Jump to content

தமிழகத்தில் ஏறு தழுவுதலுக்காக நடைபெறும் இளைஞர்களின் எழுச்சி தொடர்பாக உங்கள் கருத்து என்ன? - விவாத களம்


Recommended Posts

வணக்கம்,

மிழகத்தில் ஏறு தழுவுதலுக்காக நடைபெறும் இளைஞர்களின் எழுச்சி தொடர்பாக உங்கள் கருத்து என்ன? எனும் கருத்துக்கணிப்பிற்கான விவாதத்திரி

உங்கள் அபிப்பிராயங்களையும் இப் போராட்டம் தொடர்பான உங்கள் பார்வையையும் பகிருங்கள்

நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இத்தன்னெழுச்சிற்கு தலை வணங்குகிறேன்.. 5.gif

இவ்வொற்றுமை, அனைத்து தமிழ் மற்றும் தமிழர் சம்பந்தப்பட்ட விடயங்களில் மிக கவனமாக விழித்திருந்து அந்நிய சக்திகளின் ஆக்கிரமிப்பு, இனவழிப்பு செயல்களை இனம்கண்டு, தமிழ் இனம், மொழி, கலாச்சாரம் ஆகியன பாதுகாக்கபட வேண்டுமென விரும்புகிறேன்.

jallikkaddu.jpg

 யாழ் இணைய முகப்பில் தமிழக எழுச்சிற்கான தார்மீக ஆதரவிற்கு நன்றி!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏறுதழுவுதல், ஜல்லிக்கட்டு, சிலம்பாட்டம்,குஸ்தி எல்லாம் தமிழினக் கலாச்சாரக் கலைகள். அது அழிந்து போக விடக்கூடாது . ஆயிரமாயிரம் மேடைப் பேச்சுக்களாலும் விளம்பரங்களாலும் செய்ய முடியாததை  இவ் எழுச்சிப் போராட்டம் மிகச்சுலபமாக அடுத்த தலைமுறையிடம் கடத்தி விட்டிருக்கு. அதற்காக இந்த இளஞர்களின் போராட்டத்துக்கு தலை வணங்குகின்றேன்....!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இளம் தலைமுறையின் இவ்வெழுச்சிக்கு தலை வணங்குகின்றேன்

இவ்வெழுச்சியை ஐல்லிக்கட்டு என்னும் தமிழர் பாரம்பரிய விளையாட்டின் ஒழிப்பு சார்ந்து மட்டும் பார்க்கவில்லை

 பலமுறை ஏமாற்றப்பட்ட தமிழினத்தின் குமுறலாகவும்

எல்லாவற்றின் மீட்சிக்குமான எழுச்சியாகவே பார்க்கின்றேன்

அதுவே உண்மையும்  கூட.

எழுச்சியில் பங்குபற்றியுள்ள இளைஞர்களின் பேட்டிகளில் 

அவர்கள் இதுவரை ஏமாற்றப்பட்டதும்

அவை எவை என்பதும் ஒவ்வொருமுறையும் உரக்க சொல்லப்பட்டு வருகிறது

அதில் ஈழத்தமிழரது இனப்:படுகொலையும் முக்கியமானது.


தமிழர்கள் ஒற்றுமைப்படாமல்
தமிழகம் தமிழரின் கையில் வராமல் ஈழத்தமிழருக்கு விடிவில்லை.
அதற்கான காலம் கனிந்து வருகிறது.
நன்றி மறப்பது நன்றன்று.
இதில் சீமானின் பங்கு மிக மிக அதிகம்.
நன்றி நாம் தமிழர் கட்சியினருக்கு.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 பண்பாட்டு நிகழ்வைத் தடை செய்ய இவர்கள் யார்? மாணவர்கள் தொடர்ந்து கடைசிவரை போராட்டத்தைத் தொடர்வார்களா? என்ற கேள்வி உண்டு என்றாலும் தாங்களாகவே ஒன்றிணைந்தமைக்கு வாழ்த்துக்களும் ஆதரவும்.

