலி­யு­றுத்­தப்­பட்டு வரு­கின்­றது. எனவே, இது ஒரு புதிய விட­ய­மல்ல.

சந்­தர்ப்­பங்­களில் மட்­டுமே கவனம் செலுத்­தப்­ப­டு­கின்­றது.

ஐ.நா. மனித உரிமைப் பேர­வையின் அமர்­வுகள் மார்ச் மற்றும் செப்­டம்பர் மாதங்­களில் நடை­பெ­றும்­போது, அவற்றில் தனக்குப் புதிய நெருக்­க­டிகள் எதுவும் வந்­து­விடக் கூடாது என்­பதில் அர­சாங்கம் மிகுந்த கவனம் செலுத்திச் செயற்­பட்டு வரு­கின்­றது.

அண்­மைய சில வரு­டங்­க­ளாக இலங்­கையின் மனித உரிமைகள் விவ­காரம், ஐ.நா. மனித உரிமைப் பேர­வையில் தொடர்ச்­சி­யாக சூடு பிடித்த வண்ணம் இருக்­கின்­றது. அந்த அவையில் கொண்­டு­வ­ரப்­பட்ட பிரே­ரணை தொடர்பில் எத்­த­கைய முன்­னேற்­றங்கள் ஏற்­பட்­டி­ருக்கின்றன, உண்­மையில் அங்கு உள்­நாட்டில் என்ன நடை­பெ­று­கின்­றது என்­பது தொடர்­பாக அறிக்­கைகள் சமர்ப்­பிக்­கப்­பட்டு, விவா­தங்­களும் நடத்­தப்­பட்டு வரு­கின்­றன.

சர்­வ­தேச மட்­டத்தில் இடம்­பெ­று­கின்ற இந்த அமர்­வு­க­ளுக்­கான காலம் நெருங்கி வரும்­போ­தெல்லாம், உள்­நாட்டில் எதிரும் புதி­ரு­மாக மனித உரி­மைகள் பற்­றிய விட­யங்கள் பல­ரு­டைய கவ­னத்­தையும் ஈர்த்­தி­ருக்கும். மனித உரி­மைகள் மதிக்­கப்­பட வேண்­டி­யதன் அவ­சியம். இழைக்­கப்­பட்ட மனித உரிமைகள் மீறல்­க­ளுக்கு பொறுப்பு கூறு­கின்ற கடப்­பாடு என்­பவை குறித்து அரச தரப்­பினர் தேனொ­ழுக பேசு­வார்கள்.

அதே­வேளை, மனித உரிமை மீறல்­க­ளுக்கு எதி­ராகக் குரல் கொடுக்­கின்ற மனித உரிமை அமைப்­புக்­களும், பாதிக்­கப்­பட்ட மக்கள் சார்­பான அர­சியல் கட்­சிகள் மற்றும் அர­சியல் சார்ந்த அமைப்­புக்­களும், இவற்றின் முக்­கி­யஸ்­தர்­களும் அது அப்­படி இது இப்­படி என்று முழங்கித் தள்­ளு­வார்கள்.

அத்­த­கைய ஒரு நிலை­மைதான் இப்­போது ஏற்­பட்­டி­ருக்­கின்­றது. இது ஐ.நா. மனித உரி­மைப் பேர­வையை இலக்கு வைத்­த­தாக அமை­யாமல், ஐரோப்­பிய ஒன்­றி­யத்தின் ஜி.எஸ்.பி வரிச் சலு­கையை குறி­வைத்­த­தாக அமைந்­தி­ருக்­கின்­றது.

மனித உரி­மைகள் நிலை­மையின் முன்­னேற்றம், ஜன­நா­யக முறை­மைகள் கையா­ளப்­ப­டு­கின்ற முறைமை என்­ப­வற்றை அடிப்­ப­டை­யாகக் கொண்டே, ஐரோப்­பிய ஒன்­றி­யத்தின் ஜி.எஸ்.பி வரிச்­ச­லு­கை­யா­னது, வழங்­கப்­ப­டு­கின்­றது.

இந்த வரிச்­ச­லு­கையைப் பெற்றுக் கொள்­ வ­தற்­காக மனித உரி­மை­களில் முன்­னேற்­றத்தைக் காட்ட வேண்­டிய அவ­சியம் அர­சாங்­கத்­திற்கு எழுந்­தி­ருக்­கின்­றது. ஜன­நா­யகச் செயற்­பா­டுகள் பற்­றியும் வெளிப்­ப­டுத்த வேண்­டிய தேவை ஏற்­பட்­டி­ருக்­கின்­றது.

