Jump to content

ஜெயலலிதாவின் சொத்துக்களின் நிலைமை என்ன?


Recommended Posts

ஜெயலலிதாவின் சொத்துக்களின் நிலைமை என்ன?

Jayalalithaa-90a3cbffdfc28c667da69e050375521042e3be7e.jpg

 

வரட்சி ஒரு­புறம் வாட்­டு­கின்­றது. மறு­புறம் காவிரி ஆற்றில் நீரைத்­ தி­றந்து விடு­வ­தற்கு கர்­நா­டக மாநில அரசு மறுத்து வரு­கி­றது. இந்த நிலையில் விவ­சாய பயிர்ச்­செய்­கைகள் அழிந்து போனதால் அதிர்ச்­சி­யுற்ற விவ­சா­யிகள் தற்­கொலை ஒன்றே இதற்குத் தீர்வு என்று தங்கள் உயிர்­களை மாய்த்துக் கொள்­கின்­றனர்.

கடந்த சில மாதங்­களில் மாத்­திரம் இவ்­வாறு தற்­கொலை செய்து கொண்ட விவ­சா­யி­களின் எண்­ணிக்கை 100 ஐ தாண்டி விட்­டது. இந்த நிலைமை விவ­சா­யி­களை மட்­டு­மின்றி அனைத்து மக்­க­ளையும் அதிர்ச்­சி­ய­டையச் செய்­துள்­ளது.

பரு­வத்தில் பெய்ய வேண்­டிய மழை பொய்த்து விட்­டது. இதனால் வரட்சி தொடர்­கின்­றது. கடந்த சில ஆண்­டு­க­ளாக காவி­ரியில் நீர் வரவு குறைந்து காணப்­பட்­டது. காவி­ரியில் நீரை திறந்து விடு­மாறு உச்ச நீதி­மன்றம் அறி­வு­றுத்­தி­ய­போதும் கர்­நா­டக அரசு அதனை செயல்­ப­டுத்­து­வ­தற்கு மறுப்பு தெரி­வித்து வரு­கி­றது. இதனால் காவிரி ஆறும் வரண்­டுபோய் விட்­டது. ஆற்றில் கற்­களும் மணல் குன்­றுமே தெரி­கி­ன்றன.

இது பற்றி மத்­திய அரசும் கண்­டு­கொள்­வ­தாக இல்லை. கர்­நா­டக அர­சுக்கு சார்­பான முறை­யி­லேயே மத்­திய அரசு நடந்து கொள்­வ­தாக தமி­ழக விவ­சா­யிகள் கூறு­கின்­றனர்.

இதே­வேளை, நிலத்­தடி நீர் மட்­டமும் வெகு­வாக குறை­வ­டைந்­துள்­ள­தாக சுட்­டிக்­காட்­டப்­ப­டு­கி­றது. விவ­சா­யத்­தையே நம்­பி­வாழும் விவ­சா­யி­களின் நிலைமை பெரும் சிக்­க­லுக்­குள்­ளா­கி­யுள்­ளது. விவ­சா­யி­களின் பயிர்கள், நெல், கரும்பு, வாழை அனைத்­துமே நீரின்றி கரு­கிப்­போ­யுள்­ளன.

இதனைப் பார்த்து விவ­சா­யிகள் பெருந்­து­ய­ரமும் கவ­லையும் அடைந்­துள்­ளனர். துயரம் தாள முடி­யாத நிலை­யி­லேயே அவர்கள் தற்­கெலை செய்­துகொள்ளும் முடி­வுக்குத் தள்­ளப்­ப­டு­கின்­றனர்.

தமி­ழக அரசு வரட்சி நிலை­வரம் பற்றி ஆய்வு செய்­வ­தற்­காக அமைச்­சர்கள், மாவட்ட ஆட்­சி­யா­ளர்கள் அடங்­கிய குழுவை நிய­மித்து மாவட்ட ரீதி­யாக ஆய்­வுப்­ப­ணி­களை மேற்­கொண்­டது. இவர்­க­ளுக்கு நிவா­ரணம் வழங்­கப்­படும் என்று அரசு தரப்பில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தாக தக­வல்கள் தெரி­விக்­கின்­றன.