Link to comment
Share on other sites

இன்றைய இளைஞர்கள் நாளைய தலைவர்கள்.

இளைஞர்கள் தலைவர்களாகி தமிழர்களுக்கான ஒரு நாட்டையும் உலகத்தில் உருவாக்கிக் கொள்வார்கள் என்ற நம்பிக்கையைத் தந்துள்ளது இந்த ஏறுதழுவல் போராட்ட நிகழ்வு.

Link to comment
Share on other sites

இதெல்லாம் சென்ரல் பிஜேபி உள்ளே வருவதுக்கு போடும் அட்சரம் கடந்தகாலம்களில் மாணவர் போராட்டம்களை எப்படி அடக்கினார்கள் ? இப்போது முடியவில்லை காரணம் போராட்டகாரார்மீது கைவைத்தால் பன்னீர்ம் இல்லை மோடி pjb யும் இல்லை இதைவிட இரும்புக்கரம் கொண்டு அடக்க அம்மாவும் இல்லை குள்ளநரி கர்ணாநிதி கடைசி தேர்தலில் வேண்டிக்கட்டின தாக்கத்தில் இருந்து மீளவில்லை அப்படி மீண்டாலும் யார் தலிவர் எனும் பிரச்சினை தமிழ்நாட்டு சதுரங்கம் இப்படி எப்படித்தான் ராஜாவை வெட்டினாலும் வெட்டுபவனுக்கு அதிக பாதிப்பு அதை யோசிக்காமல் கை வைக்க தில் வேணும் ஜல்லிகட்டு தடை அவர்கள் இதுக்காக மாத்திரம் போடுகிறார்கள் என்று நினைத்தால் அது படுமுட்டாள்த்தனம் லட்சம் விவசாய நிலம்களுக்குள்ளால் அத்துமீறி கெயின் குழாய் திட்டம் ,காவிரி நீர் உச்சநீதிமன்றம் டகால்டி விளையாட்டு விவசாயிகளின் தற்கொலைகள்,குப்பை அணுமின்நிலையம் கூடம்குளம்.தமிழ் மீனவர்கள் சாவுகள் இப்படி பலகாரனம்கள். உச்ச நீதி மன்றத்தில் வழக்கு இருப்பதால் ஒன்றும் செய்ய முடியவில்லை மோடி சொல்கிறார் அப்படிஎன்றால் உச்ச நீதிமன்றமே நாட்டை நிர்வகிக்கட்டுமே இவர் எண்ணத்துக்கு ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"ஏமாறுபவன் இருந்தால்,  ஏமாற்றிக்  கொண்டே..... இருப்பவனுக்கு  கொண்டாட்டம்." என்று சொல்வார்கள்.

கடந்த மூன்று வருடமாக... ஜல்லிக் கட்டுக்கு விதித்த தடையை நீக்க ஏதாவது  செய்வார்கள்  என்று, தமிழக மக்கள்.... மாநில அரசையும்,  மத்திய அரசையும், நீதி மன்றத்தையும் எதிர் பார்த்தார்கள். :unsure:

ஒவ்வொரு தைப்பொங்கலுக்கு மட்டுமே.... இதனை விவாதப் பொருளாக்கி.... கடைசியில், கைவிரித்துக் கொண்டு இருந்ததை, அமைதியாக பார்த்துக் கொண்டு இருந்த தமிழக மக்கள், இனி.... இவங்களை நம்பி பிரயோசனம்  இல்லை என்ற முடிவுக்கு.... வந்து,  அந்தப் போராட்டத்தை  எந்த அரசியல் கட்சிகளும் உள் நுழைந்து, குழப்பியடிக்காமல் இருக்க, ஆரம்பத்திலேயே... அவர்களை அதில் தலையிட வேண்டாம் என்று சொல்லி, தொடங்கிய போராட்டம், நல்ல ஆரம்பம்.:)

நல்ல தீர்ப்பு கிடைக்கும் என்று,  நம்பிய நீதிமன்றமே...   
"உனக்கு  காளையை... அடக்க விருப்பம் என்றால், முதலில்.... சிங்கத்தை அடக்கு"
என்ற.... கேனைத்தனமான  கேள்வி, அனைத்து.... தமிழக மக்களையும், உசுப்பி விட்டது. :shocked:

