Jump to content

ஊடகக் கறையான்கள் - ஜெயமோகன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஊடகக் கறையான்கள்

ஜெயமோகன்

 

index

தமிழில் ஆனந்தவிகடன் வழியாகவே கேளிக்கை இதழ் x இலக்கிய இதழ் என்னும்வேறுபாடு உருவானதுஅதைப் பழித்தும் இழித்தும் உரைப்பது சென்றகாலத்தில்சிற்றிதழ்களில் ஒரு மரபாக இருந்ததுஆனால் நான் ஒரு சமூகப்பரிணாமநோக்கில் அவை இன்றியமையாத நிகழ்வுகள் என்றே அணுகிவந்தேன்அதையேஎழுதியிருக்கிறேன்.

சென்றநூற்றாண்டின் தொடக்கத்தில் கல்வி மிகச்சிறுபான்மைக்குரியதாகஇருந்ததுஆகவே இலக்கியமும்கருத்துச்செயல்பாடும் அவ்வண்ணமே நீடித்தனஅக்காலகட்டத்தில் உருவான செய்தி இதழ்களும் இலக்கிய இதழ்களும்அறிவுப்பரிமாற்றத்தை மட்டுமே இலக்காகக் கொண்டவைஆகவே சிறியவட்டத்திற்குள் புழங்கியவைஅவை வாசக அளவால் சிற்றிதழ்கள்அன்றையஅச்சுமுறையும்வினியோக அமைப்புகள் விரிவாக இல்லாததும் அவைசிற்றிதழ்கள்போல செயல்பட்டமைக்கு காரணங்கள்.

ஆனால் 1920 களில் இந்தியாவில் காங்கிரஸால் முன்னெடுக்கப்பட்ட தேசியக்கல்வி இயக்கம் கல்வியை மக்களிடம் பரவலாக்க ஆரம்பித்ததுதேசியக்கல்விஇயக்கத்தைப்பற்றி பாரதி விரிவாக எழுதியிருக்கிறார்அதற்கானபாடங்களைக்கூட பரிந்துரைத்திருக்கிறார்அதற்குமுன் அன்றையஆட்சியாளர்களாலும் மதநிறுவனங்களாலும் கொண்டுவரப்பட்ட கல்விப்பரவல்சிறிய அளவில் நகர்சார்ந்ததாக இருந்ததுதேசியக்கல்வி இயக்கம் ஒருவகைகுடிசைக்கல்விமிகக்குறைந்த பணவசதியுடன் கிராமங்களில் உருவாக்கப்பட்டஓராசிரியர்பள்ளிகள் அவை.

ஆரம்பக் கல்வியை பரவலாக்கும்பொருட்டு இந்தியாவில் நிகழ்ந்த முதல்பேரியக்கம்இதுவேராமகிருஷ்ண மடம்ஆரியசமாஜம்நாராயணகுருவின் இயக்கம் போன்றபலநூறு இயக்கங்கள் அதில் பங்கெடுத்தனநம் ஊர்களில் உள்ள பள்ளிகள்எப்போது எவரால் தொடங்கப்பட்டன என்று பார்த்தாலே அவ்வியக்கத்தின் வீச்சைகண்ணால் காணமுடியும்.

indexk

 

தேசியக்கல்வி இயக்கம் வழியாக உருவான கல்விப்பரவல் வாசிப்பார்வத்தை உருவாக்கியது. கூடவே அச்சுத்தொழில் வளர்ச்சியும் இணைந்துகொண்டபோது எளிய வாசிப்புக்குரிய இதழ்களின் தேவை உருவானது. வாசிப்பு ஒருவகை உயர்தரக் கேளிக்கையாக உருவெடுத்தது. இந்தியாவெங்கும் முப்பதுநாற்பதுகளில் வணிகப்பிரசுரமும் கேளிக்கை சார்ந்த இதழியலும் உருவாகி வந்தன. சுதந்திரத்திற்குப்பின் கல்வி மிகப்பெரிய அளவில் முன்னெடுக்கப்பட்டபோது அதன்விளைவாக வாசிப்புக்கு மேலும் மேலும் மக்கள் வந்தனர்.

அதன் அடுத்தபடியாகவே வாசிப்பு எனும் கேளிக்கை பேருருவம் கொண்டது. அது பெருவணிகமாக ஆகியபோது தமிழ் போன்ற மொழிகளில் ஓர் உடன்விளைவாக சீரிய வாசிப்பு, கருத்தியல் செயல்பாடு ஆகியவை சிறுபான்மையினரிடம் ஒடுங்கி நிற்கநேரிட்டது. ஒருகட்டத்தில் இலக்கியமும் கருத்தியல் செயல்பாடும் அமைப்புபலமே இல்லாமல் தனிநபர் முயற்சிகளால் சிறிய அலகுகளுக்குள் மட்டுமே நிகழவேண்டிய நிலை உருவானது, புதுமைப்பித்தன் உண்மையில் அன்றைய மைய இதழ்களில்தான் எழுதினார். அவர் எழுதிய கலைமகள் மாத இதழ் அன்று இலக்கிய இதழாக இருந்தது. அறுபதுகளில் அது தன்னை ‘குடும்ப இதழ்’ என அறிவித்துக்கொண்டு வணிகப்பெருக்குக்குள் சென்றது.

புதுமைப்பித்தனுக்கு அடுத்த தலைமுறையில் தீவிரஇலக்கியம் மெல்ல அமைப்புகளின் ஆதரவை இழந்தது. இலக்கிய இயக்கமே நின்றுவிடக்கூடும் என்றநிலை, வெகுமக்களால் ரசிக்கப்படுவது மட்டுமே வாழக்கூடும் என்னும் அச்சம் உருவாகியது. க. நா. சு, சி. சு. செல்லப்பா இருவரும் சிற்றிதழ் இயக்கத்தை உருவாக்கியமைக்கான காரணம் இதுவே.

