Jump to content

கூட்டமைப்பின் பொங்கல் விழா...


Recommended Posts

அரசியல் தீர்வுக்கான தற்போதைய சந்தர்ப்பத்தை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் – இரா. சம்பந்தன்

sambanthar-1024x680.jpg

அரசியல் தீர்வுக்கான தற்போதைய சந்தர்ப்பத்தை நாம் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நான்காவது தமிழர் பொங்கல் விழா மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில்  இன்று நடைபெற்றது.  இந்த நிகழ்வில் கலந்து கொண்டு  உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

மட்டக்களப்பில் வாழ்கின்ற தமிழ் மக்கள் தங்களுடைய முக்கியத்துவத்தை உணர்ந்து கொள்ள வேண்டும் எனவும் அவர்கள் அன்று தொடக்கம் இன்றுவரை தமிழர் உரிமைக்காக தங்களது பங்களிப்புக்களைச் செய்திருக்கின்றார்கள் எனவும் தெரிவித்துள்ள அவர்   கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்களின் விகிதாசாரம் கணிசமாகக் குறைந்திருக்கின்றது எனவும்  இதற்குக் காரணம் வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் கிழக்கிலங்கையில் குடியேற்றப்பட்டமையே எனவும் தெரிவித்தார்.

அத்துடன்  கடந்த 70 வருடங்களாக பேச்சுக்கள் இடம்பெற்றுள்ள போதும்  நாட்டுக்கு ஒரு நிரந்தரமான நியாயமான அரசியல் தீர்வு  ஏற்படவில்லை எனவும் தற்போது ஒரு சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது எனவும்  அதை நாம் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

http://globaltamilnews.net/archives/14413

Link to comment
Share on other sites

கூட்டமைப்பின் பொங்கல் விழா...

 

 

கூட்டமைப்பின் பொங்கல் விழா...

 

தமிழ் தேசிய கூட்டமைப்பின் மாபெரும் பொங்கல் விழா இன்று வியாழக்கிழமை பிற்பகல் மட்டக்களப்பில் வெகு விமர்சையாக நடைபெற்றது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

சிறப்பு அதிதிகளாக தமிழ் தேசிய கூட்டமைப்பு யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ். துரைரட்னசிங்கம், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ். வியாழேந்திரன், கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான ஞா. கிருஸ்ணபிள்ளை, மா.நடராஜா ஆகியோர் இந்த நிகழவில் கலந்துகொண்டனர்.

இதன்போது கல்லடி பாலத்தில் இருந்து மாபெரும் ஊர்வலம், பொங்கல் நிகழ்வு நடைபெற்ற அரசடி தேவநாயகம் மண்டபம் வரையில் நடைபெற்றது.

தமிழர்களின் கலாசார இன்னியம் இசையுடன் இந்த கலாசார பவனி நடைபெற்றதுடன் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

http://tamil.adaderana.lk/news.php?nid=2351&mode=head

Link to comment
Share on other sites

பொங்கல் விழா
 
19-01-2017 05:18 PM
Comments - 0       Views - 38

article_1484827629-1.jpg

தமிழத்; தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டிலான பொங்கல் விழா மட்டக்களப்பில் நேற்று (19) மிகச் சிறப்பாக நடைபெற்றது. இதன்போது, கல்லடிப் பாலத்திலிருந்து  தமிழர் கலாசார பவனி ஆரம்பமாகி தேவநாயகம் மண்டபம்வரை சென்றது. அதன் பின்னர் மண்டபத்தில்  தமிழர் பண்பாட்டு நிகழ்வுகள் நடைபெற்றன. (படப்பிடிப்பு: பேரின்பராஜா சபேஷ், எம்.ஸ்.எம்.நூர்தீன்வடிவேல் சக்திவேல்,ஏ.எச்.ஏ. ஹுஸைன்  வடிவேல் சக்திவேல்  வா.கிருஸ்ணா)
article_1484827651-2.jpg

article_1484827671-3.jpg

article_1484827688-4.jpg

article_1484827709-5.jpg

article_1484827731-6.jpg

 

- See more at: http://www.tamilmirror.lk/190009/ப-ங-கல-வ-ழ-#sthash.BZaVKYH6.dpuf
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆமை பூந்த கிணறும் ....அமினா பூந்த வீடும் உருபடாது ..!

 

இது இங்கிட்டு காலகாலமாக இருக்கும் வழக்கு மொழி!!


ஆமை தான் புகுந்த கிணற்றின் கட்டடம் எப்படி சொல்லி புரிய வைக்கறது...ஒகே.. ??ஒரு கிணறு அல்லது கேணி வெட்டுறம்... அப்படி வெட்டும் போது  அந்த குழிக்குள்  வெட்டுபடும்  மண் உள்ள விழாமல் இருப்பதற்காக பனை ஓலை அல்லது திட்டு என்று இடைபகுதியில் ஒரு இடைவெளி வைத்திருப்பார்கள்... இதில் ஆமையோட ரோல் என்ன .. ?  கஸ்டபட்டு எல்லத்தையும் கெட்டு குட்டி சுவராவக்குவதான் .!!!   ஒரு கிணறு (பில்டிங்க்) அதில் சைடில் ஓட்டைய போட வேண்டியது .. அஸ்திவாரதில் ஆட்டைய போட்டால் பில்டிங்கே ஆடிபோகுமப்பா..!!!

சரி போகட்டும் அமினாவுக்கு வருவம் ..

அமினா யார் ..? கோர்ட் உத்தரவுகளை சென்று சேர்கின்ற ஒரு நபர் ..அந்த நபரை வீட்டுக்குள் சேர்க்க கூடாது... குடும்பத்தை பிரித்து விடுவான்  ...என்றுதான் எதிர் வீட்டு திண்ணையில் உட்காரவைத்து உத்தரவுகளை பெற்று கொள்வது இங்கு வழக்கம்....

கோர்ட் கேஸ் லட்சணம் அப்படி ..!

டிஸ்கி

article_1484827651-2.jpg

 

எனக்கு அங்கிட்டு ஆமை ..அமினா.. என்று ஏதும் தெரியல...? உங்களுக்கு ஏதாவது தெரியுதா..? ரெல் மீ :rolleyes:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.