குறிப்பிபிட்ட  சில மாவட்டங்களில்... மட்டுமே நடந்து கொண்டு இருந்த,  ஏறு தழுவுதல் விளையாட்டை.... இனி.....தமிழகம் முழுவதும்  விளையாட வைக்க, அத்திவாரம் போட்ட....  பீட்டா அமைப்பிற்கும்,  அரசியல் வாதிகளுக்கும், நீதிமன்றத்துக்கும் நன்றி. :grin:

இனி... எந்த விடயத்திலும் தமிழனை, எவராலும்.... ஏமாற்ற முடியாது. என்பதனை.... இந்த, ஜல்லிக்கட்டு  போராட்டம், கட்டியம் கூறி நிற்கும் என்பது... நிதர்சனமான உண்மை.:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த வாக்குப்பதிவு திரும்ப திரும்ப வாக்களிக்கும் வண்ணம் எந்தவித பாதுகாப்பும் இல்லாமல் உள்ளது..

தயவுசெய்து திருத்தியமைக்கவும்!

Link to comment
Share on other sites

எனது பார்வை, வாழ்வியல் அனுபவங்களின் அடிப்படையில் நான் கூறக்கூடியது. உணர்ச்சிபூர்வமான காரியங்களை விட அறிவுபூர்வமான காரியங்களே பயன்மிக்கவை.

நாங்களும் ஒரு இலட்சத்து இருபதாயிரம் தமிழ் மக்கள் கனடா டொரோன்டோ மாநகரில் அமைதியான முறையில் மனிதச்சங்கிலி செய்தோம். எமக்கு இவை எல்லாம் புதினமான விடயங்கள் இல்லை. மாணவர் சக்தி மாபெரும் சக்தி... இந்த வாசகங்கள் இதனையும்விட உணர்ச்சிகரமான வாசகங்களை எல்லாம் கடந்து வந்தது எங்கள் பாதை.

கூட்டிக்கழித்துப்பார்த்தால் சந்தில் சிந்து பாடுபவர்கள்... போராட்டங்கள் மூலம் தமது சுயலாபங்களை சம்பாதிப்பவர்கள், அப்பாவி மக்களின் உணர்வுகளை ஏணியாக பயன்படுத்தி தாம் வானத்தின் உச்சியை தொட்டுவிடப்பார்ப்பவர்கள் வாழும் உலகம் இது.

பல்வேறு விடயங்களில் உலகில் தமிழ்நாடு மிகவும் சக்தி பொருந்திய பகுதி. மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுவது நிச்சயம் வரவேற்கத்தக்கது. அதேசமயம், யதார்த்தம் புரியவேண்டும், தமது எல்லைகள் எவை என்பது தெரியவேண்டும். ஆழமறியாமல் காலை விடக்கூடாது. நாங்கள் பட்ட அல்லல்களை தமிழ்நாட்டு மக்களும் அடையக்கூடாது. இந்தவகையில் நிதானம் அவசியம். போராட்டங்களில் ஈடுபடுபவர்கள் தமது தனிப்பட்ட வாழ்க்கை பாதிக்கபடாதவண்ணம் கவனம் செலுத்தவேண்டும்.

வெளிமாநிலத்தவர், மத்திய அரசை குறைபிடிக்கமுன்னர் தமிழ்நாட்டிலேயே உள்ள திருட்டுக்கும்பல்களை இனம்கண்டு புறக்கணிக்கும் பக்குவம் மக்களிற்கு ஏற்படவேண்டும். தமிழ்நாட்டு மக்கள் முறையான தலமையை தெரிவுசெய்து, முறையான அரசை உருவாக்கி இருந்தால் இப்படியான பிரச்சனைகள் எல்லாம் ஏற்பட்டு இருக்காது. வந்தவன், வருபவன் எல்லாம் தானும் தன் கட்சியும் ஆட்சிக்கு வந்து, அதிகாரத்தை பிடித்து என்னத்தை புடுங்கிக்கொண்டு போகலாம் எனும் திருட்டு மனநிலையில் இருக்கும்போது மக்களின் நலன்களில் ஆட்சிபீடத்தில் அமர்ந்து இருப்பவர்களுக்கு எங்கே அக்கறை வரப்போகின்றது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் இவர்களது இப் போராட்டத்திற்கு ஆதரவு அழிக்க்கிறேன்...இவ்வளவு காலம் தாழ்த்தியாவது நாங்கள் தமிழர்கள் அடக்கு முறைக்கு எதிராக போராட வேண்டும் என்ட உணர்வு இவர்களுக்கு வந்ததே வரவேற்க தக்கதொரு மாற்றம்