இலங்­கையில் மனித உரி­மைகள் நிலைமை மேம்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை. ஜன­நா­யக முறை­க­ளிலும் முன்­னேற்றம் ஏற்­ப­ட­வில்லை என்­பது போன்ற கார­ணங்­களை முன்­வைத்தே ஐரோப்­பிய ஒன்­றியம் ஜி.எஸ்.பி வரிச் சலு­கையை இடை நிறுத்­தி­யி­ருந்­தது.

அதனை மீண்டும் பெற்­றுக்­கொள்­வ­தற்­கான முயற்­சி­களில் ஈடு­பட்ட அர­சாங்­கத்­திற்கு ஐரோப்­பிய ஒன்­றியம் பல நிபந்­த­னை­களை விதித்­தி­ருக்­கின்­றது. எனவே, இந்த ஜி.எஸ்.பி வரிச்­ச­லு­கையைப் பெற்­றுக்­கொள்­வது தொடர்பில் அரச தரப்பில் பல ஆழ­மான கருத்­துக்கள் முன்வைக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன.

செவி வழி­யாகக் கேட்­ப­தற்கு இந்தக் கருத்­துக்கள், குறிப்பாக மனித உரிமை மீறல்­களின் போது பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கும் மனித உரிமை ஆர்­வ­லர்கள், மனித உரிமை அமைப்­புக்­க­ளுக்கும் - நன்­றா­கவும் உற்­சா­க­ம­ளிப்­ப­தா­கவும் இருக்­கின்­றன. ஆனால் அந்தக் கருத்­துக்கள் அர­சாங்­கத்தின் நிலைப்­பா­டுகள் மற்றும் செயற்­பா­டு­க­ளுடன் முரண்­பட்­டி­ருப்­பதைத் தெளி­வாகக் காண முடி­கின்­றது.

இதனால், சந்­தர்ப்­பத்­திற்­கா­கவே மனித உரி­மைகள் தொடர்பில், மற்­ற­வர்­க­ளினால் வர­வேற்­கத்­தக்க வகை­யி­லான கருத்­துக்­களை அரச தரப்­பினர் வெளி­யிட்டு வரு­கின்­றனர் என்­பது நிரூ­ப­ண­மா­கி­யி­ருக்­கின்­றது.

இரட்டை நிலைப்­பாட்டை வெளிப்­ப­டுத்தும் கூற்­றுக்கள்

ஜி.எஸ்.பி வரிச்­ச­லு­கை­யா­னது, மோச­மான ஒரு பொரு­ளா­தார நெருக்­க­டியில் சிக்­கி­யி­ருக்­கின்ற அரா­சங்­கத்­திற்குக் கைகொ­டுக்­கக்­கூ­டிய ஒரு வரப்­பி­ர­சா­த­மா­கவே அமைந்­தி­ருக்­கின்­றது என்­பது பொரு­ளி­ய­லா­ளர்­களின் கருத்­தாகும். ஜி.எஸ்.பி வரிச்­ச­லு­கையின் மூலம் பெரும் கடன் சுமையில் மூழ்­கி­யுள்ள அர­சாங்கம் சிறி­தாக ஆறுதல் மூச்சு விடு­­வதற்குப் பேரு­த­வி­யாக இருக்கும் என்று கரு­தப்­ப­டு­கின்­றது.  

ஆனால் இந்த வரிச்­ச­லு­கையைப் பெற்­றுக்­கொள்­வ­தற்கு அர­சாங்கம் பல நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்க வேண்டி இருக்­கின்­றது. அது­பற்­றிய கருத்­துக்­களை, அமைச்­ச­ரவைப் பேச்­சா­ளரும், அமைச்­ச­ரு­மான ராஜித சேனா­ரத்ன, திறன் அபி­வி­ருத்தி மற்றும் தொழில்­ப­யிற்சி அமைச்சர் மஹிந்த சம­ரசிங்க ஆகியோர் செய்­தி­யா­ளர்­க­ளு­ட­னான சந்­திப்­பின்­போது வெளி­யிட்­டி­ருக்­கின்­றனர்.

இறு­திக்­கட்டப் போரில் இரா­ணுவம் படு­கொ­லை­களில் ஈடு­பட்­டி­ருந்தால், அதற்குத் தண்­டனை வழங்­கப்­பட வேண்டும். படு­கொ­லை­களை நியா­யப்­ப­டுத்­தவோ ஆள் கடத்­தல்­களை அங்­கீ­க­ரிப்­பதோ நல்­லாட்சி அர­சாங்­கத்தின் கொள்­கை­யில்லை என்று அமைச்சர் ராஜித சேனா­ரத்ன தெரி­வித்­தி­ருக்­கின்றார்.

