Jump to content

எழுக தமிழ் நிகழ்வு 28.01.2017 இற்கு மாற்றம் !


Recommended Posts

எழுக தமிழ் நிகழ்வு 28.01.2017 இற்கு மாற்றம் !

 
11041734_1607430059474650_1863613475829891988_n%2B-%2BCopy.jpgகிழக்கில் பெரும் எழிர்ச்சியுடன் இடம்பெறவிருந்த எழுக தமிழ் நிகழ்வு எதிர்வரும் 28.01.2017 இற்கு மாற்றப்பட்டுள்ளதாக ஏற்பாட்டுக்கழுவினரால் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே 18.01.2017 இல் திட்டமிடப்பட்டிருந்த எழுக தமிழின் வலுவை குறைக்கும் நோக்குடன் அதற்கு இரண்டு நாட்கள் முன்னதாக சம்பந்தர் தலைமையில் ஏற்பாடுசெய்யப்பட்ட மாட்டுப்பொங்கல் பேரணியும் அதனை தொடர்ந்து தமிழரசுக்கட்சியின் திருகோணமலைமாவட்ட அமைப்பாளரும் கிழக்கு மாகாண கல்வி அமைச்சருமான தண்டாயுதபாணி அவர்களால் எழுக தமிழ் நிகழ்வான அதே தினத்தில் பாடசாலைகள் அனைத்தும் நடைபெறுமென அறிவிக்கப்பட்ட அறிவிப்பு காரணமாகவும் இது பிற்போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
16143154_1835118883422681_744926017374082488_n.jpg
m8-2.jpg
 
m13.jpg
 
m14.jpg
 
ஏற்கனவே வடக்கில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் ஓரணியில் திரண்டமையால் மைத்திரி அரசின் செல்லப்பிள்ளையாக செயற்படும்ட தமிழரசுக்கட்சி உறுப்பினர்களுக்கு அது பலத்த சங்கடத்தை உண்டுபண்ணியிருந்ததோடு மக்கள் மத்தியிலும் அவர்களுக்கு கடுமையான எதிர்ப்பு எழுந்திருந்தது. இன்நிலையிலேயே கிழக்கிலும் இவ்வாறு பெருமெடுப்பில் விக்கினேஸ்வரன் தலைமையில் மக்கள் அணிதிரள்வதை எப்படியாவது தடுத்துவிட  முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
 
இதற்கு பொறுப்பாக கிழக்கின் தமிழரசுக்கட்சியின் விவசாய அமைச்சர் தலைமையில் திட்டமிடப்பட்ட மாட்டுப்பொங்கலும் கல்வி அமைச்சர் தலைமையில் முன்னெடுக்கப்படும் பாடசாலை தினமாக அறிவிக்கப்பட்டதும் இதன் பின்னணியிலேயே என கிழக்கிலுள்ள சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
 
இதன் காரணமாக மாட்டுப்பொங்கல் நிகழ்வைக்கூட பொங்கலோடு நிறுத்தாமல் அதனை பேரணியாக முன்னெடுத்து தற்போதைய நிலையில் மைத்திரியின் நல்லாட்சி அரசு கோபம்கொள்ளும் முகமாக பேரணிகளை நடத்த வேண்டாம் என சம்பந்தர் அறிவிப்பதும், அந்த நாளை பாடசாலை நாளாக அறிவிப்பதன் ஊடாக பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இந்த பேரணியில் கலந்துகொள்வதை தடுப்பதும் பெரும்பாலான பஸ்சேவைகள் பாடசாலை சேவைகளில் ஈடுபடுவதால் அந்த போக்குவரத்து சேவையை தடுப்பதும் தமிழரசுக்கட்சியின் நோக்கமாக இருப்பதால் இதனை ஏற்பாட்டாளர்கள் மாற்றியிருப்பதாக தமிழ் கிங்டொத்தின் கிழக்குமாகாண செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
dcp96794646466.png
 
 
 