சரியான பொருளில் சி.சு.செல்லப்பா நடத்திய ‘எழுத்து’ மாத இதழ்தான் ‘அறிவித்துக் கொண்ட’ சிற்றிதழ். அதாவது பெரிய இதழாக உத்தேசித்து விற்காமல் போன இதழ் அல்ல அது. குறிப்பிட்ட வட்டத்திற்குள் மட்டும் வாசிக்கப்பட்டால் போதும், அமைப்பின் பின்புலம் தேவையில்லை, ஆகவே சமரசங்கள் கூடாது என கொள்கைமுடிவு எடுத்துக்கொண்ட சிற்றிதழ் அது. தமிழின் சிற்றிதழ்களின் தொடக்ககாலம் என அறுபதுகளைச் சொல்லலாம். பொற்காலம் என எழுபது எண்பதுகளைச் சொல்லலாம்.

i

இக்காலகட்டத்தில் தீவிர இலக்கியம் முழுக்க முழுக்க சிற்றிதழ்களை மட்டுமே நம்பி இயங்கியது. மனைவி தாலியை அடகுவைத்து சிற்றிதழ்கள் நடத்தியவர்கள் உண்டு. கையில் சிற்றிதழ்களுடன் அலைந்து திரிந்து விற்றவர்கள் உண்டு. தமிழ்ச்சிற்றிதழ்களின் வரலாறு பி.எஸ்.ராமையா [மணிக்கொடிக் காலம்] வல்லிக்கண்ணன் [தமிழ்ச் சிற்றிதழ்களின் தோற்றமும் வளர்ச்சியும்] வ.ஜயபாஸ்கரன் [சரஸ்வதிக்காலம்] போன்ற நூல்களில் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

க.நா.சு, [இலக்கியவட்டம், சூறாவளி], சி.சு.செல்லப்பா [எழுத்து], எம்.வி.வெங்கட்ராம் [தேனீ], ரகுநாதன் [சாந்தி], வ.ஜெயபாஸ்கரன் [சரஸ்வதி] ஞானக்கூத்தன் சா.கந்தசாமி [கசடதபற], பரந்தாமன் [அஃ], சிவராமன் [நடை], ஞாநி [தீம்தரிகிட], ரவிசங்கர் [பிரக்ஞை ], ஞானி [நிகழ்], எஸ்.என்.நாகராஜன்[புதியதலைமுறை], சிற்பி, நா.காமராஜன் [வானம்பாடி], அ.மார்க்ஸ், ரவிக்குமார் [நிறப்பிரிகை], பிரேம் [சிதைவு ], கஸ்தூரிரங்கன், அசோகமித்திரன் [கணையாழி], நா.பார்த்தசாராதி [தீபம்], பாக்கியமுத்து, சரோஜினி பாக்கியமுத்து[நண்பர்வட்டம்], ஆ.அமிர்தராஜ் [அரும்பு], ஆத்மாநாம் [ழ], தமிழவன் [இங்கே இன்று], பிரம்மராஜன் [மீட்சி], பொன்விஜயன் [புதியநம்பிக்கை], வனமாலிகை[சதங்கை], ராஜகோபாலன், ராஜமார்த்தாண்டன் [கொல்லிப்பாவை], உமாபதி[தெறிகள்], சுந்தரசுகன் [சுகன்], வெங்கட்சாமிநாதன், அ.கா.பெருமாள் [யாத்ரா], கால. சுப்ரமணியன் [லயம்], சுப்ரபாரதிமணியன் [கனவு], கி.ராஜநாராயணன்[கதைசொல்லி], மகாதேவன் [முன்றில்], அழகியசிங்கர் [விருட்சம்] மு.ஹரிகிருஷ்ணன் [மணல்வீடு] லட்சுமி மணிவண்ணன் [சிலேட்] ரோஸ் ஆண்டோ[படிகம்] என இந்த மரபில் நினைவுகூரப்படவேண்டிய சிற்றிதழ்களும் அவற்றை நடத்தியவர்களும் பலர் உண்டு

அன்று எழுதவந்த அனைவருக்கும் சிற்றிதழ் நடத்தும் கனவு இருந்தது. நான் ’சொல்புதிது’ என்னும் சிற்றிதழை நண்பர்கள் எம். கோபாலகிருஷ்ணன், சதக்கத்துல்லா ஹசநீ ஆகியோருடன் இணைந்து நடத்தியிருக்கிறேன்; அசோகமித்திரன், ஜெயகாந்தன் முதலிய மூத்த படைப்பாளிகளையும் பாவண்ணன், யுவன் சந்திரசேகர் போன்ற இளம்படைப்பாளிகளையும் அட்டையில் வெளியிட்டு முதன்மைப்படுத்தியது சொல்புதிது. எஸ். ராமகிருஷ்ணன் ’அக்‌ஷரம்’ என்னும் சிற்றிதழை நடத்தியிருக்கிறார். கோணங்கி கல்குதிரை என்னும் சிற்றிதழையும் யூமாவாசுகி குதிரைவீரன் பயணம் என்னும் சிற்றிதழையும் நடத்திவருகிறார்கள்.

தொண்ணூறுகளில் அச்சிதழ்களில் இடைநிலை இதழ்கள் தோன்றலாயின. எண்பதுகளின் இறுதியில் ’தமிழினி’ வசந்தகுமார் [புதுயுகம் பிறக்கிறது] எஸ்.வி.ராஜதுரை [இனி] போன்ற சில முயற்சிகள் நிகழ்ந்தாலும் நீடிக்கவில்லை. முதல் வெற்றிகரமான இடைநிலை இதழ் கோமல்சுவாமிநாதனின் சுபமங்களாதான். அதன் வெற்றி அதற்குமுன் சுந்தர ராமசாமியால் சிற்றிதழாக ஆரம்பிக்கப்பட்டு நின்றுவிட்டிருந்த காலச்சுவடை அவரது மகன் கண்ணன் சுந்தரம் இடைநிலை இதழாக மாற்றி கொண்டுவர வழிசெய்தது. மனுஷ்யபுத்திரன்முயற்சியால் உயிர்மை உருவாகியது. திலகவதி பொறுப்பில் அமிர்தா சுதீர் செந்தில்முயற்சியில் உயிரெழுத்து ஆகியவை இடைநிலை இதழ்களாக இன்று வெளிவந்துகொண்டிருக்கின்றன

