Jump to content

தை திருநாளும் யாழ்ப்பாணத் தமிழர் பண்பாடும்...! தெரியாதவர் தெரிந்துகொள்ளுங்கள்


Recommended Posts

தைப்பொங்கல் பண்டிகையானது ஒவ்வொரு வருடமும் சூரியபகவான் மகரராசியில் அடியெடுத்து வைக்கும் தை மாதம் முதலாம் திகதி அன்று கொண்டாடும் உன்னத விழாவாகும்.இந்நிகழ்வானது இவ்வருடம் ஜனவரிமாதம் 14ஆம் திகதி அமைவதாக ஜோதிடம் கணிக்கின்றது.

இத் திருநாளை தாம் இவ்வுலகில் நலமுடன் வாழ உதவி செய்த இயற்கைக்கு நன்றி செலுத்தும் நாளாக தமிழ்நாடு, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஐரோப்பிய நாடுகள், வட அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா, மொரிசியசு என தமிழர் வாழும் அனைத்து நாடுகளிலும் வாழும் தமிழ் மக்களால் சிறப்பாக கொண்டாடப் பெறுகின்றது.

இவ்விழா சங்க காலத்தில் வேளாண்மைக்கு வேண்டிய மழை நீரையும், சூரிய ஒளியையும், காற்றையும் தேவைக்கேற்ப வழங்கி தம்மையும், நாட்டையும் செழிப்புடன் வாழ உதவிய இயற்கைக்கும் (பூமி, சூரியன், வழிமண்டலம், நீர் நிலைகள் போன்றவற்றிற்கும்) தம்மோடு சேர்ந்து கஷ்டப்பட்டு உழைத்த கால்நடைகளுக்கும், தொழிலாளர்களுக்கும் தமது நன்றியையும், மகிழ்ச்சியையும் தெரிவிக்கும் விழாவாக உழவர்களால் கொண்டாடப்பெற்று வந்துள்ளது.

தற்பொழுது உழவர்கள் மட்டுமன்றி வேறு பல தொழில்புரியும் எல்லா தமிழ் மக்களும் தம் மூதாதையினரான உழவர்கள் பரம்பரை பரம்பரையாக செய்து வந்த பண்டிகையாகவும், தமக்கு வேண்டிய உணவுப் பொருட்களை (அரிசி, தானியங்கள், மரக்கறி) போன்றவற்றை உற்பத்தி செய்து தரும் ”உழவர்களுக்கு நன்றி கூறும்” நாளாகவும் கொண்டாடுகின்றார்கள்.

அதன் காரணமாக இப்பண்டிகை “உழவர் பண்டிகை” என்னும் பெயர் மழுங்கி ”தமிழர் பண்டிகையாக” பொங்கியெழுந்துள்ளது.

“தைப்பொங்கல் பண்டிகையின் போது உழவர்கள் தாம் அறுவடைசெய்த “புதிரை” (நெற் கதிர்களை) அரிசியாக்கி அதில் பொங்கல் செய்து கொண்டாட, பல்வேறு தொழில் புரிவோர் உழவர்களுடன் பண்டமாற்றுச் செய்து புதிய அரிசியை வாங்கி பொங்கல் செய்து கொண்டாடுகின்றார்கள்.

பொங்கல் என்பதற்கு ”பொங்கி வழிதல்”, ”பொங்குதல்” என்பது பொருள். அதாவது புதிய பானையில் பால் பொங்கி எழுந்து பொங்கி வழிந்து வருவதால், எதிர்காலம் முழுவதும் நம் வாழ்வும், வளமும் அந்தப் பால் போன்று பொங்கிச் சிறக்கும் என்பதும், களனியெல்லாம் பெருகி, அறுவடை மென்மேலும் அதிகரிக்கும் என்பதும் இந்தப் பண்டிகையின் மேலோங்கிய தத்துவமும், தொன்றுதொட்டு வரும் நம்பிக்கையுமாகும்.

“உழவர் சேற்றில் கால் வைத்தால்தான் ஏனையோர் சோற்றில் கை வைக்க முடியும்” என்பது பலரும் அறிந்த பழமொழி. அதனால் போலும் உழவுத் தொழிலின் சிறப்பை கூற வந்த திருவள்ளுவர் “உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம் தொழுதுண்டு பின் செல்பவர்” எனவும், “உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்” என பாரதியாரும் கூறியுள்ளனர்.

மழை பொய்த்துவிட்டால் வேளாமையும் பொய்த்து விடும் என்பதனை கூறவந்த “திரைக்கவித் திலகம் மருதகாசி “ பூமியிலே மாரி (மழை) எல்லாம் சூரியனாலே, பயிர் பூப்பதுவும் காய்ப்பதுவும் மாரியினாலே” என்று கூறினார்.

சூரியனால் மழையும், பயிர் வளர்ச்சியும், மழையினால் போதிய நீரும், அதிக விளைச்சலும் உண்டாகின்றன என்பதனை உணர்ந்த எம் மூதாதயினர் மழைக்கு மூலகாரணியாக விளங்கும் சூரியனை அறுவடைக் காலத்தில் வணங்கி தாம் பெற்ற நெல்மணியில் பொங்கி விருந்து படைத்து நன்றிக் கடன் செலுத்துவது மரபாகி வந்துள்ளது.

இலங்கையில் ஒருவருடத்தில் மூன்று போகம் நெல் சாகுபடிசெய்யும் வளம் சில பகுதிகளில் காணப்படுகின்றன. அங்கே நீர்ப்பசன வசதிகளும் ஆறுகளும் அவற்றிற்கு சாதகமாக அமைந்துள்ளன.

கிளிநொச்சி மாவட்டத்தில் இருபோகம் விவசாயம் செய்யும் வசதிகள் இருந்துள்ளன, அதற்கு அங்கு காணப்பெறும் பெருங் குளங்களே காரணமாகும்.

யாழ் மாவட்டத்தைப் பொறுத்தவரையில் இங்கு ஆறுகளோ, பெரிய குளங்களோ இல்லாத காரணத்தால் வானம்பார்த்த பூமியாக மழைநீரை நம்பி ஒரு போகமே வேளாண்மை செய்யப் பெறுகின்றது.

மழைவீழ்ச்சி கிடைக்கும் வருட இறுதிக் காலாண்டுப் பகுதியிலே இம்மாவட்டத்தில் நெற்செய்கை மேற்கொள்ளப்படுகிறது. மழை நீரை சிறிய குளங்கள், குட்டை, துரவுகளில் சேமித்து வைத்து மழை குறைந்த காலத்தில் நீர்பாச்சுகின்றார்கள்.

புரட்டாதி மாதம் முடிவடைந்த பின்னர் மழைவீழ்ச்சி ஆரம்பமாகும் நேரத்தில் யாழ் விவசாயிகள் தங்கள் நிலங்களை பண்படுத்தி, உழுது, நெல் விதைப்பார்கள்.

அதன் பின் பருவத்தில் களையெடுத்து, பசளையிட்டு கண்ணும் கருத்துமாக பாராமரித்து வருவார்கள். இக் காலப்பகுதியில் பயிரிடம்பெறும் நெல் மார்கழி தை மாதத்தில் விளைந்து அறுவடைக்கு தயாராகிவிடுகின்றது.

விவசாயிகளுக்காக மழை பெய்யாமல் போய்விடுமோ என்று எல்லோர் மனமும் அச்சம் அடைகின்றன. அனைத்து உள்ளங்களும் விவசாயிகளுக்காக மழை பொழியும் படி பிராத்தனை செய்யுங்கள்.

http://www.tamilwin.com/community/01/131668?ref=home

Link to comment
Share on other sites

தைத்திருநாளை வரவேற்கும் முகமாக கதிரவெளியில் சிறப்பிக்கப்பட்ட பொங்கல் விழா

தித்திக்கும் தைத்திருநாளை வரவேற்கும் முகமாக 'The Leaders' அமைப்பின் ஏற்பாட்டில் 'இன ஒற்றுமையை வளர்க்க இளையோர் நாம் கொண்டாடும்' எனும் தொனிப்பொருளின் கீழ் பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றுள்ளது.