அதே­வேளை, ஜி.எஸ்.பி வரிச் சலுகை உள்­ளிட்ட சலு­கை­களைத் தக்க வைக்க வேண்­டு­மாயின், மனித உரி­மைகள் மற்றும் சமத்­து­வ­மான நகர்­வு­க­ளுக்கு முக்­கி­யத்­துவம் கொடுக்­கப்­பட வேண்டும். ஒரு குறிப்­பிட்ட காலத்­திற்கு மாத்­திரம் அல்­லாமல் தொடர்ச்­சி­யாக நாம் அந்தப் பய­ணத்தை முன்­னெ­டுக்க வேண்டும் என்று அமைச்சர் மஹிந்த சம­ர­சிங்க தெரி­வித்­தி­ருக்­கின்றார்.ஆனால் இரா­ணுவம் பல்­வேறு மனித உரிமை மீறல் செ­யற்­பா­டு­களில் ஈடுபட்­டி­ருந்­தது. அதனால் பலர் பாதிக்­கப்­பட்­டனர். கொல்­லப்­பட்­டனர் என்­ப­தற்­கான பல சம்­ப­வங்­களைப் பற்­றிய விப­ரங்கள் ஆதா­ர­பூர்­வ­மாக வெளி­யா­கி­யி­ருக்­கின்­றன. இருப்­பினும் அவை குறித்து எந்­த­வி­த­மான நட­வ­டிக்­கை­களும் எடுக்­கப்­ப­ட­வில்லை என்ற குற்­றச்­சாட்­டுக்­களும் முன்­வைக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன.

அதே­வேளை, மனித உரி­மை­களும், சமத்­து­வ­மான செயற்­பா­டு­களும் தொடர்ச்­சி­யாக நாட்டில் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வில்லை என்­ப­தற்கு ஆதா­ர­பூர்­வ­மான பல சம்­ப­வங்கள் இடம்­பெற்­றி­ருக்­கின்­றன. குறிப்­பாக மதங்­க­ளுக்­கி­டையில் சமத்­து­வ­மின்­மையைப் பேணு­வ­தற்­காக பௌத்த மதத் துற­வி­களின் தூண்­டு­தலில் முஸ்­லிம்கள் தாக்­கப்­பட்­டி­ருக்­கின்­றார்கள். அவர்­க­ளு­டைய மசூ­திகள் தாக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன.

இந்­துக்கள் பெரும்­பான்­மை­யாக வாழ்­கின்ற பகு­தி­களில் புத்தர் சிலை­களும், பௌத்த விகா­ரை­களும் அமைக்­கப்­பட்டு மத ரீதி­யான ஆக்­கி­ர­மிப்புச் செயற்­பா­டுகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன. இது குறித்து அர­சாங்­கத்­திற்குப் பல­ராலும் எடுத்­து­ரைக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது. ஆயினும் அந்தச் சம்­ப­வங்­க­ளுக்குக் கார­ண­மா­ன­வர்கள் சட்­டத்தின் முன் நிறுத்­தப்­ப­ட­வில்லை. குற்­ற­வா­ளிகள் தண்­டிக்­கப்­ப­ட­வு­மில்லை. 

இந்த நிலையில் யுத்­தக்­குற்றம் செய்­தி­ருந்தால் இரா­ணு­வத்­தினர் தண்­டிக்­கப்­பட வேண்டும் என்­பதே நல்­லாட்சி அர­சாங்­கத்தின் கொள்­கை­யாகும் என்று கூறு­வது அர­சாங்கம் இரட்டை நிலைப்­பாட்டைக் கொண்­டி­ருக்­கின்­றது என்று முன்­வைக்­கப்­பட்­டுள்ள குற்­றச்­சாட்­டினை உறு­திப்­ப­டுத்­து­வ­தா­கவே அமைந்­தி­ருக்­கின்­றது.

இறுதி யுத்த காலச் சம்­ப­வங்கள்

இறுதி யுத்தம் நடை­பெற்­ற­போது, விடு­த­லைப்­பு­லி­களை எந்த வகை­யி­லா­வது இரா­ணுவ ரீதி­யாகத் தோற்­க­டிக்க வேண்டும். அவர்­களை இல்­லாமற் செய்ய வேண்டும் என்­ப­தற்­காக முன்­னைய அர­சாங்கம் மிக மிகத் தீவி­ர­மாகச் செயற்­பட்­டி­ருந்­தது. விடு­த­லைப்­பு­லி­களின் போராட்ட சக்­தியை மழுங்­க­டித்து முறி­ய­டிக்க வேண்டும் என்­ப­தற்­கா­கவே, மூன்று இலட்­சத்­துக்கும் மேற்­பட்ட பொது­மக்­களை முன்­னைய அரா­சங்கம் தொடர்ச்­சி­யா­னதோர் இரா­ணுவ முற்­று­கைக்குள் சிக்க வைத்­தி­ருந்­தது.