எதிர்வரும் 21ஆம் திகதி கிழக்கில் இடம்பெறவுள்ள மாபெரும் எழுக தமிழ் நிகழ்வை வலுவிழக்கச்செய்யும்பொருட்டு மட்டக்களப்பு தமிழரசுக்கட்சி ஏற்பாட்டில் ஊர்வலம் ஒன்று செய்வதற்கு திட்டமிடப்பட்டிருப்பதாக அங்கிருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் உடனடியாகவே அங்குள்ள தமிழ் சிவில் அமைப்புக்கள் மற்றும் பொதுஅமைப்புக்கள் விழிப்புடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
sm18.jpg
 
வடக்கில் ஏற்பட்ட மக்கள் எழிர்ச்சியால் சிங்களப் பேரினவாதம் மட்டுமல்ல சோரம்போன தமிழ் தலைமைகளுக்கும் பெரும் தலையிடி ஏற்பட்டிருந்தநிலையில் அது கிழக்கிலும் தொடரவிட்டால் தமது அரசியல் இருப்புக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என்பதை புரிந்துகொண்டு அந்த நிகழ்வை குழப்புவதற்காகவும் அந்த நிகழ்வில் மக்கள் அணி திரள்வதை குறைக்கும் நோக்குடனும் அந்த நிகழ்விற்கு இரு நாட்கள் முன்னதாக ஒரு நிகழ்வை பொங்கல் என்றபோர்வையில் மக்களை ஊர்வலமாக்க ஏற்பாடு நடைபெற்றுவருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
எழுக தமிழ் நிகழ்வு நடைபெறுவதற்கு முன்னர் ஓர் ஊர்வலத்தினை நடாத்தி தமிழ்மக்களின் தேவை மற்றும் அரசியல்விடயங்கள் சம்பந்தமாக தாம் மிகவும் சாதுரியமாக செயற்படுவதாகவும் சர்வதேச நாடுகளின் அனுசரணையோடு எல்லா விடயங்களையும் தாம் கையாள்வதாக மக்களுக்கு வழமையான அரசியல் உரையூடாக சொல்வதன் மூலம் அவர்களை நம்பவைத்து அடுத்தடுத்த தினங்களில் மக்கள் அணிதிரள்வதை குறைப்பதே இவர்களின் திட்டமெனவும் இதனால் அங்குள்ள இளைஞர்களிடையே கடும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அங்கிருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
15781653_352879661735877_8380402039985014937_n.jpg
 
இது தொடர்பில் அந்த பணிகளை முன்னெடுப்பதற்கும் கண்காணிப்பதற்கும் தமிழரசுக்கட்சியின் முக்கிய தலைவரும் கிழக்கு மாகாண அமைச்சர் ஒருவரும் ஈடுபட்டிருப்பதாகவும் அவர் தற்போது யாழ்ப்பாணத்தில் எழுக தமிழை குழப்புவதற்கு கடுமையாக உழைத்த உதயன் நிர்வாக இயக்குனரும் தமிழரசுக்கட்சி பாராளுமன்ற  உறுப்பினருமான சரவணபவனுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டுவருவதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளது.
 
ஏற்கனவே யாழ்ப்பாண எழுக தமிழை குழப்புவதற்காக பத்திரிகை வாயிலாக பல பொய்யான செய்திகளை பரப்பியதோடு துளை ஆயுதக்குழுவான ஈ.பி.டி.பி மூலமாக அதே தினத்தில் ஒரு பேரணி ஏற்பாடு செய்யப்பட்டதும் அதனை ஏற்பாட்டாளர்கள் சாதுரியமாக கையாண்டு அவர்களை வேறிடத்தில் செய்யுமாறு அனுப்பியதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
 
தொடர்புடைய செய்தி
 
எழுக தமிழ் நிகழ்விற்கு முன்னைய நாட்களில் வர்த்தகர் சங்கம் ஆதரவில்லை என்ற படுமோசமான பொய்யினையும் எழுக தமிழ் நிகழ்விற்கு பொலீசார் அனுமதி வழங்கவில்லை என்ற செய்தியும் பின்னர் எழுக தமிழ் அன்று இன்று புரட்டாதிச் சனி இன்று எள்ளெண்ணை எரிக்காவிட்டால் 5வாரங்கள் காத்திரிக்கவேண்டும் என்று தலைப்பு செய்தியையும் வெளியிட்டு இளைஞர்கள் மத்தியில் மிகுந்த கோபத்திற்கு உள்ளாகியிருந்த சரவணபவன் தனது மகளின் பிறந்தநாளை மைத்திரியை அழைத்து வீட்டில் கொண்டாடும் அளவிற்கு அரச செல்வாக்குடையவர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
 