குறித்த நிகழ்வு கதிரவெளி விக்கினேஸ்வரா வித்தியாலய மைதானத்தில் நேற்று (12) இடம்பெற்றுள்ளது.

இந்த பொங்கல் விழாவுக்கு சிறப்பு அதிதிகளாக மாவட்ட அரசாங்க அதிபர் சாள்ஸ், மேலதிக அரசாங்க அதிபர் கிரிதரன், திட்டமிடல் பணிப்பாளர் நெடுஞ்செழியன், கோரளைப்பற்று வடக்கு பிரதேச செயலாளர் ராகுலநாயகி, வாகரை உதவித்திட்டமிடல் பணிப்பாளர் கங்காதரன், ஐ.நா.அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் திட்ட இணைப்பாளர் பார்த்திபன், ஐ.நா.அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்ட இணைப்பாளர் சுபாஸ்கரன், ஐக்கிய அபிவிருத்தி நிதியம் இணைப்பாளர் சுதன் அழைக்கப்பட்டிருந்தனர்.

இதன்போது உரையாற்றிய பலரும் இந்த நிகழ்ச்சியை ஒழுங்கு செய்திருந்த இளைஞர்களுக்கு பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவித்திருந்தனர்.

அனைத்து மக்களையும் ஒன்றிணைப்பதற்காக இளைஞர்கள் முன்னெடுத்துள்ள பொங்கல் விழா நிகழ்ச்சிக்கு பாராட்டுக்களை தெரிவித்து தமது வாழ்த்துக்களையும் குறிப்பிட்டிருந்தனர்.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

 

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

 

 

http://www.tamilwin.com/community/01/131635?ref=home

Link to comment
Share on other sites

நுவரெலியாவில் தேசிய தைப்பொங்கல் விழா!

தேசிய தைப்பொங்கல் விழா இன்றைய தினம் நுவரெலியாவில் நடைபெறவுள்ளது.

நுவரெலியா நகர சபை மைதானத்தில் இன்றைய தினம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் தேசிய தைப்பொங்கல் விழா நடைபெறவுள்ளது.

இன்று முற்பகல் 11 மணியளவில் நிகழ்வுகள் ஆரம்பாக உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிகழ்வில் அரசாங்க அமைச்சர்கள் பலர் பங்கேற்க உள்ளனர்.

 

ஹட்டனில் சிறப்பாக இடம்பெற்ற தைப்பொங்கல் விழா

தைப்பொங்கல், தமிழ் மாதத்தின் தை முதலாம் திகதி உலக நாடுகள் அனைத்திலும் வாழுகின்ற தமிழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஓர் விழாவாகும்.

உழைக்கும் மக்கள் இயற்கைக்கும், மற்ற உயிர்களுக்கும் நன்றி சொல்லும் ஒருநாளாக இதனைக் கொண்டாடுகின்றனர்.

625.0.560.320.160.600.053.800.668.160.90.png

நல்ல விளைச்சல் கொடுத்தமைக்காக பூமி, சூரியன், உதவிய மாடுபோன்றவற்றிற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பொங்கல் படைத்து இந்நாளில்வழிபடுவார்கள்.

ஆண்டுதோறும் இப்பண்டிகை தமிழ் மக்களால் சிறப்பாகக் கொண்டாடப்பட்டுவருவது வழமையாகும்.

625.0.560.320.160.600.053.800.668.160.90.png

அந்தவகையில் மலையக மக்கள் சமய வழிபாட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்துதை பொங்கல் பண்டிகையை 14.01.2017 சனிக்கிழமை வெகுவிமர்சியாக கொண்டாடினார்கள்.

625.0.560.320.160.600.053.800.668.160.90.png

ஹட்டன் பகுதியில் ஹட்டன் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தின் பிரதான குருக்கள் பிரம்மஸ்ரீ. இ.பூர்ணசந்திரானந்த குருக்கள் தலைமையில் தை பொங்கல் விசேட சமய வழிபாடுகள் நடைபெற்றன.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

விசேட பூஜை வழிபாடுகளில் ஆலய பரிபாலன சபையினர் உட்பட பொது மக்களும் இவ்வழிபாட்டில் ஈடுபட்டிருந்தனர்.

அத்தோடு மலையகத்தில் பல ஆலயங்களில் விசேட வழிபாடுகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

http://www.tamilwin.com/events/01/131682?ref=home

Link to comment
Share on other sites

மன்னாரில் களைகட்டியுள்ள தைப்பொங்கல் கொண்டாட்டம்

உழவர் திருநாளாம் தைத்திருநாள் இன்று(14) உலகளாவிய ரீதியில் அனைத்து தமிழ் இந்து மக்களாலும் கொண்டாடப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் மன்னாரில் அமைதியான முறையில் தைப்பொங்கல் கொண்டாட்டம் இடம்பெற்று வருகின்றது.

மன்னாரில் உள்ள இந்து ஆலயங்களில் விசேட பூஜைகள் இடம் பெற்றதோடு இந்து ஆலயங்களிலும் பொங்கல் பொங்கப்பட்டு சூரிய பகவனுக்கு நன்றி செலுத்தப்பட்டது.

மேலும் மன்னார் நகரில் உள்ள வர்த்தக நிலையங்கள், வங்கிகள், தனியார் நிறுவனங்கள் போன்ற வற்றிலும் பொங்கல் நிகழ்வுகள் சிறப்பாக இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

http://www.tamilwin.com/community/01/131687?ref=morenews

 
Link to comment
Share on other sites

அம்பாறை மாவட்டத்தில் தைப்பொங்கல் தினத்தினை முன்னிட்டு விசேட வழிபாடுகள்

அம்பாறை மாவட்டத்தில் உள்ள இந்து ஆலயங்களில் தைப்பொங்கல் தினத்தினை முன்னிட்டு விசேட ஆராதனை வழிபாடுகள் நடைப்பெற்று வருகின்றன.

அந்தவகையில், கல்முனை மாநகரில் அமைந்துள்ள ஸ்ரீ முருகன் தேவஸ்தானத்திலும், கண்ணகையம்மன் ஆலயத்திலும், அம்பலத்தடி பிள்ளையார் ஆலயத்திலும், வீரமுனை சிந்தா யாத்திரை பிள்ளையார் ஆலயத்திலும், விசேட வழிபாடுகள் நடைபெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

 

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

 

http://www.tamilwin.com/religion/01/131691?ref=home

Link to comment
Share on other sites

தமிழர் திருநாள் தைத்திருநாள்

தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். தமிழ் மாதங்களில் தனிச் சிறப்பு வாய்ந்த மாதமாக தை மாதம் விளங்குகின்றது. தை மாதத்தின் பிறப்பை அறுவடைத் திருநாளாக, பொங்கல் தினமாக உலகத் தமிழினம் கொண்டாடி வருகிறது. தமிழ்ப் புத்தாண்டின் முதல் நாளாகவும் இந்த நாள் ஆரம்பத்தில் கொண்டாடப்பட்டது.

தமிழர்களின் கலாச்சார பண்பாட்டு விழாக்களில் தைத்திருநாள் என்பது முக்கியமான ஒரு விழாவாகும். தைப்பொங்கல் என்பது தமிழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஒரு தனிப் பெரும் விழா.