அந்த மக்கள் மீது பொரு­ளா­தாரத் தடை­யையும், உணவு மற்றும் மருந்துப் பொருட்­க­ளுக்­கான தடை­யை­யும்­கூட விதித்து கடு­மை­யாகச் செயற்­ப­டுத்­தி­யி­ருந்­தது. விடு­த­லைப்­பு­லி­களைப் பல­மி­ழக்கச் செய்ய வேண்டும் என்­பதே, அப்­போது அர­சாங்­கத்தின் நோக்­க­மாக இருந்த போதிலும், இந்தத் தடை­யுத்­த­ரவு நட­வ­டிக்­கை­க­ளினால் அப்­பாவிப் பொது­மக்­களே பெரிதும் பாதிக்­கப்­பட்­டி­ருந்­தனர்.

அது மட்­டு­மல்­லாமல் அகோ­ர­மாக நடத்­தப்­பட்ட எறி­கணை தாக்­கு­தல்கள், விமானக் குண்டுத் தாக்­கு­தல்கள் என்­ப­வற்­றி­னாலும் பொது­மக்­களே அதிகம் பாதிக்­கப்­பட்­டி­ருந்­தார்கள்.

யுத்த மோதல்­களில் சிக்­கி­யி­ருந்த மக்கள் அராங்கப் படைகள் நடத்­திய இத்­த­கைய தாக்­கு­தல்­க­ளினால் காய­ம­டைந்து, அவர்­களின் உயிர்­களைக் காப்­ப­தற்­காகச் செயற்­பட்­டி­ருந்த வைத்­தி­ய­சா­லைகள் மீதும் இரா­ணு­வத்­தினர் தாக்­கு­தல்­களை நடத்­தி­யி­ருந்­தனர். இத்­த­கைய தாக்­கு­தல்­களில் சிக்கி உயிர் தப்­பி­ய­வர்­களும், பொது­மக்கள் இலக்­குகள் மீது நடத்­தப்­பட்ட தாக்­கு­தல்­களில் காய­ம­டைந்தும், தெய்­வா­தீ­ன­மாகக் காய­ம­டை­யாமல் உயிர் தப்­பி­ய­வர்­களும் கதை கதை­யாகத் தக­வல்­களை வெளி­யிட்­டி­ருக்­கின்­றனர். இந்தத் தக­வல்கள் இலங்கை இரா­ணு­வத்தின் மனித உரிமைகள் மீறல்கள் பற்­றிய சாட்­சி­யங்­க­ளாகப் பதி­வா­கி­யி­ருக்­கின்­றன.

அதே­வேளை, இலங்­கையில் செய­லாற்றி வந்த ஐ.நா. அதி­கா­ரி­களை அர­சாங்கம் வெளி­யே­று­மாறு கூறி­யதை ஏற்று, இறுதி யுத்­தத்த காலத்தல் வன்­னிப்­பி­ர­தேசத்தில் இருந்து வெளி­யே­றி­யதன் மூலம், யுத்­த­மோ­தல்­களில் சிக்­கி­யுள்ள பொது­மக்­களைப் பாது­காப்­பதை ஒரு முக்­கிய நோக்­க­மாகக் கொண்டு உரு­வாக்­கப்­பட்ட ஐ.நா. மன்றம், தனது பொறுப்பில் இருந்து தவ­றி­யி­ருந்­தது என்­பதை முன்னாள் ஐ.நா. செய­லாளர் நாயகம் ஆதா­ரங்­க­ளுடன் ஏற்று அதற்­காக மனம் வருந்­தி­யி­ருந்தார்.

இலங்­கையில் ஐ.நா.வின் செயற்­பா­டுகள் தொடர்­பான ஐ.நா. மன்­றத்தின் உள்­ளக மீளாய்வு அறிக்­கை­யொன்றில் ஐ.நா. பொறுப்பு தவ­றி­யி­ருப்­பது கண்­ட­றி­யப்­பட்டு வெளிப்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­கின்­றது. அத்­துடன், வன்னி யத்­தத்தின் இறுதி ஆறு மாத காலப்­ப­கு­தியில் மாத்­திரம் 70 ஆயி­ரத்­துக்கும் மேற்­பட்ட பொது­மக்கள் கொல்­லப்­பட்­டி­ருந்­தனர் என்­ப­தையும் அந்த அறிக்கை சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கின்­றது.