சுபமங்களாவுக்கு ஊக்கமளித்த முன்னோடி நிகழ்வு ஐராவதம் மகாதேவன்தினமணி ஆசிரியராகியதும் தமிழ்மணி என்னும் இலவச இணைப்பை நவீன இலக்கியத்திற்காக ஒதுக்கியதும். தமிழ் பொதுவாசகர்களுக்கு புதுமைப்பித்தன் பெயரே அப்படித்தான் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டது. மாலன், வாசந்திஆகியோர் இந்தியா டுடே ஆசிரியர்களாக வந்தபோது நவீன இலக்கியத்தை அதில் அறிமுகம் செய்தனர். அதுவும் ஒரு ஊக்கத்தை அளித்தது

இரண்டாயிரத்தில் இரு முக்கியமான மாற்றங்கள் நிகழ்ந்தன. இணையம் பிரபலமாகியது. இணையம் வழியாக உலகமெங்கும் தமிழ்நூல்கள் அறிமுகமாகத் தொடங்கின. இணையம் இலக்கிய விவாதக்களமாக ஆகியபோது அனேகமாக எல்லா இலக்கியவாதிகளும் அறிமுகமாயினர். கூடவே சென்னை புத்தகக் கண்காட்சி வெற்றிகரமாக நிகழத்தொடங்கியது. இலக்கியவாசிப்பு இன்றிருக்கும் அளவுக்கு தமிழில் என்றுமே இருந்ததில்லை. இன்றைய அளவுக்கு நூல்கள் விற்கப்பட்டதே இல்லை. இது இவ்வாறு உருவாகி வந்த வளர்ச்சிதான்.

இந்த வளர்ச்சியில் ஒவ்வொரு இலக்கியவாதியும் தங்கள் பங்களிப்பை ஆற்றியிருக்கிறார்கள். பேரிதழ்களுடன் தொடர்பு கொண்டிருந்த எழுத்தாளர்கள் இலக்கியத்தை அங்கே கொண்டு சென்று சேர்க்க தங்களால் முடிந்தவரை முயன்றிருக்கிறார்கள். நா.பார்த்தசாரதி, சுஜாதா, பாவைச் சந்திரன் போன்றவர்களின் முயற்சிகள் வழியாகவே சிற்றிதழ் சார்ந்த இலக்கியம் பொதுச்சூழலில் அறிமுகமாகியது.

சுந்தர ராமசாமி, அசோகமித்திரன், இந்திரா பார்த்தசாரதி போன்ற முதன்மைப்படைப்பாளிகள் பேரிதழ்களில் எழுத வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் சிற்றிதழ்சார்ந்த இலக்கியத்தை கொண்டுசென்று அறிமுகம் செய்ய முயன்றிருக்கிறார்கள். இளம் எழுத்தாளனாக நான் அறிமுகமானபோது இவர்கள் அனைவராலும் தொடர்ந்து வாசகர்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டேன்.

எஸ். ராமகிருஷ்ணன் ஆனந்த விகடனில் எழுதத் தொடங்கியபோது கதாவிலாசம் என்னும் தொடர் வழியாக தமிழின் அத்தனை முக்கியமான எழுத்தாளர்களையும் பொதுவாசகர்களுக்குக் கொண்டு சென்றார். நான் பெரிய இதழ்களில் அதிகம் எழுதியதில்லை. எழுதிய தருணங்களில் எல்லாம் எழுத்தாளர்களை அறிமுகம் செய்திருக்கிறேன்.

என் இணையதளத்தில் தமிழின் நவீன இலக்கியத்தின் அத்தனை எழுத்தாளர்களைப் பற்றியும், இலக்கிய இயக்கங்கள் பற்றியும் மிகவிரிவான குறிப்புகள் உள்ளன. உண்மையில் இத்தனைபெரிய ஒரு தொகுப்பு இணையத்தில் வேறில்லை இன்று. இலக்கிய வாசகர்களுடன் தொடர்ச்சியாக உரையாடுகிறேன். இலக்கிய வாசிப்பின் சிக்கல்களை விளக்குகிறேன். புதிய இலக்கிய வாசகர்களுக்காக விரிவான தகவல்களுடன் நவீன இலக்கிய அறிமுகம் என்னும் நூலை எழுதியிருக்கிறேன். இந்திய இலக்கியங்களை அறிமுகம் செய்யும் ‘கண்ணீரைப்பின் தொடர்தல்’ சமகாலத் தமிழ்ப் படைப்பாளிகளை அறிமுகம் செய்யும் ‘புதியகாலம்’ போன்ற நூல்களை எழுதியிருக்கிறேன்

சாரு நிவேதிதா ரசனைமுறையில் கடுமையான விமர்சனங்கள் கொண்டவர் என்றாலும் அவர் பிரபல ஊடகங்களில் எழுதிய பழுப்புநிறப் பக்கங்கள் போன்ற எழுத்துக்களில் நவீன இலக்கிய இயக்கத்தை மிக விரிவாக அறிமுகம் செய்திருக்கிறார். இதுதான் சென்றகால இலக்கிய இயக்கம்மீது பற்றுள்ளவர்களின் வழிமுறையாக இருக்கிறது.

12.jpeg

ஆனால் துரதிருஷ்டவசமாக இன்று கசப்பூட்டும் ஒரு போக்கு உருவாகியிருக்கிறது, அதை ஆரம்பத்திலேயே சுட்டிக்காட்டியிருக்கவேண்டும். அது இளையோர் மீதான ஒரு கண்டனமாக ஆகக்கூடும் என்னும் தயக்கம் என்னிடம் இருந்தது. ஆனால் அது இன்று தொடர்ந்து வளர்ந்துவருகிறது.இப்போதாவது அதைப் பதிவுசெய்தாகவேண்டும் – இப்படி நடக்கிறது என்பதை இலக்கியவாசகர்கள் உணர்ந்துகொள்ளவேண்டும் என்பதற்காக. வரலாற்றுப்பதிவுக்காக

சிற்றிதழ்சார்ந்த நவீன இலக்கியம் மிகுந்த அர்ப்பணிப்புகொண்ட உழைப்பின் விளைவாக மெல்ல இன்று பரவலாக அறிமுகமாகிறது. அதற்கு வாசகர்கள் உருவாகி வருகிறார்கள். பிரபல ஊடகங்கள் அதைக் கவனிக்கின்றன. அதற்குச் சில பக்கங்கள் ஒதுக்குகின்றன. அதில் பணியாற்றும் வாய்ப்பைச் சில இளைய எழுத்தாளர்கள் பெறுகிறார்கள். பெரும்பாலும் இவர்கள் முதிராவாசகர்கள், ஆரம்பகட்ட எழுத்தாளர்கள்

