Jump to content

பட்டப்போட்டி...


Recommended Posts

பட்டப்போட்டி...
 
 

article_1484460114-2.jpg

-எம்.றொசாந்த்

தைப்பொங்கல் தினத்தினை முன்னிட்டு, வல்வெட்டித்துறையில் மாபெரும் இராட்சத பட்டங்கள் ஏற்றும்போட்டி சனிக்கிழமை  இடம்பெற்றது.
article_1484460129-3.jpg

article_1484460141-4.jpg

article_1484460154-5.jpg

 

- See more at: http://www.tamilmirror.lk/189718/பட-டப-ப-ட-ட-#sthash.3dgRAmvf.dpuf
Link to comment
Share on other sites

சிறப்புற நடைபெற்ற வல்வை பட்டத்திருவிழா 2017
சிறப்புற நடைபெற்ற   வல்வை  பட்டத்திருவிழா 2017

வல்வை  பட்டத்திருவிழா 2017  நேற்றையதினம் வல்வை உதயசூரியன் உல்லாசக்கடற்கரையில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.

நேற்று பிற்பகல் 2.30 மணியளவில் ஆரம்பமான இந்த நிகழ்விற்கு பிரதம விருந்தினராக வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சர் டெனிஸ்வரன், சிறப்பு விருந்தினராக வடக்கு மாகாணசபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம்,வல்வெட்டித்துறை நகராட்சிமன்ற செயலாளார் பிரசாந்த், கௌரவ விருந்தினராக பருத்தித்துறை பிரதேச செயலர் ஜெயசீலன் ஆகியோருடன் பெருந்திரளான மக்களும் கலந்து கொண்டனர்.

15936542_1445778645485585_8650117494136710798_o.jpg15585124_1445791282150988_4280511379653022291_o.jpg15936603_1445781455485304_8189985380651902693_o.jpg15936625_1445786658818117_4825510826070101632_o.jpg15936591_1445784852151631_4428641289270034715_o.jpg15936751_1445790885484361_3027079804577254553_o.jpg16107151_1445786005484849_3675413008761712324_o.jpg15977792_1445779662152150_8396403144113746456_n.jpg15977370_1445792975484152_4381900785409080719_n.jpg15975137_1445792158817567_2506267954299472814_o.jpg16113370_1445779915485458_957466779450754925_o.jpg16113017_1445791562150960_5252006854848060735_o.jpg15994518_1445779255485524_872597024857999606_o.jpg16113327_1445783218818461_5721872359981969963_o.jpg16113301_1445792215484228_6552968372816725648_o.jpg16112602_1445789132151203_7379299317407849051_o.jpg15975019_1445783818818401_6610516208029513763_o.jpg

 

http://onlineuthayan.com/news/22681

Link to comment
Share on other sites

பிரபாகரனின் பிறந்த ஊரில் பறந்து வென்ற ராட்சத ஓணான்!

 பட்டம்

மிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் பிறந்த ஊரான இலங்கை வல்வெட்டித்துறையில் உள்ள வல்வை உதயசூரியன் கடற்கரையில், தமிழர் திருநாளாம் தைப்பொங்கலை முன்னிட்டு மாபெரும் பட்டப் போட்டித் திருவிழா நடைபெற்றது.
  
வல்வை விக்னேஸ்வரா சனசமூக நிலையத்தின் சார்பில் நடைபெற்ற இந்தப் பட்டத் திருவிழாவில், வட மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர் டெனிஸ்வரனும், வட மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கமும் கலந்துகொண்டு சிறப்பித்தனர். 

இந்த விழாவில், இளைஞர்களால் நேர்த்தியுடன் உருவாக்கப்பட்ட பல்வேறு ராட்சத வடிவங்களிலான பாய்மரப் படகு, மாட்டு வண்டி, இயந்திர மனிதன், ராட்சத ஓணான், ஆள்துளைக் கிணறு தோண்டும் இயந்திரம், நாக பாம்பின் தலை என 80-க்கும் மேற்பட்ட அழகிய பட்டங்கள் வானில் பறக்கவிடப்பட்டன. இவற்றை, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஆர்வத்துடன் கண்டுகளித்தனர். 

பட்டப்போட்டி பிரபாகரன் சொந்த ஊர்

2017-ம் ஆண்டின் ராட்சத பட்டத்துக்கான பரிசு, சுமார் 40 அடி நீளமான ராட்சத ஓணான் பட்டத்துக்குக் கிடைத்தது. இதை, தீருவிலை மகேந்திரன் என்பவர் வடிவமைத்து இருந்தார்.  போட்டியில் வெற்றி பெற்ற அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.  ஆண்டுதோறும் நடைபெறும் இந்தப் பிரமாண்ட பட்டப் போட்டியை கண்டுகளிக்க இலங்கையின் பல்வேறு பிரதேசங்கள் மற்றும் புலம்பெயர் தேசங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்திருந்தனர். 