மகரத்திருநாளாக தமிழர்களால் தமிழ்நாடு, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், மொரிசியஸ் மற்றும் மேலைத்தேச நாடுகள் என தமிழர் வாழும் அனைத்து நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது.

மலேசியா, இலங்கை, இந்தியா உள்ளிட்ட சில நாடுகளில் பொங்கல் பண்டிகையன்று அரசு விடுமுறையும் கூட விடுகிறார்கள்.

மதங்களைக் கடந்து அதிகமான தமிழ் மக்களால் இது கொண்டாடப்படுகிறது. விவசாயிகள், தொழிலாளர்கள் இயற்கைக்கு நன்றி தெரிவிக்கும் முகமாக சூரிய உதயத்தின் போது வீட்டு முற்றத்தில் பொங்கி சூரிய பகவானுக்கு படைத்து வழிபடுகின்ற நாள் ஆகும்.

தமிழர் திருநாள் தைப் பொங்கல், அறுவடைத் திருநாள் என கூறப்படும் பொங்கல் பண்டிகை, தமிழர் பண்டிகை ஆகும். பொங்கல் என்பதற்கு சாப்பிடும் பொங்கல் என்று பொருள் அல்ல. பொங்கிப் பெருகி வருவது என்று பொருள்.

பொங்கல் பண்டிகையின் தோற்றம் எப்போது என்று உறுதியாகத் தெரியவில்லை. இந்திர விழா என்ற பெயரில் நல்ல மழை பொழியவும் நாடு செழிக்கவும் இந்திரனை ஆயர்கள் வழிபட்டு வந்தனர்.

ஆயர்கள் பக்தியோடும் பயத்தோடும் இந்திரனை வழிபட்டனர். ஆனால், பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் அறிவுரைப்படி ஆயர்களுக்கும் அவர் தம் ஆநிரைகளுக்கும் வளங்கள் தரும் கோவர்த்தன மலைக்கு ஆயர்கள் மரியாதை செய்தனர்.

இதனால் கோபமுற்ற இந்திரன் புயலாலும் மழையாலும் ஆயர்களை துன்புறுத்தினான். கோவர்த்தன மலையை குடையாய் பிடித்து இந்திரனிடமிருந்து ஆயர்களையும் அவர் தம் ஆநிரைகளையும் ஸ்ரீ கிருஷ்ணர் காத்தருளினார்.

பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கோவர்த்தன மலையை குடையாய் பிடித்து இந்திரனிடமிருந்து ஆயர்களையும் அவர் தம் ஆநிரைகளையும் காத்த நாளே சூரிய நாராயண பூஜையாகும்.

இந்திரன் தன் தவறை உணர்ந்து கண்ணனிடம் தன்னையும் மக்கள் வழிபட வேண்டும் என்று வேண்டிக் கொண்டதால் தைப் பொங்கலுக்கு முதல்நாள் போகி பண்டிகை எனப்படும் இந்திர வழிபாட்டை ஆயர்கள் கொண்டாடினர்.

தை முதல் நாள் சூரிய பகவானை சூரியநாராயணராக பாவித்து வழிபட்டனர். அதன் மறுநாள் தங்களின் மாட்டுப் பொங்கல் எனப்படும் ஆநிரைகளுக்கு விழா எடுத்து தங்களின் உணவுகளை அவைகளுக்கு படைத்தும் ஜல்லிக்கட்டு, மஞ்சு விரட்டு எனப்படும் காளைகளுடன் விளையாடியும் விழாவை கொண்டாடினர்.

இதுவே நாளடைவில் மூன்று தினங்கள் கொண்டாடும் பொங்கல் கொண்டாட்டமாக மாறியது எனக் கூறப்படுகிறது. சோழர் காலத்தில் பொங்கல் பண்டிகைக்கு புதியீடு என்று பெயர் இருந்தது.

அதாவது, ஆண்டின் முதல் அறுவடை என்று அதற்குப் பொருள். உழவர்கள் தை மாதத்தின் முதல் நாளில் அந்த ஆண்டின் முதல் அறுவடையை மேற்கொள்வது வழக்கமாக இருந்தது. இதுதான் பின்னர் பொங்கல் பண்டிகையாக மாறியது என்கிறார்கள்.

பொங்கல் பண்டிகை மொத்தம் 3 நாட்களுக்கு கொண்டாடப்படுகிறது. முதல் நாள் போகி பண்டிகை. அடுத்த நாள் பொங்கலிடும் நாள். 3 வது நாள் மாட்டுப் பொங்கல்.

மக்கு காலமெல்லாம் கை கொடுத்து உதவும் மழை, சூரியன், விவசாயத்திற்குப் பயன்படும் கால்நடைகள் ஆகியவற்றுக்கு நன்றி கூறும் நல்ல வாய்ப்பாக இந்த திருநாள் கொண்டாடப்படுகிறது.

இந்தியாவில் இந்த மூன்று தினங்களும் கொண்டாடப்பட்டு வருகின்றது. ஆனால் இலங்கையில் தைப்பொங்கல் மற்றும் மாட்டுப் பொங்கல் ஆகிய இரு தினங்களும் சிறப்பாக கொண்டப்படடு வருகிறது.

இந்தியாவில் பொங்கல் திருநாளின் முதல் நிகழ்வான போகி பண்டிகையன்று அதிகாலையில் அனைவரும் எழுந்து குளித்து வீட்டில் உள்ள தேவையற்ற, பழையை பொருட்களை வீட்டின் முன்பு வைத்து தீயிட்டு கொளுத்துவார்கள்.

அல்லவை அழிந்து நல்லவை வரட்டும். பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற மொழிக்கேற்ப போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது. பொங்கல் தினம் தமிழர் வாழும் அனைத்து பகுதிகளிலும் விசேஷமானது.

தை மாதப் பிறப்பு நாள் இது. சர்க்கரைப் பொங்கல் என்று இந்த பண்டிகைக்குப் பெயர். புதுப்பானை எடுத்து, மஞ்சள் உள்ளிட்டவற்றை பானையைச் சுற்றிக் கட்டி, புதுப் பாலில், புது அரிசியிட்டு, வெல்லம் உள்ளிட்டவற்றைக் கலந்து பொங்கலிடுவார்கள். வீட்டுக்கு வெளியே சூரியன் இருக்கும் திசையை நோக்கி இந்த பொங்கலிடும் நிகழ்ச்சி நடைபெறும்.

அரிசி நன்கு சமைந்து, பொங்கி வரும் போது குலவையிட்டும், பொங்கலோ பொங்கல், பொங்கும் மங்கலம் எங்கும் தங்குக என்ற குரலோடு பொங்கல் பானையை இறக்க வேண்டும்.

நன்கு பொங்கி வந்தால் அந்த ஆண்டு முழுவதும் நல்ல வளமும், நலமும் நிலவும் என்பது ஐதீகம். மறுநாள் மாட்டுப் பொங்கல். கிராமங்கள் தோறும் மாட்டுப் பொங்கல் விமரிசையாக கொண்டாடப்படும்.

வீடுகள் புதுப் பூச்சு காணும். மாடுகள், பசுக்களின் கொம்புகளுக்கு புது வர்ணம் பூசி நன்கு குளிப்பாட்டி, அவற்றை அலங்காரம் செய்து மாட்டுப் பொங்கல் தினத்தின் போது படையலிட்டு வழிபாடு செய்வார்கள்.

பின்னர் மாடுகளுக்கு பொங்கலும் அளிக்கப்படும். ஆண்டெல்லாம் நமக்காக உழைக்கும் மாடுகளுக்கு நன்றி கூறும் தினமாக இது கொண்டாடப்படுகிறது.