விவ­சா­யிகள் தற்­கொலை செய்து கொண்­டதை சில அமைச்­சர்கள் கொச்­சைப்­ப­டுத்தி பேசி­யி­ருந்­தனர். "விவ­சா­யிகள் கவ­லையில் தற்­கொலை செய்து கொள்­ள­வில்லை. நோய் மற்றும் மூப்பு கார­ண­மா­கவே இறந்­தார்கள்" என்று தமி­ழக அமைச்­சர்கள் தெரி­வித்­தி­ருந்த கருத்து விவ­சா­யி­க­ளிடம் அதிர்ச்­சி­யையும், ஆத்­தி­ரத்­தையும் ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தது. தமி­ழக அமைச்­சர்­களின் அவ­தூறு பேச்­சுக்கு எதிர்க்­கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தமது கடு­மை­யான கண்­ட­னத்­தையும் வெளி­யிட்­டி­ருந்தார்.

விவ­சா­யி­களின் பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காண­வேண்டும் என்றும் அவர்கள் தற்­கொலை செய்து கொள்­வதை தடுக்க வேண்டும் எனவும் வலி­யு­றுத்தி சென்னை சேப்­பாக்­கத்தில் கடந்த ஞாயி­றன்று பெரும் எண்­ணிக்­கை­யி­லான இளை­ஞர்கள் உண்­ணா­வி­ரதப் போராட்­டத்தில் குதித்­தனர். சேப்­பாக்கம் விருந்­தினர் மாளி­கையில் இந்த உண்­ணா­வி­ரத போராட்டம் நடை­பெற்­றது. இதில் அதி­க­ளவில் பெண்­களும் கலந்து கொண்­டனர். அதே­வேளை, ஜல்­லிக்­கட்டை மீண்டும் நடத்­து­வ­தற்கு அனு­மதி வழங்க வேண்­டு­மென வலி­யு­றுத்தி சென்னை மெரீனா கடற்­க­ரையில் பேரணி நடத்­தப்­பட்­டது.

விவ­சா­யிகள் பிரச்­சினை, ஜல்­லிக்­கட்டு விவ­காரம் போன்­ற­வற்­றுக்­காக நடத்­தப்­படும் உண்­ணா­வி­ர­தப்­போ­ராட்டம் மற்றும் பேர­ணியில் சென்னை மாந­கர இளை­ஞர்–­யு­வ­திகள் கலந்­து­கொள்ள மாட்­டார்கள் என்று எதிர்வு கூறப்­பட்­டி­ருந்த நிலையில் அதனை பொய்ப்­பிக்கும் வகையில் பல ஆயி­ரக்­க­ணக்­கான இளை­ஞர்கள் கலந்து கொண்­டமை பெரும் ஆச்­ச­ரி­யத்தை ஏற்­ப­டுத்­தி­யது. சென்­னையைத் தொடர்ந்து மேலும் பல நக­ரங்­களில் இது போன்ற பேர­ணிகள் நடத்­தப்­பட்­டன.

எவ்­வா­றா­யினும் இந்தப் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு கிடைக்­குமா என்­பது சந்­தே­கத்­திற்­கு­ரி­ய­தாகும். கர்­நா­டகா அரசு நீதி­மன்­றத்தின் உத்­த­ர­வையே அலட்­சியம் செய்து விட்­டது. அந்த அர­சுடன் தமி­ழக அரசு பேச்­சு­வார்த்தை நடத்தி காவிரி நீரைப்­பெற்றுக் கொடுக்­குமா என்­பது சந்­தே­கமே. விவ­சா­யி­களின் தற்­கொ­லை­களை விளை­யாட்­டாக எடுத்­துக்­கொள்ளும் தமி­ழக அமைச்­சர்கள் இது­

பற்றி பேசப்­போ­வ­தில்லை.

அது­மட்­டு­மன்றி, பொதுச்­செ­ய­லாளர் மற்றும் முத­ல­மைச்சர் பத­வி­க­ளுக்­காக பெரும் போராட்டம் நடத்­திக்­கொண்­டி­ருக்கும் அ.தி.மு.க. வினர் விவ­சா­யி­களின் பிரச்­சி­னை­களைப் பற்­றியா பேசப்­போ­கி­றார்கள்? அதற்கு அவர்­க­ளுக்கு நேரம் இருக்­கி­றதா? என்­பதும் கேள்­விக்­கு­றி­யாகும்.