ஆரம்ப காலங்களில் இருந்தே கடலோடிகளாக விளங்கிய வல்வெட்டித்துறை மக்கள், பல்வேறு கீழைத்தேச, மேலைத்தேச நாடுகளுக்கு பாய்மரப் படகுகளில் சென்று பட்டம் கட்டும் தொழிநுட்பங்களைக் கற்று வந்துள்ளனர். 

collagerrr_12003.jpg

இந்த விழாவில் ஆண்டுதோறும் பிரமாண்டமான உருவங்களையெல்லாம் வண்ணக் காகிதங்கள் மூலம் பட்டங்களாகச் செய்து காற்றில் பறக்கவிடுவர்.   பிரபாகரன் பிறந்த மண்ணை அடையாளப்படுத்தும் விதமாக போர் விமானம், யுத்த டாங்கி போன்ற பட்டங்களும் பறக்கவிடப்பட்டன. பட்டத் திருவிழா நிறைவுபெற்றதும் இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

http://www.vikatan.com/news/world/77960-kite-festival-at-ltte-president-prabhakarans-native-place.art

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • O/L பரீட்சையின் மீள் திருத்த பெறுபேறுகள் தொடர்பில் கல்வி அமைச்சரின் அறிவிப்பு கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சையின் மீள் திருத்த பெறுபேறுகள் விரைவில் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவித்துள்ளார். பாரா ளுமன்றத்தில் இன்று கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்தார். இம்முறை கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சை மே மாதம் இரண்டாவது வாரத்தில் தொடங்கவுள்ளது. இந்த நிலையில் இதற்கு முன்னதாக கடந்த பரீட்சைக்கான அனைத்து மீள் திருத்த பெறுபேறுகளும் வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளதாக கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். https://thinakkural.lk/article/300298
    • 26 APR, 2024 | 03:16 PM   மத்தல விமானநிலையத்தின் நிர்வாகத்தை இந்திய ரஸ்ய நிறுவனங்களிடம் ஒப்படைப்பதற்கு இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 30வருட காலத்திற்கு ரஸ்யா இந்தியா கூட்டு முயற்சிக்கு ஒப்படைப்பதற்கு  அமைச்சரவை தீர்மானித்துள்ளது என அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். இந்தியாவின் சௌர்யா ஏரோநட்டிக்ஸ்  ரஸ்யாவின் எயர்போர்ட் ரீஜன்ஸ் முகாமைத்துவ நிறுவனத்திடமும் மத்தல விமானநிலையத்தின் நிர்வாகத்தை  ஒப்படைப்பதற்கு இலங்கை தீர்மானித்துள்ளது. https://www.virakesari.lk/article/182025
    • புலம்பெயர் தேசத்தில் சில மொக்கு கூட்டம் பிள்ளைகள் உறைப்பு சாப்பிடும் என்பதை ஏதோ பெரிய தகமை போல் கதைத்துகொண்டு திரியும். என்னை கேட்டால் முடிந்தளவு மிளகாய்தூள் பாவனையை பிள்ளைகளுக்கு இல்லாமலே பழக்க வேண்டும். இப்படியான கான்சர் ஊக்கிகள் மட்டும் அல்ல, புலம்பெயர் கடைகளில் ஒரு ஆட்டு கறியை வாங்கி அதை சுடு தண்ணியில் கழுவி பாருங்கள் - சிவப்பாய் கலரிங்கும், எண்ணையும் ஓடும். உறைப்பை கூட்ட, உப்பு கூட்ட சொல்லும், உப்பு கூட உபாதைகள் கூடும். திறமான வழி பண்டைய தமிழர், இன்றைய சிங்களவர் வழி - உறைப்புக்கு மிளகு பாவித்தல். @பெருமாள் # எரியுதடி மாலா
    • 1)இயக்குனர் தங்கர்பச்சான் ( பாட்டாளி மக்கள் கட்சி) 4ம் இடம் 2) இயக்குனர் மு.களஞ்சியம் ( நாம் தமிழர் கட்சி) 4ம் இடம் 3) நடிகை ராதிகா சரத்குமார் ( பிஜேபி) 4ம் இடம் 4)நடிகர் விஜய் வசந்த் ( காங்கிரஸ். வசந்த் & கோவின் உரிமையாளர் எச். வசந்தகுமாரின் மகன்  1ம் இடம் 5) ஓ பன்னீர்செல்வம் ( முன்னால் முதல்வர் - சுயேச்சை வேட்பாளர், பிஜேபி கூட்டணி) 3ம் இடம் 6) டி. டி. வி. தினகரன்(அம்மா முன்னேற்ற கழகம்) 1ம் இடம் 7)அண்ணாமலை (பிஜேபி தமிழகத் தலைவர்) 1ம் இடம். 😎தொல் திருமாவளவன் ( விடுதலை சிறுத்தை) 1ம் இடம் 9)துரை வைகோ ( மதிமுக - வை கோவின் மகன்) 3ம் இடம். 10) சௌமியா அன்புமணி ( பாட்டாளி மக்கள் காட்சி) 2ம் இடம். 11) கனிமொழி கருணாநிதி (திமுக - கலைஞர் கருணாநிதியின் மகள்) 1ம் இடம். 12)வித்யாராணி வீரப்பன்( நாம் தமிழர் கட்சி- வீரப்பன் மகள் ) 4ம் இடம்.   13)கார்த்தி சிதம்பரம் ( காங்கிரஸ்) 1ம் இடம்.   14) தமிழிசை சௌந்தரராஜன் ( பிஜேபி) 1ம் இடம். 15) தயாநிதிமாறன் திமுக) 1ம் இடம். 16) ரவிக்குமார் ( விடுதலை சிறுத்தை) 3ம் இடம் 17)பொன் ராதாகிருஷ்ணன் ( பிஜேபி) 4ம் இடம். 18)ரி ஆர் பாலு ( திமுக) 1ம் இடம். 19)எல் முருகன் (பிஜேபி) 4ம் இடம்.   20)தமிழச்சி தங்கபாண்டியன் ( திமுக) 1ம் இடம். 21) விஜய பிரபாகரன் ( தேதிமுக  விஜயகாந்தின் மகன்) 2ம் இடம். 22) நவாஸ் கனி( இந்திய யூனியன் முஸ்லிம் லீக்) 1ம் இடம். 23)நயினர் நாகேந்திரன் (பிஜேபி) 1ம் இடம். 