இவர்களில் சிலர் அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளும் விதம் மிக வருத்தம் அளிப்பது. இலக்கிய வம்புகளையும் தங்கள் முதிர்ச்சியில்லா கருத்துக்களையும் மட்டுமே அதன் பக்கங்களில் கொண்டுசெல்ல இவர்கள் முயல்கின்றனர். வசைபாடி எவர் எழுதினாலும் அச்சேற்றுகின்றனர்.சென்ற காலங்களில் சிற்றிதழ்களைச் சிறுமைப்படுத்தி கேலிப்பொருளாக்கும் பலநிகழ்வுகளை இவர்கள் அங்கே பிரசுரம் செய்தனர்.

குமுதம் இதழ் தீராநதி என்னும் இலக்கிய இதழை ஆரம்பித்தபோது அதை வெற்றுவசைகளால் நிரப்பி கிட்டத்தட்ட இன்று அது அழிந்து இல்லாமலாகும் நிலைக்குக் கொண்டு சென்றது இவர்களின் ஆளுமைச் சிறுமை. ஒன்று, தனிப்பட்ட காழ்ப்புகள். இரண்டு இயல்பாகவே வம்புகளில் உள்ள ஆர்வம்.

ஆனால் மிக ரகசியமானவர்கள் இவர்கள். ஒரு கீழ்வம்பு பிரசுரமாகும்போது அதன் பொறுப்பை ஏற்றுக்கொள்ள மறுத்துவிடுவார்கள். உதாரணம் சொல்கிறேன். ஒரு கவிதைநூலை சில கவிஞர்கள் சென்னை பறக்கும்ரயிலின் ஒரு பெட்டியில் வைத்து வெளியிட்டனர். பங்கேற்பாளர்கள் பதினைந்துபேர்தான். அன்று பறக்கும்ரயில் காலியாகவே ஓடும், எதற்கு கூடம் வாடகைக்கு எடுக்கவேண்டும் என அங்கேயே விழாவை நடத்தினர். குமுதம் இதழ் ‘கவிதைநூலை கிழித்துச் சாக்கடையில் வீசி வெளியீட்டுவிழா” என செய்தி வெளியிட்டது. இன்றுவரை அச்செய்தியை எழுதியது எவர் எனத் தெரியாது.அவர் சிற்றிதழ்ச்சூழலிலும் இயங்கும் ஓர் இதழாளர் என்பது மட்டும் தெளிவு

aravindan

அரவிந்தன், தமிழ் ஹிந்து

இன்று இதேபோல வரலாற்றினால் அளிக்கப்பட்ட நல்வாய்ப்பை இயல்பான கீழ்மையால் அழித்துக்கொண்டிருக்கும் இருவரைச் சுட்டிக்காட்டியாகவேண்டும். ஒருவர் தமிழ் ஹிந்து நாளிதழின் இலக்கியப் பகுதிகளின் ஆசிரியராகச் செயல்படும் அரவிந்தன். அடிப்படையில் எந்தக்கூர்மையும் இல்லாத மழுங்கலான ஆளுமை கொண்டவர். அந்நாளிதழில் இவர் எழுதும் வெறும் அரட்டைகளான எட்டுபக்க அரசியல் கட்டுரைகளை பதினைந்து வரிகளாகச் சுருக்கிவிடமுடியும். அதைவிட அவர் எழுதிய நாவல்களை அட்டை மட்டுமாகச் சுருக்கிவிடமுடியும். இத்தகைய மழுங்கல் மனிதர்களுக்கு வம்புகளில் வரும் ஆர்வம் மிக ஆச்சரியமூட்டுவது

தமிழ் ஹிந்து நாளிதழ் தமிழில் நிகழ்ந்துவரும் ஒரு அரிய நிகழ்வு. தமிழில் தரமான இலக்கியத்தை, கருத்துச்செயல்பாட்டை அறிமுகம் செய்யும் ஒரு பெருமுயற்சி என்பது எவ்வகையிலும் நவீன இலக்கியம்சார்ந்த ஒருவருக்கு மனஎழுச்சி ஊட்டுவது. ஆனால் இவர்கள் பசுமரத்திலும் படர்ந்தேறும் கறையான்கள். இத்தகைய அத்தனை முயற்சிகளிலும் முதலில் கறையான்கள் எப்படி குடியேறுகின்றன என எண்ணி எண்ணி வியப்பதைத் தவிர வேறுவழியில்லை.

அரவிந்தன் காலச்சுவடு இதழுக்கு நெருக்கமானவர். அப்பிரசுரங்களின் பொறுப்பில் இருக்கிறார் என்கிறார்கள். தானும் பங்குபெறும் காலச்சுவடு பதிப்பகத்தின் நூல்களை பிரச்சாரம் செய்வதற்காகவே தமிழ்ஹிந்துவின் இலக்கியத்துக்குரிய பக்கங்களை பயன்படுத்திக்கொள்கிறார் அரவிந்தன். காலச்சுவடு நூல்கள் மேல் மிதமிஞ்சிய புகழ்களை ஆசிரியர் கூற்றாக எழுதிவைப்பது [உதா: சென்ற 2016 ஆண்டு தமிழிலக்கியத்தில் தேவிபாரதிவருடம் என கொண்டாடப்படுகிறது- தமிழ் ஹிந்துவின் சென்றவருட இலக்கிய அவதானிப்பு] அந்தக் குழுவின் எழுத்தாளர்களைக் கொண்டு மாறிமாறி மதிப்புரை எழுதச்செய்வது.