தமி­ழக அரசு போகட்டும்! மத்­திய அர­சா­வது இது­பற்றி சிந்­திக்­கி­றதா? இல்லை! மத்­திய அரசின் செயற்­பா­டு­களும் கூட தமி­ழ­கத்­துக்கு சாத­க­மா­ன­தாக இல்லை. இந்த நிலையில் விவ­சா­யிகள் விரக்­தியின் விளிம்பில் இருந்­துக்­கொண்­டி­ருக்­கின்­றனர்.

பொங்­கலின் போது ஜல்­லிக்­கட்டை நடத்த வேண்­டு­மென ஒட்­டு­மொத்த தமி­ழக மக்­களும் ஆர்ப்­பாட்டம் நடத்­தி­வந்த நிலையில், அதனை நடத்­து­வ­தற்­கு­ரிய அவ­சர சட்­ட­மொன்றை கொண்­டு­வர வேண்­டு­மென்று தமி­ழகத் தலை­வர்கள் வலி­யு­றுத்தி வந்­தனர்.

பொங்கல் பண்­டி­கை­யை­யொட்டி நடத்­தப்­படும் ஜல்­லி­க்கட்டு விளை­யாட்டு தொடர்­பாக உட­ன­டி­யாக எதுவும் செய்ய முடி­யா­தென உச்ச நீதி­மன்­றமும் அறி­வித்­து­விட்­டது. சில தினங்­க­ளுக்கு முன்னர் முத­ல­மைச்சர் ஓ.பன்­னீர்­செல்வம் தடை­களை மீறி ஜல்­லிக்­கட்டை நடத்­தப்­போ­வ­தாக அறி­வித்­தி­ருந்தார்.

வேறு சில அமைப்­பு­க­ளும்­கூட இது­பற்றி அறி­வித்­தி­ருந்­த­துடன் அலங்கா நல்லூர், மதுரை, காங்­கேயம் போன்ற பகு­தி­களில் அதற்­கான ஏற்­பா­டுகள் செய்­யப்­பட்டு வந்­தன. அது தொடர்பில் ஒட்­டு­மொத்த தமி­ழக மக்­க­ளி­டை­யேயும் ஒரு பெரும் எதிர்ப்பு இருந்து வந்­தது.

இந்த நிலையில், 'தடை­யை ­மீறி தமி­ழ­கத்தில் ஜல்­லிக்­கட்டு நடத்­தப்­பட்டால், ஆட்­சியைக் கலைக்க முடியும்' என்று ஆளும் பா.ஜ.க. தலை­வர்­களில் ஒரு­வரும், பா.ஜ.க. ராஜ்­ய­சபா எம்.பி.யுமான சுப்­பி­ர­ம­ணியன் சுவாமி எச்­ச­ரிக்கை விடுத்­துள்ளார். தமி­ழ­கத்தில் ஆட்­சி­யி­லுள்ள அ.தி.மு.க. அரசை கலைப்­ப­தற்கு விடுக்­கப்­பட்ட ஒரு எச்­ச­ரிக்­கை­யா­கவே இதனை தமி­ழகத் தலை­வர்கள் நோக்­கு­கின்­றனர்.

'ஜல்­லிக்­கட்டை நடத்­தக்­கூ­டாது' என்ற நீதி­மன்ற உத்­த­ரவை மீறி அதனை நடத்­தினால் தமி­ழக அரசு நீதி­மன்­றத்தின் கண்­ட­னத்­துக்கு உள்­ளா­குமே தவிர, ஆட்­சியை கலைக்க முடி­யாது. அவ்­வாறு ஆட்­சியைக் கலைப்­ப­தென்றால், முதலில் காவிரி ஆற்றில் நீரைத் திறந்­து­விட வேண்­டு­மென்று அம்­மா­நில அர­சுக்கு உச்­ச­நீ­தி­மன்றம் பிறப்­பித்த உத்­த­ரவை நிரா­க­ரித்த கர்­நா­டகா அர­சையே கலைக்க வேண்டும் என்று தமி­ழக வல்­லு­நர்கள் சுட்­டிக்­காட்­டு­கின்­றனர்.