24)நாம் தமிழர் கட்சி இத்தேர்தலில் எத்தனை வீதம் வாக்குகளை பெரும்?    1) 5% க்கு குறைய   2) 5% - 6%   3) 6% - 7%   4) 7% - 8%   5) 8% க்கு மேல் 25)விடுதலைச் சிறுத்தைகள் போட்டியிடும் 2 தொகுதியில் கிடைக்கும் மொத்த வாக்குகள் 5 இலட்சத்துக்கு கூடவா அல்லது குறைவா? கூட 26)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 0 27)விடுதலை சிறுத்தைகள் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 1 28)இந்திய கம்னியூஸ்ட் கச்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 2 29)மாக்சிஸ கம்னியூஸ்ட் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 2 30)தமிழ் மாநில காங்கிரஸ் எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 0 31)தேமுதிக எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? 0 32)அம்மா மக்கள் முன்னேற்ற கட்சி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? 1 33) பகுஜன் சமாஜ் கட்சி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? 0 34)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதிகளில் 3 ம் இடத்தினை பிடிக்கும்? 0 35)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதிகளில் 2ம் இடத்தினை பிடிக்கும் ? 0 36)அதிமுக கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள்.  2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 2 37)பிஜேபி கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள்.  2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 6 38) திமுக கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள்.  2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 31 39) 22 தொகுதிகளில் திமுக சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள்.  2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 20 40) 34 தொகுதிகளில் அதிமுக சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 3 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 2 புள்ளிகள்.  3 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 2 41) 10 தொகுதிகளில் காங்கிரஸ் சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 3 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 2 புள்ளிகள்.  3 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 7 42) 10 தொகுதிகளில் பாட்டாளி மக்கள் கட்சி சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 2 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 01 43) 23 தொகுதிகளில்  பாரதிய ஜனதா கட்சி சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 2 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 5    
    • நாட்டில் தீவிரவாதத்தால் முதலில் பாதிக்கப்படுவது முஸ்லிம் மக்கள்தான்- விமல் வீரவன்ச! ‘மத நம்பிக்கைகளுக்கு இடையே பிளவை ஏற்படுத்துவதே’ நாட்டில் தீவிரவாதம் உருவாகக் காரணம் என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார் அங்கு அவர் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள சில விடயங்களை நாடாளுமன்றத்தில் முன்வைத்தார். “தீவிரமயமாக்கல் என்பது சமூக மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான வழிமுறையாக வன்முறையைப் பயன்படுத்துவதை ஆதரிப்பது அல்லது எளிதாக்குவது உட்பட, தீவிரவாத நம்பிக்கை முறையைப் பின்பற்றும் செயல்முறையாக பொதுவாக வரையறுக்கப்படுகிறது. சர்வதேச அளவில் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட பயங்கரவாதம் என்பது அரசியல் அல்லது சித்தாந்த இலக்குகளை அடைவதற்காக பொதுமக்களை இலக்காகக் கொண்ட வன்முறை செயல்முறையாகும். அவர்களுக்கு மற்ற பிரிவினரோ, பிற மதத்தினரோ, பிற இனத்தவர்களோ நண்பர்கள் தேவையில்லை.. அந்த வகையில் தீவிரவாதிகளாக தனிமைப்படுத்தப்படுகிறார்கள். அத்துடன் இந்த தீவிரவாத செயல்களால் முதலில் பாதிக்கப்படுவது கத்தோலிக்கர்கள் அல்ல என்றும், முஸ்லிம்கள் மக்கள்தான் என்றும் அவர் சபையில் வலியுறுத்தினார். மேலும் முஸ்லிம்களை தாக்குவதைத் தடுக்கும் சட்டம் அமுல்படுத்தப்பட்டு, புலனாய்வு அமைப்புகளை நடைமுறைப்படுத்தியிருந்தால், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் போன்ற கொடூரமான படுகொலை நடந்திருக்காது என விமல் வீரவன்ச சுட்டிக்காட்டியுள்ளார். https://athavannews.com/2024/1379920
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.