இந்த தினத்தின் போது மாடுகளுக்கு ஒரு வேலையும் வழங்கமாட்டார்கள். கழுத்தில் புது மணி கட்டி, கொம்புகளை சீவி விட்டு சுதந்திரமாக திரிய விடுவார்கள். இதன் போது இந்தியாவில் ஜல்லிக்கட்டு நிகழ்வும் இடம்பெறுவது வழக்கம்.

இப்படியாக பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இது தவிர, நான்காவது நாள் காணும் பொங்கலாக இந்தியாவின் வட மாவட்டங்களில் கொண்டாடப்படுகிறது.

அதாவது உற்றார், உறவினர், நண்பர்களைக் கண்டு வாழ்த்துக்களையும் இனிப்புகளையும் பரிமாறிக் கொள்ளும் நாளாக இது கொண்டாடப்படுகிறது. சுற்றுலாத் தலங்களுக்கும் பொழுது போக்குமிடங்களுக்கும் இந்த நாளில் போவது வழக்கம். கன்னியாகுமரி மாவட்டத்தில் கனி காணும் நாளாக இது கொண்டாடப்படுகிறது.

பொங்கல் பண்டிகையின் முக்கிய அம்சங்களாக கரும்பு, இனிப்புப் பொங்கல் என்பன விளங்குகின்றது. இவை இல்லாமல் பொங்கல் நிறைவடையாது.

கரும்புகளுக்கு பொங்கல் பண்டிகையின் போதுதான் செம கிராக்கி. வியாபாரமும் ஒரு தடவை களை கட்டும். இவ்வாறாக இந்த பொங்கல் பண்டிகை உழவர்கள், வியாபாரிகள், தொழிலாளர்கள் எல்லோருக்கும் ஒரு விசேடமான பண்டிகையே.

அந்த வகையில் 2017 ஆம் ஆண்டின் பொங்கல் தினம் இன்றாகும். பட்ட துன்பங்கள் மறைந்து தமிழர்கள் பட்டு வரும் பல்வேறு அவதிகள் ஒழிந்து, இந்த ஆண்டில் எல்லா வளமும், நலமும் பெற்று அமைதியுடன் வாழ சூரியக் கடவுளைப் பிரார்த்திப்போம்.

http://www.tamilwin.com/articles/01/131694?ref=home

 
Link to comment
Share on other sites

மட்டக்களப்பில் பண்பாட்டு பவனியுடன் நடைபெற்ற மாபெரும் பொங்கல் விழா

மட்டக்களப்பு - மெதடிஸ்த மத்திய கல்லூரி பழைய மாணவர்களால் பிரமாண்டமான முறையில் முதலாவது தடவையாக பாரம்பரிய தைப்பொங்கல் விழா இன்று(15) காலை நடாத்தப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தும் வகையில் தைப்பொங்கல் நிகழ்வு நடாத்தப்பட்ட நிலையில் விவசாயிகளுக்கு பக்கபலமாகவுள்ள மாடுகளுக்கான மாட்டுப்பொங்கல் நிகழ்வு சிறப்பான முறையில் நடைபெற்றுள்ளது.

அத்துடன், இன்றைய தினம் ஸ்ரீ வீரகத்திப்பிள்ளையார் ஆலயத்தின் அருகில் உள்ள சுற்றுவட்டத்தில் இருந்து பொங்கல் பொருட்களை சுமந்த மாட்டு வண்டிகள் பவனி, உழவர் நடனம், கோலாட்டம் மற்றும் இன்னியம் உள்ளிட்ட தமிழர் பாரம்பரிய பண்பாட்டு இசை முழக்கத்துடன் கலாச்சார பவனி இடம்பெற்றுள்ளது.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

இதேவேளை, பவனி மண்டபத்தை அடைந்ததை தொடர்ந்து ஏழு வகையான பொங்களுடன், 17 வகையான பாரம்பரிய பட்சணங்களும் அவ்விடத்திலே தயாரிக்கம் நிகழ்வு நடைபெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம், கிழக்கு மாகாணசபையின் பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார், கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான இரா.துரைரெட்னம், ஞா.கிருஸ்ணபிள்ளை ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

மட்டக்களப்பு நகரில் முதன் முதலாக நடைபெறும் இந்த பிரமாண்டமான நிகழ்வில் மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் பழைய மாணவர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என பலரும் இந்நிகழ்விற்கு வருகை தந்துள்ளனர்.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

இந்த நிலையில், ஏற்பாட்டு குழுவால் பொலித்தின் மற்றும் பிளாஸ்ரிக் பாவனை முற்றாக தவிர்க்கப்பட்டதோடு, தமிழர் பாரம்பரியங்களை பறைசாற்றும் அலங்காரங்களும் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

மேலும், கிராமிய பண்பாட்டு விழுமிங்கள் நகர்ப்புற மாணவர்கள் அறிந்துகொள்ளும் வகையில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை சிறப்பம்சமாகும்.

 

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

http://www.tamilwin.com/community/01/131867?ref=home

 
Link to comment
Share on other sites

பொங்கல் தமிழர் பண்பாட்டு உயிர்ப்பின் திருநாள்! அ.மயூரன்

மனித வாழ்வின் சமூகவியல் பண்பாட்டுத்தளத்தில் நிகழும் நிகழ்வுகளில் பண்டிகைகள், சடங்குகள் என்பன முக்கியம் பெறுகின்றன. இவை காலம், இடம், சூழல், தேவை, நோக்கம் என்பவற்றினால் வேறுபாடடைகின்றது.

மனிதவாழ்வு பண்பாட்டுக்குரியது என்பதால் உயிரியல் நிலையில் நிகழ்வுகள் பண்பாட்டு வயப்படுகின்றன.

அந்தவகையில் தமிழர் சடங்குகள் சமூக, பொருளாதார, அரசியல், போரியல்,சமய, தளங்களைச் சார்ந்தும் அமைகின்றன. அந்தவகையில் தமிழர் பண்பாட்டின் உயிர்ப்பிற்கு உறுதியாய் இன்றுவரை தொடரும் பண்டிகைகளில் தைப்பொங்கல் முக்கிய இடம் வகிக்கின்றது.

தமிழரின் வாழ்வியற்தடத்தில் இன, மத பேதங்களைக்கடந்து தமிழன் என்ற உறுதிப்பாட்டில் ஒற்றுமையடையச் செய்வது பொங்கலே.

இப்பொங்கல் பண்டிகையானது இந்து. கிறிஸ்தவ, முஸ்லிம்கள் என்ற வேறுபாடுகள் அற்று தமிழனின் பண்பாட்டியலின் உயிர்ப்பின் தைப்பொங்கல் உறுதியாகவே விளங்குகிறது.

தமிழர்களின் வாசல்கள் தோறும் கோலம் போட்டு நிறைகுடம் வைத்து அந்த சூரிய தேவனுக்கு தன் நன்றிக்கடனினை செலுத்துகின்றார்கள்.

ஈழத்ததைப் பொறுத்தவரை 2009 .இற்கு முன்னர் தமிழர் உயிர்ப்பின் உயிர் நாடியாக இப்பொங்கல் விளங்கியது தாம் ஆலயங்களில், வீடுகளில், பொது இடங்களில், களமுனைகளில் என பொங்கிச் சூரியனுக்கு தன் நன்றிக்கடனைச் செலுத்துகின்றனர்.

களமுனைகளில் போராளிகள் தங்களை ஆயத தளபாடங்களை வைத்து சூரியனுக்கு பொங்கி நன்றிக்கடன் செலுத்துகின்றனர்.

ஈழத்தைப் பொறுத்தவரையில் ஈழத்தில் தமிழர் திருநாள் தனித்துவம் பெற்றது எனில் அது தமிழீழ விடுதலைப்புலிகளையே சாரும்.