எவ்­வா­றா­யினும், தமி­ழக அரசை தமது பூரண கட்­டுப்­பாட்­டுக்குள் வைத்­தி­ருப்­ப­தற்­கு­ரிய நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்­டுள்ள  மத்­திய பா.ஜ.க. அரசு, தற்­போது மாநில அரசைக் கலைப்­ப­தற்கு 'ஜல்­லிக்­கட்டு' பிரச்­சி­னையைக் கையில் எடுத்­துக்­கொண்­டுள்­ள­தா­கவே தமி­ழக அர­சியல் தலை­வர்கள் சுட்­டிக்­காட்­டு­கின்­றனர். 

சுப்­பி­ர­ம­ணியன் சுவா­மியின் இந்த அச்­சு­றுத்தல் தமி­ழக அர­சி­யல்­வா­திகள் பல­ரையும் அதிர்ச்­சி­ய­டையச் செய்­துள்­ளது. திரா­விடர் கழகத் தலைவர் கி.வீர­மணி உள்­ளிட்ட பலர் இதற்கு தமது கடும் கண்­ட­னத்­தையும் வெளி­யிட்­டுள்­ளனர்.

இது இவ்­வா­றி­ருக்க, மறைந்த முதல்வர் ஜெய­ல­லி­தாவின் சொத்­துக்கள் அனைத்­தையும் அர­சு­டை­மை­யாக்க வேண்டும் என உத்­த­ர­வி­டு­மாறு உயர்­நீ­தி­மன்­றத்தின் மதுரைக் கிளையில் பொது­நல வழக்கு மனு ஒன்று தாக்கல் செய்­யப்­பட்­டி­ருந்­தது. மதுரை பொது­நல வழக்­குகள் மைய நிர்­வாக அறங்­கா­வ­ல­ரான ரமேஷ் என்­ப­வரே இதனை தாக்கல் செய்­தி­ருந்தார்.

இந்த வழக்கு தொடர்­பான மனுவை உயர் நீதி­மன்ற மதுரை கிளை பெஞ்ச் தள்­ளு­படி செய்­து­விட்­டது. தனி­நபர் சொத்­துக்கள் தொடர்­பாக பொது­நல மனு தாக்கல் செய்ய முடி­யாது என்று நீதி­ப­தி­களின் தீர்ப்பில் தெரி­வித்­துள்­ளனர்.

ஜெய­ல­லிதா பிர­பல சினிமா நடி­கை­யாக இருந்த போது அத்­து­றையில் பல­கோடி ரூபா சம்­பா­தித்தார். பின்னர் அர­சி­ய­லிலும் ஈடு­பட்டார். 1989 இல் அ.தி.மு.க. வின் பொதுச்­செ­ய­லா­ள­ராக தெரிவு செய்­யப்­பட்­ட­துடன் எம்.எல்.ஏ.வாகவும் எதிர்­கட்சித் தலை­வ­ரா­கவும் இருந்தார்.

தேர்­தல்­களில் வெற்றி பெற்று 4 முறை தமி­ழ­கத்தின் முத­ல­மைச்­ச­ரா­கவும் பதவி வகித்தார். கடந்த வருடம் (2016) நடை­பெற்ற சட்­டப்­பே­ரவைத் தேர்­தலில் சென்னை ஆர்.கே. நகர் தொகு­தியில் போட்­டி­யிட்டு வெற்றி பெற்றார்.

அப்­போது, அவ­ரது வேட்பு மனுவில் தனது சொத்­துக்­க­ளாக, வங்­கியில் 10.63 கோடி வைப்­பி­லுள்­ள­துடன், பத்­திர முத­லீடு 27.44 கோடி எனவும் நகை­களின் பெறு­மதி 41.63 கோடி என்றும் தனது நிலத்தின் பெறு­மதி 72 கோடி ரூபா என்றும் குறிப்­பிட்­டி­ருந்தார். அத்­துடன் தமது வாக­னங்­களின் பெறு­ம­தி­யையும் குறிப்­பிட்­டி­ருந்தார்.