இதைக்கூட பொறுத்துக் கொள்ளலாம், இந்தச் சிறிய ஆசாமியின் காழ்ப்புகளை அந்த மாபெரும் மேடை ஏன் தாங்கவேண்டும்? தமிழ்ஹிந்துவின் இலக்கியப் பக்கங்களில் இன்றுவரை நான் இடம்பெற்றதில்லை. பிறரால் தயாரிக்கப்படும் அதன் பொதுப்பக்கங்களுக்காக மட்டுமே என்னிடம் படைப்புகள் கோரப்பட்டுள்ளன. அதன் இலக்கியப்பக்கங்களில் இன்று தமிழில் எழுதப்பட்டுக் கொண்டிருக்கும் மிகப்பெரிய இலக்கியமுயற்சியான வெண்முரசு பற்றிகூட ஒரு சொல் எழுதப்பட்டதில்லை.

இந்த அச்சிதழ் அல்ல, எந்த அச்சிதழும் எனக்கு நேற்றும் இன்றும் ஒரு பொருட்டாக இருந்ததில்லை. எனக்கு ஊடகமாக அவை தேவையும் இல்லை. இன்று எந்த அச்சிதழும் என் இணையதளம் அளவுக்கு இலக்கிய வாசகப்பரப்பு கொண்டது அல்ல. ஆகவே அரவிந்தனின் சிறுமை எனக்கு ஓரு தனிப்பட்டப் பிரச்சினை அல்ல. ஆனால் நம் சூழலில் அரிதில் நிகழும் ஒன்றைக்கூட தன் சிறுமைக்குக் களமாக ஆக்கும் கீழ்மையே அருவருப்பூட்டுகிறது.

நான் மட்டும் அல்ல சாரு நிவேதிதா, மனுஷ்யபுத்திரன் எவரும் அப்பகுதிகளில் எழுதவைக்கப்பட்டதில்லை. அவர்களைப் பற்றிய நக்கல்களும் கிண்டல்களும் மட்டுமே அவற்றில் அச்சாகியிருக்கின்றன. நாங்கள் காலச்சுவடு முகாமின் எதிர்விமர்சகர்கள். ஆனால் காலச்சுவடு இதழின் ஆதரவாளர்களான் நாஞ்சில்நாடன், யுவன் சந்திரசேகர் குறித்துக்கூட அரவிந்தன் பொறுப்பில் உள்ள தமிழ் ஹிந்து பக்கங்களில் செய்திகளோ கட்டுரைகளோ வந்ததில்லை. காரணம் இவர் பொறுப்பில் காலச்சுவடு இருந்தபோது அதில் இவர் எழுதிய மொண்ணைக்கதைகளையும் அதைப்பாராட்டி இவரே வெளியிட்டுக்கொண்ட கடிதங்களையும் எங்கோ ஓரிருவரிகளில் இவர்கள் விமர்சனம் செய்திருக்கிறார்கள்.

தமிழின் எந்த முக்கியமான எழுத்தாளர்கள் தமிழ் ஹிந்துவில் இடம்பெற்றிருக்கிறார்கள் என்று மட்டும் பாருங்கள். கண்மணி குணசேகரன், சு.வேணுகோபால், எம்.கோபாலகிருஷ்ணன், சு.வெங்கடேசன் என தமிழில் தீவிரமாக எழுதிக்கொண்டிருக்கும் எவரையும் தமிழ் ஹிந்துவின் பக்கங்களில் காணமுடியாது. ஏனென்றால் இந்த சில்லறை ஆத்மாவை அவர்கள் புனைவாளராக பொருட்படுத்தியதில்லை.

தமிழ் ஹிந்துவுக்கு இதைப்பற்றி வெவ்வேறு புகார்கள் இதற்குமுன்னரும் அனுப்பப் பட்டுவிட்டன. குறிப்பாக நற்றிணை யுகன் நேரடியாகவே ஆதாரங்களுடன் அவர்களின் நிர்வாகத்துக்கே எழுதியிருக்கிறார். ஆனால் அரவிந்தன் அவர் பணியாற்றும் நிறுவனங்களின் அதிகார அமைப்புகளுடன் தொற்றிக்கொள்ளும் கலையறிந்தவர். பொதுவாக ஆளுமைச் சிறுமை கொண்ட இத்தகையவர்களுக்கு தங்கிவாழும் கலை தெரிந்திருக்கும். குடல்புழுக்களை எளிதில் அகற்ற முடியாது, அவற்றுக்கிருக்கும் தொற்றும் வல்லமை பிற உயிர்களுக்கு இருக்காது.

1

கௌதம சித்தார்த்தன்

இன்னொருவர் கௌதம சித்தார்த்தன். இருபதாண்டுகளாக எனக்கு இவரை சிற்றிதழ்ச்சூழலில் சுற்றிக்கொண்டிருப்பாவராகத் தெரியும். கால்முதல் தலைவரை போலியான மனிதர். போலித்தனத்திற்குப் பின்னாலிருப்பது ஆழமான தாழ்வுணர்ச்சி. ஏனென்றால் முறையான கல்வி இல்லை. ஆங்கிலத்தில் அடிப்படையாகக் கூட வாசிக்கமுடியாது. இணையம் வந்தபின் தினம் ஒரு ஆங்கில நூலை வாசித்ததாக சொல்கிறார் என்கிறார்கள். எதுவும் தமிழ்நாட்டில் சாத்தியம்தான். நானறிந்தவரை ஒரே ஒரு சிறுகதை மட்டும் வாசிப்புத்தகுதி கொண்டதாக எழுதியிருக்கிறார். மற்றபடி அசட்டு முதிரா எழுத்து மட்டுமே. ஆகவே இயல்பாக எங்கும் எவராலும் பொருட்படுத்தப்படுவதில்லை, அந்த வன்மமே அவரை ஆட்டுவிக்கிறது. ஒருவகையில் பரிதாபத்துக்குரியவர்.

தமிழ் ஹிந்து வெளிவரத்தொடங்கியதும் தினமலர் சிலபக்கங்களை இலக்கியத்திற்கு ஒதுக்கலாமென முடிவுசெய்தது. உண்மையில் இது தமிழிலக்கியத்திற்கு ஒரு பெரிய வாய்ப்பு. அக்கணம் வரை இலக்கியம் என்றால் என்னவென்றே அறிந்திராதவர்களுக்கு முன்பாக அறிவுலகைத் திறந்துவைப்பதற்கான சந்தர்ப்பம் அது. பல்லாயிரம் இளைஞர்கள் பயன்கொண்டிருக்கக்கூடும். ஆனால் அவர்கள் சிலபல தொடர்புகள் காரணமாக தேர்ந்தெடுத்தது கௌதம சித்தார்த்தனை. தவறான தேர்வுகள் நிகழலாம், ஆனால் நம் சூழலில் முட்டாள்தனமான தேர்வுகள் மட்டுமே தவறாமல் எப்படி நிகழ்கின்றன என்பது எண்ண எண்ண வியப்பூட்டுவது.