இறுதி யுத்­தத்தின் போது இரா­ணுவம் மனித உரிமை மீறல்­களில் ஈடு­பட்­டி­ருந்­தது, ஆட்­கொ­லை­களைப் புரிந்­தது என்­ப­தற்­கான, இது போன்று பல ஆதா­ரங்கள் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­கின்­றன.

இருந்தும் இந்தப் போர்க்­குற்­றங்­க­ளுக்­காக இது­வ­ரையில் இலங்­கையில் எவரும் தண்­டிக்­கப்­ப­ட­வில்லை. அவற்­றுக்கு அர­சாங்­கமோ அல்­லது இரா­ணு­வமோ இன்னும் பொறுப்பு கூற­வு­மில்லை. இந்த நிலையில் இறதிப் போரில் படு­கொ­லை­களைச் செய்­தி­ருந்தால் அதற்குத் தண்­டனை வழங்­கப்­பட வேண்டும் என்­பதே நல்­லாட்சி அர­சாங்­கத்தின் கொள்­கை­யாகும் என அமைச்­ச­ரவைப் பேச்­சா­ள­ரா­கிய அமைச்சர் ராஜித சேனா­ரத்ன கூறி­யி­ருப்­பது நகைப்­புக்கு இட­மா­கி­யி­ருக்­கின்­றது என்றே கூற வேண்டி இருக்­கின்­றது.

வேடிக்கைக் கூற்று

அர­சாங்கம் மனித உரிமைகள் மீறல்­களை அனு­ம­திக்­க­மாட்­டாது, மனித உரி­மை­களைப் பேணு­வ­தற்­காக அதைச் செய்ய வேண்டும். இதைச் செய்ய வேண்டும் என்று வாய­ளவில் செய்­தி­யா­ளர்கள் மத்­தியில் கருத்­துக்­களைக் கூறிக்­கொண்­டி­ருப்­பதன் மூலம், நிலைமைகளில் முன்னேற்றத்தைக் காட்ட முடியாது.

உண்மையாகவே நிலைமைகளில் முன்னேற்றத்தை ஏற்படுத்த வேண்டுமானால், மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பொறுப்பு கூறுவதற்காக ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் ஒப்புக்கொண்டவாறான செயற்பாடுகளை அரசாங்கம் தாமதமின்றி முன்னெடுக்க வேண்டும். அந்த நடவடிக்கைகள் வெளிப்படைத் தன்மை உடையதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் தரப்பினருடைய பங்களிப்புடன் கூடியதாகவும் அமைந்திருக்க வேண்டியது அவசியமாகும்.

மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றச் செயற்பாடுகளுக்குப் பொறப்பு கூறுவதற்கான பொறிமுறைகளை அமைப்பதற்காக பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட நல்லிணக்கப் பொறிமுறைகளுக்கான கலந்தாலோசனைச் செயலணியினால் தயாரிக்கப்பட்ட அறிக்கையின் பரிந்துரைகளை ஏற்றுக்கொள்ள முடியாது என்று அமைச்சரவைப் பேச்சாளராகிய அமைச்சர் ராஜித சேனாரத்ன மறுத்துரைத்திருந்ததையும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டியிருக்கின்றது.

பொறுப்பு கூற வேண்டிய பொறுப்பை நிறைவேற்றுவதற்காகவே நல்லிணக்கப் பொறிமுறைகள் தொடர்பாக நாட்டு மக்களுடைய கருத்துக்கள் திரட்டப்பட்டன. அவ்வாறு திரட்டப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில் சர்வதேச நீதிபதிகள் இந்தப் பொறிமுறைகளில் உள்ளடக்கப்பட வேண்டும் என்பதை ஏற்க முடியாது என்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடு என்று அதிகாரபூர்வமாக அமைச்சரவைப் பேச்சாளர் என்ற நிலையில் அவர் தெரிவித்திருந்தார்.

எனவே அரசாங்கத்திற்கு நன்மை தருகின்ற ஜி.எஸ்.பி சலுகையைப் பெறுவதற்காக மனித உரிமைகளைப் பேண வேண்டும் மனி உரிமைகள் மீறல்களுக்குப் பொறுப்பு கூறவேண்டும் என்ற நிலைப்பாட்டை அரசாங்கம் கொள்கையாகக் கொண்டிருக்கின்றது என்பது அரசாங்கத்தின் ஒரு முரண் நிலையான கருத்தாகவும் வேடிக்கையான கூற்றாகவுமே அமைந்திருக்கின்றது,  

செல்­வ­ரட்னம் சிறி­தரன்

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-01-21#page-1

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.