Link to comment
Share on other sites

உண்மையில் உயிரின சித்திரவதைகளுக்கு முடிவுகட்ட வேண்டுமென்றால் முதலில் தடை செய்யப்பட வேண்டியது ஈழத் தமிழ் மண்ணிலும், வைத்தியசாலைகளிலும்  எல்லைக்கிராமங்களிலும் பல சித்திரவதைகளை, படுகொலைகளை, பாலியல் வன்கொடுமைகளை அரங்கேற்றிவரும் ஒழுக்கமற்ற இந்திய இராணுவக் கும்பலை தான்.

இரண்டாவது தமிழின அழிப்புக்கு பெரும் துணை போகும், இலட்சக்கணக்கான தமிழ் மக்கள் படுகொலைகளுக்கு சில தசாப்தங்களாக பெரும் துணை போகும் இந்திய அரச நிர்வாகத்தை தடை செய்ய வேண்டும். 

இது போன்ற மனித உயிர்களை அழிக்கும் கும்பல்கள் ஒன்றிணைந்து மிருகவதை என்ற பெயரில் தமிழரின் பாரம்பரிய வீரவிளையாட்டுக்களில் ஒன்றான ஜல்லிக்கட்டை தடை செய்திருப்பதை வன்மையாக எதிர்க்கிறேன்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, போல் said:

உண்மையில் உயிரின சித்திரவதைகளுக்கு முடிவுகட்ட வேண்டுமென்றால் முதலில் தடை செய்யப்பட வேண்டியது ஈழத் தமிழ் மண்ணிலும், வைத்தியசாலைகளிலும்  எல்லைக்கிராமங்களிலும் பல சித்திரவதைகளை, படுகொலைகளை, பாலியல் வன்கொடுமைகளை அரங்கேற்றிவரும் ஒழுக்கமற்ற இந்திய இராணுவக் கும்பலை தான்.

இரண்டாவது தமிழின அழிப்புக்கு பெரும் துணை போகும், இலட்சக்கணக்கான தமிழ் மக்கள் படுகொலைகளுக்கு சில தசாப்தங்களாக பெரும் துணை போகும் இந்திய அரச நிர்வாகத்தை தடை செய்ய வேண்டும். 

இது போன்ற மனித உயிர்களை அழிக்கும் கும்பல்கள் ஒன்றிணைந்து மிருகவதை என்ற பெயரில் தமிழரின் பாரம்பரிய வீரவிளையாட்டுக்களில் ஒன்றான ஜல்லிக்கட்டை தடை செய்திருப்பதை வன்மையாக எதிர்க்கிறேன்!

போல், அண்ணே...... இது, நடக்கிற காரியமா?
"பொல்லை குடுத்து,  அடி  வாங்கிக் குடுக்குற..."  பெரிய,   
"மாஸ்ரர் பிளான்"  உங்களிடம் உள்ளது  போலுள்ளது.  
அதை... இப்ப.... கசிய, வைத்து விடாதீங்க.
பாவம்.... சம்பந்தன். :grin: :D: :119_busts_in_silhouette: tw_rage:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பல குமுறல்களுக்கு ஒரு இடைவெளி கிடைத்துள்ளது. அதை கெட்டியாக பிடித்துள்ளார்கள் போலிருக்கின்றது. 
பலதை அல்லது சிலதை விவாதித்து போட்டுடைக்காமல் மாணவர்கள் வழியையே பின்பற்றுவோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

08-1452255575-murattu-kaalai----600.jpg

 

ஜல்லிக்கட்டு - ஏறு தழுவுதலை தடை செய்யும்போது செய்யாத போராட்டத்தை இப்போது செய்வது கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம் செய்வதுபோலத்தான் இருக்கின்றது. ஆனால் சட்டத்தில் சில திருத்தங்களைக் கொண்டுவந்து ஏறு தழுவுதலை அனுமதிக்கவேண்டும்.