தினமலரின் பக்கங்கள் தாழ்வுணர்ச்சியின் வன்மம் நிறைந்த இந்த நபரால் கிட்டத்தட்ட கழிவறை போல பயன்படுத்தப்படுகின்றன. நவீனத்தமிழிலக்கியத்தின் ஒட்டுமொத்தச் செயல்பாடே கீழ்மையானது என்றும், நவீன எழுத்தாளர்கள் அங்கீகாரத்திற்கு அலையும் இழிபிறவிகள் என்றும், தான் மட்டும் எஞ்சிய மேதை என்றும் தொனிக்க நக்கல் கிண்டல் மட்டும் நிறைந்த அசட்டு எழுத்துக்கள் இவரால் எழுதப்பட்டன.

உண்மையில் இலக்கியச்சூழல் என்னும் சிறிய வட்டத்திற்குள் உள்ள தனிப்பட்ட காழ்ப்புகளுக்கு அவ்வளவுபெரிய மேடையைக் களமாக்குவதில் உள்ள மடமைகூட இவர்களுக்கு உறைக்கவில்லை. அந்தக்களத்தில் எவருக்கும் இவர்கள் எவர் மேல்நஞ்சைக் கக்குகிறார்கள் எவரை கொட்டுகிறார்கள் எதுவுமே தெரியாது. யாரோ யாரையோ எதனாலோ ஏதோ சொல்கிறார் என வாசித்துச்செல்கிறார்கள்.

இது தமிழ்நாட்டின் கீழ்மனநிலைகளில் ஒன்று. ஓர் அலுவலகத்தில் கோப்புகளை எடுத்து அதிகாரியின் மேஜைமேல் வைக்கும்பொறுப்பில் ஒருவர் இருக்கிறார் என்று கொள்வோம், அவர் அதை ஓர் அதிகாரமாக ஆக்கிக்கொள்வார் -முறைகேடாக அச்செயலைச் செய்வதன்மூலம். தனக்கு வேண்டியவரின் கோப்பை மேலே வைப்பார். பகைப்பவரின் கோப்பை எடுத்து ஒளித்துவைப்பார். அந்தச் சிறு அதிகாரத்தைக்கொண்டு அந்த அலுவலகத்தை தன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள முயல்வார். அதைக்கொண்டு ஊழல் செய்வார்.

அவரை நேரில்சென்று பார்த்தால் அந்தத் தோரணை வியப்பூட்டும். நம் மக்களும் அவரை அந்த அலுவலகத்துக்கே தலைவர் என நடத்தி சார் ஐயா என்பார்கள். இந்த அதிகாரம் இங்கு திகழவேண்டும் என்றால் மேலதிகாரியின் கருணை வேண்டும் என இந்த ஆசாமிக்குத்தெரியும். ஆகவே மேலதிகாரிகளுக்கு முன் உருகும் வெண்ணையாக இருப்பார் அவர்.

இவர்கள் இலக்கிய விமர்சகர்கள் அல்ல. சொல்லும்படியான படைப்பாளிகள் அல்ல. நல்ல இலக்கியவாசகர்க்ள் கூட அல்ல. இவர்கள் அந்நிறுவனத்தின் ஊழியர்கள். அந்த இதழ் தரமாகவும் வாசிப்புத்தன்மையுடனும் அனைத்து இலக்கியப்போக்குகளையும் உள்ளடக்கும் இயல்புடனும் இருக்கும்படிச் செய்வது மட்டுமே இவர்களின் பணி. ஆனால் இவர்கள் இலக்கியத்தை ஆட்சிசெய்யும் செங்கோலை ஏந்தியிருப்பதாக கற்பனைசெய்துகொள்கிறார்கள்.

இது தமிழின் தீயூழ் என்றே சொல்லவேண்டும். வரலாறு அளிக்கும் ஒவ்வொரு நல்வாய்ப்பையும் அழிக்கும் கிருமிகளே எங்கும் முந்துகின்றன. அத்தனையையும் கடந்து இங்கே இலக்கியம் நின்றுகொண்டிருப்பது தகுதியறிந்து வாசிக்கும் சிலராலும் அர்ப்பணிப்புடன் எழுதுபவர்கள் சிலராலும் மட்டுமே. நேற்று சிற்றிதழ் நடத்தி தெருத்தெருவாக அலைந்தவர்களின் மரபைச்சேர்ந்தவர்கள், அம்மரபை மதிப்பவர்கள் இன்றும் அதே அர்ப்பணிப்புடன் எழுதிக்கொண்டிருக்கிறார்கள்.

அவர்களிடையே தனிப்பட்ட பூசல்கள் இருக்கலாம், மாறுபட்ட கருத்துக்களும் அதன் விளைவான கசப்புகளும் இருக்கலாம், ஆனால் அடிப்படையில் அவர்களை இயக்குவது இலக்கியம் என்னும் ஒட்டுமொத்த இயக்கம் மீதான நம்பிக்கை மட்டுமே. தமிழ் இலக்கியத்தின் தொடர்ச்சி அவர்களின் கைகளிலேயே உள்ளது. இன்றுவரை இதைக் கொண்டு வந்து சேர்த்த அவர்களால் இக்களைகளைக் கடந்தும் அதைக் கொண்டு சென்று சேர்க்கமுடியும்.

