Jump to content

கோரிக்கையின் நியாயம் குறித்து சிந்தியுங்கள்


Recommended Posts

கோரிக்­கையின் நியாயம் குறித்து சிந்­தி­யுங்கள்

 

பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதி வழங்கும் செயற்­பாட்டில் சர்­வ­தேச நீதி­ப­தி­களை உள்­ளீர்க்­க­வேண்டும் என்ற நல்­லி­ணக்க செய­ல­ணியின் பரிந்­து­ரை­யா­னது தொடர்ச்­சி­யாக சர்ச்­சை­களை ஏற்­ப­டுத்­து­வ­தா­கவே அமைந்­துள்­ளது. உள்­நாட்­டிலும் சர்­வ­தேச மட்­டத்­திலும் நல்­லி­ணக்க பொறி­முறை குறித்த செய­ல­ணியின் இந்த பரிந்­துரை தொடர்­பா­கவே பேசப்­பட்­டு­வ­ரு­கின்­றது.   

சர்­வ­தேச அரச சார்­பற்ற நிறு­வ­னங்­களும் சிவில் நிறு­வ­னங்­களும் நல்­லி­ணக்க பொறி­முறை குறித்த செய­ல­ணியின் பரிந்­து­ரை­கள் நடை­மு­றைப்­ப­டுத்­தப்பட­வேண்டும் என்­ப­தனை வலி­யு­றுத்­தி­வ­ரு­கின்­றன. இந்­நி­லையில் உள்­நாட்­டிலும் இந்த விடயம் சர்ச்­சைக்­கு­ரிய ஒன்­றாக மாறி­யுள்­ளது.

குறிப்­பாக அர­சாங்­கத்தின் அமைச்­ச­ர­வையில் அங்கம் வகிக்­கின்ற அமைச்­சர்­களே இந்த சர்­வ­தேச நீதிப­திகள் என்ற பரிந்­து­ரையை கடு­மை­யாக விமர்­சித்­து­வ­ரு­கின்­றனர். இந்­நி­லையில் பிரிட்­ட­னுக்கு விஜயம் மேற்­கொண்­டுள்ள வெளிவி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர இந்த சர்­வ­தேச நீதி­ப­திகள் விவ­காரம், ஜெனிவா பிரே­ரணை, பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதி வழங்கும் விசா­ரணை பொறி­முறை என்­பன தொடர்பில் கருத்து வெளி­யிட்­டுள்ளார்.

அதா­வது ஐக்­கிய நாடுகள் மனித உரிமைப் பேர­வையில் நிறை­வேற்­றப்­பட்ட இலங்கை தொடர்­பான பிரே­ர­ணையை அமுல்­ப­டுத்­து­வ­தற்கு இலங்கை அர்ப்­ப­ணிப்­புடன் இருக்­கின்­றது. அதன்­படி கடந்த கால விட­யங்­களை நேர்­மை­யா­கவும் உண்­மை­யா­கவும் ஆராய்ந்து அவற்றை ஏற்­றுக்­கொள்­வ­தற்கும் புதிய இலங்­கையை கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்கும் இலங்கை அர்ப்­ப­ணிப்­புடன் இருக்­கின்­றது என்று தெரிவித்த வெளி ­விவ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர பொறுப்­புக்­கூறல் பொறி­மு­றையில் வெளி­நாட்டு நீதி­ப­தி­களின் பங்­கேற்புத் தொடர்பில் அர­சாங்­கத்­துக்­குள்­ளேயே வித்­தி­யா­ச­மான கருத்­துக்கள் காணப்­ப­டு­கின்­றன. இந்த முரண்­பா­டான கருத்­துக்­க­ளுக்கு அப்பால் மிகவும் நம்­ப­க­ர­மான மற்றும் சுயா­தீ­ன­மான உள்­ளக விசா­ரணைப் பொறி­மு­றையை அமைக்க வேண்­டிய தேவை அர­சாங்­கத்­துக்கு காணப்­ப­டு­கி­றது என்றும் குறிப்­பிட்­டுள்ளார்.