மார்கழி மாத மழை இருளாலும், தை மாதப்பனியாலும் அல்லல்படும் மக்களுக்கு யானிருக்கிறேன் என நாற்றிசையும் தன் ஒளி பரப்பி கிளம்பும் சூரியனுக்கு நன்றிக்கடன் செய்கின்ற நாளாகவும் இது அமைகின்றது.

பொங்கலின் பிண்ணி:-

தைப்பொங்கற் பண்டிகையின் பின்னணியை நோக்கில் நெல்லின் அறுவடை கண்ட மகிழ்ச்சியில் தம் உழைப்பிற்கு உதவி செய்து நின்ற அனைத்திற்கும் நன்றிக்கடன் செலுத்தும் ஆனந்தவிழாவாகவே கொண்டாடப்படுகிறது.

இனி இந்தப் பொங்கற் பண்டிகை ஏன் தைமாதத்தில் மட்டும் கொண்டாடப்படுகின்றது என நோக்கில்

புவியின் காலநிலைத்தளத்தில் தென்னிந்தியாவும், ஈழமும் ஒரே புவியியல் சார் தன்மைகளுக்கு உட்படுவதால் இங்கே புரட்டாதி முதல் மார்கழி வரை மழைக்காலப்பகுதியாக விளங்குகின்றது.

இதன்போது குளங்கள், நீர்நிலைகள் நிறைந்து பயிற்செய்கைக்கு ஏற்ற நீர்ப்பாசனத்தை வழங்குகின்றது. இதனால் விளைநிலங்கள் விளைச்சலுக்கு உள்ளாகி தை மாதத்தில் மழைக்காலம் முடிவடைய தை மாத்தில் அறுவடை செய்கின்றார்கள். இது பொங்கல் நிகழ்விற்குப் பொருத்தமாக அமைகின்றது.

அத்துடன் தமிழுக்கு அறநூலான திருக்குறள் தந்தவர் திருவள்ளுவர். ஆதலினால் திருவள்ளுவனி;ன் பெயரிலேயே தமிழர் ஆண்டும் ஆரம்பிக்கப்பட்டு திருவள்ளுவர் ஆண்டு தை மாதத்தை முதன்மையாகக் கொண்டு மார்கழி மாத்தில் முடிகின்றது.

திருவள்ளுவர் காலம் கி.மு 31 என்கின்றனர் இதனாலேதான் எமது நாள்காட்டிகள் திருவள்ளுவர் ஆண்டு எனத் தொடங்குகின்றது. இது தொடங்குகின்ற நாளே தைப்பொங்கல் நாள். இதுவே தமிழனின் புத்தாண்டு தினம் என்கின்றனர்.

தமிழறிஞர்கள். வரலாற்றுக்காலங்களில் பொங்கல் வரலாற்றுக் காலங்களில் தைத்திருநாளான பொங்கலினை பழந்தமிழர்கள் சிறப்பாகக் கொண்டாடியிருக்கிறார்கள் என்பதற்கு வரலாற்றுக்காலங்கள் சான்றாதாரப்படுத்துகின்றன.

சங்ககாலத்தில் பொங்கல் நாளை அறுவடை விழாவாகவே தமிழர்கள் கொண்டாடியிருக்கின்றனர். என்பதனை சங்க இலக்கியங்களில் ஒன்றான புறநானூற்றின் 22ஆம் பாடல் விளக்கிறது.

‘அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல….’

என்று குறந்தோழியூர் கிழார் எனும் புலவர் அறுவடை விழாவை சாறு கண்ட களம் என வருணிக்கின்றார். அத்துடன் சங்ககால நூல்கள் பலவும் தைத்திருநாளை சிறப்பாக எடுத்தியம்பியிருக்கின்றன.

‘தைஇத் திங்கள் தண்கயம் படியும்’ (நற்றிணை)

‘தைஇத் திங்கள் தண்ணிய தரினும்’ (குறந்தொகை)

‘தைஇத் திங்கள் தண்கயம் போல்’ (புறநானூறு)

‘தைஇத் திங்கள் தண்கயம் போது’ (ஐங்குறுநூறு)

‘தையில் நீராடி தவம் தலைப்படுவாயோ’ (கலித்தொகை)

எனப்பலவாறாக தைத்திருநாளின் சிறப்பியல்புகளை பழந்தமிழர் இலக்கியங்கள் தெளிவுபடுத்திக் காட்டுகின்றனர். இது தமிழர் திருநாளை பழந்தமிழன் எவ்வாறு சிறப்பாகக் கொண்டாடினான் என்பதனை எடுத்தியம்புகின்றன.

அடுத்து கிட்டத்தட்ட கி.பி 9ஆம் நூற்றாண்டுகளில் எழுந்த சீவக சிந்தாமணி என்னும் காப்பியத்திலும் பொங்கல் பற்றி குறிப்பிடும் போது

‘மதுக்குலாம் அலங்கல் மாலை

மங்கையர் வளர்த்த செந்தீப்

புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்’

என பொங்கலினை குறிப்பிடுகின்றது.

மேலும் இந்தியா, ஈழம் ஆகிய நாடுகளை அடிமைப்படுத்தியிருந்த போத்துக்கீசர் பொங்கலின் சிறப்பினை தெளிவு படுத்தியிருக்கின்றனர்.

அதாவது கி.பி. 16ஆம் நூற்றாண்டில் தென்னிந்தியாவுக்கு வந்த அப்போடூபாய் எனும் போத்துக்கீச அறிஞர் தான் எழுதிய‘இந்துக்களின் பழக்க வழக்கங்களும், வாழ்க்கை முறைகளும் எனும் நூலிலே பொங்கல் உழவர்களின் அறுவடை நாளாக சிறப்பாக கொண்டாடப்பட்டதாக குறிப்பிட்டிருக்கின்றார்.

இவ்வாறாக தமிழர் திருநாளான பொங்கல் வரலாற்றுக்காலம் முதல் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருவதனைக் காணலாம் தை மாதம் உத்தராயண புண்ணிய காலம் என்பர்.

அதாவது சூரியன் தை மாதம் முதல் ஆனி மாதம் வரை வடதிசையில் சஞ்சரிக்கும் காலம் உத்தராயண காலம் எனவும், ஆவணி முதல் மார்கழி வரை தென் திசையில் சஞ்சரிக்கும் காலம் தெட்சிணாயணம் எனவும் வழங்கப்படும்.

பொங்கலன்று சூரியன் தென் திசையிலிருந்து வடதிசைக்குத் திரும்புவதாக ஒரு ஐதீகம். வான சாஸ்திரத்தின் படியும், சோதிட சாத்திரத்தின் படியும் சூரியன் இம்மாதத்தில் கும்ப லக்கணத்தில் இருந்து மகர லக்கணத்திற்கு வருவதாக்க கூறப்படுகின்றது. இதை மகர சங்கிராந்தி என்பர். இதுவே பொங்கல் தினமாகும்.

உத்தராயணத்தின் ஆரம்பம் என்கின்ற இந்த வேளையில் சூரியனுக்கு அர்ப்பணம் செய்து வணங்கும் மரபும் இணைந்திருப்பதனால் இத்தமிழர் பண்டிகை சைவ சமய ரீதியிலும் முக்கியம் பெறுகின்றது.

தமிழர் புத்தாண்டு மாற்றமடைவதற்கான காரணம்

இவ்வாறு சங்க காலத்தில் தை மாதத்திலேயே பொதுவாகப் புத்தாண்டு காலம் இருந்தாலும் அதன் பின்னர் தமிழகத்தில் ஆதிக்கம் செலுத்திய ஆரியப்பிராமணியங்களின் வருகையிலிருந்து பிராமணியங்களின் கலாச்சாரம் இந்தியாவில் அடிபரவ அது அப்படியே ஈழத்திலும் மாற்றமமையச் செய்திருந்தன.