நல்ல கொம்பு சீவின முரட்டுக்காளையை அடக்க இதே மாதிரி இளைஞர்கள் போட்டி போட்டுக்கொண்டு முன்னுக்கு வருவார்களா??

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜல்லிக்கட்டு தடையை நீக்க வேண்டும் என்று நான் ஆதரவு அளிக்கின்றேன்.

பாவேந்தர் பாரதிதாசனின் பாடல் வரிகள் ஞாபகம் வருகிறது:


எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்
இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே,
பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால்
சங்காரம் நிஜமென்று சங்கே முழங்கு
 

 

உங்கள் போராட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள். லட்சம் லட்சமாக நாங்கள் வீதியில் இறங்கி போராடின போது எங்களுக்கு நீதி வழங்க ஒருவரும் முன் வரவில்லை,  பதிலாக சில சுயநலவாதிகள் அதை தங்கள் லாபதிக்காக இதனை பயன்படுத்திக் கொண்டார்கள். வாக்குறுதிகளை நம்பாதீர்கள். தீர்வை கையில் எடுத்துக் கொண்டு போராட்ட களத்தை விட்டு விடை பெறுங்கள். அனுபவம் கற்றுத்  தந்த பாடங்கள் பல.

Image result for விருமாண்டி images

Link to comment
Share on other sites

நம்மிடையே பொதுவில் மிருகங்களுக்கான உரிமை தொடர்பான விழிப்புணர்வு என்பது மிகவும் குறைவு மனிதர்களுக்கான உரிமை மட்டுப்படுத்தப்பட்ட ஒரு சமூகத்தில் இது ஆச்சரியப்படக் கூடிய விடயமல்ல. ஏறுதழுவுதல் நிகழ்வின் போது ஒரு விலங்கை பல மனிதர்கள் பெரும் சத்தத்துடன் துரத்திச் சென்று அதனை வெருள மிரள  வைத்து அதனை பலர் இரசிப்பதை எனது பண்பாடு என்று சொல்லி பெருமைப்படுவது எந்தவகையில் என்பது புரியவில்லை. 

Link to comment
Share on other sites

2 hours ago, manimaran said:

நம்மிடையே பொதுவில் மிருகங்களுக்கான உரிமை தொடர்பான விழிப்புணர்வு என்பது மிகவும் குறைவு மனிதர்களுக்கான உரிமை மட்டுப்படுத்தப்பட்ட ஒரு சமூகத்தில் இது ஆச்சரியப்படக் கூடிய விடயமல்ல. ஏறுதழுவுதல் நிகழ்வின் போது ஒரு விலங்கை பல மனிதர்கள் பெரும் சத்தத்துடன் துரத்திச் சென்று அதனை வெருள மிரள  வைத்து அதனை பலர் இரசிப்பதை எனது பண்பாடு என்று சொல்லி பெருமைப்படுவது எந்தவகையில் என்பது புரியவில்லை. 

நீங்கள் கூறுவதை ஒரு வாதத்திற்காக ஏற்றுக் கொண்டாலும் உலகம்முழுவதிலும் இதை விட படு மோசமாக நடக்கும் விலங்கு வதைகளை தடை செய்யாமல் இதைத் தடை செய்ய கங்கணம் கட்டி நிற்பது ஏன்? தமிழ்நாட்டு மக்களுக்கு ஏற்பட்ட கோபம் நியாயமானது. 