14702288_311854942505016_2586476082045485211_n.jpg
எழுக தமிழுக்கு எதிராக உதயன் பத்திரிகை செய்தி
 
14432965_302240670133110_7652730224214291192_n.jpg
எழுக தமிழுக்கு எதிராக உதயன் பத்திரிகை செய்தி
 
 
 
14434878_301237506900093_8710626967016123255_o.jpg
உண்மையான செய்தி  வேறு பத்திரிகையில்

 

http://www.tamilkingdom.com/2017/01/a.html

Link to comment
Share on other sites

எழுக தமிழ் பிற்போடப்பட்டு உள்ளது.

கிழக்கு மாகாணத்தில் எதிர்வரும் 21ம் திகதி நடைபெற இருந்த எழுக தமிழ் நிகழ்வு எதிர்வரும் 28ம் திகதிக்கு பிற்போடப்பட்டு உள்ளதாக தமிழ் மக்கள் பேரவையினர் தெரிவித்து உள்ளனர்

எதிர்வரும் 21ம் திகதி பாடசாலை நாளாக அறிவிக்கப்பட்டதை அடுத்தே எழுக தமிழ் நிகழ்வு பிற்போடப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தைப்பொங்கல் தினத்திற்கு முதல் நாளான வெள்ளிக்கிழமை வடக்கு கிழக்கு பாடசாலைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. அதற்கான பதில் பாடசாலை எதிர்வரும் 21ம் திகதி நடைபெறும் என கிழக்கு மாகாண கல்வி அமைச்சு அறிவித்ததை அடுத்தே எழுக தமிழ் நிகழ்வு அடுத்த வாரத்திற்கு பிற்போடப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

http://globaltamilnews.net/archives/14283

Link to comment
Share on other sites

கூட்டமைப்பும் இவர்களுடன் இணைந்து கலந்து கொள்வார்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Rajesh said:

கூட்டமைப்பும் இவர்களுடன் இணைந்து கலந்து கொள்வார்களா?

:unsure::rolleyes::rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லவிடயம்

போட்டியை தவிர்ப்பவர்கள் மக்கள்நலன்விரும்பிகளாகவே இருப்பர்

Link to comment
Share on other sites

தேர்தல் இலாப அரசியல் தமிழர்களுக்கு வேண்டாம்
 
வடக்கில் நடந்த எழுக தமிழ் எழுச்சிப் பேரணி போல கிழக்கிலும் எழுக தமிழ் எழுச்சிப் பேரணி நடைபெறு கின்றது.
 
தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் அனைத்துத் தமிழ் அமைப்புகளும் பொது மக்களும் இணைந்து எழுக தமிழ் எழுச்சிப் பேரணியை நடத்தவுள்ளனர்.
 
எனினும் இத்தகைய எழுச்சி பேரணி தமது தேர்தல் இலாப அரசியலுக்குப் பங்கம் செய்து விடுமோ என்று பயம் கொண்ட தமிழ் அரசியல்வாதிகள் சிலர் கிழக்கு மாகாணத்தில் நடைபெறவிருக்கும் எழுக தமிழ் எழுச்சிப் பேரணிக்கு குந்தகம் செய்து வருகின்றனர்.
 
தமிழ் மக்கள் பேரவை என்பது தமிழ் மக்களின் அமைப்பு. தமிழ் மக்களின் உரிமையை வலியுறுத்தும் வகையிலும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை மற்றும் மீள்குடியேற்றம் - காணாமல் போனவர்கள் தொடர்பான விசாரணை, சர்வதேச போர்க்குற்ற விசாரணையை வலியுறுத்தல் போன்ற விடயங்களிலும் கரிசனை கொள்கின்ற ஒரு மக்கள் இயக்கம்.
 