பின்னர் அவர் சுக­யீ­ன­முற்று சென்னை அப்­பல்­லோவில் அனு­ம­திக்­கப்­பட்டு டிசம்பர் 5 ஆம் திகதி கால­மானார். ஜெய­ல­லி­தாவின் பெயரில் தமி­ழகம் மற்றும் பிற மாநி­லங்­களில் பல கோடி ரூபா பெறு­ம­தி­யான சொத்­துக்கள் (அசையும்/அசையா சொத்­துக்கள்) உள்­ளன. அவ­ருக்கு வாரிசு யாரும் இல்லை. தவிர, தனது வாரிசு யார் என்­ப­தையும் அவர் குறிப்­பி­ட­வில்லை.

'மக்­களால் நான், மக்­க­ளுக்­கா­கவே நான்' என்று அடிக்­கடி குறிப்பிடுவார். எனவே, அவரது சொத்துக்கள் அனைத்தையும் அரசுடைமையாக்க வேண்டும். அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் வறிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கமுடியும். எனவே, ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து ஜெயலலிதாவின் சொத்துக்களை அடையாளங்கண்டு, அதன் விபரங்களை அறிக்கையாக வெளியிடப்படவேண்டும் என்று ரமேஷின் பொதுநல மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. இது பொது மக்கள் நலன் கருதி தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவையே உயர்நீதிமன்றத்தின் மதுரைக்கிளையின் பெஞ்ச் அறிவித்துள்ளது.

இந்த நிலையில் ஜெயலலிதாவின் சொத்துக்கள் அனைத்துக்கும் என்ன நடக்கும்? யார் அவற்றுக்கு வாரிசு? தற்போதைய அதன் நிலைமை என்ன? என்ற பல்வேறு கேள்விகள் தமிழக மக்களிடையே எழுந்துள்ளது. இதற்குரிய விடை எப்போது கிடைக்குமென்று அவர்கள் எதிர்ப்பார்த்திருக்கின்றனர். விடை கிடைக்குமா? அல்லது விடை கிடைக்காமலே மறைந்து போகுமா? என்பதற்கு காலந்தான் பதில் சொல்லவேண்டும்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2017-01-15#page-2