Link to comment
Share on other sites

3 hours ago, manimaran said:

நம்மிடையே பொதுவில் மிருகங்களுக்கான உரிமை தொடர்பான விழிப்புணர்வு என்பது மிகவும் குறைவு மனிதர்களுக்கான உரிமை மட்டுப்படுத்தப்பட்ட ஒரு சமூகத்தில் இது ஆச்சரியப்படக் கூடிய விடயமல்ல. ஏறுதழுவுதல் நிகழ்வின் போது ஒரு விலங்கை பல மனிதர்கள் பெரும் சத்தத்துடன் துரத்திச் சென்று அதனை வெருள மிரள  வைத்து அதனை பலர் இரசிப்பதை எனது பண்பாடு என்று சொல்லி பெருமைப்படுவது எந்தவகையில் என்பது புரியவில்லை. 

இதே கேள்வியை உங்களால் ஸ்பானிஸ் மாடு பிடி வீரர்களிடம் கேட்க்க முடியுமா ?

அதுவும் அங்கு கடைசியாக மாடு கொல்லப்படும் அதுதான் தங்கள் பாரம்பரியம் என்று திமிராகவே சொல்வார்கள் மாட்டுக்கு முதல் குதிரை போட்டிகள் அதில் காயமடையும் குதிரைகள் ஆண்டொன்றுக்கு அறுபது வீதம் மாட்டுக்கு முதல் குதிரை ரேஸ் அதை தடைபன்னிட்டு மாட்டுக்கு வாங்கோ முடியாது பீட்டாவின் கண்ணுக்குள் தமிழ்நாட்டின் முன்றாரை லட்சம் கோடி புழங்கும் பால் விற்பனை இந்த வருமானத்துக்கு அவர்கள் இடும் மூலதனம் வெறும் பத்து ஆயிரம்  கோடி மிகுதி லாபம் அவர்களின் கண்ணுக்குள் குத்துவது அதனாலேயே இந்த ஆட்டம் இன்னும் விளக்கம் ஆக என்றால் ஊரில் நாய் வளர்ப்புக்கும் இங்கு நாய் வளர்ப்புக்கும் உள்ள சிலவு அதாவது இங்கு நாய் வளர்க்க ஆசைபட்டால் இங்கு நாய் உணவு உற்பத்தி பண்ணும் முதலாளியுடன் நீங்கள் இணைந்து போகணும் இல்லை மிஞ்சிய சோத்தை போட்டு ஊர் போல் வளர்க்க வெளிகிட்டால் நாய்க்கு சுகமில்லாமல் வந்துவிடும் நாய் வளர்க்கும் காலம் மட்டும் நாய் உணவு முதலாளிக்கு நீங்கள் அடிமை அது போல் ஊர் மாட்டு இனத்தை அழிப்பதுக்கு ஜல்லிகட்டு தடை போட்டால் வெளிநாட்டு மாடு இலகுவாக பரவி விடும் பின்பு அதற்க்கு தேவையான உணவு உற்பத்தி செய்பவர்களிடம் மறைமுகமாக அடிமைபடவேண்டி வரும் அத்துடன் அந்த jc மாடுகள் பராமரிப்பு செலவு கூட.

3 hours ago, manimaran said:

நம்மிடையே பொதுவில் மிருகங்களுக்கான உரிமை தொடர்பான விழிப்புணர்வு என்பது மிகவும் குறைவு மனிதர்களுக்கான உரிமை மட்டுப்படுத்தப்பட்ட ஒரு சமூகத்தில் இது ஆச்சரியப்படக் கூடிய விடயமல்ல

இந்த கருத்து சிரிக்க வைக்குது இப்படியெல்லாம் ஜோக் அடிக்க எப்படி உங்களால் சுய சிந்தனை உள்ளவர்கள் இப்படி அடிக்க மாட்டார்கள் .