இலங்கை அர­சாங்­க­மா­னது கடந்த காலங்கள் குறித்து ஆராய்­வ­தற்­காக பாதிக்­கப்­பட்­ட­வர்­களின் கவ­லைகள் குறித்து கவனம் செலுத்­து­கி­றது. அத்­துடன் உண்­மையைக் கண்­ட­றிதல், நீதி வழங்­குதல், நட்­ட­ஈடு வழங்­குதல் மற்றும் மீள் நிக­ழா­மையை உறு­திப்­ப­டுத்­துதல் ஆகிய நான்கு விட­யங்­களை அடிப்­ப­டை­யாகக் கொண்டே அர­சாங்கம் கடந்த கால நிகழ்­வு­களை ஆராய்ந்து வரு­கி­றது.இதன் முத­லா­வது கட்­ட­மாக இலங்கை அர­சாங்­க­மா­னது காணா­மற்­போனோர் குறித்து ஆராய்­வ­தற்­கான அலு­வ­ல­கத்தை அமைப்­ப­தற்­கான சட்­ட­மூ­லத்தை பாரா­ளு­மன்­றத்தில் நிறை­வேற்­றி­யது என்றும் அமைச்சர் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.

அறிக்­கையை அர­சாங்­கத்தின் நிபு­ணர்கள் மிக விரி­வாக ஆராய்ந்து வரு­கின்­றனர். இதனை முழு­மை­யாக ஆராய்ந்து விட்டு உண்­மையைக் கண்­ட­றியும் ஆணைக்­கு­ழுவும் நட்­ட­ஈடு வழங்கும் அலு­வ­ல­கமும் எவ்­வாறு அமைக்­கப்­படும் என்ற வடி­வ­மைப்புத் தயா­ரிக்­கப்­படும். இறை­மை­யுள்ள ஜன­நா­யக நாடு என்­ற­வ­கையில் இலங்­கை­யா­னது இவ்­வ­கை­யான பொறி­முறை ஒன்றை தயா­ரிக்கும் நோக்கில் அனைத்து தரப்­பி­ன­ரி­டமும் பேச்­சு­வார்த்தை நடத்தும் என்றும் அமைச்சர் மங்­கள சம­ர­வீர சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.

இவ்­வா­றான நிலையில் இந்த சர்­வ­தேச நீதி­ப­திகள் விவ­காரம் ஏன் களத்­துக்கு வந்­தது என்­பது குறித்து நாங்கள் ஆரா­ய­வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். அதா­வது 2009 ஆம் ஆண்டு யுத்தம் நிறை­வ­டைந்­ததும் ஐக்­கிய நாடு­களின் அப்­போ­தைய செய­லாளர் நாயகம் பான் கி மூன் இலங்­கைக்கு விஜயம் மேற்­கொண்­டி­ருந்தார். அதன்­போது பான் கீ மூனுக்கும் அப்­போ­தைய ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷ­வுக்­கு­மி­டையில் நடை­பெற்ற பேச்­சு­வார்த்­தைக்குப் பின்னர் கூட்­ட­றிக்­கை­யொன்று விடுக்­கப்­பட்­டது. அதில் யுத்­த­கா­லத்தில் இடம்­பெற்­ற­தாக கூறப்­படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் மனி­தாபிமான மீறல்கள், சட்­ட­மீ­றல்கள் தொடர்­பாக நம்­ப­க­ர­மான உள்ளக விசா­ரணை நடத்­தப்­ப­டு­மென தெரி­விக்­கப்­பட்­டி­ருந்­தது. ஆனால் அவ்­வாறு எந்­த­வி­மான உள்­ளக விசா­ர­ணையும் முன்­னெ­டுக்­கப்­ப­டாத நிலையில் 2009 ஆம் ஆண்டு இலங்கை அர­சாங்­கமே ஜெனி­வாவில் ஒரு பிரே­ரணையைக் கொண்­டு­வந்­தது. அந்தப் பிரே­ர­ணை­யிலும் உள்­ளக ரீதியில் விசா­ரணை நடத்­தப்­பட்டு பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதி வழங்­கப்­ப­டு­மென உறு­தி­ய­ளிக்­கப்­பட்­டது.