இந்திய வரலாற்றுக்காலங்களைப் புரட்டிப்பார்த்தால் தமிழகத்தை ஆட்சி செய்தவர்களில் குப்தர் காலமும் முக்கியம் வாய்ந்த ஒன்றாக விளங்குகின்றது.

அவ்வாறு ஆழப்பட்ட குப்தர் காலத்திலே 2ம் சந்திரகுப்தன் என்பவன் தன்னுடைய பெயரினை விக்கிரமாதித்தன் எனும் பெயரில் மாற்றிக்கொண்டு ஆட்சி செய்தான்.

இவன் தன்னுடைய பெயரால் ‘விக்கிரம சகம்’ எனும் ஆண்டு முறைமையை அறிமுகப்படுத்தினான். இது சோதிடம், வானவியல், ஜாதகம் முதலியவற்றைப் புகுத்தி இவன் மேற்கொண்ட முயற்சியே இன்றைய சமய ஆண்டு முறைமையாகும்.

இந்த விக்கிரமாதித்தன் உருவாக்கிய விக்கிரமசகம் என்னும் ஆண்டு முறைமையானது சித்திரை முதல் பங்குனி வரையான ஆண்டுச்சழற்சியையும், பிரபவ முதல் அட்சய வரையான 60 ஆண்டுச் சக்கரத்தையும் வரையறுத்தது. இந்த பிரபவ முதல் அட்சய வரையான 60 ஆண்டுச் சுழற்சிகளில் எதுவுமே தமிழில் இல்லை.

இதுவே இன்று பிராமணியங்களினால் பின்பற்றப்படும் ஆண்டுமுறைமையாகும் இதன்பின்னரே பழந்தமிழன் தைமாதத்தில் கொண்டாடப்பட்ட புத்தாண்டானது சித்திரை மாதத்த்திற்கு மாற்றப்பட்டது.

இந்த மாற்றத்தினைச் செய்த பெருமை குப்தர்களையே சாரும் குறிப்பாக விக்கிரமாதித்தனை (சந்திரகுப்தன்) சாரும்.

இதனால் புத்தாண்டு தினம் மாற்றமடைந்திருந்தது. காரணம் பிராமணியங்களின் ஆதிக்கம் சைவ சமயத்தில் மேலோங்கியிருந்தது. இதனால் எமது தமிழ்ப்புத்தாண்டு மதம் சார்பானதாக அமையப்பெற்றது.

ஆகவேதான் மறைமலை அடிகள் உட்பட்ட தமிழறிஞர்கள் எமக்கு மத அடிப்படையில் இல்லாது தமிழனின் புத்தாண்டாக அமையக்கூடியவாறு எமக்க ஒரு புத்தாண்டை அமைப்பதற்கு 1921ஆம் ஆண்டு மறைமலையடிகள் தலைமையில் நடந்த தமிழ் மாநாட்டில் சுவாமி ஞானப்பிரகாசர் உற்பட 500 அறிஞர்கள் கலந்துகொண்டு தமிழருக்கு தனியான புத்தாண்டு ஒன்றைக் கொண்டாடுவது குறித்து விவாதித்தனர்.

அதில் எல்லா மதங்களும் தமது மதங்களை வளர்த்தவர்கள் நினைவையே புத்தாண்டாக கொண்டாட தமிழர்கள் மட்டும் மதம் சார்ந்து கொண்டாட முடியாத நிலை காணப்பட்டது.

ஏனெனில் தமிழர்களில் பலர் பின்பற்றுவது சைவத்தினை இதனால் இதன் தோற்றம் இன்னதென்று கூறமுடியாது.

ஆகவே தமிழின் வரலாற்றை ஆராய்ந்து பார்த்தார்கள் அதில் தொல்காப்பியமே எமது ஆதிநூல் அதற்கு முன்பும் பலநூல்கள் தோற்றம் பெற்றாலும் அவை காலவெள்ளத்தால் அள்ளுண்டு போயின.

எனவே தொல்காப்பியமே எமது ஆதிநூல். இதனை இயற்றியவர் பெயர் தெரியாமையால் இவரின் நினைவாகவும் புத்தாண்டு கொண்டாடமுடியாது.

ஆகவே தமிழில் தெளிவாகத் தெரியக்கூடியதாக இருப்பது திருக்குறளை ஆக்கிய திருவள்ளுவரையே.

இவர் கி.மு.31இல் பிறந்தார் என்கின்றனர். இதில் குழப்பங்கள் இருக்கின்றன. திருவள்ளுவர் புத்தருக்கு முற்பட்டவர் என்கின்ற கருத்தும் நிலவுகிறது.

ஏனெனில் அவர் காளி, விஷ்ணு பற்றித் தனது குறளில் குறிப்பிட்டிருக்கின்றார். ஆனால் புத்தர் பற்றி ஏதும் குறிப்பிடவில்லை. ஆகவே அவர் புத்தரிக் காலத்திற்கு முற்பட்டவர் என்கின்றனர்.

ஆனால் திருவள்ளுவர் பகவான் என்றழைப்பது புத்தரையே காரணம் திருவள்ளுவர் காலத்தில் விஷ்ணுவை பகவான் என்று அழைக்கப்படவில்லை.

அத்துடன் தாமரை மலரோன் என்றழைப்பதும் புத்தரையே ஆகும். அந்தக்காலத்தின் பின்னர்தான் அது விஷ்ணுவுக்கும், இலக்குமிக்கும் வழங்கப்பட்டன.

எனவே கி.மு.31 ஐ திருவள்ளுவரின் ஆண்டாக உறுதிப்படுத்தி தை மாதம் முதல்நாளை புத்தாண்டாக கொண்டாட வேண்டும் என முடிவெடுத்தனர்.

இதன்போது கூறிய மறைமலையடிகள் ‘தைப்பொங்கலை சமயவிழா என்று சொல்லி சர்ச்சையைக்கிழப்பி குழப்பம் விளைவிக்க முயன்றாலும், தைமாதத்தை தமிழரின் புத்தாண்டு என ஏற்க முடியாது எனக்கூறுபவர்களும் இம்மாநாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று கட்டளை விடுத்தார்.

அத்துடன் பொங்கல் சமயசார்பு அற்றவிழா. தைமாதமே தரணியாண்ட தமிழர்களின் புத்தாண்டாக மாறவேண்டும’; என மறைமலையடிகள் முழங்கினார்.

இதை தந்தை ஈ.வெ.ரா பெரியார்அவர்களும், சுவாமி ஞானப்பிரகாசரும் ஏற்றுக்கொண்டனர். தைப்பொங்கலே தமிழர் புத்தாண்டாக மாற்றம் பெற்றது.இவ்விதமே திருவள்ளுவர் ஆண்டு கணிக்கப்பட்டது. மாறாக இது கருணாநிதியின் கண்டுபிடிப்பன்று.

இனி இத்தனை சிறப்புக்கொண்ட தைப்பொங்கலை தமிழர் திருநாளாக மாற்றவேண்டும் தைப்பொங்கல் நாளே தனிப்பெரும் பண்டிகை என 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் தமிழகத்தில் வாழ்ந்த பேராசிரியர் நமசிவாய முதலியார் அவர்களே முதன்முதலாக பறைசாற்றியவராவார்.

இவருக்கு தமிழ்பேசும் நல்லுலகு என்றென்றும் நன்றியுடையதாகின்றது. இவர் தமிழகத்தின் கடற்கரை மீன்பிடிக்கிராமங்களில் பொங்கலை சிறப்பாகக் கொண்டாட வழிவகுத்தவர். அதனைத் தொடர்ந்து பாவேந்தர் பாரதி தாசன் அவர்கள்

‘நித்திரையில் இருக்கும் தமிழா!