Link to comment
Share on other sites

5 hours ago, manimaran said:

நம்மிடையே பொதுவில் மிருகங்களுக்கான உரிமை தொடர்பான விழிப்புணர்வு என்பது மிகவும் குறைவு மனிதர்களுக்கான உரிமை மட்டுப்படுத்தப்பட்ட ஒரு சமூகத்தில் இது ஆச்சரியப்படக் கூடிய விடயமல்ல. ஏறுதழுவுதல் நிகழ்வின் போது ஒரு விலங்கை பல மனிதர்கள் பெரும் சத்தத்துடன் துரத்திச் சென்று அதனை வெருள மிரள  வைத்து அதனை பலர் இரசிப்பதை எனது பண்பாடு என்று சொல்லி பெருமைப்படுவது எந்தவகையில் என்பது புரியவில்லை. 

மாட்டுக்கும் மனிதர்போன்ற உணர்ச்சிகள்தான் உண்டு என்பது போன்ற புரிதலில் வெளிப்படுவதுதான் இத்தகைய கருத்துகள். அந்த மாடுகள் ஒரு நாள் இப்படி ஓடுகின்றன. மிகுதி 364 நாட்களும் இது போன்ற எதுவும் நடப்பதில்லை.

அப்படிப் பார்த்தால் மேலை நாடுகளில்கூட காவல்துறையினர் குதிரைகள் மீது ஏறி பயணிக்கிறார்கள் தினந்தோறும். அது சகிக்கமுடியாத வன்கொடுமை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி பார்த்தால் பல  உயிரினங்கள் மனித விளையாட்டுகளில்  துன்புறுத்தப் படுகிறது. மனிதனை மனிதன் அடிப்பது- குத்துச் சண்டை, உடனும் இல்லாவிட்டாலும், இதன் விளைவுகள் பாரதூரமானவை. ஏன் தடை செய்ய வில்லை என கேள்வி கேட்க முடியுமா? பல பண முதலாளிகளின் மனிதக் கட்டு. 

தமிழர்கள் (இந்துக்கள்) மாட்டிறைச்சி சாப்பிடுவதில்லை. பசு தெய்வத்திற்கு ஈடானது. பண்டைய  நாகரிக வளர்ச்சியில் பசுவின் பங்கு அளப்பரியது. அதன் இனப் பெருக்கம் காளை மாடு இல்லாமல் நடக்காது. காளை உழவுக்கு, ஜல்லிக்கட்டுக்கு மட்டுமல்ல இனப் பெருக்கத்துக்கும் முக்கியமானது. ஜல்லிக் கடடை நிறுத்தி விட்டால், காளைகளை வளர்ப்பது குறைந்து விடும். இதன் மூலம் உள்ளூர் பசுக்களின் உற்பத்தியும் குறைய வாய்ப்பு உள்ளது. ஊசி மூலம் உற்பத்தி  செய்யலாம், இது உழவர்களின் கையில் இல்லை. பசு இனப்பெருக்கம் பெரிய கொம்பனிகளின் கைகளில் போய் விடும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதில சொல்லறதுக்கு என்ன இருக்குது.நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று மாற்றான் தீர்மானிக்க முடியாது.எனது முழுமையான ஆதரவு எப்பவும் உண்டு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ராஜாவும் இல்லை.. மணியும் இல்லை ..

 

gingee_fort_16_08_14_127.jpg

எங்கட வீட்டில் 50 மாடுகள் இருந்தன  போக 20 எருமை மாடுகள் .. எப்படி அழிந்தது எல்லாம் ..? வனத்துறை பாதுகாப்பு சட்டம் .. விளையாட்டில் வெற்றி பெற்ற மாடுகளின் கழுத்தில் ஒரு மணியை கட்டி போடுவம் ... அவனுக்கு ராஜா என்று பெயர் வைத்து அழைப்போம் .. கும்பலாக காட்டிற்குள் விடியற்காலையில் அனுப்பிவிட்டால் அந்தி சாயும் நேரம் அந்த மணியின் ஒசை கேட்டு திரும்ப அழைத்து வருவம் ..அந்த முழு நாளுக்கும் மற்ற மாடுகளின் பாதுகாப்பிற்கு ராஜாதான் கேரண்டி .. இடையில் சிலது நரி அடித்தது . குள்ள நரி அடித்தது என்று விட்டு போட்டாலும் கூட .. இயற்கை சுழற்சி என்று விடுவம்.. ஒழுங்கா வீடு வந்து சேர்ந்தது .. இன்று என்ன நிலைமை ?