எனினும் அவ்­வாறு எவ்­வி­த­மான உள்­ளக விசா­ரணைப் பொறி­மு­றையும் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வில்லை. மாறாக கற்­ற­றிந்த பாடங்­களும் நல்­லி­ணக்­கமும் தொடர்­பான ஆணைக்­குழு நிய­மிக்­கப்­பட்டு பல்­வேறு தரப்­புக்­க­ளி­ட­மி­ருந்தும் சாட்­சி­யங்கள் பெறப்­பட்­டன. அதன் அறிக்கை முன்­வைக்­கப்­பட்ட நிலையில் அதனை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­திலும் தாமதம் காணப்­பட்­டது. இவ்­வா­றான சூழ்­நி­லை­யி­லேயே 2012 ஆம் ஆண்டு ஜெனிவா மனித உரிமை பேர­வையில் இலங்கை தொடர்­பாக உறுப்பு நாடுகள் சில­வற்­றினால் பிரே­ரணை ஒன்று கொண்­டு­வ­ரப்­பட்­டது. அதில் இடம்­பெற்­றுள்­ள­தாகக் கூறப்­படும் மீறல்கள் தொடர்­பாக நம்­ப­க­ர­மான விசா­ரணை நடத்­தப்­பட்டு நீதி நிலை­நாட்­டப்­ப­ட­வேண்­டு­மென வலி­யு­றுத்­தப்­பட்­டது. எனினும் அந்த பிரே­ர­ணையை இலங்கை அர­சாங்கம் நிரா­க­ரித்­தது. அத­னை­ய­டுத்து 2013 ஆம் ஆண்டும் ஜெனிவா மனித உரிமை பேர­வையில் இலங்கை தொடர்­பான பிரே­ரணை ஒன்று கொண்­டு­வ­ரப்­பட்­ட­துடன் நம்­ப­க­ர­மான விசா­ர­ணை­ கோ­ரிக்கை முன்­வைக்­கப்­பட்­டது. ஆனால் அந்தப் பிரே­ர­ணை­யையும் இலங்கை அர­சாங்கம் முழு­மை­யாக நிரா­க­ரித்­தது.

இந்­நி­லையில் 2014 ஆம் ஆண்டு ஜெனிவா மனித உரிமை பேர­வையில் மூன்­றா­வது தட­வை­யா­கவும் உறுப்பு நாடு­க­ளினால் பிரே­ரணை ஒன்று கொண்­டு­வ­ரப்­பட்­டது. அந்த பிரே­ர­ணையில் இலங்­கையில் இடம்­பெற்­ற­தாகக் கூறப்­படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் மனி­தா­பி­மான சட்­ட­மீ­றல்கள் தொடர்­பாக ஐ.நா. மனித உரிமை அலு­வ­லகம் விசா­ரணை நடத்­த­வேண்­டு­மென வலி­யு­றுத்­தப்­பட்­டி­ருந்­தது. அந்தப் பிரே­ர­ணை­யையும் அப்­போ­தைய இலங்கை அர­சாங்கம் நிரா­க­ரித்த நிலை­யிலும் ஐ.நா. மனித உரிமை ஆணைக்­கு­ழு­வா­னது இலங்­கைக்கு வருகை தரா­ம­லேயே விசா­ர­ணையை முன்­னெ­டுத்­தது. அந்த விசா­ரணை அறிக்கை 2015 ஆம் ஆண்டு ஒக்­டோபர் மாதம் வெளி­யி­டப்­பட்­டது. அதில் சர்­வ­தேச நீதி­ப­தி­க­ளுடன் கலப்பு நீதி­மன்றம் அமைக்­கப்­பட்டு விசா­ரணை முன்­னெ­டுக்­கப்­பட்டு பாதிக்­கப்­பட்­டோ­ருக்கு நீதி­வ­ழங்­க­வேண்­டு­மென வலி­யு­றுத்­தப்­பட்­டது. அந்த கட்­டத்தில் இலங்­கையில் ஆட்­சி­மாற்றம் ஏற்­பட்­டி­ருந்த சூழலில் ஐ.நா. வின் விசா­ரணை அறிக்­கையை அடி­யொற்றி மற்­று­மொரு பிரே­ரணை ஜெனி­வாவில் கொண்­டு­வ­ரப்­பட்­டது. அந்தப் பிரே­ர­ணையில் சர்­வ­தேச நீதி­ப­தி­களின் பங்­கேற்­புடன் விசா­ரணை பொறி­முறை முன்­னெ­டுக்­கப்­ப­ட­வேண்­டு­மென வலி­யு­றுத்­தப்­பட்­டி­ருந்­த­துடன் அதற்கு இலங்கை அர­சாங்கம் இணை அனு­ச­ரணை வழங்­கி­யது.