சித்திரையல்ல உனக்குத் தமிழ்ப்புத்தாண்டு.

தரணியாண்ட தமிழர்க்கு தை முதல்

நாளே தமிழ்ப்புத்தாண்டு’

என்றும்

‘பத்தன்று நூறன்று பன்னூறன்று

பல்லாயிரத்தாண்டாய்

தமிழர் வாழ்வின் புத்தாண்டு தை

மாதம் முதல் நாள் பொங்கல் நன்நாள்’

என்றார்.

இவ்வாறு தமிழறிஞர்கள் என்னதான் காத்தினாலும் நாம் கேட்டபாடு இல்லை சரி அதைவிட்டு விடையத்திற்கு வருவோம்.

தமிழக – ஈழப்பண்பாட்டுப்பரவலிடையே தமிழகப்பண்பாட்டு மரபுகள் ஈழத்தில் பரவியிருந்த போதும் சில அம்சங்கள் இச்சமூக குழுமங்களுக்கு ஏற்றவாறு வடிவம் பெற்றும் மாற்றமடைந்தும் காணப்படுகின்றது.

தமிழகத்தில் நிலவும் சில வழமைகள் எமது ஈழப்பகுதியில் காணமுடிவதில்லை. ஈழத்தில் தைப்பொங்கல் என்னும் சொல் ஒரு தனித்துவ வழக்காறாக உள்ளது.

ஆனால் தமிழகத்தில் தைப்பொங்கலின் முதன்நாள் போகிப்பண்டிகை என்ற பெயரில் பழைய பொருட்களை தீயிட்டுக் கொழுத்தி, பீடைகளை அகற்றி கொண்டாடுகின்றார்கள். இந்நிகழ்வு ஈழத்தில் இல்லை என்றே கூறலாம்.

தமிழகத்திலும்அந்நிகழ்வு காலமாற்றத்தினால் மாறி பழைய பொருட்களுக்குப் பதிலாக ரயர்களைப் போட்டுக்கொழுத்தி இந்நிகழ்வினைக் கொண்டாடுவார்கள்.

மாட்டுப்பொங்கல்

பொங்கலிற்கு மறுநாள் மாட்டுப்பொங்கல். அன்று உழவர் தொழிலுக்கு முக்கியமாகக் கருதப்படும் மாடுகளை நீராட்டி அலங்கரித்து வழிபாடாற்றல் இந்நிகழ்வின் மரபு.

உழவனே உலகிற்கு உயிர் கொடுப்பவன் அவன் இன்றேல் அவனியே இல்லை எனச் சொல்வார்கள். இதை கம்பன் கூட தனது ஏரெழுபது என்னும் நூலில்

‘மேழிபிடிக்கும் கைவேல் வேந்தர்க்கு நோக்குங் கை….’

என்று பாடுகிறான். ‘ஏன்

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்’

என்று வள்ளுவனும்

, ‘வரப்புயர நீருயரும்’

என்று ஒளவையும்,

உழவுத் தொழிலுக்கும் வந்தணை செய்வோம்

என பாரதியாரும் போற்றியிருக்கின்றனர்.

அப்படிப்பட்ட சிறப்புக்கள் மிக்க உழவர் திருநாளாகிய மாட்டுப்பொங்கல் சமூக மாற்றத்தின் நடுவே வெறும் சடங்காக மட்டுமே இந்நிகழ்வு நடாத்தப்படுகின்றது.

இது காலமாற்றத்தின் தன்மையே. வயல்களில் நவீன உழவு இயந்திரங்களின் வருகையும் நீர் இறைக்கும் இயந்திரங்களின் பண்பாடுகளின் நுழைவாலும், தம் பணியிழந்த கால்நடைகளுக்கு வெறும் சடங்காக மட்டுமே இந்நிகழ்வு நடைபெறுகின்றது.

அத்துடன் தமிழர் பண்பாட்டின் வெளிப்பாடாய் மட்டுமன்றி தமிழர் பண்பாட்டின் விழுமியங்களை நிலை பெறச் செய்யவும் தமிழகத்தில் பொங்கலன்று நிகழும் ஜல்லிக்கட்டு நிகழ்வு முக்கிய இடம் பெறுகிறது.

இது சங்ககாலத்தில் நடைபெற்ற காளையை அடக்கும் ஏறு தழுவுதலின் தொடர்ச்சியாகவே நடைபெறுகின்றது.

இதுசங்ககாலத்தில் நடைபெற்ற ஏறதழுவுதலின் பண்பாட்டினைக் கொண்டிருக்காவிட்டாலும் தமிழர் பண்பாட்டினை தொடர்ந்தும் உயிர் பெறச் செய்கின்றது.

ஆனால் இது ஈழத்தில் வண்டிற்சவாரிகளாக நடைபெறுகின்றன. வன்னியில் உருத்திரபுரம், வட்டக்கச்சி, விசுவமடு, வவுனிக்குளம் ஆகிய விளையாட்டு மைதானங்கள் இந்நாளில் களைகட்டும்.

நன்றாகச் சவாரி செய்யக்கூடிய மாடுகளை பந்தையப்படுத்தி வண்டியிற் பூட்டி சவாரி செய்வார்கள். இது கால மாற்றத்திற்கு ஏற்ப தமிழர் பண்பாடு ஈழத்தில் நடைபெறுவதனைக் காட்டுகின்றது.

காணும் பொங்கல்

இந்த பொங்கலின் தொடர்ச்சியாக தமிழகத்தில் நடைபெறும் காணும் பண்டிகை. ஈழத்தில் இல்லை. இது பெண்களுக்கான விஷேசமான தினமாகும்.

பொங்கற் பானையில் கட்டிய மஞ்சளினை எடுத்து பெரியவர்களிடம் கொடுத்து நெற்றி மற்றும் தாலியில் மூன்று தடவை ஒற்றிக்கொள்வர். பெரியவர்கள் இல்லாவிடத்தில் கணவனிடம் கொடுத்து ஒற்றிக்கொள்வர்.

இதன்போது பெண்களுக்கு பிறந்தவீட்டுச்சீதனம் என்று அனுப்புவதும் இந்நாளில் வழமையானது. பிறந்தவீடு செழிக்கவேண்டும் என்று தமிழகத்தில் இப்பண்டிகை கொண்டாடுவது வழக்கம்.

இது சங்ககாலத்தில் தை நீராடல் என அழைக்கப்பட்டது. இதனைப் பரிபாடல் 11 பாடல் குறிப்பிடும் போது

‘வையை நினைக்கு மடை வாய்த்தன்று

மையாடல் ஆடன் மழப்புலவர் மாறெழுந்து

பொய்யாடலாடும் புணர்ப்பி ரைவர்

தீயெரிப் பாலுஞ் செறிந்த முன் பூற்றியோ

தாயருகா நின்று தவத் தைந்நீராடல்

நீயுரைத்தி வையை நதி’

மணமாகாத கன்னிப்பெண்கள் தாய்மார் அருகில் நின்று வைகையில் தைந்நீராடி சிறந்த கணவனைப் பெற வேண்டுமென பழந்தமிழர் வேண்டி சிறப்பாக இப்பொங்கல் நாளைக் கொண்டாடினர்.

ஈழத்தமிழர்களிடையே போகிப்பண்டிகை, காணும் பண்டிகை ஆகியன இல்லை. காரணம் ஈழத்தில் ஒரு தனித்துவமான ஆரியக்கலப்புக்கள் பெரிதும் இல்லாத ஒரு இனக்குழுமம் வாழ்ந்தமையைச் சொல்லலாம்.