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வருகை, கருத்துக்கு நன்றி நெடுக்ஸ். இப்போ ஊபரும் வந்துள்ளது. ஆனால் கார் மட்டும்தான். ஆட்டோ என்றால் பிக் மிதான். கொழும்பில் பிக் மி யில் மோட்டார் சைகிளிலும் ஏறி போகலாம். அந்த பகுதி ஒரு இராணுவ கண்டோன்மெண்ட் போல இருக்கிறது என சொல்லி உள்ளேனே? நேவி வியாபாரம் செய்வதையும் சொல்லி உள்ளேன்.
    • Published By: RAJEEBAN   29 MAR, 2024 | 12:22 PM   உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் உள்ள விடயங்களை கண்டுபிடிப்பதற்கான முக்கிய தடையாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவே காணப்படுகின்றார் என கத்தோலிக்க திருச்சபையின்  பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். ஊடகமொன்றிற்கு வழங்கிய பேட்டியில் இதனை அவர் தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று  பலமாதங்ளின் பின்னர் ஜனாதிபதியான பின்னர் கோட்டாபய ராஜபக்ச செய்த எடுத்த முதல் நடவடிக்கை உயிர்த்தஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவை செயல்இழக்கச்செய்ததே என அவர் குறிப்பிட்டுள்ளார். உயிர்த்தஞாயிறுதாக்குதல் சூத்திரதாரிகள்யார்  என்பது யார் தனக்கு தெரியும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருப்பது குறித்து கருத்து தெரிவித்துள்ள  அருட்தந்தை  சுயாதீன ஆணைக்குழுவை நியமித்தால் மாத்திரமே உண்மை வெளிவரும் என குறிப்பிட்டுள்ளார். ஷானி அபயசேகர தலைமையிலான ஆணைக்குழுவை மீண்டும் நியமிக்கவேண்டும் சர்வதேசஅளவில் விசாரணை இடம்பெறவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதனை செய்தால் மைத்திரிபாலசிறிசேன அதன் முன்னிலையில் தோன்றி சூத்திரதாரி யார் என்ற உண்மையை தெரிவிக்க முடியும் எனவும் அருட்தந்தை தெரிவித்துள்ளார்.  நீங்கள் கோட்டாபய ராஜபக்சவை சூத்திரதாரி என தெரிவிக்கின்றீர்களா என செவ்வி காண்பவர் கேள்விஎழுப்பியவேளை அருட்தந்தை சிறில் ஆம் அது தெளிவான விடயம் என குறிப்பிட்டுள்ளார். உயிர்த்த ஞாயிறுதாக்குதலில் பொதுமக்கள் கொல்லப்பட்டதை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர்கள் வாக்குகளை பெறுவதற்காக பயன்படுத்தக்கூடும் என தெரிவித்துள்ள அருட்தந்தை சிறில்பெர்ணான்டோ ஆட்சிமாற்றத்தின் போது அரசியல் வஞ்சகர்கள் மீண்டும் தெரிவு செய்யப்பட்டால் அது ஏற்கனவே பொருளாதார நெருக்கடி சட்டமொழுங்கின்மையினால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாட்டிற்கு மேலும் பேரழிவாக அமையும் எனவும் குறிப்பிட்டுள்ளார். அமைப்புமுறையில் பாரிய மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே உண்மை வெளிவரும் அமைப்பு முறை மாற்றம் ஏற்படுவதற்கு அரசியல் நிர்வாகம் முற்றாக மறுசீரமைக்கப்படுவது அவசியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179961
    • அனைத்து ஆசிய நாடுகளிடமும் பிரதமர் விடுத்த கோரிக்கை! ஆசியாவிற்கான BOAO மன்றத்தின் வருடாந்த மாநாட்டில் பிரதமர் தினேஷ் குணவர்தன பங்கேற்றுள்ளார். சீனாவின் ஹைனான் நகரில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் விசேட உரை ஒன்றை நிகழ்த்தினார். வருமானத்தை சமமாகப் பகிர்ந்தளிக்கும் வறுமையற்ற ஆசியாவைக் கட்டியெழுப்ப அர்ப்பணிப்புடன் செயற்படுமாறு அனைத்து ஆசிய நாடுகளிடமும் பிரதமர் தினேஷ் குணவர்தன கோரிக்கை விடுத்துள்ளார். விவசாய வளர்ச்சி மற்றும் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்த புதிய முயற்சிகள் தேவை என்றும், இது வறுமையை ஒழிப்பது மட்டுமல்லாமல் சமூக நல்லிணக்கம் மற்றும் அமைதியை உறுதி செய்யும் என்றும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே கொழும்பு துறைமுகம், ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் கொழும்பு துறைமுக நகரத்தை விஸ்தரிப்பது தொடர்பில் பிரதமர் விளக்கமளித்ததாகவும் பிரதமர் அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது. https://thinakkural.lk/article/297561
    • நாங்கள் மேலைத்தேச நாடுகளில் மத்தியதர வர்க்கம் ஆனால் இலங்கை போன்ற 3ஆம் உலக நாடுகளுக்கு சென்றால் உயர்தட்டு வர்க்கம், அங்கே விடுமுறைகாலத்தில் அங்கேயுள்ள மக்களால் பெறமுடியாத பொருள், சேவைகளை பெற்றுகொள்ளலாம், மேலும் வெளிநாட்டில் இருந்துவிட்டு இந்த மாதிரி 3ஆம் உலக நாடுகளில் குடியேறும்போது எமது பணத்தின் மூலம் பொருள்கள், சேவைகளை அதிகமாக பெற்று வசதியாக வாழலாம், இந்த சொந்த அனுபவம் ஒட்டு மொத்த இலங்கை மக்களின் நாளாந்த வாழ்வு பிரதிபலிக்குமா என்பது தெரியவில்லை.
    • கடலை போட்டவரிடம் பால் கேட்டிருக்கலாமே! எருமைப் பாலாவது கிடைத்திருக்கும்😜
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.