இந்தப் பின்­ன­ணியே இலங்­கையின் மனித உரிமை விவ­கா­ரத்தில் சர்­வ­தேச நீதி­ப­திகள் இடம்­பெ­ற­வேண்­டு­மென்ற கோரிக்கை முன்­வ­ரு­வ­தற்­கான சூழலை உரு­வாக்­கி­யது. எனினும் சர்­வ­தேச நீதி­ப­தி­களை உள்­ள­டக்­கிய கோரிக்­கையை முன்­வைத்த பிரே­ர­ணைக்கு இணை அனு­ச­ரணை வழங்­கிய இலங்கை அர­சாங்கம் தற்­போது அந்தப் பரிந்­து­ரையை எதிர்க்­கி­றது. அர­சாங்கம் பிரே­ர­ணைக்கு இணை அனு­ச­ரணை வழங்­கி­ய­போது பாதிக்­கப்­பட்ட மக்கள் அர­சாங்­கத்தின் மீது பாரிய நம்­பிக்கை வைத்­தனர். தமக்கு இழைக்­கப்­பட்ட அநீ­தி­க­ளுக்கு நீதி கிடைக்கும் என்ற நம்­பிக்கை மக்­க­ளுக்கு ஏற்­பட்­டது.

 ஆனால், தற்­போது அர­சாங்கம் செயற்­படும் வித­மா­னது மக்­களின் நம்­பிக்­கையை சீர்­கு­லைப்­ப­தா­கவே அமைந்­தி­ருக்­கி­றது. கடந்த காலங்­களில் உள்­ளக ரீதியில் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதி உறு­திப்­ப­டுத்­தப்­ப­டா­ததன் கார­ண­மா­கவே பாதிக்­கப்­பட்ட மக்கள் சர்­வ­தேச பங்­க­ளிப்பை நாடி நிற்­கின்­றனர். அந்த அடிப்­ப­டை­யி­லேயே மக்­க­ளிடம் ஆலோ­சனை நடத்­திய நல்­லி­ணக்க செய­ல­ணி­யிடம் மக்கள் இந்தக் கோரிக்­கையை பெரு­வா­ரி­யாக முன்­வைத்­தனர். வடக்கு, கிழக்குப் பகு­தி­களில் மட்­டு­மன்றி தென்­ப­கு­தி­யி­லி­ருந்தும் இந்த சர்­வ­தேச நீதி­ப­திகள் தொடர்­பான கோரிக்கை முன்­வைக்­கப்­பட்­ட­தாக நல்­லி­ணக்க பொறி­முறை குறித்த செயலணியின் பிரதிநிதிகள் தெரிவித்திருந்தனர்.

எனவே, அரசாங்கமானது பாதிக்கப்பட்ட மக்களும் சர்வதேச சமூகமும் ஏன் இந்த சர்வதேச தலையீட்டை கோரி நிற்கின்றன என்பதை சிந்திக்கவேண்டியது அவசியமாகும். மாறாக இந்தக் கோரிக்கையை முழுமையாக நிராகரிப்பதானது பாதிக்கப்பட்ட மக்களைப் புண்படுத்துவதாகவே அமையும். அமைச்சர் மங்கள சமரவீரவும் சர்வதேச நீதிபதிகள் விடயத்தில் அரசாங்கத்திற்குள்ளேயே முரண்பாடுகள் காணப்படுவதாக தெரிவித்திருக்கிறார். இதன்மூலம் இந்த விசாரணைப் பொறிமுறை விடயத்தில் அரசாங்கத் தரப்பிற்கு பொதுவான இணக்கப்பாடு இல்லாமை தெளிவாகிறது. எனவே முதலில் அரசாங்கம் இந்த சர்வதேச நீதிபதி குறித்த கோரிக்கையை நிதானமாக ஆராயவேண்டியது அவசியமாகின்றது. எவ்வாறெனினும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திருப்தியற்ற மற்றும் நம்பிக்கையளிக்காத விசாரணைப் பொறிமுறையை முன்னெடுப்பதில் அர்த்தமில்லை. இந்த அனைத்து விடயங்கள் குறித்தும் சிந்தித்து அரசாங்கம் விரைவில் ஆக்கபூர்வமான தீர்மானத்தை இந்த விடயத்தில் எடுக்கவேண்டுமென சுட்டிக்காட்டுகிறோம்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-01-14#page-4