டிஸ்கி :

அட முட்டாள் பய மக்களா ! நீங்கதான் வனவிலங்கு பட்டியிலில் சேர்த்து போட்டீர்கள்  அல்லவா ..?அப்போ ஒரு வன விலங்கு தன்னுடய வனபகுதியில் மேய்ச்சலுக்கு செல்வதில் என்ன குறை கண்டு கொண்டீர்கள் ..? ஒரு மாட்டிற்கு வனபகுதியில் மேய்வதற்கு ஏன் தினம் ரூபாய் 50 லஞ்சம் கேட்கிறீர்கள் .. ? !@#$%^&*()

 

Link to comment
Share on other sites

16 hours ago, manimaran said:

நம்மிடையே பொதுவில் மிருகங்களுக்கான உரிமை தொடர்பான விழிப்புணர்வு என்பது மிகவும் குறைவு மனிதர்களுக்கான உரிமை மட்டுப்படுத்தப்பட்ட ஒரு சமூகத்தில் இது ஆச்சரியப்படக் கூடிய விடயமல்ல. ஏறுதழுவுதல் நிகழ்வின் போது ஒரு விலங்கை பல மனிதர்கள் பெரும் சத்தத்துடன் துரத்திச் சென்று அதனை வெருள மிரள  வைத்து அதனை பலர் இரசிப்பதை எனது பண்பாடு என்று சொல்லி பெருமைப்படுவது எந்தவகையில் என்பது புரியவில்லை. 

இதில் உண்மைகள் இல்லாமல் இல்லை. ஆனால் யதார்த்தம் வேறானது.

வலிமை பெற உருவான பயிற்சிகள் அனைத்தும் சில கடின செயற்பாடுகளைக் கொண்டவையே! அவற்றை கொடுமைப்படுத்தல் என்று சொல்லிவிட முடியாது.

மிருக கொடுமைகள் பற்றி விவாதிப்பவர்கள் சகல மாமிச உணவுகளையும், பால் முட்டை முதலான உணவுப் பொருட்களையும்  தவிர்த்துவிட்டு விவாதிக்க வேண்டும். தயாரா?

இந்த பீட்டா அமைப்பினர் KFC முன்னாலோ, இறைச்சிக்கடைகள் முன்னாலோ, மீன் சந்தைகளின் முன்னாலோ ஆர்ப்பாட்டம் செய்வதில்லை!

Link to comment
Share on other sites

ஒரு தவறு இன்னொரு தவறை நியாயப்படுத்தாது.

இங்கு இரண்டு விடயங்கள்

ஒன்று இந்து 'மதம்' பிடித்தவர்கள் தமது ஆதிக்கத்தை தமிழகம் மீது காலம் காலமாக திணிக்க முயல்வது தொடர்ச்சியான அத்தகைய திணிப்பின் எதிர்விளைவாக மெரீனா எழுச்சியைக் கருதலாம். 

இரண்டாவது களியாட்ட நிகழ்விற்காக இயற்கையின் இன்னொரு படைப்யை துன்புறுத்துவது. அதனை நியாயப்படுத்த பல்வேறு காரண காரியங்களை அடுக்கிக் கொண்டு செல்வது. 


ஆடு மாடுகளை உலக்கையால் அடித்து இறைச்சிக்காக கொல்வது விலங்கு உயிருடன் இருக்கும்போது அதன் கழுத்தில் துளைபோட்டு இரத்தம் எடுத்து இரத்தவறை செய்து சுவைப்பது உயிருடன் வைத்து பறவைகளின் செட்டைகளை உரித்து அவற்றை துடிக்க துடிக்க கொலைசெய்து அவற்றை உண்பது என்பவற்றுடன் ஒப்பிடும் போது ஏறுதழுவும் போது காளை மாடு படும் துன்பம் அற்பமானதே. அதனால் தான் என்னவோ நமக்கு அதன் துன்பம் தெரிவதில்லை. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.