வாசகர்கள் இது குறித்த தங்கள் கண்டனத்தை ஹிந்து தமிழ், தினமலர் ஆசிரியர் மற்றும் பொறுப்பில் இருப்பவர்களுக்குத் தெரியப்படுத்தலாம். பல பதிப்பகங்களின் புகார்கள் சென்றபின்னரும் அரவிந்தன் அதே மூர்க்கத்துடன் நீடிக்கிறார் என்றால், இருப்பவர்களிலேயே மொக்கையான ஒருவரை தினமலர் தெரிவுசெய்கிறது என்றால் அதற்கு நாம் அறியாத காரணங்கள் இருக்கும். ஆகவே புகார்களால் ஆகப்போவதொன்றும் இல்லை. குறைந்தபட்சம் இத்தகைய தருணங்களில் வாசகர்களுக்கு ஒரு பொறுப்பு உண்டு, அவர்கள் எதிர்வினையாற்றுவர் என்பதையாவது அவர்கள் தெரிந்துகொள்ளட்டும்.

http://www.jeyamohan.in/94596#.WIL4bIHfVR4

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: DIGITAL DESK 7 18 APR, 2024 | 05:21 PM   ( எம்.நியூட்டன்) யாழ்ப்பாணத்தில் இருந்து நள்ளிரவு வேளை சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு திருகோணமலைக்கு கொண்டு செல்லப்படுவதாக மக்கள் என்னிடம் முறையிட்டுள்ளார்கள் இது தொடர்பில் மக்களால் முறையிடப்பட்ட இடங்களை பார்வையிட்டபோது அங்கு 20 முதல் 25 அடிவரை அகழப்பட்டு இருக்கிறது. அவ்வாறு  அகழப்பட்ட சுண்ணகற்கள் பிறிதொரு இடத்திற்கு கொண்டு சென்று சேர்த்த பின்னர் நள்ளிரவு வேளை  திருகோணமலைக்கு கொண்டுசெல்லப்படுகிறது. இந்த செயற்பாட்டிற்கு யார் அனுமதி வழங்கியது?   கற்களை அகழ்வதற்கு எந்த திணைக்களம் பொறுப்பு கூறுவது இராணுவம், பொலிஸாரின் அனுமதியுடன் இது நடைபொறுகிறதா? யார் தான்  பொறுப்பு கூறுவது? 12,14 கன்ரர், டிப்பர் வாகனங்களில்  கற்களை கொண்டு செல்கிறார்கள்.  நள்ளிரவில் இந்த வேலைகளை செய்வதால் இரவு கடமையில் நிற்கும் பொலிஸார் இராணுவத்தினர் இதனை கொண்டு செல்வதற்கு அனுமதி வழங்கிறார்களா? ஒருங்கிணைப்பு   குழு கூட்டத்தில் வடக்கு மாகாண ஆளுநர் இணைத்தலைவர்களில் ஒருவராகிருக்கிறார்.  அமைச்சரும் இணைத்தலைவர்களில் ஒருவராக இருக்கிறார். எனவே இந்த விடயத்தில் யாரால் இந்த செயற்பாடு நடைபெறுகிறது. இதனை நிறுத்துவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றார். இதன்போது வடக்கு மாகாண ஆளுநர் பொலிஸார் இராணுவத்தினரிடம் இவை தொடர்பில் நள்ளிரவு வேளை கடமையில் இருக்கின்றபோது வீதியில் செல்லும் கனரக வாகனம், டிப்பர் வாகனங்களை சேதனைக்குட்படுத்தி உரிய அனுமதிகளை சோதனை செய்து அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட்டார். யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு திருகோணமலைக்கு கடத்தப்படுகிறதா ? சிறிதரன் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கேள்வி | Virakesari.lk
    • Published By: DIGITAL DESK 7 18 APR, 2024 | 05:29 PM   யாழ்ப்பாணத்தில் குழாய்க்கிணறுகளைத் தோன்றுவது தொடர்பில் ஆய்வுகளை மேற்கொண்டு முடிவெடுப்பது என யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.  யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் ஆகியோரின் இணைத்தலைமையில்  யாழ் மாவட்ட செயலகத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை நடைபெற்றது.  அதன்போது யாழ்ப்பாணத்தில் அனுமதியற்ற முறையில் அதிகளவான குழாய்க்கிணறுகள் அடிக்கப்பட்டு வருவதாகவும் , அதனால் நிலத்தடி நீர் அற்று போகும் அபாயம் உள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது  அதனை தொடர்ந்து கூட்டத்தில் வாத பிரதிவாதங்கள் எழுந்தன. அதனை அடுத்து குழாய்க்கிணறு அடிப்பதால் ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பில் ஆய்வுகளை மேற்கொண்டு ,அதன் அடிப்படையில் அவற்றை கட்டுப்படுத்துவது தொடர்பில் முடிவெடுக்கப்படும் என தீர்மானிக்கப்பட்டது. அதேவேளை யாழ்ப்பாணத்தில் நடைபெறும் சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்துவது தொடர்பிலும் அது தொடர்பில் கூடிய கவனம் செலுத்தி அவற்றை முற்றாக கட்டுப்படுத்துவது தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் கூட்டத்தில் தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.  யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள் குறித்து ஆய்வு செய்ய நடவடிக்கை | Virakesari.lk
    • Published By: DIGITAL DESK 7 18 APR, 2024 | 05:27 PM   வடக்கு மாகாணத்தில் காணி உறுதிப்பத்திரங்களை கைமாற்றும் நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தபட்டுள்ளதாக யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் ஆளுநர் தெரிவித்துள்ளார். காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கல், மீள் குடியேற்றம், புதிய வீட்டுத்திட்டம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் பி. எஸ். எம். சார்ள்ஸ் கூட்டத்தில் கருத்து தெரிவிக்கையில், இந்த வருட இறுதிக்குள் மீள் குடியேற்ற நடவடிக்கை நிறைவு செய்யப்பட வேண்டும் என ஜனாதிபதி வழங்கியுள்ள பணிப்புரைக்கு அமைய, மீள்குடியேற்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. யாழ் மாவட்டத்தில் ஆயிரத்து 500 குடும்பங்களை சேர்ந்தவர்கள், நண்பர்கள் மற்றும் உறவினர்களின் வீடுகளில் தங்கியுள்ளனர். அவர்களை மீள்குடியேற்றுவது தொடர்பில் விசேட கூட்டம்  நடத்தப்பட வேண்டும். அத்துடன் ஏற்கனவே மீள்குடியேற்றப்பட்ட மக்களின் வீடுகளுக்கான மின்சார விநியோகம் தொடர்பில் துரித நடவடிக்கை எடுக்குமாறு துறைசார் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளேன் . இதேவேளை, வடக்கு மாகாணத்தில் காணி உறுதிப் பத்திரங்களை கைமாற்றும் செயற்பாடுகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.  "உரித்து" காணி உறுதிகளை வழங்கும் நடவடிக்கையை துரிதப்படுத்துவதற்காக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதற்கமையை மே மாத நிறைவுக்குள்  வடக்கு மாகாணத்தில் 60 ஆயிரம் பேருக்கான  காணி உறுதிப் பத்திரங்கள் கையளிக்கப்படவுள்ளன. வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படவுள்ள வீட்டுத் திட்டம் தொடர்பான கலந்துரையாடல்கள் மற்றும் திட்டமிடல்கள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த திட்டத்தில் நெடுந்தீவு மக்களுக்கான 76 வீடுகளும் உள்வாங்கப்பட்டுள்ளது என வடக்கு மாகாண ஆளுநர் தெரிவித்தார்.  மே மாத இறுதிக்குள் வடக்கில் 60 ஆயிரம் பேருக்கு காணி உறுதி வழங்கப்படும் - வடக்கு ஆளுநர் | Virakesari.lk
    • காங்கிரஸ் கட்சியின் பூத் ஏஜென்ட் காங்கிரஸ் சின்னத்தில் வாக்களித்துள்ளார். அப்போது விவி பேட் மிஷினில் காங்கிரஸ் சின்னம் மற்றும் வேட்பாளர் பெயருடன் ஒரு ரசீதும், அடுத்ததாக பா.ஜ.க-வின் தாமரை சின்னம் பொறித்த ரசீதும் பதிவாகி வந்துள்ளது. கேரள மாநிலத்தில் 3-ம் கட்டமாக வரும் 26-ம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. அதற்கு முன்னோட்டமாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சோதனை நடத்தப்பட்டு, தாலுகா அலுவலகங்களுக்கு அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று காசர்கோடில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் அனைத்து கட்சியினர் சார்பில் மோக் போல் (Mock Poll) நடத்தப்பட்டது. காங்கிரஸ் கட்சியின் பூத் ஏஜென்ட் காங்கிரஸ் சின்னத்தில் வாக்களித்துள்ளார். அப்போது விவி பேட் மிஷினில் காங்கிரஸ் சின்னம் மற்றும் வேட்பாளர் பெயருடன் ஒரு ரசீதும், அடுத்ததாக பா.ஜ.க-வின் தாமரை சின்னம் பொறித்த ரசீதும் பதிவாகி வந்துள்ளது. இதையடுத்து எந்த சின்னத்திலும் ஒருமுறை வாக்களித்தால் இரண்டு வாக்குகள் பதிவாவதாகவும், அதில் மற்றொரு வாக்கு பா.ஜ.க-வுக்கும் பதிவாவதாக புகார் எழுந்தது. மோக் போலிங்கில் முதல் ரவுண்டில் இது போன்ற பிரச்னை எழுந்ததாகவும், ஒவ்வொரு வேட்பாளருக்கும் தலா ஒரு ஒட்டு வீதம் செலுத்தியபோது, பா.ஜ.க வேட்பாளருக்கு கூடுதலாக ஒரு வாக்கு பதிவானதாகவும், முதல் மூன்று ரவுண்டுகளில் அப்படி நடந்ததாகவும், பின்னர் அது சரிசெய்யப்பட்டதாகவும் காங்கிரஸ் கூட்டணியில் காசர்கோடு பூத் ஏஜென்ட்டாச் செயல்படும் செர்க்களா நாசர் ஒரு தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருந்தார்.         மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாதிரிப் படம் அதே சமயம், முதலில் உள்ள வேட்பாளரின் சின்னம் ஒரு டம்மி ரசீதாக பதிவாகும் எனவும், அந்த ரசீது மற்ற ரசீதுகளைவிட அளவில் சிறியதாக இருக்கும் எனவும, அது எண்ணுவதற்கு தகுந்தது அல்ல என ரசீதிலேயே குறிப்பிடப்பட்டிருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது ஒருபுறம் இருக்க மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்துடன் பொருத்தப்பட்டுள்ள விவி பேட் ரசீதுகளையும் எண்ண வேண்டும் என பிரசாந்த் பூஷன் சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கு இரண்டாவது நாளாக இன்று விசாரணைக்கு வந்த நிலையில், காசர்கோடில் மோக் போலிங்கில் ஏற்பட்ட குழறுபடி குறித்தும் கோர்ட்டின் கவனத்துக்கு கொண்டுசென்றிருந்தார்.     தேர்தல் ஆணையம் அது குறித்து இன்று மதியத்துக்கு மேல் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் குழறுபடி செய்ய வாய்ப்பே இல்லை எனவும், காசர்கோடில் பா.ஜ.க-வுக்கு அதிக வாக்குகள் பதிவாவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு தவறானது எனவும், ஒரு பத்திரிகையில் வந்த செய்தியின் அடிப்படையிலே பிரசாந்த் பூஷன் அதை தெரிவித்துள்ளதாகவும் தேர்தல் ஆணையம் கூறி உள்ளது. மேலும், காசர்கோடு கலெக்டர் மற்றும் ரிட்டனிங் ஆபீசர் ஆகியோர் இது குறித்து அறிக்கை சமர்ப்பித்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பான விரிவான அறிக்கையை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்ய உள்ளதாகவும் தேர்தல் ஆணையம் சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்துள்ளது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்து எதிர்க்கட்சிகள் அடிக்கடி சந்தேகம் கிளப்பிவரும் நிலையில், மோக் போலிங்கில் எழுந்துள்ள குளறுபடி சர்ச்சையாகியுள்ளது. இ.வி.எம்-மில் பாஜக-வுக்கு அதிக வாக்குகள் பதிவாகின்றனவா? - சர்ச்சையும் தேர்தல் கமிஷன் விளக்கமும்! | Reports of EVMs showing ‘extra votes’ during mock poll in Kerala are false: ECI informs Supreme Court - Vikatan
    • தம்பி கணிதத்தில் வீக் என்று சொன்ன மாதிரி இருந்ததே?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.