தேர்தல் அரசியல் என்பதைக் கடந்து எங்கள் இனத்திற்காகக் குரல் கொடுத்தல் என்பதிலேயே முழுக்க முழுக்க கவனம் செலுத்திவரும் தமிழ் மக்கள் பேரவை, வடக்கில் நடத்திய எழுக தமிழ் எழுச்சிப் பேரணி உலகம் முழுமையிலும் பேசப்பட்டது.
 
எங்கே! எங்கள் தமிழினத்திற்கு அநீதி இழைக்கப்பட்டு விடுமோ! எங்களின் முப்பது ஆண்டு காலத் தியாகம் எந்தப் பிரயோசனமும் இன்றிப் போய்விடுமோ என்று ஏங்கிய எங்கள் புலம் பெயர் உறவுகள், வடக்கில் நடந்த எழுக தமிழ் எழுச்சிப் பேரணியால் ஆறுதல் அடைந்தனர். தமிழ் வாழும் என்று நம்பினர்.
 
இந்த நம்பிக்கைக்கு மேலும் வலுச்சேர்க்கும் வகையில் கிழக்கிலும் எழுக தமிழ் எழுச்சிப்பேரணி நடைபெற ஏற்பாடாகிவருகிறது.
 
கிழக்கு மாகாணத்தின் ஒட்டுமொத்தத் தமிழ் மக்களும் எழுக தமிழ் எழுச்சிப் பேரணியின் அவசியத்தை உணர்ந்து தங்களின் தார்மிகப் பங்களிப்பை வழங்கத் தயாராகி வருகின்றனர்.
 
எனினும் தமிழினத்தின் சாபக்கேடாக தமிழ் அரசியல்வாதிகள் ஒரு சிலர் எழுக தமிழ் எழுச்சிப் பேரணியைத் தடுக்கும் வகையில் செயற்படுகின்ற னர்.
 
இதற்குக் காரணம் எழுக தமிழ் எழுச்சிப் பேரணி வெற்றிகரமாக நடைபெற்றால் அது தமது தேர்தல் அரசியலுக்குப் பாதகமாக அமையும் என்ற நினைப்பேயன்றி வேறில்லை.
 
உண்மையில் இத்தகைய நினைப்புடன் செயற்படுகின்ற தமிழ் அரசியல்வாதிகள் தமது தேர்தல் இலாப அரசியலைக்கைவிட வேண்டும்.
 
தமிழ் மக்களின் விடயத்தில் தேர்தல்  இலாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டு செயற்படுவது எம் இனத்திற்கு நாம் செய்யும் பெரும் பாவமாகும்.
 
உண்மையில் எழுக தமிழ் எழுச்சிப் பேரணி மிகப் பெரும் வெற்றியாக - மகத்தான சாதனையாக அமை யுமாயின்; இதற்கு தேர்தலை நோக்காக கொண்ட தமிழ் அரசியல்வாதிகளும் ஆதரவு கொடுப்பார்களாயின், தேர்தல் இலாபம் என்பது சுலபமாகக் கிடைக்கும் என்பதே நிதர்சனம்.
 
இருந்தும் தமிழ் மக்களின் நலன் என்பதை அறவே மறந்து சிலர் அரசியல் இலாபம் என்பதை மட்டுமே சிந்திக்கின்றவர்கள் தமிழ் இனத்திற்குத் துரோகம் செய்கின்றனர்.
 
இத்தகையவர்கள் தங்கள் தவறை இனிமேலாவது உணர்ந்து தம்மை திருத்திக் கொள்ளவேண்டும். இல்லையேல்! அவர்களின் தவறான அரசியல் நோக்கம் அவர்களை அரசியல் அநாதையாக ஆக்கும் என்பது சர்வநிச்சயம். 
 
ஆனால் தேர்தல் இலாப அரசியலுக்கு முடிவுகட்டி எம் தமிழினத்தின் வாழ்வுக்காக நாம் அனைவரும் ஒன்றாக - ஒரு மித்துக் குரல் கொடுப்போம் வாருங்கள் கிழக்கின் எழுக தமிழ் எழுச்சிப் பேரணியில் அணி திரளுங்கள்.
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.