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சிறிய வயது பெட்டைகள் இந்தா பார் செய்து காட்டுகிறேன் என்று சவால் விட்டுட்டுப் போயிருப்பார்கள். மூட்டை மூட்டையாக தூக்கிக் கொண்டு போறதை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்களை மட்டும் மடக்கி பிடித்திருக்கிறார்கள். கட்டாருடன் கதைத்து 7 பேரை விடுதலை செய்த மாதிரி ஜெய்சங்கர் வந்து கதைத்து இவர்களையும் விடுவிக்க வேண்டும்.
    • வெற்றி பெற‌ வாழ்த்துக்க‌ள் ந‌ண்பா🙏🥰............................................
    • 1)    ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும். தவறான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் குறைக்கப்படும்.    CSK, KKR, RR,SRH 2)    முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.       #1 - ? (சரியான பதில்: +4 புள்ளிகள், தவறான பதில்: -4  புள்ளிகள் ) RR     #2 - ?  (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள் ) CSK     #3 - ?  (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2  புள்ளிகள்) KKR     #4 - ?  (சரியான பதில்: +1 புள்ளி, தவறான பதில்: -1 புள்ளி ) SRH 3)    ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2  புள்ளிகள்) RCB 4)   மே 21, வெள்ளி 19:30 அஹமதாபாத்  Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Qualifier 1: 1st placed team v 2nd placed team CSK 5)    மே 22, புதன் 19:30 அஹமதாபாத் Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Eliminator: 3rd placed team v 4th placed team SRH 6)   மே 24 வெள்ளி 19:30  சென்னை Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator RR 7)    மே 26, ஞாயிறு இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +5 புள்ளிகள், தவறான பதில்: -5  புள்ளிகள்) Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2 RR 8 ) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) SRH 9)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) GT 10)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் Jos Buttler 11)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி, கேள்வி 10 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RR 12)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Yusvendra Chahal 13)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 12 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RR 14)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் ) Virat Kholi 15)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 14 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) SRH 16)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Jasprit Bumrah 17)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 16 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) MI 18)    இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Jos Buttler 19)    இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the season) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 18 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) CSK 20)    இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) SRH
    • 0.50 ஈரோ பொருளை 2 ஈரோவுக்கு விற்றது சப்பை மேட்டர்தான்….. இது எழுதாமலே விளங்க வேணும்…. எழுதியிம் விளங்கவில்லை எண்டால் கஸ்டம்தான்🤣. ————— அம்சமான ஹம்சமாலி ரேஞ் ரோவரில் சுத்துறா…. அர்ஜூன் மகேந்திரன் அப்பீட்டு…. இலங்கை கிரிகெட்டில் கொள்ளை ரிப்பீட்டு…. திறைசேரியிலே திருட்டு…. ஷப்டர் தன் கழுத்தை தானே நெரித்தார்……. இதெல்லாம்தான் சப்பை மேட்டர்….80 ரூபா வடை அல்ல🤣. பிகு அது சரி எங்க நம்மட குட்டி சிறிதரன்? ஒரு கேள்வியோடு ஓடினவர்தான் - 2 நாளா தலை கறுப்பை காணோம்🤣 @பையன்26 பாருங்கோ சிறி அண்ணாவும் இது இப்ப நடந்தது என்கிறார்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.