இதனால் ஆரியப்பிராமணியங்களின் கலாச்சாரச்சடங்குகளான இவையிரண்டும் ஈழத்தில் இல்லை. ஆனால் தைப்பொங்கல், மாட்டுப்பொங்கல் என்பன சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.

தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது தமிழர்களின் காலங்காலமான நம்பிக்கை. இதனால் தான் இது தமிழர்களின் மத்தியில் ஒரு உறுதியை புத்துணர்ச்சியை வளர்க்கும்.

போரின் விளைவால்புலம்பெயர்ந்து சிதறிச் சிக்கல்தன்மை வாய்ந்து அலைகின்ற சமூகமாக ஈழத்தமிழ்ச்சமூகம் இருந்தாலும் தாம் வாழும் இடங்களில் அதாவது அகதி முகாம்களிலும், வீடிழந்து தற்காலிக குடிசைகளில் வசித்தாலும், தம்மிடையே நீளும் பல பிரச்சனைகளுக்கு மத்தியிலும், தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற நம்பிக்கையில் தைப்பொங்கற் பண்டிகையை கொண்டாடுகின்றார்கள்.

பல குடும்பங்களில் துயரப்பொங்கலாக வரும் ஒவ்வொரு பொங்கலையும் அவர்கள் கொண்டாடுகின்றார்கள். ஏனெனில் தமிழை, தமிழர் பண்பாட்டினை ஆழமாக, ஆத்வாசமாக நேசித்த இனம் பூண்டோடு அழிக்கப்பட்டதனால் தம் குடும்பத்தலைவர்களை, உறவினர்களை இழந்தவர்கள் இப்பொங்கலை துயரப்பொங்கலாக கண்ணீர் பொங்கலாக தமிழர் பண்பாட்டில் பதிவு செய்கின்றார்கள்.

காலங்காலமாக, கூட்டாய், ஒற்றுமையாய் கொண்டாடிய பொங்கல் இன்று உறவுகளைப் பறிகொடுத்து, அங்கத்தவர்கள் இல்லா பொங்கலாய், முற்றங்கள் இல்லாத பொங்கலாய், வாழ்வின் ஆதாரமான உழைப்புக்களை, வருமானத்தினை எட்டமுடியாத பொங்கலாய், தமது தேசங்களுக்கு திரும்பிச் செல்ல முடியாது பிறர் முற்றங்களில் பொங்கும் பொங்கலாய், பலர் வாய்விட்டு தமது சோகங்களை சொல்லத்தயங்கும் பொங்கலாக கடந்த 2009 இற்கு பின் வருகின்ற பொங்கல் இடம்பெறுகின்றது

இது தமிழர் பண்பாட்டில் பாரிய மாற்றத்தினை ஏற்படுத்தியிருக்கிறது.

மாற்றத்திற்கு உற்படாத சமூகம் இல்லை என்கின்ற இயற்பியல் விதிக்கமைய எமது ஈழத்தமிழர் சமூக வாழ்வும் மாறியிருக்கிறது.

அத்தோடு புலம்பெயர் வாழ்வில் மக்களிடையே பொங்கல் அவ்வவ் நாடுகளிகளின் தன்மைகளுக்கு ஏற்ப்ப வீட்டிற்குள்ளே அமைகின்றது.

பெரும்பாலான மக்கள் ஆலயங்களுக்குச் சென்று தம் பொங்கற் பண்டிகையை கொண்டாடுகின்றார்கள். அத்துடன் ஈழத்தில் கூட முற்றத்தில் கோலமிட்டு பொங்குகின்ற நிகழ்வும் தொடர் மாடிக்கட்டங்களில் வசிப்போரிடம் இல்லை எனலாம்.

எது எவ்வாறாக இருந்தாலும் தமிழர் திருநாளான தைப்பொங்கல் திருநாளையே தமிழ்ப் புத்தாண்டு தினமாக, தமிழ்ப்பாரம்பரிய தினமாக பழந்தமிழன் கொண்டாடினான்.

எனவே தமிழர் சமூக, கலாச்சார, பண்பாட்டு விழுமியங்களைப் பிரதிபலிக்கும் தமிழர் பண்பாட்டின் உயிர்ப்பின் உறுதியாய் பொங்கல் நிகழ்வு அமைகிறது.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg
625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

 

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg
 

 

http://www.tamilwin.com/lifestyle/01/131759?ref=youmaylike1

Link to comment
Share on other sites

சிலம்பம் சுற்றும் கனேடிய பிரதமர்: வைரலான காட்சிகள்…

கனடா நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நேற்று உலக தமிழர்களுக்கு தனது முகப்புத்தகத்தில் தமிழில் தைப்பொங்கல் வாழ்த்து கூறி அசத்தினார்.

இதனை தொடர்ந்து தமிழர்களின் ஆதரவு கனேடிய பிரதமருக்கு அதிகரித்ததே செல்கின்றது.

தற்போது அவர் சிலம்பம் சுற்றும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வேகமாக வைரலாக பரவி வருகின்றது.

கடந்த 2015 ஆம் ஆண்டில் கனடா நாட்டு தமிழர்கள் நடத்திய நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் சிலம்பு சுற்றும் போது எடுக்கப்பட்ட புகைப்படமே அது.

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுக்களில் ஒன்றான சிலம்பம் சுற்றும் போட்டி நிகழ்வொன்றில் அவர் இன மத மொழி வேறுபாடின்றி கலந்து கொண்டிருந்தமையினை எடுத்துக்காட்டுகின்றது.

மேலும் தமிழர்களின் பண்டிகைக்கு தமிழில் வாழ்த்துக்களை அவர் தெரிவித்திருந்தமையால், 2015 இல் எடுக்கப்பட்ட அந்த புகைப்படத்தினை தற்போது எல்லோரும் முகநூலில் பகிர்ந்து வருகின்றனர்.

canada_pm

http://www.canadamirror.com/canada/78572.html

Link to comment
Share on other sites

யாழ். தைப்பொங்கல் நிகழ்வில் களைகட்டிய தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு

யாழ் - கோப்பாய்க் கோட்டக் கல்வி அலுவலகத்தின் ஏற்பாட்டில் இன்று காலை 09.00 மணியளவில் தைப்பொங்கல் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

யாழ் புத்தூர் ஸ்ரீ சோமாஸ்கந்தக் கல்லூரியில் யாழ். வலயக் கல்விப் பணிப்பாளர் ந.தெய்வேந்திரராஜா தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றுள்ளது.

இந்த நிகழ்வில் வடமாகாண சபை உறுப்பினர் அ.பரஞ்சோதி பிரதம விருந்தினராகவும், கோப்பாய் ஆசிரிய கலாசாலை பிரதிமுதல்வர் ச.லலீசன் சிறப்பு விருந்தினராகவும் கலந்துக்கொண்டுள்ளனர்.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

கோப்பாய் கோட்டப் பாடசாலைகளின் பல்வேறு கலை நிகழ்வுகளும், கிளித்தட்டு, முட்டியுடைத்தல் உள்ளிட்ட தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுக்களும் இதன் போது நடாத்தப்பட்டுள்ளன.

தமிழ், சிங்கள பாரம்பரியங்களையும், சமய சகோதரத்துவத்தையும் வெளிப்படுத்தும் விதத்தில் நிகழ்ச்சிகள் வடிவமைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

நல்லாட்சி அரசாங்கத்தின் நல்லிணக்க நிகழ்ச்சித் திட்டங்களைச் செயற்படுத்தும் நோக்கில் தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகம் நாடு முழுவதிலுமுள்ள 98 கல்வி வலயங்களிலும் இத்தகைய பொங்கல் நிகழ்வை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

 

 

http://www.tamilwin.com/community/01/132